புதன், 26 டிசம்பர், 2018

புதன் 181226 : சீட்டிங் செய்ததுண்டா ?



ஏஞ்சல் : 

1, அற்ப விஷயங்களையெல்லாம் சர்ச்சை ஆக்குவது யார்? இதன்னால் யாருக்குஆதாயம் ? 

அற்ப விஷயங்களை சர்ச்சை ஆக்குபவர்களுக்குதான் லாபம். விளம்பரம் + சர்ச்சையால் பாதிக்கப்படக்கூடியவர்களிடமிருந்து 'சம்திங்'. 
அற்ப விஷயங்களை  சர்ச்சையாக ஆக்குவது கேட்பவரைக் கவர வேண்டும் என்று நினைக்கும் அரைகுறை அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள்.

2, மாற்றங்கள் அவசியமா ? சில மாற்றங்களை ஏற்க மனம் மறுக்கிறதே ? ஏன் ?  

       
மாற்றங்கள் அவசியமே. காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ப அமைகின்ற மாற்றங்கள், முன்னேற்றத்தைக் கொண்டுவரும். 

   
Fighting against changes is fighting against progress. 

மாற்றங்கள் அவசியம் தான். மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை கூட .  சிலவற்றை மனது ஏற்க மறுக்கிறது என்பது சில மாற்றங்கள் அநாவசியமாகவும் அருவருப்பானதாகவும் இருப்பதால் தான்.
     
3, ஒருவரை நமக்கு மிகவும் பிடித்துபோகிறது இன்னொருவரை எதோ காரணத்தால் அவர் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கிறது .இந்த இரண்டில் எது முக்கியம் அவசியம் ??? 


இது மிகவும் சிக்கலான கேள்வி. பார்த்ததும் பிடித்துப்போகிறது என்றால், அவரின் தோற்றம் / நடை / உடை / பாவனை என்ற ஏதோ ஒரு (நம்மைக்) கவரும் அம்சம் அவரிடம் இருக்கிறது என்று பொருள். இன்னொருவர் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கிறது என்றால், அவரிடம் முதலில் ஏதோ ஒரு கவரும் அம்சம் நம்மை ஈர்த்து, அதன் பின் அவருடன் பழகும்போது, அல்லது அவரை மேலும் பல சந்தர்ப்பங்களில் கவனிக்கும்போது, நம்மைக் கவர்ந்த அம்சம் உறுதிப்படுகின்றது,  அல்லது மேலும் பல நல்ல அம்சங்கள் நமக்குத் தெரியவருகின்றது என்று பொருள். எனவே, பார்த்ததும் முதலாக ஏதோ ஓர் அம்சம் கவர்வதுதான் முதன்மையான விஷயம். அது இல்லாவிட்டால், மதிப்பு, மரியாதை எல்லாம் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. 



எது அவசியம் என்பதைவிட ஏன் இப்படி என்று கேட்கலாம்.
பிடிப்பதோ பிடிக்காததோ இதில் முக்கியத்துவம் ஏதுமில்லை. நம் விருப்பு வெறுப்பு நம் உணர்வுகளின் அடையாளம்.
            
4, சின்ன வயசில் கோலி கில்லி கேரம் லூடோ போன்ற விளையாட்டுக்கள் விளையாடும்போது சீட்டிங் செஞ்சதுண்டா ?? உங்களிடம் அதிகம் ஏமாந்தது யார் ?
(எனக்கு அப்படி சந்தர்ப்பமே அமையல்ல அதான் கேட்கிறேன் ??_
                
சின்ன வயதில் என்னைவிட பெரியவர்களுடன் விளையாடிய விளையாட்டுகளில், நாந்தான் அதிகம் ஏமாற்றப்பட்ட ஆள். அப்பிராணி! அந்த டெக்னிக்குகளை எல்லாம் கற்றுக்கொண்டு, தம்பியுடன் விளையாடும்போது சீட்டிங் செய்ய முயன்றால், என்னுடைய தம்பி எமகாதகன், உடனே கண்டுபிடித்து, உஷார் ஆயிடுவான். 
          
என்னிடம் அதிகம் ஏமாந்தவன் நான்கைந்து வீடுகள் தள்ளி வாழ்ந்த ஒரு அப்பாவிப் பொடியன். (அவனுடைய பெயர் மறந்து போயிடுச்சு. அவனுடைய அக்கா பெயர் மட்டும் ஞாபகம் இருக்கு.) 

 விளையாட்டில் வெல்ல நினைப்பது அதன்காரணமாக இளம்வயதில் எதிராளிகளை ஏமாற்றுவது மனித சுபாவம். அதை விளையாட்டோடு மட்டும் நிறுத்திக் கொள்வதும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் செய்யாமலிருப்பதும் பண்பாடு.
      
5, வேலை வெட்டி இல்லாதவன் அப்டிங்கறாங்களே ? இதில் வேலை தெரியும் வெட்டி அப்டின்னா என்ன ??
              
அந்தக் காலத்தில், வேலை என்றால், விவசாய வேலை. உழுவது, விதைப்பது, நாற்று நடுவது, எரு இடுவது, நீர் பாய்ச்சுவது என்று ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. இந்த வேலைகள் தெரியாத சிலர், காட்டிற்கு சென்று, சவுக்கு மரம் வெட்டி, விறகு வெட்டி, அவற்றை விற்றுப் பிழைத்திருந்தார்கள். விவசாயமும் தெரியாது, வெட்டவும் தெரியாது என்று இருந்தவர்களை, வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று சொன்னார்கள் போலிருக்கு. 


