வெண்டைக்காய் கிச்சடி
எங்க அம்மா, தயிர்ல கலக்கிச் செய்கிறவைகளை கிச்சடி என்றுதான் சொல்லுவார்கள். மாங்காயை (பழம்) வைத்து சித்திரையின்போது செய்வதை மட்டும் மாங்காய்ப் பச்சிடின்னு சொல்லுவாங்க. என் ஹஸ்பண்டோ, வந்த நாள் முதலா, ‘கிச்சடி’ன்னா, உப்புமால காய்போட்டு வட இந்தியால பண்றதைத்தான் சொல்லுவாங்க. இதையெல்லாம் ‘பச்சடி’ன்னுதான் சொல்லணும்னு சொல்லிட்டாங்க. ஓரிரு முறை சொல்லிப்பார்த்தேன். எடுபடலை. அதுனால நானும் வெண்டைக்காய் பச்சிடின்னே சொல்ல ஆரம்பித்துட்டேன். என் அம்மா ஞாபகம் வந்ததுனால தலைப்புல ‘கிச்சடி’ன்னு எழுதியிருக்கேன்.
இதுக்கு புது வெண்டைக்காய் சரிப்பட்டுவராது. வெண்டைக்காய் வாங்கி சில நாட்கள்ல வாடி இருக்குமல்லவா? அந்த வெண்டைக்காய்தான் இதற்கு உகந்தது. நான் வாடின வெண்டைக்காயை வாங்கிவச்சிருந்தேன். ஆனால் உடனே பண்ணாததுனால கெட்டுப்போய்விட்டது. அப்புறம் புது வெண்டைக்காயை வாங்கித்தான் செய்தேன்.
எனக்கு வெண்டைக்காய் பச்சிடி ரொம்பப் பிடித்தமானது. பொதுவாகவே எனக்கு மோரில் செய்யும் எதுவும் ரொம்பப் பிடிக்கும். அது மோர்ச்சாத்துமதோ, மோர்க்குழம்போ, பச்சிடியோ.
முதல்ல வெண்டைக்காயை எடுத்துக்கொண்டு, நன்றாக அலம்பிக்கொண்டு, அதுக்கு தலையையும் வாலையும் கட் பண்ணிவிட்டு, ஈரம் போகுமாறு துடைத்துவிடுங்கள்.
பிறகு அதனை சிறு சிறு வில்லைகளாக நறுக்குங்க. வெண்டைக்காய் கறிக்கு நறுக்கறமாதிரி நறுக்கக்கூடாது. முடிந்த அளவு மெல்லிதா நறுக்கணும். (படத்தைப் பார்த்துக்கோங்க).
ஒன்று அல்லது ரெண்டு பச்சை மிளகாய், 2-3 ஸ்பூன் தேங்காய் துருவலைச் சேர்த்து நல்ல வழுமூன அரைச்சுக்கோங்க.
மோர் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் ப.மி+தேங்காய் அரைத்த விழுதைக் கலக்கிக்கோங்க. தேவையான அளவு உப்பு சேர்த்துக்கோங்க. இந்தக் கலவைல, கடுகு திருவமாறி விடுங்க.
இப்போ, கடாய்ல 4-5 ஸ்பூன் எண்ணெய் எடுத்துக்கொண்டு (வெண்டைக்காயின் அளவைப் பொறுத்து), நல்லா சூடானதும், கட் பண்ணி வச்சிருக்கற வெண்டைக்காயைப் போட்டு நல்லா வதக்குங்க. எண்ணெய்ல நல்லா வறுபட்டமாதிரி ஆகணும். படத்தைப் பார்த்தீங்கன்னா, எவ்வளவு வெண்டைக்காய் கடாய்ல போடும்போது இருந்தது, நல்லா வதக்கினபிறகு எவ்வளவு குறைவா ஆகிவிட்டது என்பது தெரியும். இதற்கு உப்பு போடவில்லை. வெறும்ன எண்ணெய்லதான் வதக்கியிருக்கோம்.
பரிமாறுவதற்கு சற்று முன்பு, மோர் கலவையில் இந்த வெண்டைக்காயைக் கலந்துவிடலாம்.
வெண்டைக்காய் பச்சிடி ரெடி.
காலை வணக்கம்.
பதிலளிநீக்குஆஹா. இன்னிக்கு அஞ்சு மணிக்கே Schedule பண்ணி இருக்கீங்க போல....
பதிலளிநீக்குஇதோ படிக்கிறேன்.
குட்மார்னிங் வெங்கட்.. சீக்கிரமே ஷெட்யூல் செய்திருக்கிறேன் போல... உங்கள் பின்னூட்டம் கண்டதுதான் எனக்கே தெரிகிறது!!!!
பதிலளிநீக்குவாவ்..... வெண்டைக்காய் பச்சடி நல்லா இருக்கும். நான் வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது கொஞ்சம் தயிரில் போட்டு சாப்பிடுவதுண்டு.
பதிலளிநீக்குஎல்லாரும் ஆறு மணிக்கு வந்து "நான் தான் ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு......." ந்னு கமெண்ட் போட வந்து ஏமாந்து போகப் போறாங்க..,.... ஹையோ ஹையோ..... :)))))
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா.. நானே ஏமாந்திருக்கிறேனே.... உங்கள் பின்னூட்டம் கண்டுதானே "விழித்தேன்"!!
பதிலளிநீக்குஆஹா சூப்பர். ரொம்பப் பிடித்தது வெண்டைக்காய்ப் பச்சடி.
பதிலளிநீக்குவெண்டைக்காய் வறுபடும் வாசனை இங்க வந்துட்டது. அழகாப் படம் எடுத்துப்
பக்காவாச் செய்யற நறிவிசு அழகு.இதுக்குத் தேங்காய் சாதம் ஒத்து
ஊதுமோ.
நெ.த.,ஸ்ரீராம், வெங்கட் காலை வணக்கம்.
வாழ்க வளமுடன்.
குட்மார்னிங் / குட் ஈவினிங் வல்லிம்மா....
