புதன், 29 நவம்பர், 2017

புதன் கேள்வி 171129 வார வம்பு!


சென்ற வாரக் கேள்விக்கு பெரும் அளவில் பங்கேற்று, பல வித்தியாசமான சுவையான கருத்துப் பரிமாற்றங்கள் செய்த உங்கள் எல்லோருக்கும், எங்கள் நன்றி. 


எனக்கு விசித்திரமாக தோன்றுகின்ற ஒரு கருத்து,

'தமிழனை, தமிழன்தான் ஆளவேண்டும்' என்கிற கருத்து. 

அந்தக் கருத்தை முன் நிறுத்துவோருக்கு, பல காரணங்கள் இருக்கலாம். 

நான் கொஞ்சம் விசித்திரமாக யோசிப்பவன். 

அதனால, தமிழனை, தமிழன்தான் ....... கருத்தைக் கொஞ்சம் கிள்ளிப் பார்க்கின்றேன். யாரும் வேதனை கொள்ளாதீர்கள்! 


# தமிழகத்தில் தமிழனிடம் திருடுவோர் தமிழனாகத்தான் இருக்கவேண்டும். 

# தமிழகத்தில் தமிழர்கள் மட்டுமே தொழில் செய்யலாம். 

# தமிழர்கள் பிற மாநில மக்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாது. 

# தமிழகத்தில் ஆங்கிலம் உட்பட பிற மொழிப் பத்திரிக்கைகள், சினிமா ஆகியவை வரக்கூடாது.

# தமிழ் நடிகர்கள், தமிழ் நடிகைகள் நடித்த படங்கள் மட்டுமே தமிழகத்தில் வெளியிடப்படவேண்டும். 

இன்னும் எவ்வளவோ சொல்லலாம். 

உங்கள் கருத்து என்ன? 

(கோபப்படாம கருத்து சொல்லுங்க!)  



52 கருத்துகள்:

  1. தமிழனை தமிழன் மட்டுமே கிண்டல் செய்யலாம்.... நோ மத்ராஸி ஜோக்ஸ்!!
    தமிழன் தமிழ் கடவுள்களை மட்டுமே வணங்கலாம் - ஐந்திணைகளில் வரும் கடவுள்கள்!!
    தமிழன் தமிழ்நாட்டில் விளைகிற காய்கறிகள், நெல் மற்றும் குறுதானியங்கள் மட்டுமே சாப்பிடலாம்..
    தமிழன் தமிழ்நாட்டு பானங்கள் மட்டுமே பருகலாம்
    தமிழன் தமிழ் பலகாரங்கள் மட்டுமே சாப்பிடலாம்
    .........
    தமிழன் இன்க்லூட்ஸ் லேடீஸ் ஃப்ரம் தமில்நாடு ஆல்ஸோ!! :-))

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா! கௌதமன் சார், பொழுது போகவில்லையா? பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. தமிழனை தமிழன் தான் ஆளனும்ன்ற கருத்துல எனக்கு உடன்பாடில்லை. ஆனா, ஆள்பவர் யாராகிலும் சரியா ஆளனும்.

    வெளிநாடுகளில் இந்திய வம்சாவளியினர் பிரதமர் ஆனார், ஜனாதிபதியானார், அதிபர் ஆனார்ன்னு சொல்லும்போது எத்தனை சந்தோசப்படுறோம். அதுமாதிரி, யார் வேணும்ன்னாலும் ஆளட்டும்.

    பதிலளிநீக்கு
  4. ஆளுமை என்பது வேறு..
    அலங்காரம் என்பது வேறு!..

    இப்படியே போனால் வேறொரு விபரீதமான கேள்வியும் கூட வருமே!..

    பதிலளிநீக்கு
  5. த மீழணுக்கு ஆயி போகதொரியாது ஹ ஹ ஹ ஹ

    பதிலளிநீக்கு
  6. ஹாஹாஹாஹாஹா கௌதம் அண்ணா நல்லாவே கொளுத்திப் போட்டுட்டீங்க!!! சூப்பர்!! மீ உங்களுக்குக் கொடி பிடிக்கிறேன்...ஃபாலோவர்!!! ஹிஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. தமிழ் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் பிறக்கும் குழந்தை பெரியவராகி ஒரு வேளை தமிழ்நாட்டை ஆள வந்தால்??!!

