நீலவானம். 1965 இல் வெளிவந்த திரைப்படம். மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராஜஸ்ரீ, தேவிகா நடித்த படம்.
மூன்று இனிமையான பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதனும் கண்ணதாசனும் உதவி இருக்கிறார்கள். அதில் ஒரு பாடல் இன்று பகிர்வாக...
சிவாஜி பற்றி படித்த ஒரு அனுபவம்...
'பேசும் தெய்வம்' படத்தில் சிவாஜிக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டதாம். சாதாரணமாக அவர் நடிப்புக்கு மேல் யார் நடித்துவிடப் போகிறார்கள் என்று பெரும்பாலும் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்களாம்.
ஆனால் இப்படத்தின் இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் ஒரு காட்சியில் சிவாஜி நடித்து முடித்ததும் 'ஒன் மோர்' 'ஒன் மோர்' என்று கேட்டுக்கொண்டே இருந்தாராம். ஒரு கட்டத்தில் சிவாஜி கே எஸ் ஜி அருகில் வந்து "அப்பா... எனக்குத் தெரிந்த வகையில் எல்லாம் நடித்துக் காட்டி விட்டேன். நீ என்னதான் எதிர்பார்க்கிறாய்? கொஞ்சம் நடித்துக் காட்டேன்" என்றாராம்.
"இல்லை தலைவரே... நீங்களே சூப்பராதான் நடிச்சுருக்கீங்க.." என்று சொல்வதற்கு பதிலாக கே எஸ் ஜி நடித்தே காட்டி விட்டாராம்.
அதைப் பார்த்த சிவாஜி ஒன்றும் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டாராம். அந்தப் படத்துக்கு அன்றுதான் கடைசி கால்ஷீட்டாம். அருகில் இருந்தவர்கள் எல்லாம் "இப்படிப் பண்ணிட்டியே... இதோடு அவர் கால்ஷீட் வேற முடிச்சு போச்சு" என்று பயமுறுத்த, கே எஸ் ஜி ஒன்றும் பேசாமல் இருந்தாராம்.
மறுநாள் காலை சிவாஜி வீட்டிலிருந்து ஃபோனாம். சிவாஜி சீக்கிரமே புறப்பட்டு வந்து நடித்துக் கொடுத்து விட்டு அடுத்த கால்ஷீட்டுக்குப் போவார் என்று சொல்லப்பட்டதாம்.
வந்தாராம். நடித்தாராம். "இதைத்தான் தலைவரே எதிர்பார்த்தேன்" என்று கே எஸ் ஜி சந்தோஷப்பட்டாராம். சிவாஜி சொன்னாராம் " நான் வருவேனா மாட்டேனா என்று பயந்திருப்பாய்... நேற்று நான் ஏன் ஒன்றும் சொல்லாமல் போனேன் என்றால் எவ்வளவோ விதமாய் நடித்திருக்கிறோம், இப்படி நீ நடித்துக் காட்டியபடி ஏன் எனக்குத் தோன்றவில்லை என்று தோன்றியது. வீட்டுக்குப் போய் விடிய விடிய நடித்துப் பார்த்து எனக்கே திருப்தியானதும் உனக்கு ஃபோன் செய்யச் சொன்னேன்" என்றாராம்.
மறுபடியும் இன்றய நம் பாடல் பகிர்வுக்கு வருவோம்!
இந்தப் பாடலில் சிவாஜியின் ஆரம்ப நடனம் ஓரளவு பார்க்கும்படிதான் இருக்கும். அப்புறம் ராஜஸ்ரீ நடனம் ஆடியதும் இவர் ஆடுவது ஏதோ கிண்டல் செய்து நகைச்சுவையாய் ஆடுவது போல இருக்கும். நடன அசைவுகள், நினைவிருக்கட்டும், 1965 ஸ்டைல்.
"உனக்கும் எனக்கும் உருவப் பொருத்தமே" என்னும் வரியில் 'இருவருமே குண்டு" என்கிற பாணியில் அபிநயம் காட்டுவார் சிவாஜி.
டி எம் எஸ் குரலில் மிகவும் ரசிக்கத்தக்க பாடல். 'ஒரே தரம் ஒரேதரம் உறவாட வா விளையாட வா' என்கிற வரி முடிந்ததும் எம் எஸ் வியின் கைவண்ணம் ரசிக்கத்தக்கதாயிருக்கும். டி எம் எஸ் குரலை ரொம்பவே ரசிக்கலாம்.
ஆங்கில வார்த்தைகள் கலந்து "நவ நாகரீகமாக" கண்ணதாசனால் புனையப்பட்ட பாடல்.
காட்சியைக் காண விரும்பாதவர்களுக்காக இந்த வீடியோ. ஆனால் ஒரிஜினல் பாடலின் ஒரிஜினல் டெம்போ காட்சியுடன் கூடிய அடுத்த காணொளியில்தான் இருக்கிறது.
ஓ லிட்டில் ஃபிளவர்... ஸீ யுவர் லவர்..
ஸீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டுச் சிக்கிக்கொண்ட லவர்...
ஓஹோஹோ லிட்டில் ஃபிளவர்... ஸீ யுவர் லவர்..
ஸீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டுச் சிக்கிக்கொண்ட லவர்...
ஓஹோ... சிவக்கச் சிவக்க சிரிக்கும் அழகிலே
தளுக்கிக் குலுக்கி மினுக்கும் நடையிலே
நடக்க நடக்கத் துடிக்கும் இடையிலே
ஒரே தரம்... ஒரே தரம்.. உறவாட வா விளையாட வா...
ஆ...ஹா... கனியாகி கனிய வளர்ந்த பருவமே
கருத்த விழியில் மிரட்டும் உருவமே
உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே
ஒரே தரம்... ஒரே தரம்.. உறவாட வா விளையாட வா...
அழகு சுகத்தை எடுத்து வடிக்கவா
அருகில் இருந்து விருந்து கொடுக்கவா
அடுத்த கதையைப் படித்து முடிக்கவா
ஒரே தரம்... ஒரே தரம்.. உறவாட வா விளையாட வா...
இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.
பதிலளிநீக்குஸ்ரீராம் வெள்ளிப் பதிவோடு கொஞ்சம் உங்கள் சுற்றுலா பற்றியும் சொல்லிருக்கலாமோ?!!!
கீதா
இனிய காலை வணக்கம்கீதா ரெங்கன்.
நீக்குஅப்படித் தோன்றாமல் போனது. அப்புறம் அவசர அவசரமாக எழுத வேண்டும்!!!
என்னடா ஸ்ரீராமை வெங்கட்ஜி பதிவுல காணலியேனு சரி இங்க வரீங்களானு பார்த்துட்டு கேட்கலாம்னு விட்டுவிட்டேன்...
நீக்குவந்துவிட்டீர்கள்!!!
கீதா
டெல்லியும் சென்று வந்து விட்டேன். தாகூர் மலை ஏறவேண்டி இருந்தது. அப்புறம் விளக்கெண்ணெய் குடித்து விட்டு வந்தேன்!
நீக்குசிவாஜிக்கு செம டெடிக்கேஷன் இல்லையா ஸ்ரீராம்?!!
பதிலளிநீக்குஈகோ இல்லாம கற்கும் குணம். செம! நல்ல பாடம் இந்த நிகழ்வு
அது என்ன காட்சி என்று தெரிந்திருந்தால் நல்லாருக்கும் இல்லையா? கேஎஸ்ஜி எப்படிக் காட்டியிருப்பார்னு தெரிஞ்சுருக்குமே அதான்...
கீதா
சிவாஜி ஒரு பெர்ஃபெக்ட் பொரொஃப்ஷனல் நு தெரியுது.
நீக்குஅதை அவர் ராத்திரி நடிச்சு நடிச்சு பார்த்து வாவ்.
இப்படி எல்லாம் இப்பவும் நடக்குதோ? டைரக்டர் நடிகர்களுக்கு இடையே ஆன நல்ல உறவுகள்?
சிவாஜி பேசாம போனதும் கூட கேஎஸ்ஜி அதைத் தப்பாவே எடுத்துக்கலை அவருக்குத் தெரிஞ்சுருக்கு சிவாஜி எப்படினு....என்ன புரிதல் இல்லையா?
கீதா
ஆமாம்... அது என்ன காட்சி என்று சொல்லபபடவில்லை. எனக்கும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா... பாடல் விளக்கெண்ணெய் குடித்தது போல் இருக்காது. நன்றாகவே இருக்கும்!
நீக்குபானுக்கா வணக்கம் இந்தப் படம் பற்றி உங்கள் தகவல்கள் எதுவுமில்லையா?!!
நீக்குஇன்று என்ன ஸ்ரீராம் விளக்கெண்ணெயுனே பேசிட்டுருக்கார்...
பாஸ் காபிக்குப் பதிலா விளக்கெண்ணை குடிக்க வைச்சுட்டாரா!!! ஹா ஹா ஹா
கீதா
//இன்று என்ன ஸ்ரீராம் விளக்கெண்ணெயுனே பேசிட்டுருக்கார்..//
நீக்குஓ...உங்களுக்குத் தெரியாதோ கீதா ... சாயங்காலமா தெரியுமோ என்னவோ!
ஏதோ சிவாஜி படப்பாடல் போலிருக்கிறது. எனவே இன்று கச்சேரி களை கட்டும் என்று எதிர்பார்க்கலாமா?
பதிலளிநீக்குஹா... ஹா...ஹா... கீதா அக்கா வரவுக்காக ஆவலுடன் வெயிட்டிங்!
நீக்குமதுரையிலே சென்ட்ரல் தியேட்டரில் இந்தப் படம் ஓடும்போது பாஸ் கிடைச்சுப் பார்த்துத் தொலைச்சிருக்கேன். அப்போவே ஜிவாஜிக்கு ராஜஸ்ரீ ஜோடியானு கோபமா வந்தது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு மஞ்சுளா என்பதை விட இது பரவாயில்லை இல்லையா?
நீக்கு//பாஸ் கிடைச்சுப் பார்த்துத் தொலைச்சிருக்கேன்//
நீக்குஹா... ஹா... ஹா...
ஹா ஹா ஹா கீதாக்கா வந்தாச்சு....இன்னிக்கு ஜிவாஜிக்கு செம மண்டகப்படியா இருக்கும்!!!!! ஹா ஹா ஹா
நீக்குகீதா
//எம்.ஜி.ஆருக்கு மஞ்சுளா என்பதை விட இது பரவாயில்லை இல்லையா?// - ரஜினிக்கு மீனா, சிவாஜிக்கு ஸ்ரீதேவி, அம்பிகா என்பதைவிட மோசமா கீசா மேடம்?
நீக்குஜெய்சங்கருக்கும் ஸ்ரீதேவி என்று சேர்த்துக் கொள்ளுங்கள் நெல்லை...
நீக்குசிவாஜியோட அம்பிகா தங்கை ராதாவை விட்டுட்டீங்களே...
ஸ்ரீராம் - அது மிகவும் பொருத்தமா, படத்துக்கு ஏற்றபடி இருந்தது. அதில்தான் சிவாஜி மேக்சிமம் சைஸ், அதிலும் மடித்துக்கட்டிய வேஷ்டியோட.
நீக்குIt was ok with Radha, because the love was a platonic love. வெறும் உடல் சார்ந்தது அல்ல.மனம் சார்ந்தது. ஆகவே ராதா பொருத்தமாகவே இருந்தார். வேறே யாரையானும் போட்டிருந்தா சொதப்பி இருப்பாங்க!
