செவ்வாய், 18 டிசம்பர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : இயற்கை வலியது - கீதா ரெங்கன்இயற்கை வலியது
கீதா ரெங்கன் 


அந்த அமெரிக்கப் பல்கலைக் கழகம் பரபரப்பாக இருந்தது. ரோபோட்டிக்ஸ், ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் ஆராய்ச்சிகளில் உலகையே வியப்புடன் திரும்பிப் பார்க்கவைக்கும் அப்பல்கலைக்கழகம் தற்போது உச்சத்தை நெருங்கும் கண்டுபிடிப்பை உலகிற்கு அறிமுகப்படுத்துவதால் அந்தப் பரபரப்பு.

பன்னாட்டு ஊடகங்கள், வல்லுநர்கள் பலரும் குவிந்திருந்தனர். பின்னே! இக்கண்டுபிடிப்பின் காரணகர்த்தா ஓர் இந்தியன், தமிழன் ஆயிற்றே! வாயைப் பிளக்கவைத்து புருவத்தை உயர்த்த வைத்திருந்தது! 

அதனாலேயே, அவன் அப்படி என்ன கண்டு பிடித்துவிட்டான் என்று அபத்தமாகச் சில கேள்விகள் கேட்பதற்கென்றே சிலர் வந்திருக்கவும் கூடும். 

கர்த்தாவின் பெயர் கீர்த்திவாசன்! மேடை ஏற இன்னும் சரியாக 10 நிமிடங்கள் 30 நொடிகள் 5 வினாடிகள் இருந்ததால் அவனைப் பற்றிய குறிப்பு வெர்ச்சுவலாக உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் உட்பட வெற்று வெளியில் ஓடத் தொடங்கியது.

சிறு வயதிலேயே ரோபோட்டிக்ஸ், ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் என்று பேசியவர். 15 வயதிலேயே மேதை எனப் புகழ்பெற்றவர். இந்தப் பல்கலைக்கழகம் அவரை தத்தெடுத்துக் கொள்ள, பல வியத்தகு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இதோ இப்போது உலகமே வியந்து நிற்கும் ஐனோவை உருவாக்கியிருப்பவர். இன்னும் சற்று நேரத்தில் அவரே உங்கள் முன் தோன்றி தன் கண்டுபிடிப்பைப் பற்றி பேசுவார்.

“அவனும் வெர்ச்சுவலாவே வருவானோ”
“வந்தாலும் வருவான். மாயாஜாலம்”

அது இருக்கட்டும். நாம் கொஞ்சம் வம்பு பேசுவோம். மச்சக்காரன்! பெயருக்கு ஏற்றபடி புகழ் அவனிடம் வாசம்! தன்னுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கிருத்திகாவை உணர்வுபூர்வமாகக் காதலித்தானோ இல்லையோ (ஆர்ட்டிஃபிசியல்) இன்டெலிஜன்ஸ் வழி காதலித்து, “பாரு! கிருத்திகாவுக்கு அடிச்சுருக்கற யோகத்தை! லோகமே கொண்டாடற சயண்டிஸ்டோட அகமுடையாள்” என்று வாலிபிகளும், கிழவிகளும் கூடப் பெருமூச்சுடனான பொறாமையை கண்களின் மூலம் வெர்ச்சுவலாய்[ பரிமாறிக் கொள்ள, மூன்று வருடங்களுக்கு முன் மனைவியாக்கிக் கொண்டவன். ஹைடெக் கண்திருஷ்டி!? சுற்றிப் போடல் கூட வெர்ச்சுவலோ?! உலக ப் புகழ் விஞ்ஞானியின் மனைவி என்பதால், கிபி3500 வரை புக் ஆகியிருக்கும் பழனி முருகனின் அப்பாயின்ட்மென்ட் உடனே கிடைத்துவிட்டது.

தற்போது அவளது கர்ப்பகாலம் முடியும் தருவாய் என்பதால் கலந்துகொள்ள வில்லை. ஹைடெக்மனித ரோபோக்கள் (கீர்த்தி மன்னிக்கவும்) படைக்கப்பட்டாலும் மனிதக் குழந்தை உருவாவதற்கு அதே 10 மாதக்கணக்குதான். அதுதான் இயற்கை! கருவிலிருக்கும் போதே கிர்ஸ்ப்ர் அறிவியல் நுட்பத்தின் மூலம் ஜீன் எடிட் செய்து அனைத்துச் சோதனைகளும் சக்ஸஸ். மற்றொரு பிறவி மேதையை எதிர்பார்த்து டென்ஷன். ஒரே ஒரு குறை சுற்றத்தார்க்கு. “ன்” இல்லாமல் “ள்” ஆகிப் போச்சே என்று. 6 வது சென்ஸ், 7 வது சென்ஸ், 8 ஆவது சென்ஸ் என்று உலகையே கைக்குள் அடக்கி எங்கோ சென்று கொண்டிருக்கும் ஹைடெக் ஜெனரேஷனிலும் கூட “ன்” இல்லை என்ற 6 அறிவு ஜீவிகளின் வருத்தம்.
சரி வம்பு போதும். இதோ கீர்த்தி மேடை ஏறியாயிற்று. கூடவே மிகவும் அழகான ஒரு பெண். கீர்த்திவாசனின் மனைவியோ? ஒரு வேளை கீர்த்தியே ரோபோவாக இருக்குமோ!. கீர்த்தி மைக் இல்லாமலேயே பேசினான். எல்லோரது செவிக்குள்ளும் குரல் பாய்ந்தது!

“குட் டே டு ஆல்! ஆர்ட்டிஃபிசியல்இன்டெலிஜென்ஸ் நமது நண்பரே. எதிரியல்ல. என் மூளையில் உருவான ஐனோ சென்ற வருடம் இதே தேதியில் பிறந்தார். ஐனோவை உலகிற்கு அறிமுகப்படுத்தும் இந்த நாளில் அவர் வயது ஒன்று. ஐனோவும்10 மாதமாக கருவறைக்குள் இருந்து பிறந்தவர். நல்ல வாதங்களும், விவாதங்களும், கேள்விகளும் எழுந்தால்தான் புதிய சிந்தனைகள் உருவாகும். 

அதனால் உங்கள் கேள்விகளின் வழியே நான் ஐனோ வைப் பற்றிச் சொல்ல விழைகிறேன்.

கூட்டம் ஸ்பெல்பௌன்ட். வித்தியாசங்கள் கண்டுபிடிக்கமுடியாத மனித உருவம், செயல்கள். புடவை உடை! அழகு! அந்த உதடுகள்! மார்பு! கூட்டமே ஜொள்ளியது! தொப்புள் உண்டோ? பார்க்க முடியாத குறை சிலருக்கு. உலக மொழிகள் அனைத்திலும் தேன் குரலில் வணக்கம் சொன்ன ஐனோ “வணக்கம்” என்றதும் தமிழ்க்கூட்டத்திலிருந்து “செந்தமிழ் தேன்மொழியாள்” என்று குரல் எழும்ப “ஐனோ” வின் புன்னகையைக் கண்டு கூட்டமே சொக்கித்தான் போனது!

“ரோபோவிற்கும் ஆண் பெண் பேதம் உண்டா?” கேள்விகள் பறந்தன.
“ஸாரி! டோன்ட் கால் ரோபோ! ஷி இஸ் ஐனோ! நம்மில் ஒருவர். நமது நல்ல நண்பர். என் ஐனோ உருவத்தில் ஆணாகவும், பெண்ணாகவும் மாறமுடியும். இன்டெலிஜென்ஸில் ஆண் பெண் பேதம் கிடையாது!”
‘குழப்புறானே’ கூட்டத்தில் சலசலப்பு.

“ஐனோவின் திறனைப் பற்றிச் சொல்ல முடியுமா?”

“செயல்பாடுகள் அனைத்திலும் நம்மில் ஒருவர்! எமோஷனல் கோஷன்ட் சமநிலை! உணர்ச்சிவசப்படமாட்டார். அது ஒரு கணக்கு. சூப்பர் இன்டெலிஜன்ஸ்.”

“சூப்பர் இன்டெலிஜென்ஸ்? மனிதர்களின் சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதாகத்தான் நம்மில் பெரும்பான்மையோர் நம்புகிறோம்…அந்த சக்திக்கு இணையானது இந்த ஐனோ என்று சொல்லுகிறீர்களா?”

“யு மீன் காட்?! ஸாரி! அது நாம் உருவாக்கியது, ஐ கால் இட் சுப்ரீம் இன்டெலிஜன்ஸ்! இன்ஃப்னிட். ஐனோவை உருவாக்கியதில் நான் அந்த சுப்ரீம் இன்டெலிஜன்ஸை அல்மோஸ்ட் நெருங்குகிறேன் என்றே சொல்லுவேன்.

இவன் தெனாவெட்டா பேசுறான்……….இவன் என்ன சொல்ல வரான்………“அது எப்படி? அப்பாற்பட்ட சக்தியை எப்படி நெருங்க முடியும்? ப்ரூஃப்?”

“ப்ரூஃப்? ஆல் நெட்வொர்க் அண்டர் ஒன் ரூஃப். இறுதியில் உங்களுக்குத் தெரியும். ஓரு சிறிய ஏரியாவிற்கு ஒரு ஐனோ போதும். அரசு நிறுவலாம். எல்லாருமே ஐனோவிலேயே வொர்க் பண்ணலாம்..ஸ்பேஸ் மிச்சம்…..”

“அதெப்படி எல்லோரும் ஒரே ஐனோவில் வொர்க் பண்ண முடியும்?

“ஏன் முடியாது? கோயிலில் ஒரு சாமி முன் எத்தனை பேர் அப்ளிகேஷன் போடுகின்றார்கள்! அப்படித்தான். சாமி எல்லாருக்கும் நிறைவேற்றுகிறாரா? ஆனால், ஐனோ எல்லோருக்கும் உடனே செயல்படுத்துவார். இவர் “கோ”!. அன்றே செய்வார்! இவரை “கோஇல்” ஆக்கினால் அனைத்தும் நிறைவேற்றுவார்.

