வெள்ளி, 24 ஏப்ரல், 2020

வெள்ளி வீடியோ : என்றும் அவள் எங்கள் வீட்டுத் திருமகள் ஆவாள் .....

​​1963 ம் வருடம் எல் வி பிரசாத் இயக்கத்தில், கருணாநிதி கதை வசனத்தில் உருவான திரைப்படம் இருவர் உள்ளம்.
கவியரசரின் பாடல்களுக்கு இசை திரை இசைத்திலகம் கே வி மகாதேவன் 
திரைக்கதைக்கான மூலம் எழுத்தாளர் லட்சுமி எழுதிய பெண்மனம்  என்கிற நாவல்.கிட்டத்தட்ட இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பாடல்களுமே மிக இனிமையான பாடல்கள்.  அதிலிருந்து ஒரே ஒரு பாடல் மட்டும் இன்று பகிர்வாக...இதே படத்தின் கதையை வைத்து பின்னாளில் பிரபு - அம்பிகாவை வைத்து 'ராகங்கள் மாறுவதில்லை'என்றொரு படம் வந்தது.  இரண்டின் கதையும் ஒன்றுதான் என்று சொல்வார்கள்.  நான் படம் பார்த்ததில்லை.  ஆனால் ராகங்கள் மாறுவதில்லை படத்தில் இளையராஜா இசை அமைத்துள்ள பாடல்கள் வெகு பிரபலம்.  அதிலும் குறிப்பாக 'விழிகள் மீனோ'பாடல்...  இந்தப் பாடலை ஸ்பூர்த்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி, எஸ் பி பி உணர்ச்சி வசப்பட்டதும் அறிந்திருப்பீர்கள்!
இன்றைய பாடல் டி எம் எஸ் குரலில் ஒலிக்கும் பாடல்.  "கண்ணெதிரே தோன்றினாள்"  என்னை அப்போதெல்லாம் 7அடிக்கடி முணுமுணுக்கவைத்த பாடல்.

கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள் 
நேர்வழியில் மாற்றினாள் நேற்றுவரை ஏமாற்றினாள் 

பன்னீர்ப் பூப் போன்ற பார்வையும் நெற்றி 
பரப்பினிலே முத்தான வேர்வையும் 
பின்னி வரும் நாணம் என்ற போர்வையும் 
சுற்றிப் பின்னலிட்ட கூந்தலென்னும் 
தோகையும் கொண்டு இன்று 


என்னை அவளிடத்தில் தருகிறேன் அவள் 
இன்னும் என்னை ஏன் வெறுத்து மறைகிறாள் 
என்றும் அவள் எங்கள் வீட்டுத் திருமகள் ஆவாள் 


அந்த இனிய மகள் எனது தாய்க்கு மருமகள் ஆவாள் -இன்று 

115 கருத்துகள்:

 1. அன்பு ஸ்ரீராம் உங்களுக்கும் இன்னும் வரப் போகிறவர்களுக்கும்
  இனிய காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 2. தேறான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேரான் தெளிவும் - ஒருவனை ஆராயாது நல்லவன் இவன் என நம்பிக்கை வைத்தலும், தெளிந்தான் கண் ஐயுறவும் - ஆராய்ந்து ஒருவன் மீது பலத்த நம்பிக்கை வைத்துவிட்டு, பிறகு சந்தேகப்படுதலும், தீரா இடும்பை தரும் - ஒருவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

   நல்ல குறள் துரை செல்வராஜு சார்.

   நீக்கு
  2. நடைமுறையில் நான் கடைபிடிக்கும் குறள்களில் இதுவும் ஒன்று..

   நெல்லை அவர்களுக்கு நன்றி..

   நீக்கு
  3. குறளுக்கும் விளக்கத்திற்கும் நன்றி.

   நீக்கு
  4. வாழ்கவே நலம்.

   நான் எதற்குத் தகவாவது நிற்கிறேனா என்று எனக்கே தெரியவில்லை!

   நீக்கு
 3. இன்றைய பதிவின் பாடல் காலத்தை வென்று நிற்கும் முத்தான பாடல்...


