கண்ணதாசன் பாடலுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை. எஸ் பி பாலசுப்ரமணியம் - வசந்தா குரலில் பாடல். ரசிக்க வைக்கும் இளமையான எஸ் பி பி குரல்.
காட்சி இல்லாமல் பாடலைத் தர முடியவில்லை! காட்சியில் ஜெய்யும், உஷா நந்தினியும்.
கன்றாவியான டான்ஸ். இந்தப் படம் எல்லாம் நான் பார்க்கவில்லை.
காட்சியையே பார்க்க மாட்டேன். MP3 வடிவில் கணினியில் சேமித்து வைத்திருக்கும் பாடல்களில் ஒன்று. எஸ் பி பி குரலுக்காகத்தான்! வசந்தாவுடன் அவர் பாடியிருக்கும் சில பாடல்களில் இதுவும் ஒன்று.
தயவு செய்து காட்சியைப் பார்க்காமல் பாடலை ரசிக்கவும்.
தயவு செய்து காட்சியைப் பார்க்காமல் பாடலை ரசிக்கவும்.
தயவு செய்து காட்சியைப் பார்க்காமல் பாடலை ரசிக்கவும்.
தயவு செய்து காட்சியைப் பார்க்காமல் பாடலை ரசிக்கவும்.
இன்று முதல் செல்வம் இது என்னழகு தெய்வம் இது
வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சுமுக சந்திரனும்
காண வந்தது..
எடுத்தேன் நெஞ்சின் பக்கம்
இன்னுமா கண்ணே வெட்கம்?
கொடுத்தேன் கண்ணில் முத்தம்
கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்
பொன்னைத்தான் தெய்வம் என்று
போதை நான் கொண்டேன் அன்று
பொன்னிலே போதை இல்லை
உன்னிடம் கண்டேன் இங்கு
கைகளால் அத்தான் தன்னை
கைதுசெய் காதல் பெண்ணே
முத்துப்போல இங்கே மெல்ல
சித்திரம் தந்தால் என்ன...
வாழ்க...
பதிலளிநீக்குகுட்மார்னிங் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...
பதிலளிநீக்குஇந்தப் பாட்டைக் கேட்டிருக்கிறேன்...
பதிலளிநீக்குபடம் பார்த்ததில்லை..
நல்லவேளை தப்பித்தேன்..
என்னது...
பதிலளிநீக்குஇன்னும் ஒருத்தரையும் காணோமே!...
பாட்டைக் கேட்காமல் தப்பித்திருந்தால் இழப்பு! படம் பார்க்காமல் தப்பித்ததில் மகிழ்ச்சி! பாட்டு நல்லா இருந்ததா துரை ஸார்?
பதிலளிநீக்குஇந்தப் பாடலில்
நீக்குவசந்தாவின் குரல் மிகவும் பிடிக்கும்..
கீதா ரெங்கன் வி ஐ பி ஏரியாவில் இருந்தும் அவர்கள் வெட்டுப்பட்ட இணைய இணைப்பை சரிசெய்யாமல் நாட்கள் நகர்வதில்லை அவருக்கு மிக வருத்தம். வாட்ஸாப்பில் புலம்புகிறார். கை துறுதுறு என்கிறதாம்... கமெண்ட்ஸ் எழுதி தயாராய் வைத்திருக்கிறாராம்.. இங்கு அவரின் காலை வணக்கம் அடுத்த வாரமாவது கிடைக்கட்டும்!
பதிலளிநீக்குஎனக்கு எஸ் பி பி குரலுடன் வஸந்தா குரல் பிடிக்கும்!
பதிலளிநீக்கு:))))
கண்ணுல எதுக்குடா முத்தம்?....ந்னு பசங்களோட கலாய்த்ததுண்டு...
பதிலளிநீக்குகழுத்து மணியக் கடிச்சிக்கிட்டே
புன்னகைப் பூக்கள் அந்தப் பக்கமா போவாங்க!...
