வியாழன், 27 டிசம்பர், 2018

ஒரு ஒற்றனின் கதையிது..


திடீரென எரிக் எரிக்ஸனை  கண்டாலே அவரது உறவுகளும், நட்புகளும் விலகி ஓடினர்.  ஏன்? 


ஏனென்றால் அவரது பெயர் கருப்புப்பட்டியலில் இடம் பெற்றிருந்ததுதான்.

சுவீடனில் வசித்துவந்த அவர் எண்ணெய்க் கம்பெனி ஒன்றில் விற்பனையாளராக பணி புரிந்து வந்தவர், அந்த வேலையை உதறிவிட்டு தானே சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி பெட்ரோலியத்தை வரவழைத்து விற்பனை செய்யத் தொடங்கினார். 

என்ன தவறுசெய்தார் அவர்?  அவர் ஜெர்மனியிலிருந்து எண்ணெய் வரவழைத்து விற்பனை செய்யத் தொடங்கியதுதான் காரணம்.  இரண்டாம் உலகப்போர் தொடங்கிய சமயம் அது.  எனவே இவர் ஜெர்மனிக்கு சென்று வருவது, அவர்களுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருப்பது தவறானது.  

வியாபாரம் சம்பந்தமாக வ ஜெர்மனிக்கு இவர் சென்ற விமானம் நடுவில் நிறுத்தப்பட்டு அவர் சோதனைக்குள்ளாக்கப்பட்டார்.  ஒன்றும் கண்டுபிடிக்க முடியாதகால் விட்டு விட்டார்கள்.

ஜெர்மனியில் எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு நெருக்கமானார் - அவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவு.  ஒன்று மட்டும் ரகசியமாக நடந்தது.  அவர் வான்வென்ஷ் என்பவரைச் சந்தித்ததைப் பற்றியோ, இவர் கொடுத்த ஒரு பேப்பரை அவர் ஒரு பெட்டியிலிட்டு அவர் வீட்டுத் தோட்டத்தில் புதைத்தது பற்றி வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

இவர் வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கிய நேரம் நேசநாடுகளின் விமானங்கள் ஜெர்மனியின் எண்ணெய்க் கிணறுகளைக் குறிபார்த்து சிதைக்கத் தொடங்கின.  ஜெர்மனியின் ஒரு பெரிய தொழில் அதிபருடன் இவர் பேசிக் கொண்டிருந்த இடத்திலேயே கூட குண்டு விழுந்தது.  இவர் வியாபாரம் கொஞ்சம் சரிவைச் சந்தித்தாலும் புதிய திட்டம் ஒன்றை வகுத்தார் எரிக்ஸன்.  

மிகப்பெரிய  எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை சுவீடனில் நிறுவும் அவரது திட்டம் ஜெர்மனியின் ஜெர்மன் நாஜி அரசாங்கத்தின் மிகப்பெரும் அதிகாரியான ஹிம்லருக்கும், ஹெர்மன் கோரிங்குக்கும்  பிடித்துப்போக அதற்கான ஏற்பாடுகள் நடந்தன.  போரில் ஜெர்மனி தாக்கப்பட்டாலும் பெருமளவு பணம் நேசநாடுகளின் இடத்தில வைத்து காப்பாற்றுவதற்கு அரிய வாய்ப்பாகப் பார்த்தார் அவர்.  ஜெர்மனியின் எந்த எண்ணெய் வயலையும், சுத்திகரிப்பு ஆலையையும் தடையின்றி பார்க்கும் வாய்ப்பு எரிக்ஸனுக்குக் கிடைக்க, அவர் அந்த வாய்ப்பை நன்றாகக் பயன்படுத்திக் கொண்டார்.

யுத்தம் முடிந்து ஜெர்மனி தோற்றதும் ஸ்டாக்ஹோமில் எரிக்ஸனுக்கு பெரிய விருந்து ஒன்று அரசாங்கத்தால் அளிக்கப்பட்டது.  அவரின் நண்பர்கள், உறவுகள் அனைவரும் வியப்புடன் கலந்து கொண்ட அந்த விருந்தில்தான் பெரிய உண்மை அவர்களுக்குத் தெரிய வந்தது.

ஆம், எரிக்ஸன், நேசநாடுகளுக்காக ஜெர்மனியில் உளவு வேலை பார்த்த .திறமையான ஒற்றர்.  அவர் சென்ற விமானத்தை நிறுத்தி சோதனையிட்டதும், அவர் பெயர் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டதும் எல்லாமே எரிக்ஸனின் யோசனைகள்தான்.  அவர்  தந்த உளவுத் தகவல்களின் உதவியால்தான் ஜெர்மனியின் எண்ணெய் வளம் அழிக்கப்பட்டது.  அவர் வியாபாரத்தில் ஜெர்மனியில் இருந்து வாங்கிய எண்ணெய் வளம் ஜெர்மானியருக்கெதிராகவே பயன்படுத்தப்பட்டது.

உளவாளி என்றால் எப்படி இருக்க வேண்டும்?  எப்படி ஒரு நாட்டையே ஏமாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணம்.  1890 இல் பிறந்த இவர் 1983 ஜனவரி வரை வாழ்ந்திருக்கிறார்.



குருதிப்புனல் படத்தின் கதை நினைவுக்கு வருகிறதா?  கோவிந்த் நிஹ்லானியின் த்ரோகால் ஹிந்திப் படத்தின் தழுவல் குருதிப்புனல். 




======================================================================================================

தினமலர் திண்ணை பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது கீழே உள்ள பகுதி.  இதில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகம் பற்றிய பகிர்வு நமது தளத்தில் ஐந்து வருடங்களுக்கு முன் பகிரப்பட்டது.

