சனி, 4 நவம்பர், 2017

அஞ்சு ரூபாய்க்கு.... இல்லை, இல்லை, இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்...
1)  ஏற்கெனவே இங்கு சொல்லியிருந்த செய்திதான்.   
 நல்லவர்களை மறுபடி மறுபடி சொல்லலாம்.  அஞ்சு ரூபாய்க்கு மருத்துவம் என்று சினிமாவில் ஜல்லியடிக்கிறார்கள்.  இவர் சென்னை வியாசர்பாடியில் கடந்த 40 வருடங்களாக இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கிறார்.  திருவேங்கடம் வீரராகவன்.2)   மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கைக்குழந்தைகள் பாலுக்கு கஷ்டப்படாமலிருக்க எவை செய்து வரும் குணா சுரேஷ்.  இந்தச் செய்தியும் முன்னரே பகிர்ந்த நினைவு இருக்கிறது.  மறுபடியும் இவர்கள் செய்தியில் வருகிறார்கள் என்பது இவர்கள் தங்கள் சேவைகளை நிறுத்தி விடவில்லை என்பதைக் காட்டுகிறது.


3) இன்னொரு அனிதா உருவாகாமல் தடுத்தாட்கொண்ட இந்திராபுர மக்கள்.4)  
வெள்ளநீர் வேகமாக வெளியேற அடைப்பை அகற்றும் வேப்பேரி இன்ஸ்பெக்டர் வீரகுமார்.

தமிழ்மணம்.

35 கருத்துகள்:

 1. இனிய உதயம்..
  அன்பின் வணக்கமும் வாழ்த்துக்களும்..

  பதிலளிநீக்கு
 2. குடத்துள் விளக்காக நல்லவர் பலர் இருக்க நுனிப்புல்லின் நுரைகள் கூத்தாடிக் கிடக்கின்றன...

  நல்லவர் வாழ்க... நலம் பல பெற்று நாளும் வாழ்க..

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... நன்றி.

  பதிலளிநீக்கு
 4. மனதுக்கு இனிய செய்திகள்.. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 5. ஸ்ரீராம் நீங்கள் எத்தனை முறை இது போன்ற செய்திகளை ரிப்பீட் செய்தாலும் நல்லதே! சமுதாயத்தில் நல்ல மனிதரும் உள்ளனர், நல்லதும் நடக்கிறது என்ற இனிய நேர்மறை செய்திகள் மனதில் பதிய வேண்டும். அதுவும் இவர்கள் எல்லோரும் எதையும் எதிர்பார்க்காமல், தாங்கள் செய்வதை தாங்களாகவே விளம்பரப்படுத்தாமல், அமைதியாக, சமுதாயத்தைக் குறை சொல்லாமல் தங்களால் இயன்றதைச் செய்துவரும் இம்மனிதர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 2 ரூபாய் மருத்துவருக்கு அவரது சேவை தொடர்ந்திட நம் பிரார்த்தனைகள். மதுரை செய்தியும் அது போல தொடர்ந்திட வேண்டி வாழ்த்துகள். இந்திராபுர மக்களைப் பாராட்டுவோம். வாழ்த்துவோம். போலீஸைக் குறை சொல்லியே பழகிய நமக்கு இப்படியும் மனிதர் இருக்கிறார் என்பதைச் சொல்லும் செய்தி வீரகுமாருக்கும் நம் வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 6. துரை செல்வராஜு சகோ உங்களின் வரியை ரசித்தேன். //குடத்துள் விளக்காக நல்லவர் பலர் இருக்க நுனிப்புல்லின் நுரைகள் கூத்தாடிக் கிடக்கின்றன...// குன்றின் மீதிட்ட விளக்கு என்றும் கூட சொல்லலாமோ!

  கீதா

  பதிலளிநீக்கு
 7. மதிப்புக்குரிய கீதா அவர்களுக்கு...

  எல்லாரும் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பு இல்லை..

  மக்கள் பணியில்... என்று சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் இவர்களைப் பற்றி சொல்வதை விட - திரைத் தாரகைகளின் நடை இடை இவற்றைச் சொல்வதில் ஈடுபாடு காட்டுகின்றன..

  பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி அறிந்திராத உலகில் இத்தகைய நல்லோர் குடத்துள் விளக்காகவே இருக்கின்றனர்..

  இனி வரும் நாளில் அவர்கள் குன்றின் மேல் விளக்காகத் திகழவேண்டும்..

  அதுவே நம் அனைவருடைய விருப்பமும்..

  (ஓடும் பேருந்தில் இருந்து கருத்துரைக்கின்றேன்..)

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 8. அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். பகிர்ந்த உங்களுக்கும் பாராட்டு.

  பதிலளிநீக்கு
 9. எங்கு பார்த்தாலும் எதிர்மறை சிந்தனைகளுடன் உலவுகிறவர்கள் அதிகரித்திருக்க, நம்மைச் சுற்றி நிகழும் நல்ல செய்திகளைப் பகிர்ந்துகொள்ள நீங்கள் ஒருவராவது இருக்கிறீர்களே! மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அதிகரிக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. பாராட்டப்பட வேண்டிய நல் உள்ளங்கள்....

  பதிலளிநீக்கு
 11. அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள். நல்ல செய்திக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் பாராட்டுக்கள்... நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 13. மக்களுக்காகவே வாழும் நமது மாண்புமிகு அரசியல்வாதிகளில், அவர்களது பிள்ளை குட்டிகளில், ஆசை உறவினர்களில் யாராவது ஒருவர் -ஏதாவது ஒரு மனிதாபிமான உதவி
  எப்போதாவது, எங்கானும், எந்த ஏழைக்காகவும் செய்ததாக ஒரு குட்டிச்செய்தியாவது உங்களது இந்த சனிக்கிழமை சரித்திரத்தில் இடம்பெறாதா என விழிமூடாது பார்த்துவருகிறேன்.. சனீஸ்வரன் என்ன நினைக்கிறானோ...

  பதிலளிநீக்கு
 14. ஏகாந்தன் ஸார்... நீங்கள் எதிர்பார்ப்பது ரேர் ஃ ஆஃப் தி ரேர்....​

  சமீபத்தில் நடிகர் சரத்குமார் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான ஓய்வூதியத்தை வேண்டாம் என்று சொல்லிக் கடிதம் எழுதி இருந்தார். நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை எடுத்து வளர்த்து ஆளாக்கி வருகிறார். 2015 வெள்ள சமயத்தில் சில லட்சங்கள் தந்தார். நடிகை ஹன்சிகாவும் இதே போல மா.தி குழந்தைகளுக்கு ஆதரவளித்து வருகிறார். வைகோ ஒருசமயம் வழியில் அடிபட்டுக் கிடந்தவர்களை தனது காரில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தார். இதுபோல சில செய்திகளை இங்கு பகிர்ந்ததுண்டு.

  பதிலளிநீக்கு
 15. ஓ! ஏற்கனவே ஒன்றிரண்டு பேர் தலைகாட்டிவிட்டார்களா இங்கே.. அப்படியென்றால், என் முணுமுணுப்பை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் !

  பதிலளிநீக்கு
 16. மருத்துவர் திருவேங்கடம் அவர்களின் கனவுகள் நிறைவேற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ,இப்படிப்பட்டோர் காண்பது அரிது..அனைத்தும் அருமையான செய்திகள் .பகிர்வுக்கு

  பதிலளிநீக்கு
 17. ///அஞ்சு /////
  ரூபாய்க்கு.... இல்லை////

  அஞ்சூஊஊஊ இதெப்பூடி உங்க கண்ணில படாமல் போச்சூ கர்ர்ர்ர்ர்ர்ர்:)... நோ நான் இதை விட மாட்டேன்ன்ன்ன் .... ஓடும் ரெயினிலிருந்து குதிச்சே உண்ணாவிரதம் இருப்பேன்ன்ன்:)... நட்புக்காக ரெயினிலிருந்தும் குதிப்பேனாக்கும் நான்:).. அப்போதான் சனிக்கிழமை எங்கள் புளொக்கில் என் பெயரும் வரும்ம்ம்ம்ம்:)... சரி சரி எல்லோரும் முறைக்கீனம்.. மீ ஒரு அப்பாவீஈஈ:)..

