புதன், 18 ஏப்ரல், 2018

புதன் 180418 :: உங்கள் ? எங்கள் !(இது நகச்  சுவை) 
கீதா சாம்பசிவம் : 


அது சரி, இந்தக் கேள்விகளை எல்லாம் வேலை மெனக்கெட்டுச் சேர்த்து வைத்துப் போடறதை விட்டுட்டுப் புதுசாக் கேள்விகளைக் கேட்கலாமே! அதுக்கு வர பதில்களில் இருந்து அடுத்த வாரக் கேள்விகளைத் தயாரிக்கலாம். என்ன சொல்றீங்க?ப: இது பதிலிலிருந்து வந்த கேள்வியா இல்லை கேள்வியிலிருந்து வந்த கேள்வியா அல்லது பதிலா அல்லது யோசனையா? 


வாரியர்னு சொன்னதும் மருத்துவரோனு நினைச்சேனே! அவர் இல்லையா? யார் இந்தக் கண்ணழகி ப்ரியா வாரியர்? ஆரிய வைத்தியசாலையில் இருக்காரா? 


ப: ஆரிய வைத்தியசாலையில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார வைத்தியர் ஆக இருப்பாரோ!


     

இடியாப்பமும், சேவையும் ஒண்ணு தானா? 


ப: ஒண்ணு இல்லை; பல.  இடியாப்பச்சிக்கல் என்று கேள்விப்பட்டிருக்கோம். ஆனால் சேவை சிக்கல் இல்லாததுதானே! 


   
ஆமவடைனா ஆமையை அரைச்சுத் தட்டுவாங்களா?


ப: ஆமா இல்லே!     


அப்போ தவலை வடை? தவளை? அல்லது தவலை? ஹையோ! பயமா இருக்கே! 


ப: அது துவலை வடை. துவரம் பருப்பு, கடலை(ப் பருப்பு) சேர்த்து செய்வதால், அப்பெயர் வந்தது. (எங்கள் ஆராய்ச்சி ஆசிரியர்)               
மசால் வடை வேறே, வெங்காய வடை வேறேயா? படங்களுடன் விளக்கவும்.  


ப: மசால் வடை - மசாலா = வெங்காய வடை. 
  கேஜிஜி ஓடிப் போற மாதிரி ஒரு கேள்வி இப்போ! ஜூன் மாசம் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் விடுமா? விடாதா?

  
ப: விடும் ...................     ஆனா ...........   விடாது!  நெல்லைத்தமிழன் : 


கல்யாணிக்கும் பூர்வி கல்யாணிக்கும் (ராகங்கள், பெண்களைத் தேடாதீர்கள்) உள்ள வித்தியாசம் கரண்டிக்கும் பாதாள கரண்டிக்கும் உள்ள வித்தியாசமா?

ப: எனக்கு பூர்விகல்யாணிக்கும் பந்துவராளிக்குமே வித்தியாசம் தெரியாது. இதுல பாதாள கரண்டி, மேகாலயா கரண்டிக்கெல்லாம் நான் எங்கே போவது!  

ஐபிஎல் மேட்சில், நீங்கள் முதலிலேயே ஒரு சைடுக்கு ஆதரவாக பார்க்க ஆரம்பிப்பீங்களா இல்லை மேட்சை மட்டும் ரசிப்பீங்களா?  


ப: எப்பவுமே ஆடுறவங்களை ரசிப்பேன். (Cheer leaders) 
 


                  
முன்னைவிட இப்போ நிறைய பிரபலங்கள் கட்சி ஆரம்பித்திருக்காங்களே... உங்களுக்கு யார் வருவான்னு தோணுது? உங்க சாய்ஸ் யாரு? 

ப: கூடுவாஞ்சேரி கோவிந்தசாமி.

வேலை மெனக்கெட்டு ஏகப்பட்ட அடை படங்களைப் போட்டிருக்கீங்களே. இது எங்கள் தகவலுக்கா அல்லது உங்கள் கிச்சன் இன்-சார்ஜ் தகவலுக்கா? 


ப:  நான் அடைப் பிரியன்தான். என் டேஸ்டுக்கு அடை செய்தவர், இன்றைக்கு நூற்று நான்கு வருடங்களுக்கு முன்பு பிறந்து, ஓராண்டுக்கு முன்பு காலமாகிவிட்டார்.  

எப்போவாவது தவறுதலா வாக்கு போட்டிருக்கீங்களா (இவருடைய சின்னம் என்று நினைத்து அவசரத்தில் மாத்திக் குத்தி)? அப்போ உங்கள் மன நிலை எப்படி இருந்திருக்கும்?


