திங்கள், 4 மார்ச், 2019

"திங்க"க்கிழமை : வழுதநஞ்ஞா/நீளமான பச்சைக்கத்தரிக்காய் தொக்கு/ஊறுகாய் - கீதா ரெங்கன் ரெஸிப்பி

வழுதநஞ்ஞா/நீளமான பச்சைக்கத்தரிக்காய் தொக்கு/ஊறுகாய்


இந்தக் கத்தரிக்காய்/வழுதநஞ்ஞா தொக்கு அல்லது ஊறுகாய் செய்முறையைப் பற்றி எபி கிச்சனில் போட வேண்டும் என்று நினைத்துப் படம் எடுக்க முடியாமல் போனதால் அனுப்ப முடியாமல் இருந்தது. எங்கள் தளத்தில் ஏதோ ஒரு பதிவில் இதைப் பற்றிச் சொல்ல நம்ம ஜே கே அண்ணா அந்த ரெசிப்பி போடுங்க என்று கேட்டிருந்தார். சமீபத்தில் செய்தேன். படமும் எடுத்தாச்சு. அப்புறம் என்ன இதோ எபி கிச்சனிலிருந்து உங்களோடு மாத்தலாடிட்டுருக்கேன்.  இது ஆந்திரா ரெசிப்பி.  மாமியார் வீட்டில் இருந்தப்ப எப்போதோ சன் டிவியில் ஸ்டார் சமையல் என்று வந்ததில் இந்தச் செய்முறை பார்த்த நினைவு. அந்த நினைவில் வீட்டில் செய்ததில் எல்லோருக்கும் பிடித்துப் போகவே அப்படியே பின்பற்றி வருகிறேன்.

அதாரு நாம் செய்த கத்தரிக்காய்க்குப் போட்டியாகக் கத்தரிக்காயின் பெயரை மாற்றிப் போட்டு ரெசிப்பி என்று எபி கிச்சனில்? பெயரை மாற்றிப் போட்டால்? கர்ர்ர்ர்ர்ர் என்று அதிரடியாக அங்க பாருங்க  தேம்ஸிலிருந்து பறந்து வராங்க!! அப்படினு இந்த ந்யூஸ் அவங்க செக் கொடுத்ததுதான்!  ப்ரூஃப்!! ஹா ஹா ஹா! 

Image result for cat jumping in to the kitchen gif

அவங்க வரதுக்குள்ள நாம செஞ்சு முடித்து ரெடியா வைச்சுருவோம்! இது மிக மிக சிம்பிள் செய்முறை.  

தேவையானவை

வழுதநஞ்ஞா/நீளமான பச்சைக்கத்தரிக்காய்  - 1/2 கிலோ



தேவையானவை

வழுதநஞ்ஞா/நீளமான பச்சைக்கத்தரிக்காய்  - 1/2 கிலோ
மிளகாய் வற்றல் - 100 கிராம் (நான் எடுத்துக் கொண்டது  50 கிராம்)  
புளி - 100 கிராம் ( நான் எடுத்துக் கொண்டது 50 கிராம். )

உப்பு - 3 டேபிள் ஸ்பூன் கல் உப்பு தலை தட்டி (நான் எடுத்துக் கொண்ட இந்த அளவு மிளகாய் வற்றல், புளிக்கு ஏற்ப இந்த அளவு உப்பு. எனவே எடுத்துக் கொள்ளும் மி வற்றல், புளிக்கு ஏற்ப அளவை மாற்றிக் கொள்ளவும்)

நல்லெண்ணை/சமையல் எண்ணை -  1/2 கப் நல்லெண்ணை (நான் இங்குச் சமையல் குறிப்பிற்கு எடுத்துக் கொள்வது எப்போதுமே செட்டாக வரும் அளவு கப் மற்றும் அளவு ஸ்பூன்கள். படத்தில் உள்ளன)

கடுகு  மற்றும் கறிவேப்பிலை - கறிவேப்பிலை நான் நிறைய எடுத்துக் கொள்வது வழக்கம். இங்கு படத்தில் உள்ள தட்டில் இருக்கும் அளவு எடுத்துக் கொண்டேன். இங்கு பங்களூரில் நம் வீட்டில் குளிர்சாதனப்பெட்டி இல்லாததால் கறிவேப்பிலை வெளியில் இருந்தாலும் வாடுவதில்லை, அழுகிப் போவதும் இல்லை. ட்ரை வெதர் என்பதால் காய்ந்து இருக்கும். நல்ல மொறுமொறுவென்று இருக்கும்.  கையால் பொடித்தால் நன்றாகப் பொடிந்துவிடும்.  இதோ மிளகாயுடன் இருப்பது கொஞ்சம் காய்ந்த கறிவேப்பிலை. அடுத்துத் தனியாக இருப்பது கையால் பொடித்த கறிவேப்பிலை.


100 கிராம் மிளகாய் வற்றல் போட்டால் நல்ல காரமாக நன்றாக இருக்கும்தான். 100 கிராம் புளியும் போட வேண்டும். ஆனால் நம் வீட்டில் அத்தனை காரம் ஒத்துக் கொள்ளாது என்பதால் 50 கிராம் எடுத்துக் கொள்வது வழக்கம்.  மி வற்றல் எவ்வளவோ அவ்வளவு புளி. 75 கிராம் மிளகாய் வற்றல் போட்டும் செய்யலாம். 75 கிராம் புளி. இது அதிகம் காரமும் இல்லாமல் ஆனால் காரம் தேவைப்படுபவர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும். ஆனால் கத்தரிக்காய் 1/2 கிலோ. 


