வெள்ளி, 21 டிசம்பர், 2018

வெள்ளி வீடியோ : இமையை விழிதான் மறப்பதுண்டோ காட்சி வந்த பின்னே எனது நிலையை எடுத்துச் சொல்ல தூது போ என் கண்ணே
1971 டிசம்பர் 24 ஆம் தேதி வெளியான படம் ரங்கராட்டினம்.  
படம் பற்றி பெரிய தகவல் எதுவும் தெரியவில்லை.  சௌகார் ஜானகி தயாரித்து இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கி இருப்பவர்கள் கிருஷ்ணன் -பஞ்சு.  

ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

அப்போது வெளிவந்த வெகுளிப்பெண் திரைப்படமும் இந்தப் படமும் ஒரே கதை என்றும், அந்தப் படம் முன்னரே வெளிவந்து வெற்றியும் விருதும் பெற்றது என்றும், இது தோல்விப்படம் என்றும் படித்தேன்.  அது என்ன ஆனால் என்ன, எனக்கு / நமக்குத் தேவை பாடல்கள்!

இசை வி. குமார்.  பாடல்கள் வாலி.

இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.  முதல் இரண்டு இடங்களில் வரும் பாடல்கள் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியது.  முதல் பாடல் இந்த வாரம்.

வழக்கம்போல SPB யின் குரல்...   ரசிக்கத்தக்க பாடல்.  பாடல் வரிகளிலிருந்து ஓரளவு காட்சியை யூகிக்க முடிகிறது.  தஞ்சை ராஜேந்திரா தியேட்டர் காலங்களில் கேட்ட பாடல்கள்.  

வெகுளிப்பெண்ணும் பார்த்ததில்லை, இந்தப் படமும் பார்த்ததில்லை.   தங்கத் தொட்டில் பட்டுமெத்தை தாய் வீட்டிலே 
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே 

தன்னைத்தானே மறந்திருந்தாள் உன்னை ஈன்ற அன்னை 
திரும்பி வந்த நினைவிருந்தும் மறந்ததென்ன என்னை 
இமையை விழிதான் மறப்பதுண்டோ காட்சி வந்த பின்னே 
எனது நிலையை எடுத்துச் சொல்ல தூது போ என் கண்ணே 

கண்ணன் வந்தான் நண்பனுக்குத் தேரோட்ட அன்று 
தந்தை வந்தான் பிள்ளைக்காகக் காரோட்ட இன்று 
வானில் உள்ள தேவன் இந்த விந்தை கண்டு சிரிப்பான் 
வாழ்ந்து பார்க்க வேளை வந்தால் நம்மை ஒன்று சேர்ப்பான் 


152 கருத்துகள்:

 1. இனிய வெள்ளி காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்! இன்னிக்கு என்ன பாட்டா இருக்கும்….ராகம் கண்டுபிடிக்கும் வாய்ப்பு இருக்குமா என்ற யோசனையிலேயே...ஹா ஹா ஹா

  வல்லிம்மா! இனிய மாலை வணக்கம்…

  கீதா

  பதிலளிநீக்கு
 2. ஆஹா! நேற்று செம கும்மி போல!!! மிஸ்ட் இட்...இப்பதான் பார்க்கனும்

  கீதா

  பதிலளிநீக்கு
 3. ரங்கராட்டினம் இப்படியொரு படமா....நோ ஐடியா...இப்பத்தான் உங்க பதிவிலிருந்து....தெரிஞ்சுக்கறேன்...

  பாட்டு அப்பால கேட்டுட்டு வரேன் ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமயங்களில் படம் பெயர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். பாடல் கேட்டிருப்போம். இது அந்த வகையில் இருக்கும் கீதா.

   நீக்கு
 4. ரங்க ராட்டினம் படம் பற்றி தெரியாது. பாடலும் இது தான் முதல் முறை கேட்பது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... அப்படியா... இன்னும் இரண்டு நல்ல பாடல்களுண்டு. பின்னர் அவற்றையும் பகிர்வேன். நன்றி வெங்கட். பாடல் நன்றாயிருந்ததா?

   நீக்கு
 5. எங்கே துரையைக் காணோம்? அலுவலில் மும்முரம்? வெகுளிப் பெண் பார்த்த ஞாபகம்! ரங்கராட்டினம் படம் பெயர் கேட்ட ஞாபகம். பாடல்கள் கேட்டிருக்கலாம். நினைவில் தங்காத பாடல்கள்! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதாக்கா... ஆமாம் துரை ஸார் இப்ப எல்லாம் கொஞ்சம் லேட்டா வர்றார்! இணையப் பிரச்னை போலும்.

   நீக்கு
 6. இந்தப்படம் வெகுளிப்பெண்ணாக நடித்தவர் தேவிகாவோ? அவர் கணவர் தேவதாஸ் இயக்கம்? விக்கி விக்கிக் கேட்டுப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் படத்தில் சௌகார். வெகுளிப்பெண் பற்றித் தெரியாது!

   நீக்கு
  2. சொல்ல மறந்துட்டேனே! சிவகுமார் கூட இதே போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் நடிச்சிருக்கார். அதில் கணவனை ஓர் விபத்தில் மறந்து போகும் மனைவி! பின்னர் நினைவு வந்தவுடன் கணவனுடன் போக வேண்டி இருக்கும்னு நினைக்கிறேன். கிட்டத்தட்ட இந்தக் கருவில் வாசந்தி எழுதிய குறுநாவல் ஒன்றும் உள்ளது. நேபாளப் பின்னணியில் எழுதி இருப்பார்.

   நீக்கு
  3. ஆமாம் கீதா அக்கா. விகடனில் இணைப்புக்கு குறுநாவலாக வந்தது. கதை படித்திருக்கிறேன். மாருதி ஓவியம். தலைப்பு மறந்து விட்டது. படம் பார்த்ததில்லை.

   நீக்கு
  4. //இந்தக் கருவில் வாசந்தி எழுதிய குறுநாவல் ஒன்றும் உள்ளது. நேபாளப் பின்னணியில் எழுதி இருப்பார்.//
   அது லிவிங் டுகெதரா இருப்பாங்க .ஆணுக்கு ..அவர் ஐடி ஸ்பெஷலிஸ்ட் நினைவு மறந்திடும் ..மக்கி ரொட்டி சாப்பிடுவாங்க கதை இறுதியில் தான் ஆணுக்கு நினைவு வரும் ..யூ கே வந்த புதுசில் லைப்ரரில எடுத்து படிச்சது :) தாலி திருமண பதிவு எதுவுமில்லாததால் அந்த பெண்ணால் ஒரு சாட்சியும் கொடுக்க முடியாது அவனது பேரன்ட்ஸ் நம்ப மாட்டாங்க ..this கதையா அக்கா ??

   நீக்கு
  5. இல்லை ஏஞ்சல், திருமணம் ஆன ஒரு பெண் ஏதோ விபத்தில் அகப்பட்டுக் கொண்டு அனைவரையும் பிரிந்து விடுவாள். எங்கோ இருந்தவளை இந்த மருத்துவரிடம் சிகிச்சைக்குக் கொண்டு வருவார்கள். அப்போ இருவருக்கும் காதல் உண்டாகும். அவளுக்குத் தனக்குத் திருமணம் ஆனதே நினைவில் இருக்காது. கடைசியில் குணமடைந்த பின்னரே நினைவு வரும். அதற்குள்ளாக அவள் உயிருடன் இருக்கும் செய்தி தெரிந்து கணவன் அவளைத் தேடி வருவான். முடிவு மறந்து போச்சு! ஆனால் சோகமான முடிவு என நினைவு.

   நீக்கு
  6. நீங்க சொன்ன கதைக்கருவிலே மங்கையர் மலரில் ஓர் நெடுங்கதை வந்தது ஏஞ்சல்! கதைப்படி கதாநாயகன் கல்லூரியில் படிக்கையில் நாடக விழா நடக்கும்போது விபத்தில் நினைவிழந்திருப்பான். பின்னர் நினைவு வந்ததும் நாடக நினைவு மட்டும் அவனுக்கு இருக்கும். நாடக நாயகியைத் தேடுவான். அவனுக்குத் திருமணம் ஆனால் குணமாகும் என ஏழைப்பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து வைப்பார்கள். அவனுக்கு நினைவு வரும் சமயத்தில் அவனைக் காப்பாற்ற வேண்டி அந்த ஏழைப்பெண் இறந்திருப்பாள். அவனுக்கோ இப்போது தனக்குக் கல்யாணம் ஆனதும், மனைவி இருந்ததும் அவள் இறந்ததுமே தெரியாது.

