1975 இல் வெளிவந்த திரைப்படம்.
'மன்னவன் வந்தானடி' படத்தில் இடம்பெற்ற பாடல். கண்ணதாசன் பாடலுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையில் டி எம் எஸ் பாடியிருக்கும் பாடல். இதே படத்தின் இன்னொரு பாடலை மற்றொரு ரிஸர்வ் செய்து வைக்கிறேன்!
இதுவும் நான் தஞ்சையில் பார்த்த திரைப்படம்.
"சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே..."
ஒரு சோகத் தாலாட்டு. நான் அடிக்கடி கேட்கும் பாடல்.
முன்னாள் பணக்கார கதாநாயகன் குடும்பத்தை ஏமாற்றிய வில்லனைப் பழிவாங்கும் படம். தமிழ்ப்பட வழக்கத்தின் படி கடைசிக் காட்சியில் கதாநாயகன் துப்பறியும் அதிகாரி என்பதும் தெரிய வரும் என்று நினைவு. காமெடி போர்ஷன் செய்யும் நாகேஷும் போலீஸ் அதிகாரி என்று நினைவு. எப்போதோ அது ரிலீசான புதிதில் பாட்டியின் ஆசைக்காக அவருடன் பார்த்த படம்!
குடிசையில் வாழும் சகோதரியின் குழந்தைக்கு நாயகன் பாடும் தாலாட்டு. 'மாளிகை மன்றம் கண்ட மன்னன் இன்று மாமர ஊஞ்சல் கொண்டான் இங்கே' என்று பாடுகிறான்.
பல்லக்கில் பட்டுக்கட்டி பரிசுகள் எடுத்து
பச்சைப்பவளம் முத்து மாணிக்கம் கொடுத்து
செல்லக்கிளிக்கு வரும் மாமனின் விருது - ஐயா
சிந்தை கலங்காதே நாளைக்கு வருது..
கன்னத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு
பிள்ளைக்கு தெய்வம் தந்த வைரத்துத் தோடு
அன்னைக்கு வீடு இன்று சின்னஞ்சிறு கூடு - மாமன்
அரண்மனைக் கட்டி வைப்பான் நாளை அன்போடு
உள்ளத்தில் பாசம் உண்டு ஊமைக்குத் தெரியும்
ஊமையின் பாஷை இங்கு யாருக்குப் புரியும்?
காலத்தில் தெய்வம் வந்து சொந்தத்தை இணைக்கும் - என்
கண்ணனின் வாழ்வுக்கொரு சொர்க்கமும் பிறக்கும்
will come afterwards. Present Sir!
பதிலளிநீக்குஇனிய்அ காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா வெங்கட்ஜி நெல்லை எல்லோருக்கும்
பதிலளிநீக்குபாட்டுப் பொட்டி 5.59க்கு வந்துவிட்டதே!!
கீதா
இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன் நண்பரே
பதிலளிநீக்குநன்றி
அட! கீதாக்கா முந்திக்கிட்டாங்க என் கணினி கொஞ்சம் மந்தமாக இருந்துச்சு...என்னைப் போல...ஹா ஹா ஹா ஹா
பதிலளிநீக்கு..
கீதா
இனிய காலை வணக்கம் கீதா அக்கா.
பதிலளிநீக்குகரந்தை சகோவும் இன்று வந்துவிட்டார்...வணக்கம் கரந்தை சகோ
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குகீதா... இன்று ஷெட்யூல் செய்த நேரம் 5.59
பதிலளிநீக்கு(அட்வான்ஸ்) இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குசெம பாட்டு! பாட்டு கேட்டதுண்டு என்ன படம் என்றெல்லாம் தெரியாது...ஹிஹிஹிஹி இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்
பதிலளிநீக்குவரிகள் அருமை......ஆரம்பவரியே கதையைச் சொல்லிவிடுகிறது அதாவது பாட்டு சிச்சுவேஷனை....
கீதா
காலை வணக்கம் பானு அக்கா.
பதிலளிநீக்குதா... இன்று ஷெட்யூல் செய்த நேரம் 5.59//
பதிலளிநீக்குதெரிந்து கொண்டேன் நேற்று நீங்க சொல்லியிருந்தீங்களே!!! பாருங்க இன்னிக்குக் கரெக்டா வந்துருச்சு...என்னவோ புரியலை போங்க...சில சமயம் 6 ஆகி சில நொடித்துளிகள் கழிந்தே அதாவது 6.01 வருவதற்கு முன் பதிவு வரும் என் கணினியில்....சில நாட்களில் 6.01 க்குப் பதிவு என் கணினியில் வரும். இத்தனைக்கும் டக்கென்று தளம் ஓபன் ஆகிறது இப்போதெல்லாம்...என்னவோ போங்கப்பா புரியலை
கீதா
கீதா
பாட்டு கொஞ்சம் நடுவில் சோகமாகப் போகும். ஆனாலும் ரசிக்க முடியும் கீதா. நான் அவ்வப்போது பகிரும் பாடல்களில் ஒன்று இது.
