புதன், 3 ஏப்ரல், 2019

புதன் 190403 :: காட்டிலே வண்ணத்துப்பூச்சி! + தொடர்கதை - 5


சென்ற வாரக் கேள்விக்கு, திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எழுதிய 

நான்கு மாத்திரையையும் பொடியாக்கி நன்றாக கலந்து, அதில் பாதியை சாப்பிட வேண்டும்...

என்பதுதான் மிகவும் சரியான பதில். 


நாலு மாத்திரைகளில், ஒவ்வொன்றிலும் பாதிப் பாதி சாப்பிடவேண்டும் என்பது லாஜிக்கலாக இருந்தாலும், கண் தெரியாதவர், ஒவ்வொரு மாத்திரையிலும் சரியாகப் பாதிப் பாதி பகுதி செய்து அதைச் சாப்பிடுவது என்பது மிக மிக மிக கடினமான விஷயம். 

அவ்வாறேதான் நீரில் கரைப்பதும். பாலைவனத்தில் தண்ணீர் கிடைக்காது. நானும் முதலில் நீரில் கரைப்பது அதில் பாதியைக் குடிப்பது என்றுதான் யோசித்தேன். ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று கேட்டு, கொடுத்துள்ள நிபந்தனைகளை ஏற்று, ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றால், மாத்திரைகளைப் பொடி செய்து, நன்றாகக் கலந்து, அதில் பாதியளவு சாப்பிடுவதுதான் அவர் உயிர் பிழைக்க ஒரே வழி ! 

திண்டுக்கல் தனபாலனுக்குப் பாராட்டுகள். முயற்சி செய்த எல்லோருக்கும் கை தட்டல். வாழ்க, திறமுடன்! 


கேள்விகள் : 

திண்டுக்கல் தனபாலன் : 

கீழ் வரும் பாடல் எந்தத் திருக்குறளின் விளக்கமாக அமைந்துள்ளது? 


காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே...
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே...
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்...

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க...
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க...
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை...


# அந்த அளவு குறளை ஆழ்ந்துணர்ந்து நினைவில் வைத்திருப்போர் பட்டியலில் நான் இல்லை.


& எனக்கும், திருக்குறளில் அவ்வளவு ஞானம் கிடையாது. ஆகவே, இந்தக் கேள்வியைப் பார்த்ததும், என்னுடைய நண்பர் அ.ம. காசி (ஹி ஹி புனைபெயர்தான்!) என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் கேள்வியை அனுப்பி, பதில் கேட்டேன். அப்புறமா ஃபோன் பண்ணு என்று பதில் மெசேஜ் அனுப்பினார். 

திங்கட்கிழமை அவருக்கு ஃபோன் செய்தேன். 'நண்பரே இன்று என்ன நாள் தெரியுமா?' என்று கேட்டார். பிறகு அவரே கட கடவென சிரித்தார். எனக்கு ஒரு மாதிரியா போயிடுச்சு. 

பிறகு சொன்னார்: 

" சொல்றேன் - எழுதிக்கப்பா. இந்தப் பாடல் இடம் பெற்ற படம்,  நினைத்ததை முடிப்பவன். அதில் நினைத்ததை முடிப்பவனாக வந்தவர், எம்ஜியார். ஆகவே, 'நினைத்ததை முடிப்பவன்' என்ற சொற்றொடருக்கு நானே ஒரு குறள் எழுதியிருக்கேன். இதுக்கு மேலே என்னை ஒன்றும் கேட்காதே " என்றார். 

அவர் சொன்ன அந்தக் குறள்: 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
எம்ஜியார்  ஆகப் பெறின்.
ஏப்ரல் ஒன்றாம் தேதி இந்த பல்பு எனக்குத் தேவையா !
துளசிதரன்:

1. கோடை விடுமுறையில் விளையாடவிடாமல், குழந்தைகளைப் (10, +2 மாணவர்களை அல்ல) பல வகுப்புகளுக்கும் அனுப்பி குழந்தைகளின் விருப்பம் பற்றி சிந்திக்காமல் அனுப்பும் பெற்றோர் பற்றி உங்கள் கருத்து என்ன?# அப்படியான பெற்றோர் தம் அளவுக்கு மீறிய ஆசைகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்ற ஆசை தவிர வேறு எண்ணம் இல்லை.

& மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சொல்கிறான், பாதிக்கப்பட்ட, பக்கத்து வீட்டுப் பையன்! 

2. தற்காலத்துக் குழந்தைகளில் பலரும் சுயமாகச் சிந்திக்கும் பழக்கம் பெற்றவர்களாக இருப்பது ப்ளஸ்ஸா மைனஸா?


# சிந்திக்கும் திறன் ப்ளஸ். அனுபவமின்மையால் திசை தப்பும் ஆபத்து மிகப்பெரிய மைனஸ்.

& எக்காலத்திலும் சுயமாகச் சிந்தித்தல் வரவேற்புக்குரியதே. ஆனால், தற்காலக் குழந்தைகள் பலர் அப்படி இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. 


ஏஞ்சல் : 

1,நமக்கு ஒரு விஷயம் பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அது உணவு ,உடை, திரைப்படம் ,அரசியல் கட்சி etc ..etc
இவற்றில் பிடித்ததை மட்டும் சொன்னால் போதாதா ? எதற்காக பிடிக்காத விஷயங்களை வரிசைப்படுத்தி பிறர்மீது நமது கருத்துக்களை திணித்தே ஆக வேண்டுமா ?


# பிடித்ததை மட்டும் ஏன் சொல்ல வேண்டும்? கேட்போரும் ரசிக்கட்டும் என்று தானே. பின் அதன் எதிர்ப் பக்கமும் இயல்பு தானே.

& சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர்களின் வாதங்களை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா? அவர் சார்ந்த அணியை மட்டும் ஆதரித்துப் பேசமாட்டார்கள். எதிர் அணியின் வாதங்களை கொஞ்சமாவது நையாண்டி செய்யாமல் இருக்கமாட்டார்கள். அந்தமாதிரிதான், பிடித்த விஷயங்களை சிலாகிப்பதும், பிடிக்காத விஷயங்களை சாடுவதும்! மேலும் கருத்துகளை சொன்னால் அது மற்றவர் மேல் திணிப்பது என்று ஆகுமா?  எனக்கு தோசை பிடிக்கும், உப்புமா பிடிக்காது என்று நான் சொன்னால், அது என்னுடைய கருத்து. அவ்வளவுதானே! இதுல என்ன கருத்துத் திணிப்பு! 
2, சமீப காலமா எல்லாவற்றுக்கும் ஏட்டிக்கு போட்டி எதிர்வினை என பல விஷயங்கள் நடக்கிறது இது அவசியம்தானா ?# அவசியம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இயல்பு தான்.

& ஏட்டிக்குப் போட்டி, எதிர்வினை எல்லாமே எல்லா காலத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. எதிர்வாதங்கள் (வீண்வாதங்கள், விதண்டா வாதங்கள் அல்ல!) அவசியமானவைதான். அவைகள்தாம் சமூகத்தின் மொத்த முன்னேற்றத்திற்கு அடிகோலும். 


3,கெட்ட விஷயங்கள் எண்ணங்கள் எப்படி உருவாகுது ?


# நல்ல எண்ணங்கள் நியாயமான ஆசைகளாலும் அல்லாத எண்ணங்கள் புறம்பான ஆசை அல்லது பொறாமை, சினத்தாலும் ஏற்படுகின்றன.

4,அன்பு செலுத்துவது அல்லது பிறரின் அன்புக்கு உரியவராக இருப்பது இதில் எது ரொம்ப ஈஸி ?