  பதிலளிநீக்கு
 4. பிரபு அம்பிகாவை வைத்து எடுக்கப்பட்ட ரா.மா. படம் சீக்கிரமே அரங்குகளை விட்டு ஓடிப் போனதென நினைக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 5. மிக இனிமையான பாடல். சாந்தி தியேட்டரில்
  மாமா மாமியுடன் பார்த்தபடம். 1964 ஏப்ரில்
  என்று நினைக்கிறேன்.
  மாமாவுக்குத் திருமணம் ஆன புதிது.
  மன்னி நீயும் வா என்று கட்டாயப் படுத்தி அழைத்துப் போனார்,

  சிவாஜியை எப்பவும் பிடிக்கும். இந்தப் படம் முழுவதும் அவர் நடிப்பு அவ்வளவு நன்றாக
  இருக்கும்.

  சரோஜா தேவி மேல் அவ்வளவு கோபம் அந்த வயதில்
  வந்தது:)
  டி எம் எஸ் இன் உணர்ச்சி மிகுந்த குரல், நல்ல இசை,
  சிவாஜியின் கெஞ்சும் பார்வை எல்லாம் சேர்ந்து
  டாப் க்ளாஸ் பாட்டு,.
  அனேகமாக எல்லா வாலிபர்கள் உதடுகளிலும் இந்தப் பாட்டு
  முணுமுணுக்கப் பட்டிருக்கும். நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 1964ஏப்ரலா? நான் அப்போ பிறக்கவே இல்லை.

   நீக்கு
  2. அப்போது பார்த்த இனிய நினைவுகள் வந்தது மகிழ்ச்சி!  சரோஜா தேவி சிவாஜியை  நோகடிப்பாரோ...  யாருமே லக்ஷ்மியின் பெண்மனம் படித்ததில்லையா?

   நீக்கு
  3. லக்ஷ்மியின் பெண் மனம் கதை ஆனந்த விகடன் பைன்டிங்கில் ஒரிஜினலாகச் சித்தப்பா வீட்டில் இருந்தப்போப் படிச்சிருக்கேன். அதன் பின்னர் ராணி முத்து வாயிலாகச் சுருக்கி/மடக்கி வந்தப்போப் படித்துவிட்டுத் தலையில் அடித்துக்கொள்ளாத குறை. நல்லவேளையா இந்தப் படத்தைப் பார்க்கலை. பார்த்திருந்தால் ஜிவாஜியைத் தூக்கி வைக்கவெனக் கதையின் அடிப்படையையே மாற்றிவிட்டு சரோஜாதேவி மேல் கோபம் வரும்படி பண்ணி இருப்பதைப் பார்த்துட்டு நொந்து நூலாகி இருப்பேன். அதான் வல்லிக்குக் கோபம் வந்திருக்கு. மற்றபடி பாடல் எல்லாம் நிறையக் கேட்டாச்சு.

   நீக்கு
  4. அதுதான் கதையை மாற்றி விட்டார்களே. பெண்மனம் கதையில்
   கதா நாயகியின் வலிமை தெரியும். இப்படி அப்படிக் கொஞ்சம் மாற்றி விட்டார்கள்.
   அதுவும் எம் ஆர். ராதாவுக்குக் கோமாளி மாதிரி ஒரு வேஷம். அதுக்கு ஒரு பாட்டு.
   சங்கடமாக இருந்தது.
   என்னது மருமகனும் ,மாமாவும் பிறக்கவே இல்லையா.
   என்ன ஒரு அட்டூழியம் .ஹாஹாஹா.:)

   நீக்கு
 6. எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் ஜி

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்தனைகளுக்கு எல்லோர் சார்பிலும் நன்றி.

   நீக்கு
  2. வாங்க கமலா அக்கா, வணக்கம், நல்வரவு, , நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல் மிகவும் இனிமையானது. பாடல் அடிக்கடிக் கேட்டுள்ளேன். படமும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். இதன் மூலக் கதையான லஷ்மி அவர்கள் எழுதிய பெண்மனம் நாவல் பல முறை படித்திருக்கிறேன். இந்த படம் அதே கதைதான் என்று தெரிந்த பிறகு இந்தப்படத்தில் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு.

  பின்னாளில் பிரபு நடித்த படம் இதேக் கதை என அறிந்ததில்லை. அந்த படமும் கேள்விப்பட்டதில்லை. இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்.அனைத்து தகவல்களுக்கும் நன்றி .

