வியாழன், 5 ஏப்ரல், 2018

உயிர் காத்த நண்பனைக் கைவிட்ட பசுபதி.




லாரியில் ஏறினோம்.  எங்களுடன் எங்கள் நாய் டிக்கியும் ஓடி வந்து ஏறியது.  லாரியில் இருந்தவர்கள் ஒரே குரலாக அதை ஏற்றிக் கொள்ளக்கூடாது, இடமில்லை என்று தடுத்தார்கள். 

இரவு பகலாக வேலையில் நான் செல்லும்போது கூட குண்டுகளின் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் என்னைவிட்டுப் பிரியாத அந்த புனிதப் பிறவியைப் பற்றி மற்றவர்களுக்கு என்ன தெரியும்?  கேவலம் ஒரு நாயாகப் பார்த்தனர் அந்தப் பாமரர்கள்.  அதை அடித்து விரட்டினார்கள்.

அவன் மேல் விழுந்த ஒவ்வொரு அடியும் என்னை அடிப்பது போல என் இதயத்தைப் பிழிந்து எடுத்தது.

"அவனை அடிக்காதீர்கள்"  என்று கத்தி விட்டு கீழே இறங்கி டிக்கியை அழைத்தேன்.  வர மறுத்து அழுதது. பிறகு இனிமேல் சமாளிப்பது கஷ்டம் என்று குண்டு கட்டாகத் தூக்கி டிக்கியைக் கீழே விட்டேன்.  லாரியின் கதவை அறைந்து மூடினார்கள்.

டிக்கி குரைத்துக்கொண்டே கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் கூடவே ஓடி வந்தது.  வண்டியில் அது ஏற அது எம்பிக் குதிப்பதும், அழுது குரைத்ததையும் நினைத்தால் இன்னும் மனம் கலங்குகிறது.

லாரி வேகமாகப் போகத் தொடங்கவே, என் நண்பன் பின் தங்க வேண்டியதாயிற்று. 

"நாயினும் கடையேன்', 'நாய்ப்பிறவி' என்றெல்லாம் கேவலமாகச் சொல்கிறோம். அன்று என் டிக்கி என்ன நினைத்திருக்கும்?

"இவனும் நன்றி கெட்ட மானிடன்தான்.  உயிரையும் துச்சமாக மதித்து, அவனுக்கு உழைத்த என்னை விட்டு விட்டுப் போகிறான்.  அவனுடைய பிள்ளையை மட்டும் இப்படி விட்டு விட்டுப் போவானா?


'பர்மாவிலிருந்து நடையாய் நடந்து ' புத்தகத்தில் பசுபதி அய்யர்.  என் மனதைக் கலங்கடித்த வரிகள்.


=====================================================================================================

ஃபிப்ரவரி மாதம் கல்யாணமாகாதேவி கோவில் கும்பாபிஷேகம் சென்றிருந்தோம் அல்லவா...




திருவிழாவின் உற்சாகங்களே தனி ரகம்.  நிறைய கடைகள், பலூன் வியாபாரிகள், குச்சி மிட்டாய்...   அதோடு இந்தக் காட்சியும் கண்ணில் பட்டது.  அங்கு கும்பாபிஷேகம் நடந்தது கல்யாண சுந்தரேஸ்வரருக்கு...  எனவே இந்த பார்வதி - பரமேஸ்வரன் வருகை தந்தது வித்தியாசமான காட்சி!




அதுமட்டுமன்றி அவர்கள் கோவில் வாசலில் அமர்ந்ததும் கிராம மக்கள் அனைவரும் அவர்கள் காலில் பணிந்து அருளாசி பெற்ற காட்சி...




=====================================================================================================


சின்னக் கண்ணா...   புன்னகை மன்னா....






============================================================================================================


டெமென்ஷியா

மனச்சிதைவு நோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்தில் முத்திரை பதித்து வரும் ஸ்கார்ஃப் (scarf), முதியவர்களுக்கு ஏற்படும் டெமென்ஷியாவை (ஞாபக மறதி நோய்) கையாள, இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் நிதியுதவியுடன் புதிய மையத்தைச் சென்னையில் தொடங்கி இருக்கிறது. மனநல மருத்துவர் ஸ்ரீதர் வைத்தீஸ்வரன் இது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவரைச் சந்தித்தபோது...

அது என்ன டெமென்ஷியா?


எல்லோருக்கும் ஞாபக மறதி ஏற்படும். அது டெமென்ஷியா கிடையாது. ஆனால் வார்த்தைகளை மறந்து விடுவதும், பேச்சு சரியாக வராததும், மற்றவர்கள் பேசும்போது புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவதும், உறவினர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போவதும், சமையலறைக்குள் நுழைவதாக நினைத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைவதும், பல வருடங்களாக ஒரே இடத்தில் வசித்தும் கூட வெளியில் சென்று வீடு திரும்பும்போது வழி தெரியாமல் தவிப்பதும், வயதானவர்களுக்கு ஏற்பட்டால் அது கவனிக்க வேண்டிய நிலையாகும்.

இது டெமென்ஷியவின் ஆரம்ப அறிகுறிகளாகக் கூட இருக்கலாம்.