நீக்குஎன்ன ஆச்சு துரைக்கு? பிசியா? வந்திருக்கும் அனைவருக்கும், வரப்போகும் அனைவருக்கும் நல்வரவும், வணக்கமும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஆம்... இன்று வெள்ளிக்கிழமை அவருக்கு விடுமுறை என்பதால் மெதுவாக வருவார் என்று நினைக்கிறேன். துரை செல்வராஜூ சாருக்கும், உங்களுக்கும், இனி வரவிருக்கும் நம் நட்புகள் எல்லோருக்கும் எங்கள் நல்வரவு.
நீக்குநான் சொல்ல வந்ததை ஸ்ரீராம் சொல்லிட்டார் ஆமாம் இன்று வெள்ளி லீவு ஸோ அண்ணா மெதுவா வருவார்.
நீக்குகீதா
அந்தக்கால நடிகர்கள் டூயட் என்னும் பெயரில் மரத்தைச் சுற்றி ஓடுவதும், இந்தக்கால இளைஞர்கள் நடனம் என்னும் பெயரில் கையைக் கையை ஆட்டிக் கொண்டே இருப்பதும் பார்க்கச் சகிக்கலைதான்! ஒரு திரைப்படம் என்றால் இதெல்லாம் தேவை என்று கண்டு பிடித்தவர்கள் யார்? இதெல்லாம் இல்லாமல் எடுக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறாதா?/பெறவில்லையா?
பதிலளிநீக்கு//இதெல்லாம் இல்லாமல் எடுக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறாதா?/பெறவில்லையா? //
நீக்குஅந்த நாள்.... அதிலும் சிவாஜிதான்! அப்புறமும் கடமை !கண்ணியம்கட்டுப்பாடு போன்ற இன்னும் சில படங்கள் பாடல்கள் இல்லாமல் எடுத்தார்கள்தான். ஆனால் பாடல்கள் இல்லாமல் ..படமா. ..ஊ....ஹூம்!
கீதாக்கா இன்னிக்கு வெள்ளி!! வெள்ளியில் புதனுக்கான கேள்விகளா?!! நோ நோ நோ!!
நீக்குகௌ அண்ணா நோட் திஸ்! கீதாக்காவின் கேள்விகள் எடுக்கப்படுமா இல்லையா மீட்டிங்க் போடுங்கப்பா...
கீதா
கீசா மேடம்.... கவர்ச்சிக்காகத்தான் பாடல் காட்சியே வைப்பது. அதைப் பார்க்க நிறைய ரசிகர்கள் வருவார்கள். நீங்க என்னன்னா... படம் எப்படி தோல்வியடையும்படி எடுப்பது என்பதற்கு கிளாஸ் எடுக்கறீங்களே (இத்தனைக்கும் சின்ன வயதில் பாகவதர் படங்களைப் பார்த்து ரசித்துவிட்டு). இது அநியாயமில்லையோ?
நீக்குரொம்ப சாத்வீகமா எடுக்கப்பட்ட படங்கள் என்று லிஸ்ட் போடா முடியுமோ? பகுதி படங்களில் கூட ஒரு பலாத்காரக்காட்சி, இல்லை கவர்ச்சி இருக்கும்!
நீக்குநல்ல பாடல்
பதிலளிநீக்குசிவாஜி கணேசன் தன்னுடன் நடிக்கும் நடிகர்களில் சற்று பயந்தது நடிகர் எஸ்.ஏ.அசோகன் அவர்களைப் பார்த்து மட்டும்தான்.
சட்டென அவரது நடிப்பை மிஞ்சி விடுவார் இதன் காரணமாகவே இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படங்கள் குறைவு.
வாங்க கில்லர்ஜி. நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. உயர்ந்த மனிதன் படத்தில் முக்கியமான காட்சியில் அசோகன் நடிப்பு சரியாக வரவில்லை. பார்த்துக்கொண்டிருந்த சிவாஜி கணேசன் ஏவிஎம் சகோதரரிடம் அசோகன் சரி என்றால் தான் அந்தக்காட்சியை நடித்துக் காட்டுவதாகச் சொல்லியிருக்கிறார். இருவருக்கும் பேச்சு வார்த்தை கிடையாது அப்போது. அசோகனுக்கு சரி என்று சொல்லவே சிவாஜி நடித்துக் காட்டி அதில் முக்கால் அளவு அசோகன் செய்தாராம். அது 'சிவகுமார் உன் மகன்' என்று சொல்லும் காட்சி.
நீக்கு"உயர்ந்த மனிதன்" படமா? நான் ஓட்டமா ஓடிடறேன். சுமார் லக்ஷம் முறை பார்த்து இருப்பேனோ என்னமோ? மறுபடி அந்த தண்டனை வேண்டாம்.
நீக்குஹா ஹா ஹா ஸ்ரீராம் அண்ட் பானுக்கா பாருங்க கீதாக்கா ஜிவாஜி மண்டகப்படியில உச்சத்துக்குப் போயாச்சு!! ஸோ அவங்க கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் வருவாங்க!! பானுக்கா அப்புறமாத்தான் வருவாங்க....நான் இப்ப போய்ட்டு மாலை வரேன்.....
நீக்குகீதா
உயர்ந்த மனிதன் படம் வெளியாகி ஐம்பது வருடங்கள் கடந்த விழாவை இப்போது கொண்டாடி இருக்கிறார்கள். இன்றைய தமிழ் இந்து நாளிதழின் அனுபந்தத்தில் இருக்கிறது! அந்தப் படத்தில் அசோகன் நடித்த பாத்திரத்தில்தான் சிவாஜி நடிக்க ஆசைப்பட்டாராம் தெரியுமோ...
நீக்கு//சிவாஜி கணேசன் தன்னுடன் நடிக்கும் நடிகர்களில் சற்று பயந்தது நடிகர் எஸ்.ஏ.அசோகன் அவர்களைப் பார்த்து மட்டும்தான்.
