சனி, 27 ஏப்ரல், 2019

விளக்கம் தேவையா என்ன?


1)  நாகையைச் சேர்ந்த உயரம் குறைந்த மாற்றுத் திறனாளி மாணவியின் குடும்ப வறுமை குறித்த செய்தி தினமலர்நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக, அம்மாணவிக்கு மதுரை சிறை கைதி இளங்குமரன் 10 ஆயிரம் ரூபாய்வழங்கினார்.  




2)  ஓசூர்,அரசு பள்ளியில், பறவைகளுக்கு தானியம் மற்றும் தண்ணீர் வழங்கி பாதுகாக்கும் மாணவர்கள், தங்களது வீடுகளிலும், பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.  மலை கிராம மக்களுக்கு, ஆரம்ப கல்வி வழங்கி வரும் இப்பள்ளி, கல்வியுடன் சேர்த்து, மனித நேயத்தையும், மாணவர்கள் மத்தியில் விதைத்து வருகிறது.





3)  விளக்கம் தேவையா என்ன?




4)  


=================================================================================================


சனிக்கிழமைகளில் ஒரு புதிய பகுதியைத் தொடங்கலாம் என்று நினைக்கிறோம்.  கடந்த வார சனிக்கிழமை முதல் இந்த வார வெள்ளிக்கிழமை வரை இந்த தளத்தில் வெளியான பதிவுகள் குறித்தான ஒரு விமர்சனம் - உங்கள் பார்வையில்.

இந்த வாரம் அதைத் தொடங்கி வைப்பவர் நெல்லைத்தமிழன்.  ஒவ்வொருவர் பார்வையும் வித்தியாசப்படும்.  உங்கள் பாணியில், உங்கள் கலைத்திறன், கற்பனை கலந்து விமர்சனத்தில் கலக்கலாம்.

அடுத்த வாரம் தளப்பதிவுகள் பற்றிய தன் கருத்தைப் பகிரப்போகிறவர் யார் என்பதும் அடுத்த வாரம்தான் தெரியும்.  ஹிஹிஹி....


*****


சென்ற வாரப் பதிவுகள் (21-26 April ’19) – எபி – எனக்குள் ஏற்படுத்திய எண்ணங்கள் – நெல்லைத்தமிழன்

எப்போதுமே விமர்சனம் என்பது நிறை குறைகளை உள்ளடக்கியது என்றாலும், நமக்குத் தெரிந்தவர், நாம் விமர்சனம் செய்வது ‘இன்னாரது’ படைப்பு என்ற எண்ணம் தலை தூக்கினாலே அங்கு விமர்சனம் தன் தரத்தை இழந்துவிடும். இருந்தாலும் இடுகைகள் எனக்குள் ஏற்படுத்திய எண்ணங்களைப் பகிர்கிறேன்.

எ.பி இடுகைகளில் நான் முக்கியமாக நினைப்பது, படிப்பவர்களின் பின்னூட்டங்கள்தாம். அவை, இடுகைக்குப் பெருமை சேர்ப்பதுடன், உடனுக்குடனான விமர்சனமாகவும் அமைந்துவிடுகிறது. சாதாரண இடுகைகளையும், அரட்டைக் கச்சேரிகளால் இண்டெரெஸ்டிங் ஆக அமைத்துவிடுவது எ.பி. இடுகைகளில் வெளியாகும் பின்னூட்டங்கள். அதனால், அன்றைய தினத்தின் என் மனம் கவர்ந்த பின்னூட்டம் எது என்பதையும் குறிப்பிட நினைக்கிறேன்.

பொதுவாக எங்கள் பிளாக்கைப் பொறுத்தவரைல, அந்த அந்த நாட்களில் என் எதிர்பார்ப்புகள் மாறுபடும்.  ஞாயிறு என்றாலே, ‘ஓ… பயணப் படங்கள்’, திங்கள், ‘இன்று யாருடைய செய்முறை, புதிய ஐட்டமா?’, செவ்வாய் ‘இன்றைய கதை யாருடையது, எப்படி இருக்கிறது’, புதன் ‘என்ன என்ன கேள்விகளுக்கான பதில்கள்’, வியாழன் ‘அட… ரசனையான கலவையா இருக்குமே’, ‘வெள்ளி ‘இன்றைக்கு என்ன பாடலோ..பார்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்போம்’, சனி ‘ஓ.. நற் செயல்களைப் பற்றியதாக இருக்கும்..க்கும்..க்கும்..க்கும்’ என்றுதான் மனதில் தோன்றும். எனக்கு வியாழன், திங்கள், செவ்வாய்,  புதன் என்ற வரிசையில் எதிர்பார்ப்பு இருக்கும். அது விமர்சனத்தில் வெளிப்பட்டுவிடுமோ?




ஞாயிறு – மேகாலயா பயணம் சம்பந்தமான படங்களின் தொடர்ச்சி.  தலைப்பு ‘பச்சை மரம் உச்சியிலே ஒத்தை மரமா’ கவிதைபோல இருந்தது. பொதுவா தட்டையான படங்களை, தன் வரிகளால் ஆர்வமுடையதாகச் செய்வார் ஸ்ரீராம். (இப்போதெல்லாம் கேஜிஎஸ் எழுதுகிறார் என்றும் ஸ்ரீராம் சொல்கிறார்).  “ஷில்லாங் சாலை கொஞ்சம் நீளம்தான்’ என்ற வரிகள்  ஞாயிறில் வெளியாகும் பயணத்தின் படங்களைப் பார்ப்பவர்கள் சொல்வதுபோல எனக்குத் தோன்றியது.  இந்தப் பகுதியில், நிறைய தடவை தெளிவில்லாத படங்களும் வருகின்றன, ஒரே கோணத்தில் எடுக்கப்பட்ட ஒன்றுக்கும் அதிகமான படங்களும் வருகின்றன. இவைகள் தவிர்க்கப்படணும்.  முக்கியத்துவம் வாய்ந்த படங்களையோ இல்லை ஒரு themeக்குள் அடங்கும்படியான படங்களையோ கோர்த்துத்தான் வெளியிடணும் என்பது என் அபிப்ராயம்.

இந்தப் பகுதியையும் ரசனையுடன் திகழச் செய்வது, படிப்பவர்கள் எழுதும் பின்னூட்டம்தான்.  இன்றைய மனம் கவர்ந்த பின்னூட்டம்,  துரை செல்வராஜு சார் எழுதியது.

உண்மையில் இங்கே திகழ்வது
பெரும் பந்தத் தொடர்...
ஏழேழு பிறவியாய்த் தமிழுடன் 
தொடர்வது...

திங்கள் – அழுக மாங்கா பச்சிடி – தில்லையகத்து கீதா ரங்கன், நிறைய புதிய புதிய செய்முறைகளை எ.பியில் எழுதுவார்.  அவர் எழுதிய பச்சைக் கத்தரித் தொக்கு (வழுதுணங்காய்), திரிசங்குபாகம், கடுகு பச்சிடி போன்றவை சட்டுனு என் நினைவுக்கு வருகிறது. நிறைய வித்தியாச வித்தியாசமான செய்முறைகளுக்குச் சொந்தக்காரர். மாவடுவை வைத்து செய்கின்ற செய்முறை மிகவும் ரசனையாக இருந்தது. நாங்க நெல்லிக்காய் பச்சிடி செய்வதுபோல அவர் மாவடுவை வைத்து பச்சிடி செய்முறை எழுதியிருக்கிறார். நல்ல வாசனையாக இருக்கும். செய்துபார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. படங்களையும் செய்முறையையும் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். நான் சென்னை சென்றதும் செய்துபார்க்கணும் என்று நினைத்திருக்கிறேன்.  பின்னூட்டத்தில் பானுமதி வெங்கடேச்வரன் அவர்கள் சொன்னதுபோல,  செய்முறையின் தலைப்பு, ஏதோ கெட்டுப்போன வஸ்துவை வைத்துச் சமைப்பது என்பதுபோலத் தோற்றம் தருகிறது. தலைப்பு வேறுமாதிரி வைத்திருக்கலாம்.

