புதன், 11 ஏப்ரல், 2018

பு கே ப 180411 :: ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் என்ன வித்தியாசம்?


மீண்டும் சொல்லிவிடுகிறேன், நகைச்சுவைதான் எங்கள் பதில்களில் முக்கிய அம்சம். யார் மனதையும் புண்படுத்துவது அல்ல!


ஆமாம் ஆமாம் !
நகை சுவைக்கு முன்னுரிமை!



வாட்ஸ் அப் கேள்விகள்: 


அப்பாதுரை:


யெ அனுசுகா தமன்னா கோன் ஹை?

ப : கோன் ஐஸ் , குச்சி ஐஸ்

கலிலூர் ரஹ்மான் : 


1.ரவை இட்லி், அரிசி இட்லி, ராகி இட்லி சுவையில், ஆரோக்கிய வரிசை படுத்தவும்.?


ப : 
அ ர ரா : சு 

ரா ர அ : ஆ 



2.லட்டு எத்தனை வகைகள் உள்ளன?

ப: எவ்வளவு இருந்தாலும் லட்டு என்றால் நினைவுக்கு வருவது பூந்தியில் பிடிக்கும் லட்டுதான்.


3. பூந்தி - ல லட்டு செய்யலாம் , லட்டில் பூந்தி செய்யமுடியுமா?!

ப: லட்டைத் தட்டினா பூந்தியாயிடும்.


4.சம்பா - சீரக சம்பா எதில்  என்னனென சமைக்கலாம்?


ப: எல்லாவற்றிலும் சோறுதான் சமைக்கமுடியும் என்று நினைக்கிறேன். 


5. அடைகள் பற்றி குறிப்புகள் வரைக?

ப: இதோ வரைஞ்சிட்டேன் !



ஏதோ ஒரு ஆசிரியர்: 

வாட் இஸ் திஸ் ப்ராடக்ட்? 


ப: இதற்கு, வாசகர் பதில்கள் வரவேற்கப்படுகின்றன!


நெல்லைத்தமிழன்:


சும்மா இருக்கீங்கன்னு ஏதேனும் குழந்தைக்கு பால் புகட்டிவிடச் சொல்லிட்டாங்களா?

ப: நான் பால் புகட்டினால், எந்தக் குழந்தையும் சும்மா இருக்காது! 

பதிவில் கேட்கப்பட்ட கேள்விகள்:

துரை செல்வராஜு:

இட்லியும் தோசையும் ஒன்றா?..

ப: இல்லை! இரண்டு.

பானுமதி வெங்கடேஸ்வரன் :

எந்த தைரியத்தில் எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஓப்புக் கொண்டீர்கள்?  

ப:  பதில் தெரியாத கேள்விகளே இல்லை என்ற தைரியத்தில்தான்! 

ராஜி: 

இனி, தினத்தந்தில குருவியார் பதில்கள் மாதிரி கிசுகிசுலாம் வருமா?!  

ப : கிசு கிசு க்கு பெயர் போனவர் கு ரு வி அல்ல ; வேறொரு நான்கெழுத்துப் பத்திரிக்கை. 

அதிரா :

அங்கே பாருங்கோ ஸ்ரீராமும் நெல்லைத்தமிழனும்.. கண்பட்டதோ மனம் புண்பட்டதோ.. ஆரு அழகு எனும் கேள்வியைக் கேட்டவுடன்... அவர்கள் மனம் பட்ட பாட்டை ஆரறிவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?

ப: 



எங்கள் புளொக்கில் புதன் அழகா? விசாளன்:) அழகா?:)

ப:  எல்லாமே! 

கெள அண்ணனின் முன்னாள் காதலி என்ன ஆனா?:)

ப: ஒண்ணா , ரெண்டா!  பாதிக்கு மேல செத்துட்டாங்க! 

நீங்க அதிகம் விரும்புவது வதனப்புத்தகமோ? Blogs ஓ?

ப: வதனப்புத்தகம் சந்தைக்கடை. Blogs அழகிய பூங்காக்கள். எனக்குப் பிடித்தது பூங்காக்கள்தான்.
ஏஞ்சல் : 


எங்கள் பிளாகின் வயது ?

ப: இன்னும் இரண்டு இலக்கங்கள் எட்டவில்லை!
சித்தப்பா இப்போ எங்கே இருக்கிறார் ?

ப: டிக்கெட் வாங்கிட்டார்.
இன்ஸ்டன்ட் காப்பி சுவையா இல்லை டிக்காஷன் காப்பி சுவையா ?


ப: சோம்பேறிகளுக்கு இ கா. மற்றவர்களுக்கு டி கா. (எனக்கு இ கா )

               
வல்லி சிம்ஹன்: 

தமன்னா ஐபிஎல்லில் ஆடப் போகிறாராமே.. எத்தனை சம்பளம்.?

ப: ஏற்கெனவே ஐஸ்வர்யா அமெரிக்கால ஆடினதைப் பார்த்து அரண்டு போயிட்டோம். எதுக்கு வம்பளம் !!! 

அவர்கள் உண்மைகள்: 

சரி இந்த வார கேள்வி: மனைவி ஆகாத காதலிகள் ஸ்ரீராமிற்கு உண்டோ? விடமட்டோம்ல ஹீஹீ

ப: எல்லோருமே மனைவி ஆயிட்டாங்க ! 

நல்ல எண்ணத்துடன் கனவுகள் கண்டால் அது பலிக்குமாமே? அப்படியென்றால் நல்ல எண்ணத்துடந்தான் நான் நயந்தாராவை பற்றி கணவுகள் காண்கிறேன் அது மட்டும் ஏன் நடக்க மாட்டேங்கிறது?

ப: இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டிலிருந்து இலட்சக் கணக்கானோர் நல்ல எண்ணக்கனவுகள் கண்டு வருகிறார்கள். நீங்க வெயிட்டிங் லிஸ்ட்.


பார்த்து பார்த்து ஹெல்த்தியா சாப்பிடும் பெண்கள் மிக குண்டாகவும்( ஏஞ்சல் & அதிரா பற்றி சொல்லவில்லை..அப்பாடி தப்பித்தோம்) அப்படி இல்லாமல் சோற்றை விட்டால் மூன்று வேளை சாப்பிடும் ஆண்கள் ஒல்லியாக இருப்பது ஏன்?  

