திங்கள், 31 டிசம்பர், 2018

"திங்க"க்கிழமை : உடுப்பி ரசம் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


 உடுப்பி ரசம் : 

சாத்துமது (ரசம்) செய்யும் விதம் ஒவ்வொரு சமூகத்துக்கும் வித்தியாசப்படும்னு நினைக்கறேன். துபாய்ல என் நண்பன், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடைல, மதிய உணவு நல்லா இருக்கும்னு சொன்னதுனால அங்க சில முறை போயிருக்கேன். 

அவங்க முதல்ல ஒரு bowlல சாத்துமது தருவாங்க. (சூப் மாதிரி). என் நண்பனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இது எங்கள் வீட்டில் செய்யும் பருப்பு ரசம் மாதிரிதான் இருக்கு. நல்லா இருக்கும், ஆனால் அது எனக்குப் புதியது அல்ல. பாரீஸ்ல ஒரு தடவை நான் இந்திய உணவு சாப்பிடுவது என்று நினைத்து, அதற்குரிய இடத்திற்குப் பிரயாணித்தேன். அங்கு சில வெஜிடேரியன் கடைகள் இருந்தன. 

அதில் ஒன்று பாண்டிச்சேரி உணவகம். அங்க போய் சாப்பாடு சாப்பிட்டபோது, சாம்பாரும் எனக்குப் பிடிக்கலை. ரசம் சுத்தமா பிடிக்கலை. அவங்க, புளியைக் கொதிக்கவைக்கமாட்டாங்க போலிருக்கு. நான் சாப்பிடாததைக் கண்ட கடை முதலாளி, எனக்கு ஒரு பெரிய பாக்கெட் நிறைய பக்கோடா இலவசமாக் கொடுத்தார்.

எனக்கு முன்னெல்லாம் சாத்துமது சாதம், தனியாக பருப்பு, தொட்டுக்க உருளை அல்லது சேப்பங்கிழங்கு அல்லது சிறுகிழங்கு ரோஸ்ட், இல்லைனா பருப்புசிலி இருந்தாப் போதும். 

சாதமும் ரசமும் ரொம்ப சூடா இருக்கணும், குறிப்பா கொத்தமல்லி தழை போட்டிருக்கணும். இப்போதான் ஒரு மாதமா, கிழங்கு வகைகளை முடிந்தவரை சாப்பிடுவதைத் தவிர்க்கிறேன். வீட்டுல என்னைத் தவிர வேறு யாரும் விரும்பாததால் சேப்பங்கிழங்கை அனேகமா வாங்கறதில்லை.

வித்தியாசமா சாத்துமது பண்ணலாம்னு ஒருத்தர்ட்ட உடுப்பி ரசம் ரெசிப்பி கேட்டேன். சமையலறை என் கையில் வந்த ஒரு நாள்,  அவங்க சொன்னதுலேர்ந்து நான் கொஞ்சம் மாற்றி உடுப்பி ரசம் செய்தேன்.  அதன் செய்முறை இந்த வார தி.பதிவுக்கு.

செய்முறை

தயார் செய்வதற்கான வேலைகள்

½ கப் துவரம் பருப்பை குழைய வேகவைக்கணும்.  

காஷ்மீர் மிளகாய் வற்றல் 3 (நான் நம்ம ஊர் வற்றல் மிளகாயைத்தான் உபயோகித்தேன். நமக்கு கலரை விட காரம் முக்கியம் இல்லையா?)

தனியா விதை 1 டேபிள் ஸ்பூன் (நான் கொஞ்சம் குறைவாக எடுத்துக்கிட்டேன்)
வெந்தயம் 1 ஸ்பூன்
ஜீரகம் 1 ½ ஸ்பூன்
கருவேப்பிலை 4 ஆர்க் (கைப்பிடிக்குக் கொஞ்சம் கம்மி)

இவை எல்லாவற்றையும் தேங்காய் எண்ணெய்ல கடாய்ல நிதானமா வறுக்கணும். அப்புறம் எண்ணெயை வடித்து (அதுக்கு டிஷ்யூ பேப்பரில் போட்டுட்டு பிறகு எண்ணெய் வடிந்தபிறகு தட்டில் போட்டுடணும்). ஆறினபிறகு மிக்சில பொடித்துக்கோங்க.ஒரு தக்காளியை சிறிய துண்டுகளாக கட் பண்ணிக்கோங்க.

ஒரு கடாய்ல, நெய் அல்லது தேங்காய் எண்ணை உபயோகித்து கடுகு, 1 மிளகாய் வற்றல், பெருங்காயம் சிறிய துண்டு, ஒரு ஆர்க் கருவேப்பிலை தாளித்துக்கொள்ளவும். இதோட, தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க.இப்போ அரை டம்ளர் புளிக்கரைசல், மஞ்சப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவைக்கணும். பச்சைப் புளி வாசனை போகணும்.தக்காளி, திருவமாறி வதக்கினதைக் கொதிக்கும் புளிஜலத்தில் சேர்க்கவும். கொஞ்சம் கொதிக்கட்டும்.பிறகு தளிகைப்பண்ணின பருப்பை நீர்விட்டு கரைத்துக்கோங்க. அந்தக் கரைசலை ரசத்தில் சேர்க்கவும்.

கொஞ்சம் கொதித்தபிறகு, அரைத்துவைத்த பொடியைச் சேர்க்கவும். பொடி சேர்த்தபிறகு ரசம் ரொம்பக் கொதிக்கக்கூடாது.அடுப்பை அணைத்தபிறகு, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

இப்போ உடுப்பி ரசம் ரெடி.இந்த ரசம் செய்த அன்று, கீரை பாசிப்பருப்பு கூட்டும் பீட்ரூட் கறியமுதும் செய்தேன்.நீங்களும் இந்த உடுப்பி ரசம் செய்துபாருங்க. ரொம்ப நல்லா இருக்கும்.அன்புடன்

நெல்லைத்தமிழன்

88 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
  கீதா

  பதிலளிநீக்கு
 2. நெல்லை இனிய காலை வணக்கம்!!

