வெள்ளி, 17 நவம்பர், 2017

வெள்ளி வீடியோ171117 : பாடல் பாடி விவாகரத்தை ரத்து செய்து கொண்ட கணவர்     நண்பர் ஒருவர் அனுப்பிய காணொளி.   பார்க்க சற்றே செயற்கையாகத் தெரிந்தாலும் ரசிக்க முடிகிறது.      ஒருவேளை செய்தியில் இடம்பெற வேண்டி கணவன் மனைவி இருவருமே முன்கூட்டி திட்டமிட்டு இப்படி செய்திருப்பார்களோ என்கிற எண்ணம் என் பாமர மனதில்!

     ஏனென்றால் மாதக்கணக்கில் அவர்களுக்குள் உருவான அபிப்ராய பேதம் சினிமாவில் வருவது போல சட்டென நாலு வரிப் பாடலில் மாறி விடுமா!  ஆனாலும்  பரவாயில்லை, அவர் நன்றாகவே பாடுகிறார்.  ஒரிஜினலாக அது எந்தப் பாடல் என்று அறியவும் ஆவல்!      மனித மனம் விசித்திரமானதுதான்.  கண நேர நெகிழ்வில் இது போன்ற மனமாற்றங்களும் சில சமயம் சாத்தியம்தான்.   [நிரந்தரமாக நிலைக்க வேண்டுமே என்கிற கவலையும் வருகிறதே....!]   அதற்கு மனதுக்குள் ஒரு ஊசலாட்டம் இருந்திருக்க வேண்டும்!  ஆனாலும் இப்படி ஒரு பொது இடத்தில் பாடுவதை அனுமதிப்பார்களா?  ரசிப்பார்களா?  எப்படித் தயாராய் வீடியோ எடுத்தார்கள்?  ஒலியும் சப்தமாகவே இருக்கிறது!   அவர் வேறு கைவிரல்களை அபிநயம் பிடித்தெல்லாம் பாடுகிறார்...  கடைசியில் அந்த அதிகாரிகள் கைகொடுத்து வாழ்த்துகிறார்கள்.   நல்லா இருந்தா சரி...     எனக்கு 'ஓம் ஷாந்தி ஓம்' படப்பாடலான "ஆக்கோமே தேரி அஜப் கியா ஜப்கியா ஜாயேரே..." நினைவுக்கு வந்தாலும் அந்தப் பாடல் இல்லை என்று தெரிகிறது.     பாடலைக் காட்சியுடன் பார்க்க இங்கு செல்லவேண்டும்.  யூ டியூபில் இல்லாததால் இங்கு காணொளிக் காட்சியாகவே இணைக்க முடியவில்லை.37 கருத்துகள்:

 1. வெள்ளி என மலர்ந்தது வெள்ளி..
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்!

  பதிலளிநீக்கு
 3. எப்படியோ மனம் ஒன்றுபட்டு இனிதே வாழட்டும்...

  பதிலளிநீக்கு
 4. காட்சி நகரவில்லை. எப்படியோ ஒன்றாக இருந்தால் சரி.

  பதிலளிநீக்கு
 5. சொல்லி வைத்து எடுத்தது போல இருக்கிறது!

  நல்லா இருந்தா சரி!

  பதிலளிநீக்கு
 6. அட! வித்தியாசமான "சீதை ராமனை மன்னித்துவிட்டாள்" !!! கௌதம் அண்ணாவின் ஸ்ரீராம் அந்தத் தம்பதிகளுக்குத் தமிழ் தெரியுமோ??!!!!!!!!!!!!!!!!!!!வேறு ஒன்றுமில்லை..ஒன்று கௌதம் அண்ணாவின் கககபோ கண்டிஷன் ஒன்று போட்டாரே அது!!!! மற்றொன்று....ஹிஹிஹிஹி....நான் உங்களுக்கு அடுத்து அனுப்ப நினைத்து எழுதி வைத்திருப்பதில். சீராம விற்கு...(என்னுடையதில் காதலர்கள்...நாட் கணவன் மனைவி!!!) பாடல்களுடன் கர்நாட்டிக், + திரைப்படப்படால்களுடன்...இந்த ஐடியா....கௌதம் அண்ணாவின் கககபோ கண்டிஷனிலிருந்து உருவானதுதான் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்...ஹாஹாஹாஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. வித்தியாசமான ஒரு இணைதல்!!!!! பல்லாண்டு மகிழ்வுடன் வாழ அத்தம்பதியரை வாழ்த்துவோம். அவர்கள் எதற்காக செய்தாலும் சரி பப்ளிசிட்டிக்காகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஏதோ இனியேனும் மகிழ்வாக இருக்கட்டும் நீங்கள் சொல்லியிருப்பது போல்!

