வெள்ளி, 7 டிசம்பர், 2018

வெள்ளி வீடியோ 181207 : நொடியில் நாள்தோறும் நிறம்மாறும் தேவி ; விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி


அக்னி சாட்சி என்று ஒரு படம்.  பாலச்சந்தர் படம்.   1982 குழந்தைகள் தினம் அன்று வெளியான படம்.  



நேருமாமாவை நினைவு வைத்துக்கொண்டு பாலச்சந்தர் அன்று படம் வெளியிட்டிருக்கிறார் என்று சொல்வோமா?  ஜி எம் பி ஸாருக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும்!!



சரிதா மன இறுக்கத்தினால் கஷ்டப்படும் பாத்திரத்தில் நடித்திருப்பார்.  நான் முதலில் இது ஹிந்தி கர் படத்தின் கதையோ என்று நினைத்தேன்.   அதில் வரும் ஃபிர் வஹி ராத் ஹை..  பாடல் காட்சி கிட்டத்தட்ட இதுபோல இருக்கும்!  அப்புறம் வேறு வேறு கதை என்று தெரிந்தது.



எஸ் பி பாலசுப்ரமணியம் குரல் அற்புதங்கள் செய்யும் பாடல்.  பாடல் வரிகளும் அருமையாகவே இருக்கும்.



வாலியின் வரிகளுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.  



நடுவில் வரும் சரிதாவின் குரலை இந்தப் பாடலில் நன் ரசிக்க மாட்டேன்.  பாடல் மட்டும்தான்! காட்சியிலும் சரிதாவைப் பார்க்க சற்றே பொறுமை வேண்டும்! காட்சி இல்லாமல் பாடலை மட்டும் ஒருமுறை(யாவது) ரசிக்கவும்.



'முத்துராமன், சிவாஜி, ஜெய்சங்கர் அங்கிள் படமா போடறேன்' என்று ஏஞ்சல் சொல்லக்கூடும்.  ஆனால் பாடலுக்குதான் முக்கியத்துவம் என்று சொல்லிக் கொள்கிறேன்!

இரண்டாவது சரணம் ஆரம்பிப்பதற்குள் கொஞ்சம் பொறுமை போகும்.  ஆனால் அதற்காக இரண்டாவது சரணத்தின் இனிமையை மிஸ் செய்ய முடியுமா?




கனாக் காணும் கண்கள் மெல்ல 
உறங்காதோ பாடல் சொல்ல 
நிலாக்கால மேகம் எல்லாம் 
உலாப் போகும் நேரம் கண்ணே...
உலாப் போகும் நேரம் கண்ணே...

குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ 
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ? 
நொடியில் நாள்தோறும் நிறம்மாறும் தேவி 
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி 
விளக்கு ஏற்றி வைத்தால்கூட நிழல் போலத் தோன்றும் நிஜமே...
நிழல் போலத் தோன்றும் நிஜமே...

புதிய கவிதை புனையும் குயிலே நெஞ்சில் உண்டான காயம் என்ன?
நினைவு அலைகள்  நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன?
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம் 
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும் 
வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே...
நிகழ்காலம் கூறும் கண்ணே 


76 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் முன்னோடிகள் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. வரவேற்ற வரவேற்கப் போகும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்.

      நீக்கு
  2. கீதா ரெங்கன் ஞாயிறு பதிவில்தான் தலைகாட்டுவார் என்று நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. கடந்த சில வாரங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில்

    சிறப்பான பாடல் காட்சி இது...

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் காட்சி...

    சரிதா, சிவகுமார் - இருவருமே கொடி கட்டிப் பறந்திருப்பர்...

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  4. மெல்லிசை மன்னரின் கை வண்ணம் குறிப்பிடத்தக்கது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாலியையும் சொல்லவேண்டும்.

      நீக்கு
    2. உண்மை தான்..
      வாலி அவர்களையும் மறக்கலாகாது..

