பார்க்க ஆட்களே இல்லாத மைதானத்தில் யாருக்காக ஆடுகிறார்கள்?
பின்னால் வீடுகளில் இருப்பவர்கள் எல்லாம் ஜன்னல் வழியே பார்ப்பார்கள் என்று ஆடுகிறார்களா என்று பார்த்தால் ஜன்னல்களும் மூடித்தான் இருக்கின்றன....!
"அடடே... அப்போ இந்தப் பக்கம் இருக்கும் வீடுகள்?" ஊ...ஹூம்.
ஆட்டமே வேணாம்... வாங்கப்பா போகலாம்...
"அங்கே பார்... இரண்டு ஜன்னல் திறந்திருக்கிறது..."
"இங்கே வேற கொஞ்சம் பேர் உட்கார்ந்திருக்காங்கப்பா......"
"அப்போ வாங்கப்பா... ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்..."
'என் ஆளு வரச் சொல்லி இருக்கா... நைஸா எதையாவது சொல்லி போயிடலாம்னு பார்த்தா விட மாட்டேங்கறாங்களே....'
"ஆ... காலு....என் காலு... கால் சுளுக்கிடுச்சு.. நான் கிளம்பப் போறேன்..."
"புரியுது... ஓகே... ஓகே... கிளம்பு.. இந்தா நீ வாங்கி ஒளிச்சு வச்சுருக்கற பூங்கொத்து... இதையும் எடுத்துக்கிட்டு கிளம்பு ராசா....."
பதிவில் சொல்லப்படும் மெஸேஜ்.. பாதி படிச்சாலே மீதியை நம்ம மைண்ட் ஃபில் அப் பண்ணிக்கும்! இல்லையா?
ஜன்னல் திரை வழியே படம் எடுத்துட்டு...
என்னமோ சொல்றாங்களேன்னு பார்க்காதீங்க... நிசம்மா...
இது ஒரு ஸ்பெஷல் லென்ஸில் எடுக்கப்பட்ட படங்கள்...
இந்த வாரமும் சிக்கிமா?
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா, பானுக்கா...எல்லோருக்கும்
பதிலளிநீக்குகீதா
ஹா கீதாக்கா முந்திக்கிட்டாங்க நான் பெரிசா அடிக்கறதுக்குள்ளயும் ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
எல்லோருக்கும் விஷு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா
கடைசி மூன்று படங்களும் எடுக்கப்பட்ட விதம் அருமை. கை தேர்ந்த ஃபோட்டோகிராஃபர்? ஜன்னல் மொத்தம் ஐந்து திறந்திருக்கின்றன.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... காலை வணக்கம்.. ஆமாம் .. அதே.. அதே..
பதிலளிநீக்குவாங்க கீதா ரெங்கன்.. துரை செல்வராஜூ ஸார் (முன்னதாகவே) காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இவர்கள் பார்த்தது இரண்டு ஜன்னல்தான்.. அதுவே அவர்களுக்குப் போதும் போல! நன்றி கீதா அக்கா!
பதிலளிநீக்குநன்றி நண்பர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்..
பதிலளிநீக்குவிசு மன்னிக்கவும், விஷு வாழ்த்துகள்கீதா.
பதிலளிநீக்குதி/கீதா, ம்ம்ம்ம்ம்ம்? நேத்துத் தானே விஷு புண்யகாலமும் சேர்ந்து வந்தது? இன்னிக்குத் தான் விஷுக்கனி காணலா??????????
பதிலளிநீக்குபார்வையாளர்கள் இல்லாமல் விளையாடுவது கொடுமை அல்லவா
பதிலளிநீக்குபொருத்தமான வார்த்தைகளை இரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
பதிலளிநீக்குஇன்னிக்குத் தான் விஷுக்கனி காணலா??????????//
பதிலளிநீக்குஆமாம் கீதாக்கா...இன்றுதான் விஷுக்கனி காணல்....கேரளத்துல இன்னிக்குத்தானே விஷு...எங்கள் ஊர்க்கோயிலில் இன்று விஷுக்கனி
கீதா
படங்கள் எப்போதும்போல். இதைவிட, சென்றவர் சுவாரசியமான பயணக்கட்டுரை, அனுபவங்கள் எழுதியிருந்தால் இன்னும்பல ரசித்திருக்கலாம்.