  கீதா: ஸ்ரீராம் பாடல் கேட்க முடியவில்லை...என் மூன்றாவது காது டமார். மழையில் நனைந்ததால்....ஜலதோஷம் பிடித்துவிட்டது. எனவே அதுவும் டாக்டரிடம் போயிருக்கிறது. அதனால் பாடல் சரியாகக் கேட்க முடியலை. கேட்டிருந்தாலும் ஹிந்திப் பாடல் தெரியாதே!!! ஆனால் அவரது அபிநயம் சூப்பர்!! சந்தோஷமாக வாழட்டும் என்று நாம் எல்லோருமே வாழ்த்துவோம்!!!

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் சொல்லியிருப்பது போல் ப்ளான் பண்ணி த்தான் பண்ணியிருப்பது போல்..செட்டப் போலும் தோன்றுகிறது. ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் மனம் ஏற்கனவே இருவருக்கும் பெண்டுலம் போல் இருந்திருக்கும்...குறிப்பாகப் பெண்ணிற்கு...ஸோ அவர் பாடியதும் எமோஷனலாக ஆகி.... சரி எப்படியோ போகட்டும். வாழ்க நலம்!

  இப்படி கோர்ட்டுக்குப் போகும் பெண்களின் கணவர்மார்கள் எல்லோரும் வாய்ஸ் பயிற்சி எடுத்துக் கொண்டால் நல்லது என்று எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிடுவார்களோ!!! இல்லை பாட்டெல்லாம் ப்ராக்டிஸ் பண்ணத் தொடங்கிடுவாங்களோ??!! பாடுவதற்கும் ஒரு சான்ஸ்!! ஹாஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 9. தேவானந்த் பாடலோ பழைய பாடல்?
  பிரிந்தவர் ஒன்று சேர பாடல் உதவியது அறிந்து மகிழ்ச்சி.
  இனி என்று ஒற்றுமையுடன் வாழட்டும்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 10. பழைய பாடல் ஒன்று சேர்க்கிறது புதிய பாடல் பிரித்து விடுகிறதோ பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 11. பாடலைப் பார்க்க முடியவில்லை:(.. வசனங்களை எழுதியிருக்கலாமோ இங்கு?.. சரி அது போகட்டும்..

  //கண நேர நெகிழ்வில் இது போன்ற மனமாற்றங்களும் சில சமயம் சாத்தியம்தான். [நிரந்தரமாக நிலைக்க வேண்டுமே என்கிற கவலையும் வருகிறதே....!] //

  சில பல நேரங்களில் இப்படிச் சம்பவங்கள் கேள்விப்படுகிறோம், ஆனா ஒருவரோடு மன விருப்பம் என்பது.. அது தானாக வரோணும்.. ஏதும் சம்பவத்தாலோ.. அல்லது அந்நேரம் ஏற்படும் இரக்கத்தாலோ ஏற்படும் மனமாற்றம் நிலைக்குமா என்பது தெரியவில்லை... அந்த நேரத்துக்கு இருவரும் இறங்குவார்கள்.. ஆனா சில நாளில் ஈகோ தலை விரிச்சால் அவ்ளோதான்.

  இது உண்மைச்சம்பவம்தான் எனில்.. அத்தம்பதிகள் வாழ்க பல்லாண்டு.

  பதிலளிநீக்கு
 12. ஆணின் இன்னுமொரு வேஷமாக இருக்கலாம். பெண் வழக்கம்போல் நம்பி ஏமாறலாம். இத்தகைய வடக்கிந்தியர்களை அருகிலிருந்து கவனித்த பாக்யம் உண்டு.

  பதிலளிநீக்கு
 13. நீ இல்லாமல் வாழ இயலுமா என்று கேட்டால் பதில் தெரியாது. ஆனால் ........... அது ............. எவ்வளவு சந்தோஷமா இருக்கு !!!! (என்று பாடுகிறாரோ!)

  பதிலளிநீக்கு
 14. ம்ம்ம்... உலகே மாயம்... வாழ்வே மாயம்...

