இண்டைக்கு என்ன ஜொள்ளப்போகினமோ தெரியல்லயே:)
இது நான் வச்சிருக்கும் பெயர்:). உங்களுக்கு இது பிடிக்கவில்லையாயின் உங்கள் விருப்பத்துக்கு என்ன பெயராவது வச்சுக் கூப்பிடுங்கோ.. நா ஒண்ணும் வாணாம்னு சொல்லலியே:)).
வாழையில் எதுவுமே கழிவில்லைத்தானே.. இதை மாத்தியும் ஜொள்ளலாம், எதையும் நாங்க கழிக்க விடமாட்டோம்:).. அந்த வகையில் இந்தத் தோலிலும் அதிக சத்திருக்கு, முடிஞ்ச வரைக்கும் தோலோடு சமைத்தால் நல்லதே.. இல்லை தோலை நீக்கித்தான் சமைப்போம் என அடம்பிடிச்சால்:).. தோலை எறியாமல் இப்பூடிச் செய்திடுங்கோ.
அவித்து எடுத்ததை, இப்படி குட்டிக் குட்டியாக கட் பண்ணி எடுக்கோணும்.
அதனுள், தேங்காய்ப்பூ, பச்சைமிளகாய், வெங்காயம் உப்பு சேர்த்து கொஞ்சம் பால்[முதற்பால்] உம் சேர்த்து, நன்கு பிசைந்து குழைத்து, பின் தேசிக்காய் பிழிந்து விட்டுப் பிரட்டவும்.
(பச்சை மிளகாய் அளவு எனக்குப் போதாது! காரப்பொடி சேர்க்கலாமோ! வாழைப்பூவை வைத்தது போல இருக்கிறது! - ஸ்ரீராம்)
(பச்சை மிளகாய் அளவு எனக்குப் போதாது! காரப்பொடி சேர்க்கலாமோ! வாழைப்பூவை வைத்தது போல இருக்கிறது! - ஸ்ரீராம்)
சூப்பரா இருக்குதெல்லோ?:)
ஊசி இணைப்பு:
புரோகோலியில் நிறைய சத்திருக்கு.. நான் சொல்ல வேண்டிய தேவை இல்லைத்தானே, அதே நேரம் இதனை கண்டபடி அவித்து பொரித்து சத்தை வீணடிக்காமல், இப்பூடி செய்து சும்மா சாப்பிடக் குடுங்கோ.. விரும்பிச் சாப்பிடுவார்கள்.. இப்படித்தான் நான் எப்பவும் செய்து குடுப்பேன், கிழமையில் 2 நாட்களாவது இப்படி செய்துவிடுவேன், விரும்பிச் சாப்பிடுவினம்.
அப்படியே முழுசாக் கழுவிப்போட்டு, கீழ்த் தண்டுப்பகுதியை கொஞ்சம் கீறி அடையாளப்படுத்தி விட்டு, தண்டு கீழே இருப்பதுபோல வைத்து, உப்புப் போட்டு கொஞ்சம் தண்ணீர்- தண்டை மூழ்க விட்டால் போதும், மேலே பட்டர்/மாஜரின் பூசி விடுங்கோ இப்படி.. மூடி ஒரு 8-10 நிமிடங்கள் அவிய விட்டால் போதும், தண்டு அவிஞ்சிட்டால் ஓகே, அப்படியே பூவின் கலர் மாறமுன் ஓவ் பண்ணி, மூடியபடி கொஞ்ச நேரம் விட்டால்.. ரெடியாகிடும்.
(இதுவரை நான் இதைச் சமைத்ததே இல்லை - சும்மா தகவலுக்கு - ஸ்ரீராம்.)
இதோ கலர் மாறவில்லை, ரெடியாகிவிட்டது.. இப்படியே எடுத்துச் சாப்பிட சுவையோ சுவை:)..
நெல்லைத்தமிழன் சொல்லும்வரை என் கண்ணில் படவே இல்லை, இம்முறை தமிழ்க்கடையில் நேத்திரம் வாழைக்காய் வாங்கினால்.. 1.5 அடி நீளம் இருந்துதே...
நன்றி...__()__
பேபி அதிரா எங்கே புறப்பட்டுவிட்டீங்க?:). அது அடுத்த ரெசிப்பி செய்து எங்கள் புளொக்குக்கு அனுப்போணுமெல்லோ.. அதுதான் மார்க்கட்டுக்குப் போகிறேன்:))
“உள்ளுக்குள்ளேயே நமக்குப் பகை உணர்ச்சி இருக்குமாயின், அது எதிரியைத்தாக்காது, நம் உடலைத்தான் தாக்கும்”
================================
athira? where is she?
பதிலளிநீக்குOh, to continue
பதிலளிநீக்குவாழ்க..
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...
பதிலளிநீக்குஇன்னைக்கு காஃபி அருமை...
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... அதிரா காணோம்!!!! கூட அவங்க 'செக்' கையும் காணோம்!
பதிலளிநீக்குகடைசிக் குறிப்புப் பயனுள்ளது. அதிராவுக்குத் தான் இப்படி எல்லாம் கிடைக்கும். :))))
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாஃபியா?... ஹா... ஹா... ஹா...
என்ன யாரையும் காணோம்? எல்லோரும் பயந்துட்டு ஒளிஞ்சுட்டு இருக்கீங்களா? ஹாஹாஹாஹாஹாஹாஹா
பதிலளிநீக்கு// அதிராவுக்குதான் இப்படி எல்லாம் கிடைக்கும் //
பதிலளிநீக்குஆமாம். நல்லதொரு குறிப்பு அது.
// என்ன யாரையும் காணோம்? எல்லோரும் பயந்துட்டு ஒளிஞ்சுட்டு இருக்கீங்களா? //
கிர்ர்ர்ர்ர்.... பதிலா கொடுத்துக்கிட்டிருக்கேன்.... !
காஃபி, கஞ்சினு எல்லாக் கடமையும் ஐந்தரைக்கே இன்னிக்கு முடிஞ்சது! அதான்! :)))) துரை சார் இந்தியாவில் இருக்கும்வரை முதல்லே வர முடியும்! அவர் வேலைக்குத் திரும்பிட்டார்னா ஹெஹெஹெ! அங்கேருந்து சுலபமா வரலாம். ஏன்னா நான் அம்பேரிக்காவிலிருந்து வந்திருக்கேன். ஆனால் இந்தியாவிலிருந்து வரது தான் கஷ்டம்! :)) தி/கீதாவுக்கு இன்னும் இணையம் சரியாகலை போல!
