செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : இந்தக் கதை அவளுடன் பேசட்டும்!  - ஜீவி    1/3           



இந்தக் கதை அவளுடன் பேசட்டும்!

ஜீவி         


ன்புள்ள 'நிலா' பத்திரிகை ஆசிரியருக்கு,

வணக்கம்.  உங்கள் பத்திரிகையைத் தவறாமல் படிக்கும் வாசகர்களில் நானொருத்தி.  'நிலா'வில் பிரசுரமாகும் கதைகள் என்றால் எனக்கு வெல்லக்கட்டி.

இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத ஆரம்பிப்பதற்கு முந்தைய வினாடி வரை நான் கூட கதை எழுதுவதற்கு ஒரு சூழ்நிலை ஏற்படுமென்று கிஞ்சித்தும் நினைத்ததில்லை.  ஆனால் அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் வலுவாக நான் பிடித்துத் தள்ளப் பட்டிருப்பதை    நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.

முதலில் என்னை நானே உங்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு விடுகிறேன்.  நான் கோயம்புத்தூர் வாசி;  பள்ளிக்கூட ஆசிரியை;  வீடும் பள்ளியும் ஆர்.எஸ்.புரத்தில்.

வயது?..   போன ஜனவரியோடு முப்பத்திரண்டு முடிந்து விட்டது.  இருபத்தைந்து வயதோடு பூவையும் பொட்டையும் நான் மறந்து விட்டேன்-- இளம் விதவை.  எல்லாவற்றிற்கும் ஒரு ரயில் விபத்து தான் காரணம்.  வயசான தாயும்,  ஆசிரியர் தொழிலும் தான் எனக்கு தற்போதைய பாதுகாப்பு.  மறுமணம் செய்து கொள்ளும் உத்தேசம் இல்லை.

இளம் வயதில் வக்கீல் படிப்பு படிக்கும் உத்தேசம் இருந்தது.  ஆனால் வசதியின்மை அந்த ஆசையைக் கருக்கி விட்டது.

எனக்குப் பிடித்தவை:  1.  கலகலவென்று  இருக்கும் பள்ளிச் சிறுமிகள்.   2.  ஸ்டான்லி கார்டனரின் 'கோர்ட்' உலகம்...  

இந்த இடத்தில் தான் உங்களுக்கு விநாயகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்.    விநாயகம் என்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர் -- ஆசிரியர்.  எப்பொழுதும் கதர் வேட்டி -  சட்டை தான் அணிவார்.     நெற்றியில் செக்கச் செவேலென்று ஒரு நாமக் கோடு  உண்டு.

ஆசாமிக்கு கிட்டத்தட்ட இருப்பத்தெட்டு இருக்கும்.  பேச்சுலர்.  'என்ன சார், எப்போது கல்யாணச் சாப்பாடு போடப் போகிறீர்கள்?' என்று அவருக்கு முன்னால் நாங்கள் கேட்கும் பொழுதெல்லாம் ஒரு புன்னகைக் கீற்று அவர் முகத்தில் வெட்டி விட்டுப் போகும்.  அதோடு சரி.

அப்படிப்பட்ட அந்த விநாயகம் அன்று  ஆசிரியர்களின் தனி அறையில் தனியாக நான் உட்கார்ந்து கொண்டு மெக்காலே கல்வி அம்சங்கள் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் பொழுது----    ஒருக்களித்திருந்த  ஒற்றைக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்த பொழுது எனக்கு என்னவோ போலிருந்தது.

எங்கள் பள்ளியில் நாலைந்து  ஷிபான்கள்,  இரண்டு மூன்று  ஹாண்ட்லூம்கள், ஏன் ஒரு  டெனிம் கூட உண்டு .   விநாயகத்தைப் பர்க்கும் போதே அவரிடம் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு அந்தரங்க சுத்தம் பளிச்சென்று தெரியும்.  அதனால் தான் அவரிடம் எல்லோருக்கும் ஒரு ஈடுபாடு, பச்சாதாபம், பிடிப்பு எல்லாம்.  விநாயகத்தின் பழகும் தன்மை எல்லாமே போலிதானோ?..  சடாரென்று என் உள் உணர்வு அந்த சமயத்தில் விழித்துக் கொண்டு விட்டது.

