திங்கள், 6 ஏப்ரல், 2020

"திங்க"க்கிழமை  :  ஸ்வீட் கார்ன் ரெசிபி  -  ரமா ஸ்ரீனிவாசன் ரெஸிப்பி ஸ்வீட் கார்ன் ரெசிபி

தேவையான பொருட்கள் :
சோளக் கொண்டை : மூன்று
வெண்ணை : 1 டேபிள் ஸ்பூன்
உப்பு : ½ டேபிள் ஸ்பூன்
மிளகுப் பொடி : ½ டேபிள் ஸ்பூன்
முதலில் மூன்று சோளக் கொண்டைகளையும் ஒரு தவாவில்
(இலுப்பை சட்டி) 200 ml அல்லது ஒரு குவளை பால் மற்றும் மூன்று
மடங்கு தண்ணீர் (மூன்று குவளை) கலந்து கொள்ளவும்.


பின்னர், ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணையையும் ¼ டேபிள் ஸ்பூன்
உப்பையும் இக்கலவையில் கலந்து, மூடி போட்டு மூடி, 10 நிமிடங்கள்
நன்றாக கொதிக்க வைக்கவும்.தானாக நிறம் மாறி விடும். அடுப்பிலிருந்து இறக்கி 2 நிமிடங்கள் மூடியே
ஆற வைக்கவும்.

பின்னர், ஒவ்வொரு கொண்டையாக வெளியே எடுத்து, கத்தியின்
உதவியுடன் சோள மணிகளை உருவி சேர்க்கவும்.
மூன்று கொண்டை மணிகளையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து
எடுத்துக் கொள்ளவும்.

மறுபடியும் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை, ¼ டேபிள் ஸ்பூன் உப்பு, ¼
டேபிள் ஸ்பூன் மிளகுப் பொடி சேர்த்து, நன்றாக கரண்டியால் கிளறவும்.Photo 5
இப்பொழுது, சுவை மிகுந்த ஸ்வீட் கார்ன் உண்ணுவதற்கு தயார்.
இதில், மிக முக்கியமான மற்றும் சுவை கூட்டும் செயல் சோளத்தை
பால் நீரில் வேக வைப்பதுதான்.

அது தரும் சுவைதான் உங்கள் நாவிலேயே நிற்கும்.
இதை நான் ஒரு யூ ட்யூப் ப்ளாக்கில் பார்த்து செய்து கற்று
கொண்டேன்.

62 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நலமா நீங்கள் அனைவரும் மதுரைத் தபிழன்? இணையத்தில் காண முடிவது, உங்களுக்கு வந்த பிரச்சனை பகலவனைக் கண்ட பனி போல மறைந்துவிட்டது தெரிகிறது. மகிழ்ச்சி. இன்னும் கூடுதல் கவனத்துடன் இருந்துகொள்ளுங்கள்.

   நீக்கு

 2. சரி இப்போ நான் போய் பதிவை படிச்சிட்டுவாரேன்

  பதிலளிநீக்கு
 3. வெள்ளை வானத்தின்
  மவுனத்திலிருந்து –
  பீரிட்டு வரும்
  சூரியக் கதிர்களைப் போல் – தான்
  வரவேண்டும் –
  ஒவ்வொரு தமிழனுக்கும்
  அவனுக்கான தமிழ்பற்று!

  அனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்!

  பதிலளிநீக்கு
 4. சத்தான ரிசிப்பி... படங்கள் அழகாக வந்து இருக்கின்றன

  பதிலளிநீக்கு
 5. இங்கே இப்படி கஷ்டப்பட எல்லாம் வேண்டாம். கேனில் ஸ்வீட்கார்ன் கிடைக்கின்றது..... அதை கழுவி மைரோவேவ்வில் சுட வைத்து அதில் மிளகு உப்பு வெண்ணேய் போட்டு மிக்ஸ் செய்து சாப்பிடுவோம் லஞ்சுக்கு ஒன்றும் செய்யாவிட்டால் இப்படி ஒரு கேணை உடைத்து சாப்பிட்டுவிடுவேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் பெண்களுக்கு எப்படியும் சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற ஒரே உத்வேகம்தான் இதை செய்ய வைத்தது. Almost ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்போது விரும்பி உண்கின்றாள் இளையவள். ஜண்ம சாபல்யம் அடைந்தேன்.

