புதன், 5 டிசம்பர், 2018

புதன் 181205 சந்தோஷம் நிலையானதா?



கீதா சாம்பசிவம் :

சம்பளம் வந்தால் கூடத் திருப்தி இல்லாமல் லஞ்சம் வாங்குவது ஏன்? பேராசை தானே காரணம்?  


பேராசையா! சேச்சே - தன் பேர் (பெயர்) வெளியே தெரியாமல் இருக்கத்தானே அவர்கள் ஆசைப்படுவார்கள். அதனால் பேராசை இல்லை, பொருள் ஆசைதான் காரணம்! 'something' is better than nothing என்று நினைப்பவர்களோ? 


Image result for something


ஆசை வெட்கம் அறியாது,  ஆசைக்கோர் அளவில்லை,  என்பார்களே நினைவில்லையா?

ஆசையே அப்படியானால் பேராசையின் நிலை என்னவாக இருக்கும்?


பானுமதி வெங்கடேஸ்வரன் : 

சில சமயம் நாம் சில மனிதர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்போம், அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும், அல்லது அவரே நேரில் வந்து நிற்பார்(ஆனால் அதை அவரிடம் சொன்னால் நம்ப மாட்டார்), இப்படிபட்ட அனுபவங்கள் உண்டா? 

நிறைய உண்டு. அதுவும் எனக்குக் கடன் கொடுத்தவர்களைப் பற்றி நான் நினைக்கும்போதெல்லாம் அவர்கள் என் முன்னே வந்து நின்றுவிடுகிறார்கள்! மருந்தைச் சாப்பிடும்பொழுது, குரங்கை நினைக்காதீர்கள் என்று சொன்ன வைத்தியர் போல, பணத்தைப் பார்க்கும்பொழுது கடன் கொடுத்தவரை நினைக்காதே என்று எழுதிவைத்துக்கொள்ள வேண்டும்! 


இந்த மாதிரி நடப்பதை தற்செயல் என்று சொல்லுவோம்.  இது எல்லார் வாழ்விலும் எப்போதாவது நடந்துதான் இருக்கும்.


காக்கை உட்கார பனம் பழம் விழுந்ததும்,  நினைத்தேன் வந்தாய் நூறு வயது பாட்டும் தான் நினைவுக்கு வருகிறது.

குளிர்சாதன பெட்டிக்குள் பாம்பு, வாஷிங் மெஷினில் இருந்த குழந்தை மரணம், மோர் என்று நினைத்து ஃபினாயிலை குடித்த வாலிபர் காப்பற்றப்பட்டார் போன்ற செய்திகளை படிக்கும்பொழுது என்ன நினைத்துக் கொள்வீர்கள்? 


1. இது எந்த அளவு உண்மையாக இருக்குமென்று ஆலோசனை வரும்.

திறந்தவுடனேயே மூடப்படும் குளிர்சாதனப்பெட்டியில் பாம்பு வருவதற்கு சாத்தியம் இல்லை. ஒரு சொட்டு பினைல்  வாயில் விழுந்தவுடனேயே தூ என்று துப்புவோமே தவிர அதை மோர் என்று நினைத்து இரண்டாவது வாய் குடிக்க மாட்டோம். வாஷிங் மெஷினுக்குள் குழந்தை ஏறி உட்காருவதும் அதைப் பாராது ஓட விடுவதும் அசாத்திய கற்பனை.

2. 'விதி வலியது' என்றுதான் நினைத்துக்கொள்வேன். என் அலுவலகத்தில், என்னுடன் கம்பெனிப் பேருந்தில் பயணித்த ஒருவர், சென்னைக் குளிருக்கே(!) ஸ்வெட்டர், மஃப்ளர் என்று ஏக பாதுகாப்புகளுடன் வருவார். அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் முன்ஜாக்கிரதை முத்தண்ணா என்று நினைத்துக்கொள்வேன். அவர் எங்கள் சிவில் டிபார்ட்மெண்டில் பணிபுரிந்து வந்தார். ஒருநாள், சிவில் ஆபீசில் அவர் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த நண்பர் ஏதோ வேலையாக கொஞ்ச நேரம் சென்றிருந்த சமயத்தில், இவர், நண்பரின் மேஜை மீது இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, தண்ணீரை மட மடவென்று குடித்துவிட்டார். அப்படி அவர் குடித்தது, யாரோ கொண்டுவந்து வைத்திருந்த ஆசிட். அவசர அவசரமாக அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனாலும் அவரைப் பிழைக்க வைக்க இயலவில்லை. 

ஏஞ்சல் : 

 1, சந்தோஷம் நிலையானதா ?சந்தோஷத்தின் கால அளவு எவ்வளவு ? பெரும்பாலானோர் சொல்றது துக்கம் இருக்கும் காலத்தை விட குறைஞ்ச நேரமே சந்தோசம் வந்து தலை காட்டிட்டு போகுது 
அதாவது is happiness short lived ?

