ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

ஞாயிறு : நாங்க ஒரு பாவமும் அறியாதவங்க !


எவ்வளவு  முறை  தான் ஓடற வண்டியிலிருந்து படம் எடுப்பீங்க?மரங்களுக்கிடையியே கொஞ்சம் கான்கிரீட்டும்


புழுதி மழை பொழிகிறது....


ஊருக்கு நடுவே ஒரு கோபுரம்


மரங்களின் அணிவகுப்பு

அதெல்லாம் அமெரிக்கா ஒன்றும் இல்லை.
இடது புறம் சாலை செப்பனிடப்படுகிறது


சே.. இந்தக் கான்டராக்டருக்கு சாலை போட  யார் சொல்லிக்கொடுத்தார்கள் ?

அதோ அங்கே தெரிகின்ற வீட்டுக்கு ஒரு வழி இருந்ததாம்


அப்பாடா அமெரிக்க வழியிலிருந்து இந்தியா வழிக்கு ....


காய்ந்த புல்லுன்னா கொஞ்சம் பயம்தான்


ஒரு ஓடையைக் காணோம்


ஐயோ... நாங்க ஒரு பாவமும் அறியாதவங்க !


வாகனங்கள் நிற்பதைப் பார்த்தால் ....

44 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்...

  படங்கள் நல்லா இருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் நல்வரவும், வணக்கமும் வைச்சுக்கறேன். காசிப் பயணப்படங்களை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் மீண்டும் ஷில்லாங் பயணப்படங்கள்?

  முதல் இரு படங்கள் தவிர்த்து மற்றவை நன்றாக இருக்கு. ஷில்லாங் இன்னும் எத்தனை நாட்கள்? ஸ்ரீலங்கா போயிட்டு வந்தது இவங்க தானே? விரைவில் அந்தப் படங்களைப் பகிரச் சொல்லுங்கள்! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ ஸ்ரீலங்கா வேற போயிருந்தாங்களா..!!

   பார்க்க வேண்டும் போல இருக்கு எத்தனை வருடங்கள் ஆயிடுச்சு! பார்த்து...

   கீதா

   நீக்கு
  2. கீதாக்கா இன்னும் ஷில்லாங்கே வரலை! ஊருக்குள்ள போகவே இல்லையே சாலைலதான் இருக்காங்க!! அதுக்குள்ள எப்படி ஸ்ரீலங்கா ஃப்ளைட் ஏற முடியும்?!!! ஹா ஹா ஹா

   கீதா
   கீதா

   நீக்கு
  3. //ஊருக்குள்ள போகவே இல்லையே// - அடுத்தவங்க வார்த்தைகளைக் கடன் வாங்காதீங்க கீதா ரங்கன். இப்போதான் ஒருவர், பயணக்கட்டுரை ஆரம்பித்து, 'இன்னும் வீட்டைவிட்டுப் புறப்படவே இல்லை' என்று முடித்திருந்தார்...ஹாஹா.

   ஞாயிறு படங்கள் தீம் வைத்து ஆரம்பித்து வரிசையா எடுத்த படங்களா வந்துக்கிட்டிருக்கு. அதுக்காக, எங்கள் பிளாக்கின் 'கன்னித்தீவு' என்று தலைப்பு வைக்கச் சொன்னால், ஸ்ரீராம் ரொம்ப டென்ஷனாகி, என் மெயிலையே BAN பண்ணிடுவார்....ஹாஹா

   நீக்கு
  4. //பார்க்க வேண்டும் போல இருக்கு// - நல்லவேளை உங்களைப் பிடிக்காதவங்க இங்க இல்லை. இருந்திருந்தால், அவங்க செலவிலேயே இப்போது உங்களை ஸ்ரீலங்கா அனுப்பிடுவாங்க, கர்ஃப்யூ சமயத்திலேயே...

   நீக்கு
  5. //எங்கள் பிளாக்கின் 'கன்னித்தீவு' என்று தலைப்பு வைக்கச் சொன்னால்//

   இன்னும் யாருக்கும் இது தோணலையா ஸ்ரீராம்? :))

   நீக்கு
  6. அடுத்தவர் தலைப்பு நமக்கு எதுக்கு கிருஷ் ஸார்?

   காசிப்படங்கள் ஞாயிறில் வருவது கடினம் கீதா அக்கா.

   ஸ்ரீலங்கா போனது இந்தக்குழு இல்லை கீதா.

   நீக்கு
  7. நெல்லை என்னைக் கலாய்த்த கமென்ட்ஸ் ஹா ஹா ஹா ஹா...

   எனக்கு ஃப்ரீ டிக்கெட் கிடைச்சா கூட நான் இல்லைப்பா ஹா ஹா ஹா ஹ

   கீதா

   நீக்கு
 4. கார் ஓடும் போது எடுத்த படங்கள் என்று சொல்லாமலே தெரிகிறது.

  மண்புயல் எல்லாம் வடநாட்டில் உண்டு.
  ரோடு போடுவதால் புழுதி மழை காரின் கண்ணாடியில் படிந்து படங்கள் எல்லாம் கொஞ்சம் கலங்கல்.
  பசுமை கண்ணுக்கு நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். படங்கள்
  அனைத்தும் அழகு. ஷில்லாங்க் வந்து விட்டார்களா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா இன்னும் இல்லை....அங்க ஒரு இடத்துல கார்களா தெரியுது பாருங்க ரெஸ்டாரன்ட் இல்லை தங்கும் விடுதி? அதுக்கு வராங்க...!!!!!!

   கீதா

   நீக்கு
  2. வாங்க வல்லிம்மா... கேஜிஎஸ்க்கே வெளிச்சம்! கீதா சொல்வது போலவும் இருக்கலாம்!