      நீக்கு
    3. அப்படியே எஸ் பி பி யையும். குழைவான குரலில் உயிர் கொடுத்திருக்கிறார்!

      நீக்கு
    4. ஆமாம்... SPB அவர்களையும் விட்டு விடக்கூடாது....

      அப்படியே KB அவர்களையும் நினைவு கொள்வோம்...

      நீக்கு
    5. //அப்படியே KB அவர்களையும் நினைவு கொள்வோம்...//

      ஹா... ஹா.. ஹா.. அடுத்து அதை நான் சொல்வேன் என்ற முன்ஜாக்கிரதையா!!!

      நீக்கு
  5. அன்புள்ள அனைவருக்கும் காலை வணக்கம் நலமா? நல்ல பாடல். நான் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். எஸ். பி. பிக்கு நிகர் வேறு யாருமில்லை. இனிமையான குரல். பாடலை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.

    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... காலை வணக்கம்.

      பாடலை ரசித்ததற்கு நன்றி.

      உங்களை இங்கு காண்பதில் பெருமகிழ்ச்சி.

      தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
    2. ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நல்வரவு..

      அன்பின் வணக்கத்துடன்....

      நீக்கு
    3. அன்புடன் நல்வரவு கூறிய சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு காலை வணக்கத்துடன மிக்க நன்றி.

      சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு, இனி தொடர்ந்து வலைத்தளம் வர விரும்புகிறேன். நடப்பவை அனைத்தும் நலமாக இருக்கட்டும். என் கருத்து கண்டு உடன் பதிலளித்தது எனக்கும் மகிழ்வாக இருந்தது. நன்றி.

      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. //இனி தொடர்ந்து வலைத்தளம் வர விரும்புகிறேன். நடப்பவை அனைத்தும் நலமாக இருக்கட்டும்//

      மிகவும் மகிழ்வாக இருக்கிறது சகோதரி... வரவேற்கிறோம்.

      நீக்கு
    5. என் வருகை கண்டு வரவேற்றமைக்கு மிகவும் மகிழ்ச்சி சகோதரி கீதா சாம்பசிவம். நலமாக உள்ளீர்களா?

      நீக்கு
    6. வருக.... தொடர்ந்து வலைப்பதிவில் சந்திப்போம் கமலா ஹரிஹரன் ஜி

      நீக்கு
    7. கமலாக்கா வாங்கோ... “நாள் உதவுவதுபோல் நல்லோர் உதவார்” கால ஓட்டத்தில் பல விசயங்கள் கவலைகள் சின்னப் புள்ளியாகுகிடும் அதுவரை ஒதுங்கி இருந்து முடங்கிப் போயிடாமல், இப்படி வெளியே வந்து பேசுங்கோ மனம் இலேசாகும்.
      விதியை நம்மால் என்ன பண்ண முடியும், ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்.

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பாடல்தான் என்றாலும் அதிகாலையில் தாலாட்டு பாடலா🤔

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதை அமைதி கொள்ளச் செய்கிறார் பாடலில் என்று வைத்துக்கொள்ளுங்களேன்!

      நீக்கு
  8. இந்தப்படம் பார்த்திருக்கேன். காட்சியைப் பார்க்காமல் பாடலை மட்டும் கேட்கலாம். :) அவ்வளவாய்ப் பிடிக்காத படங்களில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நல்வரவு.

    நடப்பவை அனைத்தும் நலமாக இருக்கட்டும்

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம் நீங்கள் சொன்னது போல் காட்சி இல்லாமல் பாடலை ரசிக்கலாம்.
    SPB யின் இனிமையான குழைவான குரல் .
    பாடலை கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கோமதி அக்கா.

      ஆமாம். மிக இனிமையான பாடல்.

      நீக்கு
  11. //சரிதாவின் குரலை இந்தப் பாடலில் நன் ரசிக்க மாட்டேன்//

    இதுவும் டப்பிங் குரல்தானே...?

