வெள்ளி, 6 ஏப்ரல், 2018

வெள்ளி வீடியோ 180406 : ஊர் முழுதும் ஏசட்டுமே உனது வார்த்தை வேதமடா...



   குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.  



   குழந்தை பொய் சொல்லாது என்று சிவாஜியும் நம்புகிறார்.  படம் இமயம்.  1979 இல் வந்த படம்.   குழந்தை என்று சொன்னாலும் காட்சியில் வருவது ஒரு சிறுவன்.



   படத்தில் உள்ள கேரக்டர்கள் பெயர் எல்லாம் நதியின் பெயர்கள்.  'தன் தம்பி தங்கக்கம்பி' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லி,  நம்பும் தேங்காய் சீனிவாசனை அவர் தம்பி அயோக்கியன் என்று நிரூபிக்க  குழந்தை உதவியுடன் போராடுகிறார் சி.க. - கிளைமேக்ஸ் வரை.



   ஒரு காட்சியில் குடும்பத்தின் நிம்மதியைக் கெடுக்க வந்ததாக குழந்தையை ஸ்ரீவித்யா அடித்துவிட,  மனம் வாடும் குழந்தையை சிவாஜி டி எம் எஸ் குரலில் சமாதானப்படுத்துகிறார்!



   என் அப்பாவுக்கு மிகவும் [பிடித்த பாடல்.  "நானா நான தனக்கு தந்தன்" என்று வரும் வரிகளை மிகவும் ரசிப்பார்.  சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை கையில் மடக்கி அடையாளம் வைத்தபடி தொலைகாட்சி அருகில் வந்து விடுவார் - பாடலை ரசிக்க...



   கண்ணதாசன் பாடலுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.  குரல் டி எம் எஸ், எல் ஆர் அஞ்சலி.



கண்ணிலே குடியிருந்து 
கருணை தரும் தெய்வம் ஒன்று 
குழந்தையென்று 
கங்கை நதி பெருகி வந்து 
கவிதை தரும் வார்த்தை  
ஒன்று மழலையென்று 

நீலக்கடல் மாணிக்கங்கள் 
வைரமலைப் பவழமடா 
நெஞ்சைத் தொடும் காற்று வந்து 
எடுத்துக் கொடுத்த தங்கத்தட்டு 
பேசவரும் பச்சைக்கிளி 
பிரித்து வைத்தால் பாவமடா 
பிள்ளை உன்னைக் குற்றம் சொன்னால் 
பிறப்பு முழுதும் துன்பம் கண்ணா..

சத்தியத்தின் கோபுரத்தில் 
தவழுவதே குழந்தையடா 
தத்தித் தத்தி ஓடும் பிள்ளை 
மறைத்துக் கெடுப்பதில்லையடா 
ஊர் முழுதும் ஏசட்டுமே 
உனது வார்த்தை வேதமடா 
உண்மை நம்பும் உள்ளம் இங்கே 
உனக்கும் எனக்கும் சொந்தம் கண்ணா 



60 கருத்துகள்:

  1. பாடல் கேட்க ஓடோடி வந்தேன்!!! இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரைசெல்வராஜு அண்ணா, இனிய மாலை வணக்கம் வல்லிம்மா!!! (வல்லிம்மாவும் வெயிட்டிங்க் என்று தெரியும் அதான்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. அருமை..
    காலைப் பொழுதில் அழகிய பாடல்...
    மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  6. குழந்தை என்று சொன்னாலும் காட்சியில் வருவது ஒரு சிறுவன்.//

