திங்கள், 8 ஏப்ரல், 2019

"திங்கக்கிழமை : மோர் ரசம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி


மோர் ரசம்

மோர் ரசம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகத்தான் இருக்கும். இந்த வகை மோர் ரசம் என் மாமியாரிடம் கற்றுக் கொண்டது. என் பிறந்த வீட்டுக் குறிப்பு அதிலும் என் அப்பா வழிப் பாட்டி செய்வது வேறு வகை. அது மற்றொரு நாள் சொல்கிறேன். என் அம்மா வழிப்பாட்டி ஏனோ மோர் ரசம் செய்ததில்லை.


இது ரொம்ப சிம்பிள் ரெசிப்பிதான். சுவையானதும், ஆரோக்கியமானதும் கூட. இதற்கான பொடியை நாம் தயாரித்து நல்ல டைட்டா மூடி உள்ள பாட்டில் அல்லது எவர்சில்வர் டப்பாவில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் எளிதாகச் செய்துவிடலாம். என் மகனுக்குச் செய்துக் கொடுத்துவிட்டேன். 

நான் தயாரித்து வைத்துக் கொள்வதில்லை. அப்பப்ப செய்யறது வழக்கமாகிடுச்சு. ஏஞ்சலுக்குக் கண்டிப்பா இது பிடிக்கும்னு நினைக்கிறேன். பிக்காஸ் அவங்க ஹெல்த் கான்ஷியஸ்! பூஸார்க்குப் புகை வர!

சரி ரெசிப்பி இதோ...

துவரம்பருப்பு : ½ டேபிள் ஸ்பூன்
மிளகு         : 1 டீஸ்பூன்
ஜீரகம்         : 1 டீஸ்பூன்
வெந்தயம்     : ¾ டீஸ்பூன்
கொத்தமல்லி விரை : ¼ டீஸ்பூன் இது வாசனை இருந்தால் போதும். டாமினேட் செய்ய வேண்டாம்.
உப்பு            : உங்கள் தேவைக்கேற்ப
வேப்பம் பூ    : உங்கள் தேவைக்கேற்ப.


இதில் வெந்தயம் தவிர மற்ற அனைத்தையும், அடுப்பை ஏற்றி, வாணலியில் ட்ரையாக வறுத்துக் கொள்ளவும். வேண்டுமென்றால் கொஞ்சம் நெய் விட்டும் வறுக்கலாம். வெந்தயத்தை நான் எப்போதுமே தனியாக வறுப்பது வழக்கம். எனவே அதையும் தனியாகச் சிவக்க வறுத்துக்கோங்க. 


வறுத்து வைத்திருக்கும் மற்றவற்றோடு, வெந்தயத்தையும் சேர்த்து ஆறியதும் ட்ரையாகப் பொடி செய்து வைச்சுக்கோங்க.


கடையில் வாங்கிய வேப்பம் பூ ஒரு சில கடைகளில் மட்டுமே நல்ல சுத்தமாகக் கிடைக்கிறது. சில கடைகளில் கொஞ்சம் இலை, குச்சியோடுதான் கிடைக்கும். எனவே, வேப்பம் பூ உங்கள் தேவைக்கேற்ப எடுத்து (நான் கொஞ்சம் அதிகம் எடுத்துக் கொள்வேன்.) தூசி, தும்பு ஏதேனும் இருக்கானு பார்த்து நீக்கிச் சுத்தப்படுத்தியதை நெய்யில் நன்றாக டார்க் ப்ரௌன் நிறத்துக்கு வறுத்து வைச்சுக்கோங்க.

எங்க மாமியார் வீட்டுல வேப்பமரம் இருக்கறதுனால, தரையை நல்லா சுத்தப் படுத்திட்டு வெள்ளைத் துணி அல்லது வேஷ்டி விரிச்சு அதுல விழும் வேப்பம் பூவை சேகரிப்பது செய்வது வழக்கம். அப்படியும் அதில் தூசு விழும் என்பதால் அதையும் ஆராய்ந்து, காயவைத்து வைச்சுருவோம். மரத்தில் கொத்தாக உதிரும் பருவத்தில் இருந்தால் அதையும் அப்படியே எடுப்பதும் வழக்கம்.


நான் எடுத்துக் கொண்ட ¾ கப் தயிர் + அதை நீர்க்கச் செய்ய தயிரின் திக்னெஸ் பொறுத்து தண்ணீர். தயிர் கொஞ்சம் புளித்திருக்க வேண்டும். (படத்தில் 1/2 கப் + 1/4 கப்.) நான் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கடைந்து வைத்துக் கொண்டேன். தயிர் இன்னும் திக்காக இருந்தால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான உப்பும் சேர்த்துக்கோங்க.

கவனிக்க : நீர் மோர் போலவும் இருக்கக் கூடாது. ரொம்பத் திக் மோராகவும் இருக்கக் கூடாது. 


கரைத்து வைத்திருக்கும் மோரில் பொடித்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து நல்லா கரைச்சுக்கோங்க. அடுப்பை ஏற்றி, அதுல வாணலில கொஞ்சம் நெய் விட்டு அது சூடானதும், கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிச்சு மோர்ல போட்டுக் கலக்கவும். (நான் கொஞ்சம் வெந்தயமும் வறுத்து தாளிப்பேன்)

அவ்வளவுதான் மோர் ரசம். சூடான சாதத்தில் நெய் விட்டு அதில் வறுத்து வைச்சுருக்கற வேப்பம் பூவைக் கொஞ்சம் போட்டு நல்லா பிசைந்துவிட்டு அதில் மோர் ரசத்தை சாதாரண ரசம் போல நிறைய ஊற்றிக் கலந்து சாப்பிட வேண்டியதுதான். வேப்பம் பூவைத் தனியாகவே வைச்சுக்கோங்க. யாருக்கு வேண்டுமோ அவங்க, சாப்பிடும் போது சேர்த்துக்கலாம். சிலர் வேப்பம் பூ இல்லாம இந்த ரசத்தை மட்டும் ஊற்றி சாப்பிடுவாங்க.

