செவ்வாய், 16 ஏப்ரல், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை – ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா” – நெல்லைத் தமிழன்


‘தீதும் நன்றும் பிறர் தர வாரா”
 –  நெல்லைத் தமிழன் --

“ஏன் யாரிடமும் பேசாம இருக்கீங்க? நானும் ஒரு வருஷமாப் பாத்துக்கிட்டிருக்கேன். எந்த வம்புக்கும் போறதில்லை. வேலையைச் செய்யறீங்க. வேளா வேளைக்கு என்ன போடறாங்களோ அதைச் சாப்பிடறீங்கா. ஆனா யார்கிட்டயும் பேசறதில்லை. எதுக்கு துக்கத்தை மனசுல வச்சுக்கிட்டிருக்கீங்க. மத்தவங்கள்ட சொல்லும்போதுதானே ஆறுதல் கிடைக்கும்?”

“சையத் BHபாய்.. எனக்கு யார்கிட்டயும் பேசப் பிடிக்கலை. உங்களை நான் கவனிச்சிக்கிட்டே இருக்கேன். உங்களைப் பார்க்கும்போது என் அப்பாவைப் பார்க்கிற மாதிரி இருக்கு. அதான் நீங்க வந்து பேசும்போது எனக்கு முகத்தைத் திருப்பப் பிடிக்கலை”

“தம்பி…50 வயசுகூட உங்களுக்கு ஆகலை. இன்னும் வாழ்க்கைல எவ்வளவோ தூரம் போகணும். இன் ஷா அல்லாஹ்… கடவுள் அருளால உங்க பிரச்சனை தீர்ந்து வெளி உலகத்தை சீக்கிரமே நீங்க பாப்பீங்க. அப்போ வாழ்க்கையைத் தொடர நீங்க தெம்பா இருக்கவேண்டாமா? அதுக்குள்ளயே குமைஞ்சிக்கிட்டு உங்கள நீங்களே வருத்திக்கிறீங்களே. அப்படி என்னதான் ஆச்சு?”

“BHபாய்.. நான் உள்ள வந்தப்போ எல்லோரும் என்னைக் கொலைகாரன், கூட தொழில் செஞ்சிக்கிட்டிருந்த பார்ட்னரையே கொன்னவன் என்றுதான் நினைச்சுக்கிட்டிருப்பாங்க. அதுலயும் இறந்தது அந்த அரசியல் கட்சிப் பிரமுகரோட தம்பிங்கறதுனால அவங்க ஆட்களும் என்மேல ரொம்ப கோபத்துல இருப்பாங்க. ஆனா நடந்தது என்ன என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்”

“அதான் பத்திரிகைலகூட போட்டிருந்தாங்களே.. குடிபோதைல வந்தவன் துப்பாக்கியைத் தூக்கும்போது, தடுப்பதற்காகப் பிடிச்சபோது, அந்தக் களேபரத்துல அவனே அவனைச் சுட்டுக்கிட்டான்னு. அரசியல்வாதின்றதுனால, போலீஸ் மூலமா உங்களை உள்ளதூக்கி வச்சிட்டாங்க. நல்ல வக்கீலைப் பிடிச்சு வாதாடினா சீக்கிரம் வெளில போயிடலாமே… இதுக்கு எதுக்கு வருத்தப்படணும்?”

“இல்லை BHபாய்… நான் வாழ்க்கைல எங்க தவறினேன்னு தெரியலை. உங்ககிட்ட பகிர்ந்துக்கிட்டாலாவது என் மனச்சுமை குறையுதான்னு பார்க்கிறேன்”

என்னோட அப்பா என்னையும் என் அண்ணனையும் ரொம்ப ஸ்டிரிக்டா வளர்த்தார். வீட்டுல சாப்பாட்டுக்குக் கஷ்டம்தான். அவரு சாதாரண வேலைல இருந்தார். இருந்தாலும் பணத்தைச் சேமிக்கறதுல காட்டின அக்கறையை, எங்களுடைய அடிப்படை விருப்பங்களை நிறைவேத்தணும்ங்கறதுல காண்பிக்கலை.  எனக்கு அது ரொம்ப கஷ்டமா இருந்தது. என் அண்ணனால் அதனைத் தாங்க முடியலை. அவன் சின்ன வயசுலயே ரவுடிகளோட சேர்றது, படிக்காம ஊரைச் சுத்தறதுன்னு கெட்டுப் போயிட்டான். நான் பல்லைக் கடிச்சிக்கிட்டு படிச்சு, பேங்க் வேலைக்கு முயற்சி செஞ்சி முதல்ல வேலைக்குப் போனேன். அப்புறம் யூனியன்ல சேர்ந்து மத்தவங்களுக்கும் உதவினேன். சின்ன வயசுல பட்ட கஷ்டத்துனால, நிறைய சம்பாதிக்கணும்னு உத்வேகம். மெதுவா வேலையோட சேர்ந்து வேற தொழில்களிலும் இறங்க ஆரம்பிச்சேன்.”

“அதுல தவறில்லையே… அல்லா எத்தனையோ வாய்ப்புகளை இந்த உலகத்துல கொடுத்திருக்கான். தேவையானவங்க அதைப் பயன்படுத்திக்கறதுல தப்பில்லையே”

“ஆனா BHபாய்..ஒவ்வொன்றிர்க்கும் பின்னால அதுக்கேத்த விளைவுகள் இருக்கும்கறது எனக்கு தெரியாமப் போச்சு. கடுமையா உழைச்சேன். நிறைய காசு தொழில்கள்ல இருந்து கொட்ட ஆரம்பிச்சது. ரெண்டு பசங்களும் பிறந்தாங்க. எனக்குக் கிடைக்காதது எல்லாம் அவங்களுக்குக் கிடைக்கணும்னு நினைச்சேன்”  சிந்தனையில் ஆழ்ந்தார் சுனில்.



*****

“ஏங்க… சின்னவன் பெயில் மார்க் வாங்கியிருக்கான். பரத் ஜஸ்ட் பாஸ். 7வது 8வதிலேயே இப்படி இருந்தாங்கன்னா, அப்புறம் என்ன பண்ணறது”

“கொஞ்சம் நீ அவங்களைப் படிக்கச் சொல்லக்கூடாதா? வேணும்னா டியூஷனுக்கு அனுப்பேன். என் வேலையே எனக்கு ரொம்ப இருக்கு. இதுல நான் எங்க அவங்க கிட்ட பேசறது. நீயே பாத்துக்கோ”

“நீங்க அவங்கள்ட அப்போ அப்போ காசு கொடுக்காதீங்கன்னு சொன்னாக் கேட்டாத்தானே… சும்மா சினிமா, நண்பர்களோட சுத்தறதுன்னு இருக்காங்க”

“இது ஒரு விஷயமா… நான் அந்த வயசுல இருக்கும்போது இதெல்லாம் கிடைக்காம எவ்வளவு ஏங்கியிருக்கேன் தெரியுமா? நான் நிறைய சம்பாதிக்கிறேன். பணம் நிறைய இருக்கு. என் பசங்க அதை அனுபவிக்காம வேற எதுக்கு அந்தப் பணம்”

*****
“அப்பா இந்த பிறந்த நாளுக்கு என்ன வாங்கித்தர்ற?  என் ஃப்ரெண்ட்ஸ்லாம் நல்ல பைக் வச்சிருக்காங்க”

“உங்களை ஸ்கூலில் கொண்டுவிடத்தான் காரும், அதை ஓட்ட ஆளும் இருக்குல்ல. அப்புறம் என்ன.. எல்லாம் காலேஜ் படிக்கும்போது பாத்துக்கலாம்”

“ஏம்பா.. நாங்க என்ன குழந்தைகளா…. கார்ல போய் இறங்கறதுக்கு. உங்க பைக்கைத்தான் எனக்கு ஓட்டத் தெரியுமே. எனக்குன்னு ஒரு பைக் வேணும்”

“சரிடா… வாங்கித்தர்ரேன்”

“அப்ப எனக்கு?”

“உனக்கு அடுத்த வருஷம் வாங்கித்தர்றேன். இந்த வருஷம்தானே 10வது படிக்கற”

**
“ஏங்க… பரத் சிகரெட் பிடிக்கறான் போலிருக்கு. அவனுடைய பாக்கெட்ல சிகரெட் பெட்டி பார்த்தேன்”

“இது ஒரு விஷயமா? அந்த அந்த வயசுல வர்ற பழக்கம்தானே… கண்டிச்சா நமக்குத் தெரியாம பிடிப்பான். அதுனால பரவாயில்லைனு சொன்னா நம்ம எதிர்லயே பிடிப்பான். இதைக் கண்டுக்காத”

“நீங்க பாட்டுக்கு ரெண்டுபேருக்கும் மாசத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய் பாக்கெட் மணி கொடுக்கறீங்க. இது நல்லதுக்கா”

“உனக்குத் தெரியாது ஜிக்கி… எனக்கு அந்த வயசுல எவ்வளவு ஏக்கம் இருந்ததுன்னு. வளர்ற பசங்கதானே… ஃப்ரெண்ட்ஸோட அங்க இங்க போவாங்க. போகட்டும் விடு”

*****
“பரத்… அந்த புரோக்கர் மூலுசந்த் ரெண்டு லட்ச ரூபாய் தரணும். காலேஜ் முடிச்சுட்டு வரும்போது, போய் வாங்கிட்டு வந்திடு.. அப்புறம் பரத்.. ஃப்ரெண்ஸுகளோடு சேர்ந்து பாருக்கெல்லாம் போற போலிருக்கு”.