இன்றைய இடுகையின் பின்னூட்டங்களில் என்னைக் கவர்ந்தது, கமலா ஹரிஹரன் அவர்களின் பின்னூட்டம்தான்.  கேள்விப்படாத தலைப்பின் பெயரை, ‘ஆமாம் அப்படித்தான் நாங்களும் சொல்லுவோம், பாரம்பர்யமான செய்முறை’ என்று எழுதியது என்னைக் கவர்ந்தது.



செவ்வாய் – கேட்டு வாங்கிப் போடும் கதைகள் பொதுவாக மிக ரசனையாக இருக்கும். இந்த வாரத்தில் முதல் முறையாக நெளஷத்கான் என்பவர் எழுதிய கதை “ஜெனியின் காதல் டைரி”. எந்தக் கதையும் விமர்சனங்களையோ விவாதங்களையோ அல்லது நமக்குள் எண்ண அலைகளையோ தோற்றுவித்தாலே கதாசிரியர் வெற்றி பெற்றுவிட்டதாகத்தான் அர்த்தம். கிட்டத்தட்ட சேரனின் ஆட்டோகிராப் போல் ஆரம்பித்து ஜெனியின் திருமண பிரச்சனையில் கொண்டுவந்து நிறுத்துகிறார்.  காலம் மாறிப்போனாலும் இன்னும் தேவையான அளவிற்கு மாறவில்லை, போகவேண்டிய தூரம் அதிகம் என்று நெளஷத்கான் நினைப்பது கதையில் பிரதிபலித்தாலும் சமூகக் கோட்பாடுகள், அவற்றின் பெருமை குறைவது கால மாறுதலைத்தான் காட்டுகிறது. ‘காதல் இருவருக்கும் பொதுவானது’ என்று கதாசிரியர் சொன்னாலும், ‘தவறுகள் இருவருக்கும் பொதுவானதுதான்’ என்று சொல்வதுபோல்தான் எனக்குத் தோன்றியது.  பழைய மொழியாக இருந்தாலும் ‘சீலை முள்ளில் விழுந்தாலும் முள் சீலையில் விழுந்தாலும்’ பாதிப்பு சீலைக்குத்தான், முள்ளும் சீலையும் ஒன்றாகிவிட முடியாது என்ற நினைப்பு வந்தது.

இன்றைய பின்னூட்டங்களில் என்னைக் கவர்ந்தது, கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டம்தான்.  கதையைப் படித்தவுடன் எனக்கு ஜெனியின் செயல் ‘தவறு’ எனத் தோன்றியது. ஆனால் பெண்ணின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு ஜெனிக்கு ஆதரவாக அவர் எழுதிய பின்னூட்டங்கள் ‘பெண்ணின் பார்வையில்’ பெண்ணின் செயல்களைப் பார்க்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியது. அவர் எழுதுகிறார், ‘ஓர் நாள் காதலனுடன் கலந்தவளை ஒதுக்கி வைப்பது எவ்வகையில் நியாயம்? தன்னைக் குறித்த உண்மையை, தனக்கு மட்டுமேதெரிந்த ஒன்றை முன் பின் தெரியாதவனிடம் பகிர்கிறாள் என்றால்! அந்தப் பெண்ணின் நேர்மைக்கும், நியாய உணர்வுக்கும்,அவள் தூய்மைக்கும் இதைவிடச் சான்றே வேண்டாம் “  இதுவும் ஒரு கோணம்தான். ஜீவி சாரின் பின்னூட்டத்தில் ‘அப்படி அவளைச் சொல்ல வைத்ததில் தான் கதாசிரியர் நம் மனதில் நிற்கிறார்’ என்பதும் என்னை யோசிக்க வைத்தது.

புதன் – இந்தப் பகுதி பொதுவா கேட்பவர்களின் கேள்வியைப்பொறுத்துதான் சிறப்பாக அமையும்.  எ.பியில் ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் ஒரு கேள்விக்குச் சொல்லப்படுகின்றன. அதுவும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.  யானைகளை கோவில்களில் வைத்திருப்பது சரியா என்ற கேள்விக்கு, “யானைகள் போர் இல்லாதகாலங்களில் என்ன செய்யும் ? கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்ள வேண்டியது தான்” என்று சொன்னது இந்தப் பழக்கம் ஆரம்பமானதற்குக் காரணம் சொல்லுவதாக அமைந்ததை ரசித்தேன்.  இந்தப் பகுதியில் ஆசிரியர் குழு ஒரு கேள்வி கேட்டு, படிப்பவர்களைக் கலந்துகொள்ள வைக்கும் உத்தி நன்றாகத்தான் இருக்கு.  தொடர்ந்து ரசனையான கேள்விகள் கேட்கப்படும்போதுதான் இந்தப் பகுதி இன்னும் இன்னும் மெருகேறும்.

இன்றைய பின்னூட்டங்களின் என்னைக் கவர்ந்தது கோமதி அரசு அவர்களின் பின்னூட்டங்கள். பொதுவா அவர், தான் ரசித்த பகுதிகளைத் தனித் தனியாகக் குறிப்பிட்டு அதனைப் பாராட்டும் இயல்பு உடையவர். அது, எழுதுபவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை உண்டாக்கும்.  செய்த விமர்சனத்துக்கு மறுமொழி கொடுக்க வாய்ப்பாகவும் அமையும்.



வியாழன் –பொதுவாக கதம்பமாக ஸ்ரீராம் எழுதுவார். இன்று காசி பயணத் தொடரும், ஜோதிட நம்பிக்கையும், பரிகார தரிசனங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.  அதிலும் பயண அனுபவம் ரசனையாக ஆரம்பித்திருக்கிறது. நேர்கோட்டில் பயணிக்கும் எழுத்தாக இல்லாமல், முன்னும் பின்னுமாக எழுத ஆரம்பித்திருப்பதும் நகைச்சுவையும் தொடரின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கிறது.  சங்கடங்கள் தீருவதற்காக மேற்கொண்ட பரிகார தரிசனங்களைக் கோடி காண்பித்திருக்கிறார். தட்டு டம்ளர் எடுத்துவைப்பது, சாப்பிடும் மேசையை சுத்தமாக்கி ரெடியாக வைப்பது என்று செய்துமுடித்தாலும், உணவு தயாரானபிறகுதானே சாப்பிடமுடியும்? கர்மவினை முடியும்வரை காத்திருப்பதைவிட வேறு வழி? தற்போதுதான் தேர்தல் முடிந்திருப்பதால், 2014ன் வாக்களித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதற்குப் பதிலாக.  தற்போதைய வாக்களித்த அனுபவத்தை எழுதியிருக்கலாம், அனுபவம் என்ன ஊறுகாயா, நன்கு ஊறியபிறகு பரிமாறலாம் என்பதற்கு?

இன்றைய தலைப்புகளே பலவித பின்னூட்டங்களுக்கு வழிவகுக்கும். நிறைய அனுபவப் பின்னூட்டங்களைப் படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இன்றைய பின்னூட்டங்களில் ஸ்ரீராம் எழுதிய ஒரு மறுமொழியே என் மனதில் ஆழமாகப் பதிந்தது.  ஸ்ரீராம் எழுதுகிறார், “நமக்கெல்லாம் வாக்குரிமை இருந்து, கணக்கிடப்பட்டு வேறு ஏதோ காரணத்தால் வாக்களிக்க முடியாமல் போவது வேறு.......யாசகர்களோ, இதுமாதிரி அடித்தட்டு மக்களோ கணக்கெடுப்பிலேயே கணக்கெடுக்கப் பட்டிருப்பார்களா?”. இதில் பொதிந்திருக்கும் சமூகச் சிந்தனைதான் என்னை யோசிக்கவைத்தது. இந்த நாளின் சிறந்த பின்னூட்டம்/மறுமொழி இதுதான்.