    பழங்காலத்திலிருந்தே நம் தமிழ்நாட்டில் பல மன்னர்கள் ஆண்டுதானே வந்திருக்கிறார்கள். சரபோஜி மன்னர் மஹாராஷ்டிரார்வைச் சேர்ந்தவர். அதே போல தெலுங்கு தேசக்காரர்கள், பல்லவர்கள் (பலல்வர்கள் தமிழர்கள் கிடையாது...என்றும் சொல்லப்படுகிறது. அதே போன்று சோழர்களும் தமிழர்கள் அல்லர் என்றே பல விவாதங்கள் இருக்கின்றன. அப்படிப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் கலப்பினம் தானே இருக்கிறது. ரோமானியர்கள் வியாபாரம் செய்திருக்கிறார்கள்...அங்கிலேயர் ஆண்டிருக்கிறார்கள்...ஃப்ரென்ச், டச்சு என்று பல ஆதிக்கங்கள் இருந்திருக்கின்றன தானே...அவர்கள் இங்கு குடும்பம் நடத்தாமலா இருந்திருப்பார்கள்??!! கன்னியாகுமரி மாவட்டம் 1956 வரை கேரளத்துடன் தான் இருந்தது. பின்புதான் தமிழ்நாட்டுடன். இன்று வரை அதற்கு மலயாள வாசம் அதிகம் தான். அங்கிருந்து வந்தவர்கள் தான் எழுத்தாளர்கள் சுந்தரம் ராமசாமி, ஜெயமோகன் (இவரது வேர்கள் கேரளம் என்றுதான்..நாயர் சமூகம் ஆனால் பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம் அது முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததால்... அவரது வேலை பார்த்தது முதலில் கேரளத்தில்...மலையாளம் நன்றாகத் தெரியும்...தமிழில் ஃபேமஸ் எழுத்தாளர்...தமிழ் இலக்கிய உலகம் இவரைக் கொண்டாடவில்லையா?

    இப்படி நிறைய சொல்லலாம்...

    அப்படி என்றால் அமெரிக்க அதிபருக்கு ஒரு விவாதம் வந்தது ட்ரம்ப் அமெரிக்கர் அல்லர். அவரது தாத்தா பாட்டி வேறு ஏதோ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று. அது போல நம் தமிழ் நாட்டில் தமிழன் தான் வர வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் முந்தைய தலைமுறைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா என்பதற்கான ஆதாரம் கொடுக்க வேண்டும். அதுவும் எத்தனை தலைமுறைகள்....நதி மூலம் ரிஷி மூலம்....அப்படிப் பார்க்கும் போது யார் தமிழன் என்ற கேள்வி நிச்சயமாக எழும்...

    இன்னும் அரசியலில் இப்போதும் உள்ளவர், தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்... மற்றும் எல்லோரும் கொண்டாடும் சிலரை நான் இங்கு சொல்லலாம் ஆனால் வேண்டாம் பிரச்சனையாகிடுமோ என்று சொல்லவில்லை....சென்ற வாரம் சொன்னவர்கள் ஒரு சிலரைச் சொல்லியிருந்தார்கள் ஆனால் அவர்கள் ஏன் இவர்கள் பெயரையும் சொல்லவில்லை என்று தெரியவில்லை..

    சரிங்க எல்லாத்தையும் விட்டுருவோம்...நம்ம நண்பர் துளசிதரனின் பூர்வீகம் கேரளதான்.. மலையாளி. ஆனால் பிறந்து வளர்ந்தது தேனி அருகில் ராசிங்கபுரம் கிராமத்தில். 25 வயது வரை தமிழ்நாட்டில். அப்புறம் கேரளம்...அவருக்குப் பிடித்தது பிறந்த மண்ணும் இளம் வயதில் வாழ்ந்த மண்ணுமான தமிழ்நாடு. தன் தாய்மொழி மலையாளம் என்றாலும் இவர் தமிழ் என்றுதான் சொல்லிக் கொள்வார். அவர் இப்போ தமிழ்நாட்டின் மீது உள்ள காதலால் இங்கு ஒரு வேளை ஆள வந்தால் நண்பர்கள் கூடாது என்று சொல்லுவார்களா??!!!!!!! ஹிஹிஹிஹிஹீ...(துளசி உன்னை வம்புல மாட்டி விட்டுட்டேம்பா மன்னிச்சுரு!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நண்பர்களே என் கருத்து சும்மா ஜாலிக்குத்தான்...என்னை அடிக்க வந்துராதீங்கப்பா...மீ பாவம் சின்னக் குழந்தை..எஸ்கேப் விடு ஜூட்.....கவிப்புயல் அதிரா ப்ளீஸ் ஹெல்ப் மீ உங்க ஊருக்குத்தான் வந்திட்டுருக்கேன்... உங்க தேம்ஸ்ல கொஞ்சம் இடம் கொடுங்க!!! ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. "...........ஆளவேண்டும்"
    ஒரு விகற்ப நேரிசை வெண்பா -- ஈற்றிரண்டடி, ஆசான் வள்ளுவனின் திருக்குறளடிகளாய் அமைத்தேன்.
    உதவி தருவோர், உயிரினும் மேலார் ;
    பதவி தரவே,நீர் பார்ப்பீர்ப் - பதமாய்,
    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
    ததனை அவன்கண் விடல் !