பதிலளிநீக்குஎன்ன ஆச்சு இன்று வெகு சீக்கிரமே வந்துருச்சு பதிவு?!!! காலை வணக்கம் ஸ்ரீராம் , துரை அண்ணா, வெங்கட்ஜி, வல்லிம்மா....எபி இப்போ ரொம்ப ஏமாத்துது ஹா ஹா ஹா ஹா ஹா பாருங்க இன்று நிறைய பேரிடம் இருந்து க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
பதிலளிநீக்குகீதா
வெங்கட்ஜி தளம் ஓபன் ஆக நேரம் எடுத்தது எனவே எபி ஓபன் பண்ணி வைச்சுக்கலாம் முதல்ல வந்து வணக்கம் வைச்சுட்டுப் போயிடலாம்னு பார்த்தா இங்க ஏற்கனவே கல்லா கட்டிருச்சு ஹா ஹா ஹா..சரி தில்லி போய்ட்டு வரேன்
பதிலளிநீக்குகீதா
எனக்கே தெரியாது கீதா... ஆறுக்கு பதிலா அஞ்சு க்ளிக் பண்ணி வச்சிருந்திருக்கேன்!!!!
பதிலளிநீக்கு:))))
வெண்டைக்காய்ப்பச்சடி மிகவும் பிடித்த ஒன்று...வரேன்..
பதிலளிநீக்குகீதா
இன்றைக்கு எதேச்சயா 5:50 மணிக்கு பார்த்தால் இடுகை வெளியாயிருக்கு. பேசாம 5 மணி என்றே ஷெட்யூல் செஞ்சிடுங்க. காலை விழிப்பு மகள் ஒரு சப்ஜெக்டில் (யூகே டிகிரி, ஒவ்வொரு பேப்பரா அட்வான்ஸ் ஸ்டேஜ்ல எழுதறா) பாஸ் என்ற செய்தியோடு ஆரம்பித்தது.
பதிலளிநீக்குபிறகு வருகிறேன்.
// காலை விழிப்பு மகள் ஒரு சப்ஜெக்டில் (யூகே டிகிரி, ஒவ்வொரு பேப்பரா அட்வான்ஸ் ஸ்டேஜ்ல எழுதறா) பாஸ் என்ற செய்தியோடு ஆரம்பித்தது. //
பதிலளிநீக்குவாழ்த்துகள் நெல்லை.. சொல்லிடுங்க.
காலை வணக்கம். உங்கள் மகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அநியாயமா இல்லையோ. இன்னிக்கு நான் எழுந்ததே ஐந்தேமுக்காலுக்கு! :( கொஞ்சம் முடியலை. அதான் எழுந்துக்கவும் முடியலை. ஆனால் ஶ்ரீராம் ஐந்து மணிக்கே வெளியிட்டிருக்கார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! விழித்துக் கொண்டாலும் ஐந்து மணிக்கு வரது கஷ்டம். அப்போத் தான் மும்முரமா வேலை இருக்கும்.
பதிலளிநீக்குநெ.த. இதே போல் பிஞ்சுப் புடலை, வெள்ளைப் பூஷணி, தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றில் செய்யலாம். என்ன ஒரு கஷ்டம்னா நம்ம ரங்க்ஸுக்கு மேற்சொன்ன எதுவுமே பிடிக்காது! தயிர்ப்பச்சடியே அவர் பட்டியலில் இல்லைனு நினைக்கிறேன். :)))) டாங்கர் பச்சடி தான் அடிக்கடி! :)))))
பதிலளிநீக்குஉங்கள் மகளுக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள், ஆசிகள், பெண், பையர் இருவரில் யார் பெரியவர்? அவங்க கிட்டே எல்லாம் (உங்கள் ரசிகர்களான) எங்களைப் பத்தின அறிமுகம் உண்டா? இருந்தாலும் சொல்லிடுங்க. எங்க குழந்தைகளுக்குச் சிலரைத் தெரியும். என்றாலும் அவங்க இந்தியாவில் இல்லையே! :(
பதிலளிநீக்கு"கிச்சடி" எனக் கேரளம், நாகர்கோயில் பக்கம் சொல்லுவார்கள். அவங்க பச்சடி என்பது நீங்க சொல்வது போலத் தான்! இங்கே தயிர்ப்பச்சடி, வெல்லப்பச்சடி என்று பிரித்துச் சொல்லுவோம்.
பதிலளிநீக்கு// ( கொஞ்சம் முடியலை. அதான் எழுந்துக்கவும் முடியலை. //
பதிலளிநீக்குஎன்னாச்சு கீதாக்கா? பிரஷர் செக் பண்ணுங்க.
// ஆனால் ஶ்ரீராம் ஐந்து மணிக்கே வெளியிட்டிருக்கார்!//
எனக்கே தெரியலை கீதாக்கா... எதிர்பாராமல்...!!
ஆ... டாங்கர் பச்சடி! எங்கே என் பாஸ்... எங்கே என் பாஸ்...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வருமாமே இப்படி பச்சடி செய்து சாப்பிட்டால் என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லி இருக்கலாமே
என் பாஸ் கிட்ட இப்போ இதைப் படிச்சுக்க காமிச்சேனா, அவங்க சொல்றாங்க... வெண்டைக்காய் பச்சடி அவங்க எப்படிச் செய்வாங்கன்னா, வெண்டைக்காயை நல்ல மொறுமொறுன்னு வதக்கிக்கொண்டு நல்ல கெட்டித்தயிர்ல அதைப் போட்டு, ஒரு மிளகாய், கடுகு தாளிச்சுடுவாங்களாம். அவ்ளோதானாம்!
பதிலளிநீக்குஇந்தத் தேங்காய் பச்சை மிளகாய் சேர்க்கறது வந்து கேரட் பச்சடிலதான் சேர்ப்பங்களாம். அது அவங்கப்பா ஸ்பெஷல். அதாவது கேரட்டை ரெண்டு பச்சை மிளகாய், தேங்காய்த்துருவல் கொஞ்சத்தோட சிறு துண்டுகளாக்கி மிக்சில அரைச்சுக்கிட்டு (வாதக்காம, பச்சையாவே) அதைத் தயிர்ல போட்டு கடுகு, ஒரு சிகப்பு மிளகாய் தாளிச்சுடுவாங்களாம்.
குட்மார்னிங் பானு அக்கா.
பதிலளிநீக்குமதுரை...
பதிலளிநீக்கு//வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வருமாமே.. இப்படி பச்சடி செய்து சாப்பிட்டால் என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லி இருக்கலாமே //
தமன்னாவை கணக்கு பண்ணலாமோ...!!!!!
அருமை
பதிலளிநீக்குநான் வெண்டைக்காய் விரும்பி சாப்பிடுவேன். மூளை நல்லா வளரும்னு...
பதிலளிநீக்குவெண்டைக்காய் கிச்சடியா? வெண்டைக்காய் போட்டு உப்புமாவா? ஆச்சர்யமாக படிக்க ஆரம்பித்தேன். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் விருப்பமானது.