*********

பத்திரிகையாளர், 'இந்து நேசன்' லட்சுமிகாந்தன், கொலை வழக்கில் கைதான ஜெயானந்தன், உடனே, 'அப்ரூவர்' ஆனான். சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில், பாகவதரையும், என்.எஸ்.கிருஷ்ணனையும் சந்தித்ததாகவும், நச்சுப் பாம்பை ஒழித்துக் கட்ட, என்ன செலவானாலும் ஏற்பதாகக் கூறி, அவர்கள், சதித்திட்டம் தீட்டியதாக வாக்குமூலம் கொடுத்தான். 'எங்கள் கவுரவத்திற்கும், புகழுக்கும் கேடு விளைவிக்கும் வகையில், துரோகம் செய்ய மாட்டோம் என்று, சத்தியம் செய்ய வேண்டும்...' என்று, பாகவதர் கேட்டார். அதன்படியே, உப்பு, வெற்றிலை வைத்து, சத்தியம் செய்து கொடுத்தானாம்.



பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் ராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பம்பாயிலிருந்து வந்த, வழக்கறிஞர் கே.எம்.முன்ஷியின் வாதத்தின் பேரில், சதி ஆலோசனை நடந்ததாக சொல்லப்படும் நாளில், ஸ்ரீராமுலு நாயுடு, பம்பாய் தாஜ் ஓட்டலில், ஆர்.கே.சண்முகம் செட்டியாருடன் இருந்தார் என்று நிரூபித்து, ஸ்ரீராமுலு விடுதலை பெற்றார்.



முன்ஷியின் ஒரு நாள் பீஸ், அக்காலத்திலேயே, எழுபது ஆயிரம் ரூபாய்.
முன்ஷியின் வாதத்தால், ஸ்ரீராமுலு விடுதலையானதைக் கண்ட என் எஸ்.கே., தானும், முன்ஷியை வழக்கறிஞராகக் வைத்துக் கொண்டார். முன்ஷியின் வாதத்தைக் கேட்டவுடன், கோர்ட்டு, தன்னையும் விடுவிக்கும் என்று, நம்பிக்கையோடு இருந்தார்

சதி நடந்ததாகச் சொல்லப்படுகிற நாளில், கிருஷ்ணன், மாடர்ன் தியேட்டர்சின் படப்பிடிப்பில் இருந்தார் என்று, நிரூபிக்க முயன்றார் முன்ஷி.

அப்போது, மாடர்ன் தியேட்டர்சின் படம் டைரக்ட் செய்து வந்தவர் எம்.வி.ராமன் என்பதால், அவர் சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டார்.

'நவ., 7ம் தேதி, என்.எஸ் கிருஷ்ணன், 3மாடர்ன் தியேட்டர்சில் இருந்தார்...' என்று, சாட்சி அளித்தார் ராமன். 'அன்று, பக்த ஹனுமான் படத்துக்காக, ஒரு தந்திரக் காட்சி எடுத்துக் கொண்டிருந்தோம். மாலையில், என்.எஸ்.கிருஷ்ணன் வந்தார்...' என்று, கேமராமேன் பெய்லஸ்சும், 'மாலையில், மாடர்ன் தியேட்டர்சில் டிபன் சாப்பிட்டார்...' என்று, சவுண்டு இன்ஜினியர் பிள்ளையும் சாட்சி கூறினார்.

ஆனால், இந்த சாட்சிகள் எதுவும் பலிக்கவில்லை.

என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், பாகவதருக்கும், ஆயுள் தண்டனை என்று, தீர்ப்பானது.

— 'புகழ் பெற்ற வழக்குகள்' என்ற நுாலிலிருந்து...


=======================================================================================================

மழையைக் காணோமே என்று ஏங்கி கொண்டிருக்கும் நேரத்தில் மழையை வெறுக்க வைக்க ஒரு வழி...!




==========================================================================================

இந்த வாரம் அம்புடுதேன்......

92 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்

    வல்லிம்மா! இனிய மாலை வணக்கம்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. மய்யம் முதல்ல மையமா கண்ணுல பட்டுருச்சு!! ஹா ஹா குருதிப் புனல் ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல்னு வேற எங்க வீட்டுல சொல்லிட்டுருப்பாங்களே! நான் பார்த்ததில்லை படம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலப்படமும் இருக்கலாம் கீதா. அதைப் பார்க்கவில்லை. ஆனால் த்ரோகால் என்கிற ஹிந்திப் படத்தின் தழுவல்.. சொல்லி இருக்கிறேனே...

      நீக்கு
    2. ஆமாம் நீங்க சொல்லிருக்கறதைப் பார்த்துட்டுத்தான் நான் எங்க வீட்டுத் தகவலைச் சொன்னேன்!!! ஹிஹிஹி..

      கீதா

      நீக்கு
  3. எரிக்ஸன் பற்றி ஏற்கனவே கொஞ்சம் எங்கேயோ வாகித்ததுண்டு.

    அந்த புதைத்தது என்னவாக இருக்குமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதைத்தது என்னவாக இருக்கும்?

      இது ரொம்ப நாட்களாக டிராஃப்டில் தூங்கி கொண்டிருந்த பதிவு. இன்று விடுதலை கொடுத்தேன்! அதில் என்ன இருந்தது என்று படித்தேன். நினைவில்லை இப்போது!

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அதிசய ஒற்றர் எரிக்சன்.
    குருதிப்புனல்னால் கௌதமி ,கமல் சீன் தான் நினைவுக்கு வரும். பத்திரிக்கைகளில் அதிகம் பேசப்பட்ட காட்சி.ஆங்கிலம், இந்தி தாண்டி தமிழுக்கு வந்ததா. சரிதான்.

