ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

ஞாயிறு : மறைவாய் ஒரு கட்டிடம் & தொடர்கதை - 9

கௌஹாத்தியிலிருந்து ஷில்லாங் நோக்கி....

இதோ வந்துட்டேன் ...ஒரே ஒரு selfie தான்.


என்னப்பா சாலையில் இவ்வளவு இடம் இருந்தாலும் இப்படி மெதுவா...



என்றதும் இப்படியா பிசாசு மாதிரி...


அவர் வலது புறம் திரும்பப் போகிறார் 
ஜாக்கிரதை

  மேகலாயாவிலிருந்து மேகங்கள் வந்து வந்து அழைக்கிறதோ?





























மறைவாய் ஒரு கட்டிடம் 


கோட்டை மாதிரி பள்ளிக்கூடம்!




===========================================================================================================================






நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே 
- - - - - - - - - - - - - - 


ஷ்ரவண் :


இதே வீட்டில்தானே நான் இருந்திருக்கிறேன்ஆனால் இப்போது ஏன்  வெறுமை?

எப்போதும் போல் அப்பாவோடு அரசியலையும்கிரிக்கெட்டையும் அலசுகிறேன்அம்மா பார்க்கும் சீரியல்களை வேண்டுமென்றே மாற்றி அம்மாவின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறேன்ஆனாலும் ஸ்ருதி ஒருத்தி இல்லாதது எத்தனை வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டதுஇருபத்தி எட்டு வருட சொந்தத்தை விடவா இரண்டு வருட பந்தம் வலுவானது?

ஸ்ருதி யு.எஸ். சென்று ஏறத்தாழ இரண்டு மாதங்களாகி விட்டது. ஆனால் என் நெஞ்ஜிலும்நினைவிலும் அவளின் சிரிப்பும்பேச்சும்சிணுங்கல்களும் ஏன் மணமும் சுழன்று கொண்டே இருக்கின்றன.

அவள் ஊரில் இருந்த வரை வேண்டுமென்றே அலுவலகத் திலிருந்து தாமதமாக வந்தேன்அவள் கேட்கும் கேள்விகளுக்கு ஏடா கூடமாக பதில் கொடுத்து அவளை வாட்டினேன். ஸ்ருதி அமெரிக்கா கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்பு, “பத்து நாட்கள்  ஹைதராபாத் செல்ல முடியுமா?” என்று அலுவலகத்தில் கேட்டபொழுதுஉடனே ஒப்புக் கொண்டேன். 

"அப்போ நான் யு.எஸ். கிளம்பும் பொழுது நீ இருக்க மாட்டியா?" என்று நிஜமான தாபத்தோடு ஸ்ருதி கேட்ட பொழுது,

"இதற்கெல்லாம் நீ பழகிக் கொள்ள வேண்டும். நீ ஒரு பிஸி ஆர்ட்டிஸ்ட். சாதாரண ஹவுஸ் ஒய்ஃ ப் மாதிரி எல்லாத்துக்கும் ஹஸ்பேண்டை டிபெண்ட் பண்ணி இருக்கக்கூடாது"  என்று கூறினாலும்எனக்கு உள்ளுக்குள்பாவம் முதல் முறையாக வெளிநாடு செல்கிறாள்நான் எந்த உதவியும் செய்யவில்லை. 

குறைந்தபட்சம் ஏர்போர்ட்டிற்காவது செல்லலாம் என்று தோன்றியதால்அவள் ஊருக்கு கிளம்பும் நாளன்று ஏர்போர்ட்டுக்கு நேராக நான் வந்தவுடன் என்னைப் பார்த்ததும் அவள் கண்களில் பளிச்சிட்ட அந்தச் சந்தோஷ மின்னல்!

அவள் பெற்றோர்களும்என் பெற்றோர்களும், "நன்னா பண்ணுமாஆல் தி பெஸ்ட்!" என்று வாழ்த்தநான், "கம் சூன்" என்றதும்என் கையை இறுக அழுத்திய அவளின் பிடியில் தெரிந்த அந்தக் காதல்!

இதையெல்லாம் உணர்ந்தும்அவளைப் போல "ஐ மிஸ் யூ" என்று என்னால் ஏன் சொல்ல முடியவில்லை?

