திங்கள், 20 ஏப்ரல், 2020

திங்கக் கிழமை 'தால் மக்கனி' கீதா ரெங்கன் ரெசிப்பி


தால் மக்கனி




ஹை! எபி கிச்சன் ரசிகப் பெருமக்களுக்கு அன்பார்ந்த வணக்கம். தொற்றினால் ஊரடங்கு, சோஷியல் டிஸ்டன்ஸ் என்று இருப்பதால், எபி கிச்சனுக்குள் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே மாஸ்க், கையுறை எல்லாம் போட்டுத்தான் சமைக்க வேண்டும் என்று ரூல்ஸ்!!! ஃப்ளைட் இல்லாததால் தேம்ஸ்காரங்க கீதாவோடு ரவுஸ் செய்ய வர முடியலை. இங்க இருக்கறவங்களும்தான். எனவே கீதா அடக்க ஒடுக்கமாக பூஸாரின் வாலை இழுக்காமல் நேராக ரெசிப்பிக்குப் போகும் முன்…

இந்த ரெசிப்பி எபியில் வெளி வரும் சமயம், ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கும் வேளையாக இருக்கலாம். இருந்தாலும், உடனே கடைகளுக்கும், கோயில்களுக்கும், பொது இடங்களுக்கும், கூட்டத்திலும் முண்டி அடித்துப் போகாமல் அப்போதும் இதே சோஷியல் டிஸ்டன்ஸை கடைபிடிப்போம். ஏன்னா, புராணக் கதைகளில் வரும் வில்லன்கள் மாயாவியாக மறைந்திருந்து தாக்குவது போல இந்தத் தொற்று மறைந்திருந்து எந்தவித சிம்டம்ஸும் கூட வெளிப்படுத்தாமல் தாக்கும் மர்மம். அடாது வெயில் அடித்தாலும் விடாது தாக்குவேன் என்று தாக்கிக் கொண்டிருக்கிறது. அது எங்கு வேண்டுமானாலும் ஒளிந்திருக்கலாம். யாருக்குத் தெரியும் எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்கு என்பதைப் போல. அதனால் இதே சுத்தத்தை எப்போதும் அனுசரிப்போம். 

பஞ்சாப் தால் மக்கனி ரெசிப்பியை நான் ஒரு பஞ்சாபி பெண்மணியிடம் கற்றுக் கொண்டேன். இதன் சூட்சுமமே, முழு கறுப்பு உளுந்து மற்றும் ராஜ்மாவுடன் இதற்கான மெயின் பொருட்களான வெண்ணை (அதனால்தான் மக்கனி – ஹிந்தியில் மக்கன் என்றால் வெண்ண) மற்றும் பால் க்ரீம் இவற்றைச் சேர்த்து  நிறைய நேரம் குறைந்த தீயில் வைத்துக் கிளறுவதில்தான் இருக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு அப்படிக் கிளறுகிறோமோ அவ்வளவு க்ரீமியாகச் சுவையுடன் இருக்கும்.

தால் மக்கனி கொஞ்சம் காரம் குறைவாக இருக்கும். மசாலா சுவை தூக்கலாக இருக்காது. மசாலா கூடப் போடாமலும் செய்வார்கள். காரம் வேண்டுபவர்கள் கூடுதலாகச் சில்லி பௌடர் சேர்த்துக் கொள்ளலாம். இதில் போடப்படும் வெண்ணை, க்ரீம் அளவு எல்லாம் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம். அதற்காகச் சேர்க்காமலேயே செஞ்சுடாதீங்க. சுவையே அத்தனை நன்றாக இருக்காது. ஏனென்றால் இது கறுப்பு உளுந்தில் செய்வது.
இம்முறை படங்களுடனேயே விளக்கமும் கொலாஜில் கொடுத்துவிட்டேன். ஒரு சிறு முயற்சி. நெட் படுத்தலால், கொலாஜில் எழுத்தை போல்ட் செய்ய முடியாமல் போய்விட்டது.

கொலாஜில் விளக்கத்துடன் சொல்ல விட்டுப் போனவை. பருப்புகளைக் குறைந்தது 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நான் அவற்றை வேக வைக்கும் போது பால் அதிகமும், கொஞ்சம் தண்ணீரும் கலந்து விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்வேன். பாலில் வேக வைக்கும் போது அதன் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.  இது என் அனுபவ டிப்ஸ். பருப்பை விட கொஞ்சம்  அதிகம் இருந்தாலும் பிரச்சனை இல்லை. ஏனென்றால் நிறைய நேரம் கிளற வேண்டுமே. 


குக்கரில் வேக வைக்கும் போது விசில் சத்தம் 7, 8 வரும் வரை வேக வைக்க வேண்டும். உங்கள் குக்கரின் திறனைப் பொருத்து. அவித்த பருப்பை அப்படியே மசிக்கவும் செய்யலாம் இல்லை என்றால் கொஞ்சம் பருப்பை மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொண்டு மீதி உள்ள பருப்போடு கலந்து கொள்ளலாம். பருப்பு வெந்த பக்குவம் பொருத்து நான் இப்படியும் செய்வதுண்டு.


நெட் பிரச்சனையால் எழுத்துகளின் அளவை எத்தனை முறை மாற்றியும் மாறாமல் படுத்தியது. போல்டும் செய்ய முடியவில்லை. எனவே இந்தப் படத்தில் உள்ளதை மட்டும் இங்கும் தருகிறேன்.

3 வெங்காயம், 1 தக்காளி. 2 வது படத்தில் காட்டியுள்ளபடி இஞ்சி, பூண்டு அளவு. வெங்காயத்தில் 1/2 வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொண்டு மீதி 2 1/2 வெங்காயத்தையும், தக்காளியையும் பெரிதாகக் கட் செய்து கொள்ளலாம். பானில்/வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை போட்டு அதில் பெரிதாகக் கட் செய்த வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் கொஞ்சம் வதங்கியதும், நறுக்கியத் தக்காளியை அரைப் போடலாம். அல்லது அப்படியே போட்டும் வதக்கிடலாம். எப்படியும் அரைக்கத்தான் போகிறோம். கொஞ்சம் வதங்கியதும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, பூண்டு, இஞ்சி போட்டுக் கொதித்து தண்ணீர் வற்றியதும் ஆறியதும் நல்ல நைஸ் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.



எல்லாரும் அவங்கவங்க வீட்டுல கையைக் கழுவிட்டு ரெடியாக இருங்க. எல்லார் வீட்டுக்கும் டோர் டெலிவரி செய்துடலாம். தேம்ஸ்கு எப்படி அனுப்பறதுனு ஓசனை பண்ணிட்டுருக்கேன்.


ஹலோ தேம்ஸ் பூஸார்ஸ் அதாரு நீங்க ஜெசி, டெய்சி பிள்ளையாமே என்னைப் போல. ரொம்ப ஓவரா விஷமம் எல்லாம் செய்வீங்களாம், அதுவும் ஜெஸிதான் லீடராம். இனி நம்ம கிட்ட உங்க பாச்சா எல்லாம் பலிக்காது. என் பேரு க்ளோயி. சென்னைவாசி. இங்க புது என்ட்ரி. இனி நானும் அப்பப்ப தலை காட்டுவேன். 