    நான் ரசிக்கும பாடல்களில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கில்லர்ஜி... அது சரிதாவின் குரல்தான்.

      நன்றி.

      நீக்கு
  12. நல்ல பாடல். எனக்கும் இந்தப் பாட்டு கேட்கப் பிடிக்கும்!

    பதிலளிநீக்கு
  13. நேரு மாமா - ஜி.எம்.பி சார் - :)

    அனைவரும் இன்புற்று இருக்கட்டும்....

    பதிலளிநீக்கு
  14. படத்தின் கரு நல்லாதான் இருக்கும். ஆனா, படம் ஓடலைன்னு நினைக்குறேன். இந்த பாட்டு செம ஹிட். எனக்கு ரொம்ப பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  15. நான் இந்தப் படம் பார்த்திட்டேன் பாட்டும் எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டுத்தான் அழகிய வசனங்கள் வருது...
    எனக்கு இப்போதெல்லாம் சரிதாக்காவை நன்கு பிடிச்சுப் போச்டு அதனால அவவின் படங்கள் தேடிப் பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்புத்தாளங்கள் பார்த்திருக்கிறீர்களா அதிரா?

      நீக்கு
    2. ஆஆஆஅ ஆரம்பிச்சேன் முடிக்கல்ல இன்னும், “தண்ணீர் தண்ணீர்” பார்த்து முடிச்சிட்டேன்ன்ன் ஆவ்வ்வ்வ்வ்வ்:)

      நீக்கு
    3. ஜேம்ஸ் ஊரணியில் தண்ணீர் கிடக்குமே...

      நீக்கு
  16. நமக்கு பிடிச்சவர்கள் சிரித்தால் மட்டும்தான் நமக்குப் பிடிக்கும் என நினைக்கக்கூடாது என நான் நினைப்பேன்... அதாவது நமக்கு பிடித்தவரின் நல்ல குணங்களை மட்டுமே நாம் விரும்பக் கூடாது அவரிஉக்குள் இருக்கும் கூடாத குணங்களையும் சேர்த்தே விரும்பப் பழகோணும்.
    சிலபேர் நல்ல அன்பாக நட்பாக நம்மோடு ஒட்டி இருப்பார்கள், ஆனா நாம் கொஞ்டம் முகத்தை இழுத்துக்கொண்டு அல்லது பேசப் பிடிக்காததுபோல இருந்தால், நல்ல மூட்டுக்கு வந்தபின் பேசுகிறேன் என ஓடி விடுவார்கள்.. அது தப்பு. ஒருவரிடம் இருக்கும் நல்ல குணங்களை விரும்பும் நாம் அவரின் மூட் ஓவ் க்கும் கூட இருந்து மருந்து போட நினைக்கோணும் எஸ்கேப் ஆக நினைக்கக் கூடாது...

    அந்த வகையில் இப்பாடலில் சரிதாக்காவை பார்க்க சகிக்கவில்லை என நான் சொல்ல மாட்டேன், அவ மனநிலை தவறியிருக்கிறா அப்போ அப்படித்தானே இருப்பா... அதிதான் பொருந்துது இப்பாடலுக்கு.....
    ஸ்ஸ்ஸ் அப்பாடா வெள்ளிக்கிழமையில ஒரு டத்துவம் சொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன் அவ்வ்வ்வ்வ்வ் :)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களின் பிடிக்காத குணங்களை நாம் ஏன் விரும்பணும் அதிரா? கண்டுக்காமல் விட்டு விடலாம் என்றாவது சொல்லலாம்!

      நீக்கு
    2. அப்படி இல்லை ஶ்ரீராம், அது பாவமெல்லோ, நம்மை எப்பவும் மகிழ்ச்சிப் படுத்தும் ஒருவர், அவரால நாம் நம் மனக் கவலைகள் மறந்து பலநாள் சிரித்தோம் எனில், ஒரு நாள் அவருக்கும் மனக் கவலை வரலாமெல்லோ அவரும் மனிசர்தானே.. அப்போ அந்நேரம் அம்போ என விட்டிடுவது நல்லதா.. சரியில்லைத்தானே...நாம் அவரை சிரிக்க வைக்க முயற்சிக்கலாமெல்லோ... இப்பூடி ஓசிப்பேன் நான்:) அது டப்போ?:)..