வெட்டி என்றால் பொழுது போக்கு.
              
6, வலி நமக்கு உணர்த்துவது எதை ? வலிகள் நம்மை பலப்படுத்துமா இல்லை பலவீனமாக்குமா ?? 

                
சாதாரண இரும்பு, ஓரளவுதான் உறுதியாக இருக்கும். அதே இரும்பை, உலையிலிட்டு, அதை உஷ்ணப்படுத்தி, பிறகு ஆறவைத்தால், அதன் உறுதி அதிகமாகும். (Heat treatment) 

               
நாமே வலியப்போய் வலிகளை வாங்கிக்கொள்வதைவிட, தானாக வருகின்ற வலிகளை சந்தித்து, அதனை வெல்வது நம்மை மேலும் மேலும் பலப்படுத்தும். No gains without pains. 

உடல் வலி குறைபாட்டின் அடையாளம். மனவலி நாம் விரும்பாத நிதரிசனத்தின் வெளிப்பாடு. வலி  நம் வளர்ச்சியைப் பொறுத்து பலம் அல்லது சோர்வைத் தரும்.
               
7, உலகம் உருண்டை , ஆப்பிள் உருண்டை பிஸ்கட் சதுரம் செங்கல் செவ்வகம் ஓகே இப்போ ஆகாயம் என்ன ஷேப் ?? 

               
ஆகாயம் என்பது நம் மனம். அதற்கு வடிவம் கிடையாது. பலகோடி ஒளி ஆண்டுகள் பயணம் செய்தாலும் ஆகாயத்தின் எல்லை கண்ணுக்குப் புலப்படாது. 
             


ஆகாயம் உருவங்கடந்த பிரமாண்டம்.
    
8, இந்த சினிமா நடிகைகள் பல படங்களில் உதாரணத்துக்கு மௌனராகம் ரேவதி துவங்கி சமீபத்து நடிகைகள் சில்லியாக ஐ மீன் முகத்தை சுழித்து குழந்தை போல் நடித்து silly ஓவர் ஆக்டிங் செய்கிறார்களே ? இதை பற்றி தங்கள் மேலான கருத்து ???  இவற்றை உண்மையில் படம் பார்ப்போர் ரசிக்கிறார்களா ??
              
இந்த கேள்வியை படிக்கும்போது ஜோ ,தமன்னா கீர்த்தி சுரேஷ்லாம் உங்க கண்ணு முன்னாடி வந்து பயங்காட்டினா நான் பொறுப்பில்லை :)))))))
            
ஹன்சிகா மொத்வனி :) அப்புறம் ஸ்ரீராமின் ஆஸ்தான ப்ரிய ஹீரோயின்ஸில் கே ஆர் விஜயா :) இவங்க ஒரு படத்தில் பழையதை சாப்பிடும் ஸீன் ஒண்ணு இதெல்லாம் உங்க மனக்கண் முன்னாடி வந்தே ஆகணும் :) 
      
கேள்வி, பதில் எல்லாவற்றையும் நீங்களே சொல்லிட்டீங்க! குழந்தைகளை இரசிப்பவர்கள், குழந்தை சேஷ்டைகளையும் (நடிகைகள் செய்தால்) இரசிப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். 

பெண்களுக்கு ஒரு பருவம்வரை குழந்தைத்தனம் இயல்பாகவும் ரசிக்கும்படியும் இருக்கும். அந்தப் பருவத்தைச் சித்தரிக்க அப்படி நடித்தால் ஏற்பாக இருக்கும்.  இந்த நடிகையர் வெற்றிக்கு அவர்களது பாத்திரப் படைப்பு அப்படி அமைந்திருக்கலாம்.  
          
9, CHICK PEAS ..நியாயமா இதை கோழி குஞ்சு கடலை என்றுதானே சொல்லணும் எதுக்கு கொண்டை கடலைனு சொல்றாங்க ??
           
கொண்டைக்கடலைக்கு ஆங்கிலப் பெயர் இன்றுதான் தெரிந்துகொண்டேன். நன்றி! சென்னைல ரொம்பப் பேருங்க இதை மூக்குக் கடலை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சிலர் கொத்துக்கடலை என்பார்கள். போகட்டும்! பாதி தமிழ், பாதி ஆங்கிலம் கலந்து. கோழிப் பீ, மூக்குப் பீ என்றெல்லாம் சொல்லாமல் இருந்தால் சரிதான்! 

கோழி வளர்ந்து சேவலானால் கொண்டை வந்துவிடும்.
            
10, தொலைபேசி மணி அடித்து நீங்க ரிசீவரை /கால் அட்டென்ட் பண்ணு முன்னர் எதிர்பக்கம் இருப்பவர் அவசர குடுக்கை ...ஹலோ போலீஸ் ஸ்டேஷனா ? ஹலோ சரவணா பாவனா சே சே பவனா :) ?? என்று கேட்டால் எப்படி உணர்வீர்கள் ? என்ன பதில் தருவீங்க ??
   
   

               
" ஆமாம், உங்களுக்கு என்ன வேண்டும்? " என்று கேட்டு, ஏதேனும் கதைக்கரு கிடைக்கிறதா என்று சிலசமயம் தோண்டிப் பார்ப்பேன். 
           
"ஹலோ போலீஸ் ஸ்டேஷனா ? " என்று கேட்பவர்களுக்கு, "இல்லீங்க ரயில்வே ஸ்டேஷன் " என்று சொல்வேன். 
             