வேப்பம் பூ வறுத்து வைச்சிருக்கறதுல கொஞ்சம் போல எடுத்துச் சூடான சாதத்தில் நெய் விட்டு, கொஞ்சம் உப்பு தூவிக் கலந்து சாப்பிட்டுப் பாருங்க, பிடிக்கும் என்றால். ரொம்ப நல்லாருக்கும். நான் அப்படி முதலில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு அப்புறம் அதில் மோர் ரசம் ஊற்றிச் சாப்பிடுவேன்.

Related image

இது என்னாது? ஹூம் ஏதோ ஊத்தி வைச்சுருக்காங்க. நல்லாருக்குமா? பயமாருக்கே!! 

(வேப்பம்பூவுடன் மணத்தக்காளி வத்தலும் வறுத்து வைத்துக் கொண்டு சாதத்தில் கலந்து கொள்ளலாமே.....)

116 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் பயணத்தில் இருக்கும் ஸ்ரீராம், கீதாக்கா மற்றும் எல்லோருக்கும்..

  அட! மறந்தே போனது இன்று எனது ரெசிப்பியா!

  ஸ்ரீராம் உங்கள் பாயின்ட் நோட்டர் மணத்தக்காளி வத்தல். இதுவரை அப்படிச் சேர்த்துக் கொண்டது இல்லை!! சூப்பர்!

  மிக்க நன்றி ஸ்ரீராம் பதிவிற்கு!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னைக்கு இங்க நீள பச்சை கத்தரி பார்த்தேன். உங்க ரெசிப்பி டிரை பண்ணலாமானு நினைத்தேன். அவங்களுக்குப் பண்ணுவதால் டேஸ்ட் செய்ய முடியாது. வேணாம் வம்பு, சென்னை போகும்போது வாங்கிட்டுப்்போலாம்னு நினைத்துவிட்டேன்

   நீக்கு
  2. நெல்லை பங்களூர்லதான் இருக்கீங்களா?

   ஓ பச்சை நீளக் கத்தரிக்காய் இங்க நல்லா கிடைக்குது. சென்னைல போய் ட்ரை பண்ணுங்க...
   அப்ப இப்ப மழை பெய்யுதே! 2 நாளா செம வெயில்.

   கீதா

   நீக்கு
 2. ஸ்ரீராம் ஊர்ல இல்லைன்னதும் யாரையும் காணோம்?!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கௌ அண்ணா ஆஜர் வைச்சுட்டீங்களா!! வணக்கம் அண்ணா!!

   ஆசிரியர்கள் வரலைனா பிள்ளைகளும் வர மாட்டேன்றாங்க பாருங்க ஹா ஹாஹ் ஆ

   கீதா

   நீக்கு
  2. நான் ரொம்ப சமர்த்துப் பிள்ளையாக்கும். (பூஸார் காதில் இது பாயணும்!!) ஆசிரியர் வரும் முன்னே வந்தாச்சு!!!!! வந்து கதவு திறந்து ஆசிரியரைத் தட்டிக் கூப்பிட்டுக் கூட்டி வந்தாச்சு!!!!!!!

   கீதா

   நீக்கு
  3. ஹா ஹா ஹா ! பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா!

   நீக்கு
 3. எனக்கு மோர்க்குழம்பு பிடித்தமானது.
  இது ரசம் என்று சொல்கின்றீர்களே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயர் என்னவாக இருந்தால் என்ன? சுவைதானே முக்கியம்!

   நீக்கு
  2. அதே கௌ அண்ணா! கில்லர்ஜி இதுவும் வித்தியாசமான சுவையுடன் மிக நன்றாக இருக்கும். வேப்பம்பூ, ஸ்ரீராம் சொல்லிருக்கும் மணத்தக்காளி வத்தல் எல்லாமே நல்லதும் கூட. அம்மாவை வைச்சுத் தரச் சொல்லி சாப்பிட்டுப் பாருங்க. இல்லைனா மகளை. நீங்களே கூடச் செய்யலாம் ரொம்ப சிம்பிள் ரெசிப்பிதான்...

   கீதா

   நீக்கு
  3. வேப்பம்பூ வைத்து மோர் ரசம் பண்ணினதில்லை. எங்க வீட்டில் மோர்ச்சாறு என்போம். வேப்பம்பூ, சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், சுக்கு,ஓமம், பெருங்காயம் சேர்த்து வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டு சூடான சாதத்தில் போட்டு நெய்யோ, நல்லெண்ணெயோ ஊற்றிக் கொண்டு இந்த மோர் ரசம் தொட்டுக்கொண்டு சாப்பிட்டிருக்கோம்.சாப்பிடுவோம்.

   நீக்கு
 4. அனைவருக்கும் காலை வணக்கம். இன்று கீதா ரங்கன் ரெசிபியாகத்தான் இருக்கும் என்று உள்ளுக்குள் ஒரு பட்சி சொன்னது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா!! ஹிஹிஹி யெஸ் யேஸ்

   கீதா

   நீக்கு
  2. இன்று நான் கொஞ்சம் பிசி!!! இனி வரும் கருத்துகளுக்கு மாலையில் பதில் சொல்லுகிறேன்..

   கீதா

   நீக்கு
  3. அட! பா வெ மேடத்திற்கு பட்சி பாஷை கூட தெரியுமா!

   நீக்கு
  4. பா வே அக்காக்கு என்ன தெரியாதுனு கேளுங்க!!! கை ரேகை ஜோஸ்யமும் தெரியுமாக்கும். யாராவது இங்க படம் போடறேன்னு கை படம் போட்டீங்கனு வையுங்க ரெண்டு பேர் இருக்காங்க ஜோஸ்யம் சொல்ல...நெல்லை அப்புறம் பானு அக்கா...