பதிலளிநீக்குகீதாக்கா டாங்கர் பச்சடி தஞ்சை மாவட்ட ஸ்பெஷல் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு@Bhanumathi Venkateswaran,அநியாயமா இல்லையோ! :)))) நான் சின்னவளா இருக்கும்போதிலிருந்தே டாங்கர் பச்சடி அநேகமா வாரம் இரண்டு முறையாவது சாப்பிட்டிருக்கேன். என் அப்பாவுக்கு உயிர்! வத்தக்குழம்பு (வற்றல் போடும் குழம்பு),சாதம், துவையல் சாதம் ஆகியவற்றிற்குக் கட்டாயமாய் இடம் பெறும். இதைத் தவிரவும் மோர்ச்சாறு என ஒன்று! அதுவும் அடிக்கடி உண்டு. என் அப்பாவுக்கும் நெ.த. மாதிரி மோரில் என்ன செய்தாலும் பிடிக்கும். :)))) என் மாமியார் அதிகம் டாங்கர் பச்சடி செய்து நான் பார்க்கலை. அவங்களுக்குத் தேங்காயை உடைத்துத் துருவிப் பச்சடி செய்தால் தான் பச்சடி என ஒத்துப்பாங்க. இதெல்லாம் ஜுஜுபி! தினம் குறைந்த பட்சமாக நான்கு தேங்காயாவது உடைக்கணும்! தோப்பு இருந்ததால் தேங்காய்க்கும், எண்ணெய்க்கும் பஞ்சமில்லால் செலவு செய்து பழக்கப்பட்டவங்க!
பதிலளிநீக்குஎன் அம்மா நினைவு வந்து விட்டது.
பதிலளிநீக்குசெய்முறை அம்மா செய்வது போல்தான் இருக்கிறது.
நானும் செய்வேன்.
நீங்கள் சொல்வது போல் வாடிய வெண்டைக்காய் குறிப்பு அருமை.
அந்தக் காலத்தில் குளிர்சாதன பெட்டி கிடையாது. மண் பானைகளில் காய்களை வைத்து இருப்பார்கள்.
அப்படியும் வாடி போகும் சில காய்கறிகள்.
தயிர் வெண்டைக்காய் கிச்சடி விருந்தினர் வந்தால் கண்டிப்பாய் உண்டு . கல்யாணவீடுகளில் வெண்டைக்காய் புளி பச்சடியும் உண்டு.
வெயிலுக்கு ஏற்ற கிச்சடி.
உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள் தமிழன்.
பதிலளிநீக்குமிகவும் பிடிக்கும்... இந்த செய்முறையும் அருமை...
பதிலளிநீக்குஎன்னது வெண்டைக்காயை வதக்கிக் கொட்டி கிச்சடியா? என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே படித்தேன். பச்சடியையும் கிச்சடி என்று சொல்பவர்களும், விசிடபிள் ரவை உப்புமாவைக் ரவா கிச்சடி என்று சொல்பவர்களும் ஞாபகம் வந்தது. தயிரில், வெண்டைக்காயை நன்றாக வதக்கிச் சேர்ப்பதுதான் என்னுடைய முறையும். இஞ்சி,பச்சைமிளகாய்,கடுகு தாளித்துக் கொட்டுவது எல்லாம் மாமூல்தான். கர்நாடகா வெண்டை புளிப்பச்சடி கட்டா,மீட்டா அதுவும் ருசிதான். உங்க கிச்சடி ரெடி. சாப்பிட வரோம். அன்புடன்
பதிலளிநீக்குஉங்கள் பெண்ணிற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள். அன்புடன்
பதிலளிநீக்குஉங்கள் சமையல் குறிப்புகள் எல்லாம் செய்ய எளிதாக இருக்கிறதுஒரு வேளை இம்மாதிரி சமையல்தான் செய்து பழகி விட்டதோ ஐ மீன் நீங்கள் தனியே சமையல் செய்யும்போது
பதிலளிநீக்குசமையல் குறிப்புகள் அருமை பாராட்டுகள்
பதிலளிநீக்குஹையோ பாருங்க நெல்லை எங்க பிறந்த வீட்டுல (தின்னவேலி, நாகர்கோவில், திருவண்பரிசாரம், திருவனந்தபுரம் அப்படினு சொல்லலை..நல்லா நோட் பண்ணிக்கோங்க ஹா ஹா ஹா ஹா ஹா....) இது கிச்சடி தான். இனிப்பில் செய்வது பச்சடி. கல்யாணம் ஆன பிறகு கொஞ்சநாள் இந்தக் கன்ஃப்யூஷன் இருந்து அப்புறம் இப்ப எல்லாம் புகுந்த வீட்டு பாஷையாகிப் போச்சு...ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குபுகுந்த வீட்டில் இது பச்சடி. தயிர்ப்பச்சடி, திதிப்பு பச்சடி...புகுந்த புதிதில் பல விசேஷங்கள் முதல் என்று வரும் இல்லையா...அப்போ எல்லாம் செர்வ் பண்ணுவதற்கு நான் விளம்பட்டா என்று கேட்டு அப்புறம் பரிமாறட்டா என்று கேட்பேன். அப்புறம் வெள்ளரிக்காய் பச்சடி எடுத்துவா என்றால்...நான் தேடினேன் எங்கே எங்கே என்று...ஹிஹிஹிஹிஹி.. இதுகூடவா தெரியாது. இது கூடப் பண்ணத் தெரியாதா? இது ரொம்ப ஈசியானது ஆச்சே என்று என்னைக் கலாய்த்தார்கள். இப்படி நிறைய என் வார்த்தைகள் புரியாமல் எனக்கு இவர்கள் சொற்கள் புரியாமல்....
எனக்கும் மோரில் செய்யும் எதுவும் ரொம்பப் பிடிக்கும் நெல்லை. வெண்டைக்காய் கிச்சடி இதே இதே...தேங்காய் பச்சைமிளகாய் அரைத்து விட்டு, கொஞ்சம் பெருங்காயம் தாளிக்கும் போது சேர்த்து என்று சாதத்தில் கலந்தே சாப்பிடுவேன்...எந்தக் கிச்சடியாக இருந்தாலும் சாதத்தில் கலந்து சாப்பிட பிடிக்கும்...சூப்பர் நெல்லை. ரொம்பவே நல்லா செய்யறீங்க எல்லாம்...
கீதா
மகள் ஒரு சப்ஜெக்டில் (யூகே டிகிரி, ஒவ்வொரு பேப்பரா அட்வான்ஸ் ஸ்டேஜ்ல எழுதறா) பாஸ் என்ற செய்தியோடு ஆரம்பித்தது. //
பதிலளிநீக்குநெல்லை வாவ்!! வாழ்த்துகள் உங்கள் மகளுக்கு! சொல்லிடுங்க!!...
