செவ்வாய், 4 டிசம்பர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை - உயிரின் விலை - பானுமதி வெங்கடேஸ்வரன்


உயிரின் விலை 
பானுமதி வெங்கடேஸ்வரன் 



"வண்டியை நிறுத்து, நான் இங்கேயே இறங்கிகே கொள்கிறேன்" என்றார் கோபால ரத்னம். 


"அங்க படித்துறையாண்ட இறக்கி விடறேன் சார், கொஞ்சம் தொலவு நடக்கணுமே.." என்றான் டிரைவர் ரமேஷ்.

"பரவாயில்லப்பா, நான் நடந்து போய்க்கிறேன்.. " என்று கூறி, காரிலிருந்து இறங்கி சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தபடியே மெள்ள படித்துறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

அவர் பிறந்து வளர்ந்த ஊர். படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டு பம்பாய் சென்று, அங்கு கொஞ்ச நாள் பணியாற்றிவிட்டு அந்த அனுபவத்தைக் கொண்டு ஒரு சிறு தொழிலை தொடங்கினர். 

அவர் உழைப்பு, கீழே பணியாற்றியவர்களின் திறமை, அதிர்ஷ்டம் எல்லாம் சேர்ந்து அவரை மேலே தூக்கி விட்டன. இன்றைக்கு நாட்டின் ஒரு முக்கியமான தொழிலதிபர். அவர் போகாத வெளிநாடு இல்லை என்று சொல்லலாம். தொழில் நிமித்தமாகவும், விடுமுறைக்காக குடும்பத்தோடும் பல்வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். இருந்தாலும் வருடம் ஒரு முறையாவது இங்கே இந்த பவானி கூடுதுறைக்கு வந்து குளித்து விட்டு செல்ல வேண்டும்.  

ஆரம்பத்தில் சில வருடங்கள் அவர் மனைவி அவரோடு வந்து கொண்டிருந்தாள். பிறகு, "அங்கு என்ன இருக்கிறது? நான் வரவில்லை" என்று கூறி விட்டாள். 

அவரின் மகன் கூட, " ஏன்பா போய்த்தான் ஆக வேண்டுமா? அப்படி அங்கு என்ன இருக்கு?" என்றான். 

"இல்லப்பா, நான் என்னை உணர்வு பூர்வமாக பேட்டரி சார்ஜ் செய்து கொள்ள வேண்டும், அதை அங்கேதான் செய்து கொள்ள முடியும்" என்றதும். தந்தையை தனியே செல்ல அனுமதித்தான். 

பிரபல தொழிலதிபர் ஜி.ரத்னம் என்னும் போர்வையை அவர் தான் தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே அவிழ்த்து வைத்து விடுவார். ஒரு சாமானியனைப் போல உடையணிந்து, கூடுதுறைக்கு வந்து நீராடி பின்னர் கோவிலுக்குச்சென்று விட்டு ஊர் திரும்புவார். 

முன்பெல்லாம் ஹோட்டலிலிருந்து நடந்தே வந்து விடுவார். இரண்டு வருடங்களாக அவர் மகன் அதை அனுமதிக்காததால் காரில் வந்து நடக்கக்கூடிய தொலைவில் இறங்கி கொள்கிறார். 

அவர் இறங்கி ஆற்றங்கரையை நோக்கி நடக்குது தொடங்கியதும், ரமேஷ் தன் செல் ஃபோனில் பஷீரை அழைத்து, தன்  இருக்குமிடத்திற்கு வரச் சொன்னான். 

பஷீர் வந்ததும், "அங்க கட்டம் போட்ட சட்ட போட்டுக்கிட்டு போறாரே, அவர்தான். கவனமா இரு. நானே இதை செய்வேன், ஆனால், அவருக்கு என்னைத் தெரியும், அவருக்கு சந்தேகம் வந்துடக் கூடாது, ஓகேவா?"

"அதெல்லாம் சந்தேகம் வராம நடந்துக்கறேன், என் வேலையை முடிச்சப்புறம், எனக்கு பேமெண்ட் எப்போ வரும்?"

"பணத்தை பத்தி கவலைப் படாதே, சொன்னதை ஒழுங்கா செய்.."

" ஓகே மச்சி" என்று பஷீர் கோபாலரத்னத்திற்கு சந்தேகம் வராமல் அவரை பின் தொடர்ந்தான். அவர் குளிக்கும் இடத்திலிருந்து கொஞ்சம் நகர்ந்து, அவனும் குளிப்பது போல, பாவனை செய்து கொண்டிருந்தான். 