  ஹை உடுப்பி ரசம்!!

  தக்காளி வதக்கி, காஷ்மீரி மிளகாய் அல்லது பொடி தான் இங்க லாம் யூஸ் பண்ணுவாங்க...

  செஞ்சுருக்கேன்...நீங்க எப்படி செஞ்சுருக்கீங்கன்னு பார்க்கறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா ரங்கன்.... விரைந்து வருகை தந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 3. அட! சாப்பிடாத்துக்கு ஒரு பாக்கெட் பக்கோடாவா?!!!ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

  வியப்பா இருக்கே! அப்ப பக்கோடாவும் அங்கேயே பிரிச்சு அவ்வளவு நல்லால்லனே நீங்க சாப்பிடாம இருந்திருந்தா வேற என்ன கொடுத்திருப்பார்னு யோசிக்கேன்....ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை பக்கோடாவும் நல்லால்லனா ஸ்வீட் பாக்கெட் கிடைச்சிருக்குமோ!! ஹா ஹா ஹாஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. அதை விளக்கமா எழுதத் தோணலை கீதா ரங்கன். அவங்க சாம்பார், ரசம் சாப்பிட்ட உடனேயே இது எனக்கான உணவல்ல என்று தோன்றிவிட்டது. மனதிற்குப் பிடிக்கலை. ஆனா பகோடா கொடுத்தவரிடம், எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லும் மனநிலையும் இல்லை. அவர் மனதைப் புண்படுத்தக்கூடாது என்று. அதனால் வாங்கிக்கொண்டேன். சாப்பிடவில்லை.

   எனக்கு எல்லா இடங்களிலும் சாப்பிடப் பிடிக்காது. அதுவும் மனதிற்குத் தோன்றிவிட்டால், நான் சாப்பிடவே மாட்டேன். இது சுத்தம் பற்றியது மட்டுமல்ல, உணவு செய்முறை, என்ன போட்டிருப்பாங்களோ என்ற சந்தேகம் போன்றவை மனதிற்கு வந்துவிடும்.

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  காலை எழுந்தவுடன் சகோதரர் நெல்லைத் தமிழன் கை வண்ணத்தில் உடுப்பி ரசம் மிகவும் நன்றாக இருந்தது. படங்களும், செய்முறை விளக்கங்களும் அருமை. மைசூர் ரசமென்று கூட கொஞ்சம் சில (க.ப,உ.ப, து.ப என்று) பருப்புகளையும் சேர்த்து வெந்தயம் தவிர்த்து வறுப்போம். அதற்கு பதிலாக சிறிது மிளகு சேர்ப்பேன். இது வித்தியாசமாக பார்க்கவே மிகவும் அழகாக தெரிகிறது. கூட இருந்த பதார்த்தங்களும் அழகாக இருந்தன.

  எதை செய்தாலும், இறைவனுக்கு சமர்பிக்கப் பட்ட பின் உணவருந்தும் அவரின் பாங்கு மிகவும் நன்று. வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா ஹரிஹரன் அவர்கள். வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

   'எதைச் செய்தாலும் கண்டருளப் பண்ணியபின்பு' அதன் சுவை கூடும். இதில் உங்களுக்கு இல்லாத அனுபவமா?

   நீக்கு
 5. பங்களூர் ரசம், உடுப்பி ரசம் எல்லாத்துலயும் வெந்தயம் சேர்ப்பாங்க...இந்தச் சுவையும் சூப்பரா இருக்கும்...

  எங்க வீட்டுலயும் பங்களூர் ரசம், மைசூர் ரசம், உடுப்பி ரசம் எல்லாம் விரும்புவாங்க...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதா ரங்கன். ரசம் விரும்பாதவர்கள் மிகக் குறைவு. ஆனா பாருங்க... எனக்கு ஹோட்டல்ல சாம்பார் பிடிச்சுப் போயிடுச்சுன்னா, அதனை மட்டுமே சாப்பிட்டுவிட்டு எழுந்த அனுபவங்கள் இருக்கு.

   நீக்கு
 6. நான் சொல்ல வந்தேன் உங்க கடைசி வரி சொல்லிருச்சு...

  பொடி சேர்த்த பிறகு ரசம் கொதிக்கவிடக் கூடாது...குறிப்பா பங்களூர் ரசம், மைசூர் ரசம், உடுப்பி ரசம் எல்லாம்...பொடி வறுத்துப் பொடிப்பதால்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா(க்கள்), மற்ற சமையல் திலகங்களுக்குத் தெரியாததா? சும்மா நானும் செய்முறை அனுப்பறேன்... பெரியவர்கள் மத்தியில் விளையாடும் சிறுவனைப் போல....

   நீக்கு
 7. கிட்டத்தட்ட இதே தான் நம்ம வெங்கடேஷ் பட்டும் சொல்லி இருக்கார். என்னோட குறிப்புகளிலே இருக்கும் தேடணும். ஆனால் ரசத்துக்கு எல்லாம் நான் வதக்கிக் கொண்டு , தாளித்துக் கொண்டு சேர்ப்பதில்லை. முதலில் புளிக்கரைசலைத் தக்காளி சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம், கருகப்பிலை சேர்த்துக் கொதிக்க வைத்துப் பின்னர் பருப்புக்கரைந்த நீர் விட்டு விளாவிப் பின்னரே தாளிப்பு எல்லாம். சாம்பாருக்கோ, பருப்புக்குழம்பு வத்தல் குழம்புக்கோ செய்யறாப்போல் ரசத்தைத் தாளித்துக் கொட்டிக் கொண்டு செய்வதில்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))) அதோடு ஈயச் சொம்பு ரசம் தான் எப்போதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஈயச்சொம்பு ரசம்...!! ஆஹா..! ஈயம் உடலில் சேர்வது நல்லதில்லை என்று சொன்னதால் விட்டு விட்டேன்.