ப: அப்படியா? 




நாம் அழுக்கு போக குளிக்கிறோம் அதன் பின் சுத்தமான துண்டால் உடம்பை துடைத்துவிட்டு பின் அதை அழுக்கு துண்டு என்று சொல்லுவது ஏன்? ஒரு வேளை குளித்தால் உடல் அழுக்குதான் போகும் ஆனால் மன அழுக்கு போகாது அதனால் அப்படி சொல்லி இருப்பார்களோ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப: துண்டால் துடைப்பது அழுக்கை அல்ல; ஈரத்தை. அழுக்குத் துண்டு அல்ல, ஈரத்துண்டு.

உங்கள் தலையால் நீங்கள் பூரிக்கட்டையை தாக்கிய அனுபவம் உண்டா?

ப : வீட்டில் பூரிக்கட்டை இல்லை.

கீதா ரெங்கன்:

சென்னையில் இம்முறை பருவ மழை வருமா? 

ப: ம் .. 

அக்னிநட்சத்திரம் என்றால் என்ன (படம் சொல்லக் கூடாது!!!) அதனை ஏன் கத்தரி வெயில் என்று சொல்லுகிறார்கள்? கத்தரி/கத்திரிக்காய்க்கும் அதற்கும் என்ன சம்பந்தம்

ப: பூமியின் பூமத்திய ரேகை சூரியனுக்கு அருகே செல்வதால் கதிரியக்கம் அதிகமாகி கதிரி என்று சொல்லியிருப்பார்கள். நாளடைவில் கதிரி, கத்திரியாகியிருக்கும். காற்று வரவில்லை என்று நீண்ட அங்கிகளை கத்தரியால் கத்தரித்து, அணிந்ததால், கத்தரி ஆகியிருக்கும்!

கத்தரி, கத்திரி எது சரி?

ப: ரெண்டுமே சரிதான்!

துளசிதரன்: 

மூளைச் சலவை என்றால் என்ன? அப்படி என்றால் மூளை வெளுத்துவிடுமா?! 

ப: மனிதர்கள் எல்லோருக்கும் இயற்கையிலேயே மூளை சலவை செய்யப்பட்டு, மடித்து வைக்கப்பட்டுள்ளது. மூளையில் பல மடிப்புகள் இருந்தால் அவர்கள் பெரும் அறிவாளிகளாக இருப்பார்களாம்!

  
  

ஏஞ்சல் :

ஸ்ரீராமுக்கு மிகவும் பிடித்த பதிவர் யார் : ?
ஒருவர் பெயர் மட்டும் சொல்லணும் :

ப: நாந்தான்! 

ஏகாந்தன் :

உம்மை ஒன்று கேட்பேன் 
உண்மை சொல்லவேண்டும்
என்னைக் கேட்கச் சொன்னால்
என்ன கேட்கத் தோன்றும்..
என்ன கேட்கத் தோன்றும் ?


ப: கடன் கேட்கத் தோன்றாமல்  இருந்தால் சரிதான்! 




ஏஞ்சல் :

அறம் அறம் ...செய்ய விரும்புபவர் யார் ?

ப: (அவ்வைப்) பாட்டி சொல்லைத் தட்டாதே என்று எண்ணுபவர்கள் . 

கீதா சாம்பசிவம் :

வித்தியாசமான புதிர்! கடைசியில் யாருங்க ஜெயிச்சது? அனுஷ்காவா, தமன்னாவா?

ப: 
ஸ்ரீ :  அனுஷ்கா  ..................  வா! come on, come on!
நெ த : தமன்னா ................  வா! come on, come on! 
    
மெயிலில் வந்த கேள்வி:

(கேட்டவர் பெயர் போடக்கூடாதாம்!)

ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் என்ன வித்தியாசம்?

ப: ஒருவர் கண்ணடித்து பிரபலமானார். மற்றவர் (முன்னாள்) கணவனால் சமீபத்தில் மேலும் பிரபலமானார். இருவருமே செப்டம்பர் மாதம் பிறந்தவர்கள். ஆனால் இருபது வருட இடைவெளி! 




சென்ற வாரம் பிடிக்காத பதிவர் காசு சோபனா என்று சொல்லியிருந்தீர்கள்: பிடித்த பதிவர் யார்?

ப: காசு சோபனா. 

________________________________________________

கேள்வி பதில் பகுதிக்கு கேள்வி அனுப்பியவர்கள், பாராட்டு தெரிவித்தவர்கள், வாழ்த்தியவர்கள் எல்லோருக்கும் .......   





   

87 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. கணினி படுத்துகிறது!

    பதிலளிநீக்கு
  3. கீதா ரெங்கனைக் காணோம்.. அவர் மொபைல் வழி வருபவர்! காலை வணக்கம் இந்த அட்வான்ஸ் கீதா ரெங்கன், கீதா அக்கா, பானு அக்கா..

    பதிலளிநீக்கு
  4. இந்த அளவுக்கு ஆகும்...ந்னு நெனைக்கலையே!.....

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா பானுக்கா எல்லோருக்கும்

    ஸ்ரீராம் காலைல வந்து எபி யை வழக்கம் போல தட்டிப் பார்த்தேன்....பதிவு வந்திருக்கவில்லை....அப்புறம் வழக்கமான கடமைகள்...கண்ணழகியுடன் சிறிய வாக்கிங்க், சமையலில் விட்டவைதொட்டவை எட்ஸட்ரா....

    ஆனால் துரை அண்ணாவின் கமென்ட் பார்த்தால் 6.01 க்கு வந்திருக்குது. நானும் என் கணினியில் 6.01 வரை தட்டிப் பார்த்துட்டுப் போனேன்...ம்ம்ம் இனி தெரிஞ்சுருச்சு வந்துருவேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இனிதான் பதிவு வாசிக்கணும்....அப்பால வரேன்...அடுத்த கடமை எல்லாம் ஆத்திட்டு...சூரியன் தன் அதீத நெற்றிக்கண்ணைத் திறப்பதற்குள் என் நடையைமுடித்துவிட்டு வரேன்...ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இன்டெரெஸ்டிங் பகுதியா புதன் மாறி வருகிறது. என் ஆலோசனை, 20 கேள்வி பதில் போதும். தமன்னா பற்றிக் கேள்விகளுக்கு ஶ்ரீராம் பதில் சொல்லத் தடா போடுங்கள் (இப்போல்லாம் தமன்னாவை நினைத்தால் மேக்கப் போடாத அவர் முகம் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது).