வெள்ளி – இந்த நாளில் ஸ்ரீராமின் ரசனைக்குரிய பாடல், வரிகள் தேர்வாக இருக்கும். இன்றைக்கு,  நீல வானம் (1965… நான் பொறந்தேனா? தெரியலை…ஆனால் ‘கீ’ல ஆரம்பிக்கும் பெயர் உள்ளவர் பிறந்துட்டாங்க) படத்திலிருந்து ‘ஓ லிட்டில் ஃப்ளவர்…’.. பாடலைப் பற்றிச் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை. ஆனால், பாடல் வரிகளைக் கவனிக்க வைக்கும் ஸ்ரீராமின் உத்தி, நல்லாத்தான் இருக்கு. இன்றைய பாடலில் “உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே “-கவிஞர் நல்லா யோசித்துத்தான் எழுதியிருக்கார்.  சிவாஜி பற்றிப் படித்ததை இன்று எழுதியிருந்தார். சிவாஜி அவர்களின் நேரம் தவறாமை, தொழில் பக்தி போன்றவை எல்லோரும் அறிந்ததுதான். இருந்தாலும் அவற்றை மீண்டும் மீண்டும் படிக்கும்போது ரசனையாகத்தான் இருக்கு.  வெள்ளியன்றுமட்டும் நிறைய சினிமா சம்பந்தமான பின்னூட்டங்கள் இருக்கும்.  இன்றைக்கு என்னைக் கவரும் அளவில் தனித்துத் தெரிந்த பின்னூட்டம் எதுவும் இல்லை.

இருந்தாலும், எபியில் கூடும் பல்வேறு பறவைகளில் நலன், சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்வது, ஒருவரை ஒருவர் கலாய்ப்பது, அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது எ.பி. தளத்துக்கே உரிய சிறப்பு.. சலசலப்பை எப்போதும் ஏற்படுத்தும் இரண்டு பறவைகள் இந்த வாரம் முழுவதும் மிஸ்ஸிங். அதில் ஒரு பறவை இன்று அலகை நீட்டிப் பார்த்துவிட்டுச் சிறகடித்திருக்கிறது.  எ.பி. தளத்துக்கு வரும் அனைவருக்கும் எப்போதும் இதே சந்தோஷம் கிடைக்கட்டும் என்பதோடு என் விமர்சனத்தை நிறுத்திக்கொள்கிறேன்.




106 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம் இன்னும் யாரும் வரவில்லையா? இந்த வாரம் உங்கள் பாசிடிவ் செய்திகள் அனைத்துமே புதியது. நெல்லைத் தமிழரின் விமரிசனக் கட்டுரையும் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம். வாங்க கீதா அக்கா... நன்றி.

      நீக்கு
    2. காலை வணக்கம் கீதா சாம்பசிவம் மேடம் மற்றும் அனைவருக்கும்.

      நீக்கு
  2. எங்கள் ப்ளாகின் நக்ஷத்திர எழுத்தாளரால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பகுதி ஆச்சரியத்தை அளித்தது. ஸ்ரீராமுக்குள் இன்னும் என்ன புதிய திட்டங்கள் புதைந்திருக்கின்றனவோ? அடுத்து தி.கீதாவின் விமரிசனமாக இருக்குமோ என்று தோன்றினாலும் அவர் வேலையில் மும்முரம் எனச் சொல்லி இருப்பதால் துரை அல்லது வேறு யார்? இதிலும் சஸ்பென்ஸ் வைச்சிருக்கார் ஸ்ரீராம். இவ்வளவு வேலை மும்முரங்களிலும் அவரால் எப்படி இப்படி எல்லாம் யோசித்துச் செய்ய முடிகிறது என்பதை நினைத்தால் ஆச்சரியம் தான். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. அநேகமாய் அடுத்த வாரம் விமரிசனம் செய்யப்போவது பானுமதி அல்லது டிடியாய் இருக்குமோ? டிடி பயணத்தில் இருப்பதாகச் சொன்னார். துரைக்கு நேரம் இருக்குமா? அல்லது எ.பி. ஆசிரியர் குழுவிலே ஒருத்தரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யூகங்கள் ஆச்சர்யம் அளிக்கின்றன!

      நீக்கு
    2. யப்பாடி! எல்லோரும் வந்துட்டாங்களா? தனியா இருக்க பயம்ம்ம்ம்ம்ம்மா இருந்ததா? சீக்கிரமே கணினியை மூடிட்டுப் போயிட்டேன்! :)))))) யாரானும் வந்திருக்காங்களானு பார்க்கத் தான் இப்போ வந்தேன்.

      நீக்கு
    3. ஆமாம் கீதாக்கா கைக்குழந்தைக்கு பயமாத்தான் இருக்கும்...ஹா ஹா ஹா..

      கீதா

      நீக்கு
  4. கைதி இளங்குமரனுக்கு முன்னால் நானெல்லாம் வீண் பிறவியோ... என்று தோன்ற வைத்து விட்டது.

    அடுத்த பிறவியில் அவரது வாழ்வு செழிக்கட்டும்.

    நெல்லைத்தமிழரின் அலசல் ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி...

      இவற்றைப்படித்து நாமும் ஒரு சிறு நல்ல செயலாவது செய்தால் சரிதான். என்னைப் பொறுத்தவரை யாருக்கும் கெடுதல் செய்யாமலிருந்தாலே போதும் என்று தோன்றும்!

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    மனித நேயங்களை குறித்த நல்ல செய்திகள்.மனிதாபிமானத்துடன் தன்னால் இயன்ற அளவு உதவி செய்த இளங்குமரனுக்கும், பறவைகளுக்கு உணவளித்து அவற்றின் தாகம் தீர்க்கும் மாணவர்களுக்கும் பாராட்டுகள்.

    விளக்கமில்லா செயலாக விளங்க வைத்த படத்தின் விளக்கத்திற்கும் வாழ்த்துக்கள். மனித நேயங்கள் தொடரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. லேண்டட்! இனிய (சுறுசுறுப்பான ஹிஹிஹி) காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா, அக்காஸ் அண்ணாஸ், தம்பிஸ் (இப்படி சொல்லலைனா அண்ணன் நெ த த ரொம்ப ஃபூல் ஆகிடுவாரு!!!) நட்பூஸ் எல்லோருக்கும்!!

    அட புதிய பகுதியும்! ஸ்ரீராம் குடோஸ்! சூப்பர்! உங்க கிட்டருந்து கத்துக்க நிறைய இருக்கு. உங்க பல கஷ்டங்களுக்கு இடையில் இப்படிப் புதுமை புகுத்தும் உங்களுக்குப் பாராட்டுகள்!

    இதிலும் சஸ்பென்ஸ்! எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! நெக்ஸ்ட் பானுக்காவாக இருக்கும் என்று தோன்றுது. இல்லைனா துரை அண்ணா! இல்லைனா கோமதிக்கா! (இல்லைனா இல்லைனானு சொல்லி அத்தனை பேரையும் சொல்லிடலாம்!! ஹா ஹா ஹா)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபீல் என்பது தெரியாம ஃபூல் என்று வந்துடுச்சு நெல்லை ஸாரிப்பா....

      கீதா

      நீக்கு
    2. காலை வணக்கம் கீதா. பாராட்டுகளுக்கு நன்றி. யூகங்கள் தொடங்கி விட்டன இல்லையா?!!

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம் யூகம் தொடங்கியாச்ஹ்கு...கமலா அக்கா கூட வந்தாங்க, வல்லிமா வந்தாங்க அப்புறம் டாம் அண்ட் ஜெர்ரி கூட வந்தாங்க!! ஹா ஹா

      சரி சஸ்பென்ஸாவே இருக்கட்டும்..

      கீதா

      நீக்கு

  8. //'படித்து வேலைக்கு செல்வதே லட்சியம்//

    மயிலாடுதுறை பாரதி அவர் லட்சியம் படித்து வேலை பார்க்க வேண்டும் என்பது அது நிறைவேற வாழ்த்துக்கள்.
    படிப்புக்கு பணம் கொடுத்து உதவிய இளங்குமரன் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    //மாணவர்கள் இதுவரை பார்க்காத பறவைகளை கூட, தற்போது பார்த்து வருவதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்தியசீலன் கூறினார்.//

    மாணவர்களையும், தலைமை ஆசிரியர் அவர்களையும் பாராட்ட வேண்டும். பறவைகள் படம் இருந்தால் மேலும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    கோடைகாலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.வெயிலின் கொடுமையை அவர்களுக்கு மிக நன்றாக தெரியும்.

