திங்கள், 10 டிசம்பர், 2018

"திங்க"க்கிழமை : கோஸ் உப்புமா - புவனா குமார் ரெஸிப்பிஎன்ன பேரு வைக்கலாம் ... எப்படி..அதை செய்யலாம்.

உப்புமா என்றால் ஓடுகிறவர்கள்  உசிலி என்க! 


அரிசி பருப்பு போட்டு செய்யும் உசிலியை சற்று வித்யாசமாக செய்யும் கர்னாடக சமையல் பாணியில்  படக்கதையாகவே வருவதால் தனியாக செய்முறை என்று எழுதவில்லை.

படங்களைக் கடைசிவரை பார்த்துப் பின் சமைத்து சுவைக்கலாம்  


தாளிப்புக்கு கடுகு உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை  என்று சொல்லவும் வேண்டுமா ?


கடலை பருப்பு  100 கி
தனியா (மல்லி) 100 கி
 துவரம் பருப்பு 100 கி மிளகாய் வற்றல் 15...20புழுங்கலரிசி  250 கி புழுங்கல் அரிசி, பருப்பு, மல்லி எல்லாவற்றையும் நீரில் ஊற விடுங்கள் 2.. 3 மணி நேரம்.
மிக்ஸியில் அரைத்து எடுக்கும் முன் மிளகாயையும்  சேர்த்து அரைக்கவும்
கோஸ் 500 கி  நறுக்கும் முன் & நறுக்கிய  பின் நரம்பு நீக்கிப் பொடியாக ....


மேலே  அரைத்த மாவு  கோசுடன் கூடி உப்பு சேர்த்து இட்லியாக வேகிறது

பெரிய வெங்காயம் 4 கூடிய வரை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
வாணலியில் தாளிக்க எண்ணெய்தாளித்த எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி..கறிவேப்பிலையையும் சேர்த்து....வேகவைத்த இட்லிக்களை உதிர்த்து வாணலியில் சேர்க்கும்போது கொஞ்சம் மஞ்சள் பொடி +++..கோஸ் உப்புமா  சிறிது பழுப்பு நிறம் வரும் வரை .... வதக்கிசாப்பிட தயார்கொஞ்சம் (கொஞ்சம் என்ன..நிறையவே ) கிட்டப் போய் ஒரு பார்வை பார்த்துடுவோமே

47 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம், ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா, நெல்லை அப்பால வரும் அனைவருக்கும்..

  வல்லிம்மாவுக்கு மாலை வணக்கம்…

  கீதா

  பதிலளிநீக்கு
 2. எத்தனை படங்கள்? எனக்கு இத்தனை படங்கள் சேர்த்தால் அப்லோட் ஆவதில்லை!

  பதிலளிநீக்கு
 3. அட! இன்னிக்கு மீ த ஃபர்ஷ்ட்ட்ட்டு?

  பதிலளிநீக்கு
 4. தளம் உடனே வந்து ஓபன் செஞ்சா இன்னிக்கு எபி ஸ்க்றோல் செஞ்சு கீழ வரதுக்குள்ள லேட்டாகிடுச்சு..ஹா ஹா ஹா

  இப்ப மீண்டும் வெங்கட்ஜி தளம், துரை அண்ணா தளம் முழுவதும் வர ரொம்ப லேட்டாகுது..

  கீதா

  பதிலளிநீக்கு
 5. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா ... எல்லாரும் முன்னாடியே வந்துட்டீங்க...

  ஆனாலும் உசிலி என்கிற உப்புமா... தான் இன்றைக்கு அருளப்பட்டுள்ளது!...

  ஆனாலும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
  2. வரவேற்ற வரவேற்கப் போகும் அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கம்.

   நீக்கு
 6. அது என்ன உருண்டையாக் கறுப்பாக? மிளகு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடுகைப் பார்த்து மிளகு என்று சொன்ன தானைத் தலைவி சமையல் வித்தகி கீதா சாம்பசிவம் மேடம் வாழ்க. அயர்ன் பண்ணின மாதிரி இருக்கும் மேல்புறத்தைப் பார்த்தும் சந்தேகமா?

   நீக்கு
 7. புதிதாக இருக்கிறது. கோஸ் சாதம் செய்வதுண்டு. இந்த முறையில் செய்து பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், வித்தியாசமாக... விதம் விதமாக முயற்சிப்பதில்லை அவர் வல்லவர்!

   நீக்கு
 8. உ @ உப்புமாவை இங்கே!..

  அவரவர் வீட்டில் காஃபி!..