   நீக்கு
  7. கலைமகள் புத்தகத்தில் நான் சின்னப் பெண்ணாய் இருக்கையில் கிட்டத்தட்ட இந்தக் கதைக்கருவில் ஓர் நாவல் வந்து கொண்டிருந்தது. அதில் கணவன் போரில் இறந்து விட்டான் என நினைத்துக் கணவனின் பெற்றோரே மருமகளுக்கு மறுமணம் செய்வித்துக் குழந்தையும் பிறந்திருக்கும். கணவன் திரும்பி வருவான். ஆனால் நல்லவேளையா (கதை படிக்கும் நமக்கும் சேர்த்து) அப்போப் பார்த்து அந்தக் கதாநாயகி தன் 2 ஆம் கணவருடன் வெளியே போயிருப்பாள். வந்தவனுக்கு போரில் ஏற்பட்ட விபத்தில் முகத்தில் ஏகப்பட்ட தழும்புகள் இருந்ததால் வீட்டில் மற்ற யாருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை. அடையாளம் கண்டு பிடிக்கும் பெற்றோரும் இல்லை. ஆகவே விபரங்களை வேலைக்காரன் மூலம் தெரிந்து கொண்டு அவன் சத்தம் போடாமல் வீட்டை விட்டுப் போய்விடுவான். மனைவியைத் தியாகம் செய்து விட்டு! :)))))

   நீக்கு
  8. உங்கள் உரையாடல்களில் வேறு சில கதைகளும் இப்படி வந்திருப்பது தெரிகிறது. மற்றபடி அந்த யாரோ எழுதிய கவிதை நான் சொல்லும் விகடன் வாஸந்தி கதையா என்று நினைவில்லை. எங்கள் வீட்டுக் குப்பையில், மன்னிக்கவும் குவியலில் தேடிப்பார்த்தால் அந்தக் கதையும் கிடைக்கலாம்! மாருதி ஓவியம் என்று மட்டும் நினைவிருக்கிறது.

   நீக்கு
  9. அக்கா இது வட இந்தியாவில் நடக்கும் ஸ்டோரி நானா சொல்றது .பாட்டி துணையுடன் கொஞ்சம் பாலசந்தர் ஹீரோயின் சாயலுள்ள பெண் அப்புறம் பெற்றோரின் நடவடிக்கை குறிப்பா அப்பாவின் முன்கோபம் பிடிக்காத ஆண் இருவருக்கும் திருமணம் என்ற பந்தத்தில் நம்பிக்கையில்லை ஆனா சேர்ந்து வாழ்வாங்க ..இந்த புக் கூட 20 புக் மொத்தமா லைப்ரரியில் எடுத்தேன் :) அதில் இது வாஸந்தியா சிவசங்கரியா இந்துமதியான்னு தெரில :) மூளை cd ரோம் என்றெல்லாம் வரும் வேலை பிரஷரில் காரோட்டிட்டு வச்ரும்போது ஆக்சிடண்டில் நினைவு போய்டும் கடைசில கணவனுக்கு நினைவு தெரிந்து மனைவியை பார்க்க போவார் ..அது உண்மையில் சந்தோஷமா இருந்தது பிறகு ரெஜிஸ்டர் பண்ணனும்னு தீர்மானம் செய்வாங்க

   நீக்கு
  10. கண்டு பிடிச்சிட்டேன் நான் சொல்றது பொய்யில் பூத்த நிஜம் ஸ்டோரி .வாஸந்தி எழுதினது scribd ல பாதி தான் வருது கர்ர்ர்

   ..https://www.scribd.com/read/393700878/Poiyil-Pootha-Nijam#

   நீக்கு
  11. https://www.thehindu.com/thehindu/br/2003/08/19/stories/2003081900170300.htm

   நீக்கு
 7. துரை அண்ணா எங்கே!!!

  காஃபியோடு இருக்கேன்....வாங்க ண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
 8. ஸ்ரீராம் தேம்ஸ் சென்னைக்கு வந்தா அப்படியாவது சென்னையின் தண்ணிக் கஷ்டம் தீருமில்லையோ!!!!!!!! (ஆஅ இப்படிச் சொன்னா நான் ஞானியல்லோ என்று சொல்லிடுவார் பூஸார்!!!)

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரங்கராட்டினம் படம் பார்த்து இருக்கிறேன் கோவையில் சௌகார் இரட்டை வேடம் இல்லை.ஒரு மல்லிகை மொட்டு பிரமாதமான பாடல். சித்தம் தடுமாறிய நிலையில் ரவிசந்திரனிடம் கருத்தரிப்பார் பிறகு தெளிந்ததும் ரவிச்சந்திரனை மறந்து விடுவார். வெகுளிப் பெண்ணில் வெ.ஆ.நிர்மலா தங்கை. தேவிகா அக்கா என்று நினைவு.

   நீக்கு
  2. வாங்க வல்லிம்மா. நான் இரண்டு படங்களும் பார்த்ததில்லை! பாட்டு மட்டும்தான்!

   நீக்கு
 9. டைரக்டர் என்பது டிராக்டர் என வந்திருக்கு ஸ்ரீராம். ராஜ்குமாரி தியேட்டர். மாம்பலம் பவர் ஹவுஸ் அடுத்த ஸ்டாப் அங்கே கொடுத்தால் காணாமல் போவதற்கான வாய்ப்பு இருப்பதால் இங்கே கொடுக்கிறேன். டி.ஆர்.ராஜகுமாரி பத்தி ஏகாந்தனும் ஸ்ரீராமும் பேசிக் கொண்டதற்கான பதில் :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதா அக்கா.. டைரக்டர் என்று புரிந்தால் சரி! விடுங்கள். தியேட்டர் ஹிந்தி பிரச்சார சபா அருகில் என்று நினைவு.

   நீக்கு
  2. நன்றி: கீதாஜி/Sriram. நானும் ஒருவழியாக அடுத்தபக்கம் போய்வந்தேன்!
   TRR தமிழ்சினிமாவின் முதலாம் dreamgirl எனவும் படித்தேன். நல்ல மனுஷி என்பது மேலும் கிடைத்த info.

   நீக்கு
 10. வெகுளிப்பெண் படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலாதான் கதாநாயகி. தேவிகா அவர் அக்கா, ஜெமினி அக்கா புருஷன். அது A certificate படம் என்பதால் தியேட்டரில் பார்க்க முடியவில்லை. பார்க்க விருப்பமும் இல்லை. ஜனாதிபதி விருது பெற்ற படமாக இருந்ததால் தொலைக்காட்சி யில் போட்ட பொழுது பார்த்தேன். திராபையான படம்.
  ரங்கராட்டினம் ஜெயசித்ரா நடித்த படமோ என்று நினைத்தேன். இந்த பாடல் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏற்கெனவே சொன்ன மாதிரி நான் இரண்டு படங்களும் பார்க்கவில்லை. இந்தப் படத்தின் தோல்வி பற்றி தயாரிப்பாளர் சௌகார் கொள்கையில் "மக்கள் படத்தின் கதையை சரியாய் புரிந்து கொள்ளவில்லை" என்றாராம்!

   நீக்கு
 11. @கீதா அக்கா: வாஸந்தியின் கதையில் கதாநாயகிக்கு ஒரு விபத்தில் அம்னீஷியா வந்து விடும். அதை ஷோபனா கதாநாயகியாக நடிக்க மலையாளத்தில் படமாக்கினார்கள். மிக நன்றாக இருந்தது. தமிழில் ஶ்ரீதர் இயக்கத்தில் ஜெயஶ்ரீ கதாநாயகியாக நடித்தார். அவ்வளவு நன்றாக இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படத்தின் பெயர் சொல்லவில்லையே...

   நீக்கு
  2. @ பானுமதி, அப்படியா? மலையாளத்தில் வந்திருப்பது தெரியாது. ஶ்ரீதர் இயக்கத்தில் தமிழில் பார்த்தேன். ஆனால் வாசந்தி கதைதான் என்று தெரியாது. ஜெயஶ்ரீ தான் நடிச்சிருப்பார். சிவகுமார் மருத்துவராக வருவார்!

   நீக்கு
  3. பொதுவாக தமிழ் எழுத்தாளர்களின் கதையைத்திரைப்படமாக எடுத்தால் சொதப்பல் தான். முள்ளும் மலரும் விதிவிலக்கு என்றாலும் நாவலின் ஜீவனோ, அல்லது மங்கா பாத்திரத்தின் முடிவோ கதையைப் போல் படத்தில் அமையவில்லை. ஜனரஞ்சகப்படமாக அமைந்தது.

   நீக்கு
  4. தொலைக்காட்சியில் போட்டதாலோ என்னமோ தெரியலை, வெகுளிப் பெண்ணும் பார்த்தேன். சிவகுமார், ஜெயஶ்ரீ நடித்த இந்தப் படத்தையும் பார்த்தேன். ஹிஹிஹி, படம் பெயர் தான் நினைவுக்கு வரமாட்டேன்னு அடம்! :))))

   நீக்கு
  5. கீதாக்கா பானுக்கா சொல்லியிருக்கும் மலையாளப் படம் "இன்னலே" டைரக்டர் பத்மராஜன். ஜெயராம், சுரேஷ் கோபி ஷோபனா, என்று நினைவு. முதலில் இது அவ்வளவாக ஓடவில்லை இந்தப் படம். நானும் திருவனந்தபுரத்தில் இருந்த போது என் மாமா வீட்டிற்குப் போனப்ப டிவியில் பார்த்த படம்.