   கீதா

   நீக்கு
 5. மிக அருமை கீதா. அம்மா தாளித்து ஒரு கொதிவிடுவார். மிளகாயும் இருக்கே. வாசனை பலமாத்தான் இருக்கும். ருசியான ரசம்.:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா யெஸ் சிலர் கொஞ்சமா அந்தப் பொடியை கொஞ்சமா தண்ணில கலந்து ஒரு கொதி விட்டுட்டு அந்த சூட்டுல மோரைக் கலந்துருவாங்க. அப்படியும் செய்யலாம். அத்தனை வித்தியாசம் இல்லைதான்.

   மிக்க நன்றி வல்லிம்மா

   கீதா

   நீக்கு
 6. பாலை வணக்கம் அனைவருக்கும். மோர் ரசம் இந்த முறையில் கேள்விப்படலை. மிளகாய்க்குப் பதில் மிளகு. வேப்பம்பூ வேற. புளித்த மோர். செய்து பார்த்துவிடுகிறேன், ஆனா ஒரு வாரமாவது ஆகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // பாலை வணக்கம்// மோருக்கு முன்னாடி தயிர், அதற்கு முன்னால் பால். அதனாலதான் பாலை வணங்குகின்றீர்களா !

   நீக்கு
  2. கண்ணாடி போட்டுக்காக காலைல மொபைல்ல தட்டச்சுனா பிழை வந்துடுது.

   பெங்களூர் பாலைவனம்போல சூடா இருப்பதால் பாலை வணக்கம் போட்டேன்னு சமாளிக்கலாம்.

   கௌதமன் சார் பதில் போடணும்னா ஒண்ணு எங்கள் கிரியேஷன்லயோ எபிலயோ அவர் எழுதியிருக்கணும்.. இல்லைனா ஶ்ரீராம் காசியாத்திரை போயிருக்கணும் போலிருக்கு

   நீக்கு
  3. நெல்லை வெயில் கொளுத்துது அதுவும் நேத்து இன்று மதியம். இப்ப கூல் இங்கு மழை கொஞ்சம் பெய்தது. இன்னும் மேகமூட்டம்.

   பெங்களூர் இப்ப ட்ரை ஆகிடுச்சு. பசுமை இல்லை. ஒரே பில்டிங்க்ஸ் ஓவர் ப்ரிட்ஜ்....பயங்கர தூசி. பாலைவனம் போல தூசி வீட்டுக்குள்ள அப்புது. காலைல பெருக்கினா அடுத்த ஒரு மணி நேரத்துல தூசி

   கீதா

   நீக்கு
  4. இன்றைக்கு மாலை பெங்களூரில் பயங்கர இடி மின்னலுடன் கூடிய மழை. தெருவெங்கும் தண்ணீர். திடீர் என்று டெம்பரேச்சர் இறங்கி குளிர் காற்று வீசுது.

   நீக்கு
 7. வந்திருக்கும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

  பதிலளிநீக்கு
 8. உங்க ஊர்ல குளிரே இல்லையே... சூடா இருக்கே.. இப்படிப்பட்ட பெங்களூரைப் பார்க்கலியே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேர்தல் சமயம் அல்லவா ! அனல் பறக்கும் பிரச்சாரம் போலிருக்கு!

   நீக்கு
  2. சார்.. காய் விலை ரொம்ப அதிகமா இருக்கே. வெண்டை கிலோ 80 ரூ, வாழைக்காய் ஒண்ணு 15 ரூபாய்... கட்டுப்படியாகுமா?

   நீக்கு
  3. நான் காய்கனி ஆர்டர் செய்யும் doodhwala app பில் இப்போ விலை பார்த்தேன். கால் கிலோ 17 ரூ. கிலோ 68. பக்கத்தில் இருக்கும் கடையில் கிலோ 50 ரூபாய்.

   நீக்கு
  4. நெல்லை என்ன நெல்லை இப்படி விலை சொல்லறீங்க. எங்க ஏரியாவுல இப்படி விலை இல்லையே. வெண்டைக்காய் சூப்பர் வெண்டைக்காய் அதுவும் 500 கிராம்னா 600 இருக்கும். கிலோ 40 ரூ. எல்லாமே கிலோ 40, 30க்குள். ஏதோ ஒரு காய் தான் 60 மறந்து போச்சு..ப்ரொக்கோலி ஒரு பெரிய பூ 40 ரூ தான். ஒரு வாழைக்கய் ரூ 5. நெல்லை மயங்கிடாதீங்க.

   எங்களுக்கு கட்டுப்படியாவதே இதனால்தான்.

   கீதா

   நீக்கு
  5. கீதா ரங்கன்... நான் சொன்னது ஜெபி நகர்ல, மோர் சுப்பர்மார்கெட் எதிரில். (மோர் சூப்பர்மார்கெட்டில் காய்கறி பழங்கள் நல்லாவே இல்லை. பழசா இருக்கு). நீங்க எங்க...வயல்வெளிகளுக்கிடையில் இருக்கீங்களா? அடையாறுல வாழைக்காய் 14 ரூபாய். இங்க 15 ரூபாய் ஒன்று. மோர் சூப்பர்மார்கெட்ல கிலோ 70 ரூபாய். பாருங்க... தண்ணி ஊத்தி பாதுகாத்து வாழைமரம் வைக்கிறவருக்கு 2 ரூபாய்கூட கிடைக்காது. மழை, புயல்னு எது வந்தாலும் அவங்களுக்குத்தான் ரிஸ்க். வாங்கி விக்கறவங்களுக்கில்லை.

   சரி சரி... நீவு எஞ்சாய் மாடி... ஞான் எந்தா பறயு..

   நீக்கு
  6. ஹி ஹி மோர் சூப்பர் மார்க்கட்டுல மோர்தானே வாங்கணும்! அதை விட்டு காய்கறி எல்லாம் வாங்கக் கூடாது!