    இன்றைய பாசிடிவ் செய்திகள் அனைத்தும் மனிதநேயம் உயிர்ப்புடன் இருப்பதை தெரிவிக்கிறது நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய பாசிட்டிவ் செய்தியில் டாப் இளங்குமரன்! மனதைத் தொட்டுவிட்டார்! இப்படியான நல்ல மனம் இருந்திருக்கிறது ஆனால் ஏதோ ஒரு ஷணம் அவரை கைதியாக்கி இருக்கிறது! பாவம்! வாழ்க இளங்குமரன்! உங்களுக்கு சல்யூட்! எங்கள் எல்லோருக்கும் ஒரு பாடம். ஊக்கம்! பாராட்டுகள் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. பாரதிக்கு அவரது கனவுகள் நிறைவேற வாழ்த்துகள்! கண்டிப்பாக அவர் வாழ்க்கையில் முன்னுக்கு வருவார்!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. //சனிக்கிழமைகளில் ஒரு புதிய பகுதியைத் தொடங்கலாம் என்று நினைக்கிறோம். கடந்த வார சனிக்கிழமை முதல் இந்த வார வெள்ளிக்கிழமை வரை இந்த தளத்தில் வெளியான பதிவுகள் குறித்தான ஒரு விமர்சனம் - உங்கள் பார்வையில்.

    இந்த வாரம் அதைத் தொடங்கி வைப்பவர் நெல்லைத்தமிழன். ஒவ்வொருவர் பார்வையும் வித்தியாசப்படும். உங்கள் பாணியில், உங்கள் கலைத்திறன், கற்பனை கலந்து விமர்சனத்தில் கலக்கலாம்.//

    நீங்கள் சொன்னது போல் நெல்லைத்தமிழன் விமர்சனத்தில் கலக்கி விட்டார்.
    என்னையும் குறிப்பிட்டதுதற்கு நன்றி.

    ஒவ்வொரு நாள் பதிவையும் அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்.

    //இருந்தாலும், எபியில் கூடும் பல்வேறு பறவைகளில் நலன், சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்வது, ஒருவரை ஒருவர் கலாய்ப்பது, அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது எ.பி. தளத்துக்கே உரிய சிறப்பு.. சலசலப்பை எப்போதும் ஏற்படுத்தும் இரண்டு பறவைகள் இந்த வாரம் முழுவதும் மிஸ்ஸிங். அதில் ஒரு பறவை இன்று அலகை நீட்டிப் பார்த்துவிட்டுச் சிறகடித்திருக்கிறது. எ.பி. தளத்துக்கு வரும் அனைவருக்கும் எப்போதும் இதே சந்தோஷம் கிடைக்கட்டும் என்பதோடு என் விமர்சனத்தை நிறுத்திக்கொள்கிறேன்.//

    நானும் நெல்லைத்தமிழனுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன். இங்கு கூடும் பறவைகளுக்கு எப்போதும் மகிழ்ச்சி கிடைக்கட்டும் என்று.
    ஒரு பற்வை தாயின் அன்பு கதகதப்பில் இருக்கிறது, இன்னொரு பறவை ஈஸ்டர் பண்டிகை, புது வேலையில் கவனம் என்று இருந்தாலும் இந்த ( வேடம்தாங்கல் போல) பறவைகள் கூடும் இடம் தேடி வந்து விடுவார்கள்.


    பதிலளிநீக்கு
  12. புதிய பகுதிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. புதிய பகுதியை வரவேற்கின்றேன் ஸ்ரீராம். நல்ல முயற்சி. In my view, the blog writer is the 'supplier' and the blog reader is the 'customer'. All the comments from the readers are the voice of the customer. The comments show the 'customer satisfaction' level. விலாவாரியான விமரிசனத்திற்கு, நெல்லைதமிழன் அவர்களுக்கு நன்றி. வாசகர்களின் ஆதரவோடு எங்கள் ப்ளாக் பயனுள்ள சுவையான பதிவுகளை வெளியிடுவோம் என்று உறுதி கூறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. //நமக்கெல்லாம் வாக்குரிமை இருந்து, கணக்கிடப்பட்டு வேறு ஏதோ காரணத்தால் வாக்களிக்க முடியாமல் போவது வேறு.......யாசகர்களோ, இதுமாதிரி அடித்தட்டு மக்களோ கணக்கெடுப்பிலேயே கணக்கெடுக்கப் பட்டிருப்பார்களா?”. இதில் பொதிந்திருக்கும் சமூகச் சிந்தனைதான் என்னை யோசிக்கவைத்தது. இந்த நாளின் சிறந்த பின்னூட்டம்/மறுமொழி இதுதான்.//

    என் பின்னூட்டத்திற்கு கொடுத்த பதில்தான் அது.
    எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றால் அவர்களையும் கணக்கு எடுத்து இருக்க வேண்டும் தான்.
    அடுத்த தேர்தலில் ஸ்ரீராமின் சிறப்பான சமூக சிந்தனை செயலுக்கு வர வேண்டும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குப்பை பொறுக்கிக் கொண்டு எங்களைக் கடந்து சென்ற ஒரு நடுத்தர வயது அழுக்கரைக் கண்டதும் ' இவருக்கு வாக்கு இருக்குமோ... இவரும் இந்த நாட்டின் ஒரு மன்னர்தானே' என்ற ஜனநாயகக் கவலை ஏற்பட்டது என் துணைவிக்கு.//

      சமூக சிந்தனை ஏற்பட்டது ஸ்ரீராமின் துணைவியாருக்கு தான் அவைரையும் பாராட்ட வேண்டும் நெல்லைத்தமிழன்.

      நீக்கு
    2. ஹா... ஹா... ஹா... அரசியலில் இணைந்து விடவா அக்கா?!! பாஸ் கிட்ட உங்க பாராட்டைச் சொல்லி விட்டேன்.​

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    தங்களது புதிய முயற்சிக்கு முதலில் பாராட்டுக்கள். இந்த வார தொகுப்பாக விமர்சளம் செய்து ஆரம்பித்து வைத்த சகோதரர் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு பாராட்டுடன் வாழ்த்துக்களும்.

    பதிவுகளை மிகவும் அருமையாக அலசி விமர்சனம் அளித்துள்ளார். அவரின் அழகான பொறுமையான எழுத்துக் கோர்வைகள் நன்றாக உள்ளது. அடுத்த வாரம் யாராக இருக்கக் கூடும் என்ற புதிர் அலசல் இன்று ஆரம்பிக்கப் போகிறது.
    சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்வது போலிருக்குமோ? அவர்களின் யூகங்கள் சரியானதாக இருக்கும்.

    நானே ஒரு பதிவுக்கு மதியத்திற்கு மேல் அல்லது நடுஇரவின் தொடுகையில் வந்து படித்து கருத்துரை தருபவள். என் கருத்தையும் அவர் விமர்சனத்தில் குறிப்பிட்டிருப்பதற்கு மிக மிக நன்றிகள்.

    தாங்கள் இன்றைய என் பதிவுக்கு வந்து கருத்துரை தந்தமைக்கும் நன்றிகள். மற்றைய தினங்களில் கடமையோட்டம் காரணமாக காலையில் வந்து பதிலளிப்பது சிரமமாகிறது. தடங்கல்கள் வராத பட்சத்தில் சனி, ஞாயறு முடிந்த வரை வலைத்தள காலை பிரேவசம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா. எந்த நேரத்துக்கு வந்தால் என்ன? வந்து படித்து, அருமையான கருத்துகளை வழங்கி விடுகிறீர்களே......

      நீக்கு
  16. பறவைகள் செய்திகள் இரண்டும் அருமை. பள்ளிக்கும் மாணவர்களுக்கும், காவலர்களுக்கும் வாழ்த்துகள்! காவலர்கள் பற்றி பொதுவான கருத்துகளுக்கு எதிரான அழகான பாசிட்டிவு ந்யூஸ்!

    பாசிட்டிவ் ந்யூஸ்ல பறவைகள்னு பார்த்தா நெல்லையும் பறவைகள்னு நம்மைச் சொன்னது சூப்பர் ரசித்தேன்.

    தேம்ஸ் பறவைகள் ரெண்டும் செம பிஸி!