மீண்டும் சந்திப்போம் அடுத்த எபி கிச்சன் ஷோவில். அதுவரைக்கும் நன்றி கூறி விடை பெறுகிறோம். மிக்க நன்றி எபி கிச்சன் டைரக்டர் ஸ்ரீராம் மற்றும் எபி ஆசிரியர்கள் அனைவருக்கும். 

========================================================

101 கருத்துகள்:

  1. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் வணக்கம்.

      இன்று திங்கவில் இந்த ரெசிப்பி என்று பானுக்கா காலையில் கூப்பிட்ட போதுதான் தெரிந்தது.

      மிக்க நன்றி ஸ்ரீராம் அண்ட் கௌ அண்ணா இன்று இங்கு வெளியிட்டமைக்கு.

      வருகிறேன் எல்லோரது கருத்திற்கும் பதில் கொடுக்க. கொஞ்சம் வேலைகள் முடித்து கணினி ஃப்ரீ ஆனதும் வருகிறேன்.

      கீதா

      நீக்கு
  2. பதில்கள்
    1. லாக் டவுன் கால unavoidable evil. மன்னிக்கவும்.

      நீக்கு
    2. என்னாதூ.... பழியை லாக்டவுனில் தூக்கிப் போட்டுட்டீங்க?

      நீக்கு
    3. ஆனா துரை செல்வராஜு சார்... எனக்கும் காலை ஒரே நேரத்தில் எழுந்துகொள்வது, வெளியில் நடக்கச் செல்வது போன்ற ரொட்டீன் இந்த ஊரடங்கு பீரியட்ல செட் ஆகலை. எழுந்து வெளியே போக முடியாது, அடைந்து கிடக்கப் போகிறோம் என்ற நினைப்பே சோம்பேறித்தனத்தை உருவாக்குது. போரடிக்குது.

      நீக்கு
    4. நெல்லை எனக்கு நேரம் ரொம்பவும் சரியாக இருக்கிறது..... முன்ன எல்லாம் காலைல 6.30க்கு டிபன், லஞ்ச் எல்லாம் ஆகிவிடும். அப்புறம் வீட்டு வேலைகள் முடித்தால் ட்ரான்ஸ்லேஷன் வொர்க் இருந்தால் அது இல்லைனா வலை என்று இருந்தது. இப்ப...ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
  3. எங்காவது உணவகத்தில் கிடைத்தால் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியது தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா ஏன் அப்படிச் சொல்லறீங்க...ஃப்ளைட் எல்லாம் பறக்க ரெடியானதும் இங்கு வந்துடுங்க. பங்களூர்ல தான் நம்ம மக்கள் நிறையப்பேர் இருக்காங்களே!! எல்லாரும் ஒரு கூட்டம் போட்டுருவோம்...ஆ ஆ கூட்டமா அப்படின்னு சொல்லக் கூடாது அந்தக் காலமும் வந்துவிடும்!! என்ன கொஞ்சம் டிலே ஆகும் அம்புட்டுத்தான்...

      அதனால இப்பவே மனசுல குறிச்சு வைச்சுக்கோங்க அண்ணா இங்கு வர...

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
    2. நிச்சயமாக....
      மனதில் குறித்துக் கொண்டேன்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. நள்ளிரவு கடந்து 2:50 க்கு விழித்து
    பதிவுக்காகக் காத்திருப்பது என்றால்!...

    பதிலளிநீக்கு
  5. படங்களோடு சொல்லிய விதம் அருமை
    பத்திரிக்கை புகைப்படம் போல் உள்ளதே...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதுதான் தோன்றுகிறது!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கில்லர்ஜி அப்பூடியா இருக்கு?

      மிக்க நன்றி கில்லர்ஜி நல்லாருக்குன்னு சொன்ன கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    வணக்கம் கௌதமன் ஜி. துரை.

    கீதாவின் அசத்தல் ரெசிபி.
    அதைவிட அருமையான குறிப்புகள்.
    படங்கள் விவரங்கள்.

    இவ்வளவு க்ரீம், வெண்ணெய் இதில் சேர்க்க வேண்டுமா.
    கீதாமா மிக அழகாக வந்திருக்கிறது. உணவு விடுதிகளில் சாப்பிடும் தால் மக்கனி

    இத்தனை ருசியாக இருக்க வாய்ப்பில்லை.

    இங்கே எல்லோருக்கும் பிடிக்கும். உளுந்து ஒத்துக்கொள்ளாததால் மாதம் ஒரு முறை மகள் செய்வார்.
    அன்பு கீதா மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா ரொம்ப ரொம்ப நன்றிம்மா.

      இந்த தால் மக்கனியே அப்படித்தான் அதன் சுவையே அதில்தான் அம்மா..கொஞ்சமா சாப்டுக்கலமே. பாலில் வேக வைத்தால் இன்னுமே நன்றாக இருக்கு அப்ப கொஞ்சம் க்ரீம், வெண்ணை எல்லாம் மட்டா போட்டுக்கலாம்..

      உளுந்து ஆமாம் அதற்காகத்தான் பூண்டு சேர்ப்பது அம்மா..பூண்டு சேர்த்தால் உளுந்தின் குணம் அந்தப் ப்ரச்சனை அத்தனை இருப்பதில்லை..

      மிக்க நன்றிமா

      கீதா

      நீக்கு
  7. முதல்ல புதுவிதமா கொலாஜ் பண்ணிய படங்களோடேயே செய்முறையை எழுதியிருக்கீங்க. அதற்கு பாராட்டுகள் கீதா ரங்கன். உங்க ஐடியா அருமை.

    இதுல ஒரே பிரச்சனை என்னன்னா, செய்முறையை கட் பேஸ்ட் பண்ணி ஃபைலில் சேர்த்து வச்சிக்க முடியாது. அந்தக் குறை ஒன்றுதான். (இந்த கீசா மேடமும் கட் பேஸ்ட் பண்ண முடியாம செய்முறைகளை லாக் பண்ணி வச்சிருப்பதை, அதுவும் ரொம்ப வருடங்கள் கழித்து குதிரை திருடு போனபிறகு லாயத்தைப் பூட்டுவதைப் போல பூட்டி வைத்திருப்பதை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என நினைவுகூறுகிறேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கெனவே ஒரு முறை கொஞ்ச நாட்களுக்கு மூடிப் பின்னர் அதிலே ஏதோ பிரச்னை வந்ததால் மறுபடி திறந்து வைத்தேன். பின்னர் அதிகம் காப்பி, பேஸ்ட் பார்க்கவில்லை என்பதால் பேசாமல் இருந்தேன். லலிதாம்பாள் சோபனம் திருட்டில் இருந்து மூட நினைத்துப் பின்னர் இப்போத் தான் முடிந்தது. இன்னும் நிறையத் திருடி இருக்காங்க. ஆனால் எல்லாவற்றிலும் போய்ப் போராட முடிவதில்லை. :(

      நீக்கு
    2. நெல்லை மிக்க மிக்க நன்றி பாராட்டிற்கு!!