“நீங்கள் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டாலும்…..எவ்வளவு ஐனோக்கள் வேண்டும்? இது சாத்தியமா தனிமனிதன், சாதாரண மக்கள் வாங்க முடியுமா?”

“எத்தனை மத சம்பந்தப்பட்ட ஆலயங்கள், நினைவுச் சின்னங்கள், மண்டபங்கள் என்று கோடிக்கணக்கில் செலவழித்துக் கட்டப்படுகின்றன? அதை விட ஐனோவிற்கு ஆகும் செலவு குறைவு. அரசு முதல், பெரும்புள்ளிகள், சாதாரண மக்கள் உட்பட வாங்க முடியும். என்ன தேவையோ அதற்கு ஏற்ப. வீட்டு வேலைகள் எல்லாம் செய்வார். வெளியில் கார் போன்று அழைத்தும் செல்வார். அதைத்தான் இதற்கு முன் சொன்னேன். அரசு நிறுவலாம். அரசு நிறுவினால் நன்மைகள் விளையும். சிஸ்டம் ஒழுங்காக வேலை செய்யும்.

“ஸிஸ்டம் எப்படி ஒழுங்காக வேலை செய்யும்? அரசுக்கு என்ன நன்மைகள்?"

“எந்த ஐனோவிற்கும் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே மொபைல், ஐபாட், கம்ப்யூட்டர் ஏன் உங்கள் விரல் நகம், அல்லது வெறும் கை மூலம் தொடர்பு கொண்டாலும் உடன் உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். டோட்டல் நெட்வொர்க். அரசு அதிகாரிகளிடம் நீங்கள் அலையத் தேவையில்லை. எல்லாம் சிஸ்டமாட்டிக்காக நடக்கும். ஊழல் செய்ய முடியாது. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களை, ஊழல் செய்பவர்களை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார். அவர்களின் தவறுகளுக்கேற்ப கோர்ட்டில் நீதியின் முன் நிறுத்துவார். அரசன் அன்றே சொல்வான் நீதி! ஏனென்றால் ஐனோவிற்கு எல்லா நாட்டுச் சட்டங்களும் அத்துப்படி. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ஐனோ என்று நிறுவினாலே போதும். சாத்தியமாகும்.”

“அப்படினா எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஆப்புதான்”

“அரசியல்வாதி என்றில்லை சமூகத்தில் யார் தவறு செய்தாலும், ஆப்புதான்.”

“ஐனோ எல்லோரையும் போட்டுத் தள்ளிவிடுவாரா அந்நியன் ஸ்டைலில்?”
“ஹா! சினிமா, போட்டுத் தள்ளுதல் என்பதற்கு அப்பாற்பட்டுச் சிந்திக்கமாட்டீர்களா? ஸாரி! நான் சற்று முன் சொன்னதைக் கவனிக்கவில்லையா? சட்டத்தின் முன் நிறுத்துவார்.”

‘அப்படினா ஐனோவை கண்டிப்பா கொண்டுவரமாட்டாங்க.!’ ‘இந்தியாவுல வரதுக்குச் சான்ஸே இல்லை.’ குரல்கள் கிசுகிசுத்தன.

“அது உங்கள் தலையெழுத்து” என்று மேடையிலிருந்து பதில் வந்தது.

கூட்டம் வியந்தது. நாம இங்க பேசுறதுக்கு அங்கருந்து பதில் வருது! அப்ப நாம ரகசியம் எதுவும் பேச முடியாது போல?

“ஸாரி! ஐனோ மனிதனின் பெர்சனல் ஸ்பேசிற்குள் நுழைவது போல இருக்கு. நிறுவுவது கடினம்.” 

“இணைய உலகில் உங்களின் ரகசியம் உங்கள் அடுத்த வீட்டுக்காரருக்கும் நீங்கள் சொல்லாமலேயே தெரியும். நாம் எல்லோருமே ஏதோ ஒரு விதமாய் வேவு பார்க்கப்படுகிறோம் என்பதுதான் உண்மை. ஐனோ புதிதாக நுழையவில்லை. ஐனோ உங்கள் தனிப்பட்ட ஸ்பேசில் நுழையமாட்டார். தவறு செய்தால் மட்டுமே நுழைவார்.”

“அதெப்படி? ப்ளஸ் இருந்தால் மைனஸ் இருக்கத்தானே செய்யும் அதுதானே இயற்கை நியதி? நாம் பயன்படுத்தும் பேட்டரி முதல், இடி மின்னல் கூட பாஸிட்டிவ் நெகட்டிவ் இயான்ஸ் மோதல்தானே. அப்ப நெகட்டிவ் ஐனோவும் உருவாக சாத்தியம்தானே?"

“ஹீரோ! வில்லன்! சினிமாவின் தாக்கம்! பாஸிட்டிவ் நெகட்டிவ் ரைட். ஆனால், நல்ல காரியத்திற்கு மட்டுமே என்றுதான் ஐனோவின் ஜீன் உருவாக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக கிரியேட் செய்வது என்பது அத்தனை எளிதல்ல. உங்கள் பாயிண்டிற்கே வருகிறேன். ஒவ்வொரு புராணத்திலும் உங்கள் இறைவன் ஹீரோ அசுரன் வில்லன். ஆனால் இறுதியில் இறைவன் அவனை அழித்து நன்மையை நிலைநாட்டுவதாகத்தானே முடிகிறது! அப்படித்தான் என் ஐனோவும்!

மற்றொன்று. என் ஐனோவை இதே வடிவம் என்றில்லாமல் சிறு துரும்பு வடிவிலும் கூட உருவாக்கலாம். உங்கள் விரல் நக இடுக்கில் வைக்கும் அளவிற்குக் கூட. எனவே தேவைகளுக்கு ஏற்ப வடிவம், எல்லாம். நியூரல் நெட்வொர்க். என் ஆராய்ச்சிகள் ஆர்ட்டிஃபிசியல் சூப்பர் இன்டெலிஜன்ஸ், பயோ ஸயின்ஸ், ஜெனிட்டிக்ஸ் அல்காரிதம்எல்லாம் கலந்த ஒன்று என்பதால் நான் ஜீன் என்றுதான் குறிப்பிடுவேன். எல்லா ஜீன்களும் வடிவமைக்கப்பட்டு எந்த ஜீன் தேவையோ அதற்கான ஜீன்களை மட்டும் ஆக்டிவேட் செய்துவிட்டு தேவையற்ற ஜீன்களை ம்யூட் செய்துவிடலாம்.

என் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படை இந்திய மற்றும் பல நாட்டு மித்தலாஜிக்கல் கதைகள்தான். அக்கதைகளில் ப்ளெஸிங்க் என்பது கையிலிருந்து பவர் வருவதாகத்தானே வருகிறது? அது போலத்தான். இங்கு உங்களுக்கு ஐனோ என்னஎல்லாம் செய்வார் என்பதற்காக நான் ம்யூட் செய்யாமல் அறிமுகப்படுத்துகிறேன். அவ்வளவுதான். நீங்கள் இங்கு பார்க்கும் சாம்பிள் ஜெனரேஷன் மற்றும் சென்ஸ் டெக்னாலஜிகளை விட பன்மடங்கு மிகைப்பட்டதாக இருக்கும் எனது ஐனோக்கள். நாட்டிற்கும் பொது மக்களுக்கும் உதவுபவை. பெர்சனலாகவும் பயன்படுத்தலாம். உங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது முதல், சர்ஜரி, விவசாயம் வரை.”

“டாக்டர்ஸ்குப் போட்டியா? நிலமே இல்லை விவசாயம் எப்படி?”.

“தவறான புரிதல். மருத்துவர்கள் பலமணிநேரம் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை ஒரு சில மணிநேரங்களில் செய்து முடித்துவிடலாம். ஒருவேளை மருத்துவர் வரமுடியாத சூழல் என்றால் ஐனோ செய்துவிடுவார். விவசாயத்திலும் பல உழவர்கள் ஒரு ஐனோ நிறுவினால் போதும். இருக்கும் சிறிய நிலத்திலும், தொட்டியிலும் கூட மகசூல் அள்ளும்.”

அப்ப முதல்ல அந்த சீக்ரெட்டை எப்படியாவது ஆட்டைய போட்டு ஒரு வில்லன் ஐனோவை உருவக்கினா?

மேடையில் இருந்த ஐனோ ரெஸ்ட்லெஸ் ஆனது! “வாட் ஹாப்பன்ட் ஐனோ?”

“கீர்த்தி இங்க ஆடியன்ஸ்ல ரெண்டு பேர் சீக்ரெட்டைத் திருட திட்டம் போடுகிறார்கள். நான் அடையாளம் காட்டட்டுமா?”

“யெஸ் காட்டுங்கள் ஐனோ. உங்கள் பவரை எல்லோரும் புரிந்து கொள்ளட்டும்.” ஐனோ காட்டியதும் அவையே வாயடைத்துப் போனது. சைகையால் பேசிய இருவரும் ஸ்தம்பித்தனர்.

“அப்ப இவனுக்கு எதிரிகள் நிறைய முளைப்பார்கள்!”

“ஐனோவை அழிக்க முடியாது.”

“உங்களுக்கு எதிரிகள் முளைத்தால்?”

“ஹா! கிரிமினல் புத்தி! அறிவியல் பூஜ்ஜியம்! ஐனோ எனக்குப் பாதுகாப்பு! எதிரிகள் முளைத்தாலும் என் ஐனோ சிந்தித்துச் செயல்படுவார். அதற்கும் மேலான ஜெனரெஷன் மற்றும் சென்ஸ் உருவாகும்.

……………………..


