புதன், 12 டிசம்பர், 2018

புதன் 181212 : நீங்கள் ஒருவரை எப்படி மதிப்பீடு செய்வீர்கள்?

   
இந்த வாரம் பதில்களில் color code எதுவும் இல்லை. பதில்கள் ஒன்றுக்கு மேல் இருந்தால், ஒன்று இரண்டு மூன்று என்று எண் கொடுத்துவிட்டேன். ஆனால் ஒன்று எல்லாமே ஒரே ஆசிரியர் பதில் இல்லை, இரண்டு எல்லாமே இரண்டாவது ஆசிரியர் பதில் இல்லை. எல்லோரும் மாறுவேடத்தில் பதில் சொல்லியிருக்கோம். அநேகமாக கீதா சாம்பசிவம் ஒவ்வொரு பதிலின் ஆசிரியரையும் கண்டுபிடித்துவிடுவார் என்று நினைக்கிறேன். ஏஞ்சல் : 

1,அன்றாட வாழ்க்கையில் எதுவும் இல்லாமல் போகாமல் ஏதாவது ஒன்று இருந்துகொண்டே இருக்கிறதே அது எப்படி சாத்தியம் ?

1. அப்படி இல்லாதிருப்பின் வாழ்க்கை முடிந்திருக்குமே !

2. ஒன்றுதானே! இருந்துவிட்டுப் போகட்டும். நிறைய இருந்தால்தான் கஷ்டம்!


2,பெரும்பாலானோர் அடித்து பாய்ந்து எப்படியாவது பார்த்தே ஆகவேண்டும் என்றும் அதை பார்க்கலைன்னா வாழ்க்கையே வீண் என்றும் புளகாங்கிதமடையும் சில உலக விஷயங்கள் (ஆஸ்தான நாயகனின் சினிமா முதல் நாள் முதல் காட்சி ,கிரிக்கெட் கால்பந்து ) சிலரை எந்த விதத்திலும் பாதிப்பதில்லையே ? ஏன் ?

  
1. அவர்களுக்கும் அப்படியான சில இருக்கும்.

2. எதையாவது அப்படி அடித்துப் பிடித்துப் பார்க்காமல், எந்தவித பாதிப்பையும் காட்டாமல் இருப்பவர்கள் யார் என்று நான் எப்படியாவது பார்த்தே ஆகவேண்டும்! எங்கே? எங்கே!


3. இதெல்லாம் ஒரு விஷயமேயில்லை என்று தோன்றியதுண்டா ? எதற்கு ஏன் ???

   
1. விரைவில் மறைந்துபோகும் கிரிக்கெட் மற்றும் தேர்தல் முடிவுகள்.

2. பந்தயத்தில் என்னை யாராவது ஜெயிக்கும்போதெல்லாம், இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்றுதான் தோன்றும். 
  

4,வாழ்க்கையின் அர்த்தம் என்பது என்ன ? அது எல்லா உயிர்களுக்கும் பொருந்துமா ?

   
1. வாழ்க்கையின் அர்த்தம் மனிதருக்கு உளம் சார்ந்தும் பிற இனங்களுக்கு புலன் சார்ந்தும் இருப்பதாக நினைக்கிறோம்.

2. Life has different definition in the eyes of different people. ... For many life is all about love. For a few, life is all about religious practices. For philosopher like Aristotle life is about happiness: "Happiness is the meaning and the purpose of life, the whole aim and end of human existence."
  

5, Homo sapiens இற்கு பிறகு என்ன வரக்கூடும் ??? அல்லது அது தன்னையே விழுங்கி தனக்கே குழிபறித்து அழிந்து தொலைந்து போகுமா ??

  
1. மனித இனத்துக்குப்பின் பேரழிவுதான் வர இருப்பதாகத் தோன்றுகிறது.

2. Super man is the next stage. 

Image result for man and superman cartoon
   

6,நீங்கள் ஒருவரை எப்படி மதிப்பீடு செய்வீர்கள் ? தராசு WEIGHING ஸ்கேல் /பார்சார்ட் /கிராஃப் போன்ற சிரி :) யஸ் பதில்களுக்கு தடா 

இது ஒரு சீரியஸான கேள்வி .நம்முடைய இன்டென்க்ஷன்ஸ் உள்நோக்கம் இவற்றை வைத்து நம்மை மதிப்பிடும் (நான் நல்லவள் நல்லவன் வல்லவன் நேர்மையானவன் /ர் ) இப்படி நம்மை நம் நோக்கங்கள் வைத்து மதிப்பிட்டுக்கொள்ளும் நாம் பிறரை மட்டும் அவர்கள் செய்யும் காரியங்கள் செயல்கள் வைத்து மதிப்பிடுகிறோம் எடை போடுகிறோமே அது ஏன் ??????
   