அப்படியே இருந்தாலும் என்னைப் போய்...  வாழ்க்கையை கொஞ்சம் சுவைத்து விட்ட,  இழந்த ஒன்றுக்காக ஏங்குகின்ற,  கொஞ்சம் முயற்சித்தால் மசியக்கூடிய கேஸ் என்னும் அசட்டுத் துணிச்சலோ?..

என் புருவங்கள் முடிச்சுப் போட்டுக் கொண்டன.

காரணமில்லாமல் அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த தேசப்படத்தையும் , உலக உருண்டையையும் ஒரு முறை வட்டமடித்த அவர் விழிகள் என் முகத்தில் வந்து தேங்கின.  அவை என்னைச் சுட்டன.  யாராவது உள்ளே வரமாட்டார்களா என்று என் நெஞ்சு படபடத்தது.

அதற்குள் விநாயகம் முந்திக் கொண்டு விட்டார்.  எதைச் சொல்லவோ தொண்டையைக் கனைத்துக் கொண்டவர், ஒன்றும் சொல்லாமலேயே நாலாக மடிக்கப் பட்டிருந்த ஒரு காகிதத்தை எனக்கு முன்னால் வைத்து விட்டு, "ஏன்னை ஏமாற்றி விடாதீர்கள்.." என்று------

"நான்சென்ஸ்.."  சீறி விழத் துடித்தவள், அவர் போய் விட்டதைக் கண்டு உதடைக் கடித்துக் கொண்டேன்.       

இந்த பைத்தியம் எந்த விதமான பேத்தலை அந்தக் கடிதத்தில் கிறுக்கியிருக்கும் என்று எனக்குத் தெரியும்.  இருந்தாலும் அதை எடுத்துப் பிரிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.

முதல் வரியே எனக்கு மட்டை அடி.

என் அகங்காரத்திற்கு, என் புறத்தோற்றத்தைப் பற்றி நான் கொண்டிருந்த கர்வத்தின் மேல் காரித்  துப்பியிருந்தார் விநாயகம்.

"மதிப்பிற்குரிய உடன்பிறவாத அக்காவிற்கு,

உங்களுடன் மனம் விட்டுத்  தனியாக என்  வாழ்க்கைப் பிரச்னை  பற்றி நான் கொஞ்சம் பேச வேண்டும்.  இன்று மாலை வ.உ.சி. பார்க் பக்கம் தாங்கள் வரமுடியுமா?.. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் தம்பி,  விநாயகம்.."

சே, என்ன தப்புக் கணக்கு போட்டு விட்டேன்?..

என் விரல்களுக்கிடையில் விநாயகத்தின் கடிதம் ஒரு செகண்ட் நடுங்கியது.  கஷ்டப்பட்டு என் படபடப்பை அடக்கிக் கொண்டேன்.

என்னுடன் தனிமையில் பேச விநாயகத்திற்கு என்ன இருக்கிறது?..  அதுவும் தனது வாழ்க்கைப் பிரச்னையைப் பற்றியாமே?..   உரிமையுடன் 'அக்கா' என்று என்னை விளித்து 'உங்கள் தம்பி' என்று அவர் கையெழுதிட்டிருந்தது என்னை நெகிழச் செய்து விட்டது.

விநாயகத்தைத் தனிமையில் சந்திக்கத் தீர்மானித்து விட்டேன்.


[ தொடரும் ]

55 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா.. நான்தான் முதலா..? இன்று ஜீவி சகோதரரின் கதையா? அதுவும் 3ல் முதலாவதா..! சகோதரர் எழுதிய கதைகள் அருமையாக இருக்குமே.. இதோ படித்து விட்டு வருகிறேன்.

