வரப்ரசாதம் என்று ஒரு படம். 1976 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.
ரவிச்சந்திரன், விஜயகுமார் ஜெயசித்ரா நடித்தது. இதை தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட்டில் வசித்தபோது மாதாந்திர யூனிட் திரைப்பட வரிசையில் பார்த்திருக்கிறேன். ஆனால் கதை சுத்தமாக ஞாபகமில்லை.
ஆனால் இந்தப் பாடல் இன்றும் நினைவில் இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலை வலம்புரி ஜான் எழுதி இருக்கிறார்! இந்தப் பாடல் உட்பட மற்ற இரண்டு பாடல்களை புலமைப்பித்தன் எழுதி இருக்கிறார்.
காட்சியுடனும் பாடல் இருக்கிறது. என்ன BHபாவம் காட்டுகிறார் என்றே தெரியாத முகபாவத்துடன் ரவிச்சந்திரன். ஒல்லியான ஜெயசித்ரா. ஆனால் காட்சி வேண்டாம் என்று முடிவு செய்து பாடலை மட்டும் பகிர்கிறேன்.
பாடலைப் பாடி இருப்பவர்கள் கே ஜே யேசுதாஸ், வாணி ஜெயராம்.
இசை ஆர். கோவர்த்தனன். உதவி இளையராஜா!
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணின்மணி சீதை தானும் தொடர்ந்தாள்,
மெல்ல நடந்தாள்....
கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல
விதி என்னும் காற்றில் பறிபோவதல்ல
மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
மாணிக்கப் பாவை நீ வந்த வேளை
நினையாததெல்லாம் நிறைவேற கண்டேன்
அன்பான தெய்வம் அழியாத செல்வம்
பெண் என்று வந்தால் என்னென்று சொல்வேன்
மணியோசை கேட்டு மணமாலை சூட்டி
உறவான வாழ்கை நலமாக வேண்டும்
நடமாடும் கோவில் மணவாளன் பாதம்
வழிபாட்டில் வேகம் விழி சொல்லும் பாவம்
திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்
ஆனந்த பூஜை ஆரம்ப வேளை...
இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் எல்லாருக்கும்! ..
பதிலளிநீக்குகீதா
இனிய மகிழ்வான காலை வணக்கம் கீதா ரெங்கன். வருக வருக...
நீக்குகோவர்த்தன் நு ஒரு இசையமைப்பாளரா?!!!! கேட்டதே இல்லை ஸ்ரீராம்...அட அவரிடம் இளையராஜா பணியாற்றியிருக்கிறாரா!! தகவல் எல்லாமே புதுசு. படம் பற்றி நோ ஐடியா...பாட்டு கேட்டுக் பார்க்கிறேன்...
நீக்குகீதா
கீதா ரங்கன்... பழைய படங்கள்ல, இசை மெல்லிசை மன்னர்கள், இல்லைனா எம்.எஸ்.வி என வரும்போது, உதவி கோவர்த்தன் என்று வரும். பாருங்கள்.
நீக்குஓ! கவனித்துப் பார்க்கிறேன் நெல்லை இனி.
நீக்குநன்றி நெல்லை.
கீதா
பாட்டு முதல் லைன் மட்டும் கேட்டேன் ஸ்ரீராம். இந்தப் பாட்டு கேட்டிருக்கிறேன்...அருமையான பாடல்...இப்ப கேட்க முடியாதே முழுவதும்..அப்புறமா கேட்டுட்டு வரேன்....
பதிலளிநீக்குமைக் இல்லாத ஹெட் செட் மைத்துனர் கொடுத்தார் அதை மொபைல்ல போட்டுக் கேட்ட்டுட்டு வரேன்...
கீதா
நிறைய கேட்டிருக்கேன் ஸ்ரீராம்..அப்ப அதான் இலங்கை வானொலி உபயம்.
நீக்குஅதுக்கு அப்புறம் இப்பத்தான் கேட்கிறேன்....
கீதா
அதுசரி கீதா... ராகம் சொல்லவில்லையே....!!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். ஓய்வில் இருக்கும் கீதா சாம்பசிவம் மேடத்துக்கும்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் நெல்லைத்தமிழன்.
நீக்குஆமாம் கீதாக்கா ஓய்வெடுக்கிறாங்க. ப்ரிஸ்கா வந்துருவாங்க...
நீக்குகீதா
பலமுறை கேட்டு ரசித்த அருமையான பாடல் ஜி
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
நீக்குஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஉ.... மை பேவரிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் சோங்.... என்ன ஒரு அருமையான பாட்டூஊஊ கேட்க கேட்க இனிமை:)... இதைச் சொல்லவே முழிப்பு வந்து ஓடிவந்தேன்ன்ன்ன்....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நாளை வாறேன்ன்ன்.
பதிலளிநீக்குஎன்ன இது யாரையும் காணம்ம்ம்ம்?:)(கீசாக்காவுக்கு மட்டும்தான் கேய்க்கத் தெரியுமோ?:)))
நீக்குபாட்டைப் பலமாப் போட்டிட்டு, ஓவர் சத்தமா இருக்கே என த்றீராம் தூரப் போயிட்டாரோ:)...
