வியாழன், 4 ஏப்ரல், 2019

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே - 6 - காலுக்கு சொந்தக்காரர் யார்?


நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே 

- - - - - - - - - - - - - - - - - - - 





ஸ்ருதி :

என் நெருங்கிய தோழி வர்ஷினியிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அவளும் என்னைப் போன்று வளர்ந்து வரும் பாடகி. மிகவும் திறமை வாய்ந்த பாடகி. வெட்டிங்க்டே வாழ்த்து தெரிவிக்கத்தான் அழைந்திருந்திருப்பாள். நான் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்ததால் அவள் கால் மிஸ்ட் காலில் இருந்தது. அழைத்தேன்.

எங்களின் அடுத்த கச்சேரிகள் பற்றிப் பேசிக் கொண்டே வந்த போது, அவள் வீட்டிலும் இவள் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றிய பேச்சு வருவதாகச் சொன்னாள். யாருமே இதற்கு விதிவிலக்கல்ல போலும். அவளிடம் பேசியதிலிருந்து அன்று நடந்தவை மனதில் நிழலாடியது.

எங்கள் இரண்டாவது வெட்டிங்க் அனிவேர்சரிக்கு ஈசிஆரில் இருக்கும் ரெசார்ட் ஒன்றை ஷ்ரவண் புக் செய்தான். ஏற்கனவே, ஷ்ரவணின் வார்த்தைகளாலும் அவ்வப்போது அவன் மாற்றம் ஏன் என்றும் குழம்பிக் கொண்டிருந்த வேளையில் அவன் அக்காவின் வார்த்தைகள் வேறு கொஞ்சம் உறுத்தியது. 

எனக்கு ஒரு மருமாளோ, மருமானோ எதிர்பார்க்கிறேன்என்று அன்போடு சொல்லியிருக்கலாம்…… கச்சேரியை கொஞ்ச நாள் மூட்டை கட்டி வை என்று சொல்லியிருக்க வேண்டாமே என்று தோன்றியது. அதென்னவோ தெரியவில்லை. யாரேனும் இப்படிச் சொன்னால் மட்டும் என் மனம் மிகவும் வருந்துகிறது.

இப்போது முன்னிலையில் இருப்பவர்கள் எல்லோருமே குழந்தை பெறும் சில மாதங்கள் முன்பு வரை கூடக் கச்சேரி செய்ததாக அறிந்திருக்கிறேன்.

என்னைப் போன்ற ஃப்ரொஃபஷனலுக்குக் குழந்தை பெறுவதும் வளர்ப்பதும் அத்தனை எளிதல்லதான். இருந்தாலும் எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? எங்கள் இருவருக்குமே இருக்கிறது. புகழ் பெற்ற கௌஷிக் சக்ரபர்த்தியிடம் கூடச் சிலர் சொன்னார்களாம், “இத்தனை நன்றாகப் பாடும் நீ குழந்தை எல்லாம் பெத்துக் கொண்டால் நாலு சுவருக்குள் அடைந்துவிடுவாய்என்று. ஆனால் அவரோ, தன் தாய்மையை ஆராதித்துச் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் அட்சர லட்சம் பெறும். நான் மிகவும் ரசித்தேன் அதை.

பெண்ணாகிய நான்தானே நல்ல மனதோடு சுமந்து, டெலிவரி, குழந்தைக்கான நேரம் என்று குழந்தையுடன் நல்லவிதத்தில் நேரம் ஸ்பென்ட் செய்ய வேண்டும்! அதன் தேவைகளைக் கவனிக்க வேண்டும்! அதற்காக என் கேரியரை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளுவதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை.

இரு வருடங்கள்தானே ஆகியிருக்கிறது. என் ஃபீல்டில் நான் வளர்ந்து வரும் இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இதைத் தக்க வைத்துக் கொண்டுவிட்டால் அப்புறம் பிரச்சனை இல்லையே என்ற எண்ணம்தான். ஆனால் ஏதோ நான் குழந்தையே வேண்டாம் என்ற எண்ணத்தில் பெற்றுக் கொள்ளவில்லை என்று பலரும் நினைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது. ஷ்ரவணுக்கும் நான் சொல்லியிருந்தேனே கல்யாணத்திற்கு முன்னரேயே. ஆனால் அவன் மனதிலும் எல்லோரும் நினைப்பது போலத்தான் இருக்கிறதோ என்று தோன்றியது.

இப்படியான எண்ணங்கள் மனதில் ஓடியதாலோ என்னவோ, ரெசார்ட் போகும் போது மனம் அத்தனை உற்சாகமாக இல்லை. அங்கு சென்றதும் கூட உற்சாகம் தொற்றிக் கொள்ளவில்லை. ஷ்ரவணிடம் அவன் அக்கா சொன்னதைச் சொன்னால் அவன் தப்பாக எடுத்துக் கொண்டுவிடக் கூடாதே என்று மௌனம் காத்து மனதைக் குழப்பிக் கொண்டு சந்தோஷமாகக் கொண்டாட வந்துவிட்டு இப்படி இருந்தால் ஷ்ரவணுக்கும் மனது கஷ்டப்படுமே என்று நினைத்த வேளையில், ஷ்ரவண் ஏன் நான் டல்லாக இருக்கிறேன் என்று கேட்டதும் கொட்டிவிட்டேன்.

