திங்கள், 9 ஏப்ரல், 2018

​"திங்க"க்கிழமை : நெல்லிக்காய்த் தொக்கு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பிநெல்லிக்காய்த் தொக்கு 


சில வாரங்களுக்கு முன்பு, வேற ஏதோ ஒரு பதிவை கீதா சாம்பசிவம் மேடம் லிங்க் கொடுத்திருந்தபோது, அதை வைத்து கோபு சார் (VGK வை.கோபாலகிருஷ்ணன்) பதிவுகள்ல, எங்கள் பிளாக் ஆசிரியர் குழு அவரை சந்தித்ததைப் பற்றிய பதிவைப் படிக்க நேர்ந்தது. அதுல ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்கள், அவருக்கும் கொடுத்தனுப்பியிருந்த நெல்லிக்காய்களைப் பற்றியும், உடனே அவருடைய மருமகள் அதை உபயோகப்படுத்தி கார சாரமாக நெல்லிக்காய் தொக்கு செய்ததைப்பற்றியும் எழுதியிருந்தார். அந்தப் படத்தைப் பார்த்த நாளிலிருந்து எப்படா நானும் நெல்லிக்காய்த் தொக்கு செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இங்கு வருடம் முழுக்க நெல்லிக்காய் கிடைக்கும். எனக்கும் சாதத்துக்கு நெல்லிக்காய் ஊறுகாய்க்குப் பதில், தொக்கு செய்து சாப்பிடலாமே என்று மனதில் எண்ணம். ஜனவரி இறுதியில் நெல்லிக்காய் தொக்கு செய்தேன். இதுவும் முதல் முறை நான் செய்வது, சாப்பிடுவது.

உங்களுக்குத் தெரிந்திருக்கும் நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள். நாங்க ‘நெல்லியில் தங்கம் இருக்கும்’ என்று சொல்லிக்கொடுத்து வளர்ந்தவங்க. அவ்வளவு உயரிய சத்து நெல்லிக்காயில் உண்டு. நெல்லி மரத்தின் கட்டையைத்தான், கொஞ்சம் இனிப்பாக இல்லாத, கடு கடு தண்ணீர் உள்ள கிணற்றில் போடுவார்கள். அதனால் தண்ணீர் சுவை நன்றாக இருக்கும் என்று. காடுகளில் வளரும் நெல்லியும், இயற்கையான நெல்லியும் (ஆரண்யநிவாஸ் நெல்லி) மிகுந்த மருத்துவகுணம் கொண்டவை. இதுலயும் கொஞ்சம் கலப்படம் வந்து ரொம்ப பெரிய நெல்லியாக விளைவிக்கிறார்கள். நெல்லியை, தேனில் ஊறவைத்து (அது இருக்கணும் 3-4 வாரம்) சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.  வெறும் நெல்லியைச் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால், எந்தத் தண்ணீரும் (யாருய்யா… டாஸ்மாக்கை இப்போ நினைக்கறது?. கபர்தார்..) மிகுந்த சுவையா இருக்கும்.  (மாங்காய்க்கு இந்த குணம் கிடையாது. அதைச் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் தண்ணீரின் சுவை குறையும்)


   
மேலே உள்ள படங்கள், கோபு சார் தளத்திலிருந்து (http://gopu1949.blogspot.in) சுட்டது.


தேவையான பொருட்கள்

முழு நெல்லிக்காய் 15
நல்லெண்ணெய் 4-5 ஸ்பூன்
2-3 ஸ்பூன் மிளகாய்த் தூள் (நான் காஷ்மீரி மிளகாய்த் தூள் உபயோகித்தேன். காரம் அவ்வளவு இருக்காது ஆனால் கவர்ச்சி நிறத்தில் இருக்கும்)
மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
பெருங்காயப் பொடி ½ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை

நெல்லிக்காயை கட் பண்ணி கொட்டையில்லாமல் எடுத்துக்கோங்க. அதை முடிந்த அளவு சிறியதாக கட் பண்ணிக்கோங்க. பெரிசு பெரிசா கட் பண்ணினீங்கன்னா மிக்சில அரைபட கொஞ்சம் நேரமெடுக்கும்.

அதை மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். முடிந்த அளவு எல்லாம் அரைபட்டுடுத்தான்னு பார்த்துக்கோங்க. தண்ணீர் விடவேண்டாம்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு காயவைங்க. நல்ல சூடானதும், கடுகு ஒரு ஸ்பூன் போட்டு, வெடிக்கவிடுங்க. இப்போ அடுப்பை SIMல வச்சுட்டு, அதுல பெருங்காயத்தூள் சேருங்க. உடனே அரைத்துவைத்துள்ள நெல்லியைச் சேர்த்து கிளறிக்கோங்க. அப்புறம், மிளகாய்த்தூள், மஞ்சத் தூள், தேவையான உப்பு சேர்த்து கிளறுங்க. கொஞ்ச நேரம் கிளறினால், எண்ணெய் பிரிந்து கடாயில் தொக்கு ஒட்டாமல் வரும். அப்போ அடுப்பை அணைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தொக்கை எடுத்துவைத்தால் கொஞ்சம் ஆறினபிறகு தயாராயிடும்.

   

நெல்லிக்காய் தொக்கு அருமையா வந்தது. உடனே மோர் சாதம் செய்து அதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டேன். அன்று மாலை, சப்பாத்தி செய்தபோது (நான் சப்பாத்திலாம், மாவு பிசைந்து செய்வதில்லை. அந்த அளவு பொறுமை எனக்கு இல்லை. இங்கு ரெடிமேட் சப்பாத்தி கிடைக்கும். அது மெஷினால் தயாரிக்கப்பட்டது. அதை தோசைக் கல்லைச் சுடவைத்து, அதில் போட்டு அழுத்தினால், அட்டஹாசமான சப்பாத்தி தயார்.), அதற்கு நெல்லித் தொக்கைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டேன். மிக அருமையாக இருந்தது.

எதுக்கு பச்சை நெல்லியை அரைத்துச் செய்யணும். தொக்கு கடாயில், நெல்லி நன்கு வேகும்வரை கிளற வேண்டியிருக்கே என்று, முதலில் நெல்லியை பாதி குக் பண்ணி, அதனை அரைத்து, அதைவைத்து நெல்லித் தொக்கு செய்தேன். அதுவும் நல்லாத்தான் இருந்தது. ஆனால் பச்சை நெல்லியை அரைத்துச் செய்ததுபோல் அவ்வளவு டாப் கிளாஸாக இல்லை.( சப்பாத்தி பார்க்க அழகாய் இருக்கிறது - ஸ்ரீராம் )
அங்க, நெல்லிக்காய் கிடைக்கும்போது செய்துபாருங்க. அட்டஹாசமான தொக்குக்கு நான் கேரண்டி.

அன்புடன்

நெல்லைத்தமிழன்

136 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா, பானுக்கா அனைவருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. வாவ்! நெ த வின் நெ கா தொக்கு!!! காலையிலேயே இப்படிப்போட்டு டேஸ்ட் பட்ஸை கிளப்பி விட்டுட்டீங்க ஸ்ரீராம் அண்ட் நெ த....அதுவும் சப்பாத்தி படம் வேறு.. முழுவதும் வாசிக்க அப்பால வரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. இது மட்டும் கண்ணில் பட்டது...நெல்லிக்காயை நான் கட் செய்யாமல் ஜஸ்ட் கொஞ்சமாக ஸ்டீம் பண்ணிட்டு பிரிப்பது எளிது..இல்லையா அதனால்...எடுத்து அரைத்து தொக்கு...செய்வதுண்டு...செமையா இருக்கும்..வரேன் வரேன் எனக்கு சப்பாத்தி தொக்கு கொஞ்சம் எடுத்து வைங்க ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
 4. இங்கதான் இருக்கும்... மெல்ல வாங்க கீதா.... நிறைய இருக்கு!

  பதிலளிநீக்கு
 5. அதானே... நெல்லிக்காய் தொக்கினை குளக்கரைக் கொக்கா தூக்கி கொண்டா போகப் போகின்றது?...

  இங்கே தான் இருக்கும்..
  இங்கேயே தான் இருக்கும்...

  ஒருவேளை நெ.த. செய்த தொக்கு என்பதால் இப்படியும் இருக்குமோ!...

  இருக்கலாம்...

  நல்லவேளை...
  நான் கொஞ்சம் தொட்டுக் கொண்டேன்...

  பதிலளிநீக்கு
 6. ஆஹா வம்பைக் கிளப்பறீங்களே துரை செல்வராஜூ ஸார்... நான் அப்படிச் சொலல்வில்லை... சொல்லவில்லை... காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 7. படங்களின் தொகுப்பு அருமை

  பதிலளிநீக்கு
 8. நெல்(லை)லியின் நற்குணம் அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
 9. மாமியார் வீட்டில் காட்டு நெல்லி மரம் இருந்தது. அரைநெல்லி மரமும் உண்டு. இப்போது காட்டு நெல்லி இல்லை. அரைநெல்லி இருக்கிறது. காட்டு நெல்லியை மாமியார் துருவித் தரச் சொல்லுவார்கள் தொக்கு செய்ய....அது கொஞ்சம் கடினமான வேலை. அதிலேயே நெல்லிமுள்ளியும் போடுவதற்கு. ஆனால் நான் நெல்லி கொஞ்சமாக இருந்தால் கட் செய்வேன் நிறைய என்றால் ஸ்டீம் தான்...

  நீங்கள் கொஞ்சம் வேக வைத்து முயற்சி செய்துருக்கீங்க போல கடைசியில் பார்த்தேன்.

  நெல்லிக்காய் கட்டை கிணற்றில் போடுவதுண்டு. ஆமாம் ஊரில் போட்டதுண்டு.

  நெல்லிக்காய் ஜூஸ் ரொம்ப நன்றாக இருக்கும். முன்பு மாமியார் வீட்டில் நிறைய காய்க்கும் போது செய்த்துண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
 10. கில்லர்ஜி உங்க கமென்ட் ஹா ஹா ஹா ஹா ஹா

  நான் இப்ப டைப்பும் போது நெல்லையை ஸ்டீம் செய்து என்று வந்துவிட்டது.....நல்ல காலம் இன்று செக் செய்து வெளியிட்டேன் பொதுவா வேர்டில் நான் டைப்பி, காப்பி செய்து உடனே போட்டுவிடுவேன்...

  நெல்லையை ஸ்டீம் என்று நான் அடித்திருந்ததைப் பார்த்ததும் ஆஹா நெல்லைக்கு ஸ்டீம் பாத் கொடுத்து என்று நினைத்துச் சிரித்துவிட்டேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 11. மாமியார் வீட்டில் அரைநெல்லியும் உண்டு அதையும் தொக்கு, ஜூஸ் என்று செய்வது உண்டு. இம்முறை வார்தாவில் நெல்லி மரம் போய்விட்டதால் இப்போதுதான் துளிர்த்து வருகிறது...