பதிலளிநீக்குகீதா ரெங்கனுக்கு இணையம் இன்று சரியாகி விடும் என்று நம்பப்...
பதிலளிநீக்குப
டு
கி
ற
து!
வாழைக்காய் பழுத்தால் பழம் நமக்கு..
பதிலளிநீக்குதோல் ஆட்டுக்கு அல்லது மாட்டுக்கு....
ஆனாலும் இது புதுமை... அருமை...
அப்புறம் அந்தக் காயை என்ன செஞ்சீங்கள்?...
அடுத்த வாரத்தில் வருமோ?...
அந்த புரக்கோலி அவியல் அருமை...
பதிலளிநீக்குஎனக்குத் தெரிந்த ஒரு தாத்தா வாழைப்பழத்தின் தோலையும் சேர்த்தே சாப்பிடுவார். நாம் தூக்கி எறிய வைத்திருக்கும் தோல்களையும் வாங்கிச் சாப்பிடுவார்.
பதிலளிநீக்குதோட்டத்தில் குட்டி ஆடு:-
பதிலளிநீக்குமே...ம்மே!...
அம்மா ஆடு:-
ம்மே... மே... மே.. ம்மே!...
கிடாய் ஆடு:-
வாழக்காய் தோல் பச்சடியாம்... Fast Food...காரன் போட்டிருந்தான்... Super.. சாப்பிட்டுப் பாருங்க.... மே....மேமே....
வணக்கம்,
பதிலளிநீக்குwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாழைத்தோலில் ஒரு சமையல்! கேட்க/பார்க்க நல்லாத்தான் இருக்கு. சாப்பிட்டு பார்க்கணும்!
Vaazai thol.. broccoli ... Pudhu samayal enakku... Will try
பதிலளிநீக்குமார்க்கெட்டுக்குப் போகும் வேகம் அருமை.
பதிலளிநீக்குவாழைத்தோல சமைக்காமல் இந்தியாவில் தூக்கி போடுவது எதற்காக என்றால் குப்பை தொட்டியை கிளறி சாப்பிடும் விலங்குகளுக்கு அது உணவாக கிடைக்கும் என்பதற்காகத்தான் ஆனால் அதிரா அதையும் விடாமல் சமைத்து சாதனை புரிகிறார்.
பதிலளிநீக்குவாழைத்தோல கறியை அதிரா விரும்பி சமைத்து சாப்பிடுவதால் மக்கலே எல்லோரும் வாழைத்தோலை மட்டும் அதிராவிற்கு பார்சல் செய்து அனுப்பவும்
பதிலளிநீக்கு// அதிராவுக்கு பார்சல் செய்து...//
பதிலளிநீக்குபார்சல் கூலி யார் தருவாங்க!?....
இருந்தாலும் -
ஜனங்க இப்பவே வாழக்கா தோல் வாழப்பழத் தோல் எல்லாத்தையும் பொறுக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்...
பாவம்...
அப்பாவி ஆடுகளின் கதி
அதோ கதி தான்!..
// அப்பாவி ஆடு.. அப்பாவி அதிரா!..//
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
அப்படியே
பதிலளிநீக்குவாழப்பழத் தோலுக்கும் ஒரு ர்ர்ரெசிப்பிய எடுத்து வுடுங்க ஜாமியளா!...
வழுக்கி வுழுவறது மிச்சமாப் போவும்!?...
/// போராடுவோம்... போராடுவோம்...
பதிலளிநீக்குஇறுதிவரை போராடுவோம்!...
வாழப்பழத் தோல் எங்க உரிமை!..///
வாழப்பழத் தோல் தடையில்லாம
கெடைக்கணும்...ந்னு ஆடுங்க எல்லாம் போராட்டம் செய்யுதுங்களாம்....
இப்பத்தான் நியூஜ்...ல சொன்னாங்க...
வாழைக்காய் தோலை வேகவைத்து உ.பருப்பு, சி.மிளகாய், புளி இவைகளை வறுத்து, வேக வைத்த வாழைக்காய் தோலோடு சேர்த்து துவையலாக அரைப்பதுண்டு.
பதிலளிநீக்குமுற்றிய மொந்தன் வாழைக்காய் தோலை பொடியாக நறுக்கி, தேங்காய் போட்டு பொறியலும் செய்வதுண்டு.நிறைய நார்ச்சத்து கொண்டது. உடல் இளைக்க விரும்புகிறவர்கள் சாப்பிடலாம்.
ப்ரோகோலி உடலுக்கு மிகவும் நல்லது. உங்கள் முறையில் சமைத்து பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குமார்ஜரினுக்கு பதிலாக வெண்ணெய் பயன்படுத்துவது நலம்.
வெங்காயம், தக்காளி, தாளிப்பு, காரப்பொடி, இல்லாம க்ழம்பு, பொரியல், கிரேவின்னு எதையுமே ஏத்துக்க மனசு வரமாட்டேங்குது.
பதிலளிநீக்குஎங்கள் ஊர் பக்கம் (திருநெல்வேலி, திருவனந்தபுரம், அப்பா திருநெல்வேலி, அம்மா திருவனந்தபுரம்)
பதிலளிநீக்குவாழைக்காய் புட்டு செய்ய வாழைக்காய் வேக வைப்போம் , அப்போது அதன் தோலை அதிரா சொன்னது போல் பொடி பொடியாக நறுக்கி மிளகாய் தூள் மஞ்சள் தூள் போட்டு வதக்கி தேங்காய் பூ போட்டு செய்வோம் சுவையான சத்தான வாழைக்காய் துவரம்.
வாழைக்காய் புட்டுக்கு நங்கு முற்றிய வாழைக்காய் வேண்டும் அப்போது தான் புட்டு சீவும் தட்டில் தேய்க்கும் போது அழகாய் தேங்காய் பூ போல வரும் வெங்காயம், பச்சைமிளகாய் உப்பு போட்டு தாளித்தால் புட்டு ரெடி.
எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் இந்திரா காந்தி அவர்களுக்கு இந்த வாழைக்காய் தோல் பொரியலை கொடுத்தாக ஒரு பேட்டியில் (விகடன் என்று நிணைக்கிறேன்) படித்த நினைவு உண்டு.