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரிவான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
  2. அப்பாடி...   இப்பதான் கேட்டேன்...   நீங்க கதை படித்திருக்கிறீர்கள் போல...  ஸ்பூர்த்தி பாடிய அந்தப் பாடல் சுட்டியில் பொய் கேட்டீர்களோ?

   நீக்கு
  3. பிரபு-அம்பிகா நடிச்ச படம் பற்றிக் கேள்விப்படவும் இல்லை, பார்க்கவும் இல்லை. :)))) விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் பார்த்தது இல்லை. சொல்லப் போனால் இப்போ செட் டாப் பாக்ஸ் வந்தப்புறமா விஜய் தொலைக்காட்சியே எங்களுக்கு வரதில்லை. ரிபப்ளிக்கும் வராது!

   நீக்கு
  4. //ரிபப்ளிக்கும் வராது!// - அட அநியாயமே... பாஜக மாவட்டச் செயலாளருக்கே பாஜக தொலைக்காட்சி வருவதில்லையா? ஆச்சர்யம்..

   நீக்கு
 9. காலை வணக்கம் அனைவருக்கும்.

  இன்றைய பாடல் மிக இனிமையான பாடல். எக்காலத்திலும் முணுமுணுக்கக்கூடிய பாடல். எவ்வளவு அர்த்தம் பொதுந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சின்ன வயதில்
   கண்ணெதிரே தோன்றினாள்
   கரிமுகத்தைக் காட்டினாள்
   என்று மாற்றிப் பாடியதுண்டு!

   நீக்கு
  2. வணக்கம் நெல்லை...   நீங்களும் முணுமுணுக்கும் பாடலா?

   நீக்கு
  3. //கரிமுகத்தைக் காட்டினாள்//

   :)))))))

   நீக்கு
  4. என்ன செய்வது? உங்கள் எதிரே தென்பட்ட முகத்தைத்தானே நீங்கள் வர்ணிக்கமுடியும்!

   நீக்கு
  5. அப்போ எல்லாம் கரி அடுப்புதானே... காஃபி போட்ட கையோடு... ச்சே... முகத்தோடு வெளியே வந்திருப்பாங்களா இருக்கும்!

   நீக்கு
  6. // என்ன செய்வது? உங்கள் எதிரே தென்பட்ட முகத்தைத்தானே நீங்கள் வர்ணிக்கமுடியும்!// விழுந்து விழுந்து சிரித்தேன்! (ROFL)

   நீக்கு
  7. இருவர் உள்ளம் வெளியான சமயத்தில் பிறக்காத குழந்தை பாடல் வரிகளை மாற்றி பாடியதாமே..!!?? பூர்வ ஜென்ம ஞாபகமா?

   நீக்கு
  8. ஹா.... ஹா.... ஹா.... பாயிண்ட்டு!

   நீக்கு
  9. //..பிறக்காத குழந்தை பாடல் வரிகளை மாற்றி பாடியதாமே..!? பூர்வ ஜென்ம ஞாபகமா?

   போட்டீங்களே ஒரு போடு!

   நீக்கு
 10. அப்போது ஸ்பூர்த்தியின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டுள்ளேன். ஆனால் அவருக்கு டைட்டில் அளித்தது சரியான முடிவாக அப்போது தோன்றவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்கரேஜ் செய்வதற்காக அளிக்கப்பட்டிருக்கலாம்.

   நீக்கு
  2. விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கரில் பெரும்பாலும், டைட்டில் வின்னர்கள் அவர்கள் திறமையைத் தவிர, மற்ற ஃபேக்டர்கள்தான் முன்னிறுத்தப்பட்டு டைட்டில் கொடுக்கப்படுகிறது (தமிழன், இலங்கைப் பெண், கர்னாடகாவைச் சேர்ந்தவர், கிராமத்துப் பின்னணி, ஏழை என்றெல்லாம்). ஆனால் டாப் ஐந்து பாடக/பாடகிகள் எப்போதுமே மெரிட்லதான் வர்றாங்க.

   நீக்கு
  3. ஸ்பூர்த்தி திறமையானவர்தான்.  நானும் சூப்பர் சிங்கர் பார்த்தது அந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும்தான்!