கிட்டத்தட்ட, அரை மணி நேரம்  ஒரு சிறு குழந்தையைப் போல நீரில் துளைத்து விளையாடியவர், கரையேறி, படிகளில் அமர்ந்து, கை கூப்பி ஏதோ வேண்டிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பஷீருக்கு வியப்பாகவும், சிரிப்பாகவும் இருந்தது. 



"நாம காசு, காசுன்னு அலையறோம், காசுக்காக என்ன வேணா செய்யலாம்னு தோணுது, ஆனா  இந்தாளப் பாரு, இடுப்புல ஒரு சேப்பு துண்டை கட்டிக்கிட்டு,பெரிய கோடீஸ்வரன்னு சொன்னா, யாராவது நம்புவாங்களா..? கரையேறிட்டார் போலிருக்கே? நாமும் ஏறிடலாமா?" என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர் மீண்டும் குளிக்க வந்தார். 

இரண்டு முறை முங்கி எழுந்தவர், மூன்றாவது முறை நீரில் முங்கியது இயல்பாக இல்லாமல், விருட்டென்று உள்ளே போனது போல இருந்தது. அதற்கேற்றாற்போல் அவர் கை மேலே நீண்டு, உதவிக்கு அழைப்பது போல அசைந்தது. 

பஷீர் உடனே பாய்ந்து, அவர் இருந்த இடத்தை நோக்கி விரைந்து நீந்திச் சென்றான். அவன் சந்தேகப் பட்டதைப் போலவே யாரோ ஒருவன் கோபாலரத்னம் அவர்களை காலைப்  பிடித்து இழுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவனை காலால் ஓங்கி உதைத்ததில் நிலை குலைந்து கோபாலரத்னம் அவர்களை பற்றியிருந்த கைகளை விட்டுவிட்டு, வேகமாக நீந்தி மறைந்தான். 

அதிர்ச்சியில் செயலற்றுப் போன கோபாலரத்னம் அவர்களை கரை சேர்த்து, ஆசுவாசப் படுத்திய பஷீர், " குளிக்க வருகிறவர்களை இது மாதிரி நீரில் மூழ்கடித்து கொலை செய்வதோடு, அந்த உடலை பாறைகளுக்கு இடையில் மறைத்து வைத்து விடுகிறார்கள். இறந்து போனவர்களின் உறவினர்கள் வந்து பாடி கிடைக்காமல் தவிக்கும் பொழுது, தாங்கள் தேடி தருவதாக கூறி, எட்டாயிரம், பத்தாயிரம் என்று பணம் வசூல் செய்கிறார்கள். சமீப காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன. அதனால்தான், ரமேஷ் உங்களுக்குத் துணையா என்னை அனுப்பினான். இதை முன்னாலேயே சொன்னால் நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்பதால்தான் சொல்லவில்லை" என்றதும், 

"உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. ரமேஷுக்கு போன் பண்ணி காரை கொண்டு வரச்சொல்."  என்றார்.

ரமேஷ் வந்ததும், காரில் ஏறும் முன்,"இந்தப் பையனோட அட்ரஸ், பேங்க் அக்கௌன்ட் நம்பர் எல்லாம் வாங்கி கொள்" என்றார்.

"இல்ல சார், பணமெல்லாம் வேண்டாம்.."என்று கை கூப்பினான். அவனுக்கு பணத்தேவை இருக்கிறது, இருந்தாலும் உதவி செய்து விட்டு, அதற்கு பணம் பெற்றுக் கொள்ள ஏனோ பிடிக்கவில்லை. 

"ஏண்டா பணம் வேண்டாங்கற?" ரமேஷ் அடிக்குரலில் கேட்டான்.


"எனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். இப்படி ஒரு ஹெல்ப் பண்ண வெச்சியே, ரொம்ப தாங்க்ஸ்" என்று அவனுக்கு கை குலுக்கி விலகினான்.

60 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா, நெல்லை, அடுத்து வரிசையாக வரும் அனைவருக்கும்.. வல்லிம்மாவுக்கு மாலை வணக்கம்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. அனைவருக்கும் காலை வணக்கம். நல்வரவு கூறியவர்களுக்கும் இனி கூறப் போகின்றவர்களுக்கும் என் வணக்கம்.

      நீக்கு
  3. இப்படியொரு கொடூரம் நாளிதழ்களில் செய்தியாக வந்திருந்தது...

    ஆனாலும் அது கவனத்தில் கொள்ளப்பட வில்லை....