ஆன்மீகப் பெரியவர்கள் எல்லோருமே, மனிதனின் இயற்கையான உள் நிலை, சந்தோஷம் அல்லது பூரணத்துவம் என்றுதான் சொல்கிறார்கள். அதுதான் உள் நிலை என்று உணர்ந்தவர்களுக்கு, என்றுமே, எப்போதுமே, எங்கும் ஆனந்தம்தான். சச்சிதானந்தம் என்றால் சத் + சித் ஆனந்தம். உணர்ந்தவர்கள் பிரம்ம ஞானிகள். சில சமயங்களில் மட்டும் உணர்பவர்கள் சில நேரம் மட்டும் சந்தோஷமாக இருந்து, மற்ற நேரங்களில் சந்தோஷத்தைத் தொலைத்துவிடுகிறார்கள். 


சந்தோஷம் துக்கம் இரண்டுமே கால  அளவுக்கு உட்பட்டதுதான் சந்தோஷம் எவ்வளவு நேரம் இருக்கும் என்று கேட்டால், அது எதன் காரணமாக எவ்வளவு ஆழமாக ஏற்படுகிறது என்பதைப் பொருத்து இருக்கும்.


 சாதாரணமாக சந்தோத்தின் ஆயுளைக் காட்டிலும் துக்கத்தின் ஆயுள் அதிகம் என்றுதான் சொல்லவேண்டும்.

2, சின்ன வயசில் ரோட்டு ஓரம் ஸ்டேஷன் வெளியிலெல்லாம் துண்டு சீட்டுக்கள் தருவாங்க அதில் நிறைய வாசகங்கள் இருக்கும் பிறகு இதை பத்து பேருக்கு அனுப்பாட்டி இல்லைன்னா இப்படி செய்யாட்டி ரத்தம் கக்கி போவீங்கன்னு எழுதியிருக்கும் .அப்படி துண்டு pamphlets படித்து அலறிய அனுபவங்கள் இருக்கா ?

உண்டு. துண்டு சீட்டுகள் இல்லை. வீட்டு விலாசத்திற்கு போஸ்ட் கார்ட் வரும். அதில் "ஓம் ஜகதாம்பிக மகா மாயே " என்று பத்துத் தடவைகள் எழுதி, இதை உடனே பத்து பேருக்கு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பு. அனுப்பினால் பெருத்த லாபம் வரும். இல்லையேல் உனக்கு அடுத்தடுத்து கஷ்டம் வரும் என்று எழுதி இருப்பார்கள். பெரும்பாலும் இது நம்முடைய விலாசம் தெரிந்த நண்பன் ஒருவனின் வேலையாகத்தான் இருக்கும். என் பெயருக்கு வந்த அந்தக் கடிதம் ஒன்றை நான் தபால்காரரிடமிருந்து மற்றக் கடிதங்களுடன் சேர்த்துக் கையில் வாங்கியபோது, பக்கத்து வீட்டு குருராஜன் நமட்டுச் சிரிப்புச் சிரித்தபடி, எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். "எங்கேருந்து கடுதாசி வந்திருக்கு " என்று கேட்டான். 'ஓஹோ சப்ஜெக்ட் கடிதம் இவன்தான் அனுப்பியிருக்கான்' என்று தெரிந்துகொண்டேன். "எல்லாம் என்னுடைய மெட்ராஸ் அண்ணன், சோலையாறு அண்ணன், அரவங்காடு அண்ணன் எழுதியிருக்கும் கடிதங்கள் என்று சொல்லியவாறு உள்ளே கொண்டுபோய் அம்மாவிடம் சப்ஜெக்ட் கடிதம் தவிர மற்றவற்றைக் கொடுத்துவிட்டேன். தான் எழுதி அனுப்பிய கடிதம் எங்கே போயிருக்கும் என்று இதுநாள் வரை குருராஜன் குழம்பியபடி இருப்பான்(ர்) என்று நினைக்கிறேன்.  

பெற்றது மட்டுமல்ல அது போன்ற ஒரு கடிதம் வந்து அதை அனுப்பியவருக்கே 10 தடவை திருப்பி அனுப்பி அவரை சங்கடப்படுத்தியதும் நன்றாக நினைவிருக்கிறது.

3, மனுஷரில் நல்லவர் யார் கெட்டவர் யார்னு எப்படி கண்டுபிடிக்கிறது ? 

ஒருவரைக் கண்டவுடன் நம் மனதில் ஏற்படும் அதிர்வுகளை வைத்து அவர் நல்லவரா பொல்லாதவரா என்று கண்டுபிடிக்க இயலும். அப்படி இல்லாவிட்டால் அவரது எழுத்து பேச்சு பாவனை நடவடிக்கை இவற்றை வைத்துதான் அவர் எப்படிப்பட்டவர் என்று சொல்ல வேண்டும்.