கத்தரிக்காய் 1/4 கிலோ எடுத்துக் கொண்டால் இந்த அளவிலிருந்து உங்களுக்குத் தேவையான மிளகாய் வற்றலையும் புளியையும் கணக்குச் செய்து எடுத்துக் கொள்ளலாம். இந்த அரைக்கிலோ கத்தரிக்காய்க்கு 25 கிராம் மிளகாய் வற்றல் 25 கிராம் புளி என்பது கொஞ்சம் சுவை குறையும் என்று நான் சொன்னாலும் உங்கள் சுவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம்.    

 செய்முறை 

கத்தரிக்காய்களின் காம்பை நீக்கி விட்டு நன்றாகக் கழுவி விட்டு ஈரம் போக நன்றாகத் துடைக்க வேண்டும். இது மிக மிக முக்கியம். ஈரம் இருக்கக் கூடாது. 




அடுத்து, கத்தரிக்கயைச் சிறிய சைசில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.  (படம் : நான் கட் செய்ததை விடவும் சிறியதாகக் கட் செய்து கொள்ளலாம்.) அடுத்து அடுப்பைப் பற்ற வைத்து, வாணலியில் நறுக்கியக் கத்தரிக்காய் வதங்கத் தேவையான அளவு நல்லெண்ணை அல்லது சமையல் எண்ணை விடவும். நான் இரண்டு டேபிள் ஸ்பூன் விட்டுக் கொண்டேன். 

உடனே செலவழியும் என்றால் சமையல் எண்ணையைப் பயன்படுத்தலாம். கொஞ்சம் நாள்பட வேண்டும் என்றால் நல்லெண்ணை நல்லது. மட்டுமல்ல இது போன்றவற்றிற்கு நல்லெண்ணைதான் சுவையாக இருக்கும் என்பதால் நான் நல்லெண்ணைதான் பயன்படுத்துவது வழக்கம்.

நல்லெண்ணை விட்டு அதில் நறுக்கிய கத்தரிக்காய்களைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.  மிக மிக முக்கியமானது என்னவென்றால் தண்ணீர் தெளிக்கக் கூடாது. மூடி வைத்தும் வதக்கக் கூடாது. எண்ணையில் மட்டுமே வதக்க வேண்டும்.  கலர் மாறி வெந்து விட்டது என்று தெரிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிட வேண்டும். 



வதக்கியது ஆறும் நேரத்தில்   மிளகாய், புளி மற்றும் உப்பு இவற்றை அப்படியே, வறுக்காமல்,  மிக்ஸியில் நன்றாகப் பொடித்துக் கொள்ள வேண்டும்.   பொடித்ததும் நன்றாக ஆறியிருக்கும் கத்தரிக்காயையும் போட்டுக் கொஞ்சமே கொஞ்சம் சுற்றி எடுக்க வேண்டும். ரொம்ப நைஸாக அரைக்க வேண்டும் என்றில்லை. நன்றாக ஆறி இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். இல்லை என்றால் மிக்ஸியில் அரைக்கும் போது வியர்த்து விடும். நீர்த்துளிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.


இப்போது மீண்டும் அடுப்பைப் பற்ற வைத்து வாணலியை வைத்து அதில் அரைக் கப் நல்லெண்ணையை ஊற்றி அது நன்றாகக் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு போட்டு வெடித்ததும் பொடித்து வைத்திருக்கும் கறிவேப்பிலையைப் போட்டு அடுப்பை அணைத்துவிடவும். இதோ கீழே படம்.

                                                                                                                                                                                                      அடுப்பை அணைத்து விட்டு எண்ணையைக் கொஞ்சம் ஆறியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் கத்தரிக்காயுடன் கலந்தும் செய்யலாம்.  அல்லது அடுப்பை அணைத்ததும் அரைத்து வைத்திருக்கும் கத்தரிக்காய்க் கலவையைப்  போட்டுப் பிரட்டியும் வைத்துவிடலாம்.  இது உங்கள் விருப்பம். எப்படிச் செய்தாலும் நன்றாகவே இருக்கும்.  நான் இரு முறையிலும் செய்வேன். இம்முறை அடுப்பை அணைத்ததும் கத்தரிக்காய்க் கலவையை எண்ணையில் போட்டுப் பிரட்டி வைத்துவிட்டேன். இதோ படத்தில் உ ள்ளது போல.  அவ்வளவுதான்.





இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். மிக மிக டேஸ்டியாக இருக்கும். தோசை, இட்லி, சப்பாத்தி என்று எதற்கும் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். நான் பிரயாணத்திற்குச் சப்பாத்தி செய்தால் இதையும் செய்து எடுத்துக் கொள்வதுண்டு.  
சரி டேஸ்ட் செய்துட்டு சொல்லுங்க!        
                                                                                                                                                                                                                                                                                                                           

73 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும்எல்லாருக்கும்! ..
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் மிக்க நன்றி!!! ரெசிப்பி வெளியிட்டமைக்கு...