1. நம் எதிர்பார்ப்பு அடிப்படையில் மதிப்பீடு செய்கிறோம். அதன் அடிப்படை நம் பண்புகள்தாம்.

2. எண்ணம், சொல், செயல் ஆகியவைதான் எந்த மனிதனுக்கும் அல்லது மனுஷிக்கும், அடிப்படையான விஷயங்கள். நமக்கு, நம்முடைய எண்ணங்கள் நன்கு தெரியும். ஆனால் மற்றவர்களின் எண்ணங்கள் தெரியாது. அதனால், மற்றவர்களின் சொல், செயல் ஆகியவற்றை வைத்து, மற்றவரை மதிப்பீடு செய்கிறோம். 

ஆனால் மற்றவர்களுக்கு நம் எண்ணங்கள் தெரியாது. அவர்கள் நம்முடைய சொல், செயல் ஆகியவற்றை வைத்து நம்மை மதிப்பீடு செய்கிறார்கள். எண்ணம், சொல், செயல் யாவும் ஒருங்கிணைந்து, ஒன்றாக இருந்தால், பிரச்னை இல்லை. 

நல்லவன் என்று சொல்லிக்கொள்பவர்கள், நல்ல சொற்கள், நல்ல செயல்கள் செய்பவர்களாக இருந்தால் நலம். சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவர்களை சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம்! 
  

7, கடும் தண்டனைகளால் நீதி நிலைநாட்டப்படும் என்பதை நம்புகிறீர்களா ?? 

   
தண்டனைக்கு அஞ்சி குற்றம் செய்யாதிருப்போர் இருக்கலாம்தான். ஆனால் உணர்வு பூர்வமான ஆசை அல்லது சினம் அறிவைப் புறம் தள்ளி தலையெடுக்குமானால் கடும் தண்டனை குறித்த அச்சம் மறைந்துவிடும்.


8, மானிட மனசுக்குள் இத்தனை அழுக்கா ? என்று எப்போதாவது நொந்த சம்பவம் ?

  
இளம் சிறார் மேல் வன்கொடுமை நிகழுந்தோறும்..
  

9, ஒருமொபைல் போன் APP அது நாம் நினைப்பதை எதிரில் இருப்போருக்கும் அவங்க நினைப்பதை நமக்கும் காட்டி கொடுக்கக்கூடியது ..அதை நீங்கள் வரவேற்பீர்களா ??? 

  
1. நம் எண்ணங்கள் அனைத்தையும் அயலார் அறிவது விபரீத விளைவுகளை உண்டாக்கும்.
  
2. அப்படி ஒன்று இருந்தால், அது 'மொபைல் ஆப்' இல்லைங்கோ! 'மொத்த ஆப்பு' !
   

10, மனிதர்கள் தவறு செய்யும்போது எருமை ,பண்ணி ,மாடு குள்ளநரி என்று விலங்கு பெயர்களை வைத்து எதற்கு திட்டுகிறார்கள் ??  

    
1. சிந்தனைத் திறன் , அருவருப்பு, தயக்கம் இல்லாதிருப்பது இது போன்ற ஒப்பீடுகளுக்கு வழி செய்கிறது.
   
2. நல்லவேளை, நமக்கு விலங்கு பாஷை தெரியவில்லை. தெரிந்திருந்தால் அவைகள் ஒன்றையொன்று, " டேய் ஏண்டா இப்புடி கேடு கெட்ட மனுஷ ஜன்மமாட்டம் நடந்துக்கறே?" என்று  திட்டிக்கொள்வது கேட்க முடியும்.
   
