புதன், 10 ஏப்ரல், 2019

புதன் 190410 : அழகு என்பது என்ன? + தொடர்கதை நிறைவுப்பகுதி


நல்ல வேளை! சென்ற வாரம் நான் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. 
கேட்டிருந்தால் என் கதி என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமா இருக்கு! ஆனாலும் காசிக்குப் போகும் சந்நியாசி ..... சாரி சம்சாரிகள் ஏன் சில பிடித்த பொருட்களை விடவேண்டும் என்கிற அதிரா கேள்விக்கு மட்டும் எனக்குத் தோன்றிய விளக்கத்தை சுருக்கமாக சொல்கிறேன். 

பள்ளிக்கூட நாட்களில், நீங்கள் பாடங்கள் படித்திருப்பீர்கள். சிலருக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ ஊன்றிப் படித்தால், மனதில் பதிந்துவிடும். இன்னும் சிலருக்கு அதிக முறை படிக்கவேண்டியிருக்கும். 
யார் எப்படிப் படித்தாலும் மனதில் நிறுத்த சிறந்த வழி ரிவிசன் என்று சொல்லப்படும் - மீண்டும் மனக்கண்ணில் அதைக் கொண்டு வந்து உறுதிப்படுத்திக் கொள்ளும் வழி. 

என்னுடைய அப்பா அடிக்கடி சொல்லுவார். "பதில் படித்துவிட்டோம், தெரியும் என்று இருக்காதே. எழுதிப்பார். எழுதும்போதுதான் எண்ணற்ற சந்தேகங்கள் வரும். அதை நிவர்த்தி செய்துகொண்டால் வெற்றி உனக்கே." இதுவும் ஒரு ரிவிசன் யுக்தி. 

ஏன் ரிவிசன் பற்றிக் கூறினேன் என்றால், இதற்கும், காசி யாத்திரையின் பிடித்த பொருட்களை விலக்கி வைப்பதற்கும்  நெருங்கிய தொடர்பு உண்டு. எப்படி? 

எல்லா காலத்திலும் காசி யாத்திரை, காசி விஸ்வநாதர் தரிசனம், கங்கைக் குளியல் எல்லாமே இந்துக்களின் புனிதமான விஷயம். 

அப்படி முயன்று காசிக்கு அந்தக் காலத்தில் வண்டி கட்டிக்கொண்டு செல்பவர்கள் யாத்திரை, தரிசனம், கங்கைக் குளியல் முடித்து ஊர் திரும்புவார்கள். 

அந்தப் புண்ணிய தரிசனத்தை, புண்ணிய நீராடலை அதற்கு அப்புறம் மறந்துவிடக் கூடாது. எப்படி காசி விஸ்வநாதரை அடிக்கடி நினைப்பது? 

அதற்குத்தான், தனக்குப் பிடித்த பூ, இலை, காய், கனி என்று பல விஷயங்களை ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொன்றை விடச் சொல்கிறார்கள். 

பிறகு நாம் வாழ்க்கையில் எங்கே நமக்குப் பிடித்த அந்தக் காய் / கனி / இலை / பூ என்பதைப் பார்த்தாலும், நமக்கு உடனே காசி யாத்திரை, தரிசனம் எல்லாம் ஞாபகம் வரும். ஒவ்வொரு முறையும் காசி விஸ்வநாதர் நினைவு வரவேண்டும் என்றால், நமக்குப் பிடித்த காய் / கனிகளை விடவேண்டும். 

அதை விடுத்து, நான் பழத்தில் பிரப்பம் பழம், காயில் பாகற்காய், பூவில் ஊமத்தம் பூ என்று விடுவதால் ஒன்றும் பலன் இருக்காது. கிடைக்காத பழத்தையும், பிடிக்காத காயையும், நுகரமுடியாத பூவையும் விடுவதால், நம் கண்களில் அவை படவும் படாது; நமக்கும் கடவுள் நினைவு வராது.

இதெல்லாம் என்னுடைய கருத்து. போற்றுவோர் போற்றலும், தூற்றுவோர் தூற்றலும் ........   வந்தால் எதிர்கொள்கிறேன்!    

அதிரா : 

காசிக்குப் போனால், நமக்குப் பிடிச்ச ஏதாவது ஒன்றை அங்கு விட்டுவிட்டு வரோணுமாம்:), சமீபத்திலதான் பரவலாகப் பேசப்படுது. 
ஏன்?

# காசி யாத்திரைக்குப் பின்பு ஓரளவு மனப் பக்குவம், ஆசை அடக்கல் வந்திருக்கிறதா என்று பார்க்கத்தான் இம்மாதிரி விதிக்கப் பட்டிருக்கும்.

ஏஞ்சல் : 

1, அறிவு ஞானம் போன்ற நல்லவற்றை இயல்பாய் முன்னோரிடமிருந்து வந்ததுன்னு ஏற்கும் மனித மனம் மற்ற கெட்ட குணங்களை மட்டும் அப்படி ஏற்க மறுப்பதேன் ? 

# முன்னோரிடமும் அதே கெட்ட குணம் இருந்திருந்தால்தானே அப்படிச்சொல்ல முடியும் ?

& கொஞ்சம் இது பற்றி சிந்தித்துப் பார்த்தேன். மது அருந்துகின்ற அல்லது புகை பிடிக்கின்ற தகப்பன், தன்னுடைய குழந்தைகளை அதே பழக்கங்களை ஏற்படுத்தி வளர்ப்பானா - அல்லது, 'மகனே இந்தக் கெட்டப் பழக்கம் என்னோடு போகட்டும்; நீயாவது நன்றாக இரு' என்று சொல்லி நல் வழி காட்டி வளர்ப்பானா?  அப்படியே அவன் தீய பழக்கங்களை தன் குழந்தைகளுக்கு போதித்தாலும், தாய் அதற்கு சம்மதிப்பாளா? 

ஆகவே, கெட்ட குணங்கள் முன்னோரிடமிருந்து சந்ததியினருக்கு வருவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவு. 

2, பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாதுன்னா ? அப்போ நமக்கு எதுக்கு பணம் ? இப்படிப்பட்ட ஆழ் சிந்தனைகள் எனக்கு அடிக்கடி தோணுது காரணம் என்னவாயிருக்கும் ? உங்களுக்கும் இப்படிப்பட்ட சிந்தனைகள் கேள்விகள் தோன்றியதுண்டா ?# பணத்தால் சந்தோஷத்தை வாங்க இயலாது என்று சொல்பவர்கள் பணம் படைத்தோர் மட்டுமே.
அடுத்தவருக்காக செலவு செய்யும் மனம் கொண்டவர்களுக்கு இது பொருந்தாது.

& சந்தோஷம் என்பது நமக்குள்ளேயே இருக்கின்ற ஒன்று. அதை பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை. வாங்கவும் இயலாது. உணரவேண்டிய ஒன்று. 

கடைக்கு சென்று, 'கால் கிலோ தாயன்பு கொடுங்க' என்று கேட்டு வாங்க முடியுமா? அது போலத்தான் சந்தோஷமும். 

பணம் எதற்குத் தேவை என்றால், நமக்கும், நம்மைச் சார்ந்தோருக்கும், உணவு, உடை, இருப்பிடம், கல்வி எல்லாம் பெறுவதற்கு மட்டும்தான் தேவை.  

3, பொய் தெரியும் அது என்ன வெள்ளை பொய் ,பச்சை பொய் ? white lie ? அப்போ கருப்பு பொய் என்றும் ஒன்று இருக்கா ? # பொய் என்று கேட்பவருக்குக் கூட உடனே புரிவது பச்சைப் பொய் -- பக்குவப் படாதது.
தெரியாமல் சொல்வது வெள்ளைப் பொய் - சொல்பவருக்கு வெ.மனசு.
கெடுதல் விளைவிக்கச் சொல்லப் படுவது black Lie. (கல்மிஷம் இல்லையேல் வெள்ளை அன்றேல் கருப்பு).


4, அழகு என்பது என்ன ? அது ஏன் சிலருக்கு சிலர் மட்டும் மிக மிக அழகா தெரியறாங்க ?
இந்த கேள்விக்கு அனுஷ் ,தமன்னா ,கீ சு , பாவ்ஸ் படங்கள் பயன்படுத்த தடையில்லை :)

             


# அழகு வடிவம் சார்ந்தது. அறிவும் கருணையும் கொண்ட நல்மனதுடன் நல்வடிவம் இணையும்போது மிக மிக அழகாகி விடுகிறது. 
அழகிய மக்குகளைக் கண்டதில்லையா ?

& Beauty lies in the beholder's eye or mind. 'உலகிலேயே அழகான பெண் என்னுடைய அம்மாதான்' என்று சொல்லாத மகள் கிடையாது. அதை ஏற்றுக்கொள்ளாத தாயும் கிடையாது! அக அழகு, நெருங்கிப் பழகுபவர்களுக்கு மட்டுமே தெரியும். புற அழகு எல்லோருக்கும் தெரியும். நடிகைகள் அழகு என்பதெல்லாம் மேக்கப் போடப்பட்ட பிறகுதான். மேக்கப் போடாத நடிகைகளைப் பார்க்க சகிக்காது! 5, உலக சினிமா தரம் ,உலக சினிமா தரம் என்கிறார்களே அப்படின்னா என்ன ?
ஒரு படத்தை சமீபத்தில் பார்த்தேன் எனக்கு ஒண்ணுமே புரியலை அதான் கேட்கிறேன் .


# புரியாவிட்டால்தான் உலகத் தரம். பிக்காஸோ ஓவியம் மாதிரி.

& அதே கதைதான் எனக்கும். உலகத் தரம் என்று போடப்பட்ட படம் எதுவாக இருந்தாலும் பார்த்து முடிப்பதற்குள் பன்னிரண்டு கொட்டாவிகள் நிச்சயம் விடுவேன்.                    

6, ஆடி மாதத்துக்கு மட்டும் நிறைய பழமொழிகள் இருக்கு ஆனா மற்ற மாதங்களுக்கும் அப்படி இருக்கா ?# இருக்கிறதே.
சித்திரை அப்பன் சந்தியிலே.
புரட்டாசி பொன்னுருகக் காயும் மண்ணுருகப் பெய்யும்.
தை பிறந்தால் வழி பிறக்கும்.
இப்படி..
ஆடி பண்டிகை மாதம், விவசாய த்தில் விதைப்பு சமயம். எனவே அதிக கவனம் பெற்றிருக்கும்.