      ஹா ஹா ஹா ஹா ஆனா படத்தோட காப்பி பேஸ்ட் செய்யலாம் ..ஸோ பூட்டு எல்லாம் போட முடியாது!!

      ஆமாம் நெல்லை ஒன்ஸ் கொலாஜ் செஞ்சு சேவ் செய்து கொலாஜ் போர்டில் க்ளியர் செய்துவிட்டால் அப்புறம் சேவ் செய்த கொலாஜில் ஏதேனும் கரெக்ஷ்ன் செய்யணும்னா முடியாது. மீண்டும் படங்கள் கொலாஜ் செய்து மீண்டும் டைப்பணும்...எனவே நான் க்ளியர் செய்யும் முன் செக் செய்துவிட்டுத்தான் செய்வது ஆனால் அப்பவும் மிஸ்ரேக் எல்லாம் வருதுதான்..
      கீதாக்கா பூட்டு போடுறது நல்லதுதான் இல்லேனா திருடல் நிறையதான் நடக்குது!
      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  8. தால் மக்கனி, எப்போதாவது (ஆறு மாத்த்திற்கு ஒருமுறை) சாப்பிடப் பிடிக்கும். நல்ல ரெசிப்பி. வீட்டில் செய்த நினைவு இல்லை. ஒரு வாரத்துக்குள் (கடந்த பத்து நாட்களுக்குள் நாலு விதமான நார்த் இண்டியன் சைட் டிஷ் மகள் செய்து சாப்பிட்டுவிட்டேன். அதில் ஒன்றைத்தான் படங்கள் எடுத்துத் தந்தா. அதை எபிக்கு ரெடி பண்ணணும். இன்னும் இரண்டு பனீர் புர்ஜ் மற்றும் இன்னொண்ணு... ருசியா இருந்தது.. பேர் மறந்துபோச்... திரும்பவும் செய்து படங்கள் எடுத்துத் தர்றேன்.. போய் பனீர் வாங்கிட்டு வாங்க என்று சொல்லியிருக்கா... ஹா ஹா)

    இநுல தால் மக்கனியை வேறு ஷெடியூல் பண்ணணும்.

    நல்ல ரெசிப்பி. பாராட்டுகிறேன் கீதா ரங்கன்(க்கா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுப்புங்க, ரெசிப்பிகளை .

      நீக்கு
    2. //நல்ல ரெசிப்பி. பாராட்டுகிறேன் கீதா ரங்கன்(க்கா)//

      எதுக்குப் பயப்பிடுறீங்க நெ தமிழன்:)) பயப்பூடாதீங்க.. தாராளமாகப் பிரிச்சு எழுதிப்போட்டு:).. 200 மைல் வேகத்தில ஓடிப்போய் மேசைக்குக் கீழ ஒளிச்சிடுங்கோ:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. மிக்க நன்றி நெல்லை...

      செஞ்சு பாருங்க நெல்லை செமையா இருக்கும்..

      ஆஹா பனீர் புர்ஜி வாவ். உங்க பொண்ணு நல்லா செய்வாங்கன்னு தெரியுமே....எஞ்சாய்!! ரெசிப்பிஸ் போடுங்க இங்க..

      நானும் இன்னும் அஃப்கானி நாண், ஆஃப்கானி பனீர் இங்க அனுப்பலைனு நினைக்கிறேன்...மொதல்ல படம் எல்லாம் இருக்கானு பார்க்கணும்...

      அதென்ன க்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அண்ணே!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    4. ஹா ஹா ஹா அதிரா அது!!! ஒரு விஷயம் சொல்லட்டா நெல்லைக்கு எங்கிட்ட பயமாக்கும்!!! ஹா ஹா ஹா
      அதானே ஓடி ஒளியலாம் தானே!!

      கீதா

      நீக்கு
  9. படங்கள் ரொம்ப அழகா வந்திருக்கு. வேற யாரும் உதவியிருக்க மாட்டாங்க. கிட்டத்தட்ட நாட்டியமாடிக்கிட்டே (வேலை செய்துக்கிட்டே) படமெடுத்திருக்கீங்க. ரசித்த படங்கள் மற்றும் ரெசிப்பி.

    பாரம்பர்ய ரெசிப்பி ஒண்ணு விரைவில் வெளியிடுங்க. வந்து ரொம்ப நாளாச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ நெ தமிழன்
      //கிட்டத்தட்ட நாட்டியமாடிக்கிட்டே (வேலை செய்துக்கிட்டே) படமெடுத்திருக்கீங்க. //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வந்தமா ரெசிப்பி பார்த்தமா கொமெண்ட் போட்டமா என இருக்காமல்.. கற்பனை வேறு ஹா ஹா ஹா:))

      நீக்கு
    2. நெல்லை ஹையோ அதை ஏன் கேக்கறீங்க...படம் எடுப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான்...அத்தனை எளிதாக எடுக்க முடியாது..இதில் கூட மஞ்சள் சுடுவதை ஒரு கையில் இடுக்கியில் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் க்ளிக்!!!

      ஆது மட்டுமல்ல எல்லா ரெசிப்பிகளையும் படம் எடுக்க முடியாது! நேரம் காலம் ராகு, கேது எமகண்டம் எல்லாம் பார்த்துத்தான் எடுக்க முடியுமாக்கும் ஹா ஹா ஹா...அதனாலேயே பல அனுப்ப முடியாமல் ஆகுது..

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    3. நெல்லை பாரம்பரிய ரெசிப்பி நன்னா சொன்னேள் போங்கோ...அப்புடினா என்னா?!!! ஹிஹிஹி

      கீதாக்காதான் நிறைய அழகா பொட்டிருக்காங்களே! அதைவிட நான் என்ன போட முடியும் மீக்கு அத்தனை வயசாகலையாக்கும் கேட்டேளா...

      எனிவே நோட்டட்.

      கௌ அண்ணா கீ ரெ நோட் செய்தாச்சு

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். ஏறிக்கொண்டே போகும் கொரோனா தொற்றுக் குறைய வேண்டிப் பிரார்த்தனைகள். இன்று முதல் கட்டுப்பாடுகளில் தளர்வு என்றிருந்தது இப்போது இல்லை என தினசரி சொல்கிறது. மற்றவற்றையும் தொலைக்காட்சிச் செய்திகளையும் பார்க்கணும். இங்கே இன்னும் அடையாள அட்டை கொடுக்கவில்லை. திருவானைக்காவில் கொடுத்திருக்காங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ ! விரைவில் எல்லாம் சரியாகட்டும்.