“இல்லப்பா… போன வாரம் என் ஃப்ரெண்டோட பர்த் டே பார்ட்டி. அவங்க அப்பா எங்களுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணினாருப்பா”

“சரி.. சரி… குடிச்சுட்டு பைக் ஓட்டிடாதே. உமேஷைக் கூப்பிட்டால் கார் கொண்டு வருவான்..  ஆமாம்.. பசங்களோட சேர்ந்துக்கிட்டு குலு மனாலி போகப்போறயாமே…. ஃப்ளைட்ல போகக்கூடாதா? எதுக்கு பைக்லலாம் போறிங்க?”

“பைக்ல போனாத்தான் ஜாலி. நீங்க கவலைப்படாதீங்கப்பா. சரத்தும் எங்களோட வர்றான்”

“அங்க நல்ல ரிசார்ட்ல தங்குங்க. வேணும்னா நான் ஏற்பாடு பண்ணவா?”

*****

அப்பா… பி.எஸ்.சிக்கு மேல படிக்கப் போவதில்லை. ஏதாவது பிஸினெஸ் பண்ணணும்னு இருக்கேன்.

நானே இதுபத்தி சொல்லணும்னு இருந்தேன். உனக்கோ பாடி பில்டிங்ல ரொம்ப ஆசை. பேசாம நீயே ஜிம் நடத்தேன். சுரேஷ் BHபாய் பில்டிங்க ஜிம் இருக்கு. அதை நடத்தறவங்களை சில மாசத்துல  அவர் கழட்டிவிடப் போறார். ஒரு ஆறுமாசம் அங்கேயே இருந்து கத்துக்கிட்டு அப்படியே நீ நடத்தேன்.

“அவனை மேல படிக்கச் சொல்லுங்க. அவன் படிப்புக்கு ஏத்த மாதிரி ஏதாவது தொழிலோ ஏஜென்சியோ ஆரம்பிச்சுக் கொடுக்கவேண்டியதுதானே… எதுக்கு ஜிம்லாம்”

“ஜிக்கி… அவன் என்னைப்போல அன்னாடங்காய்ச்சியோட மகன் இல்லை. நான் இருக்கற தொழில்லயே மெதுவா அவனை இழுத்துக்குவேன். முதல்ல ஜிம் நடத்தட்டும். அப்போதான் பலவித மனுசங்களோட அவனுக்கு அறிமுகம் ஆகும்”.

“வேண்டாங்க… உங்க தொழிலே ரிஸ்க். நமக்கோ போதுமான காசுக்கு மேலேயே இருக்கு. எதுக்கு பசங்களை அதுல இழுத்துவிடறீங்க”

“உனக்கு என்ன தெரியும்? இவ்வளவு காசு போதும்னு ஒரு கணக்கு இருக்கா? நானும் இந்தத் தொழிலோட முடிச்சுக்குவேன்னு நினைக்கிறயா? கட்சில சேர்ந்திருக்கறது எதுக்கு? வாய்ப்பு வரும்போது நமக்கும் கட்சி சீட் கொடுக்குமில்ல. இன்னும் பெரிய நிலைமைக்கு நானும் வருவேன் இல்ல. எங்க அப்பா வாழ்ந்த வாழ்க்கைக்கும் நான் வாழுற வாழப்போற வாழ்க்கைக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கும் ஜிக்கி.  நான் இன்னும் மேல வரும்போது என் பசங்க என்னையும் தாண்டி மேல வரணும். கஷ்டம் என்பதே அவங்களுக்கு இருக்கக்கூடாது. எங்க அப்பா எனக்குச் செய்யாமல் விட்டதை, நான் என் பசங்களுக்கு அவங்க ‘போதும் போதும்’னு சொல்ற அளவுக்கு பண்ணுவேன்”

*****

“பரத்… என்னடா.. ஜிம்ல என்ன பிரச்சனை? யாரோ உன்னை அடிச்சாங்களாம், நீயும் சண்டை போட்டயாமே”

“அப்பா… தப்பா எடுத்துக்காதீங்க… அங்க வர்ற என் கிளாஸ்மேட் பெண்ணை அவன் டாவடிச்சான். அதுலதான் நான் காண்டாகி இன்னைக்கு காலைல கொஞ்சம் அடிதடியாகிட்டது. ஏற்கனவே அவன்கிட்ட சிலமுறை சொன்னேன், வார்ன் பண்ணினேன். கேட்கலை”

“எவனோ எந்தப் பெண்ணையோ டாவடிச்சா உனக்கென்ன. ஜிம்ல இந்த வேலையை வச்சுக்காதேன்னு சொல்லவேண்டியதுதானே… இல்லைனா அவனை வேற நேரத்துக்கு வான்னு சொல்றது.  தொழில் பண்ணற இடத்துல பலபேர் முன்னால அடிதடி நடக்கலாமா? ஜிம் பேர் கெட்டுப்போயிடுமே”

“அப்பா… அந்தப் பெண்ணிடம் இன்னும் சொல்லலை…. நான் அவளை லவ் பண்றேன்பா. அதுனாலதான் ஆத்திரத்துல அடிதடி யாகிடிச்சு”

“பாத்துடா…ஏதேனும் உதவி வேணும்னா உடனே சொல்லு. அவரோட பில்டிங்னால, அவர் ஏதேனும் கேட்டா நடந்ததைச் சொல்லிடு. அவர் பாத்துப்பார்”




*****

“சுனில் BHபாய்… ஒரு விஷயம்… ஜிம்முல உங்க பையன் தகராறு பண்ணினது உங்களுக்குத் தெரியும்னு நினைக்கறேன். அவன் அடிச்ச ஆளு கட்சில வேண்டப்பட்டவரோட பையன். பரத்தை அவன்கிட்ட போய் மன்னிப்பு கேட்கச் சொல்லிடுங்க”

“அது ஏதோ ஜிம்முக்கு வந்த பெண்ணை கலாட்டா பண்ணினான் அவன். அதுனால வந்த தகராறுன்னு சொன்னானே”

“இருக்கலாம்.. இருந்தாலும் கை நீட்டி அடிச்சது தப்பு. ஆள் யாருன்னு பேக்ரவுண்ட் தெரியாம சண்டைக்குப் போயிருக்கானே… அண்ணன் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார். இன்னைக்கே மன்னிப்பு கேட்கச் சொல்லிடுங்க. இல்லைனா ரொம்பப் பெருசா ஆயிடப்போகுது”

*****
“பரத்.. நான் சொல்றதைக் கேளு. போய் மன்னிப்பு கேட்டுடு”

“ஏம்பா… தப்பு அண்ணன் பேர்ல கிடையாது. நானும் அப்போ அங்கதான் இருந்தேன்.”

“வேணாம்டா… சுரேஷ் BHபாயி சொல்றபடி பண்ணிடுங்க. அம்மாக்கு இதெல்லாம் தெரியவேண்டாம். காதும் காதும் வச்சமாதிரி மன்னிப்புக் கேட்டுட்டு ஆகவேண்டியதைப் பாருங்க”  சுனில் சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

“அண்ணே… இப்போ பம்மறமாதிரி பண்ணிட்டு பெருசா அந்தப் பயலுக்குச் செய்வோம். நம்ம என்ன பயந்தாங்கொள்ளியா. அப்பன் பெரிய ஆளா இருந்தா இவன் என்னவேணும்னாலும் பண்ணுவானா”

*****

“என்ன தெனாவெட்டு இருந்தா அவன், ஜெயினோட பொண்ணுமேல கை வச்சிருப்பான். அன்னைக்கே ஜெயின் பையன்கிட்ட மன்னிப்பு கேட்கச் சொன்னேனில்லை”  கமலேஷ், முன்னாள் எம்.எல்.ஏ, தன் தம்பி சுரேஷை முறைத்தார்.