  பதிலளிநீக்கு
 9. ம்ம்ம்ம்ம் இதை ஆவியில் வேக வைக்காமலும் செய்யலாம் நு நினைக்கிறேன். ஆனாலும் நம்ம வீட்டில் போணி ஆகுமா? சந்தேகமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 10. உ @ உப்புமா கிளறிய
  மர்மயோகி யாருன்னு தெரியலை!...

  பதிலளிநீக்கு
 11. தளத்திலிருந்து வெளியேறாமல் அடுத்தடுத்து கருத்துரை செய்வதால் வெளியாகும் வேறு கருத்துரைகளைக் காண முடிவதில்லை...

  திரு.KGS அவர்களின் மருமகளுக்கு நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 12. கேஜிஎஸ் மருமகளுக்கு மனம் நிறை வாழ்த்துகள். சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
  இட்லி வேகவைக்கும் படம் தான் சரியாகத் தெரியவில்லை.
  மற்றபடி வெகு ஜோர்.

  பெரிய கீதா, கீத பாப்பா, துரை, ஸ்ரீராம் எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா... கீதா ரங்கனை பாப்பா என்றால் அவங்க தம்பி என்னை எப்படிச் சொல்வீர்கள்?

   நீக்கு
  2. அம்மா சூப்பர் சூப்பர் மீ பாப்பா தங்க்யூஉ தன்ங்க்யூ!! ஆமாம் அம்மாக்கு எத்தனை வயசானாலும் குழந்தை பாப்பா தானே (என் மகன் டயலாக் இது!!ஹிஹிஹி) அங்க பாருங்க யாருக்கோ புகை வருது !வரட்டும் வரட்டும்... ஹா ஹா ஹா ஹா ஹா

   அது சரி கீதாக்கா ஒன்னும் சொல்லாம போயிட்டாங்களே நீங்க பெரிய கீதான்னு சொன்னதுக்கு...ஹையோ இப்ப ஒரே கன்ஃப்யூஷன்.....பெரிய கீதா நானா? ஏன்னா கீதாக்கா இப்பத்தானே பொறந்துருக்காங்க...ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ நெல்லை சரியா கவனிக்கலை அதான் புகை வந்துருக்கு ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 13. கோஸ் உப்புமா என்றதும் ரவா கோஸ் உப்புமாவா, போணியாகாதே என்று நினைத்தால் கிட்டத்தட்ட அரிச உப்புமாவில் கோஸ். மல்லி விரை சேர்ப்பது புதுசு. வெங்காயம் போடாமலும் செய்யலாம்னு நினைக்கிறேன்.

  வித்தியாசமான குறிப்புக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 14. என் மாமியார் கல்யாணம் ஆன புதிதில் இங்கு பங்களூரில்தான் இருந்தாராம்..இத்தனைக்கும் எல்லாரும் தஞ்சாவூர் பக்கம் தான் என்றாலும் பங்களூரில் வாசமாம். அப்படி அவரது சமையலில் பல பங்களூர்/கர்நாடகா ரெசிப்பிஸ் இருக்கும் என்பதால் அவரிடமிருந்து இதை தெரிந்து கொண்டேன் ஆனால் மாமியார் வெங்காயம் சேர்க்காம செய்வாங்க.

  இனி வெங்காயம் சேர்த்து செஞ்சு பார்த்துடறேன் உங்க ரெசிப்பி ரொம்பவே நல்லாருக்கு...மாமியார் அரிசியும் கொஞ்சம் குறைவா சேர்ப்பாங்க....பச்சரிசி சேர்த்தும் செய்யலாம்னு சொல்லுவாங்க. எங்க வீட்டுல பிடிக்கும். இதை தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார் என் அப்பா, நான், மகன். டிஃபனுக்குச் செஞ்சா தேங்காய் சட்னி தொட்டுக் கொள்ள...

  இதுக்கு பெயர் எங்க மாமியார் சொல்வது கோஸ் இட்லி உசிலி என்று...

  உங்க அளவையும் குறித்துக் கொண்டாச்சு ஸ்ரீராம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 15. ஓ சாரி ஸ்ரீராம் தலைப்பு பார்க்காம திங்க பதிவை பார்த்து படம் பார்த்ததுட்டு போய்ட்டே இருந்தேனா யார்னு பார்க்கவே இல்லை...புவனா அவர்கள் யார்? மிக்க நன்றி அவர்களுக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 16. ஓ கேஜி எஸ் அவர்களின் மருமகளா!! வாவ்!! நம்ம கேஸு போல...இப்படி விதம் விதமா சமைக்கறதுல ஹா ஹா ஹா ஹா

