செவ்வாய், 23 ஏப்ரல், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை - ஜெனியின் காதல் டைரி - நௌஷாத்கான்


ஜெனியின் காதல் டைரி
நௌஷாத்கான் 

நமது தளத்தில் இன்று கதை எழுதி இருக்கும் நௌஷாத்கான் பற்றி பரிவை சே. குமாரின் பதிவு.

இனி நண்பர் எழுதி இருக்கும் கதையைப் படியுங்கள்.

===============================================

அழகு ,படிப்பு ,சொத்து இருந்தும் ஜெனிக்கு எந்த வரனும் அமைந்தபாடில்லை.  பொண்ணை பிடிச்சிருக்குனு சொல்லுற மாப்பிள்ளையெல்லாம் ஜெனி மாப்பிள்ளைக்கிட்ட கொஞ்சம் பேசணும்னு சொன்னவுடன் அவ அறைக்கு போயிட்டு வர்றவனெல்லாம் ஜெனியை பிடிக்கலைன்னு சொல்லிட்டு போயிடுறானுங்க

பொண்ணு தான் யாரையோ மனசுல நினைச்சுக்கிட்டு வர்ற சம்மந்தத்தை
எல்லாம் கெடுத்து விடுறான்னு நினைச்சுக்கிட்டு அவ அப்பாவே நேரடியா
அவகிட்ட கேட்க துவங்கிட்டாரு

'சொல்லுமா உன் மனசுல காதல் கீதல்னு ஏதாவது இருக்குதா ,உனக்கு பிடிச்சவன் எவனா இருந்தாலும் பரவாயில்லை அவன் நல்லவனா இருந்தா போதும்.. அவனையே உனக்கு கல்யாணமும் பண்ணி வச்சிடுறேன்'னு சொன்னார் ..

'சொல்லுமா..   நீ யாரையாவது லவ் பண்றியா ? சொல்லு..' என்றார் ..

'நான் யாரையும் இப்போதைக்கு லவ் பண்ணலைப்பா,என்னை நம்புங்கப்பா என்று சொல்லி அழுது கொண்டே அவள் அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள் .

கட்டிலில் சாய்ந்த அவள் தனது கடந்த காலத்தில் மூழ்க தொடங்கினாள் ..

*****

வருஷம் 1996 ….

அந்த கவர்ன்மெண்ட் ஜென்ட்ஸ் ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்கிற வித்யாலயா மெட்ரிக் ஸ்கூல்ல டென்த் படிச்சுக்கிட்டு இருந்தேன் ,என்னை அந்த கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்ச ஒரு பையன் தினமும் பாலோ பண்ணுவான் ,நேர்ல அவனை கண்டுக்காம போனாலும் அவன் பாலோ பண்ணுறது மனசுக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு

ஒரு சில தடவை 'ஏண்டா பின்னாடி வர்றே'ன்னு திட்டி கூட இருக்கேன்
, இருந்தாலும் அவன் பின்னாடி வர்றது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது .  என்ன தான் பசங்க பின்னாடி வர்றது பொண்ணுங்களுக்கு சில நேரங்களில் எரிச்சலா இருந்தாலும் , அந்த எரிச்சல்லயும் ஒரு கிக் இருக்கு ஏன்னா ஒரு பொண்ணு பின்னாடி ஒரு பையனை அலைய வைக்குற கிக்கு எல்லாம் அனுபவிச்சா தான் தெரியும் ..

'என்னடா இவ அநியாயக்காரியா இருக்காளே'ன்னு நீங்க நினைக்கலாம் 

ஆனா நான் அப்படி பட்டவ இல்லை ,அவனை என் பின்னாடி வர்றாதேன்னு சொல்லுறதுக்கும் எண்ணமில்லை , அவனை காதலிக்குறதுக்கும் மனமில்லை ...  ஒரு வழியா , ஒரு வருஷம் அவன் என் பின்னாடி சுத்துனதுக்கு பலனா அவனை நானும் காதலிக்க தொடங்கிட்டேன்


இப்ப நான் பதினோராம் வகுப்பு , அவன் காலேஜ் முதலாம் ஆண்டு , என்னை பார்க்கிறதுக்காகவே லன்ச் பிரேக் ல வந்திடுவான்.  அவன் பார்க்கிற ஒவ்வொரு பார்வை துளியும் ஊசி போல என் மனசுல குத்துச்சு
, ஆனா அந்த சுகமான வலி எனக்கு ரொம்ப பிடிச்சுச்சு ...

ஒரு நாள் வேண்டாம் , வேண்டாம்னு சொன்னதை மீறி என் ஸ்கூலை கட் அடிக்க வச்சிட்டு நாகர்ஜுனா நடிச்ச இரட்சகன் படத்துக்கு கூட்டிட்டு போயிட்டான்..  படம் என்னவோ நல்லா தான் போய்க்கிட்டு இருந்தது நான் சற்றும் எதிர்பாராத சமயத்தில் என் இதழில் முத்தம் வைத்தான்.

கோபத்தில் அவனை அடித்து விட்டு அவனை திரும்பி கூட பார்க்காமல் கால் நடையாகவே வீடு வந்து சேர்ந்தேன்.


அதன் பின் வந்த நாட்களில் என் பள்ளியின் நிழலை கூட அவன் தொடவில்லை.  அவன் நினைப்பு கொஞ்சம் மனசை என்னவோ போல செஞ்சாலும் , அவன் செஞ்சது தப்புன்னு தோணுச்சு.  ஒரு சில மாதங்களுக்கு பிறகு என்னை நானே தேத்தி கொண்டு அப்பா அம்மாவுக்காக படிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன் ...

சில வருடங்களுக்கு பிறகு இப்ப நான் பி .எஸ்சி .கெமிஸ்ட்ரி மூன்றாம் ஆண்டு படிக்கிறேன் அந்த ஸ்கூல் டேஸ் இன்ஸிடண்ட்க்கு அப்புறம் பசங்கனாளே கொஞ்சம் பயமா இருந்துச்சு...  அவனை பார்க்கிற வரைக்கும் ...  

அந்த அவன் யாருன்னு நீங்க கேட்கலாம்,  அந்த அவன் என்னோட கார்த்திக் , அவன் பேரை போலவே ரொம்ப அழகு , ரொம்ப ஸ்மார்ட் , சமத்துன்னு சொல்லலாம் ..  படிப்பிலும் ரொம்ப டாலேண்ட், அவன் மட்டும் இல்லைன்னா கிளாஸ் பர்ஸ்ட் நான் தான் வருவேன் ,அவன் இருக்கிறதால செகண்ட் வர்றேன் அவனை எல்லாம் பார்த்ததுக்கு அப்புறம் எப்படிங்க பர்ஸ்ட் வர்றது ??

அடிக்கடி அவனை பார்த்து சைட் அடிக்கிறதுக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்.  பசங்க மட்டும் தான் சைட் அடிக்கணுமா என்ன??  என் ஆளு அவன்.  அதான் என் இஷ்டம் போல சைட் அடிக்குறேன் ..  என்ன தான் ஒரு
பொண்ணு ஒரு கிலோமீட்டர் தூரத்துல இருந்து பார்த்தாலும் பூனை மாதிரி மோப்பம் பிடிக்குற பசங்க நிச்சயமா கண்டு பிடிச்சிடுவானுங்க அவனும் நான் சைட் அடிக்கிறதை ஒரு நாள் கண்டு பிடிச்சிட்டான் ..

வேற வழியில்லாம என் காதல கடிதம் மூலமா தெரிவிச்சது மட்டுமின்றி
கடிதம் கொடுக்கிறப்ப அவ கன்னத்துல பஜக்கின்னு ஒரு கிஸ்ஸை கொடுத்திட்டு ஓடிட்டேன் .

என்ன தான் பசங்களை குறை சொன்னாலும் பொண்ணுங்களை விட பசங்க ஒரு படி மேல தான் ..  உலகத்துல பசங்க காதல்ல ஏத்துக்காத நிறைய பொண்ணுங்க கூட உண்டு , ஆனா பொண்ணுங்க காதலை ஏத்துக்காத பசங்க இந்த உலகத்துல ரொம்ம கம்மி ...  நம்மளை காதலிக்கிற பொண்ணுங்க மனசை நோகடிக்க கூடாதுன்னு நினைக்குற குணம் பசங்களுக்கு இயற்கையாவே நிறையா இருக்கு ..

என் காதலையும் அவன் ஏத்துக்கிட்டான் ..

விதையாய் இருந்த காதல் செடியாய் முளைக்க தொடங்கியது , யூ.ஜி
. முடிச்சதுக்கு அப்புறம் பி .ஜி .யும் ஒண்ணாவே சேர்ந்து படிச்சோம் ..வருஷம் கூடக் கூட அவன் மேல நம்பிக்கையும் எனக்கு அதிகமாயிடுச்சு...

பி .ஜி .இரண்டாம் ஆண்டு எக்ஸாம் நெருங்குற நேரம் , ரெண்டு பேருக்குமே கேம்பஸ் இன்டர்வியூல வேலை ரெடி .  என்ன தான் ரெண்டு பேரும் வேற வேற மதம் என்றாலும் அவனை எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது ..  கல்யாணம் பண்ணா அவனைதான் பண்ணுவேன்னு முடிவோட இருந்தேன்

நான் காதலிக்கும் போது கூட அவனை கணவனா தான் நினைச்சேன் ,அவனும் என்னை மனைவியாதான் நினைச்சான் ..  படிப்பு முடிஞ்சு வேலைல ரெண்டு பேரும் சேர்ந்ததுக்கு அப்புறம் வீட்ல எங்க காதல்ல சொல்லி ,இதுவரைக்கும் மனசாலே கணவன் மனைவியா வாழ்ந்த நாங்க ஊரறிய கணவன் மனைவியா வாழ ஆசைப்பட்டோம் .  எங்க கல்யாண நாள் எப்ப வரும் என்ற ஏக்கத்துடன் அந்த நாள் சீக்கிரம் வந்திடணும்னு வழி மேல் விழி வைத்து காத்திருந்தோம் ...

நான் எக்ஸாம்ல பாஸ் பண்ணிட்டா அப்பாவும் அம்மாவும் வேளாங்கண்ணி வர்றதா வேண்டிக்கிட்டாங்க , அது போல நானும் பாஸ் பண்ணதாலே அப்பாவும் அம்மாவும் வேளாங்கண்ணி போயிட்டாங்க , நீ ஏன் போகலைன்னு நீங்க சொல்லுறது என் காதுல கேட்குது ,அவன் கூட ஒரு நாள் தனியா எந்த தொந்தரவும் இல்லாமல் பேசணும்னு தோணுச்சு 

அதனாலே அப்பா அம்மாக்கிட்ட தலைவலின்னு சொல்லிட்டு வீட்லேயே இருந்துட்டேன் அடுத்தவாரம் நானும் கார்த்திக்கும் வேலைல ஜாயிண்ட் பண்ண போறோம் , அடுத்த வாரம் எங்க காதல்ல வீட்ல சொல்லிடலாம் என்ற முடிவில் இருந்தேன் .

அப்பா -அம்மா வேளாங்கண்ணி போயிட்டாங்க நான் வீட்ல தனியா தான்
இருந்தேன் அப்பா அம்மா இல்லாம வீடும் ஒரு மாதிரி இருந்துச்சு , வெளியே அவனோட போகலாம் என்றால் வண்டி வேற ரிப்பேர் எனவே கார்த்திக்கு போன் பண்ணி வீட்டுக்கு வர சொன்னேன் ..