ப: ரொம்ப நிதானமா, நிறுத்தி, அழகா சின்னத்துக்கு நடுவே ஸ்பஷ்டமாக முத்திரை குத்துவேன். இ வி எம் வந்த புதிதில்தான் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ஆனாலும் மாற்றி அழுத்தியதில்லை. 


ஸ்ரீராம் 'அனுஷ்காவை' ரசிப்பதற்கும், சிலர் 'தமன்னா'வை ரசிப்பதற்கும், ஏதாவது பூர்வ ஜென்ம பந்தம் இருக்குமா?


ப: அனுஷ்கா தமன்னா இவர்களின்  பூர்வ ஜன்மம் என்ன என்று தெரியவில்லையே! 

அதிரா- குச்சியை வச்சு என்னதான் பண்ண முடியும்ம்ம்ம்ம்? - ஐயோ... ஒரு நல்ல பெண்ணை பாராட்டியது, ரசித்தது குற்றமா? அதுக்காகவா அதிரா முதற்கொண்டு எனக்கு எதிரி ஆகிட்டாங்க? இல்லை ஒருவேளை இது ஸ்ரீராமின் வேலையா?  


ப: ஸ்ரீராம் வேலையா!  மருந்துக்குக் கூட அப்படி எல்லாம் செய்யமாட்டார்!  


கோமதி அரசு: 


அடுத்தவாரம் வேறு மாதிரி கேள்வி , பதில்கள்தானே?


ப: ஆமாம்! வேறு மாதிரி கேள்விகள் வந்தால்!  அதிரா : 


பெண்டனில B இருக்கே.. அப்போ அது பாவனாவோ?:).


ப: இல்லைங்க பானுமதி (பாவனா + அனுஷ்கா + தன்னா + திரிஷா )
     

     


பானுமதி வெங்கடேஸ்வரன் : 


ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் இவர்களோடு கிருபானந்த வாரியாரை நகைச்சுவையாக ஒப்பிட முடியுமா?


ப: இதுக்கு ஏதாவது பதில் சொன்னால் எல்லோரும் எங்கள் முதுகில் டின் கட்டி, வாரிடுவாங்க!


அட்சய திரிதியையில் தங்கம், வெள்ளி, ப்ளாடினம் இவற்றில் எதை வாங்கப் போகிறீர்கள்?


ப: எது கொடுத்தாலும் வாங்கிக்கறேன். 

வாழ்த்துக்கள், வாழ்த்துகள் எது சரி?

ப: வாழ்த்துகள். அழுத்தாமல், மென்மையாக !அதிரா :


1. நமக்கு தெரிந்த ஒருவர், நமக்கு எதிரியாகிவிட்டால் , எங்காவது சந்திக்க நேரும்போது, அவர் நம்மைப் பார்த்து சிரித்தால், பதிலுக்கு நாமும் சிரிக்க வேண்டுமோ? சிரிக்காமல் போவது நல்லதோ?.

ப: என்னைப் பொறுத்தவரை, பதிலுக்கு சிரித்துவிடுவேன். அப்படி ஒருமுறை புன்னகை செய்துவிட்டு, சிரித்தவரின் அருகில் சென்றேன். அவர், எனக்குப் பின்னாடி இருப்பவரைப் பார்த்து, " என்ன சௌக்கியமா ?" என்று கேட்டார். 


திடீரென உலகம் அழிஞ்சு நாம் எல்லோரும் “சொர்க்கம்”:) போனால், அங்கும் எங்கள் புளொக் அமைச்சு ஸ்ரீராமை 3 வது ஆசிரியராக நியமிப்பீங்களோ?.. அஞ்சுவை அங்கு எப்படி அடையாளம் காணுவீங்க?

ப: நாங்க ஏற்கெனவே அஞ்சு (ஆசிரியர்) 


நகைச்சுவையாகப் பேசுவது நல்லதோ? ஆபத்தோ? 


ப: யாரிடம் என்பதில்தான் விஷயமே இருக்கு. அவர்கள் உண்மைகள் :  

அதிரா தன் வைர நெக்லஸை கழட்டி ஸ்ரீராமிடம் பரிசாக கொடுத்தால் அதை அவர் யாருக்கு பரிசாக தருவார் அனுஷ்காவிற்கா அல்லது மனைவிக்கா?


ப: நகைகளை மதிப்பீடு செய்பவரிடம்.  

     
 உங்களால் ஒரு விலங்கை பசு மாட்டின் அளவிற்கு பெரிதாக மாற்ற முடிந்தால் எந்த விலங்கை மாற்றுவீர்கள்? ஏன்?