ஸ்ருதி ஊரிலிருந்து வந்ததும் கச்சேரிகளைக் குறைத்துக் கொள் என்று அவளிடம் கண்டிப்பாகச் சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர்தான் என் மன உளைச்சல் குறைந்துமீண்டும் அவளோடு சகஜமாகப் பேச முடிந்தது.

எங்கள் வீட்டிற்கு வந்திருந்த என் மாமனார்வெளியூர்களிலிருந்து சிலர் ஸ்ருதியின் கச்சேரிக்காக டேட்ஸ் கேட்கிறார்கள் என்றதும்நான், "இப்போ எதுவும் ஒத்துக்க வேண்டாம் மாமா" என்றேன்.

அவர் சென்றதும்என் அப்பா, "ஏன் கச்சேரியை ஒத்துக்க வேண்டாம்னு சொல்லிட்ட?" என்று கேட்டார்.
"போறும்பாஅவ சம்பாதிச்சுத்தான் சாப்பிடணும்னு நிர்பந்தம் இல்ல."

"கச்சேரி பண்றது காசுக்காகவாசந்தோஷத்துக்காக"

"சந்தோஷம் வேணும்னாவீட்டில் பாடட்டும்யார் வேண்டாம்னா?"

"நீ பாட்டுக்கு சொல்லிட்டஸ்ருதியை கேட்க வேண்டாமா?"

"அதை நான் பார்த்துக்கறேன்"

நான் இப்படிச் சொல்லி விட்டால் அப்பா மேற்கொண்டு பேச மாட்டார்.

அன்று இரவு டி.வி. பார்க்கும் பொழுது வழக்கம் போல் சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்தேன். ஏதோ ஒரு சேனலில் ஒரு பாடகரின் பேட்டி. ஸ்ருதிக்கு மிகவும் பிடித்த பாடகர் அவர். அதனால் அங்கு நிறுத்தினேன். 

அவரைப் பேட்டி கண்ட பெண், " நாங்களெல்லாம் ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால்பாட்டு கேட்போம்நீங்கள் எப்படி ரிலாக்ஸ் பண்ணுவீர்கள்?" என்று கேட்டதும்அந்தப் பாடகர், "ரிலாக்ஸாநாங்கள் கச்சேரி செய்வதே ரிலாக்சேஷன்தானே?" என்றார்.

"சே! எவ்வளவு பாக்கியம்! மனசுக்கு பிடிச்ச வேலைஅதைச் செய்வதே ரிலாக்சேஷன்கொடுத்து வெச்சிருக்கணும் இல்ல..?"

"ம்ம்.. இதெல்லாம் வெளி ஆட்கள் என்றால் அப்ரிஷியேட் பண்றோம்நம்ம வீட்டில் அப்படி ஒரு ஆள் இருந்தால்...என்று இழுத்த அப்பா, "வீட்டிற்குள் முடக்கிப் போடத்தான் பார்க்கறோம்" என்று முடித்தார்.

அப்பா எதைக் குறிப்பிடுகிறார் என்று புரிந்தது. நான் பதில் பேசவில்லை. ஆனால் அப்பாவின் வாதத்தில் இருக்கும் நியாயம் புரிந்தது.

"எல்லோராலும் பாட முடியாதுஅப்படிப் பாடும் ஞானமும்திறமையும் உள்ள எல்லோருக்கும் வாய்ப்பு கிடைத்து விடுகிறதா என்னகிடைக்கும் வாய்ப்பை ஏன் நழுவ விட வேண்டும்?"

"இருந்தாலும் என்னைப் பற்றி வரும் விமரிசனங்கள்..டிஸ்கஸ்டிங்!'

"என்ன பொல்லாத விமர்சனம்சதாசிவத்தை விட அதிகமா உன்னை விமர்சித்து விட்டார்களாஎம்.எஸ். வைரம்தான்ஆனால் அதைப் பட்டை தீட்டியது சதாசிவம்தான். அவரை சர்வாதிகாரி என்றார்கள்ஹிட்லர் என்றார்கள்இப்போது கூட சொல்கிறார்கள். அதையெல்லாம் அவர் பொருட்படுத்தியிருந்தால் எம்.எஸ். இத்தனை உயரத்தை எட்டியிருக்க முடியுமா?"