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  சகோதரி கீதா ரங்கனின் மோர் ரசம் நன்றாக இருக்கிறது. மோர் தாளிப்பு என நான் வேப்பம்பூ இல்லாது தனியாக செய்வேன்.( வேப்பம்பூ ரசம் கொஞ்சம் புளி விட்டு செய்வதுதான்.) அதுவும் ஏதாவது துவையல் சாதத்திற்கு பொருத்தமாக இருக்கும். நீங்கள் செய்ததும் மிக அற்புதமாக உள்ளது. வேப்பம்பூவின் சுவை இப்போது சிலருக்கு கொஞ்சம் பிடிக்காமல் போகலாம். தாங்கள் கொடுத்த உத்தி நல்லது. இது போல் செய்து பாக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  தொடர் நினைவு வந்தது. அப்புறம்தான் இன்றைய கிழமையும் நினைவு வந்தது. கெளதமன் சகோதரர் ஏன் காசி பயணத்தில் கலந்து கொள்ள வில்லையா? அவராவது இங்கு இருப்பதால் பயமில்லாமல், எ.பிக்குள நுழைய முடியும். நான் இருக்கிறேன் என்றது தைரியத்தை கொடுத்தது. ஹா. ஹா நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோர்க்கும் பதிலளிக்க நான் இருக்கிறேன்!
   வந்தாரை வரவேற்கக் காத்திருக்கிறேன்!
   எங்கள் ப்ளாக் தான் நான் அறிந்த வலைப்பதிவு அம்மா!
   திங்கள் பதிவு தான் நான் படிக்கும் பக்குவம் அம்மா!

   நீக்கு
  2. ஆகா..

   வயிரத் தூண் போல வந்தீர்களே..
   வனப்புடன் பதில் ஒன்று தந்தீர்களே..

   வாழ்க நலம்...

   நீக்கு
  3. மொத்தத்துல என்னை தூண் என்று சொல்லிவிட்டீர்கள்! நன்றி ஐயா நன்றி! எதையும் தாங்குவேன் அன்புக்காக, நான் இதையும் தாங்குவேன் நட்புக்காக, நட்புக்காக!

   நீக்கு
  4. கௌதமன் சார்.. அட்ரஸ் தராமல் “பெங்ளூர் பியூட்டிபுல் பெங்ளூர்”னு பாடினால் ஆச்சா? அப்போதானே நாங்கள் வந்தால் வரவேற்பீங்க

   நீக்கு
  5. ஹி ஹி நான் சொன்ன வந்தாரை வரவேற்பது, இந்த வலைப் பக்கத்திற்கு வருபவர்களை! மேலும், மனம் இருந்தால் மார்க பந்து என்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!

   நீக்கு
  6. வரவேற்பு பாட்டு நன்றாக இருக்கிறது சார்.

   நீக்கு
  7. கௌ அண்ணா உங்க பதில் டு துரை அண்ணாவுக்கு கொடுத்த பதில் ஹா ஹா..இதோ நான் வந்தாச்சு பதில் கொடுத்துட்டுருக்கேன்..

   கீதா

   நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

   கோர்வையாக வந்த பதிலுரைகளை மிக மிக ரசித்தேன். நானறிந்து ஒரு வார்த்தையில் சுருக்கமாக பதிலளிக்கும் தாங்கள் இன்று அருமையாக பதில்கவி பாடி அசத்தி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.
   சகோதரி கீதா ரெங்கன் செய்முறையான மோர் ரசத்தை மிகவும் ரசித்தேன். அறிமுகத்திற்கு நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  9. கமலா அக்கா மன்னிக்கவும் வெரி வெரி வெரி சாரி!...கருத்துப் பெட்டியில் அடுக்கடுக்காக வரும் போது சில சமயம் இப்படி மிஸ் ஆகிப் போகுது.என் கவனக் குறைவுதான் காரணம் அக்கா. வெரி வெரி சாரி.மன்னிச்சுக்கோங்க..

   அக்கா இந்த ரசத்துலயும் வேப்பம் பூ கலந்து சாப்பிட்டுப் பாருங்க நல்லாருக்கும். வேப்பம் பூ ரசம் தனியா வைக்கறதுண்டுதான். புளியில்லா பொரித்த ரசத்துல கூட என் அப்பா வழிப்பாட்டி வேப்பம் பூ பொரிச்சு கலந்து தருவாங்க அதுவும் டேஸ்ட் நல்லாருக்கும் அக்கா.

   சாரி சாரி எகெயின்....வருந்துகிறேன் தாமதமான ரிப்ளைக்கு...

   மிக்க நன்றி கமலா அக்கா ரஸத்தை ரசித்ததற்கு. சுவைத்துட்டும் சொல்லுங்க

   கீதா

   நீக்கு
 10. மோர் ரசம் புதிதாக இருக்கிறது... பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் என்பது மிகவும் வசதி... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சத்தியம் தான் நான் படிக்கும் புத்தகம் அம்மா
   பாட்டு தேர்தலுக்கு ஏற்றது.
   வரவேற்புக்கு மிக நன்றி கௌதமன் ஜி.

   நீக்கு
  2. டிடி ஆமாம் இந்தப் பொடி செஞ்சு வைச்சுட்டா சூப்பரா எளிதில் செஞ்சுடலாம். சும்மா மோர்ல கொஞ்சமே கொஞ்சம் இந்தப் பொடி போட்டு (ரசத்துக்கு போடுற அளவு வேண்டாம்..கொஞ்சமா போதும்) ஜில்லுனு குடிச்சுப் பாருங்க செமையா இருக்கும். எங்க வீட்டுல இது சம்மர் ஸ்பெஷலா கலந்து ஃப்ரிட்ஜுல வைச்சு சாப்பிடுவோம் சென்னைல இருந்த வரை.

   கீதா

   நீக்கு
  3. காலையிலேயே இந்த குறிப்பை மனைவியின் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டேன்... (அது ஒரு சேமிப்பாகவும் இருக்கும் என்பதால்)

   நீக்கு
 11. பதில்கள்
  1. வாங்க துரை அண்ணா...இப்பத்தான் பதில் கொடுக்க முடிந்தது கொடுத்துட்டு வரேன்..

