1) எல்லோரும் அவரவர்கள் கடமையை செவ்வனே ஆற்றியபின் தனது பங்கைச் செவ்வனே முடித்த ஓட்டுநர் தமீம் காப்பாற்றியது 31 நாள் குழந்தையை. மணிக்கு 76.4 கி.மீ., வேகத்தில் 516 கி.மீ., தூரத்தை 6.45 மணி நேரத்தில் கடந்து சென்றுள்ளார்.
2) காலத்துக்கேற்ப மாறி வரும் அதிகாரிகள். கடமையைக் கண்டிப்புடனும், ஆக்கபூர்வமாகவும் நடத்தும் முறை தொடக்கம். "அரசு கட்டடமாக இருந்தாலும் ஆக்ரமிப்பு எனில் இடிக்கப்படும்..."
3) மனிதம் செத்து விடவில்லை. நெட்டிசன்கள் ஒரே நாளில் 25 லட்ச ரூபாய் திரட்டி உதவினார்கள். ருஷிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சைக்காக. ருஷியின் அப்பா கூட இங்கு கவனிக்கப்படவேண்டிய மனிதர்.
"............ Motivational videos help me get through chemotherapy sessions and every time I see my father hiding his tears. He never cries in front of me and thinks I don’t know… but I do — I notice how his voice cracks when he’s talking to our relatives, or when he suddenly leaves the room.......".......
4) ".........விலைவாசி அதிகரித்து, சாப்பாடு விலை ஐந்து ரூபாய் ஆக்கிய போது, என் மனைவி, 'கிடைக்கிற லாபத்தை ஏழைகளுக்கே தந்து விடுவோம்' என்றாள்; நானும் மகிழ்ச்சியோடு சம்மதித்தேன்......" - மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே, 50 ஆண்டுகளாக, 'வள்ளி' உணவகத்தை, புண்ணிய வேள்வியாக நடத்தி வரும், ராமு தாத்தா:
5) இவரைப் பற்றியும் ஏற்கெனவே படித்த - இங்கு பகிர்ந்த - நினைவு. வனப்பகுதியில் கொஞ்சம் இளைய வயதினராய் அவர் சைக்கிளில் வருவது போன்ற படத்துடன். ஆனால் இந்த எளிய மனிதரைப் பற்றியெல்லாம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பகிரலாம் இல்லையா?
6) ஸ்மார்ட் மனிதர்கள். ஸ்மார்ட் யோசனை. ஸ்மார்ட் சேவை.
7) இது ஒரு பெரிய செய்தியா என்று தோன்றலாம். இத்தனை வருடங்களில் நிகழாத நிகழ்வு. காசு வாங்கி கொண்டு மறுபடியும் அனுமதி தராமல், தீவிரமாய்ச் செயல் படுத்தினால் பயணம் செய்யும் மக்கள் போற்றுவர்.
8) இந்தச் செய்தி உருக்கமான செய்தி. வயதானவர்களுக்குச் சேதி சொல்லும் செய்தி. இதில் பாஸிட்டிவ் ஆக நான் பார்ப்பது அந்த ஆசிரியையிடம் படித்த மாணவர்களின் அன்பு. அந்த இடம் படிக்கும்போது கண்கள் கலங்கின.
நாம் சாதாரணமாய் நல்ல உள்ளத்துடன் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிரும்போது இதுபோன்ற நல்ல செயல்கள் நடந்தால் அதைவிட மகிழ்ச்சி எது?
அந்த ஆசிரியை விரைவில் தன்னை உணரப் பிரார்த்திப்போம்.
வாழ்க நலம்..
பதிலளிநீக்குநல்லதொரு தொகுப்பு..
பதிலளிநீக்குமனமார வாழ்த்துவோம்..
நன்றி துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குநண்பர்கள் யாராவது தமிழ்மணத்தில் சப்மிட் செய்து விடவும்.
அன்பின் ஸ்ரீராம்.. வணக்கம்..
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குபடிக்கவேண்டிய முக்கியமான செய்திகள். இன்று நேரம் கிடைக்கும்போது படிக்கவேண்டும். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஉண்மையான நாயகர்களே...
பதிலளிநீக்குமனிதம் இன்னும் உயிர் வாழ்கிறது...இதுபோன்ற நல்லவர்கள் மூலம்...!
பதிலளிநீக்குஅனைவரையும் போற்றுவோம்.
பதிலளிநீக்குமனமார்ந்த வாழ்த்துக்கள்.
சில செய்திகள் முன்னரே பார்த்தவை, படித்தவை. இருந்தாலும் உங்களது பாணியில் தொகுத்து பார்க்கும்போது மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டத்தக்கவேண்டியவர்கள்.