& கார்த்திகைக்குப் பிறகு மழையும் இல்லை; கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை. 

7, ஏழேழு ஜென்மம் அப்படி எதற்கு சொல்றாங்க ? அதன் அர்த்தம் என்ன ?


# ஏழேழு 49 ஆக இருக்கும்.

& இது Seven times seven = 7 x 7 x 7 x 7 x 7 x 7 x 7 = 8,23,543 என்கிற எண்ணைக் குறிக்கிறது. எந்த மனிதப்பிறவிக்கும் எட்டே கால் இலட்ச பிறப்புகள் உண்டாம். (சில நூல்கள் ஒன்பது லட்சம் பிறப்புகள் என்றும் கூறுகின்றன.) மனிதப் பிறவிகள்  எட்டேகால் இலட்சம் முறை ஜனித்து மரணிப்பர் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. நடுவில் ஏதாவது ஒரு பிறவியில், பாவ புண்ணியங்கள் தீர்ப்பதற்கு ஏதும் இல்லை என்றால்,  அதற்குப் பிறகு பிறப்பற்ற நிலை ஏற்படும்.                

8, சங்கீத சபாக்களில் உள்ள கேன்டீனில் உணவு பிரமாதமாயிருக்கும் என்று படிச்சிருக்கேன் அது உண்மையா ? அதற்க்கு காரணம் என்ன ? அப்படி சமீபத்தில் நீங்க ருசித்த சபா கேன்டீன் உணவு என்ன ?# 1970 80 களில் சபா கான்டீன் உணவு நன்றாக இருந்தது உண்மைதான். அந்த "சேவையை"  தம் ஹோட்டல் விளம்பரமாகக் கொண்டு நஷ்டம் பாராமல் நிர்வகித்தார்கள். இசைப்பிரியர்கள் மட்டுமே காணப் பட்டனர். விலை மலிவு தரம் உயர்வு. கேடரிங் பெரும்புள்ளிகள் தலைதூக்காத காலம்.

இப்போது எல்லாமே அசெம்ப்ளி லைன் பிராசஸ் ஆகி எங்கும் எதுவும் ஒரே மாதிரியும் மிக அதிக விலையாகவும் இருக்கிறது. 

1970 களில் அகாடமி கான்டீனில் அல்வா தவலை வடை ரவா தோசை காபி என்று ரசித்துச் சாப்பிட்டதுண்டு.

இப்போது மக்கள் அமாவாசை தர்ப்பணம் மாதிரி சபா கான்டீன் விஸிட்டையும் ஒரு சடங்காக ஆக்கி விட்டார்கள்.

9, ஆன்மீகமும் சமயமும் ஒன்றா வெவ்வேறா ?


# சமயம் மத அடையாளம் கொண்டது. ஆன்மீகம் அதைத் தாண்டியது.

10, அதிகமிகுந்த கோபம் வரும்போது தனியே இருக்க விரும்புவீர்களா இல்லைன்னா அதை மட்டுப்படுத்த யாராவது உடனிருந்து உற்சாகப்படுத்துவது நல்லதென்று நினைப்பீர்களா ?


# அவ்வளவு கோபம் வந்த அனுபவம் இல்லை.

& ரொம்பக் கோபம் வந்தது இல்லை. கோபம் வரும்போது, அதை மட்டுப்படுத்த யாராவது  உடனிருந்து உற்சாகப்படுத்துவது நல்லது என்றுதான் நினைக்கிறேன். 

கீதா ரெங்கன் : 

1. உறவினர் அல்லது நண்பர் வீட்டு நிகழ்ச்சி/விசேஷ நாளை மறந்த அனுபவம் உண்டா? 

# நிறைய உண்டு. என் மறதி மற(றை)க்க முடியாத விஷயம்.

& மறந்தது இல்லை. என்னால் செல்ல முடிந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன். செல்ல இயலாத நிகழ்ச்சிகளுக்கு நண்பர்கள் / உறவினர்கள் மூலம் பரிசுத் தொகை அனுப்பிவிடுவேன்.     

2. ஆற்றில், அருவியில் குளித்த அனுபவம்?


# ஆற்றுக் குளியல் அருவிக்குளியல் சுகமோ சுகம். வரும் தலைமுறையினருக்கு கிட்டாது போய்விடுமோ என்ற அச்சம் இருக்கிறது.

& அருவியில் குளித்த ஞாபகம் கோனே ஃபால்ஸ் - ரொம்ப ரொம்ப வருடங்களுக்கு முன்பு. ஆற்றில் குளித்த அனுபவம் - நான்கைந்து முறை ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் குளித்த ஞாபகம் அதுவும் கடந்த பத்து வருடங்களுக்குள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.       

3. 40 வயசு நாய் குணம், 60வயசு பேய் குணம் - என்று சொல்லப்படுவது காணப்படுகிறதா? அனுபவம் உண்டா?


# நாய்க்குணமும் பேய்க்குணமும் நமக்கில்லை அவர்க்கு என்ற குணம் நாற்பதுக்கு  முன்னரே இருக்கிறது.

& அந்தந்த வயது வந்தபோது இதெல்லாம் ஞாபகம் இல்லை. அறுபதுக் கலக்கம் என்று கேள்விப்பட்டிருக்கேன், அறுபது வயதில் பேய் குணமா? புளிய மரத்தைப் பார்த்தால், அதுல ஏறி நாட்டியமாடுவார்களா! 
சரி நம்ம புதுசா மற்ற லாண்டு மார்க் வயதுகளுக்கு ஏதேனும் சொல்வோம். 

பத்து வயதில் பலப்பம் தின்னும் குணம். 
இருபது வயதில் இலந்தவடை குணம்.
முப்பது வயதில் முயல் குணம்.
அம்பது வயதில் அல்ப குணம்.
எழுபது வயதில் எலி குணம்.
எண்பது வயதில் எருமை குணம் 
தொண்ணூறு வயதில் மூஞ்சூறு குணம் 
நூறு வயதில் நிறை குணம்.        

4. கல் ஆனாலும் கணவன். புல் ஆனாலும் புருஷன்? (3, 4 கேள்விகளுக்கு நகைச்சுவையான பதில்கள் வரும் என்று நம்புகிறேன் ஹிஹிஹி)# கல்லானாலும் பொறுப்பான் கணவன் புல் ஆனாலும் மதிப்பவன் புருஷன் என்பது எங்கள் தரப்பு விளக்கம்.

& அகலிகை கல் ஆனது கணவனின் சாபத்தால்தான். குடும்ப பாரத்தை புல் (Pull) செய்பவன் புருஷன்தான் என்று நினைத்து சொல்லியிருப்பார்களோ? (கொஞ்சம் எச்சரிக்கையாகவே பதில் சொல்லணும். பானுமதி மேடம் இதப் படிச்சா, உனக்கு இருக்கு மண்டகப்படி என்று உள்ளுணர்வு எச்சரிக்கை செய்யுது! 😀😀


5. அம்மா, அப்பா....தாத்தா, பாட்டி இந்த இரு பொசிஷன்களில் எதை நீங்கள் மிகவும் ரசிக்கின்றீர்கள். அனுபவிக்கின்றீர்கள்?


# உண்மையைச் சொன்னால் அம்மா/அப்பா ஸ்தானம் வந்த  சமயம் வாழ்வின் சவால்கள் காரணமாக ரசனை முனை மழுங்கி இருந்தது.  தாத்தா/பாட்டியாகும் போது வசதிகள் பெருகி பொறுப்புகள் விலகி ரசனை பரிணமிக்கிறது. நோயற்ற நிலை கூடியிருந்தால் ரசனை ஒளிர்கிறது.

& தாத்தா என்று பேரன்(கள்) கூப்பிடும்போதுதான் சந்தோஷமாக இருக்கு. என்னுடைய தாத்தாக்கள் யாரையுமே தாத்தா என்று கூப்பிடும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. 

வாட்ஸ் அப் கேள்விகள் : 


பானுமதி வெங்கடேஸ்வரன்.

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக....என்பதில் சுயநலம் அதிகமாக தொனிக்கவில்லயா?


 # ரசனை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

& சுயநலம் என்பதை விட ஒரு Optimistic outlook என்று எடுத்துக்கொள்ளலாம். உங்கள் மனைவியின்(சமையல்) திப்பிசங்களை கண்டுபிடித்து விடுவீர்களா? அப்படி கண்டுபிடித்தால் எப்படி நடந்து கொள்வீர்கள்?
# திருமதி சமையல் எக்ஸ்பர்ட்.

& ஹி ஹி சமையலில் அவருக்கு திப்பிசங்களைச் சொல்லிக் கொடுப்பவனே நாந்தான். அப்புறம் என்ன! 

=============================================================================================நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே 
- - - - - - - - - - - - - - - 


ஸ்ருதி :

நான் அமெரிக்காவுக்குப் புறப்பட்ட போது ஷ்ரவண் நேரடியாக ஏர்போர்ட்டிற்கு வந்தது நான் சற்றும் எதிர்பாராத ஒரு சந்தோஷம்! மாமனார் மாமியாருக்கும்தான். அவன் என்னுடன் சரியாகப் பேசவில்லை என்றாலும் கம் சூன்” என்ற அந்த ஒன்றே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அர்த்தங்கள் பல பொதிருந்தது போல் எனக்குத் தோன்றியது. அம்மா அப்பாமாமனார் மாமியார் எல்லோரும் என்னை வாழ்த்தினர்.

மாமியார்மாமனார் மட்டும் என்னருகே வந்து ஸ்ருதிமனசை சிதறவிடாம கச்சேரிய நல்லவிதமா பண்ணனும். எல்லாம் சரியாகிடும்பாரு. ஆல் த பெஸ்ட்.  என்று என்னை ஆரத்தழுவிவாழ்த்தினார்கள். மாமியார் எனக்கு மட்டும் கேட்கும் தொனியில், “ஸ்ருதி இந்த ரெண்டு மாசப் பிரிவு கூட ஒரு விதத்துல நல்லதுதான். கண்டிப்பா மாத்தம் வரும் பாரு” என்று என்னைத் தேற்றி வழியனுப்பினார்.

பயணத்திலும் ஷ்ரவணின் நினைவுகள்தான். ஷ்ரவணிடம் கோயிலில் பாடியது அவன் கொடுத்த தீம் ஐடியா பாராட்டப்பட்டது என்று சொல்லஅவனது குத்தல் பதில் வருத்தத்தைத் தந்திருந்த சமயம் தான் விக்கி வந்து அமெரிக்க கச்சேரி முடிவானது. அதற்கும் அவனிடமிருந்து அதே சர்க்காஸிஸம்தான்.

