செவ்வாய், 9 ஏப்ரல், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : ஜவ்வரிசி ரசம் - ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி


ஜவ்வரிசி ரசம் செய்வது எப்படி?

ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி 
------------------------------


"என்னதுஜவ்வரிசி ரசமா..என்ன உளற்ரே?"

"நிஜமாத் தான்....சூப்பரா இருந்தது.."

"எப்படி செஞ்சே?"

"இன்னிக்கு வீட்டுக்காரம்மா கிச்சன் ரூம் கீயை என்னிடம் கொடுத்துட்டுஅவங்க பிறந்த வீட்டுக்கு போயிட்டாங்க...கிச்சன் ரூம் கன்ட்ரோல் நம்ம கைக்கு வந்தாச்சு.."

"ம்"

"ஒண்ணே முக்கால் டம்ளர் அரிசிய களைஞ்சு,குக்கரில போட்டு அதும் தலைல அஞ்சேகால் டம்ளர் தண்ணி விட்டுகுக்கர் தலைல வெய்ட் போட்டு,வெய்ட் பண்ணினேன்!"

"கேட்கவே சுவாரஸ்யமா இருக்கே..சொல்லு!"

"குழம்பு,ரசம்,கூட்டு,கறிமீது  எல்லாம் சன்னதி வீதி மணிவிலாஸ்ல வாங்கலாம்னு அங்கே போனேன்..அங்கே போனா?"

"அங்கே போனா?"

"'இப்டிலாம் தனிதனியாக கொடுக்க முடியாது..ஒரு மீல்ஸ்ஸா வாங்கிக்குங்க.. எழுபது ரூபா தான்என்றார் கல்லாவில் இருப்பவர்!"

"'சரி..ஒரு மீல்ஸ் கொடுங்க..ரைஸ் வாணாம்!'னேன்!"

"கல்லாக்காரர் கொடுத்த டோக்கனை டெலிவரி அக்காகிட்ட கொடுத்தேன்..அவங்கஎல்லாம்ரெண்டு ரெண்டா கொடுத்தாங்க...'டேய் ஶ்ரீதர் ஒன் காட்டுல மழைடா'ன்னுநினைச்சுண்டு வீடு வந்தேன்..'

"இதுக்கும் ஜவ்வரிசி ரசத்துக்கும் என்ன சம்பந்தம்?"

"சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேட்கறியா?"

"ம்..சொல்லு!"

"வீட்டில் நானு,அப்பா,அம்மா தான்...அம்மாஅப்பாக்கு கூட்டு,கறிமீதெல்லாம் வச்சுட்டு சாதம் சாதிச்சேன்..ரெண்டு பாக்கெட் பருப்புல ஒண்ணுல பாதிய அப்பாக்கு போட்டுட்டு,அம்மா சாம்பார் கேட்டதனாலஅவங்களுக்கு அதை ஊத்தினேன்..  அப்பா பருப்பு சாதம்படு டேஸ்ட்டுன்னு சொல்லிதிருப்தியா சாப்பிட்டார்.."  

"ம்"

"அவங்க சாப்பிட்டு முடிச்சதும் நான் இன்னொரு பாக்கெட் பருப்பை வேஸ்ட் பண்ண வேண்டாமேன்னு ரசத்துல ஊத்தினேன்.."

"சொல்லு"

"சாப்பிடும் போது தான் தெரிஞ்சது..அது பருப்பு இல்ல..ஜவ்வரிசி பாயசம்னு!"

"..அதான் ஜவ்வரிசி பாயசத்த ரசத்துல விட்டுட்டுஜவ்வரிசி ரசம்னு சொன்னியா..உன்னைய.....!"

"முடிச்சுட்டறேன்...அப்புறமா என்ன வேணா பண்ணிக்கோ.."

"சொல்லித்தொலை!"

மிச்ச ரசத்தையும்குழம்பையும் ஒண்ணா கலக்கி ராத்திரி டின்னருக்கு தொட்டுக்க  ரெடி பண்ணிட்டேன்.."