    பதிலளிநீக்கு
  10. "தமிழ் நடிகைகள் நடித்த படங்கள் மட்டுமே தமிழகத்தில் வெளியிடப்படவேண்டும்." -

    கேஜிஜி சார்... இந்த வேலை உங்களுக்கு வேண்டாம். ஒண்ணு, வீட்டில் பிரளயம் இன்றைக்கே வரப்போகிறது. (ஸ்ரீராம் வடிவில்) இரண்டு என்னுடைய BAD BOOKSல நீங்க இடம் பெறப்போறீங்க. கபர்தார். இப்படிக்கு, அனுஷ்கா, தமன்னா தனித் தனி ரசிகர் மன்றம்.

    பதிலளிநீக்கு
  11. கௌதமன் ஐயா - இன்னும் ஒரு கட்டுப்பாடையும் தாங்கள் சேர்த்துக்கொள்ளலாம். இங்கு பின்னூட்டங்கள் தனித் தமிழில்தான் எழுதப்படும். பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கவேண்டும் (நடுத்தர குடும்ப மாதவி, மதிப்பிற்குரிய கொலைகாரன் தேவகோட்டை, பசு சின்னவயது கிருட்டிணன்-கோபாலகிருஷ்ணனுக்கு, திருராமன்-ஸ்ரீராம் கிடையாது போன்று. ). இதற்கு தாங்களின் பதில் பின்னூட்டம் என்னவாயிருக்கும்?

    பதிலளிநீக்கு
  12. கேஜிஜி சார்... இந்த வேலை உங்களுக்கு வேண்டாம். ஒண்ணு, வீட்டில் பிரளயம் இன்றைக்கே வரப்போகிறது. (ஸ்ரீராம் வடிவில்) இரண்டு என்னுடைய BAD BOOKSல நீங்க இடம் பெறப்போறீங்க. கபர்தார். இப்படிக்கு, அனுஷ்கா, தமன்னா தனித் தனி ரசிகர் மன்றம்.//

    ஹா ஹா ஹா ஹா ஹா அதானே பார்த்தேன்...எனக்கு மஞ்சு வாரியாரையும் ரொம்பப் பிடிக்கும்...ஹிஹிஹி..

    கீதா

    பதிலளிநீக்கு
  13. //நெல்லைத் தமிழன் said...

    கேஜிஜி சார்... இந்த வேலை உங்களுக்கு வேண்டாம். ஒண்ணு, வீட்டில் பிரளயம் இன்றைக்கே வரப்போகிறது. (ஸ்ரீராம் வடிவில்) இரண்டு என்னுடைய BAD BOOKSல நீங்க இடம் பெறப்போறீங்க. கபர்தார். இப்படிக்கு, அனுஷ்கா, தமன்னா தனித் தனி ரசிகர் மன்றம்.///

    ஹையோ ஹையோ இந்தக் கொடுமையைக் கேய்க்க இங்கின ஆருமே இல்லயா?:)).. நான் நெல்லைத்தமிழனைப் படுபயங்கரமாக வழிமொழிகிறேன்ன்ன்:)).. ஹையோ நெ.தமிழனாவது கேள்வி கேட்டுப்போட்டு கொஞ்சம் ஸ்ரெடியா நிற்கிறார்ர்.....:))

    ஆனா ஓடுங்கோ.. ஓடுங்கோ.. ஸ்ரீராமைக் காப்பாத்துங்கோ.. ஹையோ காவேரியை நோறார்ர்ர்ர்:)).. ஸ்ரீராம் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்திடாதீங்கோ:)).. கெள அண்ணன் சொன்னதுபோல ஒரு நிலைமை ஏற்பட்டால்... நாங்க அனு க்காவை:) [அனு+ அக்கா].. கங்கையில மூழ்கி ஞானஸ்தானம் கொடுத்து தமிழ்ப்பெண்ணாக மாற்றி உங்களிடம் ஒப்படைப்போம்ம்ம்ம்ம் இது அஞ்சு வின் அந்தத் தேன் கூட்டில் ஓங்கி அடிச்சுச் சத்தியம் பண்றேன்ன்ன்ன்ன்:)).. ஹையோ கங்கை தமிழ்நாடில தானே இருக்குது??:)


    ////கௌதம் அண்ணா நல்லாவே கொளுத்திப் போட்டுட்டீங்க!!! சூப்பர்!! மீ உங்களுக்குக் கொடி பிடிக்கிறேன்...ஃபாலோவர்!!! ஹிஹிஹிஹி...

    கீதா////

    உந்தக் கொடியைப் பிடுங்கி, மீ நெல்லைத்தமிழனுக்குப் பிடிக்கிறேன்ன்ன்ன்ன்ன்:))ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  14. (நடுத்தர குடும்ப மாதவி, மதிப்பிற்குரிய கொலைகாரன் தேவகோட்டை, பசு சின்னவயது கிருட்டிணன்-கோபாலகிருஷ்ணனுக்கு, திருராமன்-ஸ்ரீராம் கிடையாது போன்று. ). இதற்கு தாங்களின் பதில் பின்னூட்டம் என்னவாயிருக்கும்?//

    ஹா ஹா ஹா ஹா ஹா...ஹையோ பூந்து விளையாட்றீங்கபா நெல்லை...