ப: கொசுவை. ஈசியாக அடித்துத் துரத்திவிடலாம்!  
        
  நீங்கள் யாரையாவது பார்த்து ஸ்மைல் பண்ணிவீட்டு அதன் பின் அவரை பார்த்து ஏண்டா ஸ்மைல் பண்ணினோம் என்று நினைத்தது உண்டா?

ப: உண்டு. 

உங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன?

ப: பலம் : கோபமே வராது. பலவீனம்: இரக்க குணம். 
      
 ஒரு வேளை நீங்கள் எனது பதிவுகளை படிப்பவராக இருந்தால் எந்த பதிவையாவது படித்து என்னை நல்லா திட்டனும் என்று நினைத்ததுண்டா?ஆமாம் என்றால் அது எந்த பதிவு? இந்த கேள்வி எங்கள் ப்ளாக் ஆசியர்களுக்கு மட்டுமல்ல இங்கே வருபவர்கள் யாராவது என் பதிவை படிப்பவர்களாக இருந்தால் உங்களுக்கும் இந்த கேள்வி முடிந்தால் பதில் சொல்லுங்கள்

ப: திட்டணும் என்று நினைத்ததில்லை. மற்றவர்கள் பதில் கூறலாம். 

 காக்கா கத்தினால் விருந்தினர்கள் வருவார்கள் என் மனைவி கத்தினால் பூரிக்கட்டை வரும் அது போல உங்கள் மனைவி கத்தினால் என்ன வரும்?

ப: பயம். 


காவிரி தண்ணீர்க்காக கெஞ்சி கொண்டிருப்பதைவிட நம்ம அதிராவை தூக்கி காவிரி அணையில் போட்டால் கெஞ்சாமலே தண்ணி நமக்கு வந்துவிடுமே என்று வாட்ஸப் மூலம் லண்டனில் உள்ள ஒருவர் தகவல் அனுப்புகிறார்? எனக்கும் இந்த ஐடியா பிடிச்சிருக்கு உங்களுக்கு பிடிச்சிருக்கா?

ப: நல்ல வேளை . எங்களுக்கு (பைத்தியம்) பிடிக்கலை. 

                       
ஏகாந்தன்  :


1 :கேள்வி வந்ததால்,  பதிலும் வந்ததா ..   பதிலிருப்பதால், கேள்வி வந்ததா ?

ப: கேள்விதான் முதலில். வினா யகா!  ஏகதந்தா!  
              
2 : காதலில் இருக்கும் பெண்ணும்கூட, தன் ஆணை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதாய்த்தான் தெரிகிறது. பின்னே, இப்படிப் பாடுகிறாளே :

ஊரறிய மாலையிடுவாரோ – இல்லை
ஓடிவிட எண்ணமிடுவாரோ ?

இதிலிருந்து, இந்தப் பெண்களைப்பற்றி ஏதாவது புரிகிறதா?
    
ப: அந்தக் காலத்தில் அபிநய சரஸ்வதிக்குத் தோன்றிய சந்தேகத்தை இந்தக் காலத்தில் மூன்றெழுத்து நடிகை, கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்லை ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா? என்று பதில் சொல்லிவிட்டாரே!  ஆக , கல்யாணம் பண்ணிகிட்டாலும், பண்ணாவிட்டாலும் ஓடப்போவது ஆண்களே ! 


குரோம்பேட்டை குறும்பன்: 


முதல் வாரம் பிடிக்காத பதிவர் : அவர். அடுத்த வாரம் பிடித்த பதிவர் : அவரே! அது எப்படி?

ப: முதல் வாரம் பதில் கொடுத்தவர் அவரே. அடுத்தவாரம் பதில் கொடுத்தவர் வேறு ஒருவர். 

பாராட்டியவர்களுக்கும், கேள்விக்கணைகள் தொடுத்தவர்களுக்கும் எங்கள் நன்றி. 

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!

    

58 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், கௌ அண்ணா, துரைசெல்வராஜு அண்ணா, வெங்கட்ஜி, அக்காக்கள் எல்லோருக்கும்

  சீக்கிரமே வந்துருச்சு...