கீதா
நான் இன்னமும் என் பி வீ மக்கள் வீட்டிற்குப் போனால் கிச்சடினுதான் சொல்லுவது...பு வீ மட்டும் பச்சடினு....
பதிலளிநீக்குஆமாம் உப்புமா வித் வெஜ் பண்ணினா அதைக் கிச்சடினு நார்த்ல சொல்லுவாங்க...சரிதான் நாம சௌத் ஆச்சே...ஹிஹிஹி ஆனா சென்னைல மக்கள் எல்லாம் கிச்சடினா காய் போட்ட உப்புமாவைத்தான் சொல்லுறாங்க...இங்க வந்த புதுசுல ஒரு கல்யாணத்துல காலை டிபன் கிச்சடின்னதும்...ஓ! காலைல டிபன் கிச்சடியா? என்ன கிச்சடி செஞ்சுருப்பாங்க? வயிறு நிறையுமா அப்படினு எல்லாம் யோசித்தேன்...அப்புறம்தான் தெரிஞ்சுச்சு வெஜிட்டபிள் உப்புமாவை கிச்சடின்றாங்கனு...ஹா ஹா ஹா ஹா....கேரளத்திலும் இதைக் கிச்சடிநுதான் சொல்லுவாங்க
கீதா
விழித்துக் கொண்டாலும் ஐந்து மணிக்கு வரது கஷ்டம். அப்போத் தான் மும்முரமா வேலை இருக்கும்.//
பதிலளிநீக்குஅதானே கீதாக்கா நானும் எழுந்துருவேன் ஆனா அப்பதான் வேலை நிறைய இருக்கும்...
ஹை கீதாக்கா எங்க ஊர்ல கிச்ச்டினுதான் சொல்லுவாங்கனு சொல்லிருக்காங்க கீதாக்கா தின்னவேலிலயும் கிச்சடிதான்....
கீதா
// ( கொஞ்சம் முடியலை. அதான் எழுந்துக்கவும் முடியலை. //
பதிலளிநீக்குகீதாக்கா க்யா ஹூவா? என்ன ஆச்சு? வாட் ஹாப்பண்ட்?!!! வழக்கமானதா இல்லை என்னாச்சு...பாத்துக்கோங்க கீதாக்கா
கீதா
ஸ்ரீராம் கண்ணாடி போடாம பார்த்தீங்களா அதான் 5 மணிக்கு செட் பண்ணிட்டீங்களோ? ஹா ஹா ஹா ஹா ஹா...சரி சரி விடுங்க...போனா போகுது...
பதிலளிநீக்குஸ்ரீராம் பாஸுக்கு டாங்கர் பச்சடி பிடிக்குமா? என்னையும் அந்த லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க...மாமியாரிடம் கற்றுக் கொண்டது...எங்க வீட்டுல சில சமயம் தேங்காய் போறலைனா கொஞ்சம் உளுத்தம்பருப்பு வறுத்து அதோடு சேர்த்து அரைச்சு கிச்சடி செய்வாங்க...ஆனா முழுவதுமே உ பருப்பு வறுத்து செய்வதை மாமியாரிடம் கற்றேன். அதன் பின் வீட்டில் எப்போதும் ரெடியாக வறுத்த உப இருக்கும்...
கீதா
ஆஆஆ வெண்டிக்காயில் கிச்சடியா?... வாறேன் சத்துப் பொறுங்கோ:)..
பதிலளிநீக்குதேங்காய் இல்லை என்றாலும் வெண்டையை நன்றாக எண்னெயில் வறுத்து தயிரில் கலந்து கடுகு கறிவேப்பிலை கொஞ்சம் பெருங்காயம் தாளித்து உப்பும் போட்டால் கிச்சடி தயார். இது என் பாட்டி செய்து, இங்கு மாமியார் தேங்காய் அதிகம் பயன்படுத்தமாட்டாங்க அதனால அரைக்காமல் இப்படியும் செய்வாங்க...நானும் தான் ஜிம்பிளா செய்ய நினைத்தால் இப்படி....
பதிலளிநீக்குகீதா
உண்மையில் கிச்சடி என்றால் அரிசி+பருப்பு+காய்கள் போட்டுக் கலந்து உப்புப் போட்டுக்குழையவோ அல்லது நிதானமாகவோ நெய்யில் மிளகு+ஜீரகம்+மி.வத்தல்+கருகப்பிலை+பெருங்காயம் சேர்த்துத் தாளிப்பார்கள். சிலர் இதோடு வெங்காயமும் வதக்கிச் சேர்ப்பார்கள். தாளிதத்தில் ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டையும் போடுவது உண்டு. இவை எல்லாம் சாதாரணமாகச் சாப்பிடுகையில். உடம்பு முடியலை எனில் சாதம்+பருப்பு+காய்களோடு நெய்யில் மிளகு+ஜீரகம்+கருகப்பிலை மட்டும்! இதற்கு எந்தப் பருப்பானாலும் உபயோகிப்பார்கள் என்றாலும் பெரும்பாலும் உடைத்த பச்சைப்பயறு, முழுப்பயறு, து.பருப்பு, பாசிப்பருப்பு போன்றவையே நன்றாக இருக்கும். மசூர்ப் பருப்புப் பிடிக்குமெனில் அதிலும் ப்ண்ணலாம்.