போன்கள் அதிகம் நிறுவப்படாத (1973) அந்தக் காலத்தில், அசோக் லேலண்டு பாக்டரியிலிருந்து, பெருத்த திண்டாட்டத்திற்குப் பின், என் சிடி ஆபீசிற்கு (Ashok Leyland City Office) க்கு லைன் கிடைத்தது. அவசரம் அவசரமாக, " ஹலோ அசோக் லேலண்டு சிடி ஆபீசா ?" என்று கேட்டேன். அது ஏதோ ராங் நம்பர் கனெக்ஷன் போலிருக்கு. மறுமுனையில் எடுத்தவர், " என்ன! அக்ஷய லிங்க செட்டியாரா ? அப்படி யாரும் இங்கே இல்லீங்க " என்று சொல்லி போனை வைத்துவிட்டார்! 

தவறான எண் என்று சொல்லிவிடுவேன். சில சமயம் ஏடாகூடமாக பதில் தந்து வெறுப்பேற்றுவதுமுண்டு.
              
11, ரோட்டில் எச்சில் துப்புவோர் ,எந்நேரமும் சூயிங்கம் மெல்வோர் ,மிக்ஸர் அதுவும் நார்த் வெரைட்டி ஒரு மசாலா வாசனை ஊரெல்லாம் பரவ சாப்பிட்டுக்கொண்டே பேசுவோர் , இவங்களுக்கு என்ன தண்டனை தருவீர்கள் ?
               
(மனதால்) அவர்கள் வாயில் சூட்டுக்கோல் கொண்டு கன்னா பின்னாவென்று இழுப்பேன்; "நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், இங்கு எச்சில்கள் துப்ப விடமாட்டேன்! நாற வாய்களெல்லாம் நல்ல வாய்கள் ஆகும்வரை ஓயமாட்டேன் ! " என்று பாடியபடி! 

 தண்டிக்க அதிகாரம் இருப்பின் ஆறு கசையடிகள்.
        
12, நீங்கள் ஹோட்டலுக்கு போனால் menu கார்டை பாக்காமல் ஒரு குறிப்பிட்ட உணவை ஆர்டர் குடுப்பது எதை ? ஏன் ?
            
மெனு கார்டை பார்க்காமல் கேட்பது : 'ஒரு டம்ப்ளர் வெந்நீர் கொண்டுவாங்க.' 
        
ஹோட்டல்களில் நான் பெரும்பாலும் மெனு கார்ட் பார்ப்பதில்லை. நுழையும் முன்பே 'இன்றைய ஸ்பெஷல்' போர்டு படித்து, என்ன சாப்பிடவேண்டும் என்று தீர்மானித்தபின்தான் உள்ளே நுழைவேன். மெனு கார்டில், எந்தெந்த உணவு என்னென்ன விலை. அதிகம் விலை உள்ள பண்டம் எது, குறைந்த விலை உள்ள பண்டம் எது என்றெல்லாம் ஆராய்ந்து தெரிந்துகொள்வேன். அக்கம்பக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் என்ன சாப்பிடுகிறார்கள் என்று நோட்டம் விடுவேன். 


இது அந்தந்த நபரின் விருப்பத்தைச் சார்ந்ததுதானே. இதில் ஏன் என்ற கேள்வி பிறப்பது சரியில்லை.
              
13, மனம் என்பது உணர்வா ? 

             
இல்லை. ஐம்புலன்களின் பதிவுகள்; நம் அனுபவங்களின் தடங்கள். 


மனம் என்பதன் வெளிப்பாடு எண்ணம்.விருப்பு வெறுப்பு அதில் அடக்கம்.
             
14, ஒரு நட்பு அல்லது உறவு உங்களருகில் அமர்ந்திருப்பவரிடம் உங்கள் கைபேசியில் உள்ள ஒரு புகைப்படத்தை காட்டுகிறீர்கள் உடனே அவரை மற்ற படங்களையும் பார்க்கலாமா என்றதும் என்ன சொல்வதென்று புரியாமல் தலையாட்ட அந்த இங்கிதம் தெரியா நட்புறவு எல்லா படங்களையும் பார்க்கிறார் .இப்போ உங்க மன நிலை என்ன ?
இப்படி பட்டவர்களை எப்படி டீல் செய்வது ? 

            
ஆமாம், அப்படி செய்பவர்கள் இங்கிதம் தெரியாதவர்கள்தான். 
" ஓ ! மற்ற படங்கள்தானே! தாராளமாகப் பாருங்கள்" என்று சொல்லி அவரிடம் என்  கைப்பேசியைக் கொடுத்துவிட்டு, " உங்க கைப்பேசியைக் கொடுங்க, ஒரு அர்ஜெண்ட் கால் பண்ணனும் " என்று கேட்டு அவருடைய கைப்பேசியை வாங்கி, " ஹலோ, டேய் சோமநாதா! என்னடா சோமாலியா போன உடனே எங்களை எல்லாம் மறந்துட்டியா? இப்போ அங்கே என்ன டைம்? சாப்பிட்டாயா ? பாப்பா எங்கே ? அதுகிட்ட குடு போனை ! ஐ குஜ்ஜிலிமா ! " என்று கொஞ்ச ஆரம்பித்தால், அப்புறம் இங்கிதம் தெரியாத மனிதர் அவசரம் அவசரமாக படம் பார்ப்பதை முடித்துக்கொள்ளமாட்டாரா!  



கைபேசியை இரவல் வாங்க உரிமை உள்ளவருக்கு அதில் உள்ள படங்களைப் பார்க்கவும் உரிமை உண்டு.