டெமென்ஷியாவுக்கு முதுமைதான் காரணம். மறதிநோய் தொடர்பான ஒரு கணக்கெடுப்பின்படி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 சதவிகித ரிஸ்க், 75 க்கு மேல் 10 சதவிகித ரிஸ்க், 85 வயதுக்கு மேல் 20% ரிஸ்க், 95 வயதுக்கு மேல் 40% ரிஸ்க் இருப்பதாகத் தெரிகிறது.

ஆனால் எல்லா முதியவர்களையும் டெமென்ஷியாதாக்கும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. இது வராமல் தடுப்பதற்கு நிறைய முறைகள் உள்ளன. இதயத்தையும், மூளையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன செய்கிறீர்களோ, அவற்றை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும். எப்போதும் க்ரியேட்டிவ்வாக, சுறுசுறுப்பான முறையில் இயங்கினாலே இந்த நோய் வருவதைத் தவிர்க்கலாம்.

டெமென்ஷியாவை எப்படி அடையாளம் காண்பது?

கேட்ட கேள்வியையே திருப்பித் திருப்பிக் கேட்பார்கள். உணவு சாப்பிட்ட பிறகும் கூட உடனே வந்து மறுபடியும் சாப்பாடு போடச் சொல்வார்கள். இரவு பகல் தெரியாமை, நேரத்தை உணர முடியாத நிலை போன்ற அறிகுறிகள் அடிக்கடித் தென்பட்டால் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை.

சில வகையான டெமென்ஷியாக்கள் அல்லது டெமென்ஷியாவின் சாயலை ஒத்த நோய்கள் ஒருவருக்கு இருந்தால், அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து இந்த மையம் சிகிச்சை அளிக்கும். இந்த நோய்க்கான தீர்வு முறைகளையும், நோய் வந்தவர்களுக்கு உதவும் வகையில் செயல் முறைகளை வகுப்பதும் இங்கு மேற்கொள்ளப்படும். 

விட்டமின் பற்றாக்குறையாலும், தைராய்ட் பிரச்னை போன்ற ஹார்மோன் குறைபாடுகளினாலும் இது போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அந்த மாதிரியான தருணங்களில் மருந்து மாத்திரைகள் தரலாம். டெமென்ஷியாதான் என்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் வேகமாக மோசமான நிலைக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் மருத்துவ சிகிச்சைகளும் இங்கு உண்டு.

இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நோய் வராமல் தடுக்கும் முறைகள், வந்து விட்டால் நோயாளிகளைப் பொறுமையுடன் எப்படிக் கையாளுவது ஆகியவற்றையும் இம்மையம் சொல்லித் தரும்.



-- 2015 கல்கியிலிருந்து  --


========================================================================================================

78 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம்! ஸ்ரீராம் துரை செல்வராஜு அண்ணா அண்ட் எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. குட்டிப்பாப்பாவின் சிரிப்புக்கான கவிதை செம!! ஆமாம் குட்டிக் குழந்தையின் கள்ளமில்லா அந்தச் சிரிப்பு கவலைகளை அப்படியே தூக்கிக் கடாசிடும்! ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

    பதிலளிநீக்கு
  5. கல்யாணமகாதேவி காட்சிகள்....நம்ம மக்கள் ரொம்பவே வித்தியாசமானவர்கள்தான்...

    வேஷமிடுபவர்களுக்கு இப்படியும் வரும்படியோ?! காலில் விழுபவர்களை நினைக்கும் போது....இதற்கே இப்படி என்றால்!!!!!! அதனால்தான் சாமியார்களுக்கும் கூட்டம் அள்ளுது போல! என்னென்னவோ நம்பிக்கைகள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. டெமென்ஷியா புதிய மையம் ஆரம்பம்....நல்ல செய்தி

    என் மாமனார் டெமென்ஷியாவில்தான் பாதிக்கப்பட்டார். இத்தனைக்கும் நிறைய வாசிப்பவர். ஆனால் பேச்சு ரொம்பக் குறைவு எப்போதுமே...சர்க்கரை வியாதி இருந்தது. இரண்டு இரண்டரை வருடங்கள்....அப்படித்தான் இருந்தார். அச்சமயம் சில சமயம் அவருக்குத் திடீரென்று கோபம் வரும்...ஏதொ அவர் மனதில் ஆழமாகப் பதிந்து போனவை கோபமாக ஆனால் அவர் சொல்லும் நிகழ்வுகள் வித்தியாசமாக நடந்திருக்காத ஒன்றாக இருக்கும்...ஆனால் அதன் சாராம்ஸம் உண்மையாக இருந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஆமாம் ஸ்ரீராம் அப்பாவி ஜனங்கள் மெய்யாலுமே. பாவமாக இருக்கும் பார்க்கும் போது..

    கீதா

    பதிலளிநீக்கு
  8. டெமென்ஷியா பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக் கொள்ள ரொம்பவே பொறுமை வேண்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  9. டெமென்ஷியா தகவல் பழசு. ஆனாலும் உபயோகப்படும் என்று சேர்த்தேன் கீதா. மாமனார் பாவம். என் அம்மா கூட சிலசமயம் அப்படிப் பேசியிருக்கிறார். பெரிய புஷ், அல்லது ரீகனுக்கு இந்த வியாதி இருக்கோ?