   நீக்கு
  2. யெஸ் கீதாக்கா நானும் தாளித்துச் செய்வ்தில்லை...அது மங்களூர் ரசம் உடுப்பி ரசம் என்றாலும் கடைசியில்தான் தாளிப்பு...மட்டும்....நானும் ஈய்யச் சொம்பு ரசம் தான்...இங்கு கொண்டு வராம விட்டுப்புட்டேன்...அடுத்த முறை போகும் எடுத்துக் கொண்டு வரணும்...முதலில் நானும் மங்களூர் ரசம், உடுப்பி ரசம் எல்லாம் அவர்கள் சொல்லுவது போல் தாளித்து செய்தேன் அதுவும் நல்ல்லாத்தான் இருக்கு...அப்புறம் ரெசிப்பி அதே என்றாலும் தாளிப்பது மட்டும் கடைசியில்தான்.

   என் மகனுக்குக் கூட எளிதாக இருக்கட்டும் என்று ரசப்பொடியுடனேயே புளியும் கொஞ்சம் வெறும் கடாயில் ட்ரை ஆக்கிக் கொண்டு பொடியுடன் பொடித்துவிட்டு கறிவேப்பிலையும் பொடித்துப் போட்டு தாளித்தும் கொடுத்துவிட்டேன். அவன் அப்படியே அதை பருப்பு சேர்த்தோ இல்லை சேர்க்காமலோ தக்காளி மட்டும் போட்டுக் கொண்டு கொதிக்கவிட்டால் போதும் என்பது போல் சாதாரண பொடியும், மிளகு ரசப் பொடியும் செய்து கொடுத்துவிட்டேன்.

   கீதா

   நீக்கு
  3. @ பானுமதி! நீங்க சொல்லுவது காரீயம். led/lead(?) நான் பயன்படுத்துவது வெள்ளீயம்! Tin sheet என்பார்கள்.

   நீக்கு
  4. கீதா சாம்பசிவம் மேடம்... மைசூர் ரசத்துக்கும் இதேபோல தக்காளியை தாளித்து வதக்கிக்கொண்டு அதனை உபயோகப்படுத்துவேன் (இங்கேயே செய்முறை இருக்கு)

   ஆமாம்... அதுக்கு ஏன் 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்'? ரொம்ப சாத்வீகமான என்கிட்டயுமா 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' ஹா ஹா ஹா

   நீக்கு
  5. கீசா மேடம்.... ஈயச் சொம்புல எதையும் வைக்க மறந்து அடுப்பில் வைத்து சொம்பு உருகின அனுபவம் உங்களுக்கு இருக்கா? இல்லை கேள்விப்பட்டிருக்கீங்களா?

   நீக்கு
  6. கீதா ரங்கன்... இங்கு சில பிராண்டு புளிப் பவுடர் விக்கறாங்களே... அது உபயோகித்திருக்கீங்களா? நான் இங்கிருந்து அதனை தொகையல் செய்ய வாங்கிக்கொண்டு சென்றேன் (புளியை, தேங்காயோ இல்லை கொத்தமல்லியோ சேர்த்து அரைக்கும்போது சவக்னு ஆயிடும். அதனால் புளிப்பவுடர் போடலாம்னு). ஆனால் அதை உபயோகப்படுத்தாமலேயே தூர எறிந்துவிட்டு வந்தேன் (இங்கு திரும்பும்போது).

   நீக்கு
  7. 13வயசிலே இருந்து ஈயச்செம்பில் சமைக்கிறேன். கல்சட்டியும்! ஆகவே எல்லாவற்றையும் ஈயச் செம்பில் தயார் செய்து கொண்டே அடுப்பில் ஏற்றுவேன். இத்தனைக்கும் அப்போல்லாம் குமுட்டி அடுப்பு! ஒரே ஒரு முறை ஸ்டவ், (அப்போப் புதுசா வந்திருந்த நூதன் ஸ்டவ்) எரியும்போது சூடு தாங்காமல் நசுங்கி விட்டது. அதைத் தவிர்த்து வேறே ஏதும் பிரச்னை இல்லை. இடுக்கியைப் பிடித்து எடுக்கையில் அந்த இடம் அப்படியே ஒட்டிக்கொண்டு ஓட்டை போட்டுக்கொண்டிருக்கு. அந்தச் செம்பை இன்னும் வைச்சிருக்கேன். இனியாவது போட்டுட்டு வேறே வாங்கணும்! :))))))

   நீக்கு
  8. ஆகிவந்த செம்பை எதுக்கு இனிமே மாத்தப்போகறீங்க... வேண்டாம்... அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்...

   நீக்கு
 8. பதில்கள்
  1. நன்றி கரந்தை சார் உங்க வருகைக்கு. இந்த முறை, தஞ்சை பெரிய கோவிலைப் பார்த்துவிட்டு டாக்சியில் திரும்பும்போது சட் என்று கரந்தை பள்ளியும் அதன் முகப்பில் ஒரு சிலையும் பார்த்தேன். பள்ளியின் பெயரைப் பார்த்ததும் 'அட இவ்வளவு அருகிலா இருக்கிறது.. ' என்று உங்கள் ஞாபகம் வந்தது. படம் எடுப்பதற்குள் அந்த இடத்தைக் கடந்துவிட்டோம்.