   அருமையான படம் கீதாக்கா. முடிஞ்சா பாருங்க மலையாள வெர்ஷன்.

   கீதா

   நீக்கு
  6. ஸ்ரீராம் படத்தின் பெயர் இன்னலே....இதைத் தமிழ்ல படிச்சா அர்த்தம் வேறு ஹிஹிஹிஹி....மலையாளத்தில் நேற்று என்பது அர்த்தம் ...பாஸ்ட் என்றும் எடுத்துக் கொள்ளலாம்

   கீதா

   நீக்கு
  7. பானுக்கா அது வாசந்தியின் கதையா...ஓ! மலையாளத்துல அது சொல்லப்பட்டதா? தெரியலை

   கீதா

   நீக்கு
  8. ஸ்ரீராம் தமிழில் அந்தப் படத்தின் பெயர் யாரோ எழுதிய கவிதை - கூகுளில் பானுக்கா கொடுத்த விவரம் வைச்சுத் தேடியதில் கிடைத்தது...

   கீதா

   நீக்கு
  9. முதலில் வந்தது தமிழ்ப்படம் தான் 1986ல் வந்திருக்கு....மலையாளப்படம் வந்த வருடம் 1990 என்று விக்கி சொல்லுது. பானுக்கா இது வாசந்தியின் கதைன்னு சொல்லிருக்காங்க ஆனா பாருங்க தமிழ் டைரக்டரும் சரி மலையாளத்து டைரக்டரும் சரி கதை என்று அவங்கவங்க பெயர்தான் போட்டுருக்காங்க....

   வாசந்திக்கு க்ரெடிட்ஸ் கொடுக்க வேண்டாமோ?!!!

   கீதா

   நீக்கு
  10. கீதாக்கா நீங்க பார்த்த அந்தத் தமிழ்ப் படத்தின் பெயர் யாரோ எழுதிய கவிதை...

   கீதா

   நீக்கு
  11. பானுக்கா நீங்க சொன்ன மாதிரி தமிழ் வெர்ஷன்...ம்ம்ம்ம் என்ன சொல்ல ஆரம்பமே டூ ஹைப் ஃபார் ஹீரோ!!! வேண்டாத காட்சிகள் கதைக்குத் தேவையில்லாத காட்சிகள்...சும்மா கொஞ்சம் பார்த்தேன் யூட்யூப்ல ஜஸ்ட் ஒரு 10னிமிஷம் தான்....

   மலையாளத்துல எடுத்ததுமே கதைக்குள்ள நுழைஞ்சுடுவாங்கன்னு நினைவு...படம்...ஆஹா ஏதோ சொல்லப் போகுதுனு தோன வைக்கும்...அப்படித்தான் நினைவு. எடுத்ததுமே ஆக்சிடென்ட் சீன் என்று நினைவு...

   கீதா

   நீக்கு
 12. படம் தெரிந்த விடயமே...
  பாடல் வரிகள் சிறப்பு.

  முதன்முறையாக பாடல் கேட்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  படம் பார்த்தது இல்லை. பாடல் கேட்டு இருக்கிறேன்.
  இப்போதும் மீண்டும் கேட்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 14. லோ-பிட்ச்சில் சோகமாக இழுத்தால் எனக்கு ஒத்துவருவதில்லை - எஸ் பி பி-யின் குரலாக இருந்தாலும். ஆனால் உங்களுக்கு? எஸ்பிபி என்கிற பேரே போதுமானது என்று தோன்றுகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஏகாந்தன் ஸார். நான் எஸ் பி பி யின் விசிறி. ஆனால் இந்தப் பாடல் நல்லாயில்லை என்றா சொல்கிறீர்கள்? மீண்டும் சேரத்துடிக்கும் ஒரு உறவின்உணர்வு அந்தக் குரலில் வெளிபப்டுவதை கவனிக்கவில்லையா?!!

   நீக்கு
 15. அன்பினோர் அனைவருக்கும் வணக்கம்..

  சில நாட்களாக பதிவின் முகப்பில் நான் இல்லை..

  அது குறித்து சில விஷயங்கள் - தங்களுடன்!...

  நேற்று முன் தினம் புதன் கிழமை காலையில் -
  இரவு வேலை முடித்துச் சென்ற நான் திரும்பவும் அழைக்கப்பட்டேன்..

  வேலைத் தளத்தில் என்மீது பலவாறாக பொய் குற்றங்கள் சாட்டப்பட்டன..

  இவை கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து வருபவை..
  அத்தனையையும் சகித்துக் கொண்டு தான் இருக்கிறேன்...

  என்னை நோக்கி - தகாத வார்த்தைகளைச் சொன்னான் - Executive Chef ..

  கோபம் கொண்ட நான் அங்கே வேலை பார்ப்பதற்கு மறுத்து விட்டு வெளியேறினேன்...

  மறுநாள் காலையில் தலைமையகத்திற்குச் செல்லுமாறு கட்டளை...

  பகல் முழுதும் மன உளைச்சல்... அன்றிரவு -

  >>> அடிமட்டத்தில் இருக்கும் மக்களை வேலை வாங்க அதிகாரம் மட்டும் போதாது, உளவியல் ஞானமும், கருணையும் கூட வேண்டும்... <<<

  - என்ற வார்த்தைகளை -
  அன்பின் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களது பதிவில் கண்டேன்...

  அதற்கு

  >>> அடிமட்டத்தில் இருக்கும் மக்களை வேலை வாங்க அதிகாரம் மட்டும் போதாது, உளவியல் ஞானமும், கருணையும் கூட வேண்டும்...

  இதையெல்லாம் உணர்ந்து கொள்ளும் தன்மையுடையவர்களிடம் தான் காட்ட வேண்டும்..

  அஃதில்லாரிடம் கருணையையும் கனிவையும் காட்டினால் - அது வீண்!..

  இங்கே எனக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் கனிவையும் கருணையும் காட்டினேன்.. விளைவு விபரீதமாகிப் போனது.. என்னை அவமதித்தார்கள்.. சரியில்லாதவன் என்று வேலைத் தளத்திலிருந்து அகற்றி விட்டார்கள்!..

  ஆனாலும், என்னுள் இருக்கும் கனிவும் கருணையும் என்னை வாழ வைக்கும் என்றிருக்கிறேன்.. இப்போது இரவு 9:52.. பொழுது விடியட்டும்.. <<<

  என்று, எழுதியிருந்தேன்...

  இதற்கு
  கீதா ரங்கன் அவர்களும் பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களும்
  அன்பினோடு மறுமொழி இட்டிருந்தார்கள்...

  சரியில்லாதவன் என்று வேலைத் தளத்திலிருந்து அகற்றி விட்டார்கள்!..

  என்ற வரியில் என்னை - என்று வார்த்தை தவறிப் போனதால்

  >>> அவன் வினை அவனுக்கு விளைந்தது.. - என்று சகோதரி கீதா ரங்கன் சொல்லியிருந்தார்...<<<

  ஆனால் உண்மையில் நடந்தது எனக்குத்தான்!...

  என்னை அவமதித்ததால்
  நான் அங்கிருந்து அகன்று விட்டேன்!..

  இதனால் விளைந்த மன உளைச்சலும்
  தலைமையகத்துக்குச் சென்று வந்த (30 + 30 கி.மீ.,) அலைச்சலும்!...

  மூன்று நாட்களாக அறையிலிருக்கிறேன்..

  நாளை மீண்டும் தலைமையகத்துக்குச் செல்ல வேண்டும்...

  இரவு வேலையிருந்தபோது Galaxy ல்
  நமது தளம் வெளியாவதைப் பார்த்து கருத்துரை இட்டது மாதிரி இனி அமைவதற்கு வாய்ப்பு அமையுமா தெரியவில்லை...

  வேறு இடம் என்றால் வேலை நேரமும் மாறும்...

  இன்று காலையில் 3:25 க்கு விழித்தேன்..
  ஆனாலும் களைப்பு.. தூங்கிப் போனேன்..

  எனது நலம் விசாரித்த அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி..

  காலையில் பதிவு வெளியானதும்
  வரவேற்று நலம் கூறுவதற்கு (தற்சமயம்) இயலாமல் போனாலும்
  சற்று தாமதமாகவேனும் தங்களுடன் என்றும் இணைந்திருப்பேன்...

  வாழ்க நலம்.. வளர்க அன்பு!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூளையும் இதயமும் இடம் மாறினால் இதுபோன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவது இயல்பு. எந்த இடத்தில எதை பயன்படுத்தவேண்டும் என்பதை அனுபவத்தில் சரியாக உணர்ந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். நாம் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. வல்லவராகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று. நினைப்பதும் நம்மை ஏமாளியாகிவிடும். ஒன்றும் கவலைப்படாதீர்கள். இறைவன் என்றும் நல்ல மனங்களுக்குத்துணை நிற்பான். ஒன்றை புரிந்துகொண்டிருப்பீர்கள். நம்மை சுற்றியுள்ளவர்கள் உண்மை முகம் என்ன என்பதை. இந்த சம்பவம் மூலம். இனி எச்சரிக்கையாக இருங்கள்.