    பதிலளிநீக்கு
  10. முதல் செய்தி.....பார்த்ததுமே தெரிந்து விட்டது இது பற்றி இங்கோ (இங்குதான் என்று நினைவு...) இல்லை நம் நண்பர்கள் தளத்திலோ கொஞ்சம் வாசித்த நினைவு...அதனால் அதை விட்டு மற்றதை வாசித்து கடைசியில் வந்தேன்

    என்னால் அதை முழுமையாகப் படிக்க முடியலை ஸ்ரீராம்....அழுதுவிட்டேன்...கூடவே அன்பே சிவம் படமும் நினைவுக்கு வந்தது...மனம் என்னவோ செய்கிறது...முடியலை.....

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ஆமாம் ஸ்ரீராம் டெமென்ஷியா பற்றி நீங்கள் முன்பே கொடுத்திருந்தீர்கள் நினைவுக்கு வந்தது..ஆனால் அந்த மையம் மறந்துவிட்டது....அப்புறம் நினைவுக்கு வந்துவிட்டது...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. இப்போது மாமியார் சில வற்றை தினமும் நடப்பதைத் திரும்பத் திரும்ப கேட்கிறார். ஆனால் மற்றபடி நினைவு இருக்கிறது....என்னால் முன்பு போல் தினமும் கோடம்பாக்கம் சென்று கவனித்துக் கொள்ள முடியாததால் இங்கு எங்களுடன் அழைத்துவந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  13. மாமனாருக்கு மருந்து சப்ளி செய்தவர் அந்த மையம் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது...அங்கு எங்களைப் பயிற்சி எடுத்துக் கொள்ளவும் அவர்கள் ஒரு வீடியோ தருவார்கள் என்றும் சொன்னது நினைவுக்கு வந்தது. வீட்டில் மைத்துனர், மற்றும் எங்களுக்கு கொஞ்சம் அவேர்னெஸ் இருந்ததால் மைத்துனர் நன்றாகவே கவனித்துக் கொண்டார். எங்களுடனும் மாமனார் மாமியார் இருந்தார்கள். இப்போது மாமியார் மட்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. டெமென்ஷியா பற்றி நான் முன்பு பகிர்ந்திருந்தது முக நூலில் கீதா.. அதனால் நீங்கள் இந்த தளத்தில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. செல்லம் பற்றிய செய்தி 2015 இல் எங்கள் தளத்தில் பகிர்ந்திருந்த நூல் படித்த பகிர்வு பதிவிலிருந்து மீள்!

    பதிலளிநீக்கு
  15. முதல் செய்தியிலேயே மனம் கனத்துப் போய்விட்டது நண்பரே

    பதிலளிநீக்கு
  16. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  17. காலை வணக்கம்.....

    சுவையான தொகுப்பு.

    பர்மாவிலிருந்து நடையாய் நடந்து - நானும் இப்புத்தகம் படித்து, என் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எத்தனை இன்னல்கள் அனுபவித்து இருக்கிறார்கள் எனப் படிக்கும்போது மனம் கலங்கியது.....

    பதிலளிநீக்கு
  18. நாய் தான் மனிதனின் ஆதிதோழன்...

    அதனுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  19. அதுவோ இதுவோ -
    நோய் என்று எதுவும் எவர்க்கும் ஏற்படக்கூடாது...

    எம்பெருமானும் அம்பிகையும் காத்தருள வேண்டும்...

    பதிலளிநீக்கு
  20. பசுபதி ஐயர் வளர்த்த நாயின் சம்பவம் கலங்கடித்துவிட்டது. இது தொடர்பாக வேட்டை நாயை, புலியைக் கொல்ல கூட்டிச் சென்ற சம்பவம் படித்த நினைவு வந்துவிட்டது. (வேட்டை நாய் புலியின் தாடையைப் பிடித்ததும் வேட்டையாடும் எஜமான் புலியை உடனே சுடணும். குறிப்பிட்ட சம்பவத்தில் பயத்தில் சுட மிகுந்த நேரமாகிவிட்டது. நாய் அனேகமாக கொல்லப்படும் நிலையை அடைந்துவிட்டது). உயிர் என்பதும் நட்பு என்பதும் எல்லாப் பிராணிகளுக்கும் பொதுதானே.

    பதிலளிநீக்கு
  21. எந்த வியாதியைப் பற்றிப் படித்தாலும் நமக்கும் அந்த அறிகுறிகள் இருப்பதாக மனம் நினைக்கும் வியாதிக்குப் பெயரென்ன?

    பதிலளிநீக்கு
  22. //டிக்கி குரைத்துக்கொண்டே கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் கூடவே ஓடி வந்தது. வண்டியில் அது ஏற அது எம்பிக் குதிப்பதும், அழுது குரைத்ததையும் நினைத்தால் இன்னும் மனம் கலங்குகிறது.//

    இதை படித்து காட்சி மன கண்ணில் விரிந்து கலங்க்குது மனம்.
    என்ன மனிதர்கள்? என்று நினைக்க வைக்கிறது.

    திரிவிழா காட்சிகள் அருமை.

    கவிதை நன்றாக இருக்கிறது.மழலை மகிழ்ச்சியை அள்ளி தரும்.

    வல்லி அக்கா ஒரு காணொளி அனுப்பி இருந்தார்கள் மறதி நோயால் கஷ்டபடும் அப்பாவை மகன் பார்த்து கொள்வதுபற்றி.
    இந்த மாதிரி நோய் விரோதிக்கூட வர வேண்டாம்.