“இல்லண்ணே.. அன்னைக்கே மன்னிப்பு கேட்கச் சொல்லி சொல்லிட்டேண்ணே. அப்புறம் அவன் வம்புக்கே போகக்கூடாதுன்னும் சொல்லிட்டேன்”

“பரத், அவ மேல கை வச்சதுமில்லாம, ஆளை வச்சி அவன அடிச்சிருக்கான். ஜெயின் என்கிட்ட இந்த விஷயத்தைக் கொண்டுவந்துட்டான்.  ஜெயின் பரத்தை கட்டி வச்சு உரிக்கப்போறான். அதுல நீ தலையிடாதே. ஜிம்மை உடனே அவனை காலி பண்ணச் சொல்லிடு”

அண்ணே… டக்குனு அப்படிப் பண்ணினா, சுனில் வருத்தப்படுவாருண்ணே. நம்ம ரொம்ப வருஷமா அவரோட டீல் பண்றோம்ணே”

“சுனில் இல்லைனா ஒரு அனில் வருவான். நமக்கு ஜெயின் அவர் தொடர்புலாம் முக்கியமில்லையா? நாம டெவெலப் பண்ணிண ஆளுதானே சுனில். பிசினெஸ்லாம் பினாமி பேர்லதானே இருக்கு.  ஏதேனும் போக்குக் காட்டினா சுனிலையும் ஒழிச்சுக் கட்டிடலாம். இதெல்லாம் உனக்குப் புரியாது. சொன்னதைச் செஞ்சுடு”

*****

ஹே பசந்த்  இதர் ஆவோ..  போய் ஜிம்ல பரத்தை ஒரு தட்டு தட்டு.  நல்லா காலை ஒடைக்கணும். நாம பண்ணுன மாதிரி இருக்கக்கூடாது. ஜெயின் பையன் ஆள் செட்டப் பண்ணின மாதிரி இருக்கணும்..  அதுக்கு முன்னால நம்ம ஆள் ஜந்தர்ட சொல்லிடு.  நீ உன் ஆட்களோட போறதுக்கு முன்னால அவன் ஜிம் ஆபீசை விட்டுப் போயிடணும்.  பரத் ஹெல்ப்புக்குக் கூப்பிட ஆள் இருக்கக்கூடாது. சம்ஜா?”



**

“ஏ.ஜி.. சுன்’தே ஹோ” …. சுனில்…. சுரேஷ் BHபாய் ஆயா..

சுரேஷ் தள்ளாடியவாறே வந்து சோஃபாபில் அமர்ந்தார்.

“என்ன… உன் பையனை விட்டு என்னையே மிரட்டறயா… என்னோட வேற முகத்தை பார்ப்ப”

“BHபாயி… என்ன பிரச்சனைனு எனக்குத் தெரியலை. இப்போ நீங்க நிதானத்துல இல்ல. காலைல பேசித் தீர்த்துக்கலாம்”

“பேசித் தீர்க்க வரலை நான். உன் பையனைத் தீர்த்துட்டுப் பேச வந்திருக்கேன்.  வளர்த்த மரத்துலயே கத்தியைச் சொருவறானா. எங்கிட்டயே தகறாரு பண்றானா? என் ஆளை ஜிம்முலயே வச்சு காலு உடையறமாதிரி அடிச்சிருக்கான். அவனை இழுத்துவா”  துப்பாக்கியை வெளியே எடுத்தார் சுரேஷ்.

சத்தத்தைக் கேட்டு ஹாலுக்கு வந்தாள் ஜிக்கி. சுனில், சுரேஷின் கையில் உள்ள துப்பாக்கியைப் பிடித்திருப்பதைப் பார்த்தாள். அதற்குள் பரத்தும் அவன் தம்பியின் ஹாலுக்குள் வந்தனர்.

“அப்பா..விலகுப்பா. நான் பாத்துக்கறேன் இவரை… இங்கயே துப்பாக்கியைத் தூக்கி மிரட்டறாரா”  இதற்குள் முதல் துப்பாக்கியைத் தட்டிவிட்டவுடன், சுரேஷ் இன்னொரு துப்பாக்கியை சைடு பாக்கெட்டிலிருந்து எடுத்தார்.

“டேய்… நீ விலகு”,” வாடா பச்சா… எங்கிட்டயேவா.. உன் பொணத்தோடத்தான் நான் போவேன்”  சுரேஷ் கையை சுனில் பிடிக்க, பையனைச் சுட்டுவிடப்போறாரே என்று ஜிக்கியும் சேர்ந்து பிடிக்க, துப்பாக்கி வெடித்து சுரேஷ் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஒரு நொடியில் நடந்த சம்பவமாகிவிட்டது.  பையனைக் காப்பாற்ற, தாங்கள் இரண்டுபேரும் கைதானதும், குற்றம் தன்னுடையது என்று ஒத்துக்கொண்டாலும், ஜிக்கியும் கூடவே இருந்ததால் அவளையும் ஜெயிலில் போட்டதும் டக் டக் என்று காட்சி மாறும் சினிமாபோல் ஆகிவிட்டது. தன்னுடைய தொடர்புகளாலும், பணத்தினாலும் பசங்களுக்கு இதில் தொடர்பில்லை என்று அவர்களைக் காப்பாற்றி, தன் தங்கையோடு அவர்களை அனுப்பிவைத்துவிட்டார் சுனில்.

*****

சையத் BHபாய்… சுரேஷ் BHபாய் நல்லா குடிபோதைல இருந்தார்… நடந்தது பெரிய பிரச்சனை இல்லை.. நிலை தவறி சுட்டுடப்போறாரேன்னு நினைச்சு அவரைத் தடுத்தபோது தவறுதலா துப்பாக்கி அவர் நெஞ்சுக்கு நேர இருந்தபோது அவர் விரல் அழுத்திடுச்சு.  அரசியல்ல வேண்டப்பட்டவரோட பெண்ணைத் தொட்டுட்டான் என் பையன். வயசுக்கோளாறு… தொழில்ல பணத்தைப் பார்க்க ஆரம்பிச்ச திமிரு. அதான் பிரச்சனைக்கே காரணமாயிடுச்சு. இந்த மாதிரி பிரச்சனையை ஆரம்பத்திலயே பரத்தோ இல்லை அவன் தம்பியோ என்கிட்ட சொல்லியிருந்தான்னா சுலபமா பிரச்சனையை தீர்த்திருப்பேன்.

என் பசங்களுக்கு நான் பண்ணாததே இல்லை. கேட்டதுக்கும் மீறியே அவங்களுக்குப் பண்ணியிருக்கேன்.  நான் சின்ன வயசுலேர்ந்து தொழில்ல வளர்ற வரைக்கும் கஷ்டப்பட்டது எதுவும் அவங்களுக்கு வரவிடாம நல்லா வச்சிருந்தேன். இப்பக்கூட அவங்க வாழ்க்கை பாதிக்கக்கூடாதுன்னு நிறைய பணத்தைச் செலவழித்து அவங்களை இதுல இருந்து தப்பிக்க வச்சேன். என் அக்காவும் பசங்க இங்க இருந்தா உயிருக்கு ஆபத்துன்னுட்டு கொல்கத்தா கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க.  தொழில்கள் பினாமி பேர்ல இருந்ததால அந்த எம்.எல்.ஏ கைக்குப் போயிடுச்சு.


  

சுரேஷ் BHபாய் செத்ததுக்கு நாங்க காரணமில்லைனு நிச்சயம் கண்டுபிடிச்சிருப்பாங்க. இன்னும் கொஞ்ச மாதத்துல நாங்க வெளில வந்துடுவோம். ஆனா மாறின வாழ்க்கை மாறினதுதானே. சுரேஷ் BHபாயின் அண்ணன் எங்க எதிரியா மாறினது மாறினதுதானே.  மறுபடியும் நான் பூஜ்ஜியத்திலிருந்துதான் வாழ்க்கையைத் தொடங்கணும்.

என் மகன்களாலதான் எனக்கு இந்த நிலை வந்திடுச்சு.  கதறினார் சுனில்.


82 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. துரை அண்ணா இப்ப முன்னாடி வந்து குதித்துவிடுகிறார்!! ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. அங்க காலைல 4 மணிக்கு எழுந்தால் இந்த ஊருக்கு 6:30 ஆகிடும். துரை சார் 3-3:30க்கே எழுந்துக்கறார். மிக நல்ல பழக்கம்.

      நீக்கு
    3. அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி....

      சிறு வயது முதலே சூரியன் உதிப்பதற்கு முன் எழுவது வழக்கமாகி விட்டது....

      இங்கே ஓய்வு நாளில் முன்னதாக எழுந்து குளித்தால் மற்றவர்கள் முணுமுணுப்பார்கள்....

      நெற்றியில் திருநீறும் குங்குமமுமாக காய்களை நறுக்கி சமையலைக் கவனித்தால் வங்கதேஷிகளுக்கு பற்றிக் கொண்டு எரியும்....

      காஃபிர் என காழ்ப்பு பொங்கும்..

      இந்து வெறியன் என்று கீழறுப்பு வேலைகளைச் செய்கிறார்கள்...

      அதேசமயம் சாராயம், சீட்டு என்றிருக்கும் நம்மவர்களைக் கண்டால் ஹராமி (படுபாவி) என்று ஏசி விட்டுச் செல்வார்கள்...