# இரண்டுமே ஈசிதான். உரியவராக இருப்பது சுகம்.

& பிரதி பலனை எதிர்பாராதவர்களுக்கு அன்பு செலுத்துதல் ஈஸி. பிறரின் அன்புக்கு உரியவராக இருத்தல் நம் கட்டுப்பாட்டில் இல்லை. அன்பு என்பது கடல் போன்றது. அதை எந்தப் பரிசுப்பெட்டிக்குள்ளும் அடைத்துக் கொடுக்கமுடியாது.  

5,மரணம் என்பது முடிவா இல்லை துவக்கமா ?

# இந்த விஷயத்தைப் பற்றிய அறிவு நம் அனைவருக்கும் ஒரே மாதிரி யானது. எனவே யாரும் எவர்க்கும் சொல்ல ஒன்றுமில்லை.

& மரணம், மரணித்தவர்களுக்கு முடிவு; மற்றவர்களுக்குத் துவக்கம். 
6,ஒரு பெரிய காடு அந்த காட்டுக்குள்ள பல மிருகங்கள் அதில் காட்டு ராஜாவா இருப்பது சுலபமா ? இல்லைன்னா முயலாவோ அணிலாவோ இருப்பது சுலபமா ?
நீங்க என்னவா இருக்க விரும்பறீங்க ?


# எதுவும் சுலபமில்லை. ஆமையாக இருத்தல் நலம்.

& வண்ணத்துப்பூச்சியாக! 
வாழும் சில கணங்கள் சந்தோஷமாக! 
சிறகடித்துப் பறக்கும் சுதந்திரமாக! 
பார்ப்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும்விதமாக! 
தன் உழைப்பில் மட்டும் வாழும் உயிரினமாக! 
7, சமுதாயத்துக்கு நம்மளோட அடுத்த தலைமுறைக்கு ஏதாவது நல்லது செய்யணும்னா என்ன செய்வீங்க ?


# "சமுதாயத்தளவில்" நல்லது செய்வது தனிமனிதரளவில் அவ்வளவு எளிதல்ல. இயலுமானால் பள்ளிகளின் தரம் மேம்பட முயற்சிக்கலாம்.

& எனக்கு நல்லது என்று படுவதை எல்லாம் இதமாக எடுத்துச் சொல்வேன். ஏற்க மறுப்போரை புன்னகையோடு கடந்து செல்வேன். 
8, சிலர் எதற்கெடுத்தாலும் முன்கோபிகளாகவும் சிலர் எதற்கெடுத்தாலும் ரூல்ஸ் ராமானுஜங்களாகவும் சிலர் டவுட்டிங் தாமஸ்களாகவும் ,இன்னும் சிலர் நம்பிக்கை நாராயணன்களாகவும் சிலர் அவநம்பிக்கை அம்புஜங்களாகவும் இருப்பதன் காரணம் என்ன ? இவர்களின் இயல்பை மாற்றவே முடியாதா ?


# பல்வகை பல்சுவை. ரசிக்க வேண்டியதை மாற்ற முயல்வதா ?

& முன்னேற்றத்திற்கு எல்லாமே தேவைதான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு குணத்தையும் தேர்ந்து கையாளவேண்டும். Different strokes for different people. ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும், பாடுற மாட்டை பாடிக்கறக்கணும். நான் எப்பவுமே ஆடிக்கொண்டிருப்பேன்; நான் எல்லாத்துக்கும் பாடிக்கொண்டிருப்பேன் என்றெல்லாம் நிலைப்பாடு எடுத்தால் சரிப்பட்டு வராது. 
9, உண்மை என்றால் என்ன ? அது அறிவியலா ? ,கணிதமா ?அல்லது கலையா ?


# உண்மை எல்லாமும்தான்.

& உண்மை என்பது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் ஒன்று. சத்யமேவ ஜெயதே. ஸத்யம் பரம் தீமஹி. 
10,உங்களுக்கு சொந்தமுள்ள ஒரு பொருள் இன்னொருத்தர் கையில் இருப்பதை பார்க்கும்போது எப்படி உணர்வீர்கள் ?# அது தரப்பட்டதா, விற்கப் பட்டதா, கவரப் பட்டதா என்பதப் பொறுத்து நிம்மதி, மகிழ்ச்சி அதிர்ச்சி.

============================இந்த வாரம் நாங்க ஒன்றும் கேட்கவில்லை. 

நன்றி, மீண்டும் சந்திப்போம்! 

======================================================


நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே - 
- - - - - - - - - - - - - -  -
ஷ்ரவண் :

திருமணமாகி முதல் வருடம் பேசாமல் இருந்த சுற்றமும், நட்பும் அதற்கு பிறகு, "என்ன விசேஷம்?" "எனி குட் நியூஸ்?" என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

நானும் ஸ்ருதியும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் எங்களுக்கும் நமக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்று  தோன்ற ஆரம்பித்து விட்டது.

இன்னும் தாமதித்தால், "அந்த கோவிலுக்கு போங்கள்", "இந்த டாக்டரை பாருங்கள்.." என்று ஆளாளுக்கு அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்து விடுவார்களே என்று வேறு ஒரு பயம். அப்போதுதான் எங்களின் இரண்டாவது திருமண நாள் வந்தது.

அதற்கு ஸ்ருதிக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும். இதுவரை ஸ்ருதிதான் எனக்கு பரிசுகள் கொடுத்திருக்கிறாள், அவள் வெளியூர் செல்லும் பொழுதெல்லாம் எனக்கு, குர்தா, டீ ஷர்ட், வாலட்,  பெர்ஃபியூம் என்று ஏதாவது வாங்கி வருவாள். 

ஏன் எங்களின் முதல் திருமண நாளுக்கு கூட எனக்காக ஒரு காஸ்ட்லி  ரிஸ்ட் வாட்ச் வாங்கி, "கண்ணனிடம் எடுத்துச் சொல்லடி, கிளியே கன்னி நான் அவன் மேல் கொண்ட காதலை..." என்று பாடியபடியே கட்டி விட்டாள்.

"நான் தான் பக்கத்திலேயே இருக்கேன், நேரே சொல்லிட வேண்டியதுதானே? எதுக்கு கிளியையெல்லாம் தூது விடுகிறாய்..? என்று நான் கேட்டதற்கு, "ஐயே, ரொம்பத்தான்.. நான் அடிக்கடி உன்னை விட்டுட்டு, வெளியூர் போயிடறேன், அப்போ, எனக்கு பதிலா உன் கையை இது கட்டிக்கும்.."

"என்னை, கட்டி போட்டுட்டேங்கற..?"

"இல்லையா பின்ன..?"

எனக்கு என்னவோ இது போன்ற சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுப்பதிலெல்லாம் அத்தனை விருப்பம் இல்லை. நான் ரொம்ப மெனக்கெட்டு பரிசு வாங்கிக் கொண்டு வந்துவிட்டு, அது அவளுக்குப் பிடிக்கவில்லையென்றால்..?

ஆனால் என் அக்கா என்னை திட்டினாள், "சே! நீ வேஸ்ட்!, சும்மா சாக்கு சொல்ற, இந்த வருஷம் என்ன பண்ண போற..?

"தெரியல, யோசிக்கிறேன்.."

"எங்கேயாவது வெளியூர் போய்ட்டு வாங்களேன், நான் வேணா ஸ்பான்சர் பண்றேன்" என்றவள், "போனை ஸ்ருதிகிட்ட கொடு," என்றாள்.