அவன் வந்த நேரம் பார்த்து வெளியே பயங்கர மழை , நனைஞ்சுக்கிட்டே தான் வீட்டுக்கு வந்தான் ,இது சினிமா இல்லை அப்பா ட்ரெஸ்ஸை எடுத்து கொடுக்குறதுக்கு ,நனைஞ்ச ட்ரெஸ்ஸை பாத்ரூம்ல போய்
நல்ல தண்ணியாலே துடைச்சிட்டு வந்து ,ஈர துணியை கழட்டி  ஃபேன் அருகே உள்ள நாற்காலியில் காயப்போட்டான்.  

முதன் முதலாய் ஒரு ஆணை அரைகுறையாய் பார்ப்பது என்னை ஏதோ செய்தது இதற்கு முன் எந்த ஆணையும் இப்படி பார்க்க எனக்கு தோன்றியதில்லை,இவன் என்னுடையவன் பார்த்தால் என்ன தப்பு என்று எண்ணத் தோன்றியது ..

ஏன்? ஒரு ஆண் மட்டும் தான் ஒரு பொண்ணை சைட் அடிக்கணுமா என்ன?  பொண்ணுங்க அடிச்சா குடியா முழுகிட போகுது?
இவ்வளவு முற்போக்கா பேசுறதாலே (!) நான் பெண்ணியவாதியோ , பாரதி கண்ட புதுமைப்பெண்ணெல்லாம் இல்லைங்க ...

உலகம் என்ன தான் வளர்ந்தாலும் , நவீனங்கள் வளர்ந்தாலும், பொண்ணுங்க எல்லாம் ஆண் போல பேண்ட் சட்டை போட்டாலும் ,ஆண்கள் போல சிகரெட் , தண்ணி அடிச்சாலும் ஒரு ஆண், ஆண் தான், ஒரு பெண் பெண் தான் ...

ஆம்பளை செய்யுற எல்லா விஷயத்தையும் முற்போக்கு என்கிற பெயர்ல ஒரு பொம்பள செஞ்சா அது அசிங்கமா தான் போகும் ..  இவன் என்னோட கார்த்திக், எனக்கு கணவனா வர்ற போறான்,  அவனை அப்படி
பார்க்குறது தப்பில்லைன்னு தோணுச்சு.  துணி காயுற வரைக்கும் அவன்
போட்டுக்க என்னுடைய நைட்டிய எடுத்து கொடுத்தேன்.  என்னை பார்த்து சிரித்துக் கொண்டே என் ஆடையை அவன் உடுத்தி கொண்டான் ..

அன்று என்னவோ தெரியலை அவன் கண்களை பார்த்து கொண்டே
இருக்கணும்னு தோணுச்சு , எல்லாரும் பொண்ணுங்களை உடலா தான்
பார்க்கிறாங்க , மனசா பார்க்கிறது இல்லை ஆனா ஒரு பொண்ணு ஒரு ஆண் கிட்ட மனசை தான் பார்க்கிறா , அந்த மனசு ஒத்து போச்சுன்னா ஒரு ஆண் எப்படி பட்டவனா இருந்தாலும் தன்னுடைய உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் ஒரு பெண் முழுசா ஒப்படைச்சிடுவா..

அன்றைக்கு ஒரு மேஜிக் நடந்தது ..  எங்களுக்குள்ளே எங்களுக்கே தெரியாமல் எங்கள் கட்டுப்பாட்டை மீறி நானும் அவனும் ஒண்ணு சேர்ந்தோம்.  உங்க பாஷையில சொல்லனும்னா கணவன் மனைவியா அந்த நாள் உடலாலே வாழ்ந்தோம் ..

உங்களுக்கு பெரிய தப்பா , பண்பாட்டை மீறிய விஷயமா தெரியலாம் ஆனா எனக்கு அப்படி தெரியலை அவனை கல்யாணம் பண்ணிக்க போறேன்.  அவன் இப்பவும் என் மனசாலே கணவன்.  அந்த உரிமையில் நடந்த நிகழ்வு , எனக்கு குற்ற உணர்ச்சியா தெரியலை ..

மழை கழிந்த பிறகு அந்த நள்ளிரவில் பைக் எடுத்து சென்றவன் வீடு சென்றதும் போன் செய்கிறேன் என்றான்.  ஆனால் கடைசி வரை அவனிடத்திலிருந்து போன் வரவே இல்லை ..

ஆம் அந்த ஏமாற்றுக்காரன் என்னை ஏமாற்றி விட்டு இந்த உலகத்தில் வாழ விருப்பமில்லாமல் சொர்க்கத்துக்கு சென்று விட்டான் , கூட என்னையும் கூட்டி செல்லணும் என்ற அறிவு கூட இல்லாமல் ...

என்னங்க கதை புரியலையா ??

அன்றைய இரவு அந்தப் பாவி பைக் ஆக்சிடண்ட்ல இறந்துட்டான்.  என்னை விட்டு போக அவனுக்கு எப்படி மனசு வந்தது, அவனை கல்யாணம் கட்டிக்கிட்டு பத்து,பதினைந்து புள்ள குட்டிங்க பெத்துக்கிட்டு நூறு வருஷம் வாழணும்னு ஆசைப்பட்டேன் .  என் ஆசையில மண்ணை போட்டிட்டு ஏண்டா போயிட்ட... ??

அவன் போனதுக்கு அப்புறம் நானும் இருக்க கூடாதுன்னு தோணுச்சு ஆனா என்னை நம்பி இருக்கிற அப்பா ,அம்மாவுக்காக வாழணும்னு தோணுச்சு ...

கல்யாணம் இப்ப வேணாம் ,இப்ப வேணாம்னு என்னாலே முடிஞ்ச வரைக்கும் ஒரு எட்டு வருஷம் ஒரு வேலையில இருந்து கொண்டே என் மனசை ஆற்றிக் கொண்டு ஓட்டி விட்டேன் ..

வயசு வேற ஏறிக்கிட்டே இருக்கு ,இதுக்கு மேலயும் அப்பா ,அம்மாவை ஏமாற்ற முடியலை.  காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்.  

கார்த்திக்கோட நினைப்பு சுத்தமா இல்லைன்னு பொய் சொல்ல முடியாது.  ஆனா அவ நினைப்போட சகஜமா வாழ கத்துக்கிட்டேன்.  

ஒருத்தங்களை ஏமாத்திட்டு வாழப் போற வாழ்க்கை எனக்கு பிடிக்கலை.  அதான் என்னை பொண்ணு பார்க்க வர்ற மாப்பிள்ளைங்க கிட்ட எல்லாம் என் கடந்த காலத்தை சொல்லி என்னை பிடிச்சிருக்கானு கேட்டேன்.  இந்த உலகத்துல ஏமாத்துறவளை தான் எல்லாருமே நம்புவான்.  உண்மையை சொல்லுறவளை எவனுக்குமே பிடிக்காது..  எனக்கு கல்யாணம் ஆகுமா, ஆகாதான்னு தெரியாது.  ஒரு வேளை ஜெனியாகிய நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா கல்யாணத்துக்கு அப்புறம் என் கணவனுக்கு நிச்சயமா ஒரு உண்மையான மனைவியாக இருப்பேன் ....

இந்த உலகத்துல எல்லா ஆண்களுக்கும் ஒரு ஆட்டோகிராப் இருக்கு அதை வெளியே சொன்னாலும் இரசிக்கறாங்க, ஆராதிக்குறாங்க...   ஆனா ஒரு பொண்ணோட ஆட்டோகிராப் அவ சாகற வரைக்கும் அவ மனசோட கிடந்து அவ தினம் தினம் நரக வேதனை அனுபவிக்கனும், இல்லைன்னா என்னை மாதிரி வெளிப்படையா சொல்லுறேன்னு அசிங்கப்பட்டு முதிர் பெண்ணாய் கல்யாணம் பண்ணாமதான் வாழணும் ..


காதல் இருவருக்கும் பொதுவானது என்பதை என் சமூகம் எப்போது உணருமோ....

112 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.

  குமார் அவர்களின் வலைத்தளத்தில் இவரது எழுத்து , புத்தகங்கள் பற்றி விமர்சனம் வைத்திருந்தார். அங்கு ஸ்ரீராம் நீங்கள் சொல்லியிருந்தீர்கள் இவர் கதைதான் இன்று என்று...

  வருகிறேன் வாசித்துவிட்டு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் நீங்க அங்க சொல்லியிருந்தும் கூட மறந்து இன்று யாராயிருக்கும்னு யோசித்துக் கொண்டே உள்ள வந்தப்ப நௌஷத் என்ற பெயர் பார்த்ததும் நினைவுக்கு வந்தது...ஹிஹிஹி அப்பூடி இருக்கு இப்ப நினைவுத்திறன், மைன்ட் எல்லாம்!!!!

   கீதா

   நீக்கு
  2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். குமாரின் பதிவுக்கு இங்கு லிங்க் தரவேண்டும் என்று நினைத்திருந்தேன். மறந்து விட்டது! குமாருக்கு நன்றி சொல்லவேண்டும். அவர் முகம் அறிமுகமான நண்பர்தான் இவர்.

   நீக்கு
  3. என்னது நன்றியா..?

   அதுசரி...

   தங்கள் கேட்பீர்கள்... அவரை அனுப்பப் சொன்னேன்.. அவ்வளவே..

   நன்றி எல்லாம் வேண்டியதில்லை... எப்பவும் அன்பு போதும் அண்ணா...

   நீக்கு
  4. நட்புக்கு மரியாதை. வாழ்க வளர்க...

   நீக்கு
  5. அனைத்து சகோதர-சகோதரிகளுக்கும் எனது பணிவான வணக்கங்கள்

   நீக்கு
 2. தலைப்பு ஈர்க்கிறது.

  ஒரு பெண்ணின் அதுவும் அந்தப் பருவ வயதுப் பெண்ணின் மன நிலை, ஆண்களின் மனநிலை எல்லாமும் அழகாகச் சொல்லியிருக்கிறார் நௌஷாத்.

  அப்பா ஃப்ராங்காகக் கேட்கிறார்...ஜெனி அப்ப இதுதான்னு சொல்லியிருக்கலாமோ?

  ஜெனி கல்யாணம் செய்ய விரும்புவதால் கார்த்திக்கும் இல்லை என்பதால், அவளும் நினைவுகளுடன் சகஜமாக வாழத் தொடங்கியதால் வரும் ஆண்களிடம் ஏன் சொல்ல வேண்டும் என்றும் தோன்றியது...அவளே கடைசியில் சொல்லுகிறாள்தான்...எல்லா ஆண்களுக்கும் ஆட்டோஃபிராஃப் இருக்கும்.......அந்த பாராவில்.

  இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் தான். தன் உண்மை தெரிந்து தன்னை ஏற்கும் ஆண் வேண்டும் என்று நினைப்பது... அதைத்தான் ஆசிரியர் சொல்லியிருக்கிறார் என்றே தோன்றுகிறது

  ஜெனிக்கு நல்லது நடக்கட்டும்..

  இயல்பான கதை. பாராட்டுகள்!