நீக்குநிஜமாகவா? நம்ப முடியவில்லை. சிவாஜி எங்கே?ஒழுங்காக வசனம் பேசத் தெரியாத, விளக்கெண்ணெய் பாவத்தோடு முகத்தை வைத்துக் கொள்ளும் அசோகன் எங்கே? இவரைப்பார்த்து அவர் பயந்தாரா? எம்.ஆர். ராதவைப்பார்த்து பயந்தார் என்றால் ஒப்புக் கொள்ளலாம். ஏனென்றால் வி.கே.ராமசாமி கல்கியைந்தொடர் கட்டுரை எழுதிய பொழுது, "யாரையும் பின்பற்றாமல் தனக்கென்று ஒரு தனி பாணியில் நடித்த ஒப்பற்ற நடிகர் சிவாஜி கணேசன். அவர் நடிப்பை உற்று கவனித்தால் எம்.ஆர்.ராதாவின் பாணி கொஞ்சம் தெரியும். எம்.ஆர்.ராதாவின் மீது அதீத மரியாதை வைத்திருந்தவர் சிவாஜி" என்று கூறியிருந்தார்.
சிவாஜி கணேசன் ஒரு முறை,"நான் (சௌகார்) ஜானகியோடு நடிக்கும் பொழுது மிகுந்த கவனத்தோடு இருப்பேன். நாம் கொஞ்சம் அசந்தால் அவர் நம்மை ஓவர் டேக் செய்து விடுவார்" என்று கூறியிருந்தார்.
அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.
நீக்குசிவாஜி பற்றியச் செய்திகளை எவ்வளவு முறைப் படித்தாலும் அலுப்பதேஇல்லை
பதிலளிநீக்குஅதைச் சொல்லுங்க... நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குபடமும் பார்த்து இருக்கிறேன், பாடலும் கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஅந்த காலத்து பாடல்களை காதால் கேட்டு மகிழ வேண்டும்.
காட்சி ஒரு சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது.
கே எஸ் கோபாலகிருஷ்ணன் நடித்து காட்டுவதை அப்படியே செய்வார்கள் மற்ற நடிகர்கள். சிவாஜி தன் பாணியில் நடித்து மெருகு கொடுக்கலாம் என்று நினைத்து இருக்கலாம். சித்தி படத்தில் பத்மினி பேசுவது
, நந்தையில் முத்து படத்தில் கே.ஆர் விஜயா பேசுவது எல்லாம் இந்தக்கால குழந்தைகளால் கேலியாக பேசபடும். அப்போது நடிப்பதில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் படம் என்றால் எல்லோரும் பயப்படுவார்களாம் பக்கம் பக்கமாய் வசனம் பேச வேண்டும் என்று.
இந்தக் காலத்துப் பாடல்களிலும் காட்சி சிறப்பாக அல்ல, பொருத்தமாக அமைவது நூற்றுக்கு ஐந்து சதவிகிதம் கூட இருக்காது கோமதி அக்கா.
நீக்குஆமாம் கே எஸ் ஜி பற்றி அப்படிச் சொல்வார்கள். கே எஸ் ஜி யின் ஆஸ்தான நடிகை கே ஆர் விஜயா!!
//இந்தக் காலத்துப் பாடல்களிலும் //
நீக்குஎந்தக்காலத்து என்று அடித்தால் இந்த என்று வருகிறது! மாற்றிப்படிக்கவும்!!!
பாடலுக்காகவும், கதைக்காகவும் நான் விரும்பிப்பார்த்த படம் நீலவானம். பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். பேசும் தெய்வம் தொடர்பான சிவாஜியின் அனுபவத்தைக் கண்டு வியந்தேன். அதனால்தான் அவர் இன்னும் போற்றப்படுகிறார்.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார். சிவாஜி உங்களிடமிருந்து ஓரிரு வார்தைகள் கூடவே பின்னூட்டத்தில் வாங்கி விடுகிறார்!
நீக்குபாடல் பரவாயில்லை ரகம். ஒருவேளை காலமாற்றம் காரணமாக இருக்கலாம்.
பதிலளிநீக்குஆ... நெல்லை... நீங்களா கமெண்ட்டி இருக்கிறீர்கள்?
நீக்குபாட்டு அழகான மெட்டு...சூப்பர் பாட்டு கேட்டுருக்கேன் ஸ்ரீராம். கேட்டுக் கொண்டே கால் தாளம் போட அப்படியான பாடல்!! வெஸ்டர்ன் சி மேஜர் (நம்ம சங்கராபரணம் தான்!!) இந்தப் பாட்டுலருந்து - ஜிவாஜி டு எம்ஜிஆர் போலாம்....அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும் போலாம்...
பதிலளிநீக்குரசித்தேன். மற்ற பாடல்கள் என்ன என்று பார்க்கணும்...படம் எல்லாம் கேள்விப்பட்டதே இல்லை ஸ்ரீராம் அதனால என்ன பாட்டுதான் நமக்கு!!
கீதா
ஓ... சங்கராபரணமா? பலே!
நீக்கு//மற்ற பாடல்கள் என்ன என்று பார்க்கணும்..//
மற்ற பாடல்களா? அது என்ன கீதா?
//'ஒன் மோர்' 'ஒன் மோர்' என்று கேட்டுக்கொண்டே இருந்தாராம். // - இந்தக் காலமாக இருந்திருந்தால், டைரக்டர் ஓவர் நைட்டில் மாற்றப்பட்டிருப்பார்.... கதாநாயகன்னா அவன் கடவுள் ரேஞ்ச், அவனுக்காகத்தான் படமே என்பதுதானே இந்தக் காலச் சட்டம்... அதனால்தானே கதையில்லாத படங்களைப் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கு (நேற்று ஏதோ விஜய் படம் பஸ்ஸில் போட்டான். ஒரு வோட்டு போடுவதற்காக சென்னைக்கு வருகிற மாதிரி.... டைரக்டர் தவமிருந்து யோசித்த ஒன்லைன் போலிருக்கு)
பதிலளிநீக்குஆஹா... நீங்கள் பார்த்திருப்பது சர்க்கா....ஆ.....ஆ.....ர்... அதைப் பார்த்துதான் தற்போதைய தேர்தலில் சிலபேர் 49 59 என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அதன் விளைவாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட ஸ்ரீகாந்த்தால் தேர்தல் அதிகாரிகள் வம்பில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்!
