சனி, 21 ஏப்ரல், 2018

முசாஃபர் அஹமது கான்.





1)  'எனக்கு அரசு வேலை கோட்டு என்று கேட்கவில்லை.  யாரிடமாவது கைகட்டி வேலை செய்ய நேர்காணல்களுக்குச் செல்லவில்லை.  படிப்படியாக முன்னேற்றம். முன்னேறத்துடிக்கும் ஆர்வம்.   பாராட்டு விழாவில் இவர் பேசும்போது   "மதுரை வாசியா?" என்று அமைச்சரிடம் இவரைப்பற்றிக் கேட்ட பிரதமர்.  வாழ்த்துகள் சண்முகப்ரியன்.





2)  அன்னசத்திரம் ஆயிரம் கட்டவில்லை.  ஆங்'கோர்' ஏழைக்கு அல்ல, பல ஏழைகளுக்கு பாடம் பயிற்றுவிக்கும் மகேஸ்வரி.  கோடிகோடியாக பணம் போட்டு கல்லூரிகள் கட்டி கோடிகோடியாகப் பணம் பார்க்கும் கல்வித்தந்தைகளும் செய்யாத சேவை.







3)  நாடு இருக்கும் இருப்பில் இருக்கும் வசதிகளை வைத்து நம் வேலைகளை முடித்துக் கொள்வதே அறிவுடைமைத்தனம்.  நாம் அன்றாடம் பயன்படுத்தி, வீணாகும் தண்ணீரை அல்லது கழிவு நீரை வடிகட்டி,  விவசாயத்துக்குப் பயன் படுத்தி நல்ல விளைச்சல் கண்டிருக்கும் அரியலூர் விவசாயி செல்வம்.  இவர் ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்தையும் தவிர்த்தவர்.





4)  ஏ டி எம் மில் பணம் எடுக்கச் சென்றபோது கேட்பாரற்றுக் கிடந்த ரூபாய் ஐம்பதாயிரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த அரசு ஊழியர் துரைராஜ்.





5)  ஒன்பது வயதில் இது பெரிய சாதனை.  ஜம்மு - காஷ்மீரில் குரேஸ் பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாவது படிக்கும் முஸாபர் அஹமது கான்.






6)  குணமாகியும், வீட்டுக்கு அழைத்து செல்லப்படாதவர்களும் உள்ளனர்.  அவர்களுக்காக, 'ஹோம் எகெய்ன்' திட்டத்தில், நாங்களே வீடுகளை அமைத்து, நாலைந்து பேர் மற்றும், 'கேர் டேக்கர்' ஒருவர் என, தங்க வைத்து, மறுவாழ்வுக்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறோம்.

அவர்களுக்கு ஊதியமும் உண்டு.  மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாத்து வருபவரும், அமெரிக்கா நாட்டின், பென்சில்வேனியா மாகாணத்தில் வழங்கப்படும் சர்வதேச அளவிலான, 'பென் நர்சிங் ரென்பீல்டு பவுண்டேஷ'னின் விருதைப் பெற்றவர்களில் இளையவரும், முதல் இந்தியருமான, 'பான்யன்' நிறுவனர், வந்தனா கோபிகுமார்.




7)  'அருகில் வந்தால், கொன்றுவிடுவேன்' என, அந்த திருடன், சிறுவனை மிரட்டி உள்ளான். அதற்கெல்லாம் அசராத அந்த சிறுவன், அசுர வேகத்தில், திருடனை பிடிக்க முயன்றுள்ளான்.சிறுவன் பாய்ந்து வருவதை அறிந்த திருடன், அவனை ஏமாற்ற, செயினை அறுத்து, பாதியை கீழே போட்டு, ஓட்டம் பிடித்துள்ளான். செயினை கீழே குனிந்து எடுத்தால், திருடனை பிடிக்க முடியாது என கருதிய சிறுவன், காலால் துாக்கி வீசி, பந்தை பிடிப்பது போல், செய்னை, 'கேச்' பிடித்து, திருடனை துரத்தி உள்ளான்.திருடனை நெருங்கிய அந்த சிறுவன், சட்டையை பிடித்து இழுத்து, அவனது காலுக்கு அடியில், தன் காலை நீட்டி, திருடனை கீழே தள்ளினான்......சூர்யா - இப்போதைய ஹீரோ.