  கீதா

  பதிலளிநீக்கு
 2. இன்னிக்கும் இருக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  இப்பல்லாம் எபி ய ப்ரெடிக்ட் பண்ண முடியலை ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 3. கேஜிஜி சார், இது ரொம்ப அநியாயமா இல்லையோ! வெளியிடும் நேரம் சொல்ல வேண்டாமா? ஐந்து மணியில் இருந்து ஐந்தே முக்கால் வரை என்னால் வர முடியாது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

  பதிலளிநீக்கு
 4. முழுக்கப் படிச்சுட்டுக் கருத்துச் சொன்ன ஒரே பதிவு என்ற பெருமையைப் பெறும் இந்தப் பதிவின் கேள்விகளுக்கு பதில் சொல்லி இருப்பவர் கேஜிஜி தானே? (அடுத்தவாரக் கேள்வியா வைச்சுக்கலாமா?)

  பதிலளிநீக்கு
 5. காலை வணக்கம் கீதா... கௌ அங்கிள் பதிவை சீக்கிரமே அனுப்பி வச்சுட்டார்!!!

  பதிலளிநீக்கு
 6. இடியாப்ப சேவை பதில் சூப்பர் ரசித்தேன்..

  ஹை கௌ அண்ணா காவேரிப் பிரச்சனையைக் கண்டு ஓடலியே!!! யாரங்கே?!! ஒரு பொக்கே!!!

  அது சரி துவலை அடைனு சொன்ன அந்த ஆராய்ச்சி ஆசிரியர் யாரோ?! ஹா ஹா

  இன்னும் எல்லாம் வாசிக்கலை அப்பால வாரேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நேரம்......

  நடந்துட்டு வந்து படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் கீதா அக்கா... எதை வைத்து கௌ அங்கிள்தான் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் என்று முடிவுக்கு வந்தீர்கள் என்று எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்!

  பதிலளிநீக்கு
 9. குட்மார்னிங் வெங்கட். வந்து படியுங்கள்!

  பதிலளிநீக்கு
 10. இன்று அக்ஷய திரிதியை..

  நல்ல சிந்தனைகளும் செயல்களும்
  பல்கிப் பெருகுவதற்கு அம்பிகையை வேண்டிக் கொள்வோம்...

  நலமெலாம் வாழ்க....

  பதிலளிநீக்கு
 11. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  // நல்ல சிந்தனைகளும் செயல்களும் பல்கிப் பெருகுவதற்கு அம்பிகையை வேண்டிக் கொள்வோம்... நலமெலாம் வாழ்க.... //

  எங்கள் பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
 12. ஆஹா... துரை செல்வராஜூ ஸார்... சரியான கேள்வி... ஒரு உண்மையான, தீவிரமான, பாசமான ரசிகனின் ஆ.... தங்கம்! ஆனால் கேள்விக்குறி போட்டு விட்டீர்களே... இனி இதற்கு அடுத்த வாரம்தான் பதில் போங்கள்!

  பதிலளிநீக்கு
 13. ஐந்து மணியில் இருந்து ஐந்தே முக்கால் வரை என்னால் வர முடியாது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)// ஆமாம் அக்கா சரியே... நான் 4 லிருந்து 4.30 க்குள் எழுந்துடறேனா அதனால 5.15, 5.30 க்கு வந்து தட்டிப் பார்க்க முடியுது...ஹா ஹா ஹா ஹா லேட்டாயிடுச்சுனா வர முடியாது...அப்ப மொபைல்லருந்து ஒரு ஆஜர் வைச்சுட்டு...போயிடுவேன்...

  இனி அப்பாலதான்...வாக்கிங்க், மிச்ச சமையல், அம்மாவைக் குளிக்க வைச்சு எல்லாம் முடிச்சுட்டு வரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 14. சாமி வரம் கொடுத்தாலும்
  பூசாரி வரம் கொடுக்க மாட்டார்!.. என்பது உண்மையாகி விட்டதே!...

  இருந்தாலும்
  கேள்விக் குறி போட்டது குத்தமா!...

  சரி... அடுத்த வாரமாவது நல்ல படமா பார்த்துப் போடுங்க!...

  பதிலளிநீக்கு
 15. கேள்விகளும் பதில்களும் சூப்பர். பானுமதிக்குள்ள த்ரிஷா,பாவ்னா,தமன்னா,அனுஷ்காவை அமிழ்த்திவிட்டீர்கள்.
  பானுமதி மாதிரி இவர்களுக்கு நடிக்க வருமா இது அடுத்த வாரக் கேள்வி,.

  பதிலளிநீக்கு
 16. // இருந்தாலும் கேள்விக் குறி போட்டது குத்தமா!...//

  ம்ம்ம்... சரி.. சரி... ரொம்ப கவனமா கேள்விக்குறியைத் தவிர்த்திருக்கீங்க.. அதுக்காக கேள்வி கேட்காமல் இருந்தால் பதில் மட்டும் எப்படிச் சொல்றது துரை ஸார்..