    அப்ப நீங்க தப்பிச்சீங்க!!!

    ஏஞ்சல்-தேவதை ஆகிடுவாங்க!!! அப்ப கவிப்புயல் பொயிங்கி வருவாங்க.......ஹும் அதிராவை மாட்டிவிடலாம்னா தப்பிச்சுட்டாங்க..!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. கீதா இது மறைமுகமான திட்டமிட்ட ஜதீஈஈஈஈஈ:)).. ஹையோ துளசி அண்ணன் இனி எப்பூடி எங்கட புளொக்குக்கு வருவார்ர்ர்?:).. இதை அறிஞ்சுதானாக்கும் அவர் இன்னும் என்பக்கம் வரவில்லை..:)) ஹா ஹா ஹா.. கும்பல்ல கோவிந்தாவா அனைத்தையும் ஜொல்லிடோணும்:).. இதை விட்டா வேறு சந்தர்ப்பம் இல்லை:)) ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
  16. நான் ஜொன்னனே ஒவ்வொருவருக்கும் எடிரி:) தன் வீட்டுக்குள்ளயேதான்ன்ன்ன் வெளில இல்லை:)).. கீதா நேக்கு லெக்ஸ்சும் ஆடல்ல காண்ட்ஸ்சும் ஓடல்ல:)) பிபிசி க்குத்தகவல் கொடுக்கட்டோ காவேரியுக்கு முள்ளுக்கம்பி வேலி போட்டு யாரையும் குதிக்க விடாமல் தடுத்தால், கீதா தன் சென்னை வீட்டை அதிராவுக்கு எழுதி வைப்பா என:)).. கீதா இப்போ ஓசிக்க நேரமில்லை:).. அனுக்கா ரசிகரைக் காப்பாத்த வேண்டிய நேரம்:))....

    பதிலளிநீக்கு
  17. ///மதிப்பிற்குரிய கொலைகாரன் தேவகோட்டை///

    ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /////நெல்லைத் தமிழன்November 29, 2017 at 1:29 PM
      கௌதமன் ஐயா ////
      ஹாஅ ஹாஅ ஹாஆ இந்தப் புதன் கிழமையோடு கெள அண்ணனின் மருவாதை எங்கயோ உயர்ந்துபோச்ச்ச்சூஊஊ:)...

      கடவுளே இங்கின அடிதடி வந்திடப்படாது, அதுக்காக திருச்செந்தூர் வாசலில் வச்சு அஞ்சு வுக்கு மூக்குக் குத்துவேன் என வேண்டிக்கொள்கிறேன்ன்ன்ன்:)..

      நீக்கு
  18. தில்லையகத்து கீதா ரங்கன் - நாங்க உண்மைத் தமிழர்கள். அதனால் 'பிறன் மனை நோக்காப் பேராண்மை' கொண்டவர்கள். அதுனால, திருமணம் ஆகிவிட்டா (எங்களுக்கில்லை, அவங்களுக்கு), அவங்களை கழட்டி விட்டுடுவோம், நாங்க ரசிகர் மன்ற போர்டை மாத்திடுவோம். இல்லாட்டா ஒவ்வொரு ரெண்டு மூணு வருஷத்துக்கும் ரசிகர் மன்ற போர்டை மாத்தியிருப்போமா?

    பதிலளிநீக்கு
  19. அ.அ... இல்லை இல்லை க.அ (இப்போது வரைன்னு நினைக்கறேன்) வை கலாய்க்கலாம் என்று நினைத்தேன். அப்புறம் அந்தப் பெயருக்கு அர்த்தம் தெரியலை. அவங்களே 'அமைதியானவர்' என்று சொல்லிக்கறாங்க. சந்தேகம் இருந்தா இதைப் படித்துப்பாருங்க. ('அதிரா' பெயரப் பற்றி அவர் எழுதியிருப்பது.. 2009ல்)

    jaybee தாராளமாக வையுங்கள் இது தமிழ்ப்பெயர்தான். ஆனால் சரியான அர்த்தம் எனக்குத் தெரியாது.

    எங்கேயோ என் குறிப்பில் இக்கேள்வி கேட்டு ஹைஷ் அண்ணன் பதில் கொடுத்திருக்கிறார்.. நீங்கள்தான் கேட்டீங்களோ அங்கும் ஒருதடவை பபருங்கோ.. நான் தேடினேன் கிடைக்கவில்லை. அமைதியான பெண்:) என்று அர்த்தம் எனச் சொல்லியுள்ளார்.