      இவர்களுக்கு பக்க மேளம் நம்ம ஊர் அடிப்பொடிகள்....

      அரபு மண்ணில் பிறந்தவர்கள் நமக்கு எதிரிகள் அல்லர்...

      நீக்கு
    4. அராபியர்கள் பொதுவா இந்தியன் பழக்கவழக்கங்களைக் கண்டுகொள்வதில்லை. அதிலும் ரொம்ப ரிலீஜியஸா இருப்பவர்கள் கொஞ்சம் நம்மை வித்தியாசமாகப் பார்ப்பார்கள் (எங்க கம்பெனி எம்.டி, அவரது மகன் திருமணத்துக்கு நான் போயிருந்தபோது ஒன்றும் சாப்பிடவில்லை. கம்பெனி பார்டிகள் எதிலும் நான் பழங்கள், இனிப்புகள் மட்டும்தான் சாப்பிடுவேன். அவருக்கு அது வித்தியாசமாகத் தெரியும்)

      ஆனா வங்கதேசம், பாகிஸ்தான், நம் ஊரைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு நம் வழக்கங்கள் பிடிக்காது, தெரியாது.

      நான் இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதே இல்லை. அவங்க வழக்கம் அவங்களுக்கு, நம்ம பழக்கம் நமக்கு. அதனால் எப்போதும் தனி வீட்டிலேயே (குடும்பம் என்னுடன் இல்லாத வருடங்களில்) வசித்துவந்தேன். நீங்க எப்படியோ மேனேஜ் பண்ணறீங்க. வாழ்த்துகள்.

      நீக்கு
  2. மகிழ்வான காலை வணக்கம் எல்லாருக்கும்!

    ஸ்ரீராம் பயணம் எப்படி இருந்த்து? சிறப்பாக அமைந்திருக்கும்!

    பாருங்க நீங்க காசிக்குப் போனது பார்த்து இப்ப ஒவ்வொருத்தரா பின்னாடி கிளம்ப ரெடியாகிட்டுருக்காங்க…..ஏற்கனவே ஒருத்தர் அடிக்கடி காசிக்குப் போறேன்னு சொல்லி ட்ரிப் ஆர்கனைசரா வேற !! ஹா ஹா ஹா இப்ப கூட ஒருத்தர்!! அது நான் யாருன்னு சொல்ல மாட்டேனே!! ஹிஹிஹி

    அட! இப்ப இங்க போக ரெடியாகுபவரின் கதை!!!!! நெல்லை வாரம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்வான காலை வணக்கம் கீதா. பயணம் வெகு சிறப்பு.

      நீக்கு
    2. வாங்க கீதா ரங்கன்.... இப்போவே பயணம் போயிடலாம் என்று நான் நினைக்கிறேன் (வருடம் ஆக ஆக பயணம் கஷ்டமோன்னு எண்ணம்). வீட்டில் எல்லோரும் ரொம்ப பிஸி. இன்னும் ஒரு வருடத்துக்குமேல் ஒருவிதத்துல ஃப்ரீ ஆவாங்கன்னு நினைத்தால் இன்னொரு விதத்தில் இன்னும் ஓரிரு வருடம் பிஸி. அதனால் நான் மட்டும் கிடைக்கும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

      திருப்பதிசாரம் டிரிப்பும் வாய்ப்பு வந்தால் போகணும்...ஹாஹா

      நீக்கு
    3. நெல்லைத் தமிழரே, உங்களுக்கு அம்மா இருக்கிறார். மனைவியையும் அம்மாவையும் விட்டு விட்டு நீங்க மட்டும் காசி யாத்திரை செய்வது அவ்வளவு விசேஷம் இல்லை. அம்மாவால் நடமாட முடியவில்லை என்னும் நிலை என்றால் நீங்க மனைவியோடு தான் போகணும். அதான் நல்லது. மனைவி இல்லாமல் காசிக்குச் செல்வது என்பது இரண்டாம் பட்சம் தான். ஸ்ரீராமுக்கு வேறு வழியில்லை. இல்லை எனில் அவரும் அவர் பாஸோடு தான் போயிருப்பார்.

      நீக்கு
    4. கீசா மேடம்... உங்கள் கருத்து சரிதான். ஆனால் நான் போவது 'கர்மா' செய்வதற்காக அல்ல. வாரணாசிக்குச் செல்வதுதான் முக்கியமான நோக்கம் (+கங்கை, திரிவேணி இரண்டாவது முறை, முடிந்த அளவு 'காட்'களுக்குச் செல்லணும் என்பது). இப்போதைக்கு மனைவி ரொம்ப பிஸின்னு தோணுது..

      அதனால் நான் போவது 'கயா' அல்ல.... வாரணாசி தரிசனம் (ஒருவேளை போனால்.... இது ஸ்ரீராமின் அனுபவம் பொறுத்தது)

      நீக்கு
    5. இன்னொன்று கீசா மேடம்....சொல்லத் தயக்கமா இருக்கு.... முடிந்த அளவு சீக்கிரமாகவே போகலாம் என்று மனதில் தோன்றிவிட்டது. 2017 டிசம்பர்ல இருந்த நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் ரொம்பவும் வித்தியாசத்தை உணர்றேன். '7 1/2'னால மட்டும்தானா என்பதில் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது. அதனால்தான்.

      நீக்கு
    6. :( பின்னர் வரேன். கணினியில் சார்ஜ் இல்லை.

      நீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம், KGG, கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும் இனி வரப்போகும், வந்திருக்கும் அனைவருக்கும் நல்வரவு, வாழ்த்துகள்.

      நீக்கு
    3. அனைவருக்கும் நல்வரவு. இனி வியாழனில் பயண அனுபவம் வருமா இல்லை 5 நாட்களில் தொடராக வருமா?

      நீக்கு
    4. வார்த்தைக்கு வார்த்தை பயண அனுபவம், பயண அனுபவம்னு கேட்கறீங்களே... பயம்மா இருக்கே...

      நீக்கு
  4. நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பார்கள்...

    அப்படியாயிற்று - இன்றைய கதையில்...

    நாட்டு நடப்பும் இப்படித்தானே ஆகிக் கொண்டிருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு நெல்லை வருவார் பதிலளிக்க!

      நீக்கு
    2. வாங்க துரை செல்வராஜு சார்... பசங்க கேட்டதை வாங்கித் தரக்கூடாது, அதுவும் உடனுக்குடன்... காசு அருமை அவங்களுக்கு நல்லா புரிபடணும் என்பது என் கட்சி (அதை யாரு இந்தக் காலத்துல கேட்கறாங்க என்கிறீர்களா? அதுவும் சரிதான்)

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஸ்ரீராமின் பயணக்கட்டுரை
    படங்களோடு வரவேண்டும்.
    கீதா வேற யாரு போறாங்க. /.
    வெங்கட் வலைப்பதிவில் வாராணசி வந்து கொண்டே இருக்கிறது.

    நெல்லை கிளம்புகிறாரா. மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

      வாங்க...

      //ஸ்ரீரீராமின் பயணக்கட்டுரை
      படங்களோடு வரவேண்டும்.​//

      முடிந்தவரை முயற்சிக்கிறேன்மா...​

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா... ஸ்ரீராமின் பயண அனுபவங்களைப் படித்த பிறகுதான் ஜூலையில் நான் செல்லலாமா என்று யோசிக்கணும். மனைவிலாம் இப்போ வர வாய்ப்பே இல்லை... என்னைத் தவிர எல்லோரும் ரொம்ப பிஸி. அதனாலும் யோசிக்கிறேன். ஆனா ஸ்ரீராம் அப்போ அப்போ எபி வாட்சப்ல பகிர்ந்துகொண்டதைப் பார்த்தால் உணவுப் பிரச்சனையே இல்லைபோல் தெரிகிறது. அவரது வெயிட் அதிகமாயிருக்கான்னு தெரியலை. அதையும் எழுதுவாரா? ஹாஹா

      நீக்கு
    3. வெயிட் கூடி இருக்குன்னு இளையவன் அபிப்ராயம்!

      நீக்கு
    4. காசி அன்னபூரணி வாசஸ்தலம். அங்கே உணவு கிடைக்காமலா இருக்கும்? தீபாவளி சமயம் போனால் லட்டுத்தேர் பார்க்கலாம்.

      நீக்கு
    5. //லட்டுத்தேர் பார்க்கலாம்.// - சாப்பிடலாம்னு எழுதியிருந்தால் ஒருவேளை இன்னும் இண்டெரெஸ்டிங் ஆக இருந்திருக்கும்.