      நீக்கு
    2. கீதாக்கா இதைப் பத்தி சொல்ல வேண்டும் என்றால் விஷயங்கள் கொஞ்சம் நெகட்டிவாகப் போகும். நிலைமை பற்றி நல்லதாகச் சொல்ல எதுவும் இல்லை. சிம்டம்ஸே இல்லாமல் கூட வரும் என்பதால்..அதுவும் வெளியில் செல்வோருக்கு குறிப்பாக....எனவே தவிர்த்துவிட்டு நல்லதை நினைத்துக் கொண்டு நல்லது விரைவில் நடக்கும் என்று தொடர்ந்து நினைப்போம். எனவே வெளியில் செல்லாமல் இருப்போம் அதுவே இப்போதைக்கு நல்லது.

      கீதா

      நீக்கு
  11. ரெண்டு, மூணு வட இந்திய சமையல் குறிப்புகள் கைவசம் இருந்தன. எங்கே வைச்சேன்னு தெரியலை. ட்ராப்ட் மோடில் இருந்தது.. கவனிக்காமல் டெலீட் செய்துட்டேனோ என்னமோ! தால் மக்கனி எங்களுக்குக் கிட்டத்தட்ட அலுத்துவிட்டதால் இப்போதெல்லாம் பண்ணுவதில்லை. அதோடு அத்தனை உளுந்து ஒத்துக் கொள்வதும் இல்லை. பெண் ஜீரா ரைஸோடு இதைச் செய்வாள் வாரம் ஒரு முறை. அப்போக் கூடக் கொஞ்சம் போலப் போட்டுப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா உங்களுக்குத் தெரியாததா..ட்ராஃப்டில் இருந்தவை என்ன என்று பார்த்துப் போடுங்க சீக்கிரம்..

      ஆமாம் அக்கா பெரும்பாலும் ஜீரா ரைஸோடு தான் செய்வது...

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  12. பெண் நேரடியாகக் குக்பாட்டில் வைப்பாள். நன்றாகக் குழைந்துவிடும். மசித்துவிடுவதெல்லாம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா நேரடியாக குக்கரில்/குக்பாட்டில் வைத்தால் வெந்துவிடும். ஆனால் என் குக்கரில் கொஞ்சம் பிரச்சனைகள் இருக்கு. இப்ப லாக்டவும் வேற சரி செய்ய முடியலை. அதான் சொல்லிருக்கேன் குக்கர் திறன் பொருத்துன்னு..

      கரண்டியால் கிளறினாலே மசிந்துவிடும் நன்றாக வெந்திருந்தால்

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நானும் இன்று வெகு தாமதம். (எழுந்திருப்பதற்குதான்) சகோதரி கீதாரெங்கன் அவர்களின் ரெசிபியா? மிகவும் சந்தோஷம். நல்ல சுவையாக அதுவும் புது விதமாக அறிமுகப்படுத்தியிருப்பார்கள். தலைப்பிலேயே தெரிகிறது. படங்களும் புது விதமாக தெரிகிறது. படித்து விட்டு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. வாங்க கமலாக்கா பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      எல்லோரும் பாசிட்டிவாக நினைப்போம் நல்லது நடக்க வேண்டும்.

      கீதா

      நீக்கு

  14. படமும் விளக்கமும் அருமை, டேஸ்ட் அது நேரில் வந்து பார்த்து சுவைத்தால்தான் சொல்ல முடியும் நேர்ல வர ஆசை ஆனால் மோடிஜி விசா எனக்கு தருவாரா என்று தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ மதுரை நேரில் வந்திட வேனிட்யதுதானே...மோடிஜி எதுக்கு விசா தரனும் உங்களுக்கு!! முதல்ல உங்கூர் ட்ரம்ப் ஃப்ளைட் விடுறாரான்னு பாருங்க...ஹா ஹா ஹா ஹா ஹா...

      படமும் விளக்கமும் அருமை, //

      மிக்க நன்றி மதுரை..

      கீதா

      நீக்கு
  15. உணவகங்களுக்குச் சென்றால் நான் விரும்பி சாப்பிடும் சைட் டிஷ்களில் தால் மக்கனியும் உண்டு. ஹோட்டல்களில் ஸ்பைஸ் அதிகமாக இருக்கும். பெங்களூர் இந்திரா நகரில் இருக்கும் இஸ்கான் உணவகத்தில் தால் மக்கனி நன்றாக இருக்கும். அங்கு நோ ஆனியன், நோ கார்லிக். இருந்தாலும் நன்றாக இருக்கும்.
    இப்போது கீதா ரங்கனின் தால் மக்கனிக்கு வரலாம். செய்முறை சுலபமாகத்தான் இருக்கிறது. படங்களுக்கு கீழேயும் செய்முறை, தனியாகவும் செய்முறை எழுதியிருக்கிறீர்கள். மிகவும் தெளிவான படங்கள்+விளக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா ஹைஃபைவ்...எனக்கும் இது மிகவும் பிடிக்கும். ஆமாம் ஹோட்டல்களில் கொஞ்சம் ஸ்பைசியாக இருக்கும் அதாவது காரம் இல்லாட்டா கூட மசாலா தெரியும். இன்ஃபேக்ட் மசாலா இதுக்கு தூக்கலாக இருக்கக் கூடாது.

      வெங்காயம் பூண்டு இல்லாமலும் செய்யலாம்...சில்லி பௌடர், ஏலம் கிராம்பு, பட்டை மட்டும் பொடி செய்து போட்டுச் செய்யலாம் அதுவும் நல்லாருக்கும். இதற்கு முக்கியம் வெண்ணை க்ரீம் மெயின்... நீங்கள் சொல்லியிருக்கும் இஸ்கான் காண்டீனில் சுவைத்ததில்லை. நோட் பண்ணிக் கொண்டேன் வாய்ப்பு கிடைக்கும் போது டேஸ்ட் செய்துட வேண்டியதுதான்...

      அக்கா படங்களில் மட்டும் தான் செய்முறை. தனியாக எழுதவில்லை. ஒன்லி படத்தில் விட்டது மட்டும் தான் தனியாகக் கொடுத்திருக்கிறேன்.

      ஒரே ஒரு படத்தில் மட்டும் ஃபான்ட் சைஸ் ரொம்பச் சின்னதாகி பெரிதாக்க முடியாததால் அதற்கு மட்டும் தனியாகக் கொடுத்திருக்கேன் அக்கா..

      அக்கா உங்கள் வீட்டுக்கு வருவதற்கு ப்ளான் செய்தோம் இல்லையா அப்ப இதுதான் செய்து கொண்டு வர நினைத்திருந்தேன். அப்புறம் நம் ப்ளான் கான்சல் ஆகிவிட்டதே நீங்க சென்னை சென்றதால்...

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  16. //கொஞ்சம் வதங்கியதும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, பூண்டு, இஞ்சி போட்டுக் கொதித்து தண்ணீர் வற்றியதும் ஆறியதும் நல்ல நைஸ் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.// இதோடு முடிந்து விடுகிறது கீதா. incomplete ஆக இருக்கிறதே..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீதி எல்லாம் அந்தக் கடைசி படத்தில் எழுதப்பட்டுள்ளன.

      நீக்கு
    2. அக்கா விளக்கும் முந்தைய பதிலில்...

      கௌ அண்ணா சொன்னது போல....