  பதிலளிநீக்கு
 15. மணம் புரிந்த பலரும் பிரச்சனியின் போது பிரிந்து வாழ முயற்சிக்கின்றனரே தவிர சேர்ந்து வாழ முயற்சிப்பதில்லை. இதோடு அவர்களின் நண்பர்களும் பிரிந்து வாழ்த்தான் ஐடியா தருகிறார்கள். ஆனால் மனம் விட்டு பேசினால் பிரச்சனிகல் பல சால்வ் ஆகும் என்பதை பலரும் புரியாமல் இருக்கிறார்கள்


  மனைவி பிரிந்து வாழ நினைத்திருக்கலாம் ஆனால் கணவருக்கு அப்ப்டி வாழ இஷ்டம் இல்லாததால் இப்படி பாடி மனதை மாற்றி இருக்கலாம் எது எப்படியோ சேர்ந்து வாழ்வதுதான் அழகு

  பதிலளிநீக்கு
 16. பாட்டு பாடி நல்லது நடந்தா சரி :)

  முந்தி சினிமாவில் நாலு கால் செல்லங்கள் இணைத்து வைக்கும் :) இப்படி பிரிக்கப்பட்ட காதலர்களை கணவன் மனைவியை :)
  சல்மான் மாதுரி படத்தில் லெட்டர் கொண்டு போகுமே நினைவிருக்கா ஸ்ரீராம் :)
  நான் கேட்டது மாதிரியை இல்லை அந்த செல்லத்தை :)

  பதிலளிநீக்கு
 17. வல்லிம்மா... நான் கொடுத்திருப்பது படங்கள். "இங்கு" என்று நான் கொடுத்திருக்கும் லிங்க்கில் சென்று காட்சியைப் பார்க்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 18. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 19. நன்றி வெங்கட். காட்சியைப் பார்க்க முடிந்ததா?

  பதிலளிநீக்கு
 20. வாங்க கீதா ரெங்கன்.. ஹா... ஹா... ஹா... ககபோ படிச்சுட்டாங்களோ அவங்களும்! அதுசரி, காட்சியைப் பார்க்க முடிந்ததா? அதாவது காணொளிப் பக்கத்துக்குச் செல்ல முடிந்ததா?

  பதிலளிநீக்கு
 21. வாங்க கோமதி அரசு மேடம்.

  //தேவானந்த் பாடலோ பழைய பாடல்?//

  அப்படி இருந்தால் நான் கண்டுபிடித்து விடுவேனே... இது எதோ புதுசு!

  பதிலளிநீக்கு
 22. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.

  பதிலளிநீக்கு
 23. வாங்க அதிரா... ஏன் பாடலைப் பார்க்க முடியவில்லை? இணைப்பு வேலை செய்யவில்லையா? நான் இரண்டு மூன்று முறை சோதித்துப் பார்த்தபோது சரியாய் வந்ததே..

  பதிலளிநீக்கு
 24. வாங்க ஏகாந்தன் ஸார்... வாழ்க்கையே நாடகம்!!!

  பதிலளிநீக்கு
 25. ஆ கேஜிஜி... நீங்களும் பார்த்தீங்களா? பார்க்க முடிந்ததா?

  பதிலளிநீக்கு
 26. வாங்க மதுரை... இன்று மதுரையும் நெல்லையும் அடுத்தடுத்த கமெண்ட்! ஆஹா... நீங்கள் சொல்வது சரி மதுரை. நண்பர்கள் சரியான அறிவுரையை வழங்கவேண்டும். இப்படிக்கு கூடவா இருப்பார்கள்!

  பதிலளிநீக்கு
 27. வாங்க ஏஞ்சலின்...

  'ஹம் ஆப் கே ஹைன் கோன்' படத்தைச் சொல்கிறீர்கள். எனக்கு மிகவும் பிடித்த படம். மாதுரி நான் ரசிக்கும் ஹிந்தித் திரையுலகின் மூன்றாவது அழகி!

  பதிலளிநீக்கு
 28. பாடலைக் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை இணைப்பிலும் அதே கதைதான்

  பதிலளிநீக்கு
 29. மெதுவா மத்தியானமாக் கேட்டுக்கறேன். சேர்ந்ததும் உண்மை தானே! வீடியோவுக்காக இல்லை தானே!!!!!!!!!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!