பதிலளிநீக்குஎன்னோட அம்மா சமையலில் ஒரு புதுமை விரும்பி. ஆகவே இந்த ரவா கிச்சடி எல்லாம் கறிகாய் உப்புமா என்னும் பெயரில் பள்ளி நாட்களிலேயே அம்மா செய்து கொடுத்துச் சாப்பிட்டிருக்கேன். உறவினர் ஒருவர் திருமணம் ஆகிப் புனேயிலிருந்து மதுரை வர அவங்க வயசில் சின்னவங்களா இருந்தாக் கூட அம்மா அவங்களிடம் கேட்டுக் கொண்டு சப்பாத்திக் கூட்டு வகைகள், துவையல் வகைகள் போன்றதெல்லாம் செய்து கொடுப்பார். அப்படி அறிமுகம் ஆனது தான் தக்காளிச் சட்னி, தொக்கு வகைகள், காய்கறிக் குருமா, சாகு, பாம்பே சட்னி என்றழைக்கப்படும் கடலைமாவுச் சட்னி போன்றவை!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசகோதரர் நெல்லைத் தமிழன் சூப்பராக செய்முறைகளுடன் செய்து காண்பித்த வெண்டைக்காய் கி(ப)ச்சடி மிகவும் அருமையாக இருந்தது. படங்களும் மிக தெளிவாக கண்ணுக்கு அழகாக இருந்தது. மிகவும் அருமை...அனைவரும் சொல்லியாகி விட்டது.. இருப்பினும் எனக்கு தெரிந்த வரை நான் பிறந்த, புகுந்த வீடுகளிலும் இதை தயிர் கிச்சடி என்று சொல்லி வழக்கம். மாங்காய் வைத்து செய்வதை இனிப்பு பச்சடி என சொல்வோம். வெங்காயம் தவிர்த்து பிற இங்கிலீஷ் காய்கறிகளுடன் சேரும் ரவை, சேமியாவை ரவா கிச்சடி எனவும், சேமியா கிச்சடி எனவும் சொல்வது வழக்கம். வெண்டைக்காய் குறிப்புக்கள் நன்றாக இருந்தது. இன்று கூட எங்கள் வீட்டில் காலை டிபனுக்கு இந்த ரவா மிளகு சீரகம் இஞ்சியுடன செய்த பொங்கல்தான். இதுக்கு தொட்டுக் கொள்ள இந்த பச்சடி கூட நன்றாக இருந்திருக்கும். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க
பதிலளிநீக்குமுதலில் கீதாக்காவுக்கு ஒரு வணக்கம் சொல்லிக்கறேன் :)
பதிலளிநீக்குகீதாக்கா சொன்ன மாதிரிதான் அம்மாவும் கிச்சடி செய்வாங்க .
நீங்க செய்தது வெண்டைக்காய் மோர்க்குழம்பு னு நான் செய்வேன்
என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் இப்படி மெலிசா வெட்டி பொரிக்கும்போதே வந்து கேட்டு சாப்பிடுவா
பதிலளிநீக்கு///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குஎனக்கே தெரியாது கீதா... ஆறுக்கு பதிலா அஞ்சு க்ளிக் பண்ணி வச்சிருந்திருக்கேன்!!!!///
இது நல்லதுக்கில்ல ஜொள்ளிட்டேன்ன்ன்:), அஞ்சூஊஊஊஊஊஊஊஉ ஓடிக் கமோன்ன்ன் ... ஹையோ என் பக்கம் அனுக்காவைப் பார்த்த எபெக்ட்டா இருக்குமோ:)) ஹா ஹா ஹா வரவர மறதி ஓவராகுதே:))
ஆஹா வெண்டிக்காய்க் கிச்சூ நல்லாத்தான் இருக்கு.. எனக்கும் மோரில் செய்யும் ஐட்டங்கள் ரொம்பப் பிடிக்கும்.. செய்து பார்க்கோணும் விரைவில்.
பதிலளிநீக்குஆனா ஒன்று... இதில் தயிரை சூடுபண்ணுவதில்லையோ... ?.
நான் பச்சடி என்றால்.. பச்சையாக வெங்காயம் மிளகாய் வெட்டிப் போடும் சம்பலைச் சொல்லுவேன்:)))[நான் வைக்கும் பெயர்}.. சத்தியமா பச்சடி.. கிச்சடி எனில் என்னவென இதுவரை ஆருமே சரியான விளக்கம் தரவில்லை எங்கும்:))..
///பொதுவாகவே எனக்கு மோரில் செய்யும் எதுவும் ரொம்பப் பிடிக்கும். அது மோர்ச்சாத்துமதோ, மோர்க்குழம்போ, பச்சிடியோ.//
பதிலளிநீக்குஉங்களுக்கு புளிப்புத்தான் அதிகம் பிடிக்கும் என்பது எங்களுக்கும் தெரியுமே.. உங்கள் ரெசிப்பிகள் ஒன்று இனிப்பாக இருக்கும் அல்லது புளிப்பாக இருக்கும் ஹா ஹா ஹா...
///நெ.த. said...
பதிலளிநீக்குஇன்றைக்கு எதேச்சயா 5:50 மணிக்கு பார்த்தால் இடுகை வெளியாயிருக்கு. பேசாம 5 மணி என்றே ஷெட்யூல் செஞ்சிடுங்க. காலை விழிப்பு மகள் ஒரு சப்ஜெக்டில் (யூகே டிகிரி, ஒவ்வொரு பேப்பரா அட்வான்ஸ் ஸ்டேஜ்ல எழுதறா) பாஸ் என்ற செய்தியோடு ஆரம்பித்தது.///
அஞ்சு ஆருடைய மகளுக்கு வாழ்த்துச் சொல்றா எனப் பார்த்து பின்பு ஒண்ணொண்ணாத் தேடிக் கண்டு பிடிச்சேன்... வாழ்த்துக்கள் மகளுக்கு...
@miyaaw //அஞ்சு ஆருடைய மகளுக்கு வாழ்த்துச் சொல்றா எனப் பார்த்து பின்பு ஒண்ணொண்ணாத் தேடிக் கண்டு பிடிச்சேன்.//
பதிலளிநீக்குஅன்னிக்கே தலையில் நங்குன்னு கொட்டியிருக்கணும் உங்க பால்ய தோழி :)
Nice post! Could you add this, https://e-kalanchiyam.blogspot.com/ blog too
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம் எங்கள் பிளாக், வெளியிட்டமைக்கு. வாடின வெண்டைக்காய்ல செஞ்சு பாருங்க. ரொம்ப நல்லா இருக்கும்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட். வெண்டைக்காய் வதக்கல் சொத சொதன்னு இருக்குமே. அது தயிர்ல நல்லா இருக்குமா? (ஆனாலும் மோர் சாதத்துக்கு வெண்டைக்காய் கறி ரொம்ப நல்ல காம்பினேஷன்)
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா. இன்று அதிசயமாக காலையிலேயே உங்கள் பின்னூட்டம். தேங்காய் சாதத்துக்கும் நல்லாத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குகீதா சாம்பசிவம் மேடம்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. புடலைல இதுவரை செய்ததில்லை. பூசணியில் என் மனைவி ரெய்தா செய்வார். தக்காளி, வெள்ளரிக்காய் பச்சிடி என் ஃபேவரைட். டாங்கர் பச்சிடி என் பையனுக்குத்தான் பிடிக்கும் (அது உளுத்தமா பச்சிடியா?)