      இன்னும் காபி ஆத்தலை...என்றாவது ஒரு நாளை ப் பார்த்துக்கிட்டுருக்கேன்...மிஸ் ஆன ஒன்று!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. சன் டிவி ஸ்டார் சமையல் நன்றி!

      இது பதிவுல கடைசில டைப்பிருந்தேன்...அது பாருங்க காப்பி பேஸ்ட் செய்யும் போது விட்டுப் போயிருக்கு...

      ஃபான்டும் ஏனோ அங்கங்கு சிறியதா போச்சு. ஸ்ரீராம் இத்தனைக்கும் இம்முறை ப்ளாகரிலேயே தான் தட்டச்சு செய்தேன். அது படங்கள் இணைக்கும் போது ஏனோ சரியா வரலை நடனம் ஆடத் தொடங்கியது. அப்புறம் வழக்கம் போல வேர்டில் அடித்து காப்பி பேஸ்ட் செய்து போட்டு படங்களை இணைத்தேன்...பல சமயங்களில் இப்படி ஆகிறது. எங்கள் வலைப்பதிவிலும் சரி இப்படித்தான் ஃபான்ட் மாறிப் போகுது...எனக்குத்தான் இப்படித் தெரியுதா இல்லை மற்றவர்களுக்கும் தெரியுதா என்று தெரியலையே...

      இப்பல்லாம் பதிவு எழுதிட்டு மீண்டும் செக் செய்வது பல சமயங்களில் விட்டுப் போகுது...

      ஸ்ரீராம் நீங்களும் ரொம்பப் பொறுமையா எங்க எல்லாரது பதிவுகளையும் போட்டு ஷெட்யூல் செய்து ....சல்யூட் உங்க பொறுமைக்கு!

      கீதா

      நீக்கு
    4. எழுத்துக்கள் மிக சிறியது பெரியதுமாக இருப்பதால் படிக்க முடியவில்லை.. ப்ளாக்கரில் டைப் செய்தாலும் பதிவு வெளிடுவதற்கு முன்பு செல்க்ட் ஆல் கொத்து செலக்ட் செய்து பாண்ட் சைஸை மீடியம் லார்ஜ் என்று ஏதாவது ஒன்றை செலக்ட் செய்தால் இப்படி பிரச்சனைகள் வராது கீதா சேச்சி

      நீக்கு
    5. மறுபடி மறுபடி சரியாக்க முயற்சி செய்தேன். அப்படியே இருக்கிறது.

      நீக்கு
    6. ஆஆஆஆஆஆஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மதுரை இதென்னாது...நீங்களுமாஆஆஆஆஆஆஆஅ சேச்சின்னு!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... ஹா ஹா ஹா ஹா ஹா....இந்த நெல்லைதான் என்ன அப்பப்ப அக்கா நு சொல்லிக் கடுப்பேத்துவார்....நீங்களுமா சரி சரி...வேற ஒன்னுமில்ல அதிரா முன்னாடி நீங்க என்னை சேச்சினு சொன்னதுதான்..ஹா ஹா ஹா ஹா

      உங்கள் பாயிண்டை எடுத்துக் கொண்டேன். மதுரை அது செலக்ட் செய்து ஃபான்ட் மாத்தியும் படங்கள் இணைக்கும் போதுதான் பிரச்சனை வந்தது. அது போல படங்களும் முதலில் சரியாகப் ப்ளேஸ் ஆகாம...

      அடுத்த முறை போஸ்ட் எழுதி முடிச்சதும் படங்கள் இணைத்தப்புறம் ப்ரிவ்யூ பார்த்து உங்கள கருத்தையும் மனதில் கொண்டு சரி செய்து அனுப்பறேன்...பப்ளிஷ் செய்யறேன்...

      மிக்க நன்றி மதுரை...

      கீதா

      நீக்கு
    7. ஸ்ரீராம் பரவால்ல விடுங்க...உங்க வேலைப் பளு பல பிரச்சனைகளூக்கு நடுவில இப்படி பதிவுகள் செட் செய்து போடுவதே பெரிய விஷயம்....ஸ்ரீராம். ப்ளாகரின் படுத்தல் நன்றாகவே தெரியும்..அதுவும் என் ஃபான்ட் உங்கள் ப்ளாகர் போர்டில் போடும் போது இப்படியாகும்...அதே போல எனக்கும் நான் வேர்டில் அடித்துவிட்டு ப்ளாகரில் போடும் போதும் சில சமயம் ஃபான்ட் சைஸ் மாறி மாறிப் போகும் சரி செய்யவே முடியாமல் போகும். ஒரிரு பதிவுகளுக்கு முன் என் பதிவிலும் கூட அப்படி கீதாக்கா சொல்லிருந்தாங்க சின்னதா இருக்கு படிக்க முடியலைனு...

      .பரவால்ல விட்டுருங்க...போனா போகுது....சிரமப்பட வேண்டாம் ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
    8. நெல்லை சாரி...."கடுப்பேத்துவார் கலாய்ப்பார்னு டைப்பி போட்டதில் திருத்தம் செய்தப்ப கலாய்ப்பார் விட்டுப் போச்சு...கடுப்பு மட்டும் வந்திருக்கு...சாரி நெல்லை...நான் உங்கள் கலாய்த்தலை - எல்லோருடைய கலாய்த்தலையும் ரசிப்பேனே தவிர நோ கடுப்ஸ்!!