      அது ஃபான்ட் ரொம்பச் சின்னதாக ஆனதால்...தனியாகக் கொடுத்திருக்கிறேன்..

      நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  17. // நெட் பிரச்சனையால் எழுத்துகளின் அளவை //

    இதை விட சிறிதாக இருந்தாலும் : control key அழுத்திக் கொண்டு → plus key இருமுறை சொடுக்கினால் போதும்...

    // கொலாஜில் எழுத்தை போல்ட் செய்ய முடியாமல் //

    படத்தின் மீது சுட்டியை வைத்து, right click → open link in new tab

    // 3/4 மணி நேரம் கிளறியதும் //

    ஆத்தாடி...!

    // தாபாக்களில் கொஞ்சம் ஸ்மோக்கி ஸ்மெல் வரும்... அது ஒரு சுவை... அதற்குக் கரித்துண்டு வேண்டும்... நான் மஞ்சள் பயன்படுத்தினேன்... //

    இங்கு குழப்பம் வந்தது... அடுத்த படத்தில் விடை கிடைத்தது... நன்றி...

    படங்களை இவ்வாறு செய்து பகிர்ந்து கொள்வது சிறப்பு... திறமை + பொறுமை + தொழினுட்பம் ஒருபுறம் இருந்தாலும், அந்த ஆர்வம் இருக்கே, அசர வைத்து விட்டீர்கள்...! பாராட்டுகள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி முதலில் கடைசி வரிகளுக்கு மிக்க மிக்க நன்றி.

      ஆமாம் பொறுமை மிக மிக அவசியம் தான் நேரமும். எனக்கு இன்னும் சில புதுசா செய்ய ஆர்வம் உண்டுதான். ஆனால் நேரமும் நெட்டும்...ஒத்துழைத்தால் செய்யலாம்..

      மிக்க நன்றி டிடி இதற்குமீண்டும்.

      முதல் வரிக்கு....டிடி அது கொலாஜில் உள்ள எழுத்துகள் அந்த போர்டில் உள்ளவை... நெட் பிரச்சனையால் சரி செய்ய முடியலை அதைத்தான் சொல்லியிருந்தேன்.

      பதிவில் செய்வது நீங்கள் சொல்லியிருப்பது முன்னரே நீங்க சொல்லியிருக்கீங்க நோட் செய்துகொண்டிருக்கிறேன் டிடி...மிக்க நன்றி

      கொலாஜில் போல்ட் செய்வதும் https://www.photocollage.com/ இதில் தான் நான் கொலாஜ் செய்து போடுகிறேன் டிடி. இதில் போல்ட் செய்வது எல்லாமே எளிதுதான். கலர் கூட எல்லாமே மாற்றிக் கொள்ளலாம் அது மாறாதற்கு நெட் போய் போய் வந்ததால் போல்ட் ஆகாமல் நேரமும் இல்லை அதனால் விட்டுவிட்டேன்.

      ஒரு தடவை சேவ் செய்து போர்டில் படத்தை க்ளியர் செய்துவிட்டால் சேவ் செய்ததில் நாம் எந்த மாற்றமும் செய்ய முடிவதில்லை. மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் அதே போன்று புதிய கொலாஜ் செய்து மீண்டும் டைப் செய்யனுமே அல்லாமல் சேவ் செய்ததை கொலாஜ் போர்டில் கொண்டு சென்று மாற்றம் செய்ய இயலாது. குறிப்பாக நான் செய்யும் இந்த வெப்சைட்டில். இதுதான் நல்ல கொலாஜாக இருக்கு வேறு தளங்கள் அத்தனை நன்றாக இல்லை அதாவது இப்படி ப்டங்கள் கோர்த்து செய்ய...வேறு விதமாகக் கொலாஜ் செய்ய மற்ற தளங்கள் நன்றாக இருக்கிறது.

      உங்கள் குறிப்புகளையும் நோட் செய்து கொண்டேன் டிடி

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
    2. https://www.photocollage.com/ மிகவும் நல்ல தளம்... ஆனால் இப்போது கற்றுக் கொண்டிருப்பது வேறு... கைபேசியில்... அதிவேகமாக... எளிதாக... கற்றுத் தருபவர் மகள்...!

      நீக்கு
  18. தால் மாக்கனி.. இதுவரை சாப்பிட்டதில்லை. முயற்சி செய்து பார்த்துட வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செஞ்சு பாருங்க ராஜி

      ரொம்ப நல்லாருக்கும்

      மிக்க நன்றி ராஜி

      கீதா

      நீக்கு
  19. இன்று திங்கட் கிழமையோ செவ்வாய்க் கிழமையோ என எனக்கு ஒரே டவுட்டு டவுட்டா இருக்கே:)).. கீதா கதை எழுதியிருக்கிறாவோ இல்ல ரெசிப்பியோ.. கொஞ்சம் நில்லுங்கோ படிச்சிட்டு வாறேன்ன்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா... மனசுல இருப்பதை டக்குனு எழுதிடறீங்க. நான் ஒருமுறை (ஓரிரு வருடங்களுக்கு முன்பு) கீதா ரங்கன் செய்முறையை கட் பேஸ்ட் பண்ணி தேவையில்லாத்தை நீக்கி ரெசிப்பியை மட்டும் வச்சுக்கலாம்னா அதுல செய்முறைனு பிரிக்க முடியலை. அப்புறம் படித்து நானே எழுதிக்கொண்டேன் (அந்த ஐட்டம் சட்னு நினைவுக்கு வரலை. ஆனா அது வசனமா வரும். நீங்க அதை எடுத்தாச்சா. கொஞ்சம் வறுத்துக்கோங்க. இந்த மாதிரி மத்தவங்களையும் வேலை சொல்றதுபோல எழுதியிருப்பார் இது இன்க்ரிடியன்ட், இது செய்முறை ஸ்டெப்ஸ், இது படங்கள் அப்படீன்னு பார்க்கணும்னா இரண்டு தளங்கள்தான் நினைவுக்கு வருது)

      நீக்கு
    2. // இது இன்க்ரிடியன்ட், இது செய்முறை ஸ்டெப்ஸ், இது படங்கள் அப்படீன்னு பார்க்கணும்னா இரண்டு தளங்கள்தான் நினைவுக்கு வருது. //

      அதுதான் எல்லோரும் செய்வதுதானே நெல்லை! வித்தியாசமா, சுவாரஸ்யமா இருக்கணும் இல்லையா?

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா அதிரா சிரித்துவிட்டேன்...

      படிச்சுட்டு வாங்க...ஹா ஹா

      வித்தியாசமா இருக்கட்டுமேன்னுதான் இப்படி அதிரா..எப்பொதும் போல் ஒரே போல செய்தால் கொஞ்சம் போரடிக்கிறதே. புதுசு புதுசா செய்யும் போது ஒரு உத்வேகம்...டெக்னாலஜியும் தெரிஞ்சுக்கலாம்னுதான் அதிரா

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
    4. நெல்லை நீங்களும் மனதில் இருப்பதை டக்குனு சொல்லிடலாம் நெல்லை தப்பே இல்லை. நான் எதையும் தவறாக எடுக்கவே மாட்டேனாக்கும்...ஹா ஹா ஹா..