பதிலளிநீக்குசித்திரைப் புத்தாண்டு, மற்றும் விஷுக்கனி வாழ்த்துகள் (துளசிதரன், ஜிஎம்பி சாருக்கு)
படங்களுக்கு பொருத்தமாய் வார்த்தைகள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவிஷுக்கனி காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
@ கீதா: ..எங்கள் ஊர்க்கோயிலில் இன்று விஷுக்கனி //
பதிலளிநீக்குநீங்கள் கேரளாவுக்காக விளையாடுகிறீர்களா? இல்லை தமிழ்நாட்டுக்கா! ஒன்னும் புரியமாட்டேங்குதே..
ஏகாந்தன் சார்.... எந்த ஊர் என்றாலும் கீதா ரங்கன் "எங்க ஊர்" என்று சொல்லிக்கறார். அனேகமா சில பல ஜென்மம் முன்னால் அவர் கணியன் பூங்குன்றனார் மகளாகப் பிறந்திருப்பார்னு (யாதும் ஊரே யாவரும் கேளிர்) நினைக்கறேன். அகத்தியர் நாடி ஜோதிடம்தான் உண்மையைச் சொல்லும்.
பதிலளிநீக்குரசித்தேன்...
பதிலளிநீக்குநெ.த. //அனேகமா சில பல ஜென்மம் முன்னால் அவர் கணியன் பூங்குன்றனார் மகளாகப் பிறந்திருப்பார்னு// அதை முழுசும் படிச்சா (கணியன் பூங்குன்றனார் பாடலை) அர்த்தமே மாறுபடும் என எண்ணுகிறேன். :))))))
பதிலளிநீக்குஸ்ரீராம் கமென்ட்ஸ் சூப்பர்...கால் சுளுக்கல் கூட ஆளைப் பார்க்கப் போக எக்ஸ்க்யூஸா பயன்படும் ஹிஹிஹி..பூங்கொத்து வேற செமை...
பதிலளிநீக்குஜன்னல் திரை வழியா எடுத்த படங்கள் நல்லாருக்கு..
வீடுகளோ இல்லை லாட்ஜுக்களோ ஜன்னல்கள் சில ஒரு கதவு மட்டும் கூடத் திற்ந்திருக்கர மாதிரி இருக்கே....
கீதா
நீங்கள் கேரளாவுக்காக விளையாடுகிறீர்களா? இல்லை தமிழ்நாட்டுக்கா! ஒன்னும் புரியமாட்டேங்குதே../ ரெண்டும் கலந்த கலவை ஹிஹிஹிஹி....கேரளா பார்டர். எங்க வீட்டுல ரெண்டுமே கொண்டாடுவாங்களே!! அதாவது பிறந்த வீட்டுல...தீபாவளியும் உண்டு ஓணமும் உண்டு...என் தங்கை திருவனந்தபுரத்தில்தான் இருக்கிறாள்...
பதிலளிநீக்குகீதா
ஏகாந்தன் அண்னா உங்க கமென்டைட் பார்த்ததுமே நினைச்சேன் நெத எங்கடானு காத்திருப்பார்....என்னை வம்பிக்கிழுக்க ஹா ஹா ஹா ஹா ஹா..பார்த்தா அடுத்தாபுல நெத ..
பதிலளிநீக்கு...நான் எந்த ஊரையும் எங்க ஊர்னு சொல்லிப்பேன் அபப்டினு நெத குழம்பி என்னைக் கலாய்ப்பது..ஹா ஹா ஹா ஹா.வழக்கமான ஒன்று...நானும் உங்கள் எல்லோரது கலாய்ச்சலையும் வாசித்து ஹா ஹா ஹா என்று ரசித்து சிரிப்பது வழக்கம்... ரெண்டு பேருக்கும் என் காலை பிடிச்சு இழுக்கலனா தூக்கம் வராதே ஹிஹிஹிஹி
ஏகாந்த அண்ணா இப்ப கிரிக்கெட் ஐபிஎல் லில் இருப்பதால நான் கேரளாவுக்கா தமிழ்நாட்டுக்கா "விளையாடுறேன்னு."..ஹா ஹா..அண்ணா வாங்க வாங்க...சிக்கிக்கிட்டீங்களா?!!! ஹா ஹா ஹா.ஐபிஎல் டீம் மாதிரிதான் நானு,,...தமிழ்நாட்டுக்காரர் வேறு மாநிலத்துக்காக விளையாடலையா..அப்படித்தான்....