      நீக்கு
  17. ///வருங் காலம் இன்பம் என்று
    நிகழ்காலம் கூறும் கண்ணே///
    இப்படி ஒரு வசனம் வருகிறதே அது எப்படி? எனக்கு இதுக்கு இங்கு மீ த 1ஸ்ட்டா வந்தோரிலிருந்து அனைவரும் பதில் சொல்லோணும்:).. பதில்கள் வராட்டில் வரும் வியாழன் ஶ்ரீராம் தன் செல்பியை இங்கு போட்டிடுவார்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1. காரணம், இப்போ அனுபவிக்கிற துன்பம் ரொம்ப அதிகமா இருக்கு, இதுக்கு மேல ஒருவருக்குத் துன்பம் வரும்னு நினைக்க முடியாத அளவுக்கு இருக்கு. அதனால் வருங்காலம் இன்பமாத்தான் இருக்கும்.

      2. மனைவி ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் உண்டாயிருக்கா. விரைவில் குழந்தை பிறந்திடும். அதனால் வருங்காலம் இன்பம்தான்.

      இப்படி நிறைய சிட்டுவேஷனுக்கு இந்த வரிகள் பொருந்தும். படத்துல என்னன்னு ஞாபகம் இல்லை.

      நீக்கு
    2. ஞானி,நெல்லை, துன்பம் எல்லாம் எதுவும் வந்திருக்காது. அந்தப் படமே மனநிலை பிறழ்ந்த நிலையில் சரிதாவைக் காட்டி இருப்பது பற்றித் தான். அவர் செய்யும் ஒரு சிலவற்றைக் குடும்பத்தினர் ஏற்க மாட்டார்கள். சிவகுமார் (சரிதாவின் கணவராக வருவார்) மட்டுமே புரிஞ்சுப்பார் என்று காட்டி இருப்பாங்க! குடும்பத்தில் யாரோ ஏதோ சொல்லப் போக சோகம் தாங்க முடியாமல் தவிக்கும் சரிதாவுக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பார் சிவகுமார்! அந்தச் சமயம் பாடும் பாடல் இது! இப்போ நினைச்சாலும் ஏன் அப்படி ஒரு கதாபாத்திரம்னு எனக்குத் தோணும்!

      நீக்கு
    3. //மனைவி ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் உண்டாயிருக்கா. விரைவில் குழந்தை பிறந்திடும். அதனால் வருங்காலம் இன்பம்தான்.//

      இல்லை, கணவன், மனைவி உறவில் அந்த அளவுக்கு நெருக்கம் காட்டி இருப்பதாக நினைவில் இல்லை. சரிதா மனதளவில் முதிர்ச்சி இல்லாப் பெண்! ஆகவே அவளைத் தேற்றும் வேலை மட்டுமே சிவகுமாருக்கு! கடைசியில் சரிதா இறந்து போக அவர் படத்தைப் பார்த்துக் கொண்டு சோகமாக சிவகுமார் வீற்றிருப்பார்! ஒரு சிலர் இது பாலசந்தரின் "மாஸ்டர் பீஸ்" எனச் சொல்வார்கள்.

      நீக்கு
    4. பதில்களுக்கு நன்றி நெ தமிழன் கீசாக்கா.

      நெ தமிழனின் 1 வது பதில் பொருத்தமாக இருக்கு பாடல் வரிக்கு. நான் யோசித்தேன் அதெப்படி இப்போதே வருங்காலம் இனிமை எனத் தெரிந்து கொள்ள முடியும் என....
      அதிக துன்பம் அனுபவிப்போருக்கு சொல்லுவினம் எல்லோ... வருங்காலம் மகிழ்ச்சியாக அமையும் இப்போ வருந்தாதே என்று...