      நீக்கு
    2. எதிர்பார்ப்பிற்கு நன்றி, சகோ. வாசித்து விடுங்கள். அப்புறம் இருக்கவே இருக்கு, ஒப்பீனியன் pole. நன்றி.

      நீக்கு
  2. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் முயற்சி காண்பது அறிவு...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு..... எப்படி தவறு வந்தது? அதிசயம்தான்

      நீக்கு
    2. எப்பொருளிலும் பெய்ப்பொருள் காண்பதற்கு அதற்கான அறிவு தேவை தான். நாம் தேவை என்று இர்தக் காலத்தில் நினைத்திருப்பதை வள்ளுவனார் அறிவிற்கான இலக்கணமே அது தான் என்கிறார். மெய்ப்பொருள் காணாதது அறிவில்லை
      என்பது அவர் காலத்து நிலை.. கால ஓட்டத்தில் மெய்ப்பொருள் துய்ப்பதில் நாம் ரொம்பவே பின் தங்கிப் போய் விட்டதாகத் தெரிகிறது, நெல்லை. நிழல்களையே நிஜங்களாக நினைக்கும் காலத்தில் வாழ்கிறோம் என்று கொள்வோம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் வணக்கம் அனைவருக்கும்

      நீக்கு
    2. அன்பின் வணக்கம் அனைத்து உள்ளங்களுக்கும். கதையை வாசித்து கருத்திடுவோருக்கு நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக நகர்கிறது. ஒருவர் நல்லவராகவே இருந்தாலும், சந்தர்ப்பங்கள் அவரை தவறாக நினைப்பதற்கு வழி விட்டு விடுகின்றன. அக்கா என்று அழைத்தவரின் வாழ்வில் என்ன பிரச்சனை என்று அறிய நானும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதர்களே சூழ்நிலையின் கைதிகள் தான் போலும். நல்லவர்கள் தவறாகவே நினைக்கப்பட்டும், சித்தரிக்கப்பட்டும் இருப்பதான நிலைமை இதனினும் கொடுமை என்று நினைக்கத் தோன்றுகிறது. நன்றி, சகோ.

      நன்றாக நீட்டி முழக்கக் கூடாதோ?.. வார்த்தைச் சிக்கனமே கெள அண்ணனோ?..

      நீக்கு
  5. ஏதேதோ நினைக்க வைத்து என்னையும் படபடப்பு பற்றிக்கொண்டது.

    சரியான இடத்தில் தொடரும்...
    தொடர்கிறேன் ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவகோட்டையாருக்கு படபடப்பா?.. ஹி..ஹி..

      சரியான இடத்திற்குக் தொடரும்--மும், தொடரும்க்கு சரியான இடமும் காத்திருக்கும் போலும்.

      இன்னொரு ஹி.. ஹி... அடுத்த செவ்வாய் தப்பாமல் ஆஜராகி விடுங்கள், நண்பரே! நானே தாமதமாக வந்து உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேண், பாருங்கள்.

      நீக்கு
  6. அன்பு நற்காலை வணக்கம் அனைவருக்கும்.
    ஜீவி சார் கதையா. சர்க்கரைப் பொங்கல் நெய்யோடு கிடைத்தது போல
    இருக்கிறது.
    நிறைய கற்க வேண்டும் அவரிடமிருந்து.
    கதை பரபரவென்று ஆரம்பித்திருக்கிறது.
    எவ்வளவு எளிதாக கதா நாயகி அறிமுகம்.
    சட்டென்று ஈகோ தகர்க்கப் படுகிறது அக்கா
    என்று அழைக்கப் பட்டதால்.

    தவறாக நினைத்த எண்ணம் மாறுகிறது.
    இன்னும் ஒரு பாரா இருந்திருக்கலாம். நன்றி ஜீவி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம், வல்லிம்மா.