"ஹிட்லர்னு சொல்லியிருக்கலாம் மிஸ்டர் எம். எஸ்னு யாரும் கூப்பிட்டிருக்க மாட்டார்கள்"

"ஓ! கமான்! இதுவா உன் ப்ராப்லம்இது ஜஸ்ட் ஒரு ஃபன்"

"நீ இன்னும் வேலை பார்த்துண்டுதான் இருக்கியா?ன்னு கேட்கறாங்க. வாட் நான்சென்ஸ்?"

"அதேதான். நான்சென்ஸ் என்று தெரிந்தே அதற்கு நீ ரியாக்ட் பண்றயாஇதை என்னன்னு சொல்றது?" என் வார்த்தையைக் கொண்டே என்னை மடக்கினார் அப்பா.

"ஒரே ஒரு விஷயம் யோசிச்சுப் பார்உன் இடத்தில் ஸ்ருதி இருந்திருந்தால் உனக்கு இப்படி ஒரு வாய்ப்பும்புகழும் கிடைக்கும் பொழுது சந்தோஷப்படுவாளா மாட்டாளா?"

"நிச்சயமா சந்தோஷம்தான்படுவாள்" என்னை முந்திக்கொண்டு அம்மா பதிலளித்தாள்.

"ஷி இஸ் ரைட்"  நம் ஊர்  பெண்கள்ஹஸ்பெண்டுக்கும்குழந்தைகளுக்கும் கிடைக்கும் புகழையும்பெருமையையும் தன்னோடதா ரொம்ப ஈஸியா ஏத்துக்கறாநம்மால்தான் முடியல.." அப்பா ஒரு பெருமூச்சோடு நிறுத்திக் கொண்டார்.

ன்று இரவு பதினோரு மணிக்கு என் நண்பன் ராஜேஷிடமிருந்து அழைப்பு வந்தது. பதட்டமாகப் பேசியவன் அவன் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றும் என்னால் காரை எடுத்துக் கொண்டு வர முடியுமா என்றும் கேட்டான்.

அவன் வீட்டுக்குச் சென்ற போது அவனும்அவன் பெற்றோர்களும் மிகவும் பதட்டமாக இருந்தார்கள். குழந்தை நல்ல காய்ச்சலில் துவண்டு போயிருந்தது. அருகில் இருந்த மருத்துவ மனையில் அனுமதித்தோம்.

"காய்ச்சல் இவ்வளவு அதிகமாகும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று கோபித்துக் கொண்டு மருத்துவர் கட்டளைப்படி குழந்தைக்கு ஊசி போடப்பட்டுட்ரிப்ஸ் ஏற்றப்பட்டது.

குழந்தை அருகிலேயே அவன் பெற்றோர்கள் இருக்கநானும் ராஜேஷும் வெளியே வந்தோம். அப்போதுதான் ராஜேஷ் மனைவி ராதிகா அங்கில்லாதது எனக்கு உறைத்தது.

"ராதிகா எங்கே?"

அவ ஆன்சைட்டில் சிட்னி போயிருக்கிறாள்.  மூணு மாசம் ஆயாச்சுஇன்னும் மூணு மாசம் இருக்கு."

"இவ்ளோ சின்னக் குழந்தையை விட்டுட்டா?"

"அவள் ரொம்பத் தயங்கினாள். ஆனால் குழந்தையை எங்க அம்மாதானே பாத்துக்கறாஅதனால் பிரச்சினை இருக்காதுனு சொல்லி நான்தான் அனுப்பி வைத்தேன்"

கொஞ்சம் இடைவெளி விட்டு, “என்ன செய்யறதுவீடு வாங்கிட்டோம்ஆன் சைட் போனால் சீக்கிரம் கடன் அடைத்து விடலாம். மேலும்இந்த அசைன்மென்டை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அது அவளுடைய பிரமோஷன்கேரியர் குரோத் எல்லாவற்றையும் பாதிக்கும்.  வேலைக்குனு வந்துச்சுனா எல்லாத்தையும்தானே பார்க்கணும் பட் குழந்தை கொஞ்சம் ஏங்கறதுதான். இந்த அசைன்மெண்ட் முடிச்சுட்டு வந்துடுன்னு சொல்லிட்டேன். ஆனால்குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்பது அவளுக்குத் தெரியக் கூடாது. தெரிஞ்சா ரொம்ப அப்செட் ஆகி விடுவாள்"