ஷ்ரவண் என்னை அணைத்துக் கொண்டு ஆறுதல்படுத்தவும், அவன் அன்பில் திளைத்து அந்த மகிழ்ச்சியோடு, இயற்கையின் ரம்மியமான சூழலில், கடலின் அலைகளில், காற்றினிலே வரும் கீதமாக சந்தோஷமாகக் கொண்டாடினோம்.

ரெசார்ட்டிலிருந்து கிளம்பிய அன்றுதான் ஷ்ரணுக்குக் கடுப்பேத்தும் வகையில் அது நடந்தது. நாங்கள் ரெசார்ட்டின் ரெஸ்டாரண்டில் சாப்பிடுவதற்கு அமர்ந்திருந்த போது,

ஹலோ! மேடம்! என்ன இந்தப் பக்கம்? இங்க உங்களைப் பார்ப்பேன்னு எதிர்பார்க்கவே இல்ல. எப்படி இருக்கீங்க?” என்றபடியே வந்து எங்கள் எதிரில் அமர்ந்தார் விகே என்பவர். அவர் இசை ஆல்பம் தயாரிக்கும் நிறுவனத்தவர். சேலம் கச்சேரிக்குப் பின் அந்த விமர்சனம் பார்த்து அப்பாவைத் தொடர்பு கொண்டு, என்னிடம் இருந்து ஆர்டிபி ஒன்று வேண்டும் என்று கேட்க, அப்போது நான் கொஞ்ச நாட்கள் போகட்டும் என்று சொல்லியிருந்தேன். ரெசார்ட்டில் என்னைப் பார்த்ததும் வந்து விட்டார்.

பெரும்பாலும் ஷ்ரவணுடன் வெளியில் செல்லும் போது வெளியுலகு வெளிச்சம் படாத சாதாரண ஸ்ருதியாகவே செல்வதைத்தான் விரும்புவேன். இருந்தாலும் சில சமயம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. ரெசார்ட்டிற்கும் கூட அப்படித்தான் சென்றிருந்தேன். என்றாலும் அந்த விகேயின் கண்ணில் பட்டுவிட்டேன்.

அவர் ஷ்ரவணோடு கைமட்டும் குலுக்கிவிட்டு அப்புறம் அவன் இருப்பதைக் கூட ரொம்பக் கண்டு கொள்ளாமல் பேசத் தொடங்கிவிட்டார்.

இங்க பக்கத்துக் குடில்லதான் ஒரு ம்யூஸிக் டைரக்டர் தங்கியிருக்கார் மேடம். அவர் இங்க சந்திக்கச் சொன்னதால இங்க வந்தேன். உங்க அப்பாவைத்தான் கான்டாக்ட் பண்றதா இருந்தேன். ஒரு நல்ல ஆப்பர்சுனிட்டி பத்தி பேச. வந்த இடத்துல உங்களைப் பார்த்ததும் சரி உங்ககிட்டயே பேசிடலாமேனுதான் வந்தேன். எங்க தங்கியிருக்கீங்கஎன்றதுமே நான் கொஞ்சம் அவஸ்தையுடன் ஷ்ரவணைப் பார்த்தேன். அவனோ மொபைலை சும்மாவேனும் தடவிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிந்தது. நான் விகேயிடம் மறுநாள் வீட்டிற்கு வரச் சொல்லலாம் என்று நினைத்த போது, அவரோ விடாமல் தொடர்ந்தார்.

மேடம் ஆர்டிபி ஆல்பம் போடக் கேட்டிருந்தேன் நினைவிருக்கா? ரேர் ராகத்துல வேணும். கூடவே இன்னொரு ஹேப்பி ந்யூஸ். மஞ்சரி கேல்கர் அவங்க உங்க பாட்டு எல்லாம் கேட்டுட்டு உங்களோடு ஒரு ஜுகல் பந்தி செய்ய ஒத்துக்கிட்டாங்க. ஒரு 4 மாசம் கழிச்சுதான் ப்ரோக்ராம். அந்தக் கச்சேரிய அப்படியே ஆல்பமா போடலாம்னும் ஒரு ப்ராஜெக்ட் இருக்கு. பெரும்பாலும் மும்பைலதான் இருக்கும். உங்க அப்பாயின்ட்மென்ட் எப்படி?”