    அந்தச் செய்தியை அடிநாதமாகக் கொண்டு அழகாக புனையப்பட்டுள்ளது - கதை...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை சார். நாளிதழில் படித்ததைதான் பயன்படுத்திக் கொண்டேன்.

      நீக்கு
  4. இன்று அன்பின் பா.வெ. அவர்களின் கைவண்ணமாக இருக்கும் என்று நினைத்தேன்...

    அதே.. அதே... சபாபதே!...

    பதிலளிநீக்கு
  5. பானுக்கா கதை நன்றாக இருக்கிறது. பவானி இந்த இடம் ஆமாம் இதைப் பற்றி பல செய்திகள் வந்தன. அங்கு ஒரு கூட்டமே இருக்கிறது என்று. வாட்சப்பில் பார்த்து இணையத்தில் தேடினேன் அங்கும் சில செய்திகள் இப்படி இருந்தன. ஆனால் ஏன் சுற்றுலாத்துறை, அரசு எந்த ஆக்ஷனும் எடுக்கலைன்னு தெரியலை....அழகான இடமாம். இதனாலேயே முதலில் எங்கள் குடும்பக் குழு போட்ட திட்டத்தை கேன்சல் செய்தது...

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  7. கதை வித்தியாசமாக நன்றாக இருக்கிறது அக்கா. வழக்கம் பொல ட்விஸ்ட்....பஷீரும் ரமேஷும் பேசுவது வேறு ஏதோ ஒன்றிற்கு அடி போடுவது போலத் தோன்றினாலும் கதையில் முதலிலேயே மகன் நல்லவன் எஎன்று நீங்க கோடிட்டுக் காட்டிவிட்டீங்க....பானுக்கா கண்டிப்பா அப்படி முடிக்கமாட்டார் நல்ல முடிவாக இருக்கும் என்று தெரிந்தாலும் ட்விஸ்ட் ட்விஸ்டுதான்...

    நல்லாருக்கு பானுக்கா பவானி ஆறு சுழித்து சுழித்து ஸ்பீடா ஓடுவது போல உங்க நடையும் ஸ்பீடு!!!! ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா அழகா சொல்றீங்கக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. அடுத்த கதை ட்விஸ்ட் இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன், ஹா ஹா.

      நீக்கு
  8. கதை நல்லாருக்கு. செய்திகளில் படித்ததை படத்தோட இணைத்துவிட்டீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. ஒகேனக்கல் அருவியில் இப்படி நடந்து வருவதாகச் சில ஆண்டுகள் முன்னரே சொல்லிக் கொண்டு இருந்தனர். இப்போதும் அப்படி நடந்து வருகிறதோ என்னமோ! ஆனாலும் பானுமதியின் ட்விஸ்ட் நன்றாக இருக்கு. பஷீர் தான் ஏதோ செய்யப் போகிறான் என நாம் நினைக்கக் கடைசியில் நடந்து வேறே! நல்லா யோசித்து எழுதுகிறார். ரிஷபன் மாதிரியே இவரும் சுருக்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா. ஹொகேனக்கல்லில் இப்போதும் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறதாம்.

      நீக்கு
  10. அன்பு பானு மா. காலைவணக்கம். செய்தி அதிர்ச்சியாக இருந்தாலும் கதை வெகு அமைப்பாக வந்திருக்கிறது. நல்ல திகில் திருப்பம்.
    ரமேஷின் மேல் சந்தேகம் வந்து பிறகு விலகிவிட்டது.

    கோர்வையாகக் கதை அமைத்திருக்கிறீர்கள். பெரியவர் இன்னும் வேறு கதைகளில் வருவார் என்று தோன்றுகிறது. வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லி அக்கா.
      //பெரியவர் இன்னும் வேறு கதைகளில் வருவார் என்று தோன்றுகிறது. // நீங்கள் சொல்வது சரிதான். எத்தனை பேரின் க.கு.வை ஓட விட்டிருக்கிறார்? விஷயமுள்ளவர்தான்!

      நீக்கு
  11. முதலில் வந்த அனைவருக்கும்,இனிவரப் போகிறவர்களுக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  12. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளி அம்மன் கோயில் அருகே என்று நினைவு...ஆனால் அப்படி எல்லாம் இல்லை, அது ஆற்றின் சுழல் அங்கு அதிகம் ஆனால் மக்கள் இந்த அம்மனுக்குக் கிடா வெட்ட வ்ருகையில் அத்து மீறி ஆற்றில் ஓர் எல்லைக்கு மேல் குளிக்கச் செல்கின்றனர் சுழல் இழுப்பதும் யாரோ மனிதர் இழுப்பது போலத்தான் இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படி இறந்த உடல்களைத் தேடித் தருவதற்கு அங்கு இருக்கும் மலைவாசிகளால்தான் முடியும் என்பதால் அவர்கள் பணம் அதிகம் டிமான்ட் செய்கிறார்கள் என்றுதான் சொல்லப்படுகிறது....