நீக்குஅந்தக் காலத்தில் எம்ஜியார் படத்தில், ப்ரொடக்ஷன் செலவுகளில் தலையிடமாட்டார். வரும் ரசிகர்களுக்கு உணவு படைத்தால் அவரது சொந்தச் செலவு. எதையாவது மாற்ற நினைத்தால் அவரது சொந்தச் செலவு. இப்படி இருந்தார் அவர். இங்க என்னடான்னா.... எவனோ செலவழிக்கிறான். அதில் மஞ்சக் குளிக்கிறார்கள் கதாநாயகர்கள். விஜய் அட்லிட்ட, படத்தை மெதுவாக எடுங்கள், அவசரப்பட்டால் பணிபுரிபவர்களுக்கு ஆபத்தாகிவிடுகிறது என்றாராம்...... தயாரிப்பாளர்கள் உருப்பட்டுவிடுவார்கள்.
பதிலளிநீக்குஎம் ஜி ஆர் தனி ரகம். அவர் போல வருமா?
நீக்கு//டி எம் எஸ் குரலில் மிகவும் ரசிக்கத்தக்க பாடல்.// /எம் எஸ் வியின் கைவண்ணம் ரசிக்கத்தக்கதாயிருக்கும். டி எம் எஸ் குரலை ரொம்பவே ரசிக்கலாம்.// - இந்த மாதிரி ரசனை எங்கிட்ட மிஸ்ஸிங். அதுனாலா என்னவோ பாடலை இவ்வளவு நுணுக்கமா ரசிக்கமுடியலை...
பதிலளிநீக்குஇந்த ரசிப்பினால்தான் நிறைய பாடல்களை படம் பார்க்காமலேயே ரசிக்க முடிகிறது!
நீக்குதோ..வந்துட்டேன்!....
பதிலளிநீக்குஇவ்வளவு சொன்ன ஸ்ரீராம், நீலவானம் படத்துக்கு திரைக்கதை கே பாலச்சந்தர், (குரங்கு வேலை எதுவும் செய்யாமல்) ஒளிப்பதிவு செய்த எம் கர்ணன் இவர்களைப் பற்றியும் சொல்லியிருக்கலாம்! கே பாலச்சந்தர் பி மாதவன் இயக்கிய படங்களில் சிவாஜிக்கு நீலவானமும் எம்ஜியாருக்கு தெய்வத்தாய் என்றும் இரண்டுபடங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார்.
பதிலளிநீக்குஅடடே... ஆமாம் கிருஷ் ஸார்... கேபி பற்றி நினைத்தேன். எழுதிக் கொண்டே வரும்போது மறந்து விட்டேன். ஒளிப்பதிவு கர்ணன் என்பதை கவனிக்கவில்லை. சாதுவாய் இருந்திருப்பார் போலும்!!
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவார விடுமுறை என்பதற்காக தூங்கிக் கிடப்பவன் அல்ல...
எப்போதும் போல விடியலிலேயே விழித்துக் கொண்டேன்...
சமையலறையில் புழங்க முடியாதபடிக்குச் செய்து விட்டார்கள் வங்கதேசிகள்..
இறைச்சி எலும்பு வகையறாக்களைப் போட்டு விட்டு சுத்தம் செய்யாமல் போவதாக என்மீது குற்றச் சாட்டு..
அந்தப் பன்னாடைகளுக்குத் தெரியாது நான் அவற்றையெல்லாம் சமைப்பதில்லை என்று...
தராதரம் தெரியாதவர்களுடன் எந்த ஒரு பேச்சும் நான் வைத்துக் கொள்வதில்லை..
பதினைந்து நாட்களாக இங்கு சமைப்பதில்லை..
இன்று மன உளைச்சல் அதிகமாயிற்று... அதனால் தான் இங்கு வருவதற்குத் தாமதம்...
பார்க்கலாம்.. இன்னும் என்ன என்ன நடக்க இருக்கிறதென்று...
நலம் வாழ்க..
ஆ... நீங்கள் தூங்கிக் கிடந்தீர்கள் என்று சொல்லவில்லை துரை ஸார்... ஒய்வு நாள் என்பதால் ஒரு வாரத்து துவைக்கும் வேலை போன்ற மிச்ச வேலைகளை முடித்துக்கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தோம். அஷ்டே!
நீக்குஅடடே... வங்கதேசிகள் வம்பு செய்கிறார்களா? ஷேக் ஹசீனாவிடம் ஏதாவது சொல்லி வைக்க வேண்டுமா ஜி?
இன்று உங்கள் சமையலா?
அன்பின் ஸ்ரீராம்...
நீக்குபணியிடத்தில் கீழ்நிலைப் பணியாளர்களுக்கு மட்டுமே சீருடை..
Store Keeper களுக்குக் கிடையாது.. போட்டுக் கொள்வதெனில் Light Blue Shirt/ Black Pant..
இங்கே பணியாளர்களின் உடுப்புகளைத் துவைத்துத் தருவதற்கென்று Laundry வசதி இருக்கிறது.. ஆனாலும் வேலை சுத்தமாக இருக்காது...
எனவே குளிர்காலம் முடிந்து கோடை காலம் துவங்கி விட்டது..
துணிகளை உலர்த்துவதில் இனி பிரச்னை இல்லை...
நேற்று இரவே துணிகளைத் துவைத்து உலரப் போட்டு காலையில் எடுத்து மடித்து வைத்து விட்டேன்..
நாளைக்குத் தான் சமையல் எனது அறைக்குள்ளேயே...
இன்று மதியம் நண்பர்களுடன்!...
தெரிந்துகொண்டேன்.
நீக்குநீலவானம் படத்தில் நல்லதொரு ஈர்ப்பான பாடல்...
பதிலளிநீக்குஆனாலும், இதில் இன்னுமொரு பாடல் - ஓஹோ..ஹோ... ஓடும் மேகங்களே!... - என்று..