  கீதா

  பதிலளிநீக்கு
 12. நெல்லிக்காய்த் தொக்கு எளிதாகச் செய்யலாம். பச்சை நெல்லிக்காயைத் துருவிக் கொண்டு நெல்லிக்காய் சாதமும் பண்ணலாம். :) நெல்லிக்காயைச் சின்ன வயசில் அப்பாவுக்குத் தெரியாமல் தான் சாப்பிட்டிருக்கேன். பள்ளி வாசலிலே காலணாவுக்கு மூணு என விற்பார்கள். சிநேகிதிகள் யாரேனும் வாங்கினால் பகிர்ந்துப்போம். அப்படிச் சாப்பிட்டது தான். எங்க வீட்டில் நெல்லிக்காயே நுழைந்ததில்லை. கல்யாணம் ஆகி வந்து மாமியார் வீட்டில் தான் "தைரியமாக" நெல்லிக்காய் ஊறுகாய் போட்டுக் கொண்டு மோர் சாதம் சாப்பிட்டேன். :)))))

  பதிலளிநீக்கு
 13. நேற்றும் முன் தினமும் நெல்லை வட்டாரத்தில்...

  உண்மையில் நீராவிக் குளியல் (ஸ்டீம்) தான்...

  நேற்று நள்ளிரவு கடற்கரையில் தூக்கம்..
  2.30 மணி அளவில் நல்ல மழை...

  சிலு..சிலு.. என்றிருக்கிறது இப்போது...

  பதிலளிநீக்கு
 14. சிலவற்றை சுட்டு, சமைக்கப்பட்ட சமையல் நேர்த்தியாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 15. காலை வணக்கம்.

  நெல்லிக்காய் தொக்கு எனகும் பிடிக்கும். இங்கேயும் கிடைக்கிறது. செய்து பார்க்கலாம்!

  காஷ்மீரி மிர்ச் - கலர் செமயாக இருந்தாலும் காரம் அவ்வளவு இருக்காது! நானும் கொஞ்சமாக பயன்படுத்துவேன்.

  பதிலளிநீக்கு
 16. நெல்லிக்காயை எப்படி செய்தாலும் பிடிக்கும்.
  தொக்கும் செய்வேன் இரண்டு முறையிலும் . வேக வைத்தும்,
  பச்சை நெல்லிக்காயை துருவியும்.
  கிணற்றில் நெல்லிக்காய் கட்டையை எங்கள் வீட்டிலும் போட்டு இருக்கிறோம்.
  இப்போது தண்ணீர் இல்லை கிணற்றில் மூடி வைத்து இருக்கிறோம்.
  படங்கள் உடனே செய்து பார் என்று சொல்கிறது.
  வீட்டில் நெல்லிக்காய் இருக்கிறது, காஷ்மீரி மிளகாய்த் தூள் இல்லை வாங்கி செய்து பார்த்து விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 17. // மேலே உள்ள படங்கள், கோபு சார் தளத்திலிருந்து (http://gopu1949.blogspot.in) சுட்டது.//

  சுடப்பட்ட இடத்தினை மிகத்துல்லியமாக சுடச்சுடக் காண இதோ அந்தப் பதிவின் மிகச்சரியான இணைப்பு:
  http://gopu1949.blogspot.in/2015/01/blog-post_30.html

  மேற்படி பதிவினைப் பொருத்தமான படங்களுடன் கண்டு களித்து, முழுவதுமாகப் படிப்பவர்களுக்கு கண்களில் ஆனந்தக்கண்ணீரும், முகத்தில் ஓர் புன்முறுவலும், நாக்கினில் ஜொள்ளும் வழியப்போவதும் சர்வ நிச்சயம். :)

  அதிலுள்ள பின்னூட்டங்களின் பலரும் சும்மாப் பின்னிப்பின்னி எடுத்துள்ளார்கள்.

  மேற்படி பதிவுக்கு நான்கு முறைகள் வருகை தந்து தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ள Mrs. R.Umayal Gayathri அவர்களின் பின்னூட்டங்கள் மிகச் சிறந்த பின்னூட்டங்களாக என்னால் தேர்வு செய்து பாராட்டப்பட்டுள்ளது.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 18. அதானே... நெல்லிக்காய் தொக்கினை குளக்கரைக் கொக்கா தூக்கி கொண்டா போகப் போகின்றது?...

  இங்கே தான் இருக்கும்..
  இங்கேயே தான் இருக்கும்...//

  அதானே!! துரை அண்ணா...!! ரொம்ப கரெக்ட்..இங்கியேதான் இருக்கும்..ஸ்ரீராம் ரொம்ப சமர்த்துப் பையனாக்கும். யாரெல்லாம் லேட்டாக வராங்களோ அவங்களுக்கு பங்கு எடுத்து வைத்திருப்பார்...

  கீதா

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் நண்பர்களே.. !

  தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/ வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் இணையத்தளதிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  நன்றி
  http://gossiptamil.com/aggre/

  பதிலளிநீக்கு
 20. நெல்லிக்காய் சாதமும் பண்ணலாம். //

  ஆமாம் கீதாக்கா நெல்லிக்காய் சாதம் ரொம்ப டேஸ்டியா இருக்கும் துருவிக் கொண்டு செய்வது... அருமையா இருக்கும்.

  செமை டேஸ்டியான தொக்கு வித் சப்பாத்தி ரொம்ப நல்லாருக்கு நெல்லை..பாக்கவும் அட்டகாசமா இருக்கு....நீங்க பேசாம ஒரு ஃபுட் ஷோ அல்லது பிஸினஸ் தொடங்கலாம் நெல்லை... சூப்பர் டிஷ்..ஸ்ரீராம் எடுத்து வைச்சதுக்கு மிக்க நன்றி....ஹா ஹா ஹா ஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
 21. Looks yummy! First timela ivli supera senjurukkeenga! Congrats!!
  Enga veetla pasangalukku ennovo ithu pidippadhillai, maangai uruga theerugira speedukku ithu theervathillai:-))

  பதிலளிநீக்கு
 22. உண்மையில் நீராவிக் குளியல் (ஸ்டீம்) தான்...

  நேற்று நள்ளிரவு கடற்கரையில் தூக்கம்..
  2.30 மணி அளவில் நல்ல மழை...

  சிலு..சிலு.. என்றிருக்கிறது இப்போது...//

  செம வெயிலோ அங்கு...தின்னவேலில இடையில மழை பெய்ததுனு சொன்னாங்களே என் கஸின்...

  மீண்டும் வெயில் போல....கடற்கரையில் தூக்கமா வாவ்! செமையா இருக்குமே அண்ணா.

  நானும் மகனும் மகன் 6 ஆம் வகுப்பு சமயத்தில் சென்னையில் டர்ட்டில் வாக் போனோம். பெசன்ட் நகரிலிருந்து நீலாங்கரை வரை. அலைகளுடன் நடை கரையோரம். ராத்திரி 11 மணிக்குத் தொடங்கி வழியில் ஆமை குழி தோண்டி வீடு போன்று அமைத்திருக்கும் அறைக்குள் உள்ள முட்டைகளை (90 லிருந்து 120 வரை இருக்கும்..ஒரு குழியில்...) கலெக்ட் செய்து கொண்டு அதிகாலை 3, 3.30 க்கு நீலாங்கரை சென்று அங்கு உள்ள குழிகளில் அந்த முட்டைகளை வைச்சுட்டு, ஏற்கனவெ பொரிந்திருக்கும் ஆமைக் குட்டிகளைக் கடலில் விட்டு கரையிலேயே பெட்ஷீட் விரித்துப் படுத்து அந்தக் காற்று கடல் அலை சப்தம்...ஆஹா ...என்ன இனிமையான அனுபவம் அது....செமையா இருந்துச்சு...மாமி வாலண்டியராக இருக்கும் ஸ்பெஷல் குழந்தைகள் பள்ளியின் மூலம் அக்குழந்தைகளுடன் நடை...நல்ல அனுபவம். நீங்கள் கடற்கரையில் படுத்தது பற்றிச் சொன்னதும் அந்த நினைவு...

  கீதா

  பதிலளிநீக்கு
 23. @கீதா: கரையிலேயே பெட்ஷீட் விரித்துப் படுத்து அந்தக் காற்று கடல் அலை சப்தம்...ஆஹா ...என்ன இனிமையான அனுபவம் //

  ஆனந்தம்தான் கடற்கரையில் உறங்குவது. கடலுக்குமேலே ஆகாயம் என்று ஒன்று இருந்திருக்குமே, அதை அந்த அதிகாலையில் பார்த்தீர்களா ?

  பதிலளிநீக்கு
 24. நெல்லைக்காய்த் தொக்கு ப்ரமாதமாகத்தான் இருக்கும்! உடம்புக்கும் நல்லது.

  பதிலளிநீக்கு
 25. நெல்லிக்காய் அப்படியே சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்...

  பதிலளிநீக்கு
 26. ஆனந்தம்தான் கடற்கரையில் உறங்குவது. கடலுக்குமேலே ஆகாயம் என்று ஒன்று இருந்திருக்குமே, அதை அந்த அதிகாலையில் பார்த்தீர்களா ?//

  ஆகா!! ஏகாந்தன் அண்ணா அதை என்னவென்று சொல்ல? கருத்தே பெரிசாயிடுச்சுனு நிறைய சொல்ல நினைத்து விட்ட்டேன்...அந்த இன்பம்...அப்போதுதான் என்னவெல்லாமோ தத்துவங்கள் பாடங்கள் எல்லாம் மனதில் வரும்...வானம் எனக்கொரு போதிமரம், நாளும் எனக்கரு சேதி தரும்...இது பொன்மாலை (ஜாமப்) பொழுது பாடல் நினைவில் பாடியது. அதுவும் சென்னையில் குளிர்காலம் என்று சொல்லப்படும் டிசம்பர்...மேலே வானம், கடல் ஒரு புறம்....மகன் சொன்னான் அம்மா நான் ஸ்கூலுக்குப் போகணுமா? இப்படியே இருந்துரலாமா?! அம்மா நான் இந்த ஆமையை எல்லாம் நல்லா பாத்துப்பேன்.....பாவம் இல்லையாமா அதெல்லாம்...அந்த வீடு வேண்டாம்மா.. நாம இங்கேயே ஒரு வீட்டுல இருப்போமே ..என்று சொல்ல ஆரம்பித்தான்...ஹா ஹா ஹா ஹா...நானும் அவனும் ஆமைக் குட்டிகளை ரசித்து ரசித்து கையில் எடுத்து கடல் அலையில் விட்டோம்.கையில் இரு குறுகுறுப்பு ஹையோ அந்த ஃபீலிங்க் எல்லாம் செம..அதுவும் காலையில் வானம் வெளுக்கும் வேளையில் வாவ்!!!! மெதுவாகத்தானே விடியும்...டிசம்பரில்..அந்தக் கீழ்வானச் சிவப்பு...மெதுவாக மெதுவாக...சூரியனின் வெளிச்சம்..செம....அண்ணா....வர்ணிக்க வார்த்தைகள் இல்லை..