      நீக்கு
    6. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், லட்டுத் தேரில் அன்னபூரணியைப் பார்க்கக் கொடுத்து வைக்கணும். அப்புறம் அதைப் பிரசாதமாக் கொடுப்பாங்க. வாங்கிச் சாப்பிட்டுக்கலாம்! முதல்லே தரிசனம்!மண்டையிலே குட்டிக் குட்டிச் சொல்லணும் போல இருக்கு! :))))))))

      நீக்கு
    7. என்ன பண்ணறது கீசா மேடம்...... இறைவன், முதலில் பிரசாத நினைப்பு வரும்படி என்னை ஆக்கியிருக்கிறான். ஹாஹா.

      நீக்கு
  6. ஒரு அரசியல் வாதியின் கதையைப் படிப்பது போல் இருக்கிறது.
    பல படிப்பினைகள் இருக்கின்றன.
    அப்பா தனக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யவில்லை.
    இந்த சுபில் கண்மூடித்தனமாக தீமையை விதைத்து விட்டார்.
    இனியாவது நன்றாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா..... தவறு செய்பவர்களைப் பற்றிப் படித்தாலே நமக்கு அரசியல்வாதிகளின் ஞாபகம்தான் வருகிறது.

      நீக்கு
  7. ஏற்கெனவே பலமுறை படித்த கதைக்கரு. என்றாலும் நெல்லை தன் பாணியில் கொண்டு சென்றிருக்கிறார். தப்பை உணர்ந்து விட்டதால் சுனிலுக்கு இனி எல்லாம் நன்மையே நடக்கும் எனப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு 'கரு'வை வைத்து கதை எழுதும்போது, பழைய கதை என்ற நினைப்பு வருவதைத் தவிர்க்கமுடியலை கீசா மேடம்.. கருத்துக்கு நன்றி

      நீக்கு
  8. காசி யாத்திரையை வெற்றிகரமாய் முடித்துவிட்டு வந்திருக்கும் ஸ்ரீராமுக்கு வாழ்த்துகள். அவருடைய அனுபவங்களைப் படங்களோடு விரிவாகப் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கலாம். சுவையாகவும் இருக்கும் என என் கணிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சுவையாகவும் இருக்கும்// - தெரியலை... ஸ்ரீராம் என்ன என்னவற்றை எனக்கு கொரியரில் அனுப்பியிருக்கிறாரோ... சாப்பிட்டுவிட்டுத்தான் சொல்லணும்.

      ஸ்ரீராம் பொதுவா எழுதும்போது, கோவில் போன்றவற்றையெல்லாம் விவரமாக எழுதமாட்டார்...அனுபவங்களை மட்டும் எழுதுவார். அதுவும் ரசனையா இருக்கும். பார்ப்போம் எப்போது ஆரம்பிக்கிறார் என்று

      நீக்கு
    2. வாழ்த்துக்கு நன்றி கீதாக்கா. நெல்லை கலாய்க்கிறதைப் பார்த்தால் பயமாதான் இருக்கு.

      நீக்கு
    3. ஸ்ரீராம் - நீங்க நல்லா எழுதறீங்க. உங்களுக்கு சந்தேகம் இருந்தால், வியாழன் பதிவுகளின் ஹிட்ஸ் எவ்வளவுன்னு பாருங்க. வாரத்துல, என் அசெஸ்மெண்ட் பிரகாரம் வியாழன் முதலிடத்திலும், செவ்வாய் இரண்டாவதும், திங்கள் மூன்றாவதும் இருக்கும். சனி மற்றும் ஞாயிறு கடைசியா இருக்கும்னு நினைக்கிறேன். (இதுல சிறப்புக் கைவண்ணங்கள் இல்லைனா)

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம். Welcome back Sriram,,,🙏🙏

    பதிலளிநீக்கு
  10. தமனாக்கா ஃபோட்டோ நல்லதாவே இந்த எபி போடுவதில்லை....ஜதி அப்படின்ன நெல்லை இப்ப கொடுத்த ஃபோட்டோஸ் !!! ஹிஹிஹிஹி

    காலயிலேயே போட்ட இந்த கமென்ட் போகாம இங்கயெ இருந்துருக்கு. இப்பதான் பார்த்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுனாலத்தான் கதைக்குப் பொருத்தமா நானே தெரிவு செய்த போட்டோ கதைல போட்டிருக்கு. ஹாஹா. (இந்தப் படத்தைக் குறை சொன்னால் அது பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றாமைதான்....ஹாஹா)

      நீக்கு
  11. கதையை இப்பத்தான் முழுவதும் வாசித்தேன் நெல்லை. நம்ம வெங்கட்ஜி கதைக்கு நீங்க அன்று எழுதினதோட வெர்ஷன் இல்லையா...

    வெங்கட்ஜி அதுக்கு அப்புறம் அந்த ஜெயிலில் இருந்த சுனில் பேசியதாகவும் ஒரு சஸ்பென்ஸ் வைத்திருந்தாரே அவரது பதிவில். இல்லையா? நீங்க கூட இன்னொரு வெர்ஷன் எழுதுவதா சொல்லியிருந்தீங்க அதுதானே இது?!!

    நல்லாருக்கு நெல்லை. தாதா அரசியல் பின்புலம் நு மும்பை பேஸ்ட் தமிழ்ப்ப படம் பார்த்தது போல !!!! ஒரு ஃபீல் வந்தது!

    அது சரி படத்துக்கு ஒரே ஒரு காட்சில வர தமனாக்காவா!!! ஹா ஹா ஹா....டூ பேட்...தமனாக்காவை இப்படி ஒரே ஒரு காட்சிக்காக மட்டும் போடுவாங்களா?!!!

    பணம் வேண்டும்தான் வாழ்க்கைக்கு. ஆனால் அது நம்மை ஆள விடக் கூடாது. நாமதான் அதுக்கு பாஸ்!

    இப்படிக் கெடும் பசங்க நிறையப்பேர் நெல்லை நம் சமுதாயத்தில். இதில் பணக்காரர் ஏழை என்ற பேதமே இல்லை.

    வாழ்த்துகள்!!! பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதா ரங்கன்.. கதை நல்லா இருந்ததா?

      நீங்க இப்படி எழுதுனதுனால, தமன்னாவோட 5-6 போட்டோ கலெக்ட் செய்து அதற்கு ஒரு கதை எழுதலாம்னு நினைக்கிறேன் (ஆனா காசிக்குப் போன சன்யாசி, அந்தப் படங்களை டிலீட் செய்துவிட்டு அந்த இடங்களில் `அ`வைப் போடாமல் இருக்கவேண்டும்)

      நீக்கு
    2. கதை நன்றாக இருக்குனு போட்டுடுக்கேனே நெல்லை. பிடித்திருந்தது. நல்ல சினிமாவுக்கான சப்ஜெக்ட். ஆனா என்ன அதுல அதிகம் துப்பாக்கி வெடிக்கறதைத்தான் எடுப்பாங்க. இதை உணர்வு பூர்வமா எடுக்கலாம் அழகா எடுக்கலாம். நல்ல பாடமாகவும் அமையும். (அப்படி சிந்தித்துப் பார்ப்பவங்களுக்கு!) வாசிப்பு எப்படி ஒரு சிலரை பாதிக்குதோ ஒரு சிலருக்கு விஷுவல்ஸ் பாதிக்கும். அதை எடுப்பது பொருத்து அமையும்.

      //நீங்க இப்படி எழுதுனதுனால, தமன்னாவோட 5-6 போட்டோ கலெக்ட் செய்து அதற்கு ஒரு கதை எழுதலாம்னு நினைக்கிறேன் (ஆனா காசிக்குப் போன சன்யாசி, அந்தப் படங்களை டிலீட் செய்துவிட்டு அந்த இடங்களில் `அ`வைப் போடாமல் இருக்கவேண்டும்)//

      ஹா ஹா ஹா அப்ப நீங்க காசிக்குப் போய் சன்யாசி ஆகறதுக்கு முன்ன எழுதிடுங்க!! ஹிஹிஹி..

      படம் போடறது பத்தி கதை எப்படி இருக்கோ அதுக்கு ஏத்தாப்புல அ வா த வானு ஸ்ரீராம் பாத்துக்குவார்!!! அதாவதூஊஊஊஊஊஊஊஊ.......சரி சரி நான் எதையாவது சொல்லி வம்புல மாட்டிக்கலை...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. கீதா ரங்கன் - 'சன்யாசி' - இது யாருக்கும் வாய்க்காது..அதுவும் என்னைப் போன்ற ஆட்களுக்கா? இது ஒரு தனி சப்ஜெக்ட்.

      கங்கை அமரன் அவரது வாழ்க்கை அனுபவத்தை எழுதும்போது (உண்மையாக எழுதியிருக்கிறார்னு எனக்கு மனசுல தோன்றியது), அவர் தியானம் பழகும்போது, 3-5 மணி நேரம்லாம் சர்வ சாதாரணமாக அவரால் தியானத்தில் இருக்க முடிந்ததாம். அப்புறம் லைன் மாறிவிடும் என்று பலர் சொல்லி அதனை நிறுத்திவிட்டாராம்.