    ஸ்ரீராம் என் பிள்ளைய இப்பக் கூட "கோந்தே" நு அடிக்கடிச் சொல்லுவது உண்டே ஹிஹிஹி(குழந்தே!! என்பதுந்தான்..நீங்களும் கௌ அண்ணாவும் இதை பசை நு சொல்லிக் கேள்வி கேட்கப்படாது சொல்லிப்புட்டேன் ஹா ஹாஅ ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அருமையான பாடல் ஸ்ரீராம்!! என்ன ஒரு மெட்டு! நிறைய கேட்டதுண்டு...வரிகளைப் பார்த்ததும் டக்கென்று தெரியவில்லை மெட்டு. கேட்டதும் தான் தெரிந்தது....இனி மெட்டுடன் வரிகளையும் நினைவு வைச்சுக்கணும்னு நினைப்பேன் ஆனால் மெட்டுதான் முதலில் வருகிறது மனதில்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நன்றி கீதா.. நாமே தவிர்த்தாலும் நிறைய பாடல்கள் அவ்வப்போது நம் காதில் விழும். அப்புறம் மறந்து விட்டாலும், இது போல கேட்கும் சமயங்களில் மனதின் ஞாபக இடுக்குகளிலிருந்து மனதின் நினைவலைகள் அவற்றை மீட்டு எடுத்துக் கொண்டு வந்து மேலே போட்டுவிடும்!

    பதிலளிநீக்கு
  9. இமயம் படத்தில் அனைத்துப் பாடல்களும் தேன் துளிகள்...

    அதிலும்,

    கங்கை யமுனை
    இங்கு தான் சங்கமம்....

    என்ற பாடலுக்கு மயங்காதோர் யாரும் இருக்க முடியாது...

    இந்தப் படத்தில் திரு. TMS அவர்களுக்கு
    இந்த ஒரு பாடல் மட்டும் தான் என்று நினைவு...

    இந்த காலகட்டத்தில் இருந்து தான்
    மெல்லிசைக் கூட்டணிக்கு சுணக்கம் ஏற்பட்டது....

    பதிலளிநீக்கு
  10. இந்த மாதிரியே
    ரத்த பாசம் என்றொரு படம்....

    மான்குட்டி இப்போது என் கையிலே..
    மான் மட்டும் இல்லாமலே.... நல்ல
    தேன்சிட்டு இப்போது என் வீட்டிலே
    தெய்வங்கள் தாலாட்டவே!...

    இனிமையான பாடல்...

    வெளிநாட்டில் இயக்கப்பட்ட
    இந்தப்படத்தை இயக்குநர் விஜயன் பாதியில் விட்டுவிட்டுப் போகவே -
    தொடர்ந்து சிவாஜி அவர்களே இயக்கியதாக செய்தி...

    அதற்குக் காரணம் -
    தூரத்து இடி முழக்கம்..

    பதிலளிநீக்கு
  11. இரசனையான பாடல் முன்பு அடிக்கடி கேட்பேன் இன்றும் கேட்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  12. அழகான பாடல் இனிய பாடல். கருத்தான பாடல் காலைப் பொழுதில் கேட்க. அதிசயமாக மொபைலில் கேட்கவும் முடிந்தது. எங்கள் ஊரில், மலைபிரதேசம் என்பதால் நெட் சில சமயம் விட்டுவிட்டுத்தான் வரும். அப்படியும் இன்று கேட்க முடிந்தது. பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்படம் வெளியான போது நான் மதுரையில் இருந்தேன். பி ஏ படித்துக் கொண்டிருந்தேன். நல்ல நினைவுகளையும் மீட்டியது பதிவு. மிக்க நன்றி ஸ்ரீராம் ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. ஓ! பாஹே அப்பாவுக்குப் பிடித்த பாடலா..அட!! சூப்பர்...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. பாடல் இனிமை. முன்பு வானொலியில் அடிக்கடி கேட்கும் பாடல்.
    காட்சிகள் நேபாளம் , அன்னபூரணா மலைத்தொடர் எல்லாம் வருகிறது.
    காட்சியும் கானமும் அருமை.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. பாடல் வரிகள் "தானனாதனக்கு தன்னா" என்ற தாள கதியை ஞாபகத்தில் கொண்டுவந்தது.