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
மகளுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. அவளுக்கு யாரையும் பரிச்சயமில்லை. (தமிழ் கொஞ்சம் கொஞ்சம் படிப்பாள். ரொம்ப தமிழ் எழுதினா படிக்கமாட்டாள். என் பையனுக்கு அதைவிட மிகக் குறைவாகவே தமிழ் படிக்கத் தெரியும். என்ன செய்ய... இதை அவர்கள் என்னுடன் இருந்தபோது கவனத்தில் கொள்ளவில்லை)
பதிலளிநீக்குகிச்சடி, பச்சிடி - சந்தேகத்தைத் தீர்த்துவைத்த கீதா சாம்பசிவம் மேடம், கீதா ரங்கன் ஆகியோருக்கு நன்றி. நெல்லை, நாகர்கோவில், திருவனந்தபுரம், மற்ற கேரளாவைத் தெரியாது, ஆகிய இடங்களில் இப்படிச் சொல்லுவார்கள்.
பதிலளிநீக்குஸ்ரீராம் - பிரஷர் செக் பண்ணுங்க. - நீங்க அவங்களுக்குச் சொன்னதை, நான் தினமும் மூன்று வேளை செய்துகொண்டிருக்கிறேன். டாக்டர் அதைப் பற்றிக் கவலைப்படாதீங்கன்னு சொல்றார். இருந்தாலும் ரீடிங்கைக் குறித்துவைக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். வெண்டைக்காய் பச்சிடி செய்து சாப்பிட்டால், சீக்கிரம் சமையலை முடித்துவிடலாம். மற்றபடி வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு வரும் என்பதெல்லாம் ஒரு யூகம்தான் என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி... நீங்கள் மூளைக்காரராக இருப்பதை நினைத்து 'எப்படி' என்று நினைத்தேன். சந்தேகம் தீர்ந்தது.
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம்... ஓ.. நீங்களும் 'கிச்சடி' என்றால் ரவா உப்புமாவை நினைப்பவரா?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி கோமதி அரசு மேடம். நீங்களும் நெல்லை இல்லையோ? நான் கடைகளில் வாடின வெண்டை பார்த்தால் இதைச் செய்யவென்றே வாங்கி வருவேன்.
பதிலளிநீக்குகாலையிலேயே சுவைத்து விட்டேன்...
பதிலளிநீக்குஆனாலும்,
இணையத்திற்கு நலக்குறைவு....
சற்று நேரம் கழித்து வருகிறேன்...
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
பதிலளிநீக்குவாங்க வளவனூர் அக்ரஹார காமாட்சி அம்மா. நெடுக வட இந்தியாவில் வாழ்ந்து 'கிச்சடி' என்றால் காய்கறி உப்புமா என்று நினைத்ததில் ஆச்சரியம் இல்லை. 'கர்னாடக வெண்டை புளிப் பச்சிடி கட்டா மீட்டா' - இதுவரை சாப்பிட்டதில்லை.
பதிலளிநீக்குகாமாட்சி அம்மா... என் கிச்சன் அனேகமா முடிந்துவிட்டது. இனி மனைவி செய்வதுதான். நான் take over பண்ணப்போகிறேன் என்று சொன்னதே அவளுக்கு வருத்தமாகிவிட்டது. அங்கு இருவரும் 2-3 வாரம் காலி செய்யச் செல்வோம். அப்போதும் அவள்தான் சமையல் செய்வாள்.
உங்கள், கீசா மேடம் , வல்லிம்மா, கோ.அ மேடம் போன்ற பெரியவர்களின் ஆசி எங்கள் எல்லோருக்கும் தேவை.
வருகைக்கு நன்றி ஜிஎம்பி சார். என்ன எல்லா செய்முறைகளும் எளிது என்று சொல்லிட்டீங்க? சிலவற்றைச் செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும். அப்போதுதான் என்னடா.. இப்படி பெண்களை வேலை வாங்கும் சாப்பாட்டு ஐட்டங்கள் இருக்கிறதே என்று தோன்றும். என் பெர்சனல் ஒபினியன், பெண்களை அடுப்படி வேலைக்கு என்று சொல்லி ரொம்ப எக்ஸ்பிளாய்ட் பண்ணிட்டோம் என்பதுதான்.
பதிலளிநீக்குவாங்க அசோகன் குப்புசாமி. வருகைக்கு நன்றி
பதிலளிநீக்குவாங்க தில்லையகத்து கீதா ரங்கன். உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குஎங்க ஊர்க் காரவுக. அதுனால நான் உபயோகிக்கும் வார்த்தைகள்தான் உபயோகிக்கிறீங்க.
இந்த 'விளம்புதல்' என்பதை 5-6 வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் என் உறவினரைப் பார்க்கச் சென்றிருந்தபோது அந்த வீட்டில் இருந்தவர் உபயோகித்தார். (விளம்பு-சொல் என்பது தமிழ் அர்த்தம்). பிறகுதான் பரிமாருவதை 'விளம்புதல்' என்று சொல்கிறார் என்பது புரிந்தது. (ஆமாம். நீங்கள் இருந்த திருவனந்தபுரம்தான் ஹி ஹி ஹி)
உங்கள் மெதடும் (ப.மி சேர்க்காமல்) சரிதான். அதுவும் நன்றாகத்தான் இருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கமலா ஹரிஹரன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியிருக்கும் ரவாப் பொங்கல் செய்முறையும் எ.பிவுக்கு எழுதணும்னு ரொம்ப நாளா நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கு என்னைப் பொறுத்தவரை, கார எலுமிச்சை ஊறுகாய் ரொம்ப நல்லா இருக்கும். மாங்காய் பச்சிடிதான் இரண்டு நாட்களுக்கு முன் சாப்பிட்டிருப்போமே.
கீசா மேடம்... மீள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குஎனக்கு என்னவோ இந்த காய்கறி உப்புமா பிடிப்பதேயில்லை. உப்புமாவும் பிடிக்காது. எங்கள் ஸ்கூல் ஹாஸ்டலில், விடுமுறைக்கு (எந்த விடுமுறையானாலும்) பிறகு ஹாஸ்டல் திறக்கும் அன்று காலை உப்புமாதான். கொஞ்சம் விரை விரையாக மேலே ஜீனி தூவி இருக்கும். எனக்கு அது மிக மிகப் பிடிக்கும். அதுக்காகவே நான் ஹாஸ்டலுக்கு முந்தைய இரவே வந்துவிடுவேன்.
ஹோட்டலில் வந்து உட்கார்ந்துகொண்டு, உப்புமா ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களைக் கண்டால் எனக்கு சிரிப்பா இருக்கும். ஒரு உப்புமா வீட்டில் செய்ததில்லையா என்று.