    கீதா ரங்கன் - ஆபாசக் கேள்விகள் கேட்காதீங்க. எல்லா ஊர்களிலும் பெண்கள் கல்லூரி, ஸ்கூல்கள் இருப்பதால் எல்லாவருடமும் பருவமழைதான்.

    பதிலளிநீக்கு
  8. அது சரி, இந்தக் கேள்விகளை எல்லாம் வேலை மெனக்கெட்டுச் சேர்த்து வைத்துப் போடறதை விட்டுட்டுப் புதுசாக் கேள்விகளைக் கேட்கலாமே! அதுக்கு வர பதில்களில் இருந்து அடுத்த வாரக் கேள்விகளைத் தயாரிக்கலாம். என்ன சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம்! முதல் கேள்வியே ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. வரேன் வரேன் சாவகாசமாக வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. வாரியர்னு சொன்னதும் மருத்துவரோனு நினைச்சேனே! அவர் இல்லையா? யார் இந்தக் கண்ணழகி ப்ரியா வாரியர்? ஆரிய வைத்தியசாலையில் இருக்காரா? :P :P :P

    பதிலளிநீக்கு
  11. இதுவும் நல்லாத்தான் இருக்கு...

    பதிலளிநீக்கு
  12. தமன்னா பற்றிக் கேள்விகளுக்கு ஶ்ரீராம் பதில் சொல்லத் தடா போடுங்கள் (இப்போல்லாம் தமன்னாவை நினைத்தால் மேக்கப் போடாத அவர் முகம் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது).//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ செமையா சிரிச்சுட்டேன் நெல்லை...

    அபப்டினா அனுஷ் பத்தி நீங்க கன்னாபின்னானு கேள்வி எல்லாம் கேட்கப்படாது...ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  13. கீதா ரங்கன் - ஆபாசக் கேள்விகள் கேட்காதீங்க. எல்லா ஊர்களிலும் பெண்கள் கல்லூரி, ஸ்கூல்கள் இருப்பதால் எல்லாவருடமும் பருவமழைதான்.//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா யம்மாடியோவ்...நெல்லை ஆஹா நான் நல்ல புள்ளையா கேட்டா....இப்படியா!! பதில் ஹா ஹா ஹா....செம ஃபார்ம்ல இருக்கீங்க போல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. கீதா ரெங்கனைக் காணோம்.. அவர் மொபைல் வழி வருபவர்!//

    ஸ்ரீராம் இப்ப என் கணினி ரொம்பச் சமர்த்தாயிடுச்சே!!! இணையமும்...அதனால கணினி வழிதான் பெரும்பாலும்...இப்ப உங்க கணினி மீண்டும் படுத்தத் தொடங்கியிருக்கா....வெக்கை தாங்கலையோ பாவம் அதுவும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. இப்போது இங்கு இரவு நேரமாகிவிட்டதால் காலையில் வந்து அடுத்தவாரத்திற்கான கேள்விகள் கேட்கிறேன் நிறைய கேள்விகள் வரும் தயாரக இருங்கள்

    பதிலளிநீக்கு
  16. நெல்லை கவனிச்சீங்களா தமனா குச்சி ஐஸாம்/.....அப்புடியா?!!! ஹா ஹா ஹா..நெல்லையை ஏம்பா இப்படி டென்ஷனாக்குறீங்க ஹா ஹா ஹா ஹா...ஏற்கனவே மேக்கப் இல்லாத தமனா படம் போட்டு...அவர் டென்ஷனாகி......ஒல்லியாக இருந்தாலும் குச்சி குல்ஃபினு சொல்லிருக்கலாமோ?!! ஹிஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. அந்த ப்ராடக்ட் ஏதோ கஞ்சி பௌடரோ இல்லை cereal ரெடிமேட் ஆக இருக்கணும்

    கீதா

    பதிலளிநீக்கு
  18. ப்ரியா வாரியார், மஞ்சு வாரியார் கேள்விக்கு,

    சின்னவர் கண்ணடித்துப் பிரபலமானார். சீனியர், தன் கணவனைக் கண்டித்துப் பிரபலமானார். இருவரும் கண்களால் புயலைக் கிளப்பியவர்கள் என்பதில் சந்தேகமில்லை ஹிஹிஹி

    என்று பதில் சொல்லியிருக்கலாமே. எல்லாம் அரசு டிரெயினிங்தான்.

    பதிலளிநீக்கு
  19. வல்லிசிம்ஹன் - தமன்னா ஐபிஎல்லில் ஆடப்போகிறாராமே. எவ்வளவு சம்பளம்?

    நவீன அரசு- 15 நிமிடம், ஆட 50 லட்சம் என்று சொன்னால் நீங்கள் அமௌன்டை எண்ணி வாயைப் பிளக்கிறீர்களா இல்லை ஆட்டத்தைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா என்று பக்கத்தில் உட்கார்ந்திருப்பவருக்குத் தெரியுமா?

    பதிலளிநீக்கு
  20. தமன்னா கேள்விக்கு பதிலும் சரியில்லை. அம்பேரிக்காவில் ருத்ரதாண்டவம் ஆடியது ஐஸ்வர்யா தனுஷ். அல்லித் தண்டுத் தமன்னாவை அந்த அம்மாவோடு கம்பேர் பண்ணினீங்கன்னா, நீங்க பாகுபலி பார்க்கலை போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  21. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்யலாம்,

    பாயாசம் செய்யலாம்.. செமயா இருக்கும்

    பதிலளிநீக்கு
  22. தமன்னாவை கிண்டலடிப்பதை நீங்களும் விடலியா

    பதிலளிநீக்கு
  23. கல்யாணிக்கும் பூர்வி கல்யாணிக்கும் (ராகங்கள், பெண்களைத் தேடாதீர்கள்) உள்ள வித்தியாசம் கரண்டிக்கும் பாதாள கரண்டிக்கும் உள்ள வித்தியாசமா?