    துளசிதரன் அவர்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. முதலில் கீதா ரங்கன் எப்போதும்போல் உலகம் சுற்றி (தமிழ்நாட்லதான் அங்க இங்க போவாங்க. ஊர் சுற்றி என்றால் தவறான பொருள் தரும்) வேறு இடத்திலிருந்து பின்னூட்டமிட்டிருக்காங்கன்னு நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    அருமையான பாடல்.. இசையும் பாடல் வரிகளும் நன்றாக இருக்கிறது. முன்பு அடிக்கடி கேட்டிருக்கிறேன். படம் பார்த்தாக நினைவில்லை.. ஒருவேளை பொதிகையில் பார்த்த நினைவும் வருகிறது. இப்போதும் பாடலை கேட்டு ரசித்தேன். மீண்டும் கேட்க வைத்ததற்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. இந்த பாட்டை இன்னிக்குதான் கேக்குறேன். பார்க்குறேன்

    பதிலளிநீக்கு
  18. என் அப்பாவுக்கு மிகவும் [பிடித்த பாடல்.
    அப்பாவின் வாசிப்பும், ரசிக்கும் பாடலும் இணைந்தே வருகிறது.

    பதிலளிநீக்கு
  19. ஸ்ரீராம் யுட்யூப் லிங்க்ல ஷேர் பண்ணவங்க ஆங்கிலத்தில் கொடுத்திருப்பதைப் பார்த்தீங்களா பாடல் ஆரம்ப வரி கண்ணிலே கடியிருந்து...
    ஒரு பக்கம் வேதனை ஒரு பக்கம் சிரிப்பும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  20. காதில் கேட்டு மறந்திருந்த பாட்டை நினைவுபடுத்திட்டீங்க.. இப்போ பலகாலமாய் இப்பாட்டு எந்த ரேடியோவிலும் தவழவில்லையே..

    அருமையான பாட்டு, அழகான வரிகள்... அழகா சிவாஜி அங்கிள் பாடுறார்.... இன்று முழுவதும் தனனன தனக்கு தந்தன்..... தான்:) காதில் ஒலிக்கப் போகுது...

    பதிலளிநீக்கு
  21. அருமையான பாடல் இப்போது இந்த மாதிரி பாடலைக் கேட்க முடிவதில்லை குறையைப் போக்கியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  22. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  23. வாங்க துரை செல்வராஜூ ஸார்.. ஆமாம்... அந்தப் படத்தில் கங்கை யமுனை பாடலும் நன்றாயிருக்கும். கே ஜெ யேசுதாஸ் குரலில். எஸ் பி பி குரலில் 'இமயம் கண்டேன்..' பாடலும் நன்றாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  24. துரை செல்வராஜூ ஸார்! நீங்கள் சொல்லி இருப்பது போல ரத்த பாசத்தில் அந்தப் பாடலும் மிகவும் நன்றாயிருக்கும். ரிஷிமூலம் படத்தில் "ஐம்பதிலும் ஆசை வரும்" பாடல் போல! அதே படத்தில் இன்னும் இரண்டு பாடல்களும் எனக்குப் பிடிக்கும். எஸ் பி பி குரலில் "பூ மணக்கும் பூங்குழலி.." பாடல், மற்றும் பி. சுசீலா -டி எம் எஸ் குரலில் "என் உள்ளம் என்கின்ற வானத்திலே"

    பதிலளிநீக்கு
  25. நன்றி துளஸிஜி. நீங்கள் கட்டாயம் ரசிப்பீர்கள் என்று தெரியும்.

    பதிலளிநீக்கு
  26. ஆமாம் கீதா.. அப்பாவுக்குப் பிடித்த்த்த்த்த்....................த பாடல்!

    பதிலளிநீக்கு
  27. வாங்க கீதா... இதைவிட நகைச்சுவையான மொழிபெயர்ப்பெல்லாம் உண்டு!!!

    பதிலளிநீக்கு
  28. வாங்க அதிரா... நன்றி. இப்போது சிலோன் ரேடியோ வருகிறதோ? இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் கேட்டு பல வருடங்கள் ஆகின்றன.

