திங்கள், 30 ஏப்ரல், 2018

"திங்க"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி


சுண்டு (chundu) என்னும்  
மாங்காய் இனிப்பு ஊறுகாய் 

தேவையான பொருட்கள்:

புளிப்பில்லாத மாங்காய் - 2



வெல்லம்  கட்டி வெல்லமாக இருந்தால் 1/4 கட்டி

காரப்பொடி  -  4 டீ ஸ்பூன்

உப்பு  - 3 டீ ஸ்பூன்




செய்முறை:

மாங்காயை கழுவிய பிறகு தோலை சீவி விட்டு துருவிக் கொள்ளவும்.



வெல்லத்தை பொடி செய்து ஒரு வாணலியில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வெல்லம் கரையும் வரை அடி பிடிக்காமல் கிளறவும். வெல்லம் கரைந்ததும் துருவிய மாங்காயை சேர்த்து, அதோடு உப்பு, காரப்பொடியும் சேர்த்து கிளறவும். அந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் அழகாக திரண்டு வரும் பொழுது அடுப்பை நிறுத்தி விடலாம்.



கொஞ்சம் தளர்வாக இருந்தாலும் பரவாயில்லை. அதிகம் இறுகி விடக்கூடாது. 

வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை, பனை வெல்லம் போன்றவையும் சேர்க்கலாம். 

நான் எங்கள் வீட்டிற்கு ஏற்றார்போல வெல்லமும், காரமும் சேர்த்-திருக்கிறேன். இதை உங்கள் தேவைககேற்ப அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யலாம்.



தோசை, சப்பாத்தி, பூரி மட்டுமல்லாமல் ப்ரெட் மற்றும் புளிக்காத தயிர் சாதத்திற்கும்  ஏற்ற சைட் டிஷ்.



புளிக்காத மாங்காயில் செய்தால்தான் நன்றாக இருக்கும். லேசாக பழுத்த மாங்காயில் செய்தாலும் நன்றாக இருக்கும். 

48 கருத்துகள்:

  1. இனிய காலைவணக்கம் ஸ்ரீராம், துரைசெல்வராஜு அண்ணா, எல்லோருக்கும்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. இன்றும் நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊ....துரை அண்ணா இந்தியாவில்இருப்பதால் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. சுண்டா என்று இல்லையோ இது சொல்லப்படும்?!!! இல்லையோ? வெங்கட்ஜி பதிவில் இது பற்றி வரும்....

    அக்கா சூப்பர்....இது ரொம்பப் பிடிக்கும்....எங்கள் வீட்டில்...ஆமாம் சப்பாத்தி எல்லாத்துக்கும் நல்ல காம்பினேஷன்...அப்பால வந்து உங்கள் செய்முறை பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா. என் குழந்தைகளை பேபிசிட்டிங் செய்த குஜராத்தி ஆண்டி சுண்டு என்பார்.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். உங்கள் நெட் ரொம்பவே ஸ்பீ.....டாகக் கொடுக்கிறார்கள் போலவே...!!! ஹா... ஹா.... ஹா...

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

    பதிலளிநீக்கு
  7. காலையில 5.50 மணிக்கே தவம்..

    ஆனால் ஆறு மணி ஆனதும்
    நாடி ஜோதிட ஓலை மாதிரி நமக்குத் தேவையானது கிடைக்காது...

    இவன் யாரு?..
    இவன் எதுக்கு இங்கே வர்றான்!... -

    இப்படி பல யோசனைக்கு அப்புறம்
    கதவு திறந்தால் -

    காஃபி ஆத்திக் குடிச்சுட்டு
    சட்னி அரைக்க தயாரா இருக்காங்க!...

    மாங்காய் இனிப்பு பச்சடி - தெரியும்..

    சுண்டு புதுசு...
    செஞ்சுடுவோம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை சார். சுண்டு செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். நன்றி!

      நீக்கு
  8. வாயூறும் ஊறுகாய். ஓ.சுண்டா.
    சப்பாத்திக்கு நன்றாகவே இருக்கும்.
    மாமியார் சொல்லிக் கொடுத்து
    செய்ய ஆரம்பித்தேன். மிக நன்றி மா.
    இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் உங்கள் மாமியாரிடம் கற்றுக் கொண்டீர்கள். நான் என் மருமகளுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறேன்.அவளுக்கு இந்த ஊறுகாய் மிகவும் பிடித்திருப்மதால் தீர்ந்து விட்டால் உடனே மாங்காயை வாங்கி வந்து விடுகிறாள். ஹாஹா! நன்றி வல்லிம்மா!

      நீக்கு
  9. ஊறுகாய் கீழக்கரையில் செய்யும் லொதலு போலவே இருக்கிறது ஸூப்பர்

    பதிலளிநீக்கு
  10. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். உங்கள் நெட் ரொம்பவே ஸ்பீ.....டாகக் கொடுக்கிறார்கள் போலவே...!!! ஹா... ஹா.... ஹா...//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம்!!! இப்படியே புட்டுக்காம வந்தா நல்லதுதான்...பிஎஸ் என் எல் வந்தால் நன்றாகவே வருகிறது இங்கு.....