   நீக்கு
 9. நான் உடுப்பி ரசம் செய்ததில்லை. படங்களை பார்த்தாலே நன்றாக இருக்கும் போல தோன்றுகிறது. நன்றாக ரசம் வைக்க கற்றுக்கொண்டு விட்டால் நன்றாக சமைக்க கற்றுக்கொண்டுவிட்டதாக பொருள் என்பார்கள்.
  என் மகனுக்கு மைசூர் ரசம் மிகவும் பிடிக்கும். அதற்கு கொஞ்சம் தேங்காயும் சேர்க்க வேண்டும்,வெந்தயம் கிடையாது. மைசூர் ரசம் செய்தால் தொட்டுக்கொள்ள உருளை அல்லது சேம்பு ரோஸ்ட் வேண்டும். உடுப்பி ரசம் செய்து பார்க்கலாம். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.... சில நாட்களுக்கு முன்புதான் மைசூர் ரசம் செய்தேன். சாப்பிட்டவர்கள் நன்றாக இருந்தது என்றார்கள். தொட்டுக்கொள்ள 'உருளைக்கிழங்கு கூட்டு'.

   நீக்கு
  2. யெஸ் பானுக்கா மைசூர் ரசத்துக்கு வெந்தயம் கிடையாது தேங்காய் நெய்யில் வறுத்துப் போடனும்..பங்களூர் ரசத்துக்கு வெந்தயம் உண்டு...கொப்பரை/தேங்காய் நெய்யில் வறுத்து போடனும்...நான் செய்யும் போது இங்கு முன்பு போல் திங்கவுக்கு அனுப்ப முடியலை...விரிவாகப் படம் எடுக்க முடியாததால்...

   கீதா

   நீக்கு
  3. கீதா ரங்கன்.... சுலபமா செய்யறதெல்லாம், நான் செய்துபார்த்து படம் எடுத்துப் போட்டுக்கறேன். நீங்க ஸ்பெஷல் ஐட்டங்கள் செய்யும்போது படங்கள் எடுத்து எபிக்கு அனுப்புங்க....

   நீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடுப்பி ரசம் செய்முறை விளக்கம் ஸூப்பர்.

   ஸ்ரீராம்ஜி வேலைகள் நிறைய இருப்பதால் மீண்டும் அடுத்த வருடமே என்னால் வர இயலும்.

   நீக்கு
  2. உறா.... உறா.... உறா....

   பழைய ஜோக் என்பதால் பழைய டைப்ரைட்டர் மாதிரி சிரித்திருக்கிறேன் ஜி!!

   நீக்கு
  3. வருகைக்கு நன்றி கில்லர்ஜி. நாளை காலையிலேயே முடிந்தால் உங்கள் தளத்தில் எழுதணும், 'புது இடுகை நீங்கள் இன்னும் போடவில்லையே, போன வருடத்தில் போட்ட இடுகைக்கு அப்புறம்' என்று.

   நீக்கு
  4. ஸ்ரீராம் - டைப்ரைட்டர் என்று நீங்கள் எழுதிய பிறகுதான், அந்தக் காலம் நினைவுக்கு வந்தது. ஹ என்பதற்கும் இன்னும் சில எழுத்துக்களுக்கும் இரண்டு இரண்டு எழுத்துக்களாக அடித்தது.

   நான் ஒரு காலத்தில் டைப்பிங்கில் ரொம்ப அப்சஸ்ட் ஆக இருந்தேன். பயங்கர வேகத்தில் தட்டச்சு செய்வேன். (கீசா மேடம் ஸ்பீடைவிட என்று சொல்லத்தான் ஆசை... எதுக்கு தேவை இல்லாமல் அவர்கிட்ட இப்போ வம்பு வளர்க்கணும்?)

   நீக்கு

 11. ரசம் அதுவும் குளிர் காலங்களில் குடிக்க மிக அருமையானது...படமும் விளக்கமும் அருமை.... தனித்தனியாக வாழ்த்துக்கள் சொல்ல நேரம் இல்லாததால் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை இங்கேயே சொல்லி வாழ்த்துகிறேன் வருகிற ஆண்டு நல்லாண்டுகளாக அமைய என் வாழ்த்துக்கள் நண்பர்கள் மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தாரும் நாடும் நலம் பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி மதுரைத் தமிழன் துரை. உங்களுக்கும் புத்தாண்டு மிகச் சிறப்பாக அமையட்டும். வறுக்க வேண்டியவர்களை வறுப்பதற்கு (உங்க தளத்தில்தான்) நிறைய சந்தர்ப்பங்களும் கிடைக்கட்டும்.

   நீக்கு
 12. உடுப்பி ரசம் செய்முறைக்கு நன்றி... நாளை முயற்சி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க திண்டுக்கல் தனபாலன்.

   வருட ஆரம்பத்தில் சிறப்பா ஆரம்பிக்க நினைக்கறீங்க. வாழ்த்துகள். சரியா வரலைனா, மறுநாள் திட்டுங்க. ஹா ஹா.

   நீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம்....

  முன்னதாகவே இங்கு வந்தாயிற்று... ஆயினும்
  நம்ம தளம் கொஞ்சம் கோளாறு.. அதை ஒழுங்கு பண்ணிட்டு வர்றேன்..
  (அட.. எப்ப பார்த்தாலும் சுயபுராணம்!?...)

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை செல்வராஜு சார்... வாங்க. உங்கள் தளத்துக்கு வந்து வெகு காலமாயிற்று. ஒரு சில பின்னூட்டங்கள் தவிர வேறு எழுதவே இல்லை.

   நீக்கு
 14. ரசம்... ன்னா ரசம் தான்!..

  அதிலும் அன்பின் நெ.த., அவர்களின் கைப்பக்குவம் .. ஆகா!...

  ரசமான பதிவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வருகைக்கு துரை செல்வராஜு சார்... 'கைப்பக்குவம்'-இதுல ஒரு உண்மை சொல்லணும்னா, பசங்களுக்கு 'அவங்க அம்மா செய்யற மாதிரி வராது'ன்னு சொல்லிடுவாங்க. (நான் ஒரு காலத்தில் சொல்லிக்கொண்டிருந்ததைப் போல்).