இதை எழுதத் தெரியாம எழுதி
பேரைக் கெடுத்துக்கிட்ட ஆளுங்களும் உண்டு.....
காலை வணக்கம் துரை சார், ஸ்ரீராம்.
பதிலளிநீக்குபாட்டு கேட்டேன். மினிமைஸ் செய்துவிட்டால் படம் பார்க்க வேண்டாமே.
உஷா நந்தினி ஏற்கனவே பிடிக்காது.
பாவம் ஜெய் ஷங்கர்.ஹாஹா.
கீதாவுக்கு வந்த தொல்லைதான் என்ன. பாவம்.
வாங்க வல்லிம்மா... குட் ஈவ்னிங் / குட் மார்னிங். பாட்டு எப்படி? ரசிக்க முடிந்ததா? (வயசானவர்களால் ரசிக்க முடியாது!)
பதிலளிநீக்குதுரை ஸார்...
பதிலளிநீக்கு//கண்ணுல எதுக்குடா முத்தம்?...//
கண்மலர்களின் அழைப்பிதழ்... பொன் இதழ்களின் சிறப்பிதழ்...!
//இதை எழுதத் தெரியாம எழுதி//
எப்படி எழுதுவங்களாம்?!!
ஸ்ருங்கார ரசம்!...
பதிலளிநீக்குஅது உட்கார்ந்து எழுதுனால்லாம் பிடிபடாது...
இளந்தாம்பூலம் மெல்லுவது மாதிரி ஒரு இனிமை..
அதுக்கு ஒரு கொடுப்பினை வேணும்...
// எப்படி எழுதுவாங்களாம்?..//
பதிலளிநீக்குஇளந்தாம்பூலம் மெல்லுவது என்பது கூட தவறு....
இளந்தாம்பூலம் சுவைப்பது என்பது தான் சரி...
காட்சியைப் பார்க்காமல் வரிகளை ரசித்தேன்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குஜெய்சங்கர் எனப் பார்த்தவுடன், காட்சிகளைப் பார்க்கக் கூடாது என ஏற்கனவே முடிவு செய்து விட்டேன். நீங்களும் எச்சரிக்கை கொடுத்தது நல்லதாகப் போயிற்று.
இந்தப் பாடல் இதுவரை கேட்ட நினைவில்லை. இப்போது தான் முதல் முறை கேட்கிறேன். அப்படி ஒன்றும் நன்றாக இருப்பதாகத் தோன்றவில்லை... ஒரு வேளை “கேட்கக் கேட்கத்தான் பிடிக்குமோ?
பாட்டு வரிகள் சுமார். சமாளிப்ஸ்காக வயதானவர்களால் ரசிக்க முடியாதுன்னு சொல்றீங்க.
பதிலளிநீக்கு‘சுவத்துக் கீரையை வழிச்சுப் போட்ட சொரணை கெட்ட பொண்டாட்டி’- இது நேற்றைய உங்கள் சந்தேகத்துக்கான பதில்
பலமுறை கேட்டபாடல் காட்சியில் வந்த கில்லர் 'என்னத்த' கண்ணையாவைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...
பதிலளிநீக்குகேட்டிருக்கிறேன். பெரிதாக ரசிக்கவில்லை.
பதிலளிநீக்குஇப்போதிருக்கும் யூ-ட்யூப் காலத்தைத் தள்ளிவிட்டு மீண்டும் ஆல் இந்தியா ரேடியோ காலத்திற்குப் போய்விடமாட்டோமா என்கிற ஏக்கம் வராமலில்லை.
//ஸ்ருங்கார ரசம்!... அது உட்கார்ந்து எழுதுனால்லாம் பிடிபடாது...//
பதிலளிநீக்குதுரை ஸார்... சிறப்பாய் யாராவது - நீங்களே கூட - எழுதினால் ரசிக்கலாமே...
:)))
!?...
நீக்குநன்றி முனைவர் ஐயா...