என் நண்பனுக்கு அவன் மனைவியின் தொழில் வளர்ச்சியில் இருக்கும் அக்கறை எனக்கு ஏன் இல்லை? 
இரண்டு நாட்கள் கழித்துக் குழந்தை எப்படி இருக்கிறாள் என்று பார்க்க ராஜேஷ் வீட்டுக்கு மீண்டும் சென்றேன் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

ராஜேஷ் அவன் அம்மாவிடம், "அம்மா இவனோட வொய்ஃப் கச்சேரி யெல்லாம் பண்றாங்கஸ்ருதினு பேரு" என்றதும்,

"யாரு "சென்னையில் திருவையாறில்" கூடப் பாடினாங்களேஅவங்களா?" என்றார்.

நான் ஆமோதிப்பாகத் தலை ஆட்டியதும், "அப்படியாதெரியவே தெரியாதே." என்று வியந்தவர், "எங்க சின்னுக்கு சாப்பிடதூங்க எல்லாத்துக்கும் செல் போனில் பாட்டு போடணும்.  அதுக்காக ஒரு செட் ஆஃப் சாங்க்ஸ் இருக்கு. அதுல ஸ்ருதியோட பாட்டும் இருக்கு" என்றவர்தன் பேத்தியிடம், "சின்னு இந்த அங்கிள் வீட்டில் இருக்கற ஆன்டியோட பாட்டுதான் நீ தினமும் கேக்கற.  நம்ப ஒரு நாள் அவங்க வீட்டுக்கு போலாமா?" என்று கேட்டு விட்டு, "நல்லா பாடறாங்க. தொடர்ந்து கச்சேரியெல்லாம் பண்ணுவாங்க இல்லையா?" என்று கேட்க,

இப்போ கூட யு.எஸ். போயிருக்காங்ககச்சேரி பண்ணத்தான்" என்றான் ராஜேஷ்.

அதான் நல்லதுஎல்லாராலும் பாட முடியாது. நம்மிடம் இருக்கும் திறமையைப் பூட்டி வைக்கக் கூடாது. தவிரஸ்ருதி பாடறதைக் கேட்கும் பொழுது நம்முடைய கவலை எல்லாம் மறந்து போய் விடும். அப்படி ஒரு தேவாமிர்தமான இசை.

திரும்பி வரும்பொழுது, "பாட்டு பாடுவது சந்தோஷத்திற்காக” என்று அப்பா சொன்னது புரிந்தது. பாடுகிறவர்களுக்கு மட்டுமல்லகேட்பவர்களுக்குமான சந்தோஷம். அதை நான் ஏன் தடுக்க வேண்டும்?
இந்த என் மன மாற்றத்தை ஸ்ருதிக்கு தெரிவித்து அவளின் சந்தோஷ ரியாக்ஷனை பார்க்க ஆவல் வந்தது. அவள் வரும் விமானம் தரையிரங்கக் காத்திருக்கிறேன்.


------மீட்டல் தொடரும்..

53 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.

    ரயிலில் இருக்கும் ஸ்ரீராமுக்கும்.

    படங்கள் நல்லாருக்கு விரிவா பார்க்க வரேன்..கதைக்கும் பின்னர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரங்கன்.

      நீக்கு
    2. ஶ்ரீராம் காசி எப்பூடி இருக்குதூஊஊஊ?:)...
      கதை படிப்பேன் பின்பு வந்து....

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் கீதா, துரை செல்வராஜு, ஸ்ரீராம்.
    ஷில்லாங்க் வழி படங்கள் வேகமாகப் போகின்றன.

    கதை வெகு அழகு. வளமையான எழுத்து. தம்பதிகள்
    நன்றாக இருக்கட்டும்.
    எம்.எஸ் அம்மா , திரு சாம்பசிவம் எடுத்துக்காட்டு அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா.

      இனிய நட்சத்திரப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

      நீக்கு
    2. ஓ வல்லிமாவுக்குப் பிறந்தநாளா!!

      அம்மாவின் நலத்திற்குப் பிரார்த்தனைகள் பிறந்தநாள் வாழ்த்துகள்!