  பதிலளிநீக்கு
 17. /பலம் : கோபமே வராது. பலவீனம்: இரக்க குணம். //

  கிரேட்.......

  பதிலளிநீக்கு
 18. காலை வணக்கம். எல்லாரும் எல்லாமும் பெற அட்சய த்ருதியை அன்று வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 19. கருத்துரை பதிவு நல்லாத்தான் இருக்கு.

  பதிலளிநீக்கு
 20. ஸ்வாரஸ்யமான பதில்கள். இந்த ஞாயிறில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலை.... நான் உங்க பேச்சு டூ கா! :)))))

  பதிலளிநீக்கு
 21. நல்ல சிந்தனைகளும் செயல்களும்
  பல்கிப் பெருகுவதற்கு அம்பிகையை வேண்டிக் கொள்வோம்...

  நலமெலாம் வாழ்க....//

  ஆமாம் துரை செல்வராஜு அண்ணா..பிரார்த்தனைகல்....எல்லா நாட்களீலுமே!!

  கீதா

  பதிலளிநீக்கு
 22. கேள்வி பதில் குழப்புகிறது. வேற சேனல்ல கேள்விகளை வாங்கி பதில் எழுதுங்க கேஜிஜி சார்.

  பதிலளிநீக்கு
 23. ஸ்ரீராம் வேலையா! மருந்துக்குக் கூட அப்படி எல்லாம் செய்யமாட்டார்! //

  ஹா ஹா ஹா ஹா இது யாருடைய பதில் என்று தெரிந்துவிட்டது...ஹிஹிஹிஹி...

  கீதா

  பதிலளிநீக்கு
 24. மதுரைத் தமிழனுக்கு வாட்சப் மூலமா த்கவல் கொடுத்தது தன்னுடைய செக் அப்படினு அதிரா சொல்லி ஏஞ்சலுக்கு பாக்கி வைத்திருப்பதைக் கொடுக்கப் போவதில்லைனு ஒரு ஜல் ஜல் னு குதிக்கப் போகிறார். ஏஞ்சல் பார்த்துக்கோங்க பூசாரை..ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 25. //பலம் : கோபமே வராது. பலவீனம்: இரக்க குணம். //

  ஆஹா! செம... இது யாருடைய பதிலோ?!!! செம...

  கீதா

  பதிலளிநீக்கு
 26. நகச் சுவை// ஹா ஹா ஹா ரசித்தேன்...

  நகச் சுவைக்கு அனுஷோ, தமனாவோ கிடைக்கலையாக்கும்...ஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 27. கேள்வி பதில் குழப்புகிறது. வேற சேனல்ல கேள்விகளை வாங்கி பதில் எழுதுங்க கேஜிஜி சார்.//

  ஹா ஹா ஹா ஹா...பின்ன நெல்லைக்கு வராம இருக்குமா?!!!!...தமன்னாவுடன் அனுஷ், திரிஷா, பாவனா எல்லாம் போட்டா அதுவும் பானுமதிக்குள்ள தமனாவும்நா.. ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 28. கேள்வி - பதிலாக
  அருமையான எண்ணங்கள், பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 29. வித்தியாசமான பதிவு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 30. ///(இது நகச் சுவை) //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எப்போ பார்த்தாலும் பெண் படத்தையே போட்டுக்கொண்டு:)) ஏன் ஆண்கள் நகம் கடிப்பதில்லையோ??????? ஹா ஹா ஹா இது கேள்விக்குறியேதேன்ன்ன்ன்:))

  பதிலளிநீக்கு
 31. @ துரை செல்வராஜூ :

  ..பூசாரி வரம் கொடுக்க மாட்டார் என்பது உண்மையாகி விட்டதே!...//

  எப்படிக்கொடுப்பார்? பெயரிலேயே ‘சாரி’ இருக்கிறதே!

  பதிலளிநீக்கு
 32. பதில்கள் எல்லாம் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்க். பல பதில்கள் சிரிப்பை வரவழைத்தன. சில ஆஹா நல்ல சாமர்த்தியமான பதில்கள் என்று தோன்றியது.