      எனக்கு மொனொடெனஸா எழுதுவது பிடிப்பதில்லை. ரெண்டாவது உணவுக்கான வலைத்தளம் என்றால் அது வேறு. இது நம் நட்புக் குழு.

      எனக்கு ரெசிப்பி எழுதிய பழக்கமும் இல்லை நெல்லை. நீங்க எதுக்காச்சும் டக்குனு கேட்டீங்கனா எனக்கு சொல்லக் கூட வராது. ஏனென்றால் எல்லாமே சும்மா கண்ணளவு, கை அளவுன்னு போட்டு செய்வதால்.

      இங்கு சும்மா ஜாலியாக எழுதுவது என்பதால் இப்படி. எல்லோரையும் கலந்து கட்டி எழுதுவது என்பது ஒரு ஜாலி விஷயம். புதுசா இருக்கட்டுமேன்னுதான்.

      எனது அடுத்த குறிப்பும் கூட இது போலத்தான் செய்திருக்கிறேன். அதில் நிறைய தொழில்நுட்பங்கள் கற்றுக் கொள்ளவும் முடியுது...

      மிக்க நன்றி நெல்லை..

      கீதா

      நீக்கு
    5. மிக்க நன்றி ஸ்ரீராம்..

      கீதா

      நீக்கு
    6. //எல்லோரையும் கலந்து கட்டி எழுதுவது என்பது ஒரு ஜாலி// - உண்மைதான் கீதா ரங்கன். இங்க வெறும் ரெசிப்பின்னு இல்லாம எழுதறவங்களும் எதையானும் சேர்த்து எழுதுவாங்க, பின்னூட்டங்களும் சில சமயம் தனி டிராக்ல போய் அதுவே பெரிய செயின் ஆக படிக்க இண்டெரெஸ்டிங் ஆக இருக்கும்.

      ஆனால் ஒரு தடவை உங்க ரெசிப்பியை செஞ்சு பார்க்கலாம்னு காப்பி பேஸ்ட் பண்ணி, அப்புறம் நானே குறிப்புகள் எடுத்துக்கிட்டேன். அதுக்காக, அப்படி எழுதுவது தவறுன்னு சொல்லல்லை.

      இங்க இன்னொரு அட்வாண்டேஜ்... படங்கள் இருப்பது. கீசா மேடமும் படங்களோட ரெசிப்பி போடும்போது இன்னும் கிளியரா இருக்கும்.

      //பாரம்பர்ய ரெசிப்பி// - அதிரா பாவம். அவங்களை எதுவும் சொல்லாதீங்க. அவங்க பாரம்பர்ய ரெசிப்பி குழை சாதம் எழுதினதால அவங்களுக்கு ஏதோ ரொம்பவும் வயசாயிடுச்சுன்னு சொல்றீங்களே.... உங்க பாரம்பர்ய ரெசிப்பின்னா அது தமிழக ரெசிப்பி அல்லது கேரள ரெசிப்பின்னு அர்த்தம் எடுத்துக்கணும்.

      இனி எப்போ கம்ப்யூட்டர் கிடைச்சு, நெட் கிடைச்சு, இதைப் பார்த்து பதில் எழுதப்போறீங்களோ...

      நீக்கு
    7. /////பாரம்பர்ய ரெசிப்பி// - அதிரா பாவம். அவங்களை எதுவும் சொல்லாதீங்க. அவங்க பாரம்பர்ய ரெசிப்பி குழை சாதம் எழுதினதால///

      அல்லோ நெல்லைத்தமிழன் அண்ணாஆஆஆ:)) ஹா ஹா ஹா... என் ரெசிப்பிதானாம் இப்போ பலர் வீட்டிலும் பசியை ஆற்றுது:)), ஆர் மினக்கெட்டு கறி சொதி சுண்டல் எனச் செய்வது எனச் சொல்லிக்கொண்டு எல்லோரும் குழைஜாதம்:)) தேன் செய்கினம்:))).. நானும் நாளைக்கு ரியூஸ்கிழமைக்கு கொலஜாதம்.. சே..சே.. குழைசாதம்தேன் செய்யலாம் என இருக்கிறேன் ஆனா என்ன ஒன்று வீட்டில உணவு பரிமாறும்போது மட்டும்.. பிசியோலாபாத் எனச் சொல்லிட்டால், ஏதோ புது ரெசிப்பி எனச் சாப்பிட்டு விடுவினம் ஹா ஹா ஹா.. பூஸோ கொக்கோ:))..

      ///இனி எப்போ கம்ப்யூட்டர் கிடைச்சு, நெட் கிடைச்சு, இதைப் பார்த்து பதில் எழுதப்போறீங்களோ...//

      ஹா ஹா ஹா இதுதான் ரொப்பூஊஊஊ இல்ல இல்ல டாப்பூஊஊஊஊஊ:))
      ஹா ஹா ஹா அவரவர் கவலை அவரவர்க்கு:)) இந்தக் கொரோனாக் காலத்திலயும் நெ.தமிழனின் கவலை எல்லாமே கீதாட கொம்பியூட்டர் மேலதேன் ஹா ஹா ஹா..

      நீக்கு
    8. //
      நெல்லைத்தமிழன்20 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 2:11
      அதிரா... மனசுல இருப்பதை டக்குனு எழுதிடறீங்க.//

      ஹா ஹா ஹா ஒருசிலரோடு மட்டும்தேன் இங்கின இப்பூடி:)).. அதனாலதான் நான் ஒரு வட்டத்துக்குள்ளேயே நின்றுவிடுவது:)).. மீக்கு ரொம்ம்ம்ம்பப் பயமாக்கும்:))

      நீக்கு
  20. //ஃப்ளைட் இல்லாததால் தேம்ஸ்காரங்க கீதாவோடு ரவுஸ் செய்ய வர முடியலை. இங்க இருக்கறவங்களும்தான்.//

    சே..சே.. டப்புப் பண்ணிட்டீங்க கீதா:)) ஜொள்ளி இருந்தால், ட்றம்ப் அங்கிளின் ஸ்பெஷல் பிளேனில வந்து கை கொடுத்திருப்பேனெல்லோ:)) ஐ மீன்ன்ன்ன்ன் சமைப்பதற்கு:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ நீங்க ட்ரம்ப் மாமாவின் செக் ஆச்சே ஸோ நான் ட்ரம்ப் மாமாவிடம் பேசிய ரகசியம் உங்களுக்கு லீக் ஆகிடுச்சா!! ஹையோ தெய்வமே எப்படி நான் அடுத்த என் பதிவில் சொல்லியது உங்களை எட்டியது!! ட்ரம்ப் மாமா ரொம்ப மோசம்!! ப்ராமிஸை ப்ரேக் செய்துட்டார்...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  21. kஒஞ்சம் பெரிய வேலைபோல தோன்றினாலும் சூப்பராக செய்திருக்கிறீங்க... சுவை நன்றாகவே இருக்கும்..