28 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  2. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்... எனினும் நாடு இருக்கும் நிலையில் சூர்யாவின் வீரம் அனைவரிடமும் விளைய வேண்டும்....

    பதிலளிநீக்கு
  3. என்ன... தூக்கம் கலைய வில்லையா இன்னும்!....

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... தூக்கம் எல்லாம் இல்லை. மூன்றே முக்கால் அல்லது நான்கு மணிக்கு எழுந்து விடுவேன்! ஐந்தரை மணியிலிருந்து இங்குதான் இருக்கிறேன். கணினி படுத்தும்பாடு சொல்ல முடியவில்லை போங்கள்... போட்டுக் கொஞ்ச நேரத்திலேயே அணைந்து விடுகிறது - மறுபடி, மறுபடி...

    பதிலளிநீக்கு
  5. வாங்க வல்லிம்மா.... மெதுவா வாங்க...

    பதிலளிநீக்கு
  6. அன்பு சூர்யாவின் வீரம் பிரமிக்க வைக்கிறது.
    ஒன்பது வயது முசாஃபர் அலி கான். எவ்வளவு பெரிய சாதனை.
    ஷண்முகப்ரியன், அரியலூர் விவசாயி

    முதியோரைக் காக்கும் நல்லவர்கள் என்று அத்தனை நபர்களும் தெய்வமாகப்
    போற்றப்பட வேண்டியவர்கள்.
    அனைவரும் வாழ்க வளமுடன். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் பானு அக்கா.. நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம்....

    அனைத்து செய்திகளும் சிறப்பு. நல்ல மனம் கொண்டவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

    பதிலளிநீக்கு
  9. நிஜ ஹீரோ சூர்யாவை தவிர வேறு யாரும் மனசுல நிக்கல. அனைவருக்கும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  10. பதினெட்டாம் தேதியிலிருந்து எங்கள் ப்ளாக் உள்ளேயே வர முடியவில்லை. எதுவும் தோன்றவில்லை. ஸ்ரீராம் முகநூலுக்குப்போய், ஏதோ லிங்கைப்பிடித்து உள்ளே வந்து படித்த பிறகு ஒரு சாதனை. பதிவில் வந்த யாவரும் சாதனையாளர்கள்தான். நல்ல உள்ளங்களும் சாதனைதான். அன்புடன்

    பதிலளிநீக்கு
  11. சில செதிகள் மனதில் நிற்கின்றன சில புகழைத் தேடுவது போல் இருக்கிறதுசில தேவையற்றவை என்று தோன்றுகின்றது மொத்தத்தில் சமூகத்துக்கு நலன்விளைந்தால்சரி

    பதிலளிநீக்கு
  12. காஷ்மீர் சிறுவனின் கண்டுபிடிப்பைப்பற்றி தினமலரில் பின்னூட்டமாக போட்ஸ்வானா தமிழர் செல்வராஜ் பிரபு என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தீர்களா?

    பதிலளிநீக்கு
  13. உண்மையில் எங்கள் ப்ளாகிற்குள் நுழைவதே சாதனை! :)))) காமாட்சி அம்மா சொல்வது சரியே!