    மழையை வெறுக்க வைக்கும் கவிதை 2016க்கு சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா...

      கமல் படம் என்று வந்தால் சில எதிர்பார்ப்புகள் இருக்குமே...!

      நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  5. எரிக்ஸன் பற்றிய செய்திகள் வியப்பைத் தருகின்றன நண்பரே

    பதிலளிநீக்கு
  6. எரிக் எரிக்சன் பத்தி ஒரு டாக்யூமென்டரி பார்த்திருக்கேன் ..
    பொதுவாவே உலகப்போர் மற்றும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் சம்பவங்கள் வலி ஏற்படுத்தும் .
    லஷ்மிகாந்தன் கொலை வழக்கு பிறகு என்ன ஆனது ? பாகவதர் ,என் எஸ் கே போன்றோர் ஆயுள் தண்டனை முடிந்து வந்தார்களா ?
    எதற்கு இந்த கொலை நடந்தது ? பிளாக்மெயில் ??

    குருதிப்புனல் பார்கவில்லை ..
    மழை கவிதை :) சிரிஞ்சில் காவிஸ்கான் /ஜெலுசில் எடுத்து வானத்துக்கு அடிக்கவும் வானத்தோட வயிறு சரியாகிடும் .

    தூங்க செல்கிறேன் :) நாளைக்கும் பிசி அதனால் இப்போவே வந்துட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாவே உலகப்போர் மற்றும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் சம்பவங்கள் வலி ஏற்படுத்தும்//

      ஆமாம் ஏஞ்சல் நானும் அதைத்தான் சொல்லிருக்கேன் ஹைஃபைவ்!

      அது சரி இங்கயும் புதன் கேள்விகளா!! ஹா ஹா ஹா ஹா ..நேற்று பாத்தீங்களா..உங்க டே புதன்!!!

      நான் போய்ப் பார்க்கறேன் உங்க அட்டெண்டென்ஸ்...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. எரிக்சன் பற்றி டாகுமெண்டரி? நான் தெரியபோது கிடைத்து, பார்த்த நினைவில்லை.

      எம் கே டி என் எஸ் கே பற்றிய தகவல்களை கீழே நண்பர்கள் கொடுத்து விட்டனர்.

      நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
    3. பிபிசி /RT இரண்டாவது ரஷ்ய தொலைக்காட்சி இந்த ரெண்டில் அநேகமா இரண்டாவதில் பார்த்திருப்பேன் .ரஷ்யன்ஸ் எல்லா வில்லங்க ஹீரோஸ் பற்றி போடுவாங்க :) சாட்டிலைட்டில் வரும் ..இதில் போட்டாலும் யூ டியூபில் வராது .அதுவும் பிபிசி ஐ பிளேயரில் போட்டுட்டு கொஞ்ச நாளில் எடுத்துடுவாங்க வீடியோசை ..

      நீக்கு
    4. ஓ... ஆனால் அவற்றையும் பார்க்க பொறுமை வேண்டும். ஒரு மூட் செட் ஆகவேண்டும்! நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  7. எரிக்ஸன் செய்தி வாசித்த போது ஹப்பா என்னா தில்லுனு தோனிச்சு. உளவு வேலை என்பது எத்தனை ரிஸ்கானது.!!!!

    ஆனால் ஒன்றே ஒன்று இப்படி நாடுகள் ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டு போர், குண்டு வீச்சு, மண்,தன்ணீ, பொன், எண்ணெய்க்குச் சண்டை இப்படியானவற்றைப் பார்க்கும் போதும், கேட்கும் போதும் மனசு கஷ்டப்படத்தான் செய்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

      கவுண்டமணி ஸ்லாங்கில் படிக்கவும்!

      நீக்கு
  8. துரை எங்கே காணோம்? இன்னும் பிரச்னை? பிரார்த்திக்கிறேன். வந்தவர்க்கும், வரவிருப்போர்க்கும் நன்றி கலந்த வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம் வாழ்க...

      தங்கள் அன்பினுக்கு நன்றி...

      என்ன ஒரு பிரச்னை என்றால்
      எபியில் பதிவு வெளியானதும் வருவதற்கு இயலாது...

      இந்தப் பதிவைக் கூட 3:35 க்குப் பார்த்தேன்...

      வருகை வைக்க இயலவில்லை..

      காரணம் - தூக்கம்...

      மார்கழி 12 பதிவை முடித்துவிட்டுப் படுக்கும்போது 11:30..

      மாலை ஆறு மணிக்கு வந்தால் இணையம் இழுபறி...

      எனவே 9 மணிக்கு மேல் தான் வேலையை ஆரம்பிப்பது...

      எல்லாம் முடித்து விட்டு பதிவை மூடித் திறந்தால் நெல்லிக்காய் சிதறியது போல இருக்கும்..

      மறுபடியும் 1,2,3,4 -

      எப்படியோ ஓடிக்கொண்டிருக்கிறது..

      இன்னும் அடுத்த வேலை வழங்கப்படவில்லை...

      மற்றபடி பிரச்னை ஏதும் இல்லை..

      நலம் வாழ்க...

      நீக்கு
    2. வணக்கம் துரை செல்வராஜூ ஸார். ஆம், உங்கள் பதிவுகளுக்கு நீங்கள் மிக அதிகமுழைக்க வேண்டி இருக்கும் என்று தெரியும். இணையம் வேறு வேகம் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

      நீக்கு
  9. முதலில் ஒற்றன் எனப் பார்த்ததும் சித்தப்பாவின் நாவலோ என நினைத்தேன். எரிக்ஸன் பற்றி ஓரளவுக்குப் படித்திருக்கிறேன். இத்தனை விபரங்கள் கொடுத்தமைக்கு நன்றி. உங்க உல(க்)கை நாயகர் எந்தப் படத்தைத் தன் சொந்தக் கதையில் எடுத்தார்? எல்லாமே காப்பி, பேஸ்ட் தானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பெரும்பான்மை ரசிகர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்பதால் பெயர் வாங்கிக்கிறார்.

