ஞாயிறு, 2 டிசம்பர், 2018

ஞாயிறு : அவங்கவங்க பொட்டிய அவங்கவங்க தூக்குங்கப்பா...
இறங்கத் தயாராகலாமா?இருங்க...    அதற்கு முன் ஒரு ......
 சரி...    இறங்கியாச்சு...   அடுத்த வேலை என்ன?  இதென்ன கேள்வி?  அதுதான் நடக்கிறது!அவங்கவங்க பொட்டிய அவங்கவங்க தூக்குங்கப்பா...விமானநிலையம் வெளியே ஒரு க்ளிக்...
அதோ காத்திருக்கிறது கார்வாகனம்!


எங்களைப் போலவே காத்திருக்கிறார்கள் மக்கள்...அதோ...  சுதீப் அனுப்பிய வண்டி...   ஆன்லைன் புக்கிங் வீண்போகவில்லை...ஏறியாச்சு...  நிம்மதி...   ஹோட்டலுக்குப் போகும் வழி.....


வண்டிக்குள்...   ஒருத்தர் மிஸ்ஸிங்...   எங்கள் ஆசிரியர் எங்கே?  அவருக்கு இன்று பிறந்தநாள் வேற....அப்புறம் எப்பவாவது வழி தெரியலைன்னா...  ஒரு க்ளிக் செஞ்சு வச்சுக்கிட்டா உதவும்...


அட...  ஏதோ மாறுதலாகத் தெரியவில்லை?  கம்பங்கள்தான் நிற்கிறது...   வொயர்கள் எங்கே?  ஸோலார் விளக்குகள் என்று தெரிகிறது...அதானே...   இதோ ஏதோ கேபிள் தெரிகிறதே...தடுப்பின் அந்தப் பக்கம்...ஹோட்டலுக்குள் வந்து படுத்தவுடன் தூக்கம்...   கிளம்பும்போது எழுப்புங்கப்பா....=================================================================================================================இன்று எங்கள் இன்னொரு ஆசிரியரின் பிறந்தநாள்...  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

46 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்..

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
  2. வரவேற்ற அனைவருக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.

   நீக்கு
 3. கேஜிஎஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

  அட நேற்று கௌ அண்ணான் இன்று அவர் அண்ணன்!!! ஜூப்பர்!! ஒரே கொண்டாட்டம் தான்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜூப்பர் தான்...

   இருந்தாலும் -
   சும்மாவாச்சுக்கும் ஒரு கேக் படத்தைப் போட்டுருக்கலாம்!...

   நீக்கு
 4. /// இன்னொரு ஆசிரியரின் பிறந்த நாள்...///

  அன்பின் நல்வாழ்த்துகள்...
  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 5. துரை அண்ணா தவிர இன்னும் யாரையும் காணலை! சண்டே ரிலாக்ஸேசன் போல!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்... நெல்லை பயணத்தில் இருப்பதாகச் சொன்னார். கீதா அக்காவும் பானு அக்காவும் சற்று நேரத்தில் வரக்கூடும்!

   நீக்கு
  2. ஆமாம் நெல்லை பயணம் என்று சொல்லியிருந்தார்..கருத்தில்....கும்மி அடிக்க முடியலைன்னு...

   ஆசிரியரைக் காணலை...அவர் முன் சீட்டில் அமர்ந்திருக்கும் ஃபோட்டோ...அழகா அதை போட்டு சூப்பரா தலைப்பும் கொடுத்துட்டீங்க ஸ்ரீராம்...

   எல்லா தலைப்பும் நல்லாருக்கு...

   கீதா

   நீக்கு
  3. என்னவோ திடீர்னு ஃபர்ஷ்ட்ட்டு வரணும்ங்கற ஆர்வம் இல்லை. அதான் மெதுவாவே வரேன். :)))) திடீனு விவேகம் வந்துடுச்சோ?

   நீக்கு
  4. //திடீனு விவேகம் வந்துடுச்சோ? //

   விவேகம் முன்னாலேயே வந்துடுச்சு. விஸ்வாசம்தான் அடுத்து வரப்போகுது!!!

   நீக்கு
  5. விஸ்வாசம்னு ஒரு படமா? ஙே!!!!!!!!

   நீக்கு
  6. ஹிஹிஹி... அஜித்குமார் படம்!

   நீக்கு
  7. //என்னவோ திடீர்னு ஃபர்ஷ்ட்ட்டு வரணும்ங்கற ஆர்வம் இல்லை//

   சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்... கர்ர்ர்ர்ர்ர்ர்

   போட்டி போட்டு வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... பின்வாங்காதீங்க. காலை வணக்கம்.

   நீக்கு
  8. பின் எல்லாம் வாங்கறதில்லை. ஊசி, நூல் போட்டுத் தைச்சுடுவேன். இரண்டு நாளா மத்தியானங்களில் அதான் வேலை! :)))))

   நீக்கு
 6. // அவங்கவங்க பெட்டிய அவங்கவங்க தூக்கிக்கோங்கப்பா... //

  தத்துவம்...தத்துவம்!...

  பதிலளிநீக்கு
 7. அட! சுதீப் நம்ம வெங்கட்ஜி சொல்லும் ஓட்டுநர் ஆச்சே!!!