பிறர் பார்க்கக் கூடாத படங்களை எடுப்பதோ வைத்திருப்பதோ தவிர்க்க வேண்டிய ஒன்று. 
        
15 , மினி இட்லி சாப்பிடும்போது உண்மையில் மனசு உணவை உண்ட திருப்தி அடைகிறதா ??
பின் குறிப்பு இது வரைக்கும் படத்தில் மட்டுமே பார்த்திருக்கேன் மினி இட்லிஸ் சாப்பிட்டதில்லை அதாங் கேட்டேன் வேறொன்றுமில்ல :)
         
உணவை உண்ட திருப்தி வரும். என்ன,  நாலு இட்லிகளை விண்டு சாப்பிடுவோம். பதினாறு மினி இட்லிகளை, விள்ளாமல் விரியாமல் அள்ளலாமே! 
   
உண்ட திருப்தி உணவின் சுவையால் அல்ல  அளவால் வருவது.          
           
* இந்த வண்ண பதில்கள் பிற்சேர்க்கை. லேட் டெலிவரி ... !
                                        

61 கருத்துகள்:

  1. அன்பின் KGG , ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. வரவேற்ற துரைக்கும் இப்போக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கும், பின்னர் வரவேற்கப் போகும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்.

    பதிலளிநீக்கு
  3. இந்தவாரம் ஏஞ்சலும் கௌதமன் சாரும் ஒட்டுமொத்தக் குத்தகை எடுத்துட்டாங்க போல! :) ஏஞ்சலின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதால் இப்போ ஓய்வு எடுத்துட்டு இருப்பாங்களோ? அல்லது பார்ப்பாங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அதேதான் நினைச்சேன் கீதாக்கா...அவங்க புது வருஷம் வரை சர்ச் செர்வீஸில் இருப்பாங்களே...

      கீதா

      நீக்கு
  4. கல்யாண வரவேற்பு நிகழ்வுகளில் அமர வைத்துப் பரிமாறுவதை ஆதரிக்கிறீர்களா? அல்லது பஃபே முறையில் உணவுகள் வைத்திருப்பதையும் நாமே தேர்வு செய்து உணவு எடுத்துக் கொள்வதையும் ஆதரிக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா, தொடரும் அனைவருக்கும்

    வல்லிம்மா! இனிய மாலை வணக்கம்…

    ஆஹா இன்று புதன் என்பதே மறந்துவிட்டது....ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஆஹா ஏஞ்சலின் கேள்விகளைப் போன வாரமே பார்த்தேன்...அப்பவே நினைச்சேன் அடுத்த புதன் ஏஞ்சலின் வாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ரம்!!!!!!! ஆனா அவங்க செர்வீஸ்ல இருப்பாங்களேன்னு..

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பஃபே முறையில் உணவுகள் வைத்திருப்பார்கள். அடியில் சூடு நிலைப்பதற்காகச் சின்னதாக அடுப்பு எரியும். நாமே எடுத்துக் கொள்ளலாம் என்பதே பொதுவான விதி! ஆனால் இங்கெல்லாம் குறிப்பாய்த் தமிழ்நாட்டில் பஃபே உணவைக் கூடப் பரிமாறுகின்றனர். நாம் தட்டை எடுத்துக் கொண்டு சென்று நீட்டினால் ஒவ்வொரு உணவுக்கும் அருகே இருக்கும் ஊழியர் நமக்குப் பரிமாறுவார். பின்னர் மீண்டும் வேறு வகை உணவை எடுக்கப் புதிய தட்டைத் தான் எடுக்கணும் என்பதும் பொதுவான விதி! ஆனால் இங்கே தமிழ்நாட்டில் இந்தச் சமையல் காடரிங் காரர்கள் தட்டைத் தான் கணக்கில் எடுப்பார்களாம். நண்பர் ஒருத்தர் சொல்லிக் கேட்டேன். ஆகவே ஏற்கெனவே சாப்பிட்ட தட்டிலேயே மீண்டும் அனைத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும். இது பிடிக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... நம்ம ஊர்க் காரங்களுக்கு பஃபேன்னா எப்படிச் சாப்பிடணும்னு தெரியாது. காணாததைக் கண்டவங்க மாதிரியும், காசுதான் கொடுக்கிறோமே என்று கண்டபடி அள்ளிப்போட்டுக்கொண்டு கடைசியில் குப்பைல கொட்டுவாங்க. இவங்க மெஜாரிட்டியாக இருக்கறதுனால, பஃபே உணவைக்கூட பரிமாறும்படி ஆகிடுது. கொஞ்சம் எடுத்துக்கிட்டு சாப்பிட்டுட்டு பிறகு வருவோம்னு கிடையாது. நீங்க கல்யாணச் சாப்பாட்டுப் பந்திகள்ல பார்த்தீங்கன்னா எத்தனைபேர் இலையை ஓரளவு சுத்தமாக வைத்துவிட்டு எழுந்துக்கறாங்க? குறை மக்கள்டதானே.

      நீக்கு
    2. நெல்லை மிகச் சரியா சொன்னீங்க....பஃபே சிஸ்டமே நமக்கு வேணுன்றதை அளவா போட்டு உணவு வேஸ்ட் ஆகாம இருக்கத்தான் ஆனா அதுலயும் நீங்க சொல்லிருக்கறமாதிரிதான் நடக்குது...இலைல போட்டாலும் வேஸ்ட் பண்ணுறாங்க...தானே எடுத்துப் போட்டுச் சாப்பிடறதுலயும் வேஸ்ட்...