"அப்றம்?"

"அவங்க அம்மா வூட்லேர்ந்து வந்தவுடனே முதல் காரியமா வீட்டை காலி பண்ணினேன்..அப்றமா ஒரு போன்..  இன்னிக்கு எனக்கு பார்ட்டி நீங்க சாப்பிடுங்க!'ன்னேன்!"

"..எஸ்கேப்பா!"

"ஆமா..ராத்திரி பயந்துண்டே உயிரை கைல பிடிச்சுண்டு  தான் வீட்டுக்குப் போனேன்.."

"அப்றம்?"

"இட்லிக்கு தொட்டுக்க ரசம்பு சூப்பர்னு எல்லாரும் சப்பு கொட்டிண்டே சாப்டாங்களாம்!"

"ரசம்புவா?"

"ஆமாம்...ரசத்தையும்,குழம்பையும் மிக்ஸ் பண்ணின கலவையை நாங்க ரசம்பும்போம்!"

"சூப்பர்டா மச்சி!இன்னி ராத்திரிக்கு நானு மணி விலாஸ் தான்!"

27 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா தொடரும் எல்லோருக்கும்.

  ஆ ஆ இன்று புதியதாய் இருக்கே!! ஜவ்வரிசி ரசம்!! இது ஏதோ காமெடி கதை போல இருக்கே!!

  வரேன் வாசிக்க

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல்ல நான் என்னடா இன்னிக்குத் திங்களானு குயம்பி போயிட்டேன்...ஹா ஹா ஹா ஹ

   கீதா

   நீக்கு
 2. காலை வணக்கம்.

  ரசம்பு! ஜவ்வரிசி ரசம்! ஹாஹா.... செம!

  நல்ல நகைச்சுவை.

  பதிலளிநீக்கு
 3. பிளாக்கர் டேஷ் போர்டில் இன்னும் இப்பதிவு அப்டேட் ஆகவில்லை!

  பதிலளிநீக்கு
 4. ஜவ்வரிசி ரசம், ரசம்பு ஆனது...ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 5. ஜவ்வரிசி பாயசம் பருப்புபோல் இருந்ததா? நான் இதுவரை வெல்லம் போட்ட ஜவ்வரிசி பாயசம் சாப்பிட்டதில்லை.

  நீங்களும் கீதா ரங்கனும் பேசிவைத்துக்கொண்ட மாதிரி மோர் ரசம், ஜவ்வரிசி ரசம்னு கலக்கறீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை ஜவ்வரிசி பாயாஸம் வெல்லம் போட்டும், வெல்லம் போட்டு தேங்காய்ப்பால் விட்டும், வெள்ளைச் சர்க்கரை போட்டு தேங்காய்ப்பால் விட்டும் செய்யலாம். நம் வீட்டில் இதை வெல்லம் போட்டு, கடைசில பால் விட்டுச் செய்வது அல்லது தேங்காய்ப்பால்.

   கீதா

   நீக்கு
  2. நீங்களும் கீதா ரங்கனும் பேசிவைத்துக்கொண்ட மாதிரி மோர் ரசம், ஜவ்வரிசி ரசம்னு //

   ஹா ஹா ஹா நெல்லை....

   நான் முதல்ல மீண்டும் திங்களா நு குயம்பிட்டேன். தலைப்பு பார்த்து

   கீதா

   நீக்கு
 6. கதை நல்லாத்தான் இருக்கு. பாயசத்தையும் ரசத்தையும் சேர்ந்து சாத்த்தில் பிசைந்து சாப்டாங்களா? தைரியம் ஜாஸ்திதான்

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 8. ஆகா.. ஜவ்வரிசி ரசம் அருமை...

  இதேபோல தேங்காத் துவையல் ரசம்..ந்னு ஒன்னு இருக்கே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவேளை, வெண்டைக்காய் கறி ரசம்னு ஒண்ணு இருக்கேன்னு சொல்லி என் வயத்துல புளியைக் கரைக்கலை துரை செல்வராஜு சார்..