அதிரா, நீங்கள் சொல்லிய முறையில் செய்து பார்க்கிறேன்.
புரோகோலி இங்கு நன்றாக கிடைக்கவில்லை ஒரு முறை வாங்கினேன் நிறைய புழு.
பதிலளிநீக்குநன்றாக கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.
//“உள்ளுக்குள்ளேயே நமக்குப் பகை உணர்ச்சி இருக்குமாயின், அது எதிரியைத்தாக்காது, நம் உடலைத்தான் தாக்கும்” //
உண்மைதான்.
இன்னல் செய்வோர் எதிரிகளாக நினைப்போர் எவரேனும் இருந்தால் ,அவர்களும் மனம் திருந்தி நலவாழ்வு வாழ கருணையோடு வாழ்த்துவோம். வாழ்க வளமுடன்.
ஓ மை கடவுளேஏஏஏ இன்று அதிரா ரெசிப்பியாஆஆஅ?:) அதுதான் கீசாக்கா 1ஸ்ட்டா? வாழைத்தோலுக்கா?:)... ஹையோ கலைக்கப் போறாவே என் செக் எங்கேஏஏஏஏஏஏஏ:)...
பதிலளிநீக்குதிரை அண்ணன் பின்னுக்குப் போயிட்டாரே அதுவும் ஊரில இருந்து:).. ஒருவேளை கடற்கரையில நித்திரையாகிட்டாரோ:).. ஹையோ எனக்கு என் வாய்தேன்ன் எடிரி:)..
பின்பு வருகிறேன் via com:).. _()_
கீதா ரங்கனின் இணையம் பற்றி தெரிவித்திருக்கும் ஶ்ரீராம், தான் சுஜாதா ரசிகர் என்பதை வெளிப்டுத்தியுள்ளார்.
பதிலளிநீக்குபார்க்கும்போதே புதுமையாக இருக்கிறதே...
பதிலளிநீக்குhttp://gb.cri.cn/mmsource/images/2015/11/24/61/14243464731847778117.jpg
பதிலளிநீக்குஅதாரது என்னைத்தேடியதூஊஊஊஊஊஊ:).. நான் மோடி அங்கிளிடன் முக்கிய மீட்டிங்கில் இருந்தேன்.. பாதியில விட்டிட்டு வந்தேன்..
கீதாவின் நெட் பிரச்சனை:)
கீசாக்காவுக்கும் ஸ்ரீராமுக்குமான போஸ்ட் பப்ளிஸ் பண்ணும் நேரப் பிரச்சனை..
ட்றுத்திட நயந்தாராவின் புறொப்பிளம்:).. இவை எல்லாம் பேசப் போயிருந்தனா:)).. விட்டிட்டு ஓடியாந்திட்டேன்..:)) பாருங்கோ ட்றுத்துக்குத்தான் காலம் சரியில்லை:))
ஆவ்வ்வ்வ் மிக நீண்ட இடைவெளியின் பின்பு.... நீலமயில் போஸ்ட்டில் தெரியுதே:)) ஹையோ டங்கு ஸ்லிப்ட்:)) நீல மையைச் சொன்னேன்:)..
பதிலளிநீக்கு//(பச்சை மிளகாய் அளவு எனக்குப் போதாது! காரப்பொடி சேர்க்கலாமோ! வாழைப்பூவை வைத்தது போல இருக்கிறது! - ஸ்ரீராம்)//
அது எங்கள் வீட்டுச் சின்னவர்களுக்காக குறைச்சுப் போட்டேன் ஸ்ரீராம்.. நீங்க நிறையப் போடுங்கோ[என்ன செய்து பார்க்கவா போறீங்க எனும் ஒரு நம்பிக்கைதேன்ன்:))]... தூள் எல்லாம் சேர்க்கக்குடா கர்ர்ர்ர்ர்ர்:))
///(இதுவரை நான் இதைச் சமைத்ததே இல்லை - சும்மா தகவலுக்கு - ஸ்ரீராம்.)////
ஏதோ மற்றக்குறிப்பெல்லாம் உடனுக்குடன் சமைச்சவர் மாறி:)) யேஏஏஏஏஏஏஏ பில்டப்பூ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
ஹா ஹா ஹா நன்றி ஸ்ரீராம். அடுத்த கிழமைதான் வருமென நினைச்சிருந்தேன்.. சமர் தொடங்கி விட்டமையால் படு பிசியாகப்போகுது.. அதிலும் வெய்யிலைக் கண்டால் தோகை விரிக்கச்சொல்லுது:)) வீட்டுக்குள் வர மனமே இல்லை:))..
நான் உருளைக்கிழங்கும் வெங்காயமும் நடப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. அஞ்சுப்பிள்ளை இன்னும் கார்டின் துப்பரவாக்கவே இல்லை:)) அவ சரியான லேசி:)) ஹையோ மீ காசிக்குப் போறேன்ன்ன்ன்:))
வாங்கோ கீதாக்கா.. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ ஸ்ரீராம்....
பதிலளிநீக்கு//Geetha Sambasivam said...
கடைசிக் குறிப்புப் பயனுள்ளது. அதிராவுக்குத் தான் இப்படி எல்லாம் கிடைக்கும். :))))//
அது மீ ஞானியாகிட்டேனெல்லோ:) அதனால தானா வருதூஊஊஊஊஊஊ:))..
//துரை செல்வராஜூ said...
பதிலளிநீக்குவாழைக்காய் பழுத்தால் பழம் நமக்கு..
தோல் ஆட்டுக்கு அல்லது மாட்டுக்கு....
ஆனாலும் இது புதுமை... அருமை...
அப்புறம் அந்தக் காயை என்ன செஞ்சீங்கள்?...
அடுத்த வாரத்தில் வருமோ?...//
அதுதான் முன்பே வந்திட்டுதே ஒரு ரெசிப்பி.. இங்கு “வாழைக்காய்ப் பிரட்டல்”.. தேடிப்பாருங்கோ:)).
//அந்த புரக்கோலி அவியல் அருமை...//
இதில் நிறைய நல்ல குணங்கள் இருக்குது துரை அண்ணன்.. வயதான காலத்தில் வரும் மூட்டு வலிகள் நீங்கும்... முக்கியமா ஆண்களுக்கு வரக்கூடிய புரெஸ்ரேஜ் கான்சர் வராமல் தடுக்கும்... இதில் இன்னும் நிறைய இருக்கு.. நெட்டில் தேடுங்கோ கிடைக்கும். மிக்க நன்றி.