      கீதா

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  5. கௌஹாத்தியிலிருந்து ஷில்லாங் நோக்கி போகும் போது எடுத்த படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. //நம் ஊர் பெண்கள், ஹஸ்பெண்டுக்கும், குழந்தைகளுக்கும் கிடைக்கும் புகழையும், பெருமையையும் தன்னோடதா ரொம்ப ஈஸியா ஏத்துக்கறா, நம்மால்தான் முடியல//

    மறுக்க முடியாத உண்மை.

    ராஜேஸின் வருகை மாற்றத்தை தரட்டும்.

    பதிலளிநீக்கு
  7. ஷ்ரவண் மனம் மாற சொல்ல பட்ட காரணங்கள் நன்றாக இருக்கிறது.
    அப்பா மகன் உரையாடல், நண்பர் குடும்ப குழந்தை ஸ்ருதியின் பாடல் கேட்பது அனைத்தும் அருமை.

    // பாடுகிறவர்களுக்கு மட்டுமல்ல, கேட்பவர்களுக்குமான சந்தோஷம்.//

    இசை மனதை, மகிழ்ச்சி படுத்த சாந்த படுத்த உதவும் கலை. போன பிறவியில் தேன் அபிஷேகம் செய்து இருந்தால் தான் பாடும் வரம் கிடைக்கும் என்பார்கள். எத்தனை பேருக்கு இந்த வரம் கிடைக்கும்.
    கல்லையும் கரைய வைக்கும் இசை என்றால் கல்லான மனதை கரைய வைக்காதா? ஷ்ரவண் கனிந்து விட்டான்.

    ஸ்ருதி என்ன மனநிலையில் வருவரோ!
    இன்று எழுதியவர் நன்றாக எழுதி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த இடத்தில் பயணம் இருக்கிறது ?

      நீக்கு
    2. நாக்பூர் வரப்போகிறது. பயணம் என்பதால் மறுமொழி எளிதாகிறது.

      நீக்கு
    3. சோன்பப்டி வரும் நாக்பூர் ஸ்பெஷல்

      நீக்கு
    4. நாக்பூர் முன் சந்த்ராபூர் வருமே அங்கு ஆரஞ்சு நன்றாக இருக்கும்..கூடை கூடையாகக் கொண்டு வருவாங்க வின்டர்ல கிடைக்கும். விலையும் கம்மியா இருக்கும் நல்லாருக்கும்...

      கீதா

      நீக்கு
  8. படங்கள் நன்றாக இருக்கின்றன. கோட்டை மாதிரியான பள்ளிக் கூடம் அழகாக இருக்கிறது. படங்களுக்கான கேப்ஷன்ஸ் சூப்பர்.

    இயற்கைக் காட்சிகள், முக்கியமான இடங்கள், வித்தியாசமான அந்த இடத்திற்குரிய காட்சிகள், கொஞ்சம் சாலைக் காட்சிகள் என்றிருக்கலாமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இந்த வாரம் கதையின் இறுதி வரி பாசிட்டிவாக இருப்பதால் கதையும் அடுத்து பாசிட்டிவாக நகருமோ?

    நல்ல விறுவிறுப்பு!! சூப்பரா இருக்கு! ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்ப்போம்.. நன்றி கீதா.

      நீக்கு
    2. ////இந்த வாரம் கதையின் இறுதி வரி பாசிட்டிவாக இருப்பதால் கதையும் அடுத்து பாசிட்டிவாக நகருமோ///

      அது தொடர்ந்து எழுதப்போகும் ஶ்ரீராம் கையிலதான் இருக்குது கீதா:)...
      புரளியைக் கிளப்பிடுவோம்... ஒருவேளை உண்மையாகிடும்:)...

      நீக்கு
  10. கண்ணைப் பறிக்கும் படங்கள்
    அழகோ அழகு

    பாட்டு பாடுவது சந்தோஷத்திற்காக
    பாடுகிறவர்களுக்கு மட்டுமல்ல, கேட்பவர்களுக்கும் தான்
    அருமை, தொடரவும்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    அழகான ஷில்லாங் படங்கள். மேகம் சூழ்ந்த படங்களும் மிக அழகு. மெதுவாக நகர்ந்து விட்டு பிசாசாக வேகமெடுத்த படங்களும் அருமை.