   நீக்கு
  4. //ஸ்பூர்த்தி திறமையானவர்தான்.// அசாத்திய திறமை! அந்த குழந்தை மன்னவன் வந்தானடி பாடல் பாடியதை கேட்டு, பிரமித்தேன்.

   நீக்கு
  5. எல்லாப் பாடல்களும் மிக அருமையான திறமையுடன் பாடினார்.

   நீக்கு
  6. இந்தப் பாடலை யூ டியூபில் கேட்க ஆரம்பித்த உடனேயே அப்போ லைவ்வாக பார்த்த நினைவு வந்துவிட்டது. நல்ல பாடகர்கள் (அதாவது டாப் 8 வரும்போது) திறமையா பாடுவதைக் கேட்க மகிழ்ச்சிதான். அதிலும் குழந்தைகள்.

   எஸ்பிபி தன் தொழிலை ரசித்துச் செய்கிறார். அதனால்தான் அவருக்கு அவ்வளவு எஞ்சாய் பண்ண முடிகிறது, அப்ரிஷியேட் செய்யவும் முடிகிறது. அவர் எப்போதுமே அவரது professional conductல் (அதிலும் சூப்பர் சிங்கர்) என்னை மிகவும் கவர்ந்துவிடுவார். ஒரு தடவை சென்னை ஏர்போர்ட் லாஞ்சில், எனக்க் சிறிது முன்பாக கமலஹாசன் வாசலைப் பார்த்து அமர்ந்திருந்தார். (அப்போ லாஞ்சில் 10 பேர்கள் இருந்தாலே அதிகம்). அவரிடம் போய்ப் பேச ஆசை...என்னவோ பேசலை. எஸ்பிபி, அவர் மனைவி மற்றும் எஸ்.பி.ஷைலஜாவும் அப்போது நுழைந்து சிறிது தள்ளி அமர்ந்தார்கள். கமல் தூங்க ஆரம்பித்துவிட்டார் (காலை 4 மணி). எஸ்பிபி, அவரைத் தொந்தரவு செய்யவில்லை. இவருடனும் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளவில்லை. (எப்போ ஞாயிறு ஸ்லாட் வருதோ அப்போ படம் பகிர்கிறேன்)

   நீக்கு
 11. இருவர் உள்ளம் படம் தொலைகாட்சியில்தாான் பார்த்தேன். நல்ல பாடல். இதயவீணை தூங்கும் போது பாட முடியுமா? பாடலும் பிடிக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், அதுவும் நல்ல பாடல்.    மற்ற பாடல்களும் நன்றாய் இருக்கும்.

   நீக்கு
 12. லக்ஷ்மியின் ‘பெண் மனம்’ நாவலை எனது பதின்மவயதில் படித்தேன். அப்போதெல்லாம் நாவல் பற்றி ஒரு சரியான ஐடியா இல்லை. ’பெண்’ணைப்பற்றி... தெரியாது. பெண்ணுக்குள்ளே மனமுமா? சத்தியமாத் தெரியாது! இந்தப் பின்புலத்தில் அந்த மென்மைகாட்டிய நாவல் வெகுவாக பாதித்தது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் பேசி, பகிர்ந்தும்கொள்ளும் அளவுக்கு ஒரு பயலும் அருகில் இருந்ததில்லை. கிட்டத்தட்ட இப்போதும் அப்படித்தான். என்மீது படிந்துள்ள சாபங்களில் இதுவும் ஒன்று.

  லக்ஷ்மியின் கதைக்கு கருணாநிதியின் வசனம்? கதை காணாமற்போயிருக்கும். படத்தை நான் பார்த்ததில்லை. பார்த்திருந்தால் அந்த நாவல்பற்றிய பிம்பம் சிதைந்திருக்கும். ஆனால் இந்தப் பாட்டு நான் நிறைய முணுமுணுத்த பாடல்களில் ஒன்று அப்போது. பாடல்வரிகளின் இனிமையினால் அடிக்கடிக் கேட்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // லக்ஷ்மியின் கதைக்கு கருணாநிதியின் வசனம்? கதை காணாமற்போயிருக்கும். //

   நேற்று யதேச்சையாக இது பற்றிய குறிப்பொன்று படித்தேன்.  கன்னியாகுமரிக்கோவிலைக் காட்டி இது கண்ணகியின் கோவில் தெரியுமா? என்றுசிவாஜி வசனம் பேசுவதாக அமைந்த காட்சி பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் நண்பர் ஒருவர்.