    முத்ரா திட்டம் அருமையான திட்டம். பல பயனாளிகள் குறித்தும் கேள்விப் பட முடிகிறது. "பான்யன்" ஆரம்பித்த போதில் இருந்தே ஓரளவுக்குப் பரிச்சயம். காஷ்மீர் சிறுவன் பாராட்டுக்கு உரியவன். மற்றவர்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. சில படித்தவை. இருந்தாலும் ஒட்டுமொத்தமாக தொகுத்துத் தரும் விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    அறிமுகபடுத்திய அனைவரும் பாராட்டுவதற்கும், போற்றதலுக்கும் உரியவர்கள். சிறுவன் சூர்யாவின் துணிச்சல் மிகவும் வியக்கதக்கது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைவரின் நற்செயல்கள் பற்றி பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. அனைவரும் பாராட்ட தக்கவர்கள்

    பதிலளிநீக்கு
  17. மஹேஸ்வரிக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்.
    பணத்தைத் திருப்பி கொண்டுவந்த கொடுத்த உத்தமர் வாழ்க வளமுடன்.

    வந்தனா கோபிகுமாருக்கு வந்தனங்கள்.

    பதிலளிநீக்கு
  18. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சம பங்கு எடுத்து அரைத்து, அதில் கொஞ்சம் வேப்பெண்ணெய் விட்டு, பசு மாட்டு கோமியம் கலந்து, தண்ணீர் சேர்த்து வயலில் தெளித்தேன்.கெடுதல் செய்யும் பூச்சிகள் எதுவுமே என் வயலில் இல்லை//
    இது நல்ல பூச்சி கொல்லியாக இருக்கே!
    பாராட்ட வேண்டும்.
    அனைவருக்கும் பாராட்டுகள்.
    காமாட்சி அம்மா சொல்வது போல் சில நேரம் முக நூல் வழியாகதான் வருவேன் உங்கள் தளத்திற்கு.

    பதிலளிநீக்கு
  19. போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  20. சண்முகப்பிரியன் “அட” போட வைக்கிறார். அவர் மேலும் வளர்ந்திடவும் கனவு நனவாகிடவும் வாழ்த்துகள்.
    இரவின் வெளிச்சம் மிக மிக அருமையான முயற்சி அதுவும் அதிகம் படிக்காதவர் ஆயினும் அவர்களது ஐடியா மிகவும் வரவேற்கப்பட வேண்டியய் ஒன்று. இன்னும் வெளிச்சம் பரவிடட்டும். அவர்களின் கனவு நனவாகட்டும்…
    அரியலூர் விவசாயியின் தண்ணீர்ச்சிக்கனம் மற்றும் இயற்கை விவசாயம் அருமை எல்லோருமே க்டைபிடிக்கலாம். வாழ்த்துகள் அவருக்கு
    கீதா: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சம பங்கு எடுத்து அரைத்து, அதில் கொஞ்சம் வேப்பெண்ணெய் விட்டு, பசு மாட்டு கோமியம் கலந்து, தண்ணீர் சேர்த்து வயலில் தெளித்தேன்.கெடுதல் செய்யும் பூச்சிகள் எதுவுமே என் வயலில் இல்லை// அட இது சூப்பரா இருக்கே. என் சிறிய தோட்டத்திற்கு மிகவும் தேவை ஆனால் பசுமாட்டுகோமியத்துக்கு எங்கு போவேன் என யோசிக்கிறேன்…அருகில் ஒரு மாடு வைத்திருப்பவர் இருக்கிறார்…கேட்டுப் பார்க்கணும்.. அது சரி அந்தப் பசுமாடு இயற்கை உணவை உண்டு இருக்கணுமே. நான் அறிந்து பசுமாடுகள் வெளியில் தான் அவிழ்த்துப் விடப்படுகின்றன அவை போஸ்டர் எல்லாம் சாப்பிடுகின்றனவே!!!