    தொடர்கதையும் நன்றாக மாற்று திசை பயணத்தில் வேகமெடுக்கிறது. உள்ளுணர்வு அலசிலில் ஷ்ரவண் மனம் மாறி இப்படியே புரிந்து கொண்டால் சுமுகமாக இருக்கும். அதற்கு நடுவில் ஈகோ பிசாசு வந்து குறுக்கிடாமல் இருக்க வேண்டும். பார்ப்போம்.. எழுதும் ஆசிரியர்களின் மனவோட்டம் எவ்வாறு அமைகிறது என்று.!

    தங்கள் பயணம் எவ்வாறுள்ளது? சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆ எவ்ளோ கஸ்டப்பட்டு ரகசியத்தைக் கட்டிக் காக்கிறார் ஶ்ரீராம் ஹா ஹா ஹா:)

      நீக்கு
  12. நாமே எழுதும்கதைக்கு நாமே பின்னூட்டம் ? எழுத்தும் இழுப்பும் எழுதியவரை ஓரளவு அடையாளம் காட்டுகிறது கடைசியில் பார்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  13. சில நல்ல படங்கள் கதையை விட்டுச்செல்ல ஒரு நல்ல டை வெர்ஷன்

    பதிலளிநீக்கு
  14. மன மாற்றத்திற்கான கதையும் அருமை...

    சேர்ந்து செல்லும் நேரம் வந்தால் நலம்...

    சில பாடல்கள் மகிழ்ச்சி, உத்வேகம், ஆறுதல் என பலவற்றை கொடுக்கும் மருந்தாக இருக்கும்...


    பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை...
    காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை...
    மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை...
    சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி செம பாட்டு வரிகள்! இந்த 4 வரியுமே செம இல்ல?!! அதுவும் கடைசி வரி ரொம்ப சரி...!!!

      கீதா

      நீக்கு
    2. கண்ணதாசன் அங்கிளுடையதாச்சே ( ஒரு நம்பிக்கையில் சொல்லிட்டேன்:) ப கல்யாணசுந்தரம் மாமா எழுதியதோ)
      சூப்பராத்தான் இருக்கும் வரிகள்... மனதில் பதிந்த பாடல்களில் ஒன்று

      நீக்கு
    3. அதிரா பாட்டு கண்ணதாசன் மாமா எழுதியதுதான்....

      புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...

      எனக்கும் மிகவும் பிடித்த பாடல்...வரிகள் அருமையான வரிகள்.

      சந்திரபாபு பாடியது

      கீதா

      நீக்கு
    4. பாடிய மனுஷனோட பேரை யாரும் சொல்லக்கூடாதாக்கும்..

      நீக்கு
    5. ஓம் கீதா மூன் பாபு அங்கிள் பாடியது... இந்தப்பாட்டு மட்டும் கண்ணில நிக்கிது... படத்தில் பாடுவது.
      ஓ அப்போ பாடியது யாரோ?:) அதுதான் ஏ அண்ணன் பொயிங்கியிருக்கிறார் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
  15. மனமாற்றம் அடைவதுமோல் கதை போனாலும் அப்படி இருக்காது. அவள் வந்தவுடன் பழைய குருடி கதவைத் திறடி கதைதான்.

    கதாசிரியர் கேஜிஜி நல்லா எழுதறார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @நெ தமிழன்:)////
      சே சே அவிங்க ஒண்ணு சேரெதாலும்:) இவிங்க சேர விடமாட்டாங்க போலிருக்கே:)...

      நீக்கு
  16. "//"பாட்டு பாடுவது சந்தோஷத்திற்காக” என்று அப்பா சொன்னது புரிந்தது. பாடுகிறவர்களுக்கு மட்டுமல்ல, கேட்பவர்களுக்குமான சந்தோஷம்.//" - உண்மை

    நானும் விமானம் தரையிரங்கக் காத்திருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  17. பதில்கள்
    1. கதை ரொம்ப அருமையாகப் போய்க்கொண்டிருக்கு. இந்த மனஉளைச்சல் மாறிமாறி வராது இருக்கணும். நிஜமாகவே பெண்கள் கணவர்,பிள்ளைகள் உயர்வைப்பார்த்து அது எதுவாக இருந்தாலும் ஸந்தோஷப்படுமளவு பிறரால் முடிவதில்லை. ஸ்ருதி எந்த மனநிலையில் எப்படி மாற்றம் என்பது தொடரும் என்றுந்னைக்கிறேன்.
      அன்புடன்