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.. எப்போதுமே ஒரு விஷயத்தை மிகச் சிறப்பாக எதிர்பார்த்தீர்கள் என்றால் ஒன்றும் இல்லை என்றுதான் தோன்றும்! (தத்துவம்!!!) எதிர்பார்ப்பில்லாமல் இருந்தால் சாதாரண விஷயங்களும் நன்றாயிருக்கும்! அது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
பதிலளிநீக்கு:)))
நெல்லைத்தமிழன்...
பதிலளிநீக்கு//பாட்டு வரிகள் சுமார். சமாளிப்ஸ்காக வயதானவர்களால் ரசிக்க முடியாதுன்னு சொல்றீங்க.//
உண்மைதான். வரிகள் சுமார். எனக்கு எஸ் பி பி குரலுக்காக பிடிக்கும்.
//‘சுவத்துக் கீரையை வழிச்சுப் போட்ட சொரணை கெட்ட பொண்டாட்டி’- இது நேற்றைய உங்கள் சந்தேகத்துக்கான பதில்//
பொண்டாட்டி என்று கேள்விப்பட்டதில்லை. வேறு வார்த்தை சொல்லிக் கேட்டு வழக்கம். நான் கேட்டது இதற்கும் முந்தைய வரியை. நல்லாயில்லை என்று குற்றம் சொல்லி எறியப்பட்ட கீரை சுவற்றில் ஒட்டியது. அதை வழித்துப் போடச் சொல்கிறான், கு.வி.மீ.ம ஒட்டாத கணவன். அந்த முதல் வரியைக் கேட்டேன்!
வாங்க கில்லர்ஜி.. இந்தக் காட்சியே எனக்கு பர்யா தான் என்கிற ஹிந்திப் படைப்பு பாடல் காட்சி ஒன்றை நினைவுபடுத்தியது. எண்ணத்தைக் கன்னையா எப்பவுமே சூப்பர்தான்!
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார்.. குரல்தான் ஸ்பெஷல். ஆல் இந்தியா ரேடியோ காலத்துக்கும், இலங்கை ஒளிபரப்புக் கூட்டுஸ்தாபன காலத்துக்கும்!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபாட்டு எஸ்.பி.பி குரலில் நன்றாக இருந்தது. முன்பு கேட்டிருக்கிறேன்.படம் பார்த்ததாக நினைவில்லை.
எஸ.பி குரலில் எந்த பாட்டும் கேட்கலாம். மற்றொருமுறை தங்கள் பதிவில் கேட்க வைத்ததற்கு மிக்க நன்றி.
கீதா ரெங்கன் அவர்கள் வீட்டு இணையம் விரைவில் சரியாக எனது பிரார்த்தனை களும்..
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு.இந்தப் பாடல் இதுவரை கேட்டதில்லை ஸ்ரீராம். இப்பத்தான் கேட்கிறேன். நன்றாக இருந்தது. ரொம்ப மென்மையான இசை….பாட்டே கேட்டதில்லை அப்புறம் இல்லையா படம்…ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
இந்தப் படமும் பார்க்க வேறு ஒன்றுமில்லை என்று எப்போதோ பார்த்த படம்… மதுரையில் பி ஏ. படிக்கும் போது…அவ்வளவாக நினைவில்லை. அப்போது கேட்டதுதான் அப்புறம் இப்போதுதான்…எனவே அத்தனை நினைவில்லை. …பாடல் நன்றாக இருக்கிறது. ஸ்ரீராம்ஜி
துளசிதரன்.
பாலசுப்பிரமணியம் குரல் இனிமையாக இருக்கும்.
பதிலளிநீக்குபாடல் காட்சிகள், படம் எல்லாம் நல்லாவே இருக்காது.
ஜெயசங்கர் நட்புக்காக நடித்து கொடுத்து இருப்பார் போலும்.
மிகவும் நன்று பாராட்டுகள்
பதிலளிநீக்கு