இல்லை அதிரா... கொஞ்ச நாட்களாகவே பிஸி...
நீக்குவரவேண்டிய நேரத்துக்கு (முடிந்தவரை) சரியாக வந்துவிடுகிறேன்!
படம் பெயர், பாடல் எல்லாமே புத்தம்புதுசு. இன்னிக்கு யாரையும் காணோமே?
பதிலளிநீக்குஹை இப்பத்தான் மேல நெல்லைக்கு சொல்லிட்டு வந்தேன் கீதாக்கா ப்ரிஸ்கா வந்துருவாங்கனு கீழ வந்தா உங்க கமென்ட்!!!! ஓய்வு நல்லா எடுத்தீங்களா அக்கா? ஃப்ரெஷ்??
நீக்குஹா ஹ ஹா ஹா கீதாக்கா...யாரையும் காணோமா..வந்திருக்காங்க துரை அண்ணா தான் காணலை. கொஞ்சம் மெதுவா வருவார்....அதிசயமா அதிரடி வந்துட்டு ஃபர்ஸ்டுனு வேற குரல் எழுப்பிட்டுப் போய்ட்டாங்க...மேல பார்க்கலை போல!!!!!!!
சரி இனி அப்பால வரேன்...
கீதா
வாங்க கீதாக்கா...
நீக்குநலம் வாழ்க...
பதிலளிநீக்குநலமே விளைக...
நீக்குநல்ல பாடல்... படம் பார்த்ததில்லை...
பதிலளிநீக்குஜெய சித்ரா அன்றைய படங்களில் துள்ளலாக நடித்திருப்பார்.. ஆனாலும் சற்று அதிகமோ என்று தோன்றும்..
அந்தக் கால க.க.. அல்லவா!..
//அந்தக் கால க.க.. அல்லவா!..//
நீக்குஆமாமாமாமாம்!
படம் பார்த்த எனக்கு எந்த நினைவும் இல்லை. பாடல் மறக்கவில்லை!
நல்ல பாடல்! அந்த கால கட்டத்தை தமிழ் சினிமாவின் இருண்டகாலம் எனலாம். வயதான ஹீரோக்கள் குண்டு ஹீரோயின்களோடு சகிக்க முடியாத டோப்பா வைத்துக்கொண்டு மிகையாக நடித்துக் கொண்டிருந்தார்கள். பாரதிராஜாவும், பாலு மகேந்திராவும் வந்த பிறகுதான் நிலமை மாறியது.
பதிலளிநீக்குஅநியாயமா இப்படி எழுதறீங்களே பானுமதி வெங்கடேச்வரன் மேடம்..... குண்டு/வயதான ஹீரோ என்றால் முதலில் நம் கண்ணில் வருவது ஜிவாஜிதானே. குண்டு ஹீரோயின் என்றால் சாவித்திரி. மிகை நடிப்பு - சொல்லவே வேண்டாம்.
நீக்குஅது சரி... இயக்குநர் ஸ்ரீதர் தானே, புதியவர்களை இளையவர்களைப் போட்டு படம் எடுத்தது. அவர் படத்தில்தானே நிறைய இளைஞிகளை ஹீரோயினாப் போட்டார்... அவரை விட்டுவிட்டு, ஸ்ரீதேவி, ரத்தி போன்றோருக்காக பாரதிராஜாவையும் பாலுமகேந்திராவையும் புகழ்கறீங்களே... பாரதிராஜா அறிமுகப்படுத்திய ராதிகாவின் முதல் படத்தைப் பார்த்தீங்களோ? பாலுமகேந்திரா, பெரும்பாலும் அவருடைய மனைவிகளைத்தானே ஹீரோயினாக நடிக்கவைத்தார்?
என்ன நெ.த. ஒரேயடியாக பொய்ங்கிட்டீங்க?
நீக்குசிவாஜி, சாவித்திரியின் பொற்காலம் 60களிலேயே முடிந்து விட்டது. சிவாஜி மட்டுமல்ல எம்.ஜி.ஆர், ஜெமினி போன்றவர்களின் காலமே 60களில் முடிந்து விட்டது. அடுத்த வரிசை நாயகர்களான ஜெய்சங்கர், முத்துராமன்,ரவிசந்திரன் போன்ற முகம் முற்றிப்போன நாயகர்கள்தான் 70களில் ஹீரோக்கள்.
சிவாஜிக்கு ஈடு கொடுக்க நாயகிகள் கிடையாது. இருந்த ஒரு கே.ஆர்.விஜயா ஒல்லியாகவா இருந்தார்?
அப்போது தலையெடுத்திருந்த கமல்ஹாசன் கையில் ஒரு மைக்ரோ, கிடாரோ கொடுத்து ஆடவிட்டுக் கொண்டிருந்தார்கள்.