அறிமுக விழா முடிவடைந்து பல குரல்கள் ஆதரவாகவும், எதிர்வினையாகவும் ஒலித்துக் கொண்டிருக்க கீர்த்திவாசன் மேடையை விட்டுக் கீழிறங்கவும் அவனது காதுமடலில் குரல் ஒலித்தது. உங்களுடன் மருத்துவர் பேசுகிறார். மருத்துவரின் குரல் தொடர்ந்தது.

“கீர்ட்டி! உங்கள் மனைவிக்குக் குழந்தை பிறந்துவிட்டது. குட் வெயிட். ப்யூட்டிஃபுல். பட் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி டு ஸே உங்கள் மகள் ஒரு ஸ்பெஷல் கிட். 18 ஜீன் ம்யூட் ஆகியிருக்கு.” சுப்ரீம் இன்டெலிஜென்ஸை நெருங்கிவிட்டேன் என்ற கீர்த்திவாசன் ஸ்தம்பித்து நின்றான்!


Artificial Intelligence is the manifestation of the failure of humanity to understand natural intelligence. It is going to snatch away the nature from everybody’s life in second by second basis and is designed to swallow humans from nature forever. வயதானவர் ஒருவர் அங்கிருந்த கருத்துரை போர்டில் வெர்ச்சுவலாக எழுதிக் கொண்டிருந்தது கீர்த்திவாசனின் கண்களில் பட்டது.


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

100 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம், ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்

  வல்லிம்மா! மாலை வணக்கம்…

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் வாசகத் தேனீக்கள் அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
 3. ஓ! இந்தச் செவ்வாய் இந்தக் கதையா...ஆ!! பயமாகீதே......வரேன் வேலை எல்லாம் முடிச்சுட்டு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ... பயமா? எதை நினைத்து.... இல்லையில்லை யாரை நினைத்து பயம் கீதா?!!!

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் எல்லாம் கருத்தை நினைச்சுத்தான்....ஏன்னா இப்படியான கதை எழுதுதல் என் முதல் முயற்சி....ஆனால் சுஜாதாவின் அறிவியல் கதைகள் முழுவதும் வாசித்ததில்லை என்றாலும் - ஏனென்றால் எப்போதேனும் ஒரு சில பகுதிகள் மட்ட்டுமே - ஒரு தாக்கம் இருந்தததால் அதுவும் எந்திரன் வெளிவந்த சமயம் மனதில் தோன்றிய கரு அப்புறம் அது கதை வடிவாக மனதிலேயே டெவலெப் ஆகிக் கொண்டு இருக்க ஒரு வழியா எழுதி முடிச்சு உங்களுக்கு அனுப்பினேன்...

   அதான் ஒரு பயம்.....பெரிய திறமை என்றும் சொல்வதற்கில்லை...இங்கு எழுதுபவர்களின் திறமையை எல்லாம் பார்க்கும் போது....அதான் பயம் ஸ்ரீராம்....ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
 4. ஆஹா இன்னிக்கு கீதாஜி கதை,... மகிழ்ச்சி. தோ படிக்கறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிச்சிருப்பீங்களே வெங்கட்ஜி கருத்து என்னனு பார்க்கறேன்...

   கீதா

   நீக்கு
 5. ஆகா....

  இன்றைக்கு சகோ.. கீதா ரங்கன் அவர்களது கைவண்ணம்...

  சற்றே தாமதமாக வருகிறேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை அண்ணா மெதுவா....ஐனோ இங்குதான் இருப்பார்(ள்)!

   இன்று வைகுண்ட ஏகாதசி இல்லையா அதான் எல்லோரும் பிஸி போல!!!

   கீதா

   நீக்கு
 6. வாவ்.... அறிவியலிலும் அசத்தறீங்க ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா...

   இவர்

   அவியலிலும் அசத்துவார்...

   அறிவியலிலும் அசத்துவார்...

   ஐஞ்சுவைத் திறனிலும் அசத்துவார்...!

   நீக்கு
  2. ஹையோ வெங்கட்ஜி உங்க எல்லாரையும் விடவா!!! மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு

   கீதா

   நீக்கு
  3. ஹையோ ஸ்ரீராம் நீங்க வேற கூடக் கொஞ்சம் ஸ்வரம் எல்லாம் போட்டு வெங்கட்ஜி க்கு ஒத்து ஊதுயிருக்கீங்களே!!!! ஹா ஹா ஹா வெக்கமா போச்சு ஸ்ரீராம்...

   உங்கள் எல்லோரது ஊக்கமும், கூடவே அன்பும், நட்பும் தான் ஸ்ரீராம்...

   கதையை இங்கு வெளியிட்டமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் மற்றும் எபி ஆசிரியர்கள் அனைவருக்கும்...இந்த ஊக்கம் தான் அனைவரையும் இங்கு எழுத வைக்கிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை! இது தொடரணும் என்பதே நம் எல்லோரது விருப்பமும் வேண்டுதலும்...மீண்டும் மீண்டும் மிக்க நன்றி ஸ்ரீராம்...

   கீதா

   நீக்கு
 7. எல்லாருக்கும் :) செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் :)

  //கிபி3500 வரை புக் ஆகியிருக்கும் பழனி முருகனின் அப்பாயின்ட்மென்ட் உடனே கிடைத்துவிட்டது. //

  ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி இவ்ளோ விஞ்ஞ்ஆன வளர்ச்சிலையும் ஆறுதல் அப்பவும் பஞ்சாமிர்தம் கிடைக்கும் :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஏஞ்சல்... பார்த்து பல நாட்களாச்சு!!!... நல்லாயிருக்கீங்களா?!!

   நீக்கு
  2. நல்லா இருக்கேன் இருக்கோம் :) இவ்ளோ நேரம் கார்ட்ஸ் செஞ்சிட்டிருந்தேன் ..நேரம் போனது தெரில பார்த்தா 1 காட்டுச்சி எட்டிப்பார்த்தேன் :)

   நீக்கு
  3. ஹை ஏஞ்சல் வாங்க வாங்க!! ரொம்ப நாளாச்சு பார்த்து. தெரியும் நீங்க சர்ச் செர்வீஸ்ல பிசியா இருப்பீங்கன்னு....அதுவும் இப்ப கிறிஸ்துமஸ் ந்யூஇயர் எல்லாம் வருதே....

   ஐனோவை எட்டிப் பார்த்துட்டுப் போனதுக்கு நன்றி!!

   ஹா ஹா ஹா ஆமாம் பஞ்சாமிர்தம் கிடைக்கும்...ஆனா இப்பல்லாம் அது பிரசாதமா கிடைக்குதோ? கடைலதானே விக்கிறாங்க ஏஞ்சல்!!

   கீதா

   நீக்கு
 8. அன்பான காலை வணக்கம் "எங்கள் குடும்பம்" வாசகர்கள் அனைவருக்கும்.

  இன்றைய கதை சகோதரி கீதா ரெங்கனுடையதா? கண்டிப்பாக மிகவும் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் சகோதரி கீதா ரெங்கனுக்கு. காலை வேலைகள் கூவி அழைப்பதால், பின்பு நிதானமாக படித்து கருத்திடுகிறேன். குழந்தைகள் மூவரும் சிறிது நேரத்தில் எழுந்து விடுவார்கள். அவர்களுடன் அவர்களை பார்த்துக் கொள்வதில் பொழுது பறக்கிறது. இடையிடையில் காலை டிபன், சாப்பாடு கைங்கரியங்கள். கடமை நேரத்தோடு என்னையும் சேர்த்து முழுக்க கட்டிப் போடுகிறது. என் தளம் வந்து கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி. நானும் கைப்பேசி எடுத்து பதில் அடிக்க (இன்னமும் கைப்பேசியுடன்தான் வலைத்தளம் வருகை.) நேரமின்மையால், நிறுத்தி நிறுத்தி பதில் தருகிறேன். அனைவரும் மன்னிக்கவும்.

  நேற்று சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்களின் பதிவையும் இப்போதுதான் படித்தேன். அருமையான முறையில் புதினா பரோட்டாவை செய்து காண்பித்துள்ளார். அவரின் சமையல் செயல்முறைகள் என்றுமே திறம்பட இருக்கும். அவருக்கும் வாழ்த்துகளை இங்கேயே கூறுகிறேன்.
  இன்று கூட அவரின் எழுத்துக்களில் உருவான கதையாக இருக்குமென நினைத்தேன். விரைவில் அவர் எழுதிய கதைகளையும் படிக்க ஆவலாயுள்ளேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...

   காலை வணக்கம்.

   நிதானமா வந்து படித்துக் கருத்து சொல்லுங்கள்.

   நீக்கு
  2. புதினா பரோட்டா பதிவினை படித்து இங்கே கருத்து சொன்னதற்கு நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   கதை எழுதி அனுப்பிடலாம்! எல்லோரும் தைர்யமா கேட்கறப்போ, அனுப்பிட வேண்டியது தான்! :)

   நீக்கு
  3. வாங்க கமலாக்கா நான் எழுதும் கதை மேல அத்தனை நம்பிக்கையா!! உங்கள் வேலைகள் புரிகின்றது. மெதுவாக வந்து வாசிச்சுக்கோங்க அக்கா. நீங்கள் வந்ததே மகிழ்ச்சியா இருக்கு கமலா அக்கா...