  கீதா

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் நண்பரே.. !

  உங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது, பார்வையிடவும். தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/ வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் இணையத்தளதிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  நன்றி
  http://gossiptamil.com/aggre/

  பதிலளிநீக்கு
 28. @ கீதா: அதுவும் சென்னையில் குளிர்காலம் என்று ..//

  என்ன! சென்னையில் குளிர்காலமா?
  சிரிப்பு வருது..சிரிப்பு வருது.. சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!

  ..மெதுவாகத்தானே விடியும்...//

  இதை எப்போது மனிதர்கள் புரிந்துகொள்வார்களோ..

  பதிலளிநீக்கு
 29. நெல்லிகாய் தொக்கு நானும் டெல்லியில் செய்ததுண்டு.. ஆவியில் வைத்தெடுத்து விதைகளை நீக்கி அரைத்து செய்வேன்..

  இன்று தான் தேன்நெல்லி போட்டு வைத்தேன்..

  பதிலளிநீக்கு
 30. ஆஹா ஓஹோ இன்று நெல்லைத்தொக்கோ.. ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே நெல்லித்தொக்கு பார்க்க நல்லா இருக்குது. இது நானு செய்தேன் நெல்லைத்தமிழன் இதே முறைதான் ஆனா அரைக்காமல் துண்டுதுண்டாக கட் பண்ணிக் கொஞ்சம் அவித்துச் செய்தேன்.. நல்லாத்தான் இருந்துது ஆனா எனக்கென்னமோ சுவை பெரிதாக பிடிக்கவில்லை.

  இன்னொரு தடவை இப்படி அரைத்துச் செய்து பார்க்கோணும்.

  பதிலளிநீக்கு
 31. தொக்கை விட மோர் சாதம் இன்னும் சூப்பர். நான் தயிர்ச் சாதம் செய்ததுண்டு.. மோர்ச்சாதம் .. இல்லை. ஆனா பார்வைக்கு தயிர்ச்சாதம் போலவே இருக்கே.

  உங்கள் நாட்டு நெல்லிக்காய் குட்டியாக இருக்கு .. இங்கே வருவதெல்லாம் நல்ல உரம் சாப்பிட்டு விளைஞ்சு பெரீய குண்டுக் குண்டா அதிலும் பயங்கர கண்ணாடி மஞ்சள் நிறத்தில் பார்க்கவே விட மனம் வராது.

  ஆனா இம்முறை வாங்கியபோது நல்ல பழுத்த மஞ்சளா இருந்துது , வாங்கிச் சாப்பிட்டால் கைக்குது.. ஏதோ புகையிட்டோ என்னமோ பழுத்தது போல ஆக்கி இருக்கினம்.

  உங்களுக்கு ஒன்று தெரியுமோ? நெல்லிக்காய்களை வாங்கி வந்த உடன், கழுவிப்போட்டு, உப்புத்தண்ணியில் மூழ்கும் அளவு, போத்தலில் அல்லது எதிலாவது போட்டு வைத்து விடுங்கள்... அப்படியே இருக்கும்.. ஒரு மாதம் வரை... கறுக்கவோ அழுகவோ மாட்டுது.

  பதிலளிநீக்கு
 32. அதிரா... நேற்று உங்களைக் காணோமே...

  பதிலளிநீக்கு
 33. ஹையோ கடவுளே துரை அண்ணனின் நிலைமை இப்பூடி ஆச்சே:))... ஊருக்குப் போய் நிம்மதியா பஞ்சு மெத்தையில் படுத்துறங்குவார் என இருந்தமே:)).. அவர் இடமில்லாமல் கடற்கரையில போய் தூங்கினாராமே:)) இதைக் கேட்க ஆருமே இங்கின இல்லையாஆஆஆஆஆ?:)).. அதிரா இப்போ பார்க்காட்டில் என்ன ஆகியிருக்கும் நிலைமை:)).. சுனாமி வந்தால்?:)) ஹையோ.. மீயும் சுனாமியா ரன்னிங்:))

  பதிலளிநீக்கு
 34. // சூப்பர் டிஷ்..ஸ்ரீராம் எடுத்து வைச்சதுக்கு மிக்க நன்றி....ஹா ஹா ஹா ஹா...

  கீதா///

  ஹலோ கீதா:) அது ஸ்ரீராம் எடுத்து வச்சவர் தேம்ஸ்கரை மக்கள்ஸ்ஸ்ஸ் வர லேட்டாகும் என நமக்காக:)).. அது உங்களுக்கில்லை கையை எடுங்கோ:) டோண்ட் டச்சூஊஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா..

  ஆமைக்குட்டிகள்.. ஆமை முட்டை கேட்கவே யூப்பரா இருக்கே... நான் ரிவியில் பார்த்திருக்கிறேனே:))..

  ஆனா நானும் வீட்டில் ஆமைக்குட்டி வளர்த்தேனே கீதா.. அழகிய மஞ்சள் கோடுபோட்ட குட்டி.. அவருக்கு நான் வச்ச பெயர் “இமையவரம்பன்”... செல்லமா இமையா... இமையா எனக் கூப்பிடுவேன்ன்.. அது ஒரு யோகக் கதையா முடிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்.. சரி விடுங்கோ:))... யாரோ மூலஸ்தானத்தில் இருந்து என்னை அழைப்பதுபோல ஒரு அசரீரி கேட்குதே... ஓ ஸ்ரீராமின் தலைமை ஆசிரியர் குரல்:)).. சத்து இருங்கோ வாறேன்ன்:)) ஹா ஹா ஹா:).

  பதிலளிநீக்கு
 35. //ஸ்ரீராம். said...
  அதிரா... நேற்று உங்களைக் காணோமே...//

  ஆவ்வ்வ்வ்வ் குட்மோனிங் ஸ்ரீராம்.. அது அம்மா வந்து நிக்கிறா எம்மோடு.. அதனால ... கதை பேசியே முடியுதில்லை... சட்டிங் சட்டிங் சட்டிங்:)) ஹா ஹா ஹா . அத்தோடு அந்த 2வது எங்கள் புளொக் ஆசியரோடு மீ கோபம்:)) ஹையோ அவர் ஆரெனத் தெரியாதெனக்கு:)).. போட்டு முடிக்கிறாரெ இல்லை படங்களை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒரே நாளில் ஒரு 40,50 படங்களா வாங்கிப் போட்டு முடிச்சிடுங்கோ ஸ்ரீராம்:)) ஹையோ எனக்கிண்டைக்கு சனி நுனி நாக்கிலையாம்:)).. மீ வாயை மூடிடுறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

  பதிலளிநீக்கு
 36. அதுசரி கீசாக்கா குரல் கேட்டுதே:)) லாண்ட் ஆகிட்டாவோ?:)).. இன்று வழமையை விட எங்கள் புளொக் ஓவரா ஆடிச்சுது:)) அப்பவே புரிஞ்சுபோச்செனக்கு.. கீசாக்கா 3 கிலோ வெயிட் கெயின் பண்ணிட்டா என:)).. பின்ன பட்டுக்குஞ்சுலு எனச் சொல்லிச் சொல்லியே குஞ்சுலுவின் அம்பேரிக்கா சொக்கலேட் எல்லாம் கீசாக்கா வாய்க்குள்:)) ஹையோ ஹையோ:))..

  அதுசரி நெல்லிக்காய் சாப்பிட்டால் ஏன் உங்கட அப்பா அடிப்பார்?...

  பதிலளிநீக்கு
 37. அதிரா... சனிக்கிழமையும் உங்களைக் காணோம்!

  பதிலளிநீக்கு
 38. //ஸ்ரீராம். said...
  அதிரா... சனிக்கிழமையும் உங்களைக் காணோம்!//

  ஹையோ வைரவா மீ யூப்பர் மாட்டியா இன்று:)).. அது ஸ்ரீராம் சனிக்கிழமை நான் கால் வச்சால், சிவபூசையில் கரடி புகுந்ததுபோலாக்கிடுவேன் எனும் பயத்தில் வருவதில்லை:)) இப்பக்கம்:))..

  எப்பூடி எல்லாம் ஜொள்ளி ஜமாளிக்க வேண்டிக்கிடக்கூஊஊஊஊ:)).. இதுக்குத்தான் அம்மம்மா சொல்றவ:)) பேசாமல் குல்ட்டால போர்த்திட்டுப் படு பிள்ள என:)) மீ தான் கேட்பதில்லை:)).

  பதிலளிநீக்கு
 39. வீட்டில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்வார்கள் ஆனால் எனக்கென்னவோ நெல்லிக் காய் பிடிப்பதில்லை (நெத மைண்ட் வாய்ஸ் எந்த நல்ல விஷயம் உங்களுக்குப்பிடித்திருக்கிறது ) சிறுவயதில் அரை நெல்லிக்காய் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கப் பிடிக்கும் இனிப்பாக இருக்கும் எல்லாமே பிடிக்கும் காலம் அது

  பதிலளிநீக்கு
 40. வணக்கம் சகோதரரே

  படங்களுடன் நெல்லித் தொக்கு பிரமாதமாக இருக்கிறது. அருமையான செய்முறைகளை அழகிய படங்களுடன் செய்து காண்பித்த சகோதரர் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு மிக்க நன்றி.
  நான் நெல்லிக்காய் அரிந்துதான் ஊறுகாய் போட்டுள்ளேன். இந்த மாதிரி அரைத்து செய்ததில்லை. இனி இந்த மாதிரியும் ஒரு தடவை செய்து விடுகிறேன். பயனுள்ள தகவல். குறித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 41. என்ன! சென்னையில் குளிர்காலமா?
  சிரிப்பு வருது..சிரிப்பு வருது.. சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!

  ..மெதுவாகத்தானே விடியும்...//

  ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா அதான் "என்று " சொல்லிட்டேனே...நானும் சென்னை குளிர் என்று சொல்பவர்களை கலாய்ப்பதுண்டு. அதுவும் ஸ்வெட்டர், குல்லா, மஃப்ளர் எல்லாம் போட்டுக் கொண்டு...மெதுவாக விடியும் என்று சொன்னது...இப்போது 5.30, 5.45 க்க்கு சூரியன் குட்மார்னிங்க் சொல்லிடறார் ...டிசம்பர்...ஜனுவரியில் கொஞ்சம் லேட்டாக வருவார் அவ்வளவுதான்.....ஹா ஹா ஹா ஹா...மத்தபடி குளிராவது ஒண்ணாவது...ஹும்

  கீதா

  பதிலளிநீக்கு
 42. அதிரா ஸ்ரீராம் உங்களுக்கு மட்டுமில்ல எல்லா லேட் காரர்களுக்கும் எடுத்து வைப்பாராக்கும்....மீ டேஸ்ட் பண்ணிட்டேனே...நோ டச்சு சொன்னாலும்....ஹெ ஹெ ஹெ ஹெ...