11. நம் பதிவர்கள் ஒருவரது பேரை சொன்னாலோ இல்லை அவர் கண்முன்னால் வந்தாலோ உங்கள் நினைவுக்கு வருவது எது ???
எனக்கு நினைவில் இவர்களை நினைச்சா வருவதை சொல்லிடறேன் :) 
  

ஸ்ரீராம்=அந்த சூ சூ முருங்கை மரம் :) .அ .கோ .எ .காட்டும் ஜெய் அங்கிள் முத்துராமன் அங்கிள் ஜிவாஜி அங்கிள் 

கௌதமன் ஸார் = கொட்டாங்குச்சியில் வளர்ந்த கொத்தமல்லி 
  

நானே கீதாக்கா நெல்லைத்தமிழன் கில்லர்ஜீ கீதா ரெங்கன் எல்லாருக்கும் எழுதி பின்னர் அழிச்சிட்டேன் :) 

உங்க நினைவில் வருவதை எழுதவும்  
    
 ஆ 1. 

அதிரா = மியாவ்.
ஏஞ்சல் = அணில்.
கில்லர்ஜி = மீசை.
கரந்தை ஜெ = பிரம்பு.
(ஆனால் நான் இப்படி எல்லாம் யோசித்ததில்லை. கஷ்டப்பட்டுதான் சொல்லியிருக்கிறேன்!) 

ஆ 2. 

கீதா சாம்பசிவம் : அதான் எனக்குத் தெரியுமே! ( ஆ ! ஏஞ்சல்! என்னை மாட்டிவிட்டுட்டீங்களே! இப்போ பாருங்க! கீ சா மேம் என்னைத் துரத்தித் துரத்தி, அடிக்கப் போறாங்க! )

ஜி எம் பி : ஜி என் பி. 

Image result for g n balasubramaniam

நெல்லைத்தமிழன் : தஞ்சாவூர்த்தெலுங்கன். 

இவ்வளவு வம்பு போதும் இந்த வாரத்துக்கு என்று நினைக்கிறேன். 'கும்ம' வருபவர்கள் எல்லோரும் வரிசையில வாங்க!  

- வாட்ஸ் அப் -

பானுமதி வெங்கடேஸ்வரன் :

இலக்கியமோ, சினிமாவோ, முதலில் புதிதாக செய்கிறார்கள், சந்தோஷப்பட்டு ஆதரிக்கிறோம்.ஆனால் போகப்போக அவர்கள் ஒரு க்ளீஷேவில் மாட்டிக்கொண்டு விடுகிறார்களே

1. அது அவர்கள் தவறுதானே !

2. எதையும் மாற்றி யோசித்து, வித்தியாசமாக செய்து வெற்றி பெறுவது சகஜம்தான். ஆனால் ஒருமுறை வித்தியாசமாக செய்ததையே மாற்றம் இல்லாமல், தொடர்ந்து திரும்பத் திரும்ப செய்துகொண்டிருந்தால் அது ஆயாசமாக ஆகிவிடுகிறது. நீங்க சொன்னமாதிரி, சினிமாவிலும், எழுத்துலகிலும்தான் இது அதிகம். 

வித்தியாசங்களையே மாற்றி மாற்றி, வித்தியாசமாக செய்த சாதனையாளர் என்று பார்த்தால், சினிமாவில் கமல்ஹாசன், எழுத்துலகில் சுஜாதா என்று சொல்லலாம். 

சிறு குறிப்பு வரைக:
சாகித்ய அகாடமி விருது வாங்கியிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன்
சங்கீத கலாநிதி விருது வாங்கியிருக்கும் அருணா சாய்ராம்.

ஆ1: முன்னவர் ஆற்றல், பின்னவர் அதிர்ஷ்டம்.

ஆ2: அதிகம் படித்ததில்லை. படித்தவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். நல்ல எழுத்தாளர். 

நிறையக் கேட்டிருக்கேன். அவருடைய சந்தோஷ, மலர்ச்சியான முகமும் உடல்மொழியும் ரொம்பப் பிடிக்கும். ஆனானப்பட்ட சோமுவுக்கே கிடைக்காத சங்கீத கலாநிதி, 'பொம்பளை சோமு' என்று அழைக்கப்படும் அருணா அவர்களுக்குக் கிடைத்திருப்பது  வரவேற்கப்படவேண்டியதே! உறவு முறைகள் எத்தனை இருந்தாலும் மாமாவிற்கும், அத்தைக்கும் மட்டும் ஏன் சிறப்பிடம்?
மாமா அத்தை பிள்ளைகளுக்கிடையில் திருமண பந்தம் ஏற்படும் சாத்தியம்..

சினிமாவுக்கு சென்று, பாதியில் எழுந்து வந்திருக்கிறீர்களா?