இந்தப் படத்தில் சாந்தி தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவராக வருவார் - நடிகர் திலகம்..
ஆமாம்... சுசீலாம்மா குரலில் எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் அது. இன்னொருநாள் பகிரலாம் அதை!
நீக்குபாடலை மட்டும் கேட்க என்று போட்டிருக்கும் இணைப்பு வேலை செய்யவில்லை..
பதிலளிநீக்குஆனாலும் அந்த Still தேவிகாவும் நடிகர் திலகமும்!..
எந்தப் படத்தினுடையது என்று தெரியுமா?...
வேலை செய்யவில்லையா? சரி செய்ய முயற்சிக்கிறேன்.
நீக்குஅந்த ஸ்டில் 'மடிமீது தலை வைத்து விடியும்வரை தூங்கலாம் பாடலோ!
ஓ... மின்னல் வேகம்!...
நீக்குஅங்கே வேலை செய்கிறது. இங்கே இணைத்தால் வேலை செய்யவில்லை. மன்னிக்கவும்.
நீக்குஅன்னை இல்லம் படத்தில் -
பதிலளிநீக்குமடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்!...
என்ற பாடலின் காட்சி அது...
இந்தப் பாடல் உங்களது தேன் கிண்ணத்தில் இல்லையா.. ஸ்ரீராம்!...
நீல வானம் படம் பார்த்ததில்லை. அதில் பி.சுசீலா பாடும் ஒரு பாட்டுதான் நிறைய கேட்டிருக்கிறேன். பாடல் வரிகளை மட்டும் படித்த பொழுது எந்த பாட்டு என்று தெரியவில்லை. கேட்டபிறகுதான் நினைவுக்கு வருகிறது. ஆனால் video unavailable, watch this video in you tube என்று வந்தது. யூ டியூபிற்கு போனால் பாடல் மட்டும்தான் கேட்க முடிந்தது. :((
பதிலளிநீக்குமுதல் வீடியோதான் ஓடவில்லை. காட்சியுடன் இணைத்திருக்கும் இரண்டாவது வீடியோ பார்க்க முடிகிறது.
நீக்குசிவாஜி எப்போதுமே டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட் ஆகத்தான் இருந்திருக்கிறார். படையப்பா படத்தில் ஒரு காட்சியின் ஓத்திகையில் அவர் நடித்துக்காட்டியவுடன் செட்டில் இருந்த எல்லோரும் கை தட்டினார்களாம். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருக்கோ, அவர் கொஞ்சம் உரக்கப் பேசியதாக தோன்றியதாம், ஷாட் எடுக்க எல்லாவற்றையும் ரெடி பண்ணிவிட்டு, சிவாஜியின் அருகில் போய், "வாய்ஸ் மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கங்க" என்று மெதுவாக கூறி விட்டு அவரை திரும்பியே பார்க்காமல், "ரெடி, ரெடி, லைட்ஸ் ஆன்.." என்று கூறியபடியே நடந்து போய் விட்டாராம். டேக் ஓ.கே. ஆனதும், சிவாஜி அவரிடம்," உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டா கொடுத்துட்டு போறேன், ஏன் பயப்படற?" என்றாராம்.
பதிலளிநீக்குஉண்மைதான். நானும் இதுபோல சில சம்பவங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன்.
நீக்குஇதை எல்லாம் படிக்கும்போது பரமாசாரியார் பற்றி அவர் அப்படி அதிசயம்செய்தார், இப்படி அபூர்வமாக அவர் சொல்லி நடந்தது என்றெல்லாம் இப்போது எல்லோரும் பகிர்வது நினைவில் வருகிறது. :))))))))) விட்டால் ஜிவாஜியை கடவுள் ரேஞ்சுக்குக் கொண்டு போயிடுவாங்க போல!
நீக்குஆமாம், சிவாஜியை நடிப்புக் கடவுள் என்று கூறலாம். சச்சினை கிரிக்கெட் கடவுள் என்று கூறுவதில்லையா?
நீக்குஇன்றைக்கு இருப்பவர்கள் ஏதேனும் கற்றூக் கொள்ள விரும்பினால் சிவாஜி அவர்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்...
நீக்குஆனால் அவர் யாரைப் பார்த்துக் கற்றுக் கொண்டிருப்பார்?...
அவர் சொல்லியிருக்கின்றார் - திருநாவுக்கரசராக வேடம் அணிந்தபோது பரமாச்சார்ய ஸ்வாமிகளைக் கவனத்தில் கொண்டேன் ... என்று..
ஆனால் - பல்வேறுபட்ட கதாபாத்திரங்கள்?..
எல்லாம் தன்வயத்தனாகி தன்னுள்ளிருந்தே உணர்ந்து நடித்திருப்பார்..
அப்படித்தான் இருக்கும்...
அப்படிப் பட்டவரைக் கிண்டல் செய்துவது தானே நமது மகிழ்ச்சி...
நடிகர் திலகம் - ரவிக்குமார் உரையாடலை வைத்தே
மனோபாலாவும் விவேக்கும் எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்!..
- என்று நக்கல் காமெடி பண்ணவில்லையா!...
அவரை அவர் கண்முன்பாகவே ஏளனம் செய்து துன்பப்படுத்தி சீக்கிரமாக வழியனுப்பி வைத்ததே நம்மவர்கள் தான்...
போதாக்குறைக்கு தன் ஆயுளில் கொஞ்சம் வருடத்தை தனது பழைய நண்பருக்குத் தானம் வேறு செய்தார்...
இத்தனைக்கும் அந்த பழைய நண்பர் - சிவாஜி திருப்பதி சென்றதை வைத்து திருப்பதி கணேசன் என்று நக்கலடித்தவர்...
அதனால் தான் அவருக்கு ஆத்ம சாந்தி சடங்கு காசியில் செய்யப்பட்டது..
No... No... No...