மஞ்சரி கேல்கர்! சுதா ஆண்டியுடன் ஜுகல் பந்தி செய்தவர்! என்னால் நம்பவே முடியவில்லை. அவருடனா? அதுவும் அவரே என்னுடன் பாட ஓகே சொல்லிவிட்டாரா? ஓ மை காட்! எவ்வளவு பெரிய நல்ல சான்ஸ். கிடைப்பதே அரிது. ஐ ஆம் ப்ளெஸ்ட். என்று நினைத்தவாறு ஷ்ரவணைப் பார்த்தேன். அவன் முக ரியாக்ஷனிலேயே தெரிந்தது அவன் விரும்பவில்லை என்று. ஆனால் எதை விரும்பவில்லை என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த சான்ஸையா அல்லது எங்களின் தனிப்பட்டத் தருணத்தில் அவர் வந்து இங்கு பேசுவதையா என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

இது ஒரு நல்ல வாய்ப்பு. இதை நான் முடியாது என்று சொன்னால் நான் தான் முட்டாள்.

சத்தியமா என்னால நம்பமுடியலை சார்.  கண்டிப்பா இது ஒரு நல்ல சான்ஸ்தான். ஒரு நாள் டைம் கொடுக்கறீங்களா? நான் சொல்லறேன்…” என்று சொல்லிக் கொண்டிருந்த போதே ஷ்ரவண் குறுக்கிட்டான்.
ஸார்! இஃப் யு டோன்ட் மைன்ட், நீங்க உங்க பிஸினஸ் டீல வீட்டுக்கு வந்து பேசுங்களேன்….”

“ஸாரி ஸார்!........ஓகே! மேடம்! அப்புறம் உங்களை கான்டாக்ட் பண்றேன்என்றவரின் முகம் கொஞ்சம் சுருங்கித்தான் போனது. எனக்குக் கூடவே பயமும் வந்தது. ஷ்ரவண் இப்படிச் சொன்னதை அவர் வேறு யாரிடமும் சொல்லப் போக அது திரித்துவிடப்பட்டுச் செய்தியாகிவிடுமோ என்றும். லைம்லைட்டில் இருப்பதற்கான விலைகள் இதெல்லாம். ஆனால் இதை எல்லாம் சுதா ஆண்டி, நித்யா அக்கா போன்றோர் சமாளிப்பது போல ஹேண்டில் செய்யத் தெரிந்து கொள்ள வேண்டும். 

அவர் சென்றதும், ஷ்ரவண் கொஞ்ச நேரம் பேசவே இல்லை. ஏதோ சாப்பிட்டோம். புறப்பட்டோம். திரும்பும் போது ஷ்ரவண் கொஞ்சம் எரிச்சல்பட்டுக் கொண்டு வந்தான்.

ஸ்டுப்பிட். கொஞ்சம் கூட ஒரு மேனர்ஸ் இல்லாத மனுஷன். இப்படியா இங்க வந்தா டீல் பேசறது? நீயும் என்னவோ அவர் பேசறதுக்கு கூடவே ஜால்றா போட்டு, நல்ல சான்ஸ் அது இதுனு…….ச்சே! சந்தோஷமா இருந்ததெல்லாம் போச்சு…….”

ஹேய் ஷ்ரவண் ப்ளீஸ்! அவர் இங்க பேசியிருக்க வேண்டாம்தான். அவருக்கு இங்கிதம் தெரியலைதான். ஒத்துக்கறேன். நான் வீட்டுக்கு வாங்கனு சொல்ல நினைக்கும் போதே அவர் ஒரு நல்ல சான்ஸ் பத்தியும் பேசினார்ல. நான் டக்குனு அவரை கட் பண்ணி பேச முடியாதே. அப்புறம் அனாவசியமா செய்தி போடுவா……அதான் பொலைட்டா ஹேண்டில் பண்ணினேன்..….”

ஹூ கேர்ஸ்? யாரு வேணா என்ன வேணா எழுதிட்டுப் போட்டும்….” என்றவன் அதன் பின் கொஞ்ச நேரம் அமைதியாகவே வந்தவன் டக்கென்று ம்யூஸிக் சிஸ்டமை ஆன் செய்தான். உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையாஎன்று உன்னி கிருஷ்ணன் தொடங்கிட என்னை ஓரக்கண்ணால் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் விசில் அடித்துக் கொண்டே ஷ்ரவண் ட்ரைவ் செய்தான். நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா என்று சுஜாதா தொடர கூடவே நானும் பாடிக் கொண்டே அவன் தோளில் சாய்ந்தேன். முழுப்பாடலும் வாய் அசைத்த்து. ஆனால், மனதோ மஞ்சரி கேல்கருடனான சான்ஸ் என்னாகுமோ என்ற எண்ணத்துடன் அவருடன் ஒரு ஜூகல் பந்தியே நடத்தியது


------மீட்டல் தொடரும்...



==============================================================================================================

இந்தக் கால்களுக்குரியவர் யாராக இருக்கும் என்று யூகிக்க முடிகிறதா?  மாலை முழுப்படம் வெளியிடப்படும்!!!







===================================================================================================

நவீன ஆத்திச்சூடி....