    இத் தலைப்பை இப்போதான் பார்க்கிறேன், அநாமிகா சொன்னதால்தான் கண்டேன். மன்னிக்கவும் தாமதமான பதிலுக்கு.

    எனக்குப் பிடித்த சில பெயர்கள்... அஞ்சனா, தேவினா, ஆதிரை, கெளரிஷா,அபிநயா, பாவனா....

    எப்பவும் "A" யில் ஆரம்பிக்க பெயர் வைத்தால் நல்ல ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என சிலர் சொல்கிறார்கள்...

    அபிஷேக், அவித்தன்,விதுஷன், அகில், யதார்த்தன், , பிரதாப், நிஷாந்தன்....

    நன்றி,
    எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

    பதிலளிநீக்கு
  20. //ஏஞ்சல்-தேவதை ஆகிடுவாங்க!!! அப்ப கவிப்புயல் பொயிங்கி வருவாங்க.......ஹும் அதிராவை மாட்டிவிடலாம்னா தப்பிச்சுட்டாங்க..!!!!!//

    love yooooo geethaa :)

    will come after a while :)
    i am making porridge for breakfast

    பதிலளிநீக்கு
  21. ///நெல்லைத் தமிழன் said...///
    ஹா ஹா ஹா ஹையோஒ பழசை எல்லாம் எப்பூடி இவ்ளோ கரெக்ட்டாக் கிண்டிக்கிழறி எடுத்து வந்தார்ர்:))...
    அது மீ ரொம்ப அமைதியான பொண்ணு.. 6 வயசிலிருந்தே:).

    பதிலளிநீக்கு
  22. Angelin said...//love yooooo geethaa :)///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 13425643 :)) பபுளிக்குல லவ்வூ கேய்க்குதாம்:))

    நெல்லைத்தமிழன் கீதாவுக்கு ஆங்கிலீசு தெரியல்ல:).. ஏஞ்சலின் ஐ டமில் ஆக்கம் செய்தால் “அஞ்சலை” எண்டுதானே வரும்ம்ம்ம்ம்?:)) ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  23. நெல்லைத் தமிழன் said //.... இங்கு பின்னூட்டங்கள் தனித் தமிழில்தான் எழுதப்படும். //

    மேலும் ஒரு படி போய், தமிழ் மரபுக் கவிதையாகவே பதிலிட்டுள்ளேன், நான்.

    பதிலளிநீக்கு
  24. பெரும்தவ திருமார்புபசுக்குழந்தை அவர்களே தாங்கள் ஆங்கில எழுத்து உபயோகப்படுத்தியுள்ளீர்கள் (மேலேயுள்ள பின்னூட்டத்தில்). எழுதிய மரபுக் கவிதையில் 'பார்ப்பீர்ப்-பதமாய்'ல், 'ப்' வரக்கூடாது, திருக்குறளிலிருந்து களவாடக்கூடாது (:-) ).

    @மிடில் கிளாஸ் மாதவி - நீங்கள் சொல்லியது சரிதான். ஆனால் 'நடுத்தர வகுப்பு' என்று குறிப்பிட்டால், அது படித்த வகுப்பா, அல்லது 'மிடில் கிளாஸ்'ன் மொழிபெயர்ப்பா என்று சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நான் அப்படி உபயோகப்படுத்தினேன்.(Dont get hurt. Jollyயா எடுத்துக்கோங்க)

    பதிலளிநீக்கு
  25. கவிப்புயல் மேலதிகமா சுழண்டு சுழண்டு அடிக்குறதைப் பார்த்தால்
    வீட்டுல எல்லாருக்கும் சாப்பாடு போட்டு வெளியே அனுப்பியாச்சு போல இருக்கு!?..

    பதிலளிநீக்கு
  26. @நெல்லைத்தமிழன் நீங்க தான் அப்பாவி :)
    //நெல்லைத் தமிழன் said...
    அ.அ... இல்லை இல்லை க.அ (இப்போது வரைன்னு நினைக்கறேன்) வை கலாய்க்கலாம் என்று நினைத்தேன். அப்புறம் அந்தப் பெயருக்கு அர்த்தம் தெரியலை. அவங்களே 'அமைதியானவர்' என்று சொல்லிக்கறாங்க//



    யார் என்ன சொன்னாலும் நம்பிடறதா ?? :)
    அக்கம்பக்கம் விசாரிக்கணும் குறிப்பா அதே அ அல்லது a வில் பெயர் துவங்கும் அந்த அன்பான அறிவான பதிவரை கேட்கணும் :)
    அறிவான ஏஞ்சல்னு பேரை மாத்திக்க நினைச்சேன் என்ன ப்ராப்ளம்னா ஆங்கில ப்லாக்யிலும் அதே பேர் வரும் நம்ம பாலோயர்ஸ் எல்லாம் ரஷ்ய சைனா ரொமேனிய ஐரோப்பியர்கள் அதுக்குதான் இன்னும் பேரை ஏஞ்சலேனே வச்சிருக்கேன்

    பதிலளிநீக்கு
  27. புதுசு புதுசா யோசிக்கறீங்க கௌதமன் சார் :)

    இப்போ நாங்க நாகர்கோயில் காரங்க பூர்வீகம் அதுக்கு முன்னாடி அது கேரளாதானே :) இப்ப நான் தமிழா கேரளாவா ??