    நெல்லையின் விமர்சனம் அட்டகாசம்! ஆரம்பமே செம! இன்னும் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேம்ஸ் பறவைகள் இல்லாமல் போர் அடிக்கிறது... அதற்காக தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தையையும், புதிய முயற்சி செய்யும் குழந்தையையும் டிஸ்டர்ப் செய்யலாமா? ஆனாலும் நடுவில் எங்களுக்கும் நேரம் ஒதுக்கக்கூடாதோ சகோதரிகளே? அவர்கள் கும்மி அடித்திருக்கக் கூடிய பல பதிவுகள் அவர்கள் கும்மியில்லாமலேயே கடந்து விட்டன....

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம்..நிறைய பதிவுகளுக்கு எதிர்பார்த்தோம் இல்லையா...

      சரி நாளையிலிருந்து வந்துருவாங்களோ இல்லை திங்கள் அன்றிலிருந்து?! ஈஸ்டர் டேய்ஸ் முடிஞ்சு போச்சே...

      வருவாங்க வருவாங்க! அவங்க வரும் போது நான் மிஸ் செய்வேன்னு நினைக்கிறேன். அடுத்த வாரம்...

      ஜெனி கதைல கீதாக்கா நிறைய கருத்துகள் சொல்லிருந்தங்க...அது போல புதன் அன்றும் ...எல்லாம் மிஸ் செஞ்சுட்டேன்...இப்ப அடுத்த வாரமும் மிஸ் செய்வேன்...

      கீதா

      நீக்கு
  17. என்ன பானுக்காவ காணவில்லை? பயணமோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் புதுமை முயற்சி கண்டு வியக்கிறேன்.இத்தனை வேலை பளுவிலும் புதிதாக சிந்தித்து தன்னையும், மற்றவர்களையும் உற்சாகப்படுத்திக் கொள்ளும் அவருக்கு மறுபடியும் மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றிகள்.

      சகோ நெ. தமிழர் எழுதியிருப்பதைப் போன்று பறவைகள் கூடுமிடமாக இருக்கும் இந்த எ. பி சரணாலயத்தில் பறவைகள் சந்தோஷ வானில் பறந்து சிறகடிக்க காரணமாக இருப்பதற்கு ஒரு காரணம் தங்களது ஊக்க மிகும் அருமையான கருத்துக்களுந்தான். தங்களுக்கும் வாழ்த்துக்களுடன் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. @கீதா:சிறிது நாட்களாக கால் வலியால் இரவு தூங்க முடிவதில்லை. அதனால் காலை எழுந்திருக்கும் பொழுது 6:30 ஆகி விடுகிறது. எ.பி.யை பொருத்தவரை அது மிகவும் தாமதம் ஆயிற்றே?

      நீக்கு
    3. பானுக்கா ஹா ஹா ஹா...லேட் எல்லாம் இல்ல நீங்க வந்தாலும் லேட்டஸ்டாதான் வருவீங்க!!

      கால் வலிக்கு அந்த தெக்கினிக்கி யூஸ் பண்ணிப் பார்த்தீங்களா?!! சரி இங்கு வேற யாராவது ஐடியா கொடுக்கறாங்களானு பார்க்கலாம். கோமதிக்காவுக்கும் இருந்தது...அவங்களும் ஐடியா கொடுக்கலாம்...

      கீதா

      நீக்கு
    4. நன்றி கமலா அக்கா.

      வாங்க பானு அக்கா... கால்வலி தேவலாமா?

      நீக்கு
  18. வலைப்பூக்களில் உயிர்ப்புடன் இயங்கும் வெகுசில்வற்றில் எங்கள் ப்ளாக்கும் ஒன்று. சுவாரசியங்களின் கலவையாக திகழ்கிறது. அவ்வப்போது புதிய பகுதிகளை அறிமுகப் படுத்துவது அருமை.

    பதிலளிநீக்கு
  19. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  20. சிறைக்கைதியாக இருந்தால் என்ன? மனிதம் மரக்கவில்லை என்பது யோசிக்க வைக்கிறது. எல்லோரும் எப்போதும் கொடுமையானவர்கள் இல்லை என்பதை உணர்த்தும் பதிவு.
    பறவைகளை பாதுகாக்க மாணவர்களை பயிற்றுவிக்கும் பள்ளி வாழ்க.

    பதிலளிநீக்கு
  21. எ.பி.இடுகைகளை வாசகர் விமர்சிக்கும் புதிய பகுதியை இரு கரம் நீட்டி வரவேற்கிறேன்.
    நெல்லையார் விமர்சனம் சிறப்பு.
    நான் முதலில் எல்லா பதிவுகளையும் விமர்சிக்கப் போகிறார் என்று நினைத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  22. வெங்கட் விடுமுறையில் இருக்கிறாரா? பின்னூட்டங்களில் காணோமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா பானுக்கா வெங்கட்ஜி குடும்பத்துடன் எஞ்சாயிங்க்! ஆதியும் ரோஷிணியும் போயிருக்காங்க தில்லிக்கு

      கீதா

      நீக்கு
    2. வெங்கட் குடும்பம் டெல்லி வந்த சந்தோஷத்தில் வலையுலகத்திலிருந்து விடுப்பில் இருக்கிறார்!

      நீக்கு
  23. நெல்லை தலைப்பு அப்படித்தானே வீட்டுல சொல்றது அதான். சரி சரி நன்றி நம்மளையும் சொல்லிட்டு...நன்றி நன்றி ..அப்புறம் கூடவே ஒரு ஒரு ஒரு....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 1965 நு சொல்லிட்டு கீ நு மட்டும் சொல்லி...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்குத் தெரிஞ்சு அல்வா ஊர் சொல்லி வரும் நபரும் கூட கீ கூடவே பிறந்துவிட்டார்....என்ன கொஞ்சம் முன்ன பின்ன அம்புட்டுத்தான்!! அதுக்காத பொறக்கவே இல்லைனு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    இடையில் கீ ய வாரலைனா அல்வா ஊர்க்காரருக்குத் தூக்கம் வராது ஹா ஹா ஹா ஹா ஹா..அது சரி இந்த கீ யாரு?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேற யாரு அது.... கீதா ரங்கன்(க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்காகாகா) தான்.... ஹாஹா. நேர்ல என்னை நீங்க பார்க்கற வரைல இதுமாதிரி கலாய்க்கலாம்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா அது தெரிஞ்சுதானே சொன்னது!!!!

      நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அட போங்கப்பா அப்ப நேர்ல பார்த்துவிட்டால் கலாய்க்க மாட்டீங்களா?!!

      நேர்ல பார்த்தாலும் நீங்க என்னை கலாய்க்கலாம் நெல்லை. அப்புறமும் கலாய்க்கலாம்....நேர்ல பார்த்தா உங்களுக்குக் கலாய்க்க இன்னும் நிறைய கிடைக்கும் ஹிஹிஹி எல்லாம் கைக்கும் வாய்க்கும் உள்ள விஷ்யம் தான்.....அதை வைச்சே நீங்க ஓட்டலாம்! ஹா ஹா ஹா...

      ஃபோட்டோல பார்க்கறதுக்கும் நேர்ல பார்க்கறதுக்கும் வித்தியாசம் இருக்கும்னு சொல்லுவாங்கல்லியா அது போல நான் சாப்பாடு படம் போட்டு சொல்றதுக்கும்...... செய்யறதுக்கும் ஹா ஹாஹ் ஆ ஹா (ஹப்பா ஒரு எச்சரிக்கை விட்டாச்சு!! மீ ரன்னிங்க்.....)

      கீதா

      நீக்கு
    3. நேர்ல என்னைப் பார்த்த பிறகு, இந்த ஆளா என்னை ‘அக்கான்னு’ சொன்னது.. முன்னப்புன்ன கண்ணாடில தன்னைப் பார்த்திருப்பாரா என்று நீங்கள் எண்ணாதவரை சரி கீதா ரங்கன்.

      ஆனா என்கிட்ட சாப்பிடும் கட்டத்தில் , இது எக்சலன்ட் என்று பேர் வாங்கறது ரொம்ப கஷ்டம். குறைகளை டக்குனு கண்டுபிடிச்சுடுவேன். என் டிசைன் அப்படி. என்ன பண்ண?