   நீக்கு
  2. >>> இறைவன் என்றும் நல்ல மனங்களுக்குத்துணை நிற்பான். ஒன்றை புரிந்துகொண்டிருப்பீர்கள். நம்மை சுற்றியுள்ளவர்கள் உண்மை முகம் என்ன என்பதை. இந்த சம்பவம் மூலம். இனி எச்சரிக்கையாக இருங்கள்... <<<

   தங்கள் அன்பினுக்கும் ஆறுதலுக்கும் மனமார்ந்த நன்றி..

   நீக்கு
  3. துரை அண்ணா மனம் என்னவோ செய்கிறது சத்தியமாக இதை வாசித்ததும் கண்களில் நீர் நிறைந்ததைத் தடுக்க இயலவில்லை.

   அண்ணா கண்டிப்பாக உங்கள் நல்ல மனம் வெல்லும். நல்லது நடக்கும். ஆண்டவன் சோதிப்பான் ஆனால் நல்லது கண்டிப்பாக நடக்கும்.

   முன்பு நீங்கள் ஒரு பதிவு இட்டிருந்தீர்கள் இல்லையா ஒருவன் உங்களை அவமதித்தான் ஆனால் அவன் மீது தவறு என்று அவனை நீக்கிவிட்டார்கள் என்று...அது நினைவுக்கு வந்ததால்தான் அந்த கமென்ட்.

   துரை அண்ணா உண்மையா நீங்க வரலைன்னதுமே வேலைப்பளு இல்லைனா ஏதோ ஒரு கஷ்டம் என்று என் மனதிற்குத் தோன்றியது. ஆனால் எதிர்மறை வேண்டாமே என்றுதான் விட்டேன்.

   உங்கள் பிரச்சனை சீக்கிரம் தீரும் கண்டிப்பாக நல்லது நடக்கும் அண்ணா. எபி உங்கள் நட்புகள் நாங்கள் அனைவரும் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறோம். நல்லது நடக்கும் விரைவில். உங்கள் மன உளைச்சல் தீரும். உறுதி.

   கீதா

   நீக்கு
  4. @துரை, விரைவில் உங்கள் பிரச்னை சுமுகமாக முடியப் பிரார்த்தனைகள். கலங்காத மனம் ஒன்றே இப்போது தேவை! திரு பட்டாபிராமன் சொன்னாற்போல் உண்மை நண்பர்களின் உண்மை முகம் இப்போது புரிந்திருக்கும். எதுவாயினும் இறைவன் துணையோடு அவற்றைக் கடக்க வேண்டிய தைரியத்தை உங்களுக்கு இறைவன் அளிக்குமாறு பிரார்த்தித்துக் கொள்கிறேன். விரைவில் நல்ல இடத்துக்குப் பணி மாற்றமும் கிட்டப் பிரார்த்தனைகள்.

   நீக்கு
  5. கடந்த நாட்களின் உங்கள் மனா உளைச்சலைப் படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது துரை ஸார்.. ​ நாளை மறுபடியும் தலைமையகம் செல்ல வேண்டுமென்றால் எதற்கு? எங்காவது நியாயம் கிடைக்குமா? நீங்கள் வேலையிலிருந்து அகன்று விட்டீர்கள் என்றால் வேறு வேலை உடனே கிடைக்குமா? மனம் சங்கடப்படுகிறது. உங்களுக்காக எங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் துணை நிற்கும்.

   நீக்கு
  6. அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி...

   தங்களாலும் தங்களது பதிவுகளாலும் தான் தினமும் என்னை நானே புதுப்பித்துக் கொள்கிறேன்...

   என்னைப் பற்றி புகார் செய்தவன் வங்கதேசி...

   விசாரிக்காமல் அவமதித்தவன் எகிப்தியன்...

   அவர்களை மீறி ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்தவன் Manager தமிழன்...

   நாளைக்குப் பார்க்கலாம்.. என்ன நடக்கிறது என்று....

   என்றும் அன்புடன்..

   நீக்கு
  7. நல்லதே நடக்கும் இறைவன் துணையிருப்பார் அண்ணா

   நீக்கு
  8. துரை செல்வராஜு சார்.. கவலை வேண்டாம். கவனம் தேவைப்படும் நேரம் இது. அநியாயமாக மாட்டிவிடாதபடி கவனமாக இருங்கள்.

   பொதுவாக, அராபியர்கள், அவர்களது மேனேஜர்கள் அவர்களின் சபார்டினேட்ஸ் களிடம் அன்பாக நடந்துகொள்வதை விரும்புவதில்லை. சபார்டினேட்ஸ், மேனேஜரைக் குறை சொன்னால்தான் மேனேஜர் நல்லா வேலை பார்ப்பதாக அவர்கள் நம்புவார்கள்.

   இதையெல்லாம் நானும் கடந்து வந்திருக்கிறேன். ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு உதவி செய்வது மிக மிக அபூர்வம்.

   தங்கள் நலனுக்குப் ப்ரார்த்திக்கிறேன்

   நீக்கு
  9. சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் அலுவலகப் பணியில் ஏற்பட்ட இடர்கள் களைந்து, பழையபடி மன நிம்மதியுடன் அலுவலகம் சென்று வர உளமாற பிரார்த்திக்கிறேன்.

   நீக்கு
  10. துரை சார். . ஏதோ போதாத வேளை. வேறொன்றுமில்லை. போதாத நேரம் கொஞ்சம் மெல்லத்தான் கடக்கும். அதனிடையே, அளவுக்குமீறி மனம் சஞ்சலமடையாது உறுதியாக இருங்கள். தவறு செய்யாதவர்கள் தங்களளவில் தடுமாறக்கூடாது. இனிய நேரமும் வரும். இறைவன் இருக்கிறான். (- என எழுதுகையில் கண்ணதாசனின் வரிகள் நினைவில்: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே.. தன்னாலே வெளிவரும் தயங்காதே.. ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே..)

   அடுத்த விஷயம். தமிழன் மற்றவருக்கு விழுந்து விழுந்து செய்வான். அதே சமயம், இன்னொரு தமிழனைத் தவிர்க்கப் பார்ப்பான், அல்லது பணியிடங்களில் குறைத்துப் பேசி மகிழ்வான் - குறிப்பாக அந்நிய மண்ணில். இது என்ன கிரகச்சாரமோ தெரியவில்லை. இதனை வெளிநாட்டு வாசத்தின்போது, இந்திய சமூகத்தினரோடு (விதவிதமான குழுக்கள், குழப்பங்கள்) நெருங்கிவந்த சந்தர்ப்பங்களில் கவனித்திருக்கிறேன். தமிழனின் ஜாதகமே கொஞ்சம் விசித்திரமானதுதான் ..!

   நீக்கு
  11. பட்டாபிராமன் ஸார்... நீங்கள் சொல்லி இருப்பது போல பயன்படுத்த பல இடங்களில் என்னாலும் முடிவதில்லை. பாவம் பார்த்து நான் பாவம் ஆன அனுபவம் எனக்கும் உண்டு.

   இந்தச் சோதனையில் துரை ஸார் ஆண்டவனின் துணையோடு சீக்கிரமே வெற்றி பெறுவார்.

   நீக்கு
  12. //என எழுதுகையில் கண்ணதாசனின் வரிகள் நினைவில்: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே.. தன்னாலே வெளிவரும் தயங்காதே.. ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே.//

   ஏகாந்தன் ஸார்.. என்னுடைய சோதனை நேரங்களில் எனக்கு பல பாடல்கள் உதவியாய் இருந்திருக்கின்றன.

   இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு துணையாய் நின்ற பாடல் வரி "மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும்... நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும்"

   எனக்கு நடந்திருக்கிறது.

   நீக்கு
  13. ஸ்ரீராம், நீங்கள் எழுதியிருப்பதைப் படித்தேன். இதுபோன்ற உருக்கங்கள் இந்தப்பக்கமும் உண்டு.

   தமிழ்ப்படப் பாடல்கள் -என் விஷயத்தில் பழையபாடல்கள்- எனக்குள் ஆழமாய் இறங்கியிருக்கின்றன என்று தெரிகிறது. சில தூக்கி நிறுத்தியிருக்கின்றன, சில மேலும் கலங்கவைத்திருக்கின்றன, கசக்கிப் பார்த்திருக்கின்றன. காதலையும், ஏக்கத்தையும், பிரிவையும், பின் தொடரும் வாழ்வின் தத்துவத்தையும் பல ஓவியங்களாக வரைந்தளித்து, கேட்பவர்களைப் பின்னியெடுத்த கவிஞர்களுக்கு -பாரதி, பாரதிதாசன் துவங்கி, பாபநாசம் சிவன், தஞ்சை ராமையாதாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதாசன், காமு.ஷெரீஃப், வாலி இப்படி நீள்கிறது, நீளட்டும் அது நம் பாக்யம்- மனதாரத் தலைவணங்குகிறேன்.