  இங்கு இளம் வாலிபர் கூட்டமே இருக்கிறது என்று தெரிகிறது. பாவனா, தமனா, அனுஷ்கா, த்ரிஷா என்று ஒளிமயமாக படங்கள். நானும் வாலிபன் என்று சொல்லிக் கொள்கிறேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 33. ஏன் ஆண்கள் நகம் கடிப்பதில்லையோ??????? ஹா ஹா ஹா இது கேள்விக்குறியேதேன்ன்ன்ன்:))//

  ஓ அதிரா இதையே தான் நான் கேள்வியாகக் கேட்க நினைத்து வந்தேன்...இடையில் வேலை..நீங்கள் கேட்டுட்டீங்க நானும் சேர்ந்து கொள்கிறேன் அதானே என்று கேட்டு!! ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 34. அதிரா உங்களுக்கு ஒன்று தெரியுமா.....அனுஷ் தமனா எல்லாம் நல்ல பிள்ளைகளாம் நகம் கடிக்க மாட்டாங்களாம்....ஹிஹிஹிஹி...

  கீதா

  பதிலளிநீக்கு
 35. கேள்விகளும் பதில்களும் அருமை.
  மாற்றி யோசியுங்கள்.

  பதிலளிநீக்கு
 36. //ப: கூடுவாஞ்சேரி கோவிந்தசாமி.//

  இவரு ஆரூஊஊஊஊஊஊ? ஒருவேளை சிவாஸ் றீகல் சிவசம்போ அங்கிளின் ப்ப்ப்பிரதர் ஆக இருப்பாரோ?:))

  பதிலளிநீக்கு
 37. அதென்ன நாலு பெண்களில் அனுக்காவுக்கு மட்டும் லிப்ஸ்ரிக்:) பூசி விட்டிருக்கிறீங்க?:)) நீங்க உங்கட “சின்ன மருமகனுக்கு”:)) ஓவராத்தான் சப்போர்ட் பண்றீங்க கெள அண்ணன்:)) ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
 38. ///நகைச்சுவையாகப் பேசுவது நல்லதோ? ஆபத்தோ?

  ப: யாரிடம் என்பதில்தான் விஷயமே இருக்கு. ///

  இது உண்மையிலேயே 100 வீதம் கரீட்டு:)) சிலருக்கு நகச்சுவை:)) புரியாது கோபித்திடவும் வாய்ப்பிருக்கு நம்மோடு:)).

  /// உங்களால் ஒரு விலங்கை பசு மாட்டின் அளவிற்கு பெரிதாக மாற்ற முடிந்தால் எந்த விலங்கை மாற்றுவீர்கள்? ஏன்?

  ப: கொசுவை. ஈசியாக அடித்துத் துரத்திவிடலாம்! //

  வீட்டுக்குள் ஆயிரம் கொசு இருக்கும்:)) அத்தனையும் சிங்கம்/புலியா மாறினால்ல்ல்ல்????:)) ஹையோ ஹையோ...

  சத்துப் பொறுங்கோ மீண்டும் வாறேன்:)).. கடமை அழைக்கிறது:))

  பதிலளிநீக்கு
 39. //என் டேஸ்டுக்கு அடை செய்தவர், இன்றைக்கு நூற்று நான்கு வருடங்களுக்கு முன்பு பிறந்து, ஓராண்டுக்கு முன்பு காலமாகிவிட்டார். // உங்க அம்மா உங்களுக்குக் கடைசியா அடை எப்போ செய்து கொடுத்தார்?

  அடையின் படங்கள் பகிர்ந்தால் மட்டும் போதாது! விளக்கமும் கொடுக்கணும்.

  பதிலளிநீக்கு
 40. இந்த வாரம் கு.கு. வந்திருப்பதால் கேஜிஜி ஒளிஞ்சுண்டிருக்காரோ? அடுத்த வாரத்துக்கான கேள்விகளை எப்போக் கேட்கணும்?

  பதிலளிநீக்கு
 41. முதல் வாரம் பிடிக்காத பதிவர் காசு சோபனா. அடுத்தவாரம் பிடித்த பதிவரும் அவரே. அப்போ பதில்களும் அவரே தானா?

  கேஜிஜியும் காசு சோபனாவும் ஒருவரா?

  கேள்வி-பதில்களைப் பார்க்கையில் கேஜிஜி ஒருத்தரால் தான் இப்படி வடைகள், சேச்சே, விடைகள் தரமுடியும்னு தோணுது, உண்மையா, இல்லையா?

  மத்தவங்க எல்லாம் ரொம்ப சீரியஸ் டைப்! உண்டா, இல்லையா?

  ஶ்ரீராம் இப்படி எல்லாம் பதில் சொல்ல மாட்டார், அவர் பாணியே வேறே! அதோட அனுஷ்காவோ, தமன்னாவோ வராமல் அவரால் எந்த பதிலும் சொல்ல முடியாது! சரியா?