  பதிலளிநீக்கு
 18. ஸ்ரீராம் நம்ம எல்லோர் ஆசையும் நிறைவேற போகுது :)
  கீதாக்கா ரெசிப்பி மட்ரியோட வரேன் எல்லாரும் ஸ்கைப் வாங்க :) லைவ் காட்சி பார்க்கலாம்

  பதிலளிநீக்கு
 19. அனைவரும் வாழ்த்தப் பட வேண்டியவர்! வாழ்க!

  பதிலளிநீக்கு

 20. AngelinNovember 4, 2017 at 5:16 PM
  ஸ்ரீராம் நம்ம எல்லோர் ஆசையும் நிறைவேற போகுது :)
  கீதாக்கா ரெசிப்பி மட்ரியோட வரேன் எல்லாரும் ஸ்கைப் வாங்க :) லைவ் காட்சி பார்க்கலாம்

  Reply/////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன ஆசையாக்கும்:).. பரிசூட் கட்டித்தான் குதிப்பேன்:)..

  ஊசிக்குறிப்பு:).. நாங்க கூப்பிட்டா எல்லாம் ஸ்ரீராம் வரமாட்டாராக்கும்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // நாங்க கூப்பிட்டா எல்லாம் ஸ்ரீராம் வரமாட்டாராக்கும்:).. //

   என்ன செய்ய? எனக்கு ஸ்கைப் அக்கவுண்ட்டே கிடையாதே....!!!

   நீக்கு
  2. அஞ்சூஊஊஊ வந்திட்டார்ர்ர்ர்ர் ஓடிக் கமோன்ன் :) ஹா ஹா ஹா...

   ஊசிக்குறிப்பு:-) எங்களிடமும் ஸ்கைப் இல்லையேஏஏஏஏ:)

   நீக்கு
 21. ஹாஹா எனக்கும் ஸ்கைப் இல்லியே இல்லியே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ////
   AngelinNovember 4, 2017 at 8:00 PM
   ஹாஹா எனக்கும் ஸ்கைப் இல்லியே இல்லியே

   Reply/////
   ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பாஆஆஆ இப்போதான் நெஞ்சில வோட்டர் வந்தமாதிரி இருக்கெனக்கு:)... ஸ்கைப்பா அப்படீன்னா? எனக் கேட்டிட்டாலும் என்று நடுங்கிக் கொண்டிருந்தேன்:) ஹா ஹா ஹா...

   நீக்கு
 22. பட் எப்படியாவது பூனையை தள்ளனும் :) அதை செல்வி எடுத்து போடணும்

  பதிலளிநீக்கு
 23. //AngelinNovember 4, 2017 at 8:02 PM
  பட் எப்படியாவது பூனையை தள்ளனும் :) அதை செல்வி எடுத்து போடணும்///

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) ஹலோஒ எச்சூச்ச்மீஇ:) ரெயினுக்குள்ள துரை அண்ணன் இருக்கிறார்:) அந்த நம்பிக்கையில்தான் சவுண்டு விட்டேன்ன்:).. பூஸோ கொக்கோ:)...

  ஓகே எங்களுக்கு இண்டைக்கு fireworks 💥 இருக்கு... skyfox night.... bye bye:)..

  பதிலளிநீக்கு
 24. இந்த மழையில் பணியாற்றும் காவலர், ஓட்டுனர் உட்பட அனைத்து பணியாளர்களையும் பாராட்டி நன்றி சொல்லனும்.

  பதிலளிநீக்கு
 25. நல்லவர்களையும் நல்லவைகளையும் பார்த்து படித்ததில் இந்த நாள் இனிய நாள் ஆகியது

  பதிலளிநீக்கு
 26. நல்ல மனிதர்கள்.

  தொடரட்டும் நல்ல மனம் கொண்டவர்களின் நற்செய்திகள்....

  பதிலளிநீக்கு
 27. சமூக, நாட்டுப் பற்றாளர்களைப் பாராட்டுவோம்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!