      எனக்கென்னவோ இந்த அக்கார வடிசல் -- நெய் -- சமாச்சாரம் என்றாலே நம்ம நெல்லை (உங்களுக்கு முரளிம்மா) ஞாபகம் வந்து விடுகிறது. பொதுவாக இலையில் இடப்பட்டதை விடுவிடுவென்று சாப்பிட்டு விடுகிற ஆசாமி நான். அதனால் நிதானித்து, ருசித்து சொல்லத் தெரிவதில்லை. அதனால் திங்கட் கிழமை எ.பி.க்கு பொதுவாக ஆப்ஸண்ட் ஆகி விடுவேன்.

      பரபரவென்று ஆரம்பித்த கதையில் கதாநாயகி (?) எளிதாக அறிமுகமாகி, அக்கா என்ற ஒரே விளிப்பில் அவள் ஈகோ தகர்க்கப்பட்டு... அடடாவோ.. அடடா! (நன்றி: பாரதி!) ரசனைக்கு நன்றிம்மா.

      இன்னும் ஒரு பாரா இருந்திருக்கலாம் தான். இன்னொரு பாரா இருந்திருந்திருந்தால், தொடரும் போட இன்னொரு பாரா தாண்ட வேண்டுமோ? தெரிலே. இந்த இடத்தில் தொடரும் போட்டது ஸ்ரீராமா, நானா தெரிலே..

      நெல்லையின் அனுபவம் மாதிரி ஒரு நீண்ட கதையை துண்டு துண்டா வெட்டி படிக்கறது கொடுமை தான் என்றாலும், முழுக்கரும்பை கணுவுக்கு கணு சுவைப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியது தான். ஸ்ரீராம் தான் என்ன செய்வார், பாவம்!
      நெடுங்கால காத்திருப்பு என்றாலும், முழுக் கதைஒயை மூன்றாகவேனும் பகுத்து வாசிப்புக்கு சுகமா போட்டு விடுகிறாரே!
      அதைச் சொல்ல வேண்டும்.. வாழ்க, எங்கள் பிளாக்!

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள், விரைவில் நிலைமை சீராக மனமாற அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. சி.சு. செல்லப்பாவைப் பற்றி எழுதிக் கொண்டு வரும் பொழுது, நேற்று உங்களை நினைத்தேன், கீதாம்மா.

      அவரது 'சுதந்திர தாக'த்தை ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி கோயில் நூலகத்தில் பெற்று வாசித்தவராயிற்றே, நீங்கள்?

      ஜல்லிக்கட்டு நேரத்திலும் செல்லப்பா நினைவுக்கு வராமல், நெடு நாட்கள் கழித்து அவரது 'வாடிவாசல்' மட்டும்
      வாசிப்பாளர் பார்வையில் பட்டிருக்கிறது. அந்த மட்டில் சந்தோஷம்.

      நீக்கு
  8. அருமையான அமர்க்களமான ஆரம்பம். தொடக்கமே அட்டகாசம். ஜீவி சாரின் இந்தக்கதை தொடர்ந்து 3 வாரங்களுக்கு வரும்போல் தெரிகிறது. நன்றாக விறுவிறுப்புடன் ஆரம்பித்திருக்கிறார். விநாயகம் கேட்கப் போகும் அந்த உதவிக்குக் காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்ப சூரப்புலியாக ஆகிவிடக் கூடாது, பகவானே!.. தொடர்ந்து விறுவிறுப்பாய் வாசிக்க இருக்க அருளூ!

      அப்படி என்ன தான் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கேட்டு விடப் போகிறார் என்று யோசனையை ஓட்டலாமே! எத்தனை கதை வாசித்திருப்பீர்கள்?..

      அடுத்த பாதிக்கு அடுத்த வாரம் வந்து விடுங்கள். நன்றி.


      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    ஜீவி சார், கதை நன்றாக இருக்கிறது.