  வாழ்த்துகள் நௌஷாத்கான் அவர்களுக்கு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிங்க.ஆம் தன் கடந்த காலத்தை முழுமையாய் அறிந்து ஏற்றுகொள்பவரை தான் கணவனாக ஏற்றுகொள்ள வேண்டும் என்ற முடிவோடு இருப்பவளாக ஜெனி கதாபாத்திரத்தை உருவாக்கினேன்

   நீக்கு
 3. மேஜிக் என்று சொல்லியிருந்த இடம் கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது என்பதையும் சொல்ல வேண்டும். அடடா ஜெனியின் விருப்பம் நிறைவேற வேண்டுமே என்று. என்னதான் திருமணம் என்பதை அவர்கள் தீர்மானித்திருந்தாலும்....வேறு ஏதேனும் விளைந்திருந்தால் என்ற நினைப்பும் வந்தது. ஆசிரியர் இங்கு யதார்த்தம். பின் விளைவுகள் வேறு எதுவும் இல்லாமல்.

  பொதுவாக கதைகள் வேறு விதமாகப் போகும்.. குழந்தை அது இது என்று. தொடருக்கான சாத்தியங்களுடன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. வணக்கம் சார் ..
   நான் எப்போதுமே (கதையின் )கதாபாத்திரத்தின் தன்மையில் இருந்து தான் எழுதுவேன் ..ஜெனியின் கதாபாத்திரம் இப்படி தான் என்று முடிவெடுத்து தான் எழுதினேன் ..படிப்பவர்களுக்கு இக்கதையின் மூலம் ஒரு அறிவுரையும் சொல்ல விரும்பினேன் ..எச்சூழ்நிலையிலும் காதலுக்கு முன் உடலளவில் உறவு வைத்து கொள்ள கூடாது ..மனதிற்கு பிடித்த நல்லவன் /நல்லவள் என்றாலும் முன் யோசனையின்றி பருவ வயதில் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் தவறு சில நேரங்களில் விதியால் கூட சிலரது தலையெழுத்து மாற கூடும் ...இக்கதையின் மூலம் நான் சொல்ல வந்த விஷயம் அறத்தை எந்நிலையிலும் மீற கூடாது என்பதை தான் ...
   ஒரு கதையை ஆழ்ந்து படித்து இவ்வளவு கூராய்ந்து கேள்வி கேட்டதற்கு மிக்க நன்றி ..அடுத்த முறை இன்னும் சிறப்பாக கதை எழுத முயற்சிக்கிறேன் ..
   அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி

   -நௌஷாத் கான் -

   நீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். சற்று ஆழமான கதை போலிருக்கிறது. வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

   நீக்கு
  2. இரவோடு வந்து மனதோடு பேசுவார் என்று நினைக்கிறேன். அலுவலகத்தில் அவருக்குஇணையம் கிடையாது என்று குமார் சொல்கிறார்.​ விவாதத்தில் ஆர்வம் உடையவர் என்றும் சொல்லி இருக்கிறார்.

   நீக்கு
  3. அலுவலகத்தில் இருப்பதால் இரவு வந்து அனைவருக்கும் பத்தி தருவதாய் சொல்லி இருக்கிறார் அண்ணா.

   நீக்கு
  4. ஆவலுடன் காத்திருக்கிறோம்.

   நீக்கு
  5. தமிழ் உறவுகளுக்கு அன்பான வணக்கங்கள்

   நீக்கு
 5. நல்ல கதை. ஆனால் கதையில் வரும் ஆண்கள் நடந்து கொள்ளும் விதம் தான் பிடிக்கலை! ஏனெனில் இப்போதெல்லாம் விதவைகள், விவாகரத்தானவர்கள் எனப் பல பெண்களும் மறு வாழ்க்கை தேடி வாழ்கையில் என்றோ ஓர் நாள் காதலனுடன் கலந்தவளை ஒதுக்கி வைப்பது எவ்வகையில் நியாயம்? அதை ஜெனி சொல்லி இருக்க வேண்டாம் தான். ஆனால் மறைக்காமல் சொல்லுவதைப் பாராட்டியானும் எந்த ஆணாவது முன் வர மாட்டானா? நடந்தது ஓர் விபத்து! அதை மறந்து அவளை ஏற்கும் நபர் வர வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதைக்கான விவாதத்தில் கதாசிரியர் கலந்துகொள்வார் என்றே நினைக்கிறேன். ஆர்வமான எழுத்தாளர் என்று அறிந்திருக்கிறேன்.

   நீக்கு
  2. நான் மீண்டும் வந்து சொல்ல நினைத்ததை கீதாக்காவே சொல்லிட்டாங்க. குழந்தையுடன் கூட விவாக ரத்தானவர்கள், விதவைகள் மறு வாழ்க்கைதேடிக் கொள்கின்றனர். இப்பெண்ணுக்கு அதுவும் இல்லை. சகஜமாகவும் வாழ்கிறாள் எனும் போது....அவளையும் ஏற்க ஒருவன் வராமலா போவான் என்றும் தோன்றியது..,,கீதாக்காவும் சொல்லியிருக்காங்க்

   கீதா

   நீக்கு
  3. //வாழ்கையில் என்றோ ஓர் நாள் காதலனுடன் கலந்தவளை ஒதுக்கி வைப்பது எவ்வகையில் நியாயம்? // - ஆண் இந்த மாதிரி நடந்து, இதனைத் தான் பெண் பார்க்கப்போகும்போது சொன்னால், அவன் நல்ல வேலை, நல்ல குணத்தோடு இருப்பவன், தெரிந்தவன் என்றால் அதனைப் பொருட்படுத்த மாட்டார்கள். இல்லைனா, எப்படி பெண் சம்மதம் தெரிவிப்பாள்?

   இங்கு பெண், தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறவனிடம் தன்னை திருமணத்துக்கு முன்னால் இழந்து, காதலனையும் பறிகொடுத்தாள்.

   எது விபத்து? எது தவறு? ஒரு அளவுகோல் இல்லையா இதற்கு?

   நீக்கு
  4. கணவனை இழந்தவள், விவாகரத்தானவர்களைத் திருமணம் செய்துகொள்வது என்பது வேறு என்றுதான் நினைக்கிறேன். அப்படி இருப்பவர்களைத் திருமணம் செய்துகொள்ள அணுகுகிறவர்கள், அதற்குத் தயாரானவர்கள்தாம். ஆனால் இங்கு ஜெனியைப் பார்க்க வருபவர்கள், அத்தகைய மனநிலையில் வர வாய்ப்பே இல்லை. அவள் பெற்றோருக்குச் சொல்லாமல், பெண் பார்க்க வருபவனிடம் மட்டும் சொல்பவள் எந்த விதமான பெண்?

   ஜெனி சரியான பெண் என்றால், அவள் பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லி, அதற்கேற்றவனைத் திருமணத்துக்குப் பார்க்கச் சொல்லியிருக்கவேண்டும். அவள் அப்பாதான் புரிதலுள்ளவர் போலத் தெரிகிறாரே.

   நீக்கு
  5. //அவளையும் ஏற்க ஒருவன் வராமலா போவான் // - நிச்சயம் வருவான். ஆனால் அப்படி ஒரு பையனைக் கண்டுபிடிக்க ஒரு முறை இருக்கிறது. இங்கு ஜெனி செய்வது 'முறையற்றது' என்றே தோன்றுகிறது. ஜெனி என்ன சொல்கிறாள், 'இப்படி நடந்தது. என் பெற்றோருக்கும் தெரியாமல் மறைத்துவிட்டேன். அவன் உயிரோடு இருந்தால் அவனைத்தான் திருமணம் செய்திருப்பேன். அவன் இல்லை என்பதால், உனக்கு வாய்ப்பு' என்றுதானே சொல்வதாக அர்த்தம்.... ஆளை விடு சாமி என்றுதான் பெண் பார்க்க வருபவர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். நல்ல குணம் உடையவன், அவனுடைய பெற்றோரிடம் 'வேணாம்மா இந்த சம்பந்தம்... எனக்கு அவ்வளவாக இஷ்டமில்லை' என்று நாசூக்காகச் சொல்லிவிடுவான். பொதுவாக மற்றவர்கள், 'என்னம்மா...யார் எவர் என்று பார்க்காம பெண் பார்க்க கூட்டிவந்துவிட்டீர்கள்... அந்தப் பெண் அடுத்த ஆளைத் தேடுகிறாள்' என்றுதான் சொல்வார்கள். மோசமானவர்கள், அந்த இடத்திலேயே, அவள் பெற்றோரிடம் சண்டைபோட்டு எழுந்துவருவார்கள்.

   இப்படித்தான் நான் நினைக்கிறேன். ஹாஹா

   நீக்கு
  6. நெல்லை உங்களின் கருத்துகளையும் ஏற்கிறேன். இதையும் நான் யோசித்துப் பார்த்தேன்...இங்கு கீதாக்கா, ஜீவி அண்ணா, நீங்க எல்லாரும் சொல்லிருக்கும் கருத்துகளை எல்லாம் எனக்கு ஒவ்வொரு ஆங்கிளாகக் கதையை யோசிச்சப்ப வந்தது. அப்ப எனக்கு என்ன தோன்றியதுனா..

   இப்ப நீங்க சொல்லியிருக்கும் இடத்தில் உள்ள ஒரு கருத்தை நான் சொல்லிருக்கிறேன் அப்பாவிடம் சொல்லியிருக்கலாமே அவர் ஃப்ராங்காகக் கேட்கும் போது...

   எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் கதாசிரியர் இங்கு சில விஷயங்களைக் க்ளாரிஃபை செஞ்சிருக்கலாமோனு...கொஞ்சம் ஜெனியின் கேரக்டரை...

   அவர் எந்த அர்த்தத்தில் படைத்தார் என்று, ஸ்ரீராம் சொல்லியபடி இங்கு வந்து கருத்துகளில் கலந்து கொண்டால் தெரியவரும். நன்றாகவும் இருக்கும்.

   அன்று குமாரின் கதைக்கு அவர் குமாரோடு நிறைய விவாதங்கள் செய்திருக்கிறார்...அப்படி இப்ப அவர் கதைக்கு இங்கு வரும் கருத்துகளுக்கு அவர் வந்தால் நன்றாக இருக்கும்...

   இப்படி எனக்கும் பல விதங்களில் பல ஆங்கிளில் இக்கதைக்குக் கருத்து தோன்றியதுதான்...

   கொஞ்சம் பிஸி இனி மாலைதான் வர முடியும். ஒரு பணி செய்து கொண்டிருக்கிறேன்....அப்புறம் வருகிறேன்...நல்ல விவாதங்கள்...நெல்லை

   கீதா

   நீக்கு
  7. //இங்கு பெண், தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறவனிடம் தன்னை திருமணத்துக்கு முன்னால் இழந்து, காதலனையும் பறிகொடுத்தாள்.