நீக்குNo Feelings துரை செல்வராஜூ ஸார்...!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎந்தக் கருத்து?!!
நீக்கு////'ஒன் மோர்' 'ஒன் மோர்' என்று கேட்டுக்கொண்டே இருந்தாராம். // - இந்தக் காலமாக இருந்திருந்தால், டைரக்டர் ஓவர் நைட்டில் மாற்றப்பட்டிருப்பார்....//
பதிலளிநீக்குஇல்லை நெல்லை, இந்தக் காலத்திலும் ஹீரோக்களுக்கு வளைந்து கொடுக்காத இயக்குனர்கள் இருக்கிறார்கள்.
'பச்சை கிளி முத்துச் சரம்' படத்தை முதலில் கௌதம் மேனன் கமல்ஹாசனை வைத்துதான் ஆரம்பித்தாராம். கமலின் குறுக்கீடு அதிகமாக இருக்கவே, "என்னால் இயக்க முடியாது" என்று கூறி படத்தை நிறுத்தி விட்டாராம். வேட்டையாடு, விளையாடு ஆரம்பித்த பொழுதும், அதன் தயாரிப்பில் தலையிடக்கூடாது என்ற நிபந்தனைக்கு கமல் ஒப்புக்கொண்ட பிறகுதான் இயக்கத் தொடங்கினாராம்.
அதே போல சூர்யாவை வைத்து ஆரம்பித்த சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை பாதியில் விட்டதற்கும் சூர்யாவின் தலையீட்டை கௌதம் விரும்பாததுதான் காரணம் என்று செய்திகள் வந்ததே.
இந்தத் தகவல்கள் எனக்குப் புதுசு!
நீக்குஇந்தப் பாடல் ரசிக்கும்படியாக இல்லை எனக்கு. நீலவானத்தில் அடிக்கடி அப்போது கேட்டிருந்தது பி.சுசீலாவின் குரலில்: ‘சொல்லடா வாய் திறந்து அம்மா என்று.. துன்பமே மறந்துவிட்டேன் உன்னால் இன்று..
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார்... நீளவானத்தில் மூன்று ரசிக்கும் பாடல்கள். இது, ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே, சொல்லடா வாய்திறந்து...
நீக்குஅஆவ் இன்னிக்கு ஜிவாஜி அங்கிளா :) இப்போதான் பாட்டை பார்த்தேன் நல்லாத்தான் டான்ஸ் ஆடறார் அங்கிள் :)
பதிலளிநீக்குஇவங்க யாரு? புதிய வாசகரா? இந்தப் பேர்ல சில பல ஆண்டுகளுக்கு முன்னால இந்தத் தளத்துல பின்னூட்டம் எழுதியிருக்காங்கன்னு நினைக்கறேன்.
நீக்குகர்ர்ர் :) நல்லவேளை காணவில்லை பேனர் ஒட்டமுன் எட்டி பார்த்துட்டேன் :)
நீக்குபோஸ்டரில் பசை தடவிக்கொண்டிருந்த நேரம்...!
நீக்குஅவ்வ்வ் :) ஹாஹாஆ
நீக்குகே எஸ் கோபாலகிருஷ்ணன் லாம் யார்னே தெரில ஆனாலும் தைரியமான டைரக்டர்தான் ..தகவல்களை தேடி பகிர்ந்ததற்கு நன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சல்.. பழைய பதிவுகளில் அந்தத் தொடர்கதையை எழுதியவர் யார் என்று வந்த பதிவுகள் எல்லாம் இருக்கே... படித்தீர்களா?
நீக்குஅஆவ் !! நான் நினைச்சது சரியா இருந்திருக்கு ..இப்போதான் தேடி பிடிச்சி பின்னூட்டம் கொடுத்தேன் :)
நீக்குஎல்லாரும் நல்லா இருக்கீங்களா :)
பதிலளிநீக்குபுது வேலை விஷயத்தில் கொஞ்சம் பிசி . நேரமிருக்கும்போது வரேன் :)
நல்வரவு, நல்வரவு. வாங்க, வாங்க, எங்கே உங்க பூசாரைக்காணோம்? இரண்டு பேரும் இல்லாமல் போரடிக்குது! :(
நீக்குWelcom Angel welcom!
நீக்குகீதாக்கா பூஸார் அம்மா வந்திருக்காங்க .அதனால் அம்மாவோடு டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு குழந்தை கொஞ்சிட்டிருக்கு :)
நீக்குஓஹோ, கொஞ்சட்டும், கொஞ்சட்டும்/ பாவம்! குழந்தை! :)))))
நீக்குகீதாக்கா அண்ட் பானுக்கா .கொஞ்சம் பிஸியாகிட்டேன் என்னன்னா சும்மா விளையாட்டா ஒரு வேலைக்கு எழுதிப்போட்டேன் அது நானே எதிர்பாராத வேளையில் இன்டெர்வியூவுக்கும் அழைத்து செலக்ட் ஆகிட்டேன் :) அந்த வேலைக்கு பல ட்ரெயினிங் ஆன்லைனில் அதெல்லாம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா முடிச்சிட்டேன் அப்புறம் இண்டக்க்ஷனுக்கும் போகணும் ரெண்டு ட்ரெயினிங் முடிஞ்சதும் வேலை அப்புறம் வருவேன் எல்லார்ப்பக்கமும் ரெகுலரா .
நீக்கு>>> குழந்தை கொஞ்சிட்டிருக்கு..<<<
நீக்கு!..
வாங்க ஏஞ்சல்... பாருங்க எல்லோரும் ஆர்வமாய் வரவேற்பதை! சீக்கிரம் வாங்க! வேலைக்குப் போகப் போறீங்களா? கங்கிராட்ஸ்.
நீக்குஆமாம் ஸ்ரீராம் நன்றி ..இண்டக்க்ஷனுக்கு போனதுக்கு பிறகே எந்த நாட்கள் வாரத்தில்னு தெரியவரும் .பார்ட் டைம்தான் செய்யப்போறேன்
நீக்கு@Angel:Congratulations & wish you success on your new endeavour! all the the best!