    கதையின் நாயகி நிலா பத்திரிக்கை ஆசிரியருக்கு எழுதிய கடிதம் அருமை.

    அவர் குறுப்பிட்ட நபர் விநாயகத்தின் மேல் கதாநாயகிக்கு ஏற்பட்டது போலவே எண்ணம் எங்களுக்கும் ஏற்பட வைத்து
    பின் அதை மாற்றியது எல்லாம் அருமை.


    கதாநாயகி வக்கீலுக்கு படிக்க எண்ணம் இருந்ததால் விநாயகத்திற்கு ஆலோசனை கேடக ஆவல் ஏற்பட்டதோ?
    தொடர்கிறேன் கதையை.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கதையின் நாயகி நிலா பத்திரிக்கை ஆசிரியருக்கு எழுதிய கடிதம் அருமை. //

      இதுவே கடித ரூபத்தில் எழுதிய ஒரு கதையாக ஏன் இருக்கக் கூடாது?.. புதுமையாகவும் இருக்கும் அல்லவா?..

      //கதாநாயகி வக்கீலுக்கு படிக்க எண்ணம் இருந்ததால் விநாயகத்திற்கு ஆலோசனை கேடக ஆவல் ஏற்பட்டதோ?

      கிடைத்த ஒரு வரி துரும்பை வைத்துக் கொண்டு என்னமாய் யோசிக்கிறார்கள் என்று அசந்து போனேன்.

      பிரமாதம், கோமதிம்மா.

      நீக்கு
  10. ஜீவி ஐயா அவர்களின் கதை...
    வெகு நாட்களாக இந்தப் பக்கத்தில் அவர்களைக் காணோம்...

    விடியற்காலையில் (குவைத் நேரம் 3:05) கதையைப் படித்து விட்டேன்..
    உடனடியாக ஒன்னும் சொல்ல முடியவில்லை...

    சரியான இடத்தில் சம்மட்டி அடி...

    பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கிறது என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஐயா.. சில நாட்களாக பிறர் பதிவுகள் பக்கம் வரவே இல்லை!

      உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் சில தகவல்களைத் திரட்டிக் கொண்டிருந்தேன்.

      மாலை கர்நாடக இசைப் பாடல்கள் கேட்பதில் மனம் லயித்துப் போனேன். இனி இந்தப் பக்கமும் கவனம் கொள்ள வேண்டும்.

      'பார்க்கலாம்..' --- பெரியவரின் நினைவு வந்தது. எல்லாரும் அவரை மறந்தே போய் விட்டார்களே என்றும் நினைத்துக் கொண்டேன். உலகத்து இயற்கை.

      நீக்கு
    2. சென்ற வாரத்தின் எனது கதை
      ரயில் பயணங்களில் -
      தங்களது விமர்சனத்துக்காகக் காத்திருக்கிறது..

      நேரம் இருப்பின் வாசித்துப் பாருங்கள்..
      நன்றி...

      நீக்கு
  11. பதில்கள்
    1. வாங்க, டி.டி. அடுத்த பகுதி, அதற்கடுத்த பகுதி என்று வாசித்து விடுங்கள்.

      நீக்கு
  12. அழகிய ஒரு ஆரம்பம்..., ஆர்வத்தைத் தூண்டும் முடிவு... தொடர்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகிய ஒரு ஆரம்பம்.
      ஆர்வத்தைத் தூண்டும் முடிவு.

      'இ'யில் ஆரம்பிக்கும் வரி ஒன்றுமில்லையா, ஞானியாரே?..

