செவ்வாய், 30 ஏப்ரல், 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை : பகல் வெல்லும் அராஜகம் - ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி

குறளும்கதையுமாக...


பகல் வெல்லும் அராஜகம்
ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி செல் போன் கிணுகிணுத்தது.

பரத் ஹியர்

பரத் .. நான் தான் ’சுநாதபோதினிஆசிரியர் பேசறேம்ப்பா..இங்க , ஒரு கும்பல் பட்ட பகல்ல நம்ம ஆஃபீஸை லூட் அடிச்சுட்டு இருக்கு..எல்லாரும் உம்மேல காட்டமாஇருக்காங்க..போன வாரம் நீ எழுதின ’ஸ்கூப்’ அவங்க தலைவரை அவமானப் படிச்சிச்சாம்..அதனாலஉன்னைத் தேடி எந்நேரமும் அந்த கும்பல் வரலாம்.. நாங்க யாரும் ஒன்அட்ரஸ் தரல்ல..எப்படியாவது கண்டுபிடிச்சுண்டு அந்த கொலை வெறி கும்பல் வரும்..தப்பிச்சுக்கோ..”

சார்..”

ஃபோன் துண்டிக்கப் பட்டது..”வைடா ஃபோனை” என்ற காட்டமான குரல் இங்கு துல்லியமாகக் கேட்டது..

என்ன பரத்?”

ஒண்ணுமில்ல..”

இல்ல ஏதோ?”

ஆமாம்ப்பா..போன வாரம் எழுதினேனே..  அது அவங்க தலைவரை ரொம்ப கோபமாக்கிடிச்சாம்..  அதனாலதொண்டர் படைங்கபத்திரிகை ஆஃபீசை
பீஸ்...பீஸாக்கிட்டு என்னைத் தேடி வராங்க

“ பரத்..போலீசுக்கு ஃபோன் பண்ணு

போலீஸ் என்ன பண்ணும்?”

இல்லாட்டி வா..ஓடிப் போயிடலாம்..அந்த கும்பல் வரதுக்குள்ள..”

சேச்சே.ஓடறதா..எழுதறவன் ஓட ஆரம்பிச்சாஒவ்வொரு வார்த்தைக்குமில்ல ஓடணும்..”

“ பரத் பி சீரியஸ்..  வரது ஒரு மாப் ..  அது என்ன வேணா செய்யும்..  உனக்குத் தான் தெரியுமே...  ’மாப் சைக்காலஜி’ என்னன்னு!”

அதற்குள் அந்த கும்பல் வந்தே விட்டது..

வாசலில் இருந்த கூர்க்காவை எட்டி உதைத்து...’எவண்டா அவன் பரத்..எங்க தலைவரைப் பற்றி எழுதினவன்..’ என்று ..ஒவ்வொருத்தன் கையிலும்..சவுக்கு கட்டை..அரிவாள்..சைக்கிள் செயின் என்று ஆயுதங்கள்...

டேய் இவன் தாண்டா..’

விடாதே..பிடி..”

இந்த கை தானே தலைவரைத் திட்டி எளுதினது..வெட்டுங்கடா..அதை..”

 ஆத்திரம் தீருமட்டும் துவைத்து விட்டு ஆங்காரத்துடன் சென்றது அந்த காலிக் கும்பல்....    

 “ பரத் ..சொன்னேனே ..கேட்டியா..இப்படி அநியாயமாய் .......”

பேச முடியாமல் தவித்தார் அந்த நாளிதழ் ஆசிரியர்..

“ நான் கூட சொன்னேன் சார்..கே ட்கலை..” விசும்பினாள்வினிதா..

” இப்ப எழுத முடியாம போச்சேவலதுகையை இப்படி வெட்டிட்டானே..”

 அந்த உயிர் போகும் வலியிலும் பரத் சைகை செய்தான்..  ஆஸ்பத்திரி நர்ஸ் பேப்பர்..பேனா கொண்டு வந்தாள்...

உயிர் போகும்  வலியையும் மீறிய முறுவலுடன் முகம்!

கை எழுதியது.......    

 “ I AM A LEFT HANDER"குறள்:

பகல் வெல்லும் அராஜகத்தை வெல்லுமாம்,
இகல் இடது கையினால்!

34 கருத்துகள்:

 1. இந்தக் காலத்திலும் இப்படி ஓர் எழுத்தாளரா? வியப்புத் தான்! நடப்பது என்றாலும் ஜீரணிக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 2. ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இன்னும் யாரும் வரலையா? மறுபடி என்னைத் தனியா விட்டுட்டு எல்லோரும் எங்கே போனீங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரையும் காணோம். வரேன்னு சொன்ன புயலும் வரலை என்று சொல்லி விட்டது! பதிவு வேற மூன்று நிமிடம் லேட்!

   நீக்கு
 3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவும் வாழ்த்தும் சொல்லிட்டு மீ த எஸ்கேப்பு! தனியா இருக்க பயம்மா இருக்காதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதாக்கா... உங்களுக்கும் இனி வரப்போகும் நட்புறவுகளுக்கும் நல்வரவு, காலை வணக்கம்.