    மனிதனோ, சுழலோ......அந்த இடம் அபாயம் என்பது தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான கதை.
    டிரைவர் ரமேஷ்,பஷீர் மேல் சந்தேகம் வரும் படி கொண்டு போய் பின் நல்லபடியாக கதையை அழகாய் நிறைவு செய்து விட்டீர்கள்.
    நல்லவர்களை சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களே.
    பஷீர் பெரியவரின் துண்டு கலரை மட்டும் மாற்றி சொல்கிறார் அதை மட்டும் சரி செய்து விடலாம் பானு.
    துண்டைக் கட்டிக் கொண்டு என்று மாற்றலாம்.

    நீங்களும் பன்முக வித்தகர்பானு. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.
      //பஷீர் பெரியவரின் துண்டு கலரை மட்டும் மாற்றி சொல்கிறார் // இது தேம்ஸ் நதி தீரத்துக்காரரின் கண்ணில்தான் படும். என்ன சொல்ல போகிறாரோ? என்று நினைத்தேன்.

      நீக்கு
  15. கதையில் நல்ல திருப்பம். நல்ல முடிவாக அமைந்ததில் மகிழ்ச்சி 😃

    பதிலளிநீக்கு
  16. பஷீர் உயர்ந்த மனிதராக ஆகி விட்டார். காசு காசு என்று அலைந்தாலும், உயிரை காப்பாற்றி விட்டு அதற்கு பணம் பெற்றுக் கொள்ளாதது அருமை.
    உயிருக்கு விலை தீர்மானிக்க முடியாது தானே!

    பதிலளிநீக்கு
  17. சிறிது நேரம் திகைப்பு... முடிவில் சுபம்...

    பதிலளிநீக்கு
  18. பஷீர் வந்ததும், "அங்க கட்டம் போட்ட சட்ட போட்டுக்கிட்டு போறாரே, அவர்தான். கவனமா இரு. நானே இதை செய்வேன், ஆனால், அவருக்கு என்னைத் தெரியும், அவருக்கு சந்தேகம் வந்துடக் கூடாது, ஓகேவா?"

    "அதெல்லாம் சந்தேகம் வராம நடந்துக்கறேன், என் வேலையை முடிச்சப்புறம், எனக்கு பேமெண்ட் எப்போ வரும்?"

    "பணத்தை பத்தி கவலைப் படாதே, சொன்னதை ஒழுங்கா செய்.."

    இந்த வரிகள் வயிற்றில் புளி கரைத்தது. ஐயோ பாவம் இந்த பெரியவருக்கு என்ன ஆகுமோ என்று. ஆனால், climax super.
    இந்த உலகத்தில் இப்படியும் கூட நடக்கிறதா என்று என்ன தோன்றுகிறது. பணம் பாதாளம் நீருக்குள்ளும் வரையும் பாயும்.என்பது இதானோ?

    பதிலளிநீக்கு
  19. பஷீரை தவறாக நினைக்க வைத்து முடிவில் மாற்றி விட்டது அருமையான திருப்பம். வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  20. நல்ல திருப்பம் தான் ...

    ஆனாலும் இந்த செய்திகள் பயத்தையே வர வைக்கின்றன ..

    வித்தியாசமான பார்வையில் ஒரு சிறுகதை ..அருமை..

    பதிலளிநீக்கு
  21. ஆஆஆ இன்று பானுமதி அக்காவின் கதையோ, மோனிங் லேட்டா எழும்பியதால இன்னும் கதை படிக்க முடியவில்லை... அதே என் ராகி மாமா கதை:) நீங்க என்ன பெயர் சூட்டியிருக்கிறீங்க என படிச்சாத்தான் தெரியும்.. படிச்சபின் கொமெண்ட்ஸ் வரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெதுவா வாங்கோ. கொமெண்ட்ஸ் போட மறக்க வேண்டாம்.