   எது விபத்து? எது தவறு? ஒரு அளவுகோல் இல்லையா இதற்கு?// இங்கு முக்கியமாய்க் கவனிக்க வேண்டிய விஷயம் அந்தக் காதலனுக்கு ஏமாற்றும் எண்ணம் இல்லை என்பதும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்னும் நம்பிக்கை இருந்ததும் தான். அத்து மீறல் தான் என்றாலும், தெரிந்தே செய்தாலும் அந்தப் பெண் ஏமாறவில்லை. காதலன் இறந்து விட்டான். அவன் நினைவில் திருமணமே செய்து கொள்ளாமல் எட்டு ஆண்டுகளும் கடந்திருக்கின்றன. அதன் பின்னர் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளப் போகிறவனிடம் மட்டுமாவது உண்மையைச் சொல்ல நினைக்கிறாள். சொல்லவும் செய்கிறாள். அதை ஏற்கும் பரந்த மனம் ஆண்களிடம் இல்லை/இருக்காது! அவங்க மட்டும் எதானாலும் சொல்லாமல் மறைப்பாங்க! பின்னால் தெரிந்தாலும் அலட்சியமாகக் கடந்து போவாங்க! ஆனால் உண்மையைச் சொல்லும் பெண்ணை சந்தேகப்படுவாங்க! அப்பாவிடம் ஏன் சொல்லலை என்றெல்லாம் கேட்பாங்க? அப்பாவா கல்யாணம் செய்துக்கப் போறார்? இந்தப் பெண் தானே! அதனால் தன்னைப் பெண் பார்க்க வருபவனிடம் உண்மையைச் சொல்கிறாள். தொடர்ந்து ஒரு ஆணோடு தொடர்பு வைத்துக் கொண்டிருந்து விட்டுப் பின்னர் தவிர்க்க முடியாமல் கல்யாணத்துக்கு ஒத்துக்கலையே! ஒருவனைக் காதலித்தாள்/திருமணம் வரை போனது/ விதி வசத்தால் இருவரும் இணைந்தார்கள்/ அதை விட மோசமான விதி விபத்து என்னும் உருவில் அவர்களைப் பிரித்தது. இதற்கு அந்தப் பெண் எப்படிப் பொறுப்பாவாள்?

   நீக்கு
  8. ,
   //'இப்படி நடந்தது. என் பெற்றோருக்கும் தெரியாமல் மறைத்துவிட்டேன். அவன் உயிரோடு இருந்தால் அவனைத்தான் திருமணம் செய்திருப்பேன். அவன் இல்லை என்பதால், உனக்கு வாய்ப்பு' என்றுதானே சொல்வதாக அர்த்தம்.// இது போன்ற அர்த்தமற்ற கற்பனைகளைச் செய்வதை விட அவன் இருந்திருந்தால் இப்போது பெண் பார்க்கும் வைபவமே நடந்திருக்காதே! இருவருக்கும் திருமணம் ஆகியே எட்டு வருடம் ஆகி இருந்திருக்குமே! இவ்வளவு வருஷம் ஒழுக்கத்தோடு ஒரே காதலன் நினைவில் இருந்தவள், இப்போது பெற்றோருக்காகத் திருமணம் என்னும் பந்தத்தில் ஈடுபடும் போது தன்னைப் பற்றிய உண்மையை மறைக்காமல் சொல்கிறாள். இதை அவள் சொல்லி இருக்கவே வேண்டாம். எவருக்கும் தெரியப் போவதில்லை. சம்பந்தப்பட்டவனே உயிரோடு இல்லை! நடந்தது என்னமோ இருவருக்கு மட்டுமே தெரியும்! அப்படி இருக்கும்போது என்றோ நடந்த தவறை மறைக்காமல் சொல்லிவிட்டுத் தன்னை ஏற்குமாறு கேட்கும் பெண்ணை மறுப்பவனை எதில் சேர்ப்பது?

   நீக்கு
  9. //நல்ல குணம் உடையவன், அவனுடைய பெற்றோரிடம் 'வேணாம்மா இந்த சம்பந்தம்... எனக்கு அவ்வளவாக இஷ்டமில்லை' என்று நாசூக்காகச் சொல்லிவிடுவான்.// மாட்டான். இதைத் தங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும் எனச் சொல்லி அந்தப் பெண்ணை மணந்து கொள்ளச் சம்மதம் சொல்லுவான். சந்தேகப்பட மாட்டான்.

   // பொதுவாக மற்றவர்கள், 'என்னம்மா...யார் எவர் என்று பார்க்காம பெண் பார்க்க கூட்டிவந்துவிட்டீர்கள்... அந்தப் பெண் அடுத்த ஆளைத் தேடுகிறாள்' என்றுதான் சொல்வார்கள். மோசமானவர்கள், அந்த இடத்திலேயே, அவள் பெற்றோரிடம் சண்டைபோட்டு எழுந்துவருவார்கள்.// எப்படி அடுத்த ஆளைத் தேடுவதாக ஆகும்? எட்டு வருடமாகத் தேடினாளா? அலைந்தாளா? அவளைப் பற்றி அவதூறாக யாரும் பேசினார்களா? திருமணம் செய்து கொள்ளாமல் நாட்களைக் கடத்துவது ஒன்றே அவள் மீதுள்ள குற்றம்/குறை எல்லாம். அதுவும் காதலன் நினைவில்! இப்படி ஒருத்தனையே நினைத்து எட்டு வருடம் கடந்தவளுக்கு மிச்சம் வருடங்களைக் கழிப்பது கஷ்டமே இல்லை.எனினும் பெற்றோருக்காகத் திருமணம் செய்துக்கிறேன் என்றவள். தன்னைக் குறித்த உண்மையை, தனக்கு மட்டுமேதெரிந்த ஒன்றை முன் பின் தெரியாதவனிடம் பகிர்கிறாள் என்றால்! அந்தப் பெண்ணின் நேர்மைக்கும், நியாய உணர்வுக்கும்,அவள் தூய்மைக்கும் இதைவிடச் சான்றே வேண்டாம்.

   நீக்கு
  10. நானும் தான் ஸ்ரீராம்...

   நீக்கு
  11. மாலை வாருங்கள்.. மற்ற மறுமொழிகள் தாருங்கள்..

   நீக்கு
  12. வருவார் என நாம் பதிவினிலிருப்போம். வந்தது வருவார் பதிலும் தருவார்...

   நீக்கு
 6. துரை வேலை மும்முரத்தில் இருக்காரோ? அனைவருக்கும் வணக்கமும், நல்வரவும் வைச்சுக்கறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்... துரை ஸாரை இன்னும் காணோம்.

   நானும் உங்களையும், மற்றும் நம் நண்பர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்கிறேன்.

   நீக்கு
  2. இப்பவும் வரலையா துரை அண்ணா? என்னாச்சு?

   கீதா

   நீக்கு
 7. எழுத்தாளர் முற்றிலும் புதியவர். ஆனாலும் மன உணர்வுகளை நன்றாகப் பிரதிபலித்துள்ளார். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா... இன்றைய எழுத்தாளர் பற்றிய குமாரின் அறிமுகத்தையும், நண்பர் நௌஷாக்கானின் புகைப்படத்தையும் இப்போது இணைத்துள்ளேன். இவர் ப்ரதிலிபியில் தொடர்ந்து கதை எழுதி வருபவர் மட்டுமல்ல, பல புத்தகங்களும் வெளிட்டிருப்பவர்.

   நீக்கு
  2. ஆமாம் குமாரின் தளத்தில் இவரைப் பற்றிய விவரங்கள் இருக்கின்றன.

   ஸ்ரீராம் இப்ப நீங்களும் இணைச்சுட்டீங்க....

   ஆமாம் கதை எழுதுவதில் செம ஆர்வம்னு தெரிகிறது!! அவருக்கு வாழ்த்துகள்.

   ஸ்ரீராம் மற்றொன்றும் நினைவுக்கு வருது. குமார் ஒரு பெண் தன் கணவனுக்காகக் காத்திருக்கும் கதையில் கடைசியில் நீங்களும் குமாரும் கருத்துகள் பரிமாறிக் கொண்டிருந்தீங்களே அதுல கூட குமார் அவரது நண்பர் ஒருவர் அக்கதை குறித்து விவாதம் செய்ததாகச் சொல்லி அவரும் கதைகள் எழுதுவார் என்று சொல்லிட நீங்களும் அவர் கதையை கே வா போ வுக்கு அனுப்பக் கேட்டிருந்தீங்களே. அந்த நண்பர்தானோ இவர்?!!!!

   கீதா

   நீக்கு
  3. ஆமாம் கீதா... அவரேதான். அப்புறம் அவருக்கு என் மெயில் ஐடி கொடுக்கச்சொல்லி "கேட்டு வாங்கிப் போட்"டேன்!!!

   நீக்கு
  4. ஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ மீக்கும் நினைவுத்திறன் இருக்கே!! நல்லது(தே) நினைவில் இருப்பது ஜந்தோச்சமா இருக்கு....

   சூப்பர் ஸ்ரீராம்!! குமார் விமர்சனம் மூலம் அறிமுகப்படுத்துவார். நீங்கள் எழுத்தாளர்களை இங்கு எங்களுக்கு அவர்களின் கதைகள், எழுத்துகள் மூலம் அறிமுகம் செய்வதற்கு நன்றி..சிறப்பும் கூட

   கீதா

   நீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 9. ஜெனியின் காதல் டையிரி படித்து வேதனைதான் மிஞ்சியது.
  என்ன சொல்வது!

  பல சினிமாக்கள் நினைவுக்கு வந்து போனது.

  ஜெனியை ஏற்றுக் கொள்ளும் நல்ல மனிதன் கிடைக்கட்டும் என்று தான் நினைக்க தோன்கிறது.

  பதிலளிநீக்கு
 10. முதல் காதல் கதை படித்த போது அகிலனின் "சித்திரபாவை" நினைவுக்கு வந்தது.

  நல்லவேளை அந்த கதையின் கதாநாயகி எடுத்த முடிவு மாதிரி எடுத்து கஷ்டபடவில்லை என்று ஆறுதல் அடைந்தேன்.

  இரண்டாவது கதை படித்த போது கதாநாயகன் மரணம்! ஜெனிக்கு அதன் பின் விளைவுகள் வேறு மாதிரி வைக்காமல் விட்டது ஆறுதல்.

  பதிலளிநீக்கு
 11. இரண்டாவது கதை மெளனராகம் கார்த்தி, ரேவதியை நினைவூட்டியது.

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் வணக்கம்....

  அன்பின் நௌஷாத் கான் அவர்களுக்கு நல்வரவு...

  வாழ்க நலம்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை செல்வராஜூ ஸார்... நண்பர் நௌஷாதை நீங்களும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
   திரு. நௌஷாத் அவர்களை இப்பொழுது தான் அறிகிறேன்..

   நீக்கு
 13. >>> இரண்டாவது கதை மெளனராகம் கார்த்தி, ரேவதியை நினைவூட்டியது...<<<

  பெண்களுக்கு இதுபோன்ற சோகங்கள் நேரவே கூடாது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை அண்ணா...அட ஆமாம்ல! இதில் நாயகன் கார்த்திக்!!!!!!!!!

   கீதா

   நீக்கு
 14. வணக்கம் நண்பர்களே. வயது உணர்வு உண்மை யாவும் கொட்டிக் கிடக்கிறது. ஜெனியைப் புரிந்து கொள்ளவும் கிடைப்பான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் காமாட்சி அம்மா... மொபைலில் பழகியதும் உங்களுக்கு பின்னூட்டம் இடுவது கொஞ்சம் எளிதாகி இருக்கிறது என்று நினைக்கிறேன். சரியா?

   நீக்கு
 15. பதில்கள்
  1. இரண்டுநாளாகப் பழகுகிறேன். சும்மா இரண்டுலைன்.அவ்வளவுதான். அன்புடன்

   நீக்கு
 16. கார்த்திக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால்.....

  ?????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவன் புத்திசாலியாக இருந்தால், 'கம்' என்று இருந்துவிடுவான். திருமணமானபிறகு மனைவியை நன்றாக வைத்திருந்து, ஒரு நல்ல சமயத்தில் உண்மையைப் பகிர்ந்துகொள்வான் (அவள் ஏற்றுக்கொள்ளும் தருணம் பார்த்து).

