வெள்ளி, 12 ஏப்ரல், 2019

வெள்ளி வீடியோ : ஏரிக்காற்றே நில்லடி... மங்கை எண்ணம் எங்கே சொல்லடி -


கனவுகள் கற்பனைகள்.1982 இல் வெளிவந்த திரைப்படம். நான் படம் பாக்கவில்லை.  ஆனால் இரண்டு நல்ல பாடல்கள் உண்டு இந்தப் படத்தில்.கங்கை அமரன் இசையில் பாடல் எழுதியது வாலியாக இருக்கவேண்டும்.

சரத்பாபு, ரூபா எல்லாம் நடித்திருப்பதாக விக்கி சொல்கிறது.காட்சி இல்லாமல் கானம் இணைத்திருக்கிறேன்.  அழகான சந்த வரிகள் கொண்ட பாடல்.  ஜெயச்சந்திரன் குரல் என்றுமே எனக்குப் பிடிக்கும்.  இனிமையான பாடல்.

தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது 
சந்தங்கள் தன்னே வந்தது மாலைப்பெண்ணே 
கலை அன்னம்பல வண்ணம் கொண்டது மண்ணும் புது பொன்னில் நின்றது  
இன்னும் எனை பின்னிக் கொண்டது கன்னிப் பெண்ணே 
இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது சின்னப்பெண்ணே 

ஏரிக்காற்றே...
ஏரிக்காற்றே நில்லடி...  மங்கை எண்ணம் எங்கே சொல்லடி 
வானில் விளையும் கண்மணி கண்ணில் மலரும் மேனி வெண்பனி 
வேடன் மானோ...
வேடன் மானோ கண்ணோடை மேயும்  மீனோ  
சொல் என்பதோ நீ கேள் என்பதோ 
நான் கொண்டாடும் மோகம் நெஞ்சில் உண்டென்பதோ 

மாலைப்பொன்னே 
மாலைப்பொன்னாய் மின்னுமோ கையில் வாங்கும் பொன்னாய் மாறுமோ 
மூங்கில் போலே ஆடுமோ சொல்ல ஏங்கும் நாணம் தோன்றுமோ 
ஆலங்கிளியே... 
ஆலங்கிளியே சொல்லாமல் பாடும் குயிலே 
எண்ணங்களே தேன் அள்ளுங்களே பொன்வண்டாகி நாணம் கொஞ்சம் சொல்லுங்களே 


34 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.

  இப்படி ஒரு படமா? கேட்டதே இல்லையே சரி பாட்டு கேட்டுவிட்டு வருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் காசிக்குப் போயிருக்கார்னதும் எல்லாருமே போய்ட்டாங்களா காசிக்கு? யாரையும் காண்றதில்லை இப்ப...

   கீதா

   நீக்கு
  2. வணக்கம் கீதா ரங்கன்.... அனேகமா நாம வேற தேசத்துலதான் சந்திப்போம் போலிருக்கு......

   நீக்கு
  3. ஹா ஹா ஹா ஹா நெல்லை அப்ப இப்ப சென்னைக்குப் போயாச்சா!! அதெல்லாம் இல்லை...பங்களூர்லயே சந்திக்கலாமே!!!

   கீதா

   நீக்கு
  4. வீடியோ வந்துவிட்டது!!! பார்க்காதவங்க பார்க்கலாம்!! பாட்டு கேட்கலாம்...

   கீதா

   நீக்கு
  5. எங்கத்த சந்திக்க கீதா ரங்கன்... நீங்க 20 கிமி தொலைவுல இருக்கீங்க. ரொம்பவும் பிஸியா இருக்கீங்க. இந்தத் தடவை புதுவருட லஞ்ச் எங்க சாப்பிடலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்..ஹாஹா.

   நீக்கு
 2. ஸ்ரீராம் பாடல் வீடியோவைக் காணலையே ஒரு வேளை என் கணினியில்தான் வரவில்லையா?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதா சகோதரி

   "ஸ்ரீராம் காசிக்குப் போயிருக்கார்னதும் எல்லாருமே போய்ட்டாங்களா காசிக்கு? யாரையும் காண்றதில்லை இப்ப.."