நான் அங்கிருந்தவரைக்கும் புரக்கோலியை காஃலிபிளவரைப் போல சாம்பாரில் சேர்ப்பதுண்டு..
நீக்குVeg.. Statue செய்வதும் உண்டு..
மகிழ்ச்சி...
///கிடாய் ஆடு:-
பதிலளிநீக்குவாழக்காய் தோல் பச்சடியாம்... Fast Food...காரன் போட்டிருந்தான்... Super.. சாப்பிட்டுப் பாருங்க.... மே....மேமே....//
ஏன் அப்பா ஆடு இல்லையோ இது?:)) ஹா ஹா ஹா ச்சும்மா ஒரு டவுட்டூஊஊஊ:))
அம்மா (ஆடு) என்றால் எப்போதும் மென்மைதான்..
நீக்குஆனால்,
அப்பா ஆடு என்பதை விட
கிடாய் ஆடு என்றால் கம்பீரம் தானே!...
அதுக்காகத்தான்...
எர்ணாகுளத்து தெரிந்தமாமி சொல்லுவார்.நேந்திரங்காய் வறுவலுக்கு காயை நறுக்கும்போது தோலை உறித்து, அதை வீணாக்காமல், பொடியாக நறுக்கி வேகவைத்து வடித்து,தேங்காயும்,பச்சைமிளகாயும் அம்மியில் சிதைத்துப் பிசறி,வெளிச்செண்ணெயில் கடுகு,உளுத்துதாளித்துப் பிரட்டினால் அவ்வளவு ருசி என்று சொல்லுவார். உப்புசேர்த்துதான்.கரிவேப்பிலையும்,பெருங்காயம்,மஞ்சபொடியும் சேர்த்து செய்திருக்கிறேன். நல்ல ருசிதான். அப்புறம் நேந்திரங்காய் மற்ற இடங்களில் வாங்கினால்தானே? பெரிய வறுவல் பொரிக்கும் இடங்களில் வாழைக்காய்த் தோலைக்கூடைகூடையாக ஹோட்டல்களுக்குசமைக்க வாங்கிப் போவார்களாம் கேரளாவில். நேந்திரங்காய்த் தோல் மட்டுமே.ரெஸிப்பி மறந்து போயிருந்தது. நன்றி அதிரா.
பதிலளிநீக்குமுகநூல் மூலமே எங்கள் ப்ளாக் வரமுடிகிறது. என்ன செய்யலாம். அன்புடன்
பதிலளிநீக்கு// முகநூல் மூலமே எங்கள் ப்ளாக் வரமுடிகிறது. என்ன செய்யலாம். அன்புடன் //
பதிலளிநீக்குகாமாட்சி அம்மா... எனக்கும் என்ன செய்ய என்று தெரியவில்லை அம்மா. சில சமயங்களில் சில தளங்களுக்கு என்னாலும், மற்றவர்களாலும் அப்படி வரமுடியாமல் போகும்.
கொஞ்ச நாட்கள் கழித்து சரியாகும்.
ப்ரவுஸர் மாற்றி பார்க்கலாம். கணினியில் ஹிஸ்டரி டெலிட் செய்து பார்க்கலாம்.
மற்றபடி என் அனுபவத்தில் தானாய் சரியானால்தான் உண்டு.
//கீதா ரங்கனின் இணையம் பற்றி தெரிவித்திருக்கும் ஶ்ரீராம், தான் சுஜாதா ரசிகர் என்பதை வெளிப்டுத்தியுள்ளார்.//
பதிலளிநீக்குபானு அக்கா... ஹா... ஹா... ஹா...
அதிரா....
பதிலளிநீக்கு// அடுத்த கிழமைதான் வருமென நினைச்சிருந்தேன்.//
உங்களைக் கொஞ்ச நாட்களாய்க் காணோமா? உங்களை உடனே இங்கு வரவைக்க இப்படி வெளியிட்டு விட்டேன் என்று சொல்லவா?!!!
காலையிலேயே படித்துவிட்டேன். பயணத்தினால் கருத்து எழுத தாமதமாகிவிட்டது.
பதிலளிநீக்குவாழத்தோல் சம்பல் பச்சிடி நல்லாத்தான் இருக்கும். அதிலும் சிறிய வெங்காயம் வேறு சேர்த்திருக்கிறீர்கள்.
சிறிய வயதில், வாழைக் கறி, தோலுடன் கூடிய கச்சை வாழையில் (இன்னும் பெரிதாகாத வாழைக்காய்) செய்வார்கள். எனக்கு அவ்வளவு பிடிக்காது. ஆரம்பத்தில், உருளைக்கிழங்கை தோலுடன் செய்தபோதும் எனக்கு பிடிக்காததுபோல் இருந்தது ஆனால், இப்போதெல்லாம் தோலுடன் சமைத்துச் சாப்பிடுகிறேன். வாழைக்காயில் இதனை முயற்சிக்கிறேன்.
ஆமாம், அங்கு, வெற்றிலை பாக்குக்கு என்ன வேலை? படத்தில் பிரதானமா வெற்றிலை தெரியுதே.
ப்ராக்கோலி-என் பசங்களுக்கும் என் மனைவிக்கும் ரொம்பப் பிடிக்கும். எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. இங்கு இருக்கும்போது வாங்குவேன் (ஒரு கண்டிஷனோட... என்னைச் சாப்பிடச் சொல்லக் கூடாதுன்னு).