    ஐபிஎல் மேட்சில், நீங்கள் முதலிலேயே ஒரு சைடுக்கு ஆதரவாக பார்க்க ஆரம்பிப்பீங்களா இல்லை மேட்சை மட்டும் ரசிப்பீங்களா?

    முன்னைவிட இப்போ நிறைய பிரபலங்கள் கட்சி ஆரம்பித்திருக்காங்களே... உங்களுக்கு யார் வருவான்னு தோணுது? உங்க சாய்ஸ் யாரு?

    வேலை மெனக்கெட்டு ஏகப்பட்ட அடை படங்களைப் போட்டிருக்கீங்களே. இது எங்கள் தகவலுக்கா அல்லது உங்கள் கிச்சன் இன்-சார்ஜ் தகவலுக்கா?

    எப்போவாவது தவறுதலா வாக்கு போட்டிருக்கீங்களா (இவருடைய சின்னம் என்று நினைத்து அவசரத்தில் மாத்திக் குத்தி)? அப்போ உங்கள் மன நிலை எப்படி இருந்திருக்கும்?

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம் 'அனுஷ்காவை' ரசிப்பதற்கும், சிலர் 'தமன்னா'வை ரசிப்பதற்கும், ஏதாவது பூர்வ ஜென்ம பந்தம் இருக்குமா? ('நான் நமக்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று நம்புகிறேன்-ஸ்ரீராம்-ஆன்மீகம்4டம்மீஸ்)

    பதிலளிநீக்கு
  25. கேள்வி பதில்கள் நன்றாக இருக்கிறது.
    ரசிக்க வைத்தது.
    அடுத்தவாரம் வேறு மாதிரி கேள்வி , பதில்கள்தானே?

    பதிலளிநீக்கு
  26. //நகை சுவைக்கு முன்னுரிமை! ///

    நகைச்சுவைக்கு முன்னுரிமை கொடுத்தால்.. வாழைப்பூத்தேன் மருந்து..:)

    பெண்டனில B இருக்கே.. அப்போ அது பாவனாவோ?:).

    பதிலளிநீக்கு
  27. //
    நெல்லைத்தமிழன்:


    சும்மா இருக்கீங்கன்னு ஏதேனும் குழந்தைக்கு பால் புகட்டிவிடச் சொல்லிட்டாங்களா?

    ப: நான் பால் புகட்டினால், எந்தக் குழந்தையும் சும்மா இருக்காது! //

    ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  28. //
    அங்கே பாருங்கோ ஸ்ரீராமும் நெல்லைத்தமிழனும்.. கண்பட்டதோ மனம் புண்பட்டதோ.. ஆரு அழகு எனும் கேள்வியைக் கேட்டவுடன்... அவர்கள் மனம் பட்ட பாட்டை ஆரறிவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?//

    ஹா ஹா ஹா இந்தக் கேள்விக்கு மேலோகம் போனவர்கள் எல்லாம் வந்து பதில் சொல்லீனமே கடவுளே... அங்கு வரை பரவிடுச்சா அனுக்கா தமனாக்கா புகழ்:))

    பதிலளிநீக்கு
  29. ///
    கெள அண்ணனின் முன்னாள் காதலி என்ன ஆனா?:)

    ப: ஒண்ணா , ரெண்டா! பாதிக்கு மேல செத்துட்டாங்க! ///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கெள அண்ணனின்.. கரம் பற்ற முடியாத கவலையில.. பாதியில மேலோகம் போயிட்டினமோ:))

    பதிலளிநீக்கு
  30. //சரி இந்த வார கேள்வி: மனைவி ஆகாத காதலிகள் ஸ்ரீராமிற்கு உண்டோ? விடமட்டோம்ல ஹீஹீ

    ப: எல்லோருமே மனைவி ஆயிட்டாங்க !///

    ஹா ஹா ஹா ஆருக்கு மனைவி ஆகிட்டாங்க?:) ஹையோ நேக்கு லெக்ஸும் ஆடல்ல காண்ட்சும் ஓடல்ல:)).. இதில வேற அனுக்காவும் கேட்குதாமோ அவருக்கு?:)).. இதுதானாக்கும் கட்டிலுக்குக் கீழ போனவர் வெளியே வரவே இல்லை இன்னும்:)).

    //
    ப: மனிதர்கள் எல்லோருக்கும் இயற்கையிலேயே மூளை சலவை செய்யப்பட்டு, மடித்து வைக்கப்பட்டுள்ளது. மூளையில் பல மடிப்புகள் இருந்தால் அவர்கள் பெரும் அறிவாளிகளாக இருப்பார்களாம்!///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கின்னஸ் புத்தகத்தில் எழுதி.. கீழே கண்டுபிடிப்பும் கண்டுபிடித்தவரும் கெள அண்ணன் எனப் போடோணும்:))

    பதிலளிநீக்கு
  31. //ஸ்ரீராமுக்கு மிகவும் பிடித்த பதிவர் யார் : ?
    ஒருவர் பெயர் மட்டும் சொல்லணும் :

    ப: நாந்தான்! //

    ஓ நாந்தான்:)) ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  32. ///நெ.த. said...
    . தமன்னா பற்றிக் கேள்விகளுக்கு ஶ்ரீராம் பதில் சொல்லத் தடா போடுங்கள்///

    ஹா ஹா ஹா என்னா பொறாமை:)) நான் அன்றே ஜொன்னேனே தமனாவை டச்சுபண்ண ஸ்ரீராமுக்கு தடா என:).. அவரும் அனுக்கா போதுமென இருக்கலாம்தானே பிறகெதுக்கு இடைக்கிடை நெ.தமிழனின் தமனாக்காவையும் சுரண்டுறார்:)) கர்ர்ர்ர்ர்:)... நெல்லை.த ஏற்கனவே டென்ஷனில் இருக்கிறார்:)

    பதிலளிநீக்கு
  33. //Geetha Sambasivam said...
    அது சரி, இந்தக் கேள்விகளை எல்லாம் வேலை மெனக்கெட்டுச் சேர்த்து வைத்துப் போடறதை விட்டுட்டுப் புதுசாக் கேள்விகளைக் கேட்கலாமே! அதுக்கு வர பதில்களில் இருந்து அடுத்த வாரக் கேள்விகளைத் தயாரிக்கலாம். என்ன சொல்றீங்க?//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீசாக்கா சத்துப் பேசாமல் இருங்கோ.. இப்போதான் கொஞ்சம் ஒழுங்கான ட்ரக் ல போகுது புதன்கிழமை:) புதுசா ஐடியாக் குடுக்கிறேன் எனக் குழப்பாமல் கன்னாபின்னா எனக் கேள்வியாக் கேட்டு மடக்கிற வழியைப் பாருங்கோ?:)