      நான் முதன் முதலில் தியானம் பழக ஆரம்பித்தபோது, என் மனைவி, கழுகுக்கண்ணால் பார்ப்பதைப்போல கவனித்துக்கொண்டே இருந்தாள். இது நம்ம லைன் கிடையாது என்று அர்ச்சனை செய்துகொண்டே இருப்பாள்.. தியானமும் எனக்கு லபிக்கலை (இது துளசி டீச்சர் வார்த்தை...இந்த 'லபிக்கலை' எங்கயும் 'கேட்கலை'). கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பின் விட்டுட்டேன். என் யோகா மாஸ்டர், உங்களால் 45 நிமிடம் உட்கார முடிகிறது என்பதே பெரிய விஷயம்...தொடருங்கள் என்றார்...தொடரலை...

      நீக்கு
  12. ஊசிக்குறிப்பு இந்தக் கதை + வெங்கட்ஜி அன்று எழுதிய கதை எந்த டைரக்டர் கண்ணுலயாவது அதாவது நேர்மையான டைரக்டர்னாஅ.....சிக்கிச்சுனா கண்டிப்பா எபியத்தான் கான்டாக்ட் பண்ணுவாங்க!! எதுக்கும் எபி அலுவலக ஃபோன் நம்பர் கொடுத்து வைங்கப்பா...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஆனா கதை திருடவும் வாய்ப்புண்டு!!! இப்ப நிறைய டைரக்டர்ஸ், அப்புறம் கதை சொல்லிகள் ப்ளாக் நிறைய வாசிக்கறதாவும் செய்தி அடிபடுது! யாராவது அப்படி படம் எடுத்து உங்க கதைனு தெரிஞ்சா தில்லி அன்ட் நெல்லை ராயல்டி கேளுங்க!! ஹா ஹா ஹா

    நேர்மையா கான்டாக்ட் பண்ணி கேட்டாங்கனா ஒழுங்கா டீல் போட்டு எங்களையும் உங்க டீம்ல சேர்த்துக்கோங்க ஹிஹிஹிஹி....(சும்மா ஒரு கற்பனைதேன்!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்(க்கா), நானும் இதுபோலத்தான் கற்பனை செய்தேன்.... உங்க ஊர்ல இருக்கறதுனால புதுவருஷத்துக்கு சாப்பிடக் கூப்பிடுவீங்க, ஓலா வருவானா எப்படிப் போறது, எவ்வளவு வேளைக்கு முன்னாலயே சாப்பிடறதை நிறுத்தி தயாராப் போகணும் என்றெல்லாம். (கடைசியில் பார்த்தால் வெல்ல ஜவ்வரிசிப்-பாயசம்-கஞ்சி -ஹாஹா)

      நீக்கு
    2. நெல்லைண்ணே ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அண்ணே நீங்க வந்திருந்தீங்கனா மெனு வேற மாதிரி இருந்துருக்கும்....

      ஜவ்வரிசி பாயாசம் சாப்பிடாம சாப்பிட்டுப் பார்க்காம இப்பூடி எல்லாம் சொல்லப்படாதாகும் தம்பி!!!

      அன்று உங்க ஏரியா பக்கத்துலதான் நான் இருந்ததே...எங்க வீட்டுல முடிச்சுட்டு உறவினர் வீடு அங்க...

      அது சரி கதைலயும் என் கருத்துலயும் ஜவ்வரிசியைத் தேடினேன் ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. கீதா ரங்கன் - அன்னைக்கு நான் சாம்ராஜ்பேட்ல இருந்தேன் (எங்க புது வீட்டு இண்டீரியர் சம்பந்தமாக). ஆமாம்... எப்படி கம்யூட் பண்ணறீங்க? மெட்ரோவா இல்லை ஓலாவா இல்லை பஸ்ஸா?

      நீக்கு
    4. ஓ! ஓகே!

      எங்கள் வீட்டிலிருந்து மெஜெஸ்டிக் வரை பஸ். ஒரு மணி நேரம் ஆகும் நார்மலாக. ட்ராஃபிக் இல்லை என்றால் 45,50 நிமிடம். அங்கிருந்து மெட்ரோ.

      மெட்ரோ இல்லாத பகுதிகளுக்கு பஸ்லதான் போறோம் நெல்லை.

      கீதா

      நீக்கு
    5. இந்தக்கதைக்கருவிலே பல ஹிந்தி, தமிழ்ப் படங்கள் வந்தாச்சு. சீரியல்களும் பிளந்து கட்டுகின்றன. ஆனால் நடைமுறையிலும் இப்போதைய பெற்றோர் தாங்கள் அனுபவிக்காததைத் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கணும் என்பதால் கொஞ்சம் மிகையாகவே எல்லாம் வாங்கிக் கொடுத்துக் குழந்தையைக் கெடுக்கின்றனர் என்பது என்னோட தனிப்பட்ட கருத்து. எங்கள் குடும்பத்துக்குள்ளேயே நிறைய உதாரணங்கள் உண்டு. எனக்குத் தெரிந்த ஒருவர் குழந்தைக்கு கேட்டதை எல்லாம் வாங்கித் தரும் அளவுக்குப் பணம் சேர்த்துக்கணும் எனக் கல்யாணம் ஆகிப் பத்து வருடங்களுக்குப் பின்னரே குழந்ச்தை பெற்றுக் கொண்டார். இப்போ அந்தக் குழந்தை பெரியவர் ஆகிப் பெற்றோரை அதிகம் லட்சியம் செய்வதே இல்லை! :(

      நீக்கு
    6. அட...கீதா ரங்கன்... உங்க நாட்டுக்கு (கிராமத்துக்கு ஹாஹா) வருவதற்கு மெஜெஸ்டிக்லேர்ந்து பஸ்ல வரலாமா? எங்க புது வீடு (ரெடியில்லை)லேர்ந்து மெஜஸ்டிக்குக்கு 5-7 நிமிட ஆட்டோ தூரம். அடுத்த முறை வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம் (இன்னும் நான் பெங்களூர்தான். எங்க தொகுதியில் ஜெயிப்பவருக்கு ஒரு வாக்கு குறைத்து அவரோட வெற்றி வித்தியாசத்தைக் கணக்கிட்டுக்கிங்க. நான் இருந்தால் ஜெயிக்காதவருக்குத்தான் வாக்களித்திருப்பேன்)

      நீக்கு
    7. கீசா மேடம்... நான் சீரியல்கள் எதுவும் பார்ப்பதில்லை. அதை தினசரி கடமையாக நினைத்துப் பார்ப்பவர்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கேன், அசூயையும் பட்டிருக்கேன் (என்னடா இது... ரெகார்ட் பண்ணிப் பார்க்கிறாங்களே... இல்லை..ஆள் வந்திருக்கோம்..சீரியல்ல உட்கார்ந்திருக்காங்களே, அதைப்பற்றிப் பேசறாங்களேன்னு).

      எங்க ஊர்ல, 900 தினார் (ரெண்டுபேரும் சேர்த்து) சேலரி வாங்கறவங்க 125 தினாருக்கு அவங்க குழந்தைக்கு கம்ப்யூட்டர் கேம்ஸ் வாங்கிக்கொடுத்தாங்க. ஏன் அவ்வளவு செலவழித்து வாங்கறீங்கன்னு கேட்டதற்கு, பையன் கட்டாயம் வேணும்னு அடம் பிடிக்கிறான் என்றனர். நான் இவைகளை வாங்கித்தந்ததே இல்லை.

      //கல்யாணம் ஆகிப் பத்து வருடங்களுக்குப் பின்னரே // - ஐயோ பாவம்..இறைவன் சிந்திக்கும் திறமை கொடுக்கலையே. இன்னொன்று கீசா மேடம்... ரொம்ப வருடம் கழித்து வேண்டுமென்றே பெற்றுக்கொண்டால், பையனோ பெண்ணோ இளைஞனாக இருக்கும்போது பெற்றோர், தாத்தா ரேஞ்சுக்குப் போயிடுவாங்க. இதை நினைக்க மறந்திட்டாரோ?