பதிலளிநீக்குGood morning. New one to me!!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநேற்று கிளம்பி வருவதற்கு ரொம்பவே லேட் . (வலை தளத்திற்குதான்) கடமைகள் காலை இறுக கட்டி விட்டது. இன்று கடமைக்குள் கால் பதிப்பதற்கு முன்பாகவே வருகை தந்து விட்டேன்.
இந்த பாடல் கேட்டிருக்கிறேன். டி. எம் எஸ் குரலில் மிகவும் நன்றாக இருக்கும். படம் பார்த்ததில்லை. இப்போதும் பாடல் கேட்டேன். ரசித்தேன்..அருமையான பாடல் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலையிலேயே வந்து பாடலைக் கேட்டு ரசித்தமைக்கு நன்றி கமலா ஹரிஹரன் சகோ...
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகுட்மார்னிங் மிடில்க்ளாஸ்மாதவி... ரசித்தீர்களா?
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா.. ரஃபியின் அந்தப் பாடல் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.
பதிலளிநீக்கு70 களில் கேட்ட பாடல். பொன் முத்து வைரம் என்று பெருந்தன்மையான சொல் விளையாட்டு.
பதிலளிநீக்குபடம் பார்த்ததில்லை.
பாடல் அருமை.
https://youtu.be/ApjA9OfAUk4
பதிலளிநீக்குரஃபியின் அந்தப் பாடலின் மூலம் எல்விஸ் ப்ரெஸ்லியின்
Marguirita.
பாட்டு முன்பு நிறைய தடவை கேட்டிருக்கிறேன். பாடல் வரிகளை இப்போது புரிந்து படித்தேன். நல்ல தேர்வு. என்ன ஒண்ணு ஜிவாஜியின் பயமுறுத்தும் முகம்.
பதிலளிநீக்குஅட! என்ன அருமையான பாடல்! வழக்கம் போல் சொல்லும் பதில்தான் கேட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டது என்று. இப்படம் வெளியான போது பள்ளியில் என்பதால் பார்க்கவில்லை. அப்புறம் கல்லூரி வந்த பிறகு பார்த்தேன். படம் பற்றிய நுணுக்கமான நினைவு இல்லை ஆனால் பாடல்கள் நினைவிருக்கிறது...மற்றொரு பாடல் "காதல் ராஜ்ஜியம்" தானே? அதுவும் அழகான பாடல்.
பதிலளிநீக்குதுளசிதரன்
அருமையான பாடல் ஊமைபாஷை எனக்கும் ஓரளவு தெரியும் சிறிய வயதில் எனக்கு தெரிந்த ஒரு தாத்தாவோடு தினம் போராடிக்கொண்டு இருப்பேன்.
பதிலளிநீக்குபாடலை அடிக்கடி கேட்டு இருக்கிறேன். படம் பார்த்தது இல்லை.
பதிலளிநீக்குபாடல்வரிகள் சாதாரணம். ஆனால் டிஎம்எஸ் மிக அழகாகப் பாடியுள்ளார். சிவாஜி கைக்குழந்தையை எப்படி ஹாண்டில் செய்கிறார். அதுவும் டைரக்டர் சொல்லாமலே சிரித்துவைக்கிறது!
பதிலளிநீக்குஇந்த சமயத்தில் மனம் எம்ஜிஆரைக் கொண்டுவந்து நிறுத்தியது. எம்ஜிஆரின் கைகளில் குழந்தை ஒன்று மாட்டிக்கொண்டால்..பாட்டை ரசிப்பதை விட்டுத்தள்ளுங்கள் - ஐயோ..என்ன பாவம் செய்துவிட்டு இந்த ஆளிடம் இப்படி அவஸ்தைப்படுகிறது என நாம் கவலைப்படாமல் இருக்கமுடியாது. சில பாடல் காட்சிகளை இவ்வாறு பார்த்திருக்கிறேன்..நினைவுக்கு சட்டென்று வரமாட்டேன் என்கிறது.
@ ஸ்ரீராம்:.. பாட்டியின் ஆசைக்காக அவருடன் பார்த்த படம்!//
பதிலளிநீக்குசிவாஜிக்கு இப்பேர்ப்பட்ட பக்தர்கள் அதிகம்.. அவர் செய்த புண்ணியம்!
நல்ல பாட்டு...