    பதிலளிநீக்கு
  28. இங்கே இங்கிலாந்தில் பேப்பரில் படிச்சேன் பல வெள்ளையர்களின் DNA பரிசோதனையில் தெரியவந்தது 5 சதவீதம் ஆசிய மற்றும் 2 சதவீத ஆபிரிக்க ஜீன்ஸ் இருக்காம் !!
    அப்போ யாரும் முழுமையா இதுதான் நான்னு சொல்லிக்க முடியாது

    பதிலளிநீக்கு
  29. //துரை செல்வராஜூ said...
    கவிப்புயல் மேலதிகமா சுழண்டு சுழண்டு அடிக்குறதைப் பார்த்தால்
    வீட்டுல எல்லாருக்கும் சாப்பாடு போட்டு வெளியே அனுப்பியாச்சு போல இருக்கு!?..//

    ஹையோ ஹையோ துரை அண்ணன் தான் இங்கின ஓவர் அப்பாவியா:) இருக்கிறார்ர்:).. புயல் அடிக்க வெளிக்கிட்டாலே முதலாவது பண்ணுவது கிச்சின் அடைப்புத்தேன்ன்ன்ன்ன்:)) பொறகு எங்கினவாம் சாப்பாட்டைப் போட்டூஊஊஊஊ அனுப்புவதூஊஊஊஊ:)).. ஹா ஹா ஹா மீ எசுக்கேப்பூஊஊஊ:)..

    ஹையோ இன்று புதன் கிழமை முடியப்போகுது:)

    பதிலளிநீக்கு
  30. ///17 at 4:50 PM
    Angelin said...
    இங்கே இங்கி///

    நம் மூதாதையர்கள் எல்லோரும் அப்புறிக்காவில இருந்து இடம்பெயர்ந்தோர்தானே இது தெரியாதோ?:).. அப்போ ஜீன்ஸ்ல சேட் ல:) எல்லாம் இருக்கும்தானே அப்புறிக்க வாசம்:) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  31. இப்பொழுதுதான் கணினி வர முடிந்தது.

    # தமிழகத்தில் தமிழனிடம் திருடுவோர் தமிழனாகத்தான் இருக்க வேண்டும்

    இது சாத்தியப்படாது காரணம் பிறமாநிலத்தவர் யாருமே அடுத்த மாநிலத்துக்குள் நுழைந்து விடாமல் வாழணும் நடக்குமா ? உதாரணம் பிரதமராக இருப்பவர் தமிழர் இல்லை உள்ளே நுழைந்து மோசடி செய்ய இயலாதே...

    # தமிழகத்தில் தமிழர்கள் மட்டுமே தொழில் செய்யலாம்

    அப்புறம் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இந்த வார்த்தை அழிந்து போகுமே....

    # தமிழர்கள் பிற மாநில மக்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாது.

    எந்த நடிகணும் எந்த நடிகையையும் காதலிக்க முடியாது, நடிகைகளுக்கு தொழிலதிபர் மாப்பிள்ளைகள் கிடைப்பது பற்றாக்குறையாகி விடுமே...

    # தமிழகத்தில் ஆங்கிலம் உட்பட பிற மொழிப் பத்திரிக்கைகள், சினிமா ஆகியவை வரக்கூடாது.

    பிறமாநிலத்தவன் இல்லை என்றால் பத்திரிக்கை வரவேண்டிய அவசியமில்லையே....

    # தமிழ் நடிகர்கள், தமிழ் நடிகைகள் நடித்த படங்கள் மட்டுமே தமிழகத்தில் வெளியிடப்படவேண்டும்.

    தொடக்கம் சாத்தியமானால் இதுவும் சாத்தியமே...


    *********************************************************************

    தமிழன் உலகின் பல இடங்களில் கோலோச்சுகின்றான் என்றால் அறிவின் விஸ்தாரம் தமிழனுக்கு எங்கும் மதிப்பில்லை என்ற ஆற்றாமையால் தானே முன்னின்று முயன்று சாதிக்கின்றான்.

    தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்மையானவர்களுக்கு இது புலப்படுதில்லை ஆகவே மொழியைப்பற்றி பெரிதாக நினைக்காமல் எவனுக்காவது ரசிகனாகி அவனது அடிமையாக விடுகின்றான் இப்படி நமது முன்னோர் எம்ஜிஆரிடம் மயங்கிதால் அவன் ஜெயலலிதாவை வைத்து வாழ்ந்து விட்டு போய் விட்டான்.