  பதிலளிநீக்கு
 42. அடுத்த வாரத்துக்கான கேள்விகளை, இந்தப் பதிவிலோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ அந்த வார ஞாயிற்றுக் கிழமைக்குள் கேட்டால் எங்களுக்கு படித்து, யோசித்து பதில் எழுத சௌகரியமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 43. பதில்கள் சுவை. அடுத்த வாரத்திற்கான கேள்வி: கண்ணதாசன் கவியரசு, வைரமுத்து கவிப்பேரரசு. இந்த இருவருக்கும் ஈடு கொடுத்த வாலி?

  பதிலளிநீக்கு
 44. வணக்கம் சகோதரரே

  புதன்கிழமை கேள்வி, பதில்களால் விறு விறுவென்று செல்கிறது. கேள்வி கேட்பவர்களுக்கும், கேள்விக்கேற்ற பதிலை தொகுப்பவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் . சுவாரஸ்யங்களை காண தொடர்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 45. ///ப: ஸ்ரீராம் வேலையா! மருந்துக்குக் கூட அப்படி எல்லாம் செய்யமாட்டார்! ///

  ஹா ஹா ஹா மருந்துக்குத்தான்:) செய்ய மாட்டார்:) ஆனா அனுக்காவுக்குக்கு செய்யலாமெல்லோ:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))..

  ////பலம் : கோபமே வராது.////

  ஆங்ங்ங்ங்ங் அஞ்சு கீதா ஓடியாங்கோ:) இனிக் கெள அண்ணனோடு பயமில்லாமல் தனகலாம்:)) அவருக்குத்தான் கோபமே வராதே:))..

  1.நுளம்பு கடிச்சாலும் கோபம் வராதோ?

  உண்மையில் எனக்கும் கோபமே வருவதில்லை.. வாழ்க்கையில் ஆரோடும் கோபித்து சண்டை போட்டதில்லை[ஒரே ஒரு நட்போடு மட்டும் சண்டை போட்டிருக்கிறேன்.. அது தன்மானத்துக்கு ஓவரா இழுக்கு வந்தபோது]... மற்றும்படி யாரோடும் கோபித்தது கிடையாது.

  ஆனா எனக்கு ஒரு விசயம் மட்டும் அப்படியே சுள்ள்ள்ள்ள்ள் எனக் கோபம் வரும்:)) அது என்ன தெரியுமோ? என் தலைமயிர் நொந்தால்.. நான் தலையிழுக்கும்போது சிக்கில் பட்டு நொந்தால் கூட படுபயங்கரமாக கோபம் வருது:)... இனிக் கிளவிக்கு வாறேன்ன்:)) ஹையோ கேள்விக்கு வாறேன்:).

  2. உங்களுக்கும் இப்படி ஏதும் சம்பவம் கோபமூட்டுமோ?:) அதாவது எதையாவது பார்த்தவுடன்.. கேட்டவுடன், சிலருக்கு காலில் ஆராவது மிதிச்சிட்டால் கெட்ட கோபம் வரும்.. இப்படி ஏதும் உண்டோ???

  பதிலளிநீக்கு
 46. 1.கெள அண்ணனின் வாழ்க்கையில் தீராத அல்லது நிறைவேற்ற முடியாமல் போன ஆசை ஏதும் உண்டோ?

  2. வெளிநாட்டில் இருக்கும் நம்மவர்களைப்பார்த்து கோபம் பொறாமை அல்லது நாமும் போனால் என்ன வெளிநாட்டுக்கு எனும் விருப்பம் ஏற்பட்டதுண்டோ?

  3. நீங்கள் சைவம் தானே? அப்போ அசைவம் என்றால் எப்படியிருக்கும்.. அது நல்லதோ கெட்டதோ இப்படி ஏதும் சிந்தித்ததுண்டோ?:).

  3. அனுஷ்கா உங்கட வீட்டுக்கு வந்து ஸ்ரீராமின் அட்ரஸ் உம் ஃபோன் நம்பரும் கேட்டால் குடுப்பீங்களோ?:)) ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
 47. ஆஆஆஆங்ங்ங்ங் இன்னொரு கேள்வி.. ஸ்ரீராம் உங்களைப்போலவேதான் இருப்பாரோ இல்லை வித்தியாசமாக இருப்பாரோ?:)) ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
 48. அதிரா - அவர், எனக்குப் பின்னாடி இருப்பவரைப் பார்த்து, " என்ன சௌக்கியமா ?" - நான் அங்கு பூங்காவில் அதிகாலையில் நடந்துகொண்டிருந்தபோது தினமும் வரும் பெண் (திருமணமானவள், கர்னாடகத்தைச் சேர்ந்தவள்னு நினைக்கிறேன்) ஒரு நாள் ஹாய் என்று சொல்லிச் சிரித்தாள். நான் 'ஏதுடா... இவள்ட பேசினதே இல்லை, ஆனால் பல மாதங்கள் பூங்காவில் நடப்பதைப் பார்த்திர்க்கிறேன் - காலை 5.30 அளவில்.. அங்கெல்லாம் பொல பொலவென்று விடிந்துவிடும்' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே புன்னகைத்தேன். சிறிது தூரம் சென்றபின்புதான் அவள் எனக்குப் பின்னால் வந்த ஒரு அங்கிளுக்கு ஹாய் சொன்னாள் என்று தெரிந்தது. அதனால் தெரியாதவர்கள் சிரித்தால் கவனிக்காதமாதிரி கடப்பதுதான் நல்லது.