   கீதா

   நீக்கு
 9. அட்டகாசமா இருந்தது கீதா ..வித்யாசமா யோசிச்சிருக்கீங்க சிலிகான் சிட்டி போனதில் உருவானதா கதை ..
  நல்லா இருந்தது ஆனால் கடைசியில் எட்வர்ட் சிண்ட்ராமில் குழந்தை பிறந்தது :( பாவம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ!!! நினைச்சேன் நீங்க வந்து வாசிச்சீங்கனா இந்த டேர்ம் சொல்லிடுவீங்கன்னு...எட்வர்ட் சின்ட்ரோம்.....நான் அதைச் சொல்ல நினைத்து தவிர்த்தேன்....!!! எங்க ஊர்ல ...நான் பள்ளி படிச்சப்ப எங்க தெருல ஒரு குழந்தை இப்படித்தான் இருந்தாள். நாங்கள் எல்லோரும் ஆச்சரியமாகப் போய்ப் பார்ப்போம் அவர்கள் வீட்டுக்கு ஏதேனும் கொடுக்கும் சாக்கில் போய்ப் பார்ப்போம்....ஊரில் எல்லோரும் ஜ வில் தொடங்கும் ஒரு வார்த்தை உண்டே அதைச் சொல்லுவாங்க. நான் அந்த வார்த்தையைக் கூடச் சொல்ல மட்டேன். எங்கள் வீடுகளில் ஏன் இப்போதும் கூட இந்த வார்த்தை திட்டல் உண்டு என் மீதும் விழும். ஆனால் நான் சிறு வயதிலேயே அது எவ்வளவு மனதுக்குக் கஷ்டமான வார்த்தை என்று நினைத்து அதைப் பயன்படுத்துவதையே கான்ஷியஸா தவிர்த்தேன் ஏஞ்சல்.

   அதை சொல்முகூர்த்தம்/கொ வா வில் கூடச் சேர்க்கலாம். அப்படி என் மனதில் பதிந்த ஒன்று.

   அந்த மாமாவும், மாமியும் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா..ஆனால் அக்குழந்தை பருவ வயது வந்து அதன் பின் அக்குழந்தை இறைவனிடத்தில் போய்விட்டது..மூத்த குழந்தை. நல்ல காலம் இரண்டாவது பெண் குழந்தை நார்மல்....அவர்களின் இரண்டாவது பெண் என்னைவிட மூன்று வயது சீனியர் அவர் மருத்துவர். சென்னையில் இருக்கிறார். கைனே! அப்புறம் அவருக்கு ஒரு தம்பியும் உண்டு...

   என் நெருங்கிய உறவினர் பெண்ணின் குழந்தையும் ஸ்பெஷல் கிட்..சிவியர் ஆட்டிஸம் என்று சொன்னாலும் மல்டி சிண்ட்றோம்ஸ்/ஹைப்பர், இப்ப சைக்கியாட்றி என்று பல பல .இத்தனைக்கும் அவள் அப்போது அமெரிக்காவில் தான் இருந்தாள். குழந்தை உருவானதுமே பல பல டெஸ்டுகள்....ஏதேனும் பிரச்சனை இருக்குமா என்றெல்லாம் செய்தும் பிறந்ததும் தான் தெரிந்தது சிவியர் ஸ்பெஷல் என்று...

   என்னதான் டெக்னாலஜி வளர்ந்திருந்தாலும்...என்னதான் மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும்.....இப்படித்தான் நடக்கும் என்றால் அது நடந்தே தீரும்...எனவேதான் யாரேனும் இப்படிச் சொன்னால் அதாவது....மருத்துவ டெக்னாலஜி அவரை பிழைக்க வைத்தது என்றோ, யோகா செய்ததால் அவர் பல வருடங்கள் வாழ்கிறார் என்றோ சொல்லுவதை ஏனோ என் மனம் ஏற்க மறுக்கிறது. இவை எல்லாம் நமக்கு நல்லவையே யோகா நல்லது நாம் இருக்கும் வரை நமக்கு நல்லது செய்யும் என்பதுதான் என்றாலும் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் இயற்கையின் அந்த சீக்ரெட் பாக்ஸை யாராலும் உடைக்க முடியாது

   என் குடும்ப சர்க்கிளில் நிறைய பார்க்கிறேன் ஏஞ்சல்...அதை எல்லாம் பார்க்கும் போது மனம் வருந்தி அவர்களுக்காகப் பிரார்த்தித்துவிட்டு நாம் நன்றாக இருப்பதற்கு நன்றியும் சொல்லிவருகிறேன்...

   இப்போதய டெக்னாலஜி அதுவும் இயற்கையோடு ஒன்றாத ஒன்று...என்னதான் இயற்கையோடு போட்டி போட்டு வளர்ந்தாலும்....இயற்கையிலிருந்து நாம் விலகும் போது கண்டிப்பாக நாம் அழிவை நோக்கி வேகமாக நகர்க்கிறோம் என்ற என் மனதில் பதிந்த ஒன்றைத்தான் சொல்ல நினைத்துச் சொன்னது....இயற்கையை நம்மை விட பெரிய அந்தப் பிரபஞ்ச சக்தியை மிஞ்ச முடியாது என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் நாம் மார்தட்டிக் கொள்ள முடியாது என்பதே...சொல்ல நினைத்தது ஏஞ்சல்...

   இந்த கதை சிலிக்கான் சிட்டி வரும் முன்னரே எழுதிய ஒன்று....ஏஞ்சல்.!! மிக்க நன்றி ஏஞ்சல்...

   கீதா

   நீக்கு
 10. ஓகே எல்லாருக்கும் பை :) bye ..தூங்கப்போக முன்னாலே எட்டி பார்த்தேன் :)

  பதிலளிநீக்கு
 11. கீதா கைபடாத துறையே இல்லை.
  மனம் நிறை வாழ்த்துகள் மா.
  இயற்கையை வெல்ல முடியாத மனிதனாகிவிட்டார். கீர்த்திவாசன். பாவம்.

  பாதிக்கு மேல் எனக்குப் புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது.
  பேரன் சட்டெனப் புரிந்து கொள்வான்.

  இத்தனை அறிவியல் எழுத்து எழுத எத்தனை படித்திருக்க வேண்டும்
  அன்பு கீதா. வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா அப்படி எல்லாம் இல்லை அம்மா...

   கண்டிப்பாக இயற்கையை வெல்ல முடியாது. கொஞ்சம் தற்காத்துக் கொள்ளலாம் அவ்வளவே... அப்படி வெல்ல முடிந்தால் சுனாமியோ கஜாவையோ நம்மால் தடுத்து நிறுத்த முடிந்ததால் இல்லை குஜராத் பூகம்பத்தையோ தடுத்து நிறுத்த முடிந்ததா? இல்லை மனிதனின் மரணத்தையோ அல்லது பிறப்பையோ கரு உருவாகும் அந்த ஃப்ராக்ஷன் ஆஃப் நொடியையோ யாராலும் சொல்ல முடியுமா?

   அறிவியல் நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவும் ஓர் ஆயுதம் ஆனால் நடப்பது நடந்தே தீரும்...

   அம்மா பரவால்லமா புரியலைனாலும்....நான் வாசித்தேனே தவிர எனக்கும் ஒன்றும் புரியவில்லை. நான் வித்தகி எல்லாம் கிடையாது...ஹா ஹா ஹா .எங்கள் வீட்டில் ரோபோட்டிக்ஸ், ஆர்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் அல்காரிதம் என்று பேச்சு நிறையவே உண்டு.......புரிந்த கடுகளவில் அறிந்தது என்னவென்றால் ஏஞ்சலுக்குச் சொன்னதுதான் அதைத்தான் சொல்ல நினைத்தேன் அதை நீங்க புரிஞ்சுக்கிட்டீங்களே அம்மா...அது போதும்...

   மிக்க நன்றி வல்லிம்மா உங்கள் கருத்திற்கு...வாழ்த்துகளுக்கு

   கீதா

   நீக்கு
 12. மிகவும் ரசித்தேன் கேள்வி பதில்களை.

  //சட்டத்தின் முன் நிறுத்துவார்

  //அப்படினா ஐனோவை கண்டிப்பா கொண்டு வரமாட்டாங்க.!’ ‘இந்தியாவுல வரதுக்குச் சான்ஸே இல்லை//

  இதுதான் நடக்கும் காரணம் இன்றைய இளைஞர்கள் அதிக சதவீதம் ரசிகர் மன்ற சிறைகளில் அடங்கி கிடக்கின்றனர்.

  வெளியேற இன்னும் பல மாமாங்கம் ஆகுமா...? இல்லை.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா கில்லர்ஜி மாமாங்கமா?!!!! இன்னும் இன்னும் ஆகும்!!

   மிக்க நன்றி கில்லர்ஜி ரசித்தமைக்கும் கருத்திற்கும்..

   கீதா

   நீக்கு
 13. இயக்குனர் ஷங்கர் அவர்களை தொடர்பு கொள்ளலாம்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ரொம்பவே சிரித்துவிட்டேன் டிடி!

   ஹையோ நான் சுஜாதா இல்லையே!!!! அவர் எங்கே நான் எங்கே டிடி!!!

   இது சும்மா ஒரு முயற்சி அவ்வளவே எனக்கு அந்த அளவு எல்லாம் திறமை கிடையாது டிடி..

   மிக்க நன்றி கருத்திற்கு...

   கீதா

   நீக்கு
 14. @ திண்டுக்கல் தனபாலன்...

  >>> இயக்குனர் ஷங்கர் அவர்களை தொடர்பு கொள்ளலாம்...<<<

  அதெல்லாம் வேணாம்.. நீங்களே இயக்கிடுங்க!...
  அதான் நல்லது!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை அட! துரை அண்ணா இது நல்லாருக்கே!! ஹா ஹா ஹா ஹா ஹா....ஆனா..பாவம் டிடி!!

   மிக்க நன்றி துரை அண்ணா...

   கீதா

   நீக்கு
 15. செம கத.அட்டகாசம் கீதா மேடம் உங்களிடம் இருந்து இந்தக் கதையை எதிர்பார்க்கவில்லை. இந்தக் கதையில் இருந்து எனக்கும் ஒன்லைன் ஒன்று தோன்றி இருக்கிறது. அப்புறம் காப்பின்னு சொல்லி பாக்கியராஜ்கிட்ட புகார் பண்னக்கூடாது .சொல்லிட்டென்.ஹா ஹாஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜமாவா சொல்றீங்க முரளி சகோ!!!! மிக்க நன்றி மிக்க நன்றி!!