எல்லா ஊரும் எங்க ஊருதேன்...இப்ப இருக்கற பிடிக்காத சென்னையும் எங்க ஊருதேன்....ஹா ஹா ஹா..
அண்ணா எங்க அப்பா சைட் கேரளா ரூட்ஸ் திருநெல்வேலி ரூட்ஸ் உண்டு...அம்மா சைட் திருனெல்வேலி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகர்கோவில்/திருவண்பரிசாரம்...இப்ப சொல்லுங்க ரெண்டு பக்கமும் வரும்தானே ஹா ஹா ஹா ஹா...(ஹப்பாடியா ஒரு வழியா விளக்கம் சொல்லியாச்சு..ஏகாந்தன் அண்ணா இப்ப ரொம்பவெ குழம்பிப் போயிருப்பார்....இந்த கீதா என்னதான் சொல்ல வரா...)
கீதா
வணக்கம் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குபடங்கள் வழக்கம் போல - படங்களுக்குத் தந்திருக்கும் கருத்துகள் சிறப்பு.
சிக்கிம் படங்கள் இன்னும் எத்தனை மாதங்கள் வரும்? - இது புதன் கிழமைக்கான கேள்வியாகவும் வைத்துக் கொள்ளலாம்! :)))))))
@ நெ.த.: அகத்தியர் நாடி ஜோதிடம்தான் உண்மையைச் சொல்லும்..//
பதிலளிநீக்குகீதாவின் கதை நாடி ஜோதிடம்வரை கொண்டுவந்து விட்டுத்தே.. நம்ப எபி குடும்பத்தில நாடி ஜோதிட அனுபவம் யாருக்காவது உண்டா?
கதை, கேப, இசை, charity, travel, cookery என்பதுபோல எபி-ல ஜோஸ்யம், அமானுஷ்யம்னு ஒரு நாளை ஒதுக்கலாமோ -ஸ்ரீராம் கவனிக்கிறாரா?
ஏகாந்தன் சார், //நம்ப எபி குடும்பத்தில நாடி ஜோதிட அனுபவம் யாருக்காவது உண்டா?// நாடிஜோதிட அனுபவம் மட்டுமில்லாமல் ஜோதிட அனுபவங்களே நிறைய உண்டு. எழுதியும் இருக்கேன். அமானுஷ்யத்துக்கும் குறைச்சலே இல்லை! நாடி ஜோதிடம் என்பது ஒரு சிலரால் மட்டுமே சரியாகக் கையாளப்படுகிறது. நம்ம ரங்க்ஸ் ஒரு காலத்தில் இதில் பைத்தியமாக இருந்தார். கடைசியாப் பார்த்த ஒரு நாடி ஜோதிடத்தில் வந்த பலன்கள் முன்னுக்குப் பின் முரணாக அமையவே அதன் பின்னால் விட்டு விட்டார். :)))) என்னைப் பொறுத்தவரை நான் இவற்றுக்கெல்லாம் ஒரு மௌன சாட்சி!
பதிலளிநீக்கு@ கீதா: ..அண்ணா எங்க அப்பா சைட் கேரளா ரூட்ஸ் திருநெல்வேலி ரூட்ஸ் உண்டு...அம்மா சைட் திருனெல்வேலி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகர்கோவில்/திருவண்பரிசாரம்.//
பதிலளிநீக்குஆஹா..உங்கள் biopic சுவாரஸ்யம்! ஐபிஎல் கான்செப்ட்-ஏ உங்களிடம்தான் ஆரம்பித்திருக்கிறது என்பது தெரிந்துவிட்டது. இரண்டு டீமுக்கும் ஆடலாம் நீங்கள்..Qualified !
@ கீதா சாம்பசிவம்: ..ஜோதிட அனுபவங்களே நிறைய உண்டு. எழுதியும் இருக்கேன். அமானுஷ்யத்துக்கும் குறைச்சலே இல்லை!//
பதிலளிநீக்குஅப்படியா! Interesting.. சாவகாசமாகப்போய்ப் படிக்கிறேன்.
@ கீதா:..இப்ப இருக்கற பிடிக்காத சென்னையும்//
பதிலளிநீக்குஎன்ன, இப்பிடிச் சொல்லிப்போட்டீங்களே ஞாயித்துக்கிழமையும் அதுவுமா! வேர்த்தாலும், விறுவிறுத்தாலும் சென்னைன்னா ரொம்ப பேருக்கு உசிராச்சே...