அவனை எவ்வளவோ வற்புறுத்தியும் அவனும் மறுக்கநானும் என் முடிவில் உறுதியாக இருந்தேன். எனக்கு என் கேரியரும் முக்கியம்தான். எல்லாம் அவனிடம் முன்பே சொல்லித்தானே அவனும் ஓகே சொன்னான். அவனுடன் வெளியில் போகும் போதும்ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற போதும் அவன் மீதான அன்பால் என் கச்சேரி தேதிகள் பலவற்றை மாற்றியிருக்கிறேன். கச்சேரிகளைக் குறைத்துக் கொண்டு வீட்டில் வகுப்புகள் எடுக்கிறேன் என்றும் சொன்னேன். அவன் வார்த்தைகள் குறையவில்லை. இப்போதும் கூட விக்கி அவனையும் என்னோடு வரச் சொல்லி இருவருமே கச்சேரி செய்யலாம் என்று நாங்கள் எல்லோரும் எவ்வளவோ சொல்லியும் வரமாட்டேன் என்றும் சொல்லிவிட்டான்.

ஆசைமுகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேன். அவனுக்கு என் மேல் அன்பும் காதலும் உண்டு. ஆனால்யாரோ சொன்ன சில வார்த்தைகள் அவனை வாட்டுகிறது. மாமனார் மாமியாருக்கும் மாற்றங்கள் தெரிந்திருந்தது. ஷ்ரவணுடன் கண்டிப்பாகப் பேசுவார்கள். என் மனதில் நம்பிக்கை வந்தது.

அமெரிக்காவில் எனக்கு உற்சாகமான வரவேற்பு. அனைவரும் என் கச்சேரியில் மெருகு கூடியிருப்பதாக ஸ்லாகித்தார்கள்.

ஷ்ரவணும் ம்யூஸிக்ல கில்லாடியாச்சே. நன்னா பாடவும் செய்யறான்ஐபேட்ல கூட வாசிக்கறானாமே! அவன் கச்சேரிதான் பண்ணலை. அவனும் கூட வந்து வாசிச்சிருக்கலாம்.

அதுக்குள்ள இந்த ஐபேட் விஷயம் எல்லாம் அமெரிக்கா வரை எட்டிவிட்டதே! இந்த விக்கி நிஜமாவே கில்லாடி விக்கி” தான்! எனக்குள் சிரிப்பை வரவழைத்தது. சற்று பெருமையாகவும்சந்தோஷமாகவும் தான்

மே பி வைஃப் நன்னா முன்னுக்கு வரணுன்னு விட்டுக் கொடுத்து சப்போர்ட்டிவா இருக்கானா இருக்கும்.

இவள விட்டுருவானாஅவன் இவளை நிறைய இம்ப்ரொவைஸ் பண்ணியிருப்பான்! அதான் இப்பல்லாம் ஸ்ருதி கச்சேரில வெளுத்து வாங்கறா. கச்சேரிக்கு கச்சேரி புதுமைகள் வரது.” என்று கூடவே ஷ்ரவணின் புகழும் பல வகைகளில் பாடப்பட்டதுஉறவுகளாலும்நட்புகளாலும்.

நான் அவர்கள் சொன்னதை அப்படியே ஷ்ரவணுக்கு வாட்சப்பில் அனுப்பினேன். அமெரிக்காவில் இருக்கும் லோக்கல் மேகசினில் ஹஸ்பன்ட் இஸ் த ஸீக்ரெட் ஆஃப் ஸ்ருதிஸ் எனர்ஜி அண்ட் சக்ஸஸ்” என்று தலைப்பிட்டு ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் என்பது போல இப்பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஓர் ஆண்! அவள் கணவன் ஷ்ரவண் என்று சொல்லியிருந்ததையும் ஃபோட்டோ காப்பி எடுத்து அனுப்பினேன்.

அமெரிக்காவில் பல இடங்களில்கிட்டத்தட்ட இரு மாதமாகக் கச்சேரி. நல்லபடியாக முடிந்தது. புகழ் விமர்சனங்கள். மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்” என்று அன்று பாடி உன்மத்தம் ஆனவனுக்கு அதன் பின் என்னை ஊர் புகழ்வது பிடிக்காமல் போனதேனோ?

எத்தனையோ இடங்கள் சென்றேன். என் கடைசிக் கச்சேரி விக்கி இருக்கும் ஊரில். கச்சேரியை லைவாக இந்தியாவில் வீட்டில் எல்லோரும் பார்க்கும்படி விக்கி செய்திருப்பதாகச் சொன்னதும் அன்றைய கச்சேரியில் எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்த பல்லவி சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு என்பதை சற்றே அழுத்தம் கொடுத்தே பாடினேன். எனக்கும் அவனுக்குமேயான சங்கேதசங்கீதமான சின்னஞ்சிறு கிளியேவும்” “திக்குத் தெரியாத காட்டில்லும் சேர்த்துக் கொண்டேன். பெண்ணே உனதழகைக் கண்டு மனம் பித்தங் கொள்ளு தென்று நகைத்தான்- அடி கண்ணேஎனதிருகண் மணியே-உனைக் கட்டித் தழுவமனங் கொண்டேன். என்பதை அவன் பாடும் ராகத்தில் பாடினேன். அவனுக்குப் புரிந்திருக்கும். ஷ்ரவண் கூட இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஐ மிஸ்ட் ஹிம் எ லாட்.

அங்குக் கூடியவர்களும்ஷ்ரவணும் என்னோடு வந்து கச்சேரி செய்திருக்கலாம் என்றும்அடுத்த முறை நாங்கள் இருவரும் சேர்ந்து கச்சேரி செய்ய வேண்டும் என்றும் என்னை வாழ்த்தி வழி அனுப்பினார்கள்.

அவர்கள் வாழ்த்தியது நடக்காதோநடந்தால் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவானு” அவன் காதில் பாடி மகிழ்ந்திடுவேனே. என் ஷ்ரவண் முன்பு போல் ஆகியிருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், “நினைந்து நினைந்து நெஞ்சம் புண்ணாகுதே நீதியில்லையென்று நேரிடை சொல்லியே, “என்ன சொல்லி அழைத்தால் வருவாயோ”, “ஓடோடி வந்தேன் கண்ணாஉனக்கும் எனக்குமுள்ள காதலை எண்ணியே” என்று என்னென்னவோ மனதுள் ஓடியது.

சென்னை விமான நிலையம். இறங்கி ஷ்ரவணைத் தேடிக் கொண்டே வெளியில் வந்த எனக்கு என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை! ஓ மை காட்! கனவாநிஜமா! இனிய ஆச்சரியம்!

கங்க்ராட்ஸ் அண்ட் வெல்கம் ஸ்ருதி” என்ற வாழ்த்து அட்டையுடன் ஷ்ரவண்! என் இறக்கைகள் விரிந்தது பறப்பதற்குத் தயாராகும் பறவையைப் போல! ஷ்ரவணின் முகத்தில் முன்பு போல் மகிழ்ச்சியின் பிரதிபலிப்புகண்களில் காதல்அன்பு எல்லாம். காரில் ஏறியதும்,
ஸோ உன் ட்ரிப்கச்சேரி எல்லாம் எப்படி இருந்துது?”

நல்லா போச்சு. அதான் நீ பேசலைனாலும் உனக்கு எல்லாம் அப்பப்ப வாட்சப்ல கொடுத்தேனே. அங்க நடந்ததுஅவங்க பேசினது எல்லாமே. கடைசி கச்சேரி பாத்ததானேஐ மிஸ்ட் யு எ லாட்” என் கண்ணில் கண்ணீர் துளிர்த்ததும் அதை மறைக்க வெளியில் வேடிக்கைப் பார்ப்பதைப் போல் திரும்பிக் கொண்டேன்.

ஷ்ரவணுக்குப் புரிந்தது போலும். ஹேய்! கமான்! கூல். அதான் வந்துட்ட இல்ல” என்று சொல்லி ஸ்டியரிங்கை பிடித்திருந்தவன் தன் இடது கையால் என் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

நான் இனி இப்படி வெளியூர்க் கச்சேரி எல்லாம் ரொம்ப ஏத்துக்கப் போறதில்ல. போதும் போதும்னு ஆயிடுத்து. அதுவும் நீயும் என் கூட இல்லாம..ப்ச்…. நல்லா ரெஸ்ட் எடுத்துண்டு உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்…..”

ம்ம்ம் அப்படியே நம்ம ப்ளானையும் எக்ஸிக்யூட் பண்ணிட வேண்டியதுதான். சங்கராபரணனை நீ தான் தர்பாருக்கு அழைச்சுட்டியே…..திக்குத் தெரியாத காட்டுக்குள்ளயும் கூட்டிண்டுப் போயிட்டியே…….அப்புறம் அப்படியே சங்கராபரணனோட ஜன்யமா ஒரு ஆரபியோஹேமந்தோ இல்ல கல்யாணியோட ஜன்யமா ஒரு சந்த்ரகாந்தனோ இல்ல சுநாதவினோதினியையோ இல்லை கலந்து கட்டியோ……..” என்று அவன் முடிப்பதற்குள் வெட்கம் என்னை ஆட்கொள்ள, “யூ நாட்டிபேர் கூட வைச்சுட்டியா” என்றபடியே அவன் தோளில் முகம் புதைத்தேன்.

வெல்! நல்லா எவ்வளவு வேணா ரெஸ்ட் எடுத்துக்கோ. நோ ப்ராப்ளம். ஆனா அடுத்தாப்ல இன்னும் ஒரு 15 நாள்ல பாம்பேல கச்சேரி - ஜுகல்பந்தி வித் மஞ்சரி கேல்கர் நீ ரொம்ப ஈகரா எதிர்பார்த்தது, அப்புறம் தில்லில கச்சேரிதுபாய்னு வரது. உங்கப்பா சொன்னார் நீ வந்ததும் உன்னைக் கேட்கணும்னு. ஸோ அக்செப்ட் பண்ணிக்கோ….நல்லா ப்ராக்டீஸ் பண்ணு

“ஆமா! மஞ்சரி கேல்கரோடு ஜுகல்பந்தி…..நான் ரொம்ப எதிர்பார்த்ததுதான்…….ஆனா…..” ஒரு தயக்கமும் கூடவே வந்தது.