      கீதா

      நீக்கு
    9. நெல்லை ஐயா இங்கு எங்கே வந்தார்...? ஓ உங்கள் கருத்துரையில் வந்துள்ளார்...! அப்புறம் உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவில்லையா...?

      // மகிழ்வான காலை வணக்கம் // இதன் "template comment" இங்கே இருக்கட்டும்... அது இன்றைய "அலேக் அனுபவங்கள்"-லும் தேவையா...? அங்கு பதிவிட்ட விசயம் என்ன...? திரு அப்பலராஜு அவர்கள் இன்று இல்லை என்பதே... அங்கும் // மகிழ்வான காலை வணக்கம் // மா...? பதிவை படித்து விட்டு கருத்துரை தந்தால் நலம், அங்கு மட்டுமல்ல, எங்கும் "வாழ்க நலம், வணக்கம், குட்டு Morning, காப்பி ஆத்துறேன், toilet போயிட்டு பிறகு வர்றேன், வேலை அதிகம்" என்று சிலர் ஆரம்பிக்கவில்லை... இந்த கருத்துரை ஒரு ஆரம்ப எடுத்துக்காட்டே...இப்படி போனால்... ஓஹோகயா...!

      இப்படிக்கு...
      முன்னாள்(ல்) பின்ஊட்ட புயல்...
      நன்றி...

      குறிப்பு : புரியா விட்டாலும் சந்தோசப்படுவேன்...

      நீக்கு
    10. டிடி மிக்க நன்றி நீங்கள் சுட்டிக் காட்டியமைக்கு. கௌ அண்ணாவுக்கும் சொல்லிட்டேமன்.

      அவர் தவறாக நினைப்பரும் அல்ல.

      நான் பதிவை வாசிக்காமல் கருத்து போடுபவள் அல்ல. வாசித்து கோட் செய்தும் கருத்து போடுவேன் எந்த தளத்தில் கோட் செய்ய முடிகிறதோ அங்கு அந்த வரிகளைக் கோட் செய்தும் போடுவது....வழக்கம்.

      இன்று காலை இங்கும், எங்கள் தளத்தில் உள்ள பதிவிற்கும் கருத்து போட வேண்டும். மேலும் இன்று இங்கு லீவு. எனவே வீட்டில் வேலைகள் என்று இருந்ததால் நீங்கள் சொன்ன பிறகுதான் கௌ அண்ணாவின் பதிவையே முழுவதும் வாசித்தேன். அங்கு கருத்தும் சொல்லிவிட்டேன்.

      மிக்க நன்றி டிடி.

      கீதா


      நீக்கு
    11. @ திண்டுக்கல் தனபாலன்:
      சனிக்கிழமை பதிவுக்கு (’லட்சியம் உயர்வாய் இருந்தால்..’) நீங்கள் இன்று இட்டிருக்கும் அடுத்த பின்னூட்டத்திற்கும், அங்கே போய் சற்றுமுன் பதில் போட்டிருக்கிறேன். வாசிக்கவும். நன்றி.

      நீக்கு
  2. பச்சைக் கத்தரிக்காய் எல்லாம் தேடிப் போனாலும் கிடைப்பதில்லை...

    கிடைக்கும் வகையில் செய்து பார்க்க வேண்டியது தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா வாங்க வணக்கம்! மற்ற கத்தரிக்காயிலும் செய்யலாம்... செஞ்சு பாருங்க...

      ஈசி, கத்தரிக்காய் தவிர மற்ற பொருட்கள் எதுவும் வதக்க வேண்டாம்....அப்படியே அரைத்து செய்யலாம்..

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அன்பு கீதா,பச்சைக் கத்திரிக்காயில் செய்திருக்கும் ஊறுகாய் பார்க்கவே அருமையா இருக்கிறது. உங்களது அக்கறையாகக் கொடுக்கப் பட்டிருக்கும் அளவு முறை,
    சுவாரஸ்யம்.
    செய்துடலாம்.
    என் கத்திரிக்காய் ஊறுகாய் சின்ன வெங்காயம் இரண்டு பூண்டு போட்டு
    ப .மிளகாய் சேர்த்து செய்வது வழக்கம்.
    அது வேறு ருசி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா உங்க ரெசிப்பியும் சும்மா அனுப்புங்க...படம் இல்லைனாலும் குறிப்புகள் மட்டுமாவது......நானும் சி வெ பூண்டு போட்டு செஞ்சுருக்கேன் கொஞ்சம் புளி வைத்து சி மிளகாய் போட்டு..

      ப மி போட்டு செஞ்சதில்லை...அதுவும் போட்டு செஞ்சுடறேன்...

      மிக்க நன்றி வல்லிம்மா...