      கீதா

      நீக்கு
    3. நெல்லை பஃபேன்னா முதல்ல நான் என்னென்ன இருக்குனு ஒரு ரவுன்ட் பார்த்துட்டு டிசைட் செஞ்சுட்டு அந்த ஸ்டாலுக்கு மட்டும் அல்லது அந்த நபரிடம் மட்டும் தட்டைக் காட்டி வாங்கிக் கொள்வேன் இல்லை என்றால் பெரும்பாலும் நானே எடுத்துக் கொள்கிறேன் என்று எடுத்துக் கொள்வதுண்டு....

      கீதா

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  9. கேள்விகளும் பதிலும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  10. வரேன் கேள்வி பதில்கள் வாசிக்க...கிச்சன் வேலை, வீட்டு வேலை முடிச்சுட்டு

    கீதா

    பதிலளிநீக்கு
  11. 4 வது கேள்விக்கு பதில் உங்கள் குறும்பை ரசித்தேன்.
    6 வது கேள்விக்கு பதிலில் பலம் பெற்றேன்.
    11 வது கேள்விக்கு பதில் பாட்டு பிடித்தது.
    எனக்கு ரோட்டில் துப்புவர்களை கண்டால் கோபம் வரும்.

    பதிலளிநீக்கு
  12. இலையைப் போட்டு ஏற்கெனவே பரிமாறப்பட்டு இருக்கும் இலைகளில் உணவு உட்கொள்ளுவதைப் பிடிக்காவிட்டாலும் தவிர்க்க முடிவதில்லை. ஏனெனில் அங்கே தான் உட்காரும்படி சொல்கின்றனர். இதற்கு உங்கள் கருத்து என்ன? இதை விட பஃபே பரவாயில்லை எனில் அங்கே தட்டுக்கள் பிரச்னை! எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லது சொறிஞ்சுக்க? இப்போல்லாம் கல்யாணங்களுக்குப் போனாலே சாப்பிடாமல் வீட்டில் வந்து ஒரு ரசம் சாதம் சாப்பிட்டால் போதும் எனத் தோன்றுகிறது.

    பரிமாறினாலும் நாம் சாப்பிடுவதற்குள்ளாக அடுத்தடுத்து உணவு வந்து கொண்டே இருக்கும். சாப்பிட முடிவதில்லை! இது காடரிங் காரர்கள் உணவை மிச்சப்படுத்தவும் செய்திருக்கும் உணவை வைத்து வந்திருக்கும் அனைவருக்கும் பரிமாறுவதற்கும் செய்யும் தந்திரம் என்கின்றனர். ஆனாலும் எப்படியேனும் அதிக உணவு மிஞ்சித் தான் போகிறது. அதை என்ன செய்வார்கள்? ஏனெனில் அகாலமாக இருக்கும். எந்த அநாதை ஆசிரமத்துக்கோ அல்லது முதியோர் இல்லத்துக்கோ கொடுக்க முடியாது. மறுநாள் காலை கொடுப்பதெனில் பல உணவுகள் வீணாகி இருக்கும். சொந்தக்காரங்க கல்யாணங்களிலே உணவைக் கீழே கொட்டுவதைப் பார்த்திருக்கேன். இது நல்லதா? தேவை தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விலாம் பத்தி பத்தியாக் கேட்டீங்கன்னா, பதில் ஒரு வரிகூட வராது கீசா மேடம்.

      இலையைப் போட்டு ஏற்கனவே பரிமாறப்பட்டு இருக்கும் இலையில் நான் இதுவரை உட்கார்ந்தது இல்லை (ஒரு எக்சப்ஷன், சமீபத்தில் சென்றிருந்த திருப்பதி அன்னதானக் கூடம்). இலையை மட்டும்தான் போட்டிருக்கவேண்டும். அதில் தண்ணீர் தெளித்து தூய்மை செய்வது உட்காரும் ஆள். அதன் பின்புதான் எதையும் பரிமாறணும்.

      நீக்கு
  13. ரசிக்க வைத்தன பதில்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  14. ஏஞ்சலின் கேள்விக்கணைகளைத் தாக்கும்போதே நினைத்தேன்... இந்த வாரம் ஏஞ்சலின் கேள்விகள் மட்டும்தான் வரும்னு.

    கேஜிஜி சார்... எதையோ சாக்குவைத்து பாவனா படத்தை வெளியிடுவதை (பல தடவைகள் இது நடந்திருக்கு), நான் மட்டும்தான் கவனிக்கிறேனா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை படத்தை நல்லா பாருங்க பாவனா கௌ அண்ணாவை முறைக்கிறாங்க பாருங்க!!!!

      கீதா

      நீக்கு
    2. கீதா ரங்கன்... காலைல சிரித்த முகத்தோட இருந்தாங்க. என் பின்னூட்டத்துக்கு அப்புறம் முறைக்கிற மாதிரி முகத்தைத் திருப்பிட்டாங்க. நீங்க காலைல எங்க பெண்கள் போட்டோல்லாம் இடுகைல பார்த்திருக்கப் போறீங்க. அதுனால கவனிக்கலை போலிருக்கு.