108 கருத்துகள்:

  1. ஸ்ரீ லலிதையின் கால்கள் எனத் தோன்றுகிறது. அப்படியே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... மாலையோ, நேரம் கிடைத்தால் மதியமேவோ முழுப்படம் வெளியிட முயற்சிக்கிறேன்!

      நீக்கு
  2. காலை வேளையில் பாத தரிசனம் கிடைத்தது. நன்றி. கதை கொஞ்சம் இழுக்கிறதோ? நேற்றும் அவ்வளவாய் விறுவிறுப்பு இல்லை; இன்னிக்கும் இல்லை. விகே யார்னு தெரிஞ்சது. சுதா ரகுநாதன், நித்யஸ்ரீஆகியோரை அக்கா என அழைத்திருப்பதால் இதை எழுதியவரும் மிகச் சின்னவரோ? யாராக இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பாய் இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாதோ!

      நீக்கு
  3. இன்னிக்கு நான் தான் போணியா? ஙே!!!!!!!!!!!!!!!!! யாரையும் காணோமே! எல்லோருக்கும் ஒரு வணக்கம் சொல்லிட்டு நல்வரவும் போட்டுக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானே தாமதம். பெஞ்ச் மேலேருந்துதான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்!!!! அமாவாசை!

      நீக்கு
  4. காலை வணக்கம்.

    அர்த்தநாரீஸ்வரரா? இரண்டு கால்களிலும் உடை வித்தியாசம். நாபீ, பெண்தன்மையோடு இருப்பதுபோல் சட்னு தோணலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமர்ந்த கோலத்தில் அர்த்த நாரீசுவரர்? அதுவும் இந்த யோக அமர்வில்?????? ம்ஹூம்! கூகிள் தேடலிலும் விடை கிடைக்கலை! :( எனக்குச் சரியாய்ப் பார்க்கத் தெரியலை! ஆனால் வெண்கலத்தால் ஆன சிலை, விக்ரஹம் அல்லது பஞ்சலோகத்தால் ஆனது, ஏதோ கண்காட்சிக் கூடம் அல்லது ம்யூசியத்தில் இருப்பது? பக்கத்தில் உள்ள ஃபோட்டோவில் மனிதர்கள் இருக்கிறார்கள்.வீட்டுக் கூடம்? வீட்டின் சொந்தக்காரங்க படம்? காலம்பர நிதானமாய்ப் பார்க்கலை!

      நீக்கு
    2. திரைப்பட ஸ்டுடியோ? அல்லது படம் எடுக்கும் ஸ்டுடியோ?

      நீக்கு
    3. ஒன்று இடக்காலை மடக்கி வலக்காலைத் தொங்க விட்டு! இன்னொன்று வலக்காலை மடக்கி இடக்காலைத் தொங்கவிட்ட வண்ணம்! ஆகவே இருவேறு சிற்பங்கள்! ஆனால் ஒன்றுடன் ஒன்று சம்பந்தம் உள்ளவையோ?

      நீக்கு
    4. ஆஹா! அருமையான தரிசனம்.கடைசியில் (முதல்லே இருந்தே கோமதி சொன்னது தான்) உமா மஹேஸ்வரன்! நமஸ்காரம் பண்ணிக்கிறேன். உம்மாச்சிங்களுக்கு!

      நீக்கு
  5. காலை வணக்கம்.

    கதம்பத்தில் இன்றைக்கு பகுதிகள் குறைவோ....

    கதை... தொடர்கிறேன்.

    கால்கள் - மாலை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வெங்கட்... கொஞ்சம் குறைவுதான். எனக்கும் குறைதான்!

      நீக்கு
  6. இரண்டு பேரும் வாலைக்கு போய், அதுல ஒருத்தர் ஃ்ப்ரொஃபஷணலா இருந்தா, புரிந்துணர்வு இல்லைனா கேரியர் பாதிக்கும். இல்லைனா கேரியர் ஆம்பிஷன் இல்லாம சாதாரண வாழ்க்கைதான் வாழணும். எங்க மனைவி தன்னை மிஞ்சி புகழ் பெற்றுவிடுவாளோன்னு பயந்துதான் இந்தப் பாடகர்கள், தன்னைவிடப் பாடத்தெரிந்த மனைவி கைல கரண்டி கொடுத்து கிச்சன்ல தள்ளிடறாங்க போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இரண்டு பேரும் வாலைக்கு போய்,//

      இரண்டு பேரும் வேலைக்குப்போய்.... இதைதான் கமலா அக்காவும் கணித்திருந்தார்கள். அவர் சொன்னது இவன் துலா வேலையைத் தொடர்ந்திருக்க வேண்டும் என்று... ஆனால் இவன் வேலைக்குப்போகாமல் வீட்டில் இருக்கிறான் என்று வரவில்லையே...

      நீக்கு
  7. காலை வணக்கம் எல்லோருக்கும்...அப்புறம் வரேன்..படம் மட்டும்சொல்லிட்டுப் போய்டுவேன்.