“ஏய்! என்னாச்சு…….? அமைதியாயிட்ட?”

“ம்ம்ம்ம்… ஒண்ணுமில்ல…….இப்பத்தானே நம்ம ப்ளான் பத்தி பேசினோம்…….அதான் தயக்கம்…..”

ஏன் டூர் போனா ஜன்யராகம் பிறக்காதா என்னக்வாலிட்டி டைம்!! என் கண்ணம்மா!!! எம்.எல்.வி அம்மா பிரசவத்துக்கு முதல்நாள் வரைக்கும் பாடிருக்காங்களேநீயும் தான் மூச்சுப் பயிற்சி எல்லாம் செய்யறியேயு கேன்!!!!"

ஆமாம் அதெல்லாம் நானும் கேட்டுருக்கேன்க்வாலிட்டி டைம் எல்லாம் ஓகேதான்…….ஆனாநீயும் வந்தா நல்லாருக்கும்……………….ஒவ்வொரு தடவையும் உன்னை விட்டுப் போறப்ப நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். ஹான்……உன் ஐபேட் வாசிப்பு திறமை அமெரிக்கா வரை போயாச்சு தெரியுமோ! விக்கி உபயத்துனால. இன்ஃபேக்ட் அங்க எல்லாரும் சொன்னாங்க தெரியுமா… அடுத்த கச்சேரி இங்க பண்றது நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்றதா இருக்கணும் அப்படினு……….அப்ப எனக்குத் தோணித்து. நீ என் கூடச் சும்மா வரதுதானே வம்பு வளர்ரதுன்னு உனக்குக் கஷ்டமா இருக்கு…….கச்சேரி பண்ண வந்தா ரெண்டுபேருக்குமே நன்னாருக்குமேனு……ஜஸ்ட் எ சஜஷன்தான்…..” என்று மெதுவாக இழுத்தேன்.

ஓ! தட்ஸ் எ குட் ஐடியா. பண்ணிட்டா போச்சு! வொய்நாட்! ஆனாஎப்பவும் சேர்ந்து கான்செர்ட் பண்ண முடியாதே. எப்ப டைம் கிடைக்குதோ அப்ப. ஓகேதானே?! கௌஷிக் சக்ரபர்த்தியும் அவங்க ஹஸ்பண்ட் பார்த்தசாரதி தேசிகனும் அப்படித்தான் வாய்ப்பு கிடைக்கறப்ப சேர்ந்து பாடறாங்ககுழந்தை பிறந்தப்பறமும் குழந்தையையும் கூடவே கூட்டிட்டுத்தான் போவாங்களாம்இல்லைனா பார்த்தசாரதி குழந்தைய பார்த்துப்பாராம்ஸோ……”
ஒரு நிமிடம் அப்படியே நான் வியப்புடனான மகிழ்ச்சியின் எல்லைக்கே போனேன். 

ஹே! யூ!ரியலிசீரியஸ்லி?!” மகிழ்ச்சிப் பூரிப்பில் நான் அவன் கையைப் பற்றிக் கொண்டு என் கன்னத்தில் வைத்து முத்தமிட்டேன்.
பாயும் ஒளி நீ எனக்கு….பார்க்கும் விழி நானுனக்கு” என்று ஷ்ரவண் பாடத் தொடங்கினான்……

நான் பறந்தேன் க்ளவுட் ல்!


-------ஸ்ருதி சேர்ந்து மீட்டப்பட்டது......


சில வருடங்களுக்குப் பிறகு…………………………

ஷ்ரவண்

ஸ்ருதி இப்போது முன்னணிப் பாடகிகளுள் ஒருத்தி. நிறைய பயணங்கள்.  நானும் எனக்கு நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது அவளுடன் கச்சேரி ஐபேடில் செய்கிறேன். ஸ்ருதி வீட்டில் இருக்கும் நேரங்களில் பயிற்சி தவிர, குழந்தைகளோடு நிறைய நேரம் செலவிடுவாள். ஆம், இப்போது நாங்கள் சம்சாரிகளாகிவிட்டோம். ஐந்து வயதில் பெண் சுநாதவினோதினி. இரண்டு வயதில் பையன் ஹேமந்த்.

இன்று இரவு ஸ்ருதி ஊருக்குக் கிளம்ப வேண்டும்.

“ஷ்ரவண், நாளைக்கு ஹேமந்த்துக்கு வேக்சினேஷன் கொடுக்கணும், ஞாபகம் இருக்கா?”

“ஓ! யெஸ்! டாக்டர்கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கியாச்சு. பட் உன் பொண்ணை நீதான் சமாளிக்கணும். இன்னிக்கு…….” என்று நான் ஆரம்பிக்க,

“அம்மா! எங்க ஸ்கூலில் இன்னிக்கு பேரன்ட், டீச்சர் மீட்டிங்க் இருக்கு, நீ வருவதானே….?” என்றபடியே மகள் ஸ்ருதியின் காலைக் கட்டிக் கொள்ள, அவள் என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“அம்மா இன்னிக்கு ஊருக்குப் போரேண்டா செல்லம். நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வரேன்.”

“போம்மா, நீ லாஸ்ட் டைம் இப்படித்தான் சொன்ன, அதிதியோட அம்மால்லாம் எப்போதும் வரா, நீ தான் வர மாட்டேங்கற…..”

“சாரிடா கண்ணம்மா, நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வரேன்…..”


ஸ்ருதி குழந்தையைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். என்ன செய்வது? செலிப்ரிட்டி ஸ்டேட்டஸுக்குக் கொடுக்கும் விலை.

                                         💔💔💔🙏🙏🙏💔💔💔

160 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் தொடரும் அனைவருக்கும்.

  அட கதை அதுக்குள்ள முடிஞ்சுருச்சா?

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் காலை வணக்கம். எனக்கு முன்னாலேயே கீதா ரங்கனா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இது தப்பாட்டம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை தம்பி!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
   ஏன் நாங்க வரக் கூடாதாக்கும்!! ஹா ஹா ஹா ஹா

   நாங்க 4 மணிக்கு எழும் கேஸாக்கும்

   கீதா

   நீக்கு
  2. சண்டைக் கோழிகளுக்கு காலை வணக்கம்!

   நீக்கு
  3. கீதா ரங்கன்... நான் 5 மணிக்கு எழுந்து 7 மணிக்கு சாப்பிட்டுட்டு ரெடியாயிட்டேன். ஆனா வந்த கமெண்ட், 'பெங்களூருக்கு உள்ள டயம் இது இல்லை. மெதுவா எழுந்து 9-9:30க்கு ரெடியானா போதாதா என்பது....

   4 மணிக்கு எதுக்கு எழுந்துக்கறீங்க? குக்கிங் கிளாஸ் அட்டெண்ட் பண்ணிட்டு அப்புறம் சமைக்கவா? ஹாஹா. இங்க குளிரே இல்லை. சாதாரணமா இருக்கு. ஃபேன் போட்டா பரவாயில்லை. இனி, 2000க்கு அப்புறம் பெங்களூருக்கு வந்தவங்களுக்கு விசா பாஸ்போர்ட்லாம் கேட்கவேண்டியதுதான். கூட்டம் ஜாஸ்தியாறதுனால பெங்களூரின் குளிரிந்த காலநிலையே இல்லாமப் போயிடுத்து.

   நீக்கு
  4. கூட்டத்தால் குளிர்நிலை மாறாது. மரங்களை அழித்ததால் (மந்திரி, ஷோபா இன்ன பிற அபார்ட்மெண்ட் கட்டுவோர் செய்யும் தவறு?) இருக்கலாம்.

   நீக்கு
  5. கௌ அண்ணா உங்க கமென்ட் சண்டைக் கோழிகள்// ஹா ஹா ஹா ஹா ஹா பார்த்து ரசித்து சிரித்தேன்!!! ரொம்பவே...

   கீதா

   நீக்கு
  6. 4 மணிக்கு எதுக்கு எழுந்துக்கறீங்க? குக்கிங் கிளாஸ் அட்டெண்ட் பண்ணிட்டு அப்புறம் சமைக்கவா?//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா ஹா ஆமாம் ஆமாம் எப்படிக் கண்டு பிடிச்சீங்க நெல்லை!!! ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
 3. ஒவ்வொரு வயதுக்கான என்று சொல்லியதை வாசித்து சிரித்துவிட்டேன்..

  வரேன் மீண்டும்

  கீதா

  பதிலளிநீக்கு
 4. பானுக்காகிட்டருந்து தப்பிச்சீங்க கௌ அண்ணா...அவங்க ...பிசி!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடேடே ! முந்தியே சொல்லியிருந்தா இன்னும் கொஞ்சம் அதிகமா ...... அய்யோடா வேண்டாம் வேண்டாம் !

   நீக்கு
 5. கதை நல்லா இருந்தது. கொஞ்சம் நாடகத்தனமான முடிவு. நடைமுறை வாழ்வில் நடப்பது அபூர்வம். தெரிந்து திருமணம் செய்தபின் தவறை உணர்ந்து அந்தப் பெண்ணின் கேரியரை பாதிக்காமல் அவள் வளர்ச்சியைப் பார்த்து மகிழுமாறு முடித்தது சிறப்பு கேஜிஜி சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா நெல்லை அப்ப நீங்க இன்னும் பிரச்சனைய எதிர்பார்த்தீங்களா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏன் புரிதல் வந்து ஜந்தோசமா இருந்துட்டுப் போட்டுமே!!!

   ஆஆஆஆஆஆஆஆஅ அப்புறம் இப்ப மீண்டும் பிரச்சனை வந்தா கதை மீண்டும் தொடங்கிடும்!!! அவங்க ஜந்தோஷமாவே இருந்துட்டுப் போட்டும்!!!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. // மகிழுமாறு முடித்தது சிறப்பு கேஜிஜி சார்// நான் நிரபராதி. இந்தக் கதையை எழுதியவர்கள் யார் என்று ஸ்ரீராமும் எனக்குச் சொல்லவில்லை. எனக்கு சஸ்பென்ஸ் பிடிக்கும் என்பதால் நானும் அவரைக் கேட்கவில்லை!

   நீக்கு
  3. கௌ அண்ணா ஹைஃபைவ்! மீக்கும் சஸ்பென்ஸ் ரொம்பப் பிடிக்கும்!!!