  கீதா

  பதிலளிநீக்கு
 43. நா ஊறுது. இந்தா கிளம்புறேன் மார்க்கெட்டுக்கு நெல்லிக்கா வாங்க..

  பதிலளிநீக்கு
 44. அதிரா ஹையோ டர்ட்டில் வாக் செமையா இருக்கும் அதிரா....என் மகனின் நண்பரும் வீட்டில் டர்ட்டில் வளர்த்தார். ஆனால் அது குளத்தாமை என்று சொல்லுவோம் இல்லையா அது...வீட்டில் ஆமை எல்லாம் வளர்க்கக் கூடாது வைல்ட் லைஃப் டிப்பார்ட்மென்ட் பெர்மிஷன் வேணுமாக்கும். அதனால அவர் அதை கிண்டி பார்க்கில் கொண்டு விட்டுவிட்டார். அது போல நாங்கள் முன்பு இருந்த வீட்டில் மழை ரொம்பக் கொட்டிய போது வீட்டின் பின்புறம் ஆமையார் வந்திருந்தார். அவரைக் காப்பாற்றி கிண்டி பார்க்கில் கொண்டுவிட்டோம். அது போல இப்போது இருக்கும் வீட்டருகில் ஆமையார் ஒருவர் வண்டியில் அடிபட்டுக் கிடந்தார். இரவு நேரம். நான் வண்டியில் வந்து கொண்டிருந்த போது சிறிய வெளிச்சத்தில் ஆமையார் என்று சந்தேகம் வரவும் உடனே இறங்கிப் பார்த்தேன்,,,ஆமாயார் தான்...உடனே அவரை டச் பண்ணிப் பார்த்தேன் தலை அசைவது தெரிந்ததும்...ஓடு உடைந்திருந்தது பாவம்...கொஞ்சம் ப்ளீடிங்கும்...உடனே அவரை மெதுவாக வீட்டில் கொண்டுவந்து தண்ணீர் விட்டுக் கொஞ்சம் அவரை ஆசுவாசப்படுத்தியதும் அவர் கொஞ்சம் தலையை எல்லாம் வெளியே நீட்டினார். உடனே மறுநாள் கிண்டி பார்க் நம் வீட்டிற்கு அடுத்தாற்போல் என்பதால் கொண்டுவிட்டுவிட்டேன்...

  நீங்கள் வைத்திருந்தது ஸ்டார் டர்ட்டில் போலத் தெரியுது. விலை அதிகமான டர்ட்டில்...இந்தியாவில் அதிகம் காணப்படும் அது மலேஷியாவிற்கு தாய்லாந்திற்கு எல்லாம் உணவிற்காகக் கடத்தப்பட்டதுண்டு முன்பு. இப்போதைய நிலை தெரியலை..நல்ல பெயர் அதிரா...இமையவரம்பன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 45. சற்று வதக்கிவிட்டு, அரிவாள்மணையில் கொட்டையை நீக்குவோம். ஸுலபமாக இருக்கும். இப்போது கத்தியில் நறுக்குவது வழக்கமில்லாததால் அந்த வேலைக்கே போவதில்லை. நெல்லிக்காய் தொக்கு நிதானமாகக் கிளறி பதமும் சொல்லி இருக்கறீர்கள். மிகவும் ஸூப்பர். அன்புடன்

  பதிலளிநீக்கு
 46. நெல்லைத்தமிழன் நெல்லிக்காய் தொக்கு ஊறுகாய் சுவையுடன் செய்திருப்பது தெரிகிறது. எனக்கு ஊறுகாய் ரொம்பப் பிடிக்கும். நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டதுண்டு ஆனால் இப்படியானது சாப்பிட்டதில்லை. எங்கள் வீட்டில் நெல்லிக்காய் எல்லாம் இப்படிச் செய்வதில்லை.

  துளசிதரன்.

  பதிலளிநீக்கு
 47. உங்களுக்கு ஒன்று தெரியுமோ? நெல்லிக்காய்களை வாங்கி வந்த உடன், கழுவிப்போட்டு, உப்புத்தண்ணியில் மூழ்கும் அளவு, போத்தலில் அல்லது எதிலாவது போட்டு வைத்து விடுங்கள்... அப்படியே இருக்கும்.. ஒரு மாதம் வரை... கறுக்கவோ அழுகவோ மாட்டுது.//

  அதிரா ஹைஃபைவ்... நான் அப்படித்தான் சீசனில் வாங்கி போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். எப்போது வேண்டுமோ அப்போது அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 48. நன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம்.. வெளியிட்டமைக்கு. நெல்லித் தொக்கைப் பற்றி கமென்டைக் காணோம், வெளியில் வாங்கி வெறும்ன சுடவைத்த சப்பாத்தி சூப்பர்னு சொல்றீங்க.

  பதிலளிநீக்கு
 49. இன்றைக்கு ஒரு ஆர்டர்ல இல்லாம பின்னூட்டங்களுக்கு பதில் போடறேன்.

  பதிலளிநீக்கு
 50. கீதா ரங்கன் - இந்த ஊர்ல நெல்லிக்காய்தான் எப்போதும் கிடைக்கற மாதிரி தெரியுதே. ஏன் குளிர்சாதனத்தில் உப்பு நீரில் இட்டு வைக்கவேண்டும்?

  பதிலளிநீக்கு
 51. நெல்லை ஹான் சொல்ல மறந்துவிட்டேன்...நான் வெந்தயம் வறுத்து பொடி செய்து சேர்ப்பதுண்டு....சுவையாக இருக்கும்
  நான் பொதுவாகவே ஊறுகாய், தொக்கு எல்லாவற்றிற்கும் வெந்தயப்பொடி சேர்ப்பதுண்டு..மணமாக சுவையாகவும் இருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 52. துளசிதரன் சார்..உங்கள் வருகைக்கு நன்றி. ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க. ஒரு தடவை இப்படிச் செய்துபாருங்கள். ரொம்ப நல்லா இருக்கும்.

  உங்கள்டேர்ந்து தில்லையகத்துல இடுகை வந்து நாளாகிவிட்டதே. குறும்படம் தீம்ல ஒரு இடுகை போடுங்களேன்.

  பதிலளிநீக்கு
 53. ஆமாம் நெல்லை எப்போதும் கிடைக்கிறது ...விலை எகிறும்...சீசன் என்றால் கொஞ்சம் தேவலாமாக இருக்கும்....நான் நெல்லி முள்ளி கூட வைத்திருந்தாலும் ஃப்ரஷ்ஷாகக் கிடைத்தால் அதில் தான் பச்சடி செய்வதை prefer செய்வேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 54. கீதா ரங்கன். என் ஹஸ்பண்டும் இங்கு மாங்காய் ஊறுகாய் செய்தபோது வெந்தயப் பொடி நிறையவே சேர்த்தா. கொஞ்சம் கசப்பா இருந்தாலும், உடம்புக்கு நல்லது என்று விட்டுவிட்டேன். எனக்கென்னவோ வெந்தயம் இல்லாமல் டேஸ்டா இருக்கும், ஆனால் மிளகாய் சூட்டுக்கு வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரும் என்று தோணுது.

  பதிலளிநீக்கு
 55. காமாட்சி அம்மா.. உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். பச்சை நெல்லி சூப்பரா இருக்கு, கொஞ்சம் வேகவைத்து செய்வது சுலபம் என்றாலும். (மாங்காய் கிடைக்குது ஏராளமா. ஆனால் பன்னா ஜூஸ் இன்னும் பண்ணிப்பார்க்கலை)

  பதிலளிநீக்கு
 56. கீதா ரங்கன் - ஆமை, பிராணிகளின் மேல் உங்கள் உண்மை அன்பைக் கண்டு வியக்கிறேன். வாழ்க

  பதிலளிநீக்கு
 57. வருகைக்கு நன்றி ராஜி. உடனே வாங்கி செய்துபாருங்கள். நானும் உங்கள் இடுகையில் வந்த கொழுக்கட்டை இன்னும் செய்துபார்க்கவில்லை. ஆனால் உங்கள் பெயரைப் பார்க்கும்போதெல்லாம் அந்தப் படங்க்ள் மனதில் வந்துபோகின்றன.

  பதிலளிநீக்கு
 58. கீதா ரங்கன் - சென்னை அவ்வளவு வெயில் எனக்குத் தெரியலை (உடம்பு சரியில்லாதபோதும். அதாவது வெயில் மேல படும்படி நடக்க பயம்). எங்க ஊர்ல, 4-5 முறை மழை தூறும் வருஷத்தில். அதுக்கே குடை எடுக்கும் சிலரைப் பார்த்து எனக்கு சீப்பு சீப்பா வரும்.

  பதிலளிநீக்கு
 59. வாங்க கமலா ஹரிஹரன். செய்துபாருங்கள். அப்புறம் எங்கள் பிளாக்கையும் இந்த நெல்லைத் தமிழனையும் மறக்க மாட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 60. ஜிஎம்பி சார்.. வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லியிருக்கற மாதிரி ( நல்ல விஷயம் உங்களுக்கு எப்போ பிடித்திருக்கிறது) நான் நினைத்ததே இல்லை. உங்களுக்கு மறந்திருக்கும். ஸ்கூல் வாசலில் நெல்லி சாப்பிடாத பசங்களும் உண்டோ?

  பதிலளிநீக்கு
 61. //அதுசரி நெல்லிக்காய் சாப்பிட்டால் ஏன் உங்கட அப்பா அடிப்பார்?...//அதிரடி, நெல்லிக்காய் சாப்பிட்டால் தொண்டை கட்டும், மாம்பழம், மாங்காய் சாப்பிட்டால் வயிறு வலிக்கும், கரும்பு சாப்பிட்டால் உடம்பில் சதை போடும்னு இப்படி ஏதேனும் சொல்லிக் கொண்டு எதையும் சாப்பிட அனுமதிக்கமாட்டார் எங்க அப்பா! நாங்கல்லாம் மாம்பழம் முழுசாகச் சாப்பிடும்போது பதினைந்து வயதாவது ஆகி இருக்கும். :)அதுவும் அப்பாவுக்குத் தெரியாமல் தான் சாப்பிடுவோம். அக்கம்பக்கம் வீட்டுக்காரங்க எங்களுடன் ஒத்துழைப்பாங்க! அப்பா வந்தால் குரல் கொடுப்பாங்க! :) சட்டுனு மறைப்போம். மாம்பழம் சாப்பிடறச்சே வந்துட்டால் தான் பிரச்னை! அப்படியே மொட்டை மாடிக்கு ஓடுவோம்.