  அப்ப குஜராத்....அந்தப் பக்கங்களோ!?

  கீதா

  பதிலளிநீக்கு
 8. இடம் கண்டு பிடிச்சுட்டேன்...கௌஹாத்தி!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கௌஹாத்தியா? அப்படியா? எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

   நீக்கு
 9. நம்ம வெங்கட்ஜி சுத்துய ஊராச்சே!!!!

  வெஜ்....பேஜ் தெரிஞ்சுக்கிட்டாங்களா....ஹா ஹா ஹா ஹாஅ...

  கீதா

  பதிலளிநீக்கு
 10. திரு கேஜிஎஸ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவங்க போயிருக்கும் இடம் சிக்கிம்? அல்லது வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா அக்கா. எங்கள் பழைய அஞ்சு கேள்விகள் பதிவு உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்!

   நீக்கு
  2. இதைத்தான் சொன்னேன். அந்த மாமா கொடுக்கும் பதிவுதான் இது!

   http://engalblog.blogspot.com/2012/05/blog-post_08.html

   நீக்கு
  3. நான் எங்கே போனாங்கனு கேட்டதுக்கு ஐந்து கேள்விகள் பதிவு சிபாரிசா? எங்கே போனங்கனு கண்டு பிடிச்சா? என்ன சொல்வீங்களோ! அந்தப் பதிவிலே ஏற்கெனவே 3 கருத்துச் சொல்லி இருந்திருக்கேன். இப்போப் போய் இன்னும் 2 சொல்லி ஐந்து கருத்துனு பதிஞ்சுட்டு வந்தாச்சு.

   நீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 12. பயணம் எங்கே என்று கொஞ்சம் தெரிகிறது.
  பயணம் செய்த போது எடுத்த படங்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது.
  படங்களுக்கு கீழ் கொடுக்க பட்ட வரிகளும் ரசிக்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
 13. இன்று பிறந்த நாள் காணும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 14. ஆசிரியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 15. படங்களும் வரிகளும் அருமை. திரு கேஜி கெளதமன், திரு கேஜிஎஸ் ஆசிரியர்கள் இருவருக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 16. நேற்று கௌதமன் சார் பிறந்த நாள். இன்று.... கேஜி அவர்களின் பிறந்த நாள்...... நல்லவேளை நினைவுக்கு வந்துவிட்டது... என் பையனின் பிறந்த நாளும் தொடர்ந்து எங்கள் திருமண நாளும் வர இருப்பது...

  கேஜி அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துகள். படங்களோடு அவரே ஓரிரு வரிகள் எழுதணும்னு கேட்டுக்கறேன். Guess work அவ்வளவு சுவாரசியம் தராது. அதுக்காக நீண்ட பயடக் கட்டுரை எழுத நேரமில்லாமலிருக்கலாம், ஓரிரு வரிகளாவது ஒவ்வொரு படத்துக்கும் எழுதவும்.

  பதிலளிநீக்கு
 17. கேஜிஎஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  சோலார் விளக்குகள் படம் அருமை.

  பதிலளிநீக்கு
 18. கேஜிஎஸ் சாருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். குவஹாட்டியில் எத்தனை நாள் தங்கல்?

  பதிலளிநீக்கு
 19. கே.ஜி.எஸ். அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  ஆஹா கௌஹாத்தி வரை விமானப் பயணமா... மகிழ்ச்சி. அங்கே சில இடங்களுக்குச் சென்று வந்தேன் சில வருடங்கள் முன்னர். ஆறாவது படம் - கௌஹாத்தி என்பதைச் சொல்லி விட்டது. வட கிழக்கு மாநிலங்கள் சிலவற்றுக்கு இங்கே வரை விமானத்தில் வந்து சாலைப் பயணம் செல்ல வேண்டும்.

  படங்கள் சிறப்பு. செல்ஃபி எடுக்கும் கடமையைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்! :) மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட, ஆமாம் இல்ல! ஆறாவது படத்தை இப்போத் தான் கவனிச்சேன்.இஃகி, இஃகி.

   நீக்கு
 20. அருமையான காட்சிகள் பாராட்டுக்குரியது

  பதிலளிநீக்கு
 21. நடப்பதெல்லாம் தெரிந்துவிட்டால் எங்கே ரசனை போகுமிடம் தெரிந்துகொண்டால் சுவரசியம் குறைந்து விடும்

  பதிலளிநீக்கு
 22. நிச்சயம் இந்தியாதான் அதிலும் அசாமாக இருக்க அதிக வாய்ப்பு தலையில் ஹெல்மெட் இல்லாமல் போகிறார்களே

  பதிலளிநீக்கு
 23. புகைப்படங்கள் விளக்கம் பெற்றுள்ளன. போகும் இடம் பற்றி விளக்கம் வரவேண்டும்.. அடுத்த பதிவில்..

  பதிலளிநீக்கு
 24. படங்களும் காப்ஷங்களும் அருமை. போர்ட்ல இருக்கே கௌஹாத்தி.

  கேஜிஎஸ் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 25. படங்களின் கோர்வை அருமை/வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!