    முதல் படம் இடது கால்தொங்கி கீழெ உடை...இரண்டாவது படம் வலது கால் தொங்கப்போட்டுக் கொண்டு உடை இல்லை..ஆபரணங்களும் வித்தியாசம்...எனவே இரு படமும் ஒரே தெய்வம்/நபர் அல்ல

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வாய்ப்பு சர்க்கரை...! வாழ்க்கை உப்பு...?

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம். கால்களில் சிலம்பு கொஞ்ச.. யார்? லட்சுமி ஹயக்ரீவர்?
    முதல் படத்தில் தொடையில் ஒரு மச்சம் தெரிகிறது. திருமலை நாயக்கரின் மனைவி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானு அக்கா... நான் பதில் சொல்ல வரும் நேரம் விடி வெளியாகி விட்டது!

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. கால்கள் தமிழ் தாயின் கால்கள்.

    பதிலளிநீக்கு
  12. இப்படியானவ்களின் கணவர்கள் சில விசயங்களை விட்டுக்கொடுத்தால்தான் வாழ்வு மகிழ்ச்சியாகும்.

    காரைக்கால் ???

    பதிலளிநீக்கு

  13. //அவர் ஷ்ரவணோடு கைமட்டும் குலுக்கிவிட்டு அப்புறம் அவன் இருப்பதைக் கூட ரொம்பக் கண்டு கொள்ளாமல் பேசத் தொடங்கிவிட்டார்.//

    இது முதல் தப்பு.

    //“சத்தியமா என்னால நம்பமுடியலை சார். கண்டிப்பா இது ஒரு நல்ல சான்ஸ்தான். ஒரு நாள் டைம் கொடுக்கறீங்களா? நான் சொல்லறேன்…”//

    இது இரண்டாவது தப்பு

    //.முழுப்பாடலும் வாய் அசைத்த்து. ஆனால், மனதோ மஞ்சரி கேல்கருடனான சான்ஸ் என்னாகுமோ என்ற எண்ணத்துடன் அவருடன் ஒரு ஜூகல் பந்தியே நடத்தியது//

    மனம் சான்ஸை சுற்றியே வலம் வருது.

    ஸ்ருதி பேதம் ஏற்பட காரணம் கூடிக் கொண்டே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. நவீன ஆத்துச்சூடி நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. மாலை வரைக்கும் காத்திருக்க வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  16. கதையில் பாட்டு எல்லாம் வருகிறது. தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  18. நவீன ஆத்திச் சூடி !?!?!?!?....

    அன்பை அடை....

    அடைச்சிடுவோம்... அப்புறம் எங்கேருந்து ஒற்றுமையை நெனைக்கிறது!?...

    நல்லவேளை..
    அன்பே அடை - ந்னு வரலை....

    (ஆஹா... அன்பே அடை..ந்னுசொன்னா
    அதுக்குள்ளே ஏதேதோ அர்த்தம் எல்லாம் வருதே...)

    இப்படி இருந்தாலும் நல்லாத்தேன் இருக்கு!...

    அன்பே அனு(ஷ்)...

    பதிலளிநீக்கு
  19. பாத தரிசனம்...

    இரண்டு படங்களுமே வேறு வேறு...

    பதிலளிநீக்கு
  20. கண்டுபிடித்துவிட்டேன். அம்மையும் அப்பனும். முதல் படம் அம்மை. இரண்டாவது அப்பன். சிவகாமி, திரிசடையனா என்பதை யோசிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  21. கால்களுக்கு உரியவர் சிலம்புச் செல்வியோ?

    பதிலளிநீக்கு
  22. அனுபவித்துப் பழகிய எழுத்து.. அருமையான நடையழகு! யார் என்று தெரியாமல் வாழ்த்துவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது! ஆளைப் பார்த்து வாழ்த்தாத உண்மையான வாழ்த்துக்கள்.. தொடர்ந்து வாசிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  23. அந்த பொம்மை காகித கூழினால் செய்யப்பட்டது என்பது தெரிகிறது. சிவன்,பார்வதியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  24. முதல்ல கால் பிறகு தலை சே.சே.. கதை:).

    அது மார்க்கண்டேயராக இருக்கலாம்..அல்லது பழனி முருகன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தச் சிலையை யாரோ வீட்டில் வைத்திருக்கிறார்கள்.. என்ன என்ன சிலைகள் வீட்டில் வைக்கலாம் என யோசிச்சால் கண்டு பிடிக்கலாம்.. கீசாக்கா கமோன்ன்:))

      நீக்கு
  25. கு. ஹேமாவைப் பார்த்து எவ்ளோ காலமாச்சு...

    ஸ்டேட்டஸ்.... ஒண்ணும் சொல்ல வருதில்ல எனக்கு:))

    பதிலளிநீக்கு
  26. இன்றைய கதாசிரியர் நெல்லைத்தமிழனோ?:).. படிக்கும்போது அப்படித்தான் எழுத்துநடை இருக்கு... எனக்கு தெரிந்தவரைத்தானே சொல்ல முடியும்:)) ஹா ஹா ஹா.