முன்னெல்லாம் (பல வருடங்களுக்கு முன்) வாழைக்காய், பழம் போன்றவை வாங்கும்போது, ஒரு காய் இன்ன விலை என்று சொல்வார்கள். நானும் இருப்பதில் பெரிதாக உள்ளதாக எடுப்பேன். பிறகு நம்முடைய சாமர்த்தியம் தெரிந்துகொண்டு, எல்லாவற்றையும் எடையைப் பொறுத்து விலை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவா பென்னாம் பெரிய (உங்கள் மொழி...) காய்களைவிட அதில் சிறிய சைஸ் காய்கறிகளே நன்றாக இருக்கும். ஆமாம் அந்த நேந்திரத்தை வைத்து வறுவல் செய்தீர்களா? இன்னுமொரு திங்கக் கிழமையில் அதை வெளியிட்டு எங்களைப் பொரிக்கப் போகிறீர்களா? ஹா ஹா ஹா
பதிலளிநீக்குவணக்கம் சகோதரே
பதிலளிநீக்குவாழைக்காய் தோல் வைத்து பொடித்துவல். (சம்பல் என்றால்?) படங்களுடன் செய்முறைகளும் நன்றாக இருந்தது. ப்ரோகோலி செய்முறையும் மிக அருமை. ஆனால் இதை இதுவரை செய்ததில்லை.வாழைத்தோல் கொஞ்சம் காரமாக செய்துள்ளேன்.வெங்காயம் அவ்வளவாக சேர்த்த நினைவில்லை. இனி செய்யும்போது அதையும் சேர்த்து செய்கிறேன். இந்த முறையை அறிமுகபடுத்திய சகோதரி அதிராவுக்கு என் பாராட்டுக்களும். நன்றிகளும்.
வாழைக்காய் கறிக்கு நறுக்கும் போதே நன்கு அலம்பி விட்டு தோலுடனே நறுக்கி விடுவேன். ருசியாகவே இருக்கும். மிக்க நன்றி அதிரா.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகடைசி வாசகங்களை பற்றி கூற வந்து விட்டுவிட்டேன். மிக அருமை. உள்ளுக்குள் வன்மம் நம் உடம்பை பாதிக்கும்.சரியாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த வாழைக்காய் பஜ்ஜி போடும் போதும் தோலுடனே போட்டால் பஜ்ஜி பார்வைக்கும் நன்றாகவும்,உடைந்து விடாமல் (தொய்வில்லாமல்) முழுதாகவும் இருக்கும். நான் அப்படித்தான் ரொம்ப வருடங்களாய் போட்டு வருகிறேன்.
(எந்தெந்த பாகத்தில் எந்தெந்த சக்தி இருக்கோ யாரு கண்டா? என்ற டயலாக்குடன் ஒரு படத்தில் நாகேஷ் தோலோடு பழத்தை சாப்பிடுவார்.... வாழைப்பழம் காய் பயன்படுத்தும் போது அதுதான் நினைவுக்கு வரும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல பதிவு. வாழை ,தென்னை இரண்டும் எல்லோருக்குமே எல்லாவிதத்திலும் பயன் படும்.
பதிலளிநீக்குஇங்கே வாழைத்தோல் அதிரா கொடுத்திருப்பது போல செய்து பார்க்க வேண்டும்.
முன்பு மாதேவி என்ற தோழி எழுதுவார். இப்பொழுது பதிவுகள் பார்க்க முடிவதில்லை. அவர் சம்பல் என்று
பதிவு ஒன்று கொடுத்திருந்தார்.படிக்கும் போதே காரம் கண்ணில் ஏறும்.
வாழ்க வளமுடன்.
ஓ உள்ளுக்குள் வன்மம் வைத்திருப்பவர் உறவையே தவிர்த்து விடலாமே.
பதிலளிநீக்குஇருக்கும் கொஞ்ச நாட்கள் நிம்மதியாக வாழ்ந்து போகலாம்.
என்னை தேடிய எல்லாருக்கும் ஒரு ஹாய்.
பதிலளிநீக்குசர்ச் இல் ஒரு ceremony .so hopefully I'll be free by week end. Seekiram vanthu cat tail pudichi izhupen
I haven't tried this before miyav.I've been throwing nenthiram banana peels all these days.will try this recipe soon.
பதிலளிநீக்குமிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ said...
// அதிராவுக்கு பார்சல் செய்து...//
பார்சல் கூலி யார் தருவாங்க!?..
TO Pay னு போட்டுடுங்க சார்
//ராஜி said...
பதிலளிநீக்குவெங்காயம், தக்காளி, தாளிப்பு, காரப்பொடி, இல்லாம க்ழம்பு, பொரியல், கிரேவின்னு எதையுமே ஏத்துக்க மனசு வரமாட்டேங்குது.//
ராஜி நீங்க நம்ம இனம் அதனாலதான் இப்படி....
//Geetha Sambasivam said...
பதிலளிநீக்குகாஃபி, கஞ்சினு எல்லாக் கடமையும் ஐந்தரைக்கே இன்னிக்கு முடிஞ்சது! அதான்! :)))) துரை சார் இந்தியாவில் இருக்கும்வரை முதல்லே வர முடியும்! அவர் வேலைக்குத் திரும்பிட்டார்னா ஹெஹெஹெ! அங்கேருந்து சுலபமா வரலாம். ஏன்னா நான் அம்பேரிக்காவிலிருந்து வந்திருக்கேன். ஆனால் இந்தியாவிலிருந்து வரது தான் கஷ்டம்! :)//
இதெப்பூடி நெல்லைத்தமிழனின் கண்ணில படாமல் போச்ச்ச்ச்ச்ச்ச்:)).. இந்தியாவில இருப்ப்போருக்குத்தான் காலை ஆறு மணிக்கு கஸ்டமாமே:)).. இதைத்தட்டிக் கேய்க்க இங்கின ஆருமே இல்லயாஆஆஆஆஆ:))
என்னால முடியல்ல ஜாமீஈஈஈஈஈ:) ஒரு கிழமைக்கு எங்கயும் போகாமல் நம் வேலையை முடிப்போம் எனக் கங்கணம் கட்டி இருந்தனே:)).. இதை விடக் காசிக்குப் போவது எவ்ளோ ஈசி:)).. அதுக்கு என் செக்:) கூட வரமாட்டாவாமே கர்ர்ர்ர்ர்:))
பதிலளிநீக்குவாங்கோ வெங்கட்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னா டவுட்டூஊஊஊ:)) சாப்பிட்டுப் பாருங்கோ அதுவும் நல்லாத்தான் இருக்கும்.. உப்பு புளிப்பு இதுக்குக் கொஞ்சம்.. வாய்க்கு இதமாகச் சேர்க்கோணும்:). மிக்க நன்றி.
பதிலளிநீக்குவாங்கோ மிடில் கிளாஸ் மாதவி.. இரண்டும் நல்ல சுவையாகவே இருக்கும்.. செய்து பாருங்கோ. மிக்க நன்றி,.
பதிலளிநீக்கு//Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...
பதிலளிநீக்குமார்க்கெட்டுக்குப் போகும் வேகம் அருமை.//
வாங்கோ.. ஹா ஹா ஹா சமையலுக்கு நேரமாகிட்டுது போல:)) அதுதான் வேகமோ?:).... மிக்க நன்றி.