   //உங்களிடம் இருந்து இந்தக் கதையை எதிர்பார்க்கவில்லை. //

   ஆ!!!! மிக்க நன்றி சகோ!

   /இந்தக் கதையில் இருந்து எனக்கும் ஒன்லைன் ஒன்று தோன்றி இருக்கிறது. அப்புறம் காப்பின்னு சொல்லி பாக்கியராஜ்கிட்ட புகார் பண்னக்கூடாது .சொல்லிட்டென்.ஹா ஹாஹா//

   ஹா ஹா ஹா ஹா ரொம்பவே சிரித்துவிட்டேன்...சகோ அப்படினா நான் சுஜாதாவை காப்பி அடிச்சிருக்கேன்னு சொல்லலாமே!!! இல்லையா...நமக்கு ஒவ்வொருத்தர் எழுதும் கதையிலிருந்து வேறு ஒரு கதை தோன்றுவது இயல்புதானே! எனக்கு இங்கு நம் நட்புகள் எழுதும் கதை நிறைய இன்ஸ்பிரேஷன் கொடுத்து சில சம்பவங்களை நினைவுபடுத்தி கதை எழுதத் தூண்டும்...அப்படி உங்களுக்கும் இந்தக் கதையிலிருந்து தோன்றியிருப்பது சந்தோஷமான விஷயமாச்சே!!

   எழுதுங்க சகோ நீங்களும்....நீங்க இன்னும் நல்லாவே எழுதுவீங்க!!

   மிக்க நன்றி மீண்டும்...

   கீதா

   நீக்கு
 16. புதியதோர் உலகிற்குள் பயணிப்பது போல்...

  அழகான கதை...

  70 களில் சுஜாதா அவர்களது கதையைப் படிப்பது போல....

  ஆனாலும் கடைசியில் 18 ஜீன் ம்யூட் ஆகிப் போனது வேதனை...

  எல்லாம் நல்லதுக்குத் தான்...

  அன்பின் வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா இப்படியான கதைகள் எழுதும் போது சுஜாதாவின் தாக்கம் இல்லாமல் இருக்குமா சொல்லுங்க...அவர் எம்மாம் பெரிய ஆளு....எனக்கும் இந்தக் கதைக்கு அவர்தான் காரணம்....

   கால்நடை மருத்துவராக இருக்கும் (இப்போது குவைத்தில்) என் கசின் சென்னையில் இருந்தப்ப தலைவர் வீட்டு பைரவ செல்லத்தின் மருத்துவர் என்ற ரீதியில் என்னைய்ம் அழைத்தான்...அப்ப கூட நான் வெட்கப்பட்டுக் கொண்டு நேரில் பார்த்தால் அவர் ஜுனோ பற்றி பேசக் கூட வராதே என்று போகவில்லை..அப்போது எந்திரன் உருவாகிக் கொண்டிருந்த நேரம்....அப்புறம் எந்திரன் வந்தப்ப அவர் இல்லை. அப்ப நினைச்சுக்கிட்டேன் அட இந்தக் கதைக் கரு இப்படி எழுதலாமா என்று அவரிடம் கேட்டிருக்கலாமோ கஸின் கூப்ப்ட்டப்ப போய் என்றெல்லாம் தோன்றியது ஆனால் அப்போது விட இப்ப நிறைய இன்னும் வளர்ந்துவிட்டது இந்த டெக்னாலஜி என்றாலும் சுஜாதா அதில் தேர்ந்தவர் ஆயிற்றே...

   கீதா

   நீக்கு
  2. சுப்ரமணிக்குட்டியை மீட் பண்ணும் சான்சை மிஸ் பண்ணிட்டிங்க கீதா :)

   நீக்கு
 17. மேல் விவரங்களுக்கு ஆங்காங்கே இணைப்புகளைக் கொடுத்து....

  தங்களது உழைப்பு பிரமிக்கச் செய்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா இதற்கான க்ரெடிட்ஸ் முழுவதும் முழுவதும் ஸ்ரீராமுக்கே..!!!

   நான் கதை அனுப்பியதும் ஸ்ரீராம் தான் எனக்கச் சொன்னார் அறிவியல் தொழில்நுட்பங்களை நீங்க வாசித்தவற்றை அறிந்தவற்றை அந்தந்த வார்த்தைகளுக்கு .இணைப்புகள் கொடுக்கச் சொல்லி....நான் கீழே தொகுப்பாகத் தள முகவரி கொடுக்கலாமோ என்று கேட்டதற்கு அதை விட இப்படிக் கொடுத்தால் சிறப்பு என்று சொல்லியது ஸ்ரீராமே!! எனவே எல்லா ப் புகழும் ஸ்ரீராமுக்குத்தான் துரை அண்ணா...

   மிக்க மிக்க நன்றி

   ஸ்ரீராம் இதை நான் மேலேயே சொல்லிருக்கணும்....பாருங்க கரீக்டா துரை அண்ணா இதைச் சொல்லவும்தான் அட விட்டுப் போயிடுச்சே முக்கியமானதுனு வெட்கமாகிப் போச்சு ஸ்ரீராம்....

   ஸாரின்னா....

   பிடிங்க நன்றிப் பூங்கொத்து!!!! மிக்க நன்றி ஸ்ரீராம் மீண்டும்...

   கீதா

   நீக்கு
  2. பின்னே....இல்லைனா நான் இணைப்புகள் லிங்க் அதுல கொடுத்திருக்க எனக்குத் தோனியிருக்காதே...ஸ்ரீராம் ஐடியாஸ் இப்பல்லாம் காஸ்ட்லி தெரியுமோ?!!

   கீதா

   நீக்கு
 18. மிக மிக அருமை கீதா க்கா..

  இதுவரை இங்கு படித்ததில் மிக வித்தியாசமான கதை ...ரசித்தேன்..

  தொடரட்டும் உங்கள் மாயாஜாலங்கள் (உங்க multi talentக்காக )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அனு!

   பல வருடங்களாகக் கிடந்த கரு அனு...மனதில்...அதுவும் சுற்றி நடக்கும் சில நிகழ்வுகள் குறுப்பாக ஸ்பெஷல் கிட்ஸ்....என்னதான் இருந்தாலும் இயற்கை வலியது என்ற கருத்து மனதில்...அது கதையாக டெவலப் ஆனப்ப இடையில் எங்க வீட்டு டெக் மக்கள் நிறைய பேசுவதை வைத்து நான் நெட்டில் தேடி வாசித்தவை பார்த்தவை என்று கலந்து கட்டி ஹா ஹா ஹா ஹா

   மிக்க நன்றி அனு...

   கீதா

   நீக்கு
 19. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 20. கீதா ரசித்து படித்தேன். சுஜாதா நினைவுக்கு வந்தார்.

  //கிபி3500 வரை புக் ஆகியிருக்கும் பழனி முருகனின் அப்பாயின்ட்மென்ட் உடனே கிடைத்துவிட்டது. //

  அம்மாடி !

  // நல்ல காரியத்திற்கு மட்டுமே என்றுதான் ஐனோவின ஜீன் உருவாக்கப்பட்டுள்ளது.//

  அருமை.


  //ஒவ்வொரு புராணத்திலும் உங்கள் இறைவன் ஹீரோ அசுரன் வில்லன். ஆனால் இறுதியில் இறைவன் அவனை அழித்து நன்மையை நிலைநாட்டுவதாகத்தானே முடிகிறது! அப்படித்தான் என் ஐனோவும்! //

  அசத்தல். நன்றாக சொன்னீர்கள் கீதா.


  //“கீர்ட்டி! உங்கள் மனைவிக்குக் குழந்தை பிறந்துவிட்டது. குட் வெயிட். ப்யூட்டிஃபுல். பட் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி டு ஸே உங்கள் மகள் ஒரு ஸ்பெஷல் கிட். 18 ஜீன் ம்யூட் ஆகியிருக்கு.//

  இந்த மாதிரி குழந்தைகள் தெய்வீக பெற்றோரிடத்தில்தான் பிறக்குமாம்.
  அதற்கு ஏற்றவர் தான் கீர்த்தி.

  பொறுமை, நிதானம் எல்லாம் அவரிடம் இருக்கே!

  விதி வலிதுதான்.

  அறிவியல் கதை, ஆன்மீக கதை, குடும்ப உறவுகள் கொண்ட கதை, நகைச்சுவை எல்லாம் வருகிறது உங்களுக்கு. நீங்கள் ஒரு பன்முகதிறமையாளி என்பதை ஒவ்வொரு முறையும் உறுதி படுத்தும் எழுத்து.
  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதிக்கா மிக்க நன்றி கருத்திற்கு.

   ரொம்பவே நேர்மறை கருத்து அக்கா...சூப்பர்.

   பழனி முருகன் ரொம்ப பிஸியாச்சே அக்கா!!

   கீர்த்தி நல்லவன் தான் ஆனால் என்ன கொஞ்சம் தன் அறிவியல் மூலம் வெல்லலாம் எனும் எண்ணம்...அதான் அந்த முடிவு அறிவியலுக்கும் அப்பாற்பட்டது...குழந்தை கருவில் இருக்கும் போதே என்னதான் ஜீன் எல்லாம் எடிட் செய்யும் டெக்னாலஜி வந்தாலும் இயற்கை/விதி வலியது அதை நம்மால் மிஞ்ச முடியாது என்பதுதான் அக்கா...

   அக்கா பாராட்டிற்கு நன்றி ஆனால் எனக்கு அந்த அளவு எல்லாம் திறமை கிடையாது அக்கா..

   மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
 21. பிரமிக்க வைத்த அறிவியல் கதை! ஆனால் முடிவு என்ன இருந்தாலும் இறைவனின் தீர்மானத்தை யாராலும் மாற்ற முடியாது எனக் காட்டியது! குழந்தை நல்லபடி வளரட்டும்னு பிரார்த்திக்கிறதைத் தவிர வேறே என்ன சொல்ல முடியும்! இம்மாதிரிக் குழந்தைகள் உண்மையிலேயே தெய்விகக் குழந்தைகள். உங்கள் உழைப்பும் ஶ்ரீராமின் ஒத்துழைப்பும் தொடர்ந்து இம்மாதிரிப் பல கதைகள் வரட்டும். உங்கள் அறிவியல் தேர்ச்சியும் பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கீதாக்கா....

   முடிவு....ஆமாம் அதே அதே....உங்கள் கருத்தே...

   தெய்வீகக் குழந்தைகள் ஆமாம் இவர்கள் தெய்வீகக் குழந்தைகள்தான்...இக்குழந்தையின் சின்ட்றோம் பார்ஷியல் ஆக இருக்கட்டும்...

   ஆமாம் அக்கா ஸ்ரீராமின் ஒத்துழைப்பைச் சொல்லி முடியாது அக்கா...நமக்கு இப்படி ஒரு நல்ல நட்பு கிடைத்ததற்கு நாம் எத்தனையோ நன்றி சொல்லலாம்...நான் ஆவிக்குத்தான் நன்றி சொல்லனும்..பதிவுகளின் மூலம் மட்டுமே ஸ்ரீராமை அறிந்து அவரை எப்படியேனும் பார்க்கணும் என்று இருந்த எனக்கு ஆவி (கோவைஆவி) தான் என்னை அழைத்துச் சென்றார் முதல் முறை ஸ்ரீராம் வீட்டிற்கு அப்படித்தான் அறிமுகம்....இதோ இப்போது வரை நல்ல நட்பாய்!!! மலர்ந்து என்று!!ஆவிக்குதான் நான் நன்றி சொல்லனும்....

   மிக்க நன்றி கீதாக்கா உங்கள் வாழ்த்துகளுக்கு

   கீதா

   நீக்கு
  2. நன்றி கீதா. நல்லதாய் நாலு வார்த்தை சொன்னதற்கு!

   நீக்கு
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) 4 ஶ்ரீராம்...
   வடிவா எண்ணிப் பாருங்கோ எத்தனை வார்த்தைகள் சொல்லியிருக்கிறா என:)...
   கணக்கி”லயும்” வீக்கா இருப்பார்போல:)... ஹா ஹா ஹா...

   நீக்கு
 22. வாஆஆவ்வ்வ்வ் இன்று கீதா ஸ்டோரியோ...என்னாதூஊ கீதா அம்பேரிக்கா போயிட்டாவோ... ஜொல்லவே இல்ல...:).. இன்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவண்டு தவண்டாவது வந்திடுவேன் .. லேட்டானால் நோ கோவம்ஸ்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா அதெப்படி பூஸார் நான் தேம்ஸ் கரையைத் தொடாமல் ரெண்டு தேம்ஸ்காரர்களுடன் கை குலுக்காமல் அம்பேரிக்கா போவேன்!!! சொல்லுங்க!!!?

   தவண்டு தவண்டு ஆ!! அப்ப நீங்க கடல்ல கூட தவண்டு வந்திடுவீங்களோ!!! என்னா தகினிக்கு தக்கினிக்கு....வாங்க லேட்டானால் கோவம்ஸ் நோ நோ அதெல்லாம் வராது...அதுவும் போன செவ்வாய்க் கிழமைக்கு துளசியின் கதைக்கு உங்க கமென்ட் வந்துருக்குனு துளசி சொல்லி கருத்து அனுப்பிருக்கார்...இனிதான் பார்க்கோனும் அவர் பதிலை அங்கு தரணும் ஸோ தவண்டு தவண்டு வந்து அடுத்த செவ்வாய்க்குள்ள இந்தக் கதைய படிச்சுருவீங்கன்னு நம்பிக்கைதேன்...ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 23. முதலில் நமக்கு இந்தக்கதை புரியாது போலிருக்கே என்று நினைத்தேன். இரண்டு மூன்று முறை படித்த பிறகு ஐனோவைப் புரிந்தது. பிறகு கதையும் புரிந்தது. நிறைய இங்லீஷ் பதங்கள். ஸ்ருஷ்டியை எந்த டெக்னாலஜியாலும் மாற்ற முடியாது.முடிவுதான் நெருடலாக மனதிற்கு கஷ்டம் தந்தது. பன்முக வித்தகி கீதாரெங்கன் என்பது ஸ்தாபிதமாகிறது. பாராட்டுகள்.பாராட்டுகள். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க காமாட்சிம்மா....ஐனோவை புரிந்து கொண்டுவிட்டீங்களே...ஆனா பாருங்க காமாட்சிம்மா நான் இத்தனை வாசித்தும் எனக்கு இந்த அறிவியல் விளங்கவே இல்லை...உண்மையாக...நான் கொடுத்திருக்கும் இணைப்புகளை நான் கதைக்காக வாசித்த போது பிரமிப்பு ஒரு புறம் ஆனால் அப்புறம் இத்தனையும் எதற்கு? நம்மை எங்கே கொண்டு செல்ல என்று தோன்றியது...இதற்கும் மிஞ்சியதல்லோ அந்த சக்தி என்று யோசித்ததில்தான் முடிவு அப்படி அம்மா...

   பன்முக வித்தகி எல்லாம் இல்லை காமாட்சிம்மா...சும்மா எல்லாம் நுனிப்புல்தான்...

   மிக்க நன்றி காமாட்சிமா பொறுமையாக மூன்று முறை வாசித்தமைக்கு

   கீதா

   நீக்கு
 24. கதை படிச்சிட்டேன் கீதா.. இது இன்னொரு விறுவிறுப்பான கதை ஆனா விஞ்ஞானத்துடன் சேர்த்திட்டீங்க... மிக அழகாக , இம்முறை அதிகம் எழுதி நம்மை பார்த்ததுமே மயங்கிவிழ வைக்காமல் சோட் அண்ட் சுவீட்டாக முடிச்சிட்டீங்க.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அதிரா....ஹா ஹா ஹா ஹா ஷார்ட்டா கொடுத்து உங்களை மயங்கி விழாம வைச்சதுக்கு ஹா ஹா ..

   ஓ அதான் நீங்க இன்னும் பொசெ படிக்கலையோ!!!!! ஹா ஹா ஹா (உங்க செக் குக்கு ஒரு பிட் எடுத்துக் கொடுத்தாச்சு!!!! அவங்க வந்தாங்கனா இதை தொடர்வாங்க ஹா ஹா)

   கீதா

   நீக்கு
  2. என் செக் ஐ மிரட்டி வச்சிருக்கிறேன் கிரிஸ்மஸ் வரை பிசி எனச் சொல்லோணும் என்று:).... ஹையோ இண்டைக்கு எனக்கென்னமோ ஆகுதே ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)..

   நீக்கு
  3. https://i.pinimg.com/originals/68/dc/c6/68dcc60677b562c3bfae86fa6d54616b.jpg

   பொ .செவை தல கீழ வச்சி படிக்குதே பூனை :))

   நீக்கு
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அல்லோ மிஸ்டர்... படிக்கிறதுதானே முக்கியம்:), இதில தலை கீழ இருந்தா என்ன மேல இருந்தா என்ன:)... படிச்சு முடிச்சிடுவோம்:)..

   நீக்கு
 25. திரும்பவும் ரஜனி அங்கிளின் ரோபோ வை பார்க்க வேண்டும் எனத் தூண்டி விட்டீங்க... எங்கள் பிள்ளைகள் பொறுமையாக முழுமையாகப் பார்த்த ஒரே தமிழ்ப்படம் என்றால் அதுதான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னாது ரஜனி உங்களுக்கு அங்கிளா!!!! ஆஆஆஆஆஆஆஆஅ.....கரீக்டுதான் எனக்கு ஸ்ரீராமுக்கு எல்லாம் அவர் தாத்தாவாச்சே!!ஹா ஹா

   பிள்ளைகளுக்கு அந்தப் படம் பிடிக்கும் தான்..அதுவும் அந்த ஊர்களில் வளரும் குழந்தைகளுக்கு.....2.0 வும் பார்த்தாச்சோ??!!!

   கீதா

   நீக்கு
  2. நான் மூவியில பார்த்தனே அவரை ரெம்ம்ம்ம்ம்ம்ப ய்ங்:) ஆஆஅ இருக்கிறார்ர்ர்:)

   நீக்கு
  3. அவர் நேரிலும் யங் தான் :) இன்னா வேகமா நடப்பர் தெரியுமா :) உங்க வயசுதான் அவருக்கும் ஆனா உங்களால் முடியாதே முடியாதே அவ்ளோ பாஸ்ட்டா நடக்க miyaaaaaaaw

   நீக்கு
  4. இப்போ வரப்போகிற படத்தில இன்னும் யங்காக இருக்கிறாராம் என, தமிழ் ஒழுங்காத் த்ர்ரியாத என் சிஸ்டரின்லோ வே சொல்றா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சிவாஜி அங்கிள் எல்லாம் ஒரு வயதுக்கு மேலே அப்பா வேசம்தான் போட்டார்.. இப்போ இவர்கள் யாரும் இளைய தலைமுறைக்கு விட்டுக் குடுக்க மாட்டினமாம் என் குயின் அம்மம்மாவைப் போலவேதான்ன்ன்ன்:)...

   நீக்கு
  5. தமிழ் ஒழுங்காத் த்ர்ரியாத என் சிஸ்டரின்லோ வே சொல்றா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).//

   அதானே! நாம டமிள்ல டி அல்லோ!!!!!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  6. ஆஹா ஏஞ்சல் சித்தப்பூக்கு இம்பூட்டு சப்போர்ட்டா!! ஹா ஹா ஹா ஆனா உங்க சித்தி கூட செம ஃபாஸ்டாமே...யோகா எல்லாம் அநாயாசமா செய்வாங்களாம் குண்டா இருந்தாலும் ஃப்ளெக்சிபிள் பாடினு சொல்லிக் கேள்வி!! அப்படியா ஏஞ்சல்?!!!!