   நீக்கு
  2. இருவர் உள்ளத்திலா இப்படி ஒரு காட்சி?

   நீக்கு
  3. அப்படிதான் படித்தேன் நேற்று.

   நீக்கு
  4. ஆமாம், நானும் பார்த்தேன்/படித்தேன் முகநூலில்! யாருமே அதைக் கேட்கவில்லை போல! அதானோ என்னமோ பிள்ளைக்கு சுதந்திர நாளும், குடியரசு நாளும் தடுமாறுது.

   நீக்கு
 13. பெண்மனம் கதை படித்தவர்களுக்கு இருவர் உள்ளம் படம் பிடிக்கவில்லை. எழுத்தாளர் லட்சுமியும் கூட அதற்குப்பிறகு தன் கதைகளை படமாக்க விரும்பவில்லையாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுஜாதாவும் ப்ரியா படமும்! இதே அனுபவம்!

   நீக்கு
  2. அது இன்னும் மோசம்னு சுஜாதாவே சொன்ன நினைவு.

   நீக்கு
  3. ஆமாம். நொந்து போனார். அப்புறம் அவரே சினிமாவுக்கு வந்துட்டார்!

   நீக்கு
  4. எழுத்தாளர் லட்சுமியும் கூட அதற்குப்பிறகு தன் கதைகளை படமாக்க விரும்பவில்லையாம்.//

   ஹப்பா அது!!! நல்ல விஷயம் செய்தாற்..

   கீதா

   நீக்கு
 14. இருவர் உள்ளத்தின் நீட்சியாக விஜயோடு சிவாஜி,சரோஜாதேவி நடித்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு (பாடாவதி)படம் வந்ததே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்ஸ்மோர். அதுலாம் காவியத்துல இடம்பெறக்கூடிய படம். இப்படி சட்டுன்னு பாடாவதின்னு சொல்லிட்டீங்களே! புள்ளீங்கோ இதை படிச்சா, கச்சாமுச்சான்னு விடியோ விடும்.

   நீக்கு
  2. ஆமாம். ஒன்ஸ்மோர் படம். அதிலும் சிவாஜி இங்கிலீஷ் பேசி அப்புறம் ஆளுமை காட்டும் காட்சியை ரசிக்கலாம்!

   நீக்கு
  3. அது வேறேயா? நல்லவேளை தப்பிச்சேன். அதெல்லாம் பார்க்காமல் பிழைச்சேன்.

   நீக்கு
 15. இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 16. ஆறு பிறந்தது போதும் என்று நான்
  ஆறு குளம் எல்லாம் மூழ்கி வந்தேன்..
  காசி ராமேஸ்வரம் சென்றிருந்தேன்..
  பாழுங் காதலினாலே திரும்பி வந்தேன்!...

  ஐயா.. கண்ணதாசா...
  இனி இந்த மாதிரி எழுத ஆளில்லாமப் போனாங்களே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுத ஆளிருக்கோ இல்லையோ.... ரசிக்க ஆளில்லை!

   நீக்கு
  2. புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை!

   நீக்கு
  3. /// ரசிக்க ஆளில்லை!.. ///

   ஓ...இது வேற இருக்கோ!?...

   நீக்கு
  4. ரசிக்க ஆளில்லையா!

   நம்ம அதிரா இந்த புத்தி சிகாமணியை ரசித்து இந்த பாடலை பதிவில் போட்டதாக நினைவு.
   ஏ. எல். ராகவன் , எல். ஆர் . ஈஸ்வரி குரலில் பாடல் நன்றாக இருக்கும்.
   நீக்கு
  5. ஆமாம், நல்ல கருத்துள்ள பாடல் "புத்திசிகாமணி பெற்ற பிள்ளை!" பாடல்

   நீக்கு
  6. அப்பா!...
   நமக்கும் ஆதரவாக ஒரு குரல்!...

   கூட்டுக் குடும்பத்துக்குள் அந்தக் கதை...
   அதில் சிறு குடும்பத்தைப் பேசிய பாடல்...

