சென்ற வாரம் போட்டது புதிர் அல்ல. சிறு குறிப்பு வரைதல் மட்டுமே!
பெரும்பான்மையான வாசகர்கள் பங்கேற்று, மிகச் சிறப்பான கருத்துகளைப் பதித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.
அந்தக் காலத்தில் சிவாஜியும் எம்ஜியாரும்தான் சினிமா , அரசியல் ரசிகர்களிடையே (!) மிகவும் பேசப்பட்டவர்கள்.
எங்கள் குடும்பத்தில் பெரும்பாலும் சகோதரர்கள் எல்லோரும் சிவாஜி ரசிகர்கள். ஆனால் எல்லா திருமதிகளும் எம்ஜியார் ரசிகைகள் !
அப்புறம் நாங்களும் அத்வைதிகள் ஆகிவிட்டோம்!
இந்த வார புதன் கேள்வி :
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ? உங்கள் அபிப்பிராயம் என்ன ? ஏன்?
உங்கள் கருத்துகளை யார் மனமும் புண்படாத வகையில் பதிவு செய்யுங்கள்.
என் கருத்து :
மாநில மக்களுக்கு, நாட்டு மக்களுக்கு, நன்மை செய்ய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். இதில் படித்தவர், படிக்காதவர், நடிகன் , நடிகை என்று பேதங்கள் பார்க்கத் தேவையில்லை.
மாநில மக்களுக்கு, நாட்டு மக்களுக்கு, நன்மை செய்ய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். இதில் படித்தவர், படிக்காதவர், நடிகன் , நடிகை என்று பேதங்கள் பார்க்கத் தேவையில்லை.
பதிலளிநீக்குஅடடே.. இந்த வாரமாவது ஆசிரியரின் பதிலோடு என் பதில் ஒத்துப் போனதே... I thank God !
வணக்கம் நண்பரே பிச்சை எடுப்பவர்களை இந்த சமூகம் கீழ்த்தரமாக நினைக்கிறது நான் கண்டிப்பாக (ஊளமுற்றவர்களை மட்டும்) நினைக்கவில்லை அவர்களும் வரலாம் என்பதே எமது கருத்து.
பதிலளிநீக்குஅதேநேரம் தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்பது எமது அவா காரணம் ஏழுகோடி தமிழர்கள் உள்ள இடத்தில் பிறமொழிக்காரன் ஆள்கிறான் என்றால் ஒரு தமிழனுக்கு கூடவா தகுதி இல்லை ?
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கின்றனர் சரி அதேநேரம் தமிழன் கேரளத்தில் மட்டுமல்ல பிற மாநிலத்தில் எம்எல்ஏவாக்கூட முடியாது காரணமென்ன ?
அதற்காக மலேசியாவில் தமிழன் ஆளவில்லையா ? என்று கேட்ககூடாது இது தமிழனுக்கு பெருமையான விடயமே... அவனுக்குத்தான் சிறுமை
ரஜினிகாந்த் இந்தியாவுக்கு பிரதமாராகக்கூட வரட்டும் காரணம் அவரும் இந்திய குடிமகன் ஆனால் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வர உரிமை இல்லை இதுதான் நியாயமான நியாயம்
அதேநேரம் தமிழன் திரைப்படத்தில் நல்லவனாக நடித்தவன் என்பதால் நல்லவன் என்றே நம்பி ஓட்டுப் போடுகின்றானே இந்த அடி முட்டாள்த்தனத்தை வெறுக்கிறேன்.
உண்மையில் நம்பியார் நல்ல மனிதர், உண்மையில் எம்ஜியார் வில்லன் பலபேருடைய வாழ்வை சீரழித்தவன் நம்பியாரைத் திட்டாத தமிழகத் தாய்மார்கள் உண்டா ?
நல்லவன் வரட்டும் அவன் தமிழனாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
>>> மாநில மக்களுக்கு, நாட்டு மக்களுக்கு, நன்மை செய்ய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்.<<<
பதிலளிநீக்குதனது மக்களுக்கு மட்டும் நல்லன செய்து கொள்ளாமல்
தமிழகத்து மக்களுக்கு நல்லனவற்றைச் செய்வதற்கு
தமிழனாகப் பிறந்த எவரும் வரட்டும்!..