   கீதா

   நீக்கு
 12. வேம்பு மலரும் காலம் இதோ வந்து விட்டது...

  கொஞ்சம் முயற்சித்தால் சுத்தமான பூக்களை சேகரித்துக் கொள்ளலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் என்று தெரியவில்லை. ஆனால் பெங்களூரில் வேப்பமரங்கள் அதிகம் காணப்படவில்லை. :(

   நீக்கு
  2. ஆமாம் துரை அண்ணா முயன்றால் சுத்தமா வேப்பம் பூ சேகரிக்கலாம்..

   கௌ அண்ணா ஆமாம் பங்களூரில் ஏனோ வேப்பமரமே காணலை. ஆனா யுகாதி அன்னிக்கு எப்படி அத்தனை வேப்பம் பூவோடு கொப்பு கொண்டு வந்து வித்தாங்க?

   கீதா

   நீக்கு
  3. ஹோசூரிலிருந்து வந்திருக்கும்.

   நீக்கு
 13. ரசம் கேள்விப்பட்டுள்ளேன். மோர் ரசம் இப்போதுதான் அறிகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் இந்த பெயர் புதியதாகத்தான் இருக்கிறது! மோர்க்குழம்பு என்று கேள்விப்பட்டுள்ளேன். மோர் ரசம் புதுசுதான்!

   நீக்கு
  2. கௌதமன் சார்... ஜம்புலிங்கம் சார் சொல்லலாம் தப்பில்லை. நீங்க சொல்லலாமா?

   எங்க வீட்டில் மிளகாய், வெந்தயம் எண்ணைல வறுத்து உப்போடு பொடித்து மஞ்சள் பொடி போட்டு மோருல் கலக்கி திருவமாறி மோர்ச்்சாத்துமது என்று சாப்பிடுவோம்.

   நீக்கு
  3. கொஞ்சம் எனக்கு அனுப்புங்க. சாப்பிட்டுப் பார்த்து சொல்கிறேன்.

   நீக்கு
  4. அதே அதே மோர்ச்சாத்தமுது நெ.த.

   நீக்கு
  5. நெல்லை அதே அதே தின்னவேலி டைப் மோர் ரசம் என் அப்பா வழிப் பாட்டி செய்து தருவார். அதில் சில சமயம் மோர் மிளகாய் கூட வறுத்து ப் பொடித்து கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து தருவார் பாருங்கள் செமையா இருக்கும். இதைத்தான் சொல்கிறேன்னு சொல்லிருந்தேன்...

   கீதா

   நீக்கு
 14. பூஸாரைப் பார்த்தே புரிந்துகொண்டேன் - உங்கள் மோர் ரஸத்தை ருசித்தால் என்னாகும் என்பதை..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா சிரித்து விட்டேன்.

   ஆனா பாருங்க இந்த பூஸார் சொல்லுவதை எல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாதாக்கும்...நான் காசி ஆர்கனைஸர் அவதாரம் எடுத்துருக்கற பூஸாரைச் சொல்லலைனு எங்க வீட்டுப் பக்கத்துல இருக்கற கொகிலு லேக் கிரே மேல அடிச்சு சொல்லறேன்!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  2. ஏற்கனவே லேக்குல்லாம் குறைஞ்சுபோச்சு பெங்களூருல. அதுமேல அடிச்சு சொல்றேங்கிறீங்க.. என்னவோ இது நல்லதுக்கில்ல!

   நீக்கு
 15. பச்சமோர் என்று சொல்வார்களே அது என்று பார்த்தேன். ஆனால்,மிளகு,சீரகம் எல்லாம் போட்டு இது ரஸமா இருக்கு. ஒரு கொதி விட்டுவிட்டால் உடம்பு ஸரி இல்லாதர்களுக்குக் கூட கொடுக்கலாம். வேப்பம்பூ,மணத்தக்காளி வற்றல்கூட நல்ல ஜோடி. ருசியாயிருக்கு. எனக்கு மோரில் செய்த யாவும் பிடிக்கும். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க காமாட்சிம்மா...ஆமாம் இதை லைட்டா சூடு பண்ணி பதைக்க வைக்கலாம். நான் இரண்டு முறையும் செய்வதுண்டு. ஆனால் மாமியார் சூடு பண்ண மாட்டாங்க..இதைச் சொல்ல நினைத்து பதிவுல விட்டுப் போச்சு..

   மிக்க ந்னறி காமாட்சிமா

   கீதா

   நீக்கு
 16. மோர் ரசம் செய்முறை விளக்கத்துடன் நன்றாக இருக்கிறது கீதா.

  வேப்பம்பூ இல்லாமல் செய்து இருக்கிறேன். அடிக்கடி செய்வேன், காய்ச்சல், வந்து முடிந்த பின் வாய் கசக்கும் அப்போது இந்த மோர் ரசம் நாக்கிற்கு சுவையாக இருக்கும். வயிற்று பொருமல் இருந்தால் கொஞ்சம் இந்த் ரசத்தில் ஓமம் தாளித்து கொட்டி சாப்பிட்டால் வயிற்று பொருமல் சரியாகி விடும்.

  வேப்பம்பூ கிடைக்கிறது பூ போட்டு செய்து பார்க்கிறேன். உடம்பு சரியில்லாதவர்களுக்கு கொடுக்கும் ரசம் தான் இது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அக்கா இது என் மாமியார் வீட்டில் கண்டிப்பாக துவாதசி அன்று பொரிச்ச ரசம் அல்லது இந்த ரசம் புளி சேர்க்க மாட்டாங்க இல்லையா அதனால துவாதசி அன்று செய்வாங்க.

   மிக்க நன்றி கோமதிக்கா

   கௌ அண்ணா பத்திய ரசம்னும் சொல்லலாம் என்றாலும் இது நம் வீட்டில் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்வாங்க ஸோ நாட் பத்திய ரசம்...ஆனா வேப்பம் பூ இல்லாம செய்ய மாட்டாங்க.