    பதிலளிநீக்கு
  34. வீடியோ அன் அவைலபில்னு வருது! காலைலேருந்து பார்க்க முடியலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    பதிலளிநீக்கு
  35. ///நெ.த. said...
    தமன்னா கேள்விக்கு பதிலும் சரியில்லை. அம்பேரிக்காவில் ருத்ரதாண்டவம் ஆடியது ஐஸ்வர்யா தனுஷ். அல்லித் தண்டுத் தமன்னாவை அந்த அம்மாவோடு கம்பேர் பண்ணினீங்கன்னா, நீங்க பாகுபலி பார்க்கலை போலிருக்கு.///

    ஹா ஹா ஹா ஒரு மனிசன் எவ்ளோ நேரம்தான் பொறுக்க முடியும்:)) பொயிங்கிட்டார்:)).. இருப்பினும் குச்சியை வச்சு என்னதான் பண்ண முடியும்ம்ம்ம்ம்?:) ஹையோ மீ ஓடிடுறேன் :))

    பதிலளிநீக்கு
  36. இடியாப்பமும், சேவையும் ஒண்ணு தானா?
    ஆமவடைனா ஆமையை அரைச்சுத் தட்டுவாங்களா?
    அப்போ தவலை வடை? தவளை? அல்லது தவலை? ஹையோ! பயமா இருக்கே!
    மசால் வடை வேறே, வெங்காய வடை வேறேயா? படங்களுடன் விளக்கவும்.

    பதிலளிநீக்கு
  37. //Geetha Sambasivam said...
    வீடியோ அன் அவைலபில்னு வருது! காலைலேருந்து பார்க்க முடியலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//

    யேஸ் மீயும் சொல்ல நினைச்சேன்ன் வீடியோஒவை மாத்தோணும்.. லாஸ்ட்.

    பதிலளிநீக்கு
  38. வெயில் ஏறுனா கூல் பண்ண இதுவும் ஒரு ஐடியா பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  39. ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் இவர்களோடு கிருபானந்த வாரியாரை நகைச்சுவையாக ஒப்பிட முடியுமா?

    பதிலளிநீக்கு
  40. அதிரா- குச்சியை வச்சு என்னதான் பண்ண முடியும்ம்ம்ம்ம்? - ஐயோ... ஒரு நல்ல பெண்ணை பாராட்டியது, ரசித்தது குற்றமா? அதுக்காகவா அதிரா முதற்கொண்டு எனக்கு எதிரி ஆகிட்டாங்க? இல்லை ஒருவேளை இது ஸ்ரீராமின் வேலையா?

    பதிலளிநீக்கு
  41. அட்சய திரிதியையில் தங்கம், வெள்ளி, ப்ளாடினம் இவற்றில் எதை வாங்கப் போகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  42. என் கேள்விக்கு ரொம்பவே அறிவியல் கலந்து அறிவு பூர்வமா சொல்லியிருக்கீங்க. நன்றி எல்லா பதில்களும் ரசிக்கும்படி இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  43. ப: நான் பால் புகட்டினால், எந்தக் குழந்தையும் சும்மா இருக்காது! //

    ஹா ஹ் ஆ ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
  44. அதிரா தமனாவை குச்சினு சொல்லவே இல்லை ஆசிரியர்(கள்) குச்சி ஐஸ் நு சொல்லிருக்காங்க பாருங்க...சரி போனா போகுது ஐஸ் இல்ல குச்சி குல்ஃபி உருகிடுச்சுனா குச்சிதான் .....குச்சிய வைச்சு என்ன பண்ணலாம்னு கேக்காதீங்க குச்சியோட டான்ஸ் ஆடலாம் குச்சியை வைத்துக் கொண்டும் டான்ஸ் ஆடலாம்....ஸோ இதுக்கு அர்த்தம் நெல்லை குச்சியோடு அலல்து குச்சியை வைத்துக் கொண்டு டான்ஸ் ஆடுவார்னு நான் சொல்லலை..நீங்க அப்படி அர்த்தமெல்ல்லாம் பண்ணிக்கிட்டீங்கனா நான் பொறுப்பல்ல....ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  45. சம்பா அரிசியில் பொடித்து புட்டும் பண்ணலாமே..சம்பா பச்சரிசியில பால்பாயாசம் செய்தா செமைஅய இருக்கும் பெரும்பாலும் கேரளத்தில் அப்படித்தான் செய்யறாங்க..பத்ம்நாபர் கோயிலில் கூட...சம்பா புழுங்கல் அரிசி சாதம்...செய்யலாம் சம்பா பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசியில் தேங்காய் போட்டு அரைத்து நீர்க்கொழுக்கட்டை செய்யலாம் செம டேஸ்டா இருக்கும்

    ஜீரகசம்பா பிரியாணி (வெஜ்) செய்யலாம், கலந்த சாதம் செய்யலாம் சூப்பரா இருக்கும்...ஏன் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பாயாஸம் எல்லாமே செய்யலாம் அது ஒரு தனி டேஸ்ட்..

    கீதா

    பதிலளிநீக்கு
  46. //நெ.த. said...

    அதுக்காகவா அதிரா முதற்கொண்டு எனக்கு எதிரி ஆகிட்டாங்க?///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் எங்கே எடிரி:) ஆனேன்ன்ன்:)) ஆரம்பம் முதலே உங்களுக்கும் தமனாக்காக்கும்தானே சப்போர்ட் பண்னிக்கொண்டிருக்கிறேன்:)) இதுகூடப் புரியாமல்:) தமனா மயக்கத்தில் இருக்கிறிங்க:)) அங்கின ஸ்ரீராம் கொசுக்கடி மயக்கத்தில் இருப்பதைப்போலவேதேன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா:).