      கீதா

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. அதிரா பறந்து வருவது நன்றாக இருக்கிறது பார்க்க.
    கத்திரிக்காய் ஊறுகாய் செய்முறை படங்களுடன் மிக அருமையாக இருக்கிறது கீதா.
    இந்த பச்சை கத்திரிக்காய் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா அதிராவை நிறையவும், ஏஞ்சல், நெல்லை, ஸ்ரீராமை, கீதாக்காவை கொஞ்சமேனும் வம்புக்கு இழுக்கலைனா போர் அடிக்கிறது...நம் நட்புகள் எல்லோருமே டேக் இட் ஈசி பாலிசி வேறு...நாமும் வரம்பு மீறாமல் கலாய்ப்பதால் மனதிற்கு ஜாலியாக இருக்கு...அக்கா..

      செய்து பாருங்க கோமதிக்கா..

      பதிவு காணலியே. இன்று சிவராத்திரி உங்களிடம் இருந்து பதிவு வரும் என்று எதிர்பார்த்தேன்...

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  6. இது சுவையாக இருக்கும்போல்தான் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையாக இருக்கும் கில்லர்ஜி!

      மிக்க நன்றி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  7. உளுத்தம்பருப்பு சேர்த்திருந்தால் நாங்கள் எப்போதும் செய்யும் கத்தரி துவையல். இதுல அது இல்லை.

    மற்றபடி கைக்காத எல்லாக் கத்தரியும் இதுக்கு நல்லா இருக்குமே.

    நல்ல செய்முறை. செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை பருப்பு இல்லாதது மட்டுமில்ல கத்தரி தவிர மற்ற பொருட்களையும் வதக்கவோ, வறுக்கவோ வேண்டாம் பச்சையா அரைப்பது வித்தியாசமான சுவை...ஈசியும் கூட நெல்லை...

      எல்லாக் கத்தரிக்காய்க்கும் இது செட் ஆகும் நெல்லை. செஞ்சுருக்கேன்...பதிவுல அதுவும் விட்டுப் போச்சு...அதான் மேலே சொல்லிருக்கேன் பாருங்க இப்பல்லாம் பதிவு படம் இணைத்தல் எல்லாம் வேலை வாங்குது மற்ற பணிகளில் இதுவும்...ஸ்ரீராம் கு நிச்சயமா பெரிய பொக்கே கொடுத்து வாழ்த்தனும். ஸ்ரீராம்கு, அதிரா ஆண்கள் அணியும் ப்ளாட்டினம் ப்ரேஸ்லெட் போடறேன்னு சொல்லிருக்காங்க இல்லைனா ப்ளாட்டினம் வ்ரிஸ்ட் வாச் கொடுப்பதாகச் சொல்லிருக்காங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!இருங்க மாடல் கூட அனுப்பிருந்தாங்க ...இதுதான்.....

      https://www.googleadservices.com/pagead/aclk?sa=L&ai=DChcSEwiu6IXhy-fgAhWNHSsKHaEHDN0YABAoGgJzZg&ohost=www.google.com&cid=CAESEeD2DEkLzVhaUoO7RPtjCmdo&sig=AOD64_0pYDvL6QPSFA05_9_r6mIp5BMzLw&ctype=5&q=&ved=0ahUKEwiDs__gy-fgAhVOWH0KHelrAPUQ9aACCLQB&adurl=

      https://www.jewelove.in/products/heavy-platinum-bracelet-for-men-jl-ptb-641?variant=19439582707805&gclid=Cj0KCQiAk-7jBRD9ARIsAEy8mh6g9PB4T0F89MDvqLOP7qawICnk5RkMKHAlam1uDKENzE1CVqnidycaAg17EALw_wcB

      மிக்க நன்றி நெல்லை..

      கீதா

      நீக்கு
  8. பெயர் பயமுறுத்துவது போல தொக்கு பயமுறுத்தவில்லை. நல்லாவே இருக்கும்னு தோணுது கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா ஆந்திரா ரெசிப்பி....ஆனா கேரளத்து மற்றும் தமிழ்நாட்டுப் பெயருடன் ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம். பச்சை கத்தரிக்காயை நாங்கள் வெண்ணய் கத்தரிக்காய் என்போம். அதில் வதக்தல் கறி மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா ஆமாம் வதக்கல் கறி ரொம்ப நல்லாருக்கும்...எங்க வீட்டுலயும் மிகவும் பிடிக்கும்.

      அட வெண்ணைய்க் கத்தரிக்காய்...ஆமாம் கரீக்டுதான் இல்லை....இது மழு மழுனு இருக்குமே..

      கீதா

      நீக்கு
  10. கத்தரிக்காய் தொக்கு.... இதோ வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் பின்னூட்டம் படித்தா, கத்தரிக்காய்னா காத தூரம் ஓடிப்போயிடுவார் போலிருக்கு.

      எத்தனை தடவை செய்திருக்கோம், அப்பா, படிக்கவாடா என்று கூப்பிடும்போது, இதோ வரேன் என்று நழுவுவதை

      நீக்கு
    2. வாங்க வாங்க வெங்கட்ஜி!! நீங்க பிஸினு தெரியும்...மெதுவா வாங்க...இல்லைனா பார்த்துட்டு செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க...அப்படியே ஆதிக்கும் பாஸ் ஆன் செய்யுங்க!!

      நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
    3. நெல்லை ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்....நெல்லை பாவம் வெங்கட்ஜி! ரொம்பவே பிசியாக இருக்கார்...

