வெள்ளி, 10 நவம்பர், 2017

வெள்ளி வீடியோ : மரகதப் பொன்மேனி மாணிக்கமோ
நினைவிலே மனைவி என்று  

ச ரி க ம ப என்றொரு படம்.  அதில் இடம்பெறுவதாய் இருந்த பாடல் இது.  படம்தான் வெளிவரவில்லையே....!  பலரது உள்ளங்களையும் கவர்ந்து, காதுகளை நிறைத்து,  மனதை இனிமையாக்கிய பாடல்.  உபயம் இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம்!  வெளிவராத படங்களிலிருந்து  எல்லாம் கூட பாடல்களை அங்கேதான் கேட்க முடியும்!  1983 இல் வெளியான பாடல்.  

இசை ஸ்ரீகுமார் என்று சொல்லப்படுகிறது. மலையாள எம் ஜி ஸ்ரீகுமார் இல்லை என்று நினைக்கிறேன்.    பாடலாசிரியர் உதயணன் என்றிருக்கிறது.  கேள்விப்பட்டதில்லை.  கேட்டதெல்லாம் இந்தப் பாடல்தான். (இன்னொரு பாடலும் உண்டு... "ஓடும் நதிகளில் ஆடும் அலைகளில் உனது முகம்" - ஜெயச்சந்திரன் குரலில்)

S P B யின் குரலில் ரொம்ப ரசித்த பாடல்.   காட்சி கிடையாது.  கானத்தை மட்டும் ரசிக்கலாம்.

இரவெல்லாம் நிலவில் நின்று 
எழுதுவேன் கவிதை ஒன்று...

நின்றாள் நடந்தாள்  நிழலாய்த் தொடர்ந்தேன் 
நெஞ்சில் நிறைந்தாள் என்நிலை மறந்தேன்...

வாழ்வில் வசந்தம் வந்தது யோகம் 
வரும் நாளெல்லாம் புதுப்புது ராகம் 37 கருத்துகள்:

 1. எல்லாம் இன்பமயம்...

  இசையாய் தமிழாய் புது வெள்ளி..
  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. >>>>> நின்றாள் நடந்தாள்.. நிழலாய்த் தொடர்ந்தேன்..<<<<<

  நல்லவேளை... பாடல் வேறொருவருடையது...
  இல்லையேல் -
  அனுஷ்கா, தமன்னா, கவிதா(?)..
  - அப்புறம் இது வேறயா!!!.. என்று வரிந்து கட்டியிருப்பார்கள்...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

  // இல்லையேல் -
  அனுஷ்கா, தமன்னா, கவிதா(?)..
  - அப்புறம் இது வேறயா!!!.. என்று வரிந்து கட்டியிருப்பார்கள்...​ //​

  ஹா.... ஹா.... ஹா.... ஆமாம்... ஆமாம்...

  பதிலளிநீக்கு
 4. அலசு அலசி ஆராய்ச்சி எல்லாம் நடந்திருக்கு போல!

  பதிலளிநீக்கு
 5. அலசி அலசி பிழிஞ்சி....

  கடைசியில நம்மளைத் தானே
  காயப் போடுறாங்க!!!...

  பதிலளிநீக்கு
 6. கேட்டமாதிரி தான் இருக்கிறது.... நல்ல பாடல்....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. ஸ்ரீராம்ஜி நானும் இப்பாடல் கேட்டு இருக்கிறேன்.இன்றும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. வாங்க கீதாக்கா....ஆராய்ச்சி எல்லாம் இல்லை... பாதி விவரங்கள் முன்னாலேயே தெரியும். அதுசரி, மன்னி ஹிந்திப்பாடல் கண்டுபிடிச்சுட்டாங்களாமா?​

  பதிலளிநீக்கு
 9. //கடைசியில நம்மளைத் தானே
  காயப் போடுறாங்க!!!... ​//

  அதைச் சொல்லுங்க துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 10. பாடலைக் கேட்ட ஞாபகம் இருக்கிறது. அபூர்வமான பாடல்.

  பதிலளிநீக்கு
 11. //நினைவிலே மனைவி என்று ///
  ஹையோ இது யாரை?:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).. என் வாய்தேன் நேக்கு எடிரி:)..

  பாட்டு ரேடியோவில் போனபோது காதில் விழுந்து தவழ்ந்திருக்கிறது... வித்தியாசமான அருமையான பாடல்...