      நீக்கு
    8. //பையனோ பெண்ணோ இளைஞனாக இருக்கும்போது பெற்றோர், தாத்தா ரேஞ்சுக்குப் போயிடுவாங்க. இதை நினைக்க மறந்திட்டாரோ?// இல்லை, நாங்க கூட்டுக் குடும்பத்தில் கஷ்டப்பட்டதையும், அப்போ எங்க குழந்தைகளுக்கு எனத் தனிப்பட எதுவும் செய்ய முடியாமல் இருந்ததையும், எங்க குழந்தைகளுக்கு பள்ளிக்குத் தேவையானதை வாங்கக் கூடக் கஷ்டப்பட்டதையும் பார்த்திருக்கார். அதே போல் ஐஸ்க்ரீம், பிஸ்கட், சாக்லேட் போன்றவை கூட எங்க குழந்தைகளுக்கு லக்சுரியாக இருந்தது. அதை எல்லாம் பார்த்துட்டு எங்களைக் கேலி செய்வார். நான் இப்படி எல்லாம் முட்டாள் தனமாகக் குழந்தை பெற்றுக் கொண்டு திண்டாடமாட்டேன் என்பார்!:)))) ஆகவே முதலில் வந்த குழந்தையைக் கூட வேண்டாம் என எடுத்து விட்டார். பின்னால் பத்து வருஷம் கழிச்சுப் பொருளாதாரத்தில் மேம்பட்டாகி விட்டது எனத் தெரிந்ததும் குழந்தை பெற்றுக் கொண்டார். இப்போவும் ஒரு சில உறவினப் பெண்கள் தங்கை படிக்கணும், தங்கைக்கும் திருமணம் ஆகணும் எனச் சொல்லிவிட்டுக் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப் போட்டனர். அவங்க சௌகரியப்படி அவங்களுக்குத் தேவை என்னும்போது குழந்தையும் பிறந்திருக்கு! ஹிஹிஹி, எங்க வீட்டில் தான் தவம் இருந்தோம்! :)))))))

      நீக்கு
    9. //போன்றவை கூட எங்க குழந்தைகளுக்கு லக்சுரியாக இருந்தது.// - நானும் இந்த மாதிரி கஷ்டப்பட்டவந்தான். ஆனால் வித்தியாசம், அப்போ என் பெரியப்பாவுக்கு நிறைய பணம் இருந்தது. அவர் எப்போதும் 'நாம் கஸ்டடியன் மட்டும்தான். ரொம்ப எளிமையா இருக்கணும். செலவழிக்க நமக்கு அனுமதி இல்லை' என்ற கொள்கை. இப்போ நினைத்தாலும் கொஞ்சம் வருத்தமா இருக்கும். ஆனா அப்படி இருப்பது, நம்முடைய தன்னம்பிக்கையைக் குலைக்கும். சாதாரண வீட்டில் இருப்பவங்க, நல்ல டிரெஸ், நல்ல உணவு, சினிமா போவது என்றிருக்கும்போது நாம ரொம்ப எளிமையாக இருப்பது... அனுபவிக்கும்போது கஷ்டம்தான். ஒரு சில வருடங்கள் இப்படி என்றாலும், இப்போ நினைத்தாலும் வருத்தம் தரும் வாழ்க்கை அது.

      நீக்கு
  13. ஒரு இடத்தில் (கமல் நடித்த) "சத்யா" பட காட்சி ஞாபகம் வந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தி.தனபாலன். நான் அந்தப் படம் பார்க்கலை. தில்லி வெங்கட் சொன்ன பின்னணிக்கு எழுதப்பட்ட கதை இது. (அவரைத்தான் இன்னும் காணோம்)

      நீக்கு
  14. தன் மகன் கஷ்டப்படக்கூடாது என்று எங்கு தந்தை நினைக்கின்றாரோ... அங்கு மகனின் கேடுகாலம் துவங்கி விடுகிறது.

    //நான் வாழ்க்கைல எங்க தவறினேன்னு தெரியலை. உங்ககிட்ட பகிர்ந்துக் கிட்டாலாவது என் மனச்சுமை குறையுதான்னு பார்க்கிறேன்//

    நிறைய மனிதர்களின் நிலைப்பாடு இதுவே.

    கதையை அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள் வாழ்த்துகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி.... என்னவோ.... பெற்றோர்கள், தங்கள் மகன் தாங்கள் கஷ்டப்பட்டதைப்போல் கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கிறார்கள். பெரும்பாலும் அதன் அருமை பசங்களுக்குத் தெரிவதில்லை. அப்பா ஒரு வீடு வாங்கினார் என்றால், அதன் பின்னணியில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பது பசங்களுக்குத் தெரியாது.

      என் பசங்க சில சமயம் 400-500 ரூபாய் சாப்பிட செலவழிக்கும்போது, அடப்பாவீ..இவ்வளவா என்று கேட்பேன். காரணம், அவங்களுக்கு பண அருமை எப்போதும் தெரியணும்னு. சிலவற்றை எழுதுவது கடினம். ஆனா அவங்களுக்கு என்ன தாங்கள் செய்தால் அப்பா டென்ஷன் ஆகிடுவார்னு நல்லாவே தெரியும். காசு அருமை தெரியாம பேசினாலே எனக்குப் பிடிக்காது. ஹாஹா. கவனக்குறைவாக இருப்பது (காசிலோ அல்லது பொருட்களிலோ) எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.

      நீக்கு
    2. இது என் தனிப்பட்டக் கருத்து. என்னைப் பொருத்தவரை குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போதே ஒவ்வொன்றின் வேல்யூவையும் பெற்றோர் புரிய வைக்க வேண்டும் என்பது. அதுவும் மேடு பள்ளங்கள் நிறைந்த குடும்பங்களில் இது மிக மிக அவசியம்.

      கீதா

      நீக்கு
    3. மேடு பள்ளங்கள் நிறைந்த குடும்பம் - ஆமாம் கீதா ரங்கன்... இது மிக முக்கியம். என் சின்ன வயதில் என் பெரியப்பா பையன் வெகேஷன் வந்திருந்தபோது, அவன் மாமா அவனுக்கு மட்டும் ஜாம் பன் (70களில்) வாங்கிக்கொடுப்பார். எனக்கு ரொம்ப ஆசையா இருக்கும்... ரொம்பவும் கஞ்சத்தனமாக இருக்கக்கூடாது. அதே சமயம் நிறைய செலவழிக்கக்கூடாது.

      நீக்கு
  15. தமன்னா அமர்க்களமாகத் தெரிகிறாரே.. எப்படியும் தமன்னாவைப் பிரகாசமாகக் காண்பித்துவிடவேண்டும். கதை ஒரு சாக்கு!
    இரண்டாவது படத்தில் கேஜிஜியையா அலட்சியமாகப் பார்க்கிறார் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சார்... நீங்க சொன்னது மிகவும் சரி.... அவர் கேஜிஜி சார்கிட்ட என்ன சொல்லுகிறார்னு நான் நினைக்கறேன்னா ~நீங்க எனக்கு ரசிகரா இல்லாட்டி என்ன.... எங்க ஆள் இருக்கிறார், என் படங்களை செலெக்ட் செய்து போட~..... தமன்னா அமர்க்களமாகத் தெரிகிறாரே-காந்திஜி அஹிம்சையை வற்புறுத்துகிறாரே என்பதுபோல.... அவங்க எப்போதும் (சிலவருடங்களுக்கு முன் வரையுள்ள படங்கள் மட்டும்) அமர்க்களம்தான்

      நீக்கு
  16. //“ஆனா BHபாய்..ஒவ்வொன்றிர்க்கும் பின்னால அதுக்கேத்த விளைவுகள் இருக்கும்கறது எனக்கு தெரியாமப் போச்சு. கடுமையா உழைச்சேன். நிறைய காசு தொழில்கள்ல இருந்து கொட்ட ஆரம்பிச்சது. ரெண்டு பசங்களும் பிறந்தாங்க. எனக்குக் கிடைக்காதது எல்லாம் அவங்களுக்குக் கிடைக்கணும்னு நினைச்சேன்//

    விளைவு அறிந்து செய்து இருந்தால் தான் இத்தனை கஷ்டம் வந்து இருக்காதே!

    1.“ஏங்க… சின்னவன் பெயில் மார்க் வாங்கியிருக்கான். பரத் ஜஸ்ட் பாஸ். 7வது 8வதிலேயே இப்படி இருந்தாங்கன்னா, அப்புறம் என்ன பண்ணறது”



    2.//“நீங்க அவங்கள்ட அப்போ அப்போ காசு கொடுக்காதீங்கன்னு சொன்னாக் கேட்டாத்தானே… சும்மா சினிமா, நண்பர்களோட சுத்தறதுன்னு இருக்காங்க”//

    3.//நீங்க அவங்கள்ட அப்போ அப்போ காசு கொடுக்காதீங்கன்னு சொன்னாக் கேட்டாத்தானே… சும்மா சினிமா, நண்பர்களோட சுத்தறதுன்னு இருக்காங்க”//

    4.//ஏங்க… பரத் சிகரெட் பிடிக்கறான் போலிருக்கு. அவனுடைய பாக்கெட்ல சிகரெட் பெட்டி பார்த்தேன்”//


    5.//“அவனை மேல படிக்கச் சொல்லுங்க. அவன் படிப்புக்கு ஏத்த மாதிரி ஏதாவது தொழிலோ ஏஜென்சியோ ஆரம்பிச்சுக் கொடுக்கவேண்டியதுதானே… எதுக்கு ஜிம்லாம்”//

    6.//வேண்டாங்க… உங்க தொழிலே ரிஸ்க். நமக்கோ போதுமான காசுக்கு மேலேயே இருக்கு. எதுக்கு பசங்களை அதுல

    இழுத்துவிடறீங்க”//

    ஆரம்பம் முதல் குடும்ப தலைவி மதியூக மந்திரியாக எடுத்து சொல்லி கேட்கவில்லை இப்போது புலம்பி என்ன பயன்?