   நீக்கு
  7. பாட்டு, வரிகள் நல்லாயில்லை என்று சொல்லவில்லை. இப்போது அப்படி எழுதினால் இப்போது ரசிக்க ஆளில்லை என்று சொன்னேன்.

   நீக்கு
  8. இணையம் விட்டுவிட்டு... காற்று வேகமாக... மழை வரும் என்று நினைக்கிறேன்...

   ஸ்ரீராம் சார்... "புத்திச் சிகாமணி பெற்றப் பிள்ளை" பாடலை, அடிக்கடி அப்பா அம்மாவை பாடச் சொல்லி கிண்டல் செய்வதுண்டு...

   ஏனென்றால் நான் :-

   அஞ்சுக்குப் பின்னாலே வந்தப் பிள்ளை...! இது ஆறாவதாய் வந்த செல்லப் பிள்ளை...!

   நீக்கு
 17. பெண்மனம் நாவல் (கதை )படி இல்லாமல் சினிமாவிற்கு ஏற்றமாதிரி மாற்றப்பட்ட படம். பாடல்கள்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கும்.எல்லோர் நடிப்பும் நன்றாக இருக்கும்.
  பகிர்ந்த பாடல் கேட்டேன்.

  இன்னொரு படம் பார்த்தது இல்லை கேள்வி படவும் இல்லை. ஸ்பூர்த்தி பாடலை அப்புறம் வந்து கேட்கிறேன்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதிக்கா சினிமாவுக்கு ஏத்தாப்ல கதையை மாத்தினா எப்படித்தான் கதை எழுதியவர்கள் பொறுத்துக்கறாங்களோ. இது அநியாயம் இல்லையோ..

   கீதா

   நீக்கு
  2. சுருக்கமாக கதை, சினிமாவுக்கு எப்படி மாற்றப்பட்டது என்று சொல்லி இருக்கலாமே...

   நீக்கு
  3. DD...

   // இருவர் உள்ளம்...?

   1963...//

   பதிவில் நான் 63 என்றுதான் சொல்லி இருக்கிறேன்.

   நீக்கு
  4. கதை படித்து வெகு நாட்கள் ஆகி விட்டது. நினைவில் இருப்பது கொஞ்சம்.
   ஏதோ கிராமத்திற்கு போய் வாழ்வார்கள் இருவரும், கதாநாயகனுக்கு காய்ச்சல் வரும். அதிலிருந்து மீட்டு எடுப்பாள் நாயகி அப்புறம் இருவருக்கும் அன்பு உண்டாகும் , சினிமாவில் நாயகிக்கு காய்ச்சல் வரும் நாயகன் கவனித்துக் கொள்வான். மனம் மாறும் அப்புறம் இடையில் கொலை அது இது என்று சினிமாவிற்கு உரியவைகள். குற்றவாளி இல்லை என்று விடுதலையாகி அப்புறம் சேர்வார்கள்.

   நீக்கு
  5. ஓ... நன்றி அக்கா... ஒரிஜினல் கதையும். இதேதானா?

   நீக்கு
 18. அதிலும் குறிப்பாக 'விழிகள் மீனோ'பாடல்... இந்தப் பாடலை ஸ்பூர்த்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி, எஸ் பி பி உணர்ச்சி வசப்பட்டதும் அறிந்திருப்பீர்கள்!//

  அறிந்ததில்லையெ ஸ்ரீராம்.....இப்ப கேட்டுவிடுகிறேன். நம்ம எஸ்பிபி நா அதை எல்லாம் பார்க்காம விட்டுருவோமான்ன!!! ஹா ஹா ஹ

  இந்தப் படம் பிரபு அம்பிகா வேற நடிச்சு வந்துச்சா...விழிகள் மீனோ பாடல் கேட்டிருக்கிறேன் படம் தான் தெரியாது இப்ப நீங்க சொல்லி தெரிஞ்சுச்சு.

  கீதா

  பதிலளிநீக்கு
 19. "கண்ணெதிரே தோன்றினாள்" என்னை அப்போதெல்லாம் 7அடிக்கடி முணுமுணுக்கவைத்த பாடல்.//

  ஹா ஹா ஹா ஹா காரணம் யாமறிவோம் ஸ்ரீராமா!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரிஞ்சா சரிதான். கம்முனு இருங்க...