      நான்செய்பவைகளை என் பையன் தாட்சண்யம் பார்த்து குறை சொல்ல மாட்டான் (அவன் என் efforts பார்ப்பான்.). என் பெண்முகத்துக்பு நேர சொல்லிடுவா. சில சமயம் எனக்கு நல்லாப் பண்ணியிருக்கேன் என்று தோன்றுவதிலும் குறைகள் இருந்தா சொல்லிடுவா, சாப்பிடமாட்டா.

      செய்முறையைப் படித்து படம் பார்த்தா மட்டும் செய்தது நல்லா வந்ததுன்னு சொல்லமுடியாது. என்மனைவி கருப்பட்டி வெந்தய தோசை பண்ணினா. அழகா வந்தது. ருசி பிடிக்கலை. வெந்தயம் வாசனை ஓவர்பவரிங் ஆக இருந்தது. அசட்டுத் திதிப்பும் வெந்தய வாசனையுமா இருந்தது. படங்கள் எடுத்தேன். இன்றுவரை எபிக்கு எழுதி அனுப்ப அவ அனுமதிக்கலை. இது காரைக்குடி செய்முறைதான், நிறையபேருக்கு பிடிக்கலாம்னு சொன்னேன். அவ ஒத்துக்கலை. நமக்கு டேஸ்டியா இல்லாத்தை எழுதக் கூடாதுன்னுட்டா.

      நீக்கு
  24. நெல்லை கலக்கிட்டீங்க !!

    கீதாக்கா கமென்ட்ஸ் ..நான் கூட அப்படி எதிர்பார்க்கலை!....

    ஸ்ரீராமின்இந்த கமென்டை இப்ப நீங்க போட்டுத்தான் பார்க்கிறேன் அன்னிக்கு ரொம்ப வரலைன்றதுனால பார்க்காம விட்டிருக்கேன்...

    //நமக்கெல்லாம் வாக்குரிமை இருந்து, கணக்கிடப்பட்டு வேறு ஏதோ காரணத்தால் வாக்களிக்க முடியாமல் போவது வேறு.......யாசகர்களோ, இதுமாதிரி அடித்தட்டு மக்களோ கணக்கெடுப்பிலேயே கணக்கெடுக்கப் பட்டிருப்பார்களா?”. இதில் பொதிந்திருக்கும் சமூகச் சிந்தனைதான் என்னை யோசிக்கவைத்தது. இந்த நாளின் சிறந்த பின்னூட்டம்/மறுமொழி இதுதான்//

    நானும் இதை அப்படியே வழி மொழிகிறேன்! ஸ்ரீராமின் கருத்தையும் இதை டாப் என்று சொன்ன உங்க கருத்தையும் சேர்த்து.

    அருமையான கருத்து!! உண்மையான கருத்து! பாஸுக்கும் சொல்லிடுங்க ஸ்ரீராம்....

    எல்லாரும் கலக்குறீங்கப்பா...

    நெல்லை எபி ய பத்தி நீங்க சொன்னது அத்தனைக்கும் நான் டிட்டோ போடுகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஸ்ரீராம் புதிய பகுதி சூப்பர் ஸோ க்ரான்ட் வெல்கம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. அதே பதிவுகள் பற்றி விமர்சகர் சொல்லி இருக்கும் கருத்துகளில் உங்களுக்கு எல்லாம் இருக்கும் மாற்றுக்கருத்துகளை - இருந்தால் - பின்னூட்டங்களில் பகிரலாம்.

      நீக்கு
  26. திடீர்...ன்னு புது உலகத்துள் புகுந்த மாதிரி இருக்கிறது...

    தளத்தில் புதுப் பகுதியைச் சேர்த்திருப்பது மேலும் மெருகூட்டுகின்றது..

    திருப்பதிக்கே லட்டு என்பது மாதிரி..

    இனிமைக்கே இனிமை..
    அழகுக்கே அழகு!..

    பொங்கும் பூம்புனல் - என்றொரு பாடல் நிகழ்ச்சி முந்தைய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் ஒலொபரப்பாகும்...

    நிகழ்வின் தொடக்க இசையே பரவசமாக்கி விடும்.....

    அந்த இசை கூட படிக்காத மேதை படத்தில் வருவது.. ஆ... ஜிவாஜி படம்!...

    அதைப் போல பொங்கும் பூம்புனலாய் விமர்சனப் பகுதி... மகிழ்ச்சியை அள்ளி வரட்டும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒலிபரப்பாகும்... என்று கொள்க..

      நீக்கு
    2. ஆம் துரை சார். பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியின் தொடக்க இசை இன்றும் எனக்கு ஞாபகம் உள்ளது. இனிமையான இசை.

      நீக்கு
    3. நன்றி துரை ஸார். உங்கள் அனுபவத்தை உங்கள் பாணியில் சொல்லி இருப்பது ரசிக்க வைக்கிறது.

      நீக்கு
    4. அடடா.... பொங்கும் பூம்புனல் இசை எனக்கு மறந்து விட்டதே.....

      நீக்கு
    5. பொங்கும் பூம்புனல் இசை என்பதைப் பார்த்ததும்

      பொங்கும் கடலோசை பாடல் நினைவுக்கு வந்துவிட்டது! ரொம்ப அழகான பாடல். ...முதல்ல அந்தப் பாடலோனு நினைத்துவிட்டேன்.. அழகான மெட்டு செம பாட்டு...

      கீதா

      நீக்கு
  27. பாஸிட்டிவ் செய்திகள் அனைத்தும் சிறப்பு! புதிய பகுதியான விமர்சனம் விரிவாக நீண்டு இருந்தாலும் ஒவ்வொரு பகுதி குறித்தும் விரிவாக விமர்சனம் செய்து அந்த பகுதியை படிக்காதவர்களையும் மீண்டும் படிக்கத்தூண்டும் வகையில் எழுதிய விதம் சிறப்பு. கூடுதல் பணிகளால் முன்பு போல பதிவெழுதவோ, தளங்களுக்கு சென்று வாசிக்கவோ முடிவதில்லை. கூடிய சீக்கிரம் நேரமேலாண்மை செய்து பழையபடி வர முயல்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தளிர் சுரேஷ். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைஇங்கு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வந்தால் இன்னும் மகிழ்ச்சி. எங்கள் தொடர்களில் பங்கும் கொண்டால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

      நீக்கு
  28. வளரட்டும் எங்கள் ப்ளாகின் புதுமுயற்சிகள் ஆனால் விமரிசிப்பவர்கள் நோ என்று நினைத்து எஸ் என்று எழுதக் கூடாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி.எம்.பி சார்... சொல்லவந்ததை சரியாச் சொல்லலையே நீங்க...

      நீக்கு
    2. அப்படி யாரும் எழுத மாட்டார்கள் ஜி எம் பி ஸார். அதே போல் தனக்கு சரியில்லை என்று தோன்றுவதை நாகரீகமான வார்த்தைகளில், காழ்ப்புணர்ச்சி இல்லாமல் எழுதவும் தயங்க மாட்டார்கள். நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

      நீக்கு
  29. இன்றைக்கு இடுகையில் சேர்த்த படம், காணொளி மற்றும் படங்களிலிருந்து எடுத்தேன். இது பாரிசில் ஒரு கம்பெனிக்காக பாரிசில் ஒரு ஓவியர் செய்துகொடுத்திருந்தது. அது கிட்டத்தட்ட 10 அடிக்கு 4 அடி உடைய 1/2 அடி டெப்த் உள்ள ஸ்கிரீன். எல்லா முகங்களும் மெதுவாக மாறிக்கொண்டே இருக்கும். விதவிதமான உணர்ச்சிகளுடன். 2016ல் அங்கு சென்றிருந்தேன். நான் படங்களும் சிறிது காணொளியும் எடுத்தபோது, இது பிரத்யேகமான ஓவியம் என்று அந்த கம்பெனி ஆஃபீசர் சொன்னார். அதனை எபிக்காக பகிர்ந்துகொண்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த காணொளி ஓவியத்தின் கான்சப்ட், "உன் முகம் நீ எப்படி வைத்துக்கொள்கிறாயோ அப்படிக் காட்சியளிக்கும். அதுவே அழகாக இருக்கலாம், கோபமாக இருக்கலாம், வெறுப்பைக் காண்பிக்கலாம்.. அந்த அந்த உணர்ச்சிக்குத் தகுந்தவாறு முகம் எப்படி அலங்கோலமாக மாறுகிறது பார்" என்று சொல்கிறார்ப்போல் இருக்கும்.