   நீக்கு
 15. அப்புசாமி - சீதா பாட்டி ..

  இவங்களோட - குண்டு, ரசம் எல்லாம் வருவாங்களே!...

  உங்களோட ஞாபகத்தில அவங்க யாராச்சும் வர்றாங்களா!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரச குண்டு அப்புசாமி ஆமா ஆமா :)

   நீக்கு
  2. அப்புசாமி, சீதாப்பாட்டி - அசட்டு நகைச்சுவைக் கதைகள் மிகவும் ரசமானவைதான். நினைவில் வைத்திருக்கிறீர்களே.. துரை சார்.

   நீக்கு
  3. துரை அண்னா அ சாமியை நினைவூட்டிட்டீக்னளே! குண்டு ரசம் ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 16. நான் எண்ணெய் சேர்த்து பொருட்களை வறுப்பதில்லை. வெறும் வாணலியிலேயே வறுத்துப்பேன். அவசரத்துக்காக கொஞ்சம் மிளகு சீரகம் அரைச்சு வச்சிருந்தாலும் தினத்துக்கும் புதுசா அம்மில அரைச்சுதான் ரசம் வைக்குறேன். ரசம் வாசமா, ருசியா இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ராஜி... இப்போ உள்ளவங்களுக்கெல்லாம் 'அம்மி'ன்னா தெரியுமா இல்லை 'ஆட்டுக்கல்'னா தெரியுமா? மிக்சி இல்லையேல் அவ்வளவுதான்...

   இந்த ரசத்துக்கு எண்ணெயில் வறுத்துட்டு எண்ணெய் போகவைச்சு ஆறவைக்கணும். அது வாசனையை அதிகமாக்கும்.

   நீக்கு
 17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 18. ரசம் அருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாதேவி அவர்கள்.

   உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 19. உடுப்பி ரசம் ந்ன்றாக இருக்கிறது.
  படங்களுடன், செய்முறை விளக்கம் அருமை.
  எனக்கு ரசம் பிடிக்கும். எல்லாவிதமான ரசமும் காரம் குறைச்சலாக் வைத்தால் மிகவும் பிடிக்கும்.

  கோவை" நானா நானி" தங்கும் இடத்தில் தங்கி இருந்த உறவினரை சந்திக்க வெள்ளிக்கிழமை சென்றோம்.
  சென்ற போது மதியம் சாப்பிட்டு விட்டுதான் போகனும் என்றார்கள்.
  மதிய உணவில் கொடுக்கப்பட்ட ரசம்(கிண்ணத்தில்) நனறாக ருசியாக இருந்தது. வயதானவர்கள் எல்லோரும் ரசித்து குடித்து மகிழ்ச்சியாக சாப்பிடுவதை பார்த்தால் மனதுக்கு இதம். அன்றைய மெனு கொத்தவரங்க்காய் பருப்பு உசிலி, கீரை பாசிபருப்புக் கூட்டு, வெண்பூசணி மோர்க்குழம்பு, தக்காளி ரசம், தக்காளி ஊறுகாய். அப்பளம், கட்டித் தயிர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம்..... எனக்கு சுடச் சுட ரசம், ஒரு காரக் கறி (இது ஆறி இருக்கலாம்), சுடச் சுட சாதம் போதும்.

   'நானா நானி' இதுபோன்ற 'வயதானவர்களுக்கான இல்லம்' எது நல்லா இருக்கு? இந்த மாதிரி இல்லங்களைப் பற்றி விசாரித்தும் வைத்திருந்தேன்.... நிறைய யோசனைகளைக் கிளப்பிவிட்டுவிட்டது.

   நீக்கு
  2. மிக நன்றாக இருக்கிறது. வயதானவர்களுக்கு எவ்வளவு வசதிகள் செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்று பார்த்து பார்த்து செய்து இருக்கிறார்கள்.
   பாரட்ட வேண்டும். நான் ஒரு பதிவு போட படங்கள் எடுத்து வந்து இருக்கிறேன்.
   அங்கு மலர்ந்த முகங்களை பார்த்தேன். மார்கழி மாதம் கோவில் பூஜை என்பதால் யோகா வகுப்பு 11 மணிக்கு மேல் நடந்தது யோகா சொல்லிக் கொடுத்த ஆசிரியரிடம் பேசினேன் . அவர் வயதானவர்களுக்கு வரும் உடல் துன்பத்திற்கு ஏற்ற பயிற்சிகள் சொல்லிக் கொடுப்பதாய் சொன்னார். மகாலட்சுமி கோவில் இருக்கிறது. நாராயணீயம் பாடிக் கொண்டு இருந்தார்கள் வயதானவர்கள். பிள்ளையார், முருகன்,தட்சிணாமூர்த்தி, விஷ்ணு கண்ணன் எல்லாம் இருக்கிறார்கள் கோவிலில். நிறைய நல்ல விஷ்யங்கள் இருக்கிறது. பதிவில் படிக்கலாம்.

   நீக்கு
  3. கோமதி அரசு மேடம்... நீங்கள் சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. பதிவை எதிர்நோக்குகிறேன்.

   நீக்கு
 20. ரசம் என்று சொல்கிறீர்கள். இதில் குறுமிளகு அல்லது நல்ல மிளகு சேர்ப்பது பற்றி ஒன்றுமே யில்லை. உடுப்பி ரசத்துக்கு முக்கியமாக சிறிது வெல்லம் சேர்ப்பார்கள். அதுவும் இங்கே குறிப்பிடவில்லை.
  இங்கே உள்ள குறிப்பு எனக்கு சாம்பார் மைனஸ் தான் என்று தான் தோன்றுகிறது.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜெயக்குமார் சார்.... சாத்துமதுக்கு, இந்த சாத்துமதுக்கு மிளகு கிடையாது. மிளகும் போட்டா சாதாரண அல்லது மைசூர் ரச வாசனை வந்துவிடும்.