    இன்று நாம் விலைவாசி ஏறுகிறது அரசியல் நாறுகிறது என்று புலம்புகின்றோம்

    எவன் வந்தாலும் நல்லவன் வரவேண்டும் என்பது நல்ல கருத்தே அப்படி சொல்பவரிடம் சின்ன கேள்வி கேரளாவில் போய் ஒரு தமிழன் முதல்வராக முடியுமா ? சவால் காதை அறுத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  32. யாரோ மதிப்பிற்குறிய தேவகோட்டை அப்படினு எழுதி இருக்காங்களே.... ////நல்ல வார்த்தை////. ஒரு நாளைக்கு நேர்ல பார்த்து பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  33. அதுதானே!..

    இன்னும் தேவகோட்டைச் சிங்கத்தைக் காணோமே?.. - என்றிருந்தேன்!..

    பதிலளிநீக்கு
  34. மதிப்புக்குரிய கவிப்புயல் கவனத்திற்கு..
    எங்கினயாவது சுற்றிச் சுழண்டு விட்டு இந்தப் பக்கம் வந்தால்
    மறக்காம நம்ம தளத்துக்கும் வரவும்..

    உங்களுக்கான பதிவு ஒன்று - அங்கே!..

    பதிலளிநீக்கு
  35. "ஒரு நாளைக்கு நேர்ல பார்த்து பாராட்டுவோம்." - 'நல்லவேளை... ஆட்டோ அனுப்பிடுவீங்களோன்னு பயந்தேன். சரி... நம்ம ஊர்க்காரர்தானே (? அரபுதேசம்தான்.. அங்கனதான பாதி வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம்) ன்னு, உங்க பேரை எடுத்துக்கிட்டேன்.

    பதிலளிநீக்கு
  36. //கவிப்புயல்:) athira said...
    ///17 at 4:50 PM
    Angelin said...
    இங்கே இங்கி///

    நம் மூதாதையர்கள் எல்லோரும் அப்புறிக்காவில இருந்து இடம்பெயர்ந்தோர்தானே இது தெரியாதோ?:).. அப்போ ஜீன்ஸ்ல சேட் ல:) எல்லாம் இருக்கும்தானே அப்புறிக்க வாசம்:) ஹா ஹா ஹா..//

    அழகன் படத்தில் ஒரு குட்டி பயல் மம்முட்டியை கேப்பான் ..
    அதை உங்ககிட்டே கேக்கறேன் //நிஜமாலுமே நாமெல்லாம் வேற வீட்ல பொறந்தவங்களா !!//

    பதிலளிநீக்கு
  37. எல்லாம் சரி, லேடீஸ் அண்ட் ஜெண்ட்ல்மென்! பச்சைத் தமிளனிடம்போய் , இனி தமிள்நாட்டுப் பொண்ணுகளத்தான் தமிள்ப் படங்கள்ல ஹீரோயினாப் போடப்போறோம். பம்பாயிலேர்ந்து மஞ்சள் நிற அழகிங்க..அதான் தமண்ணா, காஜல், ஹன்சிகா போன்ற பஞ்சாபி, ராஜஸ்தானி சிங்காரிகள், கேரள, ஆந்திரப் பெண்டுகளையெல்லாம் ஸ்க்ரீனுல காட்டமாட்டோம்னு யாராவது சொன்னா, தமிளன் உடனே ஸ்டன்னாகி, அப்படியே மூர்ச்சையாகிக் கீளே சரிஞ்சுடுவான். யாராவது தண்ணிகிண்ணி தெளிச்சு மயக்கம் தெளிஞ்சதும் ‘அட போய்யா! தமிளாவது, மண்ணாவது, பண்பாடாவது வெங்காயமாவது..இப்ப இருக்கறபடியே இருக்கட்டும் எதயும் மாத்தி என் உயிர வாங்காதே- போய்த்தொலை அந்தப்பக்கம்-ன்னு கடிச்சுக் கொதறிப்புடுவான்..தெரியுமில்லே?.

    பதிலளிநீக்கு
  38. ஹாஹ்ஹா @ ஏகாந்தன் ஸார் சிரிச்சிட்டேன் சூப்பர்ப் கேள்வி

    பதிலளிநீக்கு
  39. @துரை செல்வராஜு சார் - "அதுதானே!.. இன்னும் தேவகோட்டைச் சிங்கத்தைக் காணோமே?.. - என்றிருந்தேன்!." - இது உங்களுக்கே அநியாயமாத் தெரியலையா? சிங்கத்தைச் சீண்டிவிட்டு என்னை வேட்டையாடப் பார்க்கிறீர்களே.