    நோயுற்று அடராமல், நொந்து மனம் வாடாமல்
    பாயிற் கிடவாமல், பாவியேன் காயத்தை
    ஓர் நொடிக்குள்நீக்கி எனை ஒண் போரூர் ஐயா நின்
    சீர் அடிக்கீழ்வைப்பாய் தெரிந்து.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நோயுற்று அடராமல்..//

      இந்தப் பாடலை அருளிய மகான் யாரென்று சொல்லுங்களேன்...

      ம்னதிற்கு நல்லுரை சொல்லும் வகையில் -

      இதே போன்ற பாடல்களை ஐயடிகள் காடவர்கோன் அவர்களும் அருளியுள்ளார்...

      நீக்கு
  23. பல்சுவைச் செய்திகள். சிவன் பார்வதி அருமை.

    பதிலளிநீக்கு
  24. நாயினும் கடையோன்...
    சரியாதான் சொல்லி இருக்காங்க

    பதிலளிநீக்கு
  25. நாய் வளர்த்தவர்களுக்கே அதன் உணர்வுகள் புரியும்.

    பதிலளிநீக்கு
  26. அச்சச்சோ முதல் கதை அப்படியே நம் நாட்டு இடம்பெயர்வை மனக் கண் முன் கொண்டு வந்துவிட்டது... அதிலும் நான் எழுதிய எங்கள் பப்பிக் கதையில்.. ஊரில் விட்டு விட்டு வந்திட்டோம் என எழுதினேனே .. அந்தப் பப்பியின் பெயரும் “டிக்கி” தான்...

    இந்தக் கதைபோலவே நம் இடம்பெயர்வுகளால் நடந்த உண்மைச் சம்பவங்கள் ஏராளம்... இதுபோலவே நானும் ஒரு பப்பிக் கதை[கற்பனையில், நிகழ்வுகளைத்திரட்டி] எழுத நினைக்கிரேன் பல வருடமாக, ஆனா இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.

    பதிலளிநீக்கு
  27. ///ஃபிப்ரவரி மாதம் கல்யாணமாகாதேவி கோவில் கும்பாபிஷேகம் சென்றிருந்தோம் அல்லவா...///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏதோ சொல்லிவிட்டே சென்றதுபோல.. சென்றிருந்தோம் அல்லவா?:) எனக் கிளவி..சே..சே.. கேள்வி வேறு:)).. சென்றிருந்தோம் எனச் சொல்லோணும்:)).. தகவலாக:). நேக்குத் தமிழ்ல டி ஆக்கும்:).

    பதிலளிநீக்கு
  28. //அதுமட்டுமன்றி அவர்கள் கோவில் வாசலில் அமர்ந்ததும் கிராம மக்கள் அனைவரும் அவர்கள் காலில் பணிந்து அருளாசி பெற்ற காட்சி.....///

    அவரவர் நம்பிக்கை. திருவிளா அழகு. அந்த வெய்யிலைப் பார்க்க ஆசையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  29. கவிதை ஓகே... குழந்தையும் மாயம்தான் செய்யுது:). டிமென்ஷியா நல்ல தகவல்... நம் கையில் என்ன இருக்கு.. இவ்ளோ கொமெண்ட்ஸ் எழுதிப் பழகுகிறோம் நாளைக்கு அதிரா வந்திருக்கிறேன் என்றால்.. அதிராவா அதாரது? எனக் கேட்கும் நிலையும் வரலாம்:) ஹா ஹா ஹா...

    ஹையோ என் பச்சைக்கல்லு மோதிரமும் வைர நெக்லஸ் உம் எல்லோரும் கேட்கினமே என அடிக்கடி இடம்மாற்றி ஒளிச்சு வைபேன்:).. இனி அதை ஆரிடமாவது சொல்லிப்போட்டே ஒளிக்கோணும்:).. டிமென்ஷியா வந்திட்டால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ஆஆஆஆஆஆஆ அஞ்சுக்கு மட்டும் ஜொல்லவே மாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))..

    நான் கொஞ்சம் பிஸியாகிறேன் அல்லது ஆக்கப்படுறேன்..:) பின்பு வாறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
  30. //நெ.த. said...
    எந்த வியாதியைப் பற்றிப் படித்தாலும் நமக்கும் அந்த அறிகுறிகள் இருப்பதாக மனம் நினைக்கும் வியாதிக்குப் பெயரென்ன?//

    அதூஊஊஊஊஊஊ “தமனாபோஃபியா”:)) ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))

    பதிலளிநீக்கு
  31. 2011லேயே நினைவலைகள் தடைபட்டால் என்னும் பதிவு டெமென்ஷியா பற்றி எழுதி இருந்தேன் அதன்சுட்டி இதோ http://gmbat1649.blogspot.com/2011/08/blog-post_04.html நமது இலக்கியங்களில் நாய் பற்றி ஏதோ இழிந்த குணம் உள்ளதுபோல் எழுதி இருக்கிறார்கள் வயது கூடும்போது எல்லா நோய்களும் இருப்பது போல் தோன் றும் இதுபோல் இருப்பவர்களை ஹைபொ கோண்ட்ரியார்க் என்பார்கள்

    பதிலளிநீக்கு
  32. பயனுள்ள பல பதிவுகள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  33. முதலில் சொல்லப்பட்ட கதையின் பகுதி மனதை கனக்க வைத்தது.