   நீக்கு
  14. // ........... வாலி இப்படி நீள்கிறது, நீளட்டும் அது நம் பாக்யம்- மனதாரத் தலைவணங்குகிறேன்.//

   நானும்.

   இசைபட வாழ்தல் என்பதற்கு சொல்லும் அர்த்தம் வேறு. என்னைப் பொறுத்தவரை பாடல்கள், இசையுடன்...!

   :)))

   நீக்கு
  15. நானும்.

   இசைபட வாழ்தல் என்பதற்கு DD சொல்லும் அர்த்தம் வேறு. என்னைப் பொறுத்தவரை பாடல்கள், இசையுடன்...!

   :)))

   நீக்கு
  16. DD-ஐ வேறு கிளப்பிவிடுகிறீர்களா? 10 x 133-ல், எந்த இடத்தில் ஆரம்பிக்கட்டும் என்பாரே!

   காதில் இசைபட வாழ்வது இனிது என்கிறீர்கள். தலையாட்டுகிறேன்.

   நீக்கு
  17. ஹா... ஹா.. ஹா... டிடி கமெண்ட்ஸ் தொடர்வது இல்லைன்னு நினைக்கிறேன்!

   நீக்கு
  18. துரை அண்ணனின் கொமெண்ட் படிச்சேன்ன்.. எல்லொரும் சொல்லி விட்டார்கள் இனி இதுக்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கப் போகிறது.... “வல்ல ஈசன் நம்மை வருத்துகிறார்.. கொல்லவல்லக் கொல்லவல்ல.. பொல்லா வினைகளை அறுப்பதற்கே”... கடவுள் இருக்கிறார் துரை அண்ணன்.. எதுக்கும் தைரியம் தான் முக்கியம்.. எதையும் தாங்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கோ.. இதுவும் கடந்து போகும்.

   நீக்கு
 16. பார்க்காத படத்தைப் பற்றி அறிந்தேன். நல்ல அறிமுகம்.

  பதிலளிநீக்கு
 17. போஸ்டர் பார்த்ததும் , பாட்டே கேட்கவேண்டாம் ஓடிடலாம் என நினைச்சேன் பின்பு மனம் சொல்லியது சும்மா ஒருதடவை கேட்கலாமே காசா பணமா என... கேட்டேன் அருமையான பாடல்... படம் பார்க்கலாம் போல இருக்கே... முடிவில் சேர்ந்தார்களோ இல்லயோ என அறிய ஆவல்....

  இதன் கொப்பிதான்.....
  கட்டில் சொந்தம் என்னைக் கை விட்டது...
  தொட்டில் சொந்தம் தொடர்கின்றது.... ரஜனி அங்கிள் பாடி எல்லோரையும் அழவச்சாரே:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்பவுமே அப்படி எல்லாம் அவசரப்பட்டு முடிவுக்கு வந்து பாட்டு கேட்காமல் போயிடாதீங்க அதிரா... நீங்கள் சொல்லி இருக்கும் பாடல் எது என்று புரியவில்லை.

   அப்புறம் ஒரு விஷயம்.. இந்தப் படம் இணையத்தில் கிடைக்கவில்லை!

   நீக்கு
  2. ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் பாட்டு...

   ஓ படம் கிடைக்காதோ... நைட் தேடிப் பார்க்கிறேன் இங்கு சிலசமயம் கிடைக்கக்கூடும்

   நீக்கு
  3. உங்கள் ஊரில் ஒருவேளை கிடைக்குமோ....

   நீக்கு
  4. நீங்கள் சொல்லி இருக்கும் பாடல் எது என்று புரியவில்லை.//

   அதேதான் ஸ்ரீராம். நான் கூகுளில் அதிரா சொன்ன வார்த்தைகளை வைத்தும் தேடிப் பார்த்தேன் கிடைக்கலை...

   கீதா

   நீக்கு
  5. ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான்//

   இதுவா? காப்பி?

   அதிரா நீங்க முதல்ல கொடுத்தது இது //இதன் கொப்பிதான்.....
   கட்டில் சொந்தம் என்னைக் கை விட்டது...
   தொட்டில் சொந்தம் தொடர்கின்றது.//

   இதைத்தான் தேடினேன் நான்...

   கீதா

   நீக்கு
  6. அதிரா பதில்சொல்லி விட்டாரே கீதா...

   'ஒரு ஜீவன்தான்...'

   நீக்கு
 18. பாட்டு கேட்டுருக்கேன் ஸ்ரீராம்...கேட்ட நினைவு இருக்கு...

  ...நல்லாருக்கு...சோகம்...

  ஆனா கொஞ்சம் டிஸ்டர்பன்ஸ் இருக்கோ...ஏதோ ரேடியோவுல கேக்கறா மாதிரி இருக்கு ஸ்ரீராம்....எனக்கு மட்டும் தான் அப்படியா?!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிஸ்டர்பன்ஸ்?

   எனக்கு அப்படித் தெரியவில்லை கீதா.. எனக்கு அந்தக் காலத்திலிருந்து இந்தப் பாடலும் இதனுடன் "பேசு மனமே பேசு பேதை மனமே பேசு" என்கிற பாடலும் பிடிக்கும். அதாவது ஒரு பாடலை நினைக்கும்போது இன்னொரு பாடல் நினைவுக்கு வரும்... அது போல!

   நீக்கு
 19. அன்பின் ஜி
  தங்களது இடர்கள் விரைவில் நீங்கிட இறைவன் துணையிருப்பானாக!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணைந்து பிரார்த்திப்போம் ஜி.

   நீக்கு
  2. ஆமாம் ஸ்ரீராம் துரை அண்ணாவுக்காக நாம் எல்லோரும் பிரார்த்திப்போம்...பாவம் அண்ணா.....நாளை தலைமை அலுவலகம் போனும்னு சொல்லிருக்காரே...நல்ல முடிவு வரனும் நு நாம் பிரார்த்திப்போம்

   கீதா

   நீக்கு
 20. வணக்கம் சகோதரரே

  எஸ். பி. பியின் குரலில் பாடல் அருமை. இந்த படங்கள் கேள்வி பட்டுள்ளேன். ஆனால் பார்த்ததில்லை. பாட்டு கூட சிலோன் ரேடியோவில் கேட்டதாக ஞாபகம்.
  அப்போது வந்த படங்கள் குடும்ப படங்கள், தெய்வ படங்கள்,எனவே செல்லலாம் என்ற முடிவுக்கு எங்கள் அம்மா வந்த பின்தான், அம்மா, அண்ணாவுடன் சென்று வருவோம். அப்போது தரை கட்டணம் 25 பைசாதான். (நாலணா) பெஞ்ச் டிக்கெட் 50 பைசா (எட்டணா.) சென்னை வந்த பின் 50,100 ரூபாய் என ஒரு சில படங்கள் பார்த்திருப்பினும், குழந்தைகள் பிறந்த பின்பு அதுவும் இயலவில்லை.

  மதுரை திருமங்கலம் வாழ்க்கையில் வீட்டுக்கு அருகிலேயே ஒரு திரையரங்கம். அதில் பெஞ்ச் டிக்கெட் 6 ரூபாய் என்றதும்,(இவ்வளவு கம்மியா இருக்கிறதே என்ற நப்பாசையும் ஒரு காரணம்) சினிமா பார்க்கும் ஆசையில் மாதம் ஒன்றாக அவ்வப்போது சில மாதம் பார்த்து அப்புறம் அதுவும் நின்று போனது. (அப்போது குழந்தைகள் வளர்ந்து விட்ட நிலையில் அவர்கள் படிப்பு பாதிக்காத முறையில், அவர்களுக்கேற்ற படம் எனறு தேர்வு செய்து சென்றோம்.) இப்போது இங்கு வந்த புதிதில் திரைப்படங்களுக்கு குடும்பத்துடன் சென்று வந்தால், 2000, 3000 என ஆயிரக்கணக்கில் செலவாகிறது. எனவே அதுவும் நிறுத்தம்.
  பழைய பாடல்கள் என நீங்கள் வெள்ளிதோறும் பகிரும் போது, கேட்டது, இல்லை, எப்போதாவது படம் பார்த்தே கேட்டது என மலரும் நினைவுகள் வருகின்றன.

  ஏனோ இதையெல்லாம் சொல்லத் தோன்றியது. எழுதிய பின் பதிவுக்கு சம்பந்தம் இல்லேயோ எனவும் தோன்றுகிறது.

  நேற்று இரவு நேற்றைய பதிவுக்கு இதே போல் நீளமான கமெண்ட் ஒன்று எழுதியிருந்தேன். ஆனால், அது போன இடம் இன்னமும் தெரியவில்லை. இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமலாக்கா நீங்க மதுரைலயா அப்ப ஸ்ரீராமுக்கு ஒரே குஷியாகிடுமே!!! ஹா ஹா ஹா..