எப்பொழுதும், எல்லோருக்கும் நல்லவர்  (அல்லது) எல்லோருக்கும் கெட்டவர் என்று யாரும் இருக்க இயலாது. நாம் நல்லவராக இருந்துவிட்டால், மற்றவரிடம் உள்ள நல்ல குணங்கள்தான் நமக்குத் தெரியும். Normally we see only reflections of ourselves in others. அப்படி நல்ல குணம் எதுவும் ஒருவரிடத்தில் நமக்குத் தெரியவில்லை என்றால், அந்த ஒருவரை அதிகம் நெருங்காமல் அல்லது நெருங்கவிடாமல் இருப்பது நல்லது. 

4,TORN ஜீன்ஸ் எப்பவோ நம்மூரிலும் பேஷன் வந்துவிட்டது அறிவோம் ..அதுபோல பட்டுப்புடைவையை கிழித்து டோர்ன் காஞ்சி சில்க் சாரீ கட்டும் நாள் வருமா ??? 

வராது - வரக் கூடாது.

சாரீ கட்டறவங்களே ரொம்பக் கம்மியாகிட்டு வர்றாங்க! இதுல டோர்ன் சாரீக்கு எங்கே போறது! 

ஒரு பழைய ஜோக் :

பிச்சைக்காரர் : " அய்யா பழைய கிழிஞ்ச சட்டை இருந்தா கொடுங்க அய்யா!"

வீட்டிலிருப்பவர்: "பழைய சட்டைகள் இருக்கு ஆனால் எல்லாம் கிழியாம நல்ல சட்டையா இருக்கு. "

பி கா : " பரவாயில்லை. அதைக் கொடுங்க. நான் அதைக் கிழிச்சுப் போட்டுக்கறேன்!" 

5,இந்த ஆண்கள் மட்டும் எப்பவும் ..//எங்கம்மா இது சட்னியை எவ்ளோ ருசியாசெய்வாங்க .இந்த கேக் அவங்க செஞ்சது இன்னும் ருசி நினைவில் ,அம்மா பூண்டு குட்டி துணியில் கட்டி ரசத்துக்கு போடுவாங்க ,தலைக்கு எண்ணெய் போட்டு வார்வாங்க இப்படி எந்நாளும் அம்மா புராணம் பாடுவதன் காரணம் என்ன ?????????????? அம்மா ஆழ்மனதில் பதிந்து விட்டதாலா ?? 

அம்மாவின்  சமையலை பெண்கள் உள்வாங்கிக்கொண்டு அம்மா போலவே சமைக்க ஆரம்பித்து விடுகிறார்கள் .  ஆண்களுக்கு அந்த சாமர்த்தியம் இல்லை என்பதால் அம்மா சமையலை புகழ்பாடி திருப்திப் பட்டுக்கொள்கிறார்கள். 

நளன் உள்ள வீடுகளில் இந்தப் பிரச்னை வருவதில்லை! 

6, பெரும் செல்வந்தர்களைவிட இல்லாதோர் கிட்ட தாராள குணம் அதிகமா இருக்கே ? காரணம் என்ன ??


அடுத்தவர் துயர் தாமே பட்டவர்களுக்குத்தான் தெரியும் என்பதால் இருக்குமா ?

மிகப்பெரிய அளவில் பொதுக் காரியங்களுக்காக மிகப் பெரிய தொகைகளை நன்கொடையாக வழங்கி இருக்கும் மிகப்பெரும் செல்வந்தர்கள் பற்றி நீங்கள் யோசிக்க வில்லை போலிருக்கிறது. 

7,உங்கள் மனைவியின் தொலைபேசி எண் உங்கள் சகோதர சகோதரியின் தொலைபேசி எண் ஐ மீன் மொபைல் எண் இவற்றில் யார் நம்பரை மனப்பாடமா போனை பாக்காம சொல்ல முடியும் உங்களால் ??

நினைவிலிருந்து பல எண்களை சொல்வதற்கில்லை என்றாலும் மிக முக்கியமான ஓரிரண்டு எண்களை நினைவில் வைத்திருக்கிறேன். செல்போன் என்று வந்த பிறகு இந்த வியாதி எல்லோருக்கும் பரவி விட்டது என்றே தோன்றுகிறது. 

மகன், மகள், மருமகள் அலைபேசி எண்கள் எப்பொழுதும் நினைவில் இருக்கின்றன. மனைவி எப்பொழுதும் என் கூடவே இருக்கிறார்கள் என்பதால், தனி எண் கிடையாது. மாப்பிள்ளையின் அலைபேசி எண் .... ஊஹூம்....  நினைவில் இல்லை. 

8, வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல்றாங்களே எப்படி ??

எல்லாம் ஆனபின் இறுதியில் பூஜ்ஜியம் என்பதால் இருக்குமோ?

Virtuous Circle? May be it is a Vicious Circle! 