  பதிலளிநீக்கு
 62. அதிரா... நீங்கள் காணாமல் போனது உண்மைனாலும், ஸ்ரீராம், கேஜிஜி சார் டிரெயினிங்ல ரொம்ப கெட்டுப்போயிட்டார். நிஜமா கிளாஸ் டீச்சர் ரோல்தான் ஸ்ரீராமுக்கு. அட்டென்டன்ஸ் இல்லைனா கரெக்டா கேட்டுடறார்.

  பதிலளிநீக்கு
 63. அதிரா வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. இது மாதிரி செய்துபாருங்க. உங்க அம்மா அங்க வந்திருக்கான்னு தெரியும்போது சந்தோஷமா இருக்கு. (லேடீஸ் என்ன ஆண்கள் மாதிரியா. பேச ஆரம்பிச்சா அவங்களுக்கு எப்போ நிறுத்தணும்னு மட்டும் தெரியாது. உங்க வீட்டுக்காரர் எல்லா ஹோட்டல் உணவும் இப்போ வேற வழியில்லாமல் டிரை பண்ணறார்னு சொல்லுங்க. அதுவும் தவிர உங்க குழந்தைகள் நிச்சயமா தட்டைப் பார்த்து சாப்பிடக்கூடாது. ரெண்டு குக் பேசிக்கிட்டே செஞ்சீங்கன்னா உணவு எப்படித்தான் வந்திருக்குமோ. ஹா ஹா ஹா)

  '2வது எங்கள் பிளாக் ஆசிரியர்' - கருத்தை ரசித்தேன். சில சமயம் பெரிய நெல்லிக்காய்கள் கைக்கும். எனக்குத் தோணுது, அவங்க கெமிக்கலில் கழுவுவதால் இருக்குமோன்னு ( நீண்ட நாள் இருக்க)

  பதிலளிநீக்கு
 64. வருகைக்கு நன்றி ஆதி வெங்கட். தேன் நெல்லி போட்டு வெளில வைப்பீங்களா அல்லது குளிர் சாதனப் பெட்டியிலா? கெட்டுப்போயிடாதா? எப்படின்னு 'கதம்பம்'ல எழுதுங்க.

  பதிலளிநீக்கு
 65. வாங்க திண்டுக்கல் தனபாலன். நெல்லியை அப்படியே சாப்பிடுவது ரொம்ப நல்லா இருக்கும், ஆனால் அருகில் கட்டாயம் தண்ணீர் இருக்கணும். என்ன... குறள்லாம் போட்டு நாளாயிடுச்சே.

  பதிலளிநீக்கு
 66. வாங்க ஏகாந்தன் சார்... 'கடற்கரை மணலில் இருப்போமோ' பாட்டு ஞாபகம் வந்தது. அந்த அனுபவமும் நல்லாத்தான் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 67. வருக மிடில்கிளாஸ் மாதவி. உங்க பசங்களுக்கு நெல்லி ஊறுகாய் பிடிக்குமா? எனக்கு சின்னவயசுல மாங்காய், அது விட்டா நெல்லி ஊறுகாய்தான் எனக்கு எலுமி, நார்த்தைலாம் பிடிக்கவே பிடிக்காது. அப்புறம் வேலைக்குப் போனபிறகு, சப்பாத்திக்கு மட்டும் கார எலுமிச்சை ஊறுகாய் பிடிக்க ஆரம்பித்தது.

  ஆமாம் நீங்கள் இடுகை போட்டு நாளாயிடுத்தே.

  பதிலளிநீக்கு
 68. தில்லையகத்து கீதா ரங்கன் - 'புட்ஷோ பிஸினெஸ்' - உங்கள்ட நான் வியப்பது பாசிடிவ், பிறரை என்'கரேஜ் செய்து எழுதுவது போன்றவை. வாழ்துகள் கீதா ரங்கன்.

  பதிலளிநீக்கு
 69. ஒன்று சொல்ல மறந்திட்டேன்.. நெல்லைத்தமிழன் உங்கள் உடல்நிலை நலமோ.. ஊருக்குப் போய் எப்படி இருக்கு.. தனியே இருந்துவிட்டு பின்பு குடும்பத்தோடு செட்டில் ஆக ரைம் எடுக்குமோ... இப்போ ரொம்ப அமைதியாகிட்டீங்க.. ஐ மீன் நல்ல பிள்ளையாகிட்டீங்க ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
 70. தொடர்ச்சி - என் ஹஸ்பண்டும், நான் சின்னதாக ஏதேனும் செய்தால் (அதாவது தியாகராஜர் கிருதியை தமிழ்ப்படுத்துவது போன்று), 'எனக்கு இது தெரியாது. பண்ணுங்க என்று என்'கரேஜ் செய்வாள். அவளுக்கு கொஞ்சம்கூட பொறாமை இந்த விஷயங்களில் கிடையாது.

  பதிலளிநீக்கு
 71. ஹா ஹா ஹா கீசாக்கா எங்கட அப்பா மாங்காய் சாப்பிட மட்டும்தான் விட மாட்டார்ர். அப்பம்மா வெத்தலை பாக்கு போடுவா.. எங்களுக்கு குடுக்கக்கூடாது என்பது அப்பாவின் ஓடர்... ஆனா அப்பா கிட்ட இல்லாத சமயம்[தூர நிற்கும்போது] நான் ஓடிப்போய் அப்பம்மாவோடு ஒட்டிக்கொண்டு இருப்பேன், அவ வெத்தலைக்குள் பாக்கை வைத்து மடித்து, என் கைக்குள் திணித்து விரல்களை மூடி விடுவா.. அப்படியே கையைப் பொத்திக் கொண்டு ஓடிப்போய் எங்காவது ஒளிச்சிருந்து சாப்பிடுவேன் ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
 72. //நெ.த. said...
  தொடர்ச்சி - என் ஹஸ்பண்டும், நான் சின்னதாக ஏதேனும் செய்தால் (அதாவது தியாகராஜர் கிருதியை தமிழ்ப்படுத்துவது போன்று), 'எனக்கு இது தெரியாது. பண்ணுங்க என்று என்'கரேஜ் செய்வாள். அவளுக்கு கொஞ்சம்கூட பொறாமை இந்த விஷயங்களில் கிடையாது.///

  பெண்களுக்கு எப்போதாவது பொறாமை வந்து பார்த்திருக்கிறீங்களோ நீங்க:)) எமக்கு பொறாமை என்றால் என்னவென்றே தெரியாது:)) ஹா ஹா ஹா ஹையோ முறைக்காதீங்க..

  இல்ல நெ.தமிழன் உங்கள் ஹஸ்பண்ட்டு உண்மையில் ரொம்ப நல்லவ.. நான், நீங்கள் பேசும் சில விசயங்களில் அவதானிச்சிருக்கிறேன்.... மனைவியோ கணவனோ கொஞ்சம் முரண் பண்ணினால்கூட வலையுலகில் சுகந்திரமாக யாராலும் உலாவர முடியாது.

  பதிலளிநீக்கு
 73. அதிரா - உடல் நலம் இன்னும் சரியாகவில்லை. (ப்ரஷர் மிகவும் குறைவா இருக்கு. ஒரு டாக்டர்-எக்ஸ்பர்ட் ஆறு மாசம் முன்பு, ஹை டோசேஜ் ப்ரஷர் டேப்லட் கொடுத்தார். இப்போ ரெண்டு மாசமா ப்ரெஷர் ரொம்ப கம்மியாயிடுத்து. இரண்டு டாக்டர்கள் ப்ரஷர் டேப்லட்டை ஸ்டாப் செய்யச் சொல்லிட்டார்கள். இப்போ ஒருத்தர்ட கன்சல்ட் செய்துகொண்டிருக்கிறேன். இதுல பிரச்சனை என்னன்னா, ஒரு மாசத்துல 4 தடவை, அதுல 2 தடவை ரோடுல, நண்பனோடு பேசிக்கொண்டிருக்கும்போது விழுந்துட்டேன். அதுனாலதான் பயம்). இதைத் தவிர, இன்னும் அந்த ஊரைக் காலி பண்ணலை, அதுல நிறைய பிரச்சனைகளும் இருக்கு. இது எல்லாம் இன்னும் ஆறு மாசத்துல சரியாயிடும்னு நினைக்கிறேன். இப்போ ஒரு மாசமா ஹஸ்பண்ட் அருகாமை கண்டிப்பா மனசளவுள தேவையா இருக்கு. If she is around, I feel comfortable. (அதுனால, நீங்க இடுகை போட்டீங்கன்னா கலாய்க்காம இருக்க மாட்டேன். ஏஞ்சலின் கொஞ்சம் சென்சிடிவ். அதுனால அங்க வம்பு வைக்கமாட்டேன்)

  பதிலளிநீக்கு
 74. கீதா..

  ஊறுகாய்க்கும் வெந்தயப்பொடி சேர்ப்பினமெல்லோ, எனக்கது பிடிக்காது, எதுக்கும் பொடி சேர்ப்பதில்லை, கறிகளுக்கு முழுசா வெந்தயம் சேர்ப்பேன்.. அதைவிட ஏதும் வாய்வு.. வயிற்றுப்பெருமல் எனில் கொஞ்சம் வெந்தயத்தை விழுங்கிட்டால் போச்சு.

  பதிலளிநீக்கு
 75. பொதுவாகவே நெல்லை, எனக்கு ஆரோக்கியமான விஷயங்கள் சட்டென பிடிப்பது இல்லை. நான் பெரும்பாலும் அவபத்தியம்தான்! எனவே நெல்லிக்காய் போன்ற விஷயங்களில் அவ்வளவு சுவாரஸ்யம் வருவதில்லை. யாராவது காரசாரமாக ஊறுகாய் செய்து போட்டால் கொஞ்சம் சாப்பிடத் தோன்றும். அரைநெல்லிக்காய் அதன் புளிப்புக்காகவே பிடிக்காது!

  பதிலளிநீக்கு
 76. என் அம்மா நீர் நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய்ப்பொடி போல ஏதோ ஒன்று என்று விதம் விதமாகச் செய்வாள். ஏனென்றால் எங்கள் வீட்டிலேயே மரம் இருந்தது. அப்பா வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு மரத்தில் ஏறி உலுக்குவார். சாக்குடன் நாங்கள் கீழே நிற்போம்! அன்று அந்தத் தெரு முழுவதும் நெல்லிக்காய் விநியோகம் இருக்கும்!