    மழைக்கவிதை எனக்குச் சிரிப்பை வரவைச்சது. (ம்ம்ம்ம்? நான் ஒரு தனிப்பிறவியோ?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​கீதாக்கா... மழைக்கவிதை பார்த்தல் சிரிப்புதான் வரும். அப்படி நினைத்து ​எழுதியதுதான் அது.

      நீக்கு
  10. கவிதை செம!!!! ஸ்ரீராம் எனனா கற்பனை!!! வாவ்!!! சத்தியமா வியக்கேன்!!!!

    ஆனா இப்ப மழை மூனு வருஷமா சென்னைல இல்லையே ஸ்ரீராம்...எல்லாரும் தண்ணி லாரியை சார்ந்திருக்கும்படி ஆகிடுச்சே...இப்படியே போனா தண்ணிக்கு என்ன செய்யறது...

    ஆனா உங்க கவிதை பார்த்து வெறுப்பு வரலையே!!! ரசனையாக இருக்கே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரெங்கன். ஆமாம் சென்னையில் மழையையே காணோம்.

      நீக்கு
  11. என்.எஸ்.கே.யும், தியாகராஜ பாகவதரும் பின்னாட்களில் விடுதலை ஆனார்கள் என நினைப்பு. ஏனெனில் ரசிகர்கள் எல்லாம் அவர்கள் விடுதலையைக் கொண்டாடினார்கள் என அம்மா, அப்பா சொல்லிய நினைவு. எம்.கே.டி.யோட சிவகவி படத்தைத் திரும்பவும் (அவர் விடுதலைக்குப் பின்னரோ) போட்டப்போ ஓடலைனும் சொல்லிப்பாங்க. அல்லது விடுதலைக்குப் பின்னர் அந்தப் படத்தில் நடிச்சாரா? சரியாத் தெரியலை. சினிமா மன்னர்கள், மன்னிகள் தான் சொல்லணும். ஆனால் எம்.கே.டி. வறுமையில் வாடினதாகச் சொல்வார்கள். தங்கத்தட்டில் சாப்பிட்டாராம். பின்னாட்களில் சாப்பிடவே வழியில்லாமல் சிரமப்பட்டதாய்ச் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம் கே டி மாறும் என் எஸ் கே பின்னாட்களில் விடுதலை ஆனார்கள். என் எஸ் கேயாவது அப்புறமும் கொஞ்சம் பணம் பார்த்தார். எம் கே டி இறங்குமுகமானார்.

      நீக்கு
  12. எரிக்சன் பற்றிய தகவல் புதிது.

    கொலை வழக்கு பற்றி படித்தது உண்டு.

    கவிதை :)

    பதிலளிநீக்கு
  13. எரிக்ஸன் செய்த வேலை நேச நாடுகளுக்கு தெரிந்து இருந்தால் அன்றே எரிக்ஸனை உயிரோடு எரிச்சு இருப்பாங்கே...

    97 வயதுவரை வாழ்ந்து இருக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  14. எரிக்ஸன் பற்றிய தகவல்கள் ஸ்வாரஸ்யம். அவர் நல்லவரா கெட்டவரா என்று நானே கேள்வி கேட்டு"ஒற்றன்" என்று நானே பதிலும் கொடுத்து கொண்டேன். அதற்கான நியாயங்களும், தர்மங்களும் தனி.

    நான் த்ரோகால், குருதிப்புனல் இரண்டுமே பார்த்தேன். முன்னதைவிட பின்னது கொஞ்சம் பாலீஷ்டாக இருந்தது. கமல் எப்போதுமே ரீமேக் படங்களை திறமையாக செய்வார்.ஆனால் க்ளைமாக்ஸ் வழக்கம் போல் சொதப்பல். தீவிரவாதத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட படத்தை "தீவிர வாதிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று பினாத்தி முடித்திருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு அக்கா.. நான் ஹிந்திப் படம் பார்த்ததில்லை. கு பு மட்டும் ஒருமுறை பார்த்தேன்.

      நீக்கு
  15. கு.பு.வில் மரணமடைந்த தங்கள் கணவர்களின் சேவையை பாராட்டி வழங்கப்பட்ட விருதை வாங்கும் காட்சியில் தான் கௌதமியை விட திறமையான நடிகை என்பதை கீதா நிரூபித்திருப்பார்.

    மழையைப்பற்றி வித்தியாசமாக யோசித்திருக்கிறீர்கள்.கிருஷ்ணரின் வாந்தி கூட இனிமை என்று மதுராஷ்டகத்தில் வரும். இயற்கை யின் எல்லா விஷயங்களும் இனிமைதான்.