    கீதா

    பதிலளிநீக்கு
  11. துரை அண்ணா அது நீங்க கைப்பேசியிலிருந்து அடிப்பதால் இருக்கலாம்..அங்கு சென்றபிறகு உங்கள் நெட் பி எஸ் என் எல்லையும் முந்திவிடும் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  12. மாங்காய் இனிப்பு ஊறுகாய் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. மாங்காய் இனிப்பு மிகவும் நன்று

    பதிலளிநீக்கு
  14. பானுக்கா நான் எதில் வெல்லம் சேர்த்தாலும் வெல்லத்தைப் பொடித்துக் கொஞ்சம் தண்ணீரில் போட்டு ஊறவைத்து விட்டுக் கரைந்தால் அப்படியே வடிகட்டி அல்லது அடுப்பில் கரையவிட்டு வடிகட்டிவிட்டுச் சேர்ப்பது வழக்கம். மற்றபடி ஆமாம் கா சர்க்கரை கூடச் சேர்த்துச் செய்யலாம்.

    புளிப்பு மாங்காயில் செய்வதை காட்டா மீட்டா என்று சொல்லுவதுண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. மாங்காய் இனிப்பு ஊறுகாய்... இதுவரை சுவைத்ததில்லை. நன்றாக இருக்கும்னு தோணுது. செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. சுண்டா - இப்படித்தான் இந்த இனிப்பு ஊறுகாயை அழைக்கிறார்கள். குஜராத்தில் இது ரொம்பவே பாப்புலர். அங்கே எல்லா ஊறுகாயிலும் இனிப்பு சேர்ப்பதுண்டு.

    என் பக்கத்தில் கூட வெளியிட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கனும் குறிப்பிட்டிருந்தார். வெளி மாநிலங்களில் வசிக்கும் பொழுது பலதரப்பட்ட உணவு வகைகளை கற்றுக்கொள்ள முடியும்.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் செய்முறை படங்களுடன் இனிப்பு மாங்காய் ஊறுகாய் மிகவும் நன்றாக இருக்கிறது. பார்க்கும் போதே நாவையும், மனதையும் ஈர்க்கிறது. நான் இந்த மாதிரி செய்ததில்லை. இனி செய்து பார்க்கிறேன். குறிப்பு எடுத்துக் கொண்டேன். சகோதரிக்கும், பகிர்ந்தமைக்கும் மிகவும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் செய்து பாருங்கள். உங்கள் பாராட்டு மனதை குளிர்விக்கிறது. மிக்க நன்றி!

      நீக்கு
  18. கச்சாமாங்கோ ஜூஸ் பற்றி எழுதி இருக்கிறேன் இந்த இனிப்பு சுண்டு செய்து பார்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கச்சாமேங்கோ ஜீஸ் குறிப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன். செய்து பார்த்ததில்லை. நீங்கள் இதை டிரை பண்ணுங்கள். நான் அதை டிரை பண்ணுகிறேன்.

      நீக்கு
  19. புதுசா இருக்கு. செஞ்சு பார்த்திடலாம்

    பதிலளிநீக்கு
  20. காஃபி ஆத்திக் குடிச்சுட்டு
    சட்னி அரைக்க தயாரா இருக்காங்க!...//

    துரை அண்ணா நான் அந்த் நேரத்துல சட்னி அரைச்சு குழம்பும் வைச்சு, காயும், சாதமும் அடுப்புல இருந்துச்சு!!!! ஹா ஹா ஹா....காஃபி கஞ்சி ஆத்தறவங்களைத்தான் காணலை...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. உப்பும்,காரமுமா,இனிப்பும் புளிப்புமான கட்டா,மீட்டா. வட இந்தியாவில் பெயர் போனது. ருசியான குறிப்பு. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், சுவையான வட இந்திய ஆம் ரெசிபி. நன்றி அம்மா!

      நீக்கு
  22. இது கிட்டத்தட்டத் தொக்கு

    பதிலளிநீக்கு
  23. நான் ஜீரகப் பொடி, சில சமயம் சோம்புப் பொடியும் சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஜீரகப் பொடிக்கு பதிலாக ஜீரகத்தை தாளிப்பேன்.

      நீக்கு
  24. மாங்காய்த் துண்டங்கள் ஆவக்காய்க்குப் போடும் மாதிரியில் கூட இனிப்பு மாங்காய் செய்யலாம். ராஜஸ்தானி சமையல்.

    பதிலளிநீக்கு
  25. இப்போப் பார்த்து நெட் பிரச்னை :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் கேட்கறேள்? நேற்று முதல் ஒரே படுத்தல்ஶ்ரீ இன்று காலை இரண்டு மணி நேரங்களாக முயன்று கொண்டிருக்கிறேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!