மாநில மக்களுக்கு, நாட்டு மக்களுக்கு, நன்மை செய்ய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். வருவதற்கு முன்னால் தங்கள், தங்கள் ரத்த சம்பந்தங்கள் அனைவரது சொத்து விவரங்களைம், என்ன என்ன தொழில்கள் செய்கிறார்கள், யார் யார் கூட்டு என்பதையும் தெளிவாகச் சொல்லிவிட்டு வந்தால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்கு@கில்லர்ஜி - "தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும்" - தமிழன் என்பதற்கான definition என்ன? தமிழ் நாட்டில் 50% மக்களுக்கும் குறைவாகவே வீட்டிலும் தமிழ் பேசுகின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது. என்னைப் பொறுத்தவரையில் இப்படி எல்லாம் எண்ணாமல், தமிழக எல்லையில் வாழும் எவரும், விருப்பமிருந்தால் தலைமை தாங்கலாம். அவர்கள், மற்றும் அவர்கள் சொந்தங்கள் எந்தத் தொழிலிலும், தமிழ்நாட்டுக்குள் மட்டும்தான் ஈடுபடலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நண்பர் திரு. நெல்லைத்தமிழன்
நீக்குஎனது சிறிய கேள்வி மட்டுமே காரணம் பிற மாநிலத்தின் தமிழன் கதாநாயகனாக வேண்டாம் காமெடியனாககூட விட மறுக்கப்படுகிறது.
நாம் மட்டும் வந்தாரை வாழ வைக்க வேண்டுமா ?
ஏற்கெனவே நெபுலைசர் தயவால் தள்ளாடித் தள்ளாடிக் கொண்டு இருக்கேன். இப்போ இது வேறேயா? கை சுத்தமானவர்கள் மட்டும் அவங்க அவங்க சொத்து விபரத்தைத் தெரிவித்த பின்னர் குடும்பத்தினர் தலையீடு இருக்காது என்ற உறுதிமொழி கொடுத்துவிட்டு. மாசாமாசம் சொத்துக் கணக்கைக் காட்டி விட்டு முதல் அமைச்சராக ஆகலாம் (அப்படின்னா நான் மட்டும் தான் முதலமைச்சர் பதவிக்குப் போட்டி போட முடியுமா?) ஹிஹிஹி, அடைப்புக்குறிக்குள்ளாக என்னோட ம.சா.
பதிலளிநீக்குதமிழன் என்றால் தமிழ் பேசுபவர்கள் அல்ல..
பதிலளிநீக்குதமிழ் கலாச்சாரத்தை கைக்கொண்டு வாழ்பவர்கள்..
அன்பின் ஜி
நீக்குமிகச்சரியான வார்த்தை
மாஸ்ரீகோ, துசெரா, நெத, கீசா அக்கா கருத்தை வழி மொழிகிறோம்....கிஜி யின் கருத்தில் ஒன்றைத் தவிர....அதை நெத கேட்டுவிட்டார்...
பதிலளிநீக்கு@கில்லர்ஜி-பிற மாநிலத்தின் தமிழன் கதாநாயகனாக - சாரி கில்லர்ஜி... இதில் உண்மை குறைவு. கனவுக்கன்னி ஹேமமாலினி, ஸ்ரீதேவி, அதற்கு முன்னால் மிசஸ் பாலி, நம்ம கமல் ஹசன் (அவருக்கு கேரளாவில் விருது கூட கொடுத்தார்கள்), ஸ்ரீவித்யா (அவர் இறப்புக்கு கேரளா முதல் மந்திரி இரங்கல் தெரிவித்தார்), கன்னட நடிகர் ராஜ்குமார் (அவர் பிறப்பால் தமிழர்) என்று பலரைக் குறிப்பிடலாம். ஆனால் எப்போ, 'திராவிட உணர்வு' என்ற ஒன்று வந்ததோ, அப்போதுதான் மானில உணர்வு பொங்கிப் பிரவாகமாகி எல்லா மானிலத்தையும் குறுகிய மனப்பான்மையில் வைத்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். வியாபாரத்துக்காகச் செய்யப்படுவதாக இருந்தாலும், பாஹுபலியில் சத்யராஜ், நாசர் இவர்கள் நடித்தார்கள். திரையுலகு, வியாபாரம்/கவர்ச்சிக்காக நடப்பது. அதனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. பாருங்க, இங்க தமன்னா, அனுஷ்காவுக்கு இருக்கிற ரசிகர்கள் கூட, தன்ஷிகாவுக்குக் கிடையாது. குஷ்பு, நயனுக்கு கோவில் கட்டிய தமிழர்கள் கூட, வேற தமிழ் நடிகைகளுக்குக் கோவில் கட்டலை.
பதிலளிநீக்குநண்பர் நெ.த.அ.....
நீக்குதாங்கள் சொல்லி இருப்பதில் பெரும்பாலானோர் பெண்பால்
கமால் ஹசன் மன்னிக்கவும் கமல் ஹாசனை எந்த மாநிலத்திலும் நிற்க விடவில்லை காரணம் இவன் இருந்தால் எல்லோரையும் முழுங்கி விடுவான் என்ற பயம்.
இதற்கு முக்கியமானவன் ஹிந்தியில் வளர்ந்து கெட்டவன் இதனைக் குறித்துகூட முன்பு பதிவிட்டு இருக்கிறேன்.