   நான் சில வாரங்களுக்கு முன்பு ரெசிப்பியை வைத்து (கர்நாடகா) சாம்பார் பண்ணினேன். அதில் அவங்க சொல்ற அளவு இல்லாம சிறிது வெல்லம் போட்டேன். அன்று மகள் நல்லா இருக்கு என்றாள். அது தந்த தைரியத்தில் இன்னொருநாள் அவங்க சொன்ன அளவு வெல்லம் போட்டுச் செய்தேன். அப்புறம் வெளியில் சென்றுவிட்டதால், பிறகு என் ஹஸ்பண்ட் சொன்னா, 'இன்னைக்கு என்ன சாம்பார் திதிக்கிறது? அவளும் திதிக்கிறதுன்னு சொன்னாளே' என்றாள். உண்மையைச் சொன்னதும், வெல்லம்லாம் போடாதீங்க, ஏற்கனவே ஸ்வீட்ஸ்லாம் அவாய்ட் பண்றா, இதுல இண்டைரக்டா வெல்லம் சேர்த்திருக்குன்னு டவுட் வந்தாலே அப்புறம் சாப்பிட யோசிப்பான்னுட்டா.

   அதுனால ரசத்தில் வெல்லம் மிஸ்ஸிங்.

   நம்ம 'குருமா'ன்னு சொல்லி, அதுல ஒரிஜினலாக இருக்கற, நமக்குப் பிடிக்காத, ஏகப்பட்ட ஐட்டங்களைக் கழட்டிவிடறதில்லையா? அந்த மாதிரி..

   நீக்கு
 21. https://sivamgss.blogspot.com/2017/08/blog-post_3.html இதிலே வெங்கடேஷ் பட் சொன்ன முறையும் இருக்கு. நான் செய்த முறையும் இருக்கு. வெங்கடேஷ் பட் அதிலே மிளகு சேர்க்கச் சொல்லவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்க அப்போ நான் எழுதின பின்னூட்டத்தைப் படித்துப் பார்த்தீர்களா? ஹா ஹா.

   நீக்கு
 22. நன்றி எபி ஶ்ரீராம் வெளியிட்டமைக்கு. ரொம்ப பிஸியா இருக்கு. வந்து மறுமொழி தருகிறேன்.

  அனைவருக்கும் வணக்கம்

  பதிலளிநீக்கு
 23. நான் வெந்தயம் தாளிக்க மட்டுமே சேர்த்திருக்கேன் .அரைச்சது இல்லை .நாளைய மென்யூவ்வில் சேர்த்தாச்சு இந்த ரெசிப்பி :)
  அப்புறம் ரசத்தை நுரை கட்டினதும் இறக்கணும்னு அம்மா சொல்வாங்க ..கொதிச்சா கசப்புத்தன்மையாகிடுமாம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

   'நல்லா இருக்கு'ன்னு சொன்னா (உங்க வீட்டுல), அது உங்களோட கண்டுபிடிப்புன்னும், சரியா வரலைனா, 'சாரி... அந்த சைட்டைப் பார்த்து செஞ்சுபார்த்தேன். எனக்கு அவர் மேல அப்போவே டவுட்டு. அந்தச் செய்முறைலதான் ஏதோ பிரச்சனை இருக்கணும்னு' பிரச்சனையை என்மேல திருப்பிறாதீங்க. ஹா ஹா.

   நீக்கு
 24. அனைவர்க்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி ஏஞ்சலின். உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்ல முன்னேற்றங்களைக் கொண்டு வரட்டும்.

   நீக்கு
 25. நான் லண்டன் ஸ்டைல் மாம்பழ ரசம் இன்னிக்கு ரிலீஸ் செய்ய நினைச்சேன் :) chief செஃப் கூட போட்டி வேணாம்னு தள்ளி வச்சிட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சல்! என்னாது செஃப் இன்று பதிவு போடுறாங்களா...??!!!!

   இல்லை நம்ம நெல்லைய சொல்றீங்களா??!!!

   ஆஹா மாம்பழ ரசமா சூப்பரா இருக்கும் ஏஞ்சல்...போடுங்க உங்க ரெசிப்பியும் பார்க்கிறேன்...எங்க மாமியார் வீட்டு பின்பக்கம் தோட்டத்துல மாமரம் காய்ச்சு பழுத்து அதுல செஞ்சதுண்டு...மாம்பழக் குழம்பு/சாம்பார், புளி/வத்த குழம்பு, மாம்பழ மோர்க்கூட்டான், மாம்பழப் புளிசேரி, ரசம் என்று...கிளப்பி விட்டுட்டீங்களே...

   கீதா

   நீக்கு
  2. என்னாது... அதிராவை 'சீப் செஃப்'னு சொல்றீங்களே... உங்களுக்கு என்னா தைரியம். அவங்க ஒண்ணும் cheap chef இல்லை.... (அட என் கண்ணாடியை இன்றைக்கு எங்கே வைத்தேன்.... தெரியலையே...)

   நீக்கு
  3. மாம்பழ ரசமா? டிசம்பரிலா? நல்லாப் பார்த்துத்தான் வாங்கினீங்களா? அது பிங்க் லேடி ஆப்பிளா இருக்கப்போவுது. பார்த்து ... ஏஞ்சலின்...