   கீதா

   நீக்கு
 17. எல்லாருக்கும் :) சிறிய இடைவெளிக்குப்பின் ஒரு காலைவணக்கம் லண்டனிலிருந்து :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் பக்கம் சூரியன் உச்சியிலே! தேம்ஸ் பக்கம் போவீங்களா?

   நீக்கு
  2. கௌதமன் சார் :) இங்கே குளிரும் மழையும் ஒரு நாள் வெயில் அடிச்சா மூணு நாள் மழை ..
   அப்புறம் தேம்ஸ் எங்களோடது ஆனா சும்மனாலும் ஸ்கொட்டிஷ்க்காரங்க அவங்கதுனு சொல்லிக்கறாங்க .
   எங்க தேம்சுக்கு அடுத்த வாரம் பிரயாணம் இருக்கு :)

   நீக்கு
  3. வணக்கம் ஏஞ்சல், இந்த மோர் ரசம், மழைக்காலத்தில் இரவு நேர சாப்பாட்டுக்குக் கைகொடுக்கும்.
   குழந்தைகளுக்குத் தயிர் தொண்டைக்கு ஆகாது என்று மோர் ரசம் செய்துவிடுவார்கள்.

   மிளகு,வெந்தயம்,உளுத்தம்பருப்புத் தாளித்து மஞ்சப்பொடி பொடி போட்டு மோரைச் சிலுப்பி
   வாணலியில் விட்டு கருவேப்பிலையும்,பெருங்காயம் போட்டு இறக்கினால்
   கமகமா தான்.

   நீக்கு
  4. தாங்க்ஸ் வல்லிம்மா :) இதேபோல் தாளிச்சு சாப்பிட்றன் .

   @நெல்லைத்தமிழன் நோட் திஸ் பாயிண்ட் :) வல்லிம்மா குழந்தைங்களுக்குன்னு எனக்கு சொல்லியிருக்காங்க :)

   நீக்கு
  5. ஏஞ்சல் வாங்க 3.30 மணி வணக்கம் உங்களுக்கு!! உங்க ஊர் டைம் ஹா ஹா ஹா

   வல்லிம்மா அண்ட் ஏஞ்சல் வல்லிமா நீங்க சொல்லிருக்கறது எங்க பிறந்த வீட்டுல அப்பா வழிப் பாட்டி செய்வாங்க...நெல்லைக்கும் பதிலில் சொல்லிருக்கேன் கொஞ்சம் வேரியஷன் அவங்க செய்வது...

   இங்க சொல்லிருக்கறது மாமியார் ஸ்டைல்...

   மிக்க நன்றி ஏஞ்சல் அண்ட் வல்லிமா

   கீதா

   நீக்கு
  6. //குழந்தைங்களுக்குன்னு எனக்கு சொல்லியிருக்காங்க :)// - என்னத்தைப் புரிஞ்சுக்கிறீங்களோ.... லண்டன்ல, உங்க குழந்தைகளுக்குச் செய்துகொடுக்கச் சொல்லி சொல்லியிருக்காங்க. எனக்கு வல்லிம்மா எழுத்து புரியுது. உங்களுக்குப் புரியலை. காரணம் வேற எதுவும் இல்லை. அதிராவோட தமிழை படிச்சுப் படிச்சு ஒரிஜினல் தமிழ் தெரியாம போயிடுச்சு.ஹாஹா

   நீக்கு
 18. துருவின தேங்காயும் சேர்த்திங்களா கீதா ? படத்தில் இருக்கே !நான் சேர்ப்பேன் .இதே முறைதான் ஆனா நான் கொஞ்சம் அதிகமா மல்லிவிதைகளை சேர்த்திருக்கேன் இனிமே உங்க ரெசிப்பி முறையில் 1/4 டீஸ்பூன் மட்டும் சேர்க்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சல் தேங்காய் கிடையாது இதுல. கப்ல இருக்கறது தயிர். கீழ தட்டுல இருக்கறது சாதத்துல வறுத்த வேப்பம் பூ.

   பிறந்த வீட்டுல சப்போஸ் யாருக்காவது வயிறு சரியில்லாம கொஞ்சம் வயிற்றுப் போக்கு இருந்துச்சுனா வல்லிம்மா நெல்லை அங்க சொல்லிருக்கறது செய்து தருவாங்க. மாமியார் வீட்டுல இந்த ரசம். குறிப்பா வெந்தயம் இருக்கறதுதான்.

   அப்புறம் தொண்டைக் கட்டு, ஜல்பு பிடிக்கும்னா வரும்னா மோரை லைட்டா இரண்டு விட்டுலயும் ரசம் செஞ்சுட்டு லைட்டா சூடு செய்வதும் வழக்கம்.

   மிக்க நன்றி ஏஞ்சல்...

   கீதா

   நீக்கு
 19. வேப்பம்பூவுக்கு நாங்க எங்கே போவோம் :) அதனால் ஓரு திப்பிசம் செஞ்சிடுவேன் எப்பவுமே ரசம் செய்யும்போது இங்கே ஸ்ரீலங்கன் ஷாப்பில் வேப்பம்பூ வடகம்னு கிடைக்கும் அதை உடைச்சி தாளிதத்தில் சேர்த்திடுவேன் :)
  அப்புறம் மணத்தக்காளி சுண்டக்காய் சுக்கங்காயிலாம் தனியா தாளித்து தனி மோர்க்குழம்பு நாமத்தை தருவேன் :)
  மணத்தக்காளி சேர்த்தா மணத்தக்காளி மோர்க்குழம்பு ,சுண்டக்காய் சேர்த்தா சுண்டக்கா மோர்க்குழம்பு இப்படி :) இதெல்லாம் லண்டன் ஸ்டைலாக்கும் தேம்சுக்கு ஒன்னும் தெரியாதது :) காலைல மெயிலில் அனுப்பின ஸ்பாஞ் இட்லிக்கே மயக்கம் போட்டு பூஸ் :) இன்னும் காணோம் பாருங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேப்பம்பூ வடகம் நல்ல ஐடியா!