// தமன்னா, அனுஷ்காவுக்கு இருக்கிற ரசிகர்கள் கூட, தன்ஷிகாவுக்குக் கிடையாது. //
நீக்குஎழில் தேவதை அனுஷ்காவை இதில் இழுப்பதை வன்மையாகக் கண்ணடிக்கிறேன். ச்சே.... கண்டிக்கிறேன்.
"எழில் தேவதை அனுஷ்கா"
நீக்குஅரிசி விலை இன்னும் கூடும் "அடுத்த அம்மா" தாயார் ச்சீ தயார்.
ஸ்ரீராம் அதானே! அதெப்படி நம்ம அனுஷுக்காவை அப்படி சொல்வது..ஹிஹிஹி...இப்படிக்கு 'அரச'
நீக்குகீதா..
மும்முரமாய் போயி கொண்டு இருக்கிறது எல்லோருடைய கருத்துக்களும் இந்த பரபரப்பை அறிவித்த எங்கள் பிளாக்கு நன்றி ஆனா அது என்ன நடிகர்கள் மட்டும் நடிகைகள் விட்டு விட்டீர்கள் கேள்வியில் அனுஷ்க்காவிற்கு வந்த சோதனை என்று நினைத்தேன் உடனே கீழே கருத்தில் நடிகையும் வருகிறார் அதற்க்கும் கீழே கண்டன ஆர்ப்பாட்டமும் ஹா ஹா
பதிலளிநீக்குமக்களுக்கு நன்மை செய்ய நினைப்பவர் எவராயினும் அவர் தமிழராக இருக்கும்பட்சத்தில் அரசியலுக்கு வருவதில் தவறில்லை... இன்று கமலைப் பார்த்து நடிகன் நாடாள ஆசைப்படுகிறான் என்று சொல்லும் நாம்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என சினிமாவில் இருந்து வந்தவர்களை முதல்வராக்கி தலையில் வைத்துக் கொண்டாடினோம் என்பதை மறக்கக் கூடாது.
பதிலளிநீக்குமுதல் பாராவில் தமிழராக இருக்கும்பட்சத்தில் என்ற பதத்திற்குக் காரணம்... தமிழனைத் தமிழன்தான் ஆளவேண்டும் என்பதே கில்லர் அண்ணா போல் என் ஆவலும்... காரணம் நம்மை ஆள நம்மில் நல்ல தலைமை இல்லையா என்ன... தமிழனை எவன் வேண்டுமானாலும் ஆளலாமென்பதால்தான் விஷால் வரை மனப்பால் குடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மற்ற மாநிலங்களில் நம்மவர்கள் ஒரு வார்டு கவுன்சிலராகவாவது வரமுடியுமா சொல்லுங்கள்... இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருப்பது..?
காலத்தின் தேவை நல்ல தலைவன்... நல்ல தமிழன்... மக்கள் சிந்தனையுள்ளவன் முதல்வராக வேண்டும் என்பதுதான்...
அப்படியான நல்லவர் எங்கிருந்து வந்தால் என்ன... வரட்டுமே.
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு ஆனந்தமாக வரலாம். நாடக நடிகர்களும் இருக்கிறார்கள். கூடவே தொம்பங்கூத்தாடி, குடுகுடுப்பைக்காரன், பூம்பூம் மாட்டுக்காரன், சர்க்கஸ்காரன், மேஜிக்காட்றவன், பயாஸ்கோப்பு காண்பிக்கிறவன் இப்படி எல்லாம் சேர்த்துக்கொண்டால் ஒரு வெரெய்ட்டி கிடைக்கும். அசெம்பிளி, பார்லிமெண்ட் இப்போது இருப்பதைவிடவும் ஒரே தமாஷாக இருக்கும்.
பதிலளிநீக்குநமது ஜனங்களைப்போல் எப்போதும் வேடிக்கை பார்க்கும் பிரகிருதிகள் உலகில் எந்த நாட்டிலும் இல்லை. ஆதலால் மஜாவாகப் பார்ப்பார்கள். ரசிப்பார்கள். அஞ்சு வருஷம் பறந்துபோயிரும். வாழ்க நாயகம்..ஐ மீன், ஜனநாயகம் !
//மாநில மக்களுக்கு, நாட்டு மக்களுக்கு, நன்மை செய்ய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். இதில் படித்தவர், படிக்காதவர், நடிகன் , நடிகை என்று பேதங்கள் பார்க்கத் தேவையில்லை. //
பதிலளிநீக்குமக்கள் நலனில் அக்கரை கொண்டவர் வரட்டும். இதுதான் என் நினைப்பும்.