      நீக்கு
  13. பிங் கலரிலேயே போஸ்ட் பார்த்துப் பிரமித்துப் போனேன் ஹா ஹா ஹா ஆனாலும் ஸ்ரீராம், கதை என வரும்போது கொஞ்சம் டார்க் கலராக இருந்தால் கண்ணுக்கு ஈசியாக இருக்கும் படிக்க, இது கொஞ்சம் கண் கூச வைப்பதைப்போல இருக்குது, மொபைலில் படிப்போருக்கு, இன்னும் கஸ்டமாக இருக்குமென நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  14. //எங்கள் பள்ளியில் நாலைந்து  ஷிபான்கள்,  இரண்டு மூன்று  ஹாண்ட்லூம்கள், ஏன் ஒரு  டெனிம் கூட உண்டு .//  இந்த வரிகளின் மூலம் அந்த பள்ளி மத்தியதர வர்க்கத்தினருக்கான பள்ளி என்பதை சுட்டி காட்டி விட்டீர்கள். சுருக்கமான விவரனைகளோடு விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது கதை. அடுத்த வாரத்திற்கு காத்திருக்கிறோம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியர் உலகம் அடக்கமானது தான். அவர்களுக்கென்றே அவர்களாகவே படைத்துக் கொண்ட உலகம்.

      எல்லாத்துக்கும் சார் தான். தன் கணவரைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லும் பொழுது கூட, 'எங்க ஸார் கூட அப்படித்தான் சொல்வார்..' என்பார்கள்.

      கணவனின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடும் இந்தக் காலத்தில் கூட ஆசிரியைகள் இன்றும் அப்படித் தான் இருக்கிறார்கள்.
      தாய் மண்ணே, வணக்கம்...


      நீக்கு
  15. மிக மிக அழகான கதை. வாசிக்கும் போதே எழுத்தும் கவர்ந்தது. ரொம்ப ரசித்து வாசித்தேன். அட்டகாசமான தொடக்கம். வித்தியாசமாக எழுதியிருக்கீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் உணர்ந்ததைச் சொன்னதர்கு நன்றி, சகோ.

      நீக்கு
  16. //எங்கள் பள்ளியில் நாலைந்து ஷிபான்கள், இரண்டு மூன்று ஹாண்ட்லூம்கள், ஏன் ஒரு டெனிம் கூட உண்டு .//

    ரசித்த வர்ணனை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?.. ஷிபானும், ஹேண்ட்லூமும் எந்தக் காலத்தும் உண்டு. சொல்லப்போனால், ஆசிரியர்களுக்கு பொங்கல் சமயத்தில் ஹேண்ட்லூம் லோன் கொடுத்து தவணை முறையில் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் பழக்கம் உண்டாகையால்
      வஞ்சனையில்லாமல் அவர்கள் வீட்டில், ஹேண்ட்லூம் பெட்ஷீட், போர்வை, ஜன்னல் மறைப்புத் துணிகள், புடவைகள், வேட்டிகள் என்று கைத்தறி படைப்புகள் களை கட்டியிருக்கும்.

      டெனிம்?.. இந்தக் கால நாகரிகப் புடவை ஒன்றின் பெயருக்காக, கூகுளில் தேடி டெனிமைத் தேர்ந்தெடுத்தேன்.!


      உண்மையில் நடந்தது என்னவென்றால், இந்தக் கால புடவை வெரைட்டி ஒன்

      நீக்கு
    2. அப்படியா?.. ஷிபானும், ஹேண்ட்லூமும் எந்தக் காலத்தும் உண்டு. சொல்லப்போனால், ஆசிரியர்களுக்கு பொங்கல் சமயத்தில் ஹேண்ட்லூம் லோன் கொடுத்து தவணை முறையில் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் பழக்கம் உண்டாகையால்
      வஞ்சனையில்லாமல் அவர்கள் வீட்டில், ஹேண்ட்லூம் பெட்ஷீட், போர்வை, ஜன்னல் மறைப்புத் துணிகள், புடவைகள், வேட்டிகள் என்று கைத்தறி படைப்புகள் களை கட்டியிருக்கும்.

      டெனிம்?.. இந்தக் கால நாகரிகப் புடவை ஒன்றின் பெயருக்காக, கூகுளில் தேடி டெனிமைத் தேர்ந்தெடுத்தேன்.!