   கீதா

   நீக்கு
 6. காசிக்குப் போவதே சம்சார வாழ்க்கையின் அடுத்த ஸ்டேஜ் நினைவூட்டலுக்குத்தான். விளக்கம் ஏற்றுக்கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 7. நல்ல வேளை! சென்ற வாரம் நான் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
  கேட்டிருந்தால் என் கதி என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமா இருக்கு! //

  ஹா ஹா ஹா அது!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. காசிக்குப் போனா எதையாவது விடுவது பத்தி சொன்னது நல்லாருக்கு அண்ணா. கீதா அக்கா வந்தாங்கனா அவங்களும் ஒரு விளக்கம் தருவாங்க!!

  என்னாச்சு யாரையும் காணலை கதவு தட்டியும்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்புறம் வந்து சொல்லுவார் - 'இன்றைக்கு புதன் கிழமை என்பதையே மறந்துவிட்டேன்' என்று !

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கௌ அண்ணா சிரிச்சு முடிலப்பா....கீதா அக்கா வந்துருப்பாங்களே ஊர்லருந்து. ஒரு வேளை போன இடத்துல விருந்து விருந்தா உண்ட மயக்கம் போல!!!

   கீதா

   நீக்கு
 9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 10. //என்னுடைய அப்பா அடிக்கடி சொல்லுவார். "பதில் படித்துவிட்டோம், தெரியும் என்று இருக்காதே. எழுதிப்பார். எழுதும்போதுதான் எண்ணற்ற சந்தேகங்கள் வரும். அதை நிவர்த்தி செய்துகொண்டால் வெற்றி உனக்கே." இதுவும் ஒரு ரிவிசன் யுக்தி. //

  அப்பா சொன்னது நல்ல அறிவுரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். அதுவும் கணக்குப் பரீட்சைக்கு முன்னால் அவர் படுத்தும் பாடு இருக்கே, விடவே மாட்டார். நிறைய கணக்குகளை - மாதிரி வினாக்களை போட்டுப் போட்டுப் பார்க்கவேண்டும் என்பார்.

   நீக்கு
 11. //பிறகு நாம் வாழ்க்கையில் எங்கே நமக்குப் பிடித்த அந்தக் காய் / கனி / இலை / பூ என்பதைப் பார்த்தாலும், நமக்கு உடனே காசி யாத்திரை, தரிசனம் எல்லாம் ஞாபகம் வரும். ஒவ்வொரு முறையும் காசி விஸ்வநாதர் நினைவு வரவேண்டும் என்றால், நமக்குப் பிடித்த காய் / கனிகளை விடவேண்டும். //

  நல்ல பதில்.

  நான் மிக சின்ன வயதில் போனேன் யாரும் சொல்லவில்லை. இதைப் பற்றி அதனால் ஒன்றும் விடவில்லை.
  அடுத்த முறை போன போதும் அப்படித்தான்.

  இறைவன் அருளால் இன்னொரு முறை வாய்ப்பு கிடைத்தால் இப்படி விட எண்ணம் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்று வந்தது இறைவன் தரிசனம் எல்லாம் உங்கள் நினைவில் உள்ளது - நினைத்த மாத்திரத்தில் அடிக்கடி ஞாபகம் வருகிறது என்றால் அது போதும்.

   நீக்கு
 12. & சந்தோஷம் என்பது நமக்குள்ளேயே இருக்கின்ற ஒன்று. அதை பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை. வாங்கவும் இயலாது. உணரவேண்டிய ஒன்று.//

  உண்மை.

  அனைத்து கேள்விகளும், அனைத்து பதில்களும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. காசி யாத்திரையின் போது எதை விடுவதற்கான விளக்கம் மிக அருமை.

  அதே போல் ஸ்ருதி லயம் ஒன்று சேர்ந்தது அழகாகச் சொல்லி இருக்கிறார்.

  Its an ongoing process.
  கீதா ரங்கன் சாயலும் இந்தக் கதையில் இருக்கிறது.
  அருமையான எழுத்துக்கும் அழகான முடிவுக்கும் மனம் நிறை வாழ்த்துகள்.😃😃😃😃

  பதிலளிநீக்கு
 14. கதை சுபமாக முடிந்தது மகிழ்ச்சி. இப்போது குழந்தைக்கு ஏக்கமா?

  //ஸ்ருதி குழந்தையைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். என்ன செய்வது? செலிப்ரிட்டி ஸ்டேட்டஸுக்குக் கொடுக்கும் விலை.//

  ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெறமுடியுமா?

  பதிலளிநீக்கு
 15. கதையை அழகாய் நகர்த்தி சென்று இனிமையாக நிறைவு செய்த அனைத்து கதாசிரியர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  கதையின் நிறைவில் மீண்டும் ஒரு கதை தொடர வாய்ப்பு இருக்கிறது. குழந்தையும் நிறைய மனபக்குவங்களுடன் வாழ தெரிந்து இருக்க வேண்டும். இயல்பாய் எடுத்துக் கொள்ளும் மனம் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 16. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 17. காலை வணக்கம்.

  கதை இனிதே முடிந்தது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 18. இனிய முடிவு. நலமே வாழட்டும். அருமையான தொடர்.

  பதிலளிநீக்கு
 19. இரண்டு குழந்தைகளோடு குடும்பம் செல்வது போன்று கதையை முடித்தது மகிழ்ச்சியான சுபமுடிவு

  பதிலளிநீக்கு
 20. /இந்த ஆள் மட்டும் நம்ம கையில சிக்கினான்// - இதை அவங்க மட்டும் சொல்லலை..... நானும்தான். அநியாயத்துக்கு நீங்க நல்ல படங்களே செலெக்ட் பண்ணறதில்லை, அதுவும் 'த' வை... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 21. தொகுத்து வைத்த சில பழமொழிகள் அல்லது முதுமொழிகள் சொலவடைகள் :-

  சித்திரை

  1. சித்திரை ஐப்பசி சீர் ஒக்கும்
  2. சித்திரை எள்ளை சிதறி விதைக்கணும்
  3. சித்திரை புழுதி பத்தரை மாத்துத் தங்கம்
  4. விட்ட பாம்பும் செத்துப் போகும் சித்திரை வெயில்
  5. சித்திரையில் பிறந்து சீர் கேடானவனும் இல்லை... ஐப்பசியில் பிறந்து அதிர்ஷ்டகாரனும் இல்லை...
  6. சித்திரை மாதம் சீருடையோர் கல்யாணம், வைகாசி மாதம் வரிசையுள்ள கல்யாணம், ஆனிமாசம் அரைப் பொறுக்கி கல்யாணம் !

  வைகாசி

  1. வைகாசி மாசம் ஆத்துல தண்ணி
  2. வைகாசி மாசம் வறுத்துக் குத்தணும்
  3. வைகாசி மாசம் வாய் திறந்த கோடை

  ஆனி

  1. ஆனியில் அடிவைத்தாலும் கூனியில் குடிபுகாதே
  2. ஆனி மாதம் கொரடு போட்டால் அடுத்த மாதம் மழையில்லை
  3. ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழையில்லை

  பதிலளிநீக்கு
 22. ஆடி

  1. ஆடி பிறந்தால் ஆசாரியார்; தை பிறந்தால் தச்சப்பயல்
  2. ஆடி பிறந்தால் வெல்லப் பானையைத் திற; தை பிறந்தால் உப்புப் பானையைத் திற
  3. ஆடியில் ஆனையொத்த கடா, புரட்டாசியில் பூனைபோல ஆகும்
  4. ஆடிக் காத்துல ஆளே அசையும்போது மேயும் கழுதைக்கு என்ன கதி...?
  5. ஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடிப்பிடித்து அடி
  6. ஆடிப் பிறை தேடிப் பார்.(தேடிப் பிடி)
  7.ஆடிப் பெருங் காற்று
  8. ஆடி பிறந்து ஒரு குழி அவரை போட்டால், கார்த்திகை பிறந்தால் ஒரு சட்டி கறி ஆகும்
  9. ஆடி மாதத்தில் குத்தின குத்து ஆவணி மாதத்தில் உளைப்பு (வலி) எடுத்ததாம்
  10. ஆடி மாதத்தில் நாய் போல
  11. ஆடி மாதத்தில் விதைத்த விதையும் ஐயைந்தில் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும்
  12. ஆடி மாதம் அடி வைக்கக் கூடாது
  13. ஆடிமாதம் அவரை போட்டால் கார்த்திகை மாதம் காய்காய்க்கும்
  14. ஆடி முதல் பத்து, ஆவணி நடுப்பத்து, புரட்டாசி கடைப்பத்து, ஐப்பசி முழுதும் நடலாகாது.
  15. ஆடியில் போடாத விதையும் அறுநான்கில் பிறக்காத பிள்ளையும் பிரயோசனம் இல்லை
  16. ஆடி வரிசை தேடி வரும்
  17. ஆடி வாழை தேடி நடு
  18. ஆடி விதை தேடி நடு

  ஆவணி

  1. ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு
  2. ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு

  புரட்டாசி

  1. புரட்டாசி பெய்து பிறக்க வேண்டும், ஐப்பசி காய்ந்து பிறக்க வேண்டும்
  2. புரட்டாசியில் பொன் உருகக் காயும், ஐப்பசியில் மண் உருகப் பெய்யும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 5. ஆடிக்கு அடிககத மாமியாரைத் தேடிப் பிடித்து அடி//

   இது நேரடியா பார்த்தா மற்றது எல்லாம் பயிர், மழைனு வருது இது பொருந்தாத மாதிரி இருக்கு ஆனா உள் அர்த்தம் உண்டோ?

   கீதா

   நீக்கு
  2. ஆடிக்கு அழைத்தால் தான் மகள் சித்திரையில் குழந்தை பெற்று கஷ்டபடமாட்டாள்.

   நீக்கு
 23. ஐப்பசி

  1. ஐப்பசி மாதம் அடைமழை, கார்த்திகைமாதம் கனமழை
  2. ஐப்பசி நெல்விதைத்தால் அவலுக்கும் ஆகாது
  3. ஐப்பசி மருதாணி அரக்கா புடிக்குமாம்

  கார்த்திகை

  1. கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை
  கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
  2. கார்த்திகை மாசம் கல்லுக்குள் இருக்கும் நெல்லும் கதிராகும்
  3. கார்த்திகை மாசம் கால் கொள்ளு விதைத்தால் மேல் கொள்ளு முதலாகாது
  4. கார்த்திகை பனி பாக்காம கட்டி ஓட்டு ஏர் மாட்டை

  மார்கழி

  1. மார்கழி பிறந்தால் மழையும் இல்லை; பாரதம் முடிந்தால் படையும் இல்லை
  2. மார்கழி மழை மண்ணுக்கும் உதவாது
  3. மார்கழியில் மழை பெய்தால் மலைமேலே நெல் விளையும்
  4. மார்கழி வெற்றிலையை மாடு கூடத் தின்னாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிடி சூப்பர்! எனக்கு மிகவும் பிடித்த விஷயம் பற்றித்தான் அத்தனையும்!! பயிர் மழை!!