9, கார்ட்டூன் பார்க்கும் பழக்கம் உண்டா ? உங்களுக்கு பிடிச்ச கார்ட்டூன் என்ன ஏன் ?எதற்கு பிடிக்கும் ??

நிறைய கார்ட்டூன்கள் (மட்டும்தான்) பார்ப்பேன். tom and jerry, pop eye, Mr Bean cartoon form etc, etc. கார்ட்டூனில் சோகப்படங்கள் கிடையாது என்பதுதான் காரணம். எனக்கு சோகப்படங்கள் பிடிக்காது. 

கார்ட்டூன் பார்ப்பதில்லை. டாம் & ஜெர்ரி பிடிக்கும். காரணம் சிறந்த உடல்மொழிச் சித்தரிப்பு.

10, சமீபத்தில் ரசித்த அல்லது உங்களை சிந்திக்க வைத்த வித்யாசமான முகப்புத்தக ஸ்டேட்டஸ் என்ன ? ஏன் ?

முகப்புத்தகம் சமீப காலங்களில் என்னுடைய நேரத்தை அதிகம் அபகரித்துக் கொண்டுவிட்டது! 

நகைச்சுவை, புதிய விவரங்கள், சுவாரஸ்ய நிகழ்வுகள், அரசியல் (நாகரீக) கிண்டல்கள் போன்ற பதிவுகளை ரசிப்பேன். அநாகரீக வார்த்தைகள், வசவுகள் உள்ள பதிவுகளைத் தவிர்ப்பேன். அத்தகைய பதிவுகளை எழுதுபவர்கள் என் நட்பு வட்டத்தில் இருந்தால் அவர்களை நட்பு நிலையிலிருந்து விலக்கி வைத்துவிடுவேன். 

முகப்புத்தகம் கணக்கு வைத்திருப்பவர்கள் பார்த்து ரசிக்க : 

  
நான் ஃபேஸ்புக் ரசிகன் அல்ல.

 =============================================

நன்றி! மீண்டும் சந்திப்போம்! 

47 கருத்துகள்:

  1. அன்பின் KGG, ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. மணியடிச்சா சோறு...

    இது ரொம்ப பழைய சோறு ஆச்சே!..

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா, நெல்லை அப்பால வரும் அனைவருக்கும்..

    வல்லிம்மாவுக்கு மாலை வணக்கம்…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. வரவேற்ற இனி வரவேற்கப்போகும் அனைவருக்கும் என் நன்றி. வாழ்த்துகள்.

      நீக்கு
  4. ஸ்ரீராமின் நாலுகால் செல்லத்தின் பதிவில் கொஞ்சம் அசந்துட்டேன்....மனம் நெகிழ்ந்து அந்த வீடியோ நினைவில் வேறு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே போய் கமெண்ட் ஏதாவது போட்டிருக்கீங்களான்னு தேடிப்பார்த்துட்டு வந்தேன். நீங்க அதை முன்னால படிச்சதில்லையா கீதா?

      நீக்கு
    2. இல்லை ஸ்ரீராம்....நான் எபிக்கு வரத் தொடங்கியதே 2013/14 ல் இருந்து என்று நினைவு...13ல நாங்க தொடங்கினோம் ப்ளாக்...உங்க பாசிட்டிவ் செய்திகள் அப்புறம் சில பயணப் பதிவுகள் இழுத்து உள்ள விட்டுச்சு!!!! அது தொடர்ந்து இதோ இப்போது வரை...இப்ப மொபைலில் வாசித்ததால் போட முடியலை அங்க கருத்தை அதான் வாட்சப்ப்ல போட்டேன்...

      கீதா

      நீக்கு
    3. இப்ப கணினில இருக்கறதால அங்க போய் போட்டுடுவேன்....கொஞ்சம் விரிவாகவே போட்டுடலாம்...கமென்ட் போட்டா போகும் தானே?

      கீதா

      நீக்கு
    4. போகும். மாடரேஷனிலிருக்கும் நான் சென்று விடுவிக்கவேண்டும்!!!

      நீக்கு
  5. ஸ்வாரஸ்யமான கேள்விகள்.... அவற்றுக்கான பதில்கள்...

    நளன் உள்ள வீடுகளில் - :) இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. என் மைத்துனர் பெண் சிறுவயதில் ஷாம்பு வைக் குடித்து வயிறு க்ளீனிங்க் செய்ததுண்டு...அது போல டூத் பேஸ்டை வாய்க்குள் பிதுக்கிக் கொண்டுவிடுவாள்....