    பதிலளிநீக்கு
  29. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  30. நல்ல இனிமையான பாடல்

    //குழந்தை பொய் சொல்லாது //
    ஆமாவே ஆமா .. கீதா நான் லாம் பொய் சொல்லவே மாட்டோமே .:)

    // காட்சியில் வருவது ஒரு சிறுவன்.//

    சிறுமி சிறுவனின் உடையில் :) அச்சிறுமி மாலாஸ்ரீ ங்கிற ஆக்ட்ரஸாம் .wiki அங்கிள் சொல்ரார்

    பதிலளிநீக்கு
  31. @ஸ்ரீராம் :)

    //
    ஸ்ரீராம். said...
    வாங்க அதிரா... நன்றி. இப்போது சிலோன் ரேடியோ வருகிறதோ//



    வருதே இப்போ ஸ்காட்லாண்ட் லருந்து //பூ ஷ் // ரேடியோ னு பேர் மாத்தி :))))

    பதிலளிநீக்கு
  32. இரண்டு மூன்று முறை கேட்டுப்பார்த்தும் பாட்டின் பொருளையோ என்ன சொல்ல வருகிறார் என்பதையோபுரிந்து கொள்ள முடிவதில்லை என்றுசொன்னால் ரசிக்கத்தெரியாதவனென்னும் [பெயர் கிடைக்கலாம்

    பதிலளிநீக்கு
  33. பார்த்தேன். கேட்டேன். கவரப்படவில்லை.

    பதிலளிநீக்கு
  34. ///
    வருதே இப்போ ஸ்காட்லாண்ட் லருந்து //பூ ஷ் // ரேடியோ னு பேர் மாத்தி :))))////
    Haa haa haaa grrrrrrrrrrrrrrrrrrrrr:) ��‍♀️

    பதிலளிநீக்கு
  35. ////// ஏகாந்தன் Aekaanthan !April 6, 2018 at 4:25 PM
    பார்த்தேன். கேட்டேன். கவரப்படவில்லை///

    ஹா ஹா ஹா அவசரத்தில கலவரப்படவில்லை எனப் படிச்சிட்டேன்ன்ன்ன்ன் .... :).
    ஏன் கவர்ரதற்கு அது என்ன காந்தமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    பதிலளிநீக்கு
  36. சினைமா உலகில் நாம் நம்பும்படியான கதைகள் பிரசித்தம்.

    சேலத்திலிருந்து ஆத்தூருக்குப் போகும் வழியில் சாலை திருப்பு முனையில் அந்த டீக்கடை இருந்தது.
    அந்த டீக்கடை மசால் வடை அந்த வட்டாரத்திலேயே பிர்சித்தம். கவிஞர் தம் பயணத்தில் அந்தப் பகுதியைக் கடக்க நேர்ந்தால் கடை வருவதற்கு கால்மணி நேரத்திற்கு முன்னாலேயே டிரைவருக்கு நினைவுபடுத்தி விடுவார். அன்றும் அதான் நடந்தது. சுடச்சுட இருந்த வடை பிரமாதமாக இருந்தது.
    வழக்கமாக இரண்டு தான் சாப்பிடுவார். அன்றைக்கு நான்கு. சாப்பிட்டு விட்டு வடை மடித்துக் கொடுத்த காகிதத்தைத் தூக்கி எறிய நினைத்த பொழுது தான் காகிதத்தில் எழுதியிருந்த வரிகள்
    கவிஞரின் கண்ணில் பட்டது. எண்ணைய் இறங்கி இங்க் எழுத்துக்கள் கலைந்திருந்தாலும் கவிஞர் அந்த வரிகளை சுலபமாகப் படித்து விட்டார். 'கண்ணிலே குடியிருந்த தெய்வம் குழந்தையாய் கங்கை நதியாய் தவழ்ந்து வந்த நேரம்..' என்ற வரிகள் அவரை ரொம்பவும் அசக்கி விட்டது. வழிபூராவும் அந்த வரியையே முணுமுனூத்தபடி கார் ஸீட்டில் தாளம் போட்டுக் கொண்டு வந்தவர், ஆத்தூர் வந்து சேருவதற்கு முன்பே அந்த வரிகளின் பாதிப்பில் தம் மனத்தில் உதித்த கவிதையை காரிலேயே எழுதி முடித்து விட்டார்.