   கீதா

   நீக்கு
 26. மச்சக்காரன்///
  ஹா ஹா ஹா என் கழுத்து கையிலும் மச்சங்கள் இருக்கே ஆனா புகழைக் காணமே கீதா?:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புகழ்தானே வேண்டும்...இதோ அள்ளிப் பிடிங்க.......அப்பாவி, அதிரடி, செஃப், ஆஷா போன்ஸ்லே என்றெல்லாம் ஆகி இறுதியில் ஞானியாகி ஞானியானதால் மீண்டும் அப்பாவி ஆகிய அதிரா மச்சக்காரி!!!

   உங்களுக்குத்தான் ஏற்கனவே புகழ் இருக்கே அதிரா!!! மோதிஜிக்கு அவ்வப்போது பி ஏ, ட்ரம்ப் அங்கிளுக்கு செக்ரட்டரி உங்களுக்கும் ஒரு செக் இருக்காங்க... அப்ப்புறம் என்ன வேனும்.. !!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  2. ஹா ஹா ஹா இதுதானா அதூஊ? நான் என்னமோ ஏதோ என நினைச்சுட்டேன்ன்ன்:)..

   நீக்கு
 27. ///
  ‘அப்படினா ஐனோவை கண்டிப்பா கொண்டுவரமாட்டாங்க.!’ ‘இந்தியாவுல வரதுக்குச் சான்ஸே இல்லை.’ குரல்கள் கிசுகிசுத்தன///
  ஹா ஹா ஹா நான் ஒரு இந்தியன் என பெருமையாகப் பேசுவதும் நீங்கதான்:).. அப்பப்ப இப்படி கவிட்டு விடுவதும் நீங்கதான்( தமிழ்நாட்டினரைச் சொன்னேன் நொட் கீசாக்கா:)) ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....நீங்க ஒன்னு புரிஞ்சுக்கோனும்...

   நம்ம பிள்ளைகளை நாம திட்டுவோம்தானே!!!??? ஆனால் வெளியில் விட்டுக் கொடுப்போமா?!!!! அப்பூடித்தான்....

   கீதாக்கா இது என்னா இந்த பூஸார் சொல்லுறார்......அப்ப நீங்க தமிழ்நாடு இல்லையா?!!

   கீத

   நீக்கு
  2. கீசாக்கா எப்பவும் உண்மையே பேசுவா:) புழுக மாட்டா:) திட்டிக்கொண்டே இருப்ப ஹா ஹா ஹா யூப்பரா மாட்டி விட்டிட்டேன்ன்ன் இனி அந்த கீசாக்கா வீட்டு:).. ஆண்டாள் ஆனைப்பிள்ளை வந்தாலும் கீசாக்காவைக் காப்பாத்த முடியாதூஊஊஉ:)

   நீக்கு
  3. அதிரா இப்ப கீதாக்காவை நீங்க பிடிக்க முடியாததூஊஊஊஊஊஊஊஉ...ஆண்டாள் ஆனைப்பிள்ளை வந்தாலும்!!! அவங்க பெரிய ரங்கு சின்ன ரங்கு தரிசனத்துக்கு சொர்க வாசல்ல இருப்பாங்க!!

   கீதா

   நீக்கு
 28. ஐனோவைப் பெண் எனச் சொல்லிப்போட்டு முடிவில் ஆண்போல ஆக்கிட்டீங்கபோல இருக்கே...:)...

  இப்படி ஒரு உலகப் புத்திசாலியான கீர்த்திக்கு, கடவுள் ஏன் இப்படி ஒரு குழந்தையைக் கொடுத்தார்(தப்பான கண்ணோட்டத்தில் எடுத்திடாதீங்க, ஓய்ந்து போயிடாமல் ஐனோ போல உன் குழந்தையையும் உலகில் முதலிடத்துக்கு கொண்டு வா என கடவுள் சலஞ் பண்ணுகிறாரோ எனத்தான் எண்ண வருது:))... இன்னும் வாழ்க்கையை சலஞ் பண்ணி வாழட்டும் என்றோ....
  எனக்கு இதுதான் புரிவதில்லை, கஸ்டப்படுவோருக்குத்தான் இன்னும் கஸ்டத்தைக் கொடுப்பார்... இப்படி இரவுபகலா ஆராட்சிகள் கண்டுபிடிப்புக்கள் செய்பவருக்கே இப்படி சிக்கல்களையும் கொடுப்பார்....
  கேட்டால், யாரால் தாக்குப் பிடிக்க முடியுமோ அவர்களுக்கே கஸ்டங்களைக் கொடுப்பாராம்... என்னா டிசைனோ... கடவுள் மட்டும் என் கையில மாட்டினார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).........

  .. டமால் எனக் கால்ல விழுந்திடுவேன் என டொல்ல வண்டேன்ன்ன்:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐனோவைப் பெண் எனச் சொல்லிப்போட்டு முடிவில் ஆண்போல ஆக்கிட்டீங்கபோல இருக்கே...:)...//

   அப்படியா?!! ஓ இவனுக்கு என்று சொன்னதையா.....அது ஆடியன்ஸ் கீர்த்திக்குச் சொல்லுவது போல...எழுதியிருந்தது...

   இப்படி ஒரு உலகப் புத்திசாலியான கீர்த்திக்கு, கடவுள் ஏன் இப்படி ஒரு குழந்தையைக் கொடுத்தார்(தப்பான கண்ணோட்டத்தில் எடுத்திடாதீங்க, ஓய்ந்து போயிடாமல் ஐனோ போல உன் குழந்தையையும் உலகில் முதலிடத்துக்கு கொண்டு வா என கடவுள் சலஞ் பண்ணுகிறாரோ எனத்தான் எண்ண வருது:))... இன்னும் வாழ்க்கையை சலஞ் பண்ணி வாழட்டும் என்றோ....//

   இதுவும் நல்ல பாயின்ட்!! பாசிட்டிவ்!!

   ஹா ஹா அதிரா உங்கள் கேள்விகள் என் மண்டைக்குள்ளும் அடிக்கடி எழும்....ஆனால் கடைசில சொல்லிருக்கீங்க பாருங்க அதேதான் நானும் அடிக்கடி சொல்லுவே இந்தக் கடவுள் மட்டும் என் கண்ணுக்குத் தெரிஞ்சார்னு வையு ஒரு பிடிபிடிப்பேன் உலுக்குவேன் என்று....ஆனால் நேரில் வந்தால் கண்டிப்பாக டமால் தான்....நேரில் என்பதை விடுங்கள். கோயிலில் அவர் முன் நிற்கும் போது கூட மனம் எதையும் கேட்காது...எல்லாரும் ஹேப்பியா இருக்கனும்னு சொல்லிடுவேன் அவ்வளவுதான்...மனம் வேறு ஒரு உலகில் இருக்கும் பாசிட்டிவாக ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 29. என்னதான் இருப்பினும் கீதா, நீங்க சென்னையிலயே இருந்திருந்தா இப்பூடிக் கதை எழுதியிருக்க மாட்டீங்க:)... பெங்களூர் வந்ததால எப்பூடி சூப்பரா சிந்திக்கிறீங்க:)... சென்னையில் இருப்போருக்கு இப்பூடி ஜிந்திக்க வராதூஊஊஉ ஹையோ பெல் அடிக்கப் போகுதே... அதிரா ஊரிலில்லை... அதிராவை ஆராவது தேடினால் அஞ்சுட அட்றஸ் ஐக் குடுங்கோ பிளீஸ்:)....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இப்போ பெங்களூரில் இருக்கிறேன். எனக்கொண்ணும் கதை எழுத ஐடியா வரலையே..... ஏதோ நீங்க சொல்றீங்க.. ஜிந்தித்துப் பார்க்கிறேன்

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ஹா...ஹலோ அதிரா ஒன்னு சொல்லறேன் இந்தக் கதை வெளி வந்தது இப்போது...இதை நான் எழுதியது சென்னையில் இருக்கறப்ப......மூன்று வருடங்களுக்கும் மேலாக ட்ராஃப்டில் கிடந்து கொஞ்சம்கொஞ்சமா டெவலப் பண்ணி ஹா ஹா ஹா ஸ்ரீராம்கிட்ட கேட்டுப் பாருங்கோ....இதை எதுக்குச் சொல்லுறேன்னா...
   .//சென்னையில் இருப்போருக்கு இப்பூடி ஜிந்திக்க வராதூஊஊஉ // சத்தியமா நீங்க ஸ்ரீராமையும், நெல்லையையும் சொல்லலை ஹா ஹா ஹா !!

   கீதா

   நீக்கு
  3. ஆ.... ஆ.... துடிக்கிறது மீசை (இருந்த இடம்) அடக்கு அடக்கு என்கிறது அறிவு... சென்னையில் இருந்தால் கதை எழுத வராதா? யார் சொன்னார்கள்? இப்படி உண்மையெல்லாம் வெளியில் சொல்வது யார்?

   அப்புறம் ஒரு விஷயம்... பெங்களூரு சுஜாதா இருந்த ஊர் அல்லவா? அதுதான்...

   நீக்கு
  4. அது நெல்லைத் தமிழன் உங்களுக்கு “உடல் இங்கே உசிரு அங்கே” என இருக்குது போல:) அதனாலதான் ஐடியா வரல்லப்போல ஹையோ ஹையோ.....:)

   நீக்கு
  5. கீதா, உண்மையை ஒத்துக் கொண்டிட்டா பிறகு ஶ்ரீராம் கதையைத் தூக்கினாலும் தூக்கிடுவார் எனும் பயத்தில என்னென்னமோ சொல்றீங்க:)...

   ஆனாப் பாருங்கோ மீசை இல்லாட்டிலும் இருந்த இடம் துடிச்சு( நான் ஜொல்லல்லே அவர்தான் ஜொன்னார்:)) உண்மையைப் போட்டுடைச்சிட்டார் ஶ்ரீராம்:)..