    //“சத்தியமா என்னால நம்பமுடியலை சார். கண்டிப்பா இது ஒரு நல்ல சான்ஸ்தான். ஒரு நாள் டைம் கொடுக்கறீங்களா? நான் சொல்லறேன்…” ///

    தான் பெரிய பாடகியாக இருந்தாலும், ஒரு நாள் ரைம் கேட்பது கணவருடன் டிஸ்கஸ் பண்ணத்தானே.. அப்போ அவ்வளாவு நல்ல ஒரு மனைவியாக அடங்கித்தான் போகிறா ஸ்ருதி.. அதை ஏன் புரிஞ்சுகொள்ளாமல் எரிஞ்சு எரிஞ்சு விழுகிறார் ஸ்வரண் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

    சிலபேருக்கு எதையும் நேரே பேசிவிடும் குணம் கிடையாது, சுற்றி வளைச்சுப் பேசிக்கொண்டிருப்பார்கள்.. என்ன சொல்கிறார்கள் என்றே புரியாது.. அதுபோலதான்.. சிலருக்கு , தனக்குப் பிடிக்கவில்லை எனில் நேரே சொல்லத் தெரியாது, ஆனா தேவையில்லாமல் கடுகடுப்பாகவும் எரிஞ்சு எரிஞ்சும் விழுவார்கள் அது எவ்ளோ கொடுமையாக இருக்கும்.. அப்படித்தான் ஸ்வரணும் இருக்கிறார்.

    தனக்கு என்ன பிடிக்குது , என்ன பிடிக்கவில்லை என்பதை சொன்னால், பதில் சொல்லி சமாதானப் படுத்துவது ஈசி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழன் எழுத்து வாசனை அடிக்கிறதா? எனக்கு அப்படித் தோன்றவில்லையே..

      நீக்கு
  27. ///நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா” என்று சுஜாதா தொடர கூடவே நானும் பாடிக் கொண்டே அவன் தோளில் சாய்ந்தேன். முழுப்பாடலும் வாய் அசைத்த்து. ஆனால், மனதோ மஞ்சரி கேல்கருடனான சான்ஸ் என்னாகுமோ என்ற எண்ணத்துடன் அவருடன் ஒரு ஜூகல் பந்தியே நடத்தியது///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஸ்ருதியின் உடல் இங்கே மனம் அங்கேயோ.. ஹா ஹா ஹா...

    அவ்ளோ எரிச்சலாக இருந்த ஸ்வரண், டகென ஒரு பாட்டைப்போட்டுச் சிரித்தது நம்பும்படியாக இல்லையே:)) இது நடிப்போ?:).. ஹையோ என்ன சதித்திட்டமோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீர்க்கதரிசி, ஞானி அதிரா காசிக்குப் போறென் போறேன்னு சொல்லிட்டு நீங்க போகலை !! இப்ப ஸ்ரீராம் போகிறார்...

      ஆ ஆ ஆஆ ஸ்ரீராம் காசில ஏதோ விடனும்னா ஸ்ரீராம் அந்த ரகசியத்த யாரு எழுதறாங்கன்ற ரகசியத்தை அங்க விட்டுட்டு வந்துருவாரோ!!!!!!!????? தோசை வாலி, மெதுவா காசிக்குப் போற சாக்குல ஸ்ரீராம் பின்னாடி போயி ரகசியத்தை கண்டு பிடிச்சுட்டு வந்துருங்க ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. கீதா, நேற்றைய போஸ்ட்டில் கெள அண்ணனிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறேன்ன் படிங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)..

      நீக்கு
    3. ​ஷ்ரவண் ஸ்ருதியின் கவனத்தைத் திசை திருப்பி இருக்கிறார் போல...

      நீக்கு
  28. கோமதி அரசு கூறியதை நான் ஆமோதிக்கிறேன். சிவன்-பார்வதி, உமா-மகேஸ்வரன். சாதாரணமாக உமா மஹேஸ்வரரை காளை வாகனத்தில் இருக்குமாறு செய்திருப்பார்கள். இதில் வாஹனம் இல்லை. அதனால் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கிறது.


    https://www.flickr.com/photos/rajushanthi/5180414533


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோமாஸ்கந்தர். இம்மாதிரி உலோகம் அல்லது ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விக்ரஹம் அல்ல, நீங்க கொடுத்திருப்பது. சுதைச் சிற்பம். இங்கே படத்தில் சுதை அல்ல.

      நீக்கு
  29. தோசை வாலி!! வாங்க வாங்க பேசாம குதிரை வாலி மாதிரி பூனைவாலினு வைச்சுருக்கலாமோ!!! ஹா ஹா ஹா ஹா...சரி அதை விடுங்க...இப்ப எபில ஒரே புதிரா இருக்குதூஊஊஊஊஊஊ இல்லையா புதன் வியாழன் அப்புரம் டெய்லியே தொத்திக்கிச்சோ ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா, இந்தப் புதிருக்கு விடை கிடைக்கும் வரை நாங்களும் டெய்லி வந்து பார்க்க வேண்டி இருக்கூஊஊஊஊ:))....