    நான் சென்னையில் இருந்தப்ப சமீபத்தில் என் மைத்துனர் வீட்டில் ஃப்ரிட்ஜை திறந்து தண்ணீர் என்று நினைத்து வினிகரைக் குடித்துவிட்டேன் மடகென்று..ஒரே ஒரு மடக்கு.வயிறு தொண்டை நெஞ்சு எல்லாம் கொஞ்ச நேரம் ஒரு விதமான எரிச்சலைக் கொடுத்திட....அது சரியாக ரொம்ப நேரம் ஆகிவிட்டது. அதிலிருந்து அண்ணி தண்ணீர் பாட்டிலைத் தவிர வேறு எதிலும் தண்ணீர் வைப்பதில்லை. அவங்க சில சமயம் இப்படி பயன்படுத்திய பிறகு காலியாகும் பாட்டிலில் லேபல் இல்லாமல் இருக்கும் பாட்டிலில் தண்ணீர் வைப்பாங்க...அதனால் நேர்ந்த ஒன்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பதில்கள் எனது சில சிந்தனைப் பதிவுகளை ஞாபகப்படுத்தியது...

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  9. // வாஷிங் மெஷினுக்குள் குழந்தை ஏறி உட்காருவதும் அதைப் பாராது ஓட விடுவதும் அசாத்திய கற்பனை.//

    கற்பனைனு சொல்ல முடியலை. ஏனெனில் குழந்தையை வாஷிங் மெஷினுக்குள் போட்டுக் கொன்ற சம்பவங்கள் சிலதைப் பற்றிப் படிச்சிருக்கேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலங்கார்த்தால எது நினைவுக்கு வருது இந்த கீசா மேடத்துக்கு....

      நீக்கு
    2. அங்கே மேலே கொடுத்திருக்கும் பதிலுக்கு பதில் சொல்லி இருக்கேன். அவ்வளவே!

      நீக்கு
  10. கேள்வியும், அதற்கு பதிலும் மிக அருமை.
    ஆசைக்கு சொன்ன பதில் அருமை. விதி வலியது படித்து மனம் கனத்து விட்டது.முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருந்தாலும் விதி வலியதுதான்.

    //சாதாரணமாக சந்தோஷத்தின் ஆயுளைக் காட்டிலும் துக்கத்தின் ஆயுள் அதிகம் என்றுதான் சொல்லவேண்டும்.//
    உண்மைதான்.

    //பெற்றது மட்டுமல்ல அது போன்ற ஒரு கடிதம் வந்து அதை அனுப்பியவருக்கே 10 தடவை திருப்பி அனுப்பி அவரை சங்கடப்படுத்தியதும் நன்றாக நினைவிருக்கிறது.//

    இப்படி செய்ய தெரியாமல் பத்து பேருக்கு அனுப்பாமல் விட்டதால் நமக்கு இந்த கஷ்டம் வந்ததோ! என்று புலம்பிய காலம் உண்டு.

    // பரவாயில்லை. அதைக் கொடுங்க. நான் அதைக் கிழிச்சுப் போட்டுக்கறேன்!" //

    ரசித்தேன்.

    //எல்லாம் ஆனபின் இறுதியில் பூஜ்ஜியம் என்பதால் இருக்குமோ?//

    சூப்பர்.

    பதிலளிநீக்கு
  11. சந்தோஷம் என்பது நிலையானதாக மாற்றிக் கொள்வது நம் கையில், நம் மனதில்!

    ஆனால் நம் மனதுதான் குரங்காயிற்றே! ஸோ மனித நிலையைப் பொருத்தவரை சந்தோஷம் நிலையானது என்று சொல்வதற்கில்லை மீண்டும் அது தனிப்பட்ட நபரைப் பொருத்து...

    அடுத்து எவ்வகையான சந்தோஷம் என்பதைப் பொருத்தும் இருக்கு....சந்தோஷத்திற்கு அடிப்படை ஆசை என்றும் சொல்லலாம்...மனம் திருப்தி அடைந்துவிட்டால் சமநிலை அடைந்துவிட்டால் சந்தோஷம் நிலையானதாகிவிடும்.

    இல்லாததை நினைத்து விரும்பி கெடுகிறான் அது எட்டாததை வருந்தி கொட்டாவி விடுகிறான்
    எல்லாம் உனது மனதுள் இருக்க இன்பம் என்பது பாபநாசம் சிவன் அவர்களின் வரிகள். தாஸேட்டன் இதைப் பாடியிருக்கிறார் மாயாமாளகௌள ராகத்தில்...
    இடுக்கண் வருங்கால் நகுகன்னுதான் வள்ளுவரும் சொல்லிருக்கார்...ஆனா மனித மனம் அப்படி இல்லையே...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. லஞ்சத்துக்கு ஒருத்தர் காரணம் சொன்னார்... என் முன்னோர்களை என்ன பாடு படுத்தியிருப்பாங்க.. அதுக்குச் சேர்த்து இப்போ லஞ்சம் மூலமா வசூல் பண்ணறேன் என்றார்.

    பதிலளிநீக்கு
  13. மணியடிச்சா சோறு பதிவு ஜோர்.
    பயமுறுத்தல, சங்கிலித்தொடர் கடிதங்களுக்குக் குப்பைத்தொட்டி முக்தி அளிக்கும்.
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  14. சாதாரணமாக சந்தோஷத்தின் ஆயுளைக் காட்டிலும் துக்கத்தின் ஆயுள் அதிகம் என்றுதான் சொல்லவேண்டும்.......This is the truth.

