வியாழன், 11 ஏப்ரல், 2019

ரமணியின் தாயாரும் ஸ்ரீமான் சுதர்சனமும்



ரமணியின் தாயார் 

இருபத்தேழு அத்தியாயங்களில் எழுதப்பட்ட தொடர்கதை.  விஜயராகவாச்சாரியார் அதாவது எஸ் வி வி எழுதிய கதை.  1949 இல் எழுதப்பட்ட கதை.  எப்படி என்கிறீர்களா?  சிறு ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தேன்.  கதை வரும் பக்கங்களில் ஒன்றில் இந்த விளம்பரம் வந்திருந்தது.  இதைப் பற்றி ஆராய்ந்தபோது படம் வெளியான வருடம் 1949 என்று தெரிந்தது.



இந்தக் கதையிலிருந்து சில வரிகளை ஏற்கெனவே எழுதி இருந்தேன்.  எழுத்தாளர் தான் ஒரு கேரக்டரில் புகுந்து கொண்டு சில கருத்துகளை சொல்வது பற்றியும் எழுதி இருந்தேன்.

மாமனார் - மாமியாரை சேர்த்துக்கொள்ள விடாமல் கணவனைக் கட்டி வைத்து வாழ்ந்த ரமணியின் தாயார் ரமணியின் தகப்பனார் அகாலமாய் இறந்துவிட படும் துன்பம் பற்றிய கதை.  ஒவ்வொருவரிடமும் இணைந்து இருக்கும் நல்ல குணங்கள் தீய குணங்கள் பற்றி இயல்பாகச் சொல்லும் கதை.  வீட்டை விட்டு ஓடிவிடும் ரமணி திரும்பி வருவானா, மாட்டானா என்கிற சந்தேகம்.  கடைசியில் எப்படி முடிகிறது என்று கதை.

சில அந்தக் கால வார்த்தைகள் :  அபேட்சிக்கவில்லை இச்சித்ததில்லை, ஸ்திரவாசி, ஆப்பியாயம் (ஆறுதல்), நிகா  இன்னும் சில வார்த்தைகளைக் குறித்து வைக்கவேண்டும் என்று நினைத்தேன்.  

நீண்ட வருடங்களுக்குப் பின் படித்து மகிழ்ந்த கதை. உண்மையில் ஸ்ரீமான் சுதர்சனம்தான் படிக்க எடுத்தேன்.



இந்தப்புத்தகத்தில் மூன்று கதைகள்.  



ராமமூர்த்தியும் ஸ்ரீமானும் கடவுள்  ஆகிவிட்டனர்!  அதாவது ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை.  அதனால் பரவாயில்லை.  இருக்கும் வரை ஸ்ரீமான் சுதர்சனம் படித்து ரசிக்கலாம் என்று எண்ணம்!  






===================================================================================================


தொடர்கதைப் புதிரை இன்று விடுவிக்க முடியாமைக்கு மன்னிப்பு கோருகிறேன், வருந்துகிறேன்.  நான் கிளம்பும் நாள் வரை விவரங்கள் எனக்குக் கிடைக்கவில்லை.  அடுத்த வாரம் வியாழன் அன்று கட்டாயம் விடை தெரியும்.  அதுவரை ஊகங்களிலேயே இருப்போம்.


====================================================================================================

தத்துபித்துவம்!  இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி.....



=================================================================================


அந்த ஏரியா பக்கமே இவரால் இப்போதைக்குப் போகமுடியாதாம்!  ஜோக் 1949.


55 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

    தலைப்பு ஈர்க்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஜோஸ்யர் ஜோக் ஹா ஹா ஹாஹா ...

    பின்ன கதை விட்டு நிறைய பணம் வாங்கியிருப்பார்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தத்துப்பித்துவம்..ரசித்தேன்..அதேதான் நம் மனம்..மனம் ஒரு குரங்குதான் பல சமயங்களில்!!!!!! முற்றத்து முல்லையின் மணம் அருமை தெரியாமல் என்று சொல்லப்படுமே அதே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ராமமூர்த்தியும் ஸ்ரீமானும் கடவுள் ஆகிவிட்டனர்! அதாவது ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. //

    ஹா ஹா ஹா ஹா...

    ஸ்ரீமான் சுதர்சனம் வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தது. இப்போது நெட்டில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும் தேவன் கதை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. சண்டை போட நெல்லையைக் காணவில்லை இன்னிக்கு?

    அப்பால வரேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீராம் செம ஐடியா உங்க ஆராய்ச்சி வருடம் கண்டுபிடித்தது. சூப்பர் பாராட்டுகள். துப்பறியும் ஸ்தாபனத்துல சேரலாம் நீங்க!! ஹா ஹா ஹா

    நானும் என் மாமனார் தொகுத்து பைன்ட் செஞ்சுருக்கற புத்தகத்துல இப்படித்தான் வருடம் தேடுறது உண்டு எங்கேயாவது ஏதாவது கண்ணுல சிக்குமான்னு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா பைண்டு பண்ணின புத்தகத்தை நீங்களும் படிக்காம சும்மா வைக்கறதுக்குப் பதிலா, எங்களுக்கும் தரலாம் இல்லையா? கதைப் புத்தகத்தை விட எனக்கு பைண்ட் பண்ணின புத்தகங்கள் பிடிக்கும். அதில்தான் அந்தக் காலத்தைய ஜோக்ஸ், துணுக்கு இதெல்லாம் இருக்கும். ஓவியரின் படங்களோடு கதை இருக்கும்.