      உங்களுக்கு அல்லது உங்களைச் சேர்ந்தோர் நண்பர்கள் உறவினர்களுக்கு ஏதும் காசி பற்றிய உதவி தேவைப்பட்டால், என் விசிட்டிங் கார்ட் ஐக் குடுங்கோ கீதா:))

      நீக்கு
    2. தோசைக்கு அப்புறம் இட்லி, உப்புமா, பொங்கல், வடைன்னு வரணுமே.. காசி, ராமேஸ்வரம் எல்லாம் எங்கிருந்து வந்தது!

      நீக்கு
    3. ஓ! அல்வா தேடி காசிக்கா? மோட்சம் நிச்சயம்!

      நீக்கு
  30. இரு பாதங்கள் படமும் அட்டகாசம்ஸ்ரீராம். பின்னால் ஏதோ ஃபோட்டோ இருப்பதைப் பார்த்தால் வீடு தான் போல...வீட்டில் அர்த்தநாரீஸ்வரர் வைப்பாங்களா?

    முதல் படம் பெண் தெய்வம், இரண்டாம் படம் ஆண் செய்வம்...இரண்டாம் படம் பார்த்தால் சிவன் போலத்தான் இருக்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
  31. ஆத்திச் சூடிக்கு வந்த கருத்திற்கு உங்கள் பதிலை ரசித்தேன் ஸ்ரீராம்.

    அன்பை அடைக்க முடியுமோ?! இல்லை ஆசையை உடைக்கத்தான் முடியுமோ?!!!

    அன்பை அடைக்க முடியாது ஆசையை உடைக்கவும் முடியாது அதனால்தானே இங்க வந்து இப்படி கும்மி அடிக்கிறோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேமா பெரிய கவிதாயினி கீதா... இப்பல்லாம் ஆளைக்காணோம்.

      நீக்கு
  32. நேற்றைய பார்ட் கதையும் இன்றைய பார்ட்டையும் பார்த்தால்....ஷ்ரவண் அப்பப்ப மூட் ஆஃப் ஆகிறான் போலத் தெரியுது. நன்றாக இருந்தது மீண்டும் முருங்கை/முருங்கி மரம் ஏறிடுச்சோ வேதாளம்னு தோனுது!! ஹா ஹா ஹா

    ஏறட்டும் ஏறட்டும் ...கடைசில இறங்கி வந்தா நல்லது பார்ப்போம்!!..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஸ்ருதியாயிருந்தா டிவோர்ஸ் ஷ்ரவணை பண்ணிடுவேன்!!!

      நீக்கு
    2. என்ன சொல்றீங்க ஸ்ரீராம்... இன்னொருவன் டபுள் ஷ்ரவணா இருக்கமாட்டானா? சிறிய பிரச்சனைக்குக்கூட 'இந்த வாய்க்குத்தான் முதல் கணவன் ஓடிப்போயிட்டான் போலிருக்கு', 'கணவனை தொறத்தினவதானே நீ', 'அவன் புண்ணியாத்மா. தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடிட்டான் போலிருக்கு' என்றெல்லாம் கொள்ளிக் கணைகள் வந்துவிடாதா? திருமணமே பண்ணிக்காம இருந்துட்டான்னா (டைவோர்ஸுக்கு அப்புறம்), 'ஏதோ வயலின்காரரோட கச முச.. அதைக் கேள்வி கேட்டதுனால டைவர்ஸ் பண்ணிட்டா' இதுமாதிரிலாம் பேச்சு வராதா?

      ஜிம்பிளா, டிவோர்ஸ்னு சொல்றீங்க....

      நீக்கு
  33. எனக்கு முதல் பார்ட் கண்டுபிடிக்க முடிஞ்சது இப்போ ஒரே கண்ணா மூச்சி விளையாட்டா இருக்கு :) எல்லாருமே கண் முன்னாடி வராங்க :) அமைதியா வாச் செய்ய போறேன் நான் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாமெல்லாம் இப்படி தலையை குடைந்து கொண்டிருக்க, சம்பந்தப்பட்டவர்கள் இஃ கி, இஃகி என்று சிரித்துக்கொண்டிருப்பார்களோ?

      நீக்கு
    2. பானுக்கா :) ஹாஹாஹா அதேதான் mmk படத்தில் 4 கமல் வருவார்களே அவங்கள பார்த்து குழம்ப மாதிரி ஒரே கன்பயூசிங் :)
      ஒரு குட்டி க்ளூ கூட கிடைக்கலை :) எந்த part படிச்சாலும் எல்லாருமே மொத்தமா கண்ணு முன்னாடி வராங்க :)

      நீக்கு
    3. கண்ணாமூச்சி ஏனடா என்று பாட்டு போட்டு விடலாமா?