  பதிலளிநீக்கு
 77. //இப்போ ஒரு மாசமா ஹஸ்பண்ட் அருகாமை கண்டிப்பா மனசளவுள தேவையா இருக்கு. If she is around, I feel comfortable.//

  இது உண்மையேதான் நெ.தமிழன்... உடல் நலமோடு இருக்கும்போது எதையும் தனியே சமாளிக்கலாம். ஊரில் இருப்பதால் விரைவில குணமாகிடுவீங்க..

  //அதுனால, நீங்க இடுகை போட்டீங்கன்னா கலாய்க்காம இருக்க மாட்டேன். ஏஞ்சலின் கொஞ்சம் சென்சிடிவ். அதுனால அங்க வம்பு வைக்கமாட்டேன்)//

  ஹா ஹா ஹா ..:))

  பதிலளிநீக்கு
 78. // ஒரு மாசத்துல 4 தடவை, அதுல 2 தடவை ரோடுல, நண்பனோடு பேசிக்கொண்டிருக்கும்போது விழுந்துட்டேன். அதுனாலதான் பயம்).//

  காதில் பிரச்னை இருந்தாலும் பாலன்ஸ் போகும் என்பார்கள். வெறும் ரத்தக்கொதிப்பு மட்டும் பார்க்காமல் வேறு என்னென்ன சோதனைகள் செய்ய வேண்டும் என்று கேட்டு செய்து விடுங்கள் நெல்லை...

  பதிலளிநீக்கு
 79. ஊறுகாயில் நாங்கள் வெந்தயப்பொடி சேர்ப்போம். ஆனால் அளவாக!

  பதிலளிநீக்கு
 80. பெண்களுக்கு எப்போதாவது பொறாமை வந்து பார்த்திருக்கிறீங்களோ நீங்க: - இப்போதான் தெரியுது அதிராவும் பொய் சொல்லுவாங்க. ஹஸ்பண்ட், இந்தப் பெண் அழகு என்று சொல்லட்டும், அல்லது அந்த வீட்டு ஆன்டி (அதாவது மனைவி வயதுல) செய்த உணவு நல்லா இருந்தது, இல்லை, அந்தப் பெண் டிரெஸ் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு, அப்புறம் மனைவி முகம் சாந்தமா இருக்கான்னு பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
 81. //அந்தப் பெண் டிரெஸ் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு, அப்புறம் மனைவி முகம் சாந்தமா இருக்கான்னு பார்க்கணும்.//


  விபரீத ஆசை நெல்லை!

  பதிலளிநீக்கு
 82. /// சாக்குடன் நாங்கள் கீழே நிற்போம்! அன்று அந்தத் தெரு முழுவதும் நெல்லிக்காய் விநியோகம் இருக்கும்!///

  ஹா ஹா ஹா இந்தக் காட்சியை மனக்கண்ணில் கொண்டு வந்து சிரிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்:)).. உண்மைதான், ஆனா எங்களுக்கு தெரிஞ்ச ஒரு ஆன்ரி வீட்டில் முழுநெல்லி மரங்கள் நிறைய நின்றது... ஒன்றுகூடத் தர மாட்டினம்.. எண்ணி எண்ணி விற்பார்கள்:)..

  பதிலளிநீக்கு
 83. ஸ்ரீராம் - நன்றி. அதுக்கும் மாத்திரை எடுத்து டாக்டர் செக் பண்ணிட்டார்.

  அன்று அந்தத் தெரு முழுவதும் நெல்லிக்காய் விநியோகம் இருக்கும்! - இந்த மாதிரி மலரும் நினைவுகள் ( நம் பெற்றோரைச் சேர்ந்து) எவ்வளவு நம் மனதில் புதையுண்டிருக்கும். எப்போதும் நான் என் அப்பாவை மிஸ் பண்ணுவதாகவே தோணும். அவர்கிட்ட ஷேர் பண்ண அவ்வளவு விஷயம் எனக்கு இருக்கு. இந்த அப்பாக்கள், ஆரோக்கியமாக (ஆதாவது நம்ம வயசுலயே இருக்கணும்) நமக்கு 60 வயதாகும்வரையாவது இருக்கவேண்டாமா?

  பதிலளிநீக்கு
 84. ///ஹஸ்பண்ட், இந்தப் பெண் அழகு என்று சொல்லட்டும், அல்லது அந்த வீட்டு ஆன்டி (அதாவது மனைவி வயதுல) செய்த உணவு நல்லா இருந்தது, இல்லை, அந்தப் பெண் டிரெஸ் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு, அப்புறம் மனைவி முகம் சாந்தமா இருக்கான்னு பார்க்கணும்.///

  ஹா ஹா ஹா நெல்லத் தமிழன் இதில ஒரு சின்ன மாற்றம்:)..

  அதாவது நாங்களாக சொல்லுவோம்.. அங்க பாருங்கோ அந்தப் பெண் எவ்ளோ அழகு.. இந்தப் பெண்ணின் தலைமயிரைப்பாருங்கோ கண்ணைப் பாருங்கோ ரொம்ப அழகா இருக்கிறா இப்பூடி:))... ஆனா நீங்களா இதைச் சொல்லிடப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) அதுக்கு விட மாட்டோம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 85. // எப்போதும் நான் என் அப்பாவை மிஸ் பண்ணுவதாகவே தோணும்//

  எனக்கு அம்மா மறைந்தபோது இருந்த துக்கம் தனி ரகம். அப்பா மறைந்தபோது ஏற்பட்ட வெறுமை அதிகம்.

  பதிலளிநீக்கு
 86. ///ஸ்ரீராம். said...
  //அந்தப் பெண் டிரெஸ் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு, அப்புறம் மனைவி முகம் சாந்தமா இருக்கான்னு பார்க்கணும்.//


  விபரீத ஆசை நெல்லை!//

  ஹா ஹா ஹா ஸ்ரீராம் எங்கோ நல்லா அடிபட்டிருக்கிறார் போலும் :) அனுபவம் பேசுகிறது:)) ஹா ஹா ஹா... ஹையோ இந்நேரம் பார்த்து என் செக் துணைக்கு இல்லையே இங்கின கர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 87. // அங்க பாருங்கோ அந்தப் பெண் எவ்ளோ அழகு.. இந்தப் பெண்ணின் தலைமயிரைப்பாருங்கோ கண்ணைப் பாருங்கோ ரொம்ப அழகா இருக்கிறா இப்பூடி//

  அதிரா... இப்படி ஏதாவது சொன்னால்தான் பார்த்துத் தொலைக்கலாமே... அதுவும் வரமாட்டன் என்கிறதே!

  பதிலளிநீக்கு
 88. கோபு சார் - உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் தளத்தைப் பார்த்த பின்புதான் நான் தொக்கு செய்ய ஆசை கொண்டேன். ஒருவேளை, ஆரண்ய நிவாஸ் இந்த இடுகையைப் படித்தால், உங்களுக்கு ஒரு பை நெல்லிக்காய் கிடைக்கலாம்.

  நீங்கள் மறுபடியும் பின்னூட்டங்கள் நிறைய தளங்களில் கொடுக்கணும், இடுகைகளும் போடணும்னு கேட்டுக்கறேன். இந்த இணைய நண்பர்கள் யாரையும் நான் சந்தித்ததில்லை. ஆனால் அவங்க எல்லோரும் நண்பர் குழாம். யாருக்கும் எந்த எதிர்பார்ப்போ தேவையோ இல்லை. அதனால மனசளவுல ரொம்ப நெருக்கமா ஃபீல் பண்ணறேன். இணையம், பேனா நண்பர்கள்போன்று நம்மை இணைக்கும் பாலம். மிஸ் பண்ணாதீங்க. உங்கள் கருத்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 89. //ஸ்ரீராம். said...
  // எப்போதும் நான் என் அப்பாவை மிஸ் பண்ணுவதாகவே தோணும்//

  எனக்கு அம்மா மறைந்தபோது இருந்த துக்கம் தனி ரகம். அப்பா மறைந்தபோது ஏற்பட்ட வெறுமை அதிகம்.//

  உலகம் ஐயாயிரம் சொன்னாலும்.. நம்மோடு இருக்கும்வரை .. இதெல்லாம் நமக்குத் தெரிஞ்சாலும் கவனிக்க்க மாட்டோம் ஆனா இல்லை என்றானபின் மிஸ் பண்ணுவோம்.. அது மனித ரத்தத்தோடு ஊறி விட்டது போலும்.

  பதிலளிநீக்கு
 90. ஏகாந்தன் ஸாரின் "நெல்லைக்காய்" பிரயோகத்தை மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 91. @ஸ்ரீராம்
  ///அதிரா... இப்படி ஏதாவது சொன்னால்தான் பார்த்துத் தொலைக்கலாமே... அதுவும் வரமாட்டன் என்கிறதே!///

  ஹா ஹா ஹா அப்போ உங்களுக்கு லேடீஸ் கொசுவே போதும்:) கடவுள் அதையாவது லேடியாக அனுப்பியிருக்கிறார் எனச் சொல்லி சந்தோசப்படுங்கோ:)) போதுமென்ற மனமே...:)) ஹையோ ஹையோ:))

  பதிலளிநீக்கு
 92. ​​// நம்மோடு இருக்கும்வரை .. இதெல்லாம் நமக்குத் தெரிஞ்சாலும் கவனிக்க்க மாட்டோம் //

  உண்மை அதிரா.. இருக்கும்போது அருமை தெரிவதில்லை. இழந்தபின் வலியை உணர்கிறோம். வல்லிம்மா அவ்வப்போது இந்தப் பாயிண்ட்டை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார். இருக்கும்போதே மனம் விட்டுப் பேசுங்கள் என்பார் அம்மா.

  பதிலளிநீக்கு
 93. அதிரா... போதுமென்ற மனமே "பெண்" செய்யும் மருந்து!!!!!!!!

  பதிலளிநீக்கு
 94. கோமதி அரசு மேடம்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நாம மழை நீர் தேங்குவதை ( நிலத்தில் சேமிப்பதை) தடுத்துவிட்டோம் (எல்லோரும்). அதனால்தான் நீர் மட்டம் ரொம்பக் குறைந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 95. // நாம மழை நீர் தேங்குவதை ( நிலத்தில் சேமிப்பதை) தடுத்துவிட்டோம் (எல்லோரும்).//

  அசோகர் காலத்தில் அணைகள் கட்டி மரங்கள் வளர்த்ததோட சரி! ஜனநாயகத்தில் இவை ஊழல் / பாவச் செயல்களாகி விட்டன.