   நீக்கு
 6. காரிலிருந்து எடுத்ததாலோ என்னவோ சில படங்கள் ஷேக் ஆகியிருக்கு...

  ஷில்லாங்க் போக இன்னும் நிறைய தூரம் இருக்கோ?!! ட்ரைவரை கொஞ்சம் சீக்கிரம் போகச் சொல்லுங்க!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 7. புழுதி மழை!! கேப்ஷன் ரசித்தேன்!..

  அமெரிக்கா வழி இந்தியா வழி // ஹா ஹா ஹா கேப்ஷன் சூப்பர்...

  இந்தியா வழிக்கு வரும் படம் நல்லாருக்கு..

  காய்ந்த புல்லுனா நிஜமாவே பயம் தான்...!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. எவ்வளவு முறைதான் ஓடற வண்டிலருந்து படம் எடுப்பீங்க//

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்....அதே அதே!!! நானும் டிட்டோ!

  ஊருக்கு நடுவுல கோபுரம்// செல்ஃபோன் டவர்..ஊருக்கு வந்துட்டாங்கனு பார்த்தா இது இடையில உள்ள ஊரோ?!! இல்ல சுத்தி அடிச்சு ஊருக்குள்ள நுழையனுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எப்ப ஷில்லாங் படங்கள் காட்டப் போறீங்க!! வெயிட்டிங்க்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 9. அன்பின் ஸ்ரீராம்..
  இன்றைய பதிவுத் தலைப்பின் முதல் வார்த்தையை மட்டும் தயை செய்து நீக்கி விடுங்களேன்...

  வாழ்க நலம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா சொல்ல நினைத்து வந்தேன்..தலைப்பின் முதல் வார்த்தை.அதுக்குள்ள உங்க கமென்ட் வந்துவிட்டது...அதே எனக்கும் தோன்றியது...

   கீதா

   நீக்கு
  2. நீக்கி விட்டேன் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
 10. வழக்கம் போல எழில் கொஞ்சும் படங்கள்...

  ஷில்லாங் என்கிறீர்கள்...
  இவ்வளவு காய்ச்சலாக இருக்கிறது!?....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​நன்றி துரை செல்வராஜூ ஸார்... பனிபடர்ந்த பிரதேசமாதலால் ஜல தோஷம் போல... அதுதான் காய்ச்சல்!​

   நீக்கு
 11. ஓடும் காரிலிருந்து எடுத்திருப்பதால் படங்கள் தெளிவாக வரவில்லை. நம்ம ஊர் இயற்கைக் காட்சிகளைப்போல்தான் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவான படங்களைப் பார்க்கும்போது அப்படிதான் இருக்கிறது நெல்லை.

   நீக்கு
 12. //மரங்களுக்கிடையே கொஞ்சம் கான்க்ரீட்டும்//.. ஆஹா! படிக்கவே நன்றாக இருக்கிறது.

  ஓடும் கார் + புழுதிப் புயல் இரண்டும் சில படங்களை மழுங்கடித்திருக்கின்றன. ஷில்லாங்கில் கூட வாழை!!

  பதிலளிநீக்கு
 13. பின்னூட்டங்களில் மாற்றுக் கருத்தும் எனதுபோல் இல்லை என்றாலும் இருப்பதே மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  ஷில்லாங் படங்கள் அனைத்தும் இயற்கையான பசுமையாக, கண்ணுக்கு விருந்தாக உள்ளன. அதற்கேற்ற மிகப் பொருத்தமான வாசகங்கள் அருமை.

  "அந்தி மழை பொழிகிறது" பாடலை நினைவுபடுத்தியது மூன்றாவது படம்.

  "மரங்களுக்கிடையே கான்க்ரீட்டும்" அழகான சொல்லாடல்.. இது சிறிது காலத்தில் மாற்றிச்சொல்லாமல் இருக்க இயற்கை அருள் புரிய வேண்டும்.

  மரங்களின் அணிவகுப்பு படங்கள் அருமை.

  சாலை மாறினாலும், செல்லும் பாதை ஒன்றாகும் போது நாடுகள் இணைந்து விட்டன.

  காய்ந்த புல்லும் கண்ணுக்கு அழகாயிருக்கிறது.

  தலைப்பை பிரதிபலித்த பதினாலாவது படம் உண்மையிலேயே "ஐயோ பாவந்தான்"

  எல்லா படங்களும் மிக அழகு. அதற்கு பொருத்தமாய் எங்களனைவரையும் ஏதாவது சொல்லத் தூண்டும் அழகு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. கேள்விகள் அவனது நினைவுகளை இன்னும் கிளறி விட்டது. “அப்படித்தான் ஆகிப்போச்சு செல்வன். உனக்கு என் பிரச்சினை மட்டும் தானே தெரியும்!இன்சிடென்ட்ஸ் தெரியாதே. என் மனைவி கயல் சுயமா சிந்திக்காம எடுத்த தப்பான முடிவுனால, அவளுக்குக் கிடைச்ச தப்பான வழிகாட்டல்னால,குடும்பமே மாறிப் போச்சு.”  “ம்ம்ம்ம்ம்……சின்ன வயசுல உங்க வீட்டுல நாம எவ்வளவு விளையாடியிருப்போம்! உங்க வீடு எப்பவுமே ஜே ஜே நு இருக்குமே. நான் கூட எங்க வீட்டுல சொல்வேன். இருந்தா கதிர் குடும்பம் மாதிரி இருக்கணும்னு”  கதிருக்கு கடந்த 4 வருட நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.  தொடர்ந்து படிக்க....

  https://engalcreations.blogspot.com/2019/04/blog-post_28.html

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!