பதிலளிநீக்குஅந்தக் கணக்கு ஆசிரியர் மனதை நெகிழ்த்தி விட்டார். விரைவில் சரியாகணும். அனைத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குதன்னைக் கொடூரமாய் நடத்திய கணவன், தான் அவருடையே பிள்ளையே இல்லை என்கிற பிள்ளை இவர்கள் இருவருந்தான் தன்னைப் பார்க்கவரவேண்டும் என விரும்பும் பெண். எப்பேர்ப்பட்ட மனுஷி அவர், எவ்வளவு மோசமான ஆண்கள் இவர்கள்..
பதிலளிநீக்குமிகவும் உயர்ந்த குணவதியான பெண்களுக்கு இப்படிக் கழிசடையான ஆண்கள் சிலசமயம் உறவுகளாக வந்து அமைகின்றனர். வாழ்க்கை போகும் போக்கு..
கடைசியில் வருவது மனதை கனக்க செய்கிறது நல்லது நடக்கட்டும்
பதிலளிநீக்குபயனுள்ள தொகுப்புக்கு பாராட்டுகள்
பதிலளிநீக்குஏதேதோ படிக்கிறோம் எல்லாம் நினைவில் நிற்பதில்லை உங்களுக்கு இம்மாதிரி பகிர்வதற்கு பாராட்டுகள்
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. நன்றி.
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குதம +1
முதல் செய்தி சமீம் செய்தி போன்று முன்னர் படமே வந்திருக்கிறது அதுவும் கேரளத்துப் படம்தான் தமிழில் கூட மொழிபெயர்க்கப்பட்டது. மலையாளத்தில் ட்ராஃபிக் என்றும் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்றும் வந்தது.
பதிலளிநீக்குஇதோ அடுத்த செய்திகளுக்குப் போகிறோம்
காலத்திற்கேற்ப மாறிவரும் அதிகாரிகள்!!! பாசிட்டிவ்! மாறுதல்கள்! சபாஷ் அதிகாரிகள்!!
பதிலளிநீக்குடெக்னாலஜியைப் பழித்தாலும், சமூகவலைத்தளங்கள் அடுத்த தலைமுறையைத் தடுமாற வைக்கிறது என்று சொன்னாலும் நல்லதும் அதுவும் மாபெரும் சேவையும் நடக்கிறதே!! ருஷியின் கேஸ் அதற்கு உதாரணம்!! வாழ்க நெட்டிசன்கள்!
ராமு தாத்தா வாழ்க! அவரது வள்ளி உணவகமும் மேலும் பல சேவைகள் புரிய வாழ்த்த்துகள்!
எளிய மனிதர் சம்பாஜி பற்றி ஏற்கனவே இங்குச் சொல்லித் தெரிந்தது சமீபத்தில் கரந்தையாரும் பகிர்ந்திருந்தார் என்ற நினைவு!! சம்பாஜி போன்ற வியத்தகு மாபெரும் மனிதர்களைப் பற்றி எத்தனை முறை பகிர்ந்தாலும் நல்லதே!!!
கீதா: மாமண்டூர் சாலை உணவகம் மட்டுமல்ல தேசீய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலை உணவகங்கள் அதுவும் இவை எல்லாம் அரசு அங்கீகாரம் பெற்றவை என்று வேறு அங்கு போர்டு உள்ளது ஆனால் உணவு தரம் இல்லை என்பது மட்டுமல்ல எல்லா பொருட்களும் எம் ஆர் பி விலையிலிருந்து 5 ரூபாய் கூடுதல் வாங்குகிறார்கள். ஈசி ஆர் சாலையில் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் கொள்ளை அடிக்கிறார்கள். இவை அனைத்தையும் ஒழிக்க வேண்டும். மட்டுமல்ல க்வாலிட்டி செக், விலை செக் என்று செய்யப்பட வேண்டும் இவற்றில் பலவும் பினாமி என்றும் செய்திகள் உள்ளன...என்னவோ போங்க...
சமூகவலைத்தளங்களின் நற்செயல்களுக்கு அடுத்த உதாரணம் வல்சலை அம்மாளுக்குக் கிடைத்த உதவி!!! பரமாரிப்பு!! மனதைக் கலங்க அடித்த செய்தி.
பதிலளிநீக்குதுளசி: இது மனதை மிகவும் வேதனைப்படுத்திய செய்தி. இங்கு நீங்கள் பகிர்ந்தமை மகிழ்ச்சி.
சிறப்பான மனிதரகள் பற்றிய பகிர்வும் சிறப்பு. அனைவருக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்கு