//Avargal Unmaigal said...
பதிலளிநீக்குவாழைத்தோல சமைக்காமல் இந்தியாவில் தூக்கி போடுவது எதற்காக என்றால் குப்பை தொட்டியை கிளறி சாப்பிடும் விலங்குகளுக்கு அது உணவாக கிடைக்கும் என்பதற்காகத்தான் ஆனால் அதிரா அதையும் விடாமல் சமைத்து சாதனை புரிகிறார்.//
வாங்கோ ட்றுத் வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எதுக்கு விலங்குகளைக் குப்பையைச் சாப்பிட விடுறீங்க:)) அவற்றிற்குப் புதுசா வாங்கிக் குடுங்கோ.. கஞ்சல்தனம் பண்ணக்கூடா:))..
//வாழைத்தோல கறியை அதிரா விரும்பி சமைத்து சாப்பிடுவதால் மக்கலே எல்லோரும் வாழைத்தோலை மட்டும் அதிராவிற்கு பார்சல் செய்து அனுப்பவும்//
ஓம் ஓம்ம்.. காயவச்சு அனுப்புங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)) அப்போ நான் வடகம் போடலாமா என ட்றை பண்றேன்ன்:)) ஹா ஹா ஹா.. மிக்க நன்றி ட்றுத்.
//துரை செல்வராஜூ said...
பதிலளிநீக்கு// அப்பாவி ஆடு.. அப்பாவி அதிரா!..//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....//
ஹா ஹா ஹா என் விலங்கும் ஆடுதானாக்கும்:))
வாங்கோ பானுமதி அக்கா.. வாழைத்தோலில் உங்களிடம் பல ரெசிப்பி இருக்கும்போல இருக்கே:).. இந்த தொல்லையே வேண்டாம் என, நான் இப்போ தோலுடனேயே சமைக்கிறேன்:)..
பதிலளிநீக்குபுரோக்கோலி செய்து பாருங்கோ இப்படி.. அதிக நேரம் அவிக்கக்கூடாது.. கொஞ்ச நேரம் மூடி அவித்தால் போதும்.. வாயில் அப்படியே ரவ்வை போல இறங்கும்:) சூப்பரா இருக்கும்.. இதை உணவோடு குடுக்காமல் ஈவினிங்கில் சும்மா செய்து குடுப்பேன் நான்.
உண்மைதான் மாஜரின் நல்லதல்ல.. ஆனா என்ன வெண்ணெய் கத்தியால் எடுத்துப் பூசுவது கஸ்டம் இறுகியிருக்கும்.. மாஜரின் அப்படியே சொஃப்வ்ட்டா இருக்கும்:)) அப்போ அது ஈசியெல்லோ:)) ஹா ஹா ஹா
மிக்க நன்றி.
//ராஜி said...
பதிலளிநீக்குவெங்காயம், தக்காளி, தாளிப்பு, காரப்பொடி, இல்லாம க்ழம்பு, பொரியல், கிரேவின்னு எதையுமே ஏத்துக்க மனசு வரமாட்டேங்குது.//
வாங்கோ ராஜி... நெடுகவும் ஒரேமாதிரிச் சாப்பிடாமல் இடைக்கிடை இப்பூடியும் ரேஸ்ட் பார்க்கோணும்:))..
மிக்க நன்றி.
வாங்கோ கோமதி அக்கா..
பதிலளிநீக்கு//ராஜி said...
வெங்காயம், தக்காளி, தாளிப்பு, காரப்பொடி, இல்லாம க்ழம்பு, பொரியல், கிரேவின்னு எதையுமே ஏத்துக்க மனசு வரமாட்டேங்குது.//
ஓ அப்போ இதைச் சுண்டல் போலவும் செய்யலாம்.. இனி செய்திடுறேன்.. இந்த முறையும் நல்லா இருக்கும்தான் எனக்கு சுண்டல்[வறை] பிடிக்கும்.. எப்படியும் டெய்லி ஒரு சுண்டல் செய்திடுவேன்..
ஓமோம் இந்தியாவில் புரோக்கோலி, கோவா வில் எல்லாம் புழுக்கள் அதிகம் என அறிஞ்சேன்.. அத்தோடு ஏதோ போடக்கூடாத உரம் எல்லாம் போடுகிறார்களாமே இவற்றுக்கு[அருவருப்பாக இருக்கு. சொல்ல விரும்பவில்லை இங்கு] எனவும் அறிஞ்சேன்... அதனாலேயே கோவா, புரோக்கோலி மக்கள் வாங்கத் தயங்குகின்றனராம் அங்கு.. உண்மை பொய் தெரியவில்லை.
மிக்க நன்றி கோமதி அக்கா.
///KILLERGEE Devakottai said...
பதிலளிநீக்குபார்க்கும்போதே புதுமையாக இருக்கிறதே...//
வாங்கோ கில்லர்ஜி... மிக்க நன்றி.
வாங்கோ காமாட்ஷி அம்மா வாங்கோ.. ஓ மறந்திருந்த்தை நினைவு படுத்திட்டேனா.. மிக்க நன்றி.
பதிலளிநீக்கு//ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குஅதிரா....
// அடுத்த கிழமைதான் வருமென நினைச்சிருந்தேன்.//
உங்களைக் கொஞ்ச நாட்களாய்க் காணோமா? உங்களை உடனே இங்கு வரவைக்க இப்படி வெளியிட்டு விட்டேன் என்று சொல்லவா?!!!//
ஓஓஓஓஓஒ அப்போ இது திட்டமிடப்பட்ட ஜதீஈஈஈஈஈஈஈஈ:)) விடுங்கோ விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ மீ காசிக்குப் போறேன்ன்:)) :).. ஹா ஹா ஹா:))
///துரை செல்வராஜூ said...
பதிலளிநீக்குஅம்மா (ஆடு) என்றால் எப்போதும் மென்மைதான்..
ஆனால்,
அப்பா ஆடு என்பதை விட
கிடாய் ஆடு என்றால் கம்பீரம் தானே!...
அதுக்காகத்தான்..//
ஹா ஹா ஹா.. அம்மா ஆட்டை மறி ஆடு எனத்தானே சொல்வோம்:)..