என் அக்காவிடம் பேசிய ஸ்ருதி, ஓகே, ஓகே, என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தது எனக்குத் தவறாகத் தோன்றவில்லை.

நாங்கள் முதலில் கூர்க் செல்லலாம் என்று நினைத்தோம், ஆனால் என் அலுவலகத்தில் வேலை நெருக்கடி அதிகம் இருந்ததால், ஈசிஆரில் இருக்கும் ரிசார்ட் ஒன்றுக்கு செல்ல முடிவு செய்தேன்.

வாகன நெரிசல் அதிகம் இல்லாத அதிகாலையிலும், இரவிலும் லாங் டிரைவ் போக மிகவும் பிடிக்கும். அப்படி போகும்பொழுதெல்லாம் நாங்கள் சினிமா பாடல்கள்தான் கேட்போம். எம்.எஸ்.வி., முதல் இன்றைய அனிருத், ஷான் ரௌல்டன் வரை எல்லோர் பாடல்களும் அதில் இருக்கும். அனிருத்தின் இசை எங்கள் இருவருக்குமே பிடிக்கும். இவ்வளவு சின்ன வயதில் எத்தனை திறமை!

அந்தப் பாடல்களை ஸ்ருதி பாட முற்பட்டால்," ப்ளீஸ், அத விட்டு விடு, நீ ரொம்ப கிளாஸிக்கலா பாடற.." என்று நான் அவளை ஓட்டினால், அவள் வேண்டுமென்றே, சினிமா பாடல்களுக்கு ஸ்வரம் பாடி படுத்துவாள்.

ஆனால், இன்று ஏனோ மெளனமாக வந்தாள். இப்போதுதான் புதிதாக இந்த வழியில் பயணிப்பது போல தீவிரமாக வெளியில் வேடிக்கை பார்த்தாள்.

"என்ன கண்ணு, டல்லாயிருக்க? அந்த துலா உன்னோட கச்சேரியை தாறுமாறா விமர்சனம் பண்ணிட்டானா?, டோண்ட் ஓரி, அவனை போட்டுடலாமா?" என் ஜோக்கிற்கு அவள் லேசாகச் சிரித்தாள். மீண்டும் அதே மௌனம்.

"என்னாச்சு? ஆர்  யூ நாட் வெல்?"

"ஐ ஆம் ஆல் ரைட், தூக்கம் வரது" 

"தூங்கு" என்று நான் சொன்னதும், கார் சீட்டை பின் பக்கம் சாய்த்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். ரிசார்ட் வந்த பிறகும் அவளிடம் எப்போதும் இருக்கும் உற்சாகம் இல்லாததால் "என்னாச்சு ஸ்ருதி? நாம சந்தோஷமா டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு வந்திருக்கோம், நீ இப்படி மூஞ்சியை தூக்கி வெச்சுண்டா என்ன அர்த்தம்? என்ன ப்ராப்லம்? நீ சொன்னாத்தான் என்னால ஹெல்ப் பண்ண முடியும்"

"நான் என்னிக்காவது உன்கிட்ட, எனக்கு காரியர்தான் முக்கியம், அதனால குழந்தை பெத்துக்கமாட்டேன்னு சொல்லியிருக்கேனா?" 

கேட்கும்பொழுதே ஸ்ருதியின் கண்கள் கலங்கியது. அவள் அருகில் உட்கார்ந்து அவள்  கைகளை எடுத்துக் கொண்ட என் புறங்கையிலும் கண்ணீர் துளிகள் விழுந்தன.

அவள் முகத்தை நிமிர்த்தி, "அழாமல் சொல்லு, யாரு என்ன சொன்னா?"

"எல்லோருமேதான், கேக்கற எல்லோரும் என்னவோ, நான் என்னோட காரியருக்காக குழந்தை பெத்துக்காமல் இருக்கேன் என்பது போலத்தான் பேசறா. எனக்கு அதெல்லாம் பெரிசு இல்ல, அன்னிக்கு உங்க அக்கா போனில், "என்ன நீ போஸ்ட்போன் பண்ணிண்டே இருக்க?  கச்சேரியையெல்லாம் கொஞ்ச நாள் மூட்டை கட்டி வை" னு சொன்னா, இன்னிக்கு கிளம்பும் பொழுது அம்மா, "கேரியர் முக்கியம்தான், குடும்பமும் முக்கியம். கேரியரில் முன்னுக்கு வரணும்கறதுக்காக குழந்தை பெத்துக்கறதை தள்ளிப்போடக்கூடாது"னு சொல்றா நானா தள்ளிப்போடறேன்?"

நான் இல்லையென்று தலையசைத்து அவளை என்னை நோக்கி திருப்பி உட்கார வைத்தேன். 

அவள் கண்களை துடைத்து," நீ ஒரே ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும் கண்ணம்மா,  ஒரு குழந்தையோட  வருகையால என் வேலை எந்த வகையிலும் அஃபக்ட் ஆகாது, பட் நீ ஒரு குரோயிங் ஆர்ட்டிஸ்ட், குழந்தை பெத்துக்கறதுனால உன் கேரியர் பாதிக்கப்படும்னு நீ நினைக்கலாம்னுதான் எல்லோருக்கும் தோணும்.  நான் அம்மாகிட்ட பேசறேன். ஷி வில் அண்டர்ஸ்டாண்ட்"

"இல்ல, எனக்கு ஒரு குழந்தை வேணும்." குழந்தை போல ஸ்ருதி சொன்னதும் நான், "பெத்துக்கலாம். பட் குழந்தை பிறக்க மொதல்ல இந்த ஆன்சைட்டி கூடாது. இட் இஸ் நாட் எ டார்கெட் டு அச்சீவ், இட் ஷுட் ஹாப்பன்" என்று நான் கூறியதும், "நீ எம்.பி.ஏ.தானே படிச்ச, டாக்டர் மாதிரி பேசற." என்று பெர்கர் பெயின்ட் விளம்பரத்தில் வரும் பெண் குரலில் ஸ்ருதி பேசியதும், சிரித்துக் கொண்டே அவள் தலையில் செல்லமாக முட்டினேன்.  என்னைத் தழுவிக் கொண்டாள் அவள். 

எங்களது இரண்டாவது திருமண நாள் கொண்டாட்டம் மகிழ்ச்சியான அனுபவமாகவே இருந்தது. இங்கிதமில்லாமல் குறுக்கிட்ட அந்த விகேயை மன்னித்துவிடலாம்.

செலிபிரிட்டி ஸ்டேட்டஸ் VS சந்தோஷம் என்பதில் எப்போதும் ஜெயிக்கும் செலிபிரிட்டி ஸ்டேட்டஸ் இந்த முறை கொஞ்சம் பின்னடைந்தது.

------மீட்டல் தொடரும்

113 கருத்துகள்:

 1. காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்.

  டிடி எப்போதுமே விடை சொல்லிவிடுவார். ஒரே ஒரு டவுட்டு. பாதியாக உடைத்துச் சாப்பிடுவது கடினம் என்றால் பொடித்து அதைக் கலக்கும் வரை ஓகே...அதிலும் பாதி சரியாகச் சாப்பிட முடியுமா? ஹிஹிஹிஹி மீ ஓடறேன் டிடி கௌ அண்ணா என்னை ஓட்டுவதற்குள்..

  விடைகள் கொஞ்சம் வாசித்தேன். பக்கத்து வீட்டுக் குழந்தை ஹா ஹா அது!!! மிச்சத்திற்கு அப்புறம் வரேன். கதையும் வாசிக்க அப்புறம் வருகிறென்...வேலை இழுக்கிறது!!
  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதா ரெங்கன்.