    பதிலளிநீக்கு
  16. @ஏஞ்சல்:எம்.கே.டி.யும், என்.எஸ்.கேயும் மிகப்பெரிய ப்ளே பாய்கள். அந்த காலத்தில் மஞ்சள் பத்திரிகைகள் என்று உண்டாம். அதில் ஊரில் இருக்கும் பெரிய மனிதர்கள் செய்யும் சின்னத்தனங்கள் வெளிவரும். அப்படிபட்ட ஒரு மஞ்சள் பத்திரிகையாசிரியர் லக்ஷ்மிகாந்தன். அவர் இவர்கள் இரண்டு பேரையும் பற்றி தன்னுடைய பத்திரிகையில் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்திருக்கிறார். அதனால் கடுப்பான எம்.கே.டியும், என்.எஸ்.கேயும் அந்த லக்ஷ்மிகாந்தனை போட்டுத்தள்ள முடிவெடுத்து அவனை ஆளை வைத்து கொலை செய்து விட்டார்கள். பின்னாளில் விடுதலை ஆனாலும் அவர்களால் சரிந்த தங்கள் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த முடியவில்லை. இறுதி காலத்தை வறுமையில்தான் கழித்தார்கள்.
    லஷ்மி காந்தனும் கணவான் கிடையாது. மஞ்சள் பத்திரிகை நடத்துபவன் எப்படி கணவானாக இருக்கும்? யெல்லோ ஜர்னலிசம் என்பதே ஒரு வகை ப்ளாக் மெயிலிங்தானே?



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானுக்கா ..அந்த காலத்திலேயே இப்படிலாம் நடந்துருக்கே !!

      நீக்கு
  17. சினிமா உலகில் நிலவும் நம்பிக்கைகளுல் ஒன்று கதாநாயகன் வெள்ளைக்குதிரையில் சவாரி செய்வது போல வரும் படங்கள் ராசி கிடையாது என்பது. ஒன்று படம் தோல்வி அடையும். அல்லது கதாநாயகனே தோல்வி அடைவாராம். பாகவதர் கடைசியாக கதாநாயகனாக நடித்த ஹரிதாஸ் படத்தில் அவர் வெள்ளைக்குதிரையில் பாடிக்கொண்டு வருவாராம். படம் சூப்பர் டூப்பர் ஹிட். ஒரு வருடம் ஓடியதாம்.ஆனால் அவருடைய சரிவு அதில்தான் தொடங்கியதாம்.

    பதிலளிநீக்கு
  18. குருதிப்புனல் படம் முதல்நாள் முதல் ஷோ பார்த்தேன். அப்ப பிடிக்கல. ஆனா, இப்ப பிடிக்குது

    பதிலளிநீக்கு
  19. குருதிப் புனல் படத்தின் தலைப்பு எதன் தழுவல்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீழ்வெண்மணி படுகொலைகள் பற்றி இந்திரா பார்த்தசாரதி எழுதி சாகித்ய அகாதமி பரிசு வாங்கிய கதைத்தலைப்பு ஜீவி ஸார்.

      நீக்கு
    2. கரெக்ட். கங்கிராட்ஸ் ( நடந்த ஒரு நிகழ்வுக்கு உண்மைக்குப் புறம்பான கற்பனை கொண்டிருந்த அந்த நாவலுக்கு எப்படி சாகித்ய அகாதமி பரிசு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. )

      பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய 'ராமையாவின் குடிசை' தத்ரூபமாக கீழ்வெண்மணி நிகழ்வுகளை பிரதிபலித்த ஆவணப்படம்.

      நீக்கு
    3. நன்றி ஜீவி ஸார். ராமையாவின் குடிசை PDF ல கிடைத்தால் படிக்கலாம்!

      நீக்கு
  20. விடுதலையானதற்குப் பிறகு பாகவதர் 'சிவகாமி' என்றொரு படம் எடுத்தார். டைரக்ஷன் கூட அவரே. படம் காலைவாரி விட்டதினால் நொடித்துப் போனார். அந்த இடத்தில் ஆரம்பித்தது அவரது சறுக்கல்.

    பாகவதரின் இறுதிக்கால வாழ்க்கையை நினைவுறுத்துகிற மாதிரி ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை கிளாசிக் வரிசையில் வரும். சிறுகதையின் தலைப்பு தெரிந்தவர்கள் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி ஸார்...

      ராஜமுக்தியோ ஏதோஒருபடம் கூட அவர் விடுதலைக்குப் பின்தான் வந்ததோ?

      சிவகாமி படத்தில் டி எம் எஸ் பாடிய இனிய பாடல் ஒன்று உண்டு. வானில் முழு மதியைக் கண்டேன்... வனத்தில் ஒருபெண்ணைக் கண்டேன்...

      நீக்கு
    2. //பாகவதரின் இறுதிக்கால வாழ்க்கையை நினைவுறுத்துகிற மாதிரி ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை கிளாசிக் வரிசையில் வரும். சிறுகதையின் தலைப்பு தெரிந்தவர்கள் சொல்லலாம்.//

      படித்திருக்கிறேன். எங்கள் பைண்டிங் கலெக்ஷனிலும் இருக்கிறது.. எங்கே தேடுவேன்... நான் எங்கே தேடுவேன்...!!

      சுயதரிசனம்?

      நீக்கு
    3. சுயதரிசனம் இல்லை. (சிறு குறிப்பு: அந்த ரிக் ஷாக்காரன் வாழ்ந்து கெட்ட அந்த ஆளை அவர் கூட்ப்பிடும் பொழுதெல்லாம் அவர் குறிப்பிடும் நபர் வீட்டிற்கு அழைத்துச் செல்வான்.)

      நீக்கு
    4. சிவகாமி தான் அவரின் கடைசிப் படம். இந்தப் படத்தின் இறுதிக் காட்சிகள் எடுப்பதற்கு முன்பேல்யே பாகவதர் காலமாகிவிட்ட்டார். அவர் மறைவுக்குப் பிறகு படம் ரிலீஸ். இந்தப் படத்திற்கு படு கிண்டலாக குமுதம் விமரிசனம் எழுதியிருந்தது.

      நீக்கு
    5. வானில் முழுமதியைக் கண்டேன்.. அற்புத்யமான பாடல். கவிஞ்ர் கா.மு.ஷெரிப்பின் பாடல் தானே இது?