   யாராவது, திருமணத்துக்கு முன்பு, உண்மையைச் சொல்கிறேன் என்ற போர்வையில் தன்னைப் பற்றி மு ழு வ து ம் சொல்லுவார்களா? இல்லை சொல்லித்தானிருக்கிறார்களா?

   நீக்கு
  2. // காதல் இருவருக்கும் பொதுவானது என்பதை என் சமூகம் எப்போது உணருமோ...//

   இந்த வரி என்னை அவ்வாறு யோசிக்க வைத்தது...

   // (அவள் ஏற்றுக்கொள்ளும் தருணம் பார்த்து) //

   அந்த 'அவள்' ஒரு வேளை 'ஜெனி' போன்று இருந்து விட்டால்...?

   அவளின் கணவன், மாமனார், மாமியார், அப்பா, அம்மா என பலரும் சொல்லும் வியாக்கியானம் :-

   ஆண் கெட்டால் சம்பவம்
   பெண் கெட்டால் சரித்திரம்

   நீக்கு
  3. //யாராவது, திருமணத்துக்கு முன்பு, உண்மையைச் சொல்கிறேன் என்ற போர்வையில் தன்னைப் பற்றி மு ழு வ து ம் சொல்லுவார்களா? இல்லை சொல்லித்தானிருக்கிறார்களா?//

   ​நெல்லை... எனக்கு நெருங்கிய ஒருவரின் கதை எனக்குத் தெரியும். சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்!

   நீக்கு
  4. //அவளின் கணவன், மாமனார், மாமியார், அப்பா, அம்மா என பலரும் சொல்லும் வியாக்கியானம் :-//

   DD... ஆம்... காலம் காலமாக சொல்லும் சம்பிரதாய வியாக்கியானங்கள்.

   நீக்கு
  5. ஒரு நல்ல சமயத்தில் உண்மையைப் பகிர்ந்துகொள்வான் (அவள் ஏற்றுக்கொள்ளும் தருணம் பார்த்து). //

   ஹா ஹா ஆஹா.....நெல்லை இதுக்கு என்ன சொல்ல? வெரி வெரி வெரி ரேர். அப்படி நல்ல புரிதல் இருவருக்குள்ளும் இருந்துவிட்டால் தான் நடப்பதற்கு சான்ஸ் உண்டு. பாஸ்ட் இஸ் பாஸ்ட் என்று சொல்பவர்கள் இருந்தால் மட்டுமே.

   நல்ல தருணம் என்று சொல்லலாம் ஆனால் அந்தத் தருணம் என்பதே ஷண நேரம் தான் அது வேறொரு சமயத்தில் விஸ்வரூபம் எடுக்கலாம்...சந்தேக ஜந்துவாக மாறலாம்...கோபம் வரும் போது நல்ல தருணத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது உள்ளிருப்பது வெளி வரலாம்....எரிமலையாகக் கூட...

   காதலாக இருந்தாலும் சரி பார்த்து செய்யப்பட்டக் கல்யாணமாக இருந்தாலும் சரி புரிதல் என்பது இருவருக்கும் இருந்தால் மட்டுமே சாத்தியம். அதில்தான் அன்பு வெளிப்படும்.

   அட்ஜஸ்ட் செய்து வாழ்வதும் கூட அன்பினால் அட்ஜஸ்ட் செய்வதற்கும், சமூகம், குடும்பம், கடமை என்று அட்ஜஸ்ட் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. இரண்டாவதில் அந்த அட்ஜஸ்ட்மெண்டிற்கு மனம் பக்குவம் மிக மிக முக்கியம். பக்குவமாக இருந்தால் அட்ஜஸ்ட் செய்வது கூடப் பிரச்சனை ஆகாது இல்லை என்றால் அட்ஜஸ்ட் செய்வது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் கொந்தளிப்பு வரலாம்.

   எனவே அட்ஜஸ்ட்மெண்டிற்கும் கூட நல்ல புரிதல், அன்பு இருந்தால் வாழ்வு சுகம், சௌக்கியம்.

   கீதா

   நீக்கு
  6. அவளின் கணவன், மாமனார், மாமியார், அப்பா, அம்மா என பலரும் சொல்லும் வியாக்கியானம் :-

   ஆண் கெட்டால் சம்பவம்
   பெண் கெட்டால் சரித்திரம்//

   டிடி இதிலும் கூட நீங்க பெண்களை மட்டும் ஹைலைட் செஞ்சுருக்கீங்களே ஹா ஹா ஹாஹ் ஆ...

   வியாக்கியானங்கள் ஹூம் என்ன சொல்ல....இதுதான் ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் காலம் காலமாய்...போரடிச்சுப் போச்சு.....

   கீதா

   நீக்கு
 17. கதையை நவுஷத்கான் நன்றாக எழுதியிருக்கிறார்...ஜெனியின் எதிர்பார்ப்பு நியாயமில்லாது இருந்தபோதிலும். இப்படி நிறைய நடக்கின்றன. கதாசிரியருக்குப் பாராட்டுகள். முதல் முறை எபியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

  ஸ்ரீராமுக்கும் பாராட்டு... புதிய கதாசிரியர்களை எபிக்கு அழைத்துவருவதற்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //.ஜெனியின் எதிர்பார்ப்பு நியாயமில்லாது இருந்தபோதிலும்// இதை விட ஒருதலைப்பட்சமான மோசமான கருத்து இருக்க முடியாது! ஜெனி மறைத்துத் திருமணம் செய்து கொண்டிருந்தால் தான் அது அநியாயம்! அக்கிரமம்! அவள் எதிர்பார்ப்பில் என்ன குறை?இவ்வுலகில் எல்லா ஆண்களுமேவா ஒரே மாதிரி நினைப்பவர்கள்?அதையும் தாண்டி ஜெனியில் நல்ல மனசைப் புரிந்து கொள்பவன் வராமலா போவான்? காதலனின் நினைவில் உயிர் வாழ்ந்தவள், இப்போது அவளுக்கு நாம் நல்ல வாழ்க்கை கொடுத்தால் அவள் முழு அன்பும் நமக்குக் கிடைக்கும் என நினைப்பவன் ஒருவன் வருவான்.ஜெனியின் வாழ்வு மலரும்.

   நீக்கு
  2. சிக்கலான கேள்விகள். பொது நியாயங்கள் தனி மனித உணர்வில் அடிபட்டுப் போகலாம்!

   நீக்கு
  3. கீசா மேடம்... ஒரு பெண்ணின் பார்வையில் உங்கள் கருத்துகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தப் பெண் உத்தமி என்ற ரேஞ்சுக்குச் சொல்வதுதான் சரியாத் தெரியலை. ஏதோ..தவறு நேர்ந்துவிட்டது. கெட்ட கனவாக அந்தப் பெண் அதனை மறந்துவிட்டு-அனேகமா மறந்துவிடுகிறாள், வாழ்க்கையை புதிதாகத் தொடர்வதுதான் அனைவருக்கும் நல்லதான விஷயம். இதை யாருக்கு எடுத்துச் சொல்லி என்ன காணப்போகிறாள்? அதனால் யார் அவளுக்கு 'நேர்மையானவள்' என்று பட்டம் தரப்போகிறார்கள்?

   'தவறு செய்யக்கூடிய நேரம்' வாய்க்கும்போது அதில் ஈடுபடாமல் விலகுபவனே நல்லவன்/ள். நான் வேலைபார்த்த ஆரம்ப காலத்தில் (சேலம்/மேட்டூர்), ஒரு செக்‌ஷனில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதைக் குறையாகச் சொல்லிப் பேசிக்கொண்டிருந்தோம் (நான் வயதில் சிறியவன்). அப்போ ஒரு மேனேஜர் லெவலில் இருப்பவர் என்னிடம் சொன்னார், 'நீ அந்த இடத்தில் இருந்து அந்த மாதிரி வாங்காமல் இருக்கும்போதுதான் மற்றவர்களைப் பற்றிச் சொல்லலாம். வெளியிலிருந்து பேசுவது மிகவும் சுலபம்' என்றார்.

   இதனால்தான் இதற்கு முந்தைய ஜெனெரேஷனில் 'பெண்ணைத் தொட்டுப் பேசுவதே தவறு' என்று நாம் மூடி வளர்க்கப்பட்டோம்னு நினைக்கிறேன். உங்க ஊர்லயே சும்மா ஏதேனும் பெண்ணைத் தொடர்ந்து போனாலே, சம்பந்தமில்லாதவர்களே கேள்வி கேட்பார்கள் இல்லையா (மதுரைல..இது பல வருடங்களுக்கு முந்தைய மதுரையாகவும் இருக்கலாம்)

   இந்த மாதிரி தவறு செய்ததே 'அநியாயம்'தான். ஏனென்றால் வளர்த்த பெற்றோரின் அனுமதி இல்லை. வேற்று மதத்தைச் சார்ந்தவுடனான காதலைச் சொல்லத் துணிவில்லை. தன் பல வருடக் காதலை மறைத்திருக்கிறாள். தைரியமாக அவனை யாரும் இல்லாதபோது தன் வீட்டுக்கு வரவழைத்திருக்கிறாள். அவங்களைக் கழட்டிவிட்டுவிட்டு நடந்த தவறு. திடுமென அடுத்த வாரம் தன் காதலைச் சொல்லி அவர்களது சம்மதத்தைப் பெறுவாளாம். அவங்க பெற்றோரும் 'எப்படா இவள் யாரையேனும் காதலிக்கிறேன்' என்று சொல்வார் என காத்திருப்பார்களாம்.

   'இது தப்பு இல்லை. த வ று'. சரி.... அந்தப் பையன் இறந்துவிட்டான். அப்போது தன் பெற்றோரிடமாவது உண்மையைச் சொல்லியிருக்கலாமே. பெற்றோரிடம் தான் 'உத்தமப் பெண்' என்ற பெயர் வாங்கணும். அவங்க ஆறுதல் அடைவதற்காவது 8 வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லணும். அவங்களும் உலக மகா அப்பாவியாக 'பையன் தேடி'க் கொண்டுவருவார்கள். அந்தப் பையனிடம் தனிமையில் 'நான் இப்படியாக்கும் அப்படியாக்கும்.. நேர்மையானவள். நல்ல மனசு உடையவள். சரியா.. திருமணம் ஓகேவா? இனிமேல் மிக அன்புடன் இருப்பேன்' என்றெல்லாம் சொன்னவுடன், அந்த 'நல்ல மனசுக் காரனும்', 'அடடா.. இவ்வளவு உத்தமப் பெண்ணா நீ... உடனே சரின்னு சொல்லிடறேன்' அப்படீன்னு சொன்னால், அந்தப் பையன் 'உத்தம ஆத்மா. இந்த எதிர்பார்ப்பு நியாயமில்லைனு சொன்னா 'மோசமான ஒருதலைப் பட்சமான கருத்து'ன்னு சொல்லிடறீங்க.