   நீக்கு
  2. :) நாங்கல்லாம் திப்பிசம் புகழ் கீசாக்கா /கீதாக்காவின் சிஷ்யைகளாச்சே :)

   நீக்கு
  3. ஏஞ்சல் வேப்பம்பூ வடகம் கௌ அண்ணா சொல்லிருக்காப்புல நல்ல ஐடியா. அது போல மணத்தக்காளி ஸ்ரீராம் சொல்லிருக்கார். சுண்டை/மணத்தக்காளி வத்தல் சாதாரணமாவே நாம மோர்/தயிர் சாதத்துக்கு சேர்த்துச் சாப்பிடுவது தான் இல்லையா ஸோ இதுக்கும் நல்லாருக்கும் நீங்க சொன்ன பேரும் வைச்சுருவோம் திப்பிசம் புகழ் கீதாக்கா ......அதே அதே....ஹா ஹா ஹா.....

   மிக்க நன்றி ஏஞ்சல்

   கீதா

   நீக்கு
  4. இதெல்லாம் லண்டன் ஸ்டைலாக்கும் தேம்சுக்கு ஒன்னும் தெரியாதது :) காலைல மெயிலில் அனுப்பின ஸ்பாஞ் இட்லிக்கே மயக்கம் போட்டு பூஸ் :) இன்னும் காணோம் பாருங்க//

   ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் சிரிச்சு முடில...லண்டன் ஸ்டைல் அதுவும் தேம்ஸ்குக்குத் தெரியாதுனு வேற சொல்லிட்டீங்கல்ல...பாருங்க இதுக்காகவே "குழம்பிய ரசம்" நு புது ரெசிப்பி போட்டு நம்மள குழப்பிட்டதா நினைச்சு போடுவாங்க நாம அவங்களை தெளிவா ஓட்டிடுவோம்!!!!!..

   கீதா

   நீக்கு
 20. / ஏஞ்சலுக்குக் கண்டிப்பா இது பிடிக்கும்னு நினைக்கிறேன். பிக்காஸ் அவங்க ஹெல்த் கான்ஷியஸ்//
  யெஸ் யெஸ்ஸ்ஸ் :) ஒரு பெரிய கப் மோர்குழம்புக்கு ஒரு ஸ்பூன் ரைஸ்தான் :) சாப்பிடவேணாம் அப்படியே குடிப்பேன் .
  பூனை கடைசீ படத்தில் என்னத்தை பார்க்குது :) யோகார்ட்டா ? :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே அதே ஏஞ்சல் மீ டூ!!! பூனை பார்க்குது என்னனு தெரியல ஏதோ வெள்ளையா நுங்கு பதத்துல இருக்காப்ல இருக்கு ஜெல் போல...வேற கிடைக்கலை ஸோ இது பொருத்தமா இருந்துச்சா போட்டுட்டேன்..ஹா ஹா

   நாம பேசிக்கிட்டது தேம்ஸ் பூஸாருக்குத் தெரியாதுதானே...ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
 21. பதில்கள்
  1. ஏஞ்சல் இது மோர் ரசம் என்றே செய்வது. மோர் குழம்பு கிடையாது. பத்திய குழம்பு , மருந்து குழம்பு என்றும் சொல்லலாம். 1970ம் வருடம் நான் பள்ளியில் படிக்கும் போது மோர் ரசம் என்று மஞ்சரி புத்தகத்தில் வந்த குறிப்பை எழுதி வைத்து இருந்தேன். அம்மா சமையல் குறிப்புகளை எழுதி வைதுக் கொள்ள சொல்வார்கள்.
   இப்போது போல் ஸ்கேன் செய்யும் வசதி போட்டோ எடுத்துக் கொள்ளும் வசதி கிடையாது அவசர அவசரமாய் என் கையெழுத்து சும்மவே நல்லா இருக்கும் அவசரம் என்றால் தலையெழுத்து மாதிரி இருக்கும் . ஒரு நாள் அதை என் பதிவில் போடுகிறேன்.

   கீதாரெங்கன் இதை போட்டவுடன் என் பழைய டையிரியை தேடி எடுத்துப் பார்த்தேன். அதில் மிளகு, வெந்தயம், வேப்பம்பூ இல்லை.

   நீக்கு
  2. ஆமா !! எங்கே கீதாக்கா ??
   அவர்கள் தான் உங்களுக்கு நிறைய படிக்க தன் பதிவுகளின் குறிப்பை போட்டு விட்டு பயணம் இருக்கிறது என்றார்களே!
   ஆனால் கோவில் இல்லை என்றார்கள் ,உறவுகளை பார்க்க போய் இருக்கிறார்கள் போலும்.
   வந்தவுடன் பதிவு உண்டு.

   நீக்கு
  3. கோமதிக்கா அது ஒரு பதிவு அப்புறம் சுத்திப் பார்த்திருக்கிங்களா இந்த இடம் எல்லாம்னு பதிவு போட்டுருந்தாங்களே. இப்ப பயணம் கோயில் இல்லை. வேறு பயணம்...4 ஆம் தேதிக்கு அப்புறம் பதிவு இல்லையே. நானும் பார்த்தேன் நீங்க இங்க சொன்னதை வைத்து.

   கீதா

   நீக்கு
 22. யெஸ் யெஸ் கோமதிக்கா :) நான்தான் எல்லாத்தையும் குழம்புன்னு சொல்லிடுவேன் அந்த குழப்பத்தில் எழுதிட்டேன் :) உங்க குறிப்பு ரெசிப்பியும் எழுதுங்க ..
  நான் எல்லாரையும் மொத்தமா இங்கேதான் தேடுவேன் :) அதான் எங்கே காணோமேன்னு பார்த்தேன் . தாங்க்ஸ் அக்கா அங்கே சென்று பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சல் தேம்ஸ் தேம்ஸ்னு உங்க ஊர் நதிய கொண்டாடும் ஆளைக் காணலையே..கீதாக்கா பயணத்தில் இருக்காங்க இப்ப வந்திருபபங்க. அது பத்தி பதிவு வரும்னு நினைக்கிறேன்!!...