உணவுதானே காலா காலத்துக்கும் அம்மாவை நினைவுகூறவைப்பது.
///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குஎன் பாஸ் கிட்ட இப்போ இதைப் படிச்சுக்க காமிச்சேனா,//
இதை எல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் காட்டுறீங்க:) ஆனா அனுக்காவை மட்டும்:)).. சரி வாணாம் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).
ஏஞ்சலின் - வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குஇதை வெண்டை மோர்க்குழம்புன்னு சொல்லிட்டீங்களே--கர்ர்ர்ர்ர்ர்ர்
எனக்கு மோரில் செய்யும் எல்லாமே மிகவும் பிடிக்கும். சமீப காலமாக, மோர்க்குழம்பு கடைகளில் நான் நினைப்பதுபோல் நன்றாக இல்லைனா வெறுப்பா இருக்கும் (போய் செஃப்க்கு சொல்லிக் கொடுக்கலாமா என்று)
கீதா ரங்கன் - புத்தாண்டு தினத்தன்று, அடையாறு பத்மநாபர் கோவிலுக்கு முன் ஒரு வேனில் நெல்லையிலிருந்து வந்து கருப்பட்டி, சுக்குக் கருப்பட்டி, பனம்கல்கண்டு விற்றுக்கொண்டிருந்தார்கள் (நெல்லைக் காரர்கள் என்பதால் நான் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். என்ன கிலோ 280 ரூ என்று கருப்பட்டியைச் சொல்றீங்களே.. எனக்குக் கட்டுப்படியாகுமா என்று). அவர்கள் 10 நாட்களுக்குள் விற்றுவிட்டு, திரும்பவும் நெல்லை சென்று (ஆழ்வார் திருநகரி) திரும்புவோம் என்று சொன்னார்கள். (உடனே நான், உங்களுடன் வேனில் ஆழ்வார்திருநகரிக்கு வந்து திரும்பவேண்டும் என்று தோன்றுகிறது என்று சொன்னேன். ஏற்கனவே வீட்டில் 4 கிலோ உடன்குடி கருப்பட்டி வைத்திருந்தாலும், எங்க ஊர்க் காரங்க என்று 1/2 கிலோ கருப்பட்டி வாங்கினேன் (மனைவி-கர்ர்ர்ர்ர்ர்ர்)
பதிலளிநீக்குஅதிரடி அதிராவின் (ஏன்னா... சத்தப் பொறுங்கோ என்று எங்களுக்கு கட்டளை இட்டதுக்காக) வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குஎனக்கு இனிப்பு ரொம்பப் பிடிக்கும். சென்னைக்கு வந்த 10 நாட்களில் 3 கிலோ எடை அதிகரித்துவிட்டது என்று ரொம்ப வருத்தம். என் மனைவி, அங்கு உடல் நிலை சரியில்லை, இப்போ முன்னேற்றம், அதுனாலதான் எடை அதிகரிப்பு என்று சொல்றா)
நன்றி அதிரா... மீண்டும் கன காலம் சென்று ஒரு இடுகை போட்டிருக்கீங்க. தொடருங்கள்.
அதிரா - இதில் மோரைச் சூடு பண்ணுவதில்லை.
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜு சார். நீங்கள் பயணத்தில் இருக்கீங்கன்னு தெரியும். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅதிரா - ஆனா அனுக்காவை மட்டும்: - உங்களுக்கு ஏன் இந்தக் கொலை வெறி... (அதுவும்தவிர, ஒவ்வொருவருக்கும் -- ஆண்களுக்கு நடிகைகளையும் பெண்களுக்கு நடிகர்களையும் பிடிக்கும்.. இதில் என்ன தவறு இருக்கு?)
பதிலளிநீக்குஅதிரா - பிறன் மனை நோக்காப் பேராண்மை - இது அவங்களுக்கு திருமனம் ஆனபின்புதானே அவங்க பிறருடைய மனைவி ஆவாங்க. எப்படி என் லாஜிக்? ஹா ஹா ஹா
பதிலளிநீக்கு///நெ.த. said...
பதிலளிநீக்குஎனக்கு இனிப்பு ரொம்பப் பிடிக்கும். சென்னைக்கு வந்த 10 நாட்களில் 3 கிலோ எடை அதிகரித்துவிட்டது என்று ரொம்ப வருத்தம். என் மனைவி, அங்கு உடல் நிலை சரியில்லை, இப்போ முன்னேற்றம், அதுனாலதான் எடை அதிகரிப்பு என்று சொல்றா)//
ஹா ஹா ஹா உங்களுக்கு உடம்பில் வருத்தம் இல்லை.. தனிமைதான் காரணம்.. இப்போ குடும்பத்தோடு இருப்பதால் சந்தோசத்திலேயே அதிகம் சாப்பிடுவீங்க.. இன்னொன்று கவனிச்சீங்களோ? நமக்கு நமக்கு என ஒரு குறிப்பிட்ட வெயிட் இருக்கு... அது நாம் எப்படிக் கஸ்டப்பட்டுக் குறைச்சாலும் குறையும் ஆனா கொஞ்சம் டயட் ஐ லூஸ் பண்ணிட்டால் திரும்ப அந்த வெயிட்டுக்கு வந்திடும்..
அதேபோல ஏதும் கொட்டாங்களில் கொஞ்ச நாட்கள் சாப்பிட்டால் 2,3 கிலோ ஏறும் ஆனா பின்பு திரும்ப பழைய நிலைமைக்கு வந்திடும்...
///நெ.த. said...
பதிலளிநீக்குஅதிரா - ஆனா அனுக்காவை மட்டும்: - உங்களுக்கு ஏன் இந்தக் கொலை வெறி... (அதுவும்தவிர, ஒவ்வொருவருக்கும் -- ஆண்களுக்கு நடிகைகளையும் பெண்களுக்கு நடிகர்களையும் பிடிக்கும்.. இதில் என்ன தவறு இருக்கு?)///
ஹா ஹா ஹா இண்டைக்கு அனுக்கா எனில் நாளைக்கு தமனாவைச் சொல்லி உங்களையும் மாட்டி விட்டிட்டாலும் எனத்தானே டென்ஷன் ஆகிறீங்க:)) ஹா ஹா ஹா... அதெல்லாம் தப்பே இல்லை.. நல்லா ரசியுங்கோ:))...
ஆரூஊஊஊஊஊ எப்போ இதெல்லாம் தவறு எனச் சொன்னாக?:)) நெருப்பெனில் வாய் வெந்திடுமோ:)) ஹையோ ஹையோ:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ என்பக்கம் ஓடப்போறேன்ன்ன்:)).