   வள்ளியூர்ல இருந்தப்ப அதேதான் அக்கா...தரை டிக்கெட் 25 பைசா இருந்த நினைவு...பெஞ்ச் 50 பைசா...தியேட்டர்ல பாட்டு சத்தம் கேட்கும் அப்ப டிக்கெட் கொடுக்கத் தொடங்கியாச்சுன்னு அர்த்தம். வீட்டுக் கொல்லைப்புறத்திலிருந்து ஓடினால் 5 நிமிடம் தான் மெயின்ரோடு க்ராஸ் செய்தால் தியேட்டர்...அப்போது நான் 5 ஆம் வகுப்பு...அந்தத் தியேட்டரில் அத்தை வந்தால் அல்லது உறவினர் வந்தால்தான் சினிமா. இல்லை என்றால் கிடையாது. பார்த்த படங்களும் நினைவில்லை. புதுப்படங்கள் எல்லாம் டக்கென்று வந்துவிடாது...

   அக்கா நேற்றைய பதிவுக்கு இன்று கமென்ட் கொடுத்தால் அது போகும் ஆனால் தளத்தில் வராது ஹா ஹா ஹா கூகுளார் கமென்ட்ஸ் ஓவராகிவிட்டது என்று நினைக்கிறாரா தெரியாலை. ஹா ஹா ஹா ஹா ஹாஅ...ஆனால் ஸ்ரீராம் வாசிக்க முடியும்...நான் இட்ட கமென்ட்ஸும் அப்படித்தான் ஆகிப் போச்சு.

   இப்ப துளசியின் கமென்டைப் போடனும்...அதுவவும் போகும் ஆனா வராது என்ற நிலைதான் என்று நினைக்கிறேன்...

   கீதா

   நீக்கு
  2. @ கமலா ஹரிஹரன், கீதா:

   இப்படி நானும் நேற்றுக் குழம்ப, ஸ்ரீராம் விளக்கினார். அதாவது கமெண்ட் எண்ணிக்கை 200-ஐத் தாண்டிவிட்டால், அது இரண்டாவது பக்கத்தில்தான் காணக்கிடைக்கும் என்பது. சகோ கமலா ஹரிஹரனின் நீண்ட பின்னூட்டம் இரண்டாம் பக்கத்தில் இனிதே அமர்ந்திருக்கிறது!

   நீக்கு
  3. ஆமாம் ஏகாந்தன் அண்ணா ஸ்ரீராம் சொல்லி விளக்கினார். அது சரி அந்த இரண்டாம் பக்கம் எப்படி எங்கே பார்க்கனும்?

   கீதா

   நீக்கு
  4. வணக்கம் சகோதரி

   திருமாணமானவுடன் சென்னை, பின் மதுரை அருகே திருமங்கலத்தில், பத்து, பன்னிரண்டு வருடங்கள் போல வாசம். (என் கணவரின் பணி மாற்றம் காரணமாக, ஊர் மாற்றம்) இப்போது இங்கே.

   நேற்று ஓவராக கமெண்ட்ஸ் பார்த்ததும்தான் அதில் நானும் இணைந்து விடலாம் என்ற ஆசை கொண்டு, ஒரு கருத்து எழுதினேன். ஏதேனும், இணைய பிரச்சனை காரணமாக இருக்குமோ அதை காணவில்லையே.. என இன்று நினைவாக அதையும் கேட்டேன். அடாடா.. தங்களுடையதையும் கூகுளார் தடுத்தாட்கொண்டு விட்டாரா.? ஆகா..அப்படியானால் இது வரும்,வராது கதையா? எப்படியோ சகோ ஸ்ரீராம் அவர்கள் பார்த்து படித்துக் கொண்டால் சரிதான்.

   விடை பகர்ந்தற்கு
   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  5. அன்புடன் சகோதரர் ஏகாந்தன் அவர்கள் கூறிய விபரம் அறிந்தேன். அந்த வழியை சகோதரி கீதா ரெங்கனுடன் நானும் பின் பற்ற விழைகிறேன். நன்றி.

   நீக்கு
  6. @கீதா, கமலா ஹரிஹரன்:

   நேற்றைய பதிவின் கமெண்ட்டுகளின் கீழே, அதாவது ஏஞ்சலின் 'meeee.. 200' பெருமைக்கு(!) கீழே, கமெண்ட் பெட்டிக்கும் கீழே - ‘மேலும் ஏற்றுக’ என்றிருக்கும். அதைக் கிளிக்கினீர்களேயானால், இரண்டாம் பக்கக் கதவு திறக்கும். காட்சியும் கிடைக்கும்!

   நீக்கு
  7. கர்ர்ர்ர் :)) ஹாஹாஹஹா :) 198 வரும்போதே கைகாலெல்லாம் பரபரன்னுச்சி நாமளே 199 அப்புறம் 200 போட்ரலாமான்னு அப்போ பார்த்து பாண்டு அப்பா அதான் மோகன்ஜி சார் வந்து 199 கமெண்ட் போட நான் குஷியில் 200 போட்டேன் :)))

   நீக்கு
  8. வாங்க கமலா அக்கா... திருமங்கலமா? நான் மதுர...

   நமக்கு சிலோன் ரேடியோதான் அப்பல்லாம் தெய்வம்! பல பாடல்கள் நம்மூர் வானொலியில் தடை செய்யப்பட பாடல்கள் உட்பட அங்கு கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.

   தரை டிக்கெட் நான் 15 பைசாவுக்கே தஞ்சாவூரில் சென்றிருக்கிறேன். இன்று பகிர்ந்திருக்கும் பாடல் இடம்பெற படத்தின் இன்னொரு எஸ்பிஐ பி பாடலை அந்த தஞ்சாவூர் ராஜேந்திரா திரையரங்கில் ஸ்பீக்கரில் அடிக்கடி போட்டு ஊருக்கே கேட்க வைப்பார்கள்!

   நான் மதுரையிலிருந்து திருமங்கலம் வழியாகத்தான் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், வைத்திராயிருப்புபோன்ற ஊர்களுக்கு பணிக்கு சென்றிருக்கிறேன். என் தந்தை திருமங்கலத்தில் கொஞ்ச காலம் (அரசுப்) பணிபுரிந்திருக்கிறார்.

   உங்கள் நேற்றைய கமெண்ட் அங்குதான் இருக்கிறது. நேற்றே அதற்கு பதிலும் கொடுத்து விட்டேன்!

   நன்றி அக்கா.

   நீக்கு
  9. //நேற்று ஓவராக கமெண்ட்ஸ் பார்த்ததும்தான்//

   grrrrrrrrrrrr....

   :)))))))

   நீக்கு
  10. என்னாது?ஶ்ரீராம் மதுரையா? அப்போ நாங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நாங்க அங்கேயே பிறந்து வளந்தவளாக்கும். ஶ்ரீராம் மாதிரி ஊருக்கு ஊர் எல்லாம் மாறினது பின்னாடி கல்யாணம் ஆனப்புறமாத் தான்! எங்க ஊரு மதுரைங்க! நீங்கல்லாம் அங்கே வந்தவங்க தான்! ஹிஹிஹி!

   நீக்கு
  11. அட.. எங்க ஊர்க் காரங்கன்னு (நெல்லை, கமலா ஹரிஹரன் அவர்கள்) நினைத்து பாசம் காண்பிக்கலாம்னு நினைத்தா, நீங்க மதுரையா? இப்படித்தான் எங்க ஊர்க்காரங்க என்று நினைக்கும் வல்லிம்மா, கீதா ரங்கன் இவங்கள்லாம், ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு ஊராச் சொல்லிடறாங்க. ஹா ஹா ஹா.

   நீக்கு
  12. @கீதா சாம்பசிவம் மேடம் - //எங்க ஊரு மதுரைங்க!// - இதோ பாருங்க... எங்க ஊர் நெல்லை அருமையான ஊர் என்பதால் நான் அங்க செட்டில் ஆகப்போகிறேன். ஆனா பாருங்க... மதுரையை ஆஹா ஓஹோ என்று சொல்கிற யாரும் அங்க செட்டில் ஆனதாத் தெரியலை. எல்லாரும் வைணவர்களாயிடறாங்க (ஒண்ணு ரங்கநாதன் இல்லைனா அனுமார்). ஹா ஹா ஹா

   நீக்கு
  13. நான் தான் அன்னிக்கும்,இன்னிக்கும், என்னிக்கும் மதுரை! புரிஞ்சுக்கோங்க! ))))))

   நீக்கு
  14. // என்னாது?ஶ்ரீராம் மதுரையா? அப்போ நாங்க?//

   அட ஒரு ஊரை சொல்ல விடமாட்டேங்கறாங்களே..... நான் மதுரையும்தான் கீதா அக்கா..

   நீக்கு
  15. மத்தியில் இருக்கு இல்லையா? இங்கே இருந்து எல்லா ஊருக்கும் போக வசதி! அதான் இங்கே செட்டில் ஆனோம். அதனால் என்ன? மீனாக்ஷியின் அண்ணன் ஊர் தானே!