      நீக்கு
  17. முதல் பகுதியிலேயே ஒரு திருப்பம்..நல்ல நச் நிலாவிற்கு..

    விநாயகத்தின் பிரச்சனை என்னவாக இருக்கும் என்று அறிய ஆவல்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்ல நச் நிலாவிற்கு..//

      நிலாவுக்கா?.. 'நிலா' பத்திரிகையின் பெயராச்சே, சகோ..?

      நீக்கு
  18. ஜீவியின் சிறுகதை என்றலேயே மூன்று பதிவுகளுக்கு குறையாது என்றாகி விட்டது கத்சஒ என்பது எழுதுபவரின் கற்பனை ஜீவி சிறந்த கதை சொல்லி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, ஜிஎம்பீ ஐயா!

      வழக்கமாக நான்கு பக்கங்கள் பத்திரிகை பிரசுரத்திற்கு எழுதினாலே, பதிவில் நீண்டு போய் விடுகிறது.. வாசிப்பவர்களுக்கும்
      அயர்ச்சி கொடுக்காமல் பிரிந்துப் போடுவதால் தான் இப்படி மூன்று பதிவுகள் நிலை..

      'கதை சொல்லி' -- எழுத்தாளனுக்கு தற்கால வார்த்தைப் பிரயோகம்!

      எழுதுவதா, சொல்வதா -- எது கதை? என்று பதிவுத் தலைப்பு ஒன்று மனசில் சட்டென்று உதித்தது.

      எழுதுவதா, நடிப்பதா -- எது நாடகம்? என்றும் நீங்கள் யோசித்தால் அருமையான பதிவு ஒன்று உங்களிடமிருந்து வெளிப்படும்.
      ஆனால் எழுதுவது என்பதை விட்டுக் கொடுக்காமல் செய்ய வேண்டியிருக்கும். ஏனென்றால் எழுதுகின்ற ஆசாமிகள் அல்லவா நாம்?..

      நீக்கு
  19. கதை முக்கியமான இடத்தில் வந்து நிற்கிறது.

    விநாயகம், நாமக்கோடு - பொருந்தவில்லையே. சௌராஷ்டிர்ர், நாயுடு இவர்களிலும் இந்தப் பெயர் இருக்காதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிற்பதற்கென்றே ஒரு முக்கியமான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதே உண்மையாக இருக்கலாம். :))

      // விநாயகம் -- நாமக்கோடு.. //

      நெல்லை.. விநாயகம் பாத்திரப் படைப்புக்கு -- நடை, உடை, பாவனைக்கு மட்டும் --- என்னோட அலுவலக நண்பர் ஒருவரை கற்பிதம் கொண்டு எழுதினேன். அவர் பெயர் செளந்தர ராஜன்! 34 வயது கட்டை பிரம்மச்சாரி! செக்கச்செவேலென்று ஒற்றை நாமக் கோடு பளபளக்க கபடமற்ற முகம்!

      இந்தக் கதை பத்திரிகை ஒன்றில் பிரசுரமானது தான்! பிரசுரமான அந்த இதழை அவர் கையில் கொடுத்து அவர் முகபாவங்களை பார்த்தபடி இருந்தேன். கதையைப் படித்து முடித்து, 'சரியான ஆள்யா நீர்!' என்று என் முதுகைத் தொட்டுச் சிரித்தார்!

      செளந்தர ராஜன்! சரியா?..

      விநாயகம் (அவ்வளவு) சரியில்லை தான். இருந்தாலும் அலிபாபா கதையின் சிந்தனையில் நாளைய உலகம் பற்றிய அழகான கற்பனை ஒன்று எனக்குண்டு.

      நீக்கு
    2. செளந்திரராஜன் - சரியான பெயர்ப்பொருத்தம் கதாபாத்திரத்துக்கு உண்டு. நன்று.

      நீக்கு
  20. கதை நன்றாக ஆரம்பித்திருக்கிறது. ஜீவி சாரின் எழுத்து நடை கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, நெல்லை. முழுதும் வாசித்து சொல்லுங்கள்.