   நீக்கு
 4. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 5. கதை என்றாலும் மனம் பதறி போய் விட்டது பரத் நிலை இப்படி ஆகி விட்டதே! என்று.
  கடைசியில் முடித்த விதம் வேதனை கலந்த சிரிப்பு.

  பதிலளிநீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  நல்ல கதை.. படிக்கும் போது கஸ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் மனதில் உறுதி வேண்டும்.என்கிற பாணியில் குறளாடு ஒத்துப் போகிறது. கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  6.30.வரை யாருமே இல்லையே! இடைப்பட்ட நேரத்தில் நாம் பர்ஸ்டு... ன்னு கூவலாம் என நினைத்தேன். கதையை படித்து முடிப்பதற்குள், சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் இடத்தை பிடித்து விட்டார்கள். அவருக்கும் வாழ்த்துக்கள். தட்டச்சு செய்வதற்குள் யாரெல்லாம் வந்துள்ளார்களோ? பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  ஏஆர் ஆர் எழுதினால் நகைச்சுவை தெறிக்கும். இங்கே கையே போய் விட்டதே.

  பயங்கரம் கலந்த நகைச்சுவை. நல்ல வேளை சோ சார் இப்ப இல்லை.

  பதிலளிநீக்கு
 8. இனிய காலை வணக்கம்.

  கதை - நடக்கும் விஷயம் தான். ஆனாலும் பயங்கரம்! எழுத்தாளர் இரண்டாவது கையையும் இழக்கப் போகிறார்! :(

  பதிலளிநீக்கு
 9. // எழுதறவன் ஓட ஆரம்பிச்சா..
  ஒவ்வொரு வார்த்தைக்குமில்ல ஓடணும்..//

  வைர வரிகள்...

  பதிலளிநீக்கு
 10. பக்கத்து மாநிலத்தில் இப்படி நடத்தப்பட்டிருக்கிறது...

  பதிலளிநீக்கு
 11. பரத்தின் நிலை மட்டுமா?...
  பாரதத்தின் நிலை கூட இப்படித்தான்!..

  பதிலளிநீக்கு
 12. //சேச்சே.ஓடறதா..எழுதறவன் ஓட ஆரம்பிச்சா, ஒவ்வொரு வார்த்தைக்குமில்ல ஓடணும்//

  ஸூப்பர் ஸார்.

  பதிலளிநீக்கு
 13. துரை செல்வராஜு ஐயா அவர்களின் கருத்தை வழிமொழிகின்றேன்

  பதிலளிநீக்கு
 14. குமுதம் ஒருபக்கக் கதையைப் படித்த உணர்வு....

  அடுத்து எழுதும் கட்டுரைக்கு அப்புறம் பரத்தின் இடது கை என்னாகுமோ!

  பதிலளிநீக்கு
 15. அட.. இப்படி ஒரு ட்விஸ்ட்டா..
  வேதனையிலும் சிரிப்பு.

  பதிலளிநீக்கு
 16. கனவுக் கற்பனைக்கு நிகர் ஏதுமில்லை
  நனவு கனவாதல் இயல்பே

  பதிலளிநீக்கு
 17. மிகவும் நன்று பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 18. புதிய குறள், நல்ல ட்விஸ்ட், அழகான கதை.பரத் மேலும் சிறப்பாக எழுதுவார் என்றுதான் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 19. ஆரண்யவாசின் கதைகள் பிடிக்கும் நச்சென்று இருக்கும்

  பதிலளிநீக்கு
 20. "அஞ்சுவை அஞ்சாமை பேதமை "அல்லவா?
  பரத் போன்ற ஆசிரியர்கள் தேவை.இருக்கிறார்கள் .
  ஆனால் விவேகமாக செயல் படுதல் மிக முக்கியம்..கை போனது போல் உயிர் போயிருந்தால் ?

  பதிலளிநீக்கு
 21. பதில்கள்
  1. இப்படி உயிரைக் கூடக் கொடுத்து எழுதுவதானால் குடும்பத்தின் கதி என்னாவது. அசாத்தியத் துணிச்சல். அன்புடன்

   நீக்கு
 22. கடைசி ட்விஸ்ட் ரசிக்க வைத்தது.
  ஆனாலும் கொஞ்சம் பயங்கரம் தான்.

  பதிலளிநீக்கு
 23. மிகவும் யதார்த்தமான கதை. கடைசி வரி வேதனை. இப்படியான அடி உதைகள் பல பத்திரைக்கைக்காரர்களுக்கும் நடந்துள்ளதே.

  சுருக்கமாக மிக அழகாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். வாழ்த்துகள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 24. ஒரு பக்கக் கதை நினைவுக்கு வந்தது. தைரியமான பத்திரிகையாளர். மனைவிக்கு எவ்வளவு திடுக் திடுக்கென்று இருக்கும்! இவர் தைரியமாக இருந்தாலும் மனைவியின் பொஸிஷன் பாவமான பொசிஷன். தலைக்கு வந்தது தலைப்பாகை என்பது போல் கையோடு போனது. லெஃப்ட் ஹேண்டர் என்று எழுதியது....வேதனை என்றாலும் பரத்தைப் போல் புன்னகை வந்தது. அந்தக் கை அப்படியே எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது.

  நன்றாக எழுதியிருக்கீங்க. சூப்பர்! வாழ்த்துகள்.

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!