   நீக்கு
  2. //
   ஸ்ரீராம்.24 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 3:18
   புரிஞ்சா சரிதான். கம்முனு இருங்க...//

   ஹா ஹா ஹா கீதா, ஸ்ரீராம் என்ன ஜொள்ள வாறார்ர்?:))

   நீக்கு
  3. பாட்டு அடிக்கடி பாடுவேன் என்று சொல்ல வந்தேன்!

   நீக்கு
  4. ஹா ஹா ஹா கீதா, ஸ்ரீராம் என்ன ஜொள்ள வாறார்ர்?:))//

   ஹா ஹா ஹா அதிரா...உங்க கேள்வில....ஹையோ இப்ப ஸ்ரீராம் கம்முனு இருங்கனு சொல்லி.... ஸோ நான் கப்சிப்!

   கீதா

   நீக்கு
  5. என்னாது? 1963லேயா? ஸ்ரீராம் அப்போப் பிறந்திருந்தாலும்?????? என்ன இது? என்ன இது?

   நீக்கு
 20. கண்ணெதிரே தொன்றினாள்.. பாடலை மறக்க முடியுமோ.. என்ன ஒரு அருமையான பாடல்.. படமும் நல்ல படம் என நினைக்கிறேன், ஒரு தடவை பார்க்கோணும்.. பார்த்தேனோ இல்லையோ என நினைவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாப் பாடல்களும் நன்றாய் இருக்கும் அதிரா.

   நீக்கு
 21. இந்தப் பாட்டு நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம் மிகவும் பிடித்த பாடல்.

  கீதா

  பதிலளிநீக்கு
 22. இருவர் உள்ளம் படம் பார்த்த நினைவு. ஆனாக் கதை தெளிவாக நினைவில்லை. இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். நிறைய கேட்டிருக்கிறேன். இலங்கை வானிலியில் சில காதல் கதைகளுக்கு இடையே பொருத்தமான பாடல்கள் போடும் போது இந்தப் பாடலும் இடம் பெற்றதுண்டு. தமிழ்நாட்டில் இருந்தவரை தான் பாடல்கள் கேட்டிருக்கிறேன். அதன் பின் கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

  படம் பற்றிய தகவல்கள் அறிந்துகொண்டேன். பிரபு அம்பிகா நடித்த படம் ராகங்கள் மாறுவதில்லை 1983/84 ல் வந்தது என்று நினைக்கிறேன். அப்போது நான் நாகர்கோவிலில் படித்துக் கொண்டிருந்ததால் படம் பார்த்திருக்கிறேன். எல்லாமே நிழல் போன்று நினைவு.

  இந்தப் பாடலை எத்தனை வருடங்கள் கழித்துக் கேட்கிறேன்.

  மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலரும் நினைவுகள் போல பாடல் நினைவுக்கு வந்ததா? நன்றி துளஸிஜி.

   நீக்கு
 23. ஸ்ரீராம் ஸ்பூர்த்தியின் சமீபத்தில கர்நாட்டிக் கச்சேரி ஒன்றிரண்டு பார்த்தேன். பொண்ணு பிச்சு உதறுது!

  சூப்பர் சிங்கரில் ஸ்பூர்த்தி பற்றி அப்போது பலரும் பேசியது தெரியும் ஆனால் கேட்டதில்லை. பார்த்ததில்லை. இப்ப நீங்க அனுப்பிய சுட்டி போய் பார்த்தா ஹையோ அப்படியே எஸ்பிபி பெண் குரல் எப்படி அந்த கிமிக்ஸ் எல்லாம் அப்படியே அந்தக் குட்டிப் பொண்ணு செய்யுது. எஸ்பிபி யின் இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும். ராஜா கல்யாணில நிறைய போட்டிருக்கிறார். பெரும்பாலான பாடல்கள் எஸ்பிபிதான் பாடியிருப்பார். எஸ்பிபி கல்யாணில அப்படிக் குழைவார். இந்தப்பாட்டுல. எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் அவர் குழைவு எல்லாம் அப்படியே நினைவில். ஸோ ஸ்பூர்த்தி பாடினது கேட்டதும் அசந்துவிட்டேன்.