  பதிலளிநீக்கு
 49. கேஜிஜி சார் பதில் - நூற்று நான்கு வருடங்களுக்கு முன்பு பிறந்து, ஓராண்டுக்கு முன்பு காலமாகிவிட்டார் -

  1. அது எப்படி நம் எல்லோருக்கும் மனைவியின் சமையலைவிட மனதில் அம்மா சமையல் ஒரு படி மேலோங்கியே வாழ்க்கை முழுவதும் இருக்கிறது (மனசைவிட்டு வெளியில் சொல்வது கடினம் என்றபோதும்)

  2. அடுத்தவர் மனதில் நினைப்பதை நம்மால் உடனுக்குடன் அறிய முடிந்தால், நம் வாழ்வு எப்படி இருக்கும்?

  3. முகநூல், இணையம் வழியாக ஏற்பட்ட நண்பர்களை (இருபாலாரும்) அவர்கள் எழுத்து மூலமாகவே அறிவோம். அப்போது அவர்கள் குரல், உருவம், பழகும் விதம் என்று மனது ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும். நேரில் பார்க்கும்போது உங்களுக்கு அது எப்போதும் சரியாக இருந்திருக்கிறதா? (உதாரணமா நீங்கள் கொஞம் ஜாலி டைப், நகைச்சுவையா பேசும்போது தவறு நேர்ந்தாலும் ரொம்ப தப்பா எடுத்துக்க மாட்டீங்க என்ற ஒரு பிம்பம் இருக்கு (இருக்கா?). ஆனால் நேரில் அப்படியே இருக்குமா?)

  4. ஓய்வு பெற்றவுடன் ஒரு வெறுமை வந்ததா? பகல் முழுவதும் வீட்டில் தொந்தரவு செய்யாத மனுஷன், முழு நாளும், வாரம் முழுவதும் வீட்டிலேயே இருக்கும்போது மனைவிக்கும் அது கொஞ்சம் அன்கம்ஃபர்டபிளா இருந்ததா? அந்த வெறுமையை எப்படி நீங்கள் கடந்தீர்கள்? எப்படி ஆக்டிவாக ஆக்கிக்கொண்டீர்கள்? (இதுக்கு கேஜிஎஸ், கேஜிஒய், கேஜிஜி ஆகியோர் பதில் எழுதலாம்)

  பதிலளிநீக்கு
 50. தில்லையகத்து கிதா ரங்கன் - அனுஷ் தமனா எல்லாம் நல்ல பிள்ளைகளாம் நகம் கடிக்க மாட்டாங்களாம்.. - அவங்க எல்லாம் ஷோ பிஸினசில் இருப்பவர்கள். நகம் போன்ற வெளிப்பூச்சு மிக முக்கியம். அதுவும்தவிர, ஆண்களுக்குத்தானே டென்ஷன் (ஹா ஹா ஹா)

  பதிலளிநீக்கு
 51. நல்ல நகைச்சுவையானவைதான்.. வாழ்த்துக்கள்

  வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  பதிலளிநீக்கு
 52. நன்றி தமிழ்us. உங்கள் தளத்தில் எங்களை இணைப்பதில் சிரமம் இருக்கிறது. உபயோகிப்பாளர் பெயர் ஆங்கிலத்தில் கொடுத்தாலும், தமிழில் கொடுத்தாலும் ஆட்சேபித்து வெளியேற்றுகிறது.

  பதிலளிநீக்கு
 53. //நெ.த. said...
  அதிரா - அவர், எனக்குப் பின்னாடி இருப்பவரைப் பார்த்து, " என்ன சௌக்கியமா ?" - //

  ஹா ஹா ஹா பல்ப்பு வாங்கியதை...:), சிரித்துக் கொண்டு சொல்லும் விதம் அழகு:))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!