வாங்கோ நெல்லைத்தமிழன்.. அது என்னமோ தெரியல்ல இப்போ எல்லோரும் பிசியாகவும் ரயேட்டாகவும் ஆகி விடுகிறோம்... வெதர்தான் காரணம் போல..
பதிலளிநீக்குஇப்படியான சம்பல்களுக்கு... வல்லாரைச்சம்பல், கத்தரிக்காய்ச் சம்பலுக்கெல்லாம் சின்ன வெங்காயம்தான் அதிகம் சேர்ப்போம்.. சுவை அதிகமாக இருக்கும்.
உருளைக்கிழங்கு தோலில் அதிக சத்திருக்குதாம்.. தெரிந்திருந்தும் நான் சேர்க்காமல் இருந்தேன், பின்பு பிள் ளைகளுக்கு ஸ்கூலில் சொல்லிக் குடுத்திருக்கினம் தோலுடன் தான் சமைக்கோணும் என.. அதிலிருந்து தோல் நீக்க வேண்டாம் என்றார்கள்.. இப்போ அனைவருக்கும் தோலுடன் சமைப்பது பிடித்து விட்டது. அதேபோல் சக்கரைப்பூசணிக்கும் தோல் நீக்கத் தேவையில்லை, தண்ணியாக சமைப்பதாயின்..
பிரட்டல் கறிகளுக்கு தோல் நீக்கோணும்.
@நெல்லைத்தமிழன்
பதிலளிநீக்கு//ஆமாம், அங்கு, வெற்றிலை பாக்குக்கு என்ன வேலை? படத்தில் பிரதானமா வெற்றிலை தெரியுதே//
ஹா ஹா ஹா அது தாம்பூலம்[கரெக்ட்தானே?:)] வைத்து அழைக்கிறேன் அனைவரையும் சாப்பிட வரச்சொல்லி:).
//ப்ராக்கோலி-என் பசங்களுக்கும் என் மனைவிக்கும் ரொம்பப் பிடிக்கும். எனக்கு சுத்தமாகப் பிடிக்காது//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இனிப்பு புளிப்பு தவிர உங்களுக்கு எதுவும் பிடிக்காதே ஹா ஹா ஹா... ஆனா ஒன்று நெல்லைத்தமிழன்.. இந்த புரோக்கோலி எத்தனையோ முறையில் சமைத்திட்டேன் எதுவும் வீட்டில் பிடிக்கவில்லை.. இப்படி அவித்துக் குடுத்தால் மட்டும் அப்படியே டிஸ் ல போட்டுக் குடுத்தால் சாப்பிடுவினம்.. இப்படி அவிப்பதன் சுவையே தனி.. அதாவது நன்கு அவித்தால் சுவை போயிடுது.
//நானும் இருப்பதில் பெரிதாக உள்ளதாக எடுப்பேன். பிறகு நம்முடைய சாமர்த்தியம் தெரிந்துகொண்டு, எல்லாவற்றையும் எடையைப் பொறுத்து விலை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.///
ஹா ஹா ஹா இப்போ எல்லாமே எடையில வந்து விட்டதே அதுவும் தமிழ் நாட்டில் பிரியாணிகூட கிலோக்கணக்காமே.. கேட்டதும் சாக்ட்ட்ட்ட்ட்ட் ஆகிட்டேன்ன்ன்:))..
///ஆமாம் அந்த நேந்திரத்தை வைத்து வறுவல் செய்தீர்களா?//
இல்ல நேத்திரம் சிப்ஸ் செய்தேன், ஆனா பெரிய சுவையாக இல்லை..
/// இன்னுமொரு திங்கக் கிழமையில் அதை வெளியிட்டு எங்களைப் பொரிக்கப் போகிறீர்களா? ஹா ஹா ஹா///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நில்லுங்க இதுக்காகவே கோமதி அக்காவின் வாழைக்காய்ப் புட்டு செய்து அனுப்பப்போறேன்ன்.. ஹையோ எதுக்கு இப்போ ஸ்ரீராம் இப்பூடி வேகமா ஓடுறார்:))..
மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.
வாங்கோ சகோ கமலா ஹரிகரன்....
பதிலளிநீக்கு// (சம்பல் என்றால்?)// ஹா ஹா ஹா இப்படிக் குழைப்பது, அரைப்பது, இடிப்பதை.. சம்பல் என்போம்.. நீங்க சட்னி என்பதை நாங்கள் சம்பல் என்போம்.. அதில் பல வகைச் சம்பல் உண்டு:).
//வாழைக்காய் கறிக்கு நறுக்கும் போதே நன்கு அலம்பி விட்டு தோலுடனே நறுக்கி விடுவேன். ருசியாகவே இருக்கும். ///
அதேதான், கொஞ்சம் நார் உரிப்பதைப்போல.. முருங்கிக்காய்க்கு:) வெரி சொறி முருங்கைக்காய்க்கு நார் உரிப்பதைப்போல உரித்து விட்டும் தோலுடன் சமைப்பேன்.... ஆனா என்னத்தைப் பண்ணி.. எப்பூடிச் சத்தாச் சாப்பிட்டும் என்ன.. நடக்கிறதுதான் நடக்கும் ஹா ஹா ஹா:)..
அனைத்துக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றிகள்.
வாங்கோ வல்லிம்மா.. அது தென்னையா பனையா?:)..
பதிலளிநீக்குசம்பல் எனில் காரமாக இருக்கோணும் என அர்த்தமில்லை.. அது அவரவர் தேவையைப் பொறுத்து செய்து கொள்ளலாம்.. இப்போ சிறீலங்கன் கடைகளிலெல்லாம் விதம் விதமாக சம்பல் கிடைக்குது போத்தல்களில்.. அவை கொஞ்சம் காரமாகத்தான் செய்திருப்பார்கள்.
என் பொன்மொழி எல்லோரையும் கவர்ந்திருக்கு இன்று மிக்க மகிழ்ச்சி.. நன்றி வல்லிம்மா.
ஆவ்வ்வ் என் செக் லாண்டட்ட்ட்:).. வாங்கோ அஞ்சு வாங்கோ..
பதிலளிநீக்கு//Angel said...
என்னை தேடிய எல்லாருக்கும் ஒரு ஹாய்.//
ஹலோ இங்கு ஒருவரும் உங்களைத் தேடேல்லையாக்கும்:)) ச்ச்சும்மா ஓவர் பில்டப்பூக் குடுக்கக்கூடா.. உங்கட
“ஹாய்” ஐ வாபஸ் வாங்கிடுங்கோ ஜொள்ளிட்டேன்:)).