   நீக்கு
  2. போன வார பதிலில் இன்னும் பல சந்தேகங்களை சொல்லி இருந்தேன்... அதில் வெப்பத்தை உறிஞ்சும் + பிரதிபலிக்கும் விடை சரியோ என்று தோன்றுகிறது...

   நீக்கு
  3. வெப்பத்தை உறிஞ்சும் / பிரதிபலிக்கும் தன்மை எல்லாம் 'கண்டு'பிடிப்பது கண் தெரியாதவர்களுக்கு ரொம்பக் கஷ்டம். என் வீட்டில் இருக்கின்ற இராண்டு வெவ்வேறு நிற மாத்திரைகளை வெயிலில் ஒரு மணி நேரம் வைத்திருந்து பார்த்தேன். எல்லாம் ஒரே வகையான சூடுதான் - கண்ணை மூடினாலும், திறந்தாலும்!

   நீக்கு
  4. பிறவி குருடருக்கு மட்டுமே இது சாத்தியம்...

   மற்றவர்களுக்கு...?

   இப்போது உள்ள சங்கிகளுக்கு மூளை வேலை செய்யாதது போல... நன்றி ஐயா...

   நீக்கு
 2. பாடலின் ஆரம்ப வரிகளை யோசித்தால், அனைவருக்கும் தெரிந்த குறள் உடனே ஞாபகம் வரும்...

  கேள்வி பதில்கள் அருமை...

  "நீங்க மரமாக போறீங்க..." "நீங்கள் பறவையானால்...?" இப்படி இரு பதிவுகள் எழுதி ஆகி விட்டது... சகோதரி ஏஞ்சல் அவர்களின் 6-வது கேள்வியில் ஒரு பதிவு தோன்றி மறைந்தது... அது : நீங்கள் காட்டு விலங்கானால்...?

  கதை (இன்று) மகிழ்ச்சியுடன் பயணிக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க DD... அந்தக்குறள் என்ன என்று உங்கள் பதிவில்தான் சொல்வீர்களா?

   நீக்கு
  2. பல குறள்களை சொல்லலாம்... ஆனால் ஒரு குறள் உள்ளது... "10 திருக்குறள்களை சொல்லு" என்று பள்ளிக்கூட குழந்தைகளிடம் கேட்டால், அதில் ஒன்று, இந்த குறளாக இருக்கலாம்...! ஹா... ஹா...

   நீக்கு
 3. கண் தெரியாதவர் மாத்திரையை பொடி பண்ணி அதில் பாதி சாப்பிடுவதா? இது என்ன உதுக் கதை? கண் தெரியும்போதே பெருங்காயக் கட்டியை பொடி பண்ணினால் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு திசைக்குப் பறக்குது. கருப்பட்டி, வெல்லம் பொடியாக்கறதுக்கே திறமை வேண்டியிருக்கு....

  என்னவோ தீர்வு சொல்றீங்க. இல்லைனு சொன்னா சண்டைக்கு வந்தாலும் வந்துடுவீங்க... எதுக்கு வேண்டாத வேலை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நெல்லை .... பெருங்காயம் மட்டுமல்ல மாத்திரையும் எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்ளும்தான். பிளாஸ்டிக் கவருக்குள் வைத்து பொடிக்கலாமே....

   நீக்கு
  2. ப்ளாஸ்டிக் கவருக்கு எங்கே போவார்? கிடைச்சாலும் அது ப்ளாஸ்டிக் கவர்தான்னு எப்படித் தெரியும்? கையினால் தொட்டுப் பார்த்து உணர்ந்தாலும் கவராக இல்லாமல் வேறே ஏதானுமாக இருந்தால்? என்னைக் கேட்டால் மாத்திரைகளே வேண்டாம்! உயிரை விடறதே நல்லதுனு தோணிடும். :))))))))

   நீக்கு
  3. நான் இந்த எல்.ஜி கட்டிப்பெருங்காயம் ரொம்பவே உலர்ந்திருப்பதை வாங்குவதில்லை. சென்னையில் இருந்தவரையிலும் கந்தகோட்டத்தில் அருகேயே கிடைக்கும் செட்டியார் கடைப்பெருங்காயம், பெருங்காயப் பவுடர் தான். இங்கே வந்தப்புறமா கோபால ஐயங்கார் கடைப் பால்பெருங்காயக் கலவை! கையால் கிள்ளியே போட்டுட்டலாம். அதிகமாப் போடக் கூடாது!

   நீக்கு
  4. My point is, under the given conditions, this is the only best solution. All the four tablets, placed in a plastic cover or hand kerchief - powdered using stone, mixing well and eating half portion. Cutting each tablet by a blind person is more unlikely with or without tools.

   நீக்கு
  5. கேள்வியே முட்டாள்தனம் என்று வெளிப்படையாக சொன்னால் தான் தங்களுக்கு புரியுமா ஐயா...? இதில் சமாளிப்பு வேறு...!

   இது தான் இன்றைய இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமக்களின் அவல நிலை... என்ன செய்ய...?

   கொடுமையடா சாமி...!

   நீக்கு
  6. உங்கள் அளவு புத்திசாலித்தனம் இங்கு யாருக்கும் இல்லாத அவலநிலை DD. உங்களின் நாகரீகமான, மரியாதையான பின்னூட்டங்களுக்கு நன்றி.

   நீக்கு
  7. அப்படி ஒரு நினைப்பு சிறிது வந்தாலே எழுதுவதை விட்டுவிடுவேன்...

   கேள்வி கேட்பதை பற்றி போன வார புதன் அன்றே சொல்லி உள்ளேன்... கவனிக்க...

   நீக்கு
 4. எழுதுபவர் மூடுக்கேற்ப தொடர்கதை பிரயாணிக்குதா?

  பதிலளிநீக்கு
 5. கண் தெரியாதவர் எதிலே, எங்கே, எப்படி வைச்சு எதைக் கொண்டு மாத்திரைகளைப் பொடி செய்வார்? அதிலே பாதினு எப்படி எடுத்துப்பார்? அவருக்கோக் கண் தெரியாது! பாதிக்கும் கூடவோ அல்லது குறைத்தோ இருந்தால் என்ன செய்ய முடியும்? கேள்வியே அபத்தம்னு அன்னிக்கே நினைச்சேன். ஆனாலும் யாரானும் பதில் சொல்றாங்களானு பார்த்தேன்.ம்ஹூம், இந்த பதில் எல்லாம் சரியாய்த் தெரியலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா, போன வாரத்தில் இன்னும் சில பதில்களும், பல சந்தேகங்களும் சொல்லி இருந்தேன்... அதனால் பிறந்தது ஒரு பாட்டு...! + குறள் கேட்டு...?!

   https://engalblog.blogspot.com/2019/03/190327.html

   நீக்கு
 6. கதை இன்னிக்கு என்ன சவசவ? யாரு அந்த விகே? குறுக்கிட்டது? புரியலை! ஆனால் இன்னிக்கு என்னமோ இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுண்டு நடந்துக்கறாப்போல் வந்திருக்கு! இன்னிக்குக் கதை எழுதினவருக்கு சோகமோ அல்லது சண்டை, பூசலோ பிடிக்காது போல!

  பதிலளிநீக்கு
 7. அன்பின் KGG அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 8. புதிருக்கு விடை சொன்ன தி.த.ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  வருடம் ஒன்று கடந்தாலே ஊர் வாயை அடைப்பது கடினம்தானே...

  பதிலளிநீக்கு
 9. புதிரின் விடை -
  என்னத்தைச் சொல்றது!?..