   தவறு செய்த யாருக்கும் மன்னிப்பு உண்டு. அவள் அதனை வெளிப்படையாக பெற்றோரிடம் சொல்லி மன்னிப்பு பெற்றுக்கொண்டு, பிறகு தன்னைப் பெண் பார்க்க வருபவனிடமும் உண்மையைச் சொல்லி, விசாலமான மனதுடையவனைத் திருமணம் செய்துகொண்டால் அவள் வாழ்வு மலரும். அப்படி இல்லாமல், வருபவனிடம் மட்டும் உண்மையைச் சொல்லி அவன் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்தபிறகு, அவன் 'அப்படி இப்படி' இருந்தால், இவள் எப்படி வாயைத் திறந்து அவன் தவறைச் சொல்லமுடியும்? அவன் அடுத்து கேட்கமாட்டானா? 'என்னவோ நீ உத்தமியாட்டம்.. சொன்னது ஒன்று நடந்தது பலவா'ன்னு யாருக்குத் தெரியும்? அது ஒரு பையனா இல்லை பல பையன்களான்னு யாருக்குத் தெரியும்னுலாம் கேட்கமாட்டானா?

   உடனே 'மேல் சாவனிஸ்ட்' என்று சொல்லி பலர் சண்டைக்கு வருவீர்கள். ஆனால் கதையின் பெண் நடத்தைக்கு இப்படியும் விமர்சனம் வைக்கலாம் இல்லையா?

   நீக்கு
 18. நிச்சயம் பத்தோடு பதினொன்று என்று படித்து விட்டுப் போகக் கூடிய கதை இல்லை தான். இருந்தாலும் இந்த மாதிரியான கதைகளை எழுத முயலும் பொழுது அவர்கள் நடவடிக்கைகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

  இந்தக் கதையில் அவர்கள் தனிமையில் நடந்து கொண்டவை தான் முக்கியம்
  என்பது முக்கியமானால் அவர்கள் பாத்திரப் படைப்பில்-- சிறுகதையே ஆனாலும்-- கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

  எது எப்படியிருந்தாலும் வழக்கமான கதைகள் போலில்லாமல் ஒரு புதுப் பாதைக்கு வழிபோட்ட கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. //யாராவது, திருமணத்துக்கு முன்பு, உண்மையைச் சொல்கிறேன் என்ற போர்வையில் தன்னைப் பற்றி மு ழு வ து ம் சொல்லுவார்களா? இல்லை சொல்லித்தானிருக்கிறார்களா?//

  அப்படி அவளைச் சொல்ல வைத்ததில் தான் கதாசிரியர் நம் மனதில் நிற்கிறார் நெல்லை..

  அவள் சொல்ல வேண்டும், சொன்ன பிறகு ஏற்றுக் கொள்பவருக்குத் தான் மாலையிட வேண்டும் என்ற கதை நாயகியின் முடிவு தான் இந்த மாதிரி கதைகளுக்கு உயிர் நிலை. கதாசிரியரின் இந்த படைப்புக்கு அஸ்திவாரமே அவளை அப்படிச் சொல்ல வைத்தது தான்.

  சொல்லவில்லை என்றால் இந்தக் கதையைப் பற்றி நம் அபிப்ராயம் வேறு விதமாகப் போயிருக்கும்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி அவளைச் சொல்ல வைத்ததில் தான் கதாசிரியர் நம் மனதில் நிற்கிறார் //

   அதே அதே தான் இக்கதையில் முக்கியமே அதுதான்!!!

   மற்றபடி கொண்டு போயிருந்தால் சாதாரணமான பொதுவாக எழுதப்படும் கதையாக இருந்திருக்கும்...

   //சொல்லவில்லை என்றால் இந்தக் கதையைப் பற்றி நம் அபிப்ராயம் வேறு விதமாகப் போயிருக்கும்.//

   என் மனதில் இவை அப்புறம் தோன்றினாலும் அதனைச் சரியாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை ஜீவி அண்ணா அழகா சொல்லிட்டீங்க!

   கீதா

   நீக்கு

 20. //இந்த உலகத்துல எல்லா ஆண்களுக்கும் ஒரு ஆட்டோகிராப் இருக்கு அதை வெளியே சொன்னாலும் இரசிக்கறாங்க, ஆராதிக்குறாங்க... ஆனா ஒரு பொண்ணோட ஆட்டோகிராப் அவ சாகற வரைக்கும் அவ மனசோட கிடந்து அவ தினம் தினம் நரக வேதனை அனுபவிக்கனும், இல்லைன்னா என்னை மாதிரி வெளிப்படையா சொல்லுறேன்னு அசிங்கப்பட்டு முதிர் பெண்ணாய் கல்யாணம் பண்ணாமதான் வாழணும் ..


  காதல் இருவருக்கும் பொதுவானது என்பதை என் சமூகம் எப்போது உணருமோ....//

  நௌஷாத் கான் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று இந்த கதையை எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன்.
  பதிலளிநீக்கு
 21. பொதுவாகவே சந்தர்ப்பங்கள் கிடைத்தால் ஆண்கள் தவறுச்டெய்வார்கள் என்பதே என் புரிதல் இங்கே வேறு விதமாக பெண்களும் அதுபோல்தான் என்று நினைக்க வைக்கிறார் கதாசிரியர் கதையின் கருத்து ஆசிர்யரின் கற்பனை தவறுசரி என்பதே இல்லை வாழ்த்துகள் வித்தியாசமான கற்பனைகள் உதிக்கட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண் தவறே செய்யவில்லை! அவள் என்றோ நடந்த தவறை நியாயப்படுத்தவும் இல்லை. அதைச் சொல்லி இதை மன்னித்து மறந்து ஏற்றுக்கொள்ளும் ஓர் உண்மையான ஆணைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். பெண்ணின் கோணத்தில் இருந்து பாருங்க ஜிஎம்பி சார். இதே ஜெனிக்குக் காதலனுடன் திருமணம் ஆகி இருந்து முதலிரவும் முடிந்த பின்னர் கணவன் இறந்திருந்தால்? என்ன நடக்கும்? அதே தான் இப்போதும்! திருமணம் நடக்கவில்லை என்பது தான் குறை! மற்றபடி ஜெனியில் நடத்தையில் களங்கமே இல்லை.

   நீக்கு
 22. சில தினங்களுக்கு முன் இப்படித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்...

  ஆனாலும் என் மனம் ஒப்பவில்லை...

  85/86 களில் சிந்துபைரவி, சின்னவீடு , முதல் மரியாதை என்று எல்லை கடந்த/ கடக்க முயற்சிக்கும் ஆண்கள் பற்றி திரைப்படங்கள் வந்ததை யாரும் ம்றந்திருக்க மாட்டோம்...

  அவையெல்லாம் எந்த விதத்தில் சரி?...
  ஏன் மக்கள் பெருத்த வரவேற்பு அளித்தார்கள்?...

  அந்தக் கதைகளில் நாயகியின் போக்கு இப்படி இருந்தால் எப்படியிருக்கும்?...

  என்றெல்லாம் நண்பர்களுடன் விவாதித்து இருக்கிறேன்....

  ஆனால் அதெல்லாம் இன்றைக்குப் பேச முடியாது...

  கால சூழ்நிலை கலாச்சாரத்தைக் கெடுத்து விட்டோம்...

  கூடிப் பிரிந்தாலும் மனம் மாறாது சகுந்தலையை ஏற்றுக் கொண்ட துஷ்யந்தனையும்

  கொடுத்த வாக்கை மீறி மடை மாறிப் பாய்ந்து சாபம் பெற்ற யயாதியையும்

  தகுதியல்லாத காலத்தில் மந்திர உபதேசம் பெற்று ஆர்வக்கோளாறினால் பிள்ளையைப் பெற்றுக் கொண்ட குந்தியையும்

  கருத்தினுள் கொள்ளுமாறு பயிற்றுவித்தது நமது பாரதம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இளைய சமுதாயம் கெட்டு போனதற்கு ஒரு காரணம் :-

   தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே...
   தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால் - காதல் கண்மணி...
   தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்...
   இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்...
   தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்...
   ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்...
   ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்...
   ஒரு பொண்ணுக்கு 2பேர் தாலி கட்ட - திருடா திருடா...
   தாலி கட்டிவிட்டு புருஷனுக்காக போராடினால் - ரோஜா...
   இன்னொருத்தர் மனைவிக்கு தாலி கட்டினால் - தளபதி...

   ரத்னம்...! எங்க மணிரத்னம்...!

   நீக்கு
  2. ஊரைக் கலக்கியடிக்கும் காற்றுக்குள் இவன் பாட்டுப் பாட,

   அதை எட்டுத் தெருவுக்கு அப்பால் அவள் மட்டும் கேட்டு விட்டு குலுங்கக் குலுங்க ஓடி வந்து அவன் அவனாக இவள் இவளாக வாழ்ந்து காட்டிய பம்பாய் என்ன பாவம் செய்தது?...

   பட்டியலில் விட்டுட்டீங்களே!...

   நீக்கு
  3. அந்த ரௌடியை இந்த ரௌடி அடித்தே கொன்று விட்டு அவன் பொண்டாட்டிக்கே தாலி கட்டுறது.. ன்னா...

   எப்படிங்க அவனோட குடும்பம் நடத்துறது?...

   வாலி கூட சுக்ரீவனை அடிச்சு தொரத்திட்டுத் தான் அவனோட மனைவிய அபரித்துக் கொண்டான்..

   அந்த தப்புக்காகத் தான் ராம பாணத்தால் அடிபட்டுச் செத்தான்...

   நீக்கு
  4. //அவன் அவனாக இவள் இவளாக வாழ்ந்து காட்டிய...//

   இதற்கு மேல் என்ன சொல்ல...? அருமை ஐயா... ஆனாலும் :-

   நாசர் அவர்களுக்கு என்ன கதாபாத்திரம்...? (வேசம்)

   தின்னு ஆனந்த் அவர்களுக்கு என்ன கதாபாத்திரம்...? (வேசம்)

   அவர்கள் யார்...? ஜனநாயக நாடு என்பதை இயக்குனர் அந்தந்த கதாபாத்திரத்தின் மூலம் சொல்லி இருப்பார்... அதனால் அதை தவிர்த்து விட்டேன்...

   நீக்கு
  5. ஆனால், ஜனநாயக நாட்டில் அந்த ரெண்டு பேருக்கும் வேலை இல்லை ந்னு... தானே -

   கடைசியில தீக்கிரையாக்கிட்டார்...

   நீக்கு
  6. கதாநாயகிக்கு அப்பாவாக நடித்தவர் கிட்டி அல்லவோ!....

   கதாநாகனின் அப்பாவுக்கும் அந்தப் பொண்னின் அப்பாவுக்குமாகப் போட்டது அந்தக் கருத்து...

   டின்னு ஆனந்த் யாரு?..
   நினைவில்லை...

   நீக்கு
  7. சரி... மிகவும் சரி... நம்நாடு இப்படித்தான் ஆகப் போகிறது...

   நீக்கு
  8. என்ன... இரண்டு பேரும் 'காற்று வெளியிடை' படத்தை விட்டுவிட்டீர்களே... அதில்தான் காதலியை, திருமணத்துக்கு முன் கர்ப்பமாக்கிவிட்டுப் பிரிவார் கார்த்தி. பிறகு குழந்தைலாம் பிறந்து அவ வளர்க்கும்போது வந்து சேர்ந்துகொள்கிறார். இன்னொருவர், கர்ப்பமாகியபிறகு, ஓரிரு வாரத்திலோ (அல்லது மறுநாளோ) டெலிவரி என்று இருக்கும்போது திருமணம் செய்துகொள்கிறார்கள்.

   இந்த மாதிரி கதையை நீங்களும் நானுமா குடும்பத்துடன் வந்து பார்ப்போம். ஒன்லி இளைஞர் இளைஞிகள். அதுனால அவங்களை கவருகிறமாதிரிதான் கதை.

   நீக்கு
  9. DD... அசத்தலான உதாரணங்கள்.