//சர்ச் இல் ஒரு ceremony//
பேசாமல் விட்டால்.. அந்த சேர்ஜ் ஏ என்னுடையதுதான் எனச் சொல்லிடப்போறா போல இருக்கே கர்ர்:))..
தேம்ஸ் என் பெயரில இருந்தாலும் நான் எப்பவாவது, அதால பிசி எனச் சொன்னதே இல்லையே:)).. சரி சரி இதனால கோபிச்சுக் கொண்டு காசிக்கு வரமாட்டேன் எனச் சொல்லிடாதீங்கோ பிளீஸ்ஸ்:).
///will try this recipe soon.//
ம்ஹூம்ம்ம்ம்ம் இவ ஸ்ரீராமின் மூன்று விட்ட சகோதரியாக்கும்:) ஹையோ ஹையோ.. ஹா ஹா ஹா மிக்க நன்றி ஃபிஸ்:))
//Asokan Kuppusamy said...
பதிலளிநீக்குமிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்//
வாங்கோ... இவர் எதுக்குப் பாராட்டுறார் என்றே தெரியல்ல:))[இது அதிராவின் மைண்ட் வொயிஸ் ஆக்கும்ம்:)) வெளியே கேட்டிட்டுதோ?:)]]] ஹா ஹா ஹா மிக்க நன்றி.
////Avargal Unmaigal said...
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ said...
// அதிராவுக்கு பார்சல் செய்து...//
பார்சல் கூலி யார் தருவாங்க!?..
TO Pay னு போட்டுடுங்க சார்//
ஆஹா எங்காவது புளியமரம் தேடிப்போய்ப் “பேய்” இடம் குடுத்திடப்போயினமே முருகாஆஆஆஆஆ:)) ஹா ஹா ஹா எப்பூடிப் பார்த்தாலும் கடவுள் அதிரா பக்கம்தேன்ன்ன்:))..
ஊசிக்குறிப்பு:
அதிராவுக்கு கால் இருக்கு:))
///ராஜி நீங்க நம்ம இனம் அதனாலதான் இப்படி.... //
பதிலளிநீக்குயூ மீன்ன்ன்:)) இது வேற மீன்ன்:)) ராஜியும் நயந்தாரா சிஸ்டர்[ட்றுத்டிட முறையில் சொன்னேன்:)] பிரியையோ:)).. ஹா ஹா ஹா.
=====================================================================
வருகை தந்து இன்றைய நாளைச் சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றி._()_.
வாழைத்தோலில் சமைக்கச் சொல்லப் பயமாய் இருக்கிறது
பதிலளிநீக்குவாழைக்காய் தோல் தோரன் எங்கள் ஊரில் செய்வதுண்டு. பெரும்பாலும் மொந்தன் அல்லது நேந்திரங்காய் தோலில்…
பதிலளிநீக்குகாலிஃபளவர் மற்றும் நீங்கள் சொல்லியிருக்கும் ப்ரொக்கோலி எல்லாம் எங்கள் வீட்டில் செய்வதே இல்லை. ஊட்டி அருகில் தான் எங்கள் ஊர். என்றாலும்…பழக்கமில்லை.
கடைசிக் குறிப்பு ரொம்ப நன்றாக இருக்கிறது.
துளசிதரன்
அதிரா பெரும்பாலும் இலங்கைத் தமிழர் சமையல், கேரள/கன்னியாகுமரி சமையல் பெரும்பாலும் ஒரே போன்றுதான் இருக்கிறது. எங்கள் வீட்டிலும் வாழைக்காய் தோல் துவரன்/தோரன் செய்வதுண்டு. மொந்தன் அல்லது நேந்திரங்காய்…..துவையல் செய்வதுண்டு. நீங்கள் செய்திருப்பது போல். அப்புறம் கேரளத்து மெழுக்குப்புரட்டி…ஹிஹி அப்படினா சும்மா காரம் உப்பு எல்லாம் போட்டு வதக்கி எடுப்பது….
பதிலளிநீக்குவாழைக்காய்ப் புட்டு/பொடித்துவல் செய்வதுண்டு….ரொம்ப நல்லாருக்கும் அதிரா.
கீதா
மற்றொன்று வாழைக்காய் தோல் நீங்கள் செய்திருப்பது போல் செய்துவிட்டு, கடலைப்பருப்பு மிளகாய் வற்றல், எள்ளு, பெருங்காயம் எல்லாம் வறுத்து பொடி செய்யும் போது நிறைய கறிவேப்பிலை போட்டு பொடித்து வைத்துச் சேர்த்தால் வித்தியாசமான டேஸ்ட்…
பதிலளிநீக்குநானும் பெரும்பாலும் காய்களுக்குத் தோல் நீக்காமல்தான் செய்கிறேன் அதிரா. சர்க்கரை பூஷணிக்காய், பங்களூர் கத்தரிக்காய் இளசாக இருந்தால் அப்படியே, உருளை எல்லாம்….
கீதா
அதிரா ப்ரொக்கோலி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். க்ரெவி, சலாட் எல்லாம் பிடிக்கும் இந்த முறை செய்யலாம் ஆனால் முதலில் விலை நாங்கள் வாங்கும் விலை இல்லை. இரண்டாவது பூச்சிகள் இருப்பது கூடத் தெரியாமல் போகும். என்பதால் ஆனால் விலை வாங்கும் விலையில் இல்லாததால் வாங்குவதில்லை. என் மகன் அங்கு அடிக்கடி வாங்கிச் சமைக்கிறான். இந்த பட்டர் ஆர் மார்கரைன் போடுறீங்க இல்லையா(நான் மார்கரைன் பயன்ப்டுத்துவ்தில்லை…) பட்டர் போட்டு கொஞ்சம் பெப்பர், ரெட் சில்லி ஃப்ளெக்ஸ் பிடித்தால் பூண்டு, வெங்காயம் பேஸ்ட் உப்பு எல்லாம் பட்டருடன் கலந்து மேலே பூசி ஸ்டீம் பண்ணினால் நல்ல வித்தியாசமான சுவையோடு இருக்கும்…கலர் மாறாமல் ஸ்டீம் செய்யணும்…
பதிலளிநீக்குகடைசிக் குறிப்பு செம அதிரா…
கீதா