    பதிலளிநீக்கு
  15. ஓ சந்தோஷம் நிலையானதா என்பது ஏஞ்சல் கேட்ட கேள்வியா...இப்பத்தான் பார்த்தேன் பதில் சூப்பர்...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. //இதை பத்து பேருக்கு அனுப்பாட்டி இல்லைன்னா இப்படி செய்யாட்டி ரத்தம் கக்கி போவீங்கன்னு எழுதியிருக்கும்//

    விஞ்ஞான வளர்ச்சியில் இந்த தொல்லை இன்று வாட்ஸ்-ஆப்பில் உலாவுகிறதே...

    பதிலளிநீக்கு
  17. வீட்டு விலாசத்திற்கு போஸ்ட் கார்ட் வரும். அதில் "ஓம் ஜகதாம்பிக மகா மாயே " என்று பத்துத் தடவைகள் எழுதி, இதை உடனே பத்து பேருக்கு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பு. அனுப்பினால் பெருத்த லாபம் வரும். இல்லையேல் உனக்கு அடுத்தடுத்து கஷ்டம் வரும் என்று எழுதி இருப்பார்கள். //

    இப்ப வாட்சப் வரை வந்தாச்சே!! நிறையப்பேர் அனுப்புறாங்க...என் தோழமைகளிடம் சொல்லிட்டேன் இப்படி வந்தா தயவு செய்து எனக்கு அனுப்பாதே என்று...அந்த 10 பேரோ 5 பேரோ அதில் நான் வேண்டாம் என்று...

    முன்பு இப்படி கார்டுகள் வீட்டிற்கு வந்ததுண்டு. அப்போதே நாங்கள் இதைக் கண்டு கொண்டதில்லை...அனுப்பவில்லை என்றால் துன்பம் வரும் என்று சொல்வதே கொடூரமானது இல்லையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கார்டு விஷயத்திற்கான பதில்களை ரசித்தேன்...

      நல்லவர் கெட்டவர் பதிகளையும் ரசித்தேன் அதில் குறிப்பாக இந்த பதிலை //எப்பொழுதும், எல்லோருக்கும் நல்லவர் (அல்லது) எல்லோருக்கும் கெட்டவர் என்று யாரும் இருக்க இயலாது. நாம் நல்லவராக இருந்துவிட்டால், மற்றவரிடம் உள்ள நல்ல குணங்கள்தான் நமக்குத் தெரியும். Normally we see only reflections of ourselves in others. அப்படி நல்ல குணம் எதுவும் ஒருவரிடத்தில் நமக்குத் தெரியவில்லை என்றால், அந்த ஒருவரை அதிகம் நெருங்காமல் அல்லது நெருங்கவிடாமல் இருப்பது நல்லது. //

      கீதா

      நீக்கு
  18. அம்மாவின் சமையல்/// இந்தக் கேள்விக்கான பதில்கள் இரண்டுமே நல்லாருக்கு...சிரிப்பும் வந்தது.

    //எனக்கு சோகப்படங்கள் பிடிக்காது. //

    யெஸ் சோகம் பிடிக்காது...நகைச்சுவைப் படங்கள் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர்கள் பிடிக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. மணியடிச்சா சோறு // ஹா ஹா காணொளியை மீண்டும் ரசித்தேன்...வாட்சப்பில் வந்தது...ரொம்ப ரசித்தேன்...என்ன அழகு இல்லையா..எத்தனை முறை பார்த்தாலும் ரசித்து சிரிக்க முடியுமே தவிர சலிப்பே இல்லை....

    மணி அடிச்சா சோறுன்னு நம்ம பைரவச் செல்லங்களுக்குச் சொல்வதுண்டு.

    simble pshychology என்று Plavlov's dogs classical conditioning பற்றி அவர் ஆய்வு செய்ததை வாசித்திருக்கிறேன். அதை இங்கு பகிர நெட்டில் தேடியப்ப இந்த லிங்க் கிடைத்தது....

    https://www.simplypsychology.org/pavlov.html

    கீதா

    பதிலளிநீக்கு
  20. வாஷிங் மெஷினுக்குள் குழந்தை, குளிர்சாதனப்பெட்டிக்குள் பாம்பு போன்ற செய்திகளை வெளிநாட்டில்தான் நாம் அதிகம் கேள்விப்பட முடியும். நான் மஸ்கட்டில் இருந்தபொழுது இப்படிப்பட்ட செய்திகளை நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். சமீபத்தில் கூட child in washing machine என்றொரு வீடியோ வைரலானதே.