   கோமதிக்கா உங்க குறிப்பும் போடுங்க ப்ளீஸ்!!


   கீதா

   நீக்கு
 23. நங்கள் இதை மோர்க்குழம்பு என்று சொல்லுவோம். எனக்கு மிகவும் பிடித்தமானது கூட

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொக்கன் சகோ இது மோர்க்குழம்பு இல்லை..இல்லை இல்லை நு ....சொல்லிக்கறேன்..ஹா ஹா ஹா

   இது ரசம்...மோர்க்குழம்பு வேற அதுலயும் நிறைய வெரைட்டிஸ் இருக்குதான்...ஆனா இதன் சுவை வேறு

   கீதா

   நீக்கு
  2. சொக்கன் சகோ மிக்க நன்றி கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 24. மோர்க்குழம்புக்கு இப்படி ஒரு பெயரா எனக்கு மோர்க் குழம்பு பிடிக்காது சஎய்யமாட்டாள் என்மனைவி அவளுக்குப் பிடித்தாலும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா !!! எல்லாரும் இதைக் குழம்புனு சொல்றாங்களே!

   ஜி எம் பி சார் இது வேறு இது குழம்பு அல்ல!! இதன் சுவையே வேறு....மோர்க்குழம்பு வேறு

   மிக்க நன்றி ஜி எம்பி ஸார்.

   கீதா

   நீக்கு
 25. குழம்பியிருந்தால் குழம்பு; தெளிந்து இருந்தால் ரசம். அவ்வளவுதாங்க வாழ்க்கை. எல்லாம் போய் சீரியல் பாருங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா கௌ அண்ணா!! சிரித்துவிட்டேன்..

   அண்ணா இங்க எல்லாம் ரசமா குழம்பானு குழம்பினது போல அந்தப் பூஸாரும் குழம்பித்தான் பார்க்குது போல!!! ஏ அண்ணா சொன்னது சரிதானோ!!?? ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. கௌ அண்ணா நீங்க பங்களூர் வசனம்!! மேல தெளிவு ரசம்...அடி மண்டி குழம்பு!! ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. AAHAA! THATTHUVAM SAAR..SUPER TRUE..
   NEXT TIME I TRY TO TYPE IN TAMIL..

   நீக்கு
 26. சுவையான குறிப்பு. வேப்பம்பூ ரசம் வைப்பதுண்டு. மோர் ரசம் இதுவரை நான் வைத்தது/சுவைத்தது இல்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட்ஜி வாங்க இத செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும். பேச்சுலர் (ஹிஹிஹிஹிஹி) ரெசிப்பிதான் ஈசி!!

   மிக்க நன்றி வெங்கட்ஜி!!

   கீதா

   நீக்கு
  2. இதுவரை மோர் ரசம் செய்ததில்லை இது இங்கிட்டு புதுசு

   நீக்கு
  3. வாங்க ராஜி! செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும்.

   மிக்க நன்றி ராஜி!

   கீதா

   நீக்கு
  4. இதைக் குழம்பு குழம்பு னு சொல்லி நான் இல்லை இல்லை இது ரசம்னு எங்க அடிச்சு சொன்னாலும் இப்ப நான் குழம்போ குழம்போன்னு குயம்பி நிக்கிறேன்...!!!!! ஹிஹிஹிஹி

   கீதா

   நீக்கு
 27. கீதா, குறிப்பு எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால், வறுத்துக் கொள்ள வேண்டிய பொருள்களில் குறிப்பிடப்படாத சிவப்பு மிளகாய் படத்தில் வந்தது எப்படி? அது உண்டா? இல்லை கைத்தவறி வந்துவிட்டதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ பானுக்கா இப்பத்தான் நோட் செஞ்ச்னேன். வறுக்கும் பொருளில் விட்டுப் போனது. மிளகாய் உண்டு. தாங்க்யூ அக்கா. வாணலியில் வறுப்பதில் இருக்கு. ஆனால் குறிப்பில் இல்லை ஆமாம். ஒன்று வைத்தாலும் ஓகே பாதி வைத்தாலும் ஓகே தான் அக்கா. மிள்குதான் இதில் மெயின் காரம். இதையும் சொல்ல விட்டுப் போனது.

   இப்பல்லாம் எனக்குப் பதிவு எழுதுவது என்பது ஏனோ மிகவும் சொதப்புகிறது. எழுத வேண்டும் என்று நினைத்து விடுதல், ஒரு கவனமின்மை எல்லாம்.. சேர்ந்துள்ளது பானுக்கா. அடுத்த பதிவிலிருந்து கவனித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி பானுக்கா

   கீதா

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி.

   உங்கள் தயாரிப்பான மோர் ரசம் மிக ஜோர்.இதற்கு இரு தடவை நான் பதிலளித்தும், என் கருத்தை கவனிக்கவேயில்லையே சகோதரி. ஒருவேளை என் கருத்துக்கள்தான் சுவையான "ரச"மிக்கதாய் இல்லையோ? (தவறாக நினைக்க வேண்டாம் சும்மா தமாஷாக கேட்டேன். ஹா ஹா ஹா ஹா.)

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. கமலா அக்கா கவனித்துவிட்டேன். ஹையோ அக்கா உங்க கருத்துகள் எப்போதுமே செம வேல்யு உள்ள கருத்துகள். அப்படி எல்லாம் நினைக்காதீங்க. என் கவனக் குறைவுதான் காரணம். ஹிஹிஹிஹி...

   இப்ப பார்த்து பதில் சொல்லிட்டேன்... மிக்க நன்றி அக்கா நினைவுபடுத்தியமைக்கு...

   கீதா

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!