   ஹா ஹா ஹா.சகோதரர் ஸ்ரீராம் எ. பி யின் குடும்ப அங்கத்தினர்களாகிய நமக்காவும் பிரார்த்தனை செய்திட்டு வருவார். இரண்டு நாட்களாய் என்னாலும் வலைப்பக்கம் வர இயலவில்லை சகோதரி. தங்களின் வருகை அனைவருக்கும் மிகவும் உற்சாகமளிக்கிறது.

   பாடல் கேட்டதில்லை.இன்றுதான் முதல்முறை என நினைக்கிறேன். விபரங்கள் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. வாங்க கமலா அக்கா. அனைவருக்கும் சேர்த்துதான் ப்ரார்த்தனை செய்கிறேன்

   நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

   நலமா? தங்கள் பயணங்கள் எவ்வாறுள்ளது? எங்களுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்வதற்கு மிகவும் மகிழ்ச்சி. மிக்க நன்றி..

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. பாட்டு மெலடி கிராமிய மணம் வீசும் பாட்டு இல்லையா ஸ்ரீராம்...இதான் முதல் தடவையா கேட்கிறேன். கொஞ்சம் பிசி இன்று மாலை வந்துமீண்டும் கேட்கிறேன்.

   கமலா அக்கா ஆமாம் ஸ்ரீராம் நம் எல்லோருக்ககவும் வேண்டிக்குவார்..

   கீதா

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம் கீதா,ஸ்ரீராம்.
  பாட்டின் கவிதை வரிகள் அழகாக இருக்கின்றன. பாடல் கேட்க முடியவில்லையே.

  பதிலளிநீக்கு
 4. கேட்ட ஞாபகம் சற்றே வருகிறது...

  பதிலளிநீக்கு
 5. பாட்டு எங்கே இணைத்திருக்கிறீர்கள்? எடிட்டர் கேஜிஜி பார்க்கவே இல்லை போலிருக்கே....

  பதிலளிநீக்கு
 6. கேஜிஜி சார்... தொடர்கதையை இன்னும் நெடிய தொடராக கொண்டுபோயிருக்கலாமே.... சட்னு முடிச்சிட்டீங்க...

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 8. பாடல் வரிகள் இருக்கிறது பாட்டு இல்லையே ! (காணொளி )

  பதிலளிநீக்கு
 9. காணொளி இப்போ இணைக்கப்பட்டது. தடங்கலுக்கு வருந்துகிறோம்!

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் ....
  தங்க வணக்கம் சொல்லலாம்...
  ஆனால் இன்று வெள்ளியாயிற்றே!...

  அதனால்
  வெள்ளி வணக்கம்...!

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 11. இப்படியும் ஒரு படம் வெளியானதா!...

  பதிலளிநீக்கு
 12. பாடல் கேட்டது இல்லை புது பாடல் காட்சியோடு பாடல் வந்து விட்டது.

  பதிலளிநீக்கு
 13. கனவுகள், கற்பனைகள் என்று ஒரு படமா? கேள்விப்பட்ட நினைவு இல்லை.

  கனவுகள்+கற்பனைகள் = காகிதங்கள் என்று மீரா எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு ஒன்று உண்டு.

  அதிலிருந்து ஒரு புதுக்கவிதை:

  நீ முதல்முறை
  என்னைத் தலைசாய்த்துக்
  கடைக்கண்ணால் பார்த்தபோது
  என் உள்ளத்தில்
  முள் பாய்ந்தது.
  அதை இன்னும் எடுக்கவில்லை.
  முள்ளை முள்ளால் தானே
  எடுக்க வேண்டும்?
  எங்கே, இன்னொரு முறை பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எண்பதுகளின் புதுக்கவிதை தாக்கத்தை மறக்காமல் இருக்கிற இன்னொருவரை அடையாளம் கண்டுகொண்டது மகிழ்ச்சி!

   நீக்கு
 14. எனக்கென்னவோ பெரும்பாலான பாடல்கள் சந்தத்துக்ககவே எழுதியது போல் தோன்று கிறது பொருள் தேடுவதுஅபத்தம்தான்

  பதிலளிநீக்கு
 15. இப்படி எல்லாம் படம், பாட்டு இருக்கு என்பதே ஶ்ரீராமால் தான் தெரிஞ்சுக்க முடியுது! ஆனாலும் நான் இந்தப் பாட்டைக் கேட்டதில்லை/கேட்கவும் இல்லை! :))))) சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வந்ததுக்கு ஒரு ஆஜர்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!