    பதிலளிநீக்கு
  40. டிரையல் அண்ட் எரர்தான் எல்லாமே இப்பொழுது நடப்பது சோ இப்படியும் ஒருதடவை நடந்து தான் பார்க்கட்டும் விளைவுகள் என்ன என்று
    (காமராஜர் என்ற ஒரு தமிழர் உலகம் போற்றும் படி ஆண்டவர் நிஜ ஆண்டவர் அதற்கு பின் அவரை போல் ஒருவரும் வரவுமில்லை ஆளவுமில்லை இன்று தமிழனாக வந்தாலும் அவரை போல் வருவார்களா புரியவில்லை கேரளாவில் கேரளா சேர்ந்தவர்தான் வருகிறார் தெலுங்கில் தெலுங்கியர்தான் வருகிறார் கர்நாடகாவில் கன்னடியார்தான் வருகிறார் ஏன் தமிழ்நாட்டில் அப்படி ஆசைப்பட கூடாது என்ற பேச்சு நிலவுகிறது புரியவில்லை அவரவர் பிள்ளையை அவர் அவர்தான் பொத்தி பாதுகாப்பார்கள் காக்கிறார்கள் தட்டி கொடுத்து, கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆடிவிட்டு அந்த மாநிலத்தில் )
    ஆனா இவங்க எல்லாம்(தமிழர்கள் ) மோசமாய் இன்னும் சவுக்கடி வாங்கணும் தான் நான் ஆசைப்படுறேன் அப்பகூட திருந்த மாட்டாங்க எமி வந்து நான் உங்கள் தலைவியாக வரட்டுமா என்றால்ஒட்டு போட முதல் ஆளாய் நிற்பார்கள்

    பதிலளிநீக்கு
  41. ///KILLERGEE Devakottai said...
    யாரோ மதிப்பிற்குறிய தேவகோட்டை அப்படினு எழுதி இருக்காங்களே.... ////நல்ல வார்த்தை////. ஒரு நாளைக்கு நேர்ல பார்த்து பாராட்டுவோம்.///

    ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. ஓடுங்கோ ஓடுங்கோ ஓடிப்போய்ப் புகைக்கூட்டுக்குக் கீழ ஒளியுங்கோ:)).. ஹையோ நான் வேற சிரிச்சிட்டனே:)).. இருந்தாலும் கில்லர்ஜி ஜொள்ளிட்டார்ர் தேம்ஸ்பக்கம் வரத் தோதில்லை என.. அதனால மீ சேவ் ஜாமீஈஈஈஈஈஈஈ:))

    பதிலளிநீக்கு
  42. ///துரை செல்வராஜூ said...
    மதிப்புக்குரிய கவிப்புயல்///

    ஹா ஹா ஹா வரவர நம்மளோட மருவாதை:) உய்ர்ந்திட்டே போவதை நினைக்கப் புல்லரிக்குது ஜாமீஈஈஈஈ:))

    பதிலளிநீக்கு
  43. // பசு சின்னவயது கிருட்டிணன்-கோபாலகிருஷ்ணனுக்கு//
    ஆவிளங்கண்ணனார்

    பதிலளிநீக்கு
  44. மெதுவா வரேன், காலங்கார்த்தாலே குளம்பி குடிச்சுட்டு இதைப் படிக்கவே தலை சுத்தல்! :)

    பதிலளிநீக்கு
  45. நல்ல தமிழ் வாழட்டும்.

    இனி மாற்றுவது என்பது கடினம். யாருக்கும் ஒன்றும் புரியாது.
    ஆங்கிலம் கற்கும் வரை இருந்த தலைமுறை
    பிறகு மாறிவிட்டது.

    வலைப்பதிவு ஆரம்பிக்கும் வரை கலப்படத்தமிழ்தான்.
    இப்பவும் அதே.

    இத்ற்காகக் கடினமாக உழைத்து எழுதுபவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

    வல்லிசிம்ஹன். வல்லிசிங்கம் ஆக முடியாது. என் கணவர் பெயர் என்னுடன் இருக்கட்டுமே,

    பதிலளிநீக்கு
  46. பாபு - பாராட்டுகள். ஆயிளங்கண்ணன் சரி. ஆ + இளம் = ஆயிளமா அல்லது ஆவிளமா?

    பதிலளிநீக்கு
  47. ஆ + இனம் =ஆவினம் .ஆ+ன்+பால் = ஆவின் பால் . அவ்வாறு ஆ+இளம்=ஆவிளம் . எனது தமிழ் ஆசிரியரின் பெயர் இளங்கண்ணனார் (பாலக்ருஷ்ணன் என்பதன் தமிழாக்கம் ).

    பதிலளிநீக்கு
  48. //கேரளாவில் போய் ஒரு தமிழன் முதல்வராக முடியுமா ? //
    திரு சதாசிவம் (மற்றும் பலர்) அரசியமைப்பு சட்டப்படி Head of State. (7 முறை ஜனாதிபதி ஆட்சி கேரளத்தில் நடந்துள்ளது). இந்த நாட்டில் எதுவும் நடக்கும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!