    பதிலளிநீக்கு
  21. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறிய விதம் ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
  22. //சாதாரணமாக சந்தோஷத்தின் ஆயுளைக் காட்டிலும் துக்கத்தின் ஆயுள் அதிகம் என்றுதான் சொல்லவேண்டும்.//
    இதற்கு இரண்டு காரணங்களை சொல்ல முடியும். முதல் காரணம், விருமாண்டி வசனம்,"நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது பெரும்பாலும் நமக்கு அது தெரிவதில்லை".
    இரண்டாவது நாம் துக்கத்தை கொண்டாடும் அளவிற்கு சன்தோஷத்தை கொண்டாடுவதில்லை.
    ஒரு முறை ஸ்வாமி தயானந்த சரஸ்வதி தன் உரையில்," நாம் ஒரு ஆங்கிலேயரிடம் "ஹௌ ஆர் யூ? என்று கேட்டால் அதற்கு அவரும் பதிலுக்கு ஹௌ ஆர் யூ? என்று கூறுவார். ஹௌ ஆர் யூவிற்கு ஹௌ ஆர் யூ சரியாகப் போய் விடும்."
    ஒரு அமெரிக்கனிடம் "ஹௌ ஆர் யூ என்றால் ஐ ஆம் ஃபைன் என்பான், ஆனால் அது ஒரு பொய்.
    ஒரு இந்தியனிடம் இதே கேள்வியை கேட்டால், கோயிங் ஆன், புல்லிங் ஆன், சல்தா ஹை, ஓடிண்டிருக்கு, நடக்குன்னு.. என்றெல்லாம் பதில்கள் வரும்." என்றார். உண்மைதான். நிறைய பேருக்கு நன்றாக இருக்கிறேன் என்று சொல்லவே பயம். திருஷ்டி பட்டு விடுமாம்.
    We have trained ourselves to be sorrow.

    பதிலளிநீக்கு
  23. //பெற்றது மட்டுமல்ல அது போன்ற ஒரு கடிதம் வந்து அதை அனுப்பியவருக்கே 10 தடவை திருப்பி அனுப்பி அவரை சங்கடப்படுத்தியதும் நன்றாக நினைவிருக்கிறது.//
    ஆஹா! நல்ல ஐடியாவாக இருக்கிறதே! இனிமேல் எனக்கு யாராவது வாட்ஸாப்பில் இந்த மாதிரி செய்தி அனுப்பட்டும்..மாட்டினாங்க.. மவளே!/மவனே!

    பதிலளிநீக்கு
  24. சுவாரஸ்யமான கேள்வி பதில் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  25. நாங்க யாரும் கேள்வி கேக்கலைனா கௌதமன் சாருக்கு ரொம்ப்ப்ப ஜாலி ஆகிடும் அதனால் கேள்விகளை ரெடி பண்ணிட்டேன் :) 10 +1 =11
    11th just for fun :)

    பதிலளிநீக்கு



  26. 11. நம் பதிவர்கள் ஒருவரது பேரை சொன்னாலோ இல்லை அவர் கண்முன்னால் வந்தாலோ உங்கள் நினைவுக்கு வருவது எது ???
    எனக்கு நினைவில் இவர்களை நினைச்சா வருவதை சொல்லிடறேன் :)

    ஸ்ரீராம்=அந்த சூ சூ முருங்கை மரம் :) .அ .கோ .எ .காட்டும் ஜெய் அங்கிள் முத்துராமன் அங்கிள் ஜிவாஜி அங்கிள்
    கௌதமன் ஸார் = கொட்டாங்குச்சியில் வளர்ந்த கொத்தமல்லி

    நானே கீதாக்கா நெல்லைத்தமிழன் கில்லர்ஜீ கீதா ரெங்கன் எல்லாருக்கும் எழுதி பின்னர் அழிச்சிட்டேன் :)
    உங்க நினைவில் வருவதை எழுதவும்

    பதிலளிநீக்கு
  27. 1,அன்றாட வாழ்க்கையில் எதுவும் இல்லாமல் போகாமல் ஏதாவது ஒன்று இருந்துகொண்டே இருக்கிறதே அது எப்படி சாத்தியம் ?

    2,பெரும்பாலானோர் அடித்து பாய்ந்து எப்படியாவது பார்த்தே ஆகவேண்டும் என்றும் அதை பார்க்கலைன்னா வாழ்க்கையே வீண் என்றும் புளகாங்கிதமடையும் சில உலக விஷயங்கள் (ஆஸ்தான நாயகனின் சினிமா முதல் நாள் முதல் காட்சி ,கிரிக்கெட் கால்பந்து ) சிலரை எந்த விதத்திலும் பாதிப்பதில்லையே ? ஏன் ?

    3,இதெல்லாம் ஒரு விஷயமேயில்லை என்று தோன்றியதுண்டா ? எதற்கு ஏன் ???

    4,வாழ்க்கையின் அர்த்தம் என்பது என்ன ? அது எல்லா உயிர்களுக்கும் பொருந்துமா ?