  பார்வை இல்லாத ஒருவர் பாலைவனத்துக்கு எப்படிப் போனார்?..
  எதற்காகப் போனார்?..

  மாத்திரைக் கொடுத்த புண்ணியவானே பொடியாக்கிக் கொடுத்திருக்கலாம்....

  அதை விடுங்க!...

  வெட்டவெளிப் பாலையில -
  பார்வையற்ர ஒருவர்
  மாத்திரையப் பொடி செய்றதுக்கு
  ரெண்டு கல்லை எங்கிட்டுக் கூடி எடுக்குறது?....

  மாத்திரய முழுசா முழுங்குனாலும்
  (விகடன் பாணியில்) பொடித்து (!) விழுங்கினாலும் தண்ணீர் - தண்ணீர் வேணுமே!...

  எப்படியோ சுபம்..
  தனபாலன் அவர்களின் சாதுர்யம் வாழ்க..

  இதைப் போன வாரமே எழுதியிருக்கலாம்...

  தனியா வர்றதுக்கு தயக்கமா இருந்தது...

  கஞ்சி ஊத்த ஆள் இல்லைன்னாலும்
  கச்சை கட்ட ஆள் இருக்கு!..ந்னு ஊர்ல சொல்லுவாங்க...

  பேசாமப் போயி பார்வையற்ற அவருக்கு ஒத்தாசை செஞ்சிருக்கலாம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கஞ்சி ஊத்த ஆளில்லைனாலும் கச்சை கட்ட ஆளிருக்கு... - கிராமத்து எழுத்துலதான் இப்படி பழமொழிகள் பளிச்சிடும்.. அருமை

   நீக்கு
 10. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 11. கேள்வி, பதில்கள் எல்லாம் அருமை.
  திண்டுக்கல் தனபாலன் மாத்திரையை பொடி செய்து சாப்பிட சொன்ன விடைக்கு நிறைய கேள்விகள் எழுந்து இருக்கிறது.
  பாலவனத்தில் எப்படி மாத்திரையை பொடி செய்வார் என்று.
  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் மாத்திரையை ஒவ்வொன்றாக எடுத்து அதில் பாதி மாத்திரையை பல்லால் கடித்து விழுங்க வேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாதி மாத்திரை - பாலைவனப் பரமசிவம்! திருநீலகண்டா சரணம்!

   நீக்கு
  2. அம்மா, போன வாரத்தில் இன்னும் சில பதில்களும், பல சந்தேகங்களும் சொல்லி இருந்தேன்... அதனால் பிறந்தது ஒரு பாட்டு...! + குறள் கேட்டு...?!

   https://engalblog.blogspot.com/2019/03/190327.html

   நீக்கு
  3. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
   கள்ளத்தால் கள்வோம் எனல் .

   இந்த் குறள் சரியாக இருக்குமா ?

   நீக்கு
  4. இல்லை அம்மா... இன்னும் சிறிது தேடல் தொடரலாம்... நன்றி...

   நீக்கு
  5. ஆஹா .கோமதி. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல உங்கள் பதில்.
   என்னை மாதிரி, கையில் காலண்டரை வைத்துக் கொண்டே நாலாம் தேதி அமாவாசையை ஐந்தாம் தேதி என்று சொல்லுவது எந்த வகையில் சேர்த்தி.

   நீக்கு
 12. 2. தற்காலத்துக் குழந்தைகளில் பலரும் சுயமாகச் சிந்திக்கும் பழக்கம் பெற்றவர்களாக இருப்பது ப்ளஸ்ஸா மைனஸா?


  # சிந்திக்கும் திறன் ப்ளஸ். அனுபவமின்மையால் திசை தப்பும் ஆபத்து மிகப்பெரிய மைனஸ்.
  கேள்வி பதிலிம் அருமை.

  பதிலளிநீக்கு
 13. 6,ஒரு பெரிய காடு அந்த காட்டுக்குள்ள பல மிருகங்கள் அதில் காட்டு ராஜாவா இருப்பது சுலபமா ? இல்லைன்னா முயலாவோ அணிலாவோ இருப்பது சுலபமா ?
  நீங்க என்னவா இருக்க விரும்பறீங்க ?

  # எதுவும் சுலபமில்லை. ஆமையாக இருத்தல் நலம்.

  அருமையான கேள்வி அருமையான பதில்

  பதிலளிநீக்கு
 14. கதையில் இன்னொரு புதிய நபர் வந்தால் மாற்றம் வருமா? என்று கேட்டு இருந்தார் ஒறு பதிவில்.
  அந்த புதிய நபர் குழந்தை என்றால் மாற்றம் வரும் என்று நம்பலாம்.

  பதிலளிநீக்கு
 15. என்ன இன்று காத்து வாங்குகிறது? ஸ்ரீராம், பேக்கிங் மும்முரத்தில் இருப்பார். கீதா ரங்கனுக்கு இணையம் படுத்தலா? வெங்கட் என்ன ஆனார்? அதிரா நேற்று பதிவு பார்த்துவிட்டு மனதிற்குள் பதிவு போட்டு விட்டாரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம் அடுத்த வாரத்துக்கான கேள்விகளா?

   நீக்கு
  2. ஓ! அப்படி ஒண்ணு இருக்கோ?

   நீக்கு
  3. // இதெல்லாம் அடுத்த வாரத்துக்கான கேள்விகளா? //

   இந்தளவு உள்ளது இந்த தளத்தின் நிலைமை...! நாட்டிற்கும் இதே நிலை...

   புரிந்தவர்களுக்கு நன்றி...

   நீக்கு
  4. புரியாதவர்களுக்கும் நன்றி!

   நீக்கு
 16. //எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
  எம்ஜியார் ஆகப் பெறின். //
  ஹா ஹா ஹா!
  கடைசி கேள்விக்கான பதிலையும் மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 17. எண்ணியல் எம்ஜியாராகப் பெறின் - உண்மையா? அப்படி நான் படிக்கலையே... அவருக்கும் நிறைய ஏமாற்றங்கள் கடைசி காலத்தில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சொன்னது அந்தப் படத்தின் தலைப்பிற்கு!

   நீக்கு
  2. அந்த படத்தை தான் முழுவதும் பார்த்து உள்ளீர்களா...? தலைப்பிற்கு அர்த்தம் தெரியுமா...? சும்மா சங்கிகள் போல் முட்டு கொடுக்க கூடாது... நன்றி...

   நீக்கு
  3. படம் பார்த்ததில்லை. அதன் இந்தி வடிவம் பார்த்துள்ளேன். சச்சா ஜூட்டா. முட்டு எதுவும் கொடுக்கவில்லை. நான் சங்கி இல்லை. சாதாரண மங்கி!

   நீக்கு
  4. //சும்மா சங்கிகள் போல்//

   மிகவும் கௌரவமான வார்த்தைப் பிரயோகங்கள். மாண்பு காக்கப்படுகிறது போல...

   நீக்கு
  5. கண்ணை நம்பாதே,உன்னை ஏமாற்றும் பாடல் கண்ணில்லாதவர் பதிவுக்குப் பொருத்தம்.
   யாரைத்தான் நம்புவதோ பாடலும் பொருத்தம் தனபாலன்.

   நீக்கு
 18. கதை எதிர்பாராத ஒரு திசையில் செல்கிறதே..? யார் அந்த புதிய வி.கே.? வில்லன் என்ட்ரி?

  பதிலளிநீக்கு
 19. குறள் சொல்வதற்கு அருகதை இல்லாத அந்த புண்ணியவானை, புனைபெயர்தான் கொண்ட அந்த பூனையை (அ.ம. காசி) சந்திக்க முடியுமா...?