///நெ.த. said...
பதிலளிநீக்குஅதிரா - பிறன் மனை நோக்காப் பேராண்மை - இது அவங்களுக்கு திருமனம் ஆனபின்புதானே அவங்க பிறருடைய மனைவி ஆவாங்க. எப்படி என் லாஜிக்? ஹா ஹா ஹா//
இது யூப்பர்ர்ர்ர்ர்:) ஆனா அவிங்களுக்குக் கலியாணம் ஆகிடக்கூடா என மட்டும் வைரவருக்கு நேர்த்தி வச்சிடக்கூடா:))
வெண்டைக்காய் பச்சடி ப்ரமாதம்.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் இதை மோகிப்பவன் நான்தான். வெண்டைக்காய் மோர்க்குழம்பு மூலமாக வந்து சேர்ந்தாலும் பிடிக்கும்! சின்னவயதில் பச்சையாக நிறையத் தின்றிருக்கிறேன்..
ஏகாந்தன் சார்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குஆஹா.. வெண்டைக்காய் பிரியரா? அதுதான் உங்களை சிறப்பான வேலைகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறதா? ஹா ஹா ஹா
அதிரா - ஆனா அவிங்களுக்குக் கலியாணம் ஆகிடக்கூடா - அருமையா எழுதியிருக்கீங்க. செம சிரிப்பு. ஆனால், 'கமன்னா' என்று இன்னொரு அழகி சினிமா ஃபீல்டுல வந்துட்டா, நாங்க புது வரவுக்குத் தாவிடுவோமில்ல. இது எப்படி இருக்கு?
பதிலளிநீக்குஅதிரா - உங்க கான்சப்ட், வெயிட் பற்றி - இதைத்தான் என் மனைவியும் சொல்லி, உங்களுக்குன்னு ஒரு ஆப்டிமம் வெயிட் இருக்கும். சும்மா ரொம்பவும் குறைத்துவிடக்கூடாது என்று சொல்கிறாள். நன்றி.
பதிலளிநீக்கு@நெ.த: உங்கள் மனைவி மற்றும் அதிரா சொல்வதில் அர்த்தம் உள்ளது. ஒரேயடியாக வெயிட்டைக் குறைத்தல் ஆபத்தானது. சிலரின் உடம்பு வாகு -கொஞ்சம் பூசினாற்போலிருக்கும். அதை அப்படியே விட்டுவிடுதல் அல்லது மிஞ்சிப்போனால் ஒரு 4-5 கிலோ இறக்குவதோடு நிறுத்திக்கொள்ளல் நல்லது. இறக்குகிறேன் பார் என்று உடம்பை ஒரேயடியாகச் சீண்டினால், பின் அது சிலவேலைகளைக் காண்பிக்கும். அது நல்லதுக்கில்லை!
பதிலளிநீக்கு///நெ.த. said...
பதிலளிநீக்குஅதிரா - உங்க கான்சப்ட், வெயிட் பற்றி - இதைத்தான் என் மனைவியும் சொல்லி, உங்களுக்குன்னு ஒரு ஆப்டிமம் வெயிட் இருக்கும். சும்மா ரொம்பவும் குறைத்துவிடக்கூடாது என்று சொல்கிறாள். நன்றி.///
அவவும் மீயும் மனக் கருத்தில் ஒத்துப் போபவர்களாக இருக்கிறோம்.. அவவும் 4ம் நம்பராக இருப்பாவோ?:))).. ஹா ஹா ஹா.
//நெ.த. said...
பதிலளிநீக்குஅதிரா - ஆனா அவிங்களுக்குக் கலியாணம் ஆகிடக்கூடா - அருமையா எழுதியிருக்கீங்க. செம சிரிப்பு. ஆனால், 'கமன்னா' என்று இன்னொரு அழகி//
என்னாது கமன்னா என்றொரு புது வரவா?:) ஹையோ லபக்கென முந்திடுங்கோ:)) இல்லை எனில் ஸ்ரீராம் முத்திரை பதிச்சிடுவார்:)) ஹா ஹா ஹா..
மழைக்கும் முளைக்கும் காளான்கள்போல அடிக்கடி முளைக்குதே:)) நாங்களும் ஓடி ஓடி எத்தனை காளான்களைத்தான் பிடுங்கி எறிவதாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
இன்னிக்கு 5 மணிக்கே போஸ்ட் வந்தாச்சான்னு பார்க்க வந்தேன்..... ஹாஹா.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
மகளுக்கு வாழ்த்துகள் நெல்லைத் தமிழன்.
பதிலளிநீக்குவெண்டைக்காய் பொரியல் கொழகொழன்னு இல்லாம இருக்க ஒரு டெக்னிக் இருக்கு. எங்கள் பக்கத்தில் ஏற்கனவே எழுதி இருக்கான்னு பார்த்து சொல்றேன்.
//வெண்டைக்காய் பொரியல் கொழகொழன்னு இல்லாம இருக்க ஒரு டெக்னிக் இருக்கு. எங்கள் பக்கத்தில் ஏற்கனவே எழுதி இருக்கான்னு பார்த்து சொல்றேன்.//ஆமா. இல்ல! :)
பதிலளிநீக்குஇன்னுமா ஆறு ஆகலை? இங்கே ஆயிடுச்சே!
பதிலளிநீக்குமூணு நிமிஷம் ஸ்லோ!
பதிலளிநீக்குதில்லி வெங்கட் - அதுக்கு கொஞ்சம் அதிக எண்ணெய் விட்டு வறுக்கணுமா? இல்லை வேறு தெக்கினிக்கு இருக்கா?
பதிலளிநீக்குபடங்களுடன் சிறந்த வழிகாட்டல்
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன் - எங்க பெரியம்மா சொல்லிக் கொடுத்த விதம் அது - வெண்டைக்காயை நறுக்கிய பிறகு அதில் கொஞ்சம் அரிசி மாவும், கொஞ்சம் கடலை மாவும் தூவி கலந்து வைப்பார்கள். பிறகு எண்ணை விட்டு [கொஞ்சம் தாரளமாக!] வதக்கும் போது கொழகொழவென்று இல்லாமல் மொறுகலாக, தனித்தனியாக வரும். அரிசி மாவு, கடலை மாவுக்கு பதிலாக பஜ்ஜி-போண்டா மிக்ஸ் கிடைப்பதைத் தூவியும் செய்யலாம்.
பதிலளிநீக்குநான் அப்படித்தான் செய்கிறேன்.
நன்றி ஜீவலிங்கம்.
பதிலளிநீக்கு