பதிலளிநீக்குபாட்டு கேட்டிருக்கிறேன். படம் பார்த்ததில்லை. நிறைய சிவாஜி பாடல்கள் ஸ்டாக்கில் உள்ளது போலிருக்கிறேதே...! பொன்னூஞ்சல் படத்திலிருந்து ஒரு பாட்டை போடுவது.
பதிலளிநீக்குஇனிய பாடல் கேட்டு மகிழ்ந்தேன் பாராட்டுகள்
பதிலளிநீக்குஇள வயதில் கேட்ட பார்த்தவை எல்லாம் நினைவில் நிற்கும் நானிந்த படங்களைப் பார்த்த நினைவு இல்லை
பதிலளிநீக்குஅழகிய பாட்டு. எனக்கு ஆயிரம் பாட்டுக்கள் தெரிந்தாலும்.. முதல் வரிகள் மட்டுமே தெரியும்.. இடைவரி கேட்டால்.. கேட்காத பாட்டு என்றுதான் சொல்லுவேன்..
பதிலளிநீக்குவீடியோவில் சிவாஜி அங்கிள் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ.... சிங்கமா இருக்கிறார்:).
ஓ இவ மஞ்சுளாவோ? எனக்குத்தெரியாதே.. இவ ஆர் என நினைச்சேன்.. ஏனெனில் குண்டான மஞ்சுளா அவர்களைத்தான் தெரியுமெனக்கு...
மாலை வணக்கம்....
பதிலளிநீக்குஒரே ஜிவாஜி பாட்டா இருக்கே.... :)
கேட்க மட்டும் செய்கிறேன்! பார்க்க மனதில் தைரியம் இல்லை.
வாங்க நெல்லை... சிவாஜிக்கு நல்ல பரந்த முகம்... அதுதான் அப்படி இருக்கிறது!
பதிலளிநீக்குவாங்க துளஸிஜி... ஆமாம், இன்னொரு பாட்டு அதேதான். அப்புறம் பகிர்வேன். நல்லதொரு பாடல் அதுவும்.
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி.. நீங்கள் சொல்வது வாய் பேசமுடியாத, காது கேளாதோருக்கான பாஷை என்று நினைக்கிறேன். இது உண்மை தெரிந்தாலும், அப்போது அவரால் அந்த உண்மையைப் பேசமுடியாத நிலையை கவிஞர் அப்படிச் சொல்கிறார்.
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... நல்ல பாட்டு இல்லை?!!!
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார்.. நீங்கள் சொல்லும் எம் ஜி ஆர் பாடல் வேட்டைக்காரன் பாடலா, பெற்றால்தான் பிள்ளையா பாடலா? டைரக்டர் சொல்லாமலே சிரிக்கிறது என்று சொல்வதைவிட, அது சிரிக்கும்போது டைரக்டர் ஒரு ஷாட் எடுத்து வைத்து இணைத்து விடுகிறார் என்று சொல்லலாம்!
பதிலளிநீக்குபாட்டி சிவாஜி படம் என்றில்லை, புதுப் படம் எல்லாம் பார்க்க ஆசைப்படுவார். ஓடி விளையாடு தாத்தா என்றொரு உருப்படாத படம் அப்புறம் இன்னொரு படம் பெயர் நினைவே இல்லை... அது போன்ற படங்களும் பார்த்திருக்கிறேன்! வேறு வழி? ஆனால் வசந்த மாளிகை அவரால்தான் பார்க்க முடிந்தது. காலாண்டுத் தேர்வில் கம்மி மார்க் அடுத்தவனுக்கு சினிமா பார்க்கும் வாய்ப்பு!
நன்றி டிடி.
பதிலளிநீக்குவாங்க பானுக்கா.. ஆகாயப்பந்தலிலே பாட்டைச் சொல்றீங்களா? இன்னொரு பாட்டா? போட்டுடுவோம்!!!! சிலோன் ரேடியோ நேயர் விருப்பம் மாதிரி!
பதிலளிநீக்குநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார்.
பதிலளிநீக்குவாங்க அதிரா... அது மஞ்சுளா இல்லை. ஜெயசுதா. (படத்தில்) அவர் தங்கை (செல்லக்கிளிக்கு வரும் மாமனின் விருது... ஐயா சிந்தை கலங்காதே நாளைக்கு வருது...)
பதிலளிநீக்குவாங்க வெங்கட்... பாட்டாவது நல்லாயிருந்ததா?
பதிலளிநீக்குஅவ்வ் 14 வது செகண்டிலேயே ஜிவாஜி பயமுறுத்திட்டார் .அப்டியே கண்ணை மூடி டி எம் எஸுக்காக கேட்டேன் ..
பதிலளிநீக்குஇதுவரை கேட்டதில்லை இப்பாடலை .