      கீதா

      நீக்கு
    4. "கத்தரிக்காய் தொக்கு..."

      பெயரைப் படித்தார்....

      "இதோ வர்றேன்"னு ஓடியே போயிட்டார்!!!

      (நான் இந்த கமெண்ட்டை டைப்பிக்கொண்டு இங்கே வந்து பார்த்தால் நெல்லையும் அதையே சொல்லி இருக்கார்!)

      நீக்கு
    5. ஆஹா... இங்கே நம்ம கதை தான் ஓடுதா! :) இன்றைக்கு சிவராத்திரி என்பதால் விடுமுறை. வீட்டில் தான் இருக்கிறேன். வேலைகளை முடித்து விட்டு பொறுமையாக இப்போது தான் வந்து படித்தேன்!

      கத்திரிக்காய் கள்ளப் பருப்பு கூட்டு - அத்தைப் பாட்டி சூப்பராக செய்வார். அது எனக்கு பிடித்த உணவு. குண்டு/பெரிய கத்திரிக்காய் வைத்து இங்கே செய்யும் பேங்கன் கா பர்த்தாவும் பிடித்தது. அப்படியே வதக்கி வைத்தால் பிடிக்காது! மற்றபடி எந்தக் காயாக இருந்தாலும், இலையில் போட்டால் சாப்பிட்டு விடுவேன் - வீண் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை!

      இங்கே இந்த வகை கத்தரிக்காய் கிடைக்கிறது. செய்து பார்க்கிறேன் கீதா ஜி!

      நீக்கு
    6. வெங்க்ட்ஜி இது நல்லாருக்கும். செஞ்சு ஃப்ரிட்ஜில் வைச்சுக்கோங்க. எல்லாத்துக்கும் சைட் டிஷ்ஷா நல்லாருக்கும்...உங்களுக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும்..

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  11. சூப்பரா இருக்கு கீதா க்கா...நான் இப்படி ஒரு ரெசிபி பார்த்ததே இல்ல கண்டிப்பா செஞ்சு பார்த்து சொல்றேன் ...

    படங்கள் , குறிப்புகள் மிக நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனு....செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க!! நல்லாருக்கும் அனு...எல்லாத்துக்கும் நல்ல காம்பினேஷன்நு சாப்பிடுவாங்க எங்க வீட்டுல...

      கீதா

      நீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. கேரளத்தில் திருச்சூர் அடுத்து இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில் கூடல் மாணிக்கம் கோயில் என்று பரதனுக்கு ஒரு கோயில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை முக்குடி எனும் வழுதுணங்காய் நெய்வேத்யம் செய்யப்படும். இது வயிற்று கோளாறு உள்ளவர்களுக்கு மருந்தாக கொடுக்கப்படும். இந்தக்கோயில் நாலம்பலம் எனப்படும் யாத்திரையில் உள்ள இரண்டாவது கோயில் ஆகும். திருப்பிரயார் இராமர், கூடல் மாணிக்யம் பரதன் , மூழிக்குளம் லக்ஷ்மணன் , பாயம்மல் சத்ருக்கனன் என்று நான்கு கோயில்களை கர்கிடக மாதம் (ஆடி மாதம்) ஒரே நாளில் சென்று வழிபடுவார்கள்.

    http://hinduhints.blogspot.com/2012/03/some-prasadas-edible-offerings-becoming.html
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜேகே அண்ணா...ஒரு வழியா நீங்க எப்பவோ கேட்டதை நினைவு வைச்சுக்கிட்டு (ஹப்ப்பா இந்த கீதாவுக்கும் மெமரி கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகியிருக்கோ!!!) செய்யும் போது படம் எடுத்துப் போட்டுட்டேன்.

      நல்ல தகவல்கள் கொடுத்திருக்கீங்க அண்ணா. இது கேள்விப்பட்டதே இல்லை. ஒரே நாளில் சென்று வழிபடுவது பற்றி தெரியும் ஆனால் இந்த நெய்வேத்யம் பற்றி அறிந்ததில்லை. மிக்க நன்றி ஜேகே அண்ணா...

      சரி ரெசிப்பி பத்தி ஒன்னுமே சொல்லாம போய்ட்டீங்க.."படம் பார்த்து சொல்ல மாட்டேன்....செஞ்சு பார்த்துட்டு டேஸ்ட் செஞ்சப்புறம்தான் சொல்லுவேன்னு" சொல்றீங்களோ!! ஹா ஹா ஹா

      அதுவும் சரிதான்...ஆனா பயப்படாம செய்யலாமாக்கும்!!!!!!! ஹிஹிஹிஹி

      இந்த வழுதுணங்காய்.வழுதனைஞா ஸ்பெல்லின் அடிக்கறதுக்குள்ள நான் பட்ட பாடு...நீங்க ரொம்ப ஈக்பியா வழுதுணங்காய்னு தட்டச்சிட்டிங்க.

      மிக்க மிக்க நன்றி ஜேகே அண்ணா...

      கீதா

      நீக்கு
  14. புதிதாக இருக்கிறது செய்முறை... செய்து பார்ப்போம்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செஞ்சு பாருங்க டிடி...நல்லாருக்கும்....