      நீக்கு
  21. அபிலாஷ் சந்திரன் தெரியுமோ? அவரது பதிவு தளத்தை எங்கள் பிளாக் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறேண்:

    http://thiruttusavi.blogspot.com

    பதிலளிநீக்கு
  22. அபிலாஷூக்கு நேர் எதிரான கேசவமணி இன்னொருத்தர். அவரின் தளம் இது.


    https://kesavamanitp.blogspot.com/2014/08/blog-post_25.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லி இருக்கும் வலைத்தளங்களுக்கு சென்று பார்க்கிறேன் ஜீவி ஸார்.

      நீக்கு
  23. முழுமையடையாத (சில) தகவல்கள் வியக்க வைக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைத்த விவரங்களைக் கொடுத்திருக்கிறேன் DD. லிங்க்கும் கொடுத்திருக்கிறேன் பாருங்கள். அங்கு சென்றும் படிக்கலாம்.

      நீக்கு
  24. எரிக்ஸன் கதை கேள்விப்பட்டதுபோல இருக்கு, ஆனா இப்போ படிக்கும்போது நடுங்குது:).. நமக்கும் யாரெல்லாம் ஒற்றர்கள் இருக்கிறார்களோ ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒற்றர்கள் நம்மை என்ன செய்யப் போகிறார்கள் அதிரா?

      நீக்கு
  25. எதுக்கு இப்போ இடைவேளையிலே சட்டென “குருதிப்புனல்” நியாபகம் வந்திருக்கு?:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ எரிக் கதையைப்போல ஒரு கதையோ? நான் படம் பார்த்ததில்லை, அதனால யோசித்தேன்.

      நீக்கு
    2. அங்கும் இந்த டபுள் ஏஜென்ட் கதை வருகிறதே...

      நீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    ஒற்றன் எரிக்ஸன் பற்றிய தகவல்களை படித்தது நினைவுக்கு வருகிறது. தங்கள் பதிவில் மிகவும் விபரமாக படித்துணர்ந்தேன். இப்படியும் தன் நலனுக்காக ஒரு நாட்டையே அழிக்கும் அளவுக்கு வன்மமான மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் போலும்.!

    குருதிப் புனல் பார்த்ததில்லை.. தகவல்களுக்கு நன்றி.

    புகழ் பெற்ற மனிதர்கள் ஆனதினால், புகழ் பெற்ற வழக்குகள் போலும்..! எனினும் குற்றம் குற்றந்தானே.யாருமே புகழுக்காக குற்றங்கள் இழைத்தால் தவறில்லையா? நீதி தேவதை மன்னித்தால் சரிதான்..

    மழை கவிதை அருமையாக உள்ளது..
    வெறுக்க முடியாத கவிதை. பாராட்டுக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..

      இந்த விவரங்கள் முன்னரே படித்திருக்கிறீர்களா?

      குருதிப்புனல் பார்க்க கொஞ்சம் பொறுமை வேண்டும்!

      உளவு வேலைகளிலும், போர்க்களங்களிலும் நியாய தர்மங்களே வேறுதானே அக்கா?

      கவிதை பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  27. இம்முறை ஏதோ புத்தகங்களை வைத்து ஏனோ தானோ வென பொழுதை முடிக்கிறீங்க போலிருக்கே:)..

    வயிறு சரியில்லா வானம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா நாங்கள் மழியில ரசிச்சு நனையும்பொது இதை நினைச்சல்:) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கெனவே சொன்ன மாதிரி இது ரொம்ப நாட்களாய் டிராஃப்டில் தூங்கிய பதிவு. ஒப்பேற்ற போட்ட பதிவு அல்ல. இதை சுவாரஸ்யமாய்ப் படிப்பபவர்களும் இருப்பார்கள் என்றுதான்....

      //ஆனா நாங்கள் மழியில ரசிச்சு நனையும்பொது இதை நினைச்சல்:) ஹா ஹா ஹா..//

      ஹா... ஹா... ஹா....

      நீக்கு
  28. எரிக்சன் ஒரு டபிள் ஏஜென்டா என் ஏஸ் கிருஷ்ணன் பகவதர் கேஸ் பற்றி ராண்டார் கை என்பவர் விலாவாரியக எழுதி இருக்கிறார் படித்துப்பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி ஸார்... புகழ் பெற்ற கொலைவழக்குகள் புத்தகம் பற்றி ஒரு படித்ததன் பகிர்வுப் பதிவே எழுதி இருந்தேன் முன்பு!

      நீக்கு
  29. இன்றைய வியாழன் பதிவு நடிகைகளின் படம் இல்லாமல் சிறப்பாக வந்துள்ளது. வாய்ப்பு இருந்தும் கமல் படத்தோடு நிறுத்திவிட்டீர்கள். (ஒருவேளை மய்யத்திற்கு ஆள் சேர்க்கிறீர்களோ?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லைத்தமிழன். அதிரா ஏதோ பதிவு எழுதி ஒப்பேற்றி விட்டேன் என்று சொல்லி இருக்கிறாரே...

      நீக்கு
    2. ஸ்ரீராம்... உங்க வியாழன் இடுகை பொதுவா நிறைய பேரை ஈர்க்கும். ஒவ்வொரு முறையும் அந்த லெவலை மெயிண்டெயின் செய்வதும் கடினமல்லவா? நேரம் எப்படிக் கிடைக்கும்? அதனால அதைப்பற்றி நான் பெரிதாக எண்ணுவதில்லை (முழு மொக்கையாக இருந்தாலொழிய)

      நீக்கு
  30. உளவில் ஈடுபடும்போது யாருக்காவது துரோகம் இழைக்கணுமே.. அது பாவம் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர் உளவு என்றாலே துரோகம் தானே இல்லயா?:).