    திருவிழா, கும்பாபிஷேகம் என்ற இது போன்ற நிகழ்வுகள் என்றாலே கடைகள் பெருகி அதுவும் ஒரு வித மகிழ்வுதான் பார்க்கும் போது. இப்படியான வேஷங்களை தமிழ்நாட்டில்தான் பார்க்க முடியும். கேரளத்தில் எப்போதேனும் தமிழ்நாட்டிலிருந்து வரும் இப்படியான நபர்கள் வேஷமிட்டு யாசகம் செய்வதை பார்க்கலாம் ஆனால் அபூர்வம். ஆனால் கேரளத்தில் இது போன்ற நிகழ்வுகளில் புலியாட்டம் என்றெல்லாம் உடலில் கலர் பூசி குட்டிக்கரணம் அடித்துக் கொண்டு செல்வதுண்டு. அதுவும் அபூர்வம்தான். இப்படியான ஜனங்கள் பாவம் அப்பாவிகள்.

    உங்கள் கவிதை அருமை ஸ்ரீராம் ஜி. சிறு குழந்தைகளின் பொக்கைவாய்ச்சிரிப்பும் புன்சிரிப்பும் நம்ம இவ்வுலகையே மறக்கச் செய்யும் தருணங்கள்.

    டெமென்ஷியா குறித்த தகவல் நல்ல விஷயம். நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது அவேர்னெஸ் உருவாகும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  34. டெமென்ஷியா பற்றி நான் முன்பு பகிர்ந்திருந்தது முக நூலில் கீதா.. அதனால் நீங்கள் இந்த தளத்தில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. செல்லம் பற்றிய செய்தி 2015 இல் எங்கள் தளத்தில் பகிர்ந்திருந்த நூல் படித்த பகிர்வு பதிவிலிருந்து மீள்!//

    டெமென்ஷியா ஒரு வேளை வேறு தளத்திலோ? ஆனால் அறிந்த வலைத்தளம் என்றால் மட்டுமே பதில் கொடுப்பது வழக்கம்...நான் அதற்கு பின்னூட்டம் கூட கொடுத்த நினைவு அப்போதும் என் மாமனார் பற்றி சொல்லிய நினைவு...ஒரு வேளை வேறு தளத்திலோ? ஆனால் வாசித்த நினைவு இருக்கு என்னவோ போங்க எனக்கும் சில சமயம் வாசிப்பது எங்கு என்பது மறந்து விடுகிறது ஆனால் வாசிக்கும் செய்திகள் சில ஏற்கனவெ வாசித்தது போல் தோன்றுகிறது...ஒரு வேளை கூட்டாஞ்ச்சோறு தளத்திலோ என்னவோ தெரியலை.....ஹா ஹா ஹா ஹா..

    அதே போன்றுதான் பசுபதி அவர்களின் கதையும் இதே பார்ட் தான்..பர்மாவிலிருந்து வரும் போது....நாய் ஓடி வருவது...வாசித்த நினைவு...ஆனால் எங்கு என்பதுதான் மறந்து விடுகிறது....ஹிஹிஹிஹி...இப்படி சில சட்டென்று நினைவுக்கு வருவதில்லை...என்னவோ போங்க...ஹும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  35. ஹையோ என் பச்சைக்கல்லு மோதிரமும் வைர நெக்லஸ் உம் எல்லோரும் கேட்கினமே என அடிக்கடி இடம்மாற்றி ஒளிச்சு வைபேன்:).. இனி அதை ஆரிடமாவது சொல்லிப்போட்டே ஒளிக்கோணும்:).. டிமென்ஷியா வந்திட்டால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ஆஆஆஆஆஆஆ அஞ்சுக்கு மட்டும் ஜொல்லவே மாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))..//

    ஹா ஹா ஹா ஹலோ அதிரா உங்க கணகக்கு வழக்கு இந்த நெக்லஸ் வைரம் எல்லாம் பார்த்துக்கறது ஏஞ்சலாக்கும் உங்க செக்....நினைவுருக்கல்ல்ல்ல்ல்லோ?!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  36. அதிரா ஸ்ரீராம் சொல்லிருந்தாரே கல்யாணதேவி பற்றி... அவர் வந்ததும் லைட்டாக மென்ஷன் செய்த நினைவு....நெல்லை கூட அவரைக் கலாய்த்திருந்த நினைவு...(ரெண்டு பேரும் என் காலை வாராம இருந்தா சரி முருகா காப்பாத்துப்பா!!! என் நினைவு இப்ப தாறுமாறா ஓடுது போல!!!ஹா ஹா ஹா ஹா)

    கீதா

    பதிலளிநீக்கு
  37. சில சமயங்களில் நாம் இப்படித்தான் இரக்கமில்லாமல் சுயநலமாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

    டிமென்ஷியா பற்றி இப்போது அதிகம் கேள்விப் படுகிறோம். அதனால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துக் கொள்பவர்களுக்கு மிகவும் பொறுமை தேவை.
    அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் இதனால் பாதிக்கப் பட்டார்.

    பதிலளிநீக்கு
  38. முதல் செய்தி மனதை கனக்க வைத்தது. கல்யாணமகாதேவி காட்சிகள் அழகு! கிராமத்தில் இப்படியெல்லாம் நடப்பது சகஜம்! கல்யாணமகாதேவி எங்கிருக்கிறது?
    அந்தக்குழந்தைக்கான கவிதை அருமை! உண்மை தான்! மழலையின் சிரிப்பு மனக்காயங்களை மட்டுமல்ல, உலகையே மறக்க வைக்கும்!!