    இப்போ கொரோனாப் பயத்தில எல்லோரும் அடிக்கடி கை கழுவிச் சுத்தமாகச் சமைப்பதால்... சமையலில் சுவை குறைவாக இருக்குதென வடிவேல் அங்கிளின் மீம்ஸ் ஒன்று சுத்திக் கொண்டிருக்குது ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா நல்லாருக்கும். ரைம் ஒன்றும் அதிகமில்லை சிம்மில் வைத்துவிட்டு அருகில் வேறு வேலைகளைக் கவனிக்கலாம். இடையிடையே கிளறிக் கொடுத்தால் போதும். கொஞ்சம் அடி கனமான பாத்திரம் என்றால் ஃபைன்.

      இப்போ கொரோனாப் பயத்தில எல்லோரும் அடிக்கடி கை கழுவிச் சுத்தமாகச் சமைப்பதால்... சமையலில் சுவை குறைவாக இருக்குதென வடிவேல் அங்கிளின் மீம்ஸ் ஒன்று சுத்திக் கொண்டிருக்குது //

      ஹா ஹா ஹா ஹா ஆமாம் அந்த மீம்ஸ் பார்த்தேன் அதிரா...

      மிக்க நன்றி பிஞ்சு!!

      கீதா

      நீக்கு
  22. ///தேம்ஸ்கு எப்படி அனுப்பறதுனு ஓசனை பண்ணிட்டுருக்கேன்.
    ///

    ஆஆஆஆஆஆஆ அந்த ஓசனையைக் கை விடுங்கோ..:)) அதை அப்பூடியே அஞ்சுவுக்கு அனுப்பிடுங்கோ:)).. நான் கறிபன் செய்யப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஏஞ்சலுக்கும் உண்டே!!! ஆஹா கறி பன்...ஜூப்பர் ஓ அப்ப உங்கட ரெசிப்பியும் வருதோ...சீக்கிரம் செய்து போடுங்க

      கீதா

      நீக்கு
  23. //இனி நம்ம கிட்ட உங்க பாச்சா எல்லாம் பலிக்காது. என் பேரு க்ளோயி. சென்னைவாசி. இங்க புது என்ட்ரி. இனி நானும் அப்பப்ப தலை காட்டுவேன். //

    ஆஹா குடும்பக்காரிபோல இருக்கே பார்க்க அவ்வ்வ்வ்வ்:)).. ஏன் சென்னைவாசி எனில் வாய் அதிகமோ?:)) ஹா ஹா ஹா இப்பவே கணக்கெடுக்கப் போறேன், ஆரெல்லாம் சென்னை வாசி என:))..

    அது என்னமோ தெரியவில்லை... பார்ப்பதெல்லாம் நம்பால்ப் பூஸாராகவே இருக்கே:)).. அண்ணன் வீட்டில மட்டும் ஆண்மகன் வளர்க்கினம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா நம்ம குடும்பக்காரிதான். சென்னையில் தான் இருக்கிறா. அண்ணன் (ஹஸ்பண்டோட அண்ணன்) மகள் வளர்க்கிறா

      நான் சென்னை போயிருந்தப்ப என் மடியிலும் உட்கார்ந்திருந்தா. ஃபோடோ எடுத்து வைச்சிருக்கேன். போடுறேன்.

      கர்ர்ர்ர்ர்ர் //சென்னை வாசினா வாய் அதிகமோ// ஹா ஹா ஹா...

      பாத்தீங்களா அவ அப்போ குட்டி போட கொஞ்சம் நாள் முன் எடுத்த படம். இப்போ ஆப்பரேட் செய்தாச்சு. குட்டி பிறந்த் விளையாடிய வீடியோவும் இருக்கு. அண்ணன் மகள் அனுப்பியிருந்தா பதிவில் போடுறேன்.

      ஆமாம் நான் பார்ப்பதும் எல்லாமே நம் பால் தான். என் நாத்தனார் பையன் மட்டும் (அமெரிக்காவில்) ஆண்மகன் வளர்க்கிறார்.

      கீதா

      நீக்கு
  24. //ரெசிப்பி எபியில் வெளி வரும் சமயம், ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கும் வேளையாக இருக்கலாம். இருந்தாலும், உடனே கடைகளுக்கும், கோயில்களுக்கும், பொது இடங்களுக்கும், கூட்டத்திலும் முண்டி அடித்துப் போகாமல் அப்போதும் இதே சோஷியல் டிஸ்டன்ஸை கடைபிடிப்போம்.//

    இப்படி தளர்த்து பட்டு இருந்தால் தொற்று சரியாகி விட்டு இருக்கும் என்று தானே அர்த்தம். கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி தளர்த்து பட்டு இருந்தால் தொற்று சரியாகி விட்டு இருக்கும் என்று தானே அர்த்தம். கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.//

      அல்ல அதிரா....அதைப் பற்றி இப்ப நெகட்டிவா சொல்ல வேண்டாம் என்று தவிர்க்கிறேன். நல்லது நடக்க வேண்டும். இயல்பு நிலை விரைவில் வர வேண்டுக்ம்.

      வேக்சின்/மருந்து வந்தால் தான் முழுவதும் ஒழிக்க முடியும். வேண்டுவோம்

      கீதா

      நீக்கு
  25. //எல்லார் வீட்டுக்கும் டோர் டெலிவரி செய்துடலாம். //

    இப்படி அனுப்பி விட்டால் அப்புறம் என்ன கஷ்டம் செய்து பார்த்துக் கொண்டு இப்படி அனுப்பி விடுங்கள் செய்வதை எல்லாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதிக்கா....ஹா ஹா ஹா அனுப்பிட்டா போச்சு!!!

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  26. இதுவும் கடந்துபோய் தால் மக்கனி செய்து சாப்பிடுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் அம்மா செஞ்சுருப்பாங்களே.

      எல்லாம் சரியானபின் செய்து சாப்பிடுங்க

      மிக்க நன்றி சார் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  27. படங்களும் செய்முறை விளக்கமும் அருமை கீதா.