      நீக்கு
    2. எல்லோருக்கும் (எப்போதும்) நல்லவராயிருக்க முடியுமா?

      நீக்கு
  31. குருதிப்புனல் கமல் நாசர் இன்னொருவர் பெயர் சட்னு ஞாபகம் வரலை - அவர்களின் அருமையான படம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் ஓடுங்கோ ஓடுங்கோ ஓடிப்போய்ப் . புலியில ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே:)...

      புளியில ஏறிடுங்கோ பிளீஸ்ஸ்:)... ஏன் தெரியுமோ?:) .... டேவடைக் கிச்சினில விளக்கு எரியுதூஊஊஊஊஊ:) ஏதோ கருகிய வாசம் எல்லாம் வருதூஊஊஊஊ:)..

      நீக்கு
    2. இன்னொரு பெயர் அர்ஜுன் நெல்லை... அவரைத்தானே சொல்கிறீர்கள்?

      நீக்கு
    3. அர்ஜுன் இல்லை (ஆனாலும் அவரை மறந்துட்டேன்). சதி வேலையில் ஈடுபடும் தெலுங்கு பிரபலம். அனைவருமே ரொம்ப நல்லா இயல்பா நடிச்சிருப்பாங்க. அது ஒரு கிளாஸிக் (கமலின்)

      நீக்கு
  32. @ நெ.த.: \\ ..கமல் நாசர் இன்னொருவர்.. //

    என்று படித்தவுடன் தோன்றியது - மய்யத்தின் பெயர் இப்படி இருந்திருக்கலாமோ : கமல் நாசன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... நல்ல கற்பனை ஏகாந்தன் ஸார். பொருத்தமாக இருக்கிறது.

      நீக்கு
    2. அவருக்கும் சிவாஜி, ரஜினி போன்றோருக்கும் வித்தியாசம் இருக்கிறது. கமல் அவருடைய சொந்தக் காசு 2 பைசாகூட அரசியலுக்குச் செலவழிக்கமாட்டார். என்ன, கமல், ரஜினி என்று ஆளுக்கு ஒரு புறம் இழுத்து, தவறான கட்சிகள் வெற்றி பெற வழிவகுத்துடுவாங்கன்னு தோணுது.

      நீக்கு
  33. எரிக்ஸன் கதை படித்ததில்லை. நேசநாடுகளின் அதிசூர உளவாளிகளைப்பற்றி ஸ்பை த்ரில்லர்கள் எழுதிப் புகழ்பெற்றவர்களில் ஆங்கில நாவலாசிரியர் கென் ஃபால்லெட்டும்(Ken Follet) ஒருவர் (Eye of the Needle, Key to Rebecca etc).

    புகழின் உச்சியில் இருப்போருக்கு எப்படியெல்லாமோ ஆபத்து வந்துதான் இருக்கிறது, ஆளையும் சாப்பிட்டிருக்கிறது என்று மனிதம் சரித்திரம் பேசும். மஞ்சள் பத்திரிக்கை ஆசிரியரை யாரோ கொலை செய்யப்போய் (அவருக்கு ஏகப்பட்ட பகைவர்கள்), எம்கேடி-யை மாட்டிவிட்டு, அவரை உள்ளே தள்ளப்பட்டார். அவர் நிரபராதியென பின்னர் பிரிட்டிஷ் அரசால் அறிவிக்கப்பட்டு வெளிவந்தும், போன கௌரவம் போனதுதான்.

    அந்தக்காலத்தில் ஜெயிலுக்குப்போனவன் என்கிற பேச்சே ஒருவரின் சமூக அந்தஸ்து, கௌரவம் ஆகியவற்றிற்கு களங்கம் விளைவிப்பது..கதையை முடித்துவிடுவது என்றிருந்தது. பொய்க்குற்றம் சாற்றப்பட்டுப் போய்வந்தாலும், ’ஓ.. ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவனா!’ என்று தூரத்திலிருந்து பார்த்து விலகிவிடும் சமூகமாக இருந்தது நமது சமூகம். இப்போ? ஊழல் செய்யச் செய்யப் பெருமை..ஜெயிலுக்குப் போகையில் சிரித்துக்கொண்டே கையை ஆட்டிக்கொண்டு காவல்வண்டியில் ஏறலாம். திரும்பி வந்தும் வீரவசனம் பல பேசலாம். பஞ்சமாபாதகமெல்லாம் செயற்கரிய செயல் ! டிவி கவரேஜ் எல்லாவற்றிற்கும். எல்லாமே பெருமைதான். சிறுமை என்பது சிம்பிளாக வாழ்வது.. எப்படி மாறியிருக்கிறது நமது சமூகம்..

    திரும்பி வந்து, இருக்கிற பணத்தைப்போட்டு (கேஸ் நடத்துவதில் பெரும்பகுதி அழிந்துவிட்டிருந்தது) அவர் எடுத்த படம் புஸ்ஸாக, பணமும் போய் நண்பர்களின் ஆதரவில் கடைசிகாலம். ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டிருந்தார் எம்கேடி. கண்பார்வையும் போய்விட்டிருந்தது. தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலுக்கு இவரை அழைத்துவந்திருந்த நண்பர், படிகளில் உட்காரவைத்துவைட்டு உள்ளே தரிசனத்திற்கு சென்றிருக்கிறார். அந்தவேளையில் பார்வை இல்லா கண்கள் நிலைகொள்ளாது அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்க, மெலிந்து சிறுத்துப்போய், பரிதாபமாக உட்கார்ந்திருந்த எம்கேடி-யைப் பிச்சைக்காரன் என ஒருவர் நினைத்து இவரது கைகளில் ரெண்டு காசுகளைப் போட்டுவிட்டுப் போனதும் நிகழ்ந்திருக்கிறது..