   நீக்கு
  4. ஹாஹா :) இப்போ மாம்பழமா :) கிடைக்குது ஆனா எல்லாம் ஜமைக்கா வெரைட்டி .ஓவர் ஸ்வீட் .
   இந்த ரெசிப்பி ஆகஸ்டில் செய்து இன்னும் டிராப்டில் இருக்கு

   chief chef :))))))) ROFL

   நீக்கு
  5. மேடம் உண்ட களைப்பில் உறக்கமாம் :) வரதுக்குள்ள நாம் ஓடிருவோம்

   நீக்கு
  6. ஹா ஹா ஹா ஹா ஹா நானும் சிரிச்சுட்டேன் நெல்லையின் சீஃப்/சீப் பார்த்து ஏஞ்சல்...அண்ட் நெல்லை..

   கீதா

   நீக்கு
 26. தர்மஸ்தலாவில் இந்த ரசத்தை சாம்பாருக்கு முன்பு பரிமாறுகிறார்கள். சுவையே தனி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க முத்துசாமி அவர்கள். நான் தர்மஸ்தலா சென்றதில்லை. எங்க அப்பா அங்க போய், ஹெக்டே அவர்களைப் பார்த்துவந்தார் (நான் சொல்வது 79கள்ல). அப்புறம் அங்கு எஞ்சினீயரிங் சேர எனக்கு ப்ராப்தம் இல்லை. தர்மஸ்தலாவில் மூன்று நாட்களுக்கு இலவசமாகத் தங்கி இலவச உணவு உண்ணலாமாமே.....

   நீக்கு
 27. நெல்லை ஃபோட்டோ விளக்கம் எல்லாம் நல்லாருக்கு நெல்லை..தொட்டுக் கொள்ள கீரை பாசிப்பருக்கு கூட்டு, பீட்ரூட் காய் எல்லாம் சூப்பர்...

  பருப்புசிலி ரசத்துக்கு எப்பவுமே நல்ல கோம்போ!!

  காலைல வெல்லம் காணலையேனு கேட்க நினைச்சு அப்புறம் கேட்காம போய்ட்டேன் மறந்து இப்ப பார்த்தா விளக்கம் சொல்லிட்டீங்க..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதா ரங்கன். 'பி...ன் தின்னு கெட்டான்' என்பது உண்மைதான். பருப்புசிலி எப்போதும் ரசத்துக்கு நல்லா இருக்கும்.

   நீங்க வெகு விரைவில் இரண்டு இனிப்புகள் செய்முறையோட வாங்க........

   நீக்கு
 28. அச்சச்சோ.. இன்று நெ தமிழனின் ரெசிப்பிதான் வரும் கும்மி அடித்து நெதமிழனைக் களைக்க வைக்கோணும்.. எனர்ஜியை வேஸ்ட் பண்ண வைக்கோணும்:) எண்டெல்லாம் நினைச்சிருந்தேன்.. ஆனா எட்டிப்பார்க்க முடியாதளவுக்கு நிலைமை போயிட்டுது.. சரி தலைக்கு மேல வெள்ளம் சாண் ஏறி என்ன முழம் ஏறி என்ன லேட்டாவே போயிடலாம் என இப்போ வந்தேன்ன்.. புத்தாண்டு பிறந்திட்டுதோ.. ஆவ்வ்வ் இனி 2018 என எழுத முடியாதே.. கவலையாக்கிடக்கூ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா... நீங்க அப்பாவிதான். ஏஞ்சலினை நம்பி என்ன நடக்குது, எங்கெல்லாம் போறீங்க, என்ன செய்யறீங்கன்னு சொல்றீங்க. அவங்க போற தளத்திலெல்லாம் அதைச் சொல்லிடறாங்க.

   நேற்றுக்கூட, உங்களை அழைத்த 5-6 வீடுகளுக்குச் சென்று, எதையும் விடாம எல்லா வீட்லயும் விருந்து சாப்பிட்டு, கேக் பார்சல் வாங்கிட்டு வீட்டுக்கு வந்து, பயணக் களைப்பில் வாங்கி வந்த கேக்லாம் தனியா உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுத் தூங்கிக் கிட்டிருக்கீங்கன்னு இங்க சொன்னார்.

   அதுனால போன வருஷ இடுகைக்பு இந்த வருஷம் எழுந்து பின்னூட்டம் போட்டிருக்கீங்க.

   வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 29. நான் பொய் சொல்ல மாட்டேன்ன்:) தலைப்புத்தான் பதற வைக்குதே தவிர, ரசத்தில் பெரிய வித்தியாசம் இல்லை:) என்னைக் கேட்டால்.. என் குழைசாதம் போலவே ரசமும் வைப்பேனாக்கும்:).. கபேட்டில் அஞ்சறைப்பெட்டியில்:) இருப்பவை எல்லாம் ரசத்தில் ஜம்ப் ஆகும்:)) ஹா ஹா ஹா.

  ஆனாலும் பார்க்க ஏதோ வாசம் மூக்கில் நுழைவதுபோல ஃபீல் ஆகுது.. செய்யோணும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க பொய் சொல்ல மாட்டேன் என்று சொன்னது ரசத்தைப் பற்றியா இல்லை, நீங்கள் செய்தால், ரசம் சாதம், குழை சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல் இவை எல்லாவற்றிர்க்கும் வித்தியாசம் இருக்காது, ஒண்ணுபோலவே இருக்கும்னு சொன்னதுக்கா?

   சும்மா செஞ்சு பாருங்க அதிரா... எப்படியும் நீங்கதான் சாப்பிடுவீங்க (வீட்ல மற்றவர்கள் ரசம் விரும்புவார்களா?) அதனால முன்னப் பின்ன இருந்தால் தப்பில்லை.

   நீக்கு
 30. என்னில ஒரு பழக்கம் இருக்குது, ஆருடனாவது ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும்போது.. அடுப்பில் ரசம் கொதிக்குது அல்லது வடை சுடுகிறேன் இப்படிச் சொன்னால் உடனே அதே வாசம் என் மூக்கில் வரும்... அதேபோல சில சமயம் இப்படி படங்கள் பார்க்கும்போது அதே கறிவாசம் மூக்கில் உணர்வேன்... ஹா ஹா ஹா இப்படி வியாதி:) ஆருக்காவது இருக்கோ?:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா... புத்தாண்டில் உங்களை வரவேற்கிறேன்.