   மார்கழி வெற்றிலையை மாடு கூடத் தின்னாது//

   அட! அப்படியா? எதனால? வெற்றிலை வளமையா இருக்காதுனா?

   கீதா

   நீக்கு
 24. தை

  1. தையில் வளராத புல்லும் இல்லை; மாசியில் முளையாத மரமும் இல்லை
  2. தையிலே நெல்விதைத்தால் தவிட்டுக்கும் ஆகாது
  3. தை பிறை தடவிப்பிடி ஆடிப்பிறை தேடிப்பிடி
  4. தை பனி தரையைத் துளைக்கும், மாசி பனி மச்சைத் துளைக்கும்

  மாசி

  1. மாசி மின்னலில் மரம் தழைக்கும்
  2. மாசி நிலவும் மதியாதார் முற்றமும் வேசி உறவும் வியாபாரி நேசமும் நில்லாது
  3. மாசிப் பிறையை மறக்காமல் பாரு

  பங்குனி

  1. பங்குனி மாதம் பத்துக்கும் நஷ்டம்
  2. பங்குனி மாதம் பந்தலைத் தேடு
  3. பங்குனி என்று பருப்பதும் இல்லை; சித்திரை என்று சிறுப்பதும் இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழமொழிகள் அனைத்தும் அருமை.
   நிறைய பேச்சு வழக்கில் கேட்டது.

   நீக்கு
  2. வாவ்வ் !! சூப்பர் அண்ட் தாங்க்ஸ் சகோ டிடி ..இத்தனை பழமொழிகளா மாதங்களுக்கு !!எல்லாத்துக்கும் ஒவ்வொரு விளக்கமும் இருக்கும் இல்லையா .ஆச்சர்யமா யிருக்கு .மிக்க நன்றி

   நீக்கு
  3. //5. ஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடிப்பிடித்து அடி//

   அவ்வ்வ்வ் அநியாயம் :) ஏன் மாமியார் ? மாமனாரை அடிக்கலாமே

   நீக்கு
  4. மாமனார்கள் இந்த வம்புக்கே போவதில்லை!

   நீக்கு
  5. கிட்டத்தட்ட அனைத்துமே வேளாண்மை குறித்தே... அதைப்பற்றி சிந்திக்க யாருமே இல்லை என்பது தான் வேதனை...

   நீக்கு
  6. கவனித்தேன் அனைவரும் கவனித்திருப்பாங்க டிடி .அதிகமான அறுவடை விவசாயம் குறித்த பழமொழிகள் சித்திரை வைகாசி ஆனி ஆடி மாதங்களுக்கு வந்திருக்கு

   நீக்கு
 25. சுபமான முடிவு... கதை ஜெமினி கணேசன் போல் இருந்தாலும், சுவையாக முடிந்தது...

  பதிலளிநீக்கு
 26. & கொஞ்சம் இது பற்றி சிந்தித்துப் பார்த்தேன். மது அருந்துகின்ற அல்லது புகை பிடிக்கின்ற தகப்பன், தன்னுடைய குழந்தைகளை அதே பழக்கங்களை ஏற்படுத்தி வளர்ப்பானா - அல்லது, 'மகனே இந்தக் கெட்டப் பழக்கம் என்னோடு போகட்டும்; நீயாவது நன்றாக இரு' என்று சொல்லி நல் வழி காட்டி வளர்ப்பானா? அப்படியே அவன் தீய பழக்கங்களை தன் குழந்தைகளுக்கு போதித்தாலும், தாய் அதற்கு சம்மதிப்பாளா? //

  தாய் சம்மதிப்பது அபூர்வம்.

  ஆனா தந்தையுடன் மகனும் சேர்ந்து தண்ணி அடிப்பது, சிகரெட் பிடிப்பது இப்பல்லாம் சகஜமா இருக்குதே!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் சினிமாவில்தான். எனக்குத் தெரிந்து, அப்பா மகன் சேர்ந்து தண்ணியடிப்பது, புகை பிடிப்பது எல்லாம் நான் கண்டதில்லை.

   நீக்கு
  2. கௌ அண்ணா நான் கண்டிருக்கேன். அதாவது பார்ட்டிகளில்

   பக்கத்து மாநிலத்துலயும்....என்ன மகன் கொஞ்சம் மருவாதையா தள்ளி நிற்பார். வேட்டிய மடிச்சுக் கட்டாம.. ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. அடக் கடவுளே! சமுதாயம் நான் நினைப்பதை விட வேகமாக சீரழிந்து வருகிறதோ?

   நீக்கு
 27. கௌ அண்ணா //இந்த ஆள் மட்டும் கையில சிக்கினான// இது நெல்லைக்குத் தோன்றியிருக்கும்னு....ஹிஹிஹிஹி பின்ன தமன்னாக்காவை போடாம விட்டுப்புட்டீங்களே! அனுஷ் மட்டும் போட்டு....ஸ்ரீராம் இங்க இல்லையே!!! பார்த்து...

  பரவால்ல பரவால்லா...அவர் நதில எல்லாம் குளிச்சு குளிச்சு ஜில்லுனு இருப்பார்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேடம்.. அவளும் இருக்கா. எபி ஆசிரியர்களுக்கு அழகுணர்ச்சி இல்லைனால நானே இனி படங்களைத் தேர்ந்தெடுத்துக்்கொடுக்கலாம்னு நினைக்கறேன்

   நீக்கு
  2. எ பி ஆசிரியர்களுக்கு மேக்கப்பின் மகிமை தெரியும் சார்!

   நீக்கு
  3. நெல்லை அது தமனாக்காவாஆஆஆஆஆஆஆஆஅ??!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹிஹிஹிஹி....

   வேணும்னுட்டுத்தானே சொன்னது நெல்லைய சீண்ட!!! ஹா ஹா ஹா

   நெல்லை என்ன மேடம்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   கௌ அண்ணா உங்க பதில் ஹா ஹா ஹா ஹா அப்படிப் போடுங்க...

   அனுஷ் மேக்கப் இல்லமலேயே...சரி சரி என்னை விடுங்க மீ ரன்னிங்க் நெல்லை என்னை அடிக்க வரதுக்குள்ள!!!

   கீதா

   நீக்கு
  4. ஒடுங்க ! நெல்லை இதுவரை இங்கே காணோம்.

   நீக்கு
  5. ஹாஹாஆ :) வெற்றி எனக்கே நான் எதிர்பார்த்தது நடந்தது

   நீக்கு
 28. கெட்ட குணங்கள் - இதுக்கு சரியான பதில் இல்லைனு நினைக்கிறேன். ஒழுக்கம், கோபம், சிடுமூஞ்சித்தனம், படுக்கும்/அமரும் முறை என்று பல்வேறு காரணிகள் ஜீன்ல உண்டு. எங்க அப்பா மாதிரியான பழக்கத்தை, என் பையனிடம் இயல்பா நான் பார்த்திருக்கிறேன். நல்ல அமைதியான குடும்பத்துப் பசங்க அதேமாதிரி குணத்தோட பெரும்பாலும் இருப்பாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முரட்டுத் தனம், பொல்லாத்தனம், குறை சொல்லிக்கிட்டே இருக்கும் குணம், கஞ்சத்தனம், டாம்பீகம், பணத்தை மதியாம செலவழிப்பது, இரங்கி இரங்கி ஏமாளியாவது எல்லாமே பரம்பரையிலிருந்து கடத்தப்படும் குணம்தாம்

   நீக்கு
 29. பணத்திற்கான இரு பதில்களும் சிறப்பு..

  //& சந்தோஷம் என்பது நமக்குள்ளேயே இருக்கின்ற ஒன்று. அதை பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை. வாங்கவும் இயலாது. உணரவேண்டிய ஒன்று. //

  யெஸ் யெஸ் யெஸ் அதே அதே....அதுவும் தாயன்பு பத்தி சொல்லிருப்பது சூப்பர்!!!

  மிகவும் ரசித்தேன் பதில்களை

  கீதா

  பதிலளிநீக்கு
 30. //சிலருக்கு மட்டும் ஏன் மிக அழகாத் தெரியறாங்க// - அழகு என்பது பார்வையைப் பொருத்து. சிலர் கண்ணைப் பார்த்து, முக வசீகரம், உடல் என்று பலவற்றைப் பொருத்து அழகு என்பார்கள். நூறு பேர்ட்ட கேட்டோம்னா இல்லை பத்து அழகிகள் பேர்கொடுத்து ஒருத்தரை தேர்ந்தெடுக்கச் சொன்னால் ஸ்பிளிட் ஒபினியன் வரும். அப்படி இல்லாமலிருந்தால் அப்புறம் எல்லாருக்கும்எப்படித் திருமணம் ஆகும்?

  பதிலளிநீக்கு
 31. # புரியாவிட்டால்தான் உலகத் தரம். பிக்காஸோ ஓவியம் மாதிரி.

  & அதே கதைதான் எனக்கும். உலகத் தரம் என்று போடப்பட்ட படம் எதுவாக இருந்தாலும் பார்த்து முடிப்பதற்குள் பன்னிரண்டு கொட்டாவிகள் நிச்சயம் விடுவேன். //

  ஹைஃபைவ்!!! இது அறிவு ஜீவிகள்னு சொல்லப்படுபவர்களுக்கும் பொருந்துமோ?!! ஹிஹிஹி...அவங்க பேசுவதே புரியாதே! இல்ல பேசுறது நமக்குப் புரியலைனா அவங்க அறிவு ஜீவிகளோ?!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேச்சே புரியாமல் பேசுவதால், கமல் அறிவு ஜீவி எல்லாம் இல்லீங்கோ!