    /// இல்லை ஒருவேளை இது ஸ்ரீராமின் வேலையா?///

    ஹா ஹா ஹா எப்போ பார்த்தாலும் துவக்கை ஸ்ரீராம் பக்கமே நீட்டக்கூடா:)) பாவம் அவர் இன்னமும் கட்டிலுக்குக் கீழயே இருக்கிறார்ர்:)).. குச்சு ஐஸ் தமனாவை:)[இருங்கோ விழுந்து விழுந்து சிரிச்சிட்டு வாறேன்ன்ன்:))] ஒரே ஒரு தடவை டச்சு பண்ணியது ஒரு குத்தமா?:) எனக் கேட்டுக் கொண்டே ஒளிச்சிருக்கிறார்ர்..:)) ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)).

    ஊசிக்குறிப்பு:
    எய்தவர் இருக்க அம்பை நோகக்குடா:).. குச்சு ஐஸ் பேர் வச்சது கெள அண்ணன்:) மீ அல்ல:)).. கீழே விழுவதை எல்லாம் பொறுக்கிக் காவித்திரிவதே:) என் வேலை:))

    பதிலளிநீக்கு
  47. கீதாக்கா இடியாப்பம் சேவைக்கு வித்தியாசம் எபி ஆசிரியர்களுக்கா இல்லை நான் பதில் சொல்லலாமா..

    கீதா

    பதிலளிநீக்கு
  48. //ஸோ இதுக்கு அர்த்தம் நெல்லை குச்சியோடு அலல்து குச்சியை வைத்துக் கொண்டு டான்ஸ் ஆடுவார்னு நான் சொல்லலை..நீங்க அப்படி அர்த்தமெல்ல்லாம் பண்ணிக்கிட்டீங்கனா நான் பொறுப்பல்ல....ஹிஹிஹிஹி

    கீதா///

    இப்போ நெ.தமிழன் குச்சி ஐஸ் தமாக்காவுடன் டான்ஸ் ஆடினால் மயக்கம் வந்திடும் ஹா ஹா ஹா ஹையோ இது வேற மயக்கம்:)) என்னை இண்டைக்கு தேம்ஸ்ல தள்ளாமல் விட மாட்டினம்போல:)) மீ எங்கட டெய்சிக்குப் பின்னால ஒளிக்கப்போறேன்ன்:))

    பதிலளிநீக்கு
  49. கீதா ரங்கன் - ஜீரகசம்பா பிரியாணி (வெஜ்) செய்யலாம், கலந்த சாதம் - புதன் கிழமையை திங்கக் கிழமையா மாத்தாதீங்க. சொல்லிட்டேன்

    பதிலளிநீக்கு
  50. //ஐயோ... ஒரு நல்ல பெண்ணை பாராட்டியது, ரசித்தது குற்றமா? //

    அஆவ் !!யாரு யாரை எப்போ எங்கே ???

    பழக்கதோஷத்தில் ரிவர்ஸ் ஆர்டரில் வந்திட்டேன் ஒன்னும் புரியல்லியே ???

    பதிலளிநீக்கு
  51. வணக்கம் சகோதரரே

    அனைத்து கேள்வி பதில்களும் பிரமாதம். மிகவும் ரசித்துப் படித்தேன். கருத்துரைகளும் சுவாரஸ்யம். அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  52. //கீதாக்கா இடியாப்பம் சேவைக்கு வித்தியாசம் எபி ஆசிரியர்களுக்கா இல்லை நான் பதில் சொல்லலாமா.// அது கேஜிஜிக்கான கேள்வி! :) மெதுவா யோசிச்சுச் சொல்லட்டும்!

    கேஜிஜி ஓடிப் போற மாதிரி ஒரு கேள்வி இப்போ! ஜூன் மாசம் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் விடுமா? விடாதா?

    பதிலளிநீக்கு
  53. ஏஞ்சல் வாங்க வாங்க வாங்க.....இது கேள்வி ப்தில் ஸோ முதல்ல போய்ட்டு வாங்க...நானும் பழக்க தோஷத்தை இப்ப கொஞ்சம் மாத்திக்கிட்டேன் ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  54. கேஜிஜி ஓடிப் போற மாதிரி ஒரு கேள்வி இப்போ! ஜூன் மாசம் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் விடுமா? விடாதா?//

    ஹா ஹா ஹா ஹா கீதாக்கா இதைக் கேக்கணும்னு நினைச்சு அப்புறம் அரசியல் கேள்விகள் கூடாதுனு சொன்னதுநால விட்டுட்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  55. ஹை, இதில் அரசியல் எங்கே இருக்கு? தண்ணீர் தானே இருக்கு! கேஜிஜி சார் பதில் சொல்லணுமாக்கும்!

    பதிலளிநீக்கு
  56. கீதா ரங்கன் - ஜீரகசம்பா பிரியாணி (வெஜ்) செய்யலாம், கலந்த சாதம் - புதன் கிழமையை திங்கக் கிழமையா மாத்தாதீங்க. சொல்லிட்டேன்//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...ஹையோ நெல்லை எல்லா நாளும் ஏதாவது ஒரு வகையில் இந்த திங்க வந்து வாயில வந்துருது...ஹா ஹா

    கேள்வி ஆசிரியர் கேட்டதுனால நல்ல சமத்து மாணவியாய் பதில் சொல்லிருக்கேன்...ஆசிரியர்கிட்டயாக்கும் நீங்க சொல்லனும்...கேள்வி பதிலில் நோ திங்க நு ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  57. @கீதா

    //நானும் பழக்க தோஷத்தை இப்ப கொஞ்சம் மாத்திக்கிட்டேன் ஹிஹிஹி//

    எனக்கு இன்னும் போகலை :) ஆர்வக்கோளாறு

    பதிலளிநீக்கு
  58. @ கீதா, கீதா சாம்பசிவம் : .. கீதாக்கா! இதைக் கேக்கணும்னு நினைச்சு அப்புறம் அரசியல் கேள்விகள் கூடாதுனு சொன்னதுநால விட்டுட்டேன்//

    இதில் அரசியலா? நீர்த்துப்போன விஷயமாச்சே இது.!

    பதிலளிநீக்கு
  59. அதிரா தன் வைர நெக்லஸை கழட்டி ஸ்ரீராமிடம் பரிசாக கொடுத்தால் அதை அவர் யாருக்கு பரிசாக தருவார் அனுஷ்காவிற்கா அல்லது மனைவிக்கா?