      நீக்கு
    2. ஓ நெல்லை நீங்க சேர்த்த படமா...நல்லாருக்கு நெல்லை..ஆமாம் கோபமா இருக்கலாம் வெறுப்பைக் காட்டலாம்

      காதலன் மட்டும் காதலிகிட்ட " கோபத்துல கூட நீ ரொம்ப அழகான ராட்சசியா இருக்கனு" ரெண்டும் கலந்து வஞ்சப் புகழ்சி அணில டயலாக் விடுவான்..ஹா ஹா ஹாஅ ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. ஆம், நெல்லைத்தமிழன் சேர்த்த படங்கள்தான் அது. நான் சேர்க்கவில்லை. விளக்கத்தையும் அவரே அளித்து விட்டார்.

      நீக்கு
  30. Review wee(a)kly posts is best and new way... Congratulation(s)...! But today review starting by non blogger...! (Only Jalra of EB only, non other blogger post)

    I am waiting for my (U) turn...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க டிடி... சமீப காலங்களில் உங்களிடம் சில புண்படுத்தும் வார்த்தைப் ப்ரயோகங்களைக் காண்கிறேன். பிளாக்கர் - நான் பிளாக்கர்... ஹா... ஹா...ஹா... குறுகிய வட்டம்.

      விமர்சனத்துக்கு யாரை அழைப்பது என்பதை நானே முடிவு செய்கிறேன். அவர்களிடம் வேண்டுகோளும் வைக்கிறேன். விமர்சனம் எனக்குதான் மெயிலில் வரும். அநாகரீகமான, புண்படுத்தும் கருத்துகள் அதில் இருந்தால் அவற்றை நீக்கியே வெளியிடுவேன். இதற்கு அர்த்தம், எங்களை பாராட்டும் கருத்துகளை மட்டுமே வெளியிடுவோம் என்று அர்த்தம் செய்து கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். போகப்போக(வாவது) எங்களை உங்களுக்குத் புரியும் என்று நம்புகிறேன்.

      நீக்கு
    2. //குறுகிய வட்டம்//

      அப்படி ஆகி விடக்கூடாது என்பதே என் எண்ணம்... எ.கா. :- வலைப்பதிவர்கள் மாநாடுகள்... இதற்கு மேலும் சொன்னால், அதற்கு பெயர் தற்.......?!

      வாரத்திற்கு மூன்று பதிவு மேல் உங்களுக்கு எழுத நினைக்கும் அவர், ஏன் ஒரு வலை + பதிவு ஆரம்பிக்கவில்லை...?

      புகழ் பற்றிய எனது பதிவுகளில், ஒவ்வொரு குறளுக்கும் தனி பதிவு இருந்தால் 'புரிந்து' கொள்ளும் அவர், இங்கு இடப்படும் அற்ப பதிவுகளுக்கு அரட்டை இட எவ்வாறு முடிகிறது....?

      வருகிறேன்... வேலை அழைக்கிறது...

      நீக்கு
  31. பதில்கள்
    1. உங்களை இன்று சந்திக்க முடியாமல் போனதில் வருத்தம். எனக்கும் சில கஷ்டங்கள் இருந்தன. அவற்றுக்காக செல்ல வேண்டி இருந்தது. அதனால் நம் சந்திப்பு இன்று நிகழவில்லை என்றாலும் சீக்கிரம் நிகழும்.

      நம்முடைய சொந்தக் கஷ்டங்களை மீறி ரிலாக்ஸ் செய்து கொள்ளும் இடமாக, சந்தோஷப் பறவைகள் கூடும் இடமாகத்தான் பதிவுலகைக் காண்கிறேன். கட்சி கட்டவோ, யாரையும் புண்படுத்தவோ அல்ல.

      நீக்கு
  32. ஸ்ரீராம் இன்று பதிவுல அந்த முகப் படங்கள் நல்லாருக்கு அதாவது பொருத்தமாக...ஒவ்வொரு முஅமும் ஒவ்வொரு எக்ஸ்ப்ரஷன்...நல்லாருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை இதற்கு மேலே பதில் சொல்லி விட்டார். நான் தாமதம் என்பதால் இப்போதுதான் சொல்ல முடிகிறது!

      நீக்கு
  33. கே வா போ கதைல எனக்குத் தோன்றிய ஒன்று ஜெனி தன் அப்பா கேட்கும் போது ஏன் சொல்லவில்லை என்பதே. பெண் பார்க்க வரும் ஆணிடம் சொல்லலாம் என்றால் அப்பாவிடம் சொல்லியிருக்கலாமே என்பதே.

    கதாசிரியர் வந்து ஒரு பதில் சொல்லியிருக்கலாமோ என்றும் தோன்றியது. இத்தனை பேர் அலசி ஆராய்ந்து சொல்லிய போது. தனி தனியாகச் சொல்லவில்லை என்றாலும் எல்லோருக்கும் சேர்த்து கருத்து.

    குமார் சொன்னால் தெரியும் நௌஷாத் கான் கருத்துகளைப் படித்திருப்பார் என்று நினைக்கிறோம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி/கீதா, பெற்றோரிடம் ஏன் சொல்லலை, என எல்லோருமே கேட்கிறீர்களே! ஒரு விஷயத்தை நினைத்துப் பார்த்தீர்களா?பெற்றோருக்குத் தெரிந்திருந்தாலும் இனி வரப்போகும் மாப்பிள்ளைகளிடம் இதைக் குறித்துப் பேசாதே என்றே சொல்லி இருப்பார்கள். சாதாரணமாகத் தன் பெண்ணுக்குத் திருமணம் ஆகணும்னு நினைக்கும் எல்லோப்பெற்றோர்களும் இப்படித்தான் நினைப்பார்கள். ஆனால் ஜெனியோ எதையும் மறைத்துத்திருமணம் செய்துக்க விரும்பலை. அதனால் பெற்றோரிடம் சொல்லலை! ஜிம்பிள்!

      நீக்கு
    2. கீதாக்கா உங்க பாயின்ட் ரைட்டுத்தான்..பெற்றோர் அபப்டித்தான் சொல்லுவாங்க. பெற்றோரே நிறைய இடங்கள்ல கல்யாணத்துல ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம்னு யாரோ டயலாக் அடிச்சத அட்வேண்டேஜ் எடுத்து மறைக்கத்தான் செய்யறாங்க...அதுவும் மிக முக்கியாமான விஷயங்களைக் கூட.....ஆனா ஜெனி கொஞ்சம் தைரியமான பெண்ணாத்தானே இருக்கா கதையில் அப்படித்தான் தோன்றியது ....அதனால எனக்கும் அப்படித் தோன்றியது கீதாக்கா

      கீதா

      நீக்கு
    3. ஆனால் நௌஷத்க்கான் மொத்தமாக பதில் அளித்து விட்டு சென்று விட்டார். குமார் விளக்கம் அளித்து இருந்தார். அதைப் படித்திருப்பீர்கள்.

      நீக்கு
    4. ஓ கொடுத்திருக்காரா பார்க்கிறேன் ஸ்ரீராம். அங்கு சென்றும் பார்க்கஅம போயிட்டேன் கரன்ட் அடிக்கடி போய் போய் வருகிறது...

      கீதா

      நீக்கு
  34. இன்றைய பாசிட்டிவ் செய்திகள் இரண்டும் மற்றும் அந்த மூன்றாவது பாசிட்டிவ் படமும் எல்லாமே நல்ல செய்திகள்.

    இளங்க்குமரன் போற்றுதற்குரியவர். சிறைக் கைதி செய்தி பார்த்த போது கொஞ்சம் எனது பரோல் குறும் படம் நினைவுக்கு வந்தது. கைதிகள் என்றால் அவர்கள் கொடூரமானவர்கள் அல்லர். அவர்கள் மனதிலும் ஈரம் உண்டு.