    5, Homo sapiens இற்கு பிறகு என்ன வரக்கூடும் ??? அல்லது அது தன்னையே விழுங்கி தனக்கே குழிபறித்து அழிந்து தொலைந்து போகுமா ??

    6,நீங்கள் ஒருவரை எப்படி மதிப்பீடு செய்வீர்கள் ? தராசு WEIGHING ஸ்கேல் /பார்சார்ட் /கிராஃப் போன்ற சிரி :) யஸ் பதில்களுக்கு தடா
    இது ஒரு சீரியஸான கேள்வி .நம்முடைய இன்டென்க்ஷன்ஸ் உள்நோக்கம் இவற்றை வைத்து நம்மை மதிப்பிடும் (நான் நல்லவள் நல்லவன் வல்லவன் நேர்மையானவன் /ர் ) இப்படி நம்மை நம் நோக்கங்கள் வைத்து மதிப்பிட்டுக்கொள்ளும் நாம் பிறரை மட்டும் அவர்கள் செய்யும் காரியங்கள் செயல்கள் வைத்து மதிப்பிடுகிறோம் எடை போடுகிறோமே அது ஏன் ??????

    7, கடும் தண்டனைகளால் நீதி நிலைநாட்டப்படும் என்பதை நம்புகிறீர்களா ??

    8, மானிட மனசுக்குள் இத்தனை அழுக்கா ? என்று எப்போதாவது நொந்த சம்பவம் ?

    9, ஒருமொபைல் போன் APP அது நாம் நினைப்பதை எதிரில் இருப்போருக்கும் அவங்க நினைப்பதை நமக்கும் காட்டி கொடுக்கக்கூடியது ..அதை நீங்கள் வரவேற்பீர்களா ???

    10, மனிதர்கள் தவறு செய்யும்போது எருமை ,பண்ணி ,மாடு குள்ளநரி என்று விலங்கு பெயர்களை வைத்து எதற்கு திட்டுகிறார்கள் ??


    பதிலளிநீக்கு
  28. //பெரும்பாலானோர் அடித்து பாய்ந்து எப்படியாவது பார்த்தே ஆகவேண்டும் என்றும் அதை பார்க்கலைன்னா வாழ்க்கையே வீண் என்றும் புளகாங்கிதமடையும் சில உலக விஷயங்கள் (ஆஸ்தான நாயகனின் சினிமா முதல் நாள் முதல் காட்சி ,கிரிக்கெட் கால்பந்து ) சிலரை எந்த விதத்திலும் பாதிப்பதில்லையே ? ஏன் ?// உண்மையிலேயே நான் கேட்க நினைத்த கேள்வி. அதென்னமோ எனக்கு இந்த சினிமாவுக்கு அடிச்சுப் பிடிச்சுண்டு போறவங்களைப் பார்த்தால் எப்போவுமே சிரிப்பு வரும். சின்ன வயசிலேயே! ஆனால் அப்போல்லாம் சினிமா பாஸ் கிடைச்சால் தான் போவோம். அது வேறே! ஆனால் அதுக்காகப் போறவங்களைப் பார்த்துச் சிரிக்காமல் இருக்க முடியுமா? அதே போல் எங்க உறவினர் ஒருத்தர் எழுபதுகளில் கிரிக்கெட் மாட்ச் பார்க்க மதுரையிலிருந்து அலுவலகத்துக்கு லீவ் போட்டுவிட்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு சேப்பாக்கம் மைதானத்தில் பார்க்கவெனவே வந்திருந்தார். ஙே! என்று தோன்றியது எனக்கு! என்னைப் பொறுத்தவரை அப்போ மொத்தச் செலவு ஐநூறுக்குள் ஆகி இருக்கும். அது இருந்தால் ஒரு மாசம் குடும்பத்தை ஓட்டலாமே என நினைச்சேன்! ஒருவேளை நான் சரியில்லையோ என்றும் தோன்றும்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா இந்த விஷயம் பத்தி இக்கசக்கமா எழுதலாம் ..தெரியாம க்ளீனிங் அதான் என்னோட கிராப்ட் பேப்பர் வாங்கி சேர்த்து குமிச்சத்தை எல்லாம் அப்புறம் பழைய புக்ஸ் லெட்டர்னு பல மூட்டைகள் இப்போ என்னை சுத்தி இருக்கா எல்லாம் sort செய்யணும் நேரமில்லை அதான் வியாழன் பதிவுக்கு கூட போகலை :) நீங்க அந்த பூனையை ஓட்டுங்க

      நீக்கு
    2. சினிமாலம் எப்பவாது கணினியில் டைம் கிடைச்சா பார்ப்பதோடு சரி :)இதுக்கு போய் 25 பவுண்ட்ஸ்லாம் செலவழிக்க மனசும் நேரமும் எனக்கில்லை :)
      அது யார் படமாக இருந்தாலும் ..

      நீக்கு
  29. ரொம்பப் பெரிசா இருந்ததால் பதிவாப் போட்டுட்டேன். :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!