   நீக்கு
  2. எல்லா விஷயமும் எல்லோருக்கும் ஒரே மாதிரி புரியாது. நமக்கே ஒரு முறை ஒரு மாதிரி புரியும் விஷயம் இன்னொரு முறை வேறு மாதிரி புரியும்.. இது நான் சொல்வது இல்லை. லா.ச.ரா.வின் கதைகள் புரிவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அவர் கூறிய பதில்

   நீக்கு
  3. உங்கள் வோட்டு டார்ச் லைட்டுக்கே! நன்றி!

   நீக்கு
  4. கௌ அண்ணா நான் நினைச்சு அடிச்ச கமென்ட் கரீக்டா சொல்லிட்டீங்களே!!! நபரை!!! ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  5. பானுக்கா மேல கமென்ட் பாக்கலியா!! ஹிஹிஹிஹி...கௌ அண்ணா உங்ககிட்டருந்து தப்பிச்சுட்டார்னு சொன்னதுக்கு அவர் பதில்...ஹப்பா இதை கௌ அண்ணாவும் பானுக்காவும் பாக்க கூடாது வைரவா...

   கீதா

   நீக்கு
  6. எப்படியாச்சும் என்னை மாட்டிவிட்டுடுவீங்க போலிருக்கு!

   நீக்கு
 32. காசிக்குப் போய் எதையாவது விட்டுவிடவேண்டும் என்பதற்கு நமக்கு ஒவ்வாத, பிடிக்காத ஒன்றை விட்டுவிட்டு சமாளித்துக்கொள்ளலாமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியும் சொல்லலாம். என் பெரிய அண்ணி, அப்படித்தான் சுரைக்காயை (நீர்க்காய் ஒத்துக்கொள்ளாது என்பதால் ) விட்டார்கள்.

   நீக்கு
  2. சமாளிப்பதுதான் நோக்கம் என்றால் காசிக்குப்போவானேன்? நம்ப ஊர்ல இருந்துகிட்டே சமாளிக்கலாம்ல!

   நீக்கு
  3. காசிக்கு சென்றால் ஒரு பழம், ஒரு காய், ஒரு இலையை விட்டு விட வேண்டும் எனபதற்கு வித்தியாசமான காரணம் நன்று

   நீக்கு
 33. # நிறைய உண்டு. என் மறதி மற(றை)க்க முடியாத விஷயம்.//

  நன்றி நன்றி எனக்கு ஒரு கூட்டாளி!! ஹா ஹா ஹா ஹா...

  நான் ஒரு தடவை முக்கியமான ஒரு கல்யாணத்திற்குப் போக கல்யாண மன்ப்டபம் போய் பார்த்தா ஆளே இல்லை நான் ஒரு நிமிஷம் ஆடிப் போனேன். என்னடா இது என்ன ஆச்சு இப்படி? தகவலும் எதுவும் வரலியே என்று...போர்டும் இன்னும் வைக்கப்பட்டிருக்கலை போல...அப்புறம் உள்ளே இருந்த ஒருவரிடம் கேட்டப்ப பெண் அறையைக் காட்ட அங்கு பெண்ணின் அம்மாவும் உறவினர் ஒருவரும் இருக்க...நான் அசடு வழிய!! அடுத்த நாள் கல்யாணம் என்றார்கள்...அன்று மாலை நிச்சயதார்த்தம், ரிசப்ஷன்

  ஆனால் என்னால் மறுநாளும், அன்றைய மாலையும் போக முடியாத சூழல். எனவே பேசிவிட்டு மொய்யையும் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன் அப்புறம் தோன்றியது அட! பரவால்ல இந்த மறதி கூட ஒரு விதத்தில் நல்லதுதான் செஞ்சுருக்குன்னு!!....ஹா ஹா ஹா

  ஆனா மறந்து போகாம விட்டதும் உண்டு!! ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடலும், ஊடலுமாக கதை இனிதே முடிந்தது. இன்னும் ஏக்கங்கள் குழந்தைகளுக்கு அம்மாவரவில்லையே என்ற விதத்தில் தொடரும். இன்னும் கதை நீளும் என்று நினைத்தேன். மாதங்கள் தொடர்புடைய பழமொழிகள் திரட்டி சுவையானது. எங்கள் ப்ளாக் இல்லையா? கேள்வி,பதில்கள் யாவுமே படிக்க அருமை. அன்புடன்

   நீக்கு
 34. ஆறு ம்ற்றும் அருவிக் குளியல் பதில்கள் எனக்கும் அதே அதே...

  எனக்கு மிகவும் பிடித்தது அருவி மற்றும் ஆற்றில் குளிப்பது. வாய்ப்புக் கிடைத்தால் விடவே மாட்டேன். அதுக்காகவே ஒரு எக்ஸ்ட்ரா ட்ரெச் கையில் இருப்பு இருக்கும். அதுவும் ஆற்றில் படித்துறை என்றில்லாமல் பாறைகள் என்று இருப்பது இன்னும் பிடிக்கும்...

  //வரும் தலைமுறையினருக்கு கிட்டாது போய்விடுமோ என்ற அச்சம் இருக்கிறது.//

  யெஸ் யெஸ் இந்த வருத்தம் அச்சம் எனக்கும் உண்டு.

  ஸ்ரீராம் சுகமான ஆற்றுக் குளியல் குளித்து வருகிறார்!!! அதுவும் நிறைய தண்ணீர் ஓடும் ஆறுகள்! அகண்ட ஆழமான ஆறுகள்!!!!!! எஞ்சாய் ஸ்ரீராம்

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் சார்பில், நன்றி!

   நீக்கு
  2. மட்டப்பல்லியில் (கிருஷ்ணா ந்தி.. பக்கத்தில் நரசிம்மர் கோவில்.. முக்கூர் அவர்களால் புகழ் பெற்ற ஊர்) அதிகாலை 4:30 மணிக்கு நானும் மனைவியும் குளித்தோம். (ரொம்ப இருட்டு). கோவிலெல்லாம் போயிட்டு 11 மணி வாக்கில் மீண்டும் ந்திப் பக்கத்தில் போனபோது பெரிய போர்டில் தெலுகு, ஆங்கிலத்தில், குளிப்பவர்கள் ஜாக்கிரதை. நிறைய முதலைகள்இருக்கின்றன’ என எழுதியிருந்தது. படித்தபோது நடுங்கிவிட்டேன். ஊருக்கு முன்னால கோவிலுக்குப் போகணும்னு தெரியாத ஊரில் பெரிய ரிஷ்க் எடுத்ததை நினைத்து)

   நீக்கு
 35. நீயும் நானும் சேர்ந்து என ஸ்ருதி மீட்டியவர்கள் கீதா ரெங்கன் ,நெல்லைத்தமிழன் :) மற்றும் பானு அக்கா ..ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா யாருன்னே கண்டுபுடிக்க முடியாதமாதிரி இருந்தது எனக்கு :)))))))

  பதிலளிநீக்கு
 36. சர்ச்சுக்கு போயிட்டு வரேன் ..மற்ற பதில்கள் பிறகு தரேன் .மிக நன்றி மிக்க நன்றி :) எனது கேள்விஸ்க்கு பதிலளித்த ஆசிரியர் குழுவிற்கு

  பதிலளிநீக்கு
 37. ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி என் கேள்விகளுக்கு அழகான பதில்கள் கொடுத்தமைக்கு.....மிக்க மிக்க நன்றி!!

  கீதா

  பதிலளிநீக்கு
 38. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.

  ஏஞ்சல் மிக வித்தியாசமாகக் கேள்விகள் கேட்கிறார்.

  கதை மகிழ்ச்சியாக முடிந்திருக்கிறது. இப்போது புரிதல் வந்திருக்கும். எனவே செலிப்ரிட்டியாக இருப்பதால் பிரச்சனைகள் வந்தாலும் புரிந்து சமாளித்துக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது.

  கதை கொஞ்சம் அனுபவம் உள்ள எழுத்தாளர்கள் எழுதியது போல இருக்கிறது. ஆனால் எனக்கு யாரென்று சொல்லத் தெரியவில்லை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 39. & Beauty lies in the beholder's eye or mind. '//

  அக அழகு, நெருங்கிப் பழகுபவர்களுக்கு மட்டுமே தெரியும்.//

  நல்ல பதில். என் கருத்தும் இதே.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 40. தாத்தா பாட்டி, அம்மா அப்பா பொஸிஷனுக்கான பதில்களை மிக மிக ரசித்தேன்

  இது அப்பவே சொல்ல விட்டுப் போச்சு போட்டுருக்கேன்னு நினைச்சு கும்மியடிச்சதில் மறந்துவிட்டேன்..