    அந்தக் கவிதை தான் இந்தக் கவிதை.

    பதிலளிநீக்கு
  37. மேலதிகத் தகவலையும் எடுத்துத் தந்தமைக்கு நன்றி ஏஞ்சல்.

    //வருதே இப்போ ஸ்காட்லாண்ட் லருந்து //பூ ஷ் // ரேடியோ னு பேர் மாத்தி :))))//

    ஹா... ஹா.... ஹா... ஜோக் இருக்கட்டும். நிஜமாகவே தமிழ்ச் சேவை இரண்டு இப்பவும் வருகிறதோ?

    பதிலளிநீக்கு
  38. வாங்க ஜி எம் பி ஸார். அது அவரவர் விருப்பங்களைப் பொறுத்தது. இதில் என்ன இருக்கிறது?

    பதிலளிநீக்கு
  39. வாங்க ஜீவி ஸார்... கதை நல்லா இருக்கு!

    பதிலளிநீக்கு
  40. @ ஸ்ரீராம் //இலங்கை வானொலி ஸ்கூல் டேஸில் எப்பவாது கேட்டதோடு சரி அப்புற்ம் காலங்கள் ,மாறியது காட்சிகள் காட்சிகளும் மாறியது எல்லாம் தூர தரிசனமாகியது .அனேகமா இலங்கை தமிழ் ஒலிபரப்பு பற்றி பாடல் பிரியர் தனிமரம் நேசனுக்கு தெரிஞ்சிருக்கலாம் ..
    ஆனா சில வருஷமுன் ஒரு ஸ்ரீலங்கன் தொலைக்காட்சி நிகழ்வில் பெண் ஒருவர் பாட்டு ப்ரோக்ராம் நடத்தினார் அதை பார்த்தபோது முந்தி ரேடியோவில் கேட்ட அந்த இனிமை இல்லவேயில்லை சம்திங் மிஸ்ஸிங்

    பதிலளிநீக்கு
  41. @@@@@ miyaaw athiraa
    @ஸ்ரீராம்

    ///குழந்தை பொய் சொல்லாது //
    ஆமாவே ஆமா .. கீதா நான் லாம் பொய் சொல்லவே மாட்டோமே .:)//

    //ஸ்ரீராம். said...
    மேலதிகத் தகவலையும் எடுத்துத் தந்தமைக்கு நன்றி ஏஞ்சல்.//


    ஹாங் தாங்க்ஸ் :))
    அதிராவ் நான் சொன்னேன்ல :) ஸ்ரீராம் எப்பவும் உண்மை சொன்னா ஏற்றுக்கொள்வார் :)))))))

    பதிலளிநீக்கு
  42. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது ஸ்ரீராம் இப்போ மயக்கத்தில் இருக்கிறார்:) உங்கட அப்புறிக்கன் கொசூஸ் கடிச்ச மயக்கம்:)....

    பதிலளிநீக்கு
  43. மாலை வணக்கம் ஸ்ரீராம்.

    இந்தப் பாடல் இதற்கு முன்னர் கேட்ட நினைவில்லை! நடுவில் வரும் தனக்கு தன் தன்... நன்றாக இருக்கிறது! வழக்கம் போல பாட்டு மற்றும் கேட்டேன் - காட்சி பார்க்காமல்! :)

    பதிலளிநீக்கு
  44. ம்ம்ம்ம் புதுசு புதுசாக் கண்டு பிடிக்கிறாங்கப்பா! எங்கே இருந்து?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!