      மிக்க நன்றி டிடி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  15. பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  16. எனனால் இந்த எக்ஸ்பெரிமெண்ட் எல்லாம் செய்யமுடியாது. வீட்டிலோ நாம் ஏதாவது சொன்னால் உங்களுக்கு வேற வேலை இல்லை என்ற பதில் வரும். இங்கு வழுதுணங்காய் எப்போதும் கிடைக்கும். அவியலில் சேர்ப்போம். பின்னர் மெழுகு வறட்டி செய்வோம்.
    எனக்கு ஊறுகாய் என்றால் ஆவக்காய் நெல்லிக்காய் எலுமிச்சை நார்த்தங்காய் களாக்காய் போன்றவைதான் பிடிக்கும். இவை நாள்பட நிலைத்து நன்றாக புளித்து நாக்கில் சுரீர் என்ற அதிர்ச்சியையும் கொடுக்கக் கூடியவை. அதே போன்று இஞ்சிப்புளியும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜேகே அண்ணா மிக்க நன்றி கருத்திற்கு. ஊறுகாய்கள் எல்லாம் ஆஹா போட வைக்கிறது. இஞ்சிப் புளியும் அந்த லிஸ்டில்...

      கீதா

      நீக்கு
  17. ஆஆவ்வ்வ்வ் இன்று கீதா ரெசிப்பியோ... கூம்மி அடிக்க முடியல்லியே.... முடியும்போதெல்லாம் எட்டிப் பார்க்கிறேன்ன்.... ஹா ஹா ஹா பூசார் பறக்கும் அழகோ அழகு:)... கண்ணுபடப்போகுது கா கா கா:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா பரவால்ல...இன்று எனக்கும் நேரம் இல்லை.சிவராத்திரி என்பதால்...இங்கு லீவு. அந்த பூஸார் நீங்கதானே...படாது படாது...

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  18. வழுநஞ்சா/// புதுப் பெயர்.. பேப்பிளில் கிடைக்குது, இப்படி பச்சையா பார்த்ததில்லை, இடையில் ரொம்ப குட்டி எழுத்துக்கள் கலந்திட்டீங்க கீதா.. மொபைலில் உத்துப் பார்க்க வேண்டி இருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ மீண்டும் சரி செய்து ஸ்ரீராமுக்கு அனுப்பி அவரும் இங்கு போட்டாச்சே...அதுக்கு முன்னரே யே பார்த்திட்டீங்க போல...இப்ப சரியாகிடுச்சு..

      கீதா

      நீக்கு
  19. ராத்திரீஈஈஈஈ சிவ ராஆஆஆத்திரி......
    அனைவருக்கும் சிவராத்திரி வாழ்த்துக்கள்... எல்லோரும் நித்திரை முழிக்கோBஉம் ஜொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
  20. பச்சைக் கத்தரிக்காயை நான் வாங்கிபாத் செய்வதற்காக தேடிக் கொண்டிருக்கிறேன் - கிடைத்தவுடன் ஒரு நாள் எனக்குப் புதிதான இந்த ரெசிபியையும் செய்து விடுகிறேன்! தாங்க்ஸ்!!
    கீதாஜி, 'வழுதநஞ்ஞா'வை நீங்கள் எப்படி ப்ரொனொன்ஸ் பண்ணுவீங்கன்னு கேட்க ஆசையா இருக்கு! :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமல் காசர் இதுக்கும் ஒரு சிம்பிள் ரூட் போட்டுக் கொடுத்திருக்கிறாரே! தமிழை மூக்கால் பேசினால் அது மலையாளம்! வழுதுணங்கா! இதை மூக்கால் சொல்லிப் பார்த்தால், உச்சரிக்க வந்துவிடுகிறது! :)))

      நீக்கு
    2. மிகிமா இந்த ரெசிப்பி செஞ்சு பாருங்க நல்லாருக்கும். வழுதனஞ்ங்கா...அது தமிழில் அடிப்பதற்குள் ஹா ஹா ஹா ஹா...

      சரி உங்களுக்கு எப்படி உச்சரிச்சு காட்டுவதுனு யோசித்துக் கொண்டிருக்கேன்..

      மிக்க நன்றி மிகிமா

      கீதா

      நீக்கு
    3. கிருஷ்ணமூர்த்தி சகோ..ஹா ஹா ஹா ....

      ஆனால் மலையாளத்தில் து அல்ல த தான் எழுதுகின்றார்கள்...உச்சரிக்கும் போது பேச்சு வழக்கில் த து வாகக் கேட்கிறது.

      கீதா

      நீக்கு
  21. மலையாளத்தில் கத்தரிக்காயை வழுதுணங்கா என்பார்கள் தலைப்பு என்னவோ போல் இருண்டது இந்த நீண்ட கத்தரிக்காயின் தோல் வந்து [படுத்தும் அதுவும்சின்ன சின்னதா கட் செய்திருந்தால் தோல் வரவில்லையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பச்சை வழுதுணங்காய் தோல் மெலிதாக இருக்கும். தோளோடையே கூட சாப்பிடலாம். நாங்க வாழைக்காய் பஜ்ஜி போடுவது போன்று இதில் பஜ்ஜி செய்வோம் (நீள நீளமாக)
      Jayakumar

      நீக்கு
    2. இல்லை ஜி எம்பி சார் தோல் அப்படி ஒன்றும் படுத்தவில்லை. ஈசியாகத்தான் இருந்தது. என் கத்தியும் ஷார்ப்.