      சும்மா "ஹா ஹா ஹா... சிரித்துவிட்டேன் நெல்லை'னு எழுதாம, எப்படி இதைக் கொடுக்கலாம்னு யோசிங்க கீதா ரங்கன்.... :-)

      நீக்கு
    2. நான் படிக்காமலா.... கிர்ர்ர்ர்ர்ர்...

      நீக்கு
    3. பைண்டு பண்ணின அந்தக்கால கதைகளைப் படிப்பது சுகம் தான். குறிப்பாக அந்தக்கால ஓவியர்கள் வெளிப்படுத்தும் காலம் கடந்த முகம்கள், அலங்காரங்கள்!

      நீக்கு
    4. ஆமாம் ஏகாந்தன் அண்ணா இங்க கூட அந்த படம் என்ன அழகு இல்லையா? அந்த எக்ஸ்ப்ரெஷன்ஸ்....வாவ் செமயா இருக்கு..

      கீதா

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை வணக்கம்.

    ஜோஸ்யர் நகைச்சுவை - :)

    இப்படியான பழைய புத்தகங்களைப் படிப்பதில் எனக்கும் ஆர்வம் உண்டு.

    பதிலளிநீக்கு
  9. ரமணியின் தாயார் கதை படிக்க ஆவல்.

    ஸ்ரீமான் சுதர்சனம் கதையும் படிக்க ஆவல்.
    தேவன் கதைகள் புத்தகச்சோலையில் வாங்கி வைத்து இருந்தேன் நிறைய எல்லாம் விருந்தினர்களுக்கு பரிசளித்து விட்டேன்.

    கோபுலு அவர்களின் ஓவியம் அழகு. அந்தக்கால நீண்ட ஜடை அதில் ரிப்பன் முடிப்பு வரை கவனமாய் வரைந்து இருக்கிறார்.

    உங்கள் கவிதை சொல்வது உண்மை.

    ஜோசியர் ஊருக்கு போகமுடியாத காரணம் சிரிப்பு.
    அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீசு, துசா எல்லாம் ஏற்கெனவே படித்திருக்கிறேன். ராமூ படித்ததில்லை.

      நீக்கு
  10. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  11. அரிய தகவல்கள்தான் வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  12. இந்தக் கதையிலிருந்து சில வரிகளை ஏற்கெனவே எழுதி இருந்தேன். எழுத்தாளர் தான் ஒரு கேரக்டரில் புகுந்து கொண்டு சில கருத்துகளை சொல்வது பற்றியும் எழுதி இருந்தேன்.//

    ஆமாம் நினைவிருக்கிறதே!!!

    மாமனார் - மாமியாரை சேர்த்துக்கொள்ள விடாமல் கணவனைக் கட்டி வைத்து வாழ்ந்த ரமணியின் தாயார் ரமணியின் தகப்பனார் அகலமாய் இறந்துவிட படும் துன்பம் பற்றிய கதை. ஒவ்வொருவரிடமும் இணைந்து இருக்கும் நல்ல குணங்கள் தீய குணங்கள் பற்றி இயல்பாகச் சொல்லும் கதை. வீட்டை விட்டு ஓடிவிடும் ரமணி திரும்பி வருவானா, மாட்டானா என்கிற சந்தேகம். கடைசியில் எப்படி முடிகிறது என்று கதை.//

    கதை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்ற ஆவல்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தகப்பனார் அகலமாய் இறந்துவிட//அ"கா"லமாய் இறந்து விட!

      நீக்கு
    2. நானும் கவனித்தேன். நான் பார்த்தவரையில், நீள நீளமாய்த்தானே மனிதர்கள் இறக்கிறார்கள். இவரெப்படி அகலமாய்..

      நீக்கு
  13. சில அந்தக் கால வார்த்தைகள் : ​அபேட்சிக்கவில்லை இச்சித்ததில்லை, ஸ்திரவாசி, ஆப்பியாயம் (ஆறுதல்), நிகா இன்னும் சில வார்த்தைகளைக் குறித்து வைக்கவேண்டும் என்று நினைத்தேன். //

    எனக்கு இப்படியான கதைகள் வாசிக்கும் பல அந்தக் கால வார்த்தைகள் புரிவதில்லை ஸ்ரீராம். நீங்க பேசாம ஒரு அகராதி போட்டுருங்க!! பயனுள்ளதா இருக்கும்!! சீரியஸ்லி...இல்லைனா வியாழன் பதிவுல சொல்லிட்டே வாங்க. நான்(ங்க) குறிச்சுக்குவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. எஸ்.வி.வி.,தேவன் என்னும் இரு ஜாம்பவான்களின் எழுத்துக்களின் சாம்பிள் காட்டியிருக்கலாம். கோபுலுவின் படங்களளில் குழப்பம், எள்ளல், பரவசம் என்று அத்தனை பாவங்களையும் எவ்வளவு அழகாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்..!