எந்தக் கம்பெனில வேலை கேட்டுப் போனாலும் என்ன படிச்சிருக்கேன்னு கேப்பாங்க. அரசியல்வாதி ஆகணும்னா எந்தக் கழுதை வேணாலும் வரலாம். அது படிச்சதா, படிக்காததான்னு கவலையில்ல. நாட்டையே தூக்கிக் குடுத்துரலாம். நிப்பாட்டணும்.... எல்லாத்தயும் நிப்பாட்டணும்... முதல்ல பேசிக் குவாலிபிகேஷனை அரசியலுக்கு பிக்ஸ் பண்ணிட்டு அப்பறம் எவன் வேணாலும் வரட்டும். நடிகனா இருந்தா என்ன, தெருக்கூட்றவனா இருந்தா என்ன...?
பதிலளிநீக்குI agree with the author!
பதிலளிநீக்குதான் வாழும் சமுதாயத்தின் மீதும், மக்கள் மீதும் அக்கறை, அதற்காக கடுமையான உழைப்பு, தீர்க்கதரிசனம், எடுத்த முடிவில் உறுதியாக நிற்கும் துணிவு இதெல்லாம்தான் நாட்டை ஆள்பவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள். இவையெல்லாம் நடிகர்களுக்கு இருக்கும் பட்சத்தில் தாராளமாக அரசியலுக்கு வரட்டும். ஒன்றை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சினிமா வேறு நிஜம் வேறு என்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால்தான் ரஜினி அரசியலுக்கு வரத் தயங்குகிறார். வருடத்தில் ஒரு நாள் ரசிகர்களோடு ஏரியை சுத்தப்படுத்துவது, மீனவர்களை சந்திப்பது போன்ற கிம்மிக்ஸ்கள் இனிமேல் செல்லாது.
பதிலளிநீக்குகில்லர்ஜி, மொழிவாரியாக மாநிலங்கள் பிரியும் முன் நாம் எல்லோரும் மெட்ராஸ் ராஜதானி என்று ஒன்றாகத்தானே இருந்தோம்? அப்படியே தொடர்ந்திருந்தால் காவேரி பிரச்சனை வந்தே இருக்காதுதானே?
/மாநில மக்களுக்கு, நாட்டு மக்களுக்கு, நன்மை செய்ய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். இதில் படித்தவர், படிக்காதவர், நடிகன் , நடிகை என்று பேதங்கள் பார்க்கத் தேவையில்லை. /
பதிலளிநீக்குKnowledge, Skills and Attitude அறிவு செயல் திறன் நன்னோக்கு இது மூன்றும் எந்த ஒரு பணிக்கும் இன்றி அமையாதது இதில் நன்நோக்கை மற்றும் ஆசிரியர் முன் நிறுத்தியுள்ளார். நன்னோக்கு மூன்றிலும் முதலாவதுதான். அனால் மற்ற இரண்டும் மிக அவசியம். படிக்காதவர்கள் தற்காலத்தில் தலைவர் நிலைக்கு தகுதி பெற மாட்டார்கள், செயல் திறனும் அவசியம் தேவை.சிறந்த வழிகாட்டிகளை ஆசானாகப் பெற்ற இளைஞர்களே அரசியலுக்கு தேவை.
பாலகணேஷ் சார் - "பேசிக் குவாலிபிகேஷனை அரசியலுக்கு பிக்ஸ் பண்ணிட்டு" - இப்போ பாத்தீங்கன்னா, பெரிய பெரிய இமாலய ஊழல்ல அகப்படறவங்க எல்லாருமே, கேம்பிரிட்ஜ்ல படிச்சவங்க, பெரிய வழக்குரைஞருக்குப் படிச்சவங்க, பொறியியலாளர், மருத்துவர் போன்றோர்தானே. அரசியலுக்கு பேசிக் குவாலிஃபிகேஷன், 'மக்களுக்கு நல்லது செய்யணும் என்ற நோக்கம், தனக்கு எதுவுமே தேவையில்லை என்ற எண்ணம், படித்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு, எது மக்களுக்கு நல்லது, எந்த ஆலோசனையில் சுயநலம் கலந்திருக்கு என்று முடிவெடுக்கும் திறமை'. இது போதாதா?
பதிலளிநீக்கு//படித்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு, எது மக்களுக்கு நல்லது, எந்த ஆலோசனையில் சுயநலம் கலந்திருக்கு என்று முடிவெடுக்கும் திறமை'. இது போதாதா?//
பதிலளிநீக்குபோதாது.நுண்ணிய அறிவிலாவிடில் அதிகாரிகள் மூளை சலவை செய்து விடுவார்கள். நன்கு கல்வி அறிவு பெற்று இருப்பது இன்றி அமையாதது. ஏன் படிக்காதவரை தேர்ந்து எடுக்க வேண்டும்? தகுதியான ஆட்களுக்கு பஞ்சமா?