    பதிலளிநீக்கு
  60. உங்களால் ஒரு விலங்கை பசு மாட்டின் அளவிற்கு பெரிதாக மாற்ற முடிந்தால் எந்த விலங்கை மாற்றுவீர்கள்? ஏன்?

    பதிலளிநீக்கு
  61. நீங்கள் யாரையாவது பார்த்து ஸ்மைல் பண்ணிவீட்டு அதன் பின் அவரை பார்த்து ஏண்டா ஸ்மைல் பண்ணினோம் என்று நினைத்தது உண்டா?

    பதிலளிநீக்கு
  62. உங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன?

    பதிலளிநீக்கு
  63. ஒரு வேளை நீங்கள் எனது பதிவுகளை படிப்பவராக இருந்தால் எந்த பதிவையாவது படித்து என்னை நல்லா திட்டனும் என்று நினைத்ததுண்டா?ஆமாம் என்றால் அது எந்த பதிவு? இந்த கேள்வி எங்கள் ப்ளாக் ஆசியர்களுக்கு மட்டுமல்ல இங்கே வருபவர்கள் யாரவது என் பதிவை படிப்பவர்களாக இருந்தால் உங்களுக்கும் இந்த கேள்வி முடிந்தால் பதில் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  64. காக்கா கத்தினால் விருந்தினர்கள் வருவார்கள் என் மனைவி கத்தினால் பூரிக்கட்டை வரும் அது போல உங்கள் மனைவி கத்தினால் என்ன வரும்?

    பதிலளிநீக்கு
  65. காவிரி தண்ணீர்க்காக கெஞ்சி கொண்டிருப்பதைவிட நம்ம அதிராவை தூக்கி காவிரி அணையில் போட்டால் கெஞ்சாமலே தண்ணி நமக்கு வந்துவிடுமே என்று வாட்ஸப் மூலம் லண்டனில் உள்ள ஒருவர் தகவல் அனுப்புகிறார்? எனக்கும் இந்த ஐடியா பிடிச்சிருக்கு உங்களுக்கு பிடிச்சிருக்கா? ( சரி சரி தேம்ஸ் நதிக்கரையில் இருந்து பதில் சொல்லவதற்கு முன்னால் நான் நடையை கட்டுறேன்)

    பதிலளிநீக்கு

  66. தமா தமன்னா ந்னு ஆடினால் யாரும் கிரிக்கெட் பார்க்க மாட்டார்கள்.
    எப்படியோ நீயே தான் எனக்கு பாட்டு வீடியோ கிடைத்தது.
    ரொம்ப நன்றி. நெ.தவுக்கும் ஸ்ரீராமுக்கும்.

    பதிலளிநீக்கு
  67. @ /// எனக்கும் இந்த ஐடியா பிடிச்சிருக்கு//
    ஹலோவ் :) மதுரை தமிழன் :) தெளிவா லண்டனிலிருந்து ஏஞ்சல்னு எழுதியிருந்தா அந்த பூரிக்கட்டை ரெண்டாம் முறை பறந்திருக்காதில்ல :)


    பதிலளிநீக்கு
  68. //Avargal Unmaigal said...
    நீங்கள் யாரையாவது பார்த்து ஸ்மைல் பண்ணிவீட்டு அதன் பின் அவரை பார்த்து ஏண்டா ஸ்மைல் பண்ணினோம் என்று நினைத்தது உண்டா?//

    haaaaaaaaaaa haaaaaa
    https://www.youtube.com/watch?v=5GP9RVZkWQo

    பதிலளிநீக்கு
  69. ////Avargal UnmaigalApril 11, 2018 at 8:06 PM
    அதிரா தன் வைர நெக்லஸை கழட்டி ஸ்ரீராமிடம் பரிசாக கொடுத்தால் அதை அவர் யாருக்கு பரிசாக தருவார் அனுஷ்காவிற்கா அல்லது மனைவிக்கா?////

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் வை திஸ் கொலவெறி?:)... அவர் ஏற்கனவே தமனாவை ஒரே ஒருக்கால் டச் பண்ணிய குற்றத்துக்காக கட்டிலுக்குக் கீழ இருக்கிறார்:).. இப்போ இதைப் படிச்சால்..... பதுங்கு குழிக்கே போயிடப்போறாரே:)... ஹையோ ஹையோ:)...

    நான் போட்டால்தானே கழட்டிக் கொடுப்பதற்கு:).. அது இப்போ எந்த லொக்கருக்குள் என்பது எனக்கே மறந்து போச்ச்ச்ச்:)

    பதிலளிநீக்கு
  70. ////Avargal UnmaigalApril 11, 2018 at 8:36 PM
    மூலம் லண்டனில் உள்ள ஒருவர் தகவல் அனுப்புகிறார்? ////

    இவர் மட்டும் என் கைல அகப்பட்டால்ல்ல்ல்ல்ல் நூடில்ஸ்தேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)...

    https://goo.gl/images/kKSUF1

    பதிலளிநீக்கு
  71. 1. நமக்கு தெரிந்த ஒருவர், நமக்கு எதிரியாகிவிட்டால் , எங்காவது சந்திக்க நேரும்போது, அவர் நம்மைப் பார்த்து சிரித்தால், பதிலுக்கு நாமும் சிரிக்க வேண்டுமோ? சிரிக்காமல் போவது நல்லதோ?.

    திடீரென உலகம் அழிஞ்சு நாம் எல்லோரும் “சொர்க்கம்”:) போனால், அங்கும் எங்கள் புளொக் அமைச்சு ஸ்ரீராமை 3 வது ஆசிரியராக நியமிப்பீங்களோ?.. அஞ்சுவை அங்கு எப்படி அடையாளம் காணுவீங்க?

    நகைச்சுவையாகப் பேசுவது நல்லதோ? ஆபத்தோ?

    பதிலளிநீக்கு
  72. அதிரா - நமக்கு தெரிந்த ஒருவர், நமக்கு எதிரியாகிவிட்டால் - இதற்குப் பதில் தெரிஞ்சுட்டால், 'தமன்னா' எதிரியான (அப்போ எனக்கும்.. ஹிஹி) ஸ்ரீராமைப் பார்த்தால் சிரிக்கவா என்பது தெளிவாகும்.