      நீக்கு
  34. ஹை ஹேமா ..இப்போ அங்கே முகப்புத்தகத்தில் பார்த்தா நான் கேட்டதா சொல்லுங்க ஸ்ரீராம் குழந்தை நிலாவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஏஞ்சல்... ஹேமா வருஷக்கணக்கில் ஆளைக்காணோம்.

      நீக்கு
  35. ஃ இற்கு ஆங்கிலம் வந்திருக்கு :) எங்க குரு தமிழில் டீ குடிச்சவங்க அதனால் நாங்களும் தமிழ் அறிவோம் :)
    நவீன ஆத்திசூடி நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் ஹா ஹா ஹா ஹா ....

      ஏஞ்சல் உங்க குரு ஆங்கிலத்திலயும் டீ குடிச்சவங்கதானே!!

      இப்ப ஹிந்தில வேற டி குடிச்சுட்டுருக்காங்க போல!!!!!!

      இன்னும் கொஞ்ச நாள்ல கபீர் சூர்தாஸ் ப்ரேம்சந்த்னு இங்க உலா வந்தாலும் வரலாம்!!!

      கீதா

      நீக்கு
    2. பாத்திங்களா கீதா சொன்னதும் :) பேரை மாத்திடுச்சி பூனை

      நீக்கு
    3. ///பாத்திங்களா கீதா சொன்னதும் :) பேரை மாத்திடுச்சி பூனை//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    4. // ஃ இற்கு ஆங்கிலம் வந்திருக்கு :) //

      அபுரி ஏஞ்சல்.

      நீக்கு
    5. ஃபேஸ் book :)

      okay :) happy and safe journey sriram

      நீக்கு
  36. ஆஆஆஆ படம் போட்டிட்டார் ஶ்ரீராம்ம்ம்ம்ம்ம்:)...

    பதிலளிநீக்கு
  37. ஸ்ரீராமைக் காணமே.. காசிக்குப் போகப் பிளேனில வலது காலை எடுத்து வச்சிட்டாரோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை முதலே என்னால் அவ்வளவு பதில் தரமுடியாது. பனிரெண்டு நாட்கள் பொறுத்துக்க கொள்ளுங்கள் / நிம்மதியாக இருங்கள்.

      நீக்கு
    2. ஓஒ நலமோடும் மகிழ்வோடும் வெற்றியோடும் போய் வாங்கோ ஶ்ரீராம்.. வாழ்த்துக்கள்.

      அப்போ இனிக் கெள அண்ணனின் நிம்மதிதான் போகப்போகிறது எங்களால் ஹா ஹா ஹா

      நீக்கு
  38. நல்ல வேளை நான் மாலைலயே வந்தேன். இல்லன்னா படம் பார்த்து மூளையை யூஸ் பண்ணி இருப்பேன்

    பதிலளிநீக்கு
  39. ஆத்திச்சூடியை இப்போத் தான் கவனிக்கிறேன்.ஹிஹிஹி. அ.வ.சி.படத்திலேயே புத்தி இருந்தது. ஏற்கெனவே ஶ்ரீராம் எழுதிப் படிச்ச நினைவு.

    பதிலளிநீக்கு
  40. இங்கே இருப்பதில் ஒரு சௌகர்யம். எல்லோர் அபிப்பிராயமும் தெரிந்து கொள்ள முடிகிறது.

    புது ஆத்திசூடி.சூப்பர். அன்பை அடைக்க வேண்டாம். ஆசையுடன்
    இருப்பவர்களுடன் இருப்பவர்களைக் காத்து ரக்ஷிக்க வேண்டும்.

    இன்றைய கதையில் ரிஷபன் ஜி சாயல் அடிக்கிறது.
    திறமையான பாடகியின் மனம் இப்படித்தான் நினைக்கும்.
    அவனுக்கும் கோபம் வந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
    சாதாரணக் கணவனாக நடந்து கொள்கிறான்.

    இவர்கள் ஒன்று நினைக்கக் கடவுள் கையில் குழந்தையைக் கொடுத்து விடுவார். எல்லாம் சரியாகிவிடும்.

    பார்வதி பரமேஸ்வரர்களின் பிம்பங்கள் அதி சுந்தரம்.

    இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் மாலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா..

      அனைவரும் பல விஷயங்களையும் கலந்து பேசுவதில் ஒரு சந்தோஷம்.

      உங்கள் உடல்நிலை சரியில்லை என்று கீதா அக்கா சொல்லியிருக்கிறாரே... உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

      நீக்கு
  41. மீண்டும் மன விரிசல்? தொடரட்டும் மீட்டல்..

    சிற்பமும் ஃபேஸ்புக் ஸ்டேடஸும் அருமை.

    பதிலளிநீக்கு
  42. அருமை அருமை
    தொடருங்கள்
    தொடருகிறேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!