    கெட்டதை கேட்க வேண்டாம், நல்லதை காது கொடுத்து கேட்கலாம்.
    அவர் தான் பட்ட கஷ்டம் குழந்தைகள் படக்கூடாது என்று நினைத்தார் என்றாலும் அதிக சுதந்திரம், கேட்டபோது கிடைக்கும் பணம் எல்லாம் தீங்கு விளைவித்து விட்டதே!

    கதை சொன்னவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... நீங்க சரியான வரிகளைப் பிடித்துவிட்டீர்கள். பசங்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைப்பதில் ரொம்ப கவனம் வேணும். அதிக சுதந்திரம், நினைத்த பணம் என்பதெல்லாம் ஆபத்தில் கொண்டுபோய்விடும். இரண்டு விஷயங்களை எழுத நினைக்கிறேன்.

      1. நான் மேட்டூரில் வேலைபார்த்தபோது, ஒரு சாதாரண ஃபேக்டரி ஒர்க்கர்-லோ லெவல் ஆபீசராகவும் இருக்கலாம், ஹை ஃபை ஜீன்ஸ், ஷர்ட் போட்டுக்கொண்டு வேலைபார்ப்பார்-இளைஞர்... பேண்ட் முட்டியில் கிழிந்து-அந்தமாதிரி ஃபேஷன். நான் கம்யூட்டர் செக்‌ஷனில் ஆபீசராக இருந்தேன். என்னை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னிடம் அவன் கதையைப் பகிர்ந்துகொண்டான். அவன் பெற்றோர் சென்னையில் மருத்துவர்கள். கேட்ட பணம் கேட்டது உடனுக்குடன் கிடைக்கும். அவன் சொன்னான்... என் பெற்றோர் என்னைக் கவனிக்க நேரமில்லை. நான் கெட்டுவிட்டேன். போதைல இறங்கிட்டேன். அப்புறம் தெளிவு வந்து சாதாரண வேலையில் சேர்ந்திருக்கிறேன். நான் பெரிய பணக்காரன். ஆனால் நானே இப்போது என் வாழ்க்கையை கட்டமைக்கணும் என்று இருக்கிறேன். என் பெற்றோர் என்னைக் கவனிக்காதது என் வாழ்க்கைல பெரிய தவறு என்று சொன்னான். அப்போ என் வயது 25, அவனுக்கு 24.

      2. நான் வெளிநாட்டில் இருந்தபோது, என் பெண் கேட்டவைகளை நான் கொடுக்கமாட்டேன். உதாரணமா அவள் நண்பிகள்லாம் (5-6வகுப்பில்), அவங்க பெற்றோர் Maalல் விட்டுவிட்டு ஆளுக்கு 20-30 தினார் (5000 ரூ) கொடுத்து அவங்க இஷ்டப்படி விட்டு மாலையில் கூட்டிக்கொண்டு செல்வார்கள். இது மாதம் ஒரு முறையோ இல்லை இரு வாரங்களுக்கு ஒரு முறையோ நடக்கும். எனக்கு இந்த அமவுண்ட் நத்திங்-அப்போ என்றாலும் நான் இதனைச் செய்ததே இல்லை. ரொம்ப வருடங்களுக்குப் பிறகு என் பெண்ணிடம், `அப்பா அந்த மாதிரி செய்யாதது தவறோ` என்று கேட்டேன். அதற்கு அவள், `அப்போ வருத்தமா இருந்தாலும் நீங்க செஞ்சது சரிதான்... இல்லைனா பசங்க கெட்டுப் போக வாய்ப்பு உண்டு` என்று சொன்னாள். எனக்கு மிகுந்த திருப்தி இதனைக் கேட்டதில்.

      எப்போதும் சின்சியராக விளக்கமாக பின்னூட்டமிடும் உங்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. நெல்லை 2 வது இங்கு சொன்னது ஹைஃபைவ்! என் மகனுக்கும் இதே தான். ஏற்றத் தாழ்வுகள் வந்த போது நான் அவனுக்குச் சின்ன வயதில் செய்தது பெரியவன் ஆன போது ரொம்பவே உதவுகிறது. இப்போதும் உதவி வருகிறது. அவனுக்கு அப்போதும் வருத்தமில்லை. இப்போதும் வருத்தமில்லை.

      கீதா

      நீக்கு
    3. கீதா ரங்கன் - என் பசங்களுக்கு அப்போ வருத்தம் இருந்ததுன்னுதான் நினைக்கறேன் (அப்பா இன்காரிஜிபிள் என்று சின்ன வயதில் அவள் சொல்லுவாள் ஹாஹா). என் பையன் ஆனமட்டும் கேட்டு நான் ஒருபொழுதும் கம்ப்யூட்டர் கேம்ஸ் டிவைசஸ் வாங்கித் தந்ததே இல்லை. நிர்தாட்சண்யமா நோ சொல்லியிருக்கிறேன், சாதாரண வேலையில் இருந்தவர்கள் 100 தினார் செலவழித்து அவங்க பசங்களுக்கு பிஎஸ்பி(?) டிவைசஸ்லாம் வாங்கினபோதும், நான் வாங்கினதே இல்லை. இப்போவுமே யாராகிலும் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடினால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.

      நீக்கு
  17. சமீபத்தில் அதிரா, ஏஞ்சல் கமெண்ட் பார்த்ததாய் நினைவில்லையே... ஏஞ்சல் புனித வெள்ளி பிஸியில் இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் , வந்து விட்டீர்களா?
      நலமாக காசி பயணம் இனிதாக இருந்து இருக்கும், காசி பயணக் கட்டுரை வரும் என்று நினைக்கிறேன்
      அதிரா, ஏஞ்சலுக்கு விடுமுறை காலம் .

      நீக்கு
    2. ஏஞ்சல் ஈஸ்டர்ல சர்ச் ஆக்டிவிட்டிஸ்ல பிஸி.

      பூஸார் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....லீவ எஞ்சாய் பண்ணிட்டுருப்பாங்க...ஹ ஹா ஹா

      கீதா

      நீக்கு
  18. சில நேரங்களில் பெற்றோர் அன்பு என்றுநினைத்து கெடுதல் விளைவிக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி.எம்.பி சார்...... அதீத அன்பு கெடுதல்தானே.... தம்பதிக்குள்ளேயே அதீத அன்பு இருக்கக்கூடாது. அப்புறம் தனியாக இருக்கமுடியாது.

      நீக்கு
  19. ஏஞ்சலின் - எதுல பிஸி என்று தெரியலை.

    காசி சன்யாசினி அதிரா - அவங்க அம்மா வந்ததால் ரொம்ப பிஸி. அம்மா இருக்கும் 2 வாரத்துக்குள் சமையல் கற்றுக்கொண்டால்தான் உண்டு. அப்பத்தான் நம்மைத் தாளிக்க முடியும் அவங்களால். ஆனால் அந்த 2 வாரம் எப்போ முடியுதுன்னு தெரியலை.

    பதிலளிநீக்கு
  20. நெல்லைத்தமிழன் கதை மிக அருமை. வித்தியாசமான கோணம். அன்று வாசித்த கதையின் மற்றொரு கோணம். வெங்கட்ஜி தொடங்கிய கதை இல்லையா? எல்லாவிதமான கதைகளும் எழுதுகின்றீர்கள். பாராட்டுகள் வாழ்த்துகள்.

    ஒரு குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோரின் கையில் தான். ஓவர் கண்டிப்பும் கூடாது. ஓவர் செல்லமும் கூடாது. நல்ல கருத்துள்ள கதை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசிதரன் சார்... ஆசிரியரான உங்களுக்குத் தெரியும் பசங்களை எப்படி வளர்ப்பது என்று. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  21. கதையை நகர்த்திய விதம் நல்லாயிருக்கு. இதான் படிச்சவுடனேயே மனசில் பதிந்த எண்ணம்.
    அடுத்து, தெளிவான கான்வர்சேஷன்.
    அதற்கடுத்து, உரையாடல் மூலமாகவே சொன்ன உபதேசங்கள்.
    எழுதுவதில் அடிக்கடி புதுப்புது சோதனைகள் செய்வது நம் திறமையை வளர்க்கும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இப்போதான் கதை எழுதிப் பழகுறேன். உங்கள் கருத்து மிக்க உபயோகமாக இருக்கும்.

      நீக்கு
  22. வணக்கம்.

    கதை நன்றாக இருக்கிறது. நெல்லைத் தமிழன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்.... ஆமாம்...அவர் வாழ்வில் உண்மையிலேயே நடந்தது என்ன?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!