   நீக்கு
  2. உண்மையிலேயே தேங்காத் துவையல் ரசம் பிரசித்தம்...

   மிளகு ரசம் தான் பிரதானம்.
   குழைய வடிச்ச சோறும் (பூஸாதோட கொழை சாதம் வேறு...) மிளகு ரசமும் தேங்காத் துவையலும்....
   ஆகா... ஆகா..

   நீக்கு
  3. ஆமாம் துரை செல்வராஜு சார். இதுபோல கண்டதிப்பிலி ரசமும் பருப்புத் துவையலும் நல்ல காம்பினேஷன்.

   நீங்க விதவிதமான காம்பினேஷன் டிரை பண்ணறீங்க போலிருக்கு. வாழ்த்துகள்.

   நீக்கு
 9. அட கடவுளே! ரசம்பு சூப்பர் தான் போங்க...

  பதிலளிநீக்கு
 10. முன்பு மோர் ரசம் இப்போது ஜவ்வரிசி ரசம் ரசிக்க வைத்தது

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 12. கதை நல்லா இருக்கிறது.
  கதை மாதிரி தெரியலை சொந்த அனுபவம் போல் இருக்கிறது.
  ஜவ்வரசி பாயசத்தில் வெல்லம் போட்டு இருப்பார்களா? அதுதான் பருப்பு போல் தெரிந்து இருக்கிறதா?

  //ஆமாம்...ரசத்தையும்,குழம்பையும் மிக்ஸ் பண்ணின கலவையை நாங்க ரசம்பும்போம்!"
  தெளிந்த நீரை ரசம், வண்டலை குழம்பு என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.
  இது மாதிரி இருக்கிறது.

  "சூப்பர்டா மச்சி!இன்னி ராத்திரிக்கு நானு மணி விலாஸ் தான்!//

  ராத்திரியும் மணி விலாஸில் அதே மெனு இருக்குமோ!

  நல்ல நகைச்சுவை கதை.

  பதிலளிநீக்கு
 13. வழக்கமான ஆஆர்ரா-வைக் காணோம். 'குபுக்' சிரிப்பை வரவழைப்பதில் மன்னன், எங்கே போனான்(ர்)? தலைக்கேத்த குல்லா இல்லை. தலைப்புக் குல்லாவைத் தேர்ந்தெடுத்து விட்டு அதுக்கேத்த தலையை ஃப்க்ஸ் பண்ணுவதில் மெனக்கெட்டதால் கைதேர்ந்த கலைஞருக்கே 'குபுக்' மிஸ்ஸிங்.

  பதிலளிநீக்கு
 14. ஏ.ஆர் ஆர். இன் காமெடி சூப்பர். அம்மா அப்பாவுக்குப் பரிமாறும் நல்ல பையன் கதையா.
  உண்மையிலியே புளிப்பு,காரம் வெல்லம் கலந்த ரசம்பு நன்றாகத் தான் இருந்திருக்கும்.
  வாழ்த்துகள் ஜி.

  பதிலளிநீக்கு
 15. ஜவ்வரிசி பாயசம் திருக்கண்ணமுது வெல்லம் போட்டு அம்மா
  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்வார். குண்டு குண்டாக ஜவ்வரிசி மிதக்க,போட்டி போட்டு முந்திரிப் பருப்பு நீந்த நன்றாகவே. இருக்கும்.

  பதிலளிநீக்கு
 16. வித்தியாசமான கதை. நகைச்சுவையுடன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 17. ஹாஹாஹா,ஜவ்வரிசி ரசம் நல்ல ரசனை! ஏலக்காய் வாசனை அடிச்சிருக்காதோ? அதான் கொஞ்சம் இடிக்குது எனக்கு! சாம்பார், ரசத்திலே ஏலக்காய் வாசனை வந்தால்? இஃகி, இஃகி,இஃகி!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!