    நகைச்சுவையாகப் பேசுவது - இப்படிப் பேசுபவர்கள் லீடராக வர முடியாது. லீடர்ஷிப் குவாலிட்டி-குறைவாப் பேசணும், ஒதுங்கி இருக்கணும், பெர்சனல் உதவி உடனே செய்யணும், மனித நேயம் காண்பிக்கணும்.

    பதிலளிநீக்கு
  73. ஹா ஹா ஹா பயப்பிடாதீங்க இனி உங்க குச்சி ஐஸ்:) தமனாக்கா:).. சிரிச்சாலும் ஸ்ரீராம் சிரிக்க மாட்டார்:).... ஸ்ரீராம் ஸ்கூட்டரில் ஓடித் தப்பிடுவார் இந்த வம்பே நமக்கு வேணாம் என... ஹா ஹா ஹா.

    ஆனா நெல்லைத் தமிழன் என்னுடைய அனுபவத்தில் நகைச்சுவையாகப் பேசுவோருக்கு நட்பு வட்டம் அதிகம் இருக்கும்... அப்போ லீடர் தெரிவு என வரும்போது... மக்கள் தெரிவாக இப்படியானவர்களுக்கே அதிக வோட் கிடைத்து லீடர் ஆகியிருக்கினம்... படிக்கும் காலம்.

    பதிலளிநீக்கு
  74. ///நெ.த.April 12, 2018 at 10:05 AM
    அதிரா - நமக்கு தெரிந்த ஒருவர், நமக்கு எதிரியாகிவிட்டால் -///

    இக்கேள்விக்குப் பின்னால் என்னிடம் ஒரு கதையே இருக்கு... படிக்கும் காலத்தில் நடந்த ஒரு அனுபவம்:)..

    பதிலளிநீக்கு
  75. // இக்கேள்விக்குப் பின்னால் என்னிடம் ஒரு கதையே இருக்கு... படிக்கும் காலத்தில் நடந்த ஒரு அனுபவம்:).. //

    அதிரா... ஆஹா... எப்போ எழுதப் போறீங்க...? காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  76. தமன்னாவுக்கு என்னை எதிரியாகக் காட்டுவதில் நெல்லை முயற்சிப்பதில் ஏதும் உள்நோக்கம் இருக்கிறதா தெரியவில்லை. அதற்குத் துணை போகாதீர்கள் நண்பர்களே...

    பதிலளிநீக்கு
  77. //அதிரா - நமக்கு தெரிந்த ஒருவர், நமக்கு எதிரியாகிவிட்டால் -/// இந்த அனுபவம் எனக்கும் உண்டு. பள்ளி நாட்களில். ஆறாம் வகுப்பிலிருந்து சேர்ந்து படித்த இருவர் பதினோராம் வகுப்பின் போது எதிரியானார்கள். :))))

    பதிலளிநீக்கு
  78. ஸ்ரீராம் - தமன்னாவுக்கு என்னை எதிரியாகக் காட்டுவதில் - ஜாலியா எடுத்துக்கோங்க ஸ்ரீராம். அழகை ரசிப்பதில் 'தமன்னா'வாக இருந்தால் என்ன, 'அனுஷ்கா/ஹன்சிகா/...' என்று யாராக இருந்தால் என்ன.

    பதிலளிநீக்கு
  79. // ஜாலியா எடுத்துக்கோங்க ஸ்ரீராம்.//

    ஹா... ஹா... ஹா.. சீரியஸா நினைச்சுட்டீங்களா நெல்லை!

    பதிலளிநீக்கு
  80. அதிரா - நமக்கு தெரிந்த ஒருவர், நமக்கு எதிரியாகிவிட்டால் - இது நண்பர்களுக்குள் மட்டுமல்ல... ஆபீசுக்கும் மிகவும் பொருந்தும். எந்தக் காரணம் கொண்டும் ஆபீசில் நட்போடு விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது. மனித மனம் எப்போதும் சுயனலமானது. நண்பர்களுக்குள் பிரிவு-எனக்கும் வந்திருக்கிறது. நல்லவேளை.. அது குறுகிய காலத்துக்குத்தான்.

    பதிலளிநீக்கு
  81. //அதிரா... ஆஹா... எப்போ எழுதப் போறீங்க...? காத்திருக்கிறேன்.//

    ஹா ஹா ஹா ஓகே சோட் அட்ன் சுவீட்டா விரைவில சொல்றேன்:)..

    பதிலளிநீக்கு
  82. ///நெ.த. said...
    அதிரா - நமக்கு தெரிந்த ஒருவர், நமக்கு எதிரியாகிவிட்டால் - இது நண்பர்களுக்குள் மட்டுமல்ல... ஆபீசுக்கும் மிகவும் பொருந்தும்.///

    இது உண்மைதான், சின்ன வயது நட்பு என்பது எப்பவும் பெரிய எதிரியாகாது.. எனக்கு இதுவரை நட்பில் எதிரியானவர்கள் இல்லை... ஆனா வேர்க் பிளேஸ்.. அங்கு யாரையும் நம்பிடக்கூடாது... என்னைப்பொறுத்து நம்ப நட நம்பி நடவாதே.. இப்படித்தான் நான் இருப்பதுண்டு.

    என்னை நம்பி ஒருவர் ஒரு ரகசியம் சொல்லிட்டால்.. அவர் ஒருநாள் எதிரியானால்கூட சொல்ல மாட்டேன் வெளியே.. பொதுவாகவே நான் எப்பவும் ஒருவர் கதையை இன்னொருவருக்கு நகர்த்துவதில்லை.. அதிலும் குறிப்பா.. அவர்கள் மனம் நொந்திடும் அல்லது அக்கதையைச் சொல்வதால் அவ்விருவருக்குள்ளும் எதிர்ப்பு அதிகமாகிடும் எனத் தெரிஞ்சால். சொல்லவே சொல்ல மாட்டேன்.

    சிந்து நதி ஓரத்திலே.. விரிச்சதலைப் பாலத்திலே.. நம்பிச் சொன்ன சத்தியங்கள் வீணாகிப் போனதையா என ஆரும் பாடும் நிலைமைக்கு ஆளாக்க மாட்டேன் ஆரையும்...:) ஹா ஹா ஹா கண்ணதாசன் அங்கிள் வசனம்:))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!