      நீக்கு
    2. எனக்குப் பதில் கிடைக்காது எனும் இடங்களில்தான் நான் தனியே நிண்டு புலம்புவதில்லை:).. மற்றும்படி நன்கு கும்மி அடிக்கப் பிடிக்கும்:)

      நீக்கு
  22. சீதை ராமனை மன்னிப்பதுபோல் இதுவும் ஒரு வித தொடர் அழைப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீதையை விட்டு ராமனை மன்னிக்கச் சொன்னார்கள். இதில் அந்த பெரியவர் நிறைய பேரை விடம் விதமாக யோசிக்க வைத்திருக்கிறார். வாசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  23. ரமேஷ் --நனே இதைச் செய்வேன் /// ரமேஷ் பஷீர் கூட்டணி என்ன திட்டமிட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை எழுதுகிறவரே கோனார் நோட்ஸும் போட வேண்டுமென்றால் கொஞ்சம் கஷ்டம்தான். கீழே ஏஞ்சல் விளக்கியிருக்கிறார்.

      நீக்கு
  24. வாவ் !! சூப்பரான எதிர்பாராத ட்விஸ்ட் .அழகா எழுதியிருக்கீங்க பானுக்கா .

    சே பாழும் மனசு ஒரு செக்கன்ட் பஷீர் ரமேஷ் பெரியவரின் மகனை என்று சட்டென சந்தேகப்பட வச்சிடுச்சி ..dont be too quick to judge என்று இதைத்தான் சொல்றாங்களோ ..

    பதிலளிநீக்கு
  25. ஆஆஆ சோட் அண்ட் சுவீட்டான கதை, எனக்கு பஷீரில் எந்தவித சந்தேகமும் வரவில்லை அஞ்சுவைப்போல பிக்கோஸ் நேக்கு அறிவு அதிகம்:) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு கீசாக்கா வீட்டருகில் இருக்கும் மார்கட்டில வீசிடுங்கோ பிளீஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிக்கோஸ் நேக்கு அறிவு அதிகம்:)// ஆமாம், ஆமாம், இல்லையா பின்னே? ஒப்புக்கொள்கிறோம்(ஓப்புக்கொள்ளாவிட்டால் விட்டு விடுவீர்களா?;) )

      நீக்கு
    2. அதிரடி, அந்த மார்க்கெட், (வணிக வளாகம்) இப்போ இல்லை. பூட்டி வைச்சிருக்காங்க! :)))))

      நீக்கு
  26. உண்மையில் இப்படியும் ஒன்று நடக்கிறதோ? ஆட்களின் உடம்பை ஒளித்து வைத்து எடுத்துக் கொடுப்பது? நம்பவே முடியவில்லை. இதை அறிஞ்சுதான் மகன் அப்படி பஷீரை அனுப்பியிருக்கிறார். சில வயதானோருக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்காது தம்மை ஓவராகப் பாதுகாப்பது, குழந்தைகளோடும் இப்ப்டித்தான் ஒளிச்சிருந்து கவனிக்க வேண்டி வரும் சில சமயம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசுக்காக நடக்கும் மோசமான விஷயங்களில் இதுவும் ஒன்று.

      நீக்கு
  27. அழகிய கதை பானுமதி அக்கா ஆனா வழமையான உங்கள் டுவிஸ்ட் இதில் இல்லாததுபோல ஒரு உணர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வழமையான உங்கள் டுவிஸ்ட் இதில் இல்லாததுபோல ஒரு உணர்வு.// அப்படியா?
      நீங்கள் ஒரு விஷயத்தை நோட் பண்ணி என்னை கலாய்க்கப்போகிறீர்கள் என்று நினைத்தேன். உங்களுக்கு முன்னால் கோமதி அக்கா சொல்லி விட்டார்கள்.

      நீக்கு
  28. அருமையாக எழுதியிருக்கீங்க சகோதரி.

    அதுவும் ட்விஸ்ட் எதிர்பார்க்கவில்லை. அந்த இருவரும் எதோ செய்துவிடப் போகிறார்கள் என்றே தோன்றியது. நல்ல முடிவு அதுவும் பஷீர் பணம் வேண்டாம் என்று சொன்னது என்னதான் பணத்துக்காகச் செய்தாலும் மனித நேயம் உள்ள மனிதராகப் படைத்ததற்கு மகிழ்ச்சி. நல்ல முடிவு. பாராட்டுகள், வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  29. @ பானுமதி வெங்கடேஸ்வ்ரன்: ராத்திரிப் படித்துக் காலையில் எழுதுகிறேன்:

    காட்டாற்று வெள்ளம்போல் வாசகர்களை இழுத்துக்கொண்டு ஓடுகிறது கதை.

    பதிலளிநீக்கு
  30. மிகவும் நன்று பாராட்டுகள் இது போல் நிகழ்வுகள் கோவை மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றில் நடைபெறுவதாக செய்தியும் வந்திருந்த து.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!