      நீக்கு
  18. காமராவில் சிக்கிய ரம்யமான காட்சிகள். அறியாத இடங்களின் படங்களை -- குறிப்பாக சாலைகள் அமைப்பு, வாகனங்கள், ஜன சந்தடி இதெல்லாம்-- பார்ப்பதில் எனக்கு ஆர்வமுண்டு. ஊர் எப்படி என்பதை உள்ளங்கை நெல்லிக் கனி போல இவைத் தெரியப்படுத்தும்.

    பதிலளிநீக்கு
  19. படங்கள் நன்று. படங்களை விட அதற்கான ஒன் லைனர்கள்....

    கதையும் நன்றாகவே நகர்கிறது. யு.எஸ்.ஸிலிருந்து திரும்பும் ஸ்ருதி வேறு விதமாக யோசித்து இருப்பாரோ எனத் தோன்றுகிறது. பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு
  20. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன அதைவிட அதாற்கான தலைப்புகள் மிக அருமையாக இருக்கின்றன.

    நேற்று கதையில் சோகம். இன்று அட்வைஸ், மன மாற்றம். இந்த மன மாற்றம் தொடருமா? தொடர்ந்தால் கதை நல்லதாக முடிய வாய்ப்பிருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. படங்களும், கேப்ஷன்களும் சிறப்பு.
    வல்லி அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.
    விமானம் தரையில் இறங்கினாலும், ஷ்ரவன் உள்ளிருக்கும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறாமல் இருக்க வேண்டுமே?



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்து சொன்ன கீதா, பானு மா ,ஸ்ரீராம் அனைவருக்கும் நன்றி.
      ஷில்லாங்க் ரோடு போல கதை எழுதுபவரின் மன நிலைக்கேற்ப திரும்புகிறது.

      டிடியின் பாடல் மிக மிகப் பொருள் தரும் யதார்த்தமான
      வாழ்வைச் சொல்கிறது.நன்றி தனபாலன்.
      கௌதமன் ஜியா கதை எழுதுகிறார்.
      நான் கெஜிஜ என்று நினைத்தேன்.

      ஸ்ரீராமின் பயணக் கதை இப்பொழுதே ஆரம்பித்துவிட்டது.
      தொடர்ந்து வைஃபையும், நேரமும் கிடைக்க வேண்டும்.
      அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.

      நீக்கு
  22. படங்கள் அருமை.

    ----

    நல்ல திருப்பம்.

    பதிலளிநீக்கு
  23. ////இந்த என் மன மாற்றத்தை ஸ்ருதிக்கு தெரிவித்து அவளின் சந்தோஷ ரியாக்ஷனை பார்க்க ஆவல் வந்தது. அவள் வரும் விமானம் தரையிரங்கக் காத்திருக்கிறேன்.///

    ஆ இப்போதான் படிச்சு முடிச்சேன் கதை. எனக்கென்னமோ பழயபடி வேதாளம் முருங்கில் ஏறிடும்போலதான் தெரியுது:)... இது கொஞ்டநாள் பிரிவால வந்த நெருக்கம்:)...

    சரி சரி, பிரியப்போவதும் சேரப்போவதும் இனி அடுத்து எழுதப்போகும் ஶ்ரீராம் கையிலதான் இருக்கு ஹா ஹா ஹா:)...

    ஆனா கதை மூவாகிற மாதிரியே இல்லையே:) 500 எபிசோட்டைத் தொடும் றாமாவைப்போல்:) விட்ட இடத்திலேயே நிற்பதைப்போல ஒரு பீலிங்கா இருக்கெனக்கு:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, கதை நிறைய மூவ் ஆகிறது மா. ஏறி இறங்கி என்று.
      சோகம், ஆனந்தம்,புரிதல் என்று வந்திருக்கிறது. ஸ்ரீராம்
      ரயிலிலிருந்து எழுதப் போகிறாரா.ஆஹா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!