   நீக்கு
  16. ஆஆவ்வ்வ்வ்வ் சென்னையில் இருந்தால் ஜிந்திக்க வராது எனச் சொன்னதும் டக்குப் பக்கென மதுரைக்கு தாவிட்டாரே ஶ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்:) விடமாட்டேன்ன்ன் எனக்கு இப்பவே ஆதார் கார்ட் காட்டோணும்:)

   நீக்கு
  17. கீசா மேடம்... கோச்சுக்காதீங்க. நீங்க மதுரைல இருந்திருந்தீங்கன்னா நான் எப்படி உங்களை பார்த்திருப்பேன். ஸ்ரீரங்கம் அருமையான ஊர், அதைவிட நீங்கள் இருக்கும் இடம் அருமையான இடம்.

   அப்புறம், 'நீங்கதான் மதுரை' என்று எனக்குத் தெரியுமே.... மாமாதான் பாவம்......

   நீக்கு
  18. //அப்புறம், 'நீங்கதான் மதுரை' என்று எனக்குத் தெரியுமே.... மாமாதான் பாவம்......//

   நினைத்தேன்... இப்படியொரு கமெண்ட் வருமென..

   நீக்கு
  19. கீதாக்கா ஸாரி ஸாரி ஆமாம் ல உங்களைத்தான் சொல்லிருக்கனும்...கரீக்டு ஆனா பாருங்க கீதாக்கா அப்படினாலே ஸ்ரீரங்கம், சின்ன ரங்கு பெரிய ரங்கு ஆண்டாள் இதெல்லாம் நினைவுக்கு வந்துருதே!! என்ன செய்ய...ஸ்ரீராம் தான் மதுரை பத்தி பெரும பேரிப்பாரா அப்பப்ப அதான் ஹிஹிஹி...சரி சரி இனி உங்களைச் சொல்லிப்புடுறோம்....

   கீதா

   நீக்கு
  20. நெல்லை கமலாக்காவும் நெல்லைதான்...குடும்பக் கடவுள் கூட அந்தூர்தானே சொன்னாங்க....

   நெல்லைனு பெயர்ல சும்மானாலும் போட்டுட்டு பஹ்ரைன் ல எல்லாம் இருந்தவங்கதான் என்னையும் வல்லிம்மாவையும் ஒவ்வொரு தடவையும் ஒரு ஊர் சொல்லறோம்ம்னு மாட்டுறது ஹா ஹா ஹா ஹா ஹா,...

   கீதா

   நீக்கு
 21. ஸ்ரீராம்ஜி இந்தப் பாடலை நிறைய கேட்டதுண்டு. படம் தான் பார்த்ததில்லை.

  நல்ல பாடல்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துளஸிஜி... நானும் படம் பார்த்ததில்லை. படம்லாம் ஏன் பார்க்க வேண்டும்? பாடலை ரசித்தால் போதும் என்பது என் கருத்து! நன்றி ஜி.

   நீக்கு
 22. காலைல வந்து பார்த்திட்டு போய்ட்டேன் :) இன்னும் பாட்டை கேட்கலை கேட்டுட்டு சொல்றேன் அதுக்கு முன்னாடி ஸ்ரீராமுக்கு ஒரு குட்டி கதை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சல்... இன்னுமா பாட்டு கேட்கவில்லை? அச்சச்சோ... குட்டிக்கதை எங்கே?

   நீக்கு
 23. ஒரு ஊர்ல ஒரு காகம் புறா பூனை சுண்டெலி அப்புறம் ஒரு பைரவர் எல்லாம் ப்ரண்ட்ஸாம் :)

  எல்லாரும் ஒரே வீட்டில் வெவ்வேறு ரூமில் இருக்காங்க ஹாலில் மட்டும் மெய்ன் ஏரியா எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கும்மி அடிக்கிற இடத்தில ஒரு நாள் ஒரு பெர்த்டே கேக் இருந்ததாமுடனே புறா காக்கா பைரவர் எல்லாம் விசிட்டர்ஸ் புக்கில் சைன் வச்சிட்டாங்க ..சுண்டெலி சைன் வைக்கலை :) கொஞ்சம் லேட்டா பூனை வந்து பார்த்தது என்னடா நாமும் சைன் வச்சிடுவோம்னு பார்த்தா அங்கே சுண்டெலி வந்த அடையாளம் காணோம்னதும் பூனை அலெர்ட் ஆகி போய்டுச்சாம் :)))))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அல்லோஓஓ மிஸ்டர் இது எங்கயோ நடந்த உண்மைக் கதைபோல இருக்கே:)... இதில காக்கா ஆரூஊஊஉ?:)...

   நீக்கு
  2. குட்டிக்கதை அபுரி ஏஞ்சல்...! பூனை ஏன் அலெர்ட் ஆச்சு? சுண்டெலி ஏன் சைன் வைக்கலை? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்திருந்தும் நீங்கள் பதில் சொல்லா விட்டால்...

   நீக்கு
  3. ஹா ஹா ஹா ஶ்ரீராம் ஶ்ரீராம்ம்ம்ம்:)

   நீக்கு
  4. சுண்டெலிக்கு வல்லாரை ஜூஸ் எபெக்ட் :) அதுக்கு தெரியும் அது அவங்க வீட்டு பெர்த்டே கேக் இல்லைன்னு :) அமேசான் அட்ரஸ் மாறி டெலிவரி குடுத்து ..

   நீக்கு
  5. அப்போ காக்காவும் சைன் பண்ணினதோ அஞ்சு:)... ஆஆஆவ்வ்வ்வ் மீ ரன்னிங்:)

   நீக்கு
  6. இலேசாகப் புரிகிற மாதிரி இருக்கோ என்று சொல்லலாமோ என்று தோன்றுவதாக நினைக்கத் தோன்றுகிறது.

   நீக்கு
  7. பூனை எப்பவும் முதலில் சுண்டெலி வந்துச்சா என்ன செஞ்சுச்சுனு செக் செக் செக் பண்ணும் :) அதுக்கு ஆச்சர்யம் சுண்டெலி சைலண்டா இருக்கேன்னு :) பூனைக்கு தண்ணி வழுக்கி விழுந்தாலும் சுண்டெலி கையை டைட்டா கட்டி புடிச்சிட்டே விழணும்னு ஆசை அதான் சைன் வைக்கலை

   நீக்கு
  8. //இலேசாகப் புரிகிற மாதிரி இருக்கோ என்று சொல்லலாமோ என்று தோன்றுவதாக நினைக்கத் தோன்றுகிறது.//

   haahaaa

   நீக்கு
  9. ஏஞ்சல் கதைய படிச்சு ஹையொ உருண்டு உருண்டு சிரிக்கிறேன்....

   ஸ்ரீராம் என்ன அபுரி!!! இது கோமதிக்காவுக்கு பர்த்டே விஷ் வைச்சது...கரீக்டா ஏஞ்சல்!!! ஹையோ ஹையோ...பூஸார் எங்கே சுண்டெலிக்குத்தான் அசாத்திய மெமரின்னு நான் சொன்னா பூஸாருக்குப் புகையாம போகுமா என்ன.....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நு ஓடி வருவாங்க...

   ஆமாம் ஆமாம் சுண்டெலி என்ன பண்ணுதுனு வேவு பார்த்துட்டுத்தான் பூசார் வேலைய காட்டுவாரு இல்லேனா பம்மிடுவார்...ஹா அஹ ஹா

   கீதா

   நீக்கு
  10. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பாபகியூ போடத்தான் தேடுவேன்:))

   நீக்கு
 24. ஶ்ரீராமுக்கு சொல்ல தெரியுதில்ல:)... கொமெண்ட்ஸ் 200 ஐத் தாண்டிட்டால் புது பேஜ் ஓபின் ஆகும், அப்போ கீழே போய் அதை ஓபின் பண்ணியே படிக்கோணும்... இல்லை எனில் கொமெண்ட்டைக் காணமே பூஸ் தூக்கிப்போயிட்டுதோ என தேட வேண்டிவரும்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான் நானும் சொன்னேன்... பூன்னு சொன்னாலும் புய்ப்பம்னு சொன்னாலும் நீங்கள் சொல்ற மாதிரி சொன்னாலும்....!!!!!

   நீக்கு
  2. அதில்ல ஸ்ரீராம், நீங்கள் குடுத்த புய்ப்பத்தைக்கூட:) 200 க்குப் பின் தானே குடுத்தீங்க..:)[அதுவும் போய் ஒளிச்சிருக்குமெல்லோ:)] இ மெயில் சப்ஸ்கிரைப் பண்ணாதோர் எப்பூடிக் கண்டு பிடிப்பார்கள்.. அதனால இன்று சொல்லியிருந்தால்தான் அதாவது 200 கொமெண்ட்ஸ் ஐ அடையமுன்.. தெரியவரும் எல்லோருக்கும் எனச் சொன்னேன்:))

   நீக்கு
 25. அன்பு துரை செல்வராஜு, நான் பார்க்கும்போது நீங்கள் நல்லதொரு தீர்வு கண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
  எல்லாவற்றையும் இறைவன் பார்த்து தீர்மானிப்பான். நல்லது நடக்க எங்கள்
  பிரார்த்தனைகள். மனம் மிக வருந்தவேண்டாம்.