   அது சரி...

   நீண்ட நாட்களாகவே உங்களிடமும் கதை கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் பாடல்களோடு எழுதலாமா என்றும் கேட்டீர்கள். எழுதலாமே என்றேன். இன்னமும் எழுதவில்லை நீங்கள். சீக்கிரம் ஒரு கதை எழுதி கே வா போவுக்கு அனுப்புங்கள்.

   நீக்கு
  10. ஸ்ரீராம் சார், நினைவில் இருக்கிறது... ம்... அவகாசம் கொடுங்கள்...

   பல நாட்கள் கழித்து நாளை முதல் ஓட வேண்டிய நேரம் (வியாபார பயணம்)

   நீக்கு
 23. குந்திக்கு இப்படியாகும் என்பதை உணர்ந்திருந்தார் துர்வாசர் ..

  நிலைமையறியாத குந்தியின் செயல் பெரிய இடத்து விஷயம்..

  பின்னாளில் குற்ற வாளியாகிய பாண்டுவுக்கும் இளையவளாகிய மாதுரிக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையால் தெரிய வந்தபோது.. பெரிதாகப் பேசப்படவில்லை....

  இதிலிருந்து உணரவேண்டிய நீதி என்ன?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அன்றைக்கு ஒரு மேஜிக் நடந்தது .. எங்களுக்குள்ளே எங்களுக்கே தெரியாமல் எங்கள் கட்டுப்பாட்டை மீறி நானும் அவனும் ஒண்ணு சேர்ந்தோம்.
   உங்க பாஷையில சொல்லனும்னா கணவன் மனைவியா அந்த நாள் உடலாலே வாழ்ந்தோம் .. //

   நீதி = மேஜிக்...!

   ஹா.... ஹா... ஹா.... ஹா...

   நீக்கு
  2. நீதி = மேஜிக்!..

   உண்மைதான்...
   நீதி தேவன்/ தேவதை கண்களைக் கட்டிக் கொண்டிருப்பதாகத் தானே சொல்கிறார்கள்...

   கண்களைக் கட்டிக் கொண்டு செய்வதும் கண்களைக் கட்டி விட்டு செய்வதும்...

   ஆக , நீதிக்கும் மேஜிக்குக்கும் (அறிவுக்)கண்கள் தேவையில்லையோ!?....

   நீக்கு
  3. துரை ஸார்... ராஜ் டீவியில் இப்போது கர்ணன் படம்!

   நீக்கு
 24. ஆனால் இதையே பொழைப்பாக வைத்துக் கொள்ளச் சொல்லவில்லை நீதி நூல்கள்...

  பதிலளிநீக்கு
 25. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்....

  நவீனக் கல்வியில் இதெல்லாம் உணர்த்தப்படுவதே இல்லை...

  கற்றது நல்ல கல்வி எனில்
  தன்நெஞ்சே தன்னைச் சுடும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
   நிறைகாக்கும் காப்பே தலை

   ஐயா நீங்கள் சொன்ன குறளின் விளக்கத்தை அறிய முற்படுபவர்கள்(?), மேலே உள்ள குறளின் விளக்கத்தையும் அறிய முயல்வார்கள்(ளா...?)

   நீக்கு
  2. அன்பின் தனபாலன்....
   இதையெல்லாம் சொல்லப்போனால் வாலறுந்த நரிகளின் ஊளைச் சத்தம் காதைக் கிழிக்கும்...

   நீக்கு
 26. எனக்கென்னவோ, கதைக்கிற உங்கள் அனைவருக்கும் ஒரு ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் ஆவியில் வெளியான மெரினாவின் காதல் என்ன கத்தரிக்காயா நாவலைப் பார்சேல் செய்து படிக்கச் சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... அனுப்புங்கள் கிருஷ் ஸார்...

   நீக்கு
  2. இன்னும் யாருக்கெல்லாம் வேண்டும்? krishna04@gmail.com ஒரு மின்னஞ்சல் தட்டிவிடுங்கள்! கிடைக்கும்!

   நீக்கு
 27. பேசாம ஜெனி - அப்பா அம்மா கூட வேளாங்கண்ணிக்குப் போய் இருந்திருக்கலாம்....

  விபத்து தலை எழுத்து என்றிருந்தால் கை கால் உடைஞ்சதோட கார்த்திக் உயிர் பொழச்சி இருந்திருப்பான்...

  பொய்க்கு தலைவலின்னு சொல்லப் போக நெஜமாவே தலைவலி ஆகி விட்டது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், துரை, பிரார்த்தனை என்னமோ ஜெனிக்காகத் தானே! ஜெனியும் போயிருக்கணும். ஆனால் இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்னும் விதி இருந்ததால் போகலை! :))))

   நீக்கு
 28. // அன்று என்னவோ தெரியலை அவன் கண்களை பார்த்து கொண்டே
  இருக்கணும்னு தோணுச்சு, எல்லாரும் பொண்ணுங்களை உடலா தான்
  பார்க்கிறாங்க, மனசா பார்க்கிறது இல்லை ஆனா ஒரு பொண்ணு ஒரு ஆண் கிட்ட மனசை தான் பார்க்கிறா, அந்த மனசு ஒத்து போச்சுன்னா ஒரு ஆண் எப்படி பட்டவனா இருந்தாலும் தன்னுடைய உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் ஒரு பெண் முழுசா ஒப்படைச்சிடுவா...//

  கதையின் மொத்த அபத்தமே இது தான்...!

  அப்புறம் "மேஜிக்" மட்டும் நடக்கவில்லை என்றால்... ஒரு கதைக்கு கூட வாய்ப்பில்லை இந்த கதை...!

  பதிலளிநீக்கு
 29. ஆராதனா படம் நினைவுக்கு வந்தது. அன்பின் குமார் அவர்களின் தோழன் எழுதிய கதை போல இப்பொழுது நிறைய நடக்கிறது.
  அதில் இந்தப் பெண் வேறு விதமாகச் சிந்திக்கிறாள்.
  உண்மையுடன் நடக்க நினைக்கிறாள்.

  புதிய முயற்சிக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 30. முதலில் நௌஷத் கான் அவர்களை வருக வருக என்று வரவேற்று விடுகிறேன். எங்கள் ப்ளாகில் புதிய களம். எழுத்து நடையெல்லாம் ஓ.கே.தான்.ஆனால் சொல்லப்பட்ட விஷயம்..? காதல் வாழ்க்கையில் பெண்களுக்கு இருக்கும் சங்கடங்களை எழுத நினைத்திருக்கிறார் என்பது நல்ல விஷயம்தான். அதற்காக மரபு மீறலை நியாய படுத்தியிருக்க வேண்டாம்.

  பெண்களை பொறுத்த வரை மனம் காவலா? மதில் காவலா? என்பார்கள். அதீத நம்பிக்கையில் மனம் போன போக்கில் போய்விட்டு அதை சமூகம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது சரியா? பொள்ளாச்சி சம்பவம் போன்ற சம்பவங்களுக்கெல்லாம் அதீத நம்பிக்கையே காரணம்(உன்ன நம்பித்தானோட இங்க வந்தேன்... என்னும் பெண்ணின் கதறலை மறக்க முடியுமா?) பெண்கள் சுதாரிக்க வேண்டிய இடம் இது.

  இங்கே நெல்லை தமிழனின் கேள்வியை எடுத்துக் கொள்ள வேண்டும். //ஆண் இந்த மாதிரி நடந்து, இதனைத் தான் பெண் பார்க்கப்போகும்போது சொன்னால், அவன் நல்ல வேலை, நல்ல குணத்தோடு இருப்பவன், தெரிந்தவன் என்றால் அதனைப் பொருட்படுத்த மாட்டார்கள். இல்லைனா, எப்படி பெண் சம்மதம் தெரிவிப்பாள்?//

  இப்போது இருக்கும் இளைய தலைமுறை ஆண்கள், தான் மணந்து கொள்ளப் போகும் பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்னால் காதல் இருந்திருக்கக்கூடாது என்று நினைப்பதில்லை. திருமணத்திற்குப் பிறகு அவள் யோக்கியமாக இருந்தால் போதும் என்றுதான் நினைக்கிறர்கள். அதனால் ஜென்னிக்கு கணவன் கிடைப்பது அதனை கடினம் இல்லை என்றே தோன்றுகிறது.

  கதாசிரியர் ஆட்டோகிராப் படத்தை உதாரணமாக காட்டியிருக்கிறார். அந்தப் படத்தில் கதாநாயகனுக்கு இருந்தது
  கால்ஃப் லவ் மற்றும் முறை மீறா காதல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் நிறை பாராட்டுகள் பானுமா.
   நான் சொல்லப்போனால் ஏழு தலைமுறைக்கு முந்திய
   பதிலாகிவிடும்.
   பெண்களே பத்திரமாக இருக்க வேண்டும்.

   நீக்கு
  2. //பெண்களை பொறுத்த வரை மனம் காவலா? மதில் காவலா? என்பார்கள்.//

   பெண்களுக்குத் தான் சுமை; ஆண்கள் போய்க்கொண்டே இருப்பார்கள் என்ற எச்சரிக்கை உணர்வில் இது சரியே.

   ஆனால் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஸ்பெஷல் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும் ஆண்கள் வகுத்த சட்டங்கள் இவை என்றால் ஏற்பதற்கில்லை பானும்மா.

   இது விஷயத்தில் ஒரு அடிப்படை உண்மை உண்டு.

   திருடன் இல்லை என்றால் திருட்டு இல்லை.

   திருடன் இருப்பான்; ஆனால் திருட்டு இருக்கக்கூடாது என்பது சரியில்லை. உங்கள் பொருள் திருட்டுப் போகாமல் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். உஷார்! என்பதையும் ஏற்பதற்கில்லை.

   திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
   என்ற பட்டுக்கோட்டையாரின் நீதி எல்லா இடங்களிலும் பொருந்தக் கூடியதே.

   நீக்கு
 31. கதை மிக நன்றாக இருக்கிறது. வித்தியாசமான கதை. பெண் ஜெனி உண்மையைச் சொல்லி திருமணம் செய்துகொள்ள நினைக்கிறாள். தவறில்லை ஆனால் அவளை ஏற்றுக் கொள்ளும் ஆண்?

  எத்தனையோ திருமணங்களில் திருமணத்திற்குப் பிறகும் கூட கணவன் / மனைவி வேறு தொடர்பு வைத்துக் கொண்டு அதுவும் ரகசியமாகச் சிலர் என்று போவதும் நடக்கத்தான் செய்கிறது. எத்தனையோ பிரபலங்களின் மனைவிகள் தங்கள் கணவனின் நடத்தைகளை ஏற்றுக் கொண்டு வாழ்ந்திருப்பது போல் ஆண்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லைதான். இதில் ஜெனி உண்மையைச் சொல்ல நினைக்கிறாள் திருமணத்திற்கு முன்னரேயே. நல்ல விஷயம். இப்போது தனக்குக் கிடைக்கும் கணவனுடன் அன்பாக வாழ்வேன் என்றும் நினைத்துக் கொள்கிறாள். அவள் மனது தெரிகிறது.

  ஒன்றே ஒன்று தந்தை கேட்கும் போது இதைச் சொல்லியிருக்கலாமே என்று.

  பரிவை சே குமார் அவர்களின் தளத்தில் இவரைப் பற்றி அறிய முடிந்தது. அவரின் நண்பரும் கூட.