   நீக்கு
 6. இனிய கால வணக்கம் எபி உறுப்பினர்கள் அனைவருக்கும். அன்பு ரமாவின்

  இனிப்பு கார்ன் ரெசிபி நன்றாக இருக்கிறது.
  இங்கு இந்த சோளம் டார்ட்டியா ராப்பில் நிறைய உபயோகமாகும்.
  அருமையான செய்முறை .எளிதானதும் கூட.

  வண்ணமயமான படங்கள். வாழ்த்துகள் ரமா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா... வாங்க...

   நீக்கு
  2. பத்தே நிமிடங்களில் ரெடி. ருசியாகவும் இருக்கின்றது. பெரியவளுக்கும் அனுப்பியுள்ளேன். அவளுக்கு சத்தான உணவுகள் மிகவும் பிடிக்கும். எளிமையானதும் கூட.

   நீக்கு
 7. கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றயவை...

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 8. பதில்கள்
  1. செய்து உண்டு பாருங்கள். //நாவில் நிற்கும் சுவை//. இதை மறுமுறை கூறுவீர்கள்.

   நீக்கு
 9. இந்த இனிப்பு தரும் சோளக் கொண்டை அவ்வளவாக பிடிக்காது...

  சோளக் கொண்டை அப்படியே சிறிது நேரம் நெருப்பில் காட்டி விட்டு, எலுமிச்சை + உப்பு அதன் மேல் ஒரு தேய்ப்பு... பிறகு ஒரு கடி... முடிவாக முகம் கழுவ வேண்டும்... (!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் அன்பு துரை, அன்பு தனபாலன்.
   சேலத்தில் இருக்கும் போது பால் வடியும் சோளம் கிடைக்கும் அப்படியே சாப்பிடலாம்.தனபாலன் சொல்வது வாய் முகம் கழுவ வேண்டி இருக்கும் . சற்றே முதிர்ந்த சோளம் வேக வைத்து உப்பு,மிளகு,வெண்ணெய் தடவி, எலுபிச்சை பிழிந்தும் சாப்பிடலாம்.
   அதையே அடுப்பில் வாட்டி மனம் கொள்ளும் அளவு
   கரி வாசனையோடு ருசிக்கலாம். அதே வெண்ணெய், உப்பு,மிளகு கலந்து.

   நீக்கு
  2. இம்மாதிரி நிறையவே சாப்பிட்டிருக்கோம். அதுவும் குளிர் நாட்களில் சூடாகச் சுட்டுக் காரம் தடவிக் கொடுப்பார்கள்.

   நீக்கு
  3. //முடிவாக முகம் கழுவ வேண்டும்... (!)// :)))

   நீக்கு
 10. எனக்கும் பசங்களுக்கும் பிடித்தமான ரெசிப்பி இது.

  புதன்: நம் நிலத்துக்கு அந்நியமான உணவைச் சாப்பிடுவது நல்லதா? உலகமே கைக்குள் அடக்கமாகிவிட்டதால் சீசனல் உணவு,பழம், அந்த அந்த பகுதிக்கு உரித்தான உணவுப் பழக்கம் மறைவது உடல் ஆரோக்கியத்தில் என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்?

  பதிலளிநீக்கு
 11. சோளம் அதிகமாக்க் கிடைக்கும் காலங்களில் அப்படியே அதை குக்கரில் வேகவைத்து பிறகு பல்லால் கடித்து உண்பேன்.

  பார்பக்யூ செய்து எலுமி உப்பு தடவுவது பொதுவா வீட்டில் செய்வதில்லை. வார இறுதியில் வெளியில் செல்லும்போது வாங்கிச் சாப்பிடுவதுதான் (பஹ்ரைனில். இங்கு இந்தியாவில் உணவுச் சுத்தம் போதாது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் நெல்லை தமிழரே. நானும் அவ்வாறுதான் செய்து பழகியிருந்தேன். இதை ஒரு யூடியூப் வழியாக பார்த்து செய்து பிடித்ததால் வெள்யிட்டேன்.

   நீக்கு
 12. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  ஸ்வீட் கார்ன் - நல்ல குறிப்பு.

  தில்லியில் சீசனில் வீதிக்கு வீதி ஒருவர் அமர்ந்து இந்த சோளத்தினை வாட்டி, எலுமிச்சை, மசாலா (காலா நமக்) தடவி விற்பனைக்கு வைத்திருப்பார்கள். சீசனில் இதைச் சாப்பிடாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்! சிலர் பச்சையாக வாங்கிக் கொண்டு போய் வீட்டில் சுட்டு சாப்பிடுவார்கள்.

  பாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் வாங்க வெங்கட்.

   நீக்கு
  2. பாலில் கொதிக்க வைப்பதால், அதன் சுவை சிறிது இனிப்பாக மாறுகின்றது வெங்கட் அவர்களே.

   நீக்கு
 13. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கமலா அக்கா... நல்வரவும் நன்றியும்.

   நீக்கு
 14. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அடுத்த ஒரு வாரம் கடுமையான சோதனைக்காலம் எனச் சொல்லப்படுகிறது. அதைக் கடக்கும் மனோதைரியத்தை எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். நேற்று எங்கள் குடியிருப்பில் சரியாக ஒன்பது மணிக்கு அனைவரும் தங்கள் ஒருமைப்பாட்டைக் காட்ட விளக்குகளை அணைத்து அகல்விளக்குகள், மெழுகு வர்த்திகள் ஏற்றினோம். அதன் பின்னர் எந்தவிதமான மின் தடையும், மின் அழுத்தமும் ஏற்படவில்லை. இரவில் ஏசி, மின் விசிறி போன்றவை நன்றாகவே வேலை செய்தன. மிக்சியும் நன்றாகவே வேலை செய்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா அக்கா... நல்வரவும் நன்றியும்.

   நீக்கு
  2. கீதா அவர்களே, எல்லாத்தையும் தகர்த்தெரியும் நம்பிக்கை. நம்பிக்கையுடன் செயல் படுவோம். விடியல் விரைவில் காண்போம்.

   நீக்கு
 15. இணையம் தான் பிரச்னை கொடுக்கிறது சில நாட்களாக. இந்த பேபி கார்ன் எனப்படும் குழந்தைச் சோளத்தைப் பாலிலோ அல்லது பால் சேர்க்காமலோ குக்கரில் தான் மணிகளை உதிர்த்துவிட்டு வேக வைப்போம். அதை ருசிக்கு ஏற்ப சப்பாத்திக்கு சப்ஜியாகவே மிளகு, உப்புப் பொடி போட்டு அப்படியேவோ சாப்பிடுவோம். வெஜிடபுள் சாதம் பண்ணுகையில் பேபி கார்ன் சேர்த்துச் செய்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா இங்கும் இணையம் பிரச்சனை செய்கிறது...காலையில் அப்புறம் நைட் வரும்..அதுவும் தூங்கப் போகும் நேரத்தில் வரும்.. இடையில் பகலில் வருவது படுத்தல்தான்

   கீதா

   நீக்கு
 16. எல்லாருக்கும் இனிய காலை வணக்கம்!

  ஆஹா !!! ரமா அட்டகாசமாக இருக்கு...ட்ரூலிங்க்!!!

  இது எங்கள் வீட்டில் மிக மிக ஃபேவரைட்...இப்படிப் பாலில் வேக வைத்தோ அல்லது அப்படியே வேக வைத்தோ...

  மிளகு உப்பு சேர்த்தோ அல்லது ஆம்சூர் பொடி, மசாலா பொடி சேர்த்தோ, வீட்டில் செய்த தக்காளி சாஸ் தடவியோ எலுமிச்சிய தடவியோ, சோளத்தை சுட்டோ அல்லது இன்னும் சில ஃப்ளேவரில்...

  சாலடில் சேர்த்தும், சூப்பாகவும்...

  நான் பேபி கார்ன்/குழந்தை சோளம் பட்டர் மசாலா செய்தது முடிந்த வரை படம் எடுத்து வைத்திருக்கிறேன். எப்போது படம் அப்லோட் செய்து பதிவு எழுதி திங்கவுக்கு அனுப்புவேனோ!! ஹிஹிஹி...கூடியவிரைவில் அனுப்ப முயற்சி..

  பேபிகார்ன் ஜல்ஃப்ராசி கூடச் செய்தேன் ஆனால் அதைப் படம் எடுக்க முடியவில்லை...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் சிறியவளுக்கு ஆம்சூர் allergy. ஆகவே சேர்ப்பதில்லை. ஆனால், செய்து பாருங்கள். அமர்களமாக இருக்கும்.

   நீக்கு
  2. ஆம்சூர் அலர்ஜியா ஓஹோ....

