புதன், 1 நவம்பர், 2017

தன் புதி புர் 171101 செ வா எ பெசென்ற வாரம் எல்லோரும் ஃபெயில். 

கிளாஸ்ல எல்லோருமே பெஞ்சு மேல ஏறி நின்னா,  நான் யாருக்குப் புதிர் போடுவது? சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளில் ..... 
முதல் கேள்வியை ஆராய்ந்து பார்த்திருந்தால், 

ஐந்து எண்ணிக்கை ஐந்து, நான்கு எண்ணிக்கை நான்கு இரண்டு எண்ணிக்கை இரண்டு இருந்தது தெரிந்திருக்கும். (That is 5 times 5, 4 times 4, 2 times 2) 

ஆனால் எண் மூன்று இரண்டுதான் இருந்தது. எண் ஒன்றைக் காணோம். ஆகவே, முக்கோணத்தில் மேலே ஒன்று (1) என்றும்,  காலியான பெட்டியில் மூன்று என்றும்  எழுதினால் அதுவே விடை. 
   Image result for number triangle
(இது விடை அல்ல, படம்!)

மாதவன் என்னவோ முயன்று பார்த்திருக்கிறார். வாழ்த்துகள். 


இரண்டாவது கேள்விக்கு பதில்:   கூண்டுக்குள் சிங்கம். CAGED LION. 

Image result for caged lion


மூன்றாவது  கேள்வியில் JUMBLED என்கிற வார்த்தையையே Jumble செய்து கொடுத்திருந்தேன். யாரும் ................   ஊஹூம்! 
  
Image result for jumbled
       
இந்த வாரம் ..............    


1) எதையாவது கேட்பதா , வேண்டாமா? 

2) கேட்டால் பதில் சொல்வீர்களா? 

3 ) உங்களுக்கு ரொம்பப் பிடித்த   ----------------   எது? (அல்லது யார்?) ஏன்?  

தமிழ்மணம்.

12 கருத்துகள்:

 1. எனக்கு வெகுகாலமாகவே பிடித்தது பேப்பரும், பேனாவும்.
  காரணம் - எழுதுவது மிகவும் பிடித்தமானது.

  பதிலளிநீக்கு
 2. புரியாத புதிர்..

  (தாமதம் தான்).. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 3. அட ராமா..... இளவரசன், அந்தப் பெண் புதிருக்குத்தான் விடை சொல்கிறார் என்று பார்த்தால் போன புதன் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறீர். இப்போ நான், எந்தக் கேள்விகளுக்கு இந்தப் பதில்னு தேடணும்.

  பதிலளிநீக்கு
 4. உடனே பதில் கொடுக்கக் கூடாதோ! கேள்விகளே மறந்து போச்சு! ஹிஹிஹி! :))))))

  பதிலளிநீக்கு
 5. நடுவில் வந்த ஜிலேபி எழுத்துக்கள் சிங்கத்துக்கான தீனியா? :-))
  1) எதையாவது கேட்பதா , வேண்டாமா?
  அதான் கேட்டுட்டீங்களே!

  2) கேட்டால் பதில் சொல்வீர்களா?
  முயற்சி செய்கிறோம் :-)

  3 ) உங்களுக்கு ரொம்பப் பிடித்த ---------------- எது? (அல்லது யார்?) ஏன்?
  பழமொழி: கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை!! ஏன் என்பதற்கு போன வார புதிரும் வாசகர் விடைகளும் ஒரு பதில்!! //மாதவன் என்னவோ முயன்று பார்த்திருக்கிறார். வாழ்த்துகள். // :-))

  ஒரு கேட்டகரி பதில் போதுமா?

  பதிலளிநீக்கு
 6. 1. கேளுங்கள் கௌதம் சார். அதான் கேட்டுட்டீங்களே!!!! வேண்டாமனா சொன்னோம்?! ஆனா பெஞ்ச் மேல எல்லாம் ஏத்தி நிக்க வைக்கக் கூடாது. நானும் வாத்தியார்!!!

  2. பதில் சொல்லுவோம்! ஆனா எப்படி வேணா சொல்லுவோம். நீங்க முயற்சிக்கு கொஞ்சம் மார்க்காவது கொடுத்து பாஸ் மார்க் போடனும் (நான் வாத்தியார் இப்படி செஞ்சுதான் பாஸ்மார்க் போடுறேன்!!!!)..பெஞ்ச் மேல ஏத்தறது...வீட்டம்மாவை கூட்டிட்டுவானு எல்லாம் சொல்லக் கூடாது...அப்புறம் மதுரைத் தமிழன் எல்லாம் ஏற்கனவே அடி வாங்கி கஷ்டப்படுறவர். அப்புறம் ரொம்பக் கஷ்டப்படுவாங்க. அப்புறம் எங்களுக்கு ஒன்னுமே தெரியலைனு நீங்க வேற ஃபெயில்னு சொல்லி...வீட்டம்மாவுக்குச் சொல்லிட்டீங்கனா என்ன ஆகும் சொல்லுங்க!!!!! (அதான் மதுரைதமிழன் புதிருக்கு எட்டிப் பார்க்காம இருக்காரோ?! நானும் தான்!!) இன்னிக்கு ரொம்ப ஈஸியா இருக்குதே அதான்!!!

  3. பிடித்தது? ஒன்றா ரெண்டா ...நிறைய என்னவென்று சொல்வது?! ரகசியம் எல்லாம் வெளிய சொல்லவா முடியும்!!!!

  பதிலளிநீக்கு
 7. 'ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்கையில்லை' கேட்பதர்க்குயென்றே ஒரு நாளை தேர்ந்தெடுத்துவிட்டு இதுயென்ன கேள்வி
  அது பதிலா தெரியாது..... ஆனால் ஏதோவந்து சொல்லப்படுகிறது தானே
  பார்த்திங்களா குழப்பமான கேள்வியை முன் வைத்துவிட்டீர்கள் பதில் சொல்ல க்ளூ கொடுங்க

  பதிலளிநீக்கு
 8. எதையாவது தானே கேட்கப் போறீங்க? கேளுங்க, கேளுங்க! என்னவாவது சொல்லிக்கலாம்.

  கேட்டால் பதில் சொல்லுவீர்களா? பதில்! சொல்லிட்டோமுல்ல!

  உங்களுக்கு ரொம்பப் பிடித்த (எது) ஏன், அல்லது யார்? ஹிஹிஹி, எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னா இப்போதைக்கு சூடான வெங்காய பக்கோடா தான்! இந்த மழைக்காலத்துக்கு ரொம்பவே ஏற்றது! அதான்!

  பதிலளிநீக்கு
 9. கேள்வி கேட்பது தங்கள் வேலை திருதிருவென முழிப்பது என்றன் வேலை

  பதிலளிநீக்கு
 10. எனக்கு மிகவும் பிடித்தது பாட்டு, சிறுகுழந்தைகளின் சிரிப்பு அவர்களுடன் விளையாடுவது.

  பதிலளிநீக்கு
 11. 1) எதையாவது கேட்பதா , வேண்டாமா?
  கேட்கலாம்!
  2) கேட்டால் பதில் சொல்வீர்களா?
  சொன்னாலும் சொல்லுவோம்!

  3 ) உங்களுக்கு ரொம்பப் பிடித்த ---------------- எது? (அல்லது யார்?) ஏன்?
  புதிர்

  பதிலளிநீக்கு
 12. எனக்கு ஜுரம் .எக்சாம் எழுதல :) அடுத்த semester எழுதி பாசாயிடுவென்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!