    வாழ்வின் உச்சம், அடிமட்டம் எல்லாம் பார்த்துவிட்டு மறைந்தார் எம்.கே.டி. - தமிழ்சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார்.. the original.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் ஸார்...

      எம் கே டிக்கு சர்க்கரை வியாதி இருந்தது என்றும் அதற்கு வைத்தியம் பார்க்காமல் தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலில் அம்மனைப் பாடினாலே சரியாகி விடும் என்று சென்று கும்பிட்டார் என்றும் படித்த நினைவு.

      ஜெயகாந்தன் இது சம்பந்தமாய் ஒரு கதை எழுதி இருக்கிறார். எம்கே டிக்கு குணச்சித்திர வேதங்கள் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் ஹீரோவாக நடித்து விட்டு இது போன்ற வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம் அவர்.

      நீக்கு
    2. இருக்கலாம். இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஹீரோ என்பதற்கு (பாத்திரம் மற்றும் பாத்திரத்தை நடித்துக்காட்டுபவர் என) கலைஞர்களிடையே, ரசிகர்களிடையே ஒரு பெரும் மதிப்பு இருந்த காலம். குணச்சித்திரவேடங்களைச் சற்றே கீழாக பார்த்த மனோநிலை.

      ஜெயகாந்தனின் அந்தக் கதையையும் நான் படிக்கவில்லை.

      நீக்கு
  34. ஸ்ரீராம்! கோவிந்த நிஹலானியின் ஹிந்திப்படக் கதையின் ரீமேக் தான் குருதிப்புனல்! அதனால் அப்பட்டமான காப்பி என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் கோவிந்த நிஹலானி எங்கேயிருந்து சுட்டார் என்று நம்பகமான ஒற்றனை வைத்துத் தேடிப்பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  35. வாங்க கிருஷ்ணமூர்த்தி ஸார்... நான் கோவிந்த நிஹ்லானி படம் எதுவும் பார்த்தது இல்லை.

    பதிலளிநீக்கு
  36. இந்த இரண்டாம் உலகப்போர் பறி நிறையா டாக்யூமென்ட்டரிஸ் இருக்கு ஸ்ரீராம் அதில் அந்த சோல்ஜர்ஸ் முகங்களை கிட்ட காட்டுவாங்க .ஒவ்வொரு முகத்திலும் ஒரு வெறி வெறுப்பு கோபம் குரோதம் எல்லாம் மிக்ஸ்ட்டா இருக்கும் எனக்கு பார்க்க விருப்பமில்லா காணொளிகள் அவை ..அதற்கு பின்னணி குரல்கள் வேறு பயமுறுத்தும் அந்த சம்பவங்களும் வலி ஏற்படுத்தும் அதனாலேயே தேடி பார்க்க மாட்டேன் :) ஆனால் இங்கே அடிக்கடி நியூஸில் 5-10 நிமிடங்கள் காட்டுவாங்க ஜூலை -நவம்பர் கடைசி வரை .

    https://holocaustremembrance.blog/2018/11/05/80-years-after-the-kindertransport/

    இது கிண்டர் டிரான்ஸ்போர்ட் பற்றியது நானா காணொளியா டிவியில் பார்த்தேன் ..படிங்க நேரமிருக்கும்போது

    பதிலளிநீக்கு
  37. ஹிந்தியின் ரீ மேக் என்று வேண்டுமானால் சொல்லலாம்,

    பதிலளிநீக்கு
  38. ஸ்ரீராம் உங்க கவிதை வாசிச்சு சிரிச்சுட்டேன் முதல்ல....அஃப்கோர்ஸ் ரசித்துக் கொண்டே என்னா கற்பனைன்னு...

    வயிறு சரியில்லைனா அந்தக் கஷ்டம் மனுஷனுக்குத்தான் தொந்தரவு கப்பு எல்லாம்...ஹா ஹா ஹா ஹா

    வானத்துக்கு என்ன...டப்புன்னு சத்தத்தோடு கொட்டித் தீர்த்துரும்........மிக மிக நல்ல சுத்தமான தண்ணீ ஆனா பாருங்க பூமியை டச்சு பண்ணினதும் தான் அது வாடை அடிக்குது...இங்கிருக்கும் எல்லா அழுக்கையும் வெளிய கொண்டு வருவதால்!!

    கீதா

    இது நேத்து அடிச்ச கமென்ட் நெட் போனதுனால அப்படியே நின்னுட்டுருந்துச்சு...கணினி ஷட் டவுன் பண்ணிருக்கேன்னு நினைச்சுருக்கேன்...ஆனா ஷட் ஆகாம தூங்கிட்டுருந்துருக்கு!!! ஸோ இப்ப அப்படியே அதை பப்ளிஷ் பண்ணியாச்சு...மத்ததுக்கு கமென்ட்ஸ் வரேன்...வெள்ளி பார்த்துட்டு

    பதிலளிநீக்கு
  39. என் எஸ் கிருஷ்ணன், பாகவதர் செய்தி ....எனக்குச் செய்தியே...

    அது சரி இந்த லஷ்மிகாந்தன் கொலை வழக்கு பற்றி எபியில் இதற்கு முன்னும் சொல்லிருக்கீங்க...கருத்துகளும் அதைப் பத்தி வருது ...இது புத்தகமா வந்துருக்கோ? கூகுளில் தேடிப் பார்க்கறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!