நாடி ஜோதிடம், வெறும் ஜோதிடம் அனுபவம்லாம் உண்டு ஏகாந்தன் சார்.
பதிலளிநீக்குகீதா ரங்கன் இன்னும் முழுமையாய் சொல்லையும். எப்போதோ அவர் இலங்கை பற்றியும் சொல்லியிருக்கிறார்.
@ நெ.த: ..எந்த ஊர் என்றாலும் கீதா ரங்கன் "எங்க ஊர்" என்று..//
பதிலளிநீக்குஇதைப் படித்தவுடன் நினைவுக்கு வந்துவிட்டாரே கண்ணதாசன் :
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா..
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா..!
அருமையான படங்கள் பாராட்டுகள்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅத்தனைப் படங்களும் நன்றாக உள்ளது.
வர்ணனைகளும் அருமை.புகைப்படங்கள் எடுத்த விதம் அருமை.
விஷுக்கனி கானும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படங்கள் அருமையா,தலைப்பு அருமையா! இரண்டுமே பெருமையாக அமைந்துள்ளது. அவகு தலைப்புகள். அன்புடன்
பதிலளிநீக்குஅழகு தலைப்புகள்.
பதிலளிநீக்குகீதாவோட ஊர்னு கேட்டால் மொத்த குமரிக்கண்டம் வரை போகும்.
பதிலளிநீக்குஅனேகமாக பெற்றோர் ஊர் மாறினால் குழந்தைகளும் போகத்தானே வேண்டும்.
கீதா பாட்டியுடன் வளர்ந்த கதை எனக்குத் தெரியும்.
ஆல் இன் ஆல் அழகுப் பெண்.
சிக்கிம் கதையை அழகாப் பயணக் கட்டுரையா எழுதலாம் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குமுடிதிருத்தகம் ஏதாவது கிடைத்ததா. ஹாஹாஹா.
// என் ஆளு வரச் சொல்லி இருக்கா!..//
பதிலளிநீக்குஉண்மையாவே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டேங்கறாங்கப்பா!...
/சித்திரைப் புத்தாண்டு, மற்றும் விஷுக்கனி வாழ்த்துகள் (துளசிதரன், ஜிஎம்பி சாருக்கு)நல்ல ஆள்சார் நீங்க எனக்கு தமிழ் புத்தாண்டு சித்திரையிலா தை மாதத்திலா என்னும் சந்தேகமிருக்கு விஷுவுக்கு கணியும் உண்டு தைப் பொங்களும் உண்டு எல்லா விழா நாட்களும் நமக்கு உண்டு அனைவருக்கும் என்று வாழ்த்துங்கள்
பதிலளிநீக்குஎன்ன விஷுவும் அதுவுமா எல்லோரும் கீதா ரங்கனை பொங்கல் வைத்து விட்டீர்கள்? கீதா உங்களுக்கு துணை நான் இருக்கிறேன்.உங்களைப்போலவே நானும் இப்போது இருக்கும் பிடிக்காத சென்னையையும் சேர்த்து பல ஊர்களுக்கு சொந்தம் கொண்டாடுவேன்.
பதிலளிநீக்குபூர்வீகம் என்றால் தஞ்சை ஜில்லா, கண்டமங்கலம். பிறந்து வளர்ந்தது திருச்சி. மணமாகி மிக சொற்ப காலம் மும்பையிலும் வசித்திருக்கிறேன். பின்னர் மஸ்கட். இன்றுவரை சென்னை. பிறகு பெங்களுர் செல்ல திட்டம். கணவர் வழியில் பாலக்காடு, கோவிந்தராஜபுரம். மகள் திருமணமாகி செல்லும் முன் இரெண்டு வருடங்கள் திருவண்ணாமலையில் வங்கியில் பனி புரிந்தாள். அப்போது அங்கு இருந்தோம். திருவண்ணாமலை மீது ஒரு அலாதி பாசம்.
பதிலளிநீக்குஏகாந்தன் சார் போல எனக்கும் எந்த ஊர் என்றவரே என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
நன்றி நெல்லைத்தமிழன். சிக்கிம் படங்கள் முடியும் தறுவாய். பயணக்கட்டுரை? அடுத்ததில் தருகிறாரா என்று நானும் காத்திருக்கிறேன்!
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
பதிலளிநீக்குஏகாந்தன் ஸார்.. இந்த நிமிடம் கே எல் ராகுல்-கெயில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்! எனக்கும் எந்த ஊர் என்றவரே பாடல் வரிகள்தான் சட்டென நினைவுக்கு வந்தன! (எல்லா கமெண்ட்ஸும் எழுதி முடித்த நேரம் ராகுல் அவுட்!)