      நீக்கு
  21. தொடர் கதையா.. சூப்பர். அருமையா இருக்கு எழுத்து நடை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. வாங்க, தேனம்மை! இந்தப் பக்கம் உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். தினமலர் வார இதழில் உங்களது சிறுவர் தொடர் தொடர்ந்து கொண்டிருக்கிறதா?.. இந்த 'தனிமைப்படுத்துதலில்' தினமலர் வாசிப்பதில்லை. அதனால் கேட்டேன்.

    தொடர்கதை இல்லை. சின்னச் சிறுகதை தான். மூன்று வாரத்திற்கு நீண்டு விட்டது. தொடரும் பகுதிகளையும் வாசித்து விடுங்கள். சரியா?.. நன்றி, சகோ.

    பதிலளிநீக்கு
  23. கதை நல்லா இருக்கு. ஆனால் ஒரு சிறு திருத்தம் . நாமம் இட்டு கொண்டிருப்பவர் விநாயகம்னு பெரு வெச்சிக்க மாட்டார் ( என் அனுபவத்தில் நான் கண்டது)

    பதிலளிநீக்கு
  24. எல்.கே! நாமக் கோடு தரித்தவர் விநாயகம்ன்னு பேரு வெச்சிக்க மாட்டாரா?.. யார் சொன்னது?..

    டெக்னிகலா சொல்றேன்.

    விநாயகம் என்பது அவர் வைச்சிண்ட பேரு இல்லே. அவர் அப்பா வெச்ச பேரு.

    பெயர் தான் முன்னாடி வந்தது. நாமமெல்லாம் பின்னாடி தான்.

    ஒரு நாள் நாமம் இட்டுண்டு கண்ணாடிலே பாக்கறச்சே பிடித்துப் போக அன்னேலேந்து அவர் நாமம் தரிக்க ஆரம்பித்து விட்டார். .. அதில் என்ன தப்பு வந்தது?..

    சுப்ரமணியன் என்ற பெயர் கொண்ட பாரதியார் யாரைக் கேட்டுண்டு நாமக் கோடு தரித்தார்?..

    கதையை கதையா பாக்கணும். படிக்கணும். ரசிக்கணும். நல்லா இருந்தா கை தட்டணும். அவ்வளவு தான்.

    நகரத்தாரில் விநாயகம் என்ற பெயர் கொண்டவர்களை உங்கள் அனுபவத்தில் கண்டதே இல்லையா, என்ன?..

    பதிலளிநீக்கு
  25. ஆஹா... ஜீவி ஐயாவின் கதை பகிர்வா? நன்று. அடுத்த பகுதிகளுக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது முதல் பகுதி.

    காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. வாங்க, வெம்கட்! முதல் பகுதியை வாசித்து விட்டீர்களா?.. அடுத்த பகுதி அடுத்த செவ்வாய்க்கிழமை. வந்த்கு வ்இடுங்கள்.
    சில நாட்களாக சொந்த வேலைகள் எக்கச்சக்கம். அதனால் மற்ற பதிவுகளுக்கு வர முடியாது போயிற்று. இனி தொடர்ச்சியாய் வந்து விடுவேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  27. அருமை சகோதரிக்கு அண்ணன் சிவா எழுதிக்கொள்வது யாதெனில் .... நம் தம்பி விநாயகம் ஏதோ பிரச்சனையில் வகையாக மாட்டிக்கொண்டார் என தோன்றுகிறது ... பிரச்சனை எதுவாக இருந்தாலும் உதவி செய்வதில் தவறில்லைதான், ஆனால் ... வ.உ.சி. பார்க்கில் அவரை சந்தித்து நீங்கள் பேசும்போது தயவு செய்து சமூக இடைவெளியை கடைபிடித்து கொரானா பரவுவதை தவிர்க்கவும். நன்றியுடன் - >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!