பாரதிராஜாவும், பாலு மகேந்திரா வரும் வந்த பிறகே தான் புதிய கதைக்களம், இளமையான ஹீரோ, ஹீரோயின்கள், யதார்த்தமான நடிப்பு இவையெல்லாம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாயின.
கி.போ.ரயிலில் ராதிகா குண்டாகத்தான் இருந்தார். ஆனால் கிராமத்து வெகுளிப்பெண் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தினாரா இல்லையா?
பாலு மகேந்திரா தன் மனைவிகளை கதாநாயகியராக்கினாரோ, அல்லது தன் படத்தில் கதாநாயகிகளாக படித்தவர்களை மனைவியாக்கிக் கொண்டாரோ? படம் நன்றாக இருந்ததா இல்லையா?
செல் போனில் டைப்புவதால் பிழைகள் அதிகமாக இருக்கின்றன.மன்னிக்கவும்.
நீக்குபரவாயில்லையே... எம்ஃபில் பண்ணற அளவு ஆராய்ந்து வச்சிருக்கீங்க (ஒருவேளை இதில் எம்ஃபில் பண்ணியருக்கீங்களோ?) அந்த வரிசைலகூட செல்போனைத் தட்டிவிடற சிவகுமாருக்கு இடமில்லையா?
நீக்குவாங்க பானு அக்கா... நீங்கள் சொல்லி இருக்கும் தகவல்களை கூகுளை வைத்துதான் சரிபார்க்கவேண்டும்!!!!
நீக்குநல்ல பாடல்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஅருமையான பாடல்
பதிலளிநீக்குநன்றி நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்.
நீக்குஅருமையான பாடல்
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குபாடல் இனிமை. பல முறை கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குஇன்றும் கேட்டு மகிழ்ந்தேன். உறவினர் வருகையால் மீனாட்சி கோவில் மற்றும் கோவில் உலா.
பதிலளிநீக்குஎன்ஜாய் கோமதி அக்கா.
நீக்குபடத்தின் நோட்டிசு இணையத்திலிருந்தா
பதிலளிநீக்குஆமாம் ஜி எம் பி ஸார்.
நீக்குநல்ல, இனிமையான பாடல் தேர்வு ஸ்ரீராம்! படங்கள் என்று மட்டுமில்லை ,பழைய கதையை நினைவு வைத்துக் கொள்வது கொஞ்சம் சிரமம்தான்!
பதிலளிநீக்குஅப்படியும் சொல்ல முடியாது கிருஷ் ஸார்... சில கதைகள் நன்றாகவே நினைவிருக்கும்! பாடல் உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி கிருஷ் ஸார்.
நீக்குஜேசுதாஸ் வாணி ஜெயராமுக்காக மட்டும் இந்த பாட்டை முழுசா கேட்டேன் :)) அருமையான பாடல் அண்ட் இசை
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சல்... இளமையான ஜேசுதாஸ் குரல். ரொம்ப ரசிக்க வைக்கும்.
நீக்குபடம் பேரு கேள்விப்பட்டிருக்கேன்., பாட்டு நினைவில் இல்லை சகோ
பதிலளிநீக்குவாங்க ராஜி. பாட்டு கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி.
நீக்குஇனிய பாடல். காணொளி இல்லாததற்கு நன்றி.
பதிலளிநீக்குஎல்லோருடைய பின்னூட்டங்களும் கண்டேன்.
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
அன்புத் தோழி வந்திருப்பதால் எல்லாம் தாமதமாகிறது.
வாழ்க வளமுடன்.
வாங்க வல்லிம்மா.. தோழி வருகையா... கொண்டாடுங்கள்.
நீக்குநல்ல பாடல் ஸ்ரீராம் ஜி! கேட்டதுண்டு. படம் கூட பார்த்த நினைவிருக்கு ஆனால் கதை எதுவும் நினைவில் இல்லை. நாம் ரசித்துப் பார்க்கும் படங்களின் கதை, சீன் எல்லாம் தானே மனதில் நிற்கும். எனவே இது அப்படியான படம் இல்லை!.
பதிலளிநீக்குதுளசிதரன்
வாங்க துளஸிஜி... நீங்களும் ரசித்திருப்பது மகிழ்ச்சி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்தப் பாடல் கேட்டதில்லை.நினைவுக்குள் கேட்டதாக ஞாபகம் வரவில்லை.படமும் கேள்விப்பட்டதில்லை. இன்று தங்கள் பதிவின் மூலம் கேட்டு ரசித்தேன்.பாடலும் இசையும் நன்றாக உள்ளது.
நேற்று வர இயலவில்லை. அதனால் இன்று தாமதவருகை. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்தப் பாடல் அந்தக் காலத்தில் விவித் பாரதியின் விரும்பிக்கேட்டவை நிகழ்ச்சியில் அடிக்கடி ஒளி பரப்பாகும் . பாடல் வரிகளில் கோர்வையும் அர்த்தமும் உள்ளன .
பதிலளிநீக்குபழைய நினைவுகளை க் கொண்டு வந்த பதிவு