  பதிலளிநீக்கு
 96. வாங்க வெங்கட். இப்போ சில மாதங்களா எனக்கு காரம் ஒத்துக்கொள்வதில்லை (10 வருடம் முன்பு, மோர் சாதத்தின் அளவை விட அதிகமா மாங்காய் ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடுவேன். நான் ரொம்ப காரப் ப்ரேமி-துளசி டீச்சர் வார்த்தை). அதனால் நிறத்துக்கு காஷ்மீர் மிளகாய்பொடி உபயோகிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 97. வாங்க ஜம்புலிங்கம் சார். கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 98. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கரந்தை ஜெயக்குமார் சார். (என் மெயில் முகவரி மாறியிருப்பதால் உங்கள் தளத்து இடுகை சரிவரக் கிடைப்பதில்லை. விரைவில் எல்லாவற்றையும் சரி செய்கிறேன்)

  பதிலளிநீக்கு
 99. //ஸ்ரீராம். said...
  அதிரா... போதுமென்ற மனமே "பெண்" செய்யும் மருந்து!!!!!!!!//

  ஹா ஹா ஹா:))...

  யாழ்ப்பாணத்தில பொலீஸ் உடன் வந்து வீடு வீடா செக்கிங் நடக்குமாம்.. எதிலாவது மழைநீர் தேங்கி இருந்தா உடனே ஃபைன் ஆம்ம்ம்:)).. நுளம்பு வந்திடுமென:)).. இது வேற மழைநீர் சேகரிப்பு:))

  பதிலளிநீக்கு
 100. துரை செல்வராஜு சார்... சிலு சிலு என்ற காத்து. கடற்கரை மணலில் படுத்திருக்கிறீர்கள். நல்ல பேச்சு. பிறகு தூக்கம். இரண்டரை மணிக்கு மழை சட சட வெனப் பெய்கிறது. இதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகுது. துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மண்டபத்தை நோக்கி ஓடியிருப்பீர்களே. வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 101. அதிரா - இதெல்லாம் நமக்குத் தெரிஞ்சாலும் கவனிக்க்க மாட்டோம் ஆனா இல்லை என்றானபின் மிஸ் பண்ணுவோம். - நீங்கள் சொல்லியது முற்றிலும் உண்மை. எப்போதுமே we will take them for granted, whoever is near and dear to us, esp. wife/husband, parents. எங்க அப்பாட்ட எதுனாலும் மனம் விட்டுப் பேசலாம். (அதை அம்மா கிட்ட கூட சொல்லமாட்டார். அப்படி ரகசியம் காப்பார். எந்த சப்ஜெக்டும் பேசலாம்). இப்போ உடம்பு சரியில்லாதபோது, என் ஹஸ்பண்டை அங்கு வரச்சொன்னேன், அப்புறம் அவங்களோடேயே இங்கு வந்துட்டேன். They are so important to one's life.

  பதிலளிநீக்கு
 102. கீதா சாம்பசிவம் மேடம்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நெல்லி சாதம் செய்முறை சுட்டி எங்கே. உங்க அப்பா எவ்வளவு உங்க உடல் நிலைல அக்கறை எடுத்திருக்கிறார் என அறிய ஆச்சர்யம்.(என் பசங்களும் சின்ன வயசுல என்னை எப்படிலாம் ஏமாத்தினாங்க.. என் காலடி கேட்டு உடனே எப்படிலாம் நடிச்சாங்க என்பதெல்லாம் சமீபத்துல சொன்னாங்க)

  பதிலளிநீக்கு
 103. கீதா ரங்கன். - வார்தாவில் நெல்லி மரம் - இதைப் பார்த்து இது என்ன, இன்னொரு ஊருக்கும் போயிருக்கிறாரா என்று யோசிக்க வைத்துவிட்டீர்கள். புயலில் மரங்களை இழப்பது, நன்றாக விளைந்த காய்கள் இரவோடிரவாக விழுந்து கிடப்பதைப் பார்ப்பது வருத்தம் தரும்.

  பதிலளிநீக்கு
 104. கில்லர்ஜி - நம்ம குணத்தை விடுங்க. நெல்லித் தொக்கை உங்க அம்மாவைப் பண்ணச் சொல்லிச் சாப்பிடுங்க. வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 105. வாங்க மதுரைத் தமிழன் துரை. நல்லா இருக்கீங்களா?

  பதிலளிநீக்கு
 106. காலை வணக்கம் போட்டபின்பு பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களைக் காணோமே.

  பதிலளிநீக்கு
 107. துரை செல்வராஜு சார்... இப்போ என்ன பயணம் சென்றுகொண்டிருக்கிறீர்கள்? திருச்செந்தூர் போன்ற தலங்களா? அப்போ நிறைய இடுகைகள் வரப்போகுதுன்னு சொல்லுங்க. இதுவரை போடாத பாடல்களை இணைக்கத் தவறாதீர்கள்.

  பதிலளிநீக்கு
 108. அதிரா - எழுதுவதை முழுதாக எழுதுங்க. ஸ்ரீராமுக்குப் புரியாது. லேடீஸ் கொசுவே போதும்:) - அதுவும் அனுக்காவைக் கடித்த லேடீஸ் கொசு என்று எழுதுங்கள். ஸ்ரீராமுக்கு முகம் மலரலாம்.

  பதிலளிநீக்கு
 109. அதிரா - அதாவது நாங்களாக சொல்லுவோம்.. அங்க பாருங்கோ அந்தப் பெண் எவ்ளோ அழகு. - என் ஹஸ்பண்ட் என்னை இப்படி டெஸ்ட் பண்ணுவதில்லை. பாவம்.. உங்கள் கணவர். சரி மனைவி சொல்வதை 'ஆமாம்' என்று சொன்னால் முகம் மலருமே என்று முதல் தடவை, 'ஆமாம் அந்தப் பெண் அழகாத்தான் இருக்கா' என்று சொல்லியிருப்பார். அன்றைக்கு உங்கள் முகம் கூம்பிப் போயிருக்கும், 'நான் இருக்கும்போது இன்னொரு பெண் அழகு என்று எப்படி உங்களுக்கு சொல்ல மனம் வந்தது' என்று கோபித்திருப்பீர்கள். இன்னொருதடவை இதுமாதிரி, 'அந்தப் பெண் அழகு' என்று சொல்லியிருப்பீர்கள். முந்தைய அனுபவத்தை வைத்துக்கொண்டு, 'அவள் ஒன்றும் அப்படி அழகில்லை' என்று சொல்வார். உடனே, 'நான் எது சொன்னாலும் உங்களுக்கு மறுத்துச் சொல்ல்லைனா தூக்கம் வராது' என்று கோபித்திருப்பீர்கள். அவருக்கு இதை எப்படி சமாளிக்கிற்து என்று தெரிந்திருக்காது. என்னைக் கேட்டால், அந்த மாதிரி கமென்டுகளை காது கேட்ட மாதிரியே காண்பித்துக்கொள்ள மாட்டேன் (ஆனால் கண்கள் கண்டிப்பா பார்த்திடும் ஹா ஹா ஹா)

  பதிலளிநீக்கு
 110. துரை செல்வராஜு சார் - பயணத்தின்போது உணவுக்கு எப்படி ஏற்பாடு செய்துகொள்கிறீர்க்ள் என்றும் நீங்கள் எழுதவில்லை.

  பதிலளிநீக்கு
 111. @ நெ.த.:
  இப்போ ஒருத்தர்ட்ட கன்சல்ட் செய்துகொண்டிருக்கிறேன். இதுல பிரச்சனை என்னன்னா, ஒரு மாசத்துல 4 தடவை, அதுல 2 தடவை ரோடுல, நண்பனோடு பேசிக்கொண்டிருக்கும்போது விழுந்துட்டேன். //

  இதைப் படித்தவுடன், எனக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம் எனத்தோன்றுகிறது. ஆனால் அலட்டிக்கொள்வதில்லை. இது என்னிக்கு, யாருக்கு நார்மலாக இருந்திருக்கிறது? எனக்கு இந்த செக்கிங்க், ரீடிங், அளவுமுறை எதிலும் நம்பிக்கை இல்லை. அதனால் அவர்கள் கொடுக்கும் மருந்திலும். நான் மருந்து சாப்பிடுவதில் காட்டும் அலட்சியத்தினால் என் மனைவிக்கும் பெண்ணுக்கும் டென்ஷன்.

  உடல் நலம் பேணவும். டாக்டர்களை கன்சல்ட் செய்வது சரி. அதனால் அவர்கள் கொடுத்த மருந்துகளை அப்படியே religious-ஆக விழுங்கிக்கொண்டிருப்பது அவசியம்தானா என்பது என்னுடைய நீங்காத கேள்வி.(இந்த விஷயத்தில் பெர்னார்ட் ஷா: டாக்டர்? அவரை அவசியம் நீங்கள் பார்க்கவேண்டும். ஆனால் அவருடைய ஆலோசனைக்கு எதிராக நடந்துகொள்ளுங்கள்!) எல்லாவற்றையும் copybook style-ல் செய்து பழக்கப்பட்டவர்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிய வாய்ப்பில்லை. அவர்கள் கொஞ்சம் திட்டிவிட்டு விலகிக்கொள்ளலாம்.

  சரி, ஐபிஎல் அழைக்கிறது. ஓடுகிறேன்..

  பதிலளிநீக்கு
 112. பார்க்க பார்க்க சாப்பிட தோணுகிறது நன்று பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 113. நெல்லிக்காய் தொக்கு செய்வதுண்டு. நான் எல்லா ஊறுகாய்களுக்கும் வெந்தயம் வறுத்து பொடி பண்ணி சேர்ப்பேன்.

  பதிலளிநீக்கு
 114. காலை வணக்கம் போட்ட பிறகு நான் வரவேயில்லையே என்று அக்கறை யோடு விசாரித்திருக்கும் நெ.த.விற்கு நன்றி.
  வீடு மாற்றலுக்குப் பிறகு இப்போது தான் வைஃபை இணைப்பு கிடைத்திருக்கிறது. நேற்றிலிருந்து லேசான காய்ச்சல், தலைவலி, வயிறு அப்செட் உபாதைகள்.

  பதிலளிநீக்கு
 115. //நெ.த. said...
  அதிரா - அதாவது நாங்களாக சொல்லுவோம்.. அங்க பாருங்கோ அந்தப் பெண் எவ்ளோ அழகு. - என் ஹஸ்பண்ட் என்னை இப்படி டெஸ்ட் பண்ணுவதில்லை.///

  ஹா ஹா ஹா நான் ரெஸ்ட் எல்லாம் பண்ணுவதில்லை நெல்லைத்தமிழன்:).. ஒட்டிப் பார்ர்ப்பது ஒளிஞ்சிருந்து நோட் பண்ணுவது இப்பூடிப் பழக்கமும் என்னில இல்லை... :) பிடிக்காட்டில் நேரடி அட்டாக்தான்:)).. ஆனா உண்மையில் ஆரையும் ரசிப்பதை தப்பாக எடுப்பதில்லை நான்.... அதனாலென்ன ரசிப்பதில் என்ன தவறு இருக்கு...