  எஸ்பிபி ரியாக்ஷன் ஹையோ....அப்படியே உருகிவிட்டார். குறிப்பா எனக்கும் அவர் வே.......தம் அப்படினுதான் அவர் பாடியிருப்பார். அது எனக்கு நல்ல நினைவு. ஸ்பூர்த்தியும் அப்படியே பாடியதும் எனக்கு ஆச்சரியம். எஸ்பிபி காரணமும் சொன்னார்...அவர் பாடியும் காட்டினார்...இப்பக் கூட இந்த மனுஷனுக்கு என்ன வாய்ஸ்ப்பா ப்ளெஸ்ட்!!!!

  அதே போல ஸ்பூர்த்தி இஸ் ப்ளெஸ்ட்!! குரல் மட்டுமில்ல அந்த bhaவம்....சான்சே இல்லை.

  இப்ப இதைக் கேட்டதும் உடனே எஸ்பிபி பாடினதையும் கேட்டுவிட்டேன்...ரொம்பப் பிடித்த பாடல்..

  நன்றி நன்றி ஸ்‌ரீராம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேட்டு, ரசித்து அனுபவித்து, பகிர்ந்ததற்கு நன்றி. கீதா..

   நீக்கு
 24. ஸ்பூர்த்தி பாடிய பாடலை கேட்டேன், நன்றாக இருக்கிறது. இந்தக் குழந்தை "எல்லாம் இன்பமயம்" பாடலை பாடியதை கேட்டு இருக்கிறேன். சிறு வயதிலேயே மிகவும் திறமை வாய்ந்த குழந்தை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்பூர்த்தி டி ஆர் ஆரையும் அழ வைத்திருப்பாள்.

   நீக்கு
 25. எனக்கு இரண்டு பாடல்களும் பிடிச்சிருந்தது இன்னிக்கு .ஆனா டாப் எது தெரியுமோ :)ஸ்பூர்த்தி பாடும்போது SPB அங்கிள் குழந்தையா நெளிந்து வளைந்து ஒவ்வொரு நொடியும் ரசிச்சார் அதுதான் மிகவும் கவர்ந்தது :)தான் பாடிய ஒரு பாடலை இன்னொருவர் பாடும்போது கூட இத்தனை மகிழ்ச்சி வருமான்னு தெரில ஆனா  தனது வாரிசே தான் செய்த ஒரு செயலை பின்னாளில் செய்யும்போது ரசிக்கும் ஒரு தாயின் மனநிலை வெளிப்படும் உணர்வுகள் என பின்னி எடுத்துட்டார் .மனோவிடமும் சித்ராவிடமும் ஒவ்வொரு வரியும் அக்குழந்தை பாடும்போது சொல்லிச்சொல்லி குழந்தையிபோல் ரசிச்சார் :) ஸ்பூர்தியின் அபார குரலை தாண்டி மனதை கவர்ந்தது SPB அங்கிள்தான் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சல்.. நானும் இதையெல்லாம் ரசித்தேன்.

   நீக்கு
  2. பாலசுப்பிரமணியத்தின் நண்பரின் மகள் அந்த குழந்தை என்று நினைக்கிறேன், அந்த குழந்தையின் தந்தையாரை நினைவு கூர்வார் இன்னொரு காணொளியில்.
   அவர் ரசிப்பதே அழகுதான். அந்த பாடலை மேடையில் பாட கஷ்ட பட்டுக் கொண்டு பாடலை இனி படுவேன் என்றது அந்த குழந்தைக்கு கிடைத்த பெரிய சிறப்பு.

   நீக்கு
  3. ஆமாங்கா பார்த்தேன் இன்னிக்குதான் அந்த காணொளியும் மேலும் டி ராஜேந்தர் காணொளியும் . அக்குழந்தைக்கு நல்ல குரல் வளம் 

   நீக்கு
 26. இனிமையான பாடல். கேட்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 27. திரைக்கதைக்கான மூலம் எழுத்தாளர் லட்சுமி எழுதிய 'பெண்மனம்" நாவல் என்னும் தகவலுக்கு நன்றி!!! ... "கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள் ..." கேட்க கேட்க திகட்டாத பாடல் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!