  பாடல்களாலே அந்த மகானை கேள்வி கேட்க வேண்டும்...? உங்களால் முடியுமா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //குறள் சொல்வதற்கு அருகதை இல்லாத அந்த புண்ணியவானை,//

   குறள் சொல்வது ஒன்றுதான் தகுதி என்றால் எங்களிடம் அந்தத் தகுதி கிடையாது.

   எங்களுக்கு மிக மிகச் சில குறள்கள்தான் தெரியும்.. உதாரணமாக யாகாவாராயினும் நாகாக்க... தன்னைத்தான் காக்கின்

   நீக்கு
  2. அதற்காக நல்லதொரு குறளை கெடுக்க வேண்டுமா...?

   ஸ்ரீராம் சார் என்னை என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள்... அவையே எனக்கு வளர்ச்சி... குறளை விட்டு விடுங்கள்... நன்றி...

   நீக்கு
  3. ஹா... ஹா... ஹா... நல்ல திசை திருப்பல்.

   நான் உங்களை மட்டுமல்ல, யாரையும் திட்டும் குணம் கொண்டவன் அல்ல.

   அப்படி இருக்க குறளை யாராவது திட்டுவார்களா?

   நீக்கு
 20. //இந்த வாரம் நாங்க ஒன்றும் கேட்கவில்லை. //

  அப்போ மீ ஒரு கொஸ்ஸ்சன் கேய்க்கட்டோ?:).

  காசிக்குப் போனால், நமக்குப் பிடிச்ச ஏதாவது ஒன்றை அங்கு விட்டுவிட்டு வரோணுமாம்:), சமீபத்திலதான் பரவலாகப் பேசப்படுது ஸ்ரீராம் காசிக்குப் போகப்போறாராம்? அப்போ அனுக்காவைக் கூட்டிப்போகப் போகிறாரோ?:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கேள்வி அதிரா... காசிக்குப் போனால் பொதுவா, ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம் ஆகியவற்றை விட்டுவிட்டு வருவார்கள் (பொதுவா அது தனக்கு விருப்பமானதா இருக்கணும். எனக்குத் தெரிந்தவர்கள், புடலங்காய், கொய்யாப்பழம், கொத்தவரை போன்றவைகளை விட்டு விடுவார்கள்). ஸ்ரீராமும் ஏதேனும் விடுவாரா இல்லை ப்ரேமா விலாஸ் முந்திரி அல்வா, கோவில்பட்டி கடலைமிட்டாய் போன்றவைகளை விடுவாரான்னு எனக்கும் கேட்க ஆசைதான்.

   நீக்கு
  2. காசிக்குப் போனால் பிடிச்சதுனு இல்லை அதிரடி. பிடிச்ச காய்கள், பழங்கள்,கொட்டைகள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை விடணும். இப்போ உங்களுக்குக் கத்திரிக்காய் உயிர் எனில் கத்திரிக்காயை விடணும். பழம் வேறெ ஏதேனும் ஒன்று. ஆப்பிள் பிடிக்குமெனில் ஆப்பிள், இல்லைனா நாவல்பழம்,கொய்யா இப்படி ஏதேனும் ஒன்று இலை எனில் வாழை இலை, போன்ற இலைகளை விட முடியாது என்பதால் ஆலிலையை விடச் சொல்கின்றனர். ஆலிலையை நாம் சாப்பிடுவதும் இல்லையே!

   நீக்கு
  3. அநேகமா ஸ்ராத்தம் போன்றவற்றில் சமைக்கும் காய்களான கொத்தவரை, அவரை, பாகல், புடலை, சேம்பு, சேனை போன்றவற்றிலும் மா, பலா போன்ற பழங்கள், இலைகள் போன்றவற்றில் இருந்தும் விடச் சொல்லுவார்கள். இதில் வாழை சம்பந்தப்பட்ட எந்தப் பொருளையும் விடக் கூடாது! ஏனெனில் மங்கல காரியங்களில் இருந்து எல்லாவற்றிற்கும் வாழை முக்கியம். வெற்றிலையும் விடக் கூடாது!மங்கலப் பொருள்! ஆனால் மாம்பழமோ, பலாப்பழமோ மிகவும் பிடிக்குமெனில் அதை விடலாம். அதே போல் காய்களும்.

   நீக்கு
  4. கேள்வி ரொம்ப வில்லங்கமா இருக்குதே!

   நீக்கு
  5. //ஆலிலையை நாம் சாப்பிடுவதும் // - ஆலிலையில் நாம் சாப்பிடுவது என்று வரணும்.. முக்கிய விஷயங்களைச் சொல்லியிருக்கீங்க கீசா மேடம்.. நீங்க என்ன விட்டீங்கன்னு எழுதலையே...

   நீக்கு
  6. ஓ நெல்லைத்தமிழன், கீசாக்கா நன்றி நன்றி. அப்போ அங்கு வச்சு இதை விடுகிறேன் எனச் சொல்ல்லிட்டால், பின்பு சாகும்வரை தொடவே கூடாதோ? இதனாலதான் காசிக்குப் போவது பெரும்பாலும் வயதான பின்னர்தானோ...

   அப்போ நெல்லைத்தமிழன் போனால்.. அவரை மாங்காய் ஐட்டம் எதுவும் சாப்பிடக்கூடாது என சொல்லோணும்.. முக்கியமாக வடுமாங்காய் ஹா ஹா ஹா:).

   நீக்கு
  7. ஆலம் இலையை விடுவது என்பது தப்புத்தானே.. அது கடவுளைப் பேய்க்காட்டுவது போல எல்லோ வரும்... நாம் விரும்பி உண்பது விரும்பிச் செய்பவற்றுள் ஒன்றைத்தானே விடோணும்.

   நீக்கு
  8. பிடித்த ஒன்றை விடுவது என்பதின் தாத்பர்யம் வேறு. அது பற்றி தனி பதிவாக ஒன்று எழுதுகின்றேன். எ பி யா அல்லது ந ஏ வா?

   நீக்கு
  9. காசிக்குப் போகும் ஸ்ரீராமுக்கு வாழ்த்துகள்.

   நீக்கு
  10. //பிடித்த ஒன்றை விடுவது என்பதின் தாத்பர்யம் வேறு. அது பற்றி தனி பதிவாக ஒன்று எழுதுகின்றேன். எ பி யா அல்லது ந ஏ வா?// waiting

   நீக்கு
  11. இதிலே கணவன், மனைவி இருவருமாகச் செல்லும்போது கணவன் எதை விடுகிறாரோ அதைத் தான் மனைவி விடணும். மனைவிக்கு எனத் தனியாகக் கிடையாது! :)))) எங்களைக் கோவைக்காய், நாவல் பழம், ஆலிலை ஆகியவற்றை விடச் சொல்லி அங்கே இருந்த கர்நாடகா புரோகிதர் சொன்னார். கோவைக்காய் நாங்க ஏற்கெனவே அதிகம் சாப்பிட மாட்டோம், அதோடு ச்ராத்தத்தில் பயன்படுத்துவதில்லை என்று சொன்னோம். கர்நாடகாவில் உண்டாம். ஆகவே அவற்றையே விடச் சொல்லிச் சொன்னார். எங்களுடன் வந்த என் மாமியார் கொத்தவரைக்காயையும் வேறே ஏதோ பழம், இலை விட்டாங்க!