பதிலளிநீக்கு//கதை, கேப, இசை, charity, travel, cookery என்பதுபோல எபி-ல ஜோஸ்யம், அமானுஷ்யம்னு ஒரு நாளை ஒதுக்கலாமோ -ஸ்ரீராம் கவனிக்கிறாரா? //
வாரத்துக்கு எட்டு நாள் இருந்தால் சமாளிக்கலாமோ! மோடி கிட்ட கேட்டுப்பார்க்கணும்! ஜோஸ்யம் சொல்ல ஜோசியரில்லை. ஆனால் அது பெரிய கஷ்டமா? அமானுஷ்யம் நிறைய ஏற்கெனவே வந்திருக்கிறது. மீண்டும் வரலாம்! ஜோஸ்யத்தை புதன் கேள்வி பதில் பகுதியிலும், அமானுஷயத்தை வியாழனிலும் சேர்த்து விடலாம்!
நன்றி திண்டுக்கல் தனபாலன்.
பதிலளிநீக்குபாராட்டுகளுக்கு நன்றி கீதா...
பதிலளிநீக்குகீதா அக்கா அமானுஷ்யம் நீங்க என்ன எழுதி இருக்கீங்க? லிங்க் ப்ளீஸ்..
பதிலளிநீக்குநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.
பதிலளிநீக்குநன்றி கமலா ஹரிஹரன் சகோதரி.
பதிலளிநீக்குநன்றி காமாட்சி அம்மா. நலம்தானே?
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா... கீதாவைப் பற்றி நிறையவே அறிந்து வைத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு//சிக்கிம் கதையை அழகாப் பயணக் கட்டுரையா எழுதலாம் ஸ்ரீராம்.//
மறுபடி முதலிலிருந்தா?
//முடிதிருத்தகம் ஏதாவது கிடைத்ததா. ஹாஹாஹா.//
இன்னும் இல்லைம்மா... தேடிக்கொண்டிருக்கிறேன்! ஹா.. ஹா... ஹா...
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. உண்மையைச் சொன்னா எப்போ நம்பி இருக்காங்க..? பொய்யை நம்பும் உலகம் இது!
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.. கீதா ரெங்கன் தானாவே மாட்டிக்கிட்டார்னு நினைக்கறேன்!
பதிலளிநீக்குவித்தியாசமான பதிவு! :)
பதிலளிநீக்கு@ பானுமதி வெங்கடேஸ்வரன்:...எனக்கும் எந்த ஊர் என்றவரே என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.//
பதிலளிநீக்குஅந்தப்பாடலின் வரிகளை மறுபடியும் பார்த்தேன். சும்மா விளையாடியிருக்கிறார் கண்ணதாசன்!
@ ஸ்ரீராம்: நேற்று மதியம் போன எபி, இப்போதுதான் என் கணிணிக்குத் திரும்பியது. இடையில் எந்த உலகம் போயிருந்ததோ! இதுவே அமானுஷ்யமாகத்தான் இருக்கிறது..!
பதிலளிநீக்கு//..இந்த நிமிடம் கே எல் ராகுல்-கெயில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்! எனக்கும் எந்த ஊர் என்றவரே பாடல் வரிகள்தான் சட்டென நினைவுக்கு வந்தன! //
நானும் பார்த்தேன். கெய்ல் விளாசல் ரொம்பநாளைக்குப்பிறகு. சேவாக் சந்தோஷப்பட்டிருப்பார். இரண்டாவது நாளிலும் ஏலம் போகாத கெய்லை சேவாக் சொல்லித்தான் ப்ரீத்தி ஜிந்தா பஞ்சாபுக்காக வாங்கினார். நேற்று ப்ரீத்தியின் முகம் ரொம்பப்பிரகாசம். கூடவே அவருடைய தங்கையின் மலர் முகம்!
உங்களுக்கும் நினைவுக்கு வந்திருக்கிறது அந்தப்பாட்டு.
..வாரத்துக்கு எட்டு நாள் இருந்தால் சமாளிக்கலாமோ! மோடி கிட்ட கேட்டுப்பார்க்கணும்! //
மோதியா! நீங்களுமா! தமிழ்நாட்டு அரசியலில் ஓவராக ஒன்றிவிட்டீர்களோ?