    பதிலளிநீக்கு
  21. அரசு ஊழியர் துரைராஜ்ஜுக்கு வாழ்த்துகள்.
    (கீதா: ஸ்ரீராம் எங்கள் பகுதியை ஒட்டியிருக்கும் அடையார் இந்திராநகரில் இந்தியன் ஓவர்சீஸ் பேங்கில் பட்ட பகலில் (இத்தனைக்கும் பேங்க் நல்ல செண்டரில் பகுதியில் இருக்கிறது…. துப்பாக்கி முனையில் ஒரு பீஹார் பையன் கொள்ளை அடிக்க முயன்றிட, மக்கள் அனைவரும் பிடித்துக் கொடுத்துவிட்டனர். போலீஸ் வரும் முன். பாராட்டு எல்லாம் நடந்தது போலும்)
    முசஃபருக்கு வாழ்த்துகள்! மிக அருமையான கண்டுபிடிப்பு.
    (கீதா: எனக்கு ரொம்பவே தேவையான கண்டுபிடிப்போ ஸ்ரீராம் என்ன சொல்றீங்க?!! ஹிஹிஹிஹிஹி ஜோக்கை விடுங்கள்…..எனக்கென்னவோ இதை நம்பமுடியவில்லை ஸ்ரீராம். ஏனென்றால் சுனாமி வந்த போழுது சன் டிவியில் ஒரு சிறுவன் சுனாமி எச்சரிக்கைக் கருவியைக் கண்டுபிடித்திருப்பதாக ஓடிக் கொண்டே இருந்தது….சுனாமி எச்சரிக்கைக் கருவிதான் ஏற்கனவே இருக்கிறதே பசிஃபிக் கடலில் கூடப் பொருத்தி இருக்கிறார்களே இதென்ன கூத்து என்று….தோன்றியது…இந்தப் பையனை ரொம்பவே கொண்டாடினார்கள்…இப்படி நம்மூரில் பொய்யாகத் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஊடகங்கள் மலிந்து கிடக்கின்றன. ஆனால் அதே சமயம் உண்மையான அறிவு ஜீவிகளை நம் ஊர் கண்டு கொள்ளாமல் போவதால் அவர்கள் இருப்பதென்னவோ அயல்நாட்டில்….ஹும்)

    பதிலளிநீக்கு
  22. வந்தனா கோபிகுமார் செய்திருப்பது மிக மிக அருமை வாழ்த்துகள்
    (கீதா: ஆமாம் மிக மிகத் தேவையான ஒன்று. இங்கு அடையார் கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்டில் நலம் பெறும் குறிப்பாகப் பெண்களை அழைத்துப் போக யாரும் வருவதில்லை. அது போல கணவனோ மனைவியோ அல்லது முதியோரோ, ஏன் குழந்தைகளைக் கூட…வசதியற்றோர் விட்டுச்க் சென்றுவிட்டுமீண்டும் வந்து அழைத்துச் செல்வதில்லை என்று அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கப் பல முயற்சிகள் மேற்கொண்டு செய்துவந்த அப்பெண்மணி வாடகைக்கு அல்லாமல் சொந்தமான இடம் அமைக்க வேண்டும் என்றும் மிகவும் முயற்சி செய்து கொண்டிருந்தார். அது ஒரு குழுவாகவே செயல்பட்டது. அதற்காகப் பல திரைப்பட நடிகர் நடிகைகள் ஷோ எல்லாம் நடத்தி நிதி திரட்டியும் கொடுத்தனர். த்ரிஷா, விஜய் என அம்மையத்திற்கு வந்து நன் கொடை வழங்குவதும் உண்டு என்று அவர் சொல்லியிருக்கிரார். இது நான் சொல்லுவது 10 வருடங்களுக்கு முன் அதன் பின் தெரியவில்லை…)
    அட! நிஜ உலகின் ஹீரோ சூர்யா பையனுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  23. ஹோம் எகெய்ன் பானியனின் (Banyan) சிறப்பான திட்டம். சூர்யா வீரமான சிறுவன். பதிவில் குறிப்பிட்ட அனைவருடைய செயல்களும் பாரட்டத் தக்கன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!