      கீசாக்கா நீங்க பார்க்காத படமொன்று ஜொள்ளுங்கோ.

      இதுக்கு இன்னும் பதில்களை அன்போடும் பண்போடும் அக்கறையோடும் ஆசையோடும் பணிவோடும் எடிர் பார்க்கிறேன்ன்ன்ன்....

      நீக்கு
    5. ///ஞானி:) அதிரா7 டிசம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 12:42
      ///வருங் காலம் இன்பம் என்று
      நிகழ்காலம் கூறும் கண்ணே///
      இப்படி ஒரு வசனம் வருகிறதே அது எப்படி///


      ஹையோ ஹையோ நமக்குன்னே சான்ஸ் தேடி தேடி வருதே :)
      அது மியாவ் நிகழ்காலத்தில் நீங்க போடற குறிப்புக்களை பார்த்து எப்படியாவது மனசில் பதிய வச்சுக்கிட்டா வருங்காலத்தில் உங்களை கலாய்ச்சி இன்ப மழையில் நனையலாம்னு மீனிங் :))))))

      நீக்கு
    6. ///அதிக துன்பம் அனுபவிப்போருக்கு சொல்லுவினம் எல்லோ... வருங்காலம் மகிழ்ச்சியாக அமையும் இப்போ வருந்தாதே என்று...//

      https://i.imgur.com/qiW0nS1.jpg

      நீக்கு
    7. வரும் காலம் இன்பமாக இருக்கும் என்று நம்புவது பாஸிட்டிவ் திங்கிங்! "நாளைப்பொழுது என்றும் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கைக் கொள்வாயடா..." என்கிற சீர்காழி பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?

      நீக்கு
    8. கீதா அக்கா, நெல்லைத்தமிழன் எல்லாம் பதில் சொல்லி விட்டார்கள். ஏஞ்சல் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாக உபயோகப்படுத்திக் கொண்டு விட்டார்!

      நீக்கு
    9. ஜெரி கண்ணாடியைத் தூக்கிப்போட்டுப் பார்க்குதே:) இது நல்லதுக்கில்லையே:)... கர்ர்ர்ர்ர்ர்:)..

      நீக்கு
  18. @sriram

    /////'முத்துராமன், சிவாஜி, ஜெய்சங்கர் அங்கிள் படமா போடறேன்' என்று ஏஞ்சல் சொல்லக்கூடும். ஆனால் பாடலுக்குதான் முக்கியத்துவம் என்று சொல்லிக் கொள்கிறேன்!///


    https://memegenerator.net/img/images/300x300/15949373.jpg

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமேல் சிவகுமாரையும் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்வீர்கள் இல்லையா?

      நீக்கு
    2. அவர் ஆல்ரெடி இருக்காரே :))))))))))))))))))))))))
      ஆனா இன்னும் என்னை வியப்படையவைக்கும் ஒரே ஒரு விஷயம் ..நிஜ வாழ்வில் செம ஹானஸ்ட் ஜென்டிமென் ஆனா சில காட்சிகள் படங்களில் பாடல் மற்றும் ஸ்ஸ்ஸ்ஸ் ரச ரச காட்சிகள் எப்படி நடிக்க ஒத்துக்கொண்டார்னு .ஆனா சிவா அங்கிளை எனக்கு உயர்ந்த மனிதன் அப்புறம் ஒரு பாலச்சந்தர் படம் வருமே அந்த ஜெயசித்ராகூட கத்திரி ஸ்கிப்பிங் போடுவாங்க .. சொல்லத்தான் நினைக்கிறேன் ? அதில் பிடிக்கும் அப்புறம் கந்தன் கருணையிலும் ரொம்ப பிடிக்கும் ..

      நீக்கு
  19. ஹை பாட்டும் பாலு சாரின் குரலும் சூப்பர் ..
    படத்தில் லக்ஷ்மியும் இருக்காங்களா ?
    நான் இந்த படத்தை பார்க்கவில்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படம் பார்க்கவில்லை ஏஞ்சல். பாடல் பிடிக்கும். நான் எஸ் பி பி யின் ரசிகன்...