    பதிலளிநீக்கு
  39. மனம் கனக்கிறது முதல் செய்தியை படித்தவுடன்.... எப்படி நாயை அப்படி ஒட விட்டார்கள் எப்படிதான் மனம் வந்ததோ....நாயை வளர்த்தவ்ர்களால் அப்படி செய்ய முடியுமா என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. நான் வேலைக்கு செல்லும் நேரம் தவிர மீதி நேரங்களில் என் நாய்குட்டி என்னோடுதான் இருக்கும். என் நாய்க்குட்டியால் நான் இப்போது பயணங்களை கூட தவிர்த்து வருகிறேன் அப்படியே பயணம் மேற்கொண்டாலும் கார் பயணம் ம்ட்டும்தான் அது எவ்வள்வு தூரமாக இருந்தாலும் சரி அப்படி இல்லையென்றால் அதை பார்த்து கொள்ள என் ம்னைவியோ மகளோ இருந்தால் மட்டுமே அதைவிட்டு செல்லுவேன்.. நாயோட வாழாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை என்பேன்

    பதிலளிநீக்கு
  40. உங்கள் பகிர்தல்கள் மற்றவர்களுக்காகவா, அல்லது மற்றவர்களின் பகிர்தல்கள் உங்களுக்காகவா என்பது எப்பவும் நல்ல பகிர்தல்களில் பிரித்துப் பார்க்க முடியாத கேள்வி.

    பதிலளிநீக்கு
  41. கவிதையின் கடைசி வரி தேவையில்லாததாய்த் தெரிகிறது. கீழே குழந்தை வின்ஸ்ட்டன் சர்ச்சில் - படம் எங்கிருந்து சுட்டீர்கள்!

    வேறுவழியின்றி விட்டுவந்திருக்கிறார் ஐயர். வேண்டுமென்றே கிழட்டு நாயை ’டிஸ்போஸ்’ செய்வதற்காக எங்கோ தூரத்துப்பகுதியில் விட்டுவிட்டு, காரை வேகமாக எடுத்து ஊருக்குத் திரும்பிய கயவர்களை (வெளிநாடு)ப்பற்றிக் கேள்விப்பட்டு நொந்திருக்கிறேன். கவிதை ஒன்றும் என்பக்கத்தில் 2014-ல் வடித்த நினைவு.

    வயதானால் பல தொல்லைகள். மறதியும் , சுள்ளென்று வரும் காரணமில்லாக் கோபமும் அடங்கும் இதில். எல்லாவற்றையும் நோயெனப் பார்ப்பது, அதற்குப் பெயர் வைப்பது, அதற்காக மாத்திரைகளை முழுங்குவது -பொதுவாக வெள்ளையர்களின் வேலை. அவர்களை அப்படியே ஃபாலோ பண்ணுவது, இடையிடையே பழக்கதோஷமாய் சாமிகும்பிட்டுக்கொள்வது, நம்மவர்களின் வேலை !

    பதிலளிநீக்கு
  42. //Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா ஸ்ரீராம் சொல்லிருந்தாரே கல்யாணதேவி பற்றி...//

    அது கீதா போய் வந்தபின்னர் தானே கோயில் படம் போட்டார்ர்... சொல்லிவிட்டுப் போகேல்லை எல்லோ கர்ர்ர்:))

    //ஹா ஹா ஹா ஹலோ அதிரா உங்க கணகக்கு வழக்கு இந்த நெக்லஸ் வைரம் எல்லாம் பார்த்துக்கறது ஏஞ்சலாக்கும் உங்க செக்....நினைவுருக்கல்ல்ல்ல்ல்லோ?!!!!

    கீதா//

    இல்ல கீதா டப்பூஊஊஊஊ:)) நகைகளை மட்டும் அவட கண்ணில காட்டவே இல்லை நான்:))

    பதிலளிநீக்கு
  43. //Avargal Unmaigal said...
    நாயை வளர்த்தவ்ர்களால் அப்படி செய்ய முடியுமா என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை////

    உண்மைதான் ட்றுத், ஆனா குறை சொல்வது எழிது.. சூழ் நிலையால் அப்படி ஆகியிருக்கலாம்...

    இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஊரை விட்டு வெளிக்கிடும்படி எனவுன்ஸ் பண்ணியதும் மக்கள் கூட்டம் தீர்த்தக் கரைபோல நிரம்பியது வீதிகளெல்லாம்.. அவர்களோடு வளர்த்த நாய்க்களையும் அழைத்தே வந்திருந்தனர் பெரும்பாலானோர்...

    ஆனா ஒரு இடத்தில்.. மீண்டும் வடபகுதியை விட்டு வெளியே வரும்போது தரைப்பாதை ராணுவத்தினரால் மூடப்பட்டிருந்தது, எனவே அந்த பெரிய கடலைக் கடந்து இரவிரவாக அதுவும் சாதாரண தோணி போன்ற... மேற் கூரை இல்லாத போர்ட்டில் மக்களை இரவிரவாக கள்ளமாகவே இக்கரைக்கு அழைத்து வந்து விட்டார்கள்.. ராணுவம் கண்டால் அவ்வளவுதான்...