நீக்குThanks Banu akka
நீக்குஇந்தப்படம் பார்த்த ஞாபகம் இல்லை ஆனல் பட்டு ரசிக்கும்ப்டி இருந்ததுமுதல் வீடியோ இல்லை என்று வந்தது பின்னூட்டங்கள் பலரது ரசனையை வெளிப்படுத்துகிறது கீதா மேடம் ஜிவாஜியைக்குறை சொல்லியெ பலமுறை அவரது படங்கள் பார்த்துவிடுவார் போலிருக்கு பாஸ் கிடைத்து பார்த்தது என்பார்
பதிலளிநீக்குநான் பார்த்தது எல்லாம் அறுபது, எழுபதுகளில் ஜிவாஜி நடிச்சதாகவே இருக்கும். அதோடு தொலைக்காட்சி வந்தப்புறம் படங்கள் பார்க்கச் சந்தர்ப்பங்கள் அதிகம் ஆகிவிட்டதே! எனக்குப் பிடிக்கலைனால் வீட்டில் போடாமல் இருப்பார்களா என்ன? அப்போ என்னதான் வேலை இருந்தாலும் நடு நடுவில் வசனங்களோ, படமோ கண்களில்/காதுகளில் படவும்/கேட்கவும் செய்யும். எல்லோரும் அதிகம் பேசும் படங்கள் பல நான் பார்த்தது இல்லை. பாலும் பழமும், பாசமலர், பார்த்தால் பசி தீரும் என்ற மாதிரி "ப" வரிசைப்படங்கள் இருவர் உள்ளம், தேனும் பாலும், படையப்பா, மிருதங்கச் சக்கரவர்த்தி! இப்படி! அதனால் வருத்தமும் இல்லை. பார்த்த படங்களை வைத்து என்னோட கருத்து. பெரும்பாலும் என் சித்தப்பாவால் ஜிவாஜி படங்களைப் பார்த்திருப்பேன்.
நீக்குவாங்க ஜி எம் பி ஸார்... முதல் வீடியோவில் பாடல் வரவில்லை. ரிப்பேர் செய்து பார்த்தும் சரியாகவில்லை. அதுதான் இரண்டாவது வீடியோ இருக்கிறதே என்று விட்டு விட்டேன். கீதா அக்கா பற்றிய உங்கள் கருத்துக்கு அவரே பதில் அளித்து விட்டார்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல பாடல்.அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். இருவரின் நடனமும் நன்றாக உள்ளது. உத்தம புத்திரன் படத்திலும் அவர் ஆடுவது நன்றாக இருக்கும். சிவாஜியின் நடிப்பை பிடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள். பழைய படங்களில் அந்தந்த கதாபாத்திரங்களாகவே அவர் மாறி விடுவார். பின் வந்த படங்களில் கொஞ்சம் மித மிஞ்சிய நடிப்பால், (ஒவர் ஆக்டிங் தமிழாக்கம்) கொஞ்சமாகவே அனைவரின் கருத்துகளிலும் பேசப்பட்டார். பதிவில் நடிப்பை பெரிதும் மதித்த அவரைப்பற்றிய தகவல்களுக்கு நன்றி. பின்னூட்டங்களிலும் அனைவரும் தகவல் களஞ்சியமாக இருப்பதை கண்டு அதிசயப்படுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிவாஜி பற்றிய தகவல்கள்தான் கொட்டிக் கிடக்கிறதே கமலா அக்கா... அவருக்கு ரசிகர்களும் அதிகம்! அதுதான்! நன்றி கமலா அக்கா...
நீக்குசிறப்பான பதிவு
பதிலளிநீக்குஅருமையான முத்தாய்ப்பு
பாராட்டுகள்
இந்தப் பாடல் கேட்டதில்லை. உங்கள் பதிவின் மூலம் தான் கேட்கிறேன். நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குதுளசிதரன்
எங்கள் திருமணமான ஆண்டு வந்தது. இதுல தானே ஓ லக்ஷ்மி, ஓ கீதா
பதிலளிநீக்குபாடல் வரும்.
லிட்டில் ஃப்ளவர் பாடல் இசை நன்றாக இருக்கும் ஆங்கில இலக்கணம்தான்
பொருந்தாது. ராஜஸ்ரீயும் சிவாஜியும் நல்ல நடனம்.
"உனக்கும் எனக்கும் உருவப் பொருத்தமே" என்னும் வரியில் 'இருவருமே குண்டு" என்கிற பாணியில் அபிநயம் காட்டுவார் சிவாஜி.
இதைத்தான் மிக ரசிப்பேன். சிவாஜி ட்ரிம்மாக இருந்த நாட்கள். இதிலேயும் கலாட்டா கல்யாணத்திலும் மனுஷன் வெளுத்து வாங்கி இருப்பார்.
அவர் நடிப்புக்கு இணை இல்லை.
நல்ல நடிகர் அசோகனையும், தேங்காய் ஸ்ரீனிவாசனையும் கோமாளிகள் ஆக்கியது திரை உலகம்.
உயர்ந்த மனிதனில் மேஜர் சுந்தரராஜனின் பவ்யம் யாருக்கு வரும்.
உத்தமமான படம்.
பின்னாளைய வயதான சிவாஜியின் பாடல்களை நான் ரசிக்கவில்லை.
அன்பு துரை செல்வராஜு என் சின்னத்தம்பியை நினைவு படுத்துகிறார்.
அவன் தான் ஒரு சிவாஜி படத்தை என்னுடன் ஒருதரம், அம்மா அப்பாவுடன் ஒரு தரம்,
கல்லூரி தோழர்களுடன் ஒருதரம் என்று பார்த்துவிட்டு காட்சி காட்சியாக அலசுவான்.
நன்றி ஸ்ரீராம். உங்கள் எல்லோருக்கும் இனிய ஞாயிறுக்கான வாழ்த்துகள்.