    பதிலளிநீக்கு
  15. காலை வணக்கம்.

    பாடல், 'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத் தங்கமே... ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே' பாடலின் காப்பி போல இருக்கே.

    பதிலளிநீக்கு
  16. எல்லாம் ஒன்றே.. எல்லாம் பிரமை.

    பதிலளிநீக்கு
  17. Frank Tilsley என்பவர் எழுதிய I'd do it again என்னும் புத்தகத்தை British council library இலிருந்து எடுத்து பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தேன். ஆனந்த விகடன் அலுவலகத்திற்குப் பக்கத்தில்தான், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம். அந்தக் கதையின் அப்பட்டமான காபி தமிழ் வடிவம், 'ஸ்ரீமான் சுதர்சனம்' என்று தெரிந்துகொண்டேன். 'மிஸஸ் டவுட் ஃபயர்' ஆங்கிலப்படம், 'அவ்வை சண்முகி' ஆனது போன்று, அதே துல்லியம்.

    பதிலளிநீக்கு
  18. கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் - கற்பனை தீர்ந்துவிடும்...
    கண்ணில் தோன்றா காட்சியில்தான் - கற்பனை வளர்ந்துவிடும்...
    அந்த பாடல் போல (?) தேடல் கூட - ஒரு சுகமே...

    பதிலளிநீக்கு
  19. அல்லையன்ஸ் பதிப்பகம் நிறைய தேவன் கதைகளை வெளியிட்டிருக்கிறது. நான் படித்ததில்லை. அந்தக்கால பாஷைக்காகவாவது ஒன்று வாங்கிப் படிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  20. இந்த மாதிரி கருப்பு வெள்ளை படங்களை பார்ப்பது அபூர்வமாகி விட்டது.

    அந்த காலத்திலும் போலி ஜோசியர்கள் இருந்திருக்கிறார்கள் போல ...

    பதிலளிநீக்கு
  21. அந்தக் கால வார்த்தையாடல்கள் படிக்க சிலருக்குப் பிடிக்கலாம்மற்றபடி கதைகள் ரசிக்க என்ன இருக்கும்

    பதிலளிநீக்கு
  22. இருக்கும் இடத்தைவிட்டு...

    மனிதனின் இயல்பே அதுதான்

    பதிலளிநீக்கு
  23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம் காசியிலிருந்து பதில் சொல்கிறாரா. அடடே.
    இனிய மாலை வணக்கம் அனைவருக்கும்.
    ரமணியின் தாயார் எனக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. ஆனால் தேவையான
    கதை தான்.
    அபேட்சிக்கவில்லை என்றால் தேர்ந்தெடுக்கவில்லை ஆசைப்படவில்லைன்னு அர்த்தமும் வரும்.
    இச்சிக்கவில்லையும், அதே தான் இச்சையின் எதிர்ப்பதம்.

    தேர்தல் அபேட்சகர் என்று முன்னால் சொல்வார்கள்.
    தொகுதி எம் எல். லே ஆக நினைத்து தேர்தலில் நிற்பவர்.

    யதார்த்த ஜோஸியர் ஹாஹா.
    இருக்கும் இடத்தை விட்டு எனக்கு மிகப் பிடித்த பாடல்.
    கையில் இருக்கும் பட்சி நினைவுக்கு வரும்.

    பதிலளிநீக்கு
  25. ம்ம்ம்ம் காசியிலிருந்து எ.பி.க்கு பதில் கொடுத்திருக்கீங்க!ஆனால் என்னோடபதிவில் சொல்லமுடியலை!ஹிஹிஹி,எனக்கு மொபைல் வழி யாரோட பதிவிலும் சொல்ல முடியாது! :))) வழக்கமும் வைச்சுக்கலை!

    பதிலளிநீக்கு
  26. அதென்ன தொடர்கதைப் புதிர்? போன வாரம் படிச்சால் தான் புரியுமோ? போய்ப் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  27. காசி போயும் இங்கத்திய நினைவா?..
    உடல் அங்கே, உள்ளம் இங்கேயா?
    இல்லை, கடமை உணர்வா?
    ஏங்கு போயினும் எங்கள் பிளாக்கை விட்டு
    மனம் நீங்காது என்பது புரிகிறது...

    பதிலளிநீக்கு
  28. கோபுலுவின் ஆரம்ப கால ஓவியங்களை பார்த்தது மகிழ்வாக இருந்தது!

    பதிலளிநீக்கு
  29. ஸ்ரீராம்ஜி இம்முறை வியாழன் வழக்கம் போல் களைகட்டவில்லையோ?

    பகிர்வும் குறைவாகவே உள்ளது போல் தோன்றுகிறது. புத்தகங்கள் அறிந்து கொண்டேன் மற்றும் தத்துவம் அருமை. யதார்த்தம்.

    கதையை யார் எழுதியிருப்பார்கள் என்பதை அறிய தொடர்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!