    அப்படி படகில் ஆட்களை ஏற்றி இடமிருக்காது, குடும்பங்கள் பிரியாமல்.. ஒரு படகில் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் ஏறவே விரும்புவர்.. ஏறவும் வேணுமெல்லோ,... அச்சூழலில் நாய்களுக்கெல்லாம் எங்கே ஏற்றுவது... எவ்வளவு நாய்கள் அக்கரையிலேயே கை விடப்பட்டு மக்கள் அழுகையோடு வந்தார்கள்..

    அப்படியான சூழலில் மனித உயிர் தப்பினால் போதும் எனத்தானே முடிவெடுப்பினம்.. செய்ய முடிந்தும் வேணுமென்று கைவிடப் பட்டால்தான் தப்பு.

    அப்படித்தான் இந்த ஐயருக்கும் ஏதும் நேர்ந்திருக்கலாம்.. இன்னொன்று பொலீஸ் ஆமி பிடிச்சுப் போனாலும் இப்படி வளர்த்த நாய்ப்பிள்ளைகள் பின்னால் கலைத்துக் கொண்டு ஓடும் கதைகளும் கேள்விப்பட்டிருக்கிறோமெல்லோ...

    சமீபத்தில் கூட விகடனின் ஒரு நியூஸ் வந்துதே.. தந்தையை ஜெயிலுக்கு அழைச்சுப் போகினம், மகள் ஓடிப்போய் அவ் வாகனத்தில் ஏறிவிட்டது குழந்தை... இறக்கி விட்டுப் போட்டு, தகப்பனை அழைச்சுப் போகினம்... இதை என்ன என்பது:(...

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் சகோதரரே

    முதல் செய்தி மனதை கனமாக்கியது. அத்தனை மனிதர்களின் இதயத்தில் ஒரு சிறு இடம் கூட இல்லாமல் போனதே என்று மிகவும் வருத்தமாயிருந்தது. ஆனால் அந்த வாயில்லா பிறவி எத்தனை அன்பை மனதில் சுமந்திருந்தால், அவ்வளவு தூரம் அழுது கொண்டே ஓடி வந்திருக்கும். சே பாவம்,.. மனது கஸ்டமாயிருந்தது.

    கோவில் நிகழ்ச்சிகள் மிகவும் நன்றாய் இருந்தது.

    கவிதை மிகவும் அருமை. குழந்தையின் சிரிப்புக்கு முன்னாடி கண்களும் போட்டியிட்டு சிரிக்கின்றதே.. அழகு.

    நோய்களை பற்றி அறிந்தால் மனதில் லேசான தடுமாற்றங்கள் வருகின்றன.
    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் .
    அச்செல்வத்தை இறைவன் அனைவருக்கும் அருள வேண்டும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  45. வாங்க துரை ஸார்... நெட் படுத்துகிறதா? 'ஆதிதோழன்' ஆம். உண்மிஹான். கான் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கொடுத்துதான் வைத்திருக்கவேண்டும். நம் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்துக் கொண்டால் நோய் அண்ட வழியில்லை என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  46. வாங்க நெல்லைத்தமிழன்..

    //இது தொடர்பாக வேட்டை நாயை, புலியைக் கொல்ல கூட்டிச் சென்ற சம்பவம் படித்த நினைவு வந்துவிட்டது.//

    அது பிலோ இருதயநாத் கட்டுரை ஒன்றைப் பகிர்ந்திருந்தேன். அதைச் சொல்கிறீர்களோ? நீங்கள் சொல்லும் சம்பவம் அதுதான்.

    http://engalblog.blogspot.com/2015/10/blog-post_28.html

    இந்தப் பதிவா பாருங்கள்...

    எந்த வியாதியைப் பற்றிப் படித்தாலும் நமக்கும் அந்த அறிகுறிகள் இருப்பதாக மனம் நினைக்கும் வியாதிக்குப் பெயரென்ன?

    இதற்கு பெயர் வேறு உண்டா?

    பதிலளிநீக்கு
  47. வாங்க கோமதி அக்கா..

    பசுபதி அய்யர் மிகவும் தவிர்க்க முடியாத நிலையிலேயே அப்படி செய்கிறார். அந்த வேதனை அவரை அவரது வாழ்நாள் முழுவதும் துரத்தி இருக்கிறது. கவிதையை ரசித்தமைக்கு நன்றி. நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடல் நன்று.

    பதிலளிநீக்கு
  48. துரை ஸார்.. கோமதி அக்கா பகிர்ந்திருக்கும் பாடலை அருளியவர் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.

    பதிலளிநீக்கு
  49. வாங்க அதிரா..

    எனக்கும் இதைப் பகிரும் நீங்கள் எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. அதன் பெயரும் டிக்கியா? அது நினைவில்லை.

    //ஏதோ சொல்லிவிட்டே சென்றதுபோல.. சென்றிருந்தோம் அல்லவா?:) எனக் கிளவி..சே..சே.. கேள்வி வேறு:)).. சென்றிருந்தோம் எனச் சொல்லோணும்:)).. //

    பிப்ரவரி இரண்டாம், மூன்றாம் தேதி பதிவுகளில் கீதா / கீதாக்கா கமெண்ட்ஸ் பார்க்கவும். ஒரு மாதிரி குண்ட்ஸா புரிய வைச்சிருந்தேன்!!