  //என்னைக் கேட்டால், அந்த மாதிரி கமென்டுகளை காது கேட்ட மாதிரியே காண்பித்துக்கொள்ள மாட்டேன் (ஆனால் கண்கள் கண்டிப்பா பார்த்திடும் ஹா ஹா ஹா)///

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 116. //நெ.த. said...
  அதிரா - எழுதுவதை முழுதாக எழுதுங்க. ஸ்ரீராமுக்குப் புரியாது. லேடீஸ் கொசுவே போதும்:) - அதுவும் அனுக்காவைக் கடித்த லேடீஸ் கொசு என்று எழுதுங்கள். ஸ்ரீராமுக்கு முகம் மலரலாம்.//

  ஹா ஹா ஹா.. ஸ்ரீராம் இப்போ கட்டிலுக்குக் கீழயாம்:)) பயத்தினால் அல்ல:) .. ஷையாகிட்டாராம்.. அனுக்காவைக் கடிச்ச லேடி நுளம்பு:) தன்னையும் டச்சு பண்ணிட்டுதே என:))

  பதிலளிநீக்கு
 117. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இன்னும் ஆறு ஆகலையா?

  பதிலளிநீக்கு
 118. பானுமதி மேடம்... வருகைக்கு நன்றி. நீங்கள், வல்லிம்மா இருவரையும் காணோமே என்ற எண்ணம்.

  பதிலளிநீக்கு
 119. அசோகன் குப்புசாமி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 120. ஏகாந்தன் சார்... மருத்துவர்களைப் பற்றி உங்கள் எண்ணம் கொஞ்சம் சரிதான். நானும் ஒரு நாள் மருந்து எடுத்துக்கொண்டு அப்புறம் அதை மறந்துவிடுவேன் (ஏன்னா அதிக மருந்து கிட்னிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எங்கோ படித்த நினைவு). இருந்தாலும், நம் பிரச்சனைக்காக மருத்துவரிடம் போவது, கிட்டத்தட்ட கடவுளிடம் போய் முறையிடுவது போல் தான். அவங்க நமக்கு செட் ஆகலைனாலோ, இல்லை ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு விதமாக மாற்றிச் சொன்னாலோ கொஞ்சம் பயம் வருவது உண்மை.

  ஐபிஎல் மேட்சா? எனக்கு எந்த லைவ் மேட்சும் பார்க்க முடியாது. இது என் பெகூலியர் குணத்தால். விளையாட்டு ஆரம்பிக்கும்போது ஒரு டீமை சப்போர்ட் பண்ணி அவங்க தோத்துட்டாங்கன்னா மனசு ஒடிஞ்சுவிடும். அதுனால எப்போதும் ஹைலைட்ஸ், அதுவும் நான் விரும்பினால்தான் பார்ப்பேன்.

  பதிலளிநீக்கு
 121. //ஏஞ்சலின் கொஞ்சம் சென்சிடிவ். அதுனால அங்க வம்பு வைக்கமாட்டேன்)//

  :)அவ்வ்வ் நம்ம புகழ் உலகெல்லாம் பரவிருச்சா :)

  பதிலளிநீக்கு
 122. ஸ்ஸ்ஸ்ஸ் :) யம்மி நானும் இப்படித்தான் செய்வேன் . ஆனா நல்லெண்ணெய் சும்மா தாராளமா சேர்ப்பேன் .
  என்னுடைய எவ்ரிடே லன்ச் தயிர் சாதம் .அதுக்குனே வித வித பிக்கில்ஸ் தயார் பண்ணிடுவேன் .
  எனக்கும் வேக வைச்சி தாளிப்பதை விட அப்படியே தாளிக்கிறது பிடிக்கின்றது .

  பதிலளிநீக்கு
 123. சென்சிட்டிவ் என்பதை //போன வியாழன் போஸ்ட் ஹெடிங் பார்த்து பறந்திட்டேன் .அது தான் காட்டி கொடுத்திருக்கோ :)

  பதிலளிநீக்கு
 124. அதிரா சொன்னமாதிரிதான் இங்கே பெரிய நெல்லிக்காய் கிடைக்குது ருசி இல்லை ஆனா வேற வழியில்லை அதை சமைப்பேன்
  எனது சிறுவயதில் நரசிம்மன் அங்கிள் வீட்டில் சாப்பிட்ட நெல்லிக்காய் ஊறுகாயை இதுவரை எங்கும் சாப்பிடலை .அத்த்னை ருசி அது ஊறுகாய் நிறம் அடர் பச்சையில் இருக்கும் .முழு நெல்லியை போட்டு தாளித்திருப்பாங்க லக்ஷ்மி மாமி

  பதிலளிநீக்கு
 125. நெல்லைத்தமிழன், உடல் நலம் பேணவும். எல்லாம் சரியாகிடும் பா.
  சாலையில் விழும் அளவுக்கு என்ன அப்படி உடல் நலம் இருப்பது. இரத்த அழுத்தத்திற்கு உப்பு,காரம் இரண்டும் ஆகாது.
  கவலையும் கூடாது.

  தனியாக நடை பழகப் போக வேண்டாம். மெந்தியம் ராத்திரி
  தயிரில் ஊறவைத்து,
  கார்த்தாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
  வயிற்றுக்கும் ,உடம்பு உஷ்ணத்தையும் குறைக்கும்.

  ஊறுகாய் அருமை. இங்கே நேற்றுதான் வாங்கி நீர் நெல்லி போட்டென்.
  கூடவே இஞ்சி,ப.மிளகாய் வதக்கிப் போட்டாச்சு.
  உப்பு குறைவுதான்.
  நெல்லி தேனில் போட்டு சாப்பிடுவதும் சூப்பர்.

  எங்கள் ப்ளாகிற்கு ,தென்றல் மன்றம் என்று பெயர் வைக்கப் போகிறேன்.
  அத்தனை பேர் எண்ணங்களும் அருமையாக இருக்கிறது.

  நன்றாக சாப்பிட்டு, நடந்து வாழ்க்கையை அனுபவியுங்கள்.
  @ ஸ்ரீராம், மிக நன்றி மா. அம்மாவை மறக்காமல்
  சொல்கிறீர்கள். பூர்வ ஜன்ம பந்தம் தான் உங்கள் எல்லோருடன்
  என்னை இணைத்திருக்கிறது.
  அமோகமாக வாழ என் ஆசிகள்.

  பதிலளிநீக்கு
 126. வல்லிம்மா வருகைக்கு நன்றி. இப்போ என் உணவுப் பழக்கம் என் ஹஸ்பண்டின் கண்காணிப்பில் ( நான் டயட் அது இது என்று பழங்கள் நிறைய சாப்பிடுவேன், வாரம் ஓரிரு முறை சாதம் சாப்பிடுவேன். ஒரு வரை முறை இல்லாத உணவுப் பழக்கம், ஆனால் கன்ட்'ரோலாக இருப்பேன்). எல்லாம் செவ்வனவே நடக்கும் என்ற நம்பிக்கை. எனக்கு மிகுந்த பலம், என் மாமனார் (86). அவர் கிட்டதான் நான் எப்போதும் ஆலோசனை கேட்பேன் (என் ப்ரொஃபசர், எங்கள் வீட்டின் 25 வருட குடும்ப நண்பர், எனக்குத் திருமணம் ஆவதற்கு முன்பு)

  இரண்டு இடுகைகளுக்கும் உங்களைக் காணவில்லையே என்றபோது, டாக்டர் செக்கப்போ என்று மனதில் தோன்றியது. உங்கள் நலம் நாடுகிறோம்.

  பதிலளிநீக்கு
 127. வாங்க ஏஞ்சலின். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  எனக்கு பிராணிகள் வளர்ப்பில் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் ஸ்ரீராம் எழுதிய, பசுபதி அவர்கள் தன் நாயை விட்டுவிட்டு வந்த சம்பவம், எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது. எனக்கே மனதில் வருத்தம் என்றால், வேறு வழியில்லாமல் விட்டுவிட்டு வந்த பசுபதி அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? கூட இருக்கும் நண்பன் யுத்தத்தில் இறந்து தான் மட்டும் தப்பிய வீரரின் நிலை அல்லவா அவருக்கு?

  பதிலளிநீக்கு
 128. ஏஞ்சலின் - சிறுவயதில் நரசிம்மன் அங்கிள் வீட்டில் சாப்பிட்ட நெல்லிக்காய் ஊறுகாயை இதுவரை எங்கும் சாப்பிடலை - இது அவங்களுக்கு ( நரசிம்மன் அங்கிள்) தெரியுமா? இல்லைனா, வடாம் மாடில போட்டு காணாமல் போற மாதிரி, இது என்னடா, ஊறுகாய் அப்போ அப்போ காணாமல் போகுதுன்னு அவங்க நினைச்சிருப்பாங்களா?

  பதிலளிநீக்கு
 129. //மனைவியோ கணவனோ கொஞ்சம் முரண் பண்ணினால்கூட வலையுலகில் சுகந்திரமாக யாராலும் உலாவர முடியாது.//

  அப்படியே வழிமொழிகிறேன் மியாவ் .https://static.giantbomb.com/uploads/scale_small/0/5768/538236-jerry.jpg

  பதிலளிநீக்கு
 130. @ நெல்லைத்தமிழன் ஹிஹி நான் 6 வயசு இருக்கும்போது சாப்பிட்டது அவங்க வீட்டில் .இப்போ அவங்கலாம் எப்படி இருக்காங்களோ !
  ஒருவேளை அந்த ருசி காரணமோ தெரில எனது லன்ச் ஒன்லி தயிர் சாதம் ஊறுகாய் தான் இப்பவும் .
  அந்த மாமி கல் ஜாடியில் போட்டு வச்சிருப்பார் .எழுதும்போதே பசிக்குது :)

  பதிலளிநீக்கு
 131. அதிரா - //மனைவியோ கணவனோ கொஞ்சம் முரண் பண்ணினால்கூட வலையுலகில் சுகந்திரமாக யாராலும் உலாவர முடியாது.// - அப்போவே சொல்லணும்னு தோணித்து. எந்தச் செயலையும் கணவனோ மனைவியோ செய்வதற்கு மற்றவர்கள் ஒன்றும் சொல்லக்கூடாது. ஒவ்வொருவருக்கும் பெர்சனல் ஸ்பேஸ் இருக்கணும். அதே சமயம், மற்றவர்களின் தேவையையும் இக்'னோர் பண்ணக்கூடாது. அவருக்கு டிபன் பண்ணற நேரத்துல மொபைல்ல நோண்டிக்கிட்டிருந்தா கஷ்டம்தான்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!