      நீக்கு
  15. மாற்றங்கள் அவசியம் தான். மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை கூட . சிலவற்றை மனது ஏற்க மறுக்கிறது என்பது சில மாற்றங்கள் அநாவசியமாகவும் அருவருப்பான தாகவும் இருப்பதால் தான்.//

    எல்லா பதில்களுமே நல்லாருக்கு இந்த பதில் ஆப்ட்!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. அந்த டெக்னிக்குகளை எல்லாம் கற்றுக்கொண்டு, தம்பியுடன் விளையாடும்போது சீட்டிங் செய்ய முயன்றால், என்னுடைய தம்பி எமகாதகன், உடனே கண்டுபிடித்து, உஷார் ஆயிடுவான்.//

    ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்....நானும் இப்படி ஏமாந்ததுண்டு...

    என்னிடம் அதிகம் ஏமாந்தவன் நான்கைந்து வீடுகள் தள்ளி வாழ்ந்த ஒரு அப்பாவிப் பொடியன். (அவனுடைய பெயர் மறந்து போயிடுச்சு. அவனுடைய அக்கா பெயர் மட்டும் ஞாபகம் இருக்கு.) //

    ஹா ஹா ஹா அதென்னவோ தம்பி பெயர் மறந்துடுச்சாம் அக்கா பெயர் மட்டும் நினைவு இருக்காம்!!! ஏதோ கதை சொல்லுதே!!!!!பூசாரின் கண்ணில் இது படனும்..ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  17. வேலை வெட்டி// அட நல்லாருக்கே விளக்கம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. என்னாதூஊஊஊஊஉ அஞ்சுவா அத்தனை கிளவிகளையும்.. சே..சே.. மயக்கத்தில டங்கும் ஸ்லிப்பு ஆகுதே கர்ர்:)) அத்தனை கேள்விகளையும் கேட்டது.. மீ பெயிண்ட்டாகிட்டேன்ன்ன்ன்ன் எனக்கு ஆராவது சுட்டாறின தண்ணி தெளிச்சு எழுப்புங்கோ:))

    http://2.bp.blogspot.com/-VscCwU2ps84/TluEC4ldk7I/AAAAAAAACGo/iea3Iz-AANk/s1600/IMG_0490.JPG

    பதிலளிநீக்கு
  19. வரவர அஞ்சுவுக்கு கிட்னி சார்ப்பாகிட்டே வருதே.. இது நாட்டுக்கு நல்லதில்லையே...

    https://tse2.mm.bing.net/th?id=OIP.4WB1xYugcmDL0KvR_pTn1AHaFj&pid=15.1&P=0&w=214&h=161

    பதிலளிநீக்கு
  20. நோ கெய்ன்ஸ் வித்தவுட் பெய்ன்ஸ்//

    சூப்பர்! உண்மையும் அதே!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. இம்மாதிரி கேள்விகளை ஏன் கேட்கிறார்கள் பதில்தெரியாமலா இல்லை சோதனை செய்யவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பூடிக் கேளுங்கோ ஜி எம் பி ஐயா:).... ஹா ஹா ஹா:)...
      ஊசிக்குறிப்பு:)-
      நாங்களும் கேட்க மாட்டோம் கேட்போரையும் விடவே மாட்டோம்ம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    2. ஜி எம் பி ஐயா இம்முறை கேள்விகள் கேட்டிருப்பது அஞ்சு மட்டும்தான் அதனால எந்த சந்தேகம் எழுந்தாலும் தயங்காமல் கேளுங்கோ:)... ஹா ஹா ஹா அவ இப்போ ஓடி வாறாவோ பார்ப்பம்:)..

      நீக்கு
    3. அஆவ் கிறிஸ்துமஸ் விசிட்டர்ஸ் சர்ச் ஆண்டு இறுதி வேலை இப்படி பிஸி நான் ..இன்னும் மை டியர் எதிரி மியாவ் போஸ்டுக்கும் போகலை ..

      உங்களுக்கு கேள்விக்கு பதில்

      இப்போ ஒவ்வொருத்தருக்கும் different perspectives இருக்கும் .
      கடவுள் இருக்காரான்னு ஒரு கேள்வி கேட்டா
      1, ஆமாம் 100 % இருக்கார்னு சிலர்
      2, may be னு சிலர்
      3, இல்லைனு சிலர்
      4, இருக்கலாம் இருக்கமால் இருக்கலாம் ஹூ கேர்ஸ்னு சிலர்
      5, கடவுள்னா யார் ? என்று கூட
      பதில் தரலாம்

      இப்படிப்பட்ட ஒவ்வொருவர் பாயிண்ட் of வியூஸை தெரிந்து கொள்ள எனக்கு ஆசை
      சில கேள்விகள் என்னை தெளிவுபடுத்தும் பதில்களை எதிர்பார்த்து கேட்பேன் ,சில கேள்விகள் சந்தோஷமா ஜாலியா
      சில கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியும் ஆனால் பிறரின் அபிப்ராயம் என்னனும் தெரிஞ்சிக்க கேட்பேன்
      ஆக மொத்தம் எல்லாமே ஜாலி ஜாலி தான் .



      நீக்கு
    4. ஜி எம் பி ஐயா ... இந்தாங்கோ ஆளைப் பிடிச்சுக்கொண்டு வந்திட்டேன்ன்ன்:).. ஏதோ ஜமாளிக்கிறா:) விடாதீங்கோ கேளுங்கோ:)..

      நீக்கு
    5. garrrrr miyaw
      this is for you

      https://thumbs.gfycat.com/NervousEnlightenedCaecilian-size_restricted.gif

      நீக்கு
    6. இதென்ன இது லாப் எலி போல இருக்கே:) ஹையோ என் வாய் அடங்கவே மாட்டுதாமே...:) மீ எஸ்கேப்பூஊஊஉ:)..