    //அவரவர் நம்பிக்கை. திருவிளா அழகு. அந்த வெய்யிலைப் பார்க்க ஆசையா இருக்கு.//

    ஆனால் அங்கு எனக்கு ஏற்பட்ட தாகம்... தண்ணீரைத் தேடி அலைந்ததும், கிடைத்துக் குடித்ததும் தண்ணீர் மாற்றத்தால் தொண்டை கட்டிக்கொண்டதும்...

    பதிலளிநீக்கு
  50. வாங்க ஜி எம் பி ஸார்...

    // ஹைபொ கோண்ட்ரியார்க் என்பார்கள்//

    ஓ... தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  51. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  52. வாங்க துளஸிஜி.. ஓய்வு வாழ்க்கையை எப்படிக் கழிக்கிறீர்கள்? பொழுது எப்படிப் போகிறது? எதையோ இழந்தாற்போல இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  53. வாங்க கீதா... நான் உங்களிடம் வாட்ஸாப்பில் சொல்லி இருந்தேன் (ஊர் செல்வது பற்றி) நீங்கள் எங்கள் பதிவின் கமெண்ட்டில் அதைக் கேட்டிருந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  54. வாங்க பானு அக்கா... சுயநலமாக நடக்க வேண்டியிருக்கும் அந்த கணங்கள் கொடுமையான நேரங்கள்.

    பதிலளிநீக்கு
  55. வாங்க மனோ சாமிநாதன் மேடம். கல்யாணமாகாதேவி திருவாரூர்-மன்னார்குடி சாலையில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  56. வாங்க மதுரை.. உங்கள் கேள்விக்கு அதிரா பதில் சொல்லி இருக்கிறார் பாருங்கள். அது மாதிரி அனுபவங்களை நாம் கண்டிருக்க மாட்டோம்.

    பதிலளிநீக்கு
  57. வாங்க ஜீவி ஸார்... என்ன சொல்ல வருகிறீர்கள் என்று ஒருமாதிரி புரிகிறது! மற்றவர்கள் பகிர்ந்திருப்பதை நான் எடுத்து நணபர்களுக்குப் பகிர்கிறேன்... அதானே?

    பதிலளிநீக்கு
  58. ஏகாந்தன் ஸார்... கவிதையின் கடைசி வரி அதன் தலைப்பு மாதிரி! அப்படி வைத்துக் கொள்வோமே...

    //வேண்டுமென்றே கிழட்டு நாயை ’டிஸ்போஸ்’ செய்வதற்காக எங்கோ தூரத்துப்பகுதியில் விட்டுவிட்டு, காரை வேகமாக எடுத்து ஊருக்குத் திரும்பிய கயவர்களை//

    சுருக்கென்று குத்துகிறது. எங்களின் நாய்மனம் பதிவு படித்து விட்டு திட்டுகிறீர்களோ என்று ஒருகணம் சிலிர்த்து விட்டது.

    பதிலளிநீக்கு
  59. வாங்க சகோதரி கமலா ஹரிஹரன்.. ரசித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  60. பாவம் பசுபதி அய்யர். அந்த பைரவர் ஏக்கத்தில் என்ன செய்தாரோ. குழந்தையின்
    சிரிப்பு கொள்ளை அழகு.
    டெமென்ஷியா நிறைய காதில் விழுகிறது. என் உறவினர்களிலேயே ,பெண்களை அதிகம் தாக்கி இருக்கிறது.

    நர்ஸ் போட்டுதான் பார்த்துக் கொள்கிறார்கள். அன்பு கோமதி சொல்வது , நோய் தாக்கும் முன் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் இறைவன் எடுத்துக் கொள்ள வேண்டும். இது என் தின பிரார்த்தனை.

    பதிலளிநீக்கு
  61. @ஸ்ரீராம்: ..எங்களின் நாய்மனம் பதிவு படித்து விட்டு திட்டுகிறீர்களோ என்று ஒருகணம் சிலிர்த்து விட்டது.//

    இல்லை. உங்களது பதிவைப் படிக்கவில்லை.
    நான் படித்தது வெள்ளைக்காரர்கள் சிலரின் மேன்மைபற்றி. அது மனதைப் பாதிக்க, கவிதையாக எழுதிப் பதிந்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  62. பசுபதி அய்யர் மிகவும் தவிர்க்க முடியாத நிலையிலேயே அப்படி செய்கிறார்.//

    ஸ்ரீராம் ,பசுபதி அய்யரை சொல்லவில்லை, அவருடன் பயணம் செய்த சக் மனிதர்களை சொல்கிறேன்.

    பாடல் எழுதியது யார் என்று எழுத மறந்து விட்டேன். நீங்கள் துரைசெல்வராஜூ அவர்களுக்கு பாடல் ஆசிரியர் பெயர் சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  63. நல்ல தொகுப்பு. முதல் சம்பவம் சிறுவயதில் எங்கள் வீட்டில் வளர்ந்த நாயினை நினைவுக்குக் கொண்டு வந்தது. டெமன்ஷியா குறித்த பகிர்வு அவசியமானது.

    பதிலளிநீக்கு
  64. குழந்தை முகம் கோடி துக்கத்தைத் தீர்க்கும்.
    முதல் செய்தி எனக்கு எங்க மோதியை நினைவூட்டியது!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!