    அதிரா சொன்னது போல் வேலைதான் அதிகம்.
    சுவை நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா. வேலை அதிகம் எல்லாம் இல்லை அக்கா. எல்லாம் கலந்து சிம்மில் வைத்துவிட்டால் வேறு வேலைகள் செய்து கொண்டே இதைக் கிளறி விட்டால் போதும். சுவை நன்றாகவே இருக்கும் அக்கா.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  28. //என் பேரு க்ளோயி. சென்னைவாசி. இங்க புது என்ட்ரி. இனி நானும் அப்பப்ப தலை காட்டுவேன். //

    வரட்டும் வரட்டும் அப்பப்ப சமையல் குறிப்புகள் வரும் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா அவளும் கூடவே வருவா..நான் எடுத்த ஃபோட்டோஸ். இப்ப அண்ணன் மகள் அவ்வப்போது வீடியோ படங்கள் எலலம் அனுப்புகிறாள். ஸோ போடுவேன்..இல்லேனா நான் போனப்ப எடுத்த படங்கள் வரும். குட்டீஸ் ரொம்ப க்யூட். அந்த வீடியோவும் இருக்கு

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  29. அஆவ் கீதா வாழ்த்துக்கள் :) சென்னைப்பொண்ணு க்ளோயீ :) Chloe உங்களை பாட்டியாக்கிட்டா :) விரைவில் குட்டிப்பாதங்கள் நடமாடும் உங்கள் வீட்டில் :) என்று தோணுது :)
    உங்க மகளும் அழகு ஏன்னா ஒய்யாரம் சோஃபாவில் :) இங்கிருந்து ஒரு கிஸ் கொடுக்கறேன் அவளுக்கு 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்க்யூஊ தங்க்யூ...இது நான் சென்னை போனப்ப எடுத்த ஃபோட்டோ. அண்ணன் மகள் வளர்க்கிறாள். க்ளோயீ கீழ் வீட்டிலும் நம் வீட்டிலும் இருப்பாள். அண்ணன் மகள் சென்னையில் இருந்தால் இங்குதான் இருபபள். அவள் பெங்களூரில் வேலை செய்கிறாள். என்றாலும் அண்ணிதான் கவனித்துக் கொள்கிறார் க்ளோயீயை.

      ரொம்ப க்யூட். ஆமாம் குட்டிப் பாதங்கள் வந்து அதை பலரும் எடுத்துக் கொண்டு போய்ட்டாங்க வளர்க்க. ஹா ஹா ஆமாம் நான் பாட்டி ஆகிட்டேன் எற்கனவே பாட்டிதான்.ஹா ஹாஹ் ஆ பாண்டிச்சேரி கண்ணம்மா பொண்ணுங்க (கண்ணழகி, ப்ரௌனி அதுவுமெல்லா குட்டிஸும் என் பையன் கைல வாங்கி பொறந்ததுங்க...) ரெண்டு வாலுங்க எங்கிட்டதானே இப்ப கண்ணழகி..ஆனாலும் கண்ணழகிக்கு நான் அம்மாதான் ஹா ஹா ஹா ஹா

      உங்க அன்பை அவளுக்குப் பாஸ் பண்ணிவ்ட்டேன் அண்ணன் மகள் மூலமா!!!!

      ரொம்ப நன்றி ஏஞ்சல்

      கீதா

      நீக்கு
  30. தால் மக்கனி நல்லா இருக்கு ..8 மணிநேரம் ஊற வைத்துத்தான் செய்யணுமா ? அதுதான் இடிக்குது .சரி லாஃடவுன் முடிஞ்சி செய்து சொல்கிறேன் .இப்போ வீட்டில் உடைத்த உளுந்து மட்டுமே இருக்கு ..அடுத்தது பாலில் வேக வைத்தால் ருசி காரம் தெரியாதே ?நமக்கு இந்த சவுத் வகைஉணவுகளே மிகவும் பிரியம் .இங்கே பிரிட்டிஸ்காரங்க பஞ்சாபி உணவுகளை ஆஹா ஓஹோன்னு புகழும்போது எனக்கு கடுப்பேறும் :) சரி ஒரு வித்யாசத்துக்கு செஞ்சுபார்த்து சொல்றேன் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் நல்லா ஊறினாத்தான் இந்த ராஜ்மா நல்லா வேகுது. உளுந்து கூட நல்லா வெந்துரும். நைட் ஊற வைச்சீங்கனா மறு நாள் காலை செய்யலாம். இல்லேனா காலைல ஊற வைச்சீங்கனா ஈவினிங்க் மாதிரி செய்யலாம். நான் பெரும்பாலும் ஓவர் நைட் ஊற வைச்சு மதியத்துக்குள்ள செஞ்சு சாப்பிட்டுறது. நைட் இதை பெரும்பாலும் அவாய்ட் செய்துவிடுகிறோம் ஏஞ்சல்.

      இதுக்கு காரமும், மசாலாவும் அவ்வளவா இருக்காது ஒரிஜினல் ரெசிப்பில. ஸோ காரம் வேண்டும்னா நாம சில்லி பௌடர் கொஞ்சம் கூடுதல் போட்டுக்கலாம். அது நம் விடுப்பம் தான் ஏஞ்சல். பேஸிக்கா க்ரீமியா இருக்கணும் க்ரீம் பட்டர் இது முக்கியம் அவ்வளவுதான் மத்ததெல்லாம் நம் விருப்பம்தான்.

      மிக்க நன்றி ஏஞ்சல்

      கீதா

      நீக்கு
  31. ப்ரெசென்ட்டேஷன் மிக அழகா செஞ்சிருக்கீங்க கீதா .

    பதிலளிநீக்கு
  32. இன்னிகு இவ்வளவு நேரம் நெட் வந்ததே ஆச்சரியம்! பதில் கொடுக்க முடிஞ்சுது...

    கீதா

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் கீதாரெங்கன் சகோதரி

    தங்கள் ரெசிபி தால் மக்கனி மிகவும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு ஸ்டெப்ஸும் மிக அழகாக படங்களுடன் விளக்கியிருக்கிறீரகள். படங்களும்,புது மாதிரியாக அதிலேயே செய்முறை விளக்கங்களையும் இணைத்து, தொழில் நுட்ப வேலைப்பாடுகளும் தாங்கள் திறமையானவர் என்பதை மெய்பித்து விட்டீர்கள். உங்களுடைய திறமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இந்த உணவு முறை இதுவரை நான் செய்ததில்லை. சப்பாத்திக்கும் இந்த மாதிரி செய்யலாமா? ஜீரா ரைஸ், நார்த் இண்டியன் ரொட்டி வகைகள் இதெல்லாம் எப்போதாவது இங்கு வந்த பிறகு வெளியில் சென்று சாப்பிடும் போது இது மாதிரி சுவைத்திருக்கிறேன். மற்றபடி வீட்டில் செய்ததில்லை.எப்போதும் போல் பழைய மாடல்கள்தாம். இப்படி ஒருநாள் செய்து பார்க்கிறேன். படங்களும், செய்முறைகளும் பார்த்தாலே சுவையாக தெரிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  34. மிக்க நன்றி கமலாக்கா கருத்திற்கும் பாராட்டிற்கும்

    ஆனா அப்படி எல்லாம் திறமை எல்லாம் கிடையாதுக்கா.

    அக்கா செய்து பாருங்க வீட்டிலயும். நீங்கள் தான் நிறைய வெரைட்டி வெரைட்டியா திங்க போடறீங்களே உங்க தளத்துல..வாழைத்தண்டு குனுக்கு என்று எல்லாம்...

    மிக்க நன்றி கமலாக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  35. தால் மக்கனி சிறப்பு. இங்கே முன்பு நாங்கள் வசித்த பகுதியில் கோவிந்த் தாபா என ஒன்று உண்டு. அங்கே இது ரொம்பவே சுவையாக இருக்கும். வீட்டில் செய்வது குறைவே - அதுவும் ஒரு ஆளுக்கு செய்வது கடினம் என்பதால்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!