      நீக்கு
    7. // இம்மாதிரி கேள்விகளை ஏன் கேட்கிறார்கள் பதில்தெரியாமலா இல்லை சோதனை செய்யவா//

      கேள்விக்குறி போடவில்லை என்றாலும் இந்நேரம் இது அடுத்தவார கேள்விகள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருக்கும்!

      நீக்கு
  22. 7 வது கேள்விக்கான பதில்கள் இரண்டுமே அருமை...

    அது சரி ஏஞ்சலா இந்தக் கேள்வியைக் கேட்டதுன்னு தோனிச்சே!!!!!(பூஸாரின் கண்ணில் இது படக்கூடாது வைரவா!! படாம வைச்சுக்க பூஸார் ஒரு ப்ளாட்டின அட்டிகை போட்டுருவாங்க!!)
    (உருண்டை...உருண்டை....ஏனோ சாருஹாஸன் நினைவுக்கு வந்தார் அவர் பேசிய வசனமும் தான் ஹா ஹா ஹா)

    கீதா

    பதிலளிநீக்கு
  23. இந்த கேள்வியை படிக்கும்போது ஜோ ,தமன்னா கீர்த்தி சுரேஷ்லாம் உங்க கண்ணு முன்னாடி வந்து பயங்காட்டினா நான் பொறுப்பில்லை :)))))))//

    ஆஆஆஆஆஆஆஅ அரம கோஷம் போடுது!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா...ஸ்ரீராம் கண்ணில் இது படலையோ??!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. ஹன்சிகா மொத்வனி :) அப்புறம் ஸ்ரீராமின் ஆஸ்தான ப்ரிய ஹீரோயின்ஸில் கே ஆர் விஜயா :) இவங்க ஒரு படத்தில் பழையதை சாப்பிடும் ஸீன் ஒண்ணு இதெல்லாம் உங்க மனக்கண் முன்னாடி வந்தே ஆகணும் :) //

    ஆஆஆஆஆஆஆஆஆஆ இப்படியா பயமுறுத்தோனும் அதுவும் கே ஆ வி எல்லாம்சொல்லி!!!

    ஸ்ரீராம் உண்மையாலுமா!! யு டூ...கே ஆர் வி விசிறி?!!! ஹையகோ...நான் அம்மனோ சாமியோ ஆடிப்புடுவேன்......ஸ்ரீராம்..........ஹா ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் கே.ஆர்.விஜயா ரசிகரா? அப்போ அவருக்கு எங்க அப்பா வயசா? (ஓ... சுமதீ.. எங்கம்மா இருக்க திரிசூலம் டயலாக் எங்கேயோ கேட்டமாதிரி இருக்கே)

      நீக்கு
    2. //ஸ்ரீராம் உண்மையாலுமா!! யு டூ...கே ஆர் வி விசிறி?!!! //

      grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr......

      //ஸ்ரீராம் கே.ஆர்.விஜயா ரசிகரா? //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

      நீக்கு
  25. " ஆமாம், உங்களுக்கு என்ன வேண்டும்? " என்று கேட்டு, ஏதேனும் கதைக்கரு கிடைக்கிறதா என்று சிலசமயம் தோண்டிப் பார்ப்பேன்.

    "ஹலோ போலீஸ் ஸ்டேஷனா ? " என்று கேட்பவர்களுக்கு, "இல்லீங்க ரயில்வே ஸ்டேஷன் " என்று சொல்வேன்.

    போன்கள் அதிகம் நிறுவப்படாத (1973) அந்தக் காலத்தில், அசோக் லேலண்டு பாக்டரியிலிருந்து, பெருத்த திண்டாட்டத்திற்குப் பின், என் சிடி ஆபீசிற்கு (Ashok Leyland City Office) க்கு லைன் கிடைத்தது. அவசரம் அவசரமாக, " ஹலோ அசோக் லேலண்டு சிடி ஆபீசா ?" என்று கேட்டேன். அது ஏதோ ராங் நம்பர் கனெக்ஷன் போலிருக்கு. மறுமுனையில் எடுத்தவர், " என்ன! அக்ஷய லிங்க செட்டியாரா ? அப்படி யாரும் இங்கே இல்லீங்க " என்று சொல்லி போனை வைத்துவிட்டார்! //

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சு முடில...அதுவும் அக்ஷயலிங்க செட்டி ..ஊஊஊஊ முடிலப்பா...

    ஹலோ மைடியர் ராங்க் நம்பர்னு பாடிருக்கலாம்...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  26. நான் ஆணையிட்டால்....வார்த்தைகள் இட்டுக்கட்டியது சூப்பர்...

    கீதா

    பதிலளிநீக்கு
  27. இங்கிதம் தெரியாத நபர் ஃபோன் வாங்கும் போது அந்த ஹேண்டிலிங்க் பதில் ஹா ஹா ஹா வயிறு வலிக்க சிரிச்சுட்டேன்..அ.துவும் சோமநாதா சோமால்யா...ஹை குஜ்ஜுலி...ஹையோ...முடிலப்பா....

    கீதா

    பதிலளிநீக்கு
  28. கௌதமன் சார் நெல்லை தமிழன் கீதாக்கா கீதா ரெங்கன் மை இனிய எதிரி மியாவ் எல்லாருக்கும் தாங்க்ஸ் ..கும்மி அடிக்க முடியலை ..ரிலேட்டிவ்ஸ் வருகை ..