   எனக்கு வாசனை அறியும் திறன் அதிகம் (இப்போ கிட்டத்தட்ட ஒரு வருஷம் வாசனை அறியும் திறனே இல்லை). 3-4 வகுப்புகள் படிக்கும்போது வீட்டுக்கு 5-6 வீடுகளுக்கு முன்பே எனக்கு எங்கம்மா பண்ணியிருக்கும் சமையல், டிபன் வாசம் வரும். எப்போதும் அது சரியாக இருந்திருக்கிறது.

   ஆனா நீங்க, போனிலேயே வாசம் வரும்னு சொல்லியிருக்கீங்க. அப்போ உங்க கால்கள் தரையைத்தான் தொட்டுக்கொண்டிருந்ததா? அல்லது கண்டது கனவா?

   நீக்கு
 31. நானும் போனவருஷ இடுகைக்கு இந்த வருஷம் பின்னூட்டம் கொடுக்கிறேன். நேற்று எழுத முடியவில்லை. ரஸம்,ரஸமாக இருந்தது. நான் காட்மாண்டுவில் இருந்தபோது, முடியாட்சி இருந்தபோது இந்திய மடாதிபதிகளெல்லோரையும் அழைத்து ஏதோ மகாநாடு நடத்தினார் அரசர். நம் காஞ்சிமடம் உட்பட பல மடங்கள் வந்திருந்தன. பூஜை,புனஸ்காரங்களுடன் ஏராளமான சிப்பந்திகளுடன் இந்தியாவில் இருக்கும்அப்படியே! சிலவு
  பூராவும் நேபால் அரசாங்கத்தினுடயது. அப்படி வந்த மடங்களுள் உடுப்பி புத்தகே மடமும் ஒன்று. பூராவும் கன்னடம் பேசுபவர்கள். அவர்களுக்கு உதவிக்காக கன்னடம் பேசத்தெரிந்த என் கணவர் அங்கு போகவேண்டி இருந்தது. சாப்பாடும் அவர்கள் மடத்திலேயே. அவர்கள் சாப்பாடு தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் எனக்கும் கிடைத்தது. சாதம் பறிமாறிய உடன் ரஸம்தான் சுடச்சுட. ஸரி சாப்பிட்டாயிற்று என்று பார்த்தால்,அடுத்து ஹுளி!
  சாப்பிட வயிறில்லை. எல்லாவற்றிலும் புளி குறைவு. வெல்லம் சேர்த்தது. சமையல்காரர் சமைத்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்டது ஞாபகம் வந்தது. உங்கள் ரஸத்தைப் பார்த்ததும் அப்போது சாப்பிட்டது நினைவு வந்தது. எவ்வளவு அக்கரையாக சுய விவரமும் சேர்த்து ஸ்வாரஸ்யமாக எழுதுகிறீர்கள்? இம்மாதிரி எல்லோருக்கும் கைவராது. நல்ல பொரித்த அப்பளாமும் இம்மாதிரி ரஸமுமே போதும். ரஸமானபதிவு. கடைசியில் பின்னூட்டத்திற்கு பாக்கி எதுவுமே வைப்பதில்லை மற்றவர்கள். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க காமாட்சி அம்மா. எப்பவும் நீங்க வருவீங்கன்னு எதிர்பார்ப்பேன். புத்தாண்டினால் சில நாட்கள் கழித்து வருவார் என்று நினைத்திருந்தேன்.

   நீங்க உடுப்பி சாப்பாடுன்னு சொன்ன உடனேயே நான் 5-6 வாரங்களுக்கு முன்னால் சத்தியாகாலத்தில் (மத்திய ரங்கம் அருகில்) கோவிலில் சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. தொட்டுக்க கறிகாய்கள் கிடையாது. சாதம், சாம்பார், ரசம், மோர். எனக்கு நம்மவே முடியலை, என் பெண் அவ்வளவு ருசித்து சாப்பிட்டா. நாங்களும் நன்றாகச் சாப்பிட்டோம்.

   நல்ல பசியும் ருசியான உணவும் இருந்தால் தொட்டுக்க எதுவும் தேவையில்லை என்பதை உணர்ந்துகொண்டேன். முன்பெல்லாம் (20+ வருடங்களுக்கு முன்பு), திருப்பதி இலவச உணவில் 1 ஸ்பூன் தொகையல் மாதிரி சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள வைப்பார்கள். வேறு எதுவும் போடமாட்டார்கள்.

   பார்த்தீங்களா? நல்ல சமையல் சாப்பிடும்போது சமைப்பவர்களிடம் செய்முறை தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்திருக்கீங்க (என்னை மாதிரியே... நிறைய பேரை இப்படிப் பார்த்திருக்கிறேன்... அவங்கள்லாம் சாப்பாட்டில் ரசனை உள்ளவங்க).

   மிக்க நன்றி.. புத்தாண்டு உங்களுக்கு இனிமையாக அமையட்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.

   நீக்கு
  2. எல்லோருக்கும் புத்தாண்டு ஆசி சொல்ல மறந்துவிட்டேன்.
   2019 யாவருக்கும் மேன்மையை அளிக்கட்டும். வாழ்த்துகளும் ஆசிகளும் யாவரின் குடும்பங்களுக்கும். அன்புடன்

   நீக்கு
 32. உடுப்பி ரசம் செய்து பார்த்தேன். சூப்பர். நன்றாக இருந்தது .செய்த மொத்த ரசமும் வீட்டில் உள்ள எல்லோரின் வயிற்றுக்குள் சென்றுவிட்டது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!