      நீக்கு
    2. /// நான் எஸ் பி பி யின் ரசிகன்...//
      அது தான் யூனிவெர்ஸ்க்குக்கே தெரியுமே :))))))))
      அப்போ பேட்ட பாட்டை கேட்ருப்பிங்க :)))))))))))
      சித்தப்பாக்கு அவர் குரலில் அமைந்த எத்தனையோ பாட்டுக்கள் எனக்கு பிடிக்கும் ..விழியிலே மலர்ந்தது அப்புறம் எத்தனையோ அடுக்கிட்டெ போலாம் ...

      நீக்கு
  20. அக்னி சாட்சி படத்தில் சிவகுமார் மிக நன்றாக நடித்திருப்பார். சரிதா கொஞ்சம் கீச் கீச்சென்று கத்தினாலும் நன்றாகவே நடித்திருப்பார்.
    பாலச்சந்தருக்கே உரிய இயல்பான நகைச்சுவை ஆங்காங்கே தென்படும்.
    நர்கீஸ் நடித்திருந்த ராத் ஆர் தின் கிட்டத்தட்ட இதே போன்ற ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியை டீல் செய்திருந்த படம்.

    பதிலளிநீக்கு
  21. இப்படி ரசிப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்...! 'சரி'தா னே...!!!

    பதிலளிநீக்கு
  22. நான் ரசித்த பாலசந்தர் பாடங்களில் இதுவும் ஒன்று. சிவக்குமாரும், சரிதாவும் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்கள். அறையின் ஒரு சுவர் முழுதுவம் வைக்கப்பட்டிருக்கின்ற சரிதாவின் படம் மிகவும் அழகாக இருக்கும். அப்போது அதனை லாரியில் ஏற்றிவந்தார்கள் என்று படித்த நினைவு. புன்னகை, கோபம், ரசனை, ஆதங்கம், ஏக்கம் என அனைத்து உணர்வுகளையும் சிறப்பாக சரிதா வெளிப்படுத்தியிருப்பார்.

    பதிலளிநீக்கு
  23. SPB நன்றாகப் பாடியுள்ளார்.
    ஆனால் கதை என்ன கழுத்தறுப்போ தெரியவில்லை. Video is a torture. ஒரு மனம்பிறழ்ந்த கேரக்டரைக் காண்பிக்க இந்த டைரக்டர்கள் படும்பாடு இருக்கிறதே.. சகிக்கமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
  24. காட்சியைக் காணாமல் , பாடலை ரசிக்கலாம். கதா நாயகியின் மனப் பிறழ்வைக் காட்ட அவர் தலைக்குள் பாலே ஆடும் பெண் பார்க்கும் போது எனக்கே தலை சுற்றும்.
    எனக்குப் படம் பிடிக்கவில்லை. எஸ்பி பி பிடிக்கும். இதமான பாடல்.
    வரும் அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  25. அருமையான பாடல் ஸ்ரீராம். இது அக்னிசாட்சி படம் என்பதும் தெரியும ஆனால் படம் பார்த்ததில்லை. இந்தப் படத்தின் கதை கொஞ்சம் என் கசின் சொல்லியதால் பார்ப்பதில் ஆர்வமும் இல்லை..

    ஆனால் பாடல் கேட்டிருக்கேன். இந்தப் பாடல் எஸ்பிபி வாவ் போட வைப்பார் வாய்ஸ் செம....மாடுலேஷன் உட்பட....அவரா குழைக்கிறாரா இல்லை அவர் வாய்ஸே அப்படி அழகா குழையுதா ஃபீல் கொடுத்து என்று வியக்க வைக்கும்...

    மத்தியமாவதி ராகம் ஸ்ரீராகம் கலந்து அதன் அடிப்படை போல இருக்கு....

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!