    எல்லா பதில்களையும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  29. " ஆமாம், உங்களுக்கு என்ன வேண்டும்? " என்று கேட்டு, ஏதேனும் கதைக்கரு கிடைக்கிறதா என்று சிலசமயம் தோண்டிப் பார்ப்பேன். //

    இது செம ஐடியா!!!! நல்லாருக்கே!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. கேள்விகளும் நன்றாக இருக்கிறது அதற்கான பதில்களும் நன்றாக இருக்கின்றன.

    பள்ளிக் கூடம் படிக்கும் போது கிடைத்த விடுமுறை, கல்லூரிக் காலத்தில் கிடைத்த விடுமுறை, வேலைக்குச் சென்ற போது கிடைத்த/கிடைக்கும் விடுமுறை இதில் எது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது? (இதில் வழக்கமான விடுமுறை மற்றும் எதிர்பாராமல் கிடைத்த விடுமுறை இரண்டும் உண்டு.)

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  31. 1,என்ன லைஃப் இது ? என்று அடிக்கடி வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் புலம்புவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ??

    2,ஒருவரை நல்வழிப்படுத்துவது எது ? பெற்றோர் வளர்ப்பா ,கல்வியா ? அல்லது சூழலா ?

    3,புத்தாண்டு தீர்மானங்கள் எடுப்பது அவசியமா ? உங்களது 2019 இற்கான தீர்மானங்கள் என்ன ?
    2018 இல் எடுத்த தீர்மானங்களை செய்து முடித்தீர்களா ?

    4, சதுர வடிவ floor ஸ்லாப்ஸ் எங்கு பார்த்தாலும் ஒவ்வொன்றிலும் கால் பதித்து நடக்க ஆசை தோன்றுவது உண்டா ?
    அப்படி நடத்திருக்கிறீர்களா ??

    5,நல்ல நட்புக்கும் சிறந்த நட்புக்கும் வித்தியாசம் இருக்கா ?? அது என்ன ?

    கேள்விகள் தொடரும் :)

    பதிலளிநீக்கு
  32. இணையத்தின் மூலமா ஆர்டர் செய்து சாப்பிடும் கல்சர் அதிகரித்துவிட்டது. இதைப்போன்றே மளிகை சாமான்கள் வாங்குவதும். இது எவ்வளவுதூரம், நன்மைகளை, பாதிப்புகளை அடுத்த 5-10 ஆண்டுகளில் கொண்டுவரும்?

    ஆட்டோ காரர்கள் இஷ்டப்படி பணம் கேட்டதுபோக, அவங்களுக்குக் கடிவாளம் போடும் விதமா ஓலா, ஊபர் என்று வந்துள்ளதை நீங்கள் எப்படிப் பார்க்கறீங்க?


    பெரிய கல்யாணங்களில் சமையல் பொறுப்பை ஏற்றுச் செய்பவர்களுக்கும், வீட்டில் போய் ரசம் சாதம், அப்பளாம், இல்லைனா மோர் சாதம் ஊறுகாய் சாப்பிட்டால் போதும் என்று தோன்றுகிறது? (உடனே நடிகைகளின் வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு, பேசாமல் கிராமத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் போதும் என்ற மனநிலை இருக்குமோ என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாதீர்கள், அதைச் சாக்கிட்டு பாவனா படம், அ படம் தடை செய்யப்படுகிறது)

    விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற பழமொழி நமக்கு என்ன செய்தி சொல்கிறது?

    இந்த 'ஆர்கானிக் காய்கறி, சமையல் பொருட்கள்' என்று சொல்றாங்களே... இதில் எவ்வளவு தூரம் உண்மையிருக்கும்?

    சமீபத்தில் நீங்கள் சமையலறையில் டெஸ்ட் செய்து பார்த்த உணவு என்னது?

    வாட்சப், சமூக வலைத்தளம் போன்றவை நம்மை 'அடிக்ட்' ஆக்குவதை உணர்ந்திருக்கீர்களா? அதை எப்படி ஹேண்டில் செய்யணும்னு நீங்க நினைக்கறீங்க?

    பதிலளிநீக்கு
  33. 'நாங்க அந்தக்காலத்தில்' என்று ஒருவர் ஆரம்பிக்கும்போதே, அவர் பழையகாலத்திலேயே இருக்கிறார், இந்த ஜெனெரேஷனை அவர் மனம் ஏற்கவில்லை, வயதாகிவிட்டது என்று உங்களுக்கும் தோன்றுமா?

    மொபைல், இணையம் இல்லாமல் ஒரு நாள் கழித்திருக்கிறீர்களா?

    பொதுவா, நமக்கு சில உணவு வகைகளைச் சாப்பிட்டுப்பார்க்கணும் என்று ஆசையா இருக்கும்போது (சிறிய வயதில்) அதற்கான வாய்ப்போ, பணமோ இல்லாமலிருந்துவிடுகிறது. பணம், மற்றும் 'நாம் நினைத்ததைச் செய்யலாம்' என்ற வயது வரும்போது, நம்மால் அப்படி பெரும்பாலும் சாப்பிடமுடியாமல் இருந்துவிடுகிறதே... அது எதனால்?

    பதிலளிநீக்கு
  34. கேள்விகள் கேட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த வருடம் இவைகளுக்கான பதில்கள் வெளியாகும் !

    பதிலளிநீக்கு
  35. ஆஹா இன்னிக்கு நெல்லை தமிழன் நிறைய கேள்விகளை கேட்டிருக்கிறார் :) ஸோ நான் அடுத்த வருஷம் தொடர்கிறேன் :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!