   இதுவும் செய்திருக்கிறேன் ரமா. மகன் இங்கு இருந்தப்பவே. எனக்கு மறதியால் சில பல நல்ல ரெசிப்பிஸ் கிடைக்கும். ஹிஹிஹிஹி... அப்படித்தான் ஒரு முறை குக்கரில் பாலில் சிகப்பரிசி (கேரளத்து அம்பலப்புழா பாயாசம்!!) போட்டு சிம்மில் வேக வைக்க ப்ளான் செய்து, அன்று ஸ்வீட் கார்ன்னும் கவர் எல்லாம் உரித்து சுத்தமாக்கிச் செய்ய வைத்திருந்தேன். ஏதோ ஒரு கவனக் குறைவில், மறதியில் இந்த ஸ்வீட் கார்னை பாலில் தூக்கிப் போட்டு குக்கரை வைத்து ஸ்டீம் போகத் தொடங்கும் சமயம் மகன் என்னம்மா அரிசி இங்கருக்கு குக்கர்ல என்ன இருக்கு என்று சொல்ல...ஆ என்று குக்கரைத் திறந்து கார்னை எடுத்து பாம் கொஞ்சம் தான் இருந்தது சோளம் உறிஞ்சியது போக...நல்லகாலம் போனாப் போகுதுன்னு அந்தக் கார்னை உறித்து உப்பு மிளகு வெண்ணை எல்லாம் சேர்த்துச் சாப்பிட்டால் மகன் செம டேஸ்ட் என்றான். நார்மலாகச் செய்வதை விடக் கொஞ்சம் கூடுதல் சுவை எனவும் அட ஒரு மறதியிலும் ஒரு நன்மைன்னு....ஒரு புது டிப்ஸ் கிடைத்த சந்தோஷம்...ஹா ஹாஹ் ஹா ஹா....(இப்படி சைக்கிள் கேப்பில் நம்ம மறதியின் புகழை எடுத்துவிடணுமாக்கும்....ஹா ஹா ஹா
   மறதியில் தீய விட்டதெல்லாம் செல்லுவேனோ ம்ஹூம் மூச்!!!)

   கீதா

   நீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுடைய தயாரிப்பான ஸ்வீட் கார்ன் செய்முறை படங்களுடன் நன்றாக உள்ளது. இதை நாங்கள் முன்பெல்லாம் சோளம் வாயு தொந்தரவு வருமோ என்ற எண்ணத்தில் சாப்பிட்டதில்லை இப்போது எங்கள் இளைய தலைமுறைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்தச் செய்முறை நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வாயு தொந்தரவுக்கு பயந்து நானும் செய்யாமலிருந்தேன். இப்போது என் மாமியார் கூட விரும்பி உண்ணுகின்றார்கள்.

   நீக்கு
 18. ஆஹா... நான்கூட செய்யலாம் போலயே... நன்றி மேடம்

  பதிலளிநீக்கு
 19. அப்படியே எனக்கும் செஞ்சு பார்சல் அனுப்புங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கிருந்து பார்சல் வர்ரது? கொரோனாதான் வரும்.

   நீக்கு
 20. ஸ்வீட் கார்ன் - என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 21. ஸ்வீட் கார்ன் செய்முறை படங்களுடன் அருமை.
  நான் பாலில் வேக வைத்தது இல்லை.
  இப்போது கடைக்கு போக முடியாது, போனாலும் கிடைக்காது, கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெயக்குமார் மற்றும் கோமதி, வணக்கம். மிக அறுமையாக இருக்கும். செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்.

   நீக்கு
 22. சோளம் எனக்கும் பிடிக்கும்
  அருமையான பதிவு

  http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

  பதிலளிநீக்கு
 23. செய்து பார்க்க வேண்டும் சுவையாய் இருக்கும்தானே

  பதிலளிநீக்கு
 24. பாலா சார், நல்ல சுவையாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 25. பாலில் வேக வைத்தது இல்லை. செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 26. ஆஹா ... sweet Corn பார்த்தவுடனே இதயம் சந்தோஷத்தில் beat Horn அடிக்கிறதே ! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு
 27. இப்பொழுது செய்துபார்த்தேன். நன்றாக வந்தது. பசங்களுக்குக் கொடுத்தேன். நான் சிறிது மிளகாய்ப்பொடி சேர்த்தேன். பெண், பால் சேர்த்து தளிகைப்பண்ணுவதால் இனிப்பு அதிகமாக வருது என்றாள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!