   நீக்கு
 21. ///"இல்ல, எனக்கு ஒரு குழந்தை வேணும்." குழந்தை போல ஸ்ருதி சொன்னதும் நான், "பெத்துக்கலாம். பட் குழந்தை பிறக்க மொதல்ல இந்த ஆன்சைட்டி கூடாது.///


  ஆஆஆஆஆஆஅ ஆரம்பமாகிடுச்சூஊஊஊஊஊஊஉ அடுத்து டிவோஸ்தேன் ஹா ஹா ஹா:))..

  இன்றைய எழுத்து கெள அண்ணனின் எழுத்துப் போலவும் இருக்கே:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! டைப் செய்த எழுத்துகளில் கூடவா உங்களுக்கு அடையாளம் தெரியுது! ஆனா பாருங்க எனக்கு இந்த வகைக் கதைகள் எழுதும் அளவுக்கு இதுவரை திறமை இருந்ததில்லை! இனிமேல் வரக்கூடும்.

   நீக்கு
 22. வணக்கம் சகோதரரே

  கேள்வி பதில்கள் அருமை. சகோக்களின் கேள்விகளும், பதில்களும் நன்றாக இருந்தன.

  குழந்தைகளின் விருப்பம் பற்றி கவலையுறாமல் கோடை விடுமுறையில் வகுப்புகளுக்கு அனுப்புவது பற்றி...

  /அப்படியான பெற்றோர் தம் அளவுக்கு மீறிய ஆசைகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்ற ஆசை தவிர வேறு எண்ணம் இல்லை./

  ரசித்தேன்.. ஆசைகளை அடையாளம் கண்டு கொள்ளும் அந்த நேரத்திற்காக குழந்தைகளைத்தான் உபயோகப்படுத்திக் கொள்வதா... ஆசைகள்தான் எல்லை கடந்ததாயிற்றே.!

  /மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சொல்கிறான், பாதிக்கப்பட்ட, பக்கத்து வீட்டுப் பையன்! /ஹா ஹா ஹா. பாதிப்பின் உச்சகட்டம் போலும்.!

  மரணம் என்பது முடிவா இல்லை துவக்கமா?

  /மரணம், மரணித்தவர்களுக்கு முடிவு; மற்றவர்களுக்குத் துவக்கம். /மிகவும் ரசித்தேன். ஆம். மரணத்தை பற்றிய சிந்தனை புதிர்களுக்கு..முடிவை தேடும் துவக்கம்.

  அனைத்து கேள்வி பதில்களும் சிந்தனையை தூண்டுவதாக அருமையாக உள்ளது.

  சகோதரர் தனபாலன் அவர்கள் சொல்வது போல் பொடித்து சரி பங்காக்கி சாப்பிடலாம்.
  அருமையாக பல பதில்கள் சொன்ன அவருக்கும் பாராட்டுக்கள்.

  தாம் வெளிப் பிரயாணத்திற்கு செல்லப் போகிறோம் என உணர்ந்த அந்த பார்வை குறையுள்ளவர் முன் ஜாக்கிரதையாகத்தான் பயணித்திருப்பார். ஏனெனில் உயிர் பற்றிய கவலை அனைவருக்கும் பொதுதானே.!மாத்திரைகள் வைத்திருக்கும் கவர்களிலோ, இல்லை, பாட்டில்களிலோ கண்டு பிடிக்கிற மாதிரி ஏதேனும் வித்தியாசங்கள் வைத்திருந்தால் ஸ்பரிசம் மூலம் உணர்ந்து கொண்டு இலகுவாக அந்தந்த மாத்திரையை எடுத்து உட்கொள்ளலாமே.! ஆனால் பாலைவனத்திலும் கடவுள் இருக்கிறான். காப்பாற்றும் தருணத்தில் மாத்திரைகளை அடையாளம் காண்பிக்க யாரையேனும் அனுப்புவான். ஏதோ என்னாலான கருத்துரை...பகிர்வுக்கு மிக்க நன்றி.

  தொடர்கதை ஸ்வாரஸ்யமாக செல்கிறது. வாழ்க்கையில் எந்த இடத்திலும் கேள்விகள்தான் நம்மை சிக்க வைக்கின்றன. கேள்விகளை தவிர்க்கவும், தகுந்த பதில் சொல்வதற்கும், "அவன்" அருள் முழுமையாக இருக்க வேண்டும். தொடர் கதையை தொடர்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 23. தாங்க்ஸ் கௌதமன் சார் அன்ட் எங்கள் பிளாக் டீம் .

  //வண்ணத்துப்பூச்சியாக!
  வாழும் சில கணங்கள் சந்தோஷமாக!
  சிறகடித்துப் பறக்கும் சுதந்திரமாக!
  பார்ப்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும்விதமாக! //

  அதே அதே நான் நினைத்ததும் அதே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது கேள்விகள் தொடரும்ம்ம்ம் :)

   நீக்கு
  2. ///எனது கேள்விகள் தொடரும்ம்ம்ம் :)///

   ஆஆஆஆஆஆஆஆஅ ஹையோ வைரவா என்னைக் காப்பாத்துங்கோ.. கிளவிகள் கொண்டுவரப்போறா அஞ்சு.. சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே கர்:))..

   அஞ்சு என்னிடமும் சில கேள்விகள் இருக்கே:)) ஒண்ணு கேட்டிட்டேன் :))

   நீக்கு
 24. மிக நன்றியா? மிக்க நன்றியா?(இதை அடுத்த புதனுக்கான கேள்வியாகவும் கொள்ளலாம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதிலென்ன ஜந்தேகம் பானுமதி அக்கா.. மிக்க நன்றிதான்:))... நேக்கு டமில்ல டி ஆக்கும்:)).. ஹா ஹா ஹா..

   நீக்கு
  2. மிக மிக நன்றி, மிக்க நன்றி!

   நீக்கு
  3. எங்களுக்கு நீங்க வாங்கின டீ //யிலயே ஓராயிரம் டவுட்ஸ் இருக்கு தெரியுமோ :) @miyaaw

   நீக்கு
  4. ///எங்களுக்கு நீங்க வாங்கின டீ //யிலயே ஓராயிரம் டவுட்ஸ் இருக்கு தெரியுமோ :) @miyaaw///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கெள அண்ணன்.. அதிராவின் “டி” யில உங்களுக்கு ஜந்தேகம் எப்போதாவது எழுந்ததுண்டோ?:)..

   நீக்கு
 25. கேள்வி பதில்கள் வழமை போல....

  கதை - நன்றாகவே செல்கிறது. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 26. 1, அறிவு ஞானம் போன்ற நல்லவற்றை இயல்பாய் முன்னோரிடமிருந்து வந்ததுன்னு ஏற்கும் மனித மனம் மற்ற கெட்ட குணங்களை மட்டும் அப்படி ஏற்க மறுப்பதேன் ?

  2, பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாதுன்னா ? அப்போ நமக்கு எதுக்கு பணம் ? இப்படிப்பட்ட ஆழ் சிந்தனைகள் எனக்கு அடிக்கடி தோணுது காரணம் என்னவாயிருக்கும் ? உங்களுக்கும் இப்படிப்பட்ட சிந்தனைகள் கேள்விகள் தோன்றியதுண்டா ?

  3, பொய் தெரியும் அது என்ன வெள்ளை பொய் ,பச்சை பொய் ? white lie ? அப்போ கருப்பு பொய் என்றும் ஒன்று இருக்கா ?

  4, அழகு என்பது என்ன ? அது ஏன் சிலருக்கு சிலர் மட்டும் மிக மிக அழகா தெரியறாங்க ?
  இந்த கேள்விக்கு அனுஷ் ,தமன்னா ,கீ சு , பாவ்ஸ் படங்கள் பயன்படுத்த தடையில்லை :)

  5, உலக சினிமா தரம் ,உலக சினிமா தரம் என்கிறார்களே அப்படின்னா என்ன ?
  ஒரு படத்தை சமீபத்தில் பார்த்தேன் எனக்கு ஒண்ணுமே புரியலை அதான் கேட்கிறேன் .