  என் மாமியார் கொத்தமல்லிவிரையை ஊற வைக்காமல் வாணலியில் கொஞ்சமாக வறுத்து அதாவது சூடு , லைட்டா மணம் வரும் வரை வறுத்துவிட்டு பொடி பண்ணி வதக்கும் போது போட்டுருவாங்க. அப்படியேதான் நானும் செய்வது. அப்புறம் இப்படி வேக வைக்க மாட்டார் தனியாக அரைத்ததை உதிர்க்கும் போது பொடி சேர்த்து வதக்கிட்டு வேக வைத்த கோஸை போட்டுக் கலப்பார். நான் எண்ணெய் அதிகம் வேண்டாம் என்று சொல்பவர்களுக்காக இப்படி வேகவைத்தும் செய்ததுண்டு...கொஞ்ச நாளாகிடுச்சு செஞ்சு. இப்ப இதைப் பார்த்ததும் ஆஹா உறவினர் வந்துருககங்க செஞ்சுப்புடுவோம்னு முடிவு செஞ்சாச்சு...

  கீதா

  பதிலளிநீக்கு
 17. இனிமே தலைப்பும் பார்த்து யார் கொடுத்துருக்காங்கன்னு பார்க்கனும்...ஸ்க்றோல் ஆகவே டைம் எடுக்குது படங்கள் மட்டும் வந்துச்சு முதல்ல...எழுத்துகள் இல்லாம...என்னடா இது ரெசிப்பி இல்லையா வெறும் படமோன்னு நினைச்சுட்டேன்...ஹா ஹஹா ஹா ...அப்புறம் வெயிட் பண்ணி வந்தாதான் தெரியுது விஷயமே..

  கீதா

  பதிலளிநீக்கு
 18. உசிலி உப்புமா செய்முறை எளிதாகவும் இது வரை அறிந்திராத ஒன்றாகவும் இருக்கிறது நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்திட வேண்டியதுதான்....புதிய ரிசிப்பி போட்ட திருமதி.புவனா குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 19. ஒவ்வொன்றாக படம் எடுத்த பொறுமைக்கு வாழ்த்துகள்...! பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 20. சொல்லிய விதம் அருமை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 22. புவனாகுமார் யார் அவர்களின் கோஸ் உப்புமா நன்றாக இருக்கிறது?

  பதிலளிநீக்கு
 23. அரிசி, துவரம்பருப்பு சேர்த்து அரைத்து ஆவியில் வேக வைத்து உப்புமா கிண்டுவோம். அது கார உக்கரை என்று பெயர். அரிசி மிளகாய் வற்றல், பெருங்காயம், தேங்காய் பூ தேவையான சாமான்.

  பதிலளிநீக்கு
 24. கேஜி எஸ் அவர்களின் மருமகளா!//

  வாழ்த்துக்கள். மல்லி சேர்ப்பதால் சுவையுடன் இருக்கும் என்று நினைக்கிறேன்.
  செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 25. ஒரு புதிய செய்முறை அருமையாக இருக்கிறது ...

  பதிலளிநீக்கு
 26. கர்நாடகா பக்கம் முட்டைகோஸ் சாதம் செய்வார்கள் நன்றாக இருக்கும்.
  இதே பக்குவத்தில் சாதமும் செய்யலாம் என்று நினைக்கிறேன்.
  மல்லி, மிளகாய் வற்றலுடன் கடலைப்பருப்பை வறுத்து பொடி செய்து போட்டு செய்யலாம்.

  தேங்காய் துறுவல், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து அரைத்து முட்டைகோஸ் வெந்தவுடன் போட்டு கிளறி நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு முட்டைகோஸ் சாதம் செய்வோம். எலுமிச்சை சாறு இறக்கியவுடன் சேர்த்து மல்லி தளையும் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 27. உசிலி.....இப்போதுதான் முதன்முதலாக அறிகிறேன்.

  பதிலளிநீக்கு
 28. நடுவுல கொஞ்சம் படத்தை காணோமே என்று நினைத்தேன். மீண்டும் பார்த்த பொழுதுதான் தெரிந்தது. வேக வைத்த படத்தை கவனிக்கவில்லை. புது ரெசிபி. நன்றாக இருக்கும் போலத்தான் இருக்கிறது. செய்து பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 29. பேரா நமக்கு முக்கியம்?! வாய்க்கு ருசியா தட்டுக்கு வந்தால் போதும்.

  பதிலளிநீக்கு
 30. இது புதுசு எனக்கு!! வரவேற்கிறேன்... வாழ்த்துகள். கட்டாயமாக செய்து பார்க்கிறேன். இது போன்ற வித்யாசமான ரெசிப்பிகளை நிறைய எதிர்பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!