   நாம ஆரூஊஊ எந்த சலசலப்புக்கும் அஞ்சாத புலிக்காட்டுப் பூஸாக்கும்:)... ஹையோ யாரோ தொம் தொம் என ஓடி வரும் ஜத்தமாக் கேட்குதே.... மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:)..

   ஓ சுஜாதா மாமா அங்கயா இருந்தார்... அப்போ ச்கொட்லாந்தில இருக்கேல்லையோ அவ்வ்வ்வ்வ்வ்:)..

   நீக்கு
 30. அருமையான கதை. கதாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு

   கீதா

   நீக்கு
  2. அபார திறமை கொண்ட நம் ஐயாவை தொடர்பு கொள்ளுங்கள்... விக்காமல் wiki-ல் எழுதலாம்...!

   நீக்கு
 31. கீதா ரங்கன்... நான் மெதுவாத்தான் படிக்க முடியும். இப்போ நேரமில்லை. படித்துட்டு கருத்திடறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மெதுவா வாங்க நெல்லை நோ அவசரம்...கோயிலுக்குப் போகனுமில்லையா...

   கீதா

   நீக்கு
  2. கோவிலும் சந்தேகம்தான் கீதா ரங்கன். இப்போதான் வந்து சேர்ந்தேன்.

   நீக்கு
  3. ஓ! ரெஸ்ட் எடுத்துட்டு நேரம் கிடைக்கறப்ப வாங்க...போன வாரம் உங்க ஏரியா வழியாத்தான் பனசங்கரி, உதயபுரா போனேன்...

   கீதா

   நீக்கு
 32. வணக்கம் சகோதரி

  அருமையான கதை சகோதரி. இயற்கையும் விஞ்ஞானமும் கலந்து இப்படி ஒரு கதையை மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். உங்கள் எழுத்தாற்றலை, கற்பனைத் திறனை மனமாற பாராட்டுகிறேன். எனக்கும் கதையை படிக்கும் போது எழுத்தாளர் சுஜாதாவின் கதை மாதிரி இருந்தது. கதையின் முடிவு மிகவும் நன்றாக உள்ளது. இயற்கை வலியதுதான். என்னதான் விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் இயற்கைக்கு முன் சற்று தோற்றுத்தான் செல்கிறது. அழகாக மேற்கோள்கள் இட்டு கதையை மேலும் வலுவாக்கியமைக்கு சகோதரர் ஸ்ரீராமுக்கும், தங்களுக்கும் வாழ்த்துக்கள். மிகவும் ரசித்து இரண்டு முறை படித்தேன். பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கமலாக்கா உங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும். நம்மூரில் தமிழில் இது போன்ற கதைகள் எழுதினால் அதில் கண்டிப்பாக சுஜாதாவின் தாக்கம் இல்லாமல் இருக்காது....

   சுட்டி கொடுத்த ஐடியா எல்லாம் ஸ்ரீராமுக்கே அர்ப்பணம்!!!

   மிக்க நன்றி கமலாக்கா...

   கீதா

   நீக்கு
 33. சுஜாதாவின் ஆவியை மெட்ராஸில் காணவில்லை என்று கேள்விப்பட்டதுமே கலவரப்பட்டேன். ஏதோ நடக்கப்போகிறது.. வைகுண்ட ஏகாதசியில் வந்து எபி யில் இறங்கிவிட்டது! இன்னும் என்னென்ன பாக்கியிருக்கிறதோ.. கீதாவுக்கும், ஸ்ரீராமுக்கும்தான் வெளிச்சம். நமக்கெல்லாம் வெறும் இருட்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...அண்ணா அவர் எங்கே நான் எங்கே...

   உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்...எந்திரன் படம் உருவாகும் சமயம் அக்கதை சுஜாதாவின் கதை என்பது தெரிந்தது..ஹானஸ்ட்லி சுஜாதாவின் கதைகள் வாசித்தது என்றால் மேக்ஸிமம் 5? அது கூட முழுவதும் வாசித்தது இல்லை....அதனால் எனக்கு எந்த எழுத்தாளர் பற்றியும் ஆழமாகக் கருத்துச் சொல்ல இயலாது....என் வீட்டுச் சூழலில் கதைப் புத்தகங்களுக்குத் தடா...ஆனால் வாசித்த வரையில் என்னை மிகவும் ஈர்த்தவர் சுஜாதா...மிக மிகப் பிடிக்கும்...இப்போது நெட்டில் வாசிக்கத் தொடங்கியிருக்கேன்..

   ..எந்திரன் படம் வெளிவரும் சமயம் சுஜாதா இல்லை...ஆனால் அதற்கு முன் அதாவது படம் எல்லாம் வெளிவரும் முன் சுஜாதா இருந்த சமயம்... என் மனதில் உருவான கரு அதாவது என்னதான் அறிவியல் வளர்ந்தாலும் இயற்கையை மிஞ்ச முடியாது என்பதைச் சொல்ல...அப்போது கால்நடை மருத்துவர் என் கஸின் சுஜாதா அவர்கள் வீட்டு பைரவச் செல்லத்தின் மருத்துவராக இருந்தான். அவன் அவர் வீட்டுக்குப் போவான். அபோது என்னை அழைத்தான் எனக்குப் பிடிக்கும் என்று அவனுக்குத் தெரியும்...அப்போது நான் அவனிடம் இந்தக் கதையின் ஒன்லைன் மட்டும் சொன்னேன்...(அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக இப்படி டெவலப் ஆனது கடந்த நான்கு வருடங்களாக...அதுவும் நம்மூர் பசங்க அமெரிக்காவில் இருந்து சில கண்டுபிடிப்புகளை வெளியிட்டு பரபரப்பான போது...)
   என் கஸின் அவரிடம் அழைத்துப் போறேன்னு சொன்னதும் எனக்கும் இந்த ஒன்லைன் பற்றி சுஜாதாவிடம் சொல்லி எப்படி இருக்கும் என்று கேட்கலாமோ என்றும் தோன்றியது. ஆனால் அவர் சிரித்துவிடுவார் எவ்வளவு புத்தகங்கள் வாசிப்பவர்...அறிவியல் கதைகள், கட்டுரைகள் எழுதுபவர் நமக்கு அறிவியல் பூஜ்ஜியம் அதுவும் கதை எழுதவும் தெரியாது...ஸோ வெட்கப்பட்டுக் கொண்டு நான் அவனோடு செல்லவில்லை...எந்திரன் படம் வந்தது. நான் படத்தைப் பார்த்ததில்லை. ஆனால் ஒரே ஒரு சீன் மட்டும் பார்க்க நேரிட்டது. ரோபோ ரஜனி ஒரு சலூன் என்று நினைக்கிறேன்...அங்கு காத்திருக்கும் வேளையில் புத்தகம் வாசிக்கும் ஸீன்....அதுவும் எனக்கு இன்ஸ்பிரேஷன்...அப்புறம் ஒரு ரோபோவின் மெமரி, மூளைத்திறன் எப்படி வடிவமைக்கிறார்கள் என்று நெட்டில் கொஞ்சம் தேடினேன்...ஆனால் மீக்கு அறிவியல் சுத்த்த்த்த்த்த்த்த்த்த்த்தம்....அந்த அல்காரிதம், டெக்னிக்கல் வார்த்தைகள் எதுவும் புரியலை....பட் கதைக்கு வேண்டியது புரிந்தது. அதை வைத்து சுஜாதா பாணியில் சொல்வதென்றால் சும்மா ஜல்லி அடித்தேன்...ஹா ஹா ஹா அவ்வளவே....

   அது சரி ஏகாந்தன் அண்ணா இது நேர்மறைக் கருத்தா எதிர்மறைக் கருத்தா!!!!!! ஹிஹிஹிஹி....

   ஆனால் கமென்ட் வாசித்து சிரித்துவிட்டேன்....

   நே ம வோ எ ம வோ....மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா...

   கீதா

   நீக்கு
  2. மேலே சொன்னது நேர்மறையேதான். நன்றாக முயற்சித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

   சுஜாதாவின் ’மீண்டும் ஜீனோ’ ஞாபகம் வந்தது- உங்களின் ஐனோ வைப்பற்றிப் படிக்கையில்! நான் சுஜாதாவின் சிறுகதைகள் பல படித்திருக்கிறேன். He was a master story teller. Absolutely no doubt. (’சிறுகதையின் நுட்பமான வடிவம் அவருக்கு அபாரமாக கைவந்திருந்தது’ - ஒரு இடத்தில் ஜெயமோகன்). சுஜாதாவின் சைன்ஸ் ஃபிக்‌ஷன் இதுவரை படிக்கவில்லை.

   நீங்கள் அவசியம் அவரது ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ படிக்கவேண்டும். ஆழமான சில கதைகள் அதில் உண்டு.

   தாமதமாகக் கருத்திடுவதே எனது வழக்கமாகிவிட்டது. நேற்று ஐபிஎல் -ஏலத்தில் ஆழ்ந்துவிட்டேன், ஏதோ நான் தான் செலவு செய்வதுபோல்!

   நீக்கு
  3. மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா.நேர்மறை என்று சொன்னதற்கு....ஆமாம் அந்த ஜூனோ தான் நான் அப்ப கொஞ்சம் கொஞ்சம் வாசித்த கதை. முழுவதும் வாசித்ததில்லை. நான் இதற்கு ஐநோ என்று வைத்ததன் காரணம் கீர்த்தியின் மனப்போக்கு!!!! (எனக்குத் தெரியும் ஐனோ)

   அண்ணா கண்டிப்பாக வாசிக்கிறேன் ஸ்ரீரங்கத்து தேவதைகளை!!!!

   கடைசி வரியை வாசித்துச் சிரிப்பு!!!

   கீதா

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!