  6, ஆடி மாதத்துக்கு மட்டும் நிறைய பழமொழிகள் இருக்கு ஆனா மற்ற மாதங்களுக்கும் அப்படி இருக்கா ?

  7, ஏழேழு ஜென்மம் அப்படி எதற்கு சொல்றாங்க ? அதன் அர்த்தம் என்ன ?

  8, சங்கீத சபாக்களில் உள்ள கேன்டீனில் உணவு பிரமாதமாயிருக்கும் என்று படிச்சிருக்கேன் அது உண்மையா ? அதற்க்கு காரணம் என்ன ? அப்படி சமீபத்தில் நீங்க ருசித்த சபா கேன்டீன் உணவு என்ன ?

  9, ஆன்மீகமும் சமயமும் ஒன்றா வெவ்வேறா ?

  10, அதிகமிகுந்த கோபம் வரும்போது தனியே இருக்க விரும்புவீர்களா இல்லைன்னா அதை மட்டுப்படுத்த யாராவது உடனிருந்து உற்சாகப்படுத்துவது நல்லதென்று நினைப்பீர்களா ?


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //2, பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாதுன்னா ?//

   முடியாதுன்னு:)) நீங்களே ஒரு முடிவுக்கு எப்பூடி வந்தீங்க?:) இப்போ கெள அண்ணனுக்கு ஹெட் சுத்துதாம்:)).

   ///4, அழகு என்பது என்ன ? அது ஏன் சிலருக்கு சிலர் மட்டும் மிக மிக அழகா தெரியறாங்க ?///

   யூஊஊஊ மீன்ன்ன்ன்ன் அதிராவைத்தானே ஜொள்றீங்க அஞ்சு:)) ஹா ஹா ஹா ஹையோ நேக்கு ஷை ஷையா வருதே:)).

   //6, ஆடி மாதத்துக்கு மட்டும் நிறைய பழமொழிகள் இருக்கு ஆனா மற்ற மாதங்களுக்கும் அப்படி இருக்கா ?///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது ஏ கொஸ்ஸன்ஸ்ஸ்ஸ் என்பதால் இங்கு தடா போடப்ப்டுகிறது:)).. இது அதிராவைப்போன்ற சுவீட் 16 களும் உலாவரும் இடமென்பதை மனதில் வைக்கவும்:)).. ஹையோ கூரையில கல்லுகள் விழும் சத்தம் கேய்க்குதே:)).. சே..சே.. அது மழையாகத்தான் இருக்கும்:))

   நீக்கு
  2. ஆடி மாத பழமொழி ஆடிப்பட்டம் தேடிவிதை ஆடி காத்துக்கு அம்மி பறக்கும் ஆடி சீர் தேடி வரும்னு இதில் எங்கே ஏ கேள்விஸ் கர்ர்ர்ர் மியாவ்

   நீக்கு
  3. கேள்விகள் கேட்டதற்கு நன்றி. நிச்சயம் பதில் அளிப்போம்!

   நீக்கு
 27. ///10, அதிகமிகுந்த கோபம் வரும்போது தனியே இருக்க விரும்புவீர்களா இல்லைன்னா அதை மட்டுப்படுத்த யாராவது உடனிருந்து உற்சாகப்படுத்துவது நல்லதென்று நினைப்பீர்களா ?///

  அல்லோ மிஸ்டர் அஞ்சு.. இது கோபப்படுவோரைப் பார்த்துக் கேய்க்க வேண்டிய கேய்ள்வி:)) கெள அண்ணனுக்குத்தான் கோபம் வராதே லைக் அதிரா:))... ஹா ஹா ஹா நம்மள நாமளேதேன் புகழோணும் பின்ன நெல்லைத்தமிழனோ இல்ல ஸ்ரீராமோ இல்ல கீசாக்காவோ வந்து புகழுவார்கள் கர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹ்ஹஹ்ஹா :) கோபம் நியாயமான காரணங்களுக்கு எங்கள் எல்லாருக்கும் வரும் உங்களைத்தவிர ..பூனைகளுக்கு கோபம் வந்த படீர்னு அடிக்க தோணுமாம் அப்டியா மியாவ் :)

   நீக்கு
  2. சாது மிரண்டால் காடு கொள்?ளாது” :)
   பீஈஈஈஈஈஈஈஈஈஈ கெயார்ஃபுல்... ஹையோ இது எனக்குச் சொன்னேன்ன்னாக்கும்:))

   https://i.gifer.com/JFP.gif

   நீக்கு
  3. கதை சுவாரஸ்யம். யாரது நடுவில் வந்தது. அவரவர் குணாதிசயங்களுக்கு ஏற்றமாதிரி கதையில் புயலும் தென்றலும்.

   நீக்கு
 28. கேள்வி பதில்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.

  எனது கேள்விகளுக்கும் பதில் அளித்தமைக்கு நன்றி. அழகான பதில்கள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 29. முழு பதிவையும் இன்றுதான் வாசித்தேன் கௌ அண்ணா.

  பதில்களில் வண்ண்த்துப் பூச்சியை மிகவும் ரசித்தேன்.

  1. உறவினர் அல்லது நண்பர் வீட்டு நிகழ்ச்சி/விசேஷ நாளை மறந்த அனுபவம் உண்டா?

  2. ஆற்றில், அருவியில் குளித்த அனுபவம்?

  3. 40 வயசு நாய் குணம், 60வயசு பேய் குணம் - என்று சொல்லப்படுவது காணப்படுகிறதா? அனுபவம் உண்டா?

  4. கல் ஆனாலும் கணவன். புல் ஆனாலும் புருஷன்? (3, 4 கேள்விகளுக்கு நகைச்சுவையான பதில்கள் வரும் என்று நம்புகிறேன் ஹிஹிஹி)

  5. அம்மா, அப்பா....தாத்தா, பாட்டி இந்த இரு பொசிஷன்களில் எதை நீங்கள் மிகவும் ரசிக்கின்றீர்கள். அனுபவிக்கின்றீர்கள்?(ஆசிரியர்களில் எல்லோருமே தாத்தாக்கள் தான் ஸ்ரீராம் உட்பட!!!!!!! (அவர் தங்கை பேத்தி) !!!!!!!.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @அதிராவ் ஓடியாங்க இதை கவனிக்கலை நீங்க
   //(ஆசிரியர்களில் எல்லோருமே தாத்தாக்கள் தான் ஸ்ரீராம் உட்பட!!!!!!! (அவர் தங்கை பேத்தி//

   நீக்கு
  2. ////.தாத்தா ஆகிட்டார்ர்ர்ர்//// வந்துட்டேஏஏஏஏஏன்ன்ன்ன் அஞ்சூஊஉ:)... என்னாதூஊஊ ஶ்ரீராம் டாட்டா காட்டிட்டாரோஓஓஓஓ அப்போ கொன்போமா காசிக்குப் பிளேன் எடுத்திட்டா போலும்:) இதென்ன புயுப் பலக்கம்:) சொல்லாமல் கொள்ளாமல்:)

   நீக்கு
  3. கேள்விகளுக்கு பதில் அளிப்போம். (கிண்டல்களுக்கு சிரிப்போம்)

   நீக்கு
 30. தொடர்கதை.. இந்த அத்தியாயம் இனிதாக நகர்ந்தது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!