  இங்கும் அறிமுகம் ஆகியிருக்கிறார்.

  வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் நௌஷாத்கான் அவர்களுக்கு. மேலும் பல படைப்புகள் படைப்பதற்கும் வாழ்த்துகள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 32. எங்கள் BLOG -ல் இலக்கியம் பேசும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் -என் உடன் பிறவா சகோதர -சகோதரிகளுக்கும் மற்றும் என்னை வரவேற்று ,வாழ்த்திய அன்பர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தினையும் -நன்றியினையும் தெரிவித்து கொள்கிறேன் ....
  ஜெனியின் காதல் டைரி சிறுகதையை எழுதுவதற்கு சில முக்கிய காரணங்கள் ...
  1 காதலில் எச் சூழ் நிலையிலும் எல்லை மீற கூடாது ...பண்பாடு -கலாச்சாரத்தை மீறும் போது ஏற்படும் விளைவை சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் அனுபவித்தே ஆக வேண்டும் ..
  2 .ஆணுக்கு வருவது போல பெண்ணுக்கும் காதல் வருவது இயல்பு ..காதல் எல்லோருக்கும் பொதுவானது இதை எல்லோரும் உணர வேண்டும் ..
  3 ..ஆட்டோகிராப் -பிரேமம் என வெறும் ஆண்கள் பார்வையில் இருந்தே காதல் தமிழ்/மலையாள சினிமாவில் ( காதல் )மையப்படுத்த படுகிறது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து கதை சொல்ல ஆசை பட்டேன்..ஒருவருக்கு நேரடியாக அறிவுரை சொன்னால் பிடிக்காது அதனால் தான் ஜெனி என்னும் பெண் கதாப்பாத்திரம் மூலம் கருத்து சொல்ல ஆசைப்பட்டேன் ..பண்பாடு -கலாச்சாரத்தை மீறினால் பாதிப்பு நிச்சயமுண்டு என்பதை காதலிக்கும் நபர்கள் இக்கதையை படிக்கும் போது உணர்வார்கள் என நம்புகிறேன் ...
  4 .இக்கதையில் காதலர்கள் எல்லை மீறுவதாக கதாபாத்திர அமைப்பை படைத்திருப்பேன்..ஏனெனில் இக்கதை அந்த தவறிலிருந்து தான் உருவாகிறது ..இது சிலருக்கு அபத்தமாக ,கலாச்சாரத்தை சீரழிப்பதாக கூட தோன்றலாம் ..சில இடங்களில் இப்படியும் கூட நடக்கிறது ஆனால் இக்கதையில் எல்லை மீறுவதை நான் வைத்ததற்கு முக்கிய காரணம் பாதிக்க பட்ட அந்த கதாப்பாத்திரம் மூலம் காதலிப்பவர்களுக்கு நல்ல படிப்பினையை தர தான் ...
  5 ..சில அன்பர்கள் சொல்வது போல் அந்த இடத்தில் மேஜிக் என்ற வார்த்தை பிரயோகத்தை தவிர்த்து வேறு வார்த்தையை பயன் படுத்தி இருக்கலாம்
  6 .நகரத்தை போல் இன்னும் சில ஊர்களில் ,கிராமங்களில் மக்களிடையே அந்த நியூ ஜெனரேஷன் பழக்கவழக்கம் வரவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் ..காதலித்தாலே பெருங்குற்றம் என்று பாவிக்கும் ஊர்களும் நம் நாட்டில் தான் உள்ளது ,கணவன் இறந்து பல வருடம் ஆகியும் வேறொரு நபரை திருமணம் செய்து கொள்ளாத எத்தனையோ பெண்களை எங்கள் ஊரில் நான் பார்த்திருக்கிறேன் ..விவாகரத்து ஆகியும் கூட திருமணம் செய்து கொள்ளாத எத்தனையோ பெண்கள் எங்கள் ஊர் அருகில் உண்டு ஏனெனில் அங்கெல்லாம் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி தான் என்று உள்ளது ..இந்நிலை எல்லா இடங்களிலும் மாற வேண்டும் ..ஆணுக்கு நிகர் பெண் சரிசமயாய் தவறு செய்வது பெண்ணியம் என்று நான் சொல்ல வரவில்லை ..ஆணை போல பெண்ணுக்கும் காதல் வருவது இயல்பு ,ஆணை போல பெண்ணுக்கும் ஆசை உண்டு ,உணர்வு உண்டு ,உணர்ச்சி உண்டு.காதல் எல்லோருக்கும் பொதுவானது ,காதல் ஆண் -பெண் -திருநங்கை என்று இனப்பாகுபாடின்றி எல்லோர் மனதிலும் வரும் காதல் ஆணுக்கு மட்டும் சொந்தமில்லை என்று எல்லோரும் உணர வேண்டும் ஆண் பெண் சமம் என வெறும் உதட்டளவில் மட்டும் சொல்லாமல் மனதளவில் எல்லோரும் உணர வேண்டும் என்பதற்க்காக இந்த சிறுகதையை படைத்தேன் ...
  அறியா பருவவயதில் செய்யும் தவறு கூட நம் வாழ்க்கையை தடம் மாற்றி போடலாம் ,ஆனால் வாழ்க்கையில் எது நடந்தாலும் நம்பிக்கையோடு வாழ வேண்டும் ..எதுவும் நிரந்தரமல்ல ...
  இக்கதையில் சொல்வது போல நிஜத்தில் நிறைய பேர் உண்மையை சொல்ல போவதில்லை அதே சமயத்தில் திருமணத்திற்கு பிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உண்மை சம்பந்த பட்ட இணையருக்கு தெரியும் போது நிச்சயம் விளைவுகள் பெரிதாக கூட இருக்கும் அதனால் தான் ஜெனி கதாபாத்திரத்தை கடந்த கால உண்மையை சொல்பவள் போல் படைத்தேன் ..உடலளவில் ஜெனி கற்பை பறிகொடுத்தாலும் மனதளவில் ஜெனி உத்தமியே ....அவள் பெற்றோர் இடத்தில் ஏன் உண்மையை சொல்லவில்லை என்று கேட்டீர்கள் ..அவள் மனதளவில் வேதனை படுவது போல் அவளது பெற்றோரை வேதனை படுத்த விரும்பாதது கூட இருக்கலாம் ...
  என்னுடைய பார்வை வேறு ..வாசகர்களின் பார்வை வேறு ..நீங்கள் கேட்ட கேள்விற்கு ஓரளவிற்கு பதில் சொல்லி இருக்கிறேன் என நம்புகிறேன் ..
  ஒரு கதையை இவ்வளவு ஆழ்ந்து படித்து ,கூராய்ந்து கேள்வி கேட்ட அனைத்து அன்பர்களுக்கும் மீண்டுமொருமுறை நன்றியையும் -வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் ..
  தொடர்ந்து கேள்வி கணைகளை வையுங்கள் ..உங்கள் விமர்சனம் என்னும் வழிகாட்டல் மூலம் என்னை நானே மேம்படுத்தி கொள்கிறேன்
  வாய்ப்பளித்த ஸ்ரீ ராம் சகோதரருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ...எங்கள் BLOG ல் என்னை அறிமுகம் செய்த பரிவை .சே ..குமார் அண்ணனுக்கு அன்பார்ந்த நன்றிகள் ..

  அன்புடன்
  நௌஷாத் கான் .லி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதுமையாகக் கதை சென்றாலும் இங்கே நடப்பதை நேர்மையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
   மேலை நாடுகளில் மாற்றுத் திருமணங்கள் அனுமதிக்கப் பட்டாலும் எங்கள் வீட்டுக்கு இரண்டு பக்கமும் இருக்கிறது என்னை விடைச் சிறிய வயதினர்., கணவரை இழந்த பிறகு கூட மற்றொருவரை நாடவில்லை.
   இதெல்லாம் அவரவர் மன நிலையைப் பொறுத்து அமைகிறது. வாழ்க்கையின் வேற்றுக் கோணத்தை சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துகள்.

   நீக்கு
  2. விளக்கத்தைப் படித்தேன்... இண்டெரெஸ்டிங். இருந்தாலும் //உடலளவில் ஜெனி கற்பை பறிகொடுத்தாலும் மனதளவில் ஜெனி உத்தமியே // என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. ஏன், 'பிற்காலத்தில் தெரியவந்தால் பெரிய பிரச்சனை ஆகிடும் அதனால் இப்போதே சொல்லிடுவோம்' என்று தப்பிக்கும் விதமாக ஜெனி சொன்னாள் என்று நினைக்கக்கூடாது?

   இருந்தாலும் கதை நல்லாத்தான் இருந்தது.

   நீக்கு
  3. நெல்லை. சரியான கேள்விகள். இதெல்லாம் பாத்திரப் படைப்பில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகள். கதைக்கான வார்த்தை அமைப்புகளில் இன்னும் கவனம் கொண்டிருக்கலாம். இதே மாதிரியான ஒரு கதையை நீங்கள் ஏற்றுக் கொள்கிற மாதிரி இதே பகுதியில் யாராவது எழுதினால் தேவலை.

   நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  5. நௌசாத்திடம் நாங்கள் சொல்வதும் இதைத்தான்...

   நல்ல கதைக்கான களம் இருந்தும் கருத்து சொல்லுதல் மற்றும் எழுதும் முறை, பயன்படுத்தும் வார்த்தைகள் என கதையின் போக்கை மாற்றியும் வாசிப்போருக்கு அயற்சியையும் கொடுத்து விடுகிறார்.

   அப்படி எழுதாமல் வாசிப்பவரை ஈர்க்கும் விதமாக வார்த்தைகளை போட்டு எழுதப் பாருங்கள் என சொல்லிக்கொண்டேதான் இருக்கிறோம்.

   தற்போது மாற்றங்களுடன் எழுத முயற்சிக்கிறார்.

   நீக்கு
  6. நௌஷாத் சகோ உங்கள் கதைக்கான காரணங்கள் விளக்கங்களை வாசித்தேன் ரொம்ப அழகா தெளிவாகச் சொல்லியிருக்கீங்க. ஜீவி அண்ணா, குமார் இங்கு சொல்லிருப்பது போல நானும் பானு அக்காவும் இக்கதை பற்றி பேசிக் கொண்டோம். என் கருத்து நான் அவர்களிடம் சொன்னது இதுதான்...கதை ஏனோ முழுமை பெறாத மாதிரி இருந்தது...இன்னும் கொஞ்சம் ஜெனியின் பாத்திரத்தை செதுக்கியிருக்கலாம். க்ளியராக என்று.

   குமார் சொல்லிருப்பது போல இப்போது நீங்கள் மாற்றங்களுடன் எழுத முயற்சி செய்கிறீர்கள் என்பதையும் நாங்கள் அறிகிறோம் எனவே இப்போது எழுதும் கதைகளில் ஒன்றை நீங்கள் விரும்பினால் எங்கள் ப்ளாகிற்கு ஸ்ரீராமுக்கு அனுப்பலாமே! நாங்கள் சந்தோஷப்படுவோம்.

   உங்கள் கதை வித்தியாசமாக, நன்றாக இருக்கிறது. ஸோ அனுப்புங்க...வாழ்த்துகள் பாரட்டுகள்

   கீதா

   நீக்கு
  7. பானுக்காவும் அதே கருத்தைச் சொன்னார் என்பதை இங்கு சொல்ல விட்டுப் போனது...என் கருத்தில்

   கீதா

   நீக்கு
 33. சிறந்த படைப்பு
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!