    புதிய பகுதி வரவேற்கத் தக்க ஒன்று. புதுமை. புதிதாக நிறைய செய்கிறீர்கள் ஸ்ரீராம்ஜி. நெல்லை தமிழனின் விமர்சனமும் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமை அன்று ஒவ்வொருவர் விமர்சிப்பார் இல்லையா?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளஸிஜி... உங்கள் கடைசிக்கு கேள்விக்கு பதில் 'ஆம்'.

      நீக்கு
  35. ஆனந்த விகடனில் பலர் எழுதிய ஒரு நாவலைப் பற்றி தி/கீதா, பானுமதி சேர்ந்து எழுதிய தொடர் குறித்த விமரிசனங்களில் பகிர்ந்திருந்தேன். இன்று அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்துட்டேன். அநேகமா 68-70 ஆம் ஆண்டுகளுக்குள் வந்திருக்கணும். 68 ஆம் ஆண்டிலேயே வந்திருக்கலாம். ஆனால் விகடன் பேப்பர்ப் பக்கங்களில் தேதி குறிப்பிடவில்லை. கல்கியில் குறிப்பிட்டிருப்பார்கள். இந்த நாவலின் தலைப்பு, "வான வில்" நாம் அனைவரும் நன்கு அறிந்த எழுத்தாளர் ஆன பிவிஆர் அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். யார் முடிச்சாங்கனு தெரியலை. முடிவுப் பகுதி கிடைக்கலை. ஆனால் "குயிலி" (சினிமா நடிகை இல்லை), டி.கே.டி.துரைராஜன், ஜோதிர்லதா கிரிஜா, ராஜேந்திரகுமார், எஸ்.லட்சுமி சுப்ரமணியம், தாமரை மணாளன், உஷா ரகுநாதன், எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி, முகுந்தன், பூர்ணம் விஸ்வநாதன்,காளத்தி நாதன் ஆகியோர் இதே வரிசையில் தொடர்ந்திருக்கின்றனர். தொடரின் அடுத்த பகுதிகள் கிடைக்கவில்லை என்பதோடு முடிவு என்ன ஆனது என்பதும் புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா புதிய தகவல். வெரி இன்ட்ரெஸ்டிங்க்.

      ஸ்ரீராம் இது கூட நாம் இங்கு செய்யலாமோ? இங்கும் நிறையப் பேர் எழுதுகிறோமே யாரேனும் ஸ்டார்ட் செய்ய ஒவ்வொருவராய் தொடர...நல்லாருக்கும் இல்லையா. ஒவ்வொருவரின் பகுதியும் அவரவர் சிந்தனைக்கேற்றபடி போகும் இல்லையா. நிறைய தெரிந்தும் கற்றும் கொள்ளலாம்...ஸ்வாரஸ்யமாக இருக்கும்....சாலஞ்சிங்காகவும் இருக்கும்...

      கீதா

      நீக்கு
    2. பலபேர் சமைத்தது எப்படி இருந்திருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை!
      என் கருத்தில், எழுத்து என்பது 4 x 400 ரிலே-ரேஸ் அல்ல!

      நீக்கு
    3. இந்தக் கதை பற்றி நான் கேள்விப்பட்ட நினைவில்லை கீதா அக்கா.

      நீக்கு
    4. இப்படி ஒரு முயற்சியை நான்கு வருடங்களுக்கு முன்னரே முன்னெடுத்து அப்போது சரியாக வரவில்லை கீதா... இப்போது மறுபடியும் தோன்றியிருக்கிறது. பார்ப்போம்.

      நீக்கு
  36. "இருவர்" எழுதியது தான் குமுதத்தில் வந்தது. சிவசங்கரியும், இந்துமதியும் எழுதி! பின்னர் பல சர்ச்சைகளுக்கு உள்ளாயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை வந்தது நினைவிலிருக்கிறது. கதையும், சர்ச்சையும் நினைவில் இல்லை.

      நீக்கு
  37. வியாழன் பதிவுக்கு துளசியின் கருத்தை அங்கு போட்டு வரும் போதும், அதற்கு முன்னரே இங்க ஸ்ரீராமின் சமூகக் கருத்தைப் பார்த்ததும், பாஸின் கருத்திலிருந்து எழுந்த மற்றொருகேள்வி...

    நாம வறுமையில் வாடுபவர்களின் ஓட்டு பற்றி பேசியிருக்கோம்....சாமியார்கள் ஓட்டு போடுவாங்களா? நான் இதுவரை அப்படி யாரையும் பார்க்கவே இல்லையே...கேள்விப்பட்டதும் இல்லையே. நடிக நடிகைகள் கூட போடுவதைக் கேக்கறோம்....இவங்க? யாரும் க்யூவுல வந்து நின்னத பார்க்கலை கேட்கலை

    சாமியார்கள் உலக பந்தங்களில் தலையிட மாட்டாங்க...அவங்க அதிலருந்து விலகி இருப்பவங்கனு சொன்னா ஹிஹிஹி ஏற்க முடியாது. ஏன்னா எல்லாரும் எல்லாமும் பேசுறாங்க....அப்பப்ப பரபரப்பை கிளப்பறாங்க அரசியல் மறைமுகமாகப் பேசுறாங்க அரசியல்வாதிகளை சந்திக்கறாங்க, மீடியாவுல நிறைய பேசுறாங்க...

    அதான் திடீர்னு பல்பு போட்டுச்சு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //,,சாமியார்கள் ஓட்டு போடுவாங்களா? நான் இதுவரை அப்படி யாரையும் பார்க்கவே இல்லையே...//

      ஒரு சாமியார் அல்லது மடாதிபதி - கர்னாடகாவில் என்று நினைக்கிறேன் - போல் பூத்திற்கு வந்து ஓட்டுப் போட்டுச் சென்ற வாட்ஸப் பார்த்தேன்.
      ஆனால், இவர்களெல்லாம் ‘துறவிகள்’ அல்ல. எல்லாவற்றையும் துறந்தவர்களா இவர்கள்? இல்லை.

      நீக்கு
    2. சாமியார்கள் வாக்காளர் லிஸ்ட்டில் கணக்கெடுக்கப் பட்டிருப்பார்கள். வாக்களிக்கிறார்களா என்பதுதான் சந்தேகம். ஏகாந்தன் சார்ச்சொல்லி இருப்பது விதி விலக்கு.

      நீக்கு
    3. ஏகாந்தன் அண்ணா அட!! ஸ்ரீராம் சொல்லிருப்பது போல விதிவிலக்கு!!

      ஆமாம் ல சரியான வார்த்தை துறவிகள்! துறவிகள் என்பதற்கும் சாமியார்கள் என்பதற்கும் வித்தியாசம் இருக்கே!! நல்ல பாயின்ட்!

      ஸ்‌ரீராம் சொல்லிருப்பது போல ஓட்டு போடுவாங்களா ந்றது சந்தேகம்தான்...

      கீதா

      நீக்கு
  38. என்ன, புதிய பகுதியா, அதுவும் விமரிசனப் பகுதியா? முதல் பகுதி வந்தும்விட்டதா!

    எங்கள் ப்ளாகும்
    எங்கள் எழுத்தும்
    மங்காத தமிழென்று
    சங்கே முழங்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹாஹாஹாஹா....

      நன்றி ஏகாந்தன் ஸார்....

      நீக்கு
    2. பாஸிடிவ் செய்திகள் அருமை. ஸ்ரீராமின் மந்திரக்கோல் புதுப்புது வகைகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஆரம்பம் நெல்லைத் தமிழனின் விமர்சனம். நான் ஒரு எங்கள் பிளாக் வாசகியாக நன்றாக ரஸிக்கிறேன்.அன்புடன்

      நீக்கு
  39. நெல்லை.. கன்ஸாலிடேட் பண்ணி இந்த மாதிரி தொகுப்பது சிரமமான காரியம் தான். அறிவேன்.. நல்ல முயற்சி. எங்கள் பிளாக்கின் சிரத்தில் இன்னொரு மயிலிறகு மிளிரட்டும்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!