  எனக்கும் எல்லா சினிமாப்பாடல்களிலும் ஸ்ரீராம் சொல்வது போல நம்பிக்கை உண்டு. அவரவர் படும் சிரமம் தானே பாட்டாகவோ கதையாகவோ வருகிறது.
  அதுவும் கண்ண்ணதாசன் வரிகள் வலிமையானவை. தர்மம் தலை காக்கும் என்பதில் ஐயமே இல்லை. மனம் தளராமல் இருங்கள். அடுத்து பிரச்சினை தீர்ந்தது என்று சீக்கிரமே
  எழுத வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் வல்லிம்மா... நல்லதே நடக்க சேர்ந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 26. அன்பு கமலா ஹரிஹரன், திருமங்கலம் என்றதும் வரும் நினைவலைகளுக்குக் குறைவே. இல்லை. மிக சந்தோஷம். நாங்கள் இருக்கும் போது ஒரு டெண்ட் கொட்டகையும், ஆனந்தா என்று ஒரு தியேட்டரும் இருந்தது.
  தரை டிக்கெட் நாலணா. நாற்காலி பத்தணா.
  நீங்கள் எப்போது அங்கே இருந்தீர்கள் என்று தெரியவில்லை.
  நலமே வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் வல்லிம்மா... நீங்களும் திருமங்கலம் - பசுமலை வாசியாச்சே... மறந்தே போய்விட்டேனே... இனிய நினைவுகள்.

   நீக்கு
  2. சகோதரி வல்லிம்மாவுக்கு வணக்கம்.

   நீங்களும் திருமங்கலத்தில் இருந்துள்ளீர்கள் என்பதறிந்து சந்தோஷம் அடைந்தேன். நீங்கள் எங்கு தங்கியிருந்தீர்கள்? அங்கு நாங்கள் இரண்டு இடங்களில் குடியிருந்தோம். முதலில் இருந்த வீட்டிற்கு அருகில்தான் பானு தியேட்டரும் இருந்தது. அங்கும் மீனாட்சி அம்மன் கோவிலொன்று உண்டு. ஆனந்தாவில் ஒரிரு படங்கள் பார்த்துள்ளோம். 2007ல் இங்கு வந்தாகி விட்டது. பழைய நினைவுகளை மீட்டமைக்கு நன்றிகள்.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 27. ரங்க ராட்டினம் படம் கேள்விப்பட்டிருக்கேன். பாடலை இப்பதான் கேக்குறேன்

  பதிலளிநீக்கு
 28. பாட்டு கேட்டாச்சு .சினிமா எப்படி இருக்கும்னு யூ டியூபில் தேடினேன் கிடைக்கலை .
  இந்த பாடல் 1971 ல பாடியிருக்கார் எஸ் பி பி ஆனா அதே நேரம் வந்த பாட்டுகள் குரலை விட இதில் முதிர்ச்சி இருக்கு .ஒரு வேலை சோக பாட்டு என்பதாலா ?

  பதிலளிநீக்கு
 29. துரை சாரின் பிரச்சனைகள் சமுகமாக தீர கடவுளை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 30. மன்னிக்கவும், துரை சாரின் பிரச்சனைகள் சுமுகமாக தீர கடவுளை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 31. ஹலோவ்வ்வ் நட்புக்கள் எல்லாரும் என்னை வாழ்த்தி கிச்சனுக்கு அனுப்பி வைங்க :)))))))))
  நான் மிக்ஸர் கேக் அச்சப்பம் ,அதிராவின் சீனி அரிஅறிஇஇஇஇஇஇஇ தரம் இதெல்லாம் செய்ய ---போறேன் பை பை :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகள் ஏஞ்சலின்.

   எல்லோருக்கும் (அங்க இருக்கறவங்க) சொல்லிடுங்க. திடுமென போலீஸ் வந்தால், நீங்க ஏதோ வெடிகுண்டு (பண்ணும் அப்பம் கருகிப்போவதால்) தயாரிக்கிறீங்கன்னு நினைக்கக்கூடாது.. (உடனே சீனி அரியதரமே வெடிகுண்டு மாதிரிதான்னு சொல்லி எனக்கும் அதிராவுக்கும் சண்டை மூட்டிவிடாதீங்க).

   ஏஞ்சலின், 'போறேன்'னு சொல்லாதீங்க. 'போயிட்டு வர்றேன்'னு சொல்லுங்க. ரொம்பக் கவலையா இருக்கு. ரொம்ப வருஷமாத் திறக்காத கிச்சனைத் திறக்கறீங்க. ஒருவேளை, பூங்கா பெஞ்சில் ஓய்வெடுத்தவைகள், இப்போ கிச்சனில் ரெஸ்ட் எடுக்க வந்திருந்தால்?

   நீக்கு
  2. thanks thanks :)))))))) poittu vareeeen :)

   bye for now .

   நீக்கு
  3. சீனி அரியதரம் எல்லாம் அதற்குள் செய்த் விடுவீர்களா? நாளை மருநாள்தானே கிறிஸ்துமஸ்?

   நீக்கு
  4. ஏஞ்சலின் வாழ்த்துகள்!! சீனி அரியதரம் செய்யறேன்னு அரிதாரம் பூசிக்கிட்டு எங்க்ளை பயமுறுத்திடாதீங்க் ஏஞ்சல்!! அப்புறம் ஜெஸியும் மல்டியும் பயந்துடப் போறாங்க....

   ஏஞ்சல் போய் வெற்றியோடு திரும்பி வாருங்க....தேவதை கிச்சன்ல எல்லாம் வரும்ன்னு நினைச்சு காத்திட்டுருக்கோம் மொசுக்கீட்டர்ஸ்!!!!

   மெரி கிறிஸ்துமஸ் வருது...அட்வான்ஸ் வாழ்த்துகள்!

   கீதா

   நீக்கு
  5. //ரொம்பக் கவலையா இருக்கு. ரொம்ப வருஷமாத் திறக்காத கிச்சனைத் திறக்கறீங்க. ஒருவேளை, பூங்கா பெஞ்சில் ஓய்வெடுத்தவைகள், இப்போ கிச்சனில் ரெஸ்ட் எடுக்க வந்திருந்தால்?///

   ஹா ஹா ஹா:)).. டேவடைக் கிச்சினைத் திறக்க விடாமல் ஜதி செய்வதே நெல்லைத்தமிழனுக்கு வேலையாப் போச்ச்ச்ச்:):))..

   அது வெயிட் பண்ணிப் பாருங்கோ.. நல்லா வந்தால் கிச்சின் திறக்கப்படும், இல்லை எனில் நான் எதுவும் செய்யல்லியே.. எனக்கு அலர்ஜி ஆகிட்டுது எனச் சொல்லிக் கிச்சினை மூடிப்போடுவா ஹா ஹா ஹா:))

   நீக்கு
 32. சகோ துரை செல்வராஜூ அவர்கள் சொன்னதை படித்து மனம் வேதனை பட்டது.
  மனதை தளர விடாதீர்கள். தைரியமாக இருங்கள் இறையருள் காக்கும் உங்களை.

  நாளை பொழுது நல்ல பொழுதாக அமைய இறைவனை வேண்டுகிறேன் .

  பதிலளிநீக்கு
 33. ஏகாந்தன் அண்ணா தாங்க்யூ அண்ணா பார்த்துடறேன்....

  ஹையோ இது எத்தனாவது கமென்ட்...இது போகனும் சாமியோவ்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 34. நெல்லைத் தமிழன் சகோதரருக்கு,

  நான் பிறந்து வளர்ந்தது நெல்லைதான். பிறகு சென்னை, திருமங்கலம் என கணவரின் வேலை மாற்றல் நிமித்தம் மாறி மாறி குழந்தைகள் படித்ததும் அவர்கள் வேலைக்காக, இங்கு பெங்களுர் வந்தாகி விட்டது. தாங்கள் பணி முடிந்ததும் நெல்லையில் செட்டில் ஆகப்போவதாக கூறுவதற்கு வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும், சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க நேர்ந்தால், எந்த ஊரும் நம் சொந்த ஊரே அல்லவா? தங்களுக்கு தெரியாததையா நான் கூறப் போகிறேன். ஒரே ஊர் என பாசத்துடன் நினைப்பதற்கு மிக மிக நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 35. சகோதரர் ஏகாந்தன் அவர்களுக்கு மிகவும் நன்றிகள். தங்கள் சொல்படி இரண்டாம் பக்கம் சென்று அங்குள்ள கமெண்ட் அத்தனையும் படித்து வந்தேன். ஸ்ரீராம் சகோதரருக்கும் நன்றிகள்.

  அடாடா.. இது எத்தனையாவது பின்னூட்டம் என்று பார்க்காமலே நான் அர்த்த ராத்திரியில் (எனக்கு இப்போதுதான் என் டைம்) அமர்ந்து கமெண்ட்ஸ் அடித்துக் கொண்டிருக்கிறேன். சகோதரி கீதா ரங்கனின் டவுட் எனக்குள்ளும் எழுகிறது.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 36. இனிய குரலில் கேட்டேன் அருமை வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!