  இப்பாடலில் பாடுவது கிட்டவாகவும், மியூசிக் தூரவாகவும் கேக்குது... அதனால வரிகள் அப்படியே துலக்கமாக காதில் வந்து விழுகிறது. இபோதைய பாடல்களில் மியூசிக் .. வலிகளை... ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே.. :) வரிகளை மறைத்து விடுகிறது... எஸ்பிபி அங்கிள் குண்டாக இருந்தபோது பாடியபாட்டுப் போல:) அதனால குரலிலும் கொழுப்பு:).. வொயிஸ் தடிப்பாக இருக்கு:)

  பதிலளிநீக்கு
 12. அற்புதம், மனைவி அமைவதெல்லாம் என்ற பாடல் போல இருக்கிறதே
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 13. துளசி: அருமையான பாடல். நீங்கள் சொல்லியிருப்பது போல் இலங்கை வானிலி மூலம் தான் இப்படியான பாடல்கள் எல்லாம் கேட்டதுண்டு. ஆனால் அதன் பின் ஒலிபரப்பே நின்று போய்விட்டதே. தமிழ்ப்பாடல்கள் அப்போதைய பாடல்கள் எல்லாம் இப்போது எங்கள் பிளாக் மூலம் தான். இங்கு கேட்கும் வாய்ப்பில்லை. பகிர்விற்கு மிக்க நன்றி.

  கீதா: நல்ல பாடல் ஸ்ரீராம். கேட்டதுண்டு. இஒகூ உபயம். நல்ல பாடல் ...ஏதோ ஒரு பாடல் நினைவுக்கு வருது ஆனா என்ன பாடல்னு டக் நு வர மாட்டேங்குது. அப்புறம் இப்பதான் இன்னிக்குத்தான் கேக்கறேன். விவரங்கள் தெரியாது. இப்பதான் உங்க பதிவு மூலம்தான் தெரிந்தது.

  பதிலளிநீக்கு
 14. எழுதியவரும் இசை கொடுத்தவரும் வித்தியாசமாக செய்திருக்கிறார்கள்.
  SPB லோ-பிட்ச்சில் பாடுகிறார் நிறுத்தி நிதானமாக. பாடலில் வரிகள் புரிகின்றன எனில் இசை அமைப்பாளருக்குத்தான் க்ரெடிட். தூரத்திலேர்ந்து போட்டிருக்கார்ல..Ref: Athira.

  பதிலளிநீக்கு
 15. பாட்டு சூப்பர்ப் ! ஆனா எ spb குரல் ரொம்ப கடலுக்கடியில் இருந்து ஒலிக்கிறபோல் இருக்கு ..ஆனாலும் அமைதியான சூழலில் கேட்கலாம் இனிமையான பாடல்

  பதிலளிநீக்கு
 16. நன்றி மிடில்க்ளாஸ்மாதவி. உயரிய ரெக்கார்டிங் சாதனம் ஏதுமின்றி பாடல் பதியப் பட்டிருக்குமோ!

  பதிலளிநீக்கு
 17. அதிரா... 1983 ல நினைவிலே மனைவி என்று நினைத்தவர்தான் இப்போது என் பாஸ்! ஐயோ துரை செல்வராஜூ ஸார் சொன்னது நடக்கிறதே..... (அலசி அலசி பிழிஞ்சி.... கடைசியில நம்மளைத் தானே காயப் போடுறாங்க!!!...) மியூசிக் தூரமாக ; பாடுவது கிட்டக்க -- நல்ல அவதானிப்பு!

  பதிலளிநீக்கு
 18. வாங்க அசோகன் குப்புசாமி ஸார்... அது அப்படி கிடைக்கவில்லையே என்கிற ஏக்கத்தில் பாடுவது. இது எப்படி இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் பாடுவது!!

  பதிலளிநீக்கு
 19. வாங்க துளஸிஜி..

  //அப்போதைய பாடல்கள் எல்லாம் இப்போது எங்கள் பிளாக் மூலம் தான்//

  ஹா... ஹா... ஹா...நன்றி.

  வாங்க கீதா ரெங்கன்...

  நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க ஏகாந்தன் ஸார். எளிமையாகப் பதிவு செய்த முறையினால் அப்படி இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 21. ///ஏகாந்தன் Aekaanthan ! said...
  தூரத்திலேர்ந்து போட்டிருக்கார்ல..Ref: Athira.///

  ஹா ஹா ஹா:)..

  ////ஸ்ரீராம். said...
  அதிரா... 1983 ல நினைவிலே மனைவி என்று நினைத்தவர்தான் இப்போது என் பாஸ்! ///
  ஹா ஹா ஹா பதற்றப்படாதீங்கோ:) நான் இதை படு பயங்கரமாக நம்புறேன்:).

  ///ஐயோ துரை செல்வராஜூ ஸார் சொன்னது நடக்கிறதே..... (அலசி அலசி பிழிஞ்சி.... கடைசியில நம்மளைத் தானே காயப் போடுறாங்க!!!...)///
  ஹா ஹா ஹா அவருக்குக் கரி நாக்காக இருக்குமோ?:)..