  நான் என் அப்பா வழி தாத்தா பாட்டி அன்பினை அத்தனை அனுபவித்தவள். பாட்டி 93 வயதுவரை இருந்தார். என் மகன் அவன் அப்பா வழித் தாத்தா மற்றும் என் அம்மா இருந்தவரை அவரது அன்பை அனுபவித்திருக்கிறான். என் அப்பாவுடன் நியூஸ், கிரிக்கெட் எல்லாம் விவாதம் நடக்கும். என் பாட்டியின் அன்பையும். அவன் கல்லூரி படிக்கும் போது பாட்டி எங்களோடுதான் இருந்தார் அவன் கடைசி வருடம் படிக்கும் போதுதான் இறந்தார். என் மகனுக்கும் பாட்டி தன் 85 வயது வரை சமைத்துப் போட்டிருக்கிறார். என் அப்பாவும் சமைத்துப் போட்டிருக்கிறார். என் தாத்தா என்னை அவர் மடியில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு நிறைய கதைகள் சொல்லுவார். என் அத்தைகள் இருந்த வரை அவர்கள் அன்பு, என் மாமாக்களின் மனைவிகள் மாமிகளின் அன்பை இப்போதும் பெறுகிறேன். நான் அதற்காக இறைவனுக்கு நிறைய நன்றி சொல்லுவேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 41. 1, ஆரோக்கியமான சமூகம் என்றால் என்ன ?
  2,மழை அழகா ? இல்லை மூடுபனி அழகா ? முக்கியமாக கவனத்தில் கொள்ளவும் இதற்க்கு அடாடா மழைடா பாட்டு படத்தை இணைக்க தடா :)))))))))))))))))))
  3, எங்கள் நண்பர் ஒருவர் தனது மறைவுக்கு பின் இப்படித்தான் தனக்கு லாஸ்ட் rituals செய்யணும்னு எழுதி வசிட்டன் என்று சொல்றார் .எப்படி இது சிலரால் மட்டும் முடிகிறது ? இதற்க்கு மனமுதிர்ச்சி காரணமா ? அல்லது வயது காரணமா ?
  4, சமீப கால திரைப்படங்களில் கோபப்படும் ஹீரோ ,பாட்டிலை உடைக்கும் ஹீரோ தம்மடிக்கும் ஹீரோயின்ஸ் கெட்ட வார்த்தைகள் obscene expression இப்படிலாம் வருதே இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ?( ஒண்ணுமில்ல கபீர்சிங் ,அர்ஜூன்ரெட்டி இன்னும் சில படங்களின் ட்ரெய்லர் பார்த்தேன் அதான் கேட்டேன் )
  5,ஒருவரை நல்ல நண்பராக உரு ஆக்குவது எது ? (இவர் நல்லவர் நல்ல நட்பு ) என்று நம்மை நினைக்கவைப்பது எது ?
  6,தன் பசி ,வலி மன வேதனை இவற்றை உணரும் மனிதன் பிறரை திட்டும்போது தூற்றும்போது மற்றவர்களுக்கும் அது வலிக்கும்னு உணராதது ஏன் ?
  7,கொட்டும் மழையில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதும் கொதிக்கும் வெயிலில் சூடா சாயா குடிப்பதும் பற்றி உங்கள் கருத்து ?
  8, நிஜ வாழ்வில் இல்லாத டூயட்டை இந்திய சினிமா காதல்களில் முதலில் புகுத்திய அந்த மாமனிதர் யார் ?
  9, தொலைபேசியில் யார் கிட்டயாவது பேசுமுன்னர் என்ன பேசுவதுன்னு மனசுக்குள்ள ஒத்திகை பார்ப்பதுண்டா ?
  10, போன்ற அழகு தமிழ் சொற்களை பிரபலப்படுத்த சினி பிரபலங்கள் தேவைப்படுகிறார்களே என்று வேதனை பட்டதுண்டா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 10, சிறப்பு ,மகிழ்ச்சி போன்ற அழகு தமிழ் சொற்களை பிரபலப்படுத்த சினி பிரபலங்கள் தேவைப்படுகிறார்களே என்று வேதனை பட்டதுண்டா ?
   டிடி மாதிரி போல்ட் லெட்டர்ஸில் எழுத பார்த்தேன் அது லெட்டர்ஸையே இன்விசிபிள் ஆக்கிடுச்சு

   நீக்கு
 42. ஆஆஆஆ அதுக்குள் கதையை முடிச்சாச்சோ... அழகாகத்தான் கதை நகர்ந்து, சுபமே முடிஞ்சிருக்கு.. எழுதியோர் இருவரோ நால்வரோ இல்ல 9 பேரோ அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  என் மனதில் தோணுவது, கதையில பெரிய எதிர்பார்ப்போ விறுவிறுப்போ வரவில்லை... ஶ்ரீராமுக்குப் பிடிச்ச “டுவிஸ்ட்டும்” கதையில் இல்லை... மற்றும்படி சம்பாசணைகள், வடனங்கள் அருமை... அடுது மர்மத் தொடர்:) எப்போ ஆரம்பமாகுமோ??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா பூஸார் இங்கிருக்காக :)

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  3. [B]அதிரா குண்டு பூனை [/B]

   நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  5. அதிரா நீங்க காசிக்குப் போகலையா ட்ரிப் எல்லாம் ஆர்கனைஸ் பண்ணிட்டு!! ஹா ஹா

   மர்மத் தொடர் தானே ஆரம்பிச்சுரலாம்....இந்தக் கதை எழுதினதே யார்னு தெரியாம மர்மமா இருக்கு!!!! ஹா ஹா ஹா ஹா...அதையே ஒரு மர்மத் தொடரா ஆக்கிடலாமோ...பேய் எழுதுவது போல்!!!!!!

   கீதா

   நீக்கு
  6. ஏஞ்சல் எதுக்குப்பா ஏற்கனவே பூஸார் குண்டு பூனைனு சொல்லிட்டு அதை இன்னும் இப்படி போல்ல்டா எழுதி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
 43. மொபைலில் நிறைய எழுத்துப்பிழை வருது அத்தோடு மீயும் ச்சோ ரயேட்.. எப்படியும் கொமெண்ட் போடோணும் என நினைச்சே களம் குதிக்கிறேன்:).

  கேள்விக்கான பதிலுக்கு நன்றி. காசி விளக்கம் புரிஞ்சு கொண்டேன்.
  காசியை மறக்காமல் இருக்க:) பிடிச்சதை விடோணும் எனும் கட்டாயமில்லை ஏன் தெரியுமோ? அதிராதான் மறக்க விடமாட்டேனே ஆரையும் ஹா ஹா ஹா:).

  அதுதானே கீசாக்கா சொன்னா, காசியிலிருக்கும் ஐயரே சொன்னாராம் ஆலிலையை விடுங்கோ என... அது எந்த வகையில் நியாயம்... நேக்குத் தேவை நீதி நியாயம் கடமை நேர்மை எருமை:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ ஒழுங்கா போல்ட் லெட்டர்ஸில் எழுதறது எப்படின்னு சொல்லுங்க .மேலே உங்க பேரை அடைப்பில் போட்டேன் ஆனா காணோம்

   நீக்கு
  2. ஹையோ ஹையோ இப்பவும் போல்ட் இல் இல்லை

   நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 44. அ வும் ஏ வும் அடிச்சு ஆட ஆரம்பிச்சுட்டாங்க. நாம் ஓரமா நின்னு வேடிக்கை பார்ப்போம்!

  பதிலளிநீக்கு
 45. மாதங்களைப்பற்றிய பழமொழிகள் அருமை.
  பல வருடங்களுக்கு முன்பு குமுதத்தில் மாதங்களை வைத்து ஒரு சிறுகதை போல பிரபலமான ஒருவர்(குமரி அனந்தன்?)எழுதியிருந்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
  கார்த்திகை என்னும் பெண் அணிந்திருந்த சட்டை கிழிந்திருந்து.அதை ஒரு இளைஞன் சுட்டிக்காட்ட, அவள்,"அதை தை" என்றாள்.
  நான் அப்படி செய்தால்,"மாசு நீ" ஆவாய் என்றான்
  உடனே அவள்,"அந்த மாசில் பங்கு நீ" எனறாள்."அதற்கு சிற்றரை வேண்டுமே" என்று அவன் கூற,அவள்,"வை காசு, ஆண் நீதானே?"
  "அதற்கு நீ ஆடி வர வேண்டும்" என்றதும்,"புரட்டா பேசுகிறாய் சீ" என்று சீற, "ஐ பசி" என்று ஓடி விட்டானாம்

  பதிலளிநீக்கு
 46. //காசிக்குப் போனால், நமக்குப் பிடிச்ச ஏதாவது ஒன்றை அங்கு விட்டுவிட்டு வரோணுமாம்:), //

  காசிக்குப் போனால் அல்ல; கயாவுக்குப் போனால் தான் அப்படி..

  பதிலளிநீக்கு
 47. //மாதங்களைப்பற்றிய பழமொழிகள் அருமை. //

  மாதங்களில் நான் மார்கழி என்று சொன்னவன் பரமாத்மா இல்லையா?..
  ஆன்மிகத்தில் மார்கழி மிக உயர்ந்த மாதம். மார்கழி போல பிறிதொரு மாதமில்லை..

  பதிலளிநீக்கு
 48. கயாவில் சிரார்தம் செய்த பிறகு, சிரார்தத்தில் உபயோகப்படுத்தும் கறிகாய்களாக,காய்,பழம்,இலை என விடவேண்டும். எதைவேண்டுமானாலும்இல்லை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 49. அருமையான விளக்கம் - நானும் தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 50. கதையை சுபமாக முடிந்தது நன்றாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
 51. கசியில் காகம் பறக்காதாமே மல்லிகை மணக்காதாமே மாடு முட்டாதாமே எதெல்லாம்சரி தொடர்கதை எழுதியது தில்லையகத்தாரும் எபி ஆசிரியக்குழுவும் தானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த வியாழன் விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 52. காசியில் பிடித்ததை விடுவது பற்றிய கௌதமன் சாரின் கருத்தைப் படித்தேன். யதார்த்தமான கருத்தாக இருந்தாலும் உண்மையில் இந்தப் பிடித்ததை விடுவது என்பது ஆன்மிகம் அல்லது நம்முடைய ஞானம் சம்பந்தப்பட்டது. நமக்குப் பிடித்ததை நாம் யாருக்கும் கொடுக்க மாட்டோம், பிடித்த உணவைச் சாப்பிடாமல் இருக்க மாட்டோம். அப்படி நமக்கென இருக்கும் ரொம்பப் பிடித்தவற்றை அறவே விட்டு விட்டு அவற்றைப் பார்த்த வண்ணமே, சமைத்த வண்ணமே, ஆம் விட்ட காய்களைத் தொடலாம், நறுக்கிச் சமைத்துப் பிறருக்குப் போடலாம். நாம் தான் சாப்பிடக் கூடாது! அதே போல் பழமும்! இப்படி இருப்பது எவ்வளவு கடினம் என்பது அந்தப் பிடித்த காயைச் சமைக்கையிலும் அதைச் சாப்பிடாமல் இருக்கையிலும் நம் மன உறுதி மூலம் மேலும் மேலும் மனம் பண்பட்டுப் பின்னர் வாழ்க்கையில் ஒவ்வொன்றாகக் கெட்ட குணங்களை விடுவதற்கு இது அடிப்படையாக அமையும் என்பதே! சாதாரணச் சாப்பாட்டில் ஆரம்பித்து உயர்ந்ததொரு ஆன்மிக நிலையை எட்டுவதற்குத் தான்! ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதுவும் சாதாரணமான ஒன்றாகவே உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறப்பான கருத்துரை. நன்றி!

   நீக்கு
  2. நன்றி.இன்னும் சொல்லப்போனால் பரமாசாரியார் அவர்கள் கோபத்தையும், காமத்தையும் விடணும் என்பார். காமம் என்பது இங்கே சிற்றின்பத்தைக் குறிப்பது அல்ல!காமம் என்பது பொதுவாக எல்லாவற்றிலும் வரும் விருப்பம். இவை இரண்டையும் விட்டாலே மனம் பண்பட்டுவிடும் என்று சொல்லுவார். எதிலே படிச்சேன் என்பதைத் தேடிப் பிடித்துக் கிடைத்தால் சொல்றேன்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!