      மிக்க நன்றி சார்.

      கீதா

      நீக்கு
    3. ஜேகே அண்ணா ஆமாம் மெலிதாகத்தான் இருக்கும்...பஜ்ஜியும் போடலாம்..அவ்வளவு நீளமா பொரிக்க எண்ணைய் எவ்வளவு வைக்க முடியும் அதனால் அதனை பாதியாகக் கட் செய்து அப்புறம் மெலிதாக நீட்டமா கட் செய்து பொரிப்பது..

      ஆங்கிலத்தில் எழுதும் போது vazhuthananga.....மலையாளத்தில் വഴുതനങ്ങ

      அதனால் தான் நான் தமிழில் இப்படி எழுதியது...

      கீதா

      நீக்கு
  22. பெங்களூரில் இந்த ’வழுதநஞ்ஞா’ (அழுத நண்பா என்பதாக தொனிக்கிறது!) - பச்சைக் கத்திரிக்காய் காய்கறிக்கடைகளில், ஸ்டோர்களில் அடிக்கடிப் பளபளக்கிறது. பார்த்துவருகிறேன். இதில் இப்படி ஒரு தயாரிப்பா..
    நல்லா பெரட்டினீங்க போங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹ ஹா மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

      இங்கு பங்களூரில் நன்றாகவே கிடைக்கிறது...இங்கு சந்தையில் செம சீப்...அரை கிலே 10ரூ 15 க்குள் கிடைக்கிறது.

      கீதா

      நீக்கு
  23. ஆஆஆவ்வ்வ்வ் மிக ஈசியான முறை கீதா, நீங்க பெரிசா பில்டப்பூக் குடுத்தைப் படிக்க முன்பே, பார்த்ததும் பயந்துட்ட்ட்ட்டேஏன்ன்ன் கஸ்டமான ரெசிப்பிபோல இருக்கே என நினைச்சு.
    எனக்கு பெரிய கத்தரிக்காய்தான் கிடைக்கும், அதில் செய்கிறேன், ஆர் சாப்பிடாட்டிலும் எனக்கிது பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா...ஈசி ரெசிப்பிய இப்படி பில்டப் கொடுத்தாதானே ஃபேமஸ் ஆகும்!! ஹிஹிஹிஹி

      ரெசிப்பி ஈசிதான். மெஷர்மென்ட்ஸ் தான் விவரமா எழுதினதுனால அப்படித் தோன்றியிருக்கு...

      எல்லாக் கத்தரியிலும் செய்யலாம் செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க...

      கீதா

      நீக்கு
  24. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

    இன்று "திங்க" பதிவாக தங்கள் கத்திரிக்காய் கொத்ஸு மிக நன்றாக இருக்கிறது. இந்த நீள கத்திரியில் காரக்கறி பண்ணியிருக்கேன். கூட்டு, பிட்லை கூட பண்ணியிருக்கேன். ஆனால் இந்த மாதிரி செய்ததில்லை. கத்திரிக்காய் துவையல் நெருப்பில் வாட்டி, பருப்புகள், மி. வ வறுத்து பண்ணுவோமே அந்த மாதிரியும் தங்கள் செய்முறை இருந்தது. ஆனால் நீங்கள் எதையும் வறுக்காமல், பச்சையாக அரைத்து செய்திருக்கிறீர்கள். படங்களும், செய்முறையும் அருமையாக இருந்தது. இந்த முறையில் நானும் இனி செய்கிறேன். பூஸார் பறந்து வருவது போல் இருக்கும் படம் மிக அழகாக உள்ளது "வழுதநஞ்ஞா " அழகிய பெயராக உள்ளது. ஒரு புதிதான பெயரையும் கற்றுக் கொண்டேன். இந்தக் கத்திரிக்காய் சற்று வழுவழுவென்று இருக்கும் என்பதால், இந்த பெயரோ? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலாக்கா கருத்திற்கு....

      ஆமாம் ஈசிதான். வறுககமல் பச்சையாகவே...

      வழு வழு என்று இருப்பதால் இருக்கலாம்...ஆனால் அங்கு தத்தரிக்காயை பொதுவாகவே இப்படித்தான் சொல்லுகிறார்கள்...

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  25. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நேத்திக்கு சிவராத்திரி என்பதாலும் உறவினர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருக்கும் தகவல் வந்ததாலும் இங்கே வரமுடியலை. கடைசியிலே பார்த்தால் கத்தரிக்காய்த் துவையல்/அல்லது சிதம்பரம் கொத்சு செய்முறையைப் போட்டுட்டு தி/கீதா வழுதுனஞ்ஞா, வழதனைஞ்ஞா நு என்னென்னமோ பெயரெல்லாம் கொடுத்து! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்லவேளையா நேத்திக்கு இங்கே வரலை! இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரஸார கத்தரிக்காய் தொக்கு. நன்றாக இருக்கும். நிறைய பாலக்காட்டுச் சமையல் குறிப்பு கொடுங்கள். கற்றுக் கொள்ள விருப்பம். படிக்கலாம்.ரஸிக்கலாம். அன்புடன்

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!