  இன்று இப்பாடல் 3,4 தடவைகள் கேட்டு விட்டேன்.. வரிகளும்.. மியூசிக்கும்.. அதாவது தூரத்தில் கேட்கும் மியூசிக்:).. மிக அருமையாக இருக்கு..

  சிறிலங்கன் எலிபண்ட் பிராண்ட் நெக்டோ சோடா குடிச்ச பீலிங் வருது...

  பதிலளிநீக்கு
 22. ஏகாந்தன் அண்ணன் உங்கள் புளொக்குக்கு வர முடியல்லியே:(... என் செக்:) ஐப் பிடிச்சு லிங் எடுத்து ஒருமாதிரி வந்து பெரிய கொமெண்ட் எழுதிப்போட்டு பப்ளிஸ் ல கையை வச்சனா... உன் ஐடியைச் சொல்லு.. பெயரென்ன.. வலைத்தளமுகவரி என்ன.. இப்படி மிரட்டுது.. ஹையோ பிச்சை வாணாம் நாயைப் பிடிங்கோ என்பதைப்போல ஓடி வந்திட்டேன்ன்ன்.. ஏன் அப்படி????

  பதிலளிநீக்கு
 23. @ அதிரா:

  //உங்கள் புளொக்குக்கு வர முடியல்லியே..//

  மற்றவர்கள் புகுகிறார்களே எளிதாக.. உங்களை அப்பாவி என நம்பமாட்டேன்கிறதோ ஒரு வேளை!

  வர்ட்ப்ரெஸ் (Wordpress)ப்ளாக் அப்பிடியெல்லாம் கேட்பது வழக்கம்தான். இதில் அரண்டுபோக என்ன இருக்கிறது. புகழ்பெற்ற உங்கள் பெயரைச்சொல்ல, ப்ளாக் பெயர் எழுத என்ன பயம்! கூகிள் ஐடி இருந்தால் கூகிள் ப்ளஸ் என க்ளிக் செய்துகூட உள்ளே புகுரலாமே.. யு ஆர் வெல்கம்..!

  பதிலளிநீக்கு
 24. இதோ புறப்படுகிறேன் வெற்றி வாகை சூடித் திரும்புவேன்ன்:)

  ஏகாந்தன் அண்ணன் உங்களுக்காக ஒரு சேபிறைஸ்/பிறைஸ்:) காத்திருக்கிறது:).. அதுக்குக் கொஞ்சம் பொறுமை தேவை:).. ஹா ஹா ஹா:)

  பதிலளிநீக்கு
 25. @ அதிரா: என் பக்கத்தில் உங்கள் முதல் கமெண்ட்டுக்கு பதிலும் போட்டாகிவிட்டது!

  பதிலளிநீக்கு
 26. //ஏகாந்தன் Aekaanthan ! said...
  @ அதிரா: என் பக்கத்தில் உங்கள் முதல் கமெண்ட்டுக்கு பதிலும் போட்டாகிவிட்டது!//

  அவ்வ்வ்வ்வ்வ்வ் சந்தோசம் பொயிங்குதே.. சந்தோசம் பொயிங்குதே.... எனக்கு இப்பவே ஓடிப்போய் அஞ்சுவைத் தேம்ஸ்ல தள்ளி விடோணும்போல வருதேஏஏஏ:)).

  பதிலளிநீக்கு
 27. அதிரா, ஏற்கெனவே ஏகாந்தன் சாரை நான் அவரோட ஜி+இல் மற்றும் தில்லையகத்து கீதாவின் பதிவில் கேட்டிருந்தேன். பதிலே வரலை. இப்போவும் போய்ப் பார்த்தேன். ப்ளாக் இருக்குமிடமே தெரியலை! :)

  பதிலளிநீக்கு
 28. அபூர்வமான பாடலை அலசி போட்டு தேடிப் பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீராம் !

  பதிலளிநீக்கு
 29. @ கீதா சாம்பசிவம்:

  //..ஏற்கெனவே ஏகாந்தன் சாரை நான் அவரோட ஜி+இல் மற்றும் ...// இப்போவும் போய்ப் பார்த்தேன். ப்ளாக் இருக்குமிடமே தெரியலை! :)

  சாரி. ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே.

  சற்றுமுன் தான் ஜி+ போய் (உங்களின் இந்த கமெண்ட் பார்த்தபின்!), உங்கள் கமெண்ட் பார்த்து பதில் போட்டுவிட்டு இந்தப்பக்கம் வந்தேன்.

  வாழ்த்துக்கள்!- நீங்களும் என் வலைப்பக்கத்திற்குள் வெற்றிகரமாக பிரவேசித்துவிட்டீர்கள்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 30. //நினைவிலே மனைவி என்று ///அப்படி ஏதுமில்லையா இல்லை இருந்தும் மறுக்கிறீர்களா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!