ஆ 1: விவசாயி படம்.

ஆ 2: சிவாஜி யின் "தெய்வ மகன்" (ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட அசட் படம்)

ஆ 3: போர் என்று தெரிந்த படங்களைப் பார்க்கமாட்டேன். வேறு வழியில்லாமல், அலுவல் காரணமாக அல்லது  நண்பர் / உறவினர் திருமணம் காரணமாக  வெளியூரில் தங்க நேரிட்டால், அருகில் உள்ள திரைப்பட அரங்குகளில் சினிமா பார்த்ததுண்டு. ஆனால் காசு கொடுத்துப் பார்க்கும் எந்தப் படத்தையும் பாதியில் விட்டு வரமாட்டேன். படம் போர் என்றால், சீட்டில் நன்கு சாய்ந்து தூங்கிவிடுவேன். 


======================================

மீண்டும் சந்திப்போம்! 


32 கருத்துகள்:

 1. அன்பின் KGG, ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  வாழ்க வளமுடன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு ஸார். பணம் சென்ற மாதமே கட்டியும், இல்லை என்று சொல்லி இணையத்தை நிறுத்தி இருக்கிறது பொறுப்பான பாசமிகு BSNL. எனவே மொபைலே கதி!

   நீக்கு
 2. அனைவருக்கும் காலை வணக்கம். ஒரு கல்யாணத்திற்கு கிளம்பி கொண்டிருக்கிறேன். பின்னர் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. வரவேற்ற வரவேற்கப் போகும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம். திரு கௌதமன் சொல்லி இருக்கிறாப்போல் நான் யாரையும் தெரிஞ்சதாக் காட்டிக்கப் போறதில்லை. "அதான் எனக்குத் தெரியுமே!" என அங்கமுத்து பாணியில் சொல்லப் போவதும் இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு இங்கே யாரையுமே தெரியாது! தெரியாது! தெரியாது! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க?

  பதிலளிநீக்கு
 4. நாங்க கூடத் தஞ்சாவூரில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்கணும். போகலை. :)

  பதிலளிநீக்கு
 5. அருணா சாய்ராம் எனக்கும் பிடித்தவராக இருந்தார் ஒரு காலத்தில்! அதிலும் அந்த "மாடு மேய்க்கும் கண்ணன்" பாட்டுக்காகவே. இப்போ இல்லை! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருணா சாய்ராம் காத்திரமான குரல். கீசா மேடம்.. உங்க கமென்டுக்காக, நீங்கள் அருணா சாய்ராம் பக்கத்தில் உட்கார்ந்து பாட்டு கேட்கும் சந்தர்ப்பம் வரட்டும். அவர் தொடைல படீர்னு தாளம் போடறதுக்கு பதிலா....

   நீக்கு
 6. "தெய்வமகன்" ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட "அசட்டு"ப் படமா? இஃகி, இஃகி, இஃகி. இருக்கும், இருக்கும். எங்கேப்பா ஜிவாஜி ரசிகர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ASSET... இப்போதானே பதில் சொல்லியிருக்கார்.. மனசுல உள்ளதெல்லாம் வெளில வருது. கர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  2. //எங்கேப்பா ஜிவாஜி ரசிகர்கள்?//
   இங்கதான் இருக்கோம். ஒரு படம் ஆஸ்காருக்கு அனுப்ப படுகிறது என்றால் அதற்கு நடிப்பை மட்டுமா கருத்தில் கொள்வார்கள்? தவிர தெய்வமகனில் அப்பா சிவாஜி நன்றாகத்தான் நடித்திருப்பார். ஜெயலலிதாவுக்கு ஜோடியான இரண்டாவது மகன்தான் படுத்தல்.

   நீக்கு
 7. எனக்கு கௌதமன் சார் என்றால் நினைவில் வருவது "பெண்"களூரில் அவர் காலங்கார்த்தாலே காஃபி போட ஒரு ஆவி வந்து பால் பாக்கெட் கொடுத்த கதை தான்! காஃபியும் "ஆவி" பறக்க இருந்ததாகத் தான் எழுதி இருந்தார்.

  பதிலளிநீக்கு
 8. 9 வது கேள்விக்கு 2 வது பதில் படித்து அது கேஜிஜி சார் சொன்ன பதிலாகத்தான் இருக்கும் என்று கணித்தேன். அப்படியே எல்லா 2ம் நம்பர் பதில்களும் கேஜிஜி அவர்களுடையதாக இருந்தால் (ஒருவேளை),

  6 வது கேள்விக்கான இரண்டாவது பதில் மிகச் சிறந்த பதில். பாராட்டுகள்.

  அந்தக் கேள்வியைக் கேட்ட ஏஞ்சலினுக்கு பாராட்டுகள். மிக நல்ல கேள்வி மற்றும் பதில்.

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் புதன் காலை வணக்கம். கேள்வியே இல்லை.
  பதில்களும் கேள்விகளும் இதமாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 10. காலை வணக்கம் 🙏

  அருணா சாயிராம் பாடல் - எனக்கும் அவரது குரல் பிடிக்கும். குறிப்பாக இந்தப் பாடல். சமீபத்திய பாடல்கள் கேட்கவில்லை.

  பதிலளிநீக்கு
 11. பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்
  அவரவர் எண்ணங்களே...

  இருக்குமிடம் எதுவோ...?
  நினைக்குமிடம் பெரிது...!

  போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும்
  அவரவர் உள்ளங்களே...!

  பதிலளிநீக்கு
 12. பதில்கள்
  1. நெல்லைத்தமிழரை தஞ்சைக்கு மாற்றி தெலு(ங்)கர் என்கிறீர்களே...

   நீக்கு
  2. நெல்லைத்தமிழரை தஞ்சைக்கு மாற்றி தெலு(ங்)கர் என்கிறீர்களே...

   நீக்கு
  3. நெல்லைத்தமிழரை தஞ்சைக்கு மாற்றி தெலு(ங்)கர் என்கிறீர்களே...

   நீக்கு
  4. நெல்லைத்தமிழரை தஞ்சைக்கு மாற்றி தெலு(ங்)கர் என்கிறீர்களே...

   நீக்கு
 13. //நம் பதிவர்கள் ஒருவரது பேரை சொன்னாலோ இல்லை அவர் கண்முன்னால் வந்தாலோ உங்கள் நினைவுக்கு வருவது எது ???//

  இந்த கேள்வியை நான் வேறு விதமாக கேட்க நினைத்தேன். சில பிரபலங்களை பார்க்கும் பொழுது நமக்கு தெரிந்த ஒருவர் நினைவுக்கு வருவார். உதாரணமாக நதியாவை பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு ஏஞ்செல் நினைவுக்கு வருவார். ஏனென்று தெரியாது. ஏஞ்சலின் உடல் மொழி இப்படித்தான் இருக்குமோ என்று நினைப்பேன். ஏன் அவர் கேட்கும் கேள்விகளை கூட நதியா கேட்பது போல ஒலிக்கும். கொஞ்சம் கொஞ்சம் ஆதிரை வேணுகோபாலும் நினைவுக்கு வருவார்.

  முன்பெல்லாம் திருக்குறள் என்றால் திருவள்ளுவரும், கவிதாலயா லோகோவும் நினைவுக்கு வரும். இப்போது டி.டி.

  பறவைகளைப்பார்த்தாலே கோமதி அரசுதான் நினைவுக்கு வருகிறார்.

  ஜி.எம்.பி. சார் என்றால் BHEL உம், சுத்தியல் அரிவாளும்(கம்யூனிஸ்ட் சின்னம்) நினைவுக்கு வரும்.

  பதிலளிநீக்கு
 14. எண்ணம், சொல், செயல் யாவும் ஒருங்கிணைந்து, ஒன்றாக இருந்தால், பிரச்னை இல்லை.

  நல்லவன் என்று சொல்லிக்கொள்பவர்கள், நல்ல சொற்கள், நல்ல செயல்கள் செய்பவர்களாக இருந்தால் நலம். சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவர்களை சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம்!//
  உண்மை நன்றாக சொன்னீர்கள்.

  கேள்வி பதில்கள் எல்லாம் மிக அருமை.

  கிண்டலாக பேசுவதை கேட்கும் போது கெளதமன் சாரும். தினமலரில் நல்லசெய்திகளை படிக்கும் போது ஸ்ரீராமும் , தம்பட்டம் என்ற வார்த்தையை கேட்டால் பானுமதி அவர்கள் வலைத்தளமும் நினைவுக்கு வருகிறார்கள்.
  எண்ணங்களை பற்றி படித்தால் கீதா சாம்பசிவம் நினைவுக்கு வருகிறார்.
  பூனைகளைப் பார்த்தாலே அதிராவும், மீசையை பார்த்தால் தேவகோட்டையாரும் நினைவில் வருகிறார்கள். தஞ்சை என்றால் இப்போது சகோ துரைசெல்வராஜூவும், திருக்குறள் என்றால் தனபாலனும் நினைவில் வருகிறார்கள்.
  அதிரவை நினைக்கும் போது ஏஞ்ச்சலும், ஏஞ்சலை நினைக்கும் போது அதிரவும் நினைவுக்கு வருகிறார்கள்.

  பதிவுலக நண்பர்கள் மனம் முழுவது ஆக்கரமித்து இருக்கிறார்கள்.
  அன்பால் சேர்ந்த கூட்டம் இல்லையா?

  பதிலளிநீக்கு
 15. கருத்து உரைத்தவர்களுக்கும், பாராட்டியவர்களுக்கும் நன்றி. எல்லாம் சரி, கேள்விகள் எங்கே? யாரும் கேட்கலைன்னா நானே கேட்டு, நானே பதில் சொல்லவேண்டியிருக்கும்! ஜாஆஆ க்கிரதை!

  பதிலளிநீக்கு
 16. இந்த zomato விஷயம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  இப்போப் பலரும் வீட்டில் சமைக்காமல் வெளியில் சாப்பிடுவதையே கௌரவமாக நினைக்கின்றனர்! அது சரியா?

  பெண்களுக்கு முன்னெல்லாம் கட்டாயமாய் சமையல் தெரிந்திருக்க வேண்டும் என்பார்கள்! இப்போ அப்படி எல்லாம் இல்லை! மாறி விட்டது! இது நல்லதா?

  அந்த zomatoன் ஊழியர் செய்தது சரிதான் என வாதாடுபவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

  என்னதான் அவருக்குப் பசியாக இருந்தாலும் வாடிக்கையாளருக்கு என அனுப்பப்பட்ட உணவில் இருந்து எடுத்து எச்சல் பண்ணிச் சாப்பிடுவது சரியா?

  இந்த எச்சல், பத்து பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? என் கிட்டே சுமார் 2,3 பதிவுகளுக்கான விஷயம் இருக்கு! படிப்பார்களா, மாட்டார்களானு சந்தேகத்தில் போடுவதில்லை.

  பதிலளிநீக்கு
 17. சிட்டுக்குருவிகள் அழிந்ததுக்கு செல்ஃபோன் டவர்கள் காரணம் என்பது பற்றிய உங்கள் கருத்து? கும்பகோணம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது இத்தகைய டவர்களில் குருவிகள் கூடு கட்டி இருப்பதைப் பார்க்க நேர்ந்தது. மற்றப் பறவைகள் எல்லாம் நன்றாக இருக்கும்போது சிட்டுக்குருவிகள் மட்டும் அழியும் இனமாக ஆனது ஏன்?

  பதிலளிநீக்கு
 18. சினிமா பார்ப்பதற்கு முன்னெல்லாம் ப்ளாக் டிக்கெட் என்னும் ஒரு முறை உண்டு. கவுன்டரில் டிக்கெட் கொடுப்பவரோடு கூட்டு வைத்துக் கொண்டு சில, பல டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிக் கொண்டு தியேட்டர் வாசலில் விற்பார்கள்! கூடுதல் விலைக்குத் தான்! அதையும் வாங்கிக் கொண்டு பார்க்கச் செல்வார்கள்! அது பற்றிய உங்கள் கருத்து என்ன? நாங்க ஒரு முறை போனப்போ இப்படித் தான் ப்ளாக்கில் தான் டிக்கெட் இருக்குனு சொன்னாங்க! என்ன படம்னு நினைவில் இல்லை! வீட்டுக்கு வந்துட்டோம்! அப்படியானும் அந்தப் படத்தைப் பார்த்தால் கிடைக்கப் போவது என்ன?

  நடிகர்கள் கட் அவுட்டுக்குப்பால் அபிஷேஹம், கற்பூரம் ஏற்றுவது குறித்து உங்கள் கருத்து?

  இப்போதைக்கு இம்புட்டுத் தான்